Administrator
Staff member
எல்லையற்ற காதலே!
உந்தன் எல்லையற்ற காதலினால் எண்ணற்ற நினைவுகள் வேண்டும்!
நினைவுகள் மொத்தம் நீயாக வேண்டும்!
சந்திக்கும் பொழுதுகள் யாவும் தித்திக்க வேண்டும்!
தன்னந்தனிமை நீங்கி, தலைவனின் கரம் சேர வேண்டும்!
இடைவெளிகள் சுருங்கி,
நெருக்கங்கள் கூட வேண்டும்!
பார்வையால் என்னை களவாடும் கண்கள் வேண்டும்!
உலகம் மறந்து உயிர்க் காற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்!
உன்னில் கரைந்து போகும் காதல் பொழுதுகள் வேண்டும்!
உந்தன் உயிரினை சுமக்கும் ஊனாக வேண்டும்!
பேச்சிலும் மூச்சிலும் நீயிருக்க வேண்டும்!
இன்பமாய் வாழ, இனிமையான புரிதல் வேண்டும்!
என்றும் மறவாத காதல் கணங்கள் வேண்டும்!
முற்றும் முழுதாய் உனக்குள் முழுமையடைய வேண்டும்!
தாங்காத ஏக்கங்கள் உனதன்பில் தீர வேண்டும்!
உன்னோடான என் வாழ்வை வாழ நூறாயிரம் ஜென்மங்கள் வேண்டும்!
இறுதியில்,
உன் எல்லையற்ற காதலினால் நான் நாமாக வேண்டும்!!!!
- காவியதர்ஷினி!

அருமை!