subageetha
Moderator
friends really sorry for the delay. now am posting episode no 17. please share your opinions about this story. its gr8 booster for me.
subageetha .
Manjam 17
மொத்தமாக நிரஞ்சன் தலையை குனிந்து கொண்டு விட்டான். அவன் அம்மாவிற்கு இன்னும் தான் சென்னையில் ஹோட்டல் அறையில் இருப்பது பற்றி சொல்லவில்லை. அம்மாவுடன் பேசி இரண்டு நாட்கள் ஆகிறது.
வித்யாவுக்குமே நிரஞ்சன் இன்னும் சென்னையிலிருந்து கிளம்பவில்லை என்பது அதிர்ச்சி தான். வினய் அடிபட்ட சமயம் சரியாக நிரஞ்சன் எப்படி அவனைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யமுடியும்? என்ற கேள்வி அவள் மூளையை குடைந்து கொண்டே இருக்கிறது. இப்போது கூட அதியிடம் ‘தெரிந்தவர்களை பார்த்து விட்டு வருகிறோம் ‘என்று சொல்லி விட்டு தான் இருவரும் இங்கு கிளம்பி வந்திருக்கிறார்கள்.
நிரஞ்சன் தான் விநயனுக்கான இந்த விபத்தை யாரோ ஆளை வைத்து செய்திருக்கிறான் என்று வித்யா தீர்மானமாக நம்புகிறாள்.நிரஞ்சனுக்கு முதலில் வித்யா இப்படி நினைப்பது பிடிக்கவில்லை தான். ஆனால், மேற்கொண்டு எந்த பேச்சும் வளர்க்க அவன் விரும்பவில்லை. சிரித்துக்கொண்டே, நான் ஆடிட்டர் அத்தை... அண்டர்வேர்ல்ட் டான் இல்ல. என்று விட்டான். மேற்கொண்டு வித்யா நிரஞ்சனை தூண்டி துருவுவதற்குள் நல்லவேளையாக விஸ்வம் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் நிரஞ்சனும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவரது பார்வை யாசித்த மன்னிப்பை நிரஞ்சன் கண்டுகொள்ளவே இல்லை. ஒருவேளை அதி வாழ்க்கை நன்றாக அமைந்திருந்தால் விசுவம் சொன்ன வார்த்தைகளை மன்னித்து தன் வாழ்க்கை பாதையில் பயணத்தை தன் வழியில் தொடர்ந்து இருப்பான் நிரஞ்சன். ஆனால் இப்பொழுது தன் உயிரே துடிப்பது போன்ற மனோ நிலையில் இருக்கிறான் அவன். எப்போதும் அவனால் விஸ்வம் அவரை மன்னிக்கவே முடியாது. இது அவருக்கும் புரிந்துதான் உள்ளது.
வினயின் அம்மாவின் மனதிற்குள்ளும் நிரஞ்சன் - அதிதி இருவரும் காதலிக்கிறார்கள் என்ற எண்ணம். இல்லாவிட்டால் தன் மகன் அவளை அனுப்பி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நிரஞ்சனை பார்ப்பது என்றால் அதற்கு என்ன அர்த்தம் கொள்வது?
பெண் என்னவோ நல்ல பெண்தான். அவளை தக்கவைத்துக்கொள்ள தன் மகனுக்கு தெரியவில்லை. இப்போதெல்லாம் நிறைய இளம் வயதினருக்கு காதலெனும் நோய் தாக்குகிறது. ஆனால் எல்லா காதலும் கை சேர்வதில்லை.
அதிதி கூட நிரஞ்சனை விரும்பியிருக்கலாம்.அதனால் என்ன? திருமணம் என்று ஆனபிறகு கணவன் மனைவி கடந்தகால குப்பைகளை தோண்டாமல் வருங்காலத்தில் சந்தோசமாக வாழ வேண்டும். மகன் ஒரு நல்ல மனைவியை இழந்து விட்டான் என்றே அந்தப் பெண்மணிக்கு தோன்றியது.
வினயனின் அம்மா யோசிப்பது எவ்வளவு தூரம் சரி? வினய் திருந்தி அதியுடன் வாழ வேண்டும், அதி அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று யாரேனும் விரும்பினால்...மஞ்சத்தின் மேல் மன்னிப்பாளா அதிதி?
அதிதியின் மனம் ஒரு நிலையில் இல்லை. ஊஞ்சல் ஆடுவது போல் சிறிது ஆட்டம். அம்மாவிடம் மனதில் உள்ள எல்லாவற்றையும் சொல்லிவிட்டாயிற்று. கணவன் மனைவி உறவில் நிகழ கூடாத நிகழ்வுகள், ஒவ்வொரு முறையும் உயிர் வரை அறுத்தது. மறக்க வேண்டிய சம்பவங்களை கொடுத்த மறுக்க முடியா உறவு. கையெழுத்து போட்டு இரண்டு வாரங்கள் முடிந்து விட்டது. வினயன் இன்னும் சென்னையிலா...இல்லை சியாட்டல் வீட்டிலா? தெரியாது.
அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லை. சாப்பிடவும் பிடித்தம் இல்லை. யோசித்தப்படியே உறங்கி போனாள் பெண்.
காரில் வரும் வழியில் வித்யா விஸ்வம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. விஸ்வம் அலுவலகத்தில் ஒரு பார்ட்டி. இருக்கும் மன நிலையில் இருவருக்கும் போகவே மனதில்லை. வேறு வழி இன்றி இந்த பயணம்.மௌனம் மட்டுமே... இருவருக்குள்ளும்.ஆனால் இருவரும் நிரஞ்சனை மட்டும் யோசித்து கொண்டிருந்தார்கள். விஸ்வம் மனம் முழுவதும் கலவையான எண்ணங்கள். அவன் அதியை திருமணம் செய்து தர கேட்ட பொழுது மறுத்தது பெரும் பிழை. இன்று பெண் திரும்ப வந்து விட்டாள். கோவித்து சென்ற நிரஞ்சனும் வந்து விட்டான். பெண்ணின் வாழ்க்கை அது திரும்ப வருமா என்று இடித்து கேட்டது அவர் மனசாட்சி.
வித்யாவுக்கோ நிரஞ்சன் இவ்வளவு தூரம் செல்வானா என்றிருந்தது.நிரஞ்சன் தான் வினயனின் மருத்துவ மனை வாசத்துக்கு காரணம் என்று அவள் நம்புகிறாள். அதை நோக்கி தான் அவள் மனதின் போக்கும். அவன் இல்லை என்று மறுக்கிறான். ஆனால் அதில் உண்மை சொல்லும் அழுத்தம் இல்லை. முகம் பார்த்து பேச அவனால் முடியவில்லை எனில்... வித்யாவுக்கு தன் மகளுக்காக நிரஞ்சன் இவ்வளவு செய்ய வேண்டுமா? அவனுக்கென்று வாழ்க்கை இருக்கிறதே! தான் பார்த்து வளர்ந்த பிள்ளை அவன்.
இவ்வளவு காலம் அவன் திருமணம் பற்றி யோசிக்காமல் இருந்தான். சரி, தொழிலில் கால் ஊன்ற வேணும். ஆனால்... இனியாவது அவன் தன்னை பார்க்க வேண்டாமா என்றிருந்தது. அவள் யோசிப்பது சரிதான்.
இது பற்றி யோசிக்க வேண்டியவனுக்கோ அதிதி தவிர வேறு எதையும் சிந்திக்க கூட பிடிக்கவில்லை.
மருத்துவமனையிலிருந்து தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பியவனுக்கு வித்யாவுக்கு இந்த சந்தேகம் வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசனை. வினய் மருத்துவமனையில் சேர்ந்து இன்றுடன் பத்து நாட்கள் முடிந்து விட்டது. நிரஞ்சன் இன்னும் பெங்களூரு கிளம்பவில்லை. சென்னை அலுவலகத்திற்கு தினமும் சென்றுவிடுகிறான். எங்கு இருந்தாலும் வேலையை முடிப்பதில் பக்கா.
அதேசமயம், அதியை பார்க்க அவள் வீட்டுக்கும் செல்லவில்லை. அம்மா இரண்டு முறை இங்கு வந்து சென்றுவிட்டாள். அப்பாதான் அழைத்து வருகிறார். ஆனால் அவர் ஹோட்டலில் ரிசப்ஷனிலேயே அமர்ந்து விடுவார். இவ்வளவு வருஷங்களில் அம்மா வாழ்வில் முன்னேற்றம் என்றால் இது தான். அம்மாவை தனியாக விடாமல் அப்பா உடன் வருவது. நிரஞ்சன் மனம் முழுவதும் ஆயாசம்.கசந்து போன தந்தை உறவு.இது போன்றவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று தோன்றியது அவனுக்கு. அதேசமயம் வினயனின் ஞாபகங்களும்.
அவனும் கூட நிரஞ்சனை பொறுத்தவரையில் திருமணத்திற்கு எல்லாம் லாயக்கு இல்லை. கண்மண் தெரியாத கோபம் நிரஞ்சனுக்குள்.
நிறைய ஆண்கள் வீட்டில் இருக்கும் பெண்களை தங்கள் அடிமைகளாக தான் நடத்துகிறார்களா என்ற சந்தேகம்.
நான் எப்பொழுதுமே அதிதியை இப்படியெல்லாம் நடத்தப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டான். தன் எண்ணம் போகும் போக்கை நினைத்து சடக்கென நிமிர்ந்து அமர்ந்தவனுக்கு மனதுக்குள் லேசாக படபடப்பு. தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்... எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்... என்றெல்லாம் குழம்பினான். அதிதி தன் கணவனுடன் விவாகரத்து வாங்கி கொண்டு விட்டால் தன்னுடன் திருமணம் செய்து கொண்டு வருவாள் என்று எந்த நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன்? இதுதான் என் ஆழ் மன எதிர்பார்ப்பா... என்று அவனுக்கு பயம் வந்துவிட்டது.
எங்கயோ அப்பாவின் நடத்தையில் தொடங்கிய விஷயம் இவ்வளவு தூரம் தன் எண்ண அலைகளை கூட்டி வருவதற்கு காரணம் தான் புரியவில்லை.
எண்ண போக்கின் பாதை புரியாமல் கட்டிலில் அமர்ந்தபடி கண்ணாடியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
சுமனா தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டது, தன் அப்பாவின் மூலம் திருமணம் குறித்த மேற்படி நடவடிக்கைகளை எடுத்தது என்று எதுவுமே நிரஞ்சனின் எண்ண அடுக்குகளில் இல்லை. அவன் மனம் முழுவதும் தான் அதிதியை திருமணம் செய்து கொள்வதற்கு தயாராகிவிட்டது புரிந்தது. இன்னும் அவள் விவாகரத்திற்கு மனதளவில் தயாராகவில்லை. இன்னும் அவள் வினயனின் மனைவி தான் என்று மூளைக்கு புரிந்த விஷயம் மனதிற்கு ஏன் புரியவில்லை?
முதலில் அதிதி விவாகரத்து பெற்றாக வேண்டும். அதற்குப் பிறகு அவளை தனக்கு நடந்த கசப்பான சம்பவங்களில் இருந்து வெளியே அழைத்து வந்தாக வேண்டும். அது அவ்வளவு சுலபம் இல்லை.இதெல்லாம் நடந்தாலும் அவள் என்னை திருமணம் புரிய மறுக்கக்கூடும்.
அவனால் தன் எண்ணம் போகும் பாதையிலிருந்து வெளி வர முடியாது சுழலில் சிக்கியவனாக தவித்தான். மூச்சு காற்று வெப்பமாக இதற்கு மேல் முடியாது என்று தோன்ற, தனது நீச்சல் உடையை எடுத்துக்கொண்டு நீச்சல் குளம் நோக்கி சென்றான். இரண்டு மணி நேரம் கடுமையான நீச்சல் பயிற்சி செய்த பின் மனம் சற்று ஆஸ்வாச பட்டது. அறைக்கு திரும்ப வந்த பின் ஒரு குளியல் போட்டு கண்ணாடி முன் நின்றவனுக்கு அதிதி தன்னை அந்நிய பார்வை பார்த்தது நியாபகம் வர தன்னை தானே ஆராய்ந்து கொண்டான். கண்ணில் கனிந்த பார்வைக்கு பதில் எதிரில் நிற்பவரை ஆராயும் கூர்மை கூடிய பார்வை. உயரம் அதிகம். படிக்கும் வயதில் நெடிய ஒல்லியான உடல்வாகு இப்போது உடற்பயிற்சி சேர்ந்து கம்பீரமான தோற்றம். சுய சம்பாத்தியம்- அதை காட்டும் பண செழுமை என்று அவன் தோற்றம் மாறியிருக்கிறதை அவனே இப்போது தான் உன்னிப்பாக பார்க்கிறான்.ஆனால் தோற்றம் மாறியது மட்டும் தான் அதி பெண்ணின் ஒதுக்கத்திற்கு காரணமா?
அவனுக்கு வியப்பாய் இருந்தது.
நானா கண்ணாடி காட்டும் பிம்பம்? மித்ரா, சுமனா என்று இரண்டு பெண்கள் இவனிடம் காதல் சொன்ன போதும் அதிதி பெண் இவனை தோழனாக மட்டும் பார்த்தாள். அவளுக்கு இவன் மீது வேறு உணர்வுகள் வந்ததில்லை. இனியும்... நினைக்கவே கடினமாக உள்ளதே!
அன்று மாலை அதி வீட்டுக்கு செல்வதாக முடிவு செய்து கொண்டான்.
வினய் மருத்துவ மனையில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டான். இன்னும் சரியாக மூன்று மாதங்களுக்கு வலது கை பழக்கம் கொண்டவனுக்கு வலது கை எலும்பு முறிவு. லேப்டாப் கூட திறக்க முடியாது அவஸ்தை. இடது காலில் வேறு எலும்பு முறிந்து பிளேட் வைத்துள்ளது. கைகால் அசைக்க முடியாமல் இந்த நிலை பெரிய அவஸ்தை. நிரஞ்சன் தான் மருத்துவ மனையில் சேர்த்தான் என்பது விநயனுக்கு பெரிய அதிர்ச்சி...அதியுடன் நிரஞ்சன் இருப்பது போன்ற நினைவுகள் அவனை அலைக்கழித்தது. மாத்திரைகள் இல்லை என்றால் அவனால் உறங்க கூட முடியாது. தானே வேண்டாம் என்று அனுப்பி விட்ட பெண். யாருடன் பழகினால் என்ன என்று அவனால் இருக்க முடியவில்லை. ஒரு வேளை திருமண பந்தம் இன்னும் இங்கும் அங்குமாக ஒட்டிக்கொண்டு இருப்பதால் வந்த உணர்வாக இருக்கலாம்.
அதி இங்கு வந்து தனக்கு உதவிகள் செய்யாமல் இருக்கிறாள் என்று கோவம் வேறு.
நடாலி இரண்டு முறை அழைத்து பேசினாள். இவன் வர இன்னும் நான்கு மாதங்கள் ஆகும் என்றவுடன் அவள் குரல் இறங்கிவிட்டது. அவன் வீட்டில்தான் அவளது வாசம் இப்போது. விவாகரத்துக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறேன் என்றதும் அவள் நீ 'அவசரம் காட்டிட்டே என்றாள்.' அவளது இந்த பதில் கடுப்பேற்றியதுதான். அத்துடன் அவள் சொன்னதன் அர்த்தம் புரியவில்லை.
ஆனாலும் அதியுடன் இனி முடியாது என்றுதான் அவனுக்கு தோன்றியது.
ஆனாலும் அவள் தர்ம பத்தினியாக இங்கு வந்து இவனுக்கு சேவை செய்ய வேணும் என்று மனம் எதிர்பார்க்கிறது. வீட்டில் இவனுக்கு உதவ ஆண் பணியாளரை நியமித்து விட்டார்கள். பெண்ணாக இருந்தாலாவது பொழுது போகும் என்று அவனுக்குள் எண்ணம்.
அதிதி தனக்குள்ளேயே சுருண்டுவிட்டாள். தன்னிடம் எந்த தவறும் இல்லை என்று தெரியும். ஆனால் வினய் சொன்ன வார்த்தைகள் அவற்றில் இருந்து அவளால் வெளியே வர முடியாது. வீட்டில் பேசுவதும் குறைந்து விட்டது. வினய் பற்றி யாரும் அவளுக்கு சொல்ல விரும்பவில்லை. விஸ்வம் தங்கைக்கு போன் செய்து கூட பேச பயம் கொண்டார். அதியை அவர்கள் நிர்பந்தம் செய்தால் என்று.
அப்படி எல்லாம் முடியாது என்று தெரியும். ஆனால் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு என்ன செய்ய முடியும்?பெண்ணோ கூப்பிட்டால் அவசரமாய் செல்லும் ரகம். அதிதியின் ஒட்டாத தன்மை அவருக்குள் மேலும் பயத்தை கிளப்பியது. முன்பே பெண் யாரோடும் அதிகம் பேசும் சுபாவம் இல்லை இப்போது இன்னும் மோசம். அறையிலிருந்து கூட தேவைக்கு அதிகமாய் அவள் வெளியே முகம் காட்டவில்லை. நினைக்க நினைக்க அவருக்கு பிபி கூடியது தான் மிச்சம்.
வித்யாவுக்கு தன் பெண் படும் வேதனை புரிகிறது. கணவர் மனதிற்குள் படும் அவஸ்தையும் தெரியும். அவளால் ஒன்னும் செய்ய முடியாத நிலையில் மகளுக்காக வருத்தப்படுவதா கணவருக்காக யோசிப்பதா என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். கணவரின் உடல்நிலை அவளுக்கு நன்கு தெரியும். இத்தனை வருடங்களாய் மகள் எதையும் வாய் விட்டு சொல்லாததற்கு காரணம் அவள் அப்பா மீது வைத்திருந்த பாசமும் அப்பாவின் உடல்நிலை மீது கொண்டிருந்த பயமும் தான் என்று வித்யா புரிந்து வைத்திருக்கிறாள்.
நிரஞ்சன் தான் முடிவு செய்து வைத்திருந்த படிக்கு மாலை நான்கு மணி சுமாருக்கு அதியை பார்க்க அவர்கள் வீட்டுக்கு வந்தான். அவன் எதிர்பார்த்த படியே அந்தக்கிளி கூண்டிற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதி பெண்ணிற்கு எப்படி புரிய வைப்பது. இந்த உலகம் பெரியது.வானம் பரந்தது. பறப்பதற்கு இறக்கைகள் இருந்தால் போதும். அதிக்கு இந்த மோசமான முறையில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது அதை கொண்டாடாமல் எதற்காக இந்த சுய சிறை? கொஞ்சம் கொஞ்சமாக தோழியிடம் பேசி அவளை நல்ல மனோ நிலைமைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று அவனுக்கு விருப்பம். அதில் கண்டிப்பாக சுயநலமும் அடங்கியிருக்கிறது. ஆனால் அந்த சுயநலம் அவனுக்காக மட்டுமல்ல... அவன் நேசிக்கும் அந்த பெண்ணுக்காகவும் தான். கண்டிப்பாக அவளை மனோதிடம் கொள்ள வைக்க வருடக்கணக்கில் ஆகும் என்று அவனுக்கு தெரியும். அதற்காகவெல்லாம் அவன் பின்வாங்குவதாக இல்லை.
அதிதி தன் தோழனை சீக்கிரம் புரிந்து கொண்டால் தேவலை. அது...சரி... நடாலி வினயிடம் சொன்னதற்கு அர்த்தம் என்ன?