எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா - 27

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 27


“இந்த குட்டி கழுதை இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்லயே கவினு.. விளையாட்டு தனமா சுத்துவா தான் ஆனா இப்படி பண்ணிபுட்டாளே! இந்த ஊமைக்கொட்டான் பயலும் அவ ஆட்டத்துக்கு ஆடிருக்கான் பாரேன்! வரட்டும் அந்த லண்டி கழுதை அவ கொமட்டுல நாலு இடி இடிக்கிறேன்” என ஆதங்கமாக கூறினார் பரமேஸ்வரி பாட்டி கவின் அம்மா.


“வரட்டுமா? இனி எதுக்கு அவ இங்க வரனும்? நம்மள எல்லாம் வேணாம்னு விட்டுட்டு போனா தான அப்படியே போகட்டும்.. நம்ம எதுக்கு அவளுக்கு?” எனக் கோபத்தில் கொந்தளித்தார் கார்த்திகா.


கவின் மௌனமாகவே இருந்தார். அவரால் இன்னும் பிரணவிகா செய்ததிலிருந்து மீண்டு வர முடியவில்லை. காரணம் பிரணவிகா கார்த்திகாவுக்கு தெரியாமல் ஆயிரம் அவள் விஷயம் செய்தாலும் கவினிடம் ரகசியமாக அனைத்தையும் சொல்லி விட்டுத் தான் செய்வாள்.


அவளுக்குப் பின்னால் பக்கபலமாக கவின் இருந்தார். சாத்விகா, நிஹாரிகா மேல் பாசமாக இருந்தாலும், சுட்டியாகச் சுத்தும் பிரணவிகா அவரின் செல்லம். அவள் செய்யும் அத்தனைக்கும் முதல் ரசிகன் அவர் தான். அவரை மீறித் தன் மகள் இப்படி செய்வாளென அவரால் இப்ப வரைக்கும் கூட நம்பமுடியவில்லை.


சாத்விகா “அப்பா!” என அவர் அருகில் அமர,


கார்த்திகா “நீ என்ன பண்ண காத்திருக்க? நீயும் இப்படி தான் எங்க கழுத்தறுத்துட்டு போக போறியா என்ன?” என யார் மேலோ உள்ள கோபத்தை இவள்மேல் காட்டினார்.


சாத்விகா “அப்பா! பிரணி இத பண்ணிருக்க வாய்ப்பில்லப்பா.. இதுல என்னவோ இருக்கு.. எதோ பிரச்சனையில மாட்டிருக்காப்பா அதுனால இப்படி.. கண்டிப்பா இவ இப்படி எண்ணத்துல இல்ல.. காலேஜ்ல இருந்து அவ கிளம்பும்போது கூட உங்கள பார்க்கப் போறேன்னு தான் என்கிட்ட சொல்லிட்டு வந்தா.. கோபப்படாம என்னனு விசாரிங்கப்பா.. நிச்சயம் அவ உங்கள மீறி இந்த விஷயம் பண்ண மாட்டாப்பா”


கார்த்திகா “கழுத்துல தொங்க தொங்க மாட்டிட்டு, அவன ஒட்டிட்டே நின்னாளே.. என் கண்ணால பார்த்தேனே அதெல்லாம் பொய்யா.. நீயும் அவளும் கூட்டு தான அதான் அவளுக்கு வக்காளத்து வாங்கிட்டு வர.. போடி உள்ள”


“அவ விஹான் அத்தான காதலிக்கவே இல்ல.. இது எனக்கு தெரியும்.. எதோ பிரச்சனையில தான் இந்த கல்யாணம் நடந்திருக்கும்” என கூற, அதை யாரும் நம்பவில்லை.


கவின் “எந்த பிரச்சனையா இருந்தாலும் அவ என்கிட்ட தானடா வந்திருக்கனும், ஏன் விஹான் கிட்ட போனா?”


“அது.. அது” என சாத்விகா இழுக்க,


கார்த்திகா “இவளுக்கும் தெரியும்.. கூட்டு களவாணி இரண்டும்” என முறைத்துக் கொண்டே கூறினார்.


“இல்லப்பா எனக்கு எதுவும் தெரியாது” என்றவள் அவளறைக்கு சென்றுவிட்டாள்.


“இனி இவ மேலயும் ஒரு கண்ண வச்சிட்டே இருக்கனும்.. இல்ல இவளும் நம்மள அசிங்கப் படுத்திட்டு போயிடுவா” என்ற கார்த்திகாவுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.


பரமேஸ்வரி பாட்டி “ஏத்தா நீ ஏன் அழற? அவ என்ன இப்போ எவனோடயா போனா அவ அத்தமவேன் கூட தான போனா.. விடு.. சரியாகிடும்.. அங்க தான் எல்லாரும் இருக்காவல அவங்க பாத்துப்பாங்க”


“உங்க மக என்னா பேச்சு பேசினாங்க தெரியுமா அத்த.. நம்ம பிள்ளைங்க கட்டிக்கொடுக்க நம்ம கிட்ட காசு இல்லாமலா இருக்கு? ஓசில ஓட்டி விட்டேன்னு சொல்றாங்க.. பழச எல்லாம் எடுத்து என்னை அசிங்கப் படுத்துறாங்க அதும் சின்ன புள்ளைங்க முன்னுக்க.. அவமானமா இருக்கு.. செத்திடலாமானு இருக்கு” என அழ,


“கார்த்தி! என்ன பேச்சு இது.. எந்திரி உள்ள வா” என கார்த்திகாவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார் மனைவியைச் சமாதானம் செய்ய.


அறைக்குள் வந்த சாத்விகாவுக்கு மனம் ஆறவில்லை. எப்படி இப்படி திடீருனு எல்லாம் மாறுச்சு? இனி விரஜ்ஜூடனான தன் வாழ்வு, தான் நினைத்தது போல சுலபமாக அமையாது என மட்டும் தெரிந்துவிட்டது.


இனி போராட வேண்டும்.. அவன் வேண்டுமென இவள் நினைத்தால் இவள் போராட வேண்டும்.. முதலில் அவளுடனே அவள் போராட வேண்டும்.. அவனை அவனாகவே ஏற்றுக்கொள்ள முதலில் போராட வேண்டும்.


பின் தன் வீட்டில் போராட வேண்டும். பின்னும் அவன் தாயுடன் போராட வேண்டும். அத்தை மகன் என்பதாலும், ஒரே குடும்பமாக இருந்ததாலும் தன் காதலுக்கு எதிர்ப்பு இருக்காது என நினைத்தவளுக்கு தான் இனி அதிக எதிர்ப்பு வரும் போல.


*******


தன்னுடைய அறையில், தனக்கு கிடைக்கவே மாட்டாளா என ஏங்கிய தன்னவள், தன் மடியில் கவிழ்ந்து அழ, அவளை முதுகில் தட்டி சமாதானம் செய்துகொண்டிருந்தான் விஹான்.


“ஈஸி டா.. விடு.. அதான் நான் இருக்கேன்ல.. நான் பார்த்துக்கிறேன்.. இனி அவங்க உன்னை எதுவும் பேசாம பார்த்துக்கிறேன்..” என அவன் என்னன்னமோ கூறினான் ஆனால் அவள் தான் அவன் பேசிய எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை.


அது தானே அவள். பிரணவிகா. அவன் கூறுவதை காது கொடுத்துக் கேட்டா அது பிரணவிகா இல்லையே! அவளாக அழுதுகொண்டிருந்தாள்.


இவன் சமாதானம் எல்லாம் விரலுக்கு இறைத்த நீர் போல அத்தனையும் ஒன்றும் இல்லாமல் போக, இனியும் இவளைக் கொஞ்சினால் சரிப்பட்டு வரமாட்டாளென நினைத்தவன் பழைய விஹானாக மாறி,


“எழுந்திரிடி” எனக் கத்தினான். சரியாக வேலை செய்தது.. பதறி அடித்து அவன் மடியிலிருந்து எழுந்தவள் விசும்பியபடி,


“அ.. அத்.. அத்தை” என்றாள்.


“நான் என்ன பாட்டின்னா சொன்னேன்.. இனி நான் பார்த்துக்கிறேன் அவங்க இப்படி பேசாமாட்டங்கனு சொல்றேன்ல.. எந்திரி” எனக் கத்த படாரென எழுந்து நின்றாள்.


“நாளைக்கு காலேஜ் இருக்கு தான? காலேஜ் போகனும்னு நினைப்பில்லையா? கட்டடிக்கலாம்னு நினைப்போ? ஒழுங்கா போய் படு.. போ” எனக் கத்த,


எங்கு படுப்பது? எப்படி படுப்பது? அவனுடன் படுப்பதா? தனியாகப் படுப்பதா? என எதையும் யோசிக்க வில்லை.. விருவிருவெனச் சென்று கட்டிலில் ஒரு ஓரத்தில் சுருண்டு கொண்டாள்.


அவளைப் பாவமாகப் பார்த்தவன், அவள் கொண்டு வந்த பாலை எடுத்து அவளிடமே சென்றான்.


“பாலை குடிச்சிட்டு படு”


“குடிச்சிட்டேன்.. எனக்கு வேணாம் நீங்க குடிங்க” என எங்கயோ பார்த்துக் கொண்டே கூற, தோளைக் குலுக்கியவன், பாதி டம்ளர் பாலை குடித்துவிட்டு மீதியை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு, இரவு உடையை எடுத்துக்கொண்டு குளியளறை நோக்கிச் சென்றான்.


குளித்து உடைமாற்றி அறைக்குள் வந்து பார்க்க டம்ளர் காலியாக இருந்தது.


‘ஃப்ராடு.. எல்லாம் நடிப்பு.. உலக மகா நடிகை’ என நக்கலாக நினைத்துக் கொண்டு மீண்டும் அவளருகில் வந்தவன்,


“நீ டிரெஸ் ச்சேஞ் பண்ணல? இப்படியேவா படுக்கப் போற?” எனக் கேட்டான்.


“மாத்தனும்” என்றாள் தயங்கிக் கொண்டே.


“அப்போ போய் மாத்திட்டு வந்து படு”


“ம்ம்” என்றவள் எழுந்து சென்று நிஹாரிகா கொடுத்த இரவு உடையான டிசர்ட்டும், பேண்ட்டும் போட்டு வர, அது அவளுக்கு லூசாக இருந்தது.


நிஹாரிகாவுக்கு குழந்தை பிறந்ததும் சற்று உடம்பு போட்டுவிட்டதால் சற்று பெரிய அளவில் தான் இப்போது உடைகள் வாங்கியிருந்தாள்.


தங்கைக்குத் தன் பழைய துணியைக் கொடுக்க மனம் இல்லாமல் இப்போது வாங்கிய பெரிய அளவிளான புது உடையைக் கொடுக்க, அதை மாத்திக்கொண்டு வந்தவளைப் பார்த்தவனுக்கே சிரிப்பு வந்தது.


அவளுக்கோ வெட்கம். அவன் முகம் பாராமல் நெளிந்து கொண்டே நடந்து வந்தவள் மீண்டும் முன்பு படுத்த அதே இடத்தில் படுத்துப் போர்வைக்குள் தன்னை புகுத்திக் கொண்டாள்.


அவன் கட்டிலில் லேப்டாப்புடன் அமர்ந்து அவன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்குத் தான் உறக்கம் வரவில்லை. இன்று காலையிலிருந்து நடந்தவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வர, தான் தோற்றுவிட்டோம் என நினைத்துக் கண்ணீர் உகுத்தாள்.


கவிதாவின் முன் எப்போதும் தலைகுனிய கூடாது என்ற அவளின் கோட்பாடு அவள் காதலைக்கூட பின்னுக்கு தள்ளியது. விஹானை விட்டுத் தொலைதூரம் ஓட நினைத்தவளை விதி கொண்டு வந்து அவனது அறையில், அவனது படுக்கையில் படுக்க வைத்துவிட்டது.


அவளது தோள் மீண்டும் விசும்பலில் குலுங்க, கட்டிலில் இருந்தவன் கண்களுக்கும் அது தெள்ளத் தெளிவாகத் தெரிய, உதடு குவித்து உப் என ஊதியவன் லேப்டாப் அணைத்து வைத்துவிட்டு படுத்தவன் அவளை இழுத்து அணைத்தான்.


அவன் உடனடியாக இப்படி அணைப்பானெனக் கணிக்காதவள், அவன் அணைப்பில் அதிர்ந்து, வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தாள்.


“இன்னும் ஏன் அழற? தூங்குனு சொன்னேன்ல” எனக்கூற, அவளிடமிருந்து பதிலே இல்லை. உடல் நடுக்கம் தான் அதிகமானது.


“ஏன் நடுங்குற?” எனக் கேட்டும் பதிலிளில்லை. தானாகவே அவளை விடுவித்தான். அவனுடமிருந்து விடுபட்டதும் துள்ளி எழுத்து, ஷோபாவை நோக்கி ஓட,


“கொன்றுவேன்.. மரியாதையாதையா இங்க வா.. இல்ல நானும் அந்த ஷோபாக்கே வருவேன்” எனக்கூற,


‘எதே ஷோபால இரண்டு பேரா’ என அதிர்ந்தவள் அவ்விடமே நின்று, திரும்பி அவனைப் பார்க்க, அவனோ கண்களால் கட்டிலைக் காட்டினான்.


“இல்ல நான் அங்கயே” என்றவள் அவன் முறைப்பில் மீண்டும் அதே இடத்தில் படுத்துக் கண்களை இறுக மூடினாள்.


அவனுக்கு அவளுடன் ஒன்றாக வாழ ஆசையாக இருந்தாலும், இந்நிலையில் அவளிடம் இழைய மனம் வரவில்லை. மேலும் அவள் தன்னைக் காதலிக்கிறாளென சூர்யான்ஷ் தான் கூறினானே ஒழிய அவள் வாயால் அவள் காதலை அவள் கூறவில்லை.


அவளாக முன் வந்து அவள் காதலை வெளிப்படுத்தியபின் தான் அவளுடன் சேர வேண்டுமென நினைத்தான். அதற்காக அவளிடமிருந்து தள்ளி இருக்க முடிவெடுத்தான். முதல் நாளே அவளைப் பயமுறுத்தி விடக் கூடாது என நினைத்து அவனும் அமைதியாக, விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டான்.


அவனிடமிருந்து எந்தச் சத்தமும் வராமல் போக மெல்லமாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். அவனது சீரான மூச்சுக்காற்றும், ஏறி இறங்கும் மார்பும் அவன் உறங்கிவிட்டான் எனக்கூற, நன்றாகத் திரும்பி அவனைப் பார்த்தவாறு படுத்தாள்.


அவளின் மனம் கவர்ந்தவன், தனக்கு கிடைக்கவே மாட்டானென நினைத்து ஏங்க வைத்தவன், பின்னாளில் அவளைத் துறத்தி, துறத்தி வந்தவன், அவனைக் காண காண மனமும், உடம்பும் அவனை நெருங்க நினைத்தது. மெல்ல கைகளால் அவன் சிகையைத் தடவினாள்.


அவன் விழிக்கவில்லையே தவிற, அவள் செய்கைகளைக் கண்மூடி அவதானித்துக் கொண்டிருந்தான். அவன் விழிக்கவில்லை என்றதும் மெல்ல அவள் விரல்கள் அவன் கண்ணத்தை வருடியது, சில்லிட்டிருந்த கைப்பட்டதும் அவனுடம்பில் அசைவு தெரிய பட்டென கண்களை மூடிக் கொண்டாள்.


சிறிது நேரம் கழிய, மீண்டும் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்க்க அவனோ அப்பொழுதும் உறங்கிக்கொண்டிருந்தான். ‘உனக்கு ஆக்ஸிடோசின் அதிகமாகச் சுரக்குது போல பிரணி.. இன்னும் கொஞ்ச நேரம் இவனைப் பார்த்த.. அவன் கற்பு இன்னைக்கு உன்னால பறிபோய்டும்’ என நினைத்தவள், சிரித்துவிட்டு தன் தலையில் தானே அடித்துக் கொண்டு அவனைப் பார்த்தபடியே கண்களை மூடினாள்.


கண்களை மூடிப் படுத்திருந்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. கட்டுப்படுத்திக் கொண்டான். இவன் விழித்து அவளைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை.


‘இவ்வளவு ஆசை இருக்குல அப்போ அதைச் சொல்ல வேண்டியது தானடி.. திருட்டு தனமா என்னை சைட்டடிக்கிற.. இது கூட நல்லா தான் இருக்கு.. ஐ லக் இட்..’ என நினைத்தவன் கண்களைத் திறந்து பார்க்க அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.


இவனும் திரும்பி அவளைப் பார்த்துக்கொண்டே படுத்தான். இதுவரைக்கும் நல்லா தான் போனது அதுக்கப்புறம் தான் விஹானுக்கு சோதனை காலம் ஆரம்பமானது.


உறங்கிக் கொண்டிருந்தவளின் தொள தொள உடை லேசாகக் கீழிறங்கி அவளின் டேட்டூவின் சின்ன பகுதி மட்டும் அதாவது இரண்டு இலை மற்றும் சின்ன சிவப்பு இதயம் மட்டும் தெரிந்தது.


இப்போது அவனுக்கு அவனது பெயரைப் பார்க்க ஆவல் எழ, அவள் அனுமதி இல்லாமல் பார்ப்பது தவறு எனத் தெரிந்தும் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. எக்கி எக்கி பார்த்தான் பிரயோஜனம் இல்லை.


அவள் மேலாடை மீது கைவைக்க போக, அவனுக்கு சிரமம் கொடுக்காமல் அவளே அசைந்து புரண்டு படுக்க, உடை அபாயகரமாக இறங்கி அவனின் பெயரை மொத்தமும் அவன் கண்களுக்கு விருந்தாகப் படைத்தது.


பார்த்தவனுக்கு மூச்சு முட்டிப் போனது. கண்களைச் சிமிட்ட கூட முடியவில்லை. அதைத் தழுவப் பேராவல் அவன் கைகளுக்கு.. எல்லாம் சில வினாடிகள் தான். அதன்பின் கோபம் புசுபுசுவென மண்டைக்குள் ஏறியது.


‘எந்த இடத்துல டேட்டூ போட்டுருக்கா பாரு? அது நான் மட்டும் பார்க்க வேண்டிய இடம்.. இத கொண்டு எவன்கிட்ட காட்டி எவன் தொட்டு டேட்டூ போட்டானோ? இவள” எனப் பல்லை நெறுநெறுவென அறைத்தான். அவனுக்குத் தெரியாதது அதைப் போட்டது ஒரு பெண் என்று.


*******


அறையில் படுத்திருந்த விராஜ்ஜிற்கு எண்ணம் முழுவதும் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்ற சாத்விகா மீதே இருந்தது.


அவளது அலைபேசிக்கு அழைக்க அதுவோ ‘சுவிட்ச் ஆஃப்.. சுவிட்ச் ஆஃப்’ என்றே வந்தது. அங்கு என்ன நிலவரம் என்று தெரியாமல் இங்கு அவனால் உறக்கம் கொள்ள முடியவில்லை.


இவனும் தாய்மாமன் மகள் அதனால் தன் காதலுக்கு எந்த இடையூரும் வரப்போவதில்லை என்ற இருமாப்பில் இருந்தான். ஏற்கனவே அவன் தொழில் அவளுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. இப்போது குடும்பத்திற்குள்ளும் பிரச்சனை. மண்டைக்குள் குடைச்சல் உண்டானது.


நாளையோடு பிரச்சாரமும் முடிகிறது அவனுக்கு.. தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ தெரியவில்லை. மெல்ல எழுந்து சென்று அங்குள்ள மேஜையிலிருந்த டிராயரை இழுக்க, அதில் அவள் கொடுத்த அரியர் பரீட்சைக்கான ஹால்டிக்கெட் இருக்க அதைக் கையில் எடுத்தான்.


தேதியைப் பார்க்க இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தது. இரண்டு வாரத்தில் படித்துத் தேர்ச்சி பெற முடியுமா? அவள் தனக்கு வேண்டுமென்றால் இப்பொழுது இருக்கும் சூழலில் அவன் உறுதியாக இருக்க வேண்டும்.


அவள் உறுதியாக நிற்க வேண்டுமென்றால் அவள் கூறிய படி டிகிரியை வாங்க வேண்டும். கால்கள் புத்தக அலுமாரியை தேடி சென்றது. பல காலமாகத் தூங்கிக் கொண்டிருந்த புத்தகத்தை எடுத்துத் தூசி தட்டினான் தன்னவளுக்காக.


முடியுமென்று முயற்சி செய்தால் முடியும்.. முயற்சியே செய்யாமல் எந்த விஷயமும் நடக்காது. அவள் கேட்டது அத்தனையும் அவனால் செய்ய முடியாவிடினும் குறைந்தபட்சம் டிகிரியாவது அவளுக்காக முடிக்க வேண்டுமென முடிவெடுத்துவிட்டான். புத்தகம் மட்டுமல்ல அவனின் முன்றேற்றத்திற்கான பாதையும் திறந்தது.
 
Top