kani suresh
Moderator
பத்மா வினோத்திடம் பேசுவதற்குக் காத்துக் கொண்டிருந்தார். தன் பேத்தி தூங்கிய பிறகு தான் பேச வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டார்.
இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வினோத் ராகினியைத் தூங்க வைத்து விட்டுத் தண்ணீர் எடுக்க வந்தான். அப்போது ஹாலில் பத்மா உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவன், "என்ன மா, இங்க இந்த நேரத்துல உட்கார்ந்து இருக்கீங்க? தூங்கலையா, நேரம் ஆகுது பாருங்க. மாத்திரை போட்டிங்களா, இல்லையா?"
"மாத்திரை போட்டுட்டேன் வினோ. தூக்கம் தான் வரல" என்றார்.
"ஏன்மா, என்னாச்சு, ஏதாவது உடம்புக்குப் பண்ணுதா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் எதுவும் இல்லடா, கொஞ்சம் இங்கே உட்காரு. நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் டா" என்றார்.
"என்ன பேசணும்?" என்று விட்டுப் பத்மாவை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"நான் பேசுவதைக் கொஞ்சம் பொறுமையா கேட்கணும்." என்றார்.
"அம்மா உங்க பேச்சு சரியில்லை" என்றான்.
"ஏன் டா எனக்காக, நான் பேசுவதைக் கொஞ்சம் காது கொடுத்து தான் கேக்கலாம் இல்ல."
"நீங்க என்ன பேசப் போறீங்க? திரும்பவும் என் கல்யாணத்தைப் பத்திப் பேசப் போறீங்க, அப்படித்தானே" என்றான்.
"வினோ" என்று அவர் பாவமாக அழைக்க, "சரி மா, சொல்லுங்க" என்று விட்டு அமைதியாகி விட்டான்.
"நீ அந்தப் பொண்ணு கண்மணியைப் பத்தி என்ன நினைக்கிற?" என்றார்.
"அந்தப் பொண்ணப் பத்தி நான் நினைக்க என்னமா இருக்கு? நானும் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கேன். கிட்டத்தட்ட மாசக் கணக்கா, நீங்களும் ராகிமாவும் அந்தப் பொண்ணப் பத்திப் பேசிட்டு இருக்கீங்க, இன்னும் சொல்லப் போனா ஏன்னே தெரியாம எனக்கு அந்தப் பொண்ணு மேல கோவம் வருது. இதுவரைக்கும் நான் அவங்ககிட்டப் பேசினது கூடக் கிடையாது. பார்த்தது கூட ஒரு ரெண்டு, மூணு டைம். இந்த ரெண்டு மூணு டைம் பார்த்த போதும், எனக்கு அந்தப் பொண்ணு மேல கோவம் தான் வருது. அது எல்லாத்துக்கும் காரணம் நீங்களும், ராகிமாவும் மட்டும்தான். இந்தப் பொண்ணு ஒரு தப்பும் பண்ணலையேம்மா. ஆனா, நீங்க ஏன் மா அந்தப் பொண்ணப் பத்தின நினைப்ப பெருசா எடுத்துக்குறீங்க?"
"அந்தப் பொண்ணு நம்ம ராகிமா கிட்டப் பாசமா இருக்குடா"
"அம்மா அதுக்காக, அததான் வேணாம்னு நானும் சொல்றேன். யாருன்னு தெரியாத பொண்ணு, ஏன் என் பொண்ணு மேல பாசமா இருக்கணும்?"
"டேய் இது ஒரு சிலருடைய இயல்பு டா".
"அந்த இயல்பை நீங்க உங்களோட வச்சுக்கோங்க. ஏன் என்கிட்டக் கொண்டு வரீங்க? அததான் நானும் கேட்கிறேன். பார்க்கிறீங்களா? பேசுறீங்களா? அந்த நிமிஷம் அத மறந்துடுங்க. வீட்டு வரைக்கும் கொண்டு வந்து, ஏன் வீட்லயும் அந்தப் பொண்ணப் பத்திப் பேசுறீங்க? எனக்கு இரிடேட் ஆகுது" என்று கத்தினான்.
"வினோ, கத்தாத டா இந்த நேரத்துல." என்றார்.
"நீங்க தான் மா இந்த நேரத்துல தூங்காம, என்னக் கத்த வச்சிட்டு இருக்கீங்க. நேரம் ஆகுது, போய் தூங்குங்க" என்று விட்டு எழுந்து கொள்ள,
"நான் இன்னும் பேசி முடிக்கல வினோ" என்று அவனது கையைப் பிடித்தார்.
அமைதியாக உட்கார்ந்து, "சொல்லுங்க" என்றான்.
"உனக்கு கண்மணியைக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு அவங்க வீட்ல போய் பேசிட்டு வந்து இருக்கேன்." என்றார்.
வேகமாக எழுந்து நின்றவன், அருகில் உள்ள வாட்டர் பாட்டிலைத் தூக்கி எறிந்து, "என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, யாரக் கேட்டு இந்த வேலையெல்லாம் பாத்துட்டு இருக்கீங்க, அன்னைக்கு நீங்க கோயிலுக்குப் போறேன்னு சொல்லும்போதே நான் யோசிச்சேன். ஆனா, இந்த அளவுக்குப் போவீங்க, என்கிட்டச் சொல்லாம கூட இப்படி ஒரு முடிவு எடுப்பீங்கனு நான் யோசிக்கல" என்று குரலை உயர்த்திக் கத்தினான்.
தூங்கிக் கொண்டிருந்த ராகினி, அவனின் சத்தத்தில் எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டே வந்தவள், தனது அப்பாவைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றாள்.
"அப்பா" என்று அவள் வேகமாகக் கேவிக் கொண்டே வர, குழந்தையைத் தூக்கித் தன் தோளில் சாய்த்துக் கொண்டவன், "ஒன்னும் இல்லடா ராகி மா" என்று தட்டிக் கொடுத்துக் கொண்டே தன் தாயை முறைத்தான்.
"டேய் எதுக்குடா இப்படிக் கத்துற, புள்ள எழுந்திருச்சு பாரு" என்றார்.
"அதுக்குக் காரணம் நீங்களா, நானா? என் மேல தான் தப்பு சொல்லுவீங்க இல்லையா?"
"நான் அப்படிச் சொல்லலடா."
"அம்மா போதும்மா, என்னால முடியல உங்களோடு வாதாட. எனக்கு தான் கல்யாணம் என்ற ஒன்னே வேணாம்னு நான் சொல்றேன் தானே, அதையும் தாண்டி நீங்களும் ஏன் வருஷக் கணக்கா எனக்குப் பொண்ணு பாக்குறேன், பொண்ணு பாக்குறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க. இவ்ளோ நாளா வாயால சொல்லிட்டு, என்கிட்டக் கேட்டுட்டு இருந்தீங்க. ஆனா இப்ப, போய் ஒரு வீட்ல பேசிட்டு வந்து இருக்கேன்னு சொல்றீங்க, ஏன் ஒரு பொண்ணோட லைஃபைக் கெடுக்கிறோம் என்ற எண்ணமே உங்களுக்கு வராதா? நான் வாழ்ந்துட்டேன் ம்மா…"
"இன்னும் வாழ்க்கை முடியல டா, குழந்தையை வச்சிட்டு நீ தன்னந்தனியா நிக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்கு டா".
"நான் எனக்குக் கஷ்டமா இருக்குன்னு சொல்லவே இல்லையே, நீங்க ஏன் அதைக் கஷ்டம்னு நினைக்கிறீங்க?".
"உன் புள்ள அழுதா உனக்கு வலிக்கிற மாதிரி தானேடா எனக்கும் இருக்கும்" என்றார்.
தன் தாயின் நிலையை உணர்ந்தவன் அமைதியாக, "அம்மா, உங்களுக்குப் புரியுதா, இல்லையா? அப்படி நீங்க பொண்ணு பார்க்கணும்னா கூட என்னை மாதிரி இருக்கற ஒரு பொண்ணப் பார்க்கணும். நான் சொல்றது உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். புருஷனை இழந்தோ, இல்ல புருஷனை விட்டோ இருக்கிற பொண்ணப் பார்க்கறது தப்பு இல்ல. ஆனா, நீங்க வாழ வேண்டிய ஒரு பொண்ணப் பாக்குறீங்க."
"இல்ல வினோ"
"போதும்மா, ப்ளீஸ்! கெஞ்சிக் கேட்கிறேன். அந்தப் பொண்ணு நல்லா இருக்கட்டும். ஏன் என்று தெரியாமல் அந்தப் பொண்ணு மேல கோவம் வருதே தவிர, அந்தப் பொண்ணு நல்லா இருக்கக் கூடாது என்று நான் நினைக்கஒ போறது கிடையாது. கெஞ்சிக் கேட்கிறேன், விட்ருங்க.
நான் ஒரு வார்த்தைக்கு தான் சொன்னேன். இந்த மாதிரிப் பொண்ணு பாருங்க என்று. அதுக்காகத் திரும்பப் பொண்ணு பாத்துட்டு வந்து நான் பொண்ணு பாத்துட்டேன்னு சொல்லாதீங்க. இனியும் யாரை நம்பியும் என் மகளை விட எனக்கு விருப்பம் இல்லை. என் குழந்தைக்கு அம்மா வேணும், அம்மா வேணும்னு சொல்லாதீங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு நான் பாத்துக்குறேன். நான் ஒன்னும் செத்திடல இல்லையா? அவளுக்கு அப்பா நான் உயிரோட தான இருக்கறேன்" என்று திரும்பக் கத்தினான்.
குழந்தை அவனிடம் பயத்தில் இன்னும் ஒன்ற, "ஒன்னும் இல்லைடா ராகி மா" என்று தட்டிக் கொடுத்தான்.
லேசான தேம்பலுடன், "எனக்கு யாரும் வேணாம் பா, நீ மட்டும் போதும் பா… கத்தாதப்பா, பாட்டி பாவம்" என்று அழுதாள்.
"அப்பா கத்தல டா. ஒன்னும் இல்லடா ராகி மா" என்று தன் தாயை அமைதியாகப் பார்த்தான். "போய் தூங்குங்க" என்று விட்டுத் தன் மகளையும் தோளில் தூக்கிக்கொண்டு தனது ரூமை நோக்கிச் சென்று விட்டான்.
தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்தான். ஆனால், அவனுக்குத் தான் தூக்கம் எட்டாக்கனியாக இருந்தது. தன் தாயின் ஏக்கமும், வலியும் அவனுக்குப் புரிய தான் செய்கிறது. இருந்தாலும், ‘அதற்காக நான் இன்னொரு திருமணம் செய்து கொள்வது கனவில் கூட நடக்காது. அதுவும், இன்னொரு பெண்ணை நம்பி என் குழந்தையை ஒப்படைப்பது சாத்தியமே இல்லை. நான் அடிபட்ட பூனை’ என்று யோசித்தான்.
இப்படியே தூங்காமல் இருக்க விடியலில் கண் எரிச்சல் ஏற்பட, முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து தன்னுடைய வேலையில் ஈடுபட்டான்.
ஒரு வாரம் சென்று இருந்தது.
இந்த ஒரு வாரத்தில் பத்மா வினோத்திடம் பெரிதாக எதுவும் பேசவில்லை. காலையில் எழுந்தவுடன் ராகினி தன் அப்பாவிடம், "அப்பா பாட்டிகிட்டச் சத்தம் போடாதீங்க. பாட்டிக்கு உடம்பு சரி இல்லை. எனக்கு அம்மா வேணாம் பா. நான் எதுவும் கேட்கல அப்பா, நான் கண்மணி ஆன்டிகிட்டப் பேசலப்பா… ப்ளீஸ்பா, நீங்களும் சண்டை போட்டுக்காதீங்க. பழையபடி இருங்க" என்று தேம்பலுடன் அழுது கொண்டே சொல்ல,
தன்னுடைய பேச்சு எந்த அளவிற்கு மகளைப் பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தவன், தன் அம்மாவிடமும் இதைப் பற்றி எதுவும் பேசாமல் எப்போதும் போல இருந்தான்.
ஒரு வாரத்திற்குப் பிறகு அன்று செகண்ட் சாட்டர்டே அவனுக்கு லீவு என்பதால், குழந்தைக்கு ஸ்கூல் இருக்க ஸ்கூலில் விட்டு விட்டு வெளியில் வர, கண்மணியும் அப்பொழுதுதான் கவினை விட வந்தாள்.
வினோத்தைத் தூரத்தில் பார்த்தாள். ஒரு வாரமாக நிறைய யோசிக்கச் செய்தாள். வீட்டில் உள்ள யாரும் எதுவும் கேட்கவில்லை. கமலி ஒரே வார்த்தையாக அவளாக யோசித்து முடிவு எடுக்கட்டும், யாரும் அவளுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டாம். அவளுக்கு என்ன தோணுதோ அந்த முடிவு எடுக்கட்டும் என்று சொல்லி இருக்க,
வீட்டில் உள்ளவர்களும் அதற்கு ஏற்ப அமைதியாகி விட்டார்கள். ஒரு வாரமாக எதையெதையோ யோசித்தாள். தன் வாழ்க்கையில் இதுவரை நடந்த அனைத்தையும் ஆலோசித்துப் பார்த்து விட்டாள். வினோத்தைப் பார்த்தவளுக்கு இவரிடம் பேசினால் என்ன என்று யோசனை வர,
கவினை ஸ்கூல் வாசலில் இறக்கி விட்டவள், "கவிக்குட்டி, நீங்களா ஸ்கூலுக்குள்ள போறீங்களா? எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு" என்று கேட்டாள்.
"சரித்த, இன்னைக்கு உனக்கு லீவு தானே, என்ன உள்ள வர கொண்டு வந்து விட்டா என்ன?" என்று கேட்டுவிட்டுத் தன் அத்தையின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு வேகமாக உள்ளே ஓடிவிட்டான்.
ஓடும்போது தனது அத்தையைப் பார்த்துக் கொண்டே ஓடியவன், கீழே கல் தடுக்கி விழப்போக, நடந்த இவர்களின் சம்பாஷனைகளைத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டு வந்த வினோத், வேகமாக அவனைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி விட்டான். கீழே விழுந்து விட்டோமோ, என்ற பயத்தில் ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்துவிட்டுப் பேந்தப் பேந்த முழித்தான் கவின்.
"ஒன்னும் ஆகலை கவின்" என்று வினோத் சொன்னவுடன் அவனைப் பார்த்துப் பல்வரிசை தெரியச் சிரித்தவன், "ராகினி சீக்கிரமாவே வந்துட்டாளா?” என்று கேட்டான்.
"இன்னைக்கு எனக்கு லீவு, அதனால சீக்கிரமே வந்துட்டாப்பா" என்று விட்டு,
"சரி, பார்த்துப் போங்க" என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு வெளியில் நிற்கும் தன் வண்டியின் அருகில் வந்தான்.
அவன் வண்டி எடுப்பதற்கு முன்பாகவே அவனது அருகில் வந்த கண்மணி, "சார், கொஞ்சம் உங்ககிட்டப் பேச முடியுமா?" என்று கேட்டாள். அவளை ஒரு நிமிடம் முழுவதாகப் பார்த்தவன், "சொல்லுங்க" என்றான்.
"இல்ல, பத்மா அம்மா உங்ககிட்டப் பேசி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றவுடன் அவளது கண்களை உற்றுப் பார்த்தான்.
"தப்பா எடுத்துக்காதீங்க, இங்கே பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். வெளியே எங்காவது போகலாமா, உங்களுக்கு வேலை இருக்கா?"
"இல்ல, இன்னைக்கு செகண்ட் சாட்டர்டே, லீவு தான் சொல்லுங்க" என்றான்.
"வெளியே" என்று இழுத்தாள்.
"போகலாம். அதுக்கு, ஏன்? உங்க அண்ணன் பையன் கவினை வெளியே விட்டுட்டீங்க, ஸ்கூல்ல கிளாஸ் ரூம்ல கொண்டு போய் விட்டு இருக்கலாம் இல்ல."
"இல்ல சார், உங்களைப் பார்த்தேனா? அதுக்குள்ள நீங்க போயிடுவீங்களோனு தான்…” என்ற உடன், "அதுக்கு ஏன்மா இப்படி, என்கிட்ட ஒரு நிமிஷம் நில்லுங்கன்னு சொல்லி இருந்தா நான் நிக்கப் போறேன்" என்று சிரித்தான். அவளும் லேசாகச் சிரிக்க, அவளைப் பார்த்தவன், "சரி வாங்க" என்று தனது வண்டியை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பார்க்குக்குச் சென்றான்.
கண்மணியும் பின்னாடியே வர இருவரும் ஒரு இடத்தில் சென்று அமர்ந்தார்கள். கண்மணி அமைதியாக இருக்க, வினோத் ஒரு சில நொடிகளுக்குப் பிறகு, "பேசணும்னு சொல்லிட்டு அமைதியா இருக்கீங்களே? சொல்லுங்க" என்றான்.
லேசாகத் தயங்கியவள், "எங்க வீட்டுல உங்களைப் பத்திப் பேசினாங்க" என்றாள். அமைதியாகப் பார்த்தான்.
"இது சரிவராது மா" என்றான். "இல்ல சார், நான் உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும். அத விட முக்கியமா உங்க கிட்ட சாரி கேக்கணும்" என்றாள்.
"எதுக்கு மா சாரி"
"இல்ல, அன்னைக்கு நீங்க என்கிட்டப் பேசணும்னு கேட்டீங்க, மரியாதை நிமித்தமா கூட ஒரு நிமிஷம் கூட நின்னு உங்களுக்குப் பதில் சொல்லாம வேகமா போயிட்டேன். என்ன இருந்தாலும் திமிரா இருக்கான்னு நினைச்சிருப்பீங்க இல்ல" என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னவுடன் அவனது முகத்தில் லேசாகப் புன்னகை அரும்பியது. 'அன்று தான் அப்படித்தானே நினைக்கச் செய்தோம்' என்று யோசித்தவன், "ஒரு பையன் வந்து ஒரு பொண்ணுகிட்டப் பேசணும்னு சொன்னா, யாருக்கா இருந்தாலும் வர ஒரு இயல்பான உணர்வு தான் அது. அதனால ஒன்னும் பிரச்சனை இல்லம்மா" என்றான்.
இருந்தாலும், "இன்னைக்கு நான் பேசணும்னு சொன்னப்ப நீங்க எனக்கு மரியாதை கொடுத்தீங்க, இல்ல சார்.”
"அன்னைக்கு நீங்களும் எனக்கு மரியாதை கொடுத்தீங்க, நின்னு பேசினீங்க. நான் உங்ககிட்ட இன்னும் கொஞ்சம் பேசணும்னு சொன்னபோது தான் வேலைக்கு நேரம் ஆனதால கிளம்பிட்டீங்க. உங்க மேல எந்தத் தப்பும் இல்லை.
ஆனா, இது சரி வராது, விட்ருங்க. நீங்க உங்களுக்கான வாழ்க்கையைப் பாருங்க. நீங்க வாழ வேண்டியவங்க, நான் வாழ்ந்து ஒரு குழந்தையோட நிக்கிறவன்" என்றான் நேரடியாகவே.
அவனை அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றாள் கண்மணி.