kani suresh
Moderator
வினோத்தும் கண்மணி சென்ற பிறகு அவளைப் பற்றி யோசித்தபடி வீட்டிற்குக்க் சென்றான்.
அவனது அம்மா பத்மா ஹாலில் உட்கார்ந்திருக்க, "எங்கடா போயிட்டு வர எவ்வளவு நேரம், வீட்டுக்கு வரணும் சாப்பிடணும்னு எண்ணமே இருக்காதா?" என்றார் .
“அம்மா நீங்க சாப்டீங்களா, இல்லையா?"
“நான் சாப்பிட்டேன்டா. நீ வருவ வருவன்னு பார்த்துட்டு இருந்தேன். நேரம் ஆகுது, பசிக்கவும் செஞ்சது. மாத்திரை போடணும்னு சாப்பிட்டேன். இப்பதான் சாப்பிட்டு வந்து உட்காருறேன். நீ வர ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு" என்று கேட்டார்.
"ரொம்ப நாள் கழிச்சு ஒரு பிரண்டைப் பார்த்தேன் மா. அதான் பேசிட்டு வரேன்…” என்று சொன்னான். ஆனால், அவனது நினைவில் கண்மணி கமலியிடம் பேசியது வந்து சென்றது. ‘அவளும் இப்படித்தானே அவளுடைய அண்ணியிடம் பேசினாள்’ என்று நினைத்தவனது முகத்தில் சிரிப்பு அரும்பியது.
"ஒருத்தவங்களப் பாத்துடக்கூடாது டா, நேரம் காலம் தெரியாம பேசிட்டு இருக்க வேண்டியது. சீக்கிரம் வா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்றார்.
"சரி" என்று விட்டுச் செல்ல, 'நானும் அம்மாவிடம் யாரைப் பார்த்து விட்டு வந்தேன் என்று சொல்லவில்லை.’ என்பதை எண்ணியவனுக்குக் கண்மணி பிரெண்டப் பார்த்தேன் என்று போனில் கமலியிடம் சொல்லியதை நினைத்துச் சிரித்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.
"என்னடா, லூசு மாதிரிச் சிரிச்சுக்கிட்டே வர. ஆனாலும், உன்னை இப்படிப் பார்க்க எனக்குச் சந்தோஷமா இருக்குடா… ரொம்ப நாள் கழிச்சு உன் முகத்தில் சிரிப்பப் பார்க்கிறேன். நீ பாத்துட்டு வந்த பிரண்டுக்கு தான் ரொம்ப நன்றி சொல்லணும்" என்றார்.
ஒரு நிமிடம் பத்மாவை அதிர்ச்சியாகப் பார்த்துச் சிரித்துவிட்டு, "சொல்லிக்கலாம், சொல்லிக்கலாம்" என்று விட்டு லேசான சிரிப்புடன் சாப்பிட்டு எழுந்தான்.
"யாருடா அது பிரண்டு, உன்னை இந்த அளவுக்குச் சிரிக்க வைக்கிற அளவுக்கு" என்றார் அவன் சாப்பிட்டு முடித்து எழுந்திருக்கும் போது.
"உங்களுக்கும் தெரிஞ்சவங்க தான், சொல்றேன் மா" என்று அமைதியாகி விட்டான். நாள் முழுவதும் கண்மணியிடம் பேசியது தான் அவனது நினைவில் ஓடியது.
'இது சரி வருமா? இருவரது வாழ்க்கைக்கும், குடும்பத்திற்காக என்று சொல்லி, தன் மகளுக்காக என்று சொல்லி, கண்மணியின் வாழ்க்கையைக் கெடுத்து விடக்கூடாது' என்று பலவாறு யோசித்தான். ஆனால், இறுதியில் அவள் சொல்வது போல் தானும் திருமணம் என்று செய்து ஒரு பெண்ணை வீட்டில் உட்கார வைத்துக் கொண்டு, தாம்பத்தியம் என்ற பெயரில் அவளது உணர்வுகளோடு விளையாட முடியாது. எல்லாப் பெண்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நம்மால் அதை இப்பொழுது பூர்த்தி செய்ய முடியாது. 'இப்பொழுதா?' என்று ஒரு நிமிடம் யோசித்தவன், ‘எப்பொழுதுமே இது நடக்காத ஒன்று. குழந்தைக்காக என்று ஒரு பெண்ணை வீட்டில் என் மனைவியாகக் கொண்டு வர முடியாது.
ஆனால், கண்மணி?' என்று யோசித்தான். ‘அவளுக்கும் எல்லா உணர்வும் இருக்குமே’ என்று யோசித்தவன், அவள் கூறியதை நினைவு கூர்ந்துவிட்டு, ‘யோசிப்போம்’ என்று அமைதி காத்தான். இங்குக் கண்மணி வீட்டிற்குச் சென்றவுடன் கமலி அவளை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
"எங்க தாண்டி போன, லீவு தானே இன்னைக்கு? இவ்வளவு நேரமா, அது சரி யாரு புதுசா உனக்கு பிரண்டு எனக்குத் தெரியாம, ஆபீஸ் பிரண்டா?" என்று கேட்டாள்.
“சொல்றேன் கமலி, வா சாப்பிடலாம்" என்று அவளுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடச் செய்தாள்.
சாப்பிட்டு எழுந்து கொள்ளும்போது கமலி திரும்பக் கேட்க, "உனக்கும் தெரிஞ்ச பிரண்டு தான்" என்றாள்.
"அது யாரு?" என்று கேட்க,
"ரொம்ப முக்கியம் பாரு இப்போ" என்று சிரித்துவிட்டுத் தன் ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.
"மணி" என்று கமலி கத்தக் கத்தக் காதில் வாங்காதது போல் கண்மணி ரூமுக்குள் நுழைந்து கொள்ள,
தன் மாமனார் மாமியாரைத் திரும்பிப் பார்த்தாள். ஹாலில் இருந்து இருவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சங்கர் சிரித்துக் கொண்டிருக்க, "உங்களுக்கு என்ன இளிப்பு? என்னைக்கும் இல்லாம, உங்க தங்கச்சி கூப்பிடக் கூப்பிடக் காதுல கூட வாங்காமல் போயிட்டு இருக்கா, நீங்க இளிச்சிட்டு இருக்கீங்க" என்றாள்.
"ஓ! இப்போ அவ என் தங்கச்சியோ?" என்றான். "ரொம்பத்தான்" என்று சொல்லும்போதே, ரூமில் இருந்து வெளியில் எட்டிப் பார்த்த கண்மணி,
"மாத்திரை கொடுத்திருப்பாங்க இல்ல, ஹாஸ்பிடல்ல… மாத்திரை போட்டு போய் ரெஸ்ட் எடு, வேலை எல்லாம் நான் பார்த்துக்குறேன்" என்று சொல்ல,
வாயைக் கோணித்துக் காண்பித்தவள், "வேலையெல்லாம் முடிச்சிட்டேன்" என்றாள்.
"அப்ப மாத்திரை போட்டுப் போய் ரூம்ல ரெஸ்ட் எடு" என்று விட்டு ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.
"கேட்டதற்குப் பதில் சொல்லாமல் போறடி. வச்சிக்கிறேன், ஒரு நாளைக்கு எதுவாக இருந்தாலும் தெரியாமலா போயிடும்" என்று புலம்பினாள்.
சங்கர் சிரித்துவிட்டு, "அவள் எதுவா இருந்தாலும் உன்கிட்ட சொல்லத்தான் போறா, அப்புறம் எதுக்கு இவ்வளவு கத்துக் கத்துற" என்று கேட்டான்.
முறைத்துக் கொண்டு, "ரொம்ப தான் பண்றா" என்றுவிட்டு ரூமுக்குள் சென்றாள். பின்னாடியே சங்கரும் சென்று, "ஏண்டி, அவ விஷயத்துல இவ்வளவு அதிகமா ரியாக்ட் பண்ற?" என்று கேட்டான்.
"உங்களுக்கு என்ன வந்துச்சு, எனக்குப் பயமா இருக்கு சங்கர்" என்றாள்.
"ஏன்டி என்ன ஆச்சு?" என்று அவளது அருகில் வர கண்கள் கலங்கியபடி,
"அவ ஒரு வேலை ராகினியோட அப்பா, அந்த வினோத் சாரைப் பார்த்து இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி ஏதாவது கேட்டு இருப்பாளோ?" என்று சொல்லும்போதே அவளைப் பார்த்து முறைத்தவன், "இதைப்பத்திப் பேசாத, கொஞ்ச நாளைக்கு அமைதியா இருன்னு நீதான சொன்ன… யோசிக்கணும்."
"இப்பவும் நான் யோசிக்கட்டும்னுதான் சொல்றேன். ஆனா, எனக்கு ஏதோ பயமா இருக்க மாதிரி இருக்கு. அவ அங்க பேசும் போதும் சரி, போன்ல பேசும் போதும் சரி, நேர்ல பேசின விதமும் சரியில்லை."
"அவ சந்தோஷமா தாண்டி இருக்கா…"
"அதுதானே எனக்கு இன்னும் கொஞ்சம் நெருடலா இருக்கு."
"ஏன்டி, என் தங்கச்சி சந்தோஷமா இருக்கக் கூடாதா?" என்றவுடன்,
"அவ்ளோ தான் இல்ல, என்னப் புரிஞ்சுக்க மாட்டீங்கல்ல சங்கர்" என்று கேட்டாள்.
"லூசு" என்று அவளை வேகமாக இழுத்துத் தன் மார்போடு புதைத்துக் கொண்டவன், "நான் எப்ப டி அப்படிச் சொன்னேன்? நீயாவே ஏன் கமலி இப்படி யோசிக்கிற… அதும் இந்த மாதிரி நேரத்துல. ஒத்துக்கிறேன், அவளால உனக்கும், எனக்கும் கொஞ்ச நாளா பிரச்சனை போயிட்டு இருக்கு, சண்ட வந்துட்டு இருக்குன்னு. அதுக்காக உன்ன நம்பாம இல்ல கமலி. உண்மையாவே நான் உன்ன நம்பல என்று நீ நினைக்கிறியா?” என்று கேட்டான்.
அமைதியாகவே இருந்தாள்.
"என்னடி அமைதியா இருந்தா நான் என்ன நினைச்சுக்க? அப்படித்தான் நினைச்சுட்டு இருக்கியா? எனக்கு அவ எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நீயும் தான்டி எனக்கு முக்கியம். எனக்குத் தெரியாதா, அவ வாழ்க்கைக்காக தான் நீயும் யோசிக்கிறனு"
"அப்புறம் ஏன் சங்கர் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரல இந்த விஷயத்துல…"
"எனக்குச் சொல்லத் தெரியல, என் தங்கச்சி இப்பவும் இரண்டாம் தாரமா வாக்கப்பட்டு போகணுமா?" என்ற எண்ணம் எனக்குள் இருக்கத்தான் செய்யுது.
“நீங்க ஏன் அப்படி யோசிக்கிறீங்க? நான் ஒண்ணு கேட்கட்டா… இல்ல, உங்க தங்கச்சி மனசுல என்ன இருக்குன்னு நீங்களாகட்டும், அத்தை மாமா ஆகட்டும், யோசிச்சு இருக்கீங்களா? அவ தன்னோட ராசியால் தான் அந்த மாப்பிள்ளை இறந்துட்டாரு. அதனால தான் இனி கல்யாணமே பண்ணிக்கக் கூடாது அப்படின்னு நினைச்சுட்டு இருக்கானு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க. ஆனா அது காரணம் கிடையாது. அவளால இன்னொரு ஆம்பளையக் கல்யாணம் பண்ணிட்டு பிசிகலா டச் வச்சுக்க முடியாதுன்னு யோசிக்கிறா?" என்றாள்.
அதிர்ச்சியாக சங்கர் அவளைத் தன்னிலிருந்து பிரித்தவன், "புரியல கமலி" என்றான்.
"அவளுக்கு நம்ம இன்னொரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டி வைக்கிறது பிரச்சனை இல்லை. யாருக்கு வேணாலும் நீங்க கட்டி வச்சிரலாம். கட்டி வச்ச உடனே யாருக்கா இருந்தாலும், பிஸிக்கல் ரிலேசன்ஷிப் தேவைப்படும்.
ஆனா, இவளால ஒருத்தவங்க கூட உடனே பிசிகல் ரிலேசன்ஷிப் வச்சிக்க முடியுமான்னு யோசிச்சிருக்கீங்களா? அந்த அளவுக்கு அவளுக்கு மனநிலை மாறி இருக்கா? கல்யாணம் பண்ணிக்கணும் என்ற மனநிலைக்கே இன்னும் வராதவ, அதப்பத்தி யோசிக்க மாட்டா. அதைத் தாண்டி நாளைக்குச் சண்ட, பிரச்சனைனு வரும்போது ஒரு வார்த்தை யாரும் அவளைச் சொல்லிடக் கூடாது".
"யாரு, என்ன வார்த்தை சொல்லுவாங்க? என் தங்கச்சிக்குக் கல்யாணமே ஆகலையே டி."
"இப்ப நீங்க சொன்னீங்க பாத்தீங்களா? வினோத்துக்கு, அவர் ஏற்கனவே ஒரு பொண்ணோட வாழ்ந்து இருக்காருன்னு… மேலோட்டமா பார்க்கிற உங்களுக்கு அவர் ஏற்கனவே ஒரு பொண்ணோட வாழ்ந்து இருக்காரு. அதான் உண்மையும்… இல்லைன்னு சொல்ல மாட்டேன். அதையே நாளைக்கு உங்க தங்கச்சிகிட்டக் கல்யாணம் மணமேடை வரைக்கும் போச்சு. உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இருந்தவனுடன், நீ கல்யாணத்துக்கு முன்னாடியே ஒன்னா தான் இருந்தியா, இல்லையான்னு எனக்கு எப்படித் தெரியும், அப்படின்னு நம்ம நாளைக்கு அவளுக்காகப் பார்த்து வைக்கிற மாப்பிள்ளை கேட்டா? என்ற எண்ணம் அவளுக்குள்ள வேரூன்றி இருக்கு.”
அவளை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வந்தவன், கீழே விட்டிருந்தான், அவள் கண்களை மூடிக்கொண்டு நின்றவுடன்.
"சொன்னாலும், சொல்லாட்டியும் இங்கு இருப்பவர்கள் நிறையப் பேர் அப்படிச் சொல்லத்தானே செய்வார்கள். நாம கூட அப்படி ஒரு வார்த்தையைக் கோபத்தில், வேறு ஒரு பெண்ணாக இருந்தால் சொல்லச் செய்வோம் தானே" என்று கேட்டாள்.
"இது எல்லாத்தையும் யோசித்து விட்டுத் தான் கல்யாணம் வேணாம்னு உங்க தங்கச்சி சொல்லிட்டு இருக்கா, அதுக்காக தான் யோசிக்கிறா...
நான் யோசிச்ச விஷயம், வினோத்துக்கும் சரி, கண்மணிக்கும் சரி, இப்போதைக்கு பிசிகல் ரிலேசன்ஷிப் தேவைப்படாது. அவங்களுக்கு மென்டலி ஒரு ரிலேசன்ஷிப் ரெண்டு பேத்துக்கும் தேவை. அதற்குப் பாலமா ராகினி இருப்பா என்று நான் நம்புறேன். அவங்க ரெண்டு பேத்தையும் சுற்றி இருக்கற நாம் சேர்த்து வைக்கிறமோ, இல்லையோ, ராகினி சேர்த்து வைப்பா... அந்த நம்பிக்கை எனக்கு முழுக்க முழுக்க இருக்கு. அவளுக்கு எந்த அளவுக்கு அவ அப்பாவப் புடிச்சிருக்கோ, அதே அளவுக்கு இப்ப நம்ப கண்மணியைப் புடிச்சிருக்கு. அவளை அம்மாவா புடிச்சிருக்கு, அப்படின்னு நான் சொல்லிட மாட்டேன். கண்மணியைக் கண்மணியா புடிச்சிருக்கு.
அதே கண்மணியை அப்பாவுக்காகத் தன் வாழ்க்கைக்குள்ள கொண்டு போவா அப்படின்னு இல்ல, தனக்குப் பிடிச்ச கண்மணி ஆண்டியாவே லைஃப்ல கொண்டு போற அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமா அம்மான்ற உணர்வு வரும். அதே போல தான், இன்னைக்கு ராகினிக்குப் பிடித்த கண்மணியை நாளைக்கு வினோத்துக்கும் புடிக்க நிறைய சான்ஸ் இருக்கு. ஒரே வீட்ல இருக்காங்கன்னா, மென்டலி இரண்டு பேருக்கும் ஒரு ரிலேசன்ஷிப் உருவாகிடும். அது பிசிகலா கொண்டு போறது அவங்களோட விருப்பம். கொண்டு போவாங்க. ஆனா, இப்ப அவங்களுக்கான ஸ்பேஸ் கொஞ்சம் கொடுக்கணும் நம்ப. அது எந்த அளவுக்கு அவங்க கொண்டு போறாங்கன்னு அவங்க ரெண்டு பேர் கைல மட்டும் தான் இருக்கு.
அதையேதான் கண்மணி விஷயத்தில்… ராகினியைப் புடிச்ச கண்மணிக்கு, வினோத்தைப் புடிக்க ரொம்ப நாள் ஆகாது சங்கர். ஆனா, அதுக்கு ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருக்கணும். மனசளவுல நெருங்கி இருக்கணும். உடல் அளவுல சொல்லல.” என்று கண்ணீரைத் துடைத்துவிட்டு, “இதைப் பத்தி இனிமே நீங்க பேச வேணாம். அதேபோல இதைக் கண்மணிகிட்டப் பேசவும் வேணாம். கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்.
அவ கவினை விட்டுட்டு வீட்டுக்கு வரும்போது பிரண்டுகிட்டப் பேசிட்டு வந்ததா சொன்னதா. ஆனா, அவ வினோத்கிட்ட தான் பேசினா அப்படின்றத நான் அடிச்சு சொல்றேன். ஆனா என்ன பேசினா அப்படின்றது எனக்கும் தெரியாது. உங்க தங்கச்சி இன்னைக்கு நைட்டு சொல்லுவானு நான் நம்புறேன். சொன்னா உண்டு, இல்லனா தெரியல. நல்லதே யோசிச்சிருப்பா அப்படின்னு நான் நம்புறேன்" என்று கண்களைத் துடைத்துவிட்டு வெளியில் செல்லப் போக,
வேகமாக அவளை இழுத்துத் தன்னுள் புதைத்துக் கொண்டு, "சாரிடி" என்றான்.
"எனக்கு உங்க சாரி வேணாம் சங்கர். என்னையும் அப்பப்பக் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. ஒத்துக்குறேன். உங்களுக்கு உங்க தங்கச்சியும் முக்கியம், தங்கச்சி வாழ்க்கையும் முக்கியம். அதே அளவுக்கு எனக்கு இந்த வீட்டுக்கு வாழ வந்தவளா, என் நாத்தனாரோட வாழ்க்கையும் முக்கியம். என் பிரண்டோட வாழ்க்கையும் முக்கியம். அப்படி அவளை எங்கேயாச்சும் அவ சொன்ன மாதிரி இந்த வீட்டுக்குப் பாரமா இருக்கா என்று நினைத்துத் துரத்தி விட்டா மட்டும் போதும் என்று நான் நினைக்கல" என்றாள் கண்கள் கலங்க.
அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கண்ணீர் உடனே அவளது இதழ்களை முற்றுகை இட்டான். திமிறினாள்.
"கொஞ்ச நேரம் அமைதியா இருடி" என்று விட்டு மீண்டும் அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டான் சங்கர்.