uma Karthik
Moderator


விடியலை மறைக்கும் கார் மேகமாய் .. அவள் கூந்தல் போர்வையை கை கொண்டு விலக்கி .. கண் சிமிட்டி.. உடலை முறுக்கி.. சோம்பல் முறித்துக் கொண்டு.. இரவு பயணம் மற்றும் உறவு பயணம். அசதியாக..!! கடினப்பட்டு விழித்தான். ப்ரீத்.. வாஞ்சையுடன் அவள் முகம் மறைக்கும்,முடி கற்றையை ஒதுக்கிவிட்டு புருவ மத்தியில் இதழ் பதித்து.. மூக்கு, கன்னம் தொட்டு முகம் எல்லாம் வளம் வர !!
பிரம்ம முகூர்த்தத்தில் அரங்கேறிய முதல் கூடலில் களைத்து. மொட்டானவள் உடலோ.. வலி தந்து வாட்டிட, முணகினாள் மலர்ந்தவள் " தூங்க விடுங்க.. ப்ரீத்.. ஐயம் சோ.. டயர்ட்.. பா. ப்ளீஸ்.. சும்மா.. இருங்க.. தூங்கிய வாக்கில் உளறிட..
" ரொம்ப பசிக்குது.. என்
டி- ஷர்ட் எங்க.? பிரதி "
"வேற.. டிரஸ் இருந்தா.. எடுத்து போடுங்க.."
எனவும் தரையை... பார்வையால் ஆராய்தவன்.. அவள்.. ஆடைகள் கீழே இருப்பதை பார்த்து. உதடுகளை கடித்து மர்மமாய் சிரித்துவிட்டு..
" பிரதி.. இதை போட்டுட்டு என்னால வெளியே போக முடியாது.. " அவள் சுடிதார் டாப் ஐ கை காட்டினான் கள்வன். " அதனால என்னோட டீசர்ட்ட தரீங்களா.? " என்றான் அர்த்தமாய் .!!
கையை கட்டி புருவம் உயர்த்தி.. நிற்பவனை எதிர்கொள்ள முடியாமல்
வெட்கம் வந்தவள்..!! போர்வையால் தலையை மூடி. முகத்தை நாணத்தால் மறைந்தாள்..
" அந்த .. வாடரோப் ல உங்க டிரஸ் எல்லாம் இருக்கு.. இத இப்ப தர முடியாது. " என்றால் மெல்லிய குரலில் தயங்கியபடி.
" உன்கிட்ட எப்படி??" கேள்வியாய் அவளை நோக்கனான் . ஆச்சர்யத்தை விழியில் தாங்கி..!!
" உங்க மேல கோபம் மட்டும் தானே தவிர.. என்னால உங்கள வெறுக்கவே முடியாது.. தெரியுமா..? " அவள் குரலே அழுவதை காட்டியது.
மேலும் பேசி அழ வைக்க விரும்பாமல் "நீ.. தூங்கு.. பிரதி.. " என்றவன் நிற்காமல் குளியில் அறை.. சென்று அடைந்து கொண்டான்.
பிரதியின் அழுகையால் மனம் குறுகுறுக்க..? ஷவரின் மழை தூறலில் .. கொதிக்கும் மனநிலையை குளிர்விக்க நின்றான். அவளின் அளவில்லா காதல் அறுத்தது நெஞ்சை,அவள் காதலுக்கு தகுதி இல்லாத தன்மீது ஏன் இத்தனை காதல்.!! என்ற ஆச்சரியத்தில் புன்னகை தவழ்ந்தது ஆளன் இதழ்களில் . அதேபோல அவளை காயப்படுத்திய தன் மீது கோபம்
துளிர்ர்த்தது. நிதானம் இல்லாமல் பேசிய வார்த்தைகள் நடந்து கொண்ட விதங்கள் .எத்தனை அன்பானவர்களையும் இவன் செயல் வெறுக்க மட்டுமே வைக்கும்.
இப்படி தன்னை நேசிக்கும் இவள் கடவுளின் வரம். இனி தன்னால் முடிந்த அளவு எல்லையில்லா அன்பு பாசம் கொடுக்க வேண்டும். என எண்ணி குளித்து விட்டு வெளியே வந்தவன்.
உறங்கும் காதலியை இமைக்காமல் பார்த்தான்.. அவளை மயக்கும் மாயவன். நேற்றய இரவு மனதில் நிழலாடிட , மீண்டும் இம்சை செய்ய எழுந்த இச்சையை புறம் தள்ளி, அடக்கி கொண்டு.. சத்தம் வராமல் மெல்ல கதவை திறந்து உடைகளை அணிந்து. விசிலடித்தபடி நடந்து வந்தவன். சும்மா நின்ற வாட்ச் மேன் தாத்தாவை வேண்டுமென்று வம்பிழுத்தான். சிரித்த முகத்துடன்.. நக்கலாய் கேட்டான்.. ப்ரீத்" என்ன பெருசு வீட்டு முதலாளி வர்றேன். வணக்கம் வைக்க வேணாம்.? ரூல்ஸ் தெரியாது? "
' இவனுக்கு போய் இப்படி ஒரு வாழ்க்கையா.? வயிறு எரிய!! மனதிலே புழுங்கியவர். பதிலாய் இடியை தந்தார். ' " முதலாளி வரும்போது வணக்கம் வைப்போம். " என்று சொன்னதுமே சிரித்தவன் முகம் மாற!! எதையோ வென்றது போல் ஒரு திருப்தி அந்த சின்ன புத்தி கொண்ட பெரியவருக்கு.
" யாரு..? பிரதி.. அப்பா கூட உயிரோட இல்லையே !! யார் முதலாளி யாராயாவது தப்பா புரிஞ்சுகிட்டு சொல்லுறீங்க. போல..? " என்றவன் முகம் இருள, குரலில் அத்தனை நடுக்கம் !!
நேற்று முதல் முறை இரவில் அவனை பார்த்தவுடனே அவருக்கு பிடித்தமில்லை.!!
ஒருவரை பிடிக்கவில்லை என்று உணர்வு மேலோங்கினால்?? அவர்களைத் தவறான நபர்களாகவே நமது மூளை சித்தரித்துக் காட்டும்.
பிரீத் அவரை பொறுத்தவரை தவறானவனாகவே .. தெரிய! வயதானவர்களுக்கே உள்ள பிடிவாதம். தன் அனுமானங்கள் தவறாகாது என வைராக்கியம் வேறு அந்த மனிதருக்கு. !!
ஒரு பெண்ணை பற்றி சொல்லப்படும் சின்ன சின்ன பொய் நிறைந்த கட்டு கதை.. பிறருடன் தொடர்புபடுத்தி பேசும் சொற்கள்.. புரியாமல் பரப்பப்படும் புரளிகள். அனைத்தும் அவள் வாழ்க்கைக்கு போடும் .
பிடி வாய்க்கரிசி தான் என்று உணராமல் ?? நரம்பில்லா நாக்கு.. நஞ்சை உதிர்க்க.!!
கதை கேட்க காதை தந்து நிற்பவனின்... கோபத்தின் வீரியம் புரியாமல்.!! அரக்கனை உசிப்பிடும் செயலில் இறங்கும், வஞ்சகருக்கு தெரியாது. ? இந்த பழி சொல்.. கனம் கொண்ட கத்தியாய் மாறி!! ஒரு நல்லவளின் நெஞ்சை குறி தப்பாமல் குத்தி கிழித்து வதைக்கும் !!. என..
சிலர் பொய்யாய் பிறரை இழிவுபடுத்தி பேசுவதை, தன் நேரத்தை ஒதுக்கி கேட்பவர்கள் கூட ?உண்மை தெரியாமல். தீர்ப்பை வழங்கும் நீதிபதி ஆவார்களே..!! தவிர.!! சாட்சியை தேடுவதே இல்லை??
சுண்டிய ரத்தத்தின் பிடிவாதமான ... நாயகன் மீதான காரணமற்ற பிடித்தமின்மைக்கு கிடைத்த பரிசாய் .. அவர் பிதற்றலை கேட்டு வாட்டமாக நிற்கும் ஆண்மகன் உள்ளம் தடுமாறிட, அதை தன் வெற்றி என்று செருக்குடன் பார்த்து களிப்போடு அடுக்க ஆரம்பித்தார்.. அபத்தங்களை !!
" அருண் சாரும் மேடமும் கல்யாணம் பன்னிக்க போறாங்க!! உங்களுக்கு தெரியாதா?? " என்று கேட்டு. மூத்தவர் அவன் முகத்தை உற்றுப் பார்த்து நிற்க.
இவன் மனமோ.. பின்னோக்கி சென்றது. செல்போனை உடைக்கும் முன்னமே .. அந்த நபரின் நம்பரை தனது போனிற்க்கு அனுப்பிய பின்..!
அவன் யார் என ஆராய்ந்தும் இருந்தான். சந்தேகன். ' உனக்கு பவித்ரா. எப்படியோ.? எனக்கு அருண் அப்படி.!! ' என பிரதி சொன்ன வார்த்தை காதில் கேட்டது. சொல் புத்தியால் கெட்ட அவன் மனமோ.. குழப்பியது. !!
' பவித்ரா.. என் முன்னால் காதலி.. அப்போ.. அருண் பிரதியோட ??' என்று தலையை அழுத்தி பிடித்துக் கொண்டான். அவன் மனதில் கட்ட பட்ட கருப்பு திரை.. அனைத்தையும் தவறாக காண்பிக்க !! தெளிவு படுத்தி கொள்ள மீண்டும் கேட்டான்.. அவரிடமே !!தெளிவாகிட .
வஞ்சகரிடம் வாழ வழி கேட்டால்.?நஞ்சை கொடுத்து சொர்க்கம் செல்லும் மார்க்கம்.. இது என்பார்களாம்..!!
செவி வழியாக நஞ்சை புகுத்த ஆரம்பித்தார். அவர் நாவில் அமர்தது விதி." அந்த பொண்ணும், அருண் சாரும் லவ் பண்ணுறாங்க. அந்த அம்மா அவர தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிடுச்சு" என பொய் வைத்து ..!! பற்ற வைத்தார் பிரதியின் குடியை மொத்தமாய் கெடுத்து.!!
ஒரு மாத பிரிவு.. அவனை ஏற்கனவே நிலை குழைய வைக்க ஏங்கியவன் .. முகமோ .. அழகை இழக்க.!! காதலியின் பிரிவு வேறு உடலை உருகியது.!! கோலம் மாறி.. பரதேசியாய் நின்றான் அவர் முன்.!! ஒரு கம்பெனியை நிர்வகிப்பவன் .. என்று சொன்னால் கூட நகைக்கும் வகையில் , நீண்டு ஒழுங்கற்று வளர்ந்த முடி.. முகமெல்லாம் தாடி படர்ந்து.. கிழிந்த பேண்ட், அவன் வேர்வை வாசம் நுகர சண்டையின் போது அவள் எடுத்து வந்த அழுக்கு டி-ஷர்ட் வேறு அம்சமாய் பொறுந்த ..!!
அவனை பார்த்து பொருக்கி என்று நினைத்து மனதில் உமிழ்ந்தவர் !! அவன் விழியின் சிவப்பு.. வேறு கதை சொல்ல.!! ஒரு மாதத் தொடர் குடியின் விளைவு.. முகமே..அவனை குடிகாரன் இவன் என காதல் மன்னனின் மானத்தை ஏலம் போட்டது.
பெரியவரோ ..? சூடம் அடித்து சொல்வார். இவன் ஒரு குடி வெறியன்.. தான் என்று. !! வெறும் அளவில்லா.. பிரதியின் சொத்தினை அடைய.!! ஏமாற்றும் போலி இவன்..டிவியில் நியூஸில் வருவது போல..!! பேசி ஏமாற்றும் கஞ்சா காதலன் என எண்ணிக் கொண்டு..!! அவன்... இந்த அப்பாவி பெண்ணை காதல் வார்த்தை பேசி மயக்கியவன். என்ற
மாயை அந்த கிழத்தை ஆட்கொள்ள.!!
நல்ல விஸ்வாசியாக இவனிடம் இருந்து அந்த பெண்ணை காக்க, இவனை பிரதி ஏற்காமல் விலக்கி விட்டு வெளியே போக வைக்க நினைத்த.. தாத்தா. கலைத்து விட்டார்.. பெண்ணவள்.. உயிரை உருக்கி.. கட்டிய ..காதல் கூட்டை !!
" ஒரு மாசமா.? அருண் சார் கூட தான் இருந்தாங்க. நேத்துவரை இங்க தான் தங்கி இருந்தார்.. அந்த ஐயா இந்த அம்மாவோட சொந்தகார பையன். கட்டிக்குற முறை தானாம். மேடமும் சார தான் முதலாளினு சொன்னாங்க. கட்டிக்க போறவர்னு சொல்லி.. அவர் வந்தா உடனே காக்க வைக்காம உள்ள அனுப்ப சொன்னாங்க.. அப்றம்.. இந்த கல்யாணம் ஆகாம புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து குடும்பம் நடத்துவாங்க இல்லை.. அது பேர் என்ன இங்கிலீஷ் ல இருக்குமே. வாயில வரலை.. பா.
" லிவ் இன் ரிலேஷன்ஷிப். "
" ஹான்.. அதான்.. அருண் சாரும் அந்த பொண்ணும் . ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறாங்க. அந்த பொண்ண கட்டிக்க.. ஒரு அந்தஸ்த்து வேணும் பா..!! என அவன அவன் தன்மானத்தை குத்தி காயப்படுத்தியவர்.
" பாக்க ஏழை வீட்டு பையன் மாதிரி.. இருக்க? இவ்ளோ... சொத்து பத்து இருக்க.. பொண்ணு உன்ன " ஏற்ற இருக்கமா பார்த்த.. கேவள பார்வை நீ பிச்சைக்காரன் என சொல்லியது மேலும் நிறுத்தாது தொடர்ந்தார்.
" உன்ன மாதிரி ஒன்னும் இல்லாத ஒருத்தன வசதி இருக்க புள்ள காதலிக்குமா? இனம் இனத்தோட ... பணம் பணத்தோட சேரும்.!! புத்தி இல்லையா.? காசு பணத்து மேல உள்ள மோகம். பணக்கார பொண்ணுக்கு வலை வீசிறது.. என கொத்தளித்தார் கோபமாக..
" உழைச்சு சாப்டா தான் ஒட்டும்.. தம்பி " என நேரடியாக சாடினார் உடைந்தவனை.
நேரடியாக தன்னை திட்டுவதை உணர்ந்தவன்.. துரோகத்தின் வலியில் துடித்தான் " தினமும் அவன் இங்க வந்து தங்குவானா?" உயிரை வெறுத்து கேள்வி கேட்டான்.
" ஆமா... தம்பி.. நீ ஊருக்கு பொய்டு.. உன் வசதிக்கு தகுந்த பொண்ண பாரு..? நான் சொன்னத மேடத்துகிட்ட சொல்லிடாத.? " ஒரு பெண்ணின் வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கிவிட்டு, தன் வேலை நிலைக்க.. கெஞ்சுவது போல் நடிக்கும் இவரை போன்ற சுயநலவாதிகள் அநேகம்.!! இது போல பசப்பிடும் சகுனிகளை அன்றாட வாழ்வில் எல்லோரும் எதிர்கொள்கிறார்கள்.!!
கலங்கியவன் வலி பொறுக்க முடியாமல் " இங்க ஒயின் ஷாப் எங்க இருக்கு. "கேள்வியை மட்டும் கேட்டு?? மதி கெட்டவனாய் உணர்வற்று நகர்ந்தான்.
பித்து கொண்டவன் போல செருப்பை அங்கேயே .. விட்டு விட்டு வெறும் காலில் .. நாயகன் நடந்து செல்ல.!!
அவன் செருப்பின் தேய்பிறை கண்டவர்.. அவன் காதில் விழும்படி முணுமுணுத்தார் " நல்ல செருப்பு வாங்க கூட வக்கில்லாத பிச்சைகார பசங்க. எந்த பொண்ணு மனத கலைச்சு சொத்த அமுக்கலாம்னு திரியுறானுங்க.. " என்றவரின் சுடு சொல் கேட்டு திரும்பி .. ஒருமுறை நொடி பொழுது.. மட்டும் பார்வை வெறித்துப்பார்த்து வேதனையோடு வெற்று புன்னகை சிந்தியவன், பாதை மறந்து பித்தனாட்டம் திக்கற்து வெளியே நடக்க !!
இந்த அயோக்கியனிடம் இருந்து.. தாய் தந்தை இல்லாத வெகுளி பிள்ளையின் வாழ்வை காத்த நிம்மதி அந்த வயோதிகருக்கு.!!
பிரதி. தன் மாமா பையன் என அருணை அன்று சொன்னது.. அருண் பற்றி இவர் சொல்லதும் ஒத்துப் போக..! காதலி இழைத்த துரோகத்தால் உடைந்து போனவன்.. இந்த ஒரு மாத காலம் பழகிய போதைப் பழக்கம்.. புத்திக்குள் நடுக்கம் தந்து வா என்று அழைக்க. !! அவள் பிரிவின் வலியை தாங்க முடியாதவன்.துரோகத்தின் வலி நிவாரணையாக மதுவை ஊற்றி ஆற்ற நினைத்தான் மனதின் காயங்களை . !!
ஏற்கனவே நிதானம் இல்லாதவன்.. தன்னிலையும் தடுமாற மதுகூடம் நோக்கி சென்றான்..
என் பிரதி எப்படி என்று எனக்கு தெரியும்.? வயதை பொறுப்பெடுத்தாமல் ஒரு அறை கூட விட்டு இருக்கலாம்.காதலோடு தன்னையும் சேர்த்து விருப்பமில்லாமல் தாரை வார்த்து கொடுத்த பெண்ணின்.. மீது நம்பிக்கையே இல்லையா..? இதயத்தில் காதல் நிறைந்தால் சந்தேகத்திற்கு இடம் இருக்காது. பிறரின் பேச்சுக்கு சிரசில் இடம் தரும் இவன் .. பிரதி..ஆண் வாசமே தன் மூலம் தான் அறிந்தால் என்பது எப்படி மறந்து போனான் ?? வெறும் வாய் வார்த்தையை கேட்டு உண்மை உணராது எப்படி நம்புகிறான். ?? தகுதியில்லாதவன் கையில் கடவுள் திணித்த பொக்கிஷம் பிரதிக்ஷா .!! என்ன செய்யப் போகிறானோ..?? என்ற அச்சம் நெஞ்சை நடுங்க வைக்க.!! இழக்கப்போவதன் மதிப்பு அறியாது .. இவன் தவறான புரிதலில் !!
அவளுக்கு இழைக்க போகும் தண்டனைகளை தாங்குவாளா?? கண்களில் வேறு ஆணை தீண்டாது கற்பை தாங்கி நின்றவள்.!!
ஒன்றாக நிற்கும் போதே ..! நிதானம் இல்லாமல் ரௌத்திரம் முகம் ஏறி சிவந்து நிற்பவன்.
மதுநெடியால் இரண்டானால்.. வெறி பிடித்த மனித மிருகமாய் உருமாறி .. உயிர் குடிக்கவும் துணிவான்.
இது எதையும் அறியாமல் நிம்மதியாய் உறங்கும் அபலை பெண்ணின் . இறுதி தூக்கம் ?? இது தானோ !!