முத்தம் 1
"ஐயோ! ஜெயவள்ளி என்ன எங்க கூட்டிட்டு போறீங்க?" என ஒருவன் பேச இன்னொருவர் "ஏய்! அதிரூபன் உன் அம்மாவை எப்படி நீ பேர் சொல்லி கூப்பிடலாம்?" என்றார் ஜெயவள்ளியின் கணவர் வைனவேந்தன். "அப்படி சொல்லுங்க டாடி!" என அதிரூபனின் தங்கை மாதங்கி முன் வந்து தந்தை சார்பில் பேச "என் பையன் என்னை உரிமையா பெயர் சொல்லி அழைச்சா போதுமே, அப்பாவும் மகளும் கோபத்துல கொந்தளிச்சிட்டு இருக்கீங்க? அதி, இன்னைக்கி உனக்கு பொண்ணு பார்க்க போறோம்." என்றதும் "என்ன பொண்ணு பார்க்க போறீங்களா? ஜெயவள்ளி எனக்கு வெறும் இருபத்தெழு வயசு தான் ஆகுது." என்றான் திடமான. ஜெயவள்ளி மற்றும் வைனவேந்தன் தம்பந்தியர்க்கு திருமணம் முடிந்து ஐந்து வருடத்திற்கு பின்னரே பிறந்தவன் தான் அதிரூபன். இவனது தங்கை இவனுக்கு இரண்டு வயது இருக்கும் போது பிறந்தாள். சிறு வயதில் இருந்து அடிசண்டைகள் போன்ற பல சம்பவங்கள் வரிசை கட்டி நடந்து ஒரு காலத்தில். பிறகு, அந்த சண்டைகள் அனைத்தும் பாசமாக மாறியது அதிரூபன் மாதங்கியை விட்டு படிப்பிற்காக பிரிந்த பின்னர் தான் அவன் அவளை நினைக்க தொடங்கினான். இதோ, ஒரு வாரத்திற்கு முன் தான் இவனது தங்கைக்கு வரண் வந்தது, அப்போது அவள் எங்கள் இருவரின் திருமணமும் ஒரே மேடையில் நடக்க வேண்டும் என்கிற அந்த கட்டளைக்கு தான் இப்போது இவனுக்கு பெண்பார்க்க செல்கிறார். “மாது ஏன்டி இப்படி பண்ண. நா இப்போ தான் நிலையான சம்பளத்தில் எனக்கு பிடிச்ச வேலையை செஞ்சுட்டு வரேன். அது உனக்கு பொறுக்கலையா?" என தன் தங்கையிடம் செல்லமாக கோபம் கொண்டான். "ஆஹா! தினம் போய் வெட்டியா கத்திட்டு வர, அதுக்கு மாச ஒரு லட்சம்? எப்படி பா?" என தமையனின் ஆசிரியர் பணியை கேலி செய்து பேசினாள். "அப்படி பேசாத மாதங்கி! அவன் பண்ணிட்டு வர உத்தியோகம் பல லட்சம் எதிர்கால எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பு செய்யும் பல இளைஞர்கள், அரசு வேலைக்கு செயல் பட வைக்கிற உன்னதமான வேலையை, கொச்சபடுத்தி பேசினதுக்கு.. நா நீ கேட்ட ஐஸ்கிரீம் கேக் வாங்கி தரமாட்டேன்." என முடிவாக கூறினார். "டாடி!! என்ன இப்படி சொல்றீங்க?" என குழந்தைதனமாக முகத்தை வைத்து கொண்டு பார்க்க "இப்படி குழந்தை மாதிரி இனி நடந்துக்காத. கல்யாணம் பண்ணி அடுத்த வருஷம் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும். கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க பழகு." என ஜெயவள்ளி அறிவுரையை முடிக்கவும் பெண்ணின் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது.
"மாப்ள வீட்டுகாரங்க வந்துட்டாங்க மா!" என தேவகி கத்தினாள். "தேவகி!! என்ன அதுக்கு இப்படி தான் கத்துவியா? என்னங்க வாங்க போய் அவங்களை வரவேற்க போவோம்." என தனது கணவன் சுதாகர் உடன் சென்றார் பைரவி. அவர்களை வரவேற்ற பின் சம்மந்தார்கள் இருவரும் அமர்ந்து "பிரோகர் எல்லாம் சொல்லிருப்பார். இருந்தாலும், சொல்றேன் சம்மந்தி. என் பேரு சுதாகர், இவ என் அன்பான துணைவி பைரவி. இவ எங்க கடைக்குட்டி தேவகி எனக்கு மொத்தம் இரண்டு பொண்ணுங்கள். மூத்தவள் சானக்கியா இப்போ தான் படிப்பை முடிச்சிருக்கா. இன்னும் பேசினேன் அவ்வளவு தான் என் பொண்ணு அடிச்சாலும் அடிப்பா." என்றதோடு சுதாகர் நிறுத்தி கொண்டார். "நானும் என் குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன். நா வைனவேந்தன், இவங்க என் மனைவி ஜெயவள்ளி அப்புறம் இது என் மகன் அதிரூபன் கடைசியா இவ என் செல்ல பொண்ணு மாதங்கி. அதி காலேஜ்ல ஃபிரவச்சரா வேலை பார்த்துட்டு வரான். மாதங்கி தனக்கும் தான் அண்ணாவுக்கும் ஒன்னா தான் திருமணம் நடத்தணும்னு சொல்லிட்டா. அதனால், ஒரே முகூர்த்ததுல இரண்டு கல்யாணம் நடத்தணும்." என தன்னவர் பேசும் போது "நீங்க என் மருமகளை கூட்டிட்டு வாங்க." என ஜெயவள்ளி குறுக்கே புகுந்தார்.
மறுபக்கம், சானக்கியா 'கல்யாணம்! நா கேட்டேனா கடவுளே? இப்ப தான் நா படிச்சு முடிச்சிருக்கேன். இரண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம் நினைச்சேன். இப்ப என்ன பண்ணுறது..?' என யோசனையில் இருக்கும் அவளை "அக்கா மாமா சூப்பரா இருக்கார். வாவா..நா கூட்டிட்டு போறேன்." என தேவகி சானக்கியாவை அழைத்து சென்றாள். மேலே இருக்கும் மேகத்தை புடவையாக அணிந்து வெள்ளை முத்துகளில் வளையல், பாசி தோடு அதோடு வானத்தில் இருந்த அனைத்து நிறங்களும் அவளது மெய்யில் பூசியிருந்தது. நடு நெற்றியில் நெருப்பை மூட்டும் சூரியனை பொட்டாக வைத்திருந்தாள் பாவை. அவளை பார்த்த ஆணவன் 'வாவ்! சானக்கியா..சானக்கியா ஏதோ தந்திரம் செய்தாய்..கூல்டவுன் அதிரூபன் இவகூட தனியா பேசிட்டு உன் ரகசியங்களை பகிர்ந்த பிறகு இவ சரினு சொன்னா இவளை நீ ரசிக்க ஆரம்பிக்கலாம்.' "இவ தான் என் மூத்த மகள் சானக்கியா. மாப்ள நீங்க இவளோட தனியா பேசணுமா?" என சுதாகர் கேட்டதும் "நீங்க சொல்லலைனாலும். நானே கேட்டிருப்பேன். தனியா பேசணும்." இதை பார்த்த மாதங்கி "என்னமோ கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தான். இப்ப என்னடானா பட்டுனு தனியா பேச போய்ட்டான். எப்படி பா?" என குழப்பமாக கேட்டாள். "உன்ன பார்த்ததும் உன் மாப்பிள்ளை கவுந்து விழுகள? அப்படி தான்! நீங்க இல்லாம நாங்க இல்ல." என தன்னவளை பார்த்து பேசினார் வைனவேந்தன் வெட்கத்தோடு ஜெயவள்ளி "பிள்ளைகள் முன்ன என்ன பேசணும்னு தெரியாது?" என்றதோடு நிறுத்திக்கொண்டார். இருவரும் மாடியில் உள்ள பாவையின் ஊஞ்சலின் அருகை நின்று "நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க வேணாங்குற முடியல இருக்கேன். உங்களுக்கு என்ன தோணுது?" என அதிரூபனிடம் கேட்க "எனக்குமே வாழ்க்கையில இப்போ தான் வேலை கிடைச்சிருக்கு. உடனே வீட்ல கல்யாணத்துக்கு.. நம்ம வேணா ஏன் வெளி உலகத்துக்கு மட்டும் புருஷன் பொண்டாட்டியா வாழ கூடாது?" "என்ன சொல்றீங்க? நீங்க வெளியுலகத்துக்கு புருஷன் பொண்டாட்டினா அப்போ நான் உங்களுக்கு என்ன பணிவிடை பண்ணனுமா? நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியல?" என சானக்கியா பேச "நான் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு? சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு. அந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா.. நீங்க தாராளமா எனனை கல்யாணம் பண்ணிக்கலாம் மிஸ்டர் அதிரூபன்." "என்ன கண்டிஷன் மிஸ் சானக்கியா?" பாவையவள் ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தாள். "கண்டிஷன் நம்பர் ஒன், நான் இப்போ தான் பிஜி முடிச்சு இருக்கேன். எனக்கு முனைவர் பட்டம் வாங்கணுமா ஆசையா இருக்கு. அதனால, நான் மேற்கொண்டு படிக்கணும். கண்டிஷன் நம்பர் இரண்டு இந்த கல்யாணத்துக்கு அப்புறம் உரசுறது, முத்தம் கொடுக்கிறது, கட்டிப்பிடிக்கிறது, இந்த மாதிரியான எந்த ரொமான்டிக் சீன்ஸ் ரெண்டு வருஷத்துக்கு வச்சுக்கவே கூடாது.! கண்டிஷன் நம்பர் த்ரீ நான் இப்படி தான் இருப்பேன்னு ஒரு விதிமுறைப்படி நா வாழ்ந்துட்டு வரேன். அந்த விதிமுறைய கெடுத்து பேசக்கூடாது. முக்கியமா, எனக்கு சமைக்க தெரியாது, வீடு பெருக்க தெரியாது, கோலம் போடத் தெரியாது, என்ன மட்டும் தான் பாத்துட்டு தெரியும். அதனால வீட்ல சமைக்க மாட்டேங்குற, எங்க அம்மாக்கு வேலை பாக்க மாட்டேங்கறன்னு கல்யாணத்துக்கு அப்புறம் உங்க அம்மாவுக்கு வாலாட்டவே கூடாது! இந்த கண்டிஷன்ஸ் எல்லாம் ஓகேன்னு சொன்னா.. இந்த கண்டிஷனுக்கு ஏத்த மாதிரி கலயாணத்துக்கு முன்னாடி ஒரு ரெண்டு மாசம் நீ நடந்துகிட்டனா, கண்டிப்பா! உன்னை கல்யாணம் பண்ணிப்பேன். அந்த ரெண்டு வருஷத்துக்கு தொட கூடாதுனு சொன்ன அந்த ரொமான்ஸ் கண்டிஷனை கட் பண்ணிடுவேன். இல்ல, எங்க அம்மாவால பிடிச்சுட்டு தான் இருப்பேன் அப்படின்னா என் கண்டிஷனுக்கு நீ கட்டுப்பட்டு தான் ஆகணும்!!" என சானக்கியா கூறிய அத்தனை நிபந்தனைகளையும் கேட்டவனுக்கு ஓரளவு திருப்தி தான். ஏனென்றால்.. தனக்கு வரக்கூடிய பெண்ணவள் மேலும் மேலும் படிக்க வைக்க வேண்டும் என்பது அதிரூபனின் ஆசை. அதே சமயம், தனக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்பது அந்தப் பெண் நினைக்க வேண்டும் என்பதும் அவனது எதிர்பார்ப்பும் கூட. ஆனால், தன்னை தொடக்கூடாது! தங்களுக்குள் ஏற்படுகின்ற அந்த உறவுக்கு இரண்டு வருட காலம்.. அவளது அந்த நிபந்தனை மட்டுமே அதிரூபனின் மனதில் ஏதோ ஒரு வித சஞ்சலத்தை தூண்டியது. "எனக்கும் கண்டிஷன்ஸ் எல்லாம் இருக்கு. என்னோட முத கண்டிஷன் உன்னை நான் மேற்கொண்டு படிக்க வைப்பேன் அதுக்கு எந்தவித ரெஸ்ட்ரிக்சன்ஸும் கிடையாது. இரண்டாவது கண்டிஷன் நான் என் தங்கச்சி ரெண்டு பேரும் மேக்சிமம் எங்க அப்பா கூட நான் டைம் ஸ்பென்ட் பண்ணுவோம். அதனால நீ நினைக்கிற மாதிரி அம்மாவால பிடிச்சுக்கிட்டு, அம்மா பேச்சு கேட்டுக்கிட்டு இருக்குற பையனா என்னைக்கும் இருக்க மாட்டேன். மூணாவது கண்டிஷன் எனக்கானவள் நீனு இருக்கும்போது உன்னோட சில நேரம் உன் முத்தங்களை பிச்சு தானு கேட்டு நீ எனக்கு தரமாட்டேன்னு சொன்னா நான் என்ன பண்றது? அதுக்குன்னு நீ நா காமவெறி பிடித்தவன் அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம். திருமணமான புதுசுல தன்னவளோட கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கணும் தானே? அந்த உணர்வு எல்லா பெண்,ஆண் பாலினத்துக்குமே இருக்கும். நீ அதுக்கு ஒரு ஸ்ட்ரிக்ஷன் விட்டால் நான் என்ன பண்ணுவேன்? உனக்கு ஒரு மாப்பிள்ளை கூட அமையாதும்மா! உன்னோட ரெண்டு கண்டிஷனுக்கு நான் ஓகே சொல்லி இருக்கேன்னா..இதுவே என் இடத்துல வேற யாராவது இருந்தா போமா நீயும், உன் கண்டிஷனும் சொல்லிட்டு போயிருப்பான். அதனால.. என்னை தயவு செஞ்சு நீ ஓகே பண்ணிக்கோ. நான் எதிர்பார்த்த எல்லா குவாலிபிகேஷனும் உன்கிட்ட இருக்கு. ஆனா? உங்க செகண்ட் கண்டிஷன் மட்டும் கொஞ்சம் கட் பண்ணுமா.. அதுல பாதி அந்த முத்தம், முத்தம் மட்டும் இருக்கட்டும். உன்கிட்ட தினம் ஒவ்வொரு முத்தம்மா பிச்சு பிச்சு வாங்கிக்கிறேன்." இத்தனை நேரம் அதிரூபன் பேசிய அனைத்தையும் கேட்டு வழக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்தது. பிற்காலத்தில் தனக்கென்று ஏதாவது பிரச்சனை வந்தாலும் தனக்காக உறுதுணையாக இருப்பான் என்ற நம்பிக்கையை அவளின் மனதில் விதைத்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் அவனிடம் "இந்த சானக்கியாவுக்கு அதிரூபன பிடிச்சிருக்கு." என்றதும் அவளது கரத்தை பிடித்தவன் அவளது கண்களை பார்க்க விடுக்கென்று கையை எடுத்துவிட்டு கிளம்பி எதார்த்தமாய் பாவை விழுக சென்றாள். அவளின் இடையை பிடித்து கரத்தை கோர்த்தவன் விழியை நோக்கினான்.
அதிரூபனே!! அதிகாரனே!! அதிரூபனே!! அதிகாரனே!! சூரை காற்றென வந்தாய் என் சுதந்திரம் மீண்டும் தந்தாய். மாமழையாகி நின்றாய் மதையானை போலே வென்றாய்.. உன் பத்து விரலும் ஆயுதம்..உனை பார்க்கும் போதே பயம் வரும்! நீ தான் ஆணின் இலக்கணம்! நீ துணையாய் நின்றால்..வருமே தலைகணம்!
"ரூபன்! எ..என்னை விடுங்க." என்றதும் பூ போலே நிற்க வைக்காமல் அப்படியே கரத்தை எடுத்தான் "ஐயோ!!! சாரி சானக்கியா தப்பு பண்ணிட்டேன்! ஐயம் சாரி." என்றதும் "படுபாவி, கீழ விழவிட்டுட்டு இப்ப சாரி சொல்றீயா? உனக்கு முத்தம் கிடையாதுடா." என்றாள் அழுது கொண்டே. ஆணவன் தன் விருப்பத்தை கூற எல்லையற்ற சந்தோஷத்தோடு செல்லுகையில் அவளது அலைபேசி எண்ணை வாங்க மறந்து போனான் அதிரூபன்.
முத்தம் 2
"சானக்கியா நம்ம பையனை பிடிச்சிருக்குனு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததுங்க. பொண்ணுடைய ஜாதகத்த கொடுத்திருக்காங்க. நாளைக்கு நம்ம ஸ்கந்தன் ஜாதகம் உன்கிட்ட தானே இருக்கு ஜெயா?" என கேள்வியை எழுப்பினார் வைனவேந்தன். "ஆமாங்க, என்கிட்ட தான் இருக்கு. நமக்கு இனி தலைக்கு மேல வேலை இருக்கு." ஸ்கந்தன் தான் மாதங்கிக்கு வருங்கால கணவன். "அம்மா, சா..சானக்கியா நம்பர் வாங்காமல் வந்துட்டேன்." மகனின் வார்த்தைகள் கேட்டதும் "அடேய்கப்பா! என் மருமக வந்த அதிஷ்டம் என் பையன் என்னை அம்மானு உரிமையா கூப்பிடுறான்னு நெனைச்சு சந்தோஷப்படுறதுக்கு முன்ன அவ நம்பர் கேட்டதும் தான் தோணுச்சு. காரியகாரன் தான் நீ. சொல்றேன் நோட் பண்ணிக்கோ." என தன் தாயார் சொல்ல சொல்ல அவளது எண்ணை அலைபேசியில் சேமித்து வைத்தான். அதிரூபன் சானக்கியாவிற்கு அழைத்தான்.
அதே சமயம் பெண் வீட்டில் "மோனிகா எனக்கு கல்யாணம் பேசி முடிச்சுட்டாங்க. தேதி இன்னும் சொல்லவே இல்ல. ஆனா.. அந்த ரூபனை எங்கையோ பார்த்த ஞாபகம். ஏய் மோனி தயவு செஞ்சு நா எப்படியாவது உண்மை சொல்ல பார்க்குறேன்." "ஹேய்! என்ன சொல்ற? உண்மை சொன்னா என்ன நடக்கும்னு உனக்கே தெரியும் தானே? அப்புறம் ஏன் நீ அவர்கிட்ட உண்மையை சொன்ன? கடைசியா என்ன தான் சொன்ன?" என அவளது தோழி மோனிகா படபடப்பாக பேசினாள். "கடைசியா மூணு கண்டிஷன் போட்டேன். ஆனா, அந்த கண்டிஷனுக்கும் சரின்னு சொல்லிட்டாரு. அவருக்கு ஏத்த பொண்ணுன்னு சொல்றாரு டி. எனக்கு இதெல்லாம் கேட்கும் போது எனக்கு என்ன செய்றதுனே தெரியல தெரியுமா." என தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள் சானக்கியா.
இந்த சமயத்தில்தான் இவளது ஆசிரியை கொடுத்த எண்ணில் இருந்து அழைப்பு வர "மோனி நான் ரிசர்ச் பண்ணா கைடு நம்பர் கேட்டிருந்தேன்ல. மேம் அனுப்பிச்ச கைடு நம்பர்ல இருந்து இப்ப எனக்கு கால் வருதுடி! அவங்ககிட்ட மெசேஜ் கூட பண்ணல, அவங்க என்ன சொல்லுவாங்கன்னு கூட தெரியலையே? இப்ப நான் என்ன சொல்லுவேன்? ஆன்லைன் கிளாஸ் வேற முடிஞ்சிருக்கும். வசமா சிக்கிட்டேன்! போயும் போயும் எனக்கு பொண்ணு பார்க்க இன்னைக்கா வரணும்?" என மீண்டும் அழுகத் தொடங்கினால் சானக்கியா. "சரி.. சரி.. சானக்கியா எடுத்து பேசு." என்றதும் அழைப்பை ஏற்றவள் "குட் ஆப்டர்நூன் மேம். ஹெச்சோடி மேம் உங்க நம்பர் அனுப்பிச்சாங்க. நான் உங்களுக்கு மெசேஜ்,கால் எதுவுமே பண்ணல. இப்போ திடீர்னு நம்பர் வரவும் எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல? மேம் இன்னைக்கு உங்க ஆன்லைன் கிளாஸையும் நான் மிஸ் பண்ணிட்டேன். எப்படி ரிசர்ச் பண்ண போறேன்னு தெரியல? மேம் சாரி மேம். என்னை மன்னிச்சிருங்க. ப்ளீஸ் மேம், வீட்ல அலென்ஸ் பார்க்க வேற வந்துட்டாங்க. என்னால தடுக்க முடியல மேம்." என புலம்பினால் பாவை. "என்னது ஆன்லைன் கிளாஸா? ரிசர்ச்.. என்ன சொல்ற? சானக்கியா நான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை, அதிரூபன்! இது என் நம்பர் சேவ் பண்ண கூப்பிட்டேன். நீ அதுக்குள்ள கடகடகட என்னென்னமோ சொல்ற?" அதிருபன் குழம்பிப் போனான். தனக்கு பார்த்த பெண் தன்னிடம் எதற்காக இப்படி எல்லாம் பேச வேண்டும்? யாரென்று கேட்க வேண்டிய இடத்தில் ஏன் ஏதேதோ பேசுகிறாள் என யோசிக்கும் அதே வேலையில் அவனுக்கு ஒரு விஷயம் பிடிபட்டது.
காலையில் தன் அன்னை அழைத்தபோது அவன் தலைமை ஆசிரியரை சந்திக்கவே செல்வதற்காக வெளியே சென்றான் அதிரூபன். அவரை சந்திக்கச் செல்லும் வேலையில் தான் இவன் இப்படி பெண் பார்க்கச் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டான். அந்த தலைமையாசிரியர் கூறும் தகவல்களை பார்க்காத காரணத்தினால், இப்படி பல குழப்பங்கள் ஏற்பட்டு விட்டது எனவும் புரிந்து கொண்டான். "ஐ காட் இட் சானக்கியா, ஐ காட் இட்! அப்போ நீ தான் என்கிட்ட அந்த ரெண்டு வருஷம் ரிசர்ச் பண்ணிக்க போற ஸ்டூடண்டா?" "ஆமா ரூபன் அது நா தான். இப்போ என் கூட மோனிகாவும் சேர்ந்து வருவா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒண்ணாதான் இந்த டாபிக்ல ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கோம். ஐ அம் இன் சாரி, இந்த டாபிக்ல ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கோம் சார்." இதைக் கேட்டதும் மோனிகாவின் விழிகள் பிதுங்கியது "சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்." என்றதோடு அழைப்பை துண்டித்தான். "ஏய் என்னடி சொல்ற? அப்போ இன்னைக்கு நீ பார்த்த அந்த ரூபன்! உன் மாப்ள நம்ம ரெண்டு வருஷம் வழி நடத்த போற கைடா?" "ஆமாம் மோனிகா அவர்தான் மோனிகா. நம்மள கைட் பண்ணவே போறாரு. ஆனா அவர்கிட்ட நான் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்டேன். தொடக்கூடாது,கிஸ் பண்ண கூடாது, ஹக் பண்ண கூடாதுன்னு. ஆனா அவரு என்னடான்னா எதுவுமே மனசுல வச்சுக்காம ஓபனா பேசினாரு. இப்படி கைட் பண்றவரு எனக்கு லைஃப் லாங் பார்ட்னரா வருவானு நான் கனவுல கூட நினைச்சு பாக்கல! கொஞ்சம் யோசிச்சு பாரு காலேஜ்ல ஸ்காலரா போய் நம்ம நிக்கும்போது, என்னை நாலபின்ன இவங்க ஸ்காலர் இந்த சாருடைய வைஃப் அப்படினு சொல்லுவாங்க! இதெல்லாம் நினைச்சு பார்த்தாலே.. இந்த கல்யாணத்தை நிறுத்திரலாமுன்னு தோணுது மோனி." என வருத்தத்தோடு முடித்தாள். மோனிகா அவளிடம் "ஆண்டவன் உனக்கு சரியான வழியை தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார். சானக்கியா தயவு செஞ்சு இதை வேணான்னு மட்டும் நீ தடுத்துறாதே. அவ்வளவு தான் சொல்லிட்டேன்! இப்படிப்பட்ட ஒரு லைஃப் யாருக்கும் அமையாது, கடந்த வாழ்க்கை கொஞ்சம் நினைச்சு பாரு? நீ கடந்து வந்த வாழ்க்கையை இப்போ இந்த நிஜ வாழ்க்கைக்காகவும், இனி வரப்போற வாழ்க்கைக்காகவும் நெனச்சு அதுல வரக்கூடிய கௌரவமான பேர, அவமானமா நெனச்சு.. நீ கடந்த வாழ்க்கையிலேயே மாட்டிக்கிட்டேனா? இனி உனக்கு எப்படி எதிர்கால வாழ்க்கை சந்தோஷமா இருக்குமா?" சானக்கியாவின் விழிகள் விரிந்தன மீண்டும் மோனி "ரெண்டு வருஷம் உன் வீட்டுக்கு தான் நானும் அடிக்கடி வர போறேன். மனசுல எந்த குழப்பமும் இல்லாம அவர் கூட சேர்ந்து வாழ்ந்து பாரு. வாழ்ந்து பாருன்னா உன் கண்டிஷன் ஏத்த மாதிரி ரெண்டு பேரும் வாழ்ந்து பாருங்க. தயவு செஞ்சு! உனக்கு அவரு ஒரு இடத்துல ரொம்ப பிடிச்சு போச்சு அப்படின்னா? தம்பதியர் வாழ்க்கை தொடங்கி,பழசு மொத்தமா மறந்துடு, அது வேணாம்! அது தேவையில்லாத ஒன்னு. அத நீ நெனச்சு,புலம்பி, அழுது அப்படியெல்லாம் கஷ்டப்படத் தேவையில்லைன்னு தான் ஆண்டவன் உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கொடுத்திருக்கான். அதனால, இது அப்படியே கெட்டியா பிடிச்சுக்கோ. அவனோட காதல சாரி, அவருடைய காதலே உன்னை மாத்திடும்." என மோனிகாவின் இந்த வார்த்தைகள் தான் சானக்கியவை முழுவதுமாக சமநிலைக்கு தள்ள வைத்தது.
வீட்டிற்கு வந்தவர்கள் "ஐயோ இவ்ளோ டயர்டா இருக்கு? இந்த வெயில் அலைஞ்சுட்டு வந்தது. எங்கேயோ டெஸர்ட்ல பத்து நாள் வாழ்ந்துட்டு வந்த மாதிரி இருக்கு. டேய் அண்ணா உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்க எனக்கு யோசிச்சிட்டு இருக்க?" என மாதங்கி கூறியதை கேலியாக நினைத்து "அப்படியா? என்கிட்ட தான் வெளியே அலைஞ்சிட்டு வந்தது டெஸட்ல பத்து நாளைக்கு இருந்துட்டு வந்த மாதிரி இருக்குன்னு சொன்னியா? அப்போ போன வாரம் உன்னுடைய வருங்கால புருஷன் உன்கிட்ட போன்ல இந்த வெயில்ல நீ அலைஞ்சிரவே அலைஞ்சுறாத உன் ஸ்கின் எல்லாம் டேமேஜ் ஆயிடும்னு சொல்லும் போது.. நான் எங்க அண்ணியை பார்த்துட்டு தான் வருவேன்னு சொன்னியே அவரிடம் சொல்லட்டா?" என செல்லமாக மிரட்டினான் "டேய் அண்ணா இப்படி எல்லாம் பண்ணாத? அப்புறம் ஸ்கந்து என்கிட்ட பேச மாட்டாரு டா, அவரை நான் கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தணும் தெரியுமா?" அதிரூபன் அதிர்ந்தான். "மாதங்கி அவ்வளவு தூரத்துக்கு நீ இந்த ஒரு வாரத்துல அவர புரிஞ்சு வச்சுக்கிட்டியா அது சாத்தியமா? ஒரு வாரத்துல இவ்வளவு புரிஞ்சிக்கலாமா ஒருத்தரப் பத்தி?" "கண்டிப்பா முடியும் அதி! நமக்கான அவங்க எப்பவுமே நம்மள பத்தியும் யோசிப்பாங்க. அப்போ நம்ம கூட வாழ்க்கை பூரா வர ஒருத்தவங்க கண்டிப்பா தன்னவள பத்தி யோசிக்காம இருக்க மாட்டாங்களா? அதை வச்சு அவங்களோட பலம்,பலவீனம் எல்லாத்தையுமே புரிஞ்சுக்கலாம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ஒரு கால் மணி நேரம் பேச்சு போதும் தெரியுமா? அவங்க எப்படி பட்டவங்க? அவங்க பாக்குற பார்வையில் இருந்து, அவங்க போடுற டிரஸ்ல இருந்து, எல்லாத்தையுமே புரிஞ்சுக்கணும். முக்கியமா.. உணர்ச்சியை புரிஞ்சுக்கிட்டாலே போதும்டா. எல்லார் வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும். மௌனம் சில சமயம் உண்மையையும் சொல்லும், பொய்யை மறைக்க பல நாடகமும் போடும். அது நான் உங்க அப்பா கிட்ட கத்துக்கிட்ட வித்தை." என ஜெயவல்லி தன் வாழ்க்கை அனுபவத்தை கூறினார். "அம்மா அப்போ அப்பாவ பத்திரி இவ்வளவு புரிஞ்சு வச்சிருக்கியே? அப்போ மை டாடி நீங்க எங்க அம்மாவ பத்தி என்ன தான் புரிஞ்சு வச்சிருக்கீங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?" இப்போது அனைவரின் பார்வையும் வைனவேந்தன் பக்கம் திரும்பியது. "என் ஜெயவள்ளியை நான் எப்படி சொல்றது? உன் அம்மா கண்ணு எல்லாத்தையும் பேசும் தெரியுமா? உன் அம்மா சந்தோஷமா இருந்தானா அந்த கண்ணு அழகா காட்டிக் கொடுக்கும், உங்க அம்மா காதலில் இருந்தானா அந்த கண் பேசுற பாஷருக்கே எப்பப்பா!! அவ வெட்கத்த மொத்தமா கொட்டி தீர்த்திடும், உங்க அம்மா கவலையில் இருக்கானா.. அவ முகபாவனையும், அவ சேலம் முந்திய பிக்கிறதும், அவன் நகத்தை கடிக்கிறதும், இது மூலமாவே கண்டுபிடிச்சிடலாம். உங்க அம்மா மனசுல ஏதோ கஷ்டம் இருக்கு, கவலை இருக்குன்னு ஆனா.. ஒன்னு மட்டும் சொல்றேன், பொம்பளைங்க நினைச்சா ஆம்பளைங்கள பூனையாகவும் மாத்துவாழுக புலியாகவும் மாத்துவாழுக. பூனையா மாறுறதும்,புலியா மாறுறதும் நம்ம கையில தான் இருக்கு மை டியர் பாய்." இவை அனைத்தையும் கேட்டா அதிரூபன் மீண்டும் அதிர்ந்து போனான். "ஐயோ டாடி,மம்மி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இவ்ளோ நல்லா புரிஞ்சு வச்சிருந்தனாலதான் உங்களுக்குள்ள சண்டையே வரலியா?" என பிள்ளைகள் இருவரும் ஒன்றாக கேட்க "சண்ட பல தடவை வந்திருக்கு தெரியுமா? ஒவ்வொரு சண்டையும் பிரிவை உண்டாக்கும் என்கிறது நம்ம மனசுல ஏற்பட்ட ஒரு விதமான உணர்ச்சி தான். ஆனா, அது உண்மை இல்ல? எப்பப்போ நம்ம வாழ்க்கை துணையோடு சண்ட போடுறோமோ, அப்போ நம்ம ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுப்போம். இது நாள் வர நம்ம புரிஞ்சுக்காத சில விஷயங்கள் அவங்க வாழ்க்கையில நடந்து முடிந்த பல துக்கங்களை, அந்த சண்ட நம்மளுக்கு வெளிச்சம் போட்டு காட்டி கொடுக்கும். அது மூலமா இனிமே இப்படி இருந்தா அவங்களுக்கு நல்லது, இப்படி இருக்கக்கூடாது அப்படிங்கிற ரெண்டு வேறுபாட அந்த ஒத்த சண்ட அழகா நமக்குப் புரிய வைத்திடும். அதனால நீங்க ரெண்டு பேரும் சின்ன பிள்ளையா இருக்கும்போது எத்தனை சண்டை போட்டீங்களோ, அதைவிட பல மடங்கு நானும் உன் அம்மாவும் சண்டை போட்டு இருக்கோம். அந்த சண்டையில நிறைய நேரம் உங்க அம்மா அடி வாங்குவா, திட்டு வாங்குவா, இவ்வளவு ஏன் சில நாள் இரத்த காயம் எல்லாம் இருக்கு. அப்போ தான் முடிவு பண்ணேன். சண்டை தான் எங்க ரெண்டு பேரையும் காதலோடு சேர்த்து வைக்குது. அப்போ சண்டை போடணும்,மௌனமா போடுவோம். உங்களுக்கு தெரியாம நாங்க சண்டை போடுறத.. நீங்க பார்த்தா அம்மா,அப்பா இப்படி சண்டை போடுறாங்களே! அம்மாவை இப்படி அப்பா அடிக்கிறாரே! என்று ஒருத்தர் இன்னொருத்தரை பத்தி தப்பா நினைப்பீர்கள் என்ற அபிப்ராயத்துல நாங்க மௌனமாவே சண்டை போட ஆரம்பிச்சோம். அந்த மௌனம் காதலா மாறுச்சு, நீங்க ஒருத்தர ஒருத்தர் பாசமா நடந்துக்க, நாங்க எங்கள பத்தி நிறைய புரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். அதே சமயம் குழந்தைகள் நல்ல முறையில் வளர்த்தோம். எங்களுடைய காதல் பயணத்தை நல்ல முறையில் வாழ்ந்துட்டு வந்தோம். இவ்வளவு தான்டா வாழ்க்கை. வாழ்க்கை ரொம்ப சிறுசு அதை நம்ம வாழ்ந்துக்கிற முறையிலதான் இருக்கு. நம்ம கூட வர பொண்ண கைல பிடிச்சா மட்டும் போதாது? பிடிச்ச அந்த கைய விடாம இருக்கணும், அதுதான் முக்கியம். எவ்வளவு தூரம் இறுக்கி பிடிக்க முடியுமோ? அவ்வளவு தூரம் இறுக்கி பிடிக்கணும்." என்ற இந்த அனுபவத்தை பகிரவும் அதிரூபனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது.