ஹே அகேய்ன் குலி ஹு யா ஹோ பேண்ட் ,
டீடார் உன் க ஓத்த ஹை...
அகேய்ன் குலி ஹு யா ஹோ பேண்ட் ,
டீடார் உன் க ஓத்த ஹை....
கைஸே காஹூன் மெயின் ஒ யா ர யெ,
ப்யார் கைஸே ஓத்த ஹை ….
என்னும் ஹிந்தி பாடலை ஐந்தாம் எண் வீட்டின் அருகே உள்ள டி கடையின் வானொலி பாடிக்கொண்டிருந்தது. அதை எதையும் காதில் வாங்காது திருமதி ஷுக்லா அவருக்கு பிடித்த கடவுளான பிள்ளையாரின்
"ஹெய்க் மாசன் சங்கன் ரே தேவா
ஹெய்க் மாசன் சங்கன் ரே
ஹெய்க் மாசன் சங்கன் ரே தேவா
ஹெய்க் மாசன் சங்கன் ரே
கணபதி ராய படதே மி பாய
கணபதி ராய ரே"
என்னும் துதியை பக்தி பரவசத்தோடு கூறி முடித்தார். இந்தியா மகாராஷ்டிரா எனும் மாநிலத்தில், புனே எனும் நகரத்தில், பரமதி எனும் இடத்தில் வாழும் ஒரு மராட்டிய குடும்பம்தான் திரு திருமதி ஷுக்லா குடும்பத்தினர்.
திரு திருமதி ஷுக்லாவிற்கு ஒரு பெண் பிள்ளைதான் இருக்கிறார். அவரும் லண்டனில் தொழிலை ஏற்படுத்தி கொண்டு அங்கேயே வசிக்கிறார். யாரும் அற்று இருப்பதால் ஷுக்லா தம்பதிகள் அவர்களின் வீட்டில் ஒரு போஷனை வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள்.
அதில் குடிகொண்டிருப்பது லில்லி. அவள் மராட்டியர் நடுவில் வாழும் ஒரு தமிழ் பெண். பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பனிபுரிகிறாள். புனேயில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்க இங்கு வந்து வேலை செய்கிறாள்.
இன்னும் மிஸ் லில்லி தான் இவள். அவளுக்கு இங்கு தோழி என்றாள் அது கவியாதான். அவளுடன் பள்ளியில் வேலை செய்யும் தமிழ் பெண்.
லில்லியை பற்றி கூற வேண்டும் என்றாள் கொஞ்சம் மங்கிய நிறமான பெண். ஆனால் அவள் கண்கள் ஆயிரம் கதை சொல்லும். முகம் பருக்கள், சுருக்கங்கள் இன்றி சுத்த்மாகவும் பிரகாசமாகவும், கலையாகவும் இருக்கும். சதைப் பற்று இல்லாத சருமம் கொண்ட பெண்.
அவளது அமைதியான தோற்றமும் அடக்கமான குணமும் பார்ப்பவரை ஒரு முறையேனும் அவளை திரும்பி பார்க்க சொல்லும். ஆனால் அவள் மற்றவரை பார்ப்பதுதான் அதிசயமே. காலையிலேயே எழுந்தவள் முருகனை வணங்கி விட்டு வெளியே செல்ல புறப்பட்டாள்.
அப்போது திருமதி ஷுக்லா "முலகி, சுபா சகால(காலை வணக்கம்)" என்றார்.
அதற்கு அவளும் "சுபா சகால ககு (காலை வணக்கம் ஆன்ட்டி )" என்றாள்.
திருமதி ஷுக்லா " ஆஜ சகலி தூம்ஹி குத்தே ஜாத அஹத? (இந்த அதிகாலையில் நீ எங்கே போகிறாய்?)" என்று வினாவினார்.
அதற்கு லில்லி "மி மார்கெட்டல ஜாதே அஹே. (நான் சந்தைக்குப் போகிறேன்.) என கூறினாள்.
அதற்கு திருமதி ஷுக்லா "தீக்க, லவகர ஜ அனி லவகர யே. (சரி, சீக்கிரம் போயிட்டு வா)" என கூறினார்.
அதற்கு லில்லி "தீக்க(சரி)" என கூறி அங்கிருந்து சென்றாள்.
லில்லி சந்தைக்கு செல்லும் வழியில் தான் காவியா வீடும் உள்ளது. காவியா வீட்டை தாண்டும் போது லில்லியுடன் காவியாவும் இணைந்து கொண்டாள்.
காவியா "என்னடி இன்று கொஞ்சம் சீக்கிரமே வந்துட்ட போல?"
காவியா "ஹ்ம்ம் சரி உன் வீட்டு ஓனர் அம்மா என்ன சொன்னாங்க?"
லில்லி "சொல்ல என்ன இருக்கு சந்தைக்கு போயிடு சீக்கிரம் வா என்று தான் சொன்னாங்க" என்று இப்படியே இருவரும் பேசிக்கொண்டே சந்தைக்கு சென்று தேவைப்பட்ட காய்கறிகளையும், பொருட்களையும் வாங்கி எடுத்து கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
பேசிக்கொண்டே வந்ததில் காவியா வீடும் வந்து விட்டது.
காவியா "சரிடி நான் வீட்டிற்கு போகிறேன். நீயும் சென்று உன் வேலைகளை முடித்து விட்டு சீக்கிரமே பள்ளிக்கு வா." என கூறி விட்டு வீட்டினுள் சென்று விட்டாள்.
செல்லுமுன் "லில்லி உனக்கு ஒரு ஹேப்பி நியூஸ் இருக்கு" பள்ளிக்கு வா உனக்கே தெரியும்" என கூறி சென்றாள்.
இவளும் அதன் பின் வீட்டிற்கு வந்தவள், அவள் போஷனுக்கு சென்று அவள் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு பள்ளிக்கு செல்ல தயாரானாள்.
வீட்டு வாசலுக்கு வந்தவள், திருமதி ஷுக்லாவை பார்த்து, “ ககு, மீ அதி கமல ஜனர அஹே, மக காரி அல்யவர ககன்சி ஒசடே கஹீன (ஆண்ட்டி நான் வேளைக்கு முதலில் செல்கிறேன், வேலை விட்டு வரும்போது அங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வருகிறேன்)” என கூறி அங்கிருந்து புறப்பட்டு வேலைக்கு சென்றாள்.
அவள் பள்ளியில் நுழைந்தவுடன் அவளுடன் வேலை செய்யும் சக ஆசிரியர்கள் அவர்களுக்குள் முணு முணுத்துக்கொண்டும், சிலர் அவளை பாராட்டுவது போல பார்த்து கொண்டும், சிலர் அவளை பொறாமையில் எரித்துக்கொண்டும் இருந்தார்கள்.
இம்மையும் புரியாமல் மறுமையும் தெரியாமல் முழித்தவள், அவளை நோக்கி வந்து கொண்டிருந்த காவியாவை பார்த்து
"என்னடி என் மேல் எல்லா கண்ணும் விசித்திரமாக படுது?" என கேட்டாள். காவியாவோ சிரித்து கொண்டே "டீன் ரூமுக்கு போடி உனக்கே தெரியும்." என கூறியவள் அவளை டீன் அறைக்கு அழைத்து சென்றாள்.
கொஞ்சம் பதட்டத்துடன் உள்ளே நுழைந்த லில்லியோ டீனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி விசித்திரத்தை கொடுக்க, குழப்பத்துடன் அவர் முன் அமர்ந்தாள்.
டீனோ மராத்திய மொழியில் "தி பேமஸ் லண்டன் ஸட் எட்வர்ட்'ஸ் கத்தோலிக் பிரைமரி ஸ்கூலிலிருந்து அவர்கள் பிற இன மாணவர்களுக்காக மாதர் லாங்குவேஜ் கோர்ஸ் என ஆறு மொழிகளை கொண்ட கோர்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அதற்கான சிறந்த ஆசிரியர்களை நம் நாட்டில் இருந்து தேர்தெடுக்க விரும்புகிறார்கள். இதனை கேள்விப்பட்டு, நான் நம்பிக்கை இல்லாமல் தான் உங்கள் பெயரையும், ராம் சார் பெயரையும், மிஸ் நீலம் பெயரையும் மூன்று லாங்குவேஜூக்கு விண்ணப்பித்தேன்.
எதிர்பாராமல் லண்டனில் இருந்து நமக்கு இரண்டு லாங்குவேஜூக்காண அதிகாரபூர்வமான ஒப்புதல் கடிதம் வந்திருக்கிறது.
ஒன்று உங்களுக்கு, இன்னொன்று ராம் சாருக்கு." என கூறி முடித்தார்.
அதற்கு லில்லியோ மராத்திய மொழியில் "சார் நான் ஆங்கில ஆசிரியர். எனக்கு உங்கள் மொழி பேச மட்டும் தான் தெரியும். நான் எப்படி அங்கு சென்று உங்கள் மொழியில் பாடம் சொல்லி கொடுப்பது?" என கேட்டாள்.
அதற்கு டீன் "அது எனக்கு தெரியாத மிஸ் லில்லி, உங்களுக்குத்தான் உங்கள் தமிழ் மொழி நன்றாக தெரியுமே. நான் உங்களை தமிழ் மொழிக்குத்தான் ஆசிரியராக விண்ணப்பித்தேன். ராம் சாரை மராத்திய ,மொழிக்கு விண்ணப்பித்தேன்." என கூறினார்.
அவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. லில்லி இதனை எதிர்பார்க்கவே இல்லை. லில்லியின் முகம் யோசனையில் சூழ்ந்திருந்தது. சிறிது நேரத்திற்கு பின் தெளிந்த முகத்துடன் டீனை ஏறிட்டாள்.
அவள் என்ன சொல்ல போகிறாள் என அவள் முக பாவனையை வைத்து கண்டு கொண்ட டீனோ "மிஸ் லில்லி முடியாது என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். நம் பள்ளி மானமும் மரியாதையும் இதில் அடங்கி உள்ளது." என கூறினார்.
அவர் பேச்சில் மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள் லில்லி. கற்பித்தல் அவளுக்கு பிடித்த வேலை. அதுவும் அவளுக்கு பிடித்த மொழியில்.
மீண்டும் டீனை பார்த்தாள் "சம்மதம் சார்." என கூறினாள்.
உடனே டீனோ "இதில் ஒரு கையெழுத்து போட்டு விடு." என அவள் பெயருக்கு வந்த நியமன/ ஒப்பந்த கடிதத்தை அவள் முன் நீட்டினார்.
அவளும் எதோ ஓர் யோசனையில் படித்து பார்க்காமல் கையொப்பம் இட்டு விட்டாள். டீன் முகத்தில் அளவிட முடியாத ஆனந்தம்.
"ரொம்ப நன்றி மிஸ் லில்லி" என கூறினார். அவள் டீன் அறையிலிருந்து வெளியேற எத்தனிக்க, டீனோ "இன்னும் ஒரு மாதத்தில் நீங்கள் அங்கு சென்று சேர வேண்டும் .
இந்த ஆறு மாத கோர்ஸை நீங்கள் முடித்தபின் உங்கள் வேலை அவர்களுக்கு திருப்தியாக இருந்தால் உங்களை அங்கேயே நியமித்து விடுவார்கள்.
அப்படி இல்லை என்றாள் உங்கள் ஆறு மாத ஒப்பந்தம் முடிந்தவுடன் நீங்கள் இங்கு வந்து விடலாம்." என கூறினார்."
அவளுக்கோ ஆறு மாதமா என இருந்தது. டீன் கூறிய அனைத்தை கேட்டவள் "சரி" என தலை அசைத்து அவர் அறையிலிருந்து வெளியேறினாள்.
அவளுக்கோ பெரும் அதிர்ச்சி. இந்த இடத்தை விட்டுச் செல்ல அவளுக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை.
வெளியே அவளுக்காக காத்துக்கொண்டிருந்தாள் காவிய. அவளை கண்டவுடன் காவியாவின் முகம் "எப்படி" என கேள்வி எழுப்ப ஆனால் அவள் முகம் கூம்பி போய் இருந்தது.
அவளின் தோளில் கைவைத்து "என்னடி?" என கேட்டாள்.
அதற்கு லில்லியோ "எனக்கு விருப்பம் இல்லடி. ஆனால் டீனிடம் மறுப்பு கூற முடியவில்லை." என கூறினாள்.
காவிய" ஹேய் ஆறே மாத கோர்ஸ் தான். கண்ணை மூடி திறப்பதற்குள் வந்து விடும். ரொம்ப யோசிக்காதே. போயிட்டு வா." என கூறினாள்.
அவளும் அழுத்தமான ஒரு மூச்சை இழுத்து விட்டு "சரி வகுப்புக்கு போகணும். நான் முதலில் போறேன்." என கூறி அங்கிருந்து புறப்பட்டாள்.
அவளுள் பல சிந்தனைகள்... ஆனாலும் அதனை எல்லாம் ஒரு புறம் நகர்த்தி விட்டு பாடம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டாள். பள்ளி முடிய புறப்படுவதற்கு கவியக்காக காத்துக்கொண்டிருந்தாள்.
அந்நேரம் காவிய வந்து "எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு இப்போதைக்கு என்னால் வர முடியாது. நீ புறப்படுவதென்றாள் முதலில் போ. பின்னர் நான் உனக்கு போன் செய்கிறேன்." என கூறினாள்.
லில்லியும் “சரி” என அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டாள்.
போகும் முன் மெடிக்கல் சென்று திரு ஷுக்லாவிற்கு தேவையான அனைத்து மருந்து மாத்திரைகளையும் வாங்கி கொண்டு சென்றாள். வீட்டிற்கு சென்று மருந்துகளை திருமதி ஷுக்லாவிடம் கொடுத்து விட்டு, அவளது போஷனுக்கு சென்று விட்டாள்.
தன்னை சுத்தம் செய்து, கடவுளை வணங்கி விட்டு, மாணவர்களின் புத்தகத்தை திருத்த அமர்ந்து விட்டாள். எதையும் யோசிக்காமல் புத்தகத்தை திருத்திய உடன் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் திருமதி ஷுக்லாவிடம் கதை பேசிவிட்டு உறங்குவதற்காக அவள் போஷனுக்கு சென்றாள்.
படுத்தவுடன் உறங்க வேண்டும் என்பதுதான் இங்கு அனைவரின் ஆசையும் ஆனால் அது முடிந்தால் தானே... வாழ்க்கை அவளுக்கு என்ன வைத்திருக்கிறது என்றே தெரிய வில்லை.
'உறவென யாரும் அற்ற ஒரு வாழ்க்கை... மீண்டும் ஒரு புது பயணம்'... என நினைக்கும் போது அவள் இன்னொரு மனம் 'எவ்வளவோ பாத்துட்டோம். இத பார்க்க மாட்டோமா' என தனக்குத்தானே ஒரு உத்வேகத்தை கொடுத்து. அந்த உத்வேகத்துடன் துயில் கொண்டும் போனாள் பாவை அவள்.