எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 33

Privi

Moderator

சொன்னதுபோல உமையாள் மாலை நான்கு மணிக்கு அந்த உணவகத்திற்கு வந்து விட்டாள். உமையாள் வந்து ஐந்து நிமிடம் கழித்து ருத்ரனும் அந்த இடத்திற்கு வந்தடைந்தான்.​

வந்தவனை உமையாள் ஏறிட்டு பார்த்து மெலிதாக புன்னகை ஒன்றை பூத்து அமருங்கள் என்று கூறினாள். ருத்ரனின் அவளை பார்த்து கொண்டே அமர்ந்தான். அவளை இமைக்காது பார்த்தான்.​

எனோ இப்போதெல்லாம் அவன் கண்களுக்கு அவள் தேவதையாக தெரிகிறாள். முன்பே பார்ப்பான்தான் ஆனால் அவன் பார்ப்பது யாருக்கும் தெரியாது இப்போது அப்படி இல்லை. பகிரங்கமாக சைட் அடிக்கிறான்.​

உமையாள் முகம் செம்மை ஏறுவதை அவளால் தடுக்கவே முடியவில்லை. அப்போது உணவு ஆர்டர் எடுக்கும் சிப்பந்தி அவர்களின் மேசை அருகினில் வந்தான்.​

உமையாள் அவளுக்கு ஒரு காபி ஆர்டர் செய்து ருத்ரனை கேள்வியாக பார்த்தாள். ருத்ரன் எதுவும் ஆர்டர் பண்ணாமல் இருக்க சற்று அழுத்தமாக "ருத்ரன்" என கூப்பிட்டாள்.​

அவன் சற்றே தனது சுயத்திற்கு வந்து அவளை பார்க்க, அவள் கண்ணாலே அங்கே நிற்கும் சிப்பந்தியை காட்டினாள். அவனும் அவள் குறிப்பை உணர்ந்து அவனுக்கு காபியை ஆர்டர் செய்தான்.​

சிப்பந்தி அங்கிருந்து செல்ல, உமையாள் ருத்ரனை பார்த்து "என்ன ஐடியா?" என கேட்டாள். ருத்ரனும் அதற்கு சற்றும் யோசிக்காமல் உன்னை கல்யாணம் செய்வதுதான் என்று கூறினான்.​

உமையவளுக்கு எனோ கோபப்படுவதற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது. வந்த சிரிப்பை கட்டு படுத்திகொண்டு "நான் மிஸ்டர் ராமன் குடுத்த ஐடியாவை பற்றி கேட்டேன்" என்றாள்.​

அதற்கு அவனும் " அதை பற்றியா……." என முகத்தை சோகமாக வைத்துக்கொள்வதை போல் ஒரு பாவலா காட்டி விட்டு ராமன் கூறிய ஐடியாக்களை கூறலானான்.​

இருவரும் மிகுந்த தீவிரமாக ராமனின் ஐடியாக்களை கலந்து ஆலோசித்து பின் ஒரே மனதாய் சிலதை செய்ய ஏற்று கொண்டனர். இதன் நடுவே அவர்கள் ஆர்டர் பண்ண காபியை சிப்பந்தி எடுத்து வந்து பரிமாறினான்.​

தொழில் சம்மந்தமாக அவர்களின் பேச்சு ஒரு முடிவுக்கு வர. அங்கு சிறிது நேரம் அமைதியே ஆட்சி புரிந்தது. உமையாளோ அவள் மனதிற்குள் 'பேச வந்து விட்டு இன்னும் என்ன தயக்கம் உமையாள். நினைத்ததை பேசிவிடு' என நினைத்து ஆழ்ந்த ஒரு மூச்சை இழுத்து விட்டு ருத்ரனின் கண்களை நேராக பார்த்தாள்.​

அவள் வாய் திறப்பதற்குள் ருத்ரன் "யாள் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என கேட்டான். உமையாளோ அவனின் இந்த யாள் என்ற அழைப்பில் திகைத்து போனாள்.​

சின்ன வயதில் அவள் அம்மாதான் அவளை இவ்வாறு அழைப்பார். அதன் பின் இன்று ருத்ரன் அப்படி கூப்பிட்டுள்ளான். மறுப்பேதும் கூறாமல் உமையாளும் "சரி" என தலை ஆட்டினாள்.​

ருத்ரனுக்கு அவள் சம்மதத்தை கேட்டு நம்ப முடியவில்லை. ஒரு கணம் அதிர்த்தவன் மறுகணமே அவன் கையை கிள்ளி பார்த்து கொண்டான். அவன் செய்கையை பார்த்து உமையாளும் மெலிதாய் சிரித்து "நீங்கள் கேட்டது உண்மைதான். எனக்கு சம்மதம் என்று கூறினாள்.​

ஆனால் ஒரு சில நிபந்தனைகள் எனக்கு இருக்கிறது அதற்கெல்லாம் சரி என்றால் மேற்படி இந்த திருமணத்தை பற்றி பேசலாம் என கூறினாள். அவன் அவளை கண்கள் சுருக்கி பார்த்து, மேலே பேசுமாறு கை அசைத்தான்.​

அவளும் தொடர்ந்து "கால்யாணம் என்றால் அதில் சில தேவைகளும் அடங்கி இருக்கும்ம்ம்..." என இழுத்தாள் உமையாள் ஆனால் அவன் எந்த ஒரு பாவனையும் முகத்தில் காட்டாமல் அமைதியாக இருந்தான்.​

அவனே புரிந்துகொள்வான் என எதிர்பார்த்து அவன் முகபாவனையை ஆராய்ந்தாள். அதில் எந்த மாற்றமும் இல்லாமல் போக அவளே பேச்சை தொடர்ந்தாள், "ஹ்ம்ம் என்னிடம் கல்யாணத்திற்கு பின் நீங்கள் எதையும் எதிர்பார்க்க கூடாது.​

எனக்கு குழந்தை என்றால் அது மகிழ் மட்டும்தான். நான் திருமணத்திற்கு பின்பு நல்ல நண்பர்களாக இருப்போம். நண்பர்களாக மட்டும். இதுதான் என் நிபந்தனை." என கூறி முடிந்தாள்.​

ருத்ரனோ அமைதியாக அவளை பார்த்து கொண்டிருந்தவன், "ஓகே... இதுதான் உன் நிபந்தனையா? ஆனால் என்னால் உன் நிபந்தனைக்கு சம்மதிக்க முடியாதே." என்றான். அதற்கு உமையாள் "அப்போ நம்ம கல்யாணமும் நடக்காது." என்றாள்.​

ருத்ரனோ"யாள் பீ பிரக்டிக்கல், நான் உணர்வு உள்ள ஒரு மனிதன் இப்போ கல்யாணம் நடக்கணும் என்பதற்காக நீ சொல்வதற்கு சரி என தலை அசைத்து கல்யாணம் முடிந்த பின் உன்னை அருகினில் வைத்து கொண்டு சாமியார் வேடம் எல்லாம் என்னால் போடா முடியாது.​

அதேபோல் கண்டிப்பாக நமக்கு மகிழும் பின் ஒரு குழந்தை இருக்கும்." என கூறினான். அவன் இது வரை கூறியதையே அவள் கண்கள் விரித்து கேட்டாள் என்றால் இந்த கடைசி கூற்றில் அவளுக்கு புரையே வந்து விட்டது.​

அவள் திணறுவதை பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது. அவர்கள் மேசையில் வைக்கப்பட்ட தண்ணீரை எடுத்து குடித்தவள் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவனோ மேலும் "நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வா. ஆனால் ஒன்று மட்டும் நினைவிருக்கட்டும் கண்டிப்பாக நமக்கு கல்யாணம் நடப்பது திண்ணம்." என்று கூறி முடித்தான்.​

பின் "நான் வாஷ்ரூம் யூஸ் செய்து விட்டு வருகிறேன்." என அங்கிருந்து அகன்றான். அவன் சென்றதும் உமையாள் அப்படியே அமர்ந்திருந்தாள். அவன் பேசியது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்ததே தவிர கோவம் வரவில்லை. வாழ்க்கையின் எதார்த்தத்தை தானே பேசினான்.​

அவள் இப்படி யோசித்து கொண்டிருக்கும் போது அவள் எதிரில் வந்து ஒரு பெண் அமர்ந்தாள். உமையாள் அவளை கண்கள் சுருக்கி பார்த்தாள். அந்த பெண்ணும் உமையாளை ஒரு விஷம புன்னகையுடன் பார்த்தாள்.​

வாஸ்ரூம் சென்று விட்டு வந்த ருத்ரனின் கண்ணில் பட்டது என்னவோ உமையாளிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண். ’யாருடன் இவள் பேசிக் கொண்டிருக்கிறாள்’ என்று நினைத்து அவர்கள் அருகினில் சென்றான்.​

அங்கு உமையாளுடன் அமர்ந்து இருந்தது வேறு யாருமல்ல சுபாத்தான். அவன் புருவங்கள் சுருங்கின. பல வருடங்கள் கழித்து சுபாவை பார்க்கிறான் ருத்ரன். ஏனோ இப்போது சுபாவின் மேல் அவனுக்கு கோபம் வரவில்லை.​

அவள் விட்டு சென்றதால்தானே அவனுக்கு இப்போது ரெண்டு பொக்கிஷங்கள் கிடைத்துள்ளது. ருத்ரனை பார்த்து இருவரும் எழுந்தனர். சுபா அவனை இளக்காரமாக பார்க்க, உமையாளோ சுபாவிடம் உங்கள் முகவரி கிடைக்குமா?" என கேட்டாள்.​

சுபாவோ "தாராளமாய் என அவள் முகவரியை கூறலானாள் அதை குறித்துக்கொண்ட உமையாளோ ருத்ரனை பார்த்து "நம்ம கல்யாணத்திற்கு கண்டிப்பாக இவுங்களுக்கு அழைப்பிதழ் கொடுங்கள்." என்றாள்.​

சிரித்துக்கொண்டிருந்த சுபாவின் முகம் சுருங்கி போனது. உடனே அவள் நான் சொல்ல நீ கேட்க வில்லை அல்லவா, அவனிடம் மாட்டி கண்டிப்பாக நீ அனுபவிப்பாய் அவன் ஆண்மை என கூறவந்தவள் அங்கு வந்த அவள் புது காதலனை பார்த்து அமைதியானாள்.​

அவள் என்ன கூற வந்தாள் என உணர்ந்த ருத்ரனின் முகம் கோவமாய் மாறியது. அவன் கை முஷ்டி இறுகியது சட்டென அவன் கையை பிடித்து அழுத்தினாள் உமையாள்.​

அவளை திரும்பி பார்த்தவன், அவள் கண்களை மூடி திறந்து அமைதியாகும் படி செய்கை செய்ய அவன் கைகளை கொஞ்சம் தளர்த்தினான். போனில் பேசி முடித்து சுபாவின்அருகில் வந்தான் அவள் காதலன். வந்தவன் ருத்ரனை பார்த்து "ஹாய் சார், என்னை நினைவிருக்கிறதா?" என கேட்டான்.​

ருத்ரன் அவனை பார்த்து யோசிக்கவும், " சார் நான்தான் நீங்கள் செய்த கவர்மென்ட் ப்ரொஜெக்ட மேனேஜர் நிதின்." என்றான். அப்போதுதான் ருத்ரனுக்கு நிதினை நினைவு வந்தது.​

"ஒஹ்.. நீங்களா? என கேட்டான். இருவரும் கை குலுக்கி கொண்டனர். சுபாவை பார்த்து "சுபா, இவர் வளர்ந்து வரும் பெரிய பிசினஸ் மேன். மிஸ்டர் ருத்ரன். கான்ஸ்டருக்ஷன் பீல்ட்ல இப்போ இவர்தான் நம்பர் ஒன்." என்றான்.​

சுபாவோ வாயை பிளந்துகொண்டு ருத்ரனை பார்க்க அவன் திமிருடன் கூடிய சிரிப்போடு அவளை பார்த்துக்கொண்டிருந்தான். நிதின் மேலும் பேச ஆரம்பிக்கும் முன் அவனுக்கு மறுபடியும் திறன் பேசி மூலம் அழைப்பு வந்தது.​

அவன் ஒரு நிமிடம் என கூறிவிட்டு அழைப்பை ஏற்று மறுமுனையில் உள்ளவரிடம் பேச சென்று விட்டான். அப்போது உமையாள் திரும்பவும் சுபாவை பார்த்து "அவர் ஆண்மை உள்ளவரா இல்லையா எண்டு நான் அவருடன் வாழ்ந்து பார்த்து தெரிந்துகொள்கிறேன். உன் அறிவுரை எனக்கு தேவை இல்லை.​

வந்துட்ட பெரிய இவளாட்டம்" என முணு முணுத்துக்கொண்டே ருத்ரனை பார்த்து "போவோமா என கேட்டாள். அவனும் சிரித்துக்கொண்டே "ஆம்" என தலை அசைக்க "வாங்க" என கூறிவிட்டு சுபாவை பார்த்து முறைத்துக்கொண்டு முன்னாள் சென்றாள் உமையாள்.​

அவனோ அவளை பின் தொடர ஒரு நிமிடம் நின்று அவளை பார்த்து "நன்றி நீ என் வாழ்க்கையை விட்டு சென்றதுக்கு."என கூறி தொலைவில் இருந்த நிதினை பார்த்து ஒரு தலை அசைப்பில் விடை பெற்றான்.​

நாம் நம் எதிரிகளுக்கு குடுக்கும் மிக பெரிய தண்டனையே அவர்கள் முன் சிறப்பாக வாழ்ந்து காட்டுவதுதான். முன்னே சென்று கொண்டிருந்த உமையாளை அழைத்தான் ருத்ரன். அவளும் அவனை நோக்கி திரும்ப "எப்போ வைத்துக்கொள்ளலாம்?" என கேட்டான்.​

அவளோ புரியாது அவனை பார்க்க, "நீ தானேடி அவள் முன் நமது கல்யாணத்திற்கு அவளை அழைக்க சொன்னாய் அதனால்தான் கேட்டேன். கல்யாணத்தை எப்போ வைத்து கொள்ளலாம் என." என்றான்.​

அவளோ “கொழுப்பா, நான் ஏதோ போர போக்கில் சொன்னேன். உடனே அதையே பிடித்து கொள்வதா. போப்பா" என சிலுப்பிக்கொண்டாள். அங்கிருந்து நகர பார்க்க மீண்டும் ருத்ரனோ "ஒரு நிமிடம்" என தடுத்தான்.​

அவள் அவனை பார்க்க, ருத்ரனோ​

"நான் வருவதற்கு முன் என்ன பேசிக்கொண்டது இருந்தீர்கள்?” என கேட்டான்.​

அதற்கு அவளோ ”நீங்கள் சென்றவுடன் என் முன் வந்து அமர்ந்தவள் அவள் பெயரையும். உங்களுக்கும் அவளுக்கும் முன்னால் உள்ள உறவை பற்றி கூறி உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். " என கூறினாள்.​

அவனோ ஒரு சலிப்பான சிரிப்பு சிரித்து விட்டு "திருந்தாத ஜென்மம்" என்று மட்டும் கூறினான். அவளும் புறப்படுவதற்கு அரிகுரியாய் ஒரு தலை அசைப்புடன் திரும்ப, ருத்ரனோ​

“நான் என் அம்மாவிடம் வீட்டிற்கு சென்று சொல்லி விடுகிறேன். அப்படியே நீயும் உன் தம்பியிடம் கூறி விடு" என கூறினான்.​

அவள் அவனை பார்த்து, "எதை நான் கூற வேண்டும்?" என வேண்டும் என்றே கேட்டாள்.​

அதற்கு அவன் "அப்போது உனக்கு சம்மதம் இல்லை அப்படித்தானே?"என அவனது ஒற்றை புருவத்தை மேலே தூக்கி அவளை பார்த்து கேட்டான்.​

அவளோ மௌனமாக சிரித்து கொண்டே "என்ன சம்மதம் இல்லை" என்றாள் மறுபடியும்.​

அவளை முறைத்து கொண்டே அவன் கார் இருக்கும் திசையை நோக்கி திரும்பினான். அப்போது உமையாள் "நான் கண்டிப்பா நீலனிடம் சம்மந்தம் கூறி விடுகிறேன்." என்றாள்.​

அவன் அவளை திரும்பி பார்ப்பதற்குள், அவள் காரை நோக்கி சென்று கொண்டிருந்தாள். அவன் அவளை பார்த்து சிரித்து கொண்டே இருக்க, அவளும் அவனை பார்த்து சிரித்து கொண்டே அவ்விடம் விட்டு சென்றாள்.​

காரில் சென்ற இருவர் முகத்திலும் சிரிப்பு நிறைத்திருந்தது. வீட்டிற்கு சென்ற ருத்ரனோ பார்வதியை தேடி சமையல் அறைக்கு சென்றான்.​

அவரோ அங்கு இல்லை​

“அம்மா....”​

“அம்மா..." என கத்திக்கொண்டே அவரை தேடினான்.​

அவரோ அவரது அறையில் இருந்து வந்தவர்,​

"என்னைய்யா?" என கேட்டு கொண்டு வந்தார். ருத்ரனோ அவர் முன்னே நின்று கொண்டு, உங்கள் மருமகள் கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டாள்.” என கூறினான்.​

பார்வதியின் முகம் மகிழ்ச்சியில் பூரித்தது "உண்மையாகவாட கண்ணா" என முகத்தில் சிரிப்போடு கேட்டார்.​

"என் மேல் நம்பிக்கை இல்லையா?" என கேட்டான் ருத்ரன்.​

"உன்னை நம்பாமலா" என்றார் பார்வதி.​

இங்கோ வீட்டிற்கு வந்த உமையாளோ நீலனை பார்த்து, “இன்று வேலை இல்லையா?” என கேட்டாள்.​

நீலனோ "இரண்டு நாளைக்கு விடுமுறை" என கூறினான்.​

"அப்போ சரி உன் மாமாவுக்கு போன் செய்து என்ன விஷயம் என்று கேள்“ என கூறிவிட்டு அங்கிருந்து அவள் அறைக்கு சென்று விட்டாள்.​

நீலன் அவளிடம் பேசிய பின் இருந்த இடைவெளியில், அவன் ருத்ரனை மாமா என்று அழைப்பதை கேட்டிருக்கிறாள். அதனால்தான் அவள் சம்மதத்தை மறைக்குகமாக அப்படி சொன்னாள்.​

நீலனும் " மாமாவிடமா?” என கேட்டுக்கொண்டே ருத்ரனுக்கு அழைத்தவன், அப்போதுதான் உணர்ந்தான் உமையாள் மாமா என்று ருத்ரனை குறிப்பிட்டதை. நீலன் சந்தோஷத்தில் திளைக்க மறுமுனையில் அவன் அழைப்பை ஏற்றிருந்தான் ருத்ரன்.​

"அப்பறம் மச்சான், உன் அக்கா சொன்னாலா?" என கேட்டான்.​

நீலனோ “அப்போது உண்மைதானா?" என கேட்டான்.​

"நம்பு மச்சான், நம்பிக்கைதான் வாழ்க்கை" என தத்துவம் பேசினான் ருத்ரன்.​

விஷயம் எல்லோருக்கும் பகிரப்பட்டது. அவர்கள் அறிந்த அனைவரும் அவர்களின் முடிவுக்கு ஆனந்த பட்டார்கள். கமலம் நேரில் வந்து உமையாளை ஆசீர்வதித்தார். பார்வதி அம்மாவுக்கு கல்யாணத்தை முறையே, ஆடம்பரமாக செய்ய நிறைய விருப்பம் இருந்தது.​

ஆனால் உமையாளும் ருத்ரனும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். எளிமையான வகையில், எங்களை மனதார ஏற்று கொள்ளும் சுற்றத்தார் இருந்தால் மட்டும் போதும் என கூறி விட்டார்கள்.​

ஆனால் முறையே சடங்குகள் நடப்பதை பற்றி பார்வதி அம்மா வலியுறுத்த அதற்கு தடை இல்லாமல் போனது.​

அதற்கு முன் உமையாலும் ருத்ரனும் அவர்களுக்கு இருக்கும் கடமையை செய்ய நினைத்தனர். இருவரும் முதல் முறை மகிழினியை அழைத்து கொண்டு வெளியே சென்றனர்.​

 
Top