kani suresh
Moderator
கமலிக்கு ஒன்பதாவது மாத இறுதியில் வலி ஏற்பட ஹாஸ்பிடலில் சேர்த்து இருந்தார்கள்.
ஹாஸ்பிடல் சென்று கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்களுக்குப் பிறகு, அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் கமலி.
அதுவரை அவள் கத்தியதில், இங்கு சங்கரை விட கண்மணி தான் ஊரையே கூட்டி விட்டாள்.
கவின், ராகினி இருவரையும் அவர்களின் பாட்டிமார்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் தூக்கிக் கொண்டு தட்டிக் கொடுத்தார்கள். கண்மணியின் அலறல் சத்தத்தில் இரு குழந்தைகளும் பயந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
கண்மணியை வினோத் தேற்ற முயன்றான். சிறிது நேரம் அவளிடம் பாசமாகப் பேசியவன், குழந்தைகளும் இவளது அலறலில் தேம்பி அழ ஆரம்பிக்க, "என்ன நினைச்சிட்டு இருக்க, நீ சின்னப்பிள்ளைனு நினைப்பா? உன்னப் பார்த்து பசங்களும் அழறாங்க. ரொம்பப் பண்ற நீ… உன்னைப் பார்த்து ரெண்டும் பயந்து நிக்குதுங்க பாரு. அவங்களைப் பார்க்க வேண்டிய நீயே இப்படித் துடிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்" என்று அதட்ட,
அதன் பிறகு தான், தன் மகளையும், அண்ணன் மகனையும் பார்த்தவள் வேகமாக இருவரையும் அருகில் அழைத்து, இருவரது நெற்றியிலும் இதழ் பதித்து விட்டு, "சாரிடா, தெரியாம பண்ணிட்டேன்" என்றாள்.
"ஒன்னும் இல்லை" என்று இருவரையும் சமாதானப்படுத்தினாள். சிறிது நேரத்தில் கமலியின் பெண் குழந்தையை நர்ஸ் வெளியே எடுத்துக் கொண்டு வர, "யார்கிட்ட குழந்தையைத் தருவது, வந்து வாங்கிக்கோங்க" என்று சொல்ல, அனைவரும் கண்மணியைப் பார்க்க,
கண்மணி சிரித்த முகமாகக் குழந்தையைக் கையில் வாங்கியவள், குழந்தையின் பாதத்திலும், நெற்றியிலும் இதழ் பதித்து விட்டு, கவின் ராகினி இருவரையும் கைநீட்டச் சொல்ல, இருவரது கையிலும் குழந்தையை வைத்துக் கீழே அடியில் பிடித்துக் கொண்டாள். இருவரும் குழந்தையைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தார்கள்.
"சரி போதும், கொடுங்க" என்று நர்ஸ் குழந்தையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.
"குழந்தை ரொம்ப க்யூட்டா இருக்கு இல்ல, இந்த மாதிரிப் பாப்பா நம்ம வீட்டுக்கு எப்ப வரும் மா?" என்றாள் ராகி.
அனைவரின் பார்வையும் இப்பொழுது கண்மணியின் பக்கம் திரும்ப, அவள்தான் பதில் சொல்ல முடியாமல் நெளிந்து கொண்டே வினோவைப் பார்த்தாள். அவனும் சிரித்த முகமாக அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்துக் கண்ணடித்தவுடன் அவனைப் பார்த்து முறைத்து விட்டு, அவன் கண்ணடித்ததில் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை மறைக்க வேண்டி, வேறு பக்கம் திரும்பிப் புன்னகைத்தாள். அப்போது அவளது காலை ராகினி சுரண்ட,
"மா, நான் உங்களை தான் கேட்டேன்."
"வரும் டா தங்கம்" என்று விட்டு அமைதியாகி விட்டாள். அதன் பிறகு, அனைவரும் சென்று கமலியைப் பார்த்துவிட்டு வந்தார்கள்.
மூன்று நாள்களுக்குப் பிறகு, கமலியையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். கண்மணி தான் மூன்று நாள்களும் ஹாஸ்பிடலில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டாள்.
அதுவரை அமைதியாக இருந்த கமலி, வீட்டிலும் தன்னுடன் இருக்கப் போவதாக கண்மணி சொன்னவுடன், "ஏன்? உனக்குன்னு வீடு, வாசல், குடும்பம், புள்ள குட்டி என்று இல்லையா? என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க… என்னைப் பார்த்துக்க எங்க வீட்ல நிறையப் பேர் இருக்காங்க. என்னோட அம்மா, அத்தை என்னுடைய வீட்டுக்காரர் என்று என்னைச் சுற்றி நிறைய உறவுகள் இருக்கிறது. நீ உனக்கான குடும்பத்தையும், உனக்கான வாழ்க்கையையும் பார்க்கலாம். என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நீ போயிட்டு உன் குடும்பத்தைப் பாரு, உனக்கான லைஃப் பாரு"
முதலில் அவளை முறைத்த கண்மணியிடம், "லூசு… எனக்காகப் பார்க்காத. உண்மையா அம்மா, அத்தை இருக்காங்க… அண்ணா, ராகியைப் பாரு… ஏற்கனவே நீ இல்லாமதான் ரெண்டு பேரும் மூணு நாள் இருந்து இருக்காங்க. இனி கஷ்டம்டி…
உன்னாலயும் அண்ணா இல்லாம இருக்க முடியுமா? சொல்லு" என்று கேள்வி எழுப்ப வினோத் இல்லாமல் தன்னாலும் இருக்க முடியாது என்பதை உணர்ந்த கண்மணி, "சரி" என்று தலை ஆட்டிவிட்டு ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றாள்.
அன்று இரவு கதை சொல்லித் தட்டிக் கொடுத்து ராகியைத் தூங்க வைக்க, அப்போதும் ராகி, "மா, நம்ம வீட்டுக்கு எப்ப குட்டிப் பாப்பா வரும்?" என்று கேட்டாள்.
"என்னடா ராகிமா, இது பேச்சு... இவ்ளோ நாளா நீ இது போலக் கேட்டதில்லையே?" என்றான் லேசான கோபத்துடன். திரும்பத் திரும்ப கண்மணி மனசு கஷ்டப்படும் மாதிரியான கேள்வியைக் கேட்கவும்.
"பா, கவினுக்குக் குட்டிப்பாப்பா இருக்குல்ல, டெய்லியும் கொஞ்சுவான். ஜாலியா இருக்கும். குட்டிக் கை, குட்டிக் கால்" என்று குழந்தையின் வருகையைச் சிலாகித்துக் கூற,
அவளது தாடையைப் பற்றி, "அதான், நமக்கு ஏற்கனவே கவினோட பாப்பா இருக்குல்ல, அப்புறம் என்ன டா?"
"அது அவனுக்கு தான இருக்கு. எனக்கு நம்ம வீட்ல எப்பயும் என் கூட எனக்கே எனக்கு வேணும்." என்று சொல்லும்போதே,
"ஒரு முறை சொன்னா கேட்க மாட்டியா ராகி மா, அமைதியா இரு... அதுலாம் எந்தப் பாப்பாவும் வாராது. நம்ப டெய்லி போய் கமலி அத்தை பாப்பாவைப் பார்த்திட்டு வரலாம்.” என்று லேசாகக் குரலை உயர்த்தினான்.
"எதுக்கு பாப்பாகிட்டச் சத்தம் போட்டுட்டு இருக்கீங்க? வரும் டா தங்கம். வரும்போது வரும். கமலி அத்த வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது இல்லையா? அதனால அவங்களுக்கு குட்டிப் பாப்பா இப்போ வந்துச்சு. நம்ம வீட்டுக்கு நான் இப்பதானே வந்தேன். நம்ம வீட்டுக்கும் குட்டிப் பாப்பா வர இன்னும் கொஞ்ச நாள் ஆகும் இல்லையா? இப்படி அப்பாகிட்டக் கேக்கலாமா? அப்பாவுக்கு கோவம் வருமா, இல்லையா? அப்பாகிட்ட இப்படிப் பேசக்கூடாது. சாரி கேளுங்க, குட்டிப் பாப்பா வரும்போது வரும், சரிங்களா?"
"என் பிரண்ட்ஸ் எல்லாத்துக்கும் தம்பிப் பாப்பா இருக்கு."
"அவங்க மம்மிஸ் எல்லாம் சீக்கிரமே அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க இல்லையா, அம்மா நம்ம வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் தான ஆகுது" என்று குழந்தைக்குப் புரியும் வகையில் சொல்லிப் புரிய வைத்தாள்.
ராகியும் தலையாட்ட,
"சரி டா ராகி மா, தூங்குங்க" என்று கதை சொல்லித் தூங்க வைத்தாள்.
இதுவரை கண்மணியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ராகி தூங்கிய பிறகு, அவள் கையில் அழுத்தம் கொடுத்தான்.
"எதுக்கு வினோ, பாப்பாகிட்ட அப்படிப் பேசுறீங்க. பீல் பண்ண மாட்டாளா?"
"அவ பீல் பண்றது இருக்கட்டும். நான் ஒன்னும் தப்பான விஷயத்தைச் சொல்லலையே?"
அவள் ராகியிடம் இன்னும் கொஞ்சநாள் கழித்துக் குட்டிப் பாப்பா வரும் என்று உறுதியாகச் சொல்லும் போது கூட அவனுக்குக் கோவம் வரவில்லை.
"ஏன்? உங்களுக்கு என் கூட வாழ விருப்பம் இல்லையா?" என்று கேட்டவுடன் கோபம் வந்துவிட்டது.
'அப்பொழுது இவள் என்னைப் புரிந்து கொள்ளவில்லையா? இல்லை, என் மீது நம்பிக்கை இல்லையா?’ என்று தான் அவனுக்குத் தோன்றியது.
"நான் அப்படிச் சொல்லல. வினோ" என்று அவன் கையில் அழுத்தம் கொடுக்க,
"ஒன்னும் இல்ல" என்று நகர்ந்து படுத்தான்.
அவனிடம் நெருங்கி ஒட்டிப் படுத்தவள், அவனது நெஞ்சில் இருக்கும் ரோமங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டே, “கோவமா?" என்று கேட்டாள்.
அவன் அவளது கையைத் தட்டி விட,
"சாரி வினோ, நீங்களும் எவ்வளவோ ட்ரை பண்றீங்க. ஆனா, எனக்குள்ள தான் கொஞ்சம் கூட மாற்றம் உண்டான மாதிரித் தெரியலையே."
"நான் எப்ப டி உன்கிட்ட நெருங்கி வராமல் இருந்தேன். நீ வேணாம்னு சொன்ன. இல்ல நீ மொத்தமா வேணும்னு கேட்டா அது என்னோட" என்று சொல்லும் போதே அவனது வாயில் கைகளை வைத்து மூடியவள்,
"நான் எப்போ அப்படிச் சொன்னேன். நீங்களும் நானும் ஒரு வருஷமா ஒரே ரூம்ல தான் இருக்கோம். நீங்க எப்போ என் மேல இருக்க காதலை உணர்ந்தீங்களோ, அதுக்கு அப்புறம் தான் உரிமையான பார்வை கூடப் பாக்குறீங்க. அதுக்கு முன்னாடி தப்பான பார்வை கூட நீங்க என்னைப் பார்த்தது கிடையாது. எனக்குத் தெரியாதா உங்களப் பத்தி? நீங்க சொல்லித்தான் நான் உங்களைப் புரிஞ்சுக்கணுமா?".
"அப்புறம் ஏன் டி என்னைச் சாவடிக்கிற. என்ன கேள்வி கேட்ட?".
"அது ஏதோ ஒரு இதுல…” என்று சொல்லும்போதே அவளை இழுத்துத் தன்னுள் புதைத்துக் கொண்டவன், "ப்ளீஸ் டி, அதிலிருந்து வெளியே வா… நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு உன்னை அதிலிருந்து வெளிய கொண்டு வர முயற்சி பண்றேன். ஆனா, முடியல… என்னை லவ் பண்ற. ஆனா, உனக்கு என் ஞாபகம் வரலையா டி. நான் உன் கிட்ட நெருங்கும் போது நான் தெரியலையா உன் கண்ணுக்கு? அந்தப் பொறுக்கி நாய்தான் உன் கண்ணுக்குத் தெரியுறான் இல்ல. அவன் அந்த அளவுக்கா உன்ன பாதிச்சு இருக்கான்?" என்றான் தழுதழுத்த குரலுடன்
வேகமாக அவனது நெஞ்சில் புதைந்தவள் அழுது கொண்டே, "நான் அப்படிச் சொல்லவே இல்ல வினோ".
"பின்ன, நான் சாதாரணமா உன்கிட்ட நெருங்கி வந்தாலே உன் உடம்பு நடுங்குது. நானும் முடிஞ்ச அளவுக்கு என்னென்னவோ செய்றேன். ஆனா உன் நடுக்கத்தைக் குறைக்க முடியலடி" என்று வருந்தினான்.
"யார் சொன்னா? இப்போ நானாதான உங்க பக்கத்தில் நெருங்கி வந்து படுத்து இருக்கேன், அதிலேயே என்னோட மாற்றம் உங்களுக்குத் தெரியலையா?"
"ஆனா, அதைத் தாண்டி உன்னால வேற எதுவும் பண்ண முடியல டி. எனக்கு ஃபிசிகலா நீ தேவை என்று சொல்ல மாட்டேன். ஆனா அது எனக்கு வேணும் டி. வெறும் காதலியா மட்டும் உன்னை நினைத்து நான் வாழ்நாள் முழுக்க வாழ்ந்திட முடியாது. அதையும் தாண்டி உன்ன நான் அதிலிருந்து கொண்டு வரணும்னு எனக்கு ஆசை இருக்கு... என்னுடைய மனைவியா என்னோட நெருக்கத்தை நீ உணரணும், என்னுடைய நெருக்கத்தை விரும்பனும் என்று ஆசைப்படுகிறேன், உனக்குப் புரியும்" என்று விட்டு அவளை விட்டு விலக,
"உனக்கு இப்போ என்ன தான் வினோ பிரச்சனை?" என்று அவனது அருகில் நெருங்கிப் படுத்து அவன் மீது கைபோட,
வேகமாக அவளது கையைத் தன் மீது இருந்து எடுத்து விட்டவன், "அமைதியா படுத்துத் தூங்கு டி. மனுஷன்கிட்ட நெருங்கி வந்து படுத்துட்டு டார்ச்சர் பண்ண வேண்டியது" என்று முனகினான்.
அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்தவள், அவனது கழுத்து வளைவில் கை கொடுத்து வேகமாக அவனைத் தன் பக்கம் இழுத்து, அவன் இதழோடு இதழ் உறவாட விட்டு இருந்தாள். வினோத் கண்கள் வெளியே தெறித்து விடும் அளவிற்கு அதிர்ச்சியில் கண்களை விரித்தான். அவனைப் பார்த்துக் கண்களில் சிரித்த கண்மணி, அவனது கண்களையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் தொடங்கியதை வினோத் தன் வசம் எடுத்து இருந்தான். இறுதியில் அவள் மூச்சு விட சிரமப்பட, அவளிடம் இருந்து விலகி "கேடி" என்று இதழில் புன்னகையைத் தவழ விட்டான்.
"இப்ப வாச்சும் நம்புறீங்களா? நீங்க முழுசா என்னை அந்த விஷயத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துட்டீங்க, போதுமா?" என்று அவனைப் பார்த்து முத்துப்பற்கள் தெரியச் சில்லறையைச் சிதறவிட்டாள்.
"உண்மையாவா டி" என்று இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்டான்.
"ஏன்? என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது உங்களுக்கு?" என்றாள் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, அவனை மயக்கும் பார்வை பார்த்துக் கொண்டே.
வேகமாக அவளை இழுத்து அணைத்து, இதழோடு இதழ் பொருத்தியிருந்தான். அவளும் அவனுக்கு வாகாக இசைந்து கொடுத்தாள். சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து விலகி,
"சரி டி தூங்கு நேரம் ஆகுது" என்றான்.
"போதுமா? வேற ஏதும் உங்களுக்கு வேணாமா?” என்றாள் அவனைக் கிறக்கமாகப் பார்த்துக் கொண்டே, அவனது மீசையை ஒற்றைக் கையால் முறுக்கி விட்டபடி… அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.
"என்ன டி என்ன வெறுப்பேத்திப் பாக்குறியா?"
"நீ..நீங்க தான... அ..அது…" என்று லேசாகத் திணறினாள்.
"நான் ஒன்னும் உன்னை இப்பவே முழுசா வேணும்னு கேட்கல. உன்கிட்ட மாற்றம் வேணும்னு மட்டும் தான் சொன்னேன்." என்றவுடன்,
கோவமாக, "ஏன், என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு?" என்று முறைத்தாள்.
"சாகடிக்காத மனுஷனை… ஏற்கனவே நான் சரியில்ல, இப்ப நீ பண்ண கூத்துல எனக்குள்ள என்னமோ பண்ணுது. அமைதியா போடி"
"நான் உங்களை என்கிட்ட நெருங்க வேணாம்னு சொன்னேனா?" என்று சொல்லிக் கொண்டே அவனது உடல் மீது கைகளைப் பரவ விட,
வினோத் தான் அதிர்ச்சியில் கண்கள் விரிய அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.