எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நனியிதழின் யாழ்நிலவன் கதை திரி

priya pandees

Moderator

அத்தியாயம் 1(1)

"ஹரே ராம! ஹரே ராம! ஹரே ராம! ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ணா ஹரே ஹரே!"

என ஒலித்துக் கொண்டிருந்த ஆஞ்சநேயர் கோவில் சன்னதியில் அவர் முன் கைக்கூப்பி நின்றிருந்தான் யாழ்நிலவன். அவன் வாயும் அவர் நாமத்தைத் தான் விடாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

தீர்த்தமும், ஜடாரியும் கொண்டு வந்த ஐயர், "எப்டி இருக்கேள் தம்பி, போன வாரம் வரலையே? ஊருக்குப் போய்ட்டேளோ?" என்றார், அவனுக்குத் தீர்த்தம் கொடுத்தவாறு.

‘ஆமா’ என லேசாகத் தலையசைத்தான் அவன் பதிலாக, நான்கு வருடங்களாகத் தொடர்ந்து வருவதால் இருவருக்கும் அந்தப் பரிச்சயம்.

"ஊருல எதும் விஷேசமா போனீரோ தம்பி? சீக்கிரம் பொம்மனாட்டியோட வரப் பிராப்பிரஸ்து"

எனக் கூறிச் சிரித்தவர், இவனைப் பார்த்தவாறே அடுத்து நின்றவரிடம் நகர, இவனும் இதழ் பிரியாமல் சிரித்து, அமோதிப்பாகத் தலையசைத்துக் கிளம்பி வெளியே வந்து விட்டான். சுற்றுப் பிரகாரம் வந்து இரண்டு நிமிடம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தவன், கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு எழுந்து கொண்டான்.

அது சென்னையின் ஒரு பகுதியான அண்ணா நகர், கோவிலிருக்கும் தெருவிற்கு பின்னாலிலிருந்த தெருவில் தான் அவன் வீடு என்பதால் நடந்தே வந்து செல்வது தான் அவன் வழக்கம். சனிக்கிழமைகளில் காலையில் தவறாது ஆஞ்சநேயர் தரிசனம் செய்திடுபவனுக்கு அதில் ஒரு திருப்தி. அந்த ஏரியாவில் தான் நான்கு வருடங்களாக இருக்கிறான் என்பதால் அங்கிருந்த அனைவருக்குமே அவன் பரிச்சயம். அவன் ஒரு பேச்சிலர், வாத்தியார் உத்தியோகம், அசலூர்க்காரன், அதிகம் பேசமாட்டான், கொஞ்சம் கறார்பேர்வழியென அவனைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

அவன்‌ வீட்டு தெருமுனையில் திரும்புகையிலேயே, வீட்டின் முன் நின்ற இருவரையும் கவனித்து விட்டான். அதிலும் அப்பாவின் அருகில் பவ்யமாக நின்றவள் மேல் அவன் பார்வை அளவிற்கு அதிகமாகவே படிந்தது. அவர்களை நெருங்கும் முன் அவளை மேலிருந்து கீழ் முழுமையாக ஸ்கேனும் செய்து விட்டான்.

‘எவ்வளவு சொன்னாலும் கேக்றதில்ல.’

பல்லைக் கடித்தவன் முறைத்துப் பார்க்க, அதுவரை அவன் நடந்து வருவதைப் பார்ப்பதும் பார்க்காதது போல் திரும்புவதுமாக ஓர பார்வையில் அவனைத்தான் பார்த்திருந்தாள் அவள். கல்லூரியில் எப்போதும் ஃபுல் ஃபார்மலாக வருபவனுக்கும், இப்போது சாதாரண டீஷர்ட் ட்ராக்கில் இருப்பவனுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவள், அவன் முறைப்பில்,

‘இப்ப என்னத்துக்கு முறைக்கறாங்க, ஒருவேளை நாம சைட்டடிச்சத கண்டுபிடிச்சுட்டாங்களோ அம்மு?’ எனப் புரியாமல் முழித்தாள்.

அவள் பார்வையை உள்வாங்கி, அவளின் கழுத்துக்குக் கீழ் பார்வையைக் கொண்டு சென்றவன் மீண்டும் அவள்‌ முகம் பார்த்து முறைக்க, அதில் அவளும் குனிந்து பார்த்துவிட்டு, 'போச்சு லோ நெக். அதுக்குத்தான் இந்த முறைப்பா? எனக்குன்னே இப்படி அமையுதே முருகா. சும்மாவே துர்வாசருக்கு முறைக்க மட்டுந்தான் தெரியும். இன்னைக்குன்னு பார்த்து இப்படியா வந்து சிக்கணும். செத்தேன் நான்' என முனங்கி வெளிப்படையாகத் தலையில் தட்டிக் கொண்டாள்.

"வாங்க மாப்ள, கோவிலுக்கா?" என்றார் கருப்பையா, அருகில் நின்றவளின் தகப்பனார்.

"ஆமா மாமா, வரேன்னு ஃபோன் பண்ணிருக்கலாமே."

என்றவன் கேட்டைத் திறந்து உள்ளே செல்ல, மாடியிலிருந்து எட்டிப் பார்த்தார் வீட்டின் உரிமையாளர், அம்சா அக்கா.

இவன் அவரை நிமிர்ந்தும் பார்க்காமல் உள்ளே சென்று விட்டான், அவர் பார்ப்பார் நிமிர்ந்தால் விசாரிப்பாரெனத் தெரியுமே அவனுக்கு, அதனால் நிற்காமல் சென்று விட்டான். யாரென்று அவர் கேட்டால் இவனிடமும் பதில் இல்லை. அப்படி நின்று பேசும் கலகலப்பான ஆளும் இல்லையே அவன். அதனால் அம்சா அக்கா இப்போதைக்கு அவர் சந்தேகத்தை அவரே தான் வைத்துக் கொள்ள வேண்டும்.

கருப்பையாவும், அவர் மகளும் கூட அவனைப் பின் தொடர்ந்தனர். இரண்டாம் முறையாக இந்த வீட்டிற்குள் வருகிறாள், ஆனாலும் கவனமாக வலது காலை எடுத்து வைத்து வந்தாள். முதல் முறை இரண்டு வருடத்திற்கு முன் அவன் தாத்தாவுடன் வந்து, வந்த வேகத்தில் சென்றுமிருந்தாள்.

"வந்து பத்து நிமிஷம் தான் ஆகுது மாப்ள, நீங்க ஆஞ்சநேயர் கோவில் போவீங்க, வார நேரந்தாம்னு பிள்ள சொன்னா, அதான் ஃபோன் போட வேணாம்னு அப்படியே நின்னுட்டேன், இதுல என்ன இருக்கு."

திரும்பி அவளை ஒரு‌‌ பார்வை பார்த்தான், அவளுக்கு அதும் முறைப்பாகத் தான் தெரிந்தது, குனிந்து கொண்டாள்.

'நடிக்கப் போயிருக்கலாம்.'

என நினைத்துக் கொண்டு மீண்டும் கருப்பையாவிடம் திரும்பினான், "எதும் வேலையா வந்தீங்களா மாமா?" என அவரைப் பார்த்துக் கேட்க,

"அம்மு மசமசன்னு நிக்காத, மாப்ள‌ காலைல சாப்டாகளோ என்னவோ, போய்ச் சாப்பாட்டு வேலைய ஆரம்பி, நீ வந்து போற நேரத்துலனாலும் தம்பி நிம்மதியா சாப்பிடணும்ல."

என அவளை விரட்டியவர், "என் மக, மூத்தவளோட சம்மந்தார் வழில ஒருத்தர இங்க ஆஸ்பத்திரியில் வச்சுருக்காங்க மாப்ள, சம்மந்தகாரங்களுக்கு ரொம்ப நெருக்கம், பார்க்காம விட முடியாதுன்னு மூத்தவ மாமனார் கூட வந்தேன், அவங்க ஊருக்குக் கிளம்பிட்டாங்க, நாந்தான் இவளப் பார்த்துட்டு அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். நீங்கச் சாப்டீங்களா மாப்ள?" என்றார் அது தான் முக்கியம் என்பதாக.

"எட்டு மணி‌ தானே மாமா, இனி தான் சாப்டணும், நீங்கச் சாப்டீங்களா?" என்றான், அந்த அதிமுக்கிய மூத்த சம்மந்தார், சாப்பிட வைத்தும் அனுப்பியிருக்க மாட்டாரென அறிந்தவனாக‌.

"இல்ல மாப்ள அஞ்சு மணிக்கு வந்திறங்கிட்டோம், அப்ப டீக்குடிச்சேன், அப்படியே அவுங்களோட ஆஸ்பத்திரி போய் அவங்கள நலம் விசாரிச்சுட்டு, நேரா புள்ளைய பார்க்க வந்துட்டேன், பிள்ள சாப்பிட தான் போவோம்னு கூப்பிட்டா, நாந்தான் மாப்ளைய பார்த்துட்டு அங்கன சாப்ட்டு கிளம்புதேன்னு கூட்டிட்டு வந்தேன்." என்றார் வெள்ளந்தியாக,

"அப்ப நீங்க குளிச்சு ஃப்ரஷாகி வாங்க மாமா, சாப்டலாம்." என அவன் எழுந்து கொள்ள,

"இல்ல மாப்ள இருக்கட்டும்." எனப் பதறித் தடுத்தார்,

அவனுக்குத் தெரியும் அவராக ஒரு உரிமையும் அவனிடமோ அவன் இடத்திலோ எடுத்துக் கொள்ள மாட்டார் என்று. சற்று முன் சாப்பிட்டுக் கொள்வதாக வந்ததாகக் கூறியது கூட மகளை அந்த வீட்டில் ஒன்றச் செய்து அதை மனம் குளிர பார்த்துவிடும் ஒரு ஆசையில் மட்டுமே, அதற்கும் எத்தனை முறை ஒத்திகைப் பார்த்துவிட்டுக் கிளம்பி வந்திருப்பார் என்ற யூகமும் உண்டு அவனுக்கு.

"வாங்க மாமா, ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துருக்கீங்க தானே? குளிச்சா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்."

என்றவன், அந்த இரண்டு படுக்கை அறை வீட்டில், அவன் படுக்கை அறைக்கு அடுத்திருந்த மற்றொரு படுக்கை அறையைக் காண்பித்தான்.

திரும்பியவர் அப்போது தான் மகள்‌‌ இன்னும் அதே இடத்தில் நிற்பதைக் கண்டு, "இதழு புள்ள, நாச்சொல்லி எம்புட்டு நேராமாவுது இன்னுமு அப்படியே நிக்குறவ, போய் அடுப்ப பத்த வைப்புள்ள." என‌ அதட்ட, அவள் அவனைத் தான் அப்போதும் பார்த்தாள். அவன் அனுமதி வேண்டுமே, அவன் வாழ்க்கைக்குள் நுழையவும் அவன் அனுமதி தர வேண்டும், அவன் வீட்டு அடுப்படிக்குள் நுழையவும் அவனல்லவா அனுமதி தர வேண்டும், அதனால் பார்த்து நின்றாள்.

திரும்பித் தானும் அவளைப் பார்த்தான், அவள் அப்படியே நிற்பதன் காரணம் புரிந்தது அவனுக்கு, "அவ செய்யட்டும் நீங்கப் போங்க மாமா." என அவன் அவளைப் பார்த்தே தகப்பனிடம்‌ சொன்னது போதுமானதாக இருக்க, கடமைக் கண்ணாயிரமாகச் சமைக்கத் திரும்பி விட்டாள்.

கிச்சன் கார்னரில் தொங்கிக் கொண்டிருந்த ஏப்ரனை பார்த்தாள், அவன் கட்டி சமைப்பது தான், குனிந்து தன் உடையை‌ப் பார்த்து விட்டு, "திட்டுனாலும் பரவால்ல, வொயிட் கலர் டாப்ப நாறடிச்சுக்க முடியாது." என்றவள் வேகமாக அவன் ஏப்ரனை எடுத்துத் தன்னைச் சுற்றி கட்டிக் கெள்ளும்போது என்ன‌ முயன்றும் அவள் கைகள் நடுங்கவே செய்தது. மனதிற்குள் ஒரு பரவசம் எழுவதையும் தடுக்க முடியவில்லை.

கருப்பையாவை விட்டுவிட்டு மீண்டும் வந்தவன் கண்டது, ஏப்ரனை கட்டிக் கொண்டிருந்தவளை தான். மறுபடியும் அவள் உடை நியாபகம் வரச் சுர்ரென்று கோபம் ஏறியது. ஆனால் எதுவும் பேசாமல் சென்று டிவியைப் போட்டு சேஃபாவில் அமர்ந்து கொண்டான்.

எட்டிப் பார்த்தாள், 'நம்ம இருக்க திசை பக்கமே திரும்பக் கூடாதுன்னு வேண்டுதலா இருக்குமோ? இருக்கும்.' என முனங்கிக் கொண்டே, பாலைத் தேடி எடுத்து, காபி தூள், சக்கரைத் தூள் என அனைத்தும் பார்த்து எடுத்து வைத்தாள்,

‘ஒருவேளை மறுபடியும் வர்ற மாதிரி இருந்தா தேடக் கூடாது அம்மு, மைண்ட்ல ஏத்து.’ எனப் பேசிக் கொண்டே பாலைக் காய்ச்சிக் காபி‌ப் பொடியைக் கலந்து நுரை ததும்ப ஆத்தியவள், எடுத்து வந்து, அவன் முன்னிருந்த டீபாயில் வைத்தாள். குனிந்து நிமிரும்போது கவனமாகக் கழுத்துடையை கீழே இறங்காமல் பிடித்துக் கொண்டாள்.

"ஃப்ரண்ட்ஸோட மால் போற ப்ளான் அதான் இந்த ட்ரஸ் போட்டேன், அப்பா வராங்கன்னும் தெரியாது, இங்க கூட்டிட்டு வருவாங்கன்னும் தெரியாது." என்றாள் மெதுவாக.

எட்டி காஃபியை எடுத்துக் கொண்டவன், சுவற்றில் தொங்கிய கடிகாரத்தைப் பார்க்க, "எட்டு மணிக்கு எந்த மாலும் திறந்திருக்காது தான், வடபழனி கோவில் போய்ட்டு அங்க இருந்து மால் போற ப்ளான்." என்றாள் அதற்கும் பதிலாக. அவன் பார்வையில் பதில் சொல்லக் கற்றுத் தந்திருந்தான், கடந்த ஒரு வருடத்தில்.

"காலைலயே கோவிலுக்கு? எப்பயிருந்து இந்த நல்ல பழக்கம்?யாருக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்கப் ப்ளானா?" என்றான் கூர்மையாக.

'அவ்வளவுக்கா நாம வொர்த்தா இருக்கோம்? என்ன நல்லெண்ணம் பாரேன் இந்த மூன்க்கு(நிலவன்)' என நினைத்தவள், "லாஸ்ட் செமஸ்டர் இன்கம் டேக்ஸ்ல அரியர் விழுந்திட கூடாதுன்னு நானும், அபியும் வேண்டிகிட்டோம் அதுக்காக அங்கப் போயிட்டு மால் போலாம்ன்ற ப்ளான். மத்தவங்க எல்லாம் அப்படியே அங்க வந்திடுவாங்க."

"இப்ப என்ன நீ போணுமா? கிளம்பு." என்றுவிட்டான் பட்டென,

கலங்கி தான் விட்டாள், "இல்ல ட்ரஸ்காகத் தான் சொன்னேன். இன்னைக்கு அபினவி பேர்த்டே, நா, அபி, வெண்பா, வாணி நாலுபேருக்கும் ஒன்னுபோல அவ தான் எடுத்துத் தந்தா, சைஸ் சரியா தான் இருக்கும்னு ஆல்டர் பண்ணல."

போ என்றுவிட்டானே என்ற கலக்கத்தில் அத்தனையையும் ஒப்பித்தாள், அவளையேப் பார்த்திருந்தான் யாழ்நிலவன்.

"இப்படி போடாதன்னா நீ எங்கையுமே இப்படிப் போட‌க் கூடாதுன்னு தான் அர்த்தம், என் முன்ன ஒரு மாதிரியும் மத்தவங்க முன்ன ஒருமாதிரியும் இருக்கறதுக்கு பேரு நடிக்கிறது. அத இனி செய்யாத. கஷ்டபட்டு நாச்சொன்னேன்னு நீ எதையும் மாத்திக்க வேணாம்."

எனக் காபி குடித்த டம்ப்ளரை கீழே வைத்தவன், ரிமோட்டை கையிலெடுத்து டீவியில் கவனம் வைக்க, அப்பா வரும் அரவத்தில், ஒரு பெரூ மூச்சுடன் சமையலறை சென்றாள்.

அவள் அப்படி ஒன்றும் அவன் முகம் சுழித்து கூறுவது போல நவ நாகரீகமான உடை அணிந்திருக்கவில்லை, வெள்ளை நிற கையில்லா குர்தி மாடல் உடை. கொஞ்சம் கழுத்திறக்கம் மட்டுமே அதிகப்படி, அதும் அதை உற்றுப் பார்ப்பவர்களுக்குத் தான் அநாகரிகமாகத் தெரியும், இங்கும்‌ அவன் பார்ப்பதால் தானே அவனுக்குத் தெரிகிறது. ஆனால் அதை அவளால் அவனிடம் சொல்லிவிட‌ முடியாது. "ஏன் பார்த்தாய்?" என கேட்கவும் முடியாது. அப்படிப்பட்ட பந்தத்தில் அவனிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறாள்.

மாவிருக்க, தோசை ஊற்றி, சாம்பாருக்கு குக்கரில் வைத்து விசிலுக்கு ஏற்றிவிட்டு, தேங்காய் சட்னியும் அரைத்தெடுத்தாள். அவள் அப்பா வெளிவந்து அவனிடம் பேசிக்கொண்டிருப்பதும் கேட்டது. அப்பாவின் ஆசையும் புரியாமல் இல்லை, அவன் வீட்டின் நிலைமையும் தெரியாமல் இல்லை, அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது மட்டுமே அவளின் மிகப் பெரிய கேள்விக் குறி.

‘அம்மு, இதென்ன புதுசா உனக்கு? சமாளிக்கலாம்டி, இன்னும் ஒரு வருஷம் இருக்கே, எதுவா இருந்தாலும் சமாளிக்கலாம், ஃப்ரியா விடு, வந்தா வாழ வைப்போம் இல்லன்னா வாழ்த்திட்டு போவோம்டி.’ என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு, சாம்பாரையும் சட்னியையும் தாளித்து இறக்கி, தோசை சுட்டு வைத்த ஹாட்பாக்ஸையும் கொண்டு குட்டியாக நால்வர் மட்டுமே அமருமாறு இருந்த சாப்பாட்டு மேசையில் வைத்தாள்,

"சாப்பாடு செஞ்சுட்டியாம்மா?" என அங்கிருந்தே கேட்டார் கருப்பையா,

"ஆமா ப்பா."

"மாப்ளய‌ கூப்டு, ஒரு மணிநேரம் ஓடிப் போச்சு, காலேசு கிளம்பும்போது இப்படி நிதானமா செஞ்சா மதியத்துக்கும் எப்படி குடுத்தனுப்புவ?" எனக் கேட்டவரைப் பார்க்கப் பார்க்க, அவளுக்கு அழுகையைக் கட்டுபடுத்த வேண்டியிருந்தது.

"சாப்ட வாங்கப்பா நீங்க." என்றாள் இயல்பாக முயன்று,

"இதழு! மாப்ளய கூப்ட்டு சாப்ட வை, எனக்கு இப்ப அவசரமில்ல." என்றார் அவர், அவனுக்கும் அவர் பேச்சு ஒரு மாதிரியாக இருக்க,

"சேர்ந்தே சாப்பிடலாம் மாமா, வாங்க." என‌ எழுந்து வந்துவிட்டான். அவன் அழைத்துவிட்டு அவர் மறுக்கும் முன் நடந்துவிட அவரும் வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்து வந்து சாப்பிட அமர்ந்தார்.

யாழ்நிலவன் அவனே எடுத்து வைத்துக் கொள்ளத் தொடங்க, "ஒன்னு ஒன்னையும் உனக்குச் சொல்லணுமாமா அம்மு? சமைக்கவும் நாந்தான் சொல்ல வேண்டி இருக்கு, சாப்பாட எடுத்து வைன்னு கூட நானே சொல்லணும்? உன் வீடு உன் புருஷன் இவருன்னு கொஞ்சமாது உறுத்தா எதையாது எடுத்துச் செய்றியா நீ? அதான் மாப்ளையும் உனக்கு விவரமே இல்லன்னு விலகியே நிக்றாரு." படபடவென்று பொரிந்து விட்டார். அவர் பயம் அவருக்குத் தானே தெரியும்.

"ப்பா ஏன் ப்பா." என அவள் சங்கடமாக நெளிந்து கொண்டு, முகம் கசங்க அவனைப் பார்க்க, சாப்பாட்டை எடுத்துக் கொண்டிருந்த கையை அப்படியே நிறுத்தி விட்டு இருவரையும் பார்த்தான் அவன். அவனுக்கு அவருக்குள் எதுவோ உள்ளது என உறுதியானது.

"என்ன ஏன்ப்பா, அவரே எடுத்து வச்சு சாப்பிட நீ எப்படி நிக்கன்னு பாரு." என்றார் அவர்.

"மாமா, சாப்ட உக்காருங்க, எங்க வீட்ல அம்மா, பெரியம்மா, பாட்டின்னு அத்தன லேடிஸ் இருந்தாலும் எனக்கு நானே வச்சு சாப்பிடுவேன், எனக்கு அது பெரிய விஷயமில்ல, நீங்க எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாம உக்காந்து சாப்டுங்க மொத." என்றவன் அவன் தட்டை வைத்துவிட்டு அவருக்குப் பரிமாற வர,

"மாப்ள." என அவர் பதறிப்போய் தட்டை வாங்கி தானே எடுத்து வைத்துச் சாப்பிட அமர்ந்து விட்டார்.

"உனக்கு." என அவன் இன்னொரு தட்டில் வைக்கப் போக,

"நானே வச்சுக்குறேன் சார்." என்றவள் தகப்பன் நிமிரவும் வேகமாகத் தனக்கும் வைத்துக் கொண்டு அவன் எதிரில் அமர்ந்து விட்டாள். இப்படித் தான் அவளைக் குழப்பி விடுவான், ஒருநேரம் சிக்ஸ்டீஸை சார்ந்தவனாகவும் ஒருநேரம் டூகேவை சார்ந்தவனாகவும் இருந்தால் அவளால் எப்படி அவனைப் பற்றிய ஒரு‌ முடிவுக்கு வர முடியும்.

'கஷ்டம்டி அம்மு, சீக்கிரம் சாப்ட்டு அப்பாவ இங்க இருந்து கிளப்பிட்டு எஸ்கேப் ஆகிடு' என நினைத்துக் கொண்டு வேகமாகச் சாப்பிடத் தொடங்கினாள்.

அவன் பேச்சில் குனிந்த தலையை நிமிர்த்தாமல் வேகமாகச் சாப்பாட்டை விழுங்கும் இருவரையும் பார்த்தவனுக்கு இதழோரம் சிரிப்பு தான், அதனோடே அவனும் சாப்பாட்டில் கவனமானான்.

சாப்பிட்டு முடித்ததும், எல்லாவற்றையும் எடுத்து ஒதுக்கி வைத்தவள், அப்பா சொல்லுக்கும் அவன் அனுமதிக்கும் காத்திராமல் மதிய சமையலுக்கு தேவையான காய்கறிகளை எடுத்து அடுக்கினாள், பத்து நிமிட யோசனையில், செல்லைப் பார்த்து இருக்கும் காய்கறிகளை வைத்து என்னென்ன செய்யலாம் என்ற பட்டியலில் சுருக்கமான ஒன்றாக வெஜிடபிள் பிரியாணியையும் ரய்தாவையும் முடிவு செய்து வேகமாக அதைச் செய்யத் துவங்கினாள்.

அங்கு மாமனாரும், மருமகனும் மூவர் அமரும் சோஃபாவில் இந்த ஓரத்தில் அவன் அமர்ந்திருக்க, அவர் அந்த ஓரத்தில் முன்னால் தள்ளி அவன் அருகே அமர்ந்திருப்பது ஏதோ அசௌகரியம் போல் அமர்ந்திருந்தார், ஏதோ சொல்ல முயன்று தயங்கிக் கொண்டிருப்பதும் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

"சொல்லுங்க மாமா, ஏதும் பிரச்சனையா?" என்றான் அவனாகவே,

"இல்ல இல்ல மாப்ள, சும்மா பேசத்தான்."

"எதும் கேட்கணுமா?" என்றான் நிறுத்தி நிதானமாக, பணம் எதும் தேவையோ, அப்படி தேவை இருந்தாலும் இவனிடம் வந்து நிற்கமாட்டார் என்பதும் அவனுக்கு நிச்சயம் தான். அதனால் அதைக் கேட்டு அவரைக் கஷ்டபடுத்த விரும்பவில்லை அவன்.

"இதழ பத்தி தான் மாப்ள."

"ஏன் அவளுக்கென்ன? காலேஜ்ல இருந்து எதும் ஃபோன் இல்ல ரிப்போர்ட் வந்ததா? கொஞ்சம் சேட்டை பண்ணாலும் படிப்புல ப்ராப்ளம் இல்லையே அவகிட்ட‌." என்றான் யோசனையுடன், இவனைத் தாண்டிப் போயிருக்க வாய்ப்பில்லையே எனவும் உள்ளே ஓடிக்கொண்டிருந்தது‌.

"இப்ப அவரு நாச்சேட்டை பண்றேனான்னு கேட்டாரா இந்த மூன்ட்ட? வாத்தியார் புத்தி ஃப்ளோல போட்டுக் குடுக்கறத பாரேன்." எனக் கடுப்பில் முனங்கிக்கொண்டிருந்தாள் உள்ளிருந்த நனியிதழ்.

"நல்லா படிக்குறா தானே மாப்ள?" என்றார் அவர்.

"அப்பாக்கு வேற டென்ஷன் அதான் இவர் போட்டுக் குடுத்தது மனசுல ஆகல." அவளுக்கு மொத்த கவனமும் இவர்களிடம் தான்.

"ம்ம் எயிட்டி சிக்ஸ் பெர்சென்டேஜ் வச்சுருக்கா மாமா, கேம்பஸ்ல வேலையே கிடைக்கும்."

"அது எம்புட்டுன்னுலாம் எனக்குப் புரியவரல மாப்ள, படிப்பு இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு, வயசும் இருபத்தி மூணு தாண்டிப் போச்சு, இன்னுமே ஏன் நீங்கத் தனித் தனியா இருந்துகிட்டுன்னு தான் பேச‌ நினைச்சேன்." என்றார் அவ்வளவு தயக்கமாக.

அவனிடம் நேரடியாகப் பேசும் விஷயம் இல்லையே இது என விறைத்தவன், நொடியில் தோன்றிய யோசனையுடன், "அங்க எங்க வீட்ல போய்ப் பேசுனீங்களா மாமா?" என்றான் வேகமாக.

பயந்தாலும், "ஆமா மாப்ள, எனக்கு வேற என்ன செய்யன்னு தெரியல, பொம்பள புள்ளய பெத்துட்டேனே ரொம்ப பயமா இருக்கு மாப்ள, அதான் பேசப் போனேன்."

"எப்ப போனீங்க? என்ன சொன்னாங்க?" என்றவனின் குரலே மாறிவிட்டிருந்தது. அவருக்கும் இது வேறுவகையில் பிரச்சினையைக் கிளப்பி விடுமோ எனப் பயமாகத் தான் இருந்தது.

அவர் முகம் பயத்தில் வெளிருவதைப் பார்த்தவன் திரும்பி அவர் மகளைப் பார்த்தான், அடுப்படி வாசலில் நின்று அவள் அப்பாவைத் தான் பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். வேலையாக இருந்தாலும் கவனம் இவர்கள் பேச்சில் இருக்க, அவன் குரல் உயரவும் ஓடி வந்து விட்டாள்.

"கொஞ்சம் தண்ணி கொண்டு வா மாமாக்கு." அவன் கூறவும் படக்கென அவனைப் பார்த்தவள், அவன் சொன்னதை கிரகித்து தண்ணீரைக் கொண்டு வந்து கருப்பையாவிடம்‌ நீட்டினாள்.

"என் பொண்ணு மாப்ள." என்றவருக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது.
 

priya pandees

Moderator

"ப்பா ப்ளீஸ்ப்பா நீங்க இவ்வளவு பயப்பட வேண்டாம், நா நல்லா இருப்பேன் ப்பா. ஏன் இப்படி உங்கள நீங்களே கஷ்டப்படுத்திக்றீங்க." என்றாள் அவளும் கலங்கிக் கொண்டு.

"எப்ப பேசப் போனீங்க மாமா. அங்க என்ன சொல்லி அனுப்பினாங்க." என்றான் கூர்மையாக.

"அவங்களா சொல்லாம நா எதும் சொல்லி அதும் என் பொண்ணு வாழ்க்கைல பிரச்சினையா ஆகிட கூடாது மாப்ள. எனக்கு இப்ப உங்க நினப்பு என்னன்னு மட்டுந்தான் தேவையா இருக்கு." என்றார் ஒருவித அழுத்தத்துடன்.

"நீங்க இப்ப சொல்லலனா நா அவங்கட்ட தான் கேட்கணும் மாமா. அதுக்கு நீங்களே சொல்லிடுங்க எனக்கு அவங்கட்ட பேச ஈசியா இருக்கும்." எனக் கேட்கவும்,

"நா உங்க வீட்ல பேசி மூணு மாசத்துக்கு மேல இருக்கும் மாப்ள. உங்க கல்யாணத்த அவங்க யாரும் பாக்கலையாம், அதனால அவங்களுக்குலாம் என் பொண்ண மருமகளா ஏத்துக்றதுல விருப்பம் இல்லையாம், உங்க இரண்டு பேருக்கும் நடந்த கல்யாணம்லாம் செல்லாதுன்னு சொல்லிட்டாங்க. படிக்க வைக்குறதோட என் பையன் ஒதுங்கிப்பான், உன் மகளுக்கு உனக்கு ஏத்த இடமா பாத்து கட்டிகுடு, அதுக்கு ஆகுற செலவையும் வேணா நாங்க பார்க்குறோம்னு சொல்லிட்டாங்க மாப்ள." என்றார் வேதனையை விழுங்கிக்கொண்டு.

இரண்டு நிமிடங்கள் மிக அமைதியாக யோசித்திருந்தவன், "ரைட். இனி நீங்க எங்க விஷயமா எதும் யோசிக்க வேணாம் மாமா, நா பாத்துக்குறேன்." என்றான் தீர்மானமாக.

"என்ன மாப்ள? என்ன முடிவெடுத்துருக்கீங்க?" என்றார் படபடப்புடன்.

"ஏன் மாமா?"

"இத வச்சு எதாது சண்ட வந்து மொத்தமா என் பொண்ணு வாழ்க்கை பாழா போயிட வேண்டாம் மாப்ள, அவங்க சம்மதிச்சு சந்தோஷமா என் பொண்ண ஏத்துக்கணும் எனக்கு அதான் வேணும்." என்றார் கையை ஏந்தி கும்பிட்டவராகத் தளுதளுக்க,

"ம்ச் மாமா." என அவர் கையை இறக்கி விட்டவன், "எந்தக் காலத்துல இருக்கீங்க? புருஷன நம்பி தான் பொண்ணுங்க வாழ்க்கையேன்ற காலம் இல்ல இப்போ. அத மொத மனசுல நல்லா பதிய வைங்க, நீங்க இப்படி குனிஞ்சு, குனிஞ்சு கொடுத்தீங்கனா எல்லாரும் கொட்ட‌ தான் வருவாங்க. மொத நீங்களே அதுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க." என்றான் அதட்டலாக.

"இல்ல மாப்ள எனக்கு அப்டிலாம்‌ வேணாம். என்‌ பொண்ண நீங்க நல்லா பார்த்துக்கோங்க, அவ உங்க பொறுப்புன்னு ஏத்தக்கோங்க. தயவுசெஞ்சு தனியா வாழலாம் தன்னம்பிக்கையா வாழலாம்னு அவள ஒதுக்கி வச்சுடாதீங்க." என்றார் மீண்டுமாக.

அவருக்குப் புரிய வைப்பதை விட நம்பிக்கை கொடுப்பதே உசிதம்‌ என்ற முடிவுக்கு வந்தவன், "அவ என் பொறுப்புன்னு ஏத்துக்கிட்டு வருஷம் ரெண்டாச்சு மாமா. படிப்ப‌ முடிக்கட்டுமேன்னு தான் தனித்தனியா இருந்தோம். அது உங்களுக்கு இவ்வளவு கஷ்டத்த கொடுக்குதுன்னா?" என்றவன் திரும்பி அவளைப் பார்த்துக் கொண்டே, "இனி என் பொண்டாட்டி எங்கூடவே இருக்கட்டும்." என்றுவிட்டான்.

‘சர்வம் சிவமயம்!’ என நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து நின்றுவிட்டிருந்தாள் அவன் மனைவி.

"முறையா செய்யணுமே‌ மாப்ள." எனத் தானும் அதிர்ந்து கேள்வி கேட்டவரை,

"நீங்க முறையா போய்த் தானே பேசுனீங்க? என்ட்ட கேட்காமலே என்னோட டிஷிசன அவங்க எடுப்பாங்கன்னா, நானும் எடுப்பேனே அவங்கள கேட்காம!" என்றான் முடிவாக.

"மாப்ள." என்றார் இன்னுமே தயங்கி பயத்துடன்.

"கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க மாமா. அதான் உங்க மக சமைக்கிறா தானே இருந்து சாப்ட்டு போலாம்." என்க,

'முருகா முருகா, வடபழனிக்கு உன்ன பார்க்க வராம‌ இங்க வந்தேன்றதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா எனக்கு? என்ன எப்பவும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்கிறியே ஏன்? அதுல என்ன என்டர்டெயின்மென்ட் உனக்கு? இந்தத் துர்வாசர காலேஜ்ல மட்டுமே நா எப்டி‌ சமாளிக்கிறேன்னு தெரியும்ல? இப்டி இருபத்திநாலு மணி நேரமும் இந்தக் குடில்ல உக்கார வைக்க ப்ளான் பண்ணிட்டியே அப்படி‌ என்ன விரோதம் என் மேல உனக்கு? இன்னும் இந்த முனிவர மயக்கி முந்தானைல முடிஞ்சுட்டேன்னு ஒரு க்ரூப் கிளம்பி வருமே அதெப்டி இந்தச் சின்னப் புள்ள சமாளிப்பேன்னு யோசிச்சுயா நீ? கண்ணும் கண்ணும் நோக்கியான்னு இவரு கண்ண பார்த்தே நா என் மிச்ச வாழ்க்கைய வாழணும் நீ அங்க இருந்து ரசிக்கணும் அதானே? எனக்கு இவர்ட்ட வர ஆசையா இருக்குன்னு வயசு கோளாறுல நா ஆயிரம் வேண்டுவேன், அதுல தேவையுள்ள ஆணி தேவை இல்லாத ஆணின்னு நீதான பிரிச்சிருக்கணும்.' என மேலே பார்த்து அவள் போக்கில் மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தவளைக் கண்டவன்,

"நனியிதழ்!" எனச் சத்தமாக அழைக்கவும், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க,

"கனா கண்டு முடிச்சுட்டனா போய் மிச்ச சமையல முடிச்சுட்டு வா ஹாஸ்டல் போய்ட்டு உன் திங்க்ஸ வேகேட் பண்ணிட்டு வருவோம்." என்றான் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து.

"உங்களுக்கு மட்டுந்தான்னு குறைய அரிசி எடுத்தேன்."

"சரி பரவால்ல குக்கர்ல கொஞ்சம் வச்சுக்கலாம். உன் அப்பாக்கும் உனக்கு மட்டுந்தானே சேர்க்கணும் அளவு பார்த்துப் போடு." என்றான் இயல்புபோல்.

"இல்ல மாப்ள நாங்கிளம்புதேன். என் பொண்டாட்டி வழி சொந்தம் ஒருத்தர பார்க்க வேண்டி இருக்கு அவர பார்த்துட்டு நா அப்படியே ஊருக்குக் கிளம்புதேன்." என எழுந்து கொண்டார் அவர்.

"நீங்க அவசரமா போய் என் வீட்ல இந்த விசயத்த ஒப்பிக்க வேணாம் அவங்களா தெரிஞ்சு வர்றப்போ வரட்டும். இப்ப நீங்கச் சொல்லக் கூடாது மாமா." என்று சொல்லியே அனுப்பி‌ வைத்தான். அவர் கிளம்பவும், "நம்ம இரண்டு பேருக்குத் தானே இருக்குறத ஷேர் பண்ணிக்கலாம் இப்ப கிளம்பு உன் ஹாஸ்டல் போலாம்." என்க,

"இன்னும் ஒரு வருஷந்தானே சார் இருக்கு." என்றாள் பாவம்போல்.

"ஒரு வருஷம் கழிச்சும் நா உன் புருஷன் தானே? அதுல எதும் டவுட்டா இருக்கியா?" என்றான் அவள் முகத்தை ஆராய்ந்து கொண்டு.

'சரியான யாழ்ப்பாண மூனு.' என முனங்கிக் கொண்டு மீண்டும் அடுப்படி சென்று அனைத்தையும் சரிபார்த்து அடுப்பை அணைத்துவிட்டவள், திரும்பி வந்து, "போலாம் சார்." என அவனைத் தாண்டிச் சென்று செருப்பை மாட்ட, அதுவரை அவள் நடவடிக்கைகளைப் பார்த்து நின்றவனும் வெளியே வந்து பைக்கை எடுக்க, பின்னால் ஏறிக் கொண்டாள். வண்டி அவள் ஹாஸ்டல் நோக்கிக் கிளம்பியது. மேலிருந்து அம்சாக்கா இதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

priya pandees

Moderator

அத்தியாயம் 2(2)

நனியிதழின் விடுதிக்குச் சென்று அவளறையை காலி செய்துவிட்டு அவளின் பொருட்களைக் கொண்டு வீடு திரும்ப, வண்டியிலிருந்து இறங்கி கேட்டைத் திறக்கும்போதே, "என்ன நிலவன் தம்பி, பொண்ணு யாருன்னு சொல்லவே இல்ல? சொந்தமா?" என்றார் மேலிருந்து அம்சாக்கா. விருட்டென்று உள்ளே சென்று விடுவானேயென வேகமாகக் கேட்டு நிறுத்தினார் அவர்.

நிமிர்ந்து மேலே பார்த்த நனியிதழ், "ஹாய்!" எனச் சத்தமின்றி வாயசைத்து, அவனறியாமல் கையையும் அசைத்துக் காட்ட, அவரும் அவளைப் பார்த்து முறுவலித்தார்.

கேட்டைத் திறந்து வண்டியை உள்ளே நிறுத்தி நிமிர்ந்தவன், "என் வைஃப்." என்றான் ரத்தின சுருக்கமாக.

"பொண்டாட்டியா?" என அதிர்ந்தவர், "எப்ப கல்யாணமாச்சு ஒரு வார்த்தை எங்களுக்கும் சொல்லணும்ல தோணலையா தம்பி? கல்யாணம் முடிஞ்சு கூட யாரும் வராமலா பொண்ண மட்டும் அனுப்பி வச்சுருக்காங்க." என விவரம் அறிய விறுவிறுவெனக் கீழேயே இறங்கி வந்துவிட்டார்.

"காலைல இவள விட வந்தார் தானே அவர்‌தான்‌‌ என் மாமனார். எங்களுக்குக் கல்யாணமாகி ரெண்டு வருசமாச்சு, அவ படிப்ப‌ முடிக்கத் தான் இத்தன நாள் ஹாஸ்டல்ல இருந்தா, இப்ப லாஸ்ட் இயர் தானே, இனி என்கூட இருக்கட்டும்னு நாந்தான் போய் ஹாஸ்டல காலி பண்ணி‌ கூட்டிட்டு வந்துட்டேன். வேலை இருக்குக்கா வரேன்." என்றவன் எல்லாம் சொல்லிவிட்டேன் என்பதாக அவளின் இரண்டு பைகளைக் கையில் எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்றுவிட்டான்.

"அம்மாடி நீ வாத்தியார் தம்பிக்குச் சொந்தமா?" என அடுத்ததாக அவளிடமும் அவர் விசாரணையைத் துவங்க,

"நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊரு அம்சாக்கா, சார் என்ன அவங்க வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டார். அவங்க வீட்டுல ஏத்துக்கல, எங்கப்பாக்கு இஷ்டம் தான், அவங்க வீட்ல கூடப் போய்ப் பேசிப் பாத்தாங்க, அவங்க பாட்டி, என் மாமியார், பெரிய மாமியார்லாம் ஒத்துக்கமாட்டேன்னு பிடியா நின்னுட்டாங்களா, அப்பவே இவருக்கு என்ன விட்டுட்டு இருக்க முடியல, யார் தடுத்தாலும் என் அம்மு தான் என் பொண்டாட்டின்னு சொல்லிக் கைய பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டாரு, இங்க ஹாஸ்டல்லயும் சேர்த்துட்டார் அவ்ளோ லவ்வு என்மேல." என்றாள் வெட்கப்பட்டு நெளிந்து கொண்டு.

"என்னம்மா சொல்ற? அப்ப இரண்டு வருசமாச்சுனுட்டு போறாரே தம்பி."

"ஆமா இரண்டு வருஷத்துக்கு முன்னயே கூட்டிட்டு வந்துட்டாங்க, அவங்க வீட்ல ஒத்துக்கணும்னு தான் இந்த ரெண்டு வருஷமா வெயிட் பண்ணாங்க, ஆனா அவங்க ஒத்துக்கவே இல்லையா இவரால என்ன பிரிஞ்சும் இருக்க முடியல அதான் வாரது வரட்டும்னு இப்ப இங்க அவங்களோட இருக்க வரச் சொல்லிட்டாங்க, நீங்களே சொல்லுங்க இப்ப என் மாமியார் வீட்ல வந்தாலும் என்ன தான திட்டுவாங்க? பொறுத்ததே பொறுத்தாச்சு இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருப்போம்னு சொன்னா கேட்க மாட்றாங்க."

அவள் இஷ்டம் போல உண்மை பாதியும் அவள் ஆசை கற்பனை பாதியுமாக அடித்து விட்டுக்கொண்டிருந்தாள்.

"என்ன பேசுற‌ நீ? நீங்க இரண்டு பேரும் தள்ளித் தள்ளி இருந்தா, எப்படி அவங்க மனசு மாறும்? ரொம்ப நல்லதுன்னு உன்ன உன் அப்பாவோட அனுப்பி தான் வைக்கப் பார்ப்பாங்க. பெத்தவங்களும் முக்கியம்‌ தான், இல்லன்னு சொல்லல ஆனா பாரு காதலர்களா எத்தன வருஷம் வேணாலும் பிரிஞ்சுருந்து வெயிட் பண்ணலாம், ஆனா புருஷன் பொண்டாட்டியா அப்படி வருஷ கணக்கா தள்ளி இருந்தா மொத உங்களுக்குள்ளயே பெரிய கேப் விழுந்துடும் பாப்பா. ஆமா உன் பேரு என்ன?" என இலகுவாக அவள் கதைக்குள் நுழைந்துவிட்டிருந்தார் அம்சாக்கா.

"அம்மு!" என்ற யாழ்நிலவனின் அதட்டல் அழைப்பில்,

அம்சாக்கா, "அம்முவா உன் பேரு." என்க, முதல் முறையாக அவன் அவளை அப்படி அழைப்பதில் கொஞ்சம் ஜர்க்காகி நின்றிருந்தாள் நனியிதழ்.

"ஹே பாப்பா அம்மு." என அவள் தோளில் அம்சாக்கா தட்டவும்,

"என்ன அம்சாக்கா?" என அந்தத் திகைப்பிலிருந்து வெளிவந்தவள் முகமெல்லாம் பூரிக்க கேட்க,

"புருஷன் அதட்டி கூப்டதுக்கே இவ்வளவு வெக்கமா? கொடுத்து வச்சவர்‌ தான் ப்ரஃபஸ்ஸர். உன் நிஜ பேரே அம்முவா இல்ல அது ப்ரஃபஸ்ஸரோட செல்லப் பேரா?" என அவரும் அவளைக் கிண்டல் செய்து சிரித்துக் கொண்டே கேட்க,

"என் பேரு நனியிதழ் அம்சாக்கா, அம்மு செல்லப் பேரு."

"அத உன் புருஷனே வச்சுக்கட்டும், நாங்க நனியிதழுன்னே கூப்டுக்குறோம், பரவால்ல தம்பி என்னைப் பத்தியும் உன்ட்ட சொல்லிருக்கு போல அதான் என் பேர சொல்லிப் பழகுன புள்ள மாறி நல்லா பேசுற." என அவர் முடிப்பதற்குள்,

"அம்மு, எவ்வளவு நேரம்." என அவன் வாசலுக்கே கத்திக் கொண்டு வருவது தெரிய,

"நாம அப்பறமா பேசுவோம், நீ போ." என அவரே அவளை அனுப்பி‌ வைத்துவிட்டு மேலேறி விட்டார்,

சிரித்துக் கொண்டே வேகமாக உள்ளே வந்தவள், அவன்மீது மோதி விலகி நிற்க,

"எங்க போனாலும் வளவளன்னு பேசிட்டே நின்னிடனுமா? அவங்கட்ட முன்ன‌பின்ன பழக்கம் இல்லை தான? அப்பறம் என்னத்த இவ்ளோ நேரமா பேசிட்டு நின்ன?" என்றான் முறைத்துக் கொண்டு,

"இனி தெரிய தானே சார் வேணும், நம்மள‌பத்தி தான் கேட்டாங்க, வீட்டுக்காரங்க வேற பாதில வந்தா தப்பா நினப்பாங்கன்னு தான் சொல்லிட்டுருந்தேன்."

"மொத்தமா ஒப்பிச்சிட்டியா? அதான் இனி ஊர்லயிருந்து கிளம்பி‌ வருவாங்களே அவங்க வந்து சொல்றதுக்கு கொஞ்சம் மிச்சம் வச்சா என்ன?"

"கொஞ்சமா தான் சொன்னேன்." அவன் வாத்தியார், அவள் மாணவி இது தான் உடல்மொழியாக இருந்தது அவளிடம்.

"சரி எல்லாத்தையும் எடுத்து வை போ." என்றதும்,

"அப்ப இந்த ரூம்ல வச்சுக்கவா?" எனச் சற்று முன் அவள் அப்பாவிற்கு அவன் காட்டிய அறையைக் காண்பித்து கேட்க,

"ஏன் எங்கூட இருக்க மாட்டியா நீ? இதுவர பிரிஞ்சிருந்தது பத்தலையா உனக்கு?" என அவன் இடுப்பில் கை வைத்து முறைத்து கேட்கவும், வேறெதுவும் பேசிவிடுவானோ எனப் பயந்து அவன் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

"ஒருமணி நேரத்துல இவ்ளோ சேஞ்ச் தாங்காதுப்பா இந்தப் பாடி, இனியும் எதையும் கேட்டேனா பாருங்க மூன். புருஷன், புருஷன்னு அழுத்திச் சொல்லிட்டீங்கல்ல, பாருங்க என் பெர்ஃபாமன்ஸ. இனி நாமளும் பொண்டாட்டியாவே இருந்துக்கணும்டி அம்மு." எனப் புலம்பிக் கொண்டே, அவன் அலமாரியில், அவளுக்காக ஒதுக்கி வைத்திருந்த இடத்தில் அவளதை அடுக்கி வைத்தாள். அவள் வெளியே நின்ற நேரத்தில் இதைத் தான் செய்திருக்கிறானெனப் புரிந்தது. அவன் முதலில் கொண்டு வந்த பைகளை அங்குத் தான் வைத்திருந்தான். அவன் சொல்லாமல் புரிய வைக்க நினைத்திருக்க, இவள் தான் வாயைக் கொடுத்து வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாள்.

துணியை அடுக்கி விட்டு, வெறும் பைகளை மேல் ஷெல்ஃபில் ஏற்றிக் கொண்டிருக்க, உள்ளே வந்தவனின் பார்வைக்கு அவளின் உடையில்லாத வழுவழுப்பான கைகள் காண கிடைக்க, முறைத்து பார்த்தான். மேலும் அவனைக் கவனிக்காமல் ஸ்டூலிலிருந்து கீழிறங்கி குனிந்து அடுத்த பேக்கை எடுத்து நிமிர, பார்த்திருந்தவனுக்கு இதயத்துடிப்பு அநியாயத்திற்கு எகிறியிருந்தது.
கட்டிய மனைவி, கள்ள பார்வை என வாத்தியார் ஒருவழியாகி கொண்டிருந்தான்.

‘இவள!’ எனப் பல்லைக் கடித்தவன், "அம்மு இறங்குடி கீழ." என்கவும், திடீரென்ற அவன் சத்தத்தில் அப்போது தான் ஏறி நின்று மேலே வைத்துக் கொண்டிருந்தவள் பயந்து கையிலிருந்த பையை விட்டிருக்க அது அவள் தலையில் விழுந்து கீழே விழுந்தது.

"நீயும் விழுந்து வாரிடாம இறங்கு." என அவள் பக்கம் வந்தவன், "பிடிச்சு இறங்கு." எனக் கை வேறு கொடுக்க,

'யோவ் யாழ்பாண மூனு, நானே கம்முன்னு வச்சுட்டு இறங்கிருப்பேன், பின்னாடி‌ வந்து நின்னு பே ன்னு கத்தி, மனுசிய பயமுறுத்திவிட்டு பேக்க தலைல தள்ளிவிட்டுன்னு வேண்டாத வேலையெல்லாம் பார்த்துட்டு, நானா விழுந்து வாரப் போறனாமா?' என மனதிற்குள் வறுத்தெடுத்தாலும் வெளியே அவ்வளவு பவ்யமான பாவனையில், அவன் கைபிடித்து இறங்கினாள்.

"மனசுக்குள்ள கழுவி ஊத்துற தானே?" என்றான் இறங்கி நின்றவளிடம் புருவம் உயர்த்தி, அதில் அவள் பாவனை அதிர்ச்சிக்கு மாற, “அப்ப நிஜமா திட்டிருக்க?" என முறைத்துவிட்டு, தானே ஏறிப் பைகளை ஒழுங்காக வைத்துவிட்டு இறங்கினான்.

"ட்ரஸ மாத்திட்டு வா சாப்பிடுவோம்" என அவன் வெளியேறிவிட,
குனிந்து பார்த்தாள், "எப்டியோ என் வொயிட் ட்ரஸ்ஸ நாறடிச்சாச்சு." என முன்னந்தலையில் தட்டியவள் மாற்றுடை எடுத்துக்கொண்டு அவன் குளியலறையை உபயோகிக்கச்‌ சென்றாள்.

அங்கு வெளியேச் சென்றவன், சாப்பிட அவள் செய்து வைத்திருப்பதை திறந்து பார்த்துவிட்டு, சாப்பிட ஏதுவாக எடுத்து வைக்க, அவன் ஃபோன் அடித்தது, எடுத்துப் பார்த்தான், அவன் வீட்டு தொலைபேசி எண், "சொல்லு பாட்டி." என்றான் எடுத்ததும்.

"எப்படி இருக்க நிலவா?"

"ஃபைன் பாட்டி. அங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?"

"நல்லாருக்கோம்ப்பா, நீ எப்ப ஊருக்கு வார?"

"போன வாரந்தான வந்தேன்?"

"ஒத்தைல கிடக்கிறவன் வார வாரம் கூட ஊருக்கு வந்துட்டு‌ போலாம்ல, எல்லா சனி ஞாயிறும் லீவு தானே உனக்கு, அங்க தனியா தானே உக்காந்திருப்ப? தாத்தாக்கும் உன்ன பாத்தாப்புல இருக்கும்ல."

"நூல் விட்டுப் பார்கிறியா பாட்டி?" என்றான் நேராகவே.

"பின்ன உன்ன பார்க்க யாரும் வந்தா போனா கூட எங்கட்ட சொல்லவா செய்ற நீ?" இது தான் அவனுக்கு அம்சாக்காவிடம் பிடிக்காத விஷயம்.

"அங்க யாருலாம் வந்துட்டு போறான்னு நீங்க மட்டும் என்ட்ட சொல்லவா செய்றீங்க?" என அவன் பேசிக்கொண்டிருக்கையில் குளித்து வேறொரு சுடிதாரில் வந்து நின்றாள் நனியிதழ். அவளுக்குச் சாப்பாட்டை கண்ணைக் காண்பித்து விட்டு அவன் அவனுக்கு எடுத்து வைக்கத் துவங்க, அவன் பேச்சு யாரிடம் எனப் புரிந்ததால், ஒருவித படபடப்புடன் அவளும் அவனருகிலேயே சாப்பிட அமர்ந்து கொண்டாள்.

"அப்ப அந்தக் கருப்பையா வந்து எல்லாத்தையும் ஒப்பிச்சு பொண்ணையும் விட்டுட்டு போனது உண்மை தான்ல? என்ன ஜென்மம் அந்தாளு? அவ்வளவு சொல்லிருக்கேன் பின்னயும் பொண்ண கொண்டு விட்டுட்டு‌ போயிருக்கான், இங்க தான வரணும் வரட்டும் நாலு கேள்வி கேட்காம விடமாட்டேன்." என ஆவேசமாகப் பேச,

"பொண்ண கொண்டு விடல, என் பொண்டாட்டிய கொண்டு விட்டிட்டு போயிருக்காரு. நீங்கப் பேசுற விதம், அந்த டோன் எதும் எனக்குப் பிடிக்கல பாட்டி, நா அப்பறம் பேசுறேன்." என அவர் கூப்பிட‌ கூப்பிட வைத்துவிட்டான்.

அடுத்து வந்த நிமிடங்கள் அமைதியாகத் தான் கழிந்தது, இருவரும் அவரவர் யோசனையில் சாப்பிட்டு எழுந்தனர்.

யாழ்நிலவன், நனியிதழ் இருவருக்கும் சிவகங்கை தான் சொந்த ஊர், யாழ்நிலவனின் தாத்தா பவித்ரம் ஒரு நகை கடை முதலாளி, அவரின் வாரிசாக, அவன் பெரியப்பா சிவப்ரகாசம், அவர் மனைவி கல்யாணி, ஒரே மகன் யுதிஷ்டிரன், நிலவனின் அப்பா கண்ணதாசன், அம்மா அமுதா, இவனும் அவர்களுக்கு ஒரே மகன் தான். அவர்கள் எல்லோரும் குடும்ப தொழிலில் இருக்க, யாழ்நிலவன் மட்டுமே தனக்கென ஒரு வேலையைத் தேடிக்கொண்டான்.

அண்ணனுக்குத் தொழிலில் ஈடுபாடு இருப்பதை அறிந்து அவன் அதைப் பார்க்கட்டும் என இவன் விலகிக் கொண்டதும் ஒரு காரணம்.
கருப்பையா இவர்கள் நகை கடையில் ஒரு ஊழியர், தாத்தாவின் நன்மதிப்பை பெற்றவர். இரண்டு வருடத்திற்கு முன் அவர் மகள் கல்யாணத்திற்கு பத்து பவுன் நகையை மனமுவந்து பரிசளித்தவர்.

அந்தக் கல்யாணம் தான் நடக்காமல் நின்று இவன் திடீர் மாப்பிள்ளை ஆனதும் முன் கதை.
நனியிதழுக்கு அப்போது இருபத்தியோர் வயது, பி.காம் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தவளை படிப்பை நிறுத்தி, அவள் அக்கா சம்மந்த வழியில் ஒரு மாப்பிள்ளைக்கு உடனே கல்யாணம் ஆக வேண்டும் இல்லையென்றால் பெரிய ஆபத்து நேரும் என 'யாரோ' சொல்லப் போக, இவள் பலிகடா ஆக்கப்பட்டாள். மூத்த பெண்ணின் புகுந்த வீட்டினரை நம்பி கருப்பையா இளைய மகளைக் காவு குடுக்க தயாராகியிருக்க, மாப்பிள்ளையென அமர்ந்தவன் மணமேடை ஏறும் முன் மயங்கி விழுந்ததோடு அடுத்து எழுந்திருக்கவேயில்லை, மூளைக்கு செல்லும் ரத்த குழாய் அடைப்பாம், திருமணம் செய்து வைத்தால் அந்தப் பலன் அவன் ஆயுள் பலமாகும் என அதே 'யாரோ' கூறியிருக்க அதை நம்பி ஏற்பாடு செய்து விட்டனராம் மாப்பிள்ளை வீட்டினர்.

எளிதாக அவர்கள் மன்னிப்போடு விலகிக் கொள்ள, ஒரு உயிரைப் பறிகொடுத்து நிற்பவர்களிடம் என்ன சண்டையிட முடியும் எனக் கலங்கி நின்று விட்டார் கருப்பையா.
பவித்ரம் தான் சூழ்நிலையைக் கையிலெடுத்தார், அப்போது ஊருக்கு வந்திருந்த நிலவனை மண்டபம் வரவைத்து திருமணம் முடித்தும் வைத்துவிட்டார். யுதிஷ்டிரனுக்கும் அப்போது திருமணம் முடிந்திருக்கவில்லை, ஆனால் கருப்பையாவின் மகள் என்பதற்காகவே அவன் ஏற்றுக் கொள்ள மாட்டானென முடிவு செய்து அவனை யோசனைக்கே கொண்டு வராமல் இவனை நேராக வரவைத்து, "எனக்காகடா நிலவா." என அவன் இரு கையையும் பிடித்தவரிடம் உதற மனமின்றி மணமேடை ஏறினான் யாழ்நிலவன்.
மூன்று முடிச்சிட்டு தாலி கட்டிய நிமிடம், பக்கம் அமர்ந்திருந்த அந்தப் பெயர் கூடத் தெரியாத பெண்ணைப் பார்த்து "இனி இவளோடு தான் வாழ்க்கை." எனத் திடமான முடிவும் எடுத்து விட்டான்.

நனியிதழ், முதலாமவனையும் மாப்பிள்ளை இவன் என முகம் கூடக் காட்டாமல் தான் மேடை ஏற்றபட்டாள், முகூர்த்த புடவை மாற்றி வரும் முன் ஏதேதோ நடந்திருக்க, மாப்பிள்ளையும் மாறியிருக்க முடிவில் தனக்கு தாலி கட்டியவனை தான் தனது வருங்காலமாகக் கண்ணால் பார்த்து மனதில் பதிய வைத்தாள்.

இருவருக்கும் ஐந்து வருட வயது இடைவெளி இருந்தது, அவன் வீட்டில் பெரிய சண்டையே வெடித்தது. அவனுக்குக் கல்லூரி செல்ல வேண்டி இருக்க அவன் கிளம்பி விட்டான், அவள் அவளின் வீட்டில் தான் இருந்தாள். ஒரு வாரம் சென்றதும் தாத்தா பொறுமை இழந்து அவளை அழைத்துக் கொண்டு சென்னை வந்து அவன் வீட்டில் விட, "அவ அங்க படிச்சுட்டு‌ இருந்தா தாத்தா அத மொத முடிக்கட்டும்." என்று திருப்பி அனுப்பி விட்டான். அதில் அவளுக்கு அவ்வளவு சந்தோஷம். அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கிளம்பி விட்டாள்.

பி.காம் படிப்பை முடித்தவுடன், இங்கு அவன் வேலையில் இருக்கும் கல்லூரியிலேயே எம்.காம் சேர்த்து விட்டான். வீட்டினருக்காகவே அவளை வெளியே தங்க வைத்ததும். இப்போது அதே வீட்டினராலேயே அவளை இங்கு அவனோடு வரவழைத்துக் கொண்டதும். இருவருக்கும் அவர்கள் இருவருக்குள் தான் வாழ்க்கை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதை மற்றவர் அறியாமல் வைத்திருந்தனர், அவன் அவனின் வீட்டினருக்காகவும் அவள் அவளவனுக்காகவும்.

"நா வேணா ஹாஸ்டலே போயிடவா, நீங்க அவங்களாம் வரவும் பேசிட்டு மறுபடியும் என்ன கூப்பிட்டுக்கோங்க." என்றாள் வெகுநேரமாக அமைதியாகவே இருக்கிறானே என்ற கலக்கத்தில்.

"ஏன் இது உன் லைஃப்பும் தான? எங்கூட சேந்து நீயும் பேச வேணாமா?" என்றான் கேள்வியாக,

"சார் ப்ளீஸ் நீங்க என்ன‌ தப்பாவே ஜட்ஜ் பண்றீங்க எப்பவும்." என்றாள் பாவமாக,

"சாரா? காலேஜ்ல மட்டுந்தான் உனக்கு நா சார், இங்க இல்ல. காலேஜ்ல வாய்க்கு வந்த பேரெல்லாம் வச்சு கூப்பிடுறது, இங்க சாராமா? ஆள்‌ முன்ன ஒருமாதிரி ஆள் இல்லனா ஒருமாதிரியுமா நடிக்கிற நீ?" என்றதும், கண்ணை உருட்டி முழித்தாள்.

அப்போது உடை விஷயத்திலும் இதையே தான் சொன்னானென நியாபகம் வர, "நா எப்பவும் ஒரே மாதிரி தான் சார் இருப்பேன், பேசுவேன்." என்றாள் முகத்தைச் சுருக்கி கொண்டு, அவன் சோஃபாவில் அமர்ந்திருக்க, அவள் சாப்பாட்டு மேசையின் அருகில் நின்றிருந்தாள்.

"இங்க வா அம்மு." எனக் கையசைத்து அழைத்தான். அவள் வரவும், "இங்க நா உனக்குச் சார் இல்ல அம்மு." என்றான் நிதானமாக, அவள் உடல்மொழி அவனுக்கு அவர்கள் கல்லூரியில் இருப்பது போன்றதை தான் நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. அவனும் அவளை, விரட்டிக் கொண்டே‌ இருப்பது போல் தோன்ற நிதானத்தை கையிலெடுத்தான்.

"பின்ன எப்படி கூப்பிடுறது?" எனக் கேட்டுக் கொண்டே அருகில் வந்து நின்றாள்,

"சிட்!" என அருகே தட்டியவன், "மூன் ன்னு கூடக் கூப்பிடேன்." என்கவும் அப்பட்டமாகத் திருட்டு முழி முழித்தவள்,

"எப்படி? எப்படி தெரியும்?" என அதிகமாவே பயந்தாள்,

"கண்டிப்பா தெரியணுமா?"

"ஸ்பை வச்சுருக்கீங்களா?" என்றாள் எச்சிலை கூட்டி விழுங்கி,

அவள் தலையில் ஓங்கி குட்டியவன், "வச்சுருக்கது தவளை வாய், இதுக்கு தனியா ஸ்பை வேற வைக்கிறாங்க." என்றுவிட்டு எட்டி டீபாயிலிருந்த அவன் ஃபோனை எடுத்து அவர்கள் வகுப்பின் வாட்ஸப் க்ரூப்பை ஓபன் செய்து ஒரு வீடியோ கிளிப்பை ஆன் செய்து காட்ட, இரண்டு மாதங்களுக்கு முன் அவர்கள் டூர் சென்றபோது எடுத்த வீடியோ அதில் ஓடிக் கொண்டிருந்தது.

"அச்சோ, அச்சோ, அச்சச்சோ!" என்ற பாடலுக்கு இவளும் இவள் தோழிகளும் போட்ட ஆட்டமும், அவர்கள் பேச்சும் பதிவாகி இருந்தது.

"இப்ப மட்டும் அந்த மூனு இங்க இருந்துருக்கணும் இருக்க மூடுக்கு இழுத்து வச்சு ஒரு உம்மா குடுத்துருப்பேன்." என இவள் தாராளமாக பேச,

"அவர் மேல ஓவர் லவ்ஸ் தாண்டி உனக்கு. பேசாம ப்ரபோஸ் பண்ணி கமிட்டாகிடு." என அபினவி சொல்வதும்,

"சிரிக்க காசு கேட்குற மனுஷன்ட்ட அப்படி என்னடி பிடிச்சது உனக்கு?" என மற்றொரு தோழி செண்பகவள்ளி கேட்பதுமாக வர, அதற்கு மேல் பார்க்கக் கேட்க முடியாமல் பட்டென்று அவனிடமிருந்து வாங்கி கைபேசியை அணைத்திருந்தாள்.

"நா அல்ரெடி நிறைய தடவ பாத்துட்டேன். தைரியமா க்ரூப்ல அனுப்பியிருக்கீங்க?" என முறைத்தான்.

தற்போது கல்லூரியில் இதெல்லாம் சகஜம் தான், கலாய்ப்பதாகப் பேர் பண்ணிக் கொண்டு ஒருவரை ஒருவர் அத்துமீறி வம்பிழுத்து கொள்வது இப்போது நாகரீகமாகியிருந்தது. அதுவும் வாத்தியார்களை கலாய்ப்பது தான் கெத்தென்ற ட்ரெண்டுமாயிருக்க, வயதுபிள்ளைகளை கட்டுபடுத்துவது பெரிய போராட்டமாகத் தான் இருந்தது.

"நா இல்ல அபி தான்." என்றாள், வீடியோவைப் பகிர்ந்தது அபினவி தான் என்பதால். ஆனால் பத்து பதினைந்தோடு இதும் வந்திருக்க, தெரியாமல் அனுப்பி இருந்தாள். அவன் கண்ணில் இதுமட்டுமா தெரிந்துவிட போகிறது, அவன் எதையும் பார்க்கவும் மாட்டானென அவர்களே முடிவெடுத்து கண்டுக்காமலும் விட்டுவிட்டனர். இவன் எதையும் விட்டு வைப்பதில்லையென இன்று தானே இவளுக்கே தெரிகிறது.

"அவ தான். மொத அவ‌ ஃப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணு நீ உருப்பட்டுருவ. க்ளாஸ் மொத்தமு தெரியும்ல நா உன் சைட்னு." என்றான் குறுகுறு பார்வையுடன். அவளுக்குப் பயமாகவும் இருந்தது, அவன் நிதானமான பேச்சில் சிரிப்பும் வரும்போல் இருக்க கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
 

priya pandees

Moderator

அவள் கையிலிருந்த தன் ஃபோனை பறித்து மறுபடியும் அவன் ஓடவிட, "வேணாம் வேணாம் ப்ளீஸ்." என அதைப் பறிக்க வந்தவள் அவன்மீதே விழ, இடுப்போடு கட்டிக்கொண்டான்,
“அவரயே மொத்தமா பிடிக்கும்டி எனக்கு. அவர மட்டுந்தான் பிடிக்கும், ஹீ இஸ் மை மேன் மை மூன்." எனப் பாட்டு சத்தத்தில், பிள்ளைகள் சத்தத்தோடு இவள் உல்லாச குரல் ஆர்பரித்தது அதில்.

"நா இல்ல நா இல்ல." என வெக்கம், கூச்சம், பயம், பதட்டம் என அனைத்தும் போட்டி போட அவன் கைக்குள் துள்ளினாள்,

"ம்ச் ஆடாத அம்மு தப்பு தப்பா தோணும் பின்ன, உனக்கு என்னைப் பிடிக்கும்னு தெரியும், ஆனாலும் நா என்ன நினப்பேன்னு வெயிட் பண்ணுன இல்லையா அத எக்ஸ்ப்ளைன் பண்ணணும் நான். அவங்களாம் வந்து பஞ்சாயத்த ஸ்டார்ட் பண்றதுக்குள்ள நாம பேசித் தெளிவாகிடலாம்." என அவளைவிட, வேகமாக எழுந்து நேராக அமர்ந்து கொண்டாள்.

"நா சும்மா ஜாலியா." எனத் திக்கி திணறினாள்,

"என்னைத் தானே சொன்ன அது ப்ராப்ளம் இல்ல, பட் இந்தப் பேச்சும் சரியில்ல. நா உன் ஹஸ்பண்ட் சோ நீ இப்டி சொன்ன, ஆனா அவங்கள பொறுத்தவர நா உன் ஸ்டாஃப். ஒரு ஸ்டாஃப்ப நீ அப்டி பேசுறது ரொம்ப ஷேம்மான்ன விஷயம். நீ மட்டுமில்ல உன் பிரண்ட்ஸும் இப்டி ஸ்டாஃப்ஸ்கு மார்க் போடுறத ஜாலிக்காக பண்றீங்கன்னு தெரியும். அது உங்க வயசுன்னு நாங்க கண்டும்‌ காணாம போயிட்ருக்கோம்" என்றான்.

"மூன் ப்ரஃபஸ்ஸர் மோடுக்கு போயிட்டாரே." எனப் பேந்த, பேந்த விழித்தாள்.

"ஏன் மேரேஜ் ஆகிருச்சுன்னு யாருக்கும் சொல்லல நீ?"

"நீங்கச் சொல்லலன்னு தான் உங்களுக்கு இஷ்டமில்லன்னு நானும் சொல்லல."

"அதுக்காக உன் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்ட்ட கூடச் சொல்லல நீ. அவ்வளவு தானா நம்பிக்கை?"

"இல்ல சொல்லிட்டா எப்டினாலும் கலாய்க்க, கிண்டல் பண்ணண்ணு காமிச்சு குடுத்திடுவாங்க."

"ரைட் தான் இப்போதைக்கு உன் சைட்டா தான் நா ரிஜிஸ்டர் ஆகிருக்கேன், அவ்ளோ சேட்டை." என்றான் மீண்டும் முறைத்து பார்த்து.

"நம்மள பத்தி பேசுவோம்னு சொன்னீங்களே?"

அவள் பேச்சைத் திசை திருப்பும் விதத்தில் சிரிப்பும் வர, "தாத்தா கொஞ்சம் எழுந்துக்கவும் உன்ன கூப்பிட்டுக்கலாம், அதுக்குள்ள உன் படிப்பு முடிஞ்சுடட்டும்னு நினைச்சுருந்தேன். வீட்லயும் உன் மாமனார் மாமியார் கன்வின்ஸாகிடுவாங்கன்னு நினைச்சேன். இப்ப எதுமே நடக்கல."

"அப்பா போய்ப் பேசிட்டாங்க, நாக்கொஞ்சம் பொறுமையா இருங்கப்பான்னு சொல்லிருந்தேன். அவங்களுக்கு பயம் அதான் என்ட்டையும் சொல்லாம போய்ப் பேசிட்டாங்க. உங்களுக்குப் பொண்ணு பார்க்கிறதா வேற அப்பாட்ட யாரோ சொல்லிருக்காங்க, அது தான் அவங்கள அங்க பேச வச்சு, இங்கையும் உங்க முன்ன வந்து நிக்க வச்சுருச்சு."

"அதெப்டி ஊரு முன்ன தானே உன் கழுத்துல தாலி கட்டினேன்? எனக்கு எப்டி வேற பொண்ணு பார்க்க முடியும்?" அவனுக்கு இந்தச் செய்தியும் புதிது. கடந்த வருடத்தில் தான் யுதிஷ்டிரனுக்கு திருமணம் முடித்திருந்தனர். அடுத்த மாதத்திலேயே படியில் தவறி விழுந்ததால் தாத்தா முடங்கி விட்டார். அவருக்குத் தெரியாமல் இவர்கள் எல்லோரும் அவரவர் இஷ்டத்திற்கு அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றனர் என நினைத்துக் கொண்டான்.

"நீங்க என்னைப் பிடிக்காம தான் கட்டிகிட்டீங்களாம். அதான் இன்னமு உங்க வீட்டுக்குக் கூப்பிட்டு கூடப் போலயாம்." என்றாள் பாவமா.

"போன வாரம் தாத்தா பார்க்க ஊருக்குப் போனப்ப கூட உன்ன எப்ப கூப்பிட்டுக்க போறேன்னு தான் கேட்டார் தெரியுமா?" என்றான் அவன் அவள் சொன்னதை விடுத்து.

"நானும் பார்க்க வரணும், ஆனா கண்டிப்பா விடமாட்டாங்க நீங்கக் கூட்டிட்டு போ மாட்டீங்கன்னு நா அப்பாட்ட தான் தாத்தா பத்தி கேட்டுப்பேன்." என்றாள் மறுபடியும்.

"உனக்கு மெச்சுரிட்டியே கிடையாதுன்னு நினைப்பேன் அம்மு அதான் கூட்டிட்டு போகல. என் வாழ்க்கைய நா எப்ப வேணா ஸ்டார்ட் பண்ணுவேன் அவங்க என்ன பெர்மிஷன் தர்றது? பட் உன் மெச்சூரிட்டியும் ஒரு ரீசன் இன்னும் ரெண்டு வருஷம் படிக்கட்டும்னு இங்க காலேஜ் சேர சொன்னதுக்கு." என அவளைப் பார்க்க,

"தெரியும்." என்றாள் குனிந்து கொண்டு.

"ஓகே லெட்ஸ் கோ வித்த ஃப்ளோ. இனி சேர்ந்து லைஃப் லீட் பண்ணலாம். ஒருத்தர ஒருத்தர் அன்டர்ஸ்டாண்ட் பண்ணலாம்." என்றதும், தலையாட்டிக் கொண்டாள்.

அடுத்தடுத்து அவனுக்கு ஃபோன் வந்து கொண்டிருந்தது அவன் வீட்டினரிடமிருந்து, இவன் ஏற்காமல் அவர்களைப் பதட்டத்தில் வைத்திருந்தான். அவளுக்கும் அவள் தோழிகளிடமிருந்து நிறைய தவறிய அழைப்புகள் இருக்க, எடுத்துச் சத்தம் இல்லாமல் மெஸேஜ் செய்யத் துவங்கினாள்.

அவன் வரும் வீட்டினரை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் இருக்க, "என் ஃப்ரெண்ட்ஸ்ட்ட உண்மைய சொல்லட்டுமா? ஃபோன் பேசிட்டு வரட்டுமா?" என்றாள் திடீரென்று.

"ம்ம் ஓகே. சீக்கிரம் பேசி முடிச்சிடு. நானும் தாத்தாக்கு பேச முடியுமான்னு பார்க்குறேன்." என்றதும், குதூகலமாக அவர்கள் அறைக்குச் சென்றுவிட்டாள். செல்பவளை புன்னகையோடு பார்த்திருந்தான் யாழ்நிலவன்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 3

"உன்ன கைல கிடைச்ச கொத்து ப்ரோட்டா தான்டி, வடபழனி கோவில் வந்து வாசல்லையே பக்கி மாறிக் காத்து நின்னு, நட சாத்துற நேரத்துல உள்ள போய்க் கும்பிட்ருக்கேன் எரும! பிறந்த நாளும் அதுவுமா சாமிய நிம்மதியா கும்பிட விடல நீயி‌, உன் ஃபோன் எங்கடி? இத்தன ஃபோன் பண்ணிருக்கோம் சாவகாசமா வந்து சாரிடின்னு மெஸேஜ் அனுப்புற" எனப் பொறுமை பறக்கக் கத்தினாள் அபினவி.

"டி அபி கத்தாதடி அங்க பாரு இவ்வளவு நேரமு உன்ன‌ சைட்டடிச்சுட்ருந்தவன் தெறிச்சு ஓடிட்டான். அவசரப்பட்டு உன் நிஜ ரூபத்த பப்ளிக்ல காட்டிட்டடி" என அவளின் பக்கத்திலிருந்த செண்பகவள்ளியின் குரலும் கேட்க, இருவரும் மாலில் அமர்ந்திருக்கிறார்கள் என புரிந்து கொண்டாள். அவர்களோடு செலவு செய்யும் அந்த நேரத்தைத் தேடி ஏங்கினாள் நனியிதழ். மூவரும் சேர்ந்துவிட்டால் யாரை பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரண காரியமின்றி சிரித்து சந்தோஷமாக‌ இருப்பார்கள்.

"போனா போகட்டும்டி இதுக்கே பயந்தா, நாளைக்கு லவ்வுன்னு கன்பார்ம் ஆனப்றம் எவ்ளோ பார்க்கணும்? இவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான் நாம வேற சிக்ஸ் பேக் எவனையாது பார்த்துக்கலாம். இப்ப இவள என்னன்னு கேட்போம்." என அபி பதில் கொடுப்பதை கேட்டுச் சிரித்துக் கொண்டாள்.

"ஆமா நீ ஏன்டி‌ வரல, மூணு மணி ஷோக்குனாலும் வருவியா‌ இல்லையா? பசங்கலாம் வந்துட்ருக்காங்க" என இப்போது செண்பகவள்ளி இவளிடம் கேட்க,

"நா இப்ப எங்க இருக்கேன்னு சொல்லுங்க" என்றாள் சிரிப்போடு நனியிதழ்.

"டாங்கி அத தான நாங்க அப்பபுடிச்சு கேட்டுட்ருக்கோம் திரும்ப எங்ககிட்டயே கேட்குற. லூசாயிட்டாளாடி இவ?" என அபி கத்த,

"கெஸ் பண்ணுடி, என் புகுந்த வீட்டுலன்னு உனக்கு க்ளூ கூடத் தரேன்" என்றதும்,

"ஏன் நிலவன் சார் வீட்லன்னு கூடச் சொல்லிக்கோயேன், இப்ப எனக்கு உன் கூட விளையாட நேரமில்ல நீ எங்க இருக்க ஃபோரம் மால் ரீச்‌சாகிட்டியா‌ இல்லையா?" அவளுக்கு அவள் பிரச்சினை தான் முக்கியம் எனக் கத்தினாள்.

"நீ நம்பலனாலும் அங்க தான் அவர்‌ பெட்ரூம்ல தான் இருக்கேன்." நனியிதழ் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்ல,

"ஹே செண்பா இவளுக்கு நல்லா முத்திடுச்சுடி, பேசாம நாமளே இவ அவர லவ்வு பண்ணி பைத்தியமாகிட்ருக்கான்னு நிலவன் சார்ட்ட சொல்லிருவோமா?" அபி பக்கத்திலிருந்தவளிடம் சந்தேகம் கேட்க, சப்பென்றானது நனியிதழுக்கு.

"அவர் முறைச்சு இந்தா பிடி சாபம்னு நமக்குச் சாபம் மீன்ஸ் டீசி குடுத்துட்டா இந்த ஒரு வருஷத்த வேற எந்தக் காலேஜ்ல சேர்ந்து படிக்கிறது?" செண்பகவள்ளி அதற்கும் அசால்ட்டாக எதையோ வாயில் மென்றுகொண்டு பதில் கூறுவது கேட்க,

"மென்டல்ஸ் நா நிஜமா தான் சொல்றேன், இரு வீடியோ கால் வரேன்" என நனியிதழ் கடுப்பில் அவர்களுக்கு வீடியோ அழைப்பு விடுத்தாள்.

"நிஜமா நீ வரலையா அப்போ? என் பிறந்த நாள் ட்ரீட்டே உனக்கில்ல போடி, டி செண்பா நாம நிறையா ஃபோட்டோஸ் எடுக்குறோம் இன்ஸ்டால வச்சு‌ இவள வெறுப்பேத்துறோம்" என அங்கு அவள் காட்டும் அறையைக் கூடப் பார்க்காமல் அவள் வரவேயில்லை என்ற‌ கடுப்பில் கத்திக்கொண்டிருந்தாள் அபினவி.

"ஆமா ஆமா வைக்குறோம்!" எனச் சில்லி சிக்கன் காலைக் கையில் பிடித்துக் காண்பித்து அப்போதே ஒரு செல்ஃபியை கிளுக்கினாள் செண்பகவள்ளி.

"நா உண்மைய தான் சொல்றேன் என் பேச்ச கொஞ்சமாது காதுல வாங்குங்க‌ டாக்கீஸ், இங்க பாரு இது ஹாஸ்டல் ரூம் மாறியா இருக்கு உனக்கு? நா ஹாஸ்டல் வெக்கேட்‌ பண்ணி மை மூன் வீட்டுக்கு வந்துட்டேன் இது அவர் ரூம்"

"இவ என்னடி இன்னுமு லூசு‌ மாதிரி சொன்னதையே சொல்லிட்ருக்கா, அவர் ரூம நாம‌ என்ன தினமும் ஃபேஸ்புக்லயும் இன்ஸ்டாலயுமா பார்த்துட்ருக்கோம் இவ சொன்னதும் நம்புறதுக்கு" என அபி செண்பாவை இடிக்க,

"ம்ச் ப்ரீயட்டாடி உனக்கு? அதான் வரலியா?" என்றாள் செண்பாவும் நனியிதழிடம்.

"நம்புறாளுங்களான்னு பாரு!" எனத் திட்டிவிட்டு சுற்றி பார்த்தாள், அங்கு அவனின் ஒரே ஒரு ஃபோட்டோ கட்டில் பக்கமிருந்த மேசையில் இருக்க, அதைக் காண்பித்தாள்,

"அடிப்பாவி இத எப்ப‌ சுட்ட? ஆமா‌ இது யாரு‌ வீடு? அங்க தைரியமா சார் ஃபோட்டோலாம்‌ தூக்கிட்டு போய் உக்காந்து படம் காட்டிட்ருக்க" என்றனர் அப்போதும்.

"அறிவுகெட்ட முண்டங்களா, நா இவ்ளோ காட்றேன் நம்ப மாட்டேன்றீங்க, இருங்கடி அவரையே காட்றேன்" எனக் கடுப்பில் எழுந்து வெளியே வந்து, "அம்மு இங்க பாருங்க!" என்றதும் போனை பேசிக் கொண்டிருந்தவன் அவள் அழைப்பில் சட்டென்று திரும்பிப்பார்த்தான்.

எதிரிலிருந்த இருவரும் சிலையாகி இருக்க, "இதே போஸ்ல உக்காந்துருங்கடி, நா எல்லாம் சொல்லத் தான் கால் பண்ணேன், இவ்வளோ நேரம் என்ன ஓட்னீங்கல்ல, நாளகழிச்சு வர‌ நா ஏன் இங்க இருக்கேன் எதுக்கு எப்படின்னு தலைய பிச்சுக்கோங்க. திரும்ப எனக்குக் கால் பண்ண கூடாது சொல்லிட்டேன்" என வைத்துவிட்டு இருவர் எண்ணையும் ப்ளாக்கில் வேறு போட்டுவிட்டாள்.

"சொன்னா நம்ப மாட்டாளுங்களாம்." என வெளிப்படையாகவும் திட்டிவிட்டு திரும்ப,

"அம்மு இங்க வா!" என்றான் அவன்.

'எதுக்கு வீடியோ கால் பண்ண எதுக்கு என்ன அவங்களுக்கு காட்டினன்னு திட்டப் போறாரோ? மூஞ்ச பாவமா வச்சுக்கடி இதழு' என முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அவன் முன் சென்று நிற்க,

"ஓவரா நடிக்காதடி, இந்த மூஞ்சு காலேஜ்ல எவ்ளோ அராத்துன்னு நேரா பார்த்துருக்கேன், எதுக்கு வீடியோ கால் போட்ட‌ நீ?" என அதட்ட,

"நம்ப மாட்டேனுட்டாங்க"

"நம்பலனா போறாங்கன்னு விடணும். இதுல என்னையும் சேத்து காமிக்குற நீ? உங்க குறவன் குறத்தி வேலையெல்லாம் உங்களோட நிறுத்திக்கணும் அதுல என்னையும் கூட்டு சேர்க்க கூடாது புரியுதா?" என்க,

'எவ்வளவு டீசன்ட்டா கலாய்க்குறாருப்பா இந்த மூன், அவங்களமாறி என்ன அவங்க கூடவே ஆடி வீடியோ போடுவோம் மூன் நாங்க. உங்கள சேர்க்காம தானே செய்யணும் செஞ்சுடுவோம்.' என நினைத்துக் கொண்டு,
"புரியுதுங்க ப்ரஃபஸ்ஸர்." என்றாள் பவ்யமாக.

"கொஞ்ச முன்ன எப்டி கூப்ட்ட?"

"அது பாசமா கூப்பிடுறது, இது மரியாதையா கூப்பிடுறது" என்றாள் உடனேயே, அவ்வாறெனில் அறிந்தே அழைத்திருக்கிறாள் என்று தானே அர்த்தம்!

"வீட்ல உன் பாசம்‌ மட்டும் எனக்குப் போதும் அம்மு." என எழுந்து வந்தவன், "நாளைக்கு காலைல உன் மாமியார் வீட்டு கூட்டம் மொத்தமு வந்து நிற்கும். காலைச் சாப்பாட்டுக்கு தேவையானத வாங்கிட்டு வருவோம் வா" என சாதரணமாக அழைத்து அவளை கடந்து சென்றான்.

"நானுமா?"

"உன்னதான கூப்புட்டேன்?வீட்டுக்குள்ள சும்மா தான இருக்க போற, அப்டியே வெளில போயிட்டு வருவோம் வா"

"எப்படி இப்படி சடர்னா சேஞ்ச்சானீங்க? ஈசியா என்கூட ஜெல்லாகுறீங்க? காலேஜ்ல இதுவரை என்னைத் திரும்பிக் கூடப் பார்த்ததில்ல, ஒரு ஃபோன் பண்ணதில்ல?" அவளால் ஆச்சரியபடாமல் இருக்க முடியவில்லை, அதனால் கேட்டே விட்டாள்.

"எனக்கும் சேர்த்து தான் என்னை நீ பார்ப்பியே" என்றவன், ஒரு கையில் கம்பு பையைச் சுருட்டிக் கொண்டு, வாலட், வண்டி சாவியென எடுத்துக் கொண்டு கிளம்ப, அவள் அயர்ந்து அவனையும் அவன் செய்கைகளையும் பார்த்து நிற்பது கண்டு, "வரலையா நீ?" எனக் கேட்டான்.

"வரேன் வரேன்!" என வந்தவள், சட்டென்று நின்று குனிந்து பார்த்து,

"ட்ரஸ் ஓ.கே வா?" எனக் கேட்டாள்.
அவன் புருவம் உயர்த்தி, "உனக்கு ஓகேவா இருந்தா சரி தான்." என்றதும், மீண்டும் அறைக்குள் ஓடிச்சென்று சுடிக்குரிய துப்பாட்டாவை ஒருபக்கமாக விட்டுப் பின் செய்தவள், முடியையும் சரிசெய்து கிளிப்பை சரியாக மாட்டிக்கொண்டு, சன்ஸ்கீரிமை பூசி கொண்டு, குட்டி சைட் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடி வந்து நின்றாள். அவள் வருவதற்குள் வண்டியைக் கேட்டைத் தாண்டி வெளியே தெருவில் எடுத்து நிறுத்தி, அவன் அதில் சாய்ந்து நிற்க, வேகமாக வந்தவள் தோற்றம் அவனை ரசிக்கத் தூண்டியது.

"உள்ள கேட் பூட்டி சாவிய கைல எடுத்துக்கோ" என்றதும், அதையும் செய்து அவள் ஹேண்ட்பேக்கிலேயே அதைப் போட்டுக் கொண்டு வந்து அவன்பின் ஏறினாள். அவன் வீட்டு சாவி அவள் கைப்பையில்! ஏனோ அப்படி ஒன்று நடக்கவே போவதில்லை என்று எண்ணியிருக்க, அது திடீரென எதிர்பாராத விடியலில் இன்று நிறைவேறி இருக்கவும், அவள் மனம் உற்சாகத்தில் மிதந்தது. சந்தோஷத்தில் கண்ணீர் கூட வந்தது, அது பைக் வேகத்தில் எதிர்காற்றில் தெறித்து விழச் சிரித்துக்கொண்டாள்.

முதலில் காய்கறி கடையில் வீட்டிற்கு தேவையானவை எல்லாம் அவன் பார்த்துப் பார்த்து வாங்க அவளும் உதவி செய்தாள். கடந்த ஒரு வருடமாகத் தான் அவள் இங்குச் சென்னையில் விடுதியில் தங்கியிருக்கிறாள். அதற்கு முன் சிவகங்கையில் அவள் வீட்டில் வேலையெல்லாம் அவளது தான். ஆறு வருடம் முன்பே அவள் அம்மா இறைவனடி சேர்ந்திருக்க, அவள் அக்காவிற்கும் மறுவருடத்தில் திருமணம் முடித்துச் சென்றுவிட, பி.காம் படித்த மூன்று வருடமும், படிப்பு, வீட்டு வேலை என்று அவள் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். இங்கு வந்த இந்த ஒரு வருடமாகத் தான் அவள் வயதிற்குறிய வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறாள். அதில் பெரும்பங்கு அபினவி, செண்பகவள்ளியை சேரும். கொஞ்சம் மாடர்ன் உடைகளும் அவர்கள் உபயம் தான், அதுவும் எப்போதாவது தான்.

"சார்!" என அவன் தோளைத் தட்டினாள்,

"நிலவன் சார்!"

"ப்ரஃபஸ்ஸர் சார்!" என்றதும்,

"என்னடி வேணும்?" என்றான் ஒருபக்கம் முகத்தைத் திருப்பி.

"நீங்க இன்னும் நாக்கேட்டதுக்கு பதிலே சொல்லல?" என்றாள் அவன் காதின் அருகில் வந்து.

"பாசமா கேளு சொல்றேன்." என்றான் பட்டென்று.

"பாசமாவா?" எனப் புரியாது விழித்துப் பின் புரியவும், "எப்படி டக்குன்னு சேஞ்ச்சாக முடிஞ்சது உங்களால? இத்தன நாள் எப்படி ரியாக்ட்டே பண்ணாம இருந்தீங்க அ அ அம்மு?" என்றாள்.

"அவ்ளோ கஷ்டமா இருந்தா நீ கூப்பிடவே வேணாம். இறங்கு." என்றவன் வண்டியை நிறுத்த, அது ஒரு சூப்பர் மார்க்கெட்.

"மொத்தத்துல நீங்க எனக்குப் பதில் சொல்ல மாட்டீங்க அதானே?"

"திக்கி திணறாம பாசமா கேளு சொல்றேன்" என்றவன் பையோடு உள்ளே செல்ல, அங்கு வாசலில் நின்ற செக்யூரிட்டி அவன் பையை வாங்கி நாட் போட்டுக் கொடுத்தார்.

ட்ராலியோடு எடுத்துக் கொண்டு உள்ளே நகர்ந்தான் அவன்.
"அம்மு ப்ளீஸ் சொல்லுங்க, என் பாசம் என்னன்னு நம்ம க்ளாஸ்ல வந்து கேளுங்க அவங்க கூட சொல்லுவாங்க" என்றாள் அவனை வால்பிடித்து நடந்தவாறு.

"யாரும் சொல்லி எனக்குத் தெரிய வேணாம் நீ எனக்குக் காட்டு உன் பாசத்தை" என்றவன் பொருட்களை எடுத்துக் கொண்டே, "உனக்குத் தேவையானதையும் எடுத்திடு" என்றான்.

'இப்படி விறைப்பாவே இவரு திரிஞ்சா குபு குபுன்னு வந்து கொட்டிறும் பாசம்.' என நினைத்து அவன் எடுப்பதை வேடிக்கை பார்க்கும் வேலையை மட்டுமே அதன்பிறகு பார்த்துக்கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வந்து இருவரும் குளித்து, அவள் கருப்பையாவிடமும், அவன் அவனுடன் வேலை பார்க்கும் வெங்கட்பிரபுவிடமும் பேசி முடித்து, சமையலில் இறங்கினர். வாங்கி வந்த காய்கறிகளையும், பலசரக்கையும் அதனதன் இடத்தில் அவன் எடுத்து வைப்பதையும் பார்த்திருந்தாள்.

"நானே சாப்பாடு செஞ்சுருவேன்" என்றாள், தோசை கல்லை அடுப்பில் ஏற்றியவனிடம்.

"சட்னிக்கு ரெடி பண்ணு" என முடித்தவன், கடையில் வாங்கி வந்த தோசை மாவை உப்பிட்டு கலந்து கல்லில் ஊற்றத் தொடங்கினான். அடுத்தடுத்த நிமிடங்களில் இருவரும் சாப்பாட்டை முடித்துக் கொள்ள, வெளிகேட், உள் கதவு என அனைத்தையும் பூட்டிவிட்டு விளக்குகளையும் அனைத்துவிட்டு வந்தான் யாழ்நிலவன்.
அவ்வளவு நேரமும் இல்லாத பதட்டம் அப்போது தான் அவளுக்கு எகிறி குதித்து கொண்டு வெளிவந்தது. அவனை அவளுக்கு இரண்டு வருடங்களாகத் தெரியும், பார்க்காத நாளில்லை, அவனைப் பற்றி மேலோட்டமாக அனைத்தையும் அறிந்தும் வைத்திருந்தாள்.

தாத்தாக்காக என அவர் சொன்னதும் எந்த எதிர்பார்ப்புமின்றி அவளைக் கட்டிக்கொண்டது, படிக்க அனுமதித்தது, தன் கல்லூரியிலேயே சேர்த்த பிறகும் அவளுக்கு அவகாசம் கொடுத்துத் தள்ளி நின்றது. மற்ற பெண்களிடம் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசாதவன், அவளிடம் மட்டும் கண்ணால் அதட்டி பேசுவது என அவன் பரிணாமங்கள் அனைத்தும் அவளின் பிடித்தங்கள். நினைவுப் பொக்கிஷங்கள்.
அவன் உரிமையாக அவளை மட்டும் அதட்டுவதை கூட அவனின் பிடித்தமாக எண்ணமாட்டாள். அவன் பொறுப்பில் இங்கிருப்பதால் வந்த கவனம் அவ்வளவு தானெனத் தான் நினைத்துக் கொள்வாள். அவன் அவளுக்காக யோசித்து நிற்க, அதற்காகவே அவன் என்ன முடிவெடுத்தாலும் தனக்கு சம்மதம் என அவளும் இதுவரை தள்ளி நின்றாள்.

இன்று அவள் பிடித்தம் வரை அவன் அறிந்து வைத்திருப்பதும் அவளை அவன் வட்டத்திற்குள் இயல்பாகச் சேர்த்துக் கொண்டதும் அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் தான். பறக்காத குறை தான். அப்படி மனமெங்கும் நிறைந்திருப்பவனுடன் தனித்து முதல் இரவு, அந்த நினைவே அவளுக்குப் பதட்டத்தை கொடுத்தது. அவன் சாதாரணமாக இருக்க, தான் இப்படி நடுங்கி எதையாவது காண்பித்து கொடுத்தால் தவறாக எண்ணிவிடுவானோ எனக் கலக்கமாகவும் இருந்தது.

எல்லா வேலையையும் முடித்தவனும் ஒரு பார்வையை அவள்மீது வைத்துத் தானிருந்தான். அவள் முகம் முழுவதும் இருக்கும் யோசனை, கைகள் நடுங்கும் பதட்டம் அதை அவள்‌ இவன் காணாதவாறு மறைக்க முயல்வது எனப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பு தான் அவனுக்கு.
தன் வீட்டினர் காலையில் வந்ததும் தனி தனி படுக்கை அறையை வைத்துப் புதிதாக எதையும் கிளறி வைக்க அவனுக்கு விருப்பமில்லை, அதனால் அவளைத் தள்ளி வைக்கும் எண்ணமும் அவனிடமில்லை.

சோஃபாவில் அமர்ந்திருந்தவளை "அம்மு!" என்றழைத்தான். எப்போது வேண்டுமானாலும் வரும் அந்த அழைப்பு என எதிர்பார்த்தே இருந்ததால், வேகமாக எழுந்து நின்றாள்.

"தூக்கம் வரலையா உனக்கு?"

"வரல, நாக்கொஞ்ச நேரம் படிக்கவா?"
இரண்டு புருவத்தையும் ஆச்சரியமாக உயர்த்தியவன், உதடு மடித்து சிரிக்க, அவள் முகத்தை மூடிக்கொண்டாள். அவன் சிரிப்பில் அவ்வளவு நக்கல் தொனி இருக்க, முகத்தைச் சுருக்கி குனிந்து கொண்டாள்.

"என்ன பண்ணலாம் அம்மு?" என்றான் அவளிடமே, அவள் சோஃபா அருகில் நிற்க, இவன் அறை வாசலில் சாய்ந்து கைகட்டி நின்றிருந்தான்.

அவன் எதைக் கேட்கிறான் என்றே புரியவில்லை அவளுக்கு, "என்ன கேட்கிறீங்க?"

"உனக்குப் புரிஞ்ச மீனிங் தான் அம்மு. உன்னோட தாட் என்னன்னு சொல்லு?"

'முருகா இவரு எதையோ கேட்கப் போக, நாத்தப்பு தப்பா எதையாது உளறி மானம் கப்பலேறிட கூடாது. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சேவ் மீ.' அவள் வேண்டுதலில் இருக்க,
"நனியிதழ்" எனக் குரல் உயர்த்தி அழைத்தான் அவன்.

"நா எதும் தப்பா நினைக்கல, எதும் யோசிக்கல. நீங்க என்ன சொன்னாலும் அது அப்படியே ஃபாலோ பண்ணிடுவேன்" என்றாள் படபடவென்று, முயன்றும் முடியாமல் வெடித்து சிரித்தான் அவன்.

"சொதப்பிட்டடி அம்மு மாடே. இப்படி‌ கவுத்துட்டியே முருகா!" என நச்சு நச்சென்று தலையிலேயே தட்டிக் கொண்டாள்.

"ம்ச் அம்மு அடிக்காத அப்படி. இதென்ன அடிக்கடி தலையில அடிக்கிற பழக்கம்? இங்க வா நீ"

"இல்ல நா இங்கையே படுத்துக்றேன், இல்லனா அந்த ரூம்ல கூடப் படுத்துக்குறேன்"

"நனியிதழ்" என்றான் அதட்டலாக,

"என்ன செய்யணும் நானு? தெரியாம உளறிட்டேன். எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணேன்னு தப்பா நினைக்கிறீங்களா நீங்க?" எனக் கண்ணே கலங்கிவிட்டது அவளுக்கு.

"அப்பப்போ மட்டி ஆகிடுவியோ நீ?" என அருகில் சென்றவன் அவள் தலையில் கொட்டி இழுத்தணைத்துக் கொண்டு, "முத்தமோ மொத்தமோ நா உன்ன தான் கேட்க முடியும் நீ என்ன தான் கேட்க முடியும். அத்தனைபேர் முன்ன சொல்லி வீடியோ எடுத்துப் போடுவ, என்கிட்ட மட்டுமா சொல்லும்போது அழ‌ வருதா உனக்கு?" என அவள் முகம் நிமிர்த்த,

"அவங்களாம் தப்பா நினச்சாலும் எனக்கு ஒன்னுமில்ல, நீங்க எதும் தப்பா நினைக்கக் கூடாது. நினைக்கல தானே? அது என்னவோ நைட்டு தனியா உங்களோடன்னதும் என்னென்னவோ தோனிட்டு, பதட்டமாகிட்டு, அவ்ளோ தான்" என அவனோடான அணைப்பில் நின்றே அண்ணாந்து அவன் முகம் பார்த்துக் கூறினாள்.

அவள் கன்னத்தைத் தாங்கியிருந்த கைகளால் அவள்‌ முகத்தை அளந்தவன், "படிக்கணுமா உனக்கு?" என்க,

அவன் கண்ணையே பார்த்தவள், "நீங்கப் படிக்கச் சொன்னா படிக்கிறேனே" என்றதும்,

"நா சொல்லித் தரட்டுமா அம்மு?"

"எது ஃபினான்சியல் மேனேஜ்மென்ட்டா சார்?" என்றாள் நெளிந்துகொண்டு, அவன் கை இப்போது அவள் இடுப்பிற்கு வந்திருந்தது.

"அது காலேஜ்ல சொல்லித்தரேன். இங்க எந்தச் சப்ஜெக்ட்னு நா டிசைட் பண்ணிக்றேனே அம்முமா" என்றவன் அவளைக் கைகளில் அள்ளிகொள்ள,

அவன் தூக்கியதில் அதிர்ந்து, சற்று மயக்கம் தெளிந்து, "சார் என்ன சொல்லித் தரபோறீங்க? எதுவா இருந்தாலும் நாளைக்கு அவங்க வந்து பேசிட்டு போனப்றம் சொல்லித் தாங்கச் சார்" என்றாள் வேகமாக.

அதில் அவன் மோன நிலையும் அறுபட, "என்ன மீன் பண்ற அம்மு, அவங்க வந்து என்ன பேசினாலும் நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் தானே?" என்றவன் அவளை அறைக்குள் இறக்கி விட்டுத் தள்ளி நின்று கொண்டு கேட்க, அவளுக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது.

அவளே நெருங்கி வந்து, "இப்படி நின்னே அத கேக்கலாம். ஒரே நாள்ல நீங்கத் தூக்கிட்டு வர்ற அளவுக்குள்ள சேஞ்ச் எனக்கு அக்சப்ட் பண்ணிக்க முடில, எப்படின்னு மண்டை குடைஞ்சுட்டே இருக்கு, இதுல நாளைக்கு வர்றவங்கள வேற சமாளிக்கணுமேன்னு பயத்துல நா எதாது உளறத்தான் செய்வேன், அதெல்லாம் சமாளிச்சு தான் நீங்கச் சிலத நடத்திக்கணும் ப்ரஃபஸ்ஸர் சார்" என வாய் பேச, அவன் வந்த சிரிப்பை மீசைக்கடியில் மறைத்தான்.

"எஸ் உடனே எல்லாம்னா உனக்கும் பயமா தான் இருக்கும், தூங்கலாம் வா" என்றவன் அவளைச் சுற்றிச் சென்று படுத்துவிட்டான்.

'ரொம்ப கோபமோ? ஏன்டி இப்டி சொதப்பி தள்ளுற. அந்த மனுஷனே தாலி கட்டி ரெண்டு வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் உன்ன பொண்டாட்டியாவே பார்த்தாரு, அதுல இல்லாத கேள்வி விளக்கம்லா கொடுத்து நீயே ஆப்படிச்சுக்குட்ட போ' மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டு அவள் அங்குமிங்கும் நடக்க,

"அம்மு லைட் ஆஃப் பண்ணிட்டு வந்து படு. ஃபர்ஸ்ட் அப்படி தான் இருக்கும். பட் பழகிக்கலாம்" என்றான், ஒரே படுக்கையில் படுக்கத் தயங்கி அவள் நடப்பதாக எண்ணிக்கொண்டு.

அவன் இப்போது பேசும் விதத்தைச் சற்று முன் தன்னை கொஞ்சுவது போல் பேசியதோடு சேர்த்து வைத்து யோசித்தவளுக்கு மீண்டும் தன் தலையில் ஓங்கி அடித்துக் கொள்ள தான் தோன்றியது. அமைதியாக விளக்கை அனைத்து விட்டுச் சென்று அவனை விட்டுச் சற்று தள்ளி ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

 

priya pandees

Moderator
இருவருக்கும் தூக்கமில்லை, அவனுக்கு அவள் வாசனை தூங்கவிடாமல் செய்ய, அவளுக்கோ அவன் அருகாமை தூங்க விடாமல் செய்தது. தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள், இவள் புறம் திரும்பிப் படுத்து இவளைத் தான் பார்த்திருந்தான், மாட்டிக்கொண்டதுபோல் சட்டென்று முன்பக்கம் திரும்பியவள், நொடி நிதானித்து பின் மீண்டும் மெதுவாக அவன்புறம் திரும்பிப் படுத்தாள்.
அவன் அப்போதும் அப்படியே பார்த்தே இருந்தான், "நீங்க இதுக்கு முன்ன என்ன சைட்டடிச்சுருக்கீங்களா?" என அவளே ஆரம்பித்தாள்.

"ம்ம் நிறைய தடவ, என் பொண்டாட்டிய பார்க்கக் கூடாதுன்னு யாரு சொல்ல முடியும்? பட் உனக்குத் தெரிஞ்சா நீ இன்னும் ஓவரா ரியாக்ட் பண்ணுவன்னு தான் காமிச்சுக்க மாட்டேன்" எந்தவித அலட்டலும் இல்லாமல் ஒத்துக்கொண்டான்.

"நா பார்த்ததே இல்ல?" என்றாள் சந்தேகமும்‌ ஆர்வமும் கலந்து.

"நீ பார்க்காதப்போ தானே பார்ப்பேன், நீ பார்க்கும்போதும் பார்த்திருக்கேன் உனக்குத் தான் கண்டுபிடிக்கத் தெரில"

"ஆமா எனக்கு நீங்கப் பார்க்றப்பலாம் முறைக்குற மாதிரி தான் தெரியும்" எனப் பாவமாகச் சொல்ல, சிரித்துக் கொண்டான்.

"இப்டி சிரிக்க கூடத் தெரியும்னு இன்னைக்கு தான் தெரியும். காலேஜ்ல ஏன் அவ்ளோ ஸ்டபர்னா இருக்கீங்க ஜாலியா இருக்கலாம்ல?"

"உங்கள்ட்டலாம் சிரிச்சு பேசாமலே ஸ்டாஃப்ஸ் நாங்க எவ்ளோ அரைபடுறோம். இதுல உங்கள கொஞ்சிட்டாலும் போடி" என்றான் முறைப்புடன்.

"அப்பறம் எப்படி நாக்கண்டுபிடிப்பேன், அதான் எனக்குத் தெரியவேயில்ல"

"ரொம்ப சிம்பிளா கண்டுபிடிச்சுருக்கலாம், ஃபுல் ஸ்கேன் உன்ன மட்டுந்தான் பண்ணுவேன், வேற யாரையுமே ட்ரஸ்கெல்லாம் நா வார்ன் பண்ணி பார்த்திருக்க மாட்ட நீ. எனக்கு அது அநாவசியம் நீயும் உன் டிரஸிங்கும் தான் என்ன டிஸ்டர்ப் பண்ணும்" என்றதும் அவளுக்குக் குறுகுறுப்பாகி விட்டது.

"வெக்கபடுறல்ல அம்மு நீ?" எனக் கையை நீட்டி அவள் மூக்கை நிமிண்டினான். கண்ணை மூடிக் கொண்டாள். அவன் கைகள் மறுபடியும் அவள் முகத்தில் கோலமிட்டன, "இதனால தான் உன்ன கூப்பிடுறதபத்தி நா யோசிக்கவே இல்ல அம்மு, படிப்பு முடியட்டும்னு வெயிட் பண்ணேன்" என்றவன் கையை எடுத்து விட்டு மல்லாந்து படுத்துக் கொண்டான்.

கண்ணைத் திறந்தவள், "நா எதும் பேசமாட்டேன்" எனச் சொல்ல, மீண்டும் சிரித்துக் கொண்டான்.

"உன்ன மேரேஜ் பண்ணப்பவே இனி உன்னோட தான்னு டிசைட் பண்ணிட்டேன் அம்மு. பட் கொஞ்சம் டைம் தேவபட்டது அதான் படிப்ப முடின்னு அனுப்பிட்டேன். பட் தூரமா நீ இருந்ததால நம்ம ரெண்டு பேர்ட்டையும் எந்தச் சேஞ்ச்சும் வந்தமாறி தெரில, அதான் உன்ன இங்க ஜாயின் பண்ண சொன்னேன். தினமும் பார்த்தேன், வைஃப்னு ஃபீல் பண்ணேன், ரசிச்சேன், நீ சைட்டடிச்சதையும் சேர்த்து அனுபவிச்சேன். சோ நீ எனக்கு இன்னைக்கு திடீர்னு கிடைக்கல, ஒரு வருஷமா கொஞ்சம் கொஞ்சமா‌ எனக்குள்ள வந்துருக்க, அத உன்ட்ட காட்ட நீ எங்கிட்ட வரட்டும்னு நினைச்சேன், இதோ வந்ததும் காட்றேன்" என்றவன் சொல்லி முடித்த பிறகே அவள் முகம் திரும்பிப் பார்த்தான்.

அவளோ, "இப்ப சொன்னதெல்லாம் ஒருக்கா இப்படி என்னைப் பார்த்தே சொல்லுங்களேன், எனக்கு நீங்கச் சொல்லும்போது உங்க ஃபேஸே சரியா தெரியல, ஒன்ஸ்மோர் ப்ளீஸ்" என்றதும்,

அவள்புறம் திரும்பி அவள் கன்னம் கிள்ளி "இந்த வாய், வாய் தான்டி உன் கிட்ட அதிகம், சேட்டை" என்றவன் அவளின் கீழுதட்டையும் பிடித்திழுக்க,

"அம்மு" என எக்கி அவன் கழுத்தோடு கட்டிக்கொண்டாள். அவளுக்கு அப்படி தான் அந்நொடி செய்யத் தோன்றியது.

தானும் கட்டிக்கொண்டவன், "நானும் அம்முவா?"

"ஆமா நா உங்க அம்மு, நீங்க என் அம்மு" என்றாள் அவன் கழுத்திலிருந்தே, அதில் சிலிர்த்தவன், அவள் கழுத்தில் மீசையால்‌ கிச்சுகிச்சு மூட்ட, அவள் நெளிய அது அவர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்துச் சென்றது.

அவளும் அவனைக் கழுத்தில் கிச்சுகிச்சு செய்ய, அவன் பதிலுக்கு மேலும் கிச்சுகிச்சு மூட்ட, அவள் துள்ள, அவன் அவளைக் கைக்குள் அள்ளிக் கொண்டான். முத்தமிட்டு முத்தமிட்டே தனக்குள் அடக்கிக் கொண்டான்.

"ஒன்னும் நாச்சொல்லித் தர வேணாம் உனக்கு? எல்லாமே தெரியுமில்ல?" என்றவனை,

"ஸ்ஸு நீங்க லேட்டு நா என்ன பண்ணட்டும்" எனப் பதில் கொடுத்தவளை அதன்பிறகு கடந்து போன இரண்டு வருடத்திற்கும் சேர்த்து தான் படுத்திவிட்டான்.

"இந்தத் தாலிய பார்த்ததே இல்லையா உன் பிரெண்ட்ஸ்?" என அதனோடு விளையாடியவாறு கேட்டவனை,

"இதெல்லாமா எடுத்துப் பார்த்துட்டு இருப்பாங்க? நானுமே அவளுங்க கழுத்துல கிடக்குற செயின் டாலர்ஸ பார்த்ததில்லயே?"

"பட் உன் தாலிய நா நிறையதடவ பார்த்துருக்கேன்."

"எப்படி?"

"நீ சேரி கட்டிட்டு வரும்போதெல்லாம், ஃபுல் ஸ்கேன் பண்ணும்போது இது என் கண்ணுல படும். கன்ட்ரோல் பண்ணவே உன்ன முறைச்சு அனுப்பிடுவேன்" எனக் கண்ணடிக்க,

"அவ்வா ஒரு ப்ரஃபஸ்ஸர் பார்க்குற வேலையா இது?"

"என் பொண்டாட்டிய பார்க்கலாம் தப்பில்ல"

"உங்களுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு நினச்சேனே நானும்"

"என்னென்ன தெரியும்னு இப்ப காட்டிடவா அம்மு?" என்றவன் அதிரடியில்,

"நா இனி வாயே திறக்கமாட்டேன் அம்மு ப்ளீஸ்" எனக் கெஞ்சி கொஞ்சி அவனிடமிருந்து அவள் பிரியும்பொழுது விடிந்திருந்தது.

தாமதமாகத் தூங்கியதால், பத்து மணியளவில் அவன் வீட்டினர் வந்து அடித்த காலிங் பெல் சத்தத்தில் தான் இருவரும் எழுந்தனர். அங்கு அவன் மொத்த குடும்பமும் கருப்பையாவையும் பேசாத பேச்சையெல்லாம் பேசிக் கையோடு இழுத்து வந்திருந்தனர். அவரும் பெண்ணின் வாழ்க்கையை நினைத்துக் கலக்கத்தோடு வந்து நின்றிருந்தார்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 4

"ஏதோ சத்தம் கேக்குதுல்ல அம்மு!"
என அவன் நெஞ்சில் இப்படியும் அப்படியுமாக முகத்தைத் தேய்த்து, மீண்டும் அங்கேயே தலையை வாகாக வைத்துத் தூங்க முயன்றாள் அதிக தூக்கக் கலக்கத்திலிருந்த நனியிதழ்.

அதீத அலுப்பில் கண்ணைத் திறந்தவனும், அவள் முகம் புரட்டலில் சிரித்துக் கொண்டு மொபைலை எடுத்து நேரம் பார்க்க, "மணி பத்துடி அம்மு, உன் மாமியார் வீட்ல வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். கதவ நீயே இப்படி எந்துச்சு‌ போய்த் திறந்தன்னு வை, எந்தப் பேச்சுவார்த்தையும் வேணாம் சண்டையும் இருக்காது சுமூகமா‌ முடிஞ்சடும் எல்லாம்" என ஒரு கையால் அவள் முதுகில் கோலம் போட்டவாறு பேச,

"எனக்கொன்னும் பிரச்சினை இல்ல, நீங்கத் தான் டிசிப்ளின் இருக்கா? மேனர்ஸ் இருக்கா, பொறுப்பிருக்கா கடலைப் பருப்பிருக்கான்னுவீங்க. துப்பாட்டா போடாம வருவியா நீன்ற மாறி அரைகுறை ட்ரஸ்ல வருவியா நீன்னு பாடம் எடுக்க மாட்டேன்னு சொல்லுங்க நா எழுந்து போக ரெடி" என இன்னும் முகத்தைப் புரட்டினாள்.

"இவ்வளவு தூக்கத்துலயும் பதில் பெருசா தான் சொல்லுவியா?சும்மாயிருடி முகத்தைப் பிரட்டாம, அங்க வெளில வந்து நிக்றாங்கன்னு சொல்றேன், ஹாயா படுத்துருக்க நீ? பயமே இல்ல?"

"எப்படியும் பேச்சு வாங்கப் போறேன், அத ஒரு அஞ்சு பத்து நிமிஷம் லேட்டாவே போய் வாங்கிக்கிறேன் அம்மு!" என நன்கு விழித்துப் பார்த்து, எட்டி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, "ஹேப்பி மார்னிங் ப்ரஃபஸ்ஸர்!" எனப் பளிச்சென்று சிரித்தாள்.

தானும் இதழ்விரிய சிரித்து, "குட்மார்னிங்டி அம்முமா" என்றவிட்டு அப்படியே தூக்கி அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

இப்போது அவன் மொபைலும், அவள் மொபைலும் சேர்ந்து அதிர்ந்தது, அவள் எட்டி‌யெடுக்க, "அப்பா!" என்றவள், "ஹலோ" என அழைப்பை ஏற்றாள்.

"உள்ள இருந்துட்டு உன் ஃபோன எடுக்குறவ வந்து கதவ திறக்கமாட்டாளாமா? புள்ளைய நல்லா ட்ரைன் பண்ணிருக்க போல" என அவன் பாட்டியின் குரலில்,
காதை விட்டுத் தள்ளியெடுத்து, "அப்பாவயும் கூட்டிட்டே வந்துருக்காங்க போல அம்மு. நா குளிக்க வேணாமா? குளிச்சா இன்னும் லேட்டாகுமா?" என வேகமாக எழ முயன்று கேட்க,

அவள் தலையைக் கோதி, இருபக்கமும் முடியை ஒதுக்கி‌விட்டவன், "போய்க் குளிச்சுட்டு வா, நானே போய்க் கதவ திறக்குறேன்" என்றதும், தலையசைத்து அவனிலிருந்து இறங்கி குளியலறைக்குள் ஓடி விட்டாள்.

மெலிதாகச் சிரித்தவனும் எழுந்து டீசர்டை மாட்டிக்கொண்டு, கண்ணாடியில் தலையையும் முகத்தையும் சரிசெய்து விட்டு, தங்கள் அறைக் கதவை இழுத்துச் சாற்றி விட்டே வெளி கதவைத் திறக்கச் சென்றான்.
டீசர்ட்டும் லுங்கியுமாக வந்தவனை தான் ஆராய்ச்சியாகப் பார்த்து நின்றனர் அவன் வீட்டினர், "மேல வந்து கொஞ்ச நேரம் உக்காருங்க, டீப்போட்டுத் தாரேன்னு கூப்பிடுறேன் வர மாட்டேங்குறாங்க தம்பி" என அம்சா அக்காவும் அங்குத் தான் நின்றார்.

"பரவால்லக்கா, நாப்பாத்துக்குறேன்" என்றவன், அப்போது தான் தாத்தாவையும் பார்த்தான், மாடிக்கு ஏறும் படியில் அமர்ந்திருந்தார்,

"தாத்தா? நாந்தான் வர‌ வேணாம்னு சொன்னேன்ல எதுக்கு இவ்வளவு ரிஸ்க்கெடுத்து கிளம்பி‌ வந்துருக்கீங்க" என வேகமாக அவரிடம் சென்று நின்றான்.

"கருப்பையாவ அங்கேயே அவ்ளோ பேச்சு, இங்க வந்து என்னெல்லாம் பேசுவாங்களோன்னு தான் கூடவே கிளம்பிட்டேன்டா நிலவா"

"ஏன் நிக்றீங்க, கதவ திறந்துட்டேன்ல உள்ள போங்க" எனப் பெண்களை விரட்டியவன், "எல்லாரும் உள்ள வாங்க" எனப் பொதுவாக வரவேற்றுவிட்டு, "என்ன தாத்தா, நா சமாளிக்க மாட்டேனா இவங்கள" என அவர் கைபிடித்து மெதுவாக எழுப்பி விட்டான், யுதிஷ்டிரனையும் அவன் மனைவியையும் தவிர்த்து மற்ற எல்லோரும் கிளம்பி வந்திருந்தனர்.

அம்சாக்காவும் மாடியேறினார்.
"வந்ததும் மூஞ்ச காட்றான் பாத்தியா? நம்மெல்லாம் இனி வேப்பங்காய் தான் அவனுக்கு, அவ பழக்கவழக்கம் அப்டி. ஈசியா மயக்கிடுவாளுங்க" என்ற பாட்டி, சோஃபாவில் அமர, அவர் அருகில் தாத்தாவை அமர வைத்தான் நிலவன். அப்பாவும் பெரியப்பாவும் அங்கிருந்த சாப்பாட்டு மேசை முன்னிருந்த சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தனர். அம்மாவும், பெரியம்மாவும் நிற்க, கருப்பையாவும் ஒரு ஓரமாக நின்றார்.

அவரைத் திரும்பிப் பார்த்தவன், மீதமிருந்த இரண்டு சேரில் ஒன்றை எடுக்க வர, அம்மாவும் பெரியம்மாவும் அதை வேகமாக எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டனர்.

"ரெடிகுலஸ். டூ மச் ம்மா" எனக் காட்டமாகச் சொன்னவன், வெளியேறிக் கீழிருந்தே, "அம்சாக்கா!" எனக் கொஞ்சம் சத்தமிட்டு அழைத்தான், என்றும் அவன் அப்படி அழைத்ததில்லை என்பதால் அக்கம்பக்கத்து வீட்டினர் கூட எட்டிப் பார்த்தனர், அம்சாக்க அடிபிடித்து ஓடி வந்து, "என்ன தம்பி?" என நிற்க,

"ரெண்டு சேர் தர்றீங்களா? உக்கார வேணும். எல்லாம் வயசானவங்க" எனக் கேட்க,

"இந்தா எடுத்தாறேன்" என அவர் உள்ளே சென்று எடுத்து வர, அவர் இறங்கும் முன் பாதி வழி ஏறி இரண்டு கைகளிலும் ஒன்று ஒன்றாக வாங்கிக் கொண்டான்.

"லவ்வுன்னு வந்துட்டா பெரியவங்க சண்ட பிடிக்றது நியாயம் தான் தம்பி. கிட்டத்தட்ட பொண்ணக் கூட்டிட்டு ஓடி வந்தமாறி தானே வந்துருக்கீங்க, அது ஊருக்குள்ளையும் அவங்களுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும், எல்லாத்தையும் உங்கட்ட தான காட்ட முடியும், அதனால கொஞ்சம் பொறுமையா பேசுங்க" என அவர் இவனுக்கு இலவச அறிவுரை வழங்க, ஏதோ தவறாகப் புரிந்திருக்கிறாரெனத் தெரிந்தது, ஆனாலும் விளக்கம் கொடுக்க நேரமின்றி, தலையசைப்போடு இறங்கி விட்டான்.

இவன் சேரை வாங்க வந்த நேரத்தில் தான், அங்கு அவசர குளியலோடு முதல் முறை மாமியார் வீட்டாட்கள் முன் நிற்பதால் சேலையைக் கட்டிக்கொண்டு, தலையில் துண்டோடு, மலர்ச்சியாக அறையிலிருந்து வெளிவந்தாள் நனியிதழ். அவளை ஆராய்ச்சி பார்வையே பார்த்தனர் பெண்கள், தாத்தாவும் கருப்பையாவும் பாசமாகப் பார்க்க, அவன் அப்பாவும் பெரியப்பாவும் அவள் பக்கமே திரும்பவில்லை.

எல்லோரும் அமர்ந்திருக்க அவள் அப்பா மட்டும் ஓரமாகப் பயந்து நிற்பது அவளுக்குப் பாவமாகத் தான் இருந்தது. அவளால் மட்டும் என்ன செய்துவிட‌ முடியும், பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

"என் பையன் ரூம்ல என்னடி பண்ணுற நீ? முறையா இன்னும் எங்க வீட்டுக்குள்ளயே வரலையே, அதுக்குமுன்ன என் பையன் ரூமுக்குள்ள போகக் கூசல உனக்கு?" என்றார் அமுதா, அவளின் மாமியார்.

"எப்டி இருக்கும், தராதரம் தெரியுற இடத்துல வளர்ந்து வரலையே, அவ அப்பனே கொண்டு விட்டுட்டுல்ல போயிருக்கான், ச்சி ச்சி பேசவே அசிங்கமா இருக்கு" என்றார் பாட்டி,

"இத்தன நாளும் என்னன்னு கமுக்கமா‌ இருந்தாங்களோ? இவ காலேஜ்ல அவன் பின்னயே சுத்தி தான் வீட்டுக்கே கூட்டிட்டு வாரளவுக்குக் கொண்டு வந்துட்டா. நாம தான் அவனா வரட்டும்னு பொறுமையா இருந்து தப்பு பண்ணிட்டோம் அப்பவே ஊராளுங்கள கூப்ட்டு அத்து விட்ருக்கணும்" என்றார் கல்யாணி, அவளின் பெரிய மாமியார்.

"நா ஊர்லயே சொன்னது தான், கல்யாணம் பண்ணி வச்சது நானு. நீங்கப் பேசுறது எல்லாம் என்னயத்தான்னு நினைச்சுட்டு பேசுங்க சொல்லிட்டேன். முடமாகிட்டான் இனி இவன் பேச்சு எடுபடாதுன்னு நினைச்சு தான்‌ திரும்பத் திரும்பப் பேசுறீங்களோ?" எனத் தாத்தா சத்தமிட, யாழ்நிலவன் சேருடன் உள்ளே வந்தான்,
"இதுல உக்காருங்க மாமா" எனக் கருப்பையாவின் அருகில் ஒன்றை வைக்க,

"இல்ல இருக்கட்டும் மாப்ள" என்றார் அவர் அதிக அயர்ச்சியில், எல்லார் பேச்சையும் கேட்கக் கேட்கக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது அவருக்கு.

"ம்ச்‌ உக்காருங்க மாமா, ரொம்ப டயர்டா இருக்கீங்க, எப்டி‌ வந்தீங்க ஊர்லயிருந்து?" என்றான், அவன் வீட்டினர் அவர்களுடன் விமானத்தில் அழைத்து வந்திருக்க வாய்ப்பில்லையென அறிந்ததாலேயே கேட்டான்.

"பஸ்ல தான் மாப்ள, திடீருனு கிளம்புனதால ட்ரைன் டிக்கட் கிடைக்கல" நேற்று தான் இங்கிருந்து சென்றிருந்தார், போய் இறங்கினதுமே, யாழ்நிலவன் அப்பா அழைத்துவிட அங்குச் சென்றார், அங்கு அவர்களிடம் அதிக பேச்சு வாங்கி, "நாங்க காலைல வருவோம் நீயும் அங்க இருக்கணும், ஏர்போர்ட் வந்து நில்லு நாங்க வந்தப்றம் தான் அங்க நீயும் வரணும். எங்களுக்கு முன்ன அங்க போய் எதையும் ஏத்திவிடவும் கூடாது, நீ நின்னு வரவேத்து நாங்க வரதும் ஆவாது. புரியுதா?" என்றே அனுப்பி இருந்தனர், தூங்காமல் நடுசாமத்தில் மீண்டும் பஸ்ஸில் ஏறி, காலையில் விமான நிலையம் வந்து காத்துக்கிடந்து, அவர்கள் காரில் செல்லக் கூடவே ஒரு ஆட்டோவில் வந்திறங்கியிருந்தார். மனதும் உடலும் அதிகத்துக்கும் சோர்ந்திருந்தது.

"கொஞ்ச நேரம் படுத்து எந்திரிங்க மாமா, ரொம்ப சோர்வா‌ இருக்கீங்க" என அவரை அவன் மீண்டும் அழைக்க,

"தூக்கம் வராது மாப்ள" என்றார் அவர்.

"வார்த்தைக்கு வார்த்தை மாப்ளையாம். இப்டி சொல்லித்தான் கைக்குள்ள போட்டுக்கணுமாக்கும். இந்த விவரம்லாம் உன்ட்ட படிக்கத் தான் வரணும் போ" என அங்கலாய்த்தார்‌ பாட்டி.

"நீங்க உக்காருங்க மாமா" என அவரை அமர வைத்துவிட்டு, மனைவி வந்துவிட்டாளா எனப் பார்க்கத் திரும்பியவனுக்கு, அவன் அறை வாசலில் புது மலராக நின்றவளிடமிருந்து கண்ணை அகற்ற முடியவில்லை. ஜிவ்வென்று தான் இருந்தது.

"இது ஓ.கே வா" எனக் குனிந்து தன்னைக் காண்பித்து புருவம் உயர்த்தியவளின் உதடு சிரித்தாலும், கண்களின் பளபளப்பு அவளைக் காண்பித்துக் கொடுத்தது.

அழுகையைக் காட்டப் பிடிக்காமல் நிற்கிறாளெனப் புரிந்தது அவனுக்கு.
"எல்லாரையும் வாங்கன்னு கேட்டியா அம்மு?" என்றான் அவளிடம்.

கண்ணை அகல விரித்தவள், 'எதுக்கு‌ கோர்த்து விடுதாங்க இப்ப?' என முணுமுணுத்துச் சுற்றி எல்லாரையும் பார்த்தாள், 'கேட்டுடுவியா‌ நீ?' என‌ முறைத்தனர் அவளிடம்.

"நானே பாவம்" என வாயசைத்தாள் பாவமாக அவனிடம்.

"கேளுடி" எனத் தானும் கண்ணால் மிரட்டி வாயசைத்தான் அவன். எல்லோரும் முறைத்துக்கொண்டு வேடிக்கைப் பார்த்தனர் இவர்களின் மௌன சம்பாசனையை.

"நிலவா, உன் ட்ராமாலாம் இங்க வேணாம். இவ நம்ம குடும்பத்துக்குச் சரி கிடையாது, அதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணு. நீ குடும்ப தொழில்ல இல்லைனாலும் குடும்ப கவுரவத்துல உனக்கும் பங்கிருக்கு, புரிஞ்சு நடக்க பாரு" என்றார் அவன் பெரியப்பா.

அவனோ அதைப் பெரிதுப் படுத்தாமல், "எல்லாருக்கும் டீப்போடு அம்மு" என்றான் நனியிதழிடம், இது அவளுக்குக் கஷ்டமானதாகயில்லை என்பதால் விறுவிறுவெனச் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

"டேய் நா என்ன சொல்லிட்ருக்கேன், உன் போக்கு ஒன்னும் சரியா படல. ஏன் நாங்க உனக்கு நல்லது செய்ய மாட்டோமா? எங்க மேல என்ன தப்புன்னு மூஞ்ச தூக்கிட்டுருக்க நீ?"

"எனக்கே தெரியாம எனக்குப் பொண்ணு பாக்றீங்களாமே? என் பொண்டாட்டிக்கும் வேற கல்யாணம் பண்ணி வைப்போம்னு என் மாமனாருக்கு வாக்கு குடுத்துருக்கீங்களாம். பொண்டாட்டிக்கு மாப்ள பாக்றவங்க மேல கோவம் வராம என்ன வரணும்ன்றீங்க பெரிப்பா?"

"நாங்க சொல்லாம இவன் எதுக்கு உன்ட்ட வந்து சொல்றான்னு யோசிக்க மாட்டியா? நம்ம குடும்பத்தோட ஒட்டிக்க நினைக்குதுக, அதுக்கு வாய்ப்பு குடுக்க போறியா நீ?" என்றார் பாட்டி‌.

"ம்ச் இப்டி அது இதுன்னு பேசாத பாட்டி. பணமில்லனா மனுஷங்களே இல்லன்னு நினப்பியா நீ?" என அவனும் கத்தினான்.

"இங்க வா நிலவா" என அருகில் அழைத்தார் தாத்தா, அவருக்குப் பேரனின் செயலிலேயே அவன் மனம் புரிந்துவிட்டது.

"சொல்லுங்க தாத்தா" என அவர் முன் வந்தவன் மண்டியிட்டு அமர,

"வாழ ஆரம்பிச்சுட்டியாப்பா?"

"ஆமா தாத்தா" மறுப்பின்றி சட்டென்று ஒத்துக் கொண்டான்.

"எனக்குத் தெரியும்டா நிலவா, நீ அப்டிலா பொறுப்ப விட்டுட மாட்டன்னு. உனக்கு இந்த மேல கீழன்றதெல்லாம் பணத்த வச்சு அளக்கத் தெரியாதுன்னு தெரிஞ்சதால தான் அன்னைக்கு துணிஞ்சு உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வச்சேன். ஆனா ரெண்டு வருஷமா நீ எந்த ஸ்டெப்பும் எடுக்கலன்னதும் உனக்குள்ள வேறெதுவும் விருப்பமிருந்துருக்குமோன்னு தோண ஆரம்பிச்சுட்டுப்பா" என அவன் கன்னம் வருடினார்.

"சரி இப்ப என்ன செய்யலாம். இவன நமக்குச் சம்பந்தின்னு சரிக்கு சமமா உக்கார வச்சுருவோமா? மூத்த பேரன் சம்பந்தி வீட்ல அறிமுகப்படுத்த முடியுமா மொத? குடும்பம் உடைஞ்சு போயிடும்னு யோசிக்க மாட்டீங்களா?" என அனல் கக்க பேசினார் பாட்டி.

"உங்களால தான் எல்லாம், நீங்க இவனுக்குக் குடுத்த தைரியம் தான பொண்ணக் கூட்டிட்டு வந்து நம்ம பையன் வீட்ல விடுதளவுக்கு வந்துருக்கு. இதே அங்க நம்ம வீட்ல இருந்தா இப்டி தைரியம் வந்துருக்குமா?" என்றார் அவன் பெரியப்பா.

அங்கே உள்ளே நின்றவளுக்கு அனைத்தும் கேட்டது, எதிர்பார்த்தே இருந்ததால் அதிகம் வலிக்காதது போல் காட்டிக் கொண்டாள். அவள் போக்கில் டீயைப் போட்டு எடுத்து வந்து நீட்ட, தாத்தா எடுத்துக் கொண்டார், பாட்டி, "தூர போடி மூஞ்சு முன்ன வராத சொல்லிட்டேன்" என்றதும் பதறிவிட்டாள்.

"இங்க குடு" எனத் தானே அவள் கையிலிருந்த தட்டை வாங்கியவன், அனைவருக்கும் கொடுத்தான், வாங்கி கொண்டனரே தவிர குடிக்கவில்லை, அவரவர் காலுக்கடியில் ஆடை படிய காத்திருந்தது அது. அவர்கள் யாரும் குடிக்காததால் கருப்பையாவும் அப்படியே வைத்திருந்தார்.

"இங்க பாரு நிலவா, நாங்க எல்லாம் யோசிச்சு தான் வந்துருக்கோம். கல்யாணம் பண்ணாலும் இன்னும் ரிஜிஸ்டர் பண்ணல. அப்படியே உனக்குக் கில்டா இருந்தா எதாது பாத்து செட்டில் பண்ணிடுவோம். ரெண்டு வருஷம் நீங்கப் பிரிஞ்சுருந்தது, இன்னுமு இந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கே வராததுலாம் அங்க எல்லாருக்கும் தெரியும். அதனால் ஊருக்குள்ள இது ஒரு பிரச்சினையா வராது, அப்படி வந்தாலும் நாங்க பாத்துக்குறோம்."

கடைசிவரியை சொல்லும்போது மட்டும் கருப்பையாவையும் அவர் அருகில் நின்ற நனியிதழையும் பார்த்துக் கொண்டார் அவன் பெரியப்பா.

"என் பொண்டாட்டிக்கு நீங்கச் செட்டில் பண்ணுவீங்களா புரியலையே பெரிப்பா எனக்கு?" என நாடி தடவி யோசித்தான் யாழ்நிலவன்.

"தெளிவா இருக்கறவன ஏன்டாப்பா குழப்பிவிட்டு வேடிக்கைப் பாக்றீங்க? அவன் வாழ்க்கைய அவன் சந்தோஷமா வாழ்ந்துட்டு போறான். ரெண்டு வருஷம் தள்ளி‌யிருந்தப்பவே அவள வேணாம்னு முடிவெடுக்கல அவன். இப்ப வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தப்றமா வேண்டாங்க போறான், யோசிக்க மாட்டீங்களாடா?" என்றார் தாத்தா,

"மாமா நா உங்கள எதுத்து பேசுறேன்னு நினைக்க வேணாம், நீங்க உங்க பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க சரி, என் பையனுக்கும் எனக்குச் சொல்லாம கல்யாணம் பண்ணி வச்சது என்ன நியாயம் மாமா? நா என்ன நாலஞ்சா பெத்து வச்சுருக்கேன், அப்படி நாலஞ்சு பிள்ளைங்க இருந்தா கூட அத்தனை பிள்ளைகளையும் நாந்தான் பெத்துருக்கேன் எனக்குத் தெரியாம நீங்க அதுல ஒருத்தனுக்கு பண்ணிருந்தாலும் நா இப்டி தான் பேசிருப்பேன். இப்ப அப்டி கூட ஆத்தாமைக்கு சொல்றதுக்கில்லாம ஒரே புள்ள தான் எனக்கு, அவனுக்கும் நாப்பாக்காம கல்யாணம் முடிஞ்சு போச்சு, என் மனசு என்ன பாடுபடும்னு யோசிக்க மாட்டீங்களா நீங்க?"

"இன்னொருதடவ கிராண்ட்டா ஊர்மெச்ச உன் மகனுக்குக் கல்யாணம் பண்ணிடுவோம்மா, உன் இஷ்டபடி அதுல என்னெல்லாம் செய்யணுமோ செய்" என்றார் தாத்தா,

"மொத பொண்ண தான் மாத்தணும், சம்மதமா உங்களுக்கு?" என்றார் பாட்டி தாத்தாவிடம் நேராக.

"நீங்களாம் பொண்ணு பொண்ணுன்னு சொல்லிட்ருக்கவ இன்னும் கருப்பையா பொண்ணு இல்ல யாழ்நிலவன் பொண்டாட்டி" என்றார் தாத்தாவும் அழுத்தமாக.

"மாமா திரும்பத் திரும்ப அப்டி சொல்லாதீங்க அவனுக்கு நா நம்ப குடும்பத்துக்கு ஏத்தமாதிரி தான் பொண்ணுப் பாத்துருக்கேன். அவள தான் கட்டி வைக்கப் போறேன்" என்றார் அமுதா.

"தாத்தா எந்துச்சு இன்னும் குளிக்கல நானு, குளிச்சுட்டு வந்துடுறேன். ரொம்ப கசகசன்னு‌‌ இருக்கு" என அறைக்குள் சென்று விட்டான் யாழ்நிலவன். அவனுக்குப் பொடுபொடுவென்று தான் இருந்தது. அதனாலேயே நகர்ந்து விட்டான்.

'என்ன அப்பாவையும் என்னையும் தனியா விட்டுட்டுப் போறாங்க' என அவன் சென்ற திசையையே பார்த்தாள் நனியிதழ்.

அவனோ அறைக்குள் சென்றுவிட்டு மீண்டும் வாசலுக்கு வந்து, "அம்மு எல்லாருக்கும் என் மொபைல சாப்பாடு ஆர்டர் பண்ணிடு, நீ போட்ட டீயே அப்படியப்படி இருக்கு, சாப்பாடு செஞ்சாலும் சாப்பிட மாட்டாங்க, சோ ஆர்டர் பண்ணிடு" என்றுவிட்டு மீண்டும் திரும்பிக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

'இப்ப யாரு இவங்கட்டலாம் என்ன சாப்புடுறாங்கன்னு கேட்கிறது? யோவ் மூன்' எனத் திருத்திருவென முழித்தாள் அவள்.

"என்ன நினச்சுட்ருக்கான் இவன்? ஒரே நாள்ல அவ்வளவு கிறக்கமாமா? ஏய் அந்த இடத்தவிட்டு நகரக் கூடாது நீ" என இவளிடம் மிரட்டிய பாட்டி, "அமுதா, கல்யாணி, மதிய சாப்பாட்டுக்கு என்ன செய்றதுன்னு பாருங்க" என்கவும், அவர்கள் இருவரும் இவளை முறைத்து விட்டு எழுந்து அடுப்படி சென்றனர்.
"என்ன கண்ணா நீ எதுமே சொல்லாம உக்காந்துருந்தா என்ன அர்த்தம்?" என்றார் பாட்டி நிலவனின் அப்பாவிடம்.

"இந்தப் பக்கம் மகன் அந்தப் பக்கம் பொண்டாட்டி நா யார் பக்கம் நிக்கன்னு தெரியலம்மா. இவன் விலகி இருந்தத வச்சு அவனுக்கும் விருப்பமில்லன்னு நினச்சு‌ தான் அமுதாவோட அண்ணணோட சேந்து வேற பொண்ணே பாத்தேன். ஆனா இப்ப‌ அவன் நடந்துக்றது எதுவும் பிடிக்காத பொண்ணுட்ட நடந்துக்குறமாதிரி இல்லம்மா" என்றார் அவ்வளவு நேரமும் மகனின் நடவடிக்கையைத் தான் அமைதியாக உள்வாங்கி இருந்தார் நிலவனின் அப்பாவாக. அவன் முடிவெடுத்துவிட்டால் அதில் நின்று ஜெயிப்பானென அனுபவத்தில் உணர்ந்தவறாகிற்றே, இனி மகன் பின்வாங்கமாட்டானென உறுதியாக நம்பினார் அவர்.

"என்னடா தம்பி பேசுற? கேரளா தங்க பிஸ்கட் வியாபாரி உன் வருங்கால சம்பந்தி, நம்மத் தொழிலுக்கு எவ்வளவு கைக்கொடுக்கும்னு யோசிச்சுப்பாரு, நாம அத வச்சு எவ்வளவு பேசிகிட்டோம்னு மறந்து போச்சா? அவங்கட்டையும் சொல்லி வச்சாச்சு நம்மள விடப் பெரிய இடம் பகைச்சுக்க முடியாது பாத்துக்கோ, சும்மா அவன் விவரமில்லாம நடந்துக்றதுக்காக நாமளும் ஒத்து ஊதக் கூடாது. எது அவன் வாழ்க்கைக்கு நல்லதுன்னு நாம தான் எடுத்துச் சொல்லணும்"

'ஆமா பத்து மாசத்துல ஒரு புள்ளையையும் பெத்துத் தாறேன் அதுக்கும் சேத்து உங்க நல்லத சொல்லிகுடுங்க' கவுண்ட்டர் கொடுத்தாள் நனியிதழ்.

"என்ன கண்ணா நீ? அவன் தாலி கட்டிட்டோம்னு மருகி நிக்றான், இதுங்க அதவச்சு அவன கைக்குள்ளப் போட்டுச் சொகுசா வாழ நினைக்குதுங்க, அப்டிலாம் விட்டுக் குடுத்துற கூடாதுடா கண்ணா" என்றார் பாட்டி,

"அம்மு" என்ற யாழ்நிலவனின் அழைப்பு அந்நேரம் அறைக்குள்ளிருந்து வர, அவள் பாட்டியைப் பார்த்தாள், வெறுப்பாக முறைத்தார் அவர்.
 

priya pandees

Moderator
"அம்மு இங்க வா" மறுபடியும் அவனே, அவள் இப்போது தாத்தாவைப் பார்க்க,

"போம்மா நீ" என்றார் அவர்,

"கருப்பையா, உன் பொண்ணக் கூட்டிட்டு வெளில போ நீ, நாங்க பேசிட்டு உனக்கும்‌ உன் பொண்ணுக்கும் என்ன செய்றதுன்னு பாக்றோம். அப்படியேலாம் விட்றமாட்டோம், பயப்டாம போலாம் நீ" பெரியப்பா சொல்ல, அவர் தள்ளாடிக் கொண்டு நின்றார்.

"ம்ச் அம்மு" என்றவன் வேறொரு லுங்கி, டீசர்ட் மட்டும் அணிந்து கொண்டு தலையைத் துண்டால் உலர்த்திக் கொண்டு வெளியே வந்தவன், "கூப்பிட்டுட்டே இருக்கேன் அப்டியே நிக்ற நீ, இங்க வா" என்றான் மறுபடியும்,

"பாட்டி தான் எங்கையும் நகர‌க் கூடாதுன்னு சொல்லிட்டாங்க, நீங்கக் கூப்பிட்டப்பவும் போகவான்னு அவங்கட்ட பெர்மிசன் கேக்கப் பாத்தேன் முறைக்குறாங்க, நா என்ன செய்ய" என்றாள் எல்லார் முன்னும்,

"நாங்கூப்ட்டா அவங்கட்ட பெர்மிசன் கேட்டு நிப்பியா நீ?" என அதட்டினான் அவன்.

"அப்ப அவங்களத் தாண்டி வந்தாலும் கோபிப்பாங்க தானே?"

"இப்ப மட்டும் உன்ன கொஞ்சிட்டா இருக்காங்க? அட்லீஸ்ட் கொஞ்சிட்ருக்க என்னையாது மதிக்கலாம்ல நீ?"

"என்ன மதிக்கலன்னுலாம் பேசுறீங்க? ஏற்கனவே கோவமா இருக்காங்களே இன்னும் கோவபடுத்த வேணாம்னு தான் நின்னேன்" என்றவள் பேசிக்கொண்டே வேகமாக அவனிடம் வந்திருந்தாள்.

"ஈர துணிய அப்டியே போட்டுட்டு வருவியா? அத முன் வாசல்ல கொடி உண்டு அதுல போடணும்."
அவளிடம் சொல்லிக்கொண்டே அறைக்குள் அழைத்துச் சென்றிருந்தான்,

"ஓ! ஓ.கே" எனக் குளியலறைக்குள் இருந்ததையெல்லாம் எடுத்தவள், "எல்லாத்தையுமா வாசல்ல போட முடியும்?" எனக் கேட்டு நிற்க,

"போட முடியாதுல்ல?" என அவளிடமே கேட்டவன், "ம்ம்கூம் உன் ட்ரஸ வேணா இங்க பால்கனில ஸ்டாண்ட் உண்டு, அதுல போட்டுக்கோ, என்னோடத வெளில போட்டுக்குறேன் நானு" என முடிக்க,

"சரி" என்றவள் அவன் சொன்னதுபோல் பால்கனி ஸ்டாண்டில் அவள் தலையில் கட்டியிருந்த துண்டையும் முடியை உலர்த்திவிட்டு அத்தோடு அவன் உடைகளையும் என அனைத்தையும் சேர்த்தே காயப்போட்டு வந்தாள்.

தலையைச் சீவி விட்டு வந்தவன், "சாப்பாடு ஆர்டர் பண்ணலையா? அம்மாஸ் ரெண்டு பேரும் கிச்சன்ல நிக்றாங்க" என அவளைக் கைக்குள் கொண்டு வர,

"ஆமா அவங்களே செஞ்சுக்றேன்னுப் போய்ட்டாங்க, நீங்க எப்டி கூலா இருக்கீங்க? பெரிய சண்டையாகுமா? என்ன வெளில போ போன்னு சொல்றாங்க" என்றவள் அவன் கைக்குள் நின்றே எட்டி டேபிளில் இருந்த க்ளிப்பை எடுத்துத் தலைக்கு மாட்டினாள்.

"நீ பயந்து அழுதுட்டு நின்னா டென்ஷனாகிருப்பேன் அம்மு, நீ ஜாலியா இருக்கியா அதான் நானும் ஜாலியா இருக்கேன். போமாட்டேன்னு சொல்ல வேண்டியது தானே? இந்த வாய் தான் வங்காள விரிகுடா வர விரியுமே, பயப்டுற ஆளா நீ?"

"பயமா இல்லன்னு யார் சொன்னா உள்ள பதக்குப் பதக்குன்னு தான் இருக்கு, வெளில காட்டாம மேனேஜ் பண்ணிட்ருக்கேன்" என்றாள் கண்ணை உருட்டி,

"அப்படியே அவங்க ஊருக்குக் கிளம்புற வர மெயின்டெய்ன் பண்ணிடு" என்றவன் அவள் மூக்கோடு மூக்கை உரசி விலகி, "வெளில போவோம் வா" என வெளியே அழைத்து வந்தான்.

"அப்ப நீ நாங்க சொல்றத கேக்க மாட்டியா நிலவா?" என்றார் பாட்டி மறுபடியும்,

"கேட்டுக்குற மாறிச் சொல்லு பாட்டி நீ. பொண்டாட்டிய விரட்டிவிட்டுட்டு புதுசா பொண்ணு பாக்றேன்றீங்க இதெல்லாம் வெளில வார்த்தையா சொல்லக் கூட நல்லாயில்ல, எனக்கு ஒரு பொண்டாட்டி போதும், இல்ல கவுரவத்த காப்பாத்தியே ஆகணும்னா தாத்தாக்கு புதுசா பாக்குற பொண்ணக் கட்டி வைங்க, பிஸ்னஸ்ல அவரவிட சீனியர் நம்ம வலசல்லயே கிடையாது. கேரளாகாரங்களும் வேணாம்னு சொல்ல‌மாட்டாங்க" என நக்கலாகச் சொன்னவன், தாத்தா அருகில் கீழேயே சோஃபாவில் சாய்ந்து அமர, நனியதழ் அவள் அப்பா பக்கம் சென்று நின்றுகொண்டாள்‌. அவள் சென்று நின்ற நேரம் மயங்கிச் சரிந்திருந்தார் கருப்பையா.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 5

"ப்பா" எனக் கருப்பையாவை தாங்கிப் பிடித்தவள், "பிடிக்க முடியல அம்மு சீக்கிரம் வாங்க" என அவனையும் பார்த்துக் கூப்பிட,

அவள் சத்தத்தில் தான் அவள் புறம் அனைவர் கவனமும் திரும்பியது, "என்னாச்சு?" என வேகமாக எழுந்து வந்தவன், "நீ விலகு அம்மு" என அவளை விலக்கிவிட்டு அவனே தாங்கிப் பிடித்து அவரின் முகத்தை நிமிர்த்தினான், வந்ததிலிருந்தே அவர் முக சோர்வு இப்போது தான் அதிக பதட்டத்தை தந்தது அனைவருக்கும். அவன் அப்பா‌, பெரியப்பாவும் கூட அருகில் வந்து நின்றுப் பார்த்தனர்.

"என்னடா என்னாச்சு அவனுக்கு?" எனத் தாத்தா எழுந்து வர முயன்றுகொண்டிருந்தார்.

பெண்களும் என்னவோ எனத் தான் பார்த்தனர், "அட்டாக் எதும் வந்துருக்குமோ? பொண்ணு வாழ்க்கைன்னு ரொம்ப கவலைப்பட்டு இழுத்துட்ருபாறோ?" என்றார் கல்யாணி.

"சும்மா இருங்கக்கா இதையே காரணமாக்கிடப் போறாங்க, என்னவா இருந்தாலும்‌ சரி‌ பண்ணி அனுப்பிவிட்ருவோம் நம்மளால அதான் செய்ய முடியும்" என்றார் அப்போதும் அமுதா.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அதற்குள் நனியிதழ் தண்ணீரை எடுத்து வந்து அவர்‌ முகத்தில் தெளித்து, குடிக்கவும் வைக்க, லேசாக அசைந்தார். ஆனாலும் கண்ணைத் திறக்க முடியவில்லை அவரால்.

"ப்பா, மாமா" என இருவரும் அவரை எழுப்ப முயற்சிக்க,

"ஹாஸ்பிடல் போயிடலாம்" என்ற பெரியப்பா, வெளியேறிக் கால்டாக்சிக்கு முயல, பத்து நிமிடத்தில் வந்துவிட்டது.

அடுத்தடுத்த நிமிடங்களில், பெண்களையும் தாத்தாவையும் தவிர்த்து, நனியிதழை மட்டும் அழைத்துக் கொண்டு, ஆண்கள் மூவரும் கருப்பையாவோடு மருத்துவமனை வந்திறங்கினர்.

"சாப்டல, தூங்கல அதான் பிரச்சினை அவருக்கு, இந்த ரெண்டையும் மொதல்ல செய்ய‌ வைங்க" என முடித்து விட்டார் மருத்துவர். அவருக்கு ஒரு டிரிப்ஸை மட்டும் ஏற்றிவிட்டு, வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

வந்ததும் கிச்சன் தான் வந்தாள் நனியிதழ், வீட்டில் சாப்பாடு தயாராகியிருந்தது, 'இத எடுப்பியா? நாங்க எங்களுக்கு சமைச்சு வச்சது நீயும் உன் அப்பாவும் சாப்பிடறதுக்கில்ல' என்ற பாட்டியின் குரல் மனதில் எதிரொலிக்க, 'என்ன பாட்டி வாய்ஸ் இப்டி நம்ம மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகிடுச்சு, பரவால்ல விடு அம்மு இதும் நல்லதுக்கு தான் அலெர்ட்டாக்கிவிடும்ல' என அவளுக்கு அவளே பேசிக் கொண்டு, அவளுக்கும் அவள் அப்பாவிற்கும் மட்டும் தனியாகக் கஞ்சியும் பருப்புத் துவையலும் வைத்தாள்.

இதற்குள் விருந்தினர் அறையில் கருப்பையாவைப் படுக்க உதவியிருந்தான் யாழ்நிலவன். திடமாக இருந்தால் அத்தனை பேர் அதுவும் முதலாளி குடும்பமே வெளியிலிருக்க, முடியவே முடியாதெனச் சாதித்திருப்பார், இப்போதும் முயன்றார் தான் ஆனால் அவர் உடலே அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை, இல்லையென்றால் ஊருக்குக் கூடக் கிளம்பிச் சென்றுவிடும் எண்ணம் தான் அவருக்கு. இனி இங்கு எப்படியும் மருமகன் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை வந்திருந்தது, காலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அந்த நம்பிக்கையைப் பெற்றிருந்தார் அவர்.

"எதுவும் வேணும்னா இதழ கூப்டுங்க மாமா, அமைதியா இருந்து உடம்பக் கெடுக்காதீங்க" என்றுவிட்டே வெளியில் வந்தான், அங்குத் தாத்தாவும் பாட்டியும் அவன் அப்பா பெரியப்பாவிடம் மருத்துவர் சொன்னதை விசாரித்துக்‌ கொண்டிருக்க, அம்மா‌வும்‌ பெரியம்மாவும் கேட்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்துக் கொண்டே கடந்துச் சென்றவன் கிச்சன் வாசலில் நின்று, "என்ன அம்மு செய்ற? சாப்பிட இருக்கறத எடுத்துட்டு‌‌ வர எவ்வளவு நேரம்?" என்க,

"எங்களுக்குச் சேத்து செஞ்சாங்களா இல்லையான்னு தெரியல, கஞ்சி அப்பாக்கு இப்ப‌ நல்லது தூங்கறதுக்கும் ஈசி டைஜஸன், அதான் நல்லதுங்க. அதான் அதையே வைக்றேன்" எனச் சிரித்தேக் கூறினாள்.

"அப்பாக்கு இப்டியானது டென்ஷனா இருக்கா?" என்றான் மென்மையாக,

"நா ஊர்ல இருக்கும் போதே இந்தமாதிரி இழுத்துப்பாங்க. சாப்பிடலனா என்னவோ அப்பா உடம்புக்கு உடனே வேலைய காமிச்சிடும். நாமெல்லாம் ஒரு நேரம் சாப்பிடலனா என்னாகிடும்னு ஈசியா பட்னியா கிடந்துருவோம் தானே ஆனா அப்பாக்கு அப்டி முடியாது. சுகர் உடனே ஷுட்டப்பாகி வேலைய காமிச்சுடும். அதுக்காகவே நா சமையல் கத்துக்கிட்டேன். அப்பாவும் ஸ்கிப் பண்ணவே மாட்டாங்க, இன்னைக்கு எப்டி ஆச்சுன்னு தெரில, எதாது வடை டீ மாறியாது எடுத்துப்பாங்க, நேத்தும் மார்னிங் அத சாப்டதால தான் இங்க வந்து நா செஞ்சு சாப்டுற வரப் பொறுமையா இருந்தாங்க, இன்னைக்கும் அப்டி எடுத்துட்ருப்பாங்கன்னு தான் அசால்ட்டா இருந்தேன், அட்டாக் அதிதுன்னு பேசவும் வேற யோசிக்கவும் முடியல" என்றவளையே தான் பார்த்தான்.

அவ்வளவு இலகுவாக விஷயத்தைப் பகிர்ந்துக் கொண்டிருந்தாள். நிச்சயமாக உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருப்பாள்‌ என கண்கள் காட்டி கொடுத்துக்கொண்டிருந்தது. ஏனோ எல்லாவற்றையும் இலகுவாகக் கடக்க முயல்கிறாளெனப் புரிந்தது அவனுக்கு.

திரும்பி ஹாலை ஒரு முறை பார்த்துவிட்டு, "ஒரு ஹக் வேணுமா அம்மு உனக்கு?" என்றான் மெதுவாக.

"நீங்க அங்கேயே நின்னு கட்டிக்கணும் பரவால்லயா?"

"போடி, வேணும்னா சொல்லு நா உள்ள வரேன் இல்லனா இப்டியே திரும்பிடுவேன்"

"போனா போதுன்னு தர ஹக் வேணாம் எனக்கு"

"உன்ன வச்சுகிட்டு" என உள்ளே வந்தவன், பின்னிருந்தே அணைத்து இடது கன்னத்தில் முத்தமிட்டு,

"எதுனாலும் பாத்துக்கலாம், சீக்கிரம் முடிச்சுட்டு அப்பாக்கு எடுத்துட்டு போ, நீயும் சாப்டு, நைட்டெல்லாம் முழிச்சது காலைல இருந்தும் இன்னும் எதுமே சாப்டாம இருக்க, சீக்கிரம்டி" எனச் சொல்லிவிட்டு, அதே வேகத்தில் வெளியேறினான்.

"இப்ப என்னடா இதையும் காரணமா சேத்துக்கப் போறியா நீ?" பாட்டி ஆரம்பிக்க,

"கேப் விடு பாட்டி, தலை வலிக்குது எனக்கு. சாப்பாடு செஞ்சுட்டீங்கன்னா எடுத்து வைங்க, எல்லோரும் சாப்டுங்க, தாத்தா கொஞ்ச நேரம் படுக்கட்டும்" என்றதும்,

"காலைலயிருந்து சாப்பிடலல நீ அதான் தலை வலிக்குது. வாங்க எல்லோரும் சாப்பாட்டு வேலைய முடிச்சுடலாம். அதுக்குள்ள அந்தப் பொண்ணோட அப்பாவும் எழுந்துடுவாரு பேசி முடிச்சுட்டு ஊருக்குக் கிளம்பணும்" என்றார் அமுதா. அனைவரும் எழுந்து கொண்டனர். பாட்டி, தாத்தா, அப்பா, பெரியப்பா நால்வரும் சாப்பிட அமர, அம்மாவும், பெரியம்மாவும் பரிமாறினார்.

"நீ அங்க சோஃபால உக்காரு நான் தட்டுல போட்டுத் தரேன்" என்ற கல்யாணி, அவனுக்கு எடுத்து வைக்கத் துவங்கிவிட, அடுப்படியை ஒருப் பார்வைப் பார்த்தவன், "அம்மு எனக்கும் சேத்து செய்றியா நீ?" என்றான் கேள்வியாக.

'முருகா, இப்ப ஆமான்னு சொன்னா அந்த மாமியார் ஆங்க்ரி பேர்ட்ஸ் கோச்சுக்கும், இல்லன்னு சொன்னா ப்ரஃபஸ்ஸர் கோச்சுப்பாரு, நா என்ன செய்யட்டும்' என முனங்கியவள் கேட்காதது போல் நிற்க,
"அம்மு" என்றான் மீண்டும் குரல் உயர்த்தி.

"ம்ச் அவ செஞ்சத தான் சாப்பிடுவியா நீ? அப்ப நாங்களாம் வேணாம்னு எதும் முடிவுக்கு வந்திருக்கியா?" என்றார் பெரியம்மா.

"பெரியம்மா அவ கஞ்சி செய்றா, அத சூட்டோட குடிச்சா தான் நல்லாருக்கும், நீங்கச் சோறு சமைச்சுருக்கீங்க நைட்டுக்கு வச்சும் சாப்டலாம். வேஸ்ட்டாகக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துல கேட்டேன் போதுமா? எல்லாத்துக்கும் காரணம் சொல்லணுமா நானு? என்ன ரொம்பப் பேச வைக்றீங்க எல்லாரும்" எனக் கத்திவிட்டு, கையோடு, "அம்மு பதில் சொல்லப் போறியா இல்லையா?" எனக் கத்திவிட,

கிச்சன் வாசலுக்கு விரைந்து வந்தவள், "எனக்குக் கஞ்சிக்கு அளவு தெரியாது அம்மு, குத்துமதிப்பா குறைச்சுப் போட்ருக்கேன். சேம் உங்கள மாறி வேஸ்டாகிடக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துல" எனக் கெஞ்சலாகச் சொல்ல,
அவளை முறைத்துக் கொண்டே, "நீங்க வைங்க பெரியம்மா" என்றுவிட்டான்.

மீண்டும் அவனைக் கண்ணைச் சுருக்கிக் கெஞ்சலாக ஒரு பார்வைப் பார்த்து விட்டு அடுப்படிக்குள் சென்று விட்டாள்.

அவன் சோஃபாவில் சாப்பிட அமர்ந்துவிட, அடுத்த பத்து நிமிடங்களில், இரண்டு கிண்ணத்தில் கஞ்சியை ஊற்றியவள் அதில் தேக்கரண்டியையும் போட்டு ஒரு ட்ரேயில் எடுத்து வைத்து, மேலும் இரண்டு சின்னக் கிண்ணங்களில் பருப்பு துவையலையும் எடுத்து வைத்து, அதையும் ட்ரேயில் எடுத்து வைத்து வெளி வந்தவள், அவனிடம் சென்று அவன் முன்னிருந்த டீபாயில், ஒரு செட் கஞ்சியையும் துவையலையும் எடுத்து வைத்து, "முறைக்காமத் திட்டாம குணமா சாப்ட்ருங்க அம்மு" என்றுவிட்டு அவள் அப்பா இருந்த அறைக்குள் நுழைந்து விட்டாள்.

"ப்பா" கண்ணை மூடிப் படுத்திருந்தவரை, மெதுவாகத் தட்டி எழுப்பினாள்.

"முழிச்சு தாண்டா‌ இருக்கேன், தூக்கமே வர மாட்டேங்குது, ஊருக்குப் போணும் இதழு"

"சாப்பிடுங்கப்பா முதல்ல, கொஞ்ச நேரம் தூங்குங்க நைட்டு பஸ்ஸுக்கு ஊருக்குப் போலாம். ஸ்லீப்பர் பஸ்ல நா டிக்கட் போடுறேன்"

"உன் மாமியார் வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு இருக்கும்மா" என்றவரை ஒரு கைக் கொடுத்து எழும்ப உதவினாள்.

"அவங்க என்ன வேணா சொல்லட்டும் பேசட்டும், நாம கண்டுக்க வேணாம் ப்பா. மொதவே நா முடிவு பண்ணிருந்தது என்னால என்ன பாத்துக்க முடியும்னு தான். இப்பவும் அதான் நா சொல்றேன், எந்தச் சிட்வேஷன்லையும் என்ன நா பாத்துப்பேன், என் லைஃப் இது! அப்டிலா ஈசியா விட்றமாட்டேன். நிலவன் சாருக்கு பிடிக்கலனா மட்டுந்தான் நா யோசிச்சுருப்பேன், இப்ப அதுக்கு கூட அவசியமில்ல, அவருக்கு என்னப் பிடிக்கும்னு தெரிஞ்சுடுச்சு அப்றம் எதுக்காக அவங்கப் பேச்சலாம் நாம பெருசா எடுக்கணும் ப்பா" என்றவள் அவர் கையில் கஞ்சி கிண்ணத்தை திணித்தாள்.

"அவங்களும் சேர்ந்தது தான்மா அவர் குடும்பம்"

"இருக்கட்டும்ப்பா, எனக்கும் புகுந்த வீடு வேணுந்தான், நா வேணான்னு சொல்லல, அவங்க வேணாம்னு ஒதுக்கி வச்சாலும், நா ஒதுங்கி நின்னுப்பேன், அவங்களயும் அவங்க ஃபேமிலிட்ட இருந்து பிரிச்சுழுக்க மாட்டேன், அவங்க பையன் அவங்களுக்கு தான், அதேமாதிரி அவங்க மருமகளும் நா மட்டுந்தான், நீங்க நிம்மதியா இருங்க இதெல்லாம் நினச்சு குழப்பிக்காதீங்க"

"அவங்க அவருக்கு வேற கல்யாணம் பண்ணப் பாக்றாங்களேமா?"

"அதெல்லாம் செய்ய முடியாது ப்பா, மொத நா மனசு வைக்கணும், அப்றம் அவங்க பையன் மனசு வைக்கணும், இந்த ரெண்டும் இந்த ஜென்மத்துல நடக்கப் போறதில்ல, அமுதாம்மாக்கு மருமகள்னா அது இந்த நனியிதழ் மட்டுந்தான். தைரியமா இருங்கப்பா"

"ஊர்ல எல்லாம் உன் பொண்ண அவங்க ஏத்துக்கலையாமே? என்ன செய்யப் போற அது இதுன்னு பேசுறாங்கம்மா"

"ப்பா என்ன நம்ப மாட்டீங்களா? உங்கப் பொண்ணு நல்லார்க்கான்னு பாத்தா தெரிலயா? நா ஹேப்பியா இருக்கேன் ப்பா. யாரும் என்னவும் பேசட்டும் நீங்க உங்க பொண்ண மட்டும் நல்லார்க்காலான்னு பாருங்க, அவ வாழ்க்கைய அவ நல்லா வாழுவான்னு முழுசா நம்புங்கப்பா"

"மாப்ள மேல நம்பிக்கை இருக்கும்மா"
முறைத்துப் பார்த்தவள்,

"உங்க பொண்ணையும் நம்பலாம் தப்பில்ல. அக்கா பேசினாளா? இங்க நடக்குற எதும் தெரியுமா அவளுக்கு?"

"இல்லம்மா சொல்லல. அவளும் பயப்டுவா, சின்னப் புள்ளையத் தூக்கிட்டு அங்கையும் இங்கையும் அலைவா பாவம்"

"சரி விடுங்க, ஊருக்குப் போய்ட்டு தினேஷ் குட்டியப் போய்ப் பாருங்க, இங்க நா வந்துட்டேன் அவங்க கூப்பிட்டுகிட்டாங்கன்னு சொல்லிக்றேன். அப்படியே எல்லார்க்கும் தெரியட்டும். நீங்கக் கொண்டு வந்து விட்டதா சொன்னா அதுக்கும் எதாது பேசுவாங்க"

"சரிம்மா டிக்கெட் போட்ரு நா ஊருக்குக் கிளம்புறேன்"

"சாப்ட்டு முடிங்க, நா என் செல் எடுத்துட்டு வரேன்" என வெளியேறினாள். அவள் கணவன் செலவில் தான் இன்றையப் படிப்பைப் படிக்கிறாள் நனியிதழ். கருப்பையா மாதம் மாதம் ஒரு தொகையை அவள் வங்கி கணக்கில் போட்டும் விடுவார். அது அப்படியே சேமிப்பாகத் தான் இருக்கிறது அவளிடம். கல்லூரி சம்பந்தப்பட்ட அனைத்து செலவும் அவனிது தான். தனிப்பட்ட தேவைகளை மட்டும் அவள் அப்பா கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வாள்.

வெளியே எல்லோரும் இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, நிலவன் சாப்பிட்டு அனைத்தையும் ஒதுக்கிவிட்டு தலையை சோஃபாவில் சாய்த்து அமர்ந்திருந்தான்.

"இன்னும் தல வலிக்குதா அம்மு?" என அவன் அருகில் சென்று நிற்க,
கண்ணைத் திறந்துப் பார்த்தவன்,

"கண்ணெல்லாம் எறியுதுடி. நீ இன்னுமு சாப்பிடாம சுத்தி வர்ற? மாமா சாப்டாங்களா?"

"ம்ம் சாப்டுறாங்க. நைட்டே ஊருக்குப் போணுன்றாங்க. டிக்கெட் போடப் போறேன். டிக்கெட் போட்டேன்னு சொல்லிட்டா கொஞ்சம் அமைதியா படுப்பாங்க, அப்றமா நா சாப்டுக்குறேன்"

"ஏன் ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போட்டும். இல்ல நாளைக்கு நைட் ட்ரைனுக்குக் கூடக் கிளம்பட்டுமேம்மா"

"வேணாம், அவங்க அங்க வீட்டுக்குப் போயிட்டா ரிலாக்ஸா தூங்கி எழும்புவாங்க. இங்க அவங்களுக்கு படுத்திருக்கக் கூட முடியல"

"ம்ச் என்ன அம்மு பழகட்டுமே. இப்டியே இருக்க முடியுமா எப்பவும்? நா வேணா பேசுறேன்" என அவன் எழ,

"மெதுவா பழகட்டும் இப்ப ஊருக்குப் போட்டும் அம்மு, ப்ளீஸ்"

"போடி, அதான் டிசைட் பண்ணிட்டல்ல" என மீண்டும் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டான். அங்குச் சாப்பாட்டு மேசையிலிருந்து இவர்களைப் பார்த்திருந்தவர்களை கடந்து அவர்கள் அறைக்குள் சென்று போனை எடுத்தவள், அவள் அப்பாவிற்கு டிக்கெட்டைப் போட்டுவிட்டு அவரிடம் கொண்டு காட்டியப் பிறகே, கொஞ்சம் அமைதியாகப் படுத்தார். அவர் சாப்பிட்டதை எடுத்து வந்து கழுவுமிடத்தில் போட்டுவிட்டு அவளுக்கும் ஒரு பவுலில் கஞ்சியும் துவையலும் எடுத்தவள் சோஃபாவில் அமர்ந்திருந்தவன் அருகில் வந்தமர்ந்தாள்.
கண்ணைத் திறக்காமலே அவளை உணர்ந்து, மெதுவாகச் சரிந்து அவள் தோளருகில் வந்தவன், "கமகமன்னு இருக்கடி அம்மு" என்றான் கிசுகிசுப்பாக.

"டவ் ஷாம்பூ, நல்லா மணக்கும்" என்றவளைக் கண்ணை மட்டும் திறந்து முறைத்தான்.

"என்ன அம்மு?" என்றவள் கஞ்சியை வேகமாகப் பருக,

"பசில இருக்கல்ல அதான் அப்டி. கைக்கால்லாம் பரபரன்னு இருக்கு எனக்கு"

வாயில் வைத்த கரண்டியோடு லேசாகச் சரிந்தவள், "பின்னாடி ஒரு சூப்பர்வைசிங் க்ரூப்பே இருக்கு, இத்துனூன்டு கிஸ்ஸுக்கு கூட வழி இல்லையாம் இங்க" என்றாள் அவளும் கிசுகிசுப்பாக.

வாய்க்குள் சிரித்தவன், "சேட்டை புடிச்சவடி நீ. எல்லோரும் நம்மளையே பாக்றாங்களா பாரு பாக்கலனா சட்டுன்னு ஒரு கிஸ் பாஸ் பண்ணிடு" என்றான் நக்கல் சிரிப்புடன்.

"பிட்டா சார்? தப்பில்ல?" என்றாள் அவளும்,

"நிலவா தாத்தா சாப்டாச்சு படுக்கவை" என்ற பாட்டி அதட்டலில்,

"சூப்பர்வைசர் வார்னிங் வந்திடுச்சு சார், ஓடுங்க" எனக் கிண்ணத்தோடு அவளும் எழுந்து கொண்டாள்.

அதன்பின் தாத்தா, அப்பா, பெரியப்பா மூவரும் அவர்கள் அறையில் படுத்துக் கொள்ள, பெண்கள் ஹாலில் அமர்ந்தனர்.

"இவ அப்பன வெளில வந்துப் படுக்கச் சொல்லு நிலவா நாங்க கொஞ்சம் படுத்து எந்திரிக்கணும்" என்றார் பாட்டி.

"பாட்டி, உடம்பு சரி இல்லாத மனுஷன் அவரு. உனக்கு நா இங்க சோஃபால செட்‌ பண்ணி தரேன் வா"

"சோஃபால கைய கால சுருக்கிட்டு படுக்குற வயசா எனக்கு?" என்றார் பாட்டி.

அவனுக்கு மட்டுமென அவன் பார்த்திருந்த வீடு அவன் ஒருவனுக்கு மட்டுமென்கையில் அதிகப்படி தான். இந்த நான்கு வருடத்தில் இந்த வீடு சிறியதாக இருக்கிறதேயென அவன் எண்ணியதேயில்லை. அதற்கு அவசியம் வந்ததில்லை. அவன் வீட்டினர் வந்தாலும் அங்குமிங்குமாகத் தங்கி ஓரிரு நாட்களில் கிளம்பி விடுவர். இன்று தான் மொத்தமாக வந்து நின்று அடம் பிடிக்கும் சின்னப் பிள்ளையாக நடந்து கொள்கின்றனர்.

"பாட்டி, அதுக்காகத் தூங்குற மனுஷன எழுப்பியா விட‌ முடியும்?"

"எழுப்பு, இங்க தூங்கவும் தகுதி வேணாமா? அதெல்லாம் யோசிக்க மாட்டானா அவன்? உடம்பு முடியலனாலும் பொண்ண இங்க இருத்தி வைக்கறதுல அம்புட்டு மும்மரமா இருக்கான், அப்டியே ஊரப் பாத்து போ வேண்டியது தான?"

"சீரியல் வில்லி‌ மாறிப் பேசிட்ருக்கப் பாட்டி நீ?"

"எனக்கென்ன ஆசையா அப்டி பேச? அவங்கவங்க அவங்கவங்க இடத்துல இருந்தா மரியாதை குறை ஏன் வருது?"

"பாட்டி எப்டி நடந்திருந்தாலும் கல்யாணம் நடந்திருச்சு, இனி அத மாத்த நினைக்றது நல்லாவா இருக்கு?" அழுத்தமாக வந்தது யாழ்நிலவன் வார்த்தைகள்.

"சரி அப்ப ஏன் ரெண்டு வருஷமா பிரிஞ்சு இருந்த?"

"அவளுக்கு அப்ப ட்வன்டி ஒன் தான். சோ லைஃப் ஸ்டார்ட் பண்ண கொஞ்சம் டைம் தேவபட்டுச்சு எனக்கு"

"சரி இங்க கூட்டிட்டு வந்தப்றமு ஏன் தனியா தங்க வச்ச?"

"லவ்வு பண்ணிட்டு அப்றமா வீட்டுக்குக் கூப்டுக்க நினைச்சேன். சீ அவ என் பொண்டாட்டி, இனி நா லவ் பண்ணிட்டு குடும்ப நடத்துனாலும் சரி தான், குடும்பம் நடத்திட்டு லவ் பண்ணாலும் சரி தான், ரெண்டும் எங்க இஷ்டம் எங்க உரிமை பாட்டி"

"இப்ப உனக்குப் பாத்து வச்சுருக்க பொண்ணு வீட்ல என்ன சொல்றது?"

"அது நீங்களா தேடிகிட்டது தான்.
அல்ரெடி கல்யாணம் ஆனவனுக்கு பொண்ணுப் பாத்துருக்கீங்க, இது அஃபன்ஸ் தெரியுமா என் பொண்டாட்டி ஒரு கம்ப்ளைண்ட் குடுத்தா போதும் கம்பி தான் களி தான்"

"குடுத்துருவாளா‌ அவ?"

"குடுக்கலாம் அவ குடுக்காம வேற யார் குடுப்பா?" என்றான் திமிராக,

"ம்ச் நிலவா, கேரளால உனக்குப் பாத்துருக்கப் பொண்ணு ரொம்ப பெரிய இடம், பொண்ணும் அவ்வளவு அழகு, அவங்கள ஏமாத்த முடியாதுப்பா, நம்ம தொழில்ல கைய வைப்பாங்க" அமுதா நடுவில் சொல்ல,

"அதுக்காக நா என் பொண்டாட்டிய ஏமாத்த முடியாதேம்மா? சிம்பிளா ஐடியா சொல்லட்டா? உங்களுக்கே தெரியாம இங்க ஒரு‌ பொண்ண அதான் என் பொண்டாட்டிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறேன்னு சொல்லிடுங்க"

'அடப்பாவி' எனத் திறந்த வாய் மூடாமல் அவன் பேச்சை 'பே' வெனப் பார்த்து நின்றாள் நனியிதழ்.

"அப்ப உன் முடிவுல மாற்றம் இல்ல? இவள கிளப்பி விடுற ஐடியா இல்லன்ற?" பாட்டி அவளை முறைத்தே இவனிடம் கேட்டார்.

"ம்ம்கூம் அந்தப் பேச்சே வேணாம் பாட்டி"

"சரி அப்ப நாங்கப் பாத்து உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கல, எங்க ஆசைக்கு என்ன வழி? பேரனுக்கு இப்படியொரு பேத்தி வரணும்னுங்குற வரையறைல இவ இல்ல அப்ப எங்க மன நிம்மதிக்கு நீ என்ன பதில் சொல்லப் போற?"

"என்ன செய்யணும் பாட்டி?" இவ்வளவு நேரமும் இருந்த அலட்சிய பதிலின்றி நேராகக் கேட்டான்.

"எதாது நீயே அதுக்கும் ஐடியா சொல்லு நிலவா? எங்க மனசு அதுல திருப்திபடணும்" என்றார்.

"அப்டி என்ன செஞ்சிட முடியும்? இங்க இருக்க வேலைய விட்டுட்டு அங்க வந்து தொழில பாக்க என்னால முடியாது பாட்டி" அவனே அதையும் முந்திக்கொண்டு சொல்லிவிட்டான்.

"உன்னால முடியுறத நீயே சொல்லு நிலவா"

"அத்த, நீங்க என்ன அவனுக்கு வாய்ப்பு குடுத்துட்ருக்கீங்க? எப்படியாவது பேசி நம்ம வழிக்குக் கொண்டு வாங்கத்த" என்றார் அமுதா,
 

priya pandees

Moderator

"அதான் முடியாதுன்னு உன் மகன் பிடிவாதமா நிக்றானே அமுதா. இங்க உன் மகனுக்குத் தனி வேலை இருக்கு அந்தத் தெனாவெட்டுல எல்லாம் பேசுறான், அங்க நாம எல்லாரும் அந்தத் தொழில் நம்பி தான் இருக்கோம் ஞாபகம் இருக்கா? நகை வரத்தையே நிப்பாட்டிருவாறு அந்தக் கேரளாகாரரு, உன் மகனுக்கு அதெல்லாம் எங்க புரியுது?" என நொடித்தார் கல்யாணி.

"ம்ச் இதெல்லாம் என்ட்ட கேக்காம நீங்களா இழுத்துவிட்டுகிட்டது பெரிம்மா, நா அதுக்கு பழி ஏத்துக்க முடியாது"

"சரி நாங்க அங்க சமாளிச்சுக்குறோம், நீ அவ்வளவு பெரிய சம்பந்தம் கைவிட்டு போகுதேன்ற மனபாரத்த மட்டும் குறைச்சிடு" என்றார் பாட்டி,

"எப்டி?"

"அவங்க இருநூறு பவுன், ரொக்க பணம், கிராண்டா கல்யாணம், ஒரு கார் இதெல்லாம் பொண்ணுக்கு சீரா குடுக்றதா தான் பேச்சு, அதெல்லாத்தையும் இவளாலையும் இவ அப்பனாலையும் அவங்க வாழ்க்கைய அடமானம் வச்சாலும் குடுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும், அதனால ரொம்ப வேணாம், நூறு பவுன் நகையும், மறுபடியும் ஊர்ல ஒரு கல்யாணம் பண்ணிடலாம் அதுக்கான செலவும் மட்டும் பாக்க சொல்லு"

"இதும் அஃபன்ஸ் பாட்டி"

"நீயாவும் எதுவும் செய்ய மாட்டேங்குற நாங்க கேட்டாலும் அதையும் செய்ய மாட்டேன்னு சொன்னா? அப்ப இவ நம்ம தகுதிக்கு இல்லன்னு நீயே ஒத்துக்குற அப்டிதான?"

"சும்மா உக்காந்திருந்தவ கழுத்துல அவ பெர்மிஷன் கூடக் கேக்காமத் தாலி கட்டுனது நானு, கட்டச் சொன்னது தாத்தா, எதாது குடுக்கணும்னாலும் நானும் தாத்தாவும் தான் குடுக்கணும் பரவால்லயா உனக்கு?" விட்டே குடுக்கவில்லை அவனும்.

"பேச்சு முடிஞ்சது நிலவா. ஒன்னு இவள உன் வாழ்க்கைய விட்டுப் போச்சொல்லிட்டு நாங்க பாத்து வச்சுருக்க பொண்ண சீரும் சிறப்புமா கல்யாணம் பண்ணு, இல்ல இவ கூடத் தான் வாழுவேன்னு சொன்னா, அவ அப்பன நம்ம தகுதிக்குப் பாதினாலும் குடுத்து அனுப்பி வைக்கச் சொல்லு, இதுக்கு மேல எங்களால இறங்கி வர முடியாது. அதுவரை அவ தனியாவே இருக்கட்டும், ஹாஸ்டல்ல கொண்டு விட்ரு. முறையா வரட்டுமே இப்ப என்ன?" என்றார் அவ்வளவு நேர்த்தியாக.

"நா இதுக்கு ஒத்துக்க மாட்டேன் பாட்டி"

"நா என்ன தப்பா சொல்லிட்டேன்னு நீயே சொல்லேன்? ஏம்மா பொண்ணே நீ சொல்லு, நான் கேட்டதுல என்ன தப்புன்னு சொல்லு, உன் அப்பனும் நீயும் சந்தர்பத்தை யூஸ் பண்ணிகிட்டீங்க பரவால்லன்னு நானும் பெருந்தன்மையா தான பேசுறேன்?"

"தப்பில்ல பாட்டி. உங்க எக்ஸ்பெக்ட்டேஷன் கரெக்ட் தான், ஆனா முடியாதவங்கட்ட கார்னர் பண்றீங்களே அது தப்பில்லையா?" அவளிடம் நேரடியாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் தந்தாள்.

"என்னம்மா இப்டி கேக்குற? இப்ப இதே இடத்துல என் பேரனுக்குப் பதிலா ஒரு படிக்காதவனையோ, ஒரு கழிசடையையோ, இல்ல ஒரு வயசானவனையோ உன் பக்கத்துல உக்கார வச்சுருந்தா கண்ண மூடிட்டு அப்பாவும் பிள்ளையும் சரின்னுருப்பீங்களா?"

"பாட்டி" அதட்டினான் யாழ்நிலவன்.

"இல்ல பாட்டி" உண்மை அதுதானே என்பதால் ஒத்துக்கொள்வதில் அவளுக்குப் பிரச்சினை இல்லை.

"அவளே ஒத்துக்கிடுறா பாத்தியா? நீன்றதால தான், உன் தாத்தாவோட மரியாதைக்காகத் தான் அன்னைக்கு உன் கைல தாலி வாங்கிகிட்டா இவ, அத தான் நான் தகுதின்னு சொல்றேன். எனக்கு நான் பேசுறதுல எதும் தப்பு இருக்குறதா தெரியல"

"நான் தந்தா சரி தானே பாட்டி, நானே தரேன்" என்றான் விறைத்துக்கொண்டு.

"மானங்கெட்டு வாங்கிட்டு வருவான்னா வரட்டும். அப்றம் என்னைக்கும் அவ மரியாதைய அந்த வீட்ல நீயோ உன் பொண்டாட்டியோ எதிர்பாக்கக் கூடாது" எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருந்தார் பாட்டி.

"கடனா வாங்கிக்றேன் பாட்டி. என் புருஷன்ட்ட கடனா வாங்கிக்றதுல எனக்கு ஈகோ இல்ல. உங்க முன்னவே ஏற்பாடு பண்ணிக்கலாம் உங்க நம்பிக்கைகாக. எனக்கு ஒரு வருஷ படிப்பிருக்கு, அத முடிச்சுட்டு நா இந்தக் கடன கொஞ்சம் கொஞ்சமா கழிச்சுடுறேன்"

"ம்ம் அது உன் இஷ்டம், ஆனா நகையை ஏற்பாடு பண்ணிட்டு, கல்யாணம் ஊரறிய பண்ணிட்டு முறையா அங்க வீட்டுக்கு வந்துட்டு அப்றமா இங்க வரலாம் நீ. அதுவரை ஹாஸ்டல் தான்" என்றார்.

'எங்களுக்குத் தெரியாம உன் பொண்ண இங்க கொண்டு வாழ வைப்பியா நீ, இதோ வந்தமாறியே திரும்ப அனுப்புறேன் பார்' என அவர் அகங்காரத்திற்கு தீனி போட நினைத்துப் பேரனை வதைக்கிறாரென மறந்துவிட்டார் பாட்டி.

பாவமாகத் திரும்பி யாழ்நிலவனை பார்த்தாள் நனியிதழ், கண்ணை மூடித் திறந்து சம்மதமாகத் தலையசைத்தான். அவளும் மூச்சை இழுத்துப் பிடித்து, "எனக்குச் சம்மதம் பாட்டி" என்றாள்.

"ம்ம் இப்படி தான் தன்மானத்தோட பிழைக்கணும், அவ அப்பன போய் விட்டுட்டு வரச் சொல்லு, நாங்களும் சாய்ந்தரம் ப்ளைட்ல ஊருக்குக் கிளம்பணும்" எனப் புடவையை உதறி எழுந்து விட்டார் பாட்டி.

மருமகள்களுக்கு இதில் அவ்வளவு திருப்தி இல்லை தான் எனினும் இப்போதைக்குப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டனர்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 6

அவன் பாட்டி, அம்மா, பெரியம்மா மூவரும் ஆண்கள் இருந்த அறைக்குள் நுழைந்து விட்டனர், "தாத்தாவ தூங்க விடமாட்டாங்க, இங்க பேசுனத பத்தி அங்க போய் டிஸ்கஸன் நடக்கும் அடுத்து" என்ற யாழ்நிலவன் மீண்டும் சோஃபாவில் தொய்ந்து அமர்ந்தான்.

"நூறு பவுனுக்கு எவ்வளவு அம்மு ஆகும், அதும் ஒன் இயர்கு அப்றம் வர்ற ரேட்டுக்கு?" அவள் கையால் எண்ணி கணக்கிட்டுக் கொண்டிருக்க,

"இன்னைக்கே ஒரு பவுன் சிக்ஸ்டிகேடி" அவர்கள் பார்க்காத தங்கமா, ஆனாலும் பெருமை யாரை விட்டது என எண்ணிக்கொண்டான்.

"ப்பா இன்னும் ஒன் இயர் எவ்ளோ கூடுமோ தெரிலயே, வாழ்க்கை முழுக்க உங்க கடன அடைக்கணுமே நானு"

"அதெல்லாம் பாத்துக்லாம் அம்மு. அவங்க ஊருக்குக் கிளம்பட்டும் நாம யோசிக்கலாம்"

"என்ன கிளப்பி விட்டுட்டு தான் அவங்க போவாங்க. அப்பா வேற எல்லாம் கேட்டாங்களா இல்ல தூங்கிட்டாங்களான்னு தெரியல. அகைன் டென்ஷனாகாம இருக்கணும்"

"போய்ப் வேணா பாத்துட்டு வா"

"அப்பா கேட்டா பதில் சொல்லணுமே? என்ன அகைன் ஹாஸ்டல்ல விடப் போறீங்களா?" என்றாள் அடுத்த கேள்வியாக. அவளுக்கு அனைத்தும் யோசிக்கவே குழப்பமாக இருந்தது. நகை, கல்யாணம் அதுவரை மீண்டும் ஒரு பிரிவு என எத்தனை செக் வைத்துவிட்டார் பாட்டி.

"பாட்டிகிட்ட ஓ.கே சொல்லிட்டு இப்ப‌ என்ன கேக்ற?"

"நீங்கத் தான கண்ண காமிச்சீங்க, சரி சொல்லச் சொன்னீங்க நா சொன்னேன்"

"அடிப்பாவி, அப்ப நா வேணாம்னு சொல்லிருந்தா?"

"என் புருஷன் என்ன போ வேணாம்னு கண்ண காட்டிட்டாருன்னு சொல்லிருப்பேன்" என்றாள் தோள்களைக் குழுக்கி,

அவள்‌ பதிலில் முறைத்தவன், நின்று கொண்டிருந்தவளின் கையைப் பிடித்திழுக்க, அவனருகில் விழுந்து எழுந்தமர்ந்தாள், அவன் சரிந்து அவள்‌ மடியில் தலை வைத்துக் கொண்டான், "தூக்கமா வருது அம்மு" என அவள்‌ கையை எடுத்து அவன் தலையில் வைத்து அழுத்திவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டான்.

மிதமாக அமுக்கி விட்டவள், "தூங்குங்க அம்மு கொஞ்ச நேரம்"

"உனக்குத் தூக்கம் வரலையா? நீயுந்தானே நைட்டு எங்கூட முழிச்சிருந்த"

"நா ஹாஸ்டல் போய்த் தூங்கிக்குறேன்" என்றவள் பதிலில், சேலை மறைக்காத வயிற்றில் நறுக்கென்று கிள்ளி விட்டான்.

"நிலவன் சார் உங்கம்மா வர்றாங்க"

"வரட்டுமே அம்மு, என்ன எழுந்திருக்கச் சொல்லிடுவாங்களான்னு மட்டும் பாரு" என்றான், இன்னுமே கண்ணைத் திறக்கவில்லை, அவள் அவன் தலையை அமுக்குவதை நிறுத்தவில்லை.

அமுதா வந்தவர் இருவரையும் பார்த்துக் கொண்டே தான் கடந்து கிச்சன் சென்றார், மீண்டும் தண்ணீரை பாட்டிலில் எடுத்துக்கொண்டு அவர்களை முறைத்தேக் கடந்து செல்ல, "ஆமா பாத்துட்டே மட்டும் போயிட்டாங்க. ஏன் திட்டல?" என ஓரக்கண்ணால் அவரைப் பார்த்துவிட்டுக் கேட்க.

"என்ட்ட அப்படி தான் அவங்க, இப்ப பாட்டியக் கூட்டிட்டு வருவாங்க"

"அச்சச்சோ அப்ப எழுந்திருங்க" என வேகமாக அவன் தோளில் கை வைத்துத் தன் மடியிலிருந்து எழுப்பிவிட்டாள்,

"ஏன்டி" என்றவனும் மெதுவாக எழுந்தமர,

"அவங்க நான்ஸ்டாப்பா பேட் சென்டென்ஸ் மேக் பண்ணி பேசுவாங்க, எனக்குக் கடுப்பாகும்" என்றாள் முகத்தைச் சுருக்கிக் கொண்டு, அவன் சிரித்துக் கொண்டான்.

"இன்னும் கிளம்பலையாம்மா நீ?" என வந்தார் பாட்டி. அவர் பின்னரே தாத்தாவைத் தவிர்த்து அனைவரும் வந்தனர்.

அமுதா போய்ப் பாட்டியை அழைத்த‌ விதத்தில் வந்திருந்தனர். "அங்க வந்து பாருங்க உங்க பேரன, அவன் செய்றது எதுவும் சரியா‌ படல. வேணும்னே பண்றான் போலத் தெரியுது. அவள அனுப்புற ஐடியால இருக்கமாறி தெரியல" என்றே படபடத்திருந்தார். அதில் பாட்டி வேகமாக எழுந்து வர மற்றவர்களும் பின் தொடர்ந்திருந்தனர். மாத்திரை போட்டுத் தூங்குவதால் மட்டுமே இங்கு நடக்கும் பேச்சுவார்த்தை எதுவும் தாத்தாவை எட்டவில்லை.
"இங்க இருக்க ஹாஸ்டல் தானே? நா கொண்டு விட்டுக்குறேன் பாட்டி" என்றான் இவன் பதிலாக.

"ஏன்டா இந்தக் காலத்து பிள்ளைங்க சொன்ன சொல்லுக்குச் சரியா நடக்கணும்னு நினைக்க மாட்டீங்களா? பெரியவங்கள ஏமாத்த தான் நினைப்பீங்களோ? அதுலையும் நீ ஒரு ப்ரஃபஸ்ஸர் நிலவா. நீ இப்டி நடந்துக்றது உனக்கு நல்லாவா இருக்கு?" எனச் சொல்லிக் காண்பிக்க.

"ஏன் கொஞ்ச நேரம் என் வைஃப கொஞ்சிட்டு அனுப்ப கூடாதா நானு? கல்யாணம் செஞ்சு ரெண்டு வருஷம் கழிச்சு டவ்ரி கேக்றியே நீ. உன் வயசுக்கு அது மட்டும் நல்லாருக்கோ?" என்றான் நேரடியாக.
"ம்ச் பாத்து பேசணும் நிலவா" பாட்டி அதட்டலில்,

"நீ மட்டும் ரொம்ப நல்ல விதமா பேசுறதா நினைப்பா பாட்டி உனக்கு?"

"நா என் முடிவ சொல்லிட்டேன், இனி நீங்கத் தான் அதுபடி நடந்துக்கணும். திரும்பத் திரும்பச் சொல்ல வைக்க‌க் கூடாது" என்றார் அவர் கறாராக.

"இப்ப என்ன இவள கொண்டு விட்டா தான் நீ ஊருக்குக் கிளம்புவியா?"

"சரி அப்டின்னே வச்சுக்கோ, டேய் கண்ணா, நானும் அப்பாவும் ஒரு வாரம் இங்க இருந்து வர்றோம். நீங்க உங்களுக்கு மட்டும் டிக்கெட் போட்டு ஊருக்குக் கிளம்புங்க. நானே அவள கொண்டு ஹாஸ்டல்ல விட்டுட்டு வரேன், இவன் செய்யமாட்டான்னு தெரிஞ்சு போச்சு" என அவன் அப்பாவிடம் சொல்லிவிட்டு சட்டமாக அமர்ந்து விட்டார்.

நனியிதழுக்கு அப்படியொரு சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. யாழ்நிலவன் இவ்வளவு பேசுவான் என ஒரே நாளில் கண்டு கொண்டிருந்தாள். வீட்டிற்கு வெளியேவும் சரி அங்கு கல்லூரியிலும் சரி அவ்வளவு அமைதி அவன். அதட்டலுக்கு மட்டுமே குரல் அதிகம் வெளிவரும். கல்லூரியை பொறுத்தமட்டில் அவன் ஒரு முசுட்டு வாத்தி தான். அதையெல்லாம் நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

"தாராளமா இரு எனக்கொன்னும் பிரச்சினை இல்ல" என்றவன் நனியிதழிடம் திரும்பி, "மாமா எழுந்துட்டாங்களான்னு பாத்து கூட்டிட்டு வா" என அனுப்பி வைக்க,

இவள் சென்று பார்க்கும் போது ஏற்கனவே உள்ளே எழுந்து அமர்ந்திருந்தவரை கண்டு அயர்ந்தவள், "தூங்கலையா ப்பா நீங்க?" என கேட்டே நுழைய,

"அம்புட்டு பணத்துக்கு நா எங்கம்மா போவேன்?" என்றார் கைகள் நடுங்க, எவ்வளவு நேரமாக இப்படி போராடிக் கொண்டிருக்கிறாரோ என நொந்தவள், "ப்பா தண்ணி குடிங்க" என அங்கிருந்த டேபிளில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து நீட்டினாள்.

"பயமா இருக்கேம்மா. இவங்க உன்ன ஏத்துக்காம இருக்க தான இப்டி நம்மால முடியாதத கேக்காங்க"

"ப்பா நா படிச்சுருக்கேன் என்னால சம்பாத்தியம் பண்ண‌ முடியும், நகையும் சேக்க முடியும்"

"அதுவர? அதுவரை இந்த வீட்டுக்கு வரக் கூடாதுன்னா எப்டிம்மா? அன்னைக்கு முதலாளி சொன்னாருன்னு தலை ஆட்டிருக்க கூடாதோ? மறுத்துருக்கணுமோ? தப்பு பண்ணிட்டேனோ?" என்றார் முகத்தில் அவ்வளவு கலவரம்.

"ப்பா ப்ளீஸ் ப்பா. நா பாத்துக்குறேன் ப்பா. உங்க பொண்ணு வாழ்க்கை எங்கையும் போயிடாது. நா நல்லா வாழ்வேன். உங்க மருமகனுக்கும் என்ன விட்டு தர்ற ஐடியாலாம் இல்ல. நம்புங்க ப்பா"

"இல்லையே மாப்ள எதாவது செஞ்சாலும் அங்க உனக்கு எப்பவும் மரியாதையே கிடைக்காதேம்மா. அன்னைக்கு நம்மளுக்கு ஏத்தமாதிரி வேறொரு பையன பாத்து உனக்கு கல்யாணம் பண்ணிருக்கணும்டா நானு, தப்பு பண்ணிட்டேனே தப்பு பண்ணிட்டேனே, உன் வாழ்க்கைய நானே நாசமாக்கிட்டேனே" என தலையிலடித்துக் கொண்டு பெருங்குரல் எடுத்து அழுதார்.

"ப்பா சொன்னா கேளுங்கப்பா, இப்டி அழாதீங்க. பயப்பட ஒன்னுமே இல்லப்பா. என்னயும் சேர்த்து பயமுறுத்துறீங்கப்பா நீங்க" என அவளும் அழ துவங்க,

"அம்மு, மாமாக்கு என்னாச்சு? ஏன் மாமா கத்துனீங்க?" என வந்திருந்தான் யாழ்நிலவன். பின்னர் அவன் வீட்டினர்.

"அம்மு அப்பா ரொம்ப நடுங்குறாங்க, என் லைஃப் என்னாகுமோன்னு பயப்டுறாங்க. நீங்க சொல்லுங்க நா நல்லாருப்பேன்னு சொல்லுங்க. உடம்புக்கு எதாது செய்யக் கூடாது. அப்பா இன்னும் தூங்கவே இல்ல வேற. பயமா இருக்கு அம்மு" என அவளும் பேச,

"ம்ச் எழுந்திருங்க மாமா. என்ன நீங்க நம்பள அப்ப? உங்கப் பொண்ண அப்டியே விட்ருவேன்னு தான் எண்ணம் இல்லையா எம்மேல? இத்தன நாளும் அப்படி தான் நினைச்சுட்டு இருந்துருக்கீங்க இல்ல?" என அவன் கடுமையில், கருப்பையா பதறி அழுகையை நிப்பாட்டி எழுந்து நிற்க.

"அதட்டாதீங்க அம்மு அப்பா இன்னும் பயப்டுறாங்க" என்றாள் நனியிதழும் அதட்டலாக.

"கூட சேர்ந்து அழுதுட்டு எங்கிட்ட கத்துவியா நீ?" என்றான் அவன்,

"அப்பா அழும்போது எனக்கும் அழ வருதுல்ல, என்ன பண்ண? எனக்கொன்னும் நம்பிக்கை இல்லாம இல்ல" என்றாள் வீம்புடன்.

"என்ன நடக்குது இங்க? ஏய் கருப்பையா ரெண்டு வருஷமா வராத பயம் நா நகைய கேட்டதும் தான் உனக்கு வருதா? வெறுங்கையும் வீசுன கையுமா உன் பொண்ண பெரிய இடத்துல கட்டி வச்சாச்சுன்னு நிம்மதியா இருந்தியா அப்ப? இன்னைக்கு பொண்ணு வாழ்க்கை கேள்வி வரவும் தான் கதறி அழ வருதோ?" என்றார் பாட்டிக் காட்டமாக.

"ம்மா நா எப்டியாது கடன் வாங்கினாலும் கொஞ்சம் கொஞ்சமா குடுத்துடுதேன் அதுவர பிள்ளைக தனி தனியா இருக்கணும்னு மட்டும் சொல்லாதீங்கம்மா, உங்களுக்கு புன்னியாமா போவும், வாழ வேண்டிய புள்ளம்மா, ஏற்கனவே ரெண்டு வருஷமா பிரிஞ்சு தான் இருக்காங்க. தயவுசெஞ்சு நா கெஞ்சி கேக்கேன்மா என் மேல நம்பிக்கை வைங்கம்மா நா கண்டிப்பா தந்துருவேன், கால அவகாசம் மட்டும் குடுங்கம்மா" என்றார் கெஞ்சுதலாக.

"ம்ச் என்ன தான் எல்லோருமா சேந்து அசிங்க படுத்றீங்க பாட்டி. அங்க உங்கட்ட இல்லாத நகையா இவ குடுத்து தான் உங்க கஜானாவ நிறைக்க போறீங்களா நீங்க?"

"ஆமாடா, என் வீட்டுக்கு வரவளுக்கு இவ்வளவுனாலும் கொண்டு வரணும்னு இருக்கு. நானே அந்த காலத்துலயே அம்பது பவுனு போட்டு வந்தவ‌ தான். உங்கம்மா, பெரியம்மா, இப்ப வந்துருக்க யுதிஷ்டிரன் பொண்டாட்டி வர கைநிறைய அள்ளிக் கொண்டு வந்துருக்காளுங்க, உன் பொண்டாட்டி மட்டும் சும்மா வருவாளா? அப்ப அவ மரியாதை உனக்கு முக்கியமில்லையா? இல்ல அவளால முடியாதுன்னா நமக்கு ஏத்த பொண்ணும் ரெடி அவள கட்டிக்கோன்னு சொல்லிட்டேன். நா நம்ம குடும்ப நிலவரத்த தான் சொல்றேன் உனக்கு கேக்க கஷ்டமா இருந்தா நா என்ன பண்ண முடியும்" பாட்டி உறுதியாக நின்றார்.

"அதான் நகைய தந்து தொலைக்கிறேன்னு சொல்லிட்டாள்ள? பின்னயும் எங்கூட இருக்கவே கூடாதுன்னா என்ன அர்த்தம், நா வாழக் கூடாதுன்னா?"

"ஒரு வருஷம் டைம் கேட்டது உன் பொண்டாட்டி. கல்யாணம் முடிச்சுட்டு சிறப்பா வாழுங்கன்னு நா சொல்றது உனக்கு தப்பா தெரியுதா? நாங்க உன் கல்யாணத்த பாக்கவே இல்லன்ற ஆதங்கம்லா உனக்கு பெருசா தெரியலல? உன் சுயநலம் மட்டும் முக்கியம்னு பேசுற அப்டிதான? எங்க முன்ன கல்யாணம் பண்ணிட்டு எங்க ஆசிர்வாதத்தோட உன் வாழ்க்கைய வாழுன்னு சொல்றேன், ஆனா உனக்கு உன் பொண்டாட்டிய கொஞ்சுறது தான் எங்க ஆசிர்வாதத்தலாம் விட பெருசா தெரியுது போல" ஆங்காரமாக ஆரம்பித்து நக்கலாக முடித்தார். மற்ற அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.

அமுதா, கல்யாணி, சிவப்ராகசம் மூவருக்கும் ரெண்டு பேரும் பிரிந்தால் போதும் என்றிருந்தது. பாட்டிக்கு தாத்தா பார்த்து செய்து வைத்த கல்யாணம் என்பதாலும் பேரனுக்கும் பிடித்தம் என்பதாலும் பிரிக்கும் எண்ணத்தை விட்டு அவர் மரியாதை மட்டும் கிடைத்தால் போதும் என அதுவே முக்கியமாகப் பட்டது. கண்ணதாசன் எல்லோருக்கும் நலமாக இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தால் போதும் என நின்றார்.

"சரி பாட்டி, அவ படிப்பு முடிஞ்சு எங்கிட்ட கடன் வாங்கி நகை வாங்கணும் அத உங்கிட்ட குடுத்துட்டு தான் அங்க நம்ம வீட்டுக்கு வரணும், அப்றம் தான் இவ இந்த வீட்டுக்குள்ள வரணும் ரைட்டா?" என்றான் ஆத்திரத்துடன்.

"ஆமா. முறை அது தான்"

"சரி இனி நா பாத்துக்குறேன். நீ சொன்னமாறி அதுவரை அம்மு இந்த வீட்டு வாசப்படிய மிதிக்க மாட்டா போதுமா"

"ரொம்ப நல்லது. மறுபடியும் என்ன பேச வைக்காம இருந்தா இன்னும் நல்லது"

"இனி நீ பேசவேக் கூடாது. நீ சொல்றத சொல்லி முடிச்சுட்ட அத்தோட நிறுத்திக்கோ" என்றவன் அவன் மாமனாரிடம் திரும்பினான், "மாமா எனக்கொரு ஹெல்ப் பண்றீங்களா?" என்கவும்,

"அதே ஹாஸ்டல் வேணாம் வேற எதாது பிஜி மாறி பாத்து தங்கிக்றேன், அபிய வர சொன்னா அவளே காட்டுவா, அப்பா ஊருக்கு கிளம்பட்டும் அம்மு" என்றாள் நனியிதழ் முந்திக்கொண்டு.

"உன்ட்ட ஐடியா கேட்டனாடி நானு? பேசாம நில்லு" என அவளிடம் எகிறியவன், "இதே ஏரியால எனக்கு தெரிஞ்ச எங்கூட வேலை பாக்ற ப்ரஃபஸ்ஸர் இருக்காரு, அவர் வீட்டு மாடி போர்ஷன் காலியா இருக்கு, மாசம் பத்தாயிரம் வாடகை இருக்கும்னு நினைக்கிறேன் அத மட்டும் ஒரு வருஷத்துக்கு குடுத்திட முடியுமா மாமா உங்களால?" என்றான்.

அங்கிருந்த யாருக்கும் அவன் என்ன பேசுகிறான் என்றே புரியவில்லை. குழம்பிப் போய் பார்த்தனர்.

"பொம்பள புள்ளைக்கு எதுக்கு மாப்ள தனி வீடு, அதும் பத்தாயிரம் ரூபாய்க்கு?" என்றார் புரியாத பாவனையில்.

"நானும் உங்கப் பொண்ணு வீட்ல தான் தங்கப் போறேன் மாமா. நா அவள கல்யாணம் பண்ணிட்டேனா அதனால அடுத்த ஒரு வருஷம் அவ வீட்ல வந்து இருக்கேன், இப்போதைக்கு அவ உங்க பொறுப்புல தான இருக்கா, அதனால வாடகை மட்டும் நீங்க குடுத்திடுங்க, சீர் சாமான் நீங்க அல்ரெடி வாங்கி வச்சுருக்கேன்னு சொன்னத கொண்டு வந்து இறக்கிடுங்க போதும். நா என் பொண்டாட்டி வீட்ல வந்து தங்கிக்குறேன்" என்றான் தெளிவாக.

"என்னடா பேசுற நீ?" என பாட்டி சண்டைக்கு வர,

"பேச்சு முடிஞ்சது பாட்டி. என் பொண்டாட்டிய கொஞ்சாம என்னால இருக்க முடியாது. அதுக்காக உன் மரியாதையும் எனக்கு முக்கியம். நீ சொன்னதும் நடக்கப் போகுது. என் பிரச்சினைத் தீரப் போகுது. மாமா உடம்புக்கு எதும் வராது. இதான் எல்லாருக்கும் நல்லது. ஒரு வாரம் என்ன நீ ஒரு வருஷம் கூட இங்க இருந்து வீட்ட பாத்துக்கோ. தெண்டமா தான் வாடகை குடுக்கணும். நீயும் தாத்தாவும் ஒரு வருஷம் இங்க தனி குடித்தனம் இருங்க உன் புள்ளைங்க மருமகளுங்க தொந்தரவு இல்லாம" என முடித்தவன், "வாங்க மாமா, அம்மு நீ ட்ரஸ் மட்டும் பேக் பண்ணி‌ வை. நா மாமா கையாலயே அட்வான்ஸ் குடுத்துட்டு வந்துடுறேன்" என அவரையும் தள்ளிக்கொண்டு வெளியேறி விட்டான்.

எல்லாரும் 'ஆ' என அதிர்ந்து நிற்க, கண்ணதாசன் சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டார். நனியிதழுக்கு சிரிப்பு ஒரு பக்கம் அங்கு நின்றவர்களைப் பார்த்துப் பயம் ஒரு பக்கம் எனப் பேந்த பேந்த விழித்து நின்றாள்.

அவன் நக்கலாகவோ, பழிவாங்கவோ, விளையாட்டாகவோ கூட இதைச் சொல்லியிருக்கவில்லையென அவன் முகமே காட்டிக் கொடுத்தது. அவன் நினைப்பதை நடத்திக் கொள்வேன் என்பதாகத் தான் இருந்தது அவன் பேச்சு. ஆனால் அவர்கள் மறுத்துப் பேசவும் அவகாசம் கொடுக்காது சென்று விட்டான்.

"மாப்ள, நிசமாவே சொல்லுதீங்களா?முதலாளிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிப்போமே? உங்க அப்பா, பெரியப்பாலாம் என்ன சொல்லுதாங்கன்னு ஒரு வார்த்தை கேட்டுப்போமா?" என்றார் அவனிடம் தயங்கிக் கொண்டே, ஆனால் முதலிலிருந்த பதட்டம் இப்போது இல்லாமல் நிதானமாகியிருந்தார் கருப்பையா.

"நானே சொல்லிட்டேனே மாமா அதுவே போதும், இது என் முடிவு"

"இருந்தாலும் ஒரு வார்த்தை"

"ஏன் மாமா என்னையும் அவளோட சேத்து உங்கப் புள்ளையா ஒரு‌, ஒரு வருஷம் பாக்க மாட்டீங்களா?" என்றான் சிரித்துக் கொண்டே,

"தங்கமா பாத்துக்குறேன் மாப்ள, எனக்காகவும் என் பொண்ணுக்காகவும் தான் இம்புட்டு பேசுறீங்கன்னு புரியாத மடையனா மாப்ள நானு? எனக்கு மனசு அம்புட்டு நிறைஞ்சு இருக்கு. என் பொண்ணு உங்கப் பொறுப்பு மாப்ள எனக்கு அந்த நிம்மதி போதும்"

"அவளுக்கு நான் பொறுப்பா? உங்க பொண்ணோட முழு ரூபம் தெரியாம பேசுறீங்க மாமா நீங்க. அவளும் அவகூட ரெண்டு அறுந்த வாலுங்களும் இருக்குங்க, மூணு பேரும் சேந்தாங்கன்னா, உங்களையும் என்னையும் சேர்த்து இந்தச் சென்னையவே வித்துட்டு வந்துருங்க மாமா"

"காலேஜ்ல அவ்வளவு சேட்டை பண்ணுதாளா மாப்ள?"

"ஆமா மாமா, வாத்தியார் நாங்க தான் மிரண்டு ஓடுவோம்"

"நான் கண்டிச்சு வைக்றேன் மாப்ள"
"நிச்சயம் செய்ங்க மாமா" என அவர் மனதைத் திசைத் திருப்ப, அவளை வீட்டில் ஒரு கும்பலிடம் மாட்டி விட்டு வந்தது போதாதென்று இங்குத் தகப்பனிடமும் பற்ற வைத்தாகிற்று. தான் ஒரு சிறப்பான வாத்தியாரென நிருபித்தான் யாழ்நிலவன்.
பேசிக்கொண்டே வெங்கட்பிரபு வீட்டிற்கு வந்திருந்தனர், "உங்க கூடக் காலேஜ்ல வேலை பாக்கறவங்களா மாப்ள?"

"ஆமா மாமா, அம்முக்கும் க்ளாஸ் எடுக்குறவர்‌ தான்" என்றவன் அழைப்பு மணியை அழுத்த, வந்துத் திறந்தான் வெங்கட்பிரபு.

"வாங்க நிலவன், வாங்க சார்" என வரவேற்றவர், கருப்பையா யாரென்றுப் பார்க்க,
"வீடு பாக்கக் கூட்டிட்டு வந்துருக்கேன், என் மாமனார் தான்" என்றான் நிலவன். அவன் மாமனார் என்றதை பெரிதாகக் கவனிக்கவில்லை வெங்கட்பிரபு.

"நேத்து தான் சொன்னேன் இன்னைக்கே கூட்டிட்டு வந்துட்டீங்க" என்றான், முந்தைய தினம் தான் பேச்சுவாக்கில், 'என் வீட்ல மேல் போர்ஷன் காலியா இருக்கு யாராவது உங்களுக்குத் தெரிஞ்சவங்க கேட்டா கொஞ்சம் நம்பிக்கையானவங்களா இருந்தா இங்க ரெண்ட்க்கு இருக்குன்னு சொல்லுங்க நிலவன்' என்றிருந்தான், அவன் அந்த ஏரியாவில் நான்கு வருடங்களாக இருப்பதால் சொல்லி வைத்தான்.
"ஆமா தேவைபடுதே பிரபு. இன்னும் யாரும் வந்து அட்வான்ஸ் குடுத்திடலயே?" என்க.

"இல்ல நிலவன் நீங்கக் கேட்ருக்கீங்க இனி உங்க மாமாக்கு தான் வீடு, டீயா காஃபியா என்ன சாப்டுறீங்க?" என்றான்,

"அதெல்லாம் ஒன்னும் வேணாம், போர்ஷன் பாத்திடலாமே?" என எழுந்து கொண்டான், அவன் எழுந்துவிடவும் கருப்பையாவும் வேகமாக எழுந்து கொண்டார். மேலே வந்துப் பார்த்தனர், ஹால், கிச்சன், ஒரு படுக்கையறை, அத்தோடு இணைந்த முற்றம், அதில் பந்தல் வைத்த குளுமையான மாடித் தோட்டம் என அம்சமாக இருந்தது வீடு.

"இது இதுக்கு முன்ன குடி இருந்தவங்க மெயின்டெய்ன் பண்ணது, சார் பாத்துப்பாருன்னா இருக்கட்டும் இல்லனா ரீமூவ் பண்ண சொல்லிடுறேன்" என வீட்டு உரிமையாளராக வெங்கட் சொல்ல,

"இல்ல இல்ல இருக்கட்டும் ரொம்ப நல்லாருக்கு பிரபு சார். எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு, அட்வான்ஸ் வாடகைலாம் எவ்வளவு?" என்றது நிலவன் தான்.

"ரெண்ட் பணிரென்டாயிரம், மூணு மாச வாடகை அட்வான்ஸ், எத்தன பேர் தங்குறாங்க?" எனக் கேக்க,

"ரெண்டு பேர் தான், கெஸ்ட் அப்பப்ப வந்துட்டு போவாங்க"
எல்லாவற்றுக்கும் அவனே பதில் தர, கருப்பையாவை ஒரு பார்வைப் பார்த்தவன், "வீடு பிடிச்சுருக்கா சார்?" என அவனேக் கேட்டான் அவரிடம். நிலவன் சுற்றி பார்க்க நகர்ந்திருந்தான்.
 

priya pandees

Moderator
"மாப்ளைக்கு பிடிச்சுருக்குனாலே எனக்குத் திருப்தித் தான் தம்பி"

"அட்வான்ஸ் வாடகைலாம் உங்களுக்கு ஓ.கேத்தானே?" என்றான் மீண்டும்,

"அதுக்கென்ன மாப்ளைக்கு பிடிச்சுருக்குன்னா கூட ரெண்டாயிரம்னாலும் தரத்தான் நானு" என்றார் பெருமையாக,
அவர் பதிலில், சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த யாழ்நிலவனிடம் சென்ற வெங்கட்பிரபு, "நிலவன், அவருக்குப் பொண்ணு இருக்கோ?" எனக் கேட்க.

"ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க பிரபு ஏன்?"

"அதுல ஒன்ன உங்களுக்குக் குடுக்க தவமிருக்காருன்னு நினைக்கிறேன், வார்த்தைக்கு வார்த்தை மாப்ள தான் எல்லாத்துக்கும். அப்டி அவரா கேக்கலனாலும் நீங்களே பொண்ணு கேட்டுக் கமிட்டாகிடுங்க, இப்டி மாமானார் இந்தக் காலத்துல அரிதிலும் அரிது" என்க,

உதட்டை மடித்து சிரித்தவன், "நா வந்ததும் சொன்னத நீங்கக் கவனிக்கலன்னு நினைக்கிறேன். அவர் என் மாமனார். அல்ரெடி அவர் பொண்ணக் கட்டிட்டேன் அதனால் தான் அவர் என் மாமனார்" என்றான் தெளிவாக.

"எப்ப கல்யாணம் பண்ணீங்க? சொல்லவே இல்ல?"

"ரெண்டு வருஷமாச்சு, இப்ப இந்த வீடு நானும் என் வைஃப்பும் இருக்கறதுக்கு தான்"

"அப்ப அம்சாக்கா வீடு?"

"அதும் இருக்கும். என்னோடது லவ் மேரேஜ் என் வீட்ல அக்சப்ட் பண்ணிக்க மாட்றாங்க, சில இஷ்யூஸ் இருக்கு, அதான் தனி தனி வீடு. அவங்க வந்தா போனா தங்குறதுக்கு கொஞ்ச நாளைக்கு அந்த வீடு இருக்கட்டும்னு பாக்கறேன்" அம்சாக்கா அவர்கள் கதையாகச் சொன்னதையே அவனும் வெங்கட்பிரபுவிற்கு சொன்னான். விஷயம் ஒரே கதையாக வெளிய பரவட்டும் என்ற எண்ணத்தில். இன்னும் விளக்கிச் சொல்லும் எண்ணமும் இல்லை என்பது தனிக் காரணம்.

"உங்க வீட்டுக்குத் தெரிஞ்சுடுச்சா இப்போ?"

"அவங்களுக்கும் ரெண்டு வருஷம் முன்னவே தெரியும். அவங்க அக்சப்ட் பண்ணிக்கட்டும்னு வெயிட் பண்ணேன் ஆனா அவங்க பிடிவாதமா இருக்காங்க, அதான் நம்ம வாழ்க்கையவாது நாம வாழ்வோம்னு வைஃப்ப கூட்டிட்டு வந்துட்டேன்."

இன்னும் அவனுக்கு அதிக சந்தேகங்கள் இருந்தன தான், ஆனால் அவன் இவ்வளவு விளக்கம் கொடுத்ததே நம்ப முடியாத விஷயமாக இருக்க, மேலும் விவரம் கேட்கப் பயந்து அமைதியாகி விட்டான் வெங்கட்பிரபு.

"இங்க எப்ப வரீங்க?"

"நாளைக்கு மார்னிங் வந்து பால் காய்ச்சுடுறோம்"

"அப்ப நாளைக்கு காலேஜ் பெர்மிஷனா நீங்க?"

"இல்லையே எர்லி மார்னிங் வந்து பால் காய்ச்சுட்டு காலேஜ் வந்திடுவோம்"

"யாரு உங்க வைஃப்புமா?"

"ம்ம் அவங்களும் நம்ம காலேஜ் தான், எம்.காம் செகெண்ட் இயர்"

"ஸ்டுடண்டோட லவ்வா?" என்றான் அடுத்த நொடி அதிர்ந்து,
அவனை நின்று நிதானமாகப் பார்த்த நிலவன், "என் வைஃப் ஆனதுனால தான் சென்னை வந்தா, சென்னை வந்ததால தான் என் ஸ்டூடண்ட் ஆனா" என்றான் அழுத்தமாக.

அவன் கோவம் புரிய, "இல்ல நிலவன் ஸ்டூடண்ட்னு சொல்லவும் அப்படி கேட்டுட்டேன்"

"தேட்ஸ் ஃபைன் நாங்க இங்க வர்றதுல உங்களுக்கு எதும் இஷ்யூ இருக்கா? நாங்க லவ் மேரேஜ், ஒரே காலேஜ்ல தான் நா ஸ்டாஃப் என் வைஃப் நம்ம ஸ்டூடண்ட். இது உங்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவுன்னா சொல்லிடுங்க நா வேற வீடுப் பாத்துக்குறேன்" என்றான்.

"இல்ல நிலவன். நா ஜஸ்ட் டீடெயில்ஸ் கேட்டுகிட்டேன் அஸ் எ ஹவுஸ் ஓனரா அவ்வளவு தான். அட்வான்ஸ் நீங்க நாளைக்கு மார்னிங் வரும்போது குடுத்தாலும் ஓ.கேத்தான்" என்றான் தன்மையாக.

"இல்ல இப்பவே அனுப்பிடுறோம். உங்க அக்கௌன்ட் டீடெயில்ஸ் குடுங்க, மந்தலி ரெண்ட் கூட அதுக்கே ட்ரான்ஸ்வர் பண்ணிடலாம்" என்றதும் அவன் தகவலை அனுப்ப, அதை அப்படியே நனியிதழுக்கு அனுப்பி வைத்துவிட்டு அவளுக்கு அழைத்தான்.

"அம்மு எங்க போனீங்க? இங்க ஒரே முறைப்பும் பேச்சும் என்னால சமாளிக்க முடியல, சொல்லிட்டு போனது நீங்கத் திட்டு வாங்குறது நானு. இந்த ஐடியா என்னிது தானாம். நாந்தான் உங்கள என் சேலைல முடிஞ்சுட்டேனாம்"

"ஆமான்னு சொல்லி முடிச்சுவிடு அம்மு. உண்மைய பகிரங்கமா ஒத்துக்கணும் அம்மு. சரி இப்ப நா ஒரு அக்கௌன்ட் டீடெயில்ஸ் அனுப்பிருக்கேன் அத சேவ் பண்ணிக்கோ, நாம அடுத்து வரப் போற ஹவுஸ் ஓனர் டீடெயில்ஸ் தான் அது. இப்ப அட்வான்ஸ் தேர்ட்டி சிக்ஸ் அனுப்பிடு" என்றதும்.

"அதுக்குள்ள வீடு பார்த்துட்டீங்களா?"

"ம்ம் சொல்லிட்டு தான வந்தேன். நம்ம வெங்கட்பிரபு சார் வீடு தான்"

"அங்கையும் சாரா?" என அதிர்ந்தவளை கணக்கில் எடுக்காமல், "அனுப்பிடு அம்மு!" என வைத்துவிட்டான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 7

"செக்‌ பண்ணுங்க வெங்கட் மனி இப்ப ட்ரான்ஸ்பர் ஆகிடும்" என்றான் வெங்கட்பிரபுவிடம், முகத்தில் வந்தபோது இருந்த இளக்கம் இப்போதில்லை. அது புரிந்த வெங்கட்பிரபுவிற்கும் அவனை அப்படியே அனுப்புவது கஷ்டமாக இருந்தது.

"மொபைல் கீழ இருக்கு நா பாத்துக்குறேன். நீங்கக் கோவபடக் கூடாது. எனக்குச் சட்டுன்னு தோணினத கேட்டுட்டேன், உங்கள‌பத்தி தெரிஞ்சும் அப்டி கேட்ருக்க கூடாது தான் சாரி நிலவன்" என்றான் அவனாகவே.

"பரவால்ல வெங்கட், நா எதும் நினைக்கல. நாங்க கிளம்புறோம். நாளைக்கு மார்னிங் பாக்கலாம்" என மாமனார் இருந்த இடம் வந்தான்.

"கீழ என் வைஃப் ரெண்டு பசங்க இருக்காங்க வாங்க இன்ட்ரோ தரேன் எதாது சாப்ட்டு போலாம் நிலவன். நீங்களும் வாங்க சார்" என வெங்கட்பிரபு இருவரையும் அழைக்க,

"இருக்கட்டும் வெங்கட். உங்க ஃபேமிலியோட‌ நாளைக்கு இன்ட்ரோ ஆகிக்றோம். இப்ப வீட்டுக்குப் போணும், அங்க என் ஃபேமிலி ஊருக்குக் கிளம்ப வெயிட்டிங் நான் போய்த் தான் பேசி அனுப்பணும்" என்றுவிட்டு, "போலாமா மாமா?" எனக் கருப்பையாவிடம் கேட்க.

"காசு ஏடிஎம் போய் எடுத்துட்டு வருவோமா‌ மாப்ள அட்வான்ஸ் குடுத்திடுவோம். உங்களுக்குத் தான் வீடு நல்லா புடிச்சுருக்கே? இல்ல வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வந்து அவங்களும் ஒருக்கா பாத்த பின்னாடி குடுப்போமா?"

"அட்வான்ஸ் குடுத்தாச்சு மாமா. கிளம்புங்க போவோம்" என அவன் படி இறங்க துவங்க,

"வரேன் தம்பி. பிள்ளைகளுக்கு ஆத்தர அவசரத்துக்கு துணையா இருந்துக்கோங்க" என வெங்கட்பிரபுவிடம் விடைபெற்றவர், யாழ்நிலவன் பின் இறங்கினார்.
வெங்கட்பிரபுவும் இறங்கி வர, வாசலில் நின்று ஒருமுறை விடைபெற்றுத் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினர் மாமனாரும் மருமகனும்.

"ரூவாய நீங்கக் குடுத்துட்டீங்களா மாப்ள? வாங்க நா எடுத்துத் தந்துடுதேன் கையோட வேல முடியட்டும். சொன்ன சொல்லப் பேச்சுக்குக் கூட மாத்த கூடாது மாப்ள அப்றம் அது நம்ம மேல நம்பிக்கயே வரவிடாம பண்ணிரும்" என்றார் பரபரப்புடன். மேலே வைத்து அவன் நனியிதழிடம் போன் பேசியது கிச்சனில் நின்று என்பதால் அவருக்கு நடந்தது தெரிந்திருக்கவில்லை.

"அம்மு தான் அனுப்பினா மாமா. அவ மரியாதைக்காகத் தான் மாமா இது எல்லாம். அவங்க யாரோன்னா நா கண்டுக்காம இருந்திடலாம். அவங்க இல்லாம நா இல்ல, இத இப்படியே விட்டா, அம்முவ பத்தி நாளைக்கு எங்க பசங்க, பேர பசங்க கல்யாணத்தப்போ வர விமர்சனம் பண்ணுவாங்க. அது வேணாம். ஒன் இயர் தானே, சமாளிச்சுக்கலாம், நான் சமாளிச்சுப்பேன். நீங்க எனக்காக ஒருக்கா என் ஃபேமிலி ஆளுங்களுக்காக ஒருக்கான்னு யோசிச்சு யோசிச்சு பேசாதீங்க. நான் பாத்துக்குறேன்" என்றான் தெளிவாக.

"நீங்கச் சொன்னா சரிதான் மாப்ள. பாப்பாட்ட நா மாசத்துக்கு இம்புட்டுன்னு செலவுக்குக் குடுத்தது தான் இருக்கும், அது பத்துமா அட்வான்ஸ் குடுக்கன்னு தெரிலயே மாப்ள"

"ஓ! அம்மு இல்லன்ற மாதிரி எதும் சொல்லயே மாமா. வீட்டு கிட்ட வந்துட்டோமே வாங்க கேட்டுப்போம். ஒருவேளை இல்லன்னு சொன்னானா, அப்றம் போய் ஏடிஎம்ல எடுத்துக் குடுத்துட்டு வந்திடுவோம்" என வெளி கேட்டைத் திறக்க, உள் வாசலிலேயே நின்றாள் நனியிதழ்.

"காசு இருந்ததாமா? அட்வான்ஸ் தொகைய அனுப்பிட்டியா?" என அவள் முன்னரே நின்றுவிட்டார் கருப்பையா, இல்லை என்றால் திரும்பி அப்படியேச் சென்று எடுத்துக் கொடுத்துவிடும் நோக்கத்தில்.

நனியிதழ் இவனைக் கண்ணைச் சுருக்கி முறைத்து விட்டு அப்பாவிடம் திரும்பியவள், "அது அனுப்பிட்டேன்‌‌ ப்பா, இப்ப நீங்கப் போய்க் குளிச்சுக் கிளம்புங்க, சாப்பிட்டு கிளம்பினா கேளம்பாக்கம் போய் ஒன்பது மணி பஸ்ஸ புடிக்க சரியா இருக்கும்" என்றதும்,

"ஆமா ஆமா கிளம்பணும், நாளைக்கு காலைல போனதும் உன் சீரு சாமானெல்லாம் ஏத்தி விடணும். கடைசி வர அப்படியே கடந்து போவுமோன்னு பயந்தேன், இப்பத் தேவபடுது பாத்தியா, நாளைக்கே வந்து இறங்கிட்டுனா உங்களுக்குப் புழங்க வைக்க ஏதுவா‌ இருக்கும். வீடு நல்லா விஸ்தாரமா நல்லாயிருக்கு இதழு" என்றவரிடம் இன்று தான் மகளைக் கட்டிக் கொடுத்தனுப்பும் பதட்டமும் பரவசமும்.

அவர் பின்னயே செல்லப் போனவளின் சேலை முந்தியை பிடித்திழுத்து தன்னோடு நடக்க வைத்தவன், "என்ன கோவம்?" என அவளுடனே வீட்டினுள் வர,

"இப்டியே புடிச்சுட்டு வந்தீங்கன்னா உங்க பாட்டியே காரணம் பெட்டரா சொல்லுவாங்க"

"டோஸ் அதிகமோ?" என்றவன் வரவேற்பரை வந்திருக்க அவள் முந்தியை விட்டுவிட்டான், ஆனால் அங்கு யாரும் இல்லாமல் காலியாக இருக்க, கருப்பையா மட்டும் அவர் அப்போது இருந்த அறை வாசலில் நின்றிருந்தார்.

"ரொம்ப ரொம்ப அதிகம் சார். கேட்டு முடியல எனக்கு.‌ வொய் ப்ளட் சேம்‌ ப்ளட் ஆகிடுச்சு" என்றவள் அப்போது தான் கருப்பையாவை பார்க்க,

"உள்ள இருக்காங்களாப்பா?தூங்குறாங்கன்னா வந்துருங்க, நான் பாக்கும்போது இங்க தான் இருந்தாங்க எல்லோரும், ஃப்ரஷ் ஆகணும்னா இங்க கூடப் போயிட்டு வாங்க" என அவர்கள் அறையைக் காண்பித்தாள்.

"இல்லம்மா, ஒரு சொம்புல தண்ணி குடு நா வாசல்ல நின்னு கை கால் முகம் மட்டும் கழுவிட்டு வரேன். அவங்களுக்கு ஏற்கனவே நம்ம மேல கோவம் இருக்கு, இதுல தொந்தரவும் சேத்து குடுக்க கூடாது" என்றார் கருப்பையா.

"உள்ள வாஷ் பேசின்ல முகம் கழுவுறீங்களா அப்போ?" என்றாள் அவள்,

"உங்க ரெண்டு பேரையும் கொண்டு மியூசியத்ல தான் வைக்கணும், இந்தக் காலத்து அரிய வகை உயிரினங்கள்னு" எனக் கடுப்பானவன், "வாங்க மாமா" என அழைத்துக் கொண்டு அவனறைக்கே செல்ல, உள்ளே தாத்தா மட்டுமே. இன்னும் தூக்கத்தில் தான் இருந்தார்.

"போய்க் குளிச்சுட்டு வாங்க" என்றவன் குளியலறையைத் திறந்துவிட,

"நான் கொண்டு வந்த பேக்கு வெளில இருக்கு மாப்ள" என்கையில் பையோடு உள்ளே மெதுவாக வந்தாள் நனியிதழ்.

"கொண்டாமா நான் குளிச்சுட்டு வந்துடுறேன். அதுக்குள்ள ஐயா எந்திச்சிட்டா சொல்லிட்டு புறப்படணும்" என்றார் அவர் மகளிடமிருந்து பையை வாங்கித் துண்டை எடுத்துக்கொண்டு.

"சரிப்பா" என்றவள், அவர் குளியலறை செல்லவும் நிலவனிடம் திரும்பினாள், "சாப்பாடு எல்லாருக்கும் செய்யவா, இல்ல மதியத்துக்கு மாதிரி நமக்கு‌ மட்டுமா?" எனக் கேட்க.

"எல்லோரும் ஊருக்குக் கிளம்புறாங்களா? தாத்தா பாட்டி இருக்குற‌ முடிவா எதுமே தெரியலயே அம்மு"

"என்ன மதிக்காம அவன் பொண்டாட்டி பின்னாடி இவன் போவான் நா மட்டும் இங்க இருக்கணுமாக்கும். நானும் வரேன்டா இவன் இங்க என்னமு செய்யட்டும். அங்க என் வீட்டுக்கு எப்டி வரான்னு பாக்றேன்னு, நான் சொன்னத மீறி எதுத்து நிக்றளவுக்கு வளந்துட்டான்ல இனி அவன்‌ வாழ்க்கைய அவனே பாத்துக்கட்டும். என்ன நினைச்சு நீயும் உன் அப்பனும் என் குடும்பத்துல நுழைய நினைச்சீங்களோ அது நடக்கவே நடக்காதுடி. அவன‌ கைக்குள்ள போட்டாச்சு இனி சுலுவா வீட்டுக்குள்ள நுழைஞ்சுடலாம்னு கனவு கண்டுறாத, நா இருக்க வர நீ அந்த வீட்டு வாசப்படி மிதிக்க முடியாது. அவனே இனி என் பேரன் இல்ல அப்றம் நீ என்ன பேரன் பொண்டாட்டி பெருசா. இப்டி நிறைய நிறைய பேசி டயர்டாகி தான் உள்ள போய்ப் படுத்துட்டாங்க நினைக்கிறேன்" என்றாள் பாட்டி போலவே பேசி முடித்து முகத்தைச் சுருக்கிக் கொண்டு.

இவர்கள் இந்த அறைக்குள் இருந்த நேரம் அவர்கள் பேச்சைக் கேட்டவாறு அடுத்த அறைக்குள்ளிருந்து வந்த அவன் அப்பாவும் பெரியப்பாவும் அப்படியே சென்றிருந்தனர். அவன் அப்பா தான் விறைத்துக் கொண்டுத் திட்டச் சென்ற பெரியப்பாவையும் இழுத்துக் கொண்டு வெளியேறிவிட்டார். கிளம்பும் நேரத்தில் எதற்குச் சண்டையெனக் கூட்டிச் சென்றுவிட்டார்.

இடுப்பில் கை வைத்துப் பெருமூச்செடுத்தவன், "இந்தப் பாட்டிய" எனப் பல்லைக் கடித்தான், "நீ எல்லாருக்கும் செய், சாப்படலனா பேக் பண்ணி குடுத்து விட்ருவோம்" என வெளியேற,

"மறுபடியும் முதல்ல இருந்தா? நா வேணா இன்னைக்கே நீங்கப் பாத்து வச்சுருக்க புது வீட்ல போய்த் தங்கிகட்டா?" என அவளும் கேட்டுக் கொண்டே அவன் பின்னயே அறையை விட்டு வெளிய வர,

"உன் பங்குக்கு நீயும் கடுப்பேத்தாம போடி" எனக் கடித்துவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்து விட்டான்.

அவனுக்குப் பின் வாயைக் கோணித்துத் காண்பித்தவள், "நல்லா திட்டச் சொன்னா போதும், வாயே வலிக்காது மிஸ்டர் மூனுக்கு" என்றுவிட்டு அவள் தோளை நொடித்து சமையலறை சென்றுவிட்டாள்.

அங்கு அம்மா, பெரியம்மா, பாட்டி மூவர்‌‌ மட்டுமே இருப்பதைக் கண்டு, "அப்பாவும், பெரியப்பாவும் எங்க?" என்க,

"அதெதுக்கு உனக்கு? நாங்க யாரு உனக்கு? எங்கள தேவையில்லன்னு முடிவு பண்ணப்றம் உனக்கென்ன கேள்வி‌ வேண்டிய இருக்கு?" என்றார் பாட்டி.

எதுவுமே பேசாமல், அமைதியாக அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து விட்டான் யாழ்நிலவன், பெண்கள் மூவரும் கூட அமைதியாக அவனைப் பார்த்திருக்க, அவன் அப்படியே தான் அமர்ந்திருந்தான்.

"என்னடா பதில் சொல்லக் கூடக் கஷ்டமா இருக்கோ?"

"நா என்ன பண்ணணும் பாட்டி. அவள மொத்தமா பிரிஞ்சுட்டா ஹேப்பியா‌ இருக்குமா உனக்கு?"

"என்ன பாத்தா குடும்பமா இருக்கவங்கள பிரிச்சு விட்டுட்டு திரியிற மாறி இருக்கா உனக்கு? ரெண்டு மருமகள்களோட கூட்டு குடித்தனம் இருந்துருக்கேன், அவளுங்கட்ட கேளுடா என் அருமை என்னன்னு"

"அப்றம் ஏன் பாட்டி எனக்கு மட்டும் வில்லி வேலை பாக்குற"

"இப்பவும் நா நம்ம குடும்பத்துக்காகவும் உனக்காகவும் செய்றது தான் வில்லத்தனமா தெரியுதுன்னா நா வில்லியாவே இருந்துட்டு போறேன், நஷ்டமே இல்ல அதுல எனக்கு"

"பாட்டி என் சந்தோஷம் முக்கியமில்லையா அப்போ?" என்றதும் அமைதியாக அவனைப் பார்த்தார், "எனக்கு அவ கூட இருக்கணும் பாட்டி ப்ளீஸ். ரெண்டு வருஷம் பிரிஞ்சு இருந்து மனசார அவள மனைவியா ஏத்தப்றம் தான் வாழ ஆரம்பிச்சுருக்கேன், உடனே திரும்ப அனுப்புன்னு நிக்கற நீ. உடனே மட்டுமில்ல இனி எப்பவும் அவள அனுப்புற, பிரியிற ஐடியா இல்ல எனக்கு. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ மல்லுக்கு நிக்காத" நிதானமாகக் கேட்டான். மூன்று பெண்களும் அதிசயமாகப் பார்த்தனர்.

அடுத்த சில நொடிகள் அங்கு அமைதியாகக் கழிய, "சரி உன் இஷ்டம் அந்தப் பொண்ணு தான்னா அதுல இனி எந்த மாத்தமு இல்ல அவ தான் இனி அமுதா மருமக. ஆனா அந்த நூறு பவுன்லயும் எந்த மாத்தமும் இல்ல, அத அவ அப்பா செஞ்சே ஆகணும். அவ வேல‌ பாத்து கடனா நம்ம கடையிலேயே வாங்கிட்டு மாச தவணையா கட்டுனாலும் பரவால்ல. ஆனா நீ குடுத்ததா மட்டும் இருக்க கூடாது. கல்யாணத்த இப்பவே அவ அப்பன வைக்கச் சொல்லு. நீ அவன் காசுல அங்க போய் இருக்க வேணாம். இங்கேயே இரு" என்றார்.

"அட்வான்ஸ் குடுத்தாச்சு பாட்டி. மாத்தி மாத்தி பேச முடியாது. அந்த வீடும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ஒன் இயர்க்கு அங்க இருந்துட்டே வரோம்" என்றான் அதற்கு மட்டும் பதிலாக.

"கல்யாணம் பண்ணிட்டா இங்கேயே இருக்கலாம்ல, எதுக்கு ரெண்டு வீட்டுக்கு வாடகை குடுக்க போற?"

"அதுக்கு காரணமே நீதான? நீ நினைச்சு நினைச்சு பேசுனா நானும் அப்டியே நடக்க முடியுமா?"

"இன்னும் அந்த வீட்டுக்குக் குடி போகலல? பின்ன என்ன நிலவா?"

"அப்பக் கல்யாணம் ஆகுற வர அம்மு இங்க இருந்தா பரவால்லயா உனக்கு?"

"அதெப்டி நல்லாருக்கும்?"

"அப்போ பேசாம இரு. ரெண்டு வாடகை எல்லாம் என் கஷ்டம் நானே பாத்துக்குறேன். ம்மா, பெரியம்மா நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவுல இருக்கீங்க?"

"இனி நாங்க சொல்லி மட்டும் என்ன மாறிட போகுது" என நொடித்தார் கல்யாணி.

"அதானக்கா. தனி வீடே பாக்குறளவுக்கு போய்ட்டான். இனி நம்ம எதாது சொல்லப் போனா புள்ளையும் எனக்கில்லன்னு மிரட்டுனாலும் ஆச்சரியபடுறதுக்கில்ல, இனி அவன அனுசரிச்சு தான நாங்க எங்க மிச்ச வாழ்க்கைய ஓட்டணும். நீங்கக் குடுத்துவச்சவங்க க்கா, எல்லாவகையிலும் உங்க பேச்ச கேட்டு ஆசைய நடத்தி வைக்குற புள்ள அமைஞ்சுருக்கு, எங்களுக்குத் தான் அந்தக் குடுப்பன இல்லக்கா" என அங்கலாய்த்தார் அமுதா.

தலையைக் கோதிக் கொடுத்து, நெற்றியை நீவி விட்டவன், இருகைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்தான். கோபத்தைக் கட்டுப்படுத்த முயல்கிறானெனப் பார்த்ததும் புரிய வாயை இறுக மூடிக் கொண்டனர் அம்மாவும் பெரியம்மாவும்.

"நிலவா கருப்பையாட்ட உங்க கல்யாணத்த இப்பவே வைக்கச் சொல்லு. அவன்ட்ட நீயே பேசுறியா இல்ல நான் பேசிடவா?"

"உடனேனா உடனே பண்ணிட முடியுமா பாட்டி. காசு ஏற்பாடு பண்ணணும்ல அவரும். எப்பன்னு கேட்டுட்டு சொல்றேன். நீ அல்ரெடி அதிகம் பேசிட்ட பேசுன வரப் போதும். அப்பா எங்க?"

"நாங்க ஊருக்குக் கிளம்புறோம், யாரையோ பாத்துட்டு அப்டியே ஃப்ளைட் டிக்கெட் போட்டுட்டு வரத் தான் உன் அப்பாவும் பெரியப்பாவும் போயிருக்காங்க"

"என்ட்ட சொன்னா நானே போடுவேன்ல? நீ இருந்து போறேன்ன இருக்கலையா?" என்றான் பாட்டியிடம், அப்படியே போனை எடுத்துத் தகப்பனுக்கும் முயன்று கொண்டு.

"நீ அவ வீட்ல போய் இருக்கத இங்க உக்காந்து பாக்கவா‌ நா. போடா" என அவர் முகத்தைச் சுளித்துச் சொல்ல,

"சரி கிளம்புங்க, மாமாட்ட கல்யாணத்த பத்தி நானே பேசிட்டு சொல்றேன்" என்றுவிட்டு கைபேசியுடன் வெளியேறிவிட்டான்.

அங்குக் கருப்பையா குளித்து வெளியே வரப் பவித்ரம் படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தார்.

"தூங்கி எந்துச்சுட்டீங்களா முதலாளி? உடம்புக்கு ரொம்ப படுத்துதோ?" என அவரே விசாரிக்க,

"என் வயசுக்கு நானு படுத்து எந்திருக்கேன் பரவால்ல. உனக்கு என்ன? மொத உடம்ப பாரு கருப்பையா. நல்லா தூங்கி எந்துச்சியா? இப்ப நல்லார்க்க தான? பொசுக்குன்னு மயங்கி விழவும் பயந்தே போனேன் நானு" என்றார் தாத்தா உரிமையான அதட்டலுடன்.

"அது சில நேரம் அப்படி ஆவுதுங்க முதலாளி. இங்க நீங்கத் தூங்கி எந்திரிக்கதுக்குள்ள நிறையா நடந்து போச்சுங்கையா" என்க,

"என்ன மறுபடியும் சண்டை போட்டுட்டாங்களா? என் பெண்டாட்டி என்ன வற்புறுத்தி மாத்திரை போட வைக்கும் போதே தெரியும் இப்படி எதாவது வேலைய பாத்துருவான்னு. என்ன செஞ்சா?" என்றார் உறுமலுடன்.

கருப்பையா கடகடவென அனைத்தையும் ஒப்பித்து விட, "ம்ம் அப்ப என் பேரேன் பாத்துப்பான் இனி. நாம கவலை இல்லாம இருக்கலாம் கருப்பையா" என ஆசுவாசமாகச் சிரித்துக் கொண்டார்.

"உங்களுக்குக் கோவம் இல்லிங்களாய்யா?"

"எனக்கென்னத்துக்கு கோவம் வரப் போகுது. ஒரு பொம்பள புள்ள வாழ்க்கைன்னு யோசிக்காம இஷ்டத்துக்கு பேசுன என் வீட்டு மகராசிக மேல தான் எனக்குக் கோவம் கருப்பையா. பொம்பள புள்ள வாழ்க்கைய சபிச்சுட்டு இந்த ஜென்மம் மட்டுமில்ல பரம்பரைக்கே பாவத்த சேத்து வச்சுட்டு போகத் திரிஞ்சாங்க. எனக்கு அம்புட்டு ஆத்தாமையா இருந்தது. தங்கத்த வச்சு தொழில் பண்ணுறோம் அதுல இருக்க சுத்தமும் நாணயமும் மனசுலயும் இருக்கணும் கருப்பையா. என் பேரன்ட்ட அது எப்பவுமே உண்டு, அதான அன்னைக்கு யோசிக்காம முடிவெடுக்க வச்சது. எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு." என்றார் உள்ளன்போடு.

யாழ்நிலவன் அப்பாவிற்கு அழைத்துப் பேசி அவனே டிக்கெட் போடுவதாகச் சொல்லி வைத்தவன், அடுத்து நேரே சமையலறை சென்று, "என்ன பண்ற அம்மு, ஹெல்ப் எதுவும் வேணுமா?" என்க,

"நோ தேங்க்ஸ் மிஸ்டர் மூன்" என அவள் வாயைச் சுளித்துக் காண்பிக்க,

"ஏனாம்?" எனச் சிரித்துக் கொண்டே உள்ளே வந்து அவளருகில் கையைக் கட்டி நின்று கொண்டான்.

"என்ன சொன்னாங்க? நான் செஞ்சா சாப்பிடுவாங்க தானே?"

"தெரியல. நா அத கேக்கல. எனக்கு என் பொண்டாட்டி கூட இருக்கணும். நீங்கச் சும்மா சும்மா அவள திட்டிட்ருக்க வேணாம்னு மட்டும் ஸ்டிரிக்டா சொல்லிட்டு வந்துட்டேன்"

அவன் பக்கம் திரும்பி இடுப்பில் கை வைத்து முறைத்தவள், "ஆக மறுபடியும் என்ன அங்க கோர்த்து விட்டுட்டு வந்துருக்கீங்க?"

"இல்லடி அம்மு" என அவள் இடுப்பை பிடித்தணைக்க வர,

இரண்டடி பின்னால் நகர்ந்தவள், "யூ! டூ ஸ்டெப் பேக் மிஸ்டர் மூன்" என மிரட்டினாள்.

மீண்டும் "ஏன்டி?" என்றவன் கரண்டியோடு அவளை இழுத்துப்‌பிடித்தான்.

"ஒரே வேர்வை அம்மு. இட்லி, சட்னி சாம்பார் வச்சுருக்கேன். அவங்களாம் சாப்பிட உக்காந்தா இன்னும் இட்லி ஊத்திக்கலாம்" என அவன் கைக்குள் நெளிந்தாள் நனியிதழ்.

"மணி ஆறு தான் ஆகுது, இனி ஒரே ஃப்ளைட் தான் எட்டு மணிக்கு மதுரைக்கு உண்டு, நா அதுக்கு தான் டிக்கெட் போடப் போறேன். சோ அதுக்கு தான் கிளம்புவாங்க. மொத மாமாவையும் தாத்தாவையும் சாப்பிட சொல்லு. ஈவ்னிங் எதுமே குடிக்கல தான? நான் போய்த் தாத்தாவ எழுப்புறேன்" என அவளை விட்டு வெளியேறப் போக, இப்போது அவள் அவனைப் பிடித்திழுத்து நிறுத்தினாள்.

"என்ன அம்மு?"

"ஒரு பொண்டாட்டி வேர்வை ஸ்மெல்லா இருக்கேன்னு சொன்னா, புருஷன் என்ன சொல்லணும்?"

"என்ன சொல்லணும்?" என்றான் குறும்பு சிரிப்புடன்.

"வியர்வையா இருந்தாலும் என் பொண்டாட்டி மேல இருந்து வர்றதுனால சந்தனமா மணக்குதேன்னு சொல்லணும் மூன். இதெல்லாமா நானே சொல்லித் தர முடியும்?" என முந்தானையால் விசிறிக் காட்ட,

"என்ன விட நீதான அட்வான்ஸ்டா இருக்க எல்லாத்துலையும். சோ இதெல்லாம் சொல்லித் தரலாம் தப்பில்ல" என நக்கலாகச் சொல்லிச் செல்ல.

சென்றவனையே குறுகுறுவெனப் பார்த்தவள், "டபுள் மீனிங்கா இருக்குமோ? ச்ச ச்ச இருக்காது" என அவளுக்கு அவளே பேசிக் கொண்டே அனைத்தையும் எடுத்து வந்து சாப்பாட்டு மேசையில் வைத்தாள்.

யாழ்நிலவன் சென்று தாத்தாவை எழுப்ப நினைத்துச் செல்ல, அங்கு அவர் கருப்பையாவிடம் சிரித்து பேசிக் கொண்டிருப்பதிலேயே அனைத்தும் தெரிந்து கொண்டாரெனப் புரிந்தது அவனுக்கு.

"வாடா நிலவா, பேத்தி என்ன செய்றா?"

"சாப்பாடு செய்றா தாத்தா. நீங்க ப்ரஷாகிட்டு வாங்க சாப்டலாம். எட்டு மணிக்கு ஃப்ளைட்" என்றதும், அவன் கைபிடித்து கட்டிலிலிருந்து இறங்கிக்கொண்டார்.

அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடிக்க, அப்பாவும் பெரியப்பாவும் வந்தனர்.

"நா ஊருக்குக் கிளம்புறேன்மா, கோவபடாதீக. வயசுல பெரியவங்க நீங்க அந்தப் புள்ளைங்க என்ன தப்பு செஞ்சாலும் மன்னிச்சு ஏத்துக்கிடணும். நீங்கக் கேட்ட நகையை எம்பாடு பட்டாவது நா குடுத்துடுதேன். என் பொண்ணு உங்க வீட்ல நல்லா வாழணும் அம்புட்டு தான் என் ஆசை. வேற எதுவும் இல்லிங்கம்மா. நா வரேனுங்கம்மா. வரேங்கய்யா. வரேன் முதலாளி அய்யா. பாத்துகிடுங்க மாப்ள. கவனம் இதழு" என எல்லாருக்கும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் கருப்பையா.
 

priya pandees

Moderator
அவருக்குப் பதிலும் சொல்லவில்லை முகமும் திருப்பவில்லை அமைதியாக இருந்து அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் அவன் குடும்பத்தினர். நனியிதழும், யாழ்நிலவனும் மட்டும் தெருவரை சென்று வழியனுப்பி வைத்தனர்.
நனியிதழ் சாப்பாடை எடுத்து வந்து மேசையில் வைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள, எந்தத் தர்க்கமும் செய்யாமல் சாப்பிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் குடும்பத்தினரும் கிளம்பிவிட்டனர்.

எல்லோரும் கிளம்பியதும் வீட்டில் அப்படியொரு அமைதி, அங்கிருந்த சோஃபாவில், "அப்பாடி" என அயர்வாக ஒருவர் மேல் ஒருவர் விழுந்துவிட்டனர்.

"ஒரு நாளே ஒரு யுகம் மாறிப் போச்சுல்ல அம்மு" என்றான் அவன்.

"ஆமா அம்மு. டயர்டாக்கிட்டாங்க. என்னாலக் கேட்டு முடியல. மொத இந்தச் சேரிய மாத்தணும், இவ்வளவு நேரம் அவங்களுக்காகன்னு கட்டி இருந்து ஒரு யூஸ்ஸும் இல்லாம போச்சு" என வேகமாக அவள் எழ,

"யூஸ்ஃபுல்லா நா மாத்திடுறேன் அம்மு. வா என்ன ஹெல்ப் வேணும்னு சொல்லு நான் பண்றேன்" என அவளோடு அவனும் எழுந்து கொள்ள, அவளுக்கு அப்படியொரு சிரிப்பு.

"இந்த ஒரு வருஷமா காலேஜ்ல உங்கள பாத்ததுக்கும் இன்னைக்கு ஒரு நாள்ல பாத்ததுக்கும் அவ்ளோ டிஃப்ரன்ஸ். சில நேரம் வேற யாரோன்னுலாம் தோண வச்சிட்டீங்க" எனச் சொல்லிச் சொல்லிச் சிரிக்க,

"காலேஜ்ல வாத்தியாரா தான் இருக்கணும் வீட்ல இயல்பா இருக்கணும்டி அம்மு. வெளி இடத்துல மரியாதை முக்கியம். வீடு நம்ம ஒரிஜினாலிட்டிக்கான இடம். அங்க நம்ம இஷ்டம் போல இருக்கலாம்" என்றவன் அவளைப் பேசிக் கொண்டே அறைக்குள் கடத்தி வந்திருக்க, அவர்களுக்கான இரவு அவர்களை அரவணைத்துக் கொண்டது. நடுசாமத்தில் எழுந்து உண்டு அதன்பிறகு தூங்கியும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து அவளையும் எழுப்பிக் கிளப்பிக்கொண்டு வந்தான் புதிதாகக் குடியேறும் வீட்டிற்கு பால் காய்ச்சுவதற்கு.

பால் காய்ச்சவும், காலைச் சமையலுக்கும் தேவையான சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு குளித்துக் கிளம்பி வந்திருக்க, வெங்கட்பிரபுவும் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டான்.

"குட் மார்னிங் சார்" என்றவளைக் கண்டு முதலில் அதிர்ந்தாலும் வெடித்து சிரித்தான் வெங்கட்பிரபு.

"வீட்ல எப்டி சார்? மேடம் அமைதியாக இருப்பாங்களா?" என நிலவனிடம் கேட்க.

"கூட்டமா சேரும்போது தான் வெங்கட் வாலு வெளில வரும் மத்த நேரம் சமாளிச்சுடலாம்" என்றான் நிலவனும் சிரித்துக் கொண்டு. செல்லமாக முறைத்துச்‌ சென்றாள் நனியிதழ்.

"லவ் மேரேஜா?" என்றாள் பவானி, வெங்கட்பிரபுவின் மனைவி.

"ஆமாக்கா. உங்களுக்கு ஒரே பையனா?"

"ரெண்டுமா, இவன் சின்னவன் மூணு வயசாகுது. பெரியவனுக்கு அஞ்சு வயசு அவன் இன்னும் எந்திரிக்கல, எழுப்பிப் பாத்துட்டு தான் விட்டுட்டு வந்துட்டோம்"

"ஸ்கூல் போறாங்களா?"

"ஆமா இவன இந்த வருஷம் தான் சேத்துருக்கோம். பெரியவன் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான், சிபிஎஸ்இ"

"ஓ சரிக்கா, எந்த ஸ்கூல்? அங்க ஃபீஸ் அதிகமே?" என அவர்கள் பேச்சை ஆரம்பித்தவரை அவர்களைப் பற்றியே கேட்டுத் திசைத் திருப்பிவிட்டு பாலை காய்ச்சி எடுத்து, கொண்டு வந்த குத்துவிளக்கை அங்கிருந்த சிறிய மரத்திலான பூஜை அறையில் வைத்து விளக்கேற்றிச் சாமி கும்பிட்டு, பாலை நால்வருக்கும் ஊற்றிக் கொடுத்தாள். வெங்கட் பிரபு குடும்பமும் விடைபெற்றுக் கிளம்பியது.

காலைக்கும் மதியத்திற்கும் சமைத்து இருவருக்கும் பாக்ஸில் எடுத்து வைத்துக் கொண்டு கல்லூரி கிளம்பி விட்டனர். அவனுடன் அவன் வண்டியிலேயே கல்லூரி வந்திறங்கியவளை அனைவரும் வித்தியாசமாகப் பார்க்க, அவள் வகுப்பினரும் வாயைப் பிளந்து பார்க்க, அவளின் உற்ற தோழிகள் இருவரும் ஆளுக்கொரு புறம் மயங்கியே விழுந்துவிட, அவர்களைக் கண்டு கெக்கெபெக்கேவெனச் சிரித்தவளை இறக்கி விட்டு, "அடக்கி வாசிடி" என அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி ஆசிரியர் அறை நோக்கிச் சென்று விட்டான் யாழ்நிலவன்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 8

நனியிதழ் சிரித்தவாறே, "ஹே ஓவரா நடிக்காம எந்திரிங்கடி. சார் போயாச்சு." என அவர்களின் அருகில் சென்று நின்றாள்.

லேசாகக் கண்ணைத் திறந்துப் பார்த்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இவளைப் பார்த்து எழுந்தனர், "எப்டிறா ரெண்டு நாள்ல? நேரா அவர் வீட்டுக்கே போய்க் கால்ல விழுந்துட்டியா?" என அபி கேட்க,

"கால்ல விழுந்தாலும் முதல்ல ஏத்துக்கணுமே நம்ம துர்வாசர்?" என்றாள் செண்பகவள்ளி.

"அதான எப்டிறி துர்வாசர கவுத்த. எங்களுக்குத் தெரியாம உள்ள எதும் இறக்கிட்டு வீடு புகுந்து மனுஷன இலியானா இடுப்பில்லியானான்னு ரவுண்ட் கட்டிட்டியா?" என அபி சந்தேகம் கேட்க.

"இருக்கும்டி அதான் நம்மள நேக்கா கழட்டி விட்ருக்கா பாரேன்" எனச் செண்பகவள்ளியும் ஒத்துப் பாட.

"நாம இவ்வளவு பேசுறோம் கல்நெஞ்சக்காரி எப்டி போறா பாரு" என அவர்களைக் கடந்து நடக்கத் தொடங்கியவளின் முதுகில் ஆளுக்கொரு அடி வைத்தனர்.

"ம்ச் என்ட்டயா கேக்றீங்க நீங்களே பேசிக்றீங்கடி" என்றாள் நனியிதழ் முதுகைத் தேய்த்து விட்டுக்கொண்டு.

"சரி சொல்லு. நடந்தது என்ன?"

"நான் சொல்லுவேன் பட் நீங்க இந்த டைம் நிஜமாவே மயங்கி விழ வேண்டி இருக்கும், சோ நாம க்ளாஸ்கே போயிடலாம் வந்திடுங்க, இங்க இருந்து உங்க ரெண்டு பேத்த தூக்கிட்டு போக என்னால ஆள் தேட‌ முடியாது" என்றவள் வேகமாக ஓட, துரத்திக்கொண்டு இருவரும் பின்னரே ஓடினர்.

நனியிதழ் வகுப்பினுள் நுழைந்து அவள் இடத்தில் அமர்ந்ததும், அடித்துப் பிடித்து அவள் வகுப்பு மாணவர்கள் அவளைச் சூழ்ந்து கொள்ள, அவர்கள் வந்த வேகத்தில் இவள் தான் பயந்து பின்னால் சரிய இருந்தாள்.

"என்ன இப்டி சூழ்ந்துட்டாங்க, டேய் வழிய விடுங்கடா" என அந்தக் கூட்டத்திற்குள் நுழையச் சண்டை பிடித்தனர் செண்பகவள்ளியும், அபினவியும்.

"அட வெங்காயங்களா எதுக்கு இப்படி வந்து குமிஞ்சு கிடக்கீங்க?" என்றவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.

"என்னாச்சு?" என்றாள் சுற்றி நின்றவர்களைக் கண்ணை விரித்துப் பார்த்த நனியிதழ்.

"நீ தான் சொல்லணும். நிலவன் சாருக்கு எப்ப எப்டி ப்ரபோஸ் பண்ணுன? அவர் எப்படி சட்டுன்னு அக்சப்ட் பண்ணி பைக்லலாம் கூட்டிட்டு வர்ற அளவுக்கு க்ளோஸ் ஆனிங்க? மொத நம்பவே முடியல, நீ பாதி வழில மயங்கிக் கடந்தா கூடத் தண்ணிய தெளிச்சு எழுப்பி விட்டு ஆட்டோ தான் ஏத்தி விட்ருக்கணும், அதானே நமக்குத் தெரிஞ்ச நிலவன் சார். எப்டி இந்த மிராக்கில் நடந்தது? நிஜமாவே ப்ரபோஸ் பண்ணிட்டியா? நீ ப்ரோபோஸ் பண்ணிட்டு கன்னம் வீங்காம வந்ததே ஆச்சரியம் இதுல அவர் பைக்ல வேற வந்திறங்குற? அதுமட்டுமா முந்தாநாள் அபி ட்ரீட்டுகு வரல ஏன் கேட்டதுக்கு இவ சார் வீட்ல இருக்கான்னு அந்த அரலூசு சொன்னத கூட நாம நம்பலையேடா, அதும் நிஜமா?" கூடி நின்ற அனைவரும் ஆளுகொன்றாக அவர்களுக்குள் பேசி, கேள்வித் தொடுத்து என அது நீளமாகப் போய்க் கொண்டிருக்க,

"சைலன்ஸ். என்ன செய்றீங்க எல்லாரும். கெட் பேக் டூ யுவர் ப்ளேசஸ்" என உள்ளே வந்தார் ஆடிட்டிங் பாடமெடுக்கும் மனோன்மணி.

விஷயத்தை வாங்க முடியாத வருத்தத்துடன் அவரவர் இடம் சென்று அமர, அவர்களுடன் அவ்வளவு நேரமும் மல்லு கட்டிய அபியும் செண்பாவும், "ச்சை இம்சைங்க, காலைலயே வேர்க்க விட்டுட்டானுங்க பாரு" எனப் பசங்களை முறைத்துக் கொண்டு சென்று நனியிதழ் அருகில் ஆளுக்கொரு புறம் அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தனர்.

மனோன்மணி பாடத்தை ஆரம்பித்திருக்க வேறு வழியின்றி அமைதியாகப் பாடத்தை எழுத துவங்கினர். ஒரு மணிநேரம் பதினைந்து நிமிடங்கள் வகுப்பை முடித்து அவர் கிளம்ப, அடுத்ததாக வெங்கட்பிரபு நுழைந்திருந்தான்.

"இப்ப சார் என்ன பாத்து சிரிப்பாரு பாருங்க" என நனியிதழ் இருபக்கமும் அமர்ந்திருந்தவர்களிடம் கிசுகிசுக்க, பத்து நிமிடம், இருபது நிமிடம், ஒரு மணிநேரமும் கடந்து விட்டது, இருவரும் திரும்பி‌ முறைக்க, "நிஜம்டி, போறதுக்குள்ள கண்டிப்பா என்ன பாத்து சிரிப்பார் இல்ல பேசுவாரு வேணா பாருங்க" என்றாள் அப்போதும்.

ஆனால் வெங்கட்பிரபு எப்போதும் போல் போர்டையும் மாணவர்களையும் பார்த்துப் பாடத்தை முடித்து, "டவுட்ஸ் இருக்கா? வொர்க்கவுட்ஸ் கொஞ்சம் பாக்கலாமா?" என்றவன் சில கணக்குகளைப் போட்டு அதைத் தெளிவுபடுத்தி, கேள்விக் கேட்டு என அவன் பாட நேரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

இப்போது பதினைந்து நிமிடங்கள் இடைவெளி, "அவர் எதுக்குடி உன்ன பாத்து சிரிக்கணும்? சும்மா இருக்க மனுஷனயும் எதுக்கு லிஸ்ட்ல சேக்குற நீ?" என்றாள் அபி,

"அதான கல்யாணமான மனுஷர்லாம் சைட்டு லிஸ்ட்ல சேக்குறதில்லன்றது தான நம்ம கொள்கை?" என்றாள் செண்பகவள்ளியும்.

அவ்வளவு நேரமும் இருந்த பொறுமை பறக்க, மொத்த வகுப்பும் அவள் டேபிள் முன் மறுபடியும் ஆஜராகினர், "சீக்கிரம் இன்டர்வல் முடியிறதுக்குள்ள ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா உன் டூ டேஸ் மிஸ்ட்ரிய முடி" எனக் கேட்டு நேரத்தை வீணாக்காமல் அமைதியாக நின்றனர்.

"சரி சொல்றேன் குறுக்கா மறுக்காப் பேசாம கேட்கணும் ஓ.கே?" என அவள்‌ கெத்தாக ஆரம்பிக்க.

"பேசு‌ பேசு உன் நேரம் அப்படி இருக்கு என்ன வேணா பேசு" என்றாள் அபி முறைப்புடன்.

சிரித்துக் கொண்டாள் நனியிதழ், "அதாவது நானும் நிலவன் சாரும்" என நிறுத்தி விட்டு அனைவரின் முகமும் பார்க்க,

"சாரும்?" எனக் கோரஸாக ஆர்வமாக இழுத்தனர் சுற்றி இருந்தவர்கள்.

"சாரும் நானும் லவ்வர்ஸ் ஆகமுன்னவே ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஆகிட்டோம்" என வெட்கம் வேறு கொண்டு குனிந்து கொண்டாள்.

"அடிப்பாவி கல்யாணமே‌ பண்ணிட்டியா?" எனச் செண்பகவள்ளி அதிர்ந்து எழுந்து, அவள் பின்னால் அருகில் நின்றவன் நாடியில் நங்கென்று முட்டி அவன் வலி தாங்க முடியாமல் அவள் தலையில் கொட்டி மீண்டும் அமர வைத்துவிட,

"கட் பண்ணி நிறுத்தாம ஃப்ளோவா முடி. ப்ராங்க் பண்றதுலாம் வேணாம்" எனப் பரபரத்தாள் அபினவி.
"ப்ராமிஸ்டி நானும் நிலவன் சாரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். எனக்கும் அவருக்கும் ஒரே ஊரு தான்னு தெரியும்ல? சார் டூ இயர்ஸ் முன்னவே என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாரு. அவங்க தாத்தாவோட நகை கடையில தான் எங்கப்பா வேலை பாக்றாங்க, நா அங்க போறப்போ வர்றப்போ சார் என்ன பாத்துருக்காங்க போல என்ன ரொம்ப புடிக்குமாம், ஆனா இது தெரியாம எங்கப்பா எனக்கு வேற இடத்துல மாப்ள பாத்துட்டாரு, அங்க தாத்தாவோட வந்து சண்டை போட்டு என்ன கட்டிகிட்டாங்க, எனக்கு அப்படியே ஷாக்காகிடுச்சு. நான் சண்ட போட்டுட்டேன் இப்டி திடீருனு வந்து தாலி கட்ட கூடாது தானே? அதான் சண்ட போட்டு அனுப்பிவிட்டுட்டேன்‌. எனக்கு என்ன பண்ணனே தெரியல, கோச்சுகிட்டு அவர் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டேன், அப்றம் எங்க அப்பா வீட்ல தான் இருந்தேன், ஃபைனல் இயர் பி.காம் கம்ப்ளீட் பண்ணேன். அவங்க வீட்டுலயும் யாரும் சப்போர்ட் பண்ணல அவங்க தாத்தா மட்டுந்தான் சப்போர்ட் பண்ணாங்க. ஒன் இயர் ஆச்சு எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா அவர‌ பிடிக்க ஆரம்பிச்சது, அவருக்குக் கோவம் என்மேல நா வரமாட்டேன்னு சொல்லிட்டேன்னு. அதான் அவர சமாதானம் பண்ண இங்க படிக்க வந்தேன். கோபத்துல அவருக்கு நா யாருன்னு சொல்ல கூடாதுன்னு வேற சொல்லிட்டாரு, அதான் இத்தன நாளா சொல்லல. முந்தாநேத்து அப்பா‌ வந்து அவர் வீட்டுக்கே கூட்டிட்டு போய்ட்டாரு, நல்ல சான்ஸ்னு உட்கார வச்சு பேசிட்டேன். இப்போ சமாதானம் பண்ணிட்டேன். இனி அவர் கூட அவர் வீட்ல தான் லிவ்விங்க்ஸ்டன்‌. அவ்ளோதான் எங்க கல்யாணம் கதை சுருக்கம்" சொல்லிவிட்டு பெருமிதமாகச் சுற்றி அனைவரையும் பார்க்க, கொலைவெறியோடு முறைத்திருந்தனர் ஒன்றுபோல் அனைவரும்.

"ஏன்? ஏன் இப்ப முறைக்றீங்க?" என்றாள், 'நம்ப மாட்டாங்களோ' என்ற ஒரு வேகத்தில்.

"நீ சொன்னதுல ஒரு வார்த்தையாவது நம்புறமாறி இருந்ததா நீயே மறுக்கா நீ சொன்னத ரீவைண்ட் பண்ணிட்டு யோசிச்சு சொல்லு" என்றான் முன்னால் நின்ற ஒருவன் உக்கிரத்துடன்.

"நீ ஷாக்காகலடி நாங்க தான் அப்டியே ஷாக்காகிட்டோம்" என அபினவி முறைக்க,

"ஹே நிஜம்டி" என மறுபடியும் நனியிதழ் ஆரம்பிக்க,

"நாம எல்லாருமே இப்ப‌ ஷாக்காகப் போறோம். சட்டுன்னு திரும்பாம அப்படியப்டியே எல்லாரும் அவங்கவங்க இடத்துல போய் உக்காரந்திடுங்க. பின்னாடி தான் நம்ம நனியிதழ் வூட்டுகாரர் நெற்றி கண்ணத் திறந்துட்டு நிக்றாரு" என ஒருவன் சொல்லவும், அனைவருக்கும் நெஞ்சு துடிப்பு அந்நொடியில் நின்று தான் விட்டது.

"செத்தேன் நானு. பெல்லடிச்சாங்களா கேக்கவே இல்லயே?" எனப் பதறிவிட்டாள் நனியிதழ்.

சுற்றி நின்றவர்கள் அவன் பக்கமே திரும்பாமல் அப்படியே நகர்ந்து சென்று அவரவர் இடத்தில் அமர்ந்து அவன் பாட நோட்டை விரித்து நல்ல பிள்ளைகளாக வேறு காட்டிக்கொள்ள, வகுப்பின் வாசலில் சாய்ந்து நின்று அனைவரின் செயலையும் பார்த்தவன், அவரவர் இடத்தில் அமர்ந்த பின்னரே உள்ளே வந்தான், எல்லோரும் எழுந்து நின்றனர் மரியாதை நிமித்தம்.

"நிஜமா பெல் அடிச்சுதான் வந்தாரா? எப்ப இருந்து நிக்றாரு இங்க?" என அபி கையைச் சுரண்டினாள் நனியிதழ்.

"நீ விட்ட பீலால கவனமா இருந்ததால பெல்லடிச்சதே கேக்கலடி" என அவளைச் சுரண்ட விடாமல் தட்டிவிட்டாள் அபி.

"சிட்" என்ற நிலவன், "அசைன்மெண்ட் என்னாச்சு? நாலுபேர் தான் தந்துருக்கீங்க மத்தவங்க ஏன் இன்னும் சப்மிட் பண்ணல?"

"யாருடி அந்த நாலு பேரு?" என்றாள் செண்பகவள்ளி.

"இன்னைக்கா லாஸ்ட் டேட்டு?" என்றாள் நனியிதழ்.

"உனக்கு உக்காந்து கதை எழுதவே நேரம் சரியா போயிருக்கும். எப்டி அசைன்மெண்ட்லாம் எழுதிருக்க முடியும் அதனால பெருசா வருத்தபடுறமாறி நடிக்காத" என அபி பேச,

மறுபடியும், "அசைன்மெண்ட் எங்க?" என்றான் நிதானமாக நிலவன்.

"சார் ஜி.எஸ்.டி போர்டல் ரொம்ப ஸ்லோ. லாஸ்ட் டூ டேய்ஸா மிட் நைட் கூடச் செக் பண்ணிட்டோம் சைட் ஃபைவ் மினிட்ஸ் கூட ஓபனா இருக்கல, ஆட்டோமெட்டிக்கா க்ளோஸாகிடுது‌. எங்களால அதுல வர்ற பேஜஸ ஸ்கீரின் ரெக்கார்ட் பண்ண முடியல" முன்வரிசையில் இருந்த ஒருவன் எழுந்து சொல்ல,

"சாட்டர்டே நான் பார்த்தேனே டூ அவர்ஸ் வொர்க் பண்ணனே அதுல, அந்த டைம்ல உங்க எல்லாருக்கும் ஏன் வொர்க் ஆகல?" எனக் கேட்டவனுக்கு அவர்களால் பதில் கொடுக்க முடியவில்லை. அவர்கள் தான் அபினவியுடன் ஃபோரம் மாலிற்கு படம் பார்க்கச் சென்றிருந்தனரே அந்நேரம். அது தெரிந்ததால் தானே அவனும் கேட்கிறான்.

"சாரி சார்!" என்றான் எழுந்து நின்றவன்.

"நாளைக்கு மார்னிங் எனக்குச் சப்மிட் பண்ணிருக்கனும். இல்லன்னா நிச்சயமா இன்டர்னல்ல ஃபைவ் பாய்ண்ட்ஸ் குறைப்பேன். நோ மோர் எக்ஸ்க்யூசஸ்" என்றான். எல்லோரும் தலையசைத்துக் கேட்டுக் கொண்டனர்.

அன்றைய வகுப்பை எடுத்து முடித்தவன், "தேவையில்லாத பேச்சுகள குறைச்சுட்டு படிக்க வந்த வேலைய மட்டும் பாத்துட்டு போகணும், புரியும்னு நினைக்கிறேன்" என வெளியேறி விட்டான்.

"என்ன பாக்கவே இல்ல. என் மேல ரொம்ப கோவமா இருக்காறோ? எப்டி பக்கீஸ் சாயந்தரம் வீட்டுக்குப் போவேன் நானு? போச்சு மறுபடியும் நா ஹாஸ்டல் வந்தேன்னா நீங்க எல்லாருந்தான் பொறுப்பு சொல்லிட்டேன்" என அவள் கத்தி அனைவரையும் திட்ட,

வெளியே சென்ற வேகத்தில் மீண்டும் உள்ளே வந்த யாழ்நிலவன், கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தை முதலில் இருந்த மாணவியிடம் கொடுத்து, "இன்னைக்கு டாபிக்ல மார்க் பண்ணிருக்க அக்கவுண்ட்ஸ நாளைக்கு சார்ட்டவுட் பண்ணிட்டு வரணும், எல்லோரும் மார்க் பண்ணிட்டு புக்க கொண்டு வந்து குடுங்க" எனக் கூறிவிட்டு இப்போது அவளை மட்டுமே பார்த்து முறைத்து வெளியேறினான்.

"என்னடி என்ன மட்டும் முறைச்சுட்டு போறாரு. நீங்கத் தான் கதை கேட்டீங்க, உங்களுக்குச் சொல்லப் போய்த் தான் நா மாட்டிகிட்டேன்"

"இவ என்ன அபி அவர் பாத்தாலும் பெப்பேன்றா பாக்கலனாலும் பெப்பேன்றா என்ன பிரச்சினையா இருக்கும்?" எனச் செண்பா கேட்க,

"அவளுக்கு லவ்வு முத்தி போய் எதெல்லாம் நடக்காதோ அதெல்லாம் நடக்குற மாதிரி அவ கற்பனைல வாழ ஆரம்பிச்சுட்டா அதனால இப்படிலாம் மாத்தி மாத்தி பேசுறதும் சகஜமா வரும். நாம நம்ம பிரண்டா போய்ட்டாலேன்னு பொறுமையா போகணும்" என அபி நக்கலாகச் சொல்ல,

"சரி அவ இல்லூயூஷனாவே இருந்தாலும் நம்ம கண்ணுக்கும் அன்னைக்கு வீடியோ கால்ல சார் தெரிஞ்சாரே? நாம பார்த்தோமே? அதெப்படி?"

"பாய்ண்ட். அதான் எப்டி ப்ளாக் மேஜிக் எதும் பண்ணிட்டாளோ?"
நடுவில் அவளை வைத்துக் கொண்டு இருபக்கமுமிருந்து அவர்கள் பேசிக்கொண்டிருக்க, உஷ்ணமாக மாறிக்கொண்டிருந்தாள் நனியிதழ்.

"அதெல்லாம் இவளுக்குத் தெரியுமா? நமக்கு ஒருநாளும் செஞ்சு காமிக்கல பாத்தியா?"

"ஹாஸ்டல்ல யார்ட்டயாது அரைகுறையா கத்துட்டு நம்ம கண்ணுல மண்ண தூவிட்டிருப்பாடி செண்பா இவ" என்க, இருவர் தலையையும் இருகைகளாலும் பிடித்தவள் அவர்கள் முன்னிருந்த டேபிளில் தள்ளி முட்ட வைத்துவிட்டாள் அதீத கடுப்பில்.

"ஏன்டி அரலூசே" எனக் கத்தினர் இருவரும்.

"என்ன நம்ப‌ மாட்டீங்களா ரெண்டு பேரும்?"

"நீ உண்மைய சொன்னியா? அத்தன பேரையும் நிக்க வச்சு‌ கதையா விடுத நீ? எங்கள‌ பாத்தா மஞ்ச மாக்கான் மாறி இருக்கா உனக்கு? இவ பெரிய மேனகையாம் துர்வாசர் இவ அழகுல மயங்கி நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்தி இவ கழுத்துல தாலி கட்டுனாராம். கொன்றுவேன்டி உன்ன கதைனாலும் ஒரு லாஜிக் வேணாமா?" அபி சண்டைக்குக் கிளம்ப,

"அதுலையும் இவ அவர்ட்ட கோச்சுகிட்டு விரட்டி வேற விட்டேன்னு சொன்னா பாரு" எனச் செண்பாவும் கலாய்க்க, மொத்த வகுப்பும்‌ வேடிக்கைப் பார்த்தது. இந்தமுறை திரண்டு வராமல் அவரவர் இடத்தில் இருந்தே வேடிக்கை மட்டும் பார்த்தனர்.

"ம்ச்" என முகத்தைச் சுருக்கிய நனியிதழ் சட்டென்று நியாபகம் வரத் தன் கழுத்தில் கிடந்த நீல செயினை வெளியே எடுத்தாள், "இது என்ன தெரியுதா இல்ல இதும் ப்ளாக் மேஜிக்ல கட்டிக்கலாமா?" எனத் தாலியைக் காட்டிக் கேட்கவும், பேயறைந்த முழி முழித்தனர் அனைவரும்.

"ஏதுடி தாலி? சார் கட்டனதா இல்ல உனக்கு நீயே கட்டிகிட்டியா?" என்ற அபியை குனிய வைத்து மொத்து மொத்தென மொத்தி விட்டாள் நனியிதழ்.

அவன் குடுத்துச் சென்ற கணக்கைக் குறித்து வைத்த புக்கை கையிலெடுத்த செண்பகவள்ளி, "இந்தப் புக்க உன்னோட மூன்ட்ட நீயே கொண்டு குடுக்குற, அவர்ட்ட ஒரு ரியாக்ஷனும் இல்லன்னு வை, நீ சொன்னது பூராவும் பொய்யி இனி இப்டி பீலா விட மாட்டேன்னு அம்பது தோப்புக்கரணம் போடணும்" என்க.

"என் புருஷன் நேத்தே சொன்னாருடி, அவங்க உன் பேச்ச நம்பலனா போட்டும்னு விட்ரணும்னு. நாந்தான் பிரண்டா போயிட்டீங்களேன்னு ப்ரூஃப்லாம்‌ காட்டிட்ருக்கேன் இன்னும் டெஸ்ட் வைப்பீங்களா டெஸ்ட்டு. நம்புனா நம்புங்க நம்பாட்டி போங்கடி" என்றவள் எழுந்து சென்று விட்டாள். சாப்பாட்டு இடைவெளி அக்கபோரும் ஆர்ப்பாட்டமுமாகக் கழிய,

"ஜஸ்ட் குடுத்துட்டு மட்டும் வந்திடு"என மீண்டும் அவன் புக் அவள் கைக்குத் தான் வந்தது அனைவராலும்.

"ஹே நான் போ மாட்டேன். அவரே செம கடுப்பல இருக்காரு போய் நானே தலைய நீட்டவா? போ நெவர்" என்றாள் அடமாக.

"காலைல பைக்ல கூட வந்த தான? அத வச்சு பாக்கும்போது நீ சொன்னதெல்லாம் நிஜம் மாறித் தாண்டி இருக்கு" அபி இழுத்து நிறுத்த,

"அஸ்கு புஸ்கு இப்ப என்ன கோர்த்துவிட நம்புனேன் வெம்புனேன்னு நீ ஒன்னு நடிச்சு கொட்ட வேணாம் அபி" எனப் பழிப்பு காட்டினாள்.

"ரொம்ப தான் நீ அவருக்குப் பயந்தமாதிரி நடிக்காத, எங்களுக்குக் கன்பார்ம் பண்ண ஒரு சான்ஸ் தா. போய்க் குடு" என்றாள் செண்பகவள்ளி.

"நாலு பக்கத்துக்குப் பேசுவாரு வேணா வந்து பாருங்க" என வெடுக்கென்று அவள் கையிலிருந்தப் புக்கைப் பிடுங்கிக் கொண்டு வெளியே நடக்க, அவசரமாகப் பின் தொடர்ந்தனர் அபினவி, செண்பகவள்ளியுடன் இன்னும் நால்வரும்.

ஆசிரியர் அறையில் தனித்தனி கேபினில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். அதில் யாழ்நிலவனும் ஒருவன்.
'மத்த நேரம் மாதிரி சத்தமா திட்டிருவாரா இல்ல பொண்டாட்டியாச்சே பாவம்னு மெல்லமா திட்டுவாரா தெரியலையே அம்மு' என அவன் முன் சென்று நிற்க. அவர்களை எட்டி பார்த்துக்கொண்டு உடன் வந்த நால்வரும் ரெண்டு கேபின் தள்ளி நிற்க. அவர்களுக்குப் பின் ஆசிரியர் அறைக்குள் நுழைந்த வெங்கட்பிரபுவும் அவர்கள் பின்னரே வேடிக்கைப் பார்த்து நின்று விட்டான்.
குனிந்து செல்லில் கவனமாக இருந்த நிலவன், முன்னால் ஆள் வந்து நிற்பதில் நிமிர்ந்து, "எஸ்" என்க.

"புக்" என நீட்டினாள் சிரித்துக் கொண்டே நனியிதழ்,

"வச்சுட்டு போங்க நனியிதழ்" என்றவன் மீண்டும் செல்லில் குனிந்து கொள்ள,

'அம்புட்டு தானா? நம்மள அடையாளம் தெரியலயோ?' என்றவள் உடன்‌ வந்தவர்களைப் பாவமாகத் திரும்பிப் பார்க்கையில் தான் வெங்கட்பிரபுவை பார்த்துத் திருட்டு முழி முழிக்க,

"இன்னும் ஏன் நிக்றீங்க நனியிதழ்?" என நிமிர்ந்தவன் அவள் முழியும் அது சென்ற திசையையும் எட்டிப் பார்த்து முறைக்க, அவன் முறைத்ததில் ஜர்க்காகி திரும்பியவர்கள் வெங்கட்டைக் கண்டு இன்னும் இரண்டடி பின் வைத்து, "புக் குடுக்க வந்தோம் சார்" எனச் சிரித்துக் கொண்டே சொல்லி அவனைத் தாண்டிச் செல்ல,
'அடேய் நானு' என மனதிற்குள் அலறிய நனியிதழும், "தேங்க்யூ சார்" என முறைத்த நிலவனுக்கும், திரும்பி வெங்கட்பிரபுவிற்கும் சேர்த்து சொல்லி விறுவிறுவென வெளியேற, அவர்கள் சென்றதும் வெங்கட்பிரபு சிரிக்க, யாழ்நிலவனும், "ஓவர் சேட்டை வெங்கட்" எனச் சொல்லிச் சிரித்துக்கொண்டான்.

நேரே அவர்கள் கேண்டீன் வந்துவிட, அப்படியொரு சிரிப்பு அனைவரிடமும், "நாம எட்டி பாத்துட்டுருந்தத பாத்து என்ன நினைச்சுருப்பாரு வெங்கட் சார்" எனச் சொல்லிச் சிரிக்க,

"ஏன்டி விட்டுட்டு ஓடி‌ வந்தீங்க?" எனப் பின்னாலேயே ஓடி வந்த நனியிதழும் இழைக்க இழைக்க நின்றாள்,

"நீ தான‌ சொன்ன, உன் மூன் நாலு பக்கத்துக்குப் பேசுவாருன்னு. அதான் பேசிட்டு மெல்ல வரட்டும்னு வந்துட்டோம்" எனச் சொல்லி அவர்கள் மீண்டும் சிரிக்க,

"ஆமா ஏன் திட்டல?" என இவள் யோசித்துக் கொண்டே கேட்க,

"நாங்க உன் நல்லதுக்கு தாண்டிச் சொல்றோம் நீ ஒரு நல்ல டாக்டர்ட்ட கவுன்சிலிங் போ" எனச் சிரிப்பை அடக்கிக் கொண்டு அபி சொல்ல, மறுபடியும் மொத்தி விட்டாள் நனியிதழ்.

மாலை வரை இவர்கள் சண்டை இப்படியே தான் போய்க் கொண்டிருந்தது, வகுப்பு முடிந்து அனைவரும் வெளியே வர, இவள் நேராக அவன் பைக் அருகில் சென்று நிற்க, "ஹாஸ்டல் போலையா நீ?" என்றனர் கூடவே வந்த அவள் தோழிகள்.

"ம்ச் நீங்களா நம்புற அன்னைக்கு இருக்குடி உங்களுக்கு" என அவள் சொல்லிக் கொண்டிருக்க யாழ்நிலவன் வந்துவிட்டான்.
 

priya pandees

Moderator
"ஹே சார்டி வா" என அவளையும் அழைக்க,

"இங்க எதுக்கு கூட்டமா‌ நிக்றீங்க? வீட்டுக்குக் கிளம்புங்க" என அதட்டியவன், "நகரு" என அவளுக்கு மட்டும் வாயசைக்க, நகர்ந்து நின்றாள்.

மற்றவர்களும் நடப்பது போல் மெல்ல நகர, அவனுக்கும் அது புரிந்து தான் இருந்தது.
வண்டியை அதன் ஸ்டாண்டிலிருந்து வெளியே எடுத்தவன், ஏறி அமர்ந்து, "உக்காரு" என அவளைத் திரும்பிப் பார்க்க, ஏறி டபுள்ஸ் உட்கார்ந்தாள்.

வண்டியை எடுத்தவன், ஆவெனப் பார்த்து நின்ற அவள் தோழிகளைக் கடந்து வண்டியைச் செலுத்த, பின்னிருந்தவள் அவர்களுக்கு வக்கனம் காண்பித்து டாட்டா சொல்லிச் சென்றாள்.

"ஹே உண்மையாவே ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்பா இருப்பாங்களாடி?" என அபி கேட்க,

"அப்ப ஒரு வருஷமா யாரோ மாதிரி எப்டிறி இருக்க முடியும்? நமக்குலாம் கொஞ்சம் கூட டவுட்டே வரலையே?" என்றாள் மற்றொருவள்,

"ரெண்டே நாள்ல கல்யாணம் பண்ணவும் வாய்ப்பில்ல, ரெண்டு வருஷம் முன்னவே கல்யாணம் பண்ணிட்டோம்னு அவ சொன்னதையும் நம்புறளவுக்கு இல்ல? எப்டி போட்டாலும் இடிக்குதேடி?" என்றாள் இன்னொருவள். இவ்வாறு அவர்களுக்குள்ளேயே குழம்பி வீடு சென்றும் கான்ஃப்ரன்சில் அன்றைக்கு நிலவனும் அவன் அம்முவுமே அவர்கள் வாயில் விழுந்து புரண்டனர். அவளுக்கும் அழைத்தனர், ஆனால் அவளுக்குத் தான் பேசுமளவிற்கு நேரமில்லை குடும்ப இஸ்திரி ஆகி இருந்தாளே அதனால்.

செல்லும் வழியில், "மாமா சாமானெல்லாம் காலைலயே ஏத்தி விட்டாங்களாம். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும், இப்ப இருக்க வீட்டுக்குப் போய்த் தேவையான ட்ரெஸ் எடுத்து நீ பேக் பண்ணு, நா அம்சாக்காட்ட சொல்லிட்டு வந்துடுறேன். அப்றம் நாம அங்க போனா திங்க்ஸ் வரவும் இறக்கி செட் பண்ண சரியா இருக்கும்" அவன் சொல்ல,

"நீங்க என்மேல கோவமா இருந்தீங்க தான? காலைல முறைச்சுட்டு போனீங்க? அங்க நான் சொல்றத யாருமே நம்பல தெரியுமா? சோ நீங்க நான் பேசுன எத கேட்ருந்தாலும் திட்டக் கூடாது" அவனே மறந்திருந்ததை ஞாபகம் செய்து, முன் ஜாமீன் பெற்றுக் கொண்டிருந்தாள்.

"அம்மு காலேஜ்ல நீ படிச்சு முடிச்சு வெளில வர்ற வர நம்மள பத்தின எந்த டாபிக்கும் நாமளே அவங்க ஈசியா பேசுற மாறிக் குடுக்க கூடாது. உனக்கு அது எப்டி வேணா இருக்கலாம். எனக்கு அது இமேஜ் இஷ்யூ ஆகிடும். நான் சொல்றது புரிஞ்சுக்க ட்ரை பண்ணு." என்க,

அமைதியானவள், "சரி" எனக் கேட்டுக் கொண்டாள். அதன்பின் அவர்கள் பொழுது சென்ற வேகம் தெரியவில்லை, அம்சாவிடம் சொல்லிவிட்டு புது வீடு வந்திறங்க, ஊரிலிருந்து அவள்‌ சீரும் வந்திறங்கியது. அதையெல்லாம் வெங்கட்பிரபு உதவ மேலேற்றி விட்டு, அதில் மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ் என முதலில் தேவையானவற்றை பிரித்தடுக்கினர். கட்டில், மெத்தை, சோஃபா, மரத்திலான டைனிங் டேபிள் எல்லாம் அப்படியே இறக்கி அங்கங்கு கொண்டு வைத்துவிட்டனர்.

"எதுக்கு இவ்வளவும் திரும்ப அதே வீட்டுக்குப் போனா இத எல்லாம் எங்க கொண்டு வைக்றது?" என்றான் நிலவன்.

"அக்காக்கு குடுத்த எல்லாம் ஒன்னு குறையாம எனக்கும் வாங்கிட்டாங்க அப்பா. இதுக்குள்ள கடனெல்லாம் கூட அடச்சுட்டாங்க" என நனியிதழ் பெருமையாக சொல்ல.

"ம்ம், சரி பிரிச்ச‌ வரப் போதும், சாப்பாடு செய்யலாம் வா" என இருவருமாக சமைத்து உண்டு, முன்னிருந்த மாடி தோட்டத்து குளுமை காற்றில் நிலாவை பார்த்து அமர்ந்து விட்டனர். ஏனோ அந்த நொடி இருவரின் மனதிற்குள்ளும் அவ்வளவு இதமாக இருந்தது. அவன் அவளைத் தோளோடு அணைக்க, அவன் தோளில் அவள் சாய்ந்து கொண்டாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 9

"இந்த மருதாணி நல்லா பிடிக்குமா அம்மு?" என்றாள் நனியிதழ் எதிரிலிருந்த மருதாணி செடியைப் பார்த்தவாறு.

"தெரியலையே, அரைச்சு வச்சு பாரு தெரிஞ்சுடும்"

"ம்ம் இந்த வாரம் சனி, ஞாயிறுல வைக்கலாம் ஓ.கே வா. மருதாணி ஸ்மெல் பிடிக்குமா உங்களுக்கு?"

"ம்ம் நல்லாருக்கும்ல? பாட்டி அடிக்கடி வைப்பாங்க"

"ஓஹோ! சொர்ணம் பாட்டிக்கு மருதாணி ரொம்ப இஷ்டமாக்கும்?இங்க என்ன செடிலாம் இருக்குன்னே நா இன்னும் நல்லா பாக்கல. காலைல எழுந்து தண்ணி ஊத்தணும் அப்பத்தான் நல்லா பார்க்கணும்"

"அசைன்மெண்ட் முடிச்சுட்டியா அம்மு?" என்றான் தன் தோள் சாய்ந்திருந்தவளின் கையிலிருந்த வளையலில் விளையாடிக் கொண்டு.
"ம்ச் அம்மு எனக்கு மட்டும் நாளைக்கு எக்ஸ்க்யூஸ் தருவீங்க தான?"
என்றாள் இன்னும் வாகாகச் சாய்ந்து கொண்டு, அவளுக்கு இப்பொழுதே கண்ணைச் சொருகி கொண்டு வந்தது.

"நோ. ரூல்ஸ் எல்லார்க்கும் ரூல்ஸ் தான் அம்மு."

பட்டென்று எழுந்தவள், "நிஜாமாவா சொல்றீங்க?"

"ம்ம் உனக்கு மட்டும் ஃபேவர் பண்றது எப்டி சரியா இருக்கும்? காலைல நீ சொன்ன கதை அப்படியே இருக்கட்டும்னு தான் நா உன்ன ஒன்னும் சொல்லல. எல்லார்க்கும் எல்லாம் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்ருக்க வேணாம், இந்த லவ் ஸ்டோரி இப்டியே இருக்கட்டுமேன்னு தான் விட்டுட்டேன். அதையே நீ எல்லா வகையிலையும் யூஸ் பண்ண நினைக்கக் கூடாது" என்றான் கொஞ்சமும் இளக்கமின்றி.

கண்ணைச் சுருக்கி இரண்டு நிமிடம் முறைத்தவள், "இவ்வளவு நேரமும் உங்க கூடவே தான சுத்தி வந்தேன். புக்கோ லேப்டாப்போ ஒருத்தி கைலயே எடுக்கலையேன்னு தெரிஞ்சும் கேக்றீங்கல்ல? முசுட்டு மூன். க்கூம்" என முறைத்தே வெடுக்கென்று எழுந்து செல்ல, அவள் செல்லவும் குறும்பாகச் சிரித்துக் கொண்டே மல்லாந்து படுத்தான் யாழ்நிலவன்.

இதற்கு முன்னிருந்தவர்கள் எதற்காக மாடி தோட்டத்தை வைத்தனரோ தெரியாது, ஆனால் உயர்ந்த செடிகள் சுற்றியிருந்த அக்கம்பக்கத்து மாடி வீடுகளைப் பார்க்க விடாமல் மறைந்திருந்தது. மருதாணி, கொய்யா, தக்காளி, மல்லிப்பூ, எழும்பிச்சை, மாதுளம், செம்பருத்தி, சில கீரை வகைகள் என முற்றம் சுற்றியிருக்க நடுவில் மட்டும் இடம். இடது ஓரத்தில் இறங்கி செல்லும் படி.

முன்னிருந்தவர்கள் வயது பிள்ளைகள் கூட வைத்திருந்திருக்கலாம், இல்லாமல் காரணமேயின்றி குளுமைக்காகவும் வைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் நனியிதழுக்கும் யாழ்நிலவனுக்கும் அந்த இடம் ரம்யம் கலந்த இதத்தை அளித்தது.
நனியதழ் உள்ளேச் சென்ற வேகத்திலேயே நோட்டும் லேப்டாப்புமாக மீண்டும் அவனருகில் வந்தமர்ந்தாள். நிலா வெளிச்சமும் வீட்டினுளிருந்து வந்த ஒளி வெளிச்சமும், அவளுக்குப் படிக்கப் போதுமானதாக இருந்தது.
"அம்மு" என்றான் சில நிமிடத்திற்கு பிறகு,

"இப்ப அந்நியனா கூப்பிடுறீங்களா இல்ல ரெமோவா கூப்பிடுறீங்களா?" என்றாள் லேப்டாப்பில் ஒரு கண்ணும் எழுதும் எழுத்தில் ஒரு கண்ணுமாக.

ஒரு கையைத் தலைக்குக் கொடுத்து அவள்‌ பக்கம் திரும்பிப் படுத்தவன், "எப்படி கூப்பிடணும் உனக்கு?" என்றான்.

லேப்டாப்பிலிருந்து நிமிர்ந்து அவன் முகத்தை உற்று பார்த்தவள், "முறைக்கல அப்ப ரெமோ தான். சொல்லுங்க எதுக்கு கூப்டீங்க?" எனக் கேட்க,

"நான் தாலி கட்டும்போது என்னையே பாத்தியே அப்ப என்ன நினைச்ச?"

"எதுமே நினைக்கல. அப்ப பயம்‌, பதட்டம் அப்பா அக்கா அழுறது மட்டுந்தான் மனசு முழுக்க இருந்தது. படிப்ப பாதில நிறுத்திக் கல்யாணம் இனி லைஃப் என்னாகுமோன்னு டென்ஷன்ல மேரேஜ்கு ரெடியாகுறேன். மாப்ளன்னு வந்தவரு ஓடிப் போகல, காணாம போகல, இறந்து போயிட்டாருன்னு சொல்றாங்க அப்ப எனக்கு எப்டி இருக்கும்? ஆனா‌ அப்பா வந்து சொன்னாரு, 'என் முதலாளி அவர் பேரன கட்டிக்க சொல்றாரு கல்யாணம் பண்ணிக்கோ இதழு, இல்லனா இதே பேராகிடும். திரும்ப உனக்குக் கல்யாணம் பண்ணுறதுக்குள்ள நா என்னவாகுவேனோன்னு இருக்கு. முதலாளி ரொம்ப தங்கம் அவர் பேரணும் அப்படி தான் இருப்பாரு. நீ நல்லா இருப்ப'ன்னு சொன்னாரு. நா முதல்ல எனக்கு வரப் போற புருஷனா பாத்ததே உங்கள தான் அதும் மேடைல வச்சு அவ்வளவு கிட்டத்துல தான், நீங்கத் தாலி கட்டும்போது தான். ஏன் திடீர்னு கேக்றீங்க?"

"நீ பாத்த பார்வைய நான் பல நாள் யோசிச்சுருக்கேன், என்ன பொறுத்த வரை நீ அவ்வளவு நேரமும் உன் வருங்கால வாழ்க்கைன்னு நினைச்சுட்ருந்தவன் நா இல்லையே அதனால அப்டி பாத்தியோன்னு நினைப்பேன்"

"ம்ச் அந்த மனுஷன நான் ஃபோட்டோல கூடப் பாக்கல. பாக்குறதுக்கு காட்டவும் இல்ல. அவங்க அவ்வளவு அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணாங்க"

"உன் அக்கா வீட்டு ரீலேஷன் தான? அவங்க கூட உண்மைய சொல்லையா?"

"அவங்களும் எங்களுக்கு இப்டின்னு தெரியாதுன்னு சொல்லிட்டாங்க"

"ம்ம்‌ நீ இந்த நிலவனுக்குன்னு இருந்துருக்குமோ அம்மு?"

"அப்படிதான் போல அம்மு" என அவளும் கன்னத்தில் கை வைத்துக் கனவு காண,

"சரி நீ எழுதி முடி, டைம் போகுது தூங்க போகணும்ல" என்றதும், கனவிலிருந்து தொபுக்கடீரெனக் கீழே விழுந்தவள் உஷ்ணமாக முறைக்க, வாயைக் குவித்து பறக்கும் முத்தம் தந்தான் யாழ்நிலவன்.

அடுத்து வந்த நாட்களும், கல்லூரி, வீடு என அவர்கள் வாழ்க்கையை ரசித்து மகிழ்ந்து வாழ்ந்தனர். இரண்டு மாதத்தில் மொத்த கல்லூரிக்கும் இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்ற செய்தி பரவி இருந்தது. ஒரே கல்லூரியில் இருப்பதால் அவர்களை யூஜி பிரிவில் இருப்பவர்கள் எல்லாம் ஆர்வமாகவும், ஆராய்ச்சியாகவும், அதிசயமாகவும் பார்க்கத் துவங்கியிருக்க, அவனுக்கு அது கடுப்பாக இருந்ததென்றால், நனியதழ் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கிவிட்டு பெருமிதமாகச் சுற்றி வந்தாள்.

இப்படியே நாட்கள் கழிய, ஒரு நாள் மனோன்மணி வகுப்பு நேரத்தில், "ஸார் ஸ்ட்ரைக் அனௌன்ஸ்ட். எல்லாரும் வெளில வாங்க" என்ற எம்.பி.எ மாணவனின் அழைப்பில், என்ன ஏதென்று எதுவும் தெரியவில்லை என்றாலும் எழுந்து வெளியேறத் தொடங்கினர் நனியிதழ் வகுப்பினர்.

"ம்ச் இத வச்சு ரெண்டு நாள் க்ளாஸ ஒப்பேத்திடுவானுங்க" என்ற மனோன்மணியுமும் ஆசிரியர் அறை கிளம்பி விட்டார்.

ப்ரின்சிபல் அறை இருக்கும் வளாகத்தின்‌ முன் மொத்த கல்லூரியும் குவிந்து நின்றது. ஆசிரியர்களும் வந்து வந்து அடக்கிவிட்டு சென்று கொண்டிருந்தனர்.

"பிரியாணி வரும்ல, இந்தத் தடவ எந்தக் கடைல வாங்குறாங்களாம்? யார்ட்ட கேக்கலாம்?" என்ற செண்பகவள்ளி கூட்டத்திற்குள் பெரிய தலைகளைச் சுற்றித் தேடி பார்க்க,

"எப்பையும் போலக் காக்கா பிரியாணிக்கு தாண்டி ஆர்டர் குடுத்துருப்பானுங்க. அவரே இரண்டு மாசத்துக்கு ஒருக்கா நம்ம ஸ்டரைக் சார்பா வர்ற பல்க் ஆர்டருக்கு மட்டுந்தான் கடை திறக்காரு தெரியுமா? இரண்டு மாச வருமானம் ஒரு நாள்ல கிடைக்குதுன்னு அம்புட்டு குதூகலம் அவருக்கு. அப்படி பட்டவர் வேற எங்கையாது நம்மாளுங்கள போக விடுவாரா?" என நனியிதழ் சொல்ல,

"ஒரே டேஸ்ட்ல சாப்புடுறோமே கொஞ்சம் மாத்தி பார்க்கலாம்னா முடியாதோ? நம்ம கல்லூரி வாழ்க்கை இந்தக் காக்கா பிரியாணிலயே முடிஞ்சுடுமோ?" என்றாள் அபி.

"விட்றி ரெண்டு நாள் கிளாஸ் கிடையாது, ஃபுல்லா க்ரௌண்ட்ல இருக்கலாம். டைமுக்கு பிரியாணியும், ஸ்நாக்ஸும் வரும், ஜாலி பண்ணலாம்" என்றாள் நனியிதழ்.

"ஆமா எதுக்கு இப்ப ஸ்ட்ரைக்காம்" எனச் செண்பகவள்ளி கேட்க,

"அது மட்டும் எவனுக்கும் தெரியலடி, பூராவும் பிரியாணிக்கு செத்த பயலுக போல, கூப்பிடதும் மந்திரி சீட்டுக்கு இடம் புடிக்றவனுங்களாட்டம் வந்து இடம் புடிக்குறதுல தான் இருக்கானுங்க" என்றாள் அபி.

"சைலன்ஸ்" என வந்து நின்றார் தாளாளர்.

"இந்தா வந்துட்டாருல்ல இப்ப அவரே சொல்லுவாரு" என நனியிதழ் சொல்ல,

"நாம வேற லெவல் பண்றோம்ல இதழு, ஸ்ட்ரைக்ல நாம நிக்றோம். ஆனா காரணம் யாருக்கு எதிரா நிக்றமோ அவரையே சொல்ல வைக்றோம். கெத்து பண்றோம்ல?" என்றாள் அபி.

"அப்படியும் சொல்லிச் சமாளிச்சுக்கலாம்" எனச் சிரித்தாள் நனியிதழ்.

"இங்க பாருங்க, ஸ்போர்ட்ஸ் டீம்ல இருக்றவங்க அண்ட் இன்னைக்கு வெளில விளையாடப் போனவங்கள தவிர யாரும் ஸ்ட்ரைக்ல கலந்துக்க கூடாது. மத்த எல்லாரும் மொத க்ளாஸ்க்கு போங்க" என்றார் எடுத்ததும் ப்ரின்சிபல்.

"ஐய்யையோ அப்பப் பிரியாணி?" என நெஞ்சில் கைவைத்து விட்டனர் மூன்று தேவிகளும்.

"அதெல்லாம் முடியாது நாங்க எங்க ஃப்ரெண்ட்ஸ் சார்பா நிப்போம். விளையாடப் போனது அவங்களா இருந்தாலும் அடி வாங்கிட்டு வந்துருக்குறது எங்க ப்ரண்ட். நாங்க அப்டிலா விட்டுட்டு போ முடியாது" எனக் கத்தினர் எம்.பி.ஏ மாணவர்கள்.

"நீங்களும் சும்மா வரல அந்தக் காலேஜ் பையன அடிச்சு காயமாக்கிட்டு தான் வந்துருக்கீங்க, அதுக்கு கண்டிப்பா சஸ்பென்ஷன் உண்டு. என்ன போராட்டம் பண்ணாலும் இந்த டைம் எந்த எக்ஸ்க்யூஸும் கிடையாது. சஸ்பென்ஷன் வாங்குனவங்க வீட்டுக்குப் போங்க. மத்தவங்க க்ளாஸுக்கு போங்க. இல்லனா இங்க நிக்ற மத்தவங்களும் அவங்கவங்க பேரண்ட்ஸ கூட்டிட்டு வந்துட்டு அபாலஜி குடுக்க வேண்டி இருக்கும்" என உறுதியாக முடித்து உள்ளே சென்று விட்டார் ப்ரின்சிபல்.

பெற்றோர்கள், மன்னிப்பு கடிதம் என்றதிலேயே பாதி கூட்டம் குறைந்திருந்தது, வகுப்பிற்கு செல்லத் துவங்கியிருந்தனர்.

"என்னடி நாம ஸ்டைரக் ரெண்டு நாள் இருப்போம். ரெண்டாவது நாள், எல்லாம் ஓகே கோ டூ யுவர் க்ளாஸஸ் இதான நம்ம கல்லூரி வழக்கம். இதென்ன புதுசா ஆரம்பிச்ச உடனேயே ஆட்டய கலைக்கிறது?" என்றாள் நனியிதழ்.

"இப்ப நாம போறோமா இல்ல ஸ்ட்ரைக்ல நிக்றோமா?" என்றாள் செண்பகவள்ளி.

"பிரியாணி வேணும்னா நிக்கணும் இல்லன்னா போகணும்" என்றாள் அபி.

"என்ன இருந்தாலும் இப்டி ஸ்ட்ரைக்ல நின்னு கூட்டத்தோட கூட்டமா அரக்க பறக்கக் கமெண்ட் அடிச்சுட்டு சாப்பிடும்போது வர்ற டேஸ்ட் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கூட வராதில்ல" எனப் பாவமாகச் செண்பகவள்ளி சொல்ல,

"அப்ப மதியம் வர மட்டும் கலந்துப்போமா? ஆர்டர் குடுத்த பிரியாணி வேஸ்டா போக்கூடாதுல்ல?" அபி சொல்ல,

"இன்னும் க்ளாஸ் போகலையா நீங்க?" என வந்து நின்றனர் வெங்கட்பிரபுவும், யாழ்நிலவனும். இவர்கள் மூன்று பேரோடு இன்னும் நாற்பது பேர் எம்.காம் வகுப்பினர் அங்கு நின்றனர்.

"இல்ல சார் ஸ்ட்ரைக்ல இருக்கோம்னு நேம் குடுத்துட்டோம்" என்றான் அவர்கள் வகுப்பு ரெப்பிரசென்டேட்டிவ்.

"அப்போ சஸ்பென்ஷன் வாங்க ரெடி ஆகிட்டீங்க?" எனக் கேட்டான் வெங்கட்பிரபு.

நனியிதழ் யாழ்நிலவன் பக்கமே திரும்பாமல் நிற்க, அவன் அவளையே தான் விடாமல் பார்த்தான். அந்த உந்துதலில் மெல்ல அவன் பக்கம் ஓர கண்ணில் பார்க்க, "நனியிதழ் உங்க அப்பா நம்பர் சொல்லுங்க" என அவன் நேராகவே அவளிடம் கேட்டு விட,
"மதியம் வரைக்கும் நின்னாலும் சஸ்பென்ஷன் உண்டா சார்" என்றாள் அவள் பாவமாக,

"அதென்ன மதியம் வரைக்கு மட்டும்?"
"காக்கா" என ஆரம்பித்த செண்பகவள்ளி முதுகில் நச்சென்று ஒரு அடி வைத்த அபி, "ச்சே லஞ்ச் வர எங்களுக்கு ப்ரேக் தான் சார் அதான் இவங்களுக்கும்‌ கொஞ்சம் சப்போர்ட் பண்ணலாமேன்னு நிக்றோம்" என்றாள்.

"எல்லாரும் உங்க பேரண்டஸ வரச் சொல்லிட்டு எவ்வளவு நேரம் வேணும்னாலும் நில்லுங்க" என முறைத்தான் யாழ்நிலவன்.

"ஹே போயிடலாம்டி. என் புருஷன் ரொம்ப முறைக்குறாரு" என முதலில் பம்மியது நனியிதழ் தான்.

"போடி" என்றிருந்தான் அவளுக்கு மட்டுமான வாயசைவில். அதில் தான் கிளம்பிவிடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தவள் மெதுவே நகரவும் தொடங்க,

"அடிப்பாவி" என அபினவி, செண்பகவள்ளி இருவரும் அவள் கையைக் கிள்ளி இழுத்து நிறுத்த, அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, மறுபடியும் "போடி" என்றான் கண்ணசைவில். இந்த முறை நிற்கவே இல்லை அவள் கிளம்பியிருந்தாள்.

"கழட்டி விட்டுட்டாளே எரும!" எனத் திருதிருத்தனர் மற்ற இருவரும்.

"என்ன செய்யப் போறீங்க? ஃபைனல் வார்னிங் கெட் பேக் டூ யுவர் க்ளாஸஸ்" என்றான் யாழ்நிலவன் அதட்டலாக. அந்த அதட்டல் வேலை செய்ய ஒன்றிரண்டு பேர் தவிர்த்து மற்ற எல்லோரும் கிளம்பியிருந்தனர்.
அக்கௌன்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டை சார்ந்த யூஜி மாணவர்களையும் அதட்டி அனுப்பி வைத்திருந்தான். மற்றவர்களை அவரவர் வகுப்பாசிரியர்கள் கிளப்பிக் கொண்டிருந்தனர்.

"ஏன்டி விட்டுட்டு வந்த?" என வகுப்பிற்குள் நுழைந்ததும் அபி சண்டைக்கு நிற்க,

"அம்மு என்ன அப்டி முறைச்சு போன்னு சொல்றாங்க என்னால எப்டி நிக்க முடியும். அதைவிட எங்கப்பாட்ட சொல்றேன்னு சொன்னாங்க பாரு நா அப்பவே கிளம்புற முடிவுக்கு வந்துட்டேன். நான் காலேஜ்ல அப்படியொரு ரவுடின்னு அல்ரெடி கோர்த்து விட்டு அதுக்கு நா வாங்கின ரெண்டு மணிநேர அட்வைஸ திரும்ப நீ வாங்குவியா?" என இவளும் எகிற,

"ஆமா சார் அவள போடின்னு அழகா திட்டுனத நானும் பாத்தேன்" எனச் செண்பகவள்ளி வெட்கபட்டுக் கொண்டே சொல்ல,

"நானும் நானும்‌. சோ க்யூட்டா இருந்தது" என்றனர் முன்னால் அமர்ந்திருந்த வேறு இரு பெண்களும் பரவசமாக.

"வீட்லயும் இப்படி தான் க்யூட்டா சண்ட போட்டுப்பீங்களா?" என மற்றொரு பெண் கேட்க,

"இப்ப ரொம்ப முக்கியமா அது? போடுற சண்டைய க்யூட்டா வேற போடணுமோ உங்களுக்கு?" என்றாள் அபி.

"அப்பத் தான அன்பு பெருகும்?"

"ஓவரா இமாஜின் பண்ணிட்டு கல்யாணம் பண்ணி போகாதீங்கடி. நம்ம வீட்ல நம்ம அம்மா அப்பா சண்டை பாத்ருப்பீங்கல்ல? அது தான் நாளைக்கு நமக்கும். அந்த க்யூட்னஸ்ஸ மட்டும் மனசுல வைங்க"

"ஒன்னு கவனிச்சீங்களா? இதுவரை நம்ம காலேஜ்ல நடக்காத ஸ்ட்ரைக்கா இந்த டைம்‌ மட்டும் ஏன் இவ்வளவு கெடுபுடி. இனி இதையே ஃபாலோ பண்ணிடுவாங்களே" என நனியிதழ் சொல்ல,

"ம்ம் யாரோ ஐடியா குடுத்துருப்பாங்களோ?"

"ஆமா மிஸ்டர் மூன்னா கூட இருக்கலாம்" என்றாள் நனியிதழ்.

அவர்கள் அப்படி பேசிக் கொண்டிருக்க, அந்த ஸ்ட்ரைகில் கலந்து கொண்டவர்களுக்கும் வெளியே இருந்து வந்த சிலருக்கும் மதியத்திற்கு மேல் அடிதடி கலவரமாகியிருந்தது.

முன்னரே அநேகம்பேரை கிளப்பி இருந்தனர் ஆசிரியர்கள். வீம்பாக நின்றவர்கள் மட்டுமே அந்த அடிதடியிலும் மாட்டிக்கொண்டனர். கல்லூரிக்கு முதலிலேயே தகவல் வந்திருந்தது, பிரச்சினையைப் பெரிதுபடுத்த வேணாமென வந்திருக்க, இவர்கள் இந்தளவிற்கான அடிதடியை எதிர்பார்த்திருக்கவில்லை.

"நீ கிளம்பு அம்மு, என் க்ளாஸ் பசங்க ரெண்டு பேரும் உள்ள மாட்டிட்ருக்காங்க. அண்ட் இவங்களயும் இப்டியே விட்டுட்டு வர முடியாது. நான் பாத்து சேஃப் பண்ணிட்டு வந்துடுறேன். நீ பஸ்ல போயிடு" என்றுவிட்டான் நனியிதழிடம்.

"சீக்கிரம் வந்திடுங்க அம்மு" என்றுவிட்டே கிளம்பினாள். அவன் வீட்டிற்கு வருகையில் இரவு ஒன்பதை தாண்டி இருந்தது. அவ்வளவு சோர்ந்து போய் வந்தான். உடையெல்லாம் கசங்கி அழுக்கு படிந்து லேசாக ரெத்த கரையோடு வேறு இருந்தது.

"யாருக்கும் எதுவுமா அம்மு? ப்ராப்ளம் சால்வ்டா?" என அவன் குளிக்க உதவினாள். அவ்வளவு அலுப்பிலும் அவள் அருகாமை அவனுக்கு இதமாக இருந்தது.
அப்படியே கட்டிக்கொண்டு நின்றான்.

"ம்ம் போனமா விளையாண்டமா வந்தமான்னு இருக்காம, அங்க நாலு பேர் மண்டைய உடச்சுட்டு வந்துருக்கானுங்க, அதான் அவனுங்க திரும்ப கத்தியும் கம்புமா வந்துட்டானுங்க, நாலு பேருக்கு நல்ல அடி மத்த எல்லாருக்கும் சின்ன சின்னதா தான்"

"அதான் எங்க எல்லாரையும் க்ளியர் பண்ணீங்களா?"

"ம்ச் அவனுங்க சண்ட போட்டுட்டு வந்து சஸ்பென்ஷன் கேன்சல் பண்ண சொல்லி நிக்றானுங்க, நீங்கக் காரணமே தெரியாம கூட நிக்றேன்றீங்க? அவங்க காலேஜ்ல இருந்து பிரச்சனை வரும்னு தெரியும். அதான் ப்ரின்ஸி அவ்வளவு ஸ்டிரிக்டா சொல்லிட்டு போனாரு. ஆனா இப்படி அடிதடில இறங்குவாங்கன்னு நினைக்கல. போலீஸ் கேஸாகிடுச்சு"

"நாங்க பிரியாணிக்காக நின்னோம்" என்றாள் முறைப்புடன்.

"உங்களயெல்லாம் ப்ரியாணிய சாப்பிட்டு உள்ள முட்டி மோதுங்கன்னு விட்ருக்கணும்டி" என அவன் சிரிக்க,

"என் அம்மு எனக்காகச் சண்ட போடுவாங்க"

"நினைப்பு தான். பேசுற வாய்க்குக் கொஞ்சம் சண்டையும் போட வேண்டிய தான நீங்க"

"நாங்க தான் பிரியாணிய சாப்டதும் ஜுட் விட்ருப்போமே, எப்டினாலும் சண்டைல நாங்க இருந்துருக்க மாட்டோம்"

அவள் தலையில் கொட்டியவன், "பசிக்குது சாப்பாடு எதும் செஞ்சியா?" என்க,

"ம்ம் சூப்பர் ஐட்டம் செஞ்சுருக்கேனே. ட்ரஸ் மாத்திட்டு வாங்க சாப்பிடலாம்" என்றவள் அவன் வரவும் உப்மாவை‌ கொண்டு வைக்க,

அவளைத் திரும்பி முறைத்தவன், "வந்ததுல இருந்து நீ பாத்த அதி முக்கிய வேலைகள வருசையா சொல்லு கேட்போம்" என்றவன் பசியில் உப்மாவை சாப்பிடவும் தொடங்கியிருந்தான்.

"அக்காக்கு பேசுனேன், அப்பாட்ட பேசுனேன், அப்றம் பினான்சியல் மேனேஜ்மென்ட் பத்தி நானும் அபியும் செண்பாவும் டிஸ்கஸ் பண்ணோம், பாத்தா மணி ஒன்பதாகிடுச்சு. படிச்சதுல நேரம் போனதே தெரியல அம்மு"

"நீங்க மூணு பேருந்தான? கண்டிப்பா படிச்சுருப்பீங்க" என்றவன் உப்மாவை காலி செய்திருக்க, அவன் எழுந்து கொள்ளவும் தான் அதையே கவனித்தாள்.

"எனக்கில்ல? நா இன்னும் சாப்பிடவே இல்ல தெரியுமா? உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணேன்" என முகத்தைத் தூக்க,

"படிச்சுட்ருந்ததல உனக்குப் பசி தெரிஞ்சுருக்காதுல்ல அம்மு?" என்றவன் நக்கலில் முறைத்து நின்றாள்.

அவனோ அவளுக்குத் தோசை ஊற்றக் கல்லை எடுத்து அடுப்பில் வைக்க, "தோசையா?"

"ம்ம் உனக்கு அது வேணாம், அந்த பாவம் என்னோடே போவட்டும். நான் தோச ஊத்தி தரேன் பொடி வச்சு சாப்ட்டுகோ" என்றவன் தோசை வார்த்து தரச் சமத்தாகச் சாப்பிட்டாள்.

இனி எவ்வளவு தாமதமானாலும் அவனுக்கும் சத்தான உணவைக் கொடுக்க வேண்டும் என மனம் உறுதியெடுத்தது. அவன் அவளுக்காகச் செய்யும்போது அவள் அனுபவிக்கும் அந்த மகிழ்ச்சியை அவனுக்கும் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பரித்தது அவள் மனது.

மறுமாதத்தில் பீரியட்ஸ் தள்ளிப் போயிருந்த இரண்டாம் நாளே, "அம்மு ரெண்டு நாள் தாண்டிடுச்சு நா ப்ரெக்னன்ட் ஆகிட்டேன்னு நினைக்கிறேன். செக் பண்ணிடுவோமா?" எனத் துள்ளி கொண்டிருந்தாள்.

"அதெல்லாம் இருக்காது. நான் கவனமா தான் இருந்தேன். நீ காலேஜ் முடிச்சிடு அப்றம் பாத்துக்கலாம் பேபி எல்லாம்"

"அப்டிலாம் இல்லையாம் எவ்வளவு கவனமா இருந்தாலும் பேபி ஃபார்ம் ஆகுமாம்" என்றாள் அவள் உறுதியாக.

"உனக்கு யார் சொன்னா?" என்றவன் கேள்வியில் கண்ணை அகல விரித்தாள், 'உளறிட்டியே அம்மு' என மானசீகமாகத் தலையில் ஓங்கி அடித்துக் கொண்டாள்.

"உனக்கு யார் சொன்னான்னு கேட்டேன் அம்மு?" உறுமலாக வந்தது அவன் வார்த்தைகள்.
 

priya pandees

Moderator
"ஃபோன்ல பாத்தேன்"

"எங்க காட்டு நீ எந்த வெப்சைட்ல பாத்தன்னு நானும் பாக்றேன்"

"அப்ப நான் சொன்னா நம்ப மாட்டீங்களா? மை ஃபோன் மை ப்ரைவசி, அதெல்லாம் நீங்கக் கேட்க கூடாது"

"ஏன் பலான படம் பாக்றியா அதுல? எனக்குக் கூடக் காட்டாம மறைக்குறளவுக்கு என்ன வச்சுருக்க அதுல? கொண்டா இங்க" என்றவன் சுற்றி தேடி அவள் போன் இருந்த இடத்திலிருந்து எடுத்து அதில் துழாவி கொண்டிருக்க,

'ஹப்பாடி மூன் டைவர்ட்டாகிட்டாரு' என நிம்மதியானவள், "என்ன நம்பாம ஃபோன பாக்றீங்க தான? நான் கோவமா போறேன்" எனப் பேசி அறையிலிருந்து வெளியேறப் போனவளை, கையைப் பிடித்திழுத்து நிறுத்தினான்.

"நில்லுங்க மேடம் சேர்ந்தே போலாம்" என்றவன் போனை அவளிடமே நீட்டி, "எதுல செக் பண்ணன்னு இப்ப எடுக்குற" என்க,

"என்னத்த?" என்றாள் புரியாதது போல்,

"கண்ண நோண்டிருவேன்டி. உருட்டி முழிச்சு ஏமாத்துற வேலைலாம் எங்கிட்ட வேணாம். ஒழுங்கா ப்ரெக்னன்ஸி பத்தி யார்ட்ட டிஸ்கஸ் பண்ணண்ணு நீயே சொல்லிடு" என மிரட்டவும்,

"அபிட்டயும், செண்பாட்டயும்" என்றாள் மெதுவாக.

"அறிவிருக்காடி உனக்கு? கல்யாணமாகாத பிள்ளைங்கட்ட எத டிஸ்கஸ் பண்றதுன்னு இல்ல? அதுலையும் அவங்களுக்கு க்ளாஸ் எடுக்றவன் நான். அவங்க என்ன பாக்கும்போது என்ன தாட்ஸ் வரும்? சின்னப் புள்ளையா நீ? பிஜி படிக்குறோம்ன்ற சென்ஸோட எதையும் செய்ய மாட்டியா? நா இதுக்காகவே நீ ப்ரெக்னன்ட் ஆகக் கூடாதுன்னு கவனமா இருக்கேன். நீ அங்க என் மானத்தை வாங்கிட்ருக்கல்ல?" எனக் கத்தி விட்டுவிட்டான். முன்பு வகுப்பில் பார்க்கும் யாழ்நிலவனை பல மாதங்கள் கழித்து இன்று பார்க்கிறாள்.

"வேற யார்ட்டையும் பேசல. அவங்கட்ட மட்டுந்தான்" எனப் பாவமாகச் சொல்ல,

"ரெண்டு பேர் மட்டும் என்ன அசிங்கமா நினைச்சா பரவால்லயா உனக்கு? அவங்களுக்குமா மேனர்ஸ் இல்ல? உனக்கு அறிவுரை சொல்றளவுக்கு டாக்டரேட் வாங்கிருக்காங்களா அவங்க?"

"என் ப்ரண்ட்ஸ் அப்படிலா இல்ல"

"என்ன நொல்ல நீ கண்டியா அவங்க மனசுக்குள்ள நினைக்குறதெல்லாம் தெரியுமோ உனக்கு? கண்ணுல படாதவங்கள பத்தி நினைக்றது வேற, கண்ணுல பட்டுட்ருக்க நம்மல பத்தி நினைக்குறது வேற"

"சாரி"

"தூக்கிட்டு தூர போய்டு உன் சாரிய"
கண் கலங்கினாலும் உள்ளிழுத்து கொண்டு சென்று படுத்து விட்டாள். பேசினால் இன்னும் கோவபடுவானோ எனப் பயமாக இருந்தது அவளுக்கு. அவனுக்குத் தான் மன உளைச்சலாக இருந்தது. சற்று நேரம் உலாத்தியவன், வந்து படுத்த பின்னரே அவளுக்குக் கொஞ்சம் பயம் குறைந்தது. அவன் தூங்கிய பிறகே அவளும் கண்ணயர்ந்தாள்.

மறுநாள் காலையில் எப்போதும் போல் இருவரும் சமைத்து சாப்பிட்டு கிளம்பினர், "சாரி அம்மு" என அவனை பிடித்து நிற்க வைத்தாள்.

"நோ அம்மு, என்ன ரெண்டு நாள் ஃப்ரியா விடு" என்றுவிட்டான்.

அவள் தோழிகளிடம் வளவளத்தாலும் அவனைப் பற்றியோ அவர்களைப் பற்றியோ எதுமே பேசவில்லை அவள். அவர்களையும் பேசவிடவில்லை. அவன் அன்று அவர்கள் வகுப்பிற்கே வரவில்லை, அவன் வகுப்பின் போதும் வெங்கட்பிரபுவே வந்து சென்றார்.

மறுநாள் வகுப்பிற்கு தான் வந்தான், அப்படியொரு இறுக்கம் அவனிடம். அவன் முகத்திலேயே அதிக உக்கிரமாக இருக்கிறானெனப் புரிந்தது அனைவருக்கும்.

"ஏன்டி சார் கோவமா இருக்காங்க எதும் ப்ராப்ளமா?" என இவளைத் தான் குடைந்தனர் அனைவரும். அப்போது தான் அவளுக்கு அது தெளிவாகப் புரிந்தது, அவன் எந்தளவிற்கு கவனிக்க படுவான் உடனே இவளின் மூலம் சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்ள முயல்வர் என்பது.

"அவங்க வீட்டுல எங்கள அக்சப்ட் பண்ணிக்க மாட்றாங்க அந்த டென்ஷன்" ஏற்கனவே சொன்ன காரணத்தை மீண்டும் சொல்லித் தப்பித்தாள்.

மேலும் ஒரு வாரம் சென்றும் அவன் அப்படியே தான் இருந்தான். அவளுக்குத் தான் அவனிடம் பேசாமல் பொழுது போகமாட்டேன் என்றது. தானே சென்று பேசினாள், அவன்மேல் சாய்ந்து கொண்டாள், ஊட்டி விட்டாள், அவனையே சுற்றி வந்தாள். அவனும் எதையும் தடுக்கவில்லை, கல்லூரியில் இருப்பது போல் முகத்தைத் தூக்கவில்லை, அமைதியோ அமைதி என்று மட்டுமிருந்தான்.

அவன் யோசனையெல்லாம் அவளுக்கு இன்னும் வராத அந்த மாதவிலக்கு அதிலேயே நின்றிருந்தது. அவன் பயந்ததே நிஜமானது. நனியிதழ் கர்ப்பமாகியிருந்தாள்.

சொர்ணம் பாட்டி ஊரிலிருந்து அழைத்து, "இன்னுமா உன் மாமனாருக்கு ரூவா பிரட்ட முடியல? கல்யாண ஏற்பாடு பண்ணிணானா இல்லையா? எப்ப பண்றதா இருக்கான்? அவனாவும் சொல்ல மாட்டேங்குறான். நீயும் ஃபோன் போட்டுப் பேச மாட்டேங்குற என்னடா முடிவுல இருக்க?" எனத் தடாலடியாக அவர் பேசிக்கொண்டே போக,

"என் பொண்டாட்டி ப்ரெக்னன்ட்டா இருக்கா. இப்பல்லாம் கல்யாண ஏற்பாடு பண்ண முடியாது. குழந்தை பிறக்கட்டும் பாத்துக்கலாம்" என அவன் வைத்துவிட, அந்தப் பக்கம் சிவகங்கையில் இருந்தவரும் அதிர்ந்து நிற்க, இங்கு அவனருகில் நின்றிருந்தவளும், இரு கைகளாலும் வாயை மூடி அதிர்ந்து தான் நின்றாள். அவள் தான் அதை மறந்திருந்தாளே, இப்போதும் அவளாகச் சொல்லாமல் அவன் தானே கூறிக் கொண்டிருக்கிறானெனப் பார்த்திருந்தாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 10

"கன்பார்ம் பண்ணாம சொல்லிட்டீங்க அம்மு?" என்றாள் இன்னுமே வாயிலிருந்து கையை எடுக்காமல்.

அவள் கையைச் சிரித்துக் கொண்டே எடுத்து விட்டு, கன்னம் பிடித்தாட்டியவன், "கன்பார்ம் தான்னு எனக்குத் தோணுது, ஹாஸ்பிடல் போய்ட்டு வரலாம் கிளம்பு. நா வெங்கட்ட இங்க பக்கத்துல கைனெக் இருக்காங்களா கேட்டு வரேன்" எனச் சொல்லிச் செல்ல, இவளும் ஒரு சுடிதாரை மாட்டிக்கொண்டு வந்து அவன் வருவதற்குள் செடிகளுக்குத் தண்ணீரை ஊற்றினாள்.

அன்று வெள்ளிக்கிழமை மாலை, அடுத்த இரண்டு நாட்களும் கல்லூரி விடுமுறை தான் என்பதால் இருவரின் மனதுமே பரபரப்பின்றி ஆசுவாசமாக இருந்தது. அவன் சமாதானமாகி பேசிச் சென்றது அவளுக்குக் கூடுதல் மகிழ்ச்சியே.

அடுத்த ஐந்து நிமிடத்தில், "போலாமா அம்மு?" என மேலேறி வந்தவனுக்கு, மாலை இறங்கு வெயில் முகத்தில் படப் பிள்ளை உண்டானதன் விளைவில் பளபளப்பு கூடியிருந்த முகம் இரண்டும் சேர பொலிவு கூடி அவளை அவனுக்கு அழகு பதுமையாகக் காட்டியது.

"சைட்டடிக்றீங்க தான? அதும் ரொம்ப நாள் கழிச்சு?" என்றவள் பளிச்சென்று சிரித்தாள், ஆனால் கண்கள் கலங்கி நின்றது.

"ம்ச் அம்மு" என அதட்டியவன் அவளை அணைத்துக் கொள்ள,

"பாக்கவே மாட்டேன்டீங்கல்ல? எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எங்க ப்ரண்ட்ஸ்குள்ள எல்லாம் ஷேர் பண்ணிப்போம். நீங்க டீப்பா திங்க பண்றளவுக்கு எங்க தாட்ஸ் மோசமில்ல, ஆனாலும் இனி நம்ம பெர்சனல நா டிஸ்கஸ் பண்ண மாட்டேன். நீங்களும் இப்டி மூஞ்ச தூக்கிட்டு பேசாம இருக்க கூடாது." என அவன் முகம் பார்த்துக் கெஞ்சலாகச் சொல்ல,

"சரிடி. கொஞ்சம் அப்செட் ஆகிடுச்சு, நீதான் விடாம பேசிட்டே இருந்தியே, யாராவது ஒருத்தர் பேசினாலும் போதுந்தானே?" என அவள் கன்னம் கிள்ளி முத்த,

"நா ரொம்ப மிஸ் பண்ணேன் உங்கள" என இறுக அணைத்துக் கொண்டாள்.

"நானுந்தான் அம்மு" என்றவனும் அவள் முதுகைத் தடவி ஆசாவாசப்படுத்தினான்.

"பாப்பா வேணாம்னு சொன்னீங்க?" என்றாள் மூக்கை உறிஞ்சி முறைத்துக் கொண்டு.

"ச்ச லூசு. நா வந்த பாப்பாவ வேணாம்னா சொன்னேன்? கொஞ்சம் லேட்டா வரட்டுமேன்னு சொன்னேன்டி"

"இப்ப‌ வந்துட்டுன்னா பரவால்லயா?"

"ம்ம் உன் காலேஜ் படிப்பு, நீ வேலைக்குப் போணும், நூறு பவுன் நகைக்குக் கடன் அடைக்கணும், நம்ம ரிலேஷன்ஷிப்ப யாரும் கமெண்ட் பண்ணிட கூடாது, இதெல்லாம் யோசிச்சு தான் இப்போதைக்கு வேணாம்னு கவனமா இருந்தேன் அம்மு"

"அப்போ என்ன பண்ண? இதெல்லாம் இப்பவும் அப்டியே தான இருக்கு?"

"பாத்துக்கலாம்டி, முதல்ல கன்ஃபார்ம் பண்ணுவோம். கிளம்புவோமா?"

"ம்ம்" இருவரும் கீழே வர, வாசலில் நின்ற பவானி, "கவனமா எல்லாம் கேட்டுட்டு வா, நா ஸ்வீட் செஞ்சு வைக்கிறேன்" எனச் சொல்லும் போதே அவளுக்குத் தித்திப்பாக இருந்தது.

மருத்துவமனையில் நுழையும்போதே, நனியிதழ், "பெரிய ஹாஸ்பிடலா இருக்கு?" எனக் கேட்க, அவளுக்குப் பிரசவம் அப்பா செலவாகிற்றே என்ற யோசனை சற்று முன் அவன் அடுக்கிய விஷயங்களின் விளைவாக வந்து நின்றது.

"மல்டிஸ்பெஷலிட்டி ஹாஸ்பிடல் அம்மு. இங்க எல்லாமே பாக்றாங்க. பேபி பிறந்தப்றமு இங்கயே நாம காமிச்சுக்கலாம். நம்ம காலேஜ்ல அடிதடியாச்சே அப்பப் பசங்கள இங்க தான் கொண்டு வந்து சேத்தோம். போலீஸ் ஃபார்மாலிட்டீஸ் ஒரு பக்கம்னாலும் ஃபர்ஸ்ட் எயிட ஸ்டார்ட் பண்ணிட்டாங்க தெரியுமா? இப்ப வெங்கட்ட கேட்டதும், அங்கேயே போங்க நல்லா பாப்பாங்கன்னு இத தான் சொன்னாரு" என்றவன் வரவேற்பரையில் விசாரித்து அவர்கள் சொன்ன இடம் வந்து காத்திருந்தனர். சற்று நேரத்தில் மருத்துவரும் அழைத்து அவர்கள் பெற்றோர் ஆக போவதை உறுதி செய்து விட, மற்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டு பணம் செலுத்த வந்தனர், அவர்கள் நீட்டிய பில்லின் தொகை சற்று அதிகமாகத் தான் அவளுக்குத் தோன்றியது, அக்காவிடம் அவளுக்கு எவ்வளவு செலவாகியது எனக் கேட்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.

இவர்கள் வீட்டிற்கு வந்து சேருவதற்கு குள்ளயே அவன் தாத்தாவிடமிருந்து அழைப்பு வந்தது, "பாட்டி டெலகாஸ்ட் பண்ணியாச்சு போல" என்றவாறே அழைப்பை ஏற்றான்.

"நிலவா வாழ்த்துக்கள்டா, ரொம்ப சந்தோஷம்டாப்பா. பேத்திய கூட்டிட்டு இங்க வரியா? பேத்திக்கு நேர்ல தான் வாழ்த்து சொல்லணும்" என்றார் அவர் உற்சாகமாக.

"இல்ல தாத்தா இப்ப அலைய முடியாது. அவளுக்கு நெக்ஸ்ட் வீக்ல எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது. கொஞ்சம் கொஞ்சமா படிக்க முடியும். ஹெல்த்தையும் பாக்கணும். எக்ஸாம்லாம் முடிஞ்சப்றம்னா கிளம்பி வர்றோம்"

"என்ன சொல்றான்? கல்யாணம் பண்ணி முறையா கூப்பிடாம நீங்கப் பாட்டுக்குக் கூப்பிடுறீங்க?" என்ற பாட்டியின் குரல் பின்னால் கேட்க,

"பாட்டிக்கு நீங்களே சொல்லிச் சமாளிச்சுடுங்க தாத்தா" என வைத்துவிட்டான். அடுத்ததாக அம்மா, அப்பா, பெரியப்பா, பெரியம்மா, அவன் அண்ணன்வரை அனைவரும் அவனுக்கே அழைத்து வாழ்த்திவிட்டு வைத்தனர். அவள் அப்பாவிற்கும் அக்காவிற்கும் அவளே அழைத்து விஷயத்தைப் பகிர்ந்து வாழ்த்தைப் பெற்றுக் கொண்டாள்.

"ஒருத்தராச்சு உனக்கு விஷ் பண்றாங்களா‌ பாரு அம்மு" என அவளிடமே அவன் மனக்குறையாகக் கூற,

"என் பக்கம் வராம இருந்தாளே போதும்னு இருக்கேன் நானு. இப்ப எப்டி நூறு‌ பவுன தருவ? நினைச்சத சாதிக்குறல்லன்னு தான் உங்க பாட்டி ஆரம்பிக்கவே செய்வாங்க, எனக்கு அதுவே பதட்டமா‌ இருக்கு அம்மு"

"என் தாத்தாட்ட சொல்லி ஃபர்ஸ்ட் கோல்ட் பாண்ட் போடுவோம், மொத்தமா வாங்கிட்டு, மாசமாசம் கட்றமாறி போட்டுப்போம். பிள்ளையே வந்தாச்சு இனி யார் கட்டுனா என்ன, நாம சேர்ந்தே கட்டலாம். வாங்கி பாட்டி கைல குடுத்துட்டு நம்ம நிம்மதியா இருப்போம் அம்மு"

"நா வேலைக்குப் போவேன்"

"தாராளமா போ, பேபிக்கு மூணு வயசாகவும் ஸ்கூல்ல சேத்துடலாம் அப்றம் நீ தாராளமா போடி, அதுவரை எதாவது கோர்ஸ் பண்ணலாம் ஏசிசிஏ, சிஎம்ஏ, ஏசிஎஸ், இல்ல இது எதும் வேணாம்னா பிஎச்டி பண்ணு"

"ஒரு வருஷம் இப்ப மூணு வருஷமாகிடுச்சே?" என்றாள் முகத்தைச் சுருக்கிக் கொண்டு.

"அதுக்கு என்னம்மா பண்ண முடியும் பாப்பாவ பாக்கணும்ல?"

"நா வேலைக்கும் போணும் பாப்பாவும் பாக்கணும் அதுக்கு வழி சொல்லுங்க"

"டே கேர், கேர் டேக்கர் லாம் நமக்கு சரிபட்டு வராது அம்மு" பேச்சு செல்லும் திசை பிடிக்காமல் அவன் நகர,

"சரி வேற ஆப்ஷன்?" பின்னையே சென்று நின்றாள் நனியிதழ்.

"மெல்ல யோசிப்போமா, இப்ப நைட் சாப்பாடு செஞ்சு சாப்டலாம் வா" என்றவனுக்கு அப்போதைக்கு அந்தப் பேச்சிலிருந்து வெளிவருவதே சரியென்று பட்டது. இப்போது தான் ஒரு சண்டை முடிந்திருக்க மறுபடியும் ஒன்றை இழுத்துக்கொள்ள விரும்பவில்லை அவன். கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு தூங்கினர் அன்று.

அதிகாலையிலேயே அவன் போன் விடாமல் அடித்தடித்து ஓய வெகுபிரயத்தனபட்டு கண்ணைத் திறந்து அதை எடுத்துப் பார்க்க அவன் அப்பா தான் மறுபடியும் அழைத்துக்கொண்டிருந்தார். மணியைப் பார்க்க அது ஆறு தானெனக் காட்டியது.

"என்னப்பா இந்நேரம்?" என்றான் கலையாத தூக்கத்துடனே, பின் அவன் கை வளைவிலிருக்கும் மனைவி உச்சியில் முத்தமிட்டு நிமிர,

"இந்த வீட்டு சாவி யார்ட்ட தம்பி இருக்கு?" என்றார் அவர்,

"எந்த வீட்டு சாவி?" என்றவனுக்கு நேரிலேயே வந்துவிட்டனரோ என்று தான் தோன்றியது.

"நீ இதுக்கு முன்ன இருந்த அம்சாவா அவுங்க வீட்டு முன்ன தான் நிக்றோம். சாவி உன்ட்ட‌ இருக்கா இல்ல இங்க ஹவுஸ் ஓனர்ட்ட இருக்கா சொல்லு"

"அவங்கட்ட தான் இருக்குப்பா எப்டி‌ காலைலயே வந்தீங்க?"

"ஃப்ளைட் தான்டா, நீ மெதுவா எந்துச்சு‌ வா. நாங்க இங்க சாவி வாங்கிக்கிறோம்" என வைத்துவிட்டார்.

அதற்கு மேல் அவன் எங்கிருந்து தூங்க, அங்குத் தான் சமைத்து சாப்பிட கூட ஒன்றுமேயில்லையே‌. மெல்ல அவளைத் தலையனையில் படுக்க வைத்தவன், அறக்கபறக்க கிளம்பி கதவையும் பூட்டிவிட்டு அவளுக்கொரு தகவலையும் கைபேசி வழி அனுப்பிவிட்டு அங்குக் கிளம்பி விட்டான்.

"என்னடா நீ மட்டும் வந்து நிக்கிற? எங்க உன் பொண்டாட்டி. எங்கள அங்க வர வைக்கணும்னு அங்கயே உக்காந்துருக்காளா? நாங்க சிவகங்கைல இருந்து வந்தது பத்தாதாமா?" எனப் பாட்டி அவன் வீட்டினுள் வரும்போதே ஆரம்பிக்க,

"ரெண்டு மாசம் கழிச்சு என்ன பாக்குறியே, நல்லாருக்கியா? வேலை எப்டி போகுது, புது கல்யாண வாழ்க்கை எப்டி போகுதுன்னு எதாவது நல்லதா‌ விசாரிக்கத் தெரியுதா பாட்டி உனக்கு?" என அவனும் பேச,

"அவ கடக்கா, அவள பாக்கணும்னு தான் மொத ஆளா கிளம்புனா இப்ப நீ மட்டும் வரவும் கோவத்த அப்படி காட்டுதா" என்றார் தாத்தா.

"நாந்தான் வரேன்னு சொன்னேன்ல தாத்தா அதுக்குள்ள இப்டி‌ அடிச்சு புடிச்சு ஓடி வரணுமா?"

"டாக்டர்ட்ட போனீங்களா என்ன சொன்னாங்க?" என்றார் அமுதா,

"எல்லாம் ஃபைன் ம்மா. தூங்குறா உங்களுக்குச் சாப்பிட ஏற்பாடு பண்ணிட்டு அவள போய்க் கூட்டிட்டு வர்றேன்"

"வாழ்த்துக்கள்டா தம்பி" என உள்ளிருந்து முகம் துடைத்து வந்தான் யுதிஷ்டிரன் கூடவே கல்யாணியும்.

"ம்ம்" என அவனுக்குத் தலையசைத்தவன், "வாங்க பெரியம்மா, பெரியப்பா வரலையா?" என்க.

"இல்ல நிலவா இவன் இங்க யாரையோ பாக்கணும்னு கிளம்பினதால அவர் அங்க கடைல இருக்காரு. உன் பொண்டாட்டி எப்டி இருக்கா?"

"நல்லாருக்கா பெரியம்மா" என்றவன் மீண்டும் அமுதாவிடம், "சாப்ட என்ன வேணும்?" என்றதும் அவர் வாங்க வேண்டிய பொருட்களை அடுக்கிச்‌சொல்ல, அதை வாங்கிவர கிளம்பி விட்டான் கூடவே கண்ணதாசனும்.

"பக்கம் தான்ப்பா நா வாங்கிட்டு வந்துடுவேன். நீங்க ரெஸ்ட் எடுங்க"

"இல்லடா நானும் வரேன் வா" என்றதும் அவருக்காக வண்டியை எடுக்கப் போக,

"நடந்தே‌ போவோம் நிலவா" என்றுவிட்டார், இருவரும் தெருவில் அமைதியாக நடக்க, அந்த இளங்காலைக் காற்றை அனுபவித்து நடந்தனர்.

"ஒருமாதிரி மனசுக்கு சந்தோஷமா இருக்கு நிலவா. உனக்குப் பொறுப்பு கூடுது இன்னும் கவனமா இருக்கணும் நிலவா" என்றார் மெதுவாக நடந்து கொண்டே,
அவனுக்குப் புரிந்தது தாத்தா எனும் உறவை நினைத்த சந்தோஷம் அவரிடம் என்று, "நான் பாத்துக்குறேன் ப்பா" என்றான் சிரித்தே,

"யுதிஷ்டிரனுக்கு ஒரு வருஷமாகியும் பிள்ளை இல்லன்னு எல்லாருக்கும் வருத்தம்"

"ஒரு வருஷம் தானே ஆகுது?"

"ம்ம் ஆனாலும் அதும்‌ ஒரு எதிர்பார்ப்பு தானேடா? அந்தப் பொண்ணும் ரொம்ப பிரச்சினை பண்ணுறா. பாதி நாளு அவங்க அப்பா வீட்டுக்குப் போயிடுறா. போன மாசமெல்லாம் வீட்ல ஒரே சண்டை தான்"

"சரியாகிடும் ப்பா, கூட்டு குடும்பத்துல மெர்ஜாக கஷ்ட படுவாங்களா இருக்கும்"

"ம்ம் அப்படித்தான் போல, தனியா போகணும்னு நினைக்கிறா போல"

"போகட்டுமே ப்பா கொஞ்ச நாள் தனியாவும் இருந்து பாக்கட்டுமே. இன்னும் இறுக்கி பிடிக்கப் பிடிக்க அவங்களுக்கு வெறுப்பு தான் ஜாஸ்தி ஆகும்"

"அண்ணா அவர் சம்மந்தார்ட்ட பேசணும்னு சொல்லிருக்காரு பேசட்டும் பாப்போம். உனக்கும் மருமகளுக்கும் எல்லாம் இங்க செட்டாகிடுச்சா? காலேஜ்ல சொல்லிட்டீங்களா?"

"நா அட்மினிஸ்ட்ரேஷன்ல பேசிட்டேன் ப்பா, மத்தபடி நாங்க சேந்து போறது வர்றது வச்சு ஸ்டூடண்ட்ஸ்க்கும் பரவலா தெரியும். ஒன்னும் பிராப்ளம் இல்ல இன்னும் செவன் மந்த்ஸ் தான் அவளுக்குக் காலேஜ். டெலிவரிக்கு முன்ன காலேஜ் முடிச்சுடுவா" என்றான் இயல்பாக.

"உன் பொண்டாட்டியும் கொஞ்சம் சூட்டிப்பு தானோ? அன்னைக்கு அம்மா பேசுனத அப்படியே உன்ட்ட ஒப்பிச்சுட்ருந்தா நானும் உன் பெரியப்பாவுந்தான் கேட்டோம் ஊர்ல போய் அதுக்கும் நிறைய பேச்சு தான்"

"ஆமா ஓவர் சேட்டை. வாயும் வாரணாசி வரப் போய்ட்டு வரும்" என அதை மட்டுமே அவன் பதிலாகக் கூறிச் சிரிக்க அவரும் சிரித்தார்.

பேசிக் கொண்டே தேவையானவற்றை வாங்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.
அப்பாவும், தாத்தாவும் குளித்து வரவேண்டி ஆளுக்கொரு அறைக்குள் சென்றிருக்க, அதனால் சற்று நேரம் இருந்து யுதிஷ்டிரனிடம் அவன் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தான், அந்நேரமே நனியிதழிடமிருந்தும் அழைப்பு வந்துவிட்டது.

"சரிம்மா நான்‌ போய் அவள கூட்டிட்டு வர்றேன், தூங்கிட்ருக்கான்னு அவள உள்ள விட்டு வீட்ட பூட்டிட்டு வேற வந்தேன்" எனக் கிளம்ப,

"அவள இங்க வந்து சாப்பிட சொல்லு" என்றார் பாட்டி.

"என்ன ஓவரா பொங்குற நீ? அன்னைக்கு பேசு ஆளு வேறன்ற மாதிரி நடந்துக்குற?" என்றான் நக்கலாக,

"கொள்ளு பேரனோ பேத்தியோ வருதுள்ள எங்க வாரிசுக்கு நா மொத சமைச்சு குடுக்கணும்ல?" என்றார், அவ்வளவு நேரமும் அவரும் அடுப்படியில் நின்றதன் காரணம் விளங்கியது. அமுதா, கல்யாணியையும் ஒரு பார்வைப் பார்த்தான், தலையசைத்து கிளம்பி விட்டான்.

கதவைத் திறக்கையிலேயே அவள் வாசனை தான் வீட்டை நிறைத்திருந்தது. குளித்துக் கிளம்பி தயாராக இருந்தாள்.

"எதும் சொன்னாங்களா அம்மு? ஏன் இப்படி உடனே கிளம்பி வந்துருக்காங்க? உடனே கல்யாணம் வைக்கணும், நூறு பவுன் வேணும்னு சொல்லுவாங்களோ?" என்றாள் வேகமாக அவனிடம் வந்து,

"அதெல்லாம் எதுமில்ல உன்ன பாக்க வந்துருக்காங்க. அவங்க வீட்டு வாரிசு வருதாம் அதுக்கு உன்ன விஷ் பண்ண நேர்ல வந்துருக்காங்க"

"ஆங்!" என வாயைப் பிளந்தவள், "உங்க வீட்ல உள்ளவங்கள எப்படிப்பா புரிஞ்சுக்றது?" என்றாள் உண்மையிலேயே குழப்பத்துடன்,

"எனக்கே இன்னும் அத டிஃப்ரினசியேட் பண்ண தெரியல, நீ பாத்த ரெண்டு தடவைல கண்டுபிடிக்க நினைக்குறது பேராசை அம்மு" எனச் சிரித்தான்.

"ம்ம். இப்ப அங்க போ வேணாமா?"

"போணும், நானும் குளிச்சுட்டு வரேன் அங்க போய்ச் சாப்பிடலாம்"
இருவரும் கிளம்பி பழைய வீட்டிற்கு வர, பாட்டி பார்த்தே இருந்தார் எதுவும் பேசவில்லை அவளிடம். மற்ற எல்லோரும் வாழ்த்தினர்.

"உனக்கு ஏத்த மாதிரி தான் எல்லாம் அமையுது. ம்ம் என்ன செய்ய. உடம்ப பாத்துக்கோம்மா" என்றார் கல்யாணி.

"காலேஜ் போனாலும் புள்ள கவனம் இருக்கணும்" முடித்துக் கொண்டார் அமுதா.

"வாழ்த்துக்கள் ம்மா" தாத்தா, கண்ணதாசன், யுதிஷ்டிரன் மூவரும் வாழ்த்தினர். சிரித்த முகத்துடன் எல்லோருக்கும் தலையசைத்து விட்டாள் நனியிதழ்.

"எப்ப கல்யாணம் பண்ணிக்றதா இருக்கீங்க? உன் அப்பா என்ன சொல்றான்?" என்றார் பாட்டி.

"எத்தன தடவ கல்யாணம் பண்ண முடியும். ஊரே பாத்துச்சு பார்க்காதது நீங்க நாலு பேரு தான் உங்களுக்கு மட்டும்னா மறுபடியும் பண்ணிக்றோம் பாட்டி" என்றான்.

"லூசாடா நீ? அங்க நடந்த எதுமே உனக்கான ஏற்பாடு கிடையாது எவனோ ஒருத்தனுக்கானது. அதுல பொம்மை மாறி உன்ன மாத்தி உக்கார வச்சாங்க அவ்வளவு தான். உனக்கான கல்யாண ஏற்பாடுன்னு வேணாமா?" என்றார் சுருக்கென்று. நனியிதழ் முகம் சுருங்கி தான் விட்டது. பாவமாக அவனைப் பார்த்தாள்.

"எனக்கான மேடை பாட்டி அது. அதான் எங்கையோ நின்னவன இழுத்து கொண்டு வந்து அங்க உக்கார வச்சுடுச்சு. இதோ அதுக்கு முன்ன இவள அதே ஊர்ல இருந்தும் பாக்க முடிஞ்சதா? ஆனா அன்னைக்கு அவகிட்ட கொண்டு விட்டது தானே விதி. நா அவளுக்கு அவ எனக்குன்றது தான் விதி பாட்டி. யார் நினச்சிருந்தாலும் இத மாத்திருக்க முடியாது"

"அப்ப இன்னொரு தடவ கல்யாணம் பண்ண மாட்ட?"

"உனக்காக இங்கேயே கூட மாலை மாத்திக்றேன். ஆனா அதுக்காக மொத கட்டுனத மொத்தமா அழிச்சு மறுபடியும் கட்ட முடியாது பாட்டி" என்றுவிட்டான் தெளிவாக. தாத்தா சிரிப்புடன் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தார்.

"நீ நினைக்குறது தான் நடக்கணும்னு நடத்திக்குறல்ல?" என சடைத்தே எழுந்து கொண்டார் பாட்டி.
அன்றும் மறுநாளும் அவர்கள் கையால் தான் அவளுக்குச் சாப்பாடு. ஞாயிறு மாலை அவர்கள் கிளம்பவும் இவர்களும் அவர்கள் வீடு கிளம்பி வந்தனர்.

"போன தடவைக்கு இந்தத் தடவைக்கும் இந்தப் பேபி மட்டும்தானே வித்தியாசம் நா இன்னும் அதே அவங்கட்ட வேலை பாக்குற கருப்பையா பொண்ணு தானே அம்மு?" என்றவள் மருதாணியைப் பறிக்க, அவன் பரிட்சை தாள்கள் திருத்துவதில் மும்மரமாக இருந்தான்.

"விடுறி, கிடைக்கும்போது அள்ளிக்கோ கிடைக்காதபோது கண்டுக்காத"

"மருதாணி வச்சு விடணும் எனக்கு"

"கரெக்ஷனுக்கு நிறையா இருக்குடா"

"அம்மு ப்ளீஸ்"

"உனக்கு என் கைல ஒட்டணும் அத நாளைக்கு எல்லாரும் க்ளாஸ்ல பாக்கணும் அதான?" என முறைத்தான்.

"இல்லையே"

"நடிக்காதடி. யூஜி ஸ்டூடண்ட்ஸ் வர நம்ம புகழ் பரப்பிட்ருக்க நீ"

"இல்ல அம்மு. நீங்க வச்சுவிட்டாலும் உங்க விரல்ல இருக்கறது தெரியாதமாறி தானே போர்டுல எழுதுறீங்க"

"ஆனாலும் உத்து உத்து பாத்துட்டு அத ஒரு காஸிப்பாக்கிடுறீங்க தானே?"

"உங்கட்ட கொண்டு வரல தான எதையும்?" அவளும் விடவில்லை, அவன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்க அதனால் அவளும் இயல்பாகப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

"வர்ற அன்னைக்கு இருக்குடி உனக்கு" என்றவன் பேச்சுப் பேச்சாக இருந்தாலும் வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. இரவு உணவை முடித்து அவன் கையால் மருதாணியை வைத்துவிட்டு தான் படுத்தாள்.

அவள் வயிறு மேடிடும் வரை யாருக்கும் அவளாகச் சொல்லவில்லை. கர்ப்ப கால உடல் உபாதைகளும் அவளுக்கு எதுவுமே இல்லை. அவ்வப்போது வயிறு வலி மட்டுமே இருக்கும். அதும் இயல்பு தான் என்றுவிட்டார் மருத்துவர்.
ஆறாம் மாதத்தில் தான், "ப்ரெக்னன்ட்டா இருக்கியா நீ?" எனக் கேட்டனர் அவள் அருகில் இருந்த இருவரும். முதலில் கண்டுபிடித்தது அவர்கள் இருவரும் தான். அதன்பின் படிப்படியாக எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்தது. அவளைவிட ஆடிப்பாடிக் கொண்டாடி மகிழ்ந்தனர் அவளின் ஜுனியர்கள்.

ஏனோ அவர்களுக்கு யாழ்நிலவன் நனியிதழ் தம்பதியர்களைப் பார்த்துப் பார்த்து ரசித்து அவர்களின் காதலை இவர்களும் காதலித்துக் கொண்டிருந்தனர். அது அவர்களின் பருவ வயதின் காரணமாக கூட இருக்கலாம். வருடம் சென்று யோசித்து பார்க்கையில் அவர்களை அவர்கள் செயலே சிரிக்க வைக்கும், நினைவுகளாக இவ்விருவரும் என்றும் அவர்கள் மனதில் இருப்பர்.
அவளின் ஏழாம் மாதம், வளைகாப்பிடணும் பெரிய விழாவாக எடுக்கணும் என ஆரம்பித்தார் பாட்டி, "இன்னும் ஒரு மாசந்தான் அவ படிப்பு. அது முடியட்டும் பாட்டி, ஒன்பதாம் மாசம் போட்டுக்கலாம்" என்றுவிட்டான்.

ஆனால் கருப்பையாவிடமும் பேசினான், "அம்மா, அப்பா, பாட்டிக்குலாம் என் கல்யாணத்த பாக்கலன்ற வருத்தம் இருக்கு மாமா, சோ வளைகாப்பு பெருசா தான் நடத்தணும். உங்களால முடிஞ்சத நீங்கச் செய்ங்க மத்தத நான் பாத்துக்கிடுறேன்" என்றான்.
 

priya pandees

Moderator
"கல்யாணத்த திரும்ப வைக்கச் சொல்லிருந்தாங்களே அதனால அதுக்கு நம்ம நிலத்து சாகுபடி வருமானம் முழுசா ஒதுக்கி வச்சுருக்கேன் மாப்ள, நானே பாத்துகிடுதேன்" என்றார் அவர் சந்தோஷமாகவே,

"இல்ல மாமா அத நகை வாங்க யூஸ் பண்ணிக்கலாம். இது என் பிள்ளைக்கு நடக்குற மொத பங்கஷன் உங்க பொண்ணுக்கும் சேர்த்து நடக்குது. சோ நாம ரெண்டு பேரும் சேந்தே செய்யலாம்" என எந்த மெனகெடலுமின்றி இயல்பாகச் சொல்ல,

"சரிங்க மாப்ள, முதலாளிட்டயும் பேசிடட்டுங்களா?"

"ம்ம் சொல்லிடுங்க மாமா டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு பேசுங்க. அடுத்த மாசம் பதினெட்டுக்கு மேல எந்தத் தேதினாலும் ஓ.கேத்தான்" எனப் பேசி வைத்தான்.

மறுமாதத்தில் அவர்கள் கல்லூரியில் கேம்பஸில் பல கம்பெனிகளிலிருந்தும் வேலைக்கு ஆள் எடுக்கும் செயல்பாடு துவங்கியது. அதில் ஐடி கம்பெனிகளும் அடக்கம். நிறைமாத வயிற்றுடன் அதில் கலந்துகொண்டாள் நனியிதழ்.
அவளுக்கு இன்டர்வியூ முடித்ததும் கடைசி கேள்வியாக அவர்கள் கேட்டது, "பேபி விட்டுட்டு எப்டி வேலைக்கு வருவீங்க?" என்பதாகத் தான் இருந்தது.

"வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன் இருக்கிறதால் தான் ஐடி ஃபீல்ட் சூஸ் பண்ணேன். ஐ கேன் மேனேஜ் போத் அஸ் வெல்" என அழகாகப் புன்னகைத்தவளை அவர்களும் புன்னகையுடன் தான் அனுப்பி‌ வைத்தனர். அதில் இரண்டு இடத்திலிருந்து ஆஃபர் லெட்டர் வரும்வரை அவளுக்குமே நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது. அதைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு.

"அம்மு இங்க பாருங்க ரெண்டு ஆஃபர் லெட்டர். சூப்பர் சொல்லுங்க சூப்பர் சொல்லுங்க குய்க்" எனக் கும்மாளமிட்டாள்.

"நீ சும்மா கலந்துக்குறன்னு நினைச்சேன் அம்மு"

"ஏன்? நாந்தான் சொன்னனே வேலைக்குப் போவேன்னு"

"எப்டி மேனேஜ் பண்ணுவ?"

"வொர்க் ஃப்ரம் ஹோம் தருவாங்க"

"கேட்டியா?"

"நா இன்டர்வியுலயே சொல்லிட்டேன். தெரிஞ்சு தான் எனக்கு வேலை குடுத்துருக்காங்க"

"சேர்ந்தப்றம் வரச் சொல்லிச் சொன்னா பேபிய என்ன பண்ணுவ?" அவன் நிதானமாகத் தான் கேட்டுக்கொண்டிருந்தான்.

"ஏன் நா வேலைக்குப் போறேன் நீங்க வீட்லயிருந்து பாப்பாவ பாத்துக்கோங்க. மூணு வருஷம் கழிச்சு பாப்பாவ ஸ்கூல் அனுப்பிட்டு நீங்க வேலைல ஜாயின் பண்ணிக்கோங்க" என்றாள் உடனேயே.
"புரிஞ்சு தான் பேசுறியா?"

"ஆமா அம்மு. உங்களுக்கு அமௌன்ட் கட்டாயம் தேவைன்னு கிடையாது. எனக்கு அப்டி‌ இல்ல. நான் நூறு பவுன் சேத்து குடுக்கணும். நீங்கத் தானே என் மரியாதையும் முக்கியம்னு சொன்னீங்க"

"இப்பவும் உன் மரியாதை என் வீட்ல எனக்கு முக்கியம் தான். உன்னால தான் சிக்ஸ் மந்த்ஸ் பேபிய பாத்துக்க முடியும். அது தான் மேனேஜ் பண்ணிப்பியான்னு கேட்டேன். வொர்க் ஃப்ரம் ஹோம் அலோவ் பண்ணுவாங்களா கேளு, குடுப்பாங்கன்னா போய்ட்டு வா" என அந்தப் பேச்சை முடித்துக் கொண்டான். அவனுக்கும் அவள் பேச்சு தப்பாகவெல்லாம் தெரியவில்லை, நியாயமானக் கோரிக்கையாகவேபட்டது. அதனால் நிதானமாகவே எடுத்துக் கூறினான்.
நனியிதழும் அதைச் சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டாள். கடைசி செமஸ்டர் தேர்வையும் சிறப்பாக முடித்தாள். நுழைவு கடிதம் (ஆஃபர் லெட்டர்)வந்த கம்பெனிகளில் எது கொஞ்சம் கெடுபிடி கம்மியாக இருக்கும் என அவனே விசாரித்துச் சொல்ல அங்கேயே வருவதாக ஒப்புதல் அளித்தாள். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அனுமதியும் பெற்றாள்.

பரீட்சையை முடித்துக்கொண்டு, கல்லூரியிலும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு, வளைகாப்பை சிறப்பிக்க சிவகங்கை கிளம்பினர் நனியிதழும் யாழ்நிலவனும்.




 

priya pandees

Moderator

அத்தியாயம் 11

யாழ்நிலவன், அவன் அப்பா, தாத்தவிடமும் வளைகாப்பு பற்றிப் பேசியிருந்தான், "நானும் மாமாவும் சேர்ந்து தான் பண்றோம். க்ராண்டாவே ஏற்பாடு பண்ணிடுங்க. பாட்டி, அம்மாட்ட சொல்லுங்க, எல்லாரையும் இன்வைட் பண்ணுங்க, இங்க யாரையும் இன்வைட் பண்ண வேண்டி இருந்தா சொல்லுங்க நான் பண்ணிடுறேன். என் காலேஜ் ஸ்டாஃப்ஸ்கும் இன்விடேஷன் குடுக்கணும். அதுக்கு ஏத்தமாதிரி மண்டபம் பாத்திடுங்க." என்றிருந்தான்.

கல்லூரியிலும் அவன் துறையில் அனைவரையும் அழைத்திருந்தான். நனியிதழ் அவள் வகுப்பினருக்கு அழைப்பு விடுத்திருக்க, எல்லோருக்குமாக ஒரு பேருந்தை ஒதுக்கி இருந்தான் யாழ்நிலவன்.
சிவகங்கை சென்றிறங்கி நேராக அவளை அழைத்துச் சென்றது அவன் வீட்டிற்கு தான். உறவுகளால் ஆரத்தி எடுத்தே உள்ளே அழைக்கப்பட்டாள். திருமணம் முடித்து மூன்று வருடத்தை நெருங்கப் போகிறது இப்போது தான் மாமியார் இல்லம் நுழைகிறாள் நனியிதழ். அவளின் புகுந்த வீடு நாகரீகமாகவும் இருந்தது லட்சுமி கடாட்சம் நிறைந்த வீடாகவும் இருந்தது. சுற்றிப் பார்த்துக்கொண்டாள்.


வீடே விழாக்கோலமாகச் சொந்தங்கள் சூழ, கலகலப்பாக இருக்க, "என்ன நிலவா உன் பொண்டாட்டிய வெளில காமிச்சா காக்கா தூக்கிட்டு போயிடும்னா பொத்தியே வச்சுக்கிட்ட?" என ஒருவர் ஆரம்பித்து வைக்க, அதன்பின் அவளுக்கு முதலில் பார்த்த மாப்பிள்ளையின் வீட்டினரில் ஆரம்பித்து இவர்களின் திருமணம், சென்னை குடி பெயர்ப்பு என அத்தனையும் அலசி ஆராயப்பட்டது.

மெல்ல அவனை நெருங்கி, "அம்மு முடியல, முதல்ல ரெஸ்ட் ரூம் போகணும், அப்றம் பசிக்குது சாப்டணும், பேக் பெயினா இருக்கு, முதுக சாய்க்கணும்." என வரிசையாக அடுக்கினாள்.

"என்ன வேணும்?" என அதட்டியபடி வந்தார் சொர்ணம் பாட்டி.

"நா ரூமுக்கு கூட்டிட்டு போறேன் பாட்டி. அவளுக்குப் பாத்ரூம் போகணுமாம். இவங்களுக்குலாம் நாங்க வர்ற முன்னவே எல்லா டீட்டெயிலும் சொல்லிருக்க வேண்டிய தான பாட்டி?" அவன் சத்தமாகவே அப்படி கேட்க,

"உன் பொண்டாட்டி ரொம்ப பயந்தவ தான்னு நாங்க நம்பிகிடுதோம். சரியான ஊம குசும்பி. இப்ப எதுக்கு இப்படி பம்மிட்டு நிக்றா? பாத்ரூம் போகணும்னு எங்கள கேட்கமாட்டாளாமா?" என்றார் பாட்டி.

"நீ இப்டி பேசுவன்னு தான் பம்மிட்டு நிக்கறா. என் பொண்டாட்டிக்கு நானே செஞ்சுக்குறேன். உனக்கு எதாவது வேலை வேணும்னா இவங்கட்ட பதில் சொல்லிட்ரு, நாங்க ஃப்ரஷாகி வந்துடுறோம் சாப்டணும்." என அவளை அழைத்துக் கொண்டு அவனறைக்குச் செல்ல,

"அம்மு." என உள்ளே நுழைந்ததும் அவனைக் கட்டிக்கொண்டு அவன் இரு கைகளையும் எடுத்துச் சென்று அவள் முதுகில் வைத்து அழுத்த, வயிற்றை அதிகம் அழுத்தாமலே அவள் முதுகில் மட்டும் அழுத்தம் கொடுத்து நீவி விட்டான்.

"டயர்டா இருக்கா அம்மு?"

"ரொம்ப" என்றவள்‌ அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு பட்டனை திருக,

"என்ன வேணும்?" என்றான் குறும்பு சிரிப்புடன், வயிற்றில் பிள்ளை வளர வளரத்தான் அவனை அதிகம் தேடினாள். அவனுடன் இருக்கும் நேரங்களில் அவனை உரசிக்கொண்டே திரிவது தான் அரிய கடமையாகச் செய்து கொண்டிருக்கிறாள்.

"என்னெல்லாமோ வேணும் போல இருக்கு"

அவள் தலையில் முட்டியவன், "ரெண்டு பேருக்கும் நடுல குனிஞ்சு பாரு ஒரு ஜீவன் பாவமா உள்ள நசுங்கிட்ருக்குடி"

"பாப்பா அட்ஜஸ்ட் பண்ணி நகந்து படுத்துக்கும்"

"அப்ப நீ இன்னும் கொஞ்சம் டயர்டானா பரவால்லையா?"

"ஒரு முத்தத்துக்கு இவ்வளவு பேச்சு தேவையா மிஸ்டர் மூன்?" என முறைத்தவளை, சிரிப்புடன் அணைத்து முகமெங்கும் நிதானமாக முத்தமிட, பிள்ளை பூரிப்புடன் உள்ளே குதித்து விளையாடத் துவங்கியது.

பின் வெளியேறி, இருவரும் உண்டு முடிக்கவும் அவன் வெளியே கிளம்பி விட நனியிதழ் அமைதியாகச் சென்று படுத்துக் கொண்டாள்.

அடுத்த இரண்டு நாட்களில் வளைகாப்பு என்றிருக்க, எல்லோரும் வேலையாக இருந்தனர். இவள் மட்டுமே உண்பதும், படுப்பதும் யாரும் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் மட்டும் சொல்வது என்றிருந்தாள். மதியதிற்கு அவள் அப்பா வந்து பார்த்துச் சென்றார்.
மாலையில், கீழேயே இருக்க சலிப்பாக இருக்கவும் மெல்ல ஏறி மொட்டை மாடிச் சென்றாள். அவ்வளவு நேரமும் அடைந்து கடந்ததற்கு வெளி காற்றை சுவாசிப்பது இதமாகத் தான் இருந்தது.


"ஹாய்!" என அவளின் பின்னே வந்த சத்தத்தில் திரும்ப, அவளிடம் வந்தாள் மீனாள், யுதிஷ்டிரனின் மனைவி.

"வாங்க க்கா." என நனியிதழ் மெல்ல சாய்ந்து நிற்க,

"நா மீனா!" எனத் தன்னை தானே அறிமுகம் செய்து கொண்டாள்.

"தெரியும் க்கா. ஃபோட்டோல பாத்துருக்கேன்." என்கவும் மீனாள் தலையசைத்து அங்கிருந்த திண்டில் அமர்ந்து கொண்டு,

"ஒரே வீட்டு மருமகள்கள். ஆனா இன்ட்ரோ ஆகிக்க வருஷமாகிடுச்சு" எனப் பேச்சை ஆரம்பிக்க,

"ம்ம் க்கா. நீங்கச் சென்னை வரவே இல்லையே? ஒரு டைம்னாலும் வந்துருக்கலாமே?" என இயல்பாகக் கேட்க,

"என்ன யாருமே வர்றியா, போவமான்னு கேக்க மாட்டாங்க, நானாவும் வரேன்னு போய்ச் சொல்லமாட்டேன். அப்படி தான் ஒவ்வொரு தடவையும் வர முடியாம போச்சு. தப்பா எடுத்துட்டீங்களா வரவே இல்லைன்னு?" என அவர்கள் பேசிக்கொண்டிருக்க,

"இதழு!" என முகம் முழுவதும் பரவசத்துடன் வந்தாள் கவிதா, நனியிதழின் அக்கா.

"வாக்கா." எனச் சிரித்தவள், "இதோ என் அக்காவுமே இன்னைக்கு தான் என்ன வந்து பாக்குறாக்கா. எல்லாருக்கும் டைம் செட்டாகணும்ல? யாரையும் அதுக்காகக் கோச்சுக்க முடியாதுல்ல?" எனப் பேச, கவிதா அவள் சூழ்நிலையைப் பகிர, பின் இருவரும் அவரவர் குழந்தையைபற்றி விசாரிக்க, மீனாள் பார்த்திருந்தாள்.

"உன் வீட்டுக்காரர எங்க?" கவிதா கேட்க.

"ஃபங்ஷனுகாகத் தான் வெளில போயிட்டு வந்துட்ருக்காங்க. மதியம் சாப்பிட வந்துட்டு போனாங்க அப்றம் நானே பார்க்கல"

"கீழ‌ தான் தாத்தாட்ட பேசிட்ருந்தாங்க நா வரும்போது பார்த்தேன்" என்றாள் மீனாள்.

"அப்ப இப்ப மேல வருவாங்க" என்றவள் முகம் அவன் மீதான எதிர்பார்ப்பைப் பிரதிபலித்தது.

"என்ன பண்றீங்க?" என மீனாள் கேட்க,

"எம்.காம் முடிச்சுட்டேன். இனி ஜாப் தான். எம்.என்.சில ஜாயின் பண்ணிட்டேன்" என்றாள் சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு.

"ஓ! அப்பப் பேபிய உங்க ஹஸ்பண்ட் பாத்துப்பாரா?" அவள் குரலில் நக்கல் இருந்த மாதிரியும் இருந்தது இல்லாதது போலவும் இருந்தது.

"அதான நீ வேலைக்குப் போய்ட்டா புள்ளைய யாரு பாத்துப்பா?" என்றாள் கவிதாவும்‌.

"நா வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்ருக்கேன். என்னால பேபிய மேனேஜ் பண்ணிக்க முடியும்"

"நான் கூடப் பேபிய டேக்கேர்ல விட்ருவீங்க இல்லனா உங்க ஹஸ்பண்ட் பாத்துப்பாருன்னு நினைச்சேன். சென்னைல மேக்ஸிமம் அப்படிதானே பண்றாங்க?" மீனாள் சொல்ல.

"அதுல தப்பில்லையேக்கா?"

"மே பி. குழந்தை வேணும்னு கேட்குறவங்களுக்கு கிடைக்க மாட்டேங்குது. டே ‌கேர்ல விட்டுட்டு போறவங்களுக்கு தான் உடனே கிடைக்குது" என்றாள் அவள் சலிப்புடன்.

"என்ன பேசுற நீ? ரெண்டு மூணு வருஷம் பொறுத்து வேலைக்குப் போனா ஆகாதா உனக்கு?" என்றாள் கவிதா ஒருபக்கம்.

கவிதாவை முறைத்து விட்டு, "உங்களுக்கும் சீக்கிரம் கிடைக்கும் க்கா. டூ இயர்ஸ் தானே ஆகுது? நீங்க என்ன பண்றீங்க? என்ன‌ முடிச்சுருக்கீங்க?" என்றாள் மீனாளிடம்.

"நானும் பி.காம் தான். இந்தியன் பேங்க்ல அசிஸ்டென்ட் மேனேஜரா இருக்கேன்."

"சூப்பர் க்கா. அவங்க கூடச் சொல்லல"

"நா இப்ப தான் ஜாயின் பண்ணேன் மூணு மாசந்தான் ஆகுது"

"வாவ் க்கா. உங்களுக்குப் பேபி பிறந்தா இங்க பாத்துக்க இத்தன பேர் இருக்கறதுனால கவலையே படாம நீங்க வேலைக்குப் போய்ட்டு வரலாம்"

"மதர்ஹுட் லைஃப்லாம் ஒன் ஆர் டூ டைம் தான் கிடைக்கும். அத அப்பவே என்ஜாய் பண்ணிக்கணும். நான் பண்ணுவேன். அப்றம் லைஃப் லாங் அந்தப் பேபீஸ் ஸ்கூல் படிப்புன்னு ஓட நாம அவங்களுக்கு சேர்க்கன்னு ஓடப் போறோம். அதனால முதல்ல கிடைக்குற அந்த த்ரீ இயர்ஸ் கோல்டன் பீரியட நா யாருக்கும் விட்டுக் குடுக்க மாட்டேன்" என்றவள் நனியிதழை ஆழ்ந்து பார்த்தாள்.

புருவம் சுருக்கி யோசித்திருந்த நனியிதழ், "அப்ப வேலைய விட்ருவீங்களா?" என்றாள் சந்தோஷமாக.

"ம்கூம் வித்தவுட் பேமென்ட்ல லாங் லீவ் எடுத்துப்பேன். அந்த ஆப்ஷன் பேங்க் செக்டார்ல உண்டு. மேக்ஸிமம் டூ இயர்ஸ் எடுத்துக்கலாம்"

"சரி உங்களுக்கு அது ஓகே. பட் கண்டிப்பா மாச வருமானம் வேணுங்கறவங்க அப்படி பண்ண முடியாதே வேலைக்குப் போய்த் தானே ஆகணும்?"

"ம்ம் அப்டி பட்டவங்க பெரியவங்கள கூட வச்சுக்கணும். டே கேர்ல யாரையோ நம்பி விடுறதுக்கு சொந்த தாத்தா பாட்டிட்ட விட்டுட்டு போலாமே?" என்றாள் கவிதா.

"அந்த‌ ஆப்ஷனும் இல்லாதவங்க தான் மேக்ஸிமம் அங்க போறாங்க" என்றாள் நனியிதழ்.

"வேற வழியே இல்லாதவங்களுக்கு ஓ.கே இருக்கறவங்க ஏன் போகணும்?" மீனாள் பேச.

"நீங்க எனக்குத் தான் இதெல்லாம் சொல்றீங்களா? நா அப்படி யோசனைலயே இல்ல" என்றாள் தெளிவாக.

"திடீர்னு வேலைக்கு வந்தே ஆகணும்ன்னு சொல்லிட்டாங்கனா என்ன பண்ணுவ?" கவிதா கேட்க.
"என் புருஷன புள்ளைய பாத்துக்க சொல்லிட்டு நா வேலைக்குப் போவேன்"


"லூசாடி. அவரு உத்யோகத்த விட்டுட்டு வீட்ல உக்காந்திருந்தா எல்லாம் உன்ன நல்லா மெச்சிக்குவாங்க. பாதில படிப்ப நிறுத்திட்டு கல்யாணம் கட்டி குடுக்க இருந்தாரு நம்ம அப்பா. அத மீறிப் படிச்சுருக்க நீ. அது உன் நல்ல நேரம். அதுக்காக இஷ்டத்துக்கு நடக்க கூடாது"

"அக்கா நா என்ன தப்பா சொல்லிட்டேன். எனக்கு ரூவா தேவை இருக்கு‌. நூறு பவுன் நாந்தான் எனக்குச் சேத்து தரணும் அதுக்கு எனக்கு வருமானம் வேணும். மீனா க்கா இத இப்ப ஆரம்பிச்சது நீங்க எதுக்காகன்னு சொல்லுங்க?"

"ம்ம் உன் ஹஸ்பண்ட் தாத்தாட்ட பேசிட்ருந்தாங்க. நா அவர்ட்ட ஒரு விஷயம் பேசப் போனேன் அப்பக் குழந்தைன்னு பேச்சு அடிபடவும் என்ன பத்தியோன்னு நின்னேன். பட் உன்ன பத்தின்னு கேட்டதும் புரிஞ்சது. கிடைக்காதவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும். நா என்ன சொல்லல. எனக்குச் சின்ன வயசு தான். மேரேஜ் ஆகியும் டூ இயர்ஸ் தான் ஆகுது. ஆனா நானே அவ்வளவு ஃபேஸ் பண்றேன். என் பெரிம்மா பொண்ணு எனக்கு அக்கா பதினைஞ்சு வருஷமா இல்லாம இருக்கா. வேலை பாத்து நிறைய சொத்து சேத்து வச்சுருக்கா. ஆனா யாருக்கு குடுக்கன்னு தெரியாம சேத்து வச்சுருக்கா. யாருமே இல்லாம தனியா நிக்கிறா இன்னைக்கு. உனக்கு ஈசியா கிடைச்சுருக்கு அது மூலமா கிடைக்கிற டைம்ம வேஸ்ட் பண்ணிடாதன்னு சொல்ல வந்தேன்" என நீளமாகப் பேசிப் பெரு மூச்சுவிட,

"நிஜமா எனக்கு நீங்கச் சொல்ல வர்றது புரியல. எனக்கு வேலை வேணுங்குற கட்டாயம். பேபின்றது ரெண்டு பேருக்குமான பொறுப்பு அத நான் பாக்கலனா என் ஹஸ்பண்ட் பாக்கணும் அவ்வளவு தானே?"

"வொய் நாட். நா மட்டும் ஏன் பெத்துக்கணும் ஆம்பளைங்களும் பெத்துக்கட்டுமேன்னு பேசுற ஃபெமினிஷம் பேச நல்லாருக்கும். வாழ்க்கைக்கு உதவுமா?"

"இந்தக் காலத்து பொண்ணா இருந்துட்டு வேலைக்குப் போறது தப்புன்ற‌ மாறி இருக்கு உங்க பேச்சு. இதுல நீங்களும் வேலைக்குப் போறீங்க" கோபமாகவே கேட்டாள் நனியிதழ்.

"பேபிய பாத்துக்குற பொறுப்பு ரெண்டு பேத்துக்கும் தான் இருக்கு. ஆனா அத அவங்கவங்களா விருப்பப்பட்டு செய்யணும். தினுச்சு செய்ய வைக்கக் கூடாது இதழு" கவிதாவும் திட்ட,

"ம்ச் எனக்குப் புரியவே இல்ல. நா வேலைக்குப் போறேன்னு சொல்றதுல என்ன தப்பிருக்கு. வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்டு வாங்கிட்டேன். வீட்லயிருந்து ரெண்டையும் என்னால மேனேஜ் பண்ண முடியும்னு சொல்றேன் ஏன் புரிஞ்சுக்க மாட்றீங்க?"

"நீ எதுக்கு இவ்வளவு கஷ்ட படணும்? இப்ப தான் உங்க க்ராண்ட் சைல்ட்ட பெத்தெடுத்துருக்கேன். அது கொஞ்சம் நடக்க ஆரம்பிச்ச அப்றம் நா வேலைக்குப் போய் உங்க கணக்க டேலி பண்றேன்னு தாத்தா பாட்டிகிட்ட சொல்ல வேண்டிய தான?"

"அல்ரெடி ஒன் இயர் டைம் கேட்டுட்டேன் அகைன் கேட்டா நிறையா பேசுவாங்க"

"சரி நீ முடிவு பண்ணிட்ட. சொன்னா கேட்க மாட்ட, பட்டுத் திருந்து. உன்னால சமாளிக்க முடிஞ்சா சமாளி. உனக்கு ரூபாவ அடைக்கணும்னு உன்‌ புருஷன வீட்ல இருக்க வச்சு அவர் மரியாதைய வாங்கிறாத. இருட்டிடுச்சு கீழ போலாம் வா. நீங்களும் வாங்க" எனக் கவிதா சொல்லவும் மூவரும் கிளம்ப,

யாழ்நிலவன் அவளை தேடிக்கொண்டு வந்திருந்தான்.
"வாங்க." எனக் கவிதாவிற்கு தலை அசைத்தவன், மீனாளயும் பார்த்துச் சிரித்துவிட்டு, "உன்ன தேடி தான் வந்தேன். எதாது குடிச்சியா அம்மு?" என வர,


"கீழ போய்த் தான் அம்மு" என யோசனையுடனே அவள் அவனுடன் நடக்க, மற்ற இருவரும் அவர்களின் சம்பாஷணையை கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தவாறு பின் தொடர்ந்தனர்.

அன்று இரவு அவன் நெஞ்சில் படுத்திருக்கும்போது, "அம்மு நா வேலைக்குப் போக வேணாம்னு தாத்தா சொன்னாங்களா?" எனக் கேட்டாள்.

"ம்ம் அண்ணி சொன்னாங்களா? நாங்க பேசிட்ருக்கும்போது அவங்க தான் வந்துட்டு போனாங்க"

"ம்ம் என்னால சமாளிக்க முடியாதுன்னு சொல்றாங்க அம்மு"

"ஒன்ஸ் ட்ரை பண்ணு அம்மு. ட்ரை பண்ணாம முடியும் முடியாதுன்னு நாமளே முடிவுக்கு வர வேணாம்"

"ம்ம் தாத்தா என்ன சொன்னாங்க? அவங்கள மீறிச் செஞ்ச மாதிரி நினைப்பாங்களா?"

"இல்லடா டெலிவரி அங்க தான்னு சொன்னேனா அப்பக் கூட யாரு இருந்து பாத்துப்பான்னு கேட்டுட்ருந்தாங்க, இங்க டெலிவரி வச்சுக்கலாம் எப்படியும் மூணு மாசத்துக்கு லேடிஸ் ஹெல்ப் வேணும்‌னு சொன்னாங்க‌‌. உன் அக்காவால அவங்க ஃபேமிலி விட்டு வந்தும் இருக்க முடியாது. அப்படி பேச்ச ஸ்டார்ட் பண்ணப்போ தான் நீ வேலைக்கு ஜாயின் பண்ணணும்னு சொன்னேன். அவங்களுக்கு இப்ப வேணாம்னு எண்ணம். உனக்கும் கிடைச்சத அப்படியே விட்டா நிம்மதியா இருக்காது. உன் டெலிவரி அங்க முடிஞ்சதும் ஒரு பத்து நாள் நா லீவ் எடுத்துருக்கேன் கூட இருந்து பாத்துக்குறேன். அப்றம் நீ வொர்க் ஜாயின் பண்ணிட்டு வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டு இங்க வந்திடு, இங்க ஒரு மூணு மாசம் இரு. உன்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்னும்போது கிளம்பி அங்க வந்திடு" என அவன் யோசித்து வைத்திருந்ததை பகிர்ந்தான்.

அவளுக்காகத் தான் அவ்வளவும் பேசுகிறான். ஆனால் அவனைப் பிரிந்து இங்கையா அதும் மாத கணக்கிலா என விழித்தவள், "இங்கையா?" அவள் கண்ணை விரித்துக் கொண்டு கேட்க,

"ம்ம் நம்மட்ட வேற ஆப்ஷன் இல்ல அம்மு"

"என் அக்காவும், மீனாக்காவும் செம திட்டு திட்டிட்டாங்க. நா வேலைக்குப் போனா என் புருஷன் புள்ளைய பாத்துப்பாருன்னு சொன்னேன், நல்லா திட்டிட்டாங்க. அப்றம் யோசிச்சா எல்லோரும் இத தப்பா தான் சொல்லுவாங்கன்னு தோணுச்சு"

"ம்ம் உத்யோகம் புருஷ லட்சணம்னு பதிய வச்சுட்டாங்க அம்மு. அது இல்லனா ஆண்கள் அவங்கள அவங்களே மொத மதிக்கமாட்டாங்க. சொன்ன உனக்கே நாளு நாள்ல நா அப்படி இருக்குறது எரிச்சல குடுத்திடும். நமக்குள் சண்டையாகும், சிலது ப்ராக்டிகலா நம்ம சொசைட்டி கூடப் பாஸிப்பில் இல்ல"

"அப்ப அன்னைக்கே நா அப்டி சொன்னப்போ உங்களுக்கு இஷ்டம் இல்லையா?"

"எனக்கு இஷ்டம் இல்லனாலும், உன்னோடதும் நியாயம் தானேன்னு தோணுச்சு. அத நா உடனே அப்போஸ் பண்ணாலும் உனக்குக் கஷ்டமா இருக்கும்னு தான் நா எதும் சொல்லல. இப்பவும் நாம சேர்ந்து பேபி கேர் பண்ணலாம். உன்னால எவ்வளவு மேனேஜ் பண்ண முடியும்னு மொத பாரு." அவன் அவ்வளவு தெளிவாக, மூவருக்குமாக யோசித்தது நம்பிக்கையைத் தந்தது.

"மை மூன்!" என எட்டி அவன் தாடி அடர்ந்த கன்னத்தில் முத்தமிட்டாள், "டெலிவரி வரத் தாடி சேவ் பண்ண மாட்டீங்களா?"

"ம்ம்கூம் இது என் ரெண்டு பேபிக்கானது, என்னோட ப்ரேயர்"

"எல்லாத்துலயும் பெர்ஃபெக்ட்ப்பா இந்த ப்ரஃபஸ்ஸர்." என இரு கைகளாலும் அவனுக்கு நெட்டி முறித்தாள்.

"உனக்குச் சாதகமா பேசுனா மட்டும் கொஞ்சுடி நீ. கேடி"

"அப்டிலாம் இல்ல எப்பையும் கொஞ்சுவேன் நா. முறைச்சுட்டே இருப்பீங்களா காலேஜ்ல அதனால உங்க கூட லைஃப் லாங் பயந்துட்டே இருக்கணுமோன்னு யோசிச்சுருக்கேன். இந்தத் துர்வாசருக்கு ரொமான்ஸ்லா வராதோன்னு நினைச்சுருக்கேன். ஆனா எவ்ளோ பேசுறீங்க நீங்க?" எனச் சிரிக்க,

"துர்வாசராடி நா? சொல்லுவியா அப்படி?" என அவளுக்கு வலிக்காத தண்டனை வழங்கத் தொடங்கியிருந்தான்.

வளைகாப்பு நாள், மண்டபத்தில் மணமகள் அறையில் கவிதா, மீனாள் உதவியுடன் புடவை உடுத்திக்கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள் நனியிதழ்.
"ஹே நாங்க வந்துட்டோம்" எனக் கத்திக்கொண்டே வந்தவர்களின் திடீர் சத்தத்தில் மூவருக்குமே நெஞ்சு வலி வந்திருந்தது.


"ஏன்டி வரும்போதே சைரனோட தான் வரணுமா? இருக்குற படபடப்புல நீங்க வேற பயமுறுத்துனா என் புள்ள இன்னைக்கே பொறந்துரும்" என ஒரொரு அடி போட்டாள் இருவருக்கும்.

"நல்லது தான பிள்ளையையும் பாத்துட்டு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு போவோம்ல இன்ன செண்பா?" என்றாள் அபி.

"அதான அபி, சென்னைல இருந்து நேத்து நைட்‌ கிளம்பி, காலைல வந்திறங்கி, ஹோட்டல்ல கஷ்டபட்டு ரெடியாகி, அதும் சேலைலாம் கட்டி வந்தா, வான்னு கேக்காம, ஒரு ஹக் குடுக்காம. அடி குடுக்குறாடி இவ" என்றாள் செண்பகவல்லி கையால் தனக்கு தானே விசிறிக் கொண்டு.

"அதான பஸ்ல பாட்டு கூடப் போடல, வாத்தியாருங்களோட வர வச்சு பழி வாங்கிட்டாருடி உன் துர்வாசர். அட்டேன்சன்ல வந்து சேர்ந்துருக்கோம். தனியா ட்ரைன்ல வந்திருந்தா கூடக் கச்சேரி கலகட்டிருக்கும் தெரியுமா?" என்றாள் அபியும் அவள் பங்கிற்கு.

"ஆமா உங்க ரெண்டு பேருக்குத் தனி பஸ் விடுவாங்க" என அபிக்கு பதில் சொன்னவள், இன்னும் போஸ் மாறாமல் நின்ற செண்பாவை முதுகில் தட்டி, "நல்லாருக்கு நல்லாருக்கு. கைய கீழ போட்டு நேரா நில்லு எரும. ஆமா உங்க ரெண்டு பேருக்கும் மட்டும் ஒன்னுபோல எடுத்துருக்கீங்க எனக்கு எங்கடி?" என்றாள் நனியிதழ். ஸ்லீவ்லெஸ் ப்ளௌஸில் சாஃப்ட் சில்க் ஒற்றை முந்தானையாக விட்டு அவ்வளவு நேர்த்தியாகக் கட்டி இருந்தனர் இருவரும்.

"இப்ப கட்டிக்றேன்னு சொல்லு, அந்தக் கைல வாங்கிக்கலாம் நீ"

"இப்ப தான் கஷ்டப்பட்டு கட்டி முடிச்சுருக்கேன் மறுபடியும் மாத்த என்னால ஆகாதுடி"

"பேபி உண்டானா அவ்வளவு கஷ்டமா இருக்குமா நனி?" அபி சீரியஸாக கேட்க.

"இல்ல டூர் போகும்போது ஆடிட்டே போயிட்டு ஆடிட்டே வருவோமே அதுமாதிரி ஜாலியா இருக்கும். ஆடிட்டே போய்ட்டு ஆடிட்டே பிள்ளையோட வந்திடலாம்" என அவர்கள் ஒருவரை ஒருவர் வாறிக் கொண்டிருக்க, மீனாளும் கவிதாவும் சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்து நின்றனர்.

"அம்மு!" என வந்தான் யாழ்நிலவன்.

"எல்லாரும் வந்தாச்சா அம்மு? நா ஸ்டாஃப்ஸ வந்து வரவேற்கனுமே. வரட்டுமா?" என மெதுவாக எழ,
"குட் மார்னிங் சார்!" என்றனர் பவ்யமாக அபியும், செண்பாவும்.
கவிதாவும் மீனாவும், "என்னே பவ்யம்! என்னே நடிப்பு!" என வாயைப் பிளந்து விட்டனர்.
 

priya pandees

Moderator

"ட்ராவலாம் ஓ.கேவா?" என்றான் அவர்களிடம்,

"ம்ம் தூங்கிட்டே வந்துட்டோம் சார்"

"குட் போய்ச் சாப்பிடுங்க. அம்மு நீ அவங்களாம் மேடைக்கு வரும்போது வெல்கம் பண்ணு போதும். மனைக்குக் கூப்பிட வருவாங்க. நீ ரெடியா பாக்க தான் வந்தேன். எல்லாம் ஓ.கே வா அம்மு?"

"துர்வாசர் பெர்ஃபாமன்ஸ்ல பின்றாருல்ல?" என அபி மெதுவாகச் செண்பாவிடம் சொல்ல,

"ரெண்டு பேரும் அறுந்த வாலுங்களா இருப்பீங்க போல. சொல்லிக் குடுக்குற வாத்தியார இப்படி பேசலாமா?" என்றாள் கவிதா.

"அக்கா காரியத்த கெடுத்தீங்க, நாங்க வந்த பஸ்லயே திரும்பப் போகணும் க்கா. சும்மா லுலாய்க்கு பேசுனத சத்தமா சொல்லிப் போட்டு உட்றாதீங்க" என அவர் காதில் ஓதினாள் அபி.

"சார் ரொம்ப ஸ்டிரிக்டோ?" மீனாள் சிரித்துக் கொண்டே கேட்க,
அவர்கள் நால்வரும் தங்களை பற்றித் தான் கிசுகிசுக்கிறார்கள் எனப் புரிந்தும் அவன் மனைவியிடம் அவள் தேவையை மட்டும் மெதுவாகக் கேட்டு நின்றான் நிலவன்.

"சொந்த பொண்டாட்டிய பாத்தே காலேஜ்ல சிரிக்க மாட்டார்னா பாத்துக்கோங்க உங்க தங்கச்சி புருஷர் எந்தளவுக்கு ஸ்டிரிக்ட்டுன்னு"

"எனக்கு அவர் கொழுந்தன்" மீனாள் திருத்த,

"அப்ப உங்களுக்குப் பயப்டுவாரா சாரு?"

"ம்ம்கூம் அவங்க அண்ணன்ட்டயே நாலு வார்த்த சேத்து பேசி நான் பார்த்ததில்ல. என்ட்டலாம் தலையசைப்பு மட்டுந்தான். பட் பாட்டிட்ட நிறைய பேசுவாருன்னு கேள்வி பட்ருக்கேன்"

"இவட்ட மட்டும் நிறைய பேசுவார் போலக்கா?" செண்பா ஓர பார்வையில் காட்ட,

"ஆமா பாத்தீங்களா கமுக்கமா நமக்குக் கூடக் கேக்காம பேசிட்ருக்காங்க" என அபியும் சொல்ல,

"பொண்டாட்டிட்ட பேசித் தானே ஆகணும், இல்லன்னா காலந்தள்ள முடியுமா? என்ன புள்ளைக்களா புரியாம சொல்றீங்க?" என்றார் கவிதா.

"எங்க தொண்டையே பெருசு உங்க தொண்டை அத விடப் பெருசுக்கா. சவுண்ட் ஹை பிச்ல தான் டெலிவராகுது" என அவள் கிண்டல் செய்ய,

அந்நேரம் வேகமாக வந்த அமுதா கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டி, "நேரம் போகுது, கூட்டிட்டு வா கவிதா" என்றுவிட்டு போனார்.

நான்கு பெண்களும் உடன் செல்ல, யாழ்நிலவன் கைபிடித்து மெல்ல மனையேறினாள் நனியிதழ். மண்டபம் நிரம்பி வழிந்தது அவ்வளவு கூட்டம். எல்லோர் முன்பும் முதலில் இருவரும் மாலை மாற்றிக்கொள்ள, அவன் தான் அவளுக்கு முதலில் நலங்கு வைத்து வளையலிட்டான். அடுத்ததாக தான் சொர்ணம் வந்தார். அனைவரின் ஆசிர்வாதத்தையும் அப்பா, அம்மா, பிள்ளை என மூவரும் பெற்றனர்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 12

இருவருக்கும் நலங்கு வைத்து, நனியிதழுக்கு வளையலடுக்கி முடித்திருந்தனர். ஒவ்வொருவராகப் பரிசோடு வந்து வாழ்த்துச் சொல்லிச் செல்ல, எல்லோரிடமும் அமர்ந்தே ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள் நனியிதழ். யாழ்நிலவன் மட்டுமே எழுந்தமர்ந்து கொண்டிருந்தான்.

சற்று ஆசுவாசமாக அமர்ந்திருந்தபொழுது, "எனக்கு ஸ்பெஷல் கிஃப்ட் வேணுமே அம்மு!" என்றான் அவள் கையில் நிறைந்திருந்த வளையல்களில் லேசாகக் கோடிழுத்து.

"என்ன வேணும்?" என்றாள் புருவம் உயர்த்தி.

"நீ, உன் வயித்துக்குள்ள பாப்பா உங்கள அணைச்சுட்டு நா, அப்டியே ஒரு ஸ்நாப் ஷாட்"

"இப்பவா? எப்டி எடுக்க? தனி ரூம் போயிடுவோமா? இப்பவே எழுந்து போனா சொர்ணம் பாட்டி ஒன்னும் சொல்லமாட்டாங்களா?" என அவள் பரபரப்புடன் கேட்க,

"எத்தன கொஸ்டீன் கேக்ற? பேபி பம்ப் ஃபோட்டோ ஷுட் சிம்பிளா வச்சுப்போமான்னு கேட்க வந்தேன்டி?"

கண்ணை விரித்து ஆச்சரியபட்டவள், "இப்பவே ஃபோட்டோ எடுக்றாங்களே?"

"இப்டி வேணாம் நம்ம மூணு பேர் மட்டுமா, நீ இந்தக் கசகசப்பு இல்லாம ரிலாக்ஸா இருக்கமாறி எடுக்கலாம்"

"எப்போ?" என்றாள் ஆர்வமாக.

"உனக்கு எப்ப‌ ஓ.கேவோ அப்போ"

"டெலிவரிக்கு இன்னும் பிஃப்டீன் டேய்ஸ் தான் இருக்கு. ரெண்டு நாள் அப்பா வீட்ல இருந்துட்டு நாம ஊருக்குக் கிளம்பணும். இங்க எடுக்றோமா? சென்னைலயா?"

"இங்கனா நம்ம தோப்பு வீடு இருக்கு, ரிலாக்ஸா எடுக்கலாம். உனக்கும் பார்க்காத இடமா இருக்கும். ரிஃப்ரெஷிங்கா இருக்கும்"

"அப்ப நாளைக்கு வந்து கூட்டிட்டு போறீங்களா?"

"ம்ம்" எனத் தலையசைத்து விட்டவன், ஃபோட்டோ எடுப்பவரை அழைத்துப் பேச‌ துவங்க, அலங்கரிக்கபட்ட நாற்காலியில் அமர்ந்திருந்தவள் அருகில் வேகமாக வந்தனர் அபியும், செண்பகவள்ளியும்.

"நனி, நீ மாலை மாத்தி சிம்பிளா மேரேஜ் கூட‌ இன்னைக்கு உண்டுன்னு சொல்லவே இல்ல? இப்பவும் ஒன்னும் லேட்டாகிடல, சரட்டு வண்டில சீரட்டொளியிலன்னு, நாங்க உன்ன சுத்தி சுத்தி வந்து ஆடட்டுமா?" என்றாள் தீவிரமாக அபி நனியிதழிடம்.

"ப்ராக்டீஸ் பண்ணலையே? இவ மொதல்லயே சொல்லிருக்கலாம்" என்றாள் செண்பகவள்ளி.

"ஏன்டி படுத்றீங்க. இதனால தான் நம்மள பிஜி முடிச்சுட்டோம்னு சொன்னா கூட நம்ப யோசிக்றாங்க. நானே எப்படா படுக்க விடுவாங்க இந்தச் சேலைய மாத்த விடுவாங்கன்னு மூச்சு முட்டிப் போய் உக்காந்துருக்கேன் உங்களுக்கு டான்ஸ் ஆடணுமோ?" எனக் கடுமையாக முறைத்தாள்.

"இல்லடி நீங்க மொத லவ் பண்ணி வீட்ட எதுத்து கல்யாணம் பண்ணிட்டதால இன்னைக்கு உங்க ஃபேமிலிக்காக, குழந்தை உண்டாகி தொப்பை வயிறோட மாலை மாத்திட்டீங்கள்லாமே? இப்ப தான் அங்க பேசிகிட்டாங்க. அதான் உங்களுக்கு ஒரு என்கரேஜிங்கா இருக்க டான்ஸ் ஆடட்டுமான்னு கேக்க வந்தா திட்ற நீ?"

"என் புருஷன்ட்ட பெர்மிஷன் வாங்கிடுறியா நீயே? வாங்கிட்டு எவ்வளவு நேரம் வேணாலும் ஆடு நான் பாக்க ரெடி‌"

"வேணாம்னா அத டைரக்டா சொல்லுடி டொமேட்டோ" என முகத்தை நொடித்தாள் அபி.
அவர்கள் அப்படியே கதை அளந்து கொண்டிருக்க, "சேலை மாத்திக்கலாம் எழுந்திரி. இந்தக் கல்யாண பட்ட மாத்திட்டு லேசான புடவை புதுசு எடுத்தது எங்க இருக்கு? அத கட்டிக்கலாம் வா. பாட்டி மடி நிரப்பி நல்ல நேரத்துல கிளம்பணும் சொல்லிட்டாங்க கிளம்புவோம் வா" என வந்து அவள் எழுந்து கொள்ள கைக்கொடுத்தாள் கவிதா.

நனியிதழ் திரும்பி நிலவனைப் பார்க்க, "போ நாளைக்கு மார்னிங் அங்க இருப்பேன்" என்றான் அவன் தலையசைத்து.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என எல்லோரிடமும் விடைபெற்றுத் தந்தை வீடு கிளம்பினாள் நனியிதழ். வீட்டிற்கு வந்ததும் அவனைத் தேடதான் செய்தது. ஆனால் கவிதாவின் மகன் தினேஷ் அவளை வேறு சிந்தனைக்குச் செல்ல விடாமல் பிடித்து வைத்தான். அவன் கேள்விக்கு பதில் சொல்லவே அவளுக்கு பாதி யோசனை சென்றதால் மனம் நிர்மலமாக இருந்தது.

இரவு உணவின்போது, "டெலிவரி இங்கயே வச்சுக்கலாம் இதழு. நீ இங்க இரு. அக்கா வந்து பாத்துக்குவா, கூடவே முதலாளி குடும்பமும் பாத்துக்குவாங்க. நிறை மாசமா இருந்துட்டு திரும்ப அங்க அலைஞ்சு, இங்க இருந்தும் எல்லாரையும் அங்க வர வைக்கணுமா சொல்லு?" என்றார் கருப்பையா.

"ஏன் ப்பா? தாத்தா எதும் சொன்னாங்களா?"

"ம்ம் அங்க பாக்க கவிதா போவாளான்னு கேட்டாங்க? உன் அம்மா இருந்தா கவலையே இல்ல. பாரு ரெண்டு பிள்ளைகளுக்குக் கல்யாணத்த பண்ணி பேரன் பேத்திய கவனிச்சுவிடாம முந்திட்டு போய்ட்டா" என்றார் சலிப்புடன். அவருக்கு இப்போதெல்லாம் அவர் மனைவியின் நினைவு அதிகமாய் தாக்கியது.

அவரைப் பாவமாகப் பார்த்தனர் பிள்ளைகள் இருவரும். "நான் பாக்றேன்ப்பா அவள, என் வீட்லயும் சொல்லிட்டேன். அக்கான்னு பின்ன நா என்னத்துக்கு இருக்கேன்?" என்றாள் கவிதா.

"அத தான் சொல்லுதேன். இங்க இருந்தனா உனக்கு உன் வீட்டையும் அப்பப்ப எட்டி‌ பாக்க போக வர முடியும்ல?"

"அப்பா நா வேலைக்கு ஜாயின் பண்ணணும், ஜாயினி ஐடி லேப்டாப் எல்லாம் வாங்கணும். அதுக்காகனாலும் நான் சென்னை போய்த்தான் ஆகணும்."

"கைப்பிள்ளைய வச்சுட்டு என்னத்த வேலை பாப்ப நீ? சும்மா நானும் வேலைக்குப் போறேன்னு பெருமைக்கு மாறடிக்க கூடாது இதழு!" எனக் கருப்பையா அதட்ட,

"ப்பா எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா. என்னோட திறமைக்கு ஒரு சான்ஸ் கிடைச்சுருக்கு‌, அண்ட் நான் சொன்னத செய்ய வேண்டிய கட்டாயமு இருக்கு"

"சரி பிள்ளைய வச்சுட்டு அதும் சென்னைல இருந்துட்டு என்ன பண்ண முடியும்னு நீ பேசிட்டு இருக்க?" என்றார் விடாமல்.

"பிள்ளை பிறந்து ஒரு ஒரு மாசம் அங்க இருந்துட்டு அப்றம் இங்க வந்துடுறேன். இங்க ரெண்டு மூணு மாசத்துக்கு இருந்துட்டு அப்றமா மறுபடியும் சென்னை போயிடுறேன்"

"பிள்ளையும் பச்ச உடம்புகாரியுமா இங்கையும் அங்கையும் அலைவியா நீ? பேச ஈசி, ஆனா உடம்பு ஒத்துழைக்காது. கம்முன்னு இங்கன இருந்து புள்ளைய பெத்துட்டு. அஞ்சு மாசம் கழிச்சு ஊருக்குப் போ. புள்ளைய தேத்தி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு அப்றம் வாழ்க்கை முழுக்க கூட வேலைக்குப் போ யாரும் தடுக்க மாட்டாங்க உன்ன" கவிதா அழுத்தம் திருத்தமாகச் சொல்லி எழுந்து விட்டாள். தினேஷ் தூக்கத்திற்கு சினுங்க துவங்கியிருந்ததால் அவள் சென்றுவிட்டாள்.

"யோசி இதழு. சும்மா பேச எல்லாம் நல்லாதான் இருக்கும். செய்யும்போது தான் கஷ்டம்லா தெரியும். பிள்ள பெத்தெடுக்றதுலாம் அவ்வளவு சுலுவான விஷயமில்ல. நீ வேலைக்குப் போற வர நா நகைக்கான பணத்த கட்டுதேன். மாப்ளைட்ட தான கடன கழிக்கணும் நான் கழிக்குறேன் நீ நிம்மதியா இருமா. பொம்பள புள்ளைய பெத்து கட்டி குடுத்துட்டாலும், வாழ்க்கை முழுக்க அவங்களுக்கு சீர் செய்ற கடமை பெத்தவங்களுக்கு தான் உண்டுமா. அதனால நீ அதெல்லாம் யோசிக்காத இதழு"

"எப்படிப்பா யோசிக்காம இருக்க முடியும்? நா உங்கள இதுக்குள்ள இழுக்கவே விரும்பல. நீங்க எனக்குச் செஞ்சா அக்கா வீட்ல இத காரணங்காட்டி அவங்களும் கேப்பாங்க. நா எனக்குச் செஞ்சுக்குறேன். அப்பத் தான் அவங்க உங்கட்ட கேட்காம கம்முன்னு இருப்பாங்க"

"இப்பவே முனங்குறாங்கம்மா. நீயே செஞ்சன்னு சொன்னாலும் நம்ப‌ மாட்டாங்க. உங்களுக்குச் செய்யத் தான நா வேலைக்குப் போறேன்"

"போதும் நீங்கச் செஞ்ச வர. இது என்‌ கடன். அக்காக்கு போட்ட அதே முப்பத்தஞ்சு பவுன் எனக்கும் குடுத்துட்டீங்க, அவ்வளவு தான். மீதி என் கணக்கு தான். என் மாமியார் வீட்டுக்கு நான் குடுக்கறது. இதுக்கும் உங்களுக்கும் அக்கா வீட்டுக்கும் சம்பந்தமில்ல. டாகுமெண்ட்ஸ்லாம் பக்காவா ரெடி பண்ணி தான் இந்தப் பேச்சுவார்த்தைய முடிப்போம்ப்பா. அதனால அவங்க எதும் கேட்டா கூட, உங்களுக்குத் தெரியாதுன்னு முடிங்க. தாரேன் தாரேன் குடுத்துட்டே இருந்தா யாருக்குமே போதும்னு சொல்ல மனசு வராதுப்பா"

"இதழு!"

"போய்த் தூங்குங்கப்பா. நானும் கொஞ்சம் நடந்து குடுத்துட்டு படுக்கப் போறேன். அக்கா நைட்டு துணைக்கு வரேன்ருக்கா. நீங்கத் தினேஷ் கூடப் படுத்துக்கோங்க"

"சரிம்மா."

அவர் சென்று விட, முன் வராந்தாவில் நடந்து கொண்டே கணவனுக்கு அழைத்தாள்.

"சொல்லு அம்மு!"

"என்ன பண்றீங்க? சாப்டாச்சா?"

"இல்ல இன்னும் வீட்டுக்கே போகலடா. மண்டபம்லா ஒதுக்கச் சொல்லி, எல்லார்க்கும் செட்டில் பண்ணிட்டு. சென்னைல இருந்து வந்தவங்க எல்லாரும் கிளம்புற வர நின்னு அனுப்பி வச்சுட்டு. வீட்ல இருக்கிறவங்களுக்கு நைட்டு டிஃபன் சொல்லிருந்தேன். அதையும் கடைக்கு வந்து இப்பதான் கிளப்பி விட்டுட்டு நானும் வீட்டுக்குக் கிளம்பலாம்னு வண்டி எடுக்றேன் உன் ஃபோன்"

"ரொம்ப அலைச்சலா அம்மு?"
"ம்ம் இனி வீட்டுக்குப் போய்ச் சாப்ட்டு ரெஸ்ட் தான்டா"

"இங்க வேணா வர்றீங்களா? அங்க ஆளா இருப்பாங்க போனதும் தூங்க விடுவாங்களோ‌ என்னவோ?"

அவள் ஆசையாகக் கேட்க மறுக்கத் தோன்றவில்லை அவனுக்கு, சிரித்துக் கொண்டே, "சரி வை வரேன்" எனப் போனை வைத்துவிட்டு அவள் வீட்டிற்கு கிளம்பினான்.

வாசல் திண்டிலேயே அமர்ந்து அவனுக்காகக் காத்திருந்தாள், "எதுக்குடி இங்கையே உக்காந்துட்ருக்க? இன்னைக்கு நின்ன அலுப்புக்கு தூக்கம் வரலையா இன்னும்?" என்றவன் பைக்கை நிறுத்தி இறங்கி வந்தான்.

"மதியம் வந்து கொஞ்சம் தூங்கிட்டேன். ஈவ்னிங் அக்கா வெந்நீர் வச்சு குடுத்தா குளிச்சுட்டேன் அதுவே நல்ல ரீல்ஃபா இருந்தது‌. இப்பதான் சாப்ட்டேன் அதான் நடந்துட்ருக்கேன் அம்மு"

"மத்த எல்லாரும் தூங்கியாச்சா?" என்றவனும் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

"அக்கா தினேஷ தூங்க வைக்றா. அப்பா இப்ப தான் தூங்க போனாங்க" என்றவளும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். இங்கும் வீட்டின் முன்னிருக்கும் பூச்செடிகள் அவர்களின் சென்னை வீட்டினை நியாபகபடுத்த, ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

"டயர்டா இருக்குடி நா அப்டியே கிளம்புறேன். நா வந்துட்டு போனேன்னு யார்ட்டையும் எதும் சொல்ல வேணாம்"

"இங்க தங்க மாட்டீங்களா? இங்க தங்குனதே இல்ல தான அம்மு?"

"நாளைக்கு தங்கட்டுமா? இன்னைக்கு தூங்கணும் எனக்கு ப்ளீஸ்டா" என்றதும் தலையசைத்து விட்டாள், அவளுக்கு ஏனோ அந்நேரம் அழுகை வரும் போலிருந்தது. அவனோடு என்று சென்றபிறகு இன்று தான் முதல் பிரிவு இருவருக்கும். அவன் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை, அவள் கன்னம் தட்டி கிளம்பிவிட்டான். ஆனால் வீட்டிற்கு சென்றபிறகு அவள் பாவமாகப் பார்த்து நின்றதே கண் முன் நிற்க, தூக்கம் அண்ட மாட்டேன் என்றது.

"அங்கேயே இருந்துருக்லாம்டா நீ" அவனுக்கு அவனே புலம்பிக் கொண்டு, விடியும் தருவாயில் தான் கண்ணயர்ந்தான்.

காலையிலேயே வந்துவிடுவானெனக் குளித்துக் கிளம்பி அமர்ந்திருந்தாள் நனியிதழ், அவன் தாமதமாகத் தூங்கியதால் அவள் அழைத்த அழைப்பையும் ஏற்காமல் தூங்கியிருக்க, அவன் விழிக்கவே மதியம் கடந்து விட்டது.

"டேய் நிலவா. என்னடா சாப்டாம கூடத் தூக்கிட்டுருக்க. சாப்ட்டு வந்தாவது தூங்கு வா. உடம்புக்கு என்னமு செய்யுதாடா?" என்றவாறு பாட்டி அவன் முதுகில் அடித்த அடியில் தான் எழுந்தமர்ந்தான்.

"ஏன் பாட்டி. நானே எழுந்து வருவேன்ல சாப்பிட ரொம்ப அவசரமா வந்து எழுப்பணுமா?" எனத் தூக்க கலக்கத்தில் முறைத்து பார்த்தான். இன்னுமே அவன் உடல் ஓய்விற்கு கெஞ்சியது. சென்னையிலிருந்து கிளம்பும் முன்னிருந்தே அவனுக்கு அலைச்சல் தான். இங்கு வந்தும் கடந்த மூன்று நாட்களாகச் சரியான தூக்கம் இல்லாமல் அதிக வேலை. அது மொத்தமாக அவனைச் சோர்வாக்கி இருந்தது.

"வெறும் வயித்தோட தூங்குவியா நீ? மணி பாத்தியா ரெண்டு தாண்டிடுச்சு. சாப்ட்டு வந்து நைட்டு வரக் கூடத் தூங்கு"

"ரெண்டு மணியா?" எனப் புருவம் சுருக்கியவன் மொபைலை எடுத்துப் பார்க்க, அதில் அவன் மனைவியிடமிருந்து நான்கு தவறிய அழைப்புகளும், ஃபோட்டோ எடுப்பவனிடமிருந்து இரண்டு தவறிய அழைப்புகளும் இருக்க, நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்டான்.

முதலில் ஃபோட்டோ கிராஃபரிடம் பேச, அவர் வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாகக் கூறிவிட, "நாளைக்கு மார்னிங் டைம் பாத்துட்டு சொல்றேன், போய்ட்டு வந்திடலாம். சீக்கிரம் முடிச்சுட்டு வந்திடலாம். நாங்க நைட் ஊருக்குக் கிளம்பணும்" எனச் சொல்ல,
"நீங்க காலைல கிளம்பிட்டு சொல்லுங்க நிலவன் சார் நா வந்துடுறேன்" என்று வைத்தான் அவன்.

"நாளைக்கு யாரோட‌ எங்க போற நீ?" என்றார் பாட்டி.

"காலைல ஃபோட்டோ ஷுட் போகணும். நைட்டு ட்ரைனுக்கு சென்னை கிளம்பணும். எத கேட்குற நீ?"

"எதுக்கு சென்னைக்கு?"

"டெலிவரி அங்க தான? போக வேணாமா நாங்க? காலேஜ் போணும்னு நான்" என்றவன் துண்டுடன் குளிக்கச் சென்றுவிட, அவன் வரும்வரை அங்குதான் அமர்ந்திருந்தார் சொர்ணம்.
தலையைத் துவட்டி கொண்டே வந்தவன் வேகமாக உடையை எடுத்துவிட்டே திரும்பிப் பார்க்கப் பாட்டி அமர்ந்திருப்பது தெரிந்தது, "என்ன பாட்டி?" என்க,

"நீ பாட்டுக்குப் பாதி பேச்சுல போனா என்ன அர்த்தம்? நீ போற சரி உங்கூட யார் வர்றா?"

"உனக்குத் தெரியாமலா உக்காந்து விசாரணை பண்ற நீ?" என்றவன் மீண்டும் குளியலறை சென்றே உடை மாற்றி வந்தான்.

"இப்ப எதுக்கு அவள அங்க கூட்டிட்டு போணுன்ற?"

"நீ கேட்ட நூறு பவுனால தான், அவ வேலைக்குப் போகணும்னு நிக்கிறா"

"அது இந்த வீட்டு மருமகளா வர்றவளுக்கு இருக்க வேண்டிய தகுதி. அத வரும்போதே அவ கொண்டு வந்துருக்கணும். அதான் இல்லன்னு ஆயிடுச்சே பின்ன என்ன இனி பிள்ளைய பாத்துட்டு வீட்ல இருக்க சொல்லு. அவ அப்பனால முடியுற வரக் குடுத்து கழிக்கட்டும்"

"மாமாவால முடியாதுன்னு தான் அவளே செய்யணும்னு நிக்றா. ஒருத்தங்களால என்ன முடியும்னு தெரிஞ்சு கேட்கணும். அவங்களா வந்து உன் பேரன கேட்டுக் கட்டிட்டு போகல. தாத்தாவா தான் கேட்டு என்ன கட்டி குடுத்தாங்க. பணம் இருக்குன்னு மாத்தி மாத்தி நம்ம இஷ்டத்துக்கு பேசக் கூடாது" என்றவன் கைக்கடிகாரத்தை மாட்டிக்கொண்டு கிளம்பி வெளியேறி, நின்று, "வரியா இல்ல நா வர்ற வர இங்கயே உக்காந்திருக்க போறியா நீ?"

"நல்லா பொண்டாட்டி தாசனா ஆகிட்டடா. பொண்டாட்டிக்கு என்ன அழகா சொம்பு தூக்குற" என முறைத்தவாறு எழுந்து வந்து அவனைக் கடந்து செல்ல,

"என் பொண்டாட்டிக்கு நாந்தானே தூக்க முடியும் பாட்டி" என்றான் அதையும் இலகுவாக.

"இப்ப என்ன அவ பிள்ளைய பாத்துக்கணும்னா நீ வெறுங்கையோட வந்தா போதும்னு சொல்லணுமா? என்ன விவரமா இருக்காடா உன் பொண்டாட்டி?"

"ம்ச் இனி நீ வேணாம்னு சொன்னாலும் தந்துட்டு தான் நிப்பேன்னுவா. அதனால கவலப்படாத அந்த நூறு பவுன் உனக்குத் தான். போட்டுட்டு சிமிட்டிட்டு உலாத்து"

"நான் போட்டுக்கவா கேட்டுட்ருக்கேன். என்ட்ட இல்லாததா அவ கொண்டு வந்து நான் போடப் போறேன்னு நினைக்குற?"
அவர்கள் பேச்சில் இடையுறாமல் அமுதா அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைக்க, சாப்பிட்டுக் கொண்டே, "நீ கிட்டத்தட்ட மிரட்டி டௌரி கேட்ருக்க பாட்டி. அத மொத தப்புன்னு ஒத்துக்கோ"

"டேய் பேச்ச மாத்தாத. நா அவளுக்கு இந்த வீட்ல கிடைக்க வேண்டிய மரியாதை பத்தி சொல்றேன். அது அவ கல்யாணம் பண்ணி வந்த விதமும், கொண்டு வந்த சீரும் தான் பேசும். அவ வந்த விதத்த மாத்த முடியாதுன்னு நீ சொன்ன, சீர சரியா செய்னு நான் சொன்னேன். இதுக்கு நீ என்ன பேர் வச்சுட்டாலும் எனக்குக் கவலை இல்ல. ஆனா புள்ள விஷயம் அப்படி இல்ல, உங்க இஷ்டத்துக்கு வச்சு விளையாட முடியாது. அவள அங்கயிங்க அலைகழிக்க முடியாது. அவ இங்க இருக்கட்டும்"

"எனக்கு அவ கூட‌ இருக்கணும் பாட்டி. அன்னைக்கு சொன்னனே? அவ கூட‌ இருக்கணும்னு அவங்க அப்பா குடுக்குற வாடகைல தான் இன்னுமு இருந்துட்ருக்கேன்னா பாத்துக்கோ"

"என்னடி இப்டி‌ படுத்துறான் உன் புள்ள. பிறந்ததுல இருந்து அவ கூடவே இருந்தவனாட்டம் ஓவரா ஆடுதான்" என அமுதாவை கடிந்தார் பாட்டி.

"இத நீங்க மாமாட்ட தான் பேசணும் த்த. அவர் பாத்து ஆரம்பிச்சு வச்சது தான் எல்லாமே" என்றார் அவர்.

"பெரியம்மா எங்கம்மா?"

"அவ தங்கச்சி வந்தாள்ல அவ‌கூட ஒரு வாரம் இருந்துட்டு வரேன்னுட்டு போய்ட்டா" என்றார் பாட்டி முறைப்புடன்.

"அவங்களுக்கு அவங்க மருமக உண்டாகலன்னு எல்லோரும் கேட்குறாங்கன்னு கவலை" அமுதா சொல்ல,

'அன்றைக்கு அவர் பார்த்த பெண்ணை அவர் மகன் கட்டியதால் அவர் குடுத்துவைத்தவர் ஆனார்.
இன்று அவருக்கு முன் இவர் பாட்டி ஆகப் போவதால் இவர் அவரைவிடக் குடுத்து வைத்தவர் ஆகிவிட்டார். வாழ்க்கை ஒரு வட்டம் தான் போலும்' என நினைத்துச் சிரித்தவன் சாப்பிட்டு எழுந்து, "அதெல்லாம் கிடைக்க வேண்டிய நேரத்துல கிடைக்கும்மா. நா அம்முவ பாத்துட்டு வரேன்" எனக் கிளம்பி விட்டான்.

"அவ இங்க இருக்கட்டும். இதுலனாலும் எங்க பேச்ச கேளு. சும்மா வீம்புக்கு மாறடிக்காத நிலவா" என‌ மிரட்டியே அனுப்பினார் பாட்டி.
நனியிதழ், யாழ்நிலவன், இருவருக்கும் இப்போது குழப்பமாகி இருந்தது. தனித்தனியாக இருவரும் அந்தச் சிந்தனையில் தான் இருந்தனர். அவனுக்காகக் கிளம்பி காத்திருந்து கடுப்பாகி அழுது அதிகம் யோசித்தே தூங்கி இருந்தாள் நனியிதழ். யாழ்நிலவனும் அதே யோசனையில் தான் அவள் வீடு சென்றிறங்கினான்.

"வாங்க மாப்ள" கருப்பையா வரவேற்க,

"வாங்க தம்பி. எங்கையோ போகணும்னு வரேன்னு சொல்லிருந்தீங்களாமே? கிளம்பி இருந்தா, உங்கள காணும்னு போய்ப் படுத்துட்டா. எழுப்பவா?" என்றார் கவிதா.

"தூங்கிட்டாளா?" என்றவன் அவளறையை எட்டிப் பார்க்க,

"சாப்பிட்டுட்டுன்னா போய் அவ கூடப் படுத்தெந்திரிங்களேன். வெயில் தாள வெளில போயிட்டு வாங்க" என்றும் சொல்ல,

"இல்ல சாப்ட்டு தான் வந்தேன் அண்ணி" என்றான் நிலவன்.

"அப்ப அவ கூட இருங்கீங்களா மாப்ள? கவிதாவும் அவ வீடு வரக் கிளம்புனான்னு தான் நா வீட்டுக்கு வந்தேன்"

நிலவன், "நீங்கப் ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க நா அவள பாத்துக்குறேன்" எனச் சொல்லவும் இருவரும் கிளம்பி விட்டனர்.

கதவைப் பூட்டிவிட்டு உள்ளே சென்றவன் சத்தம் எழுப்பாமல் அவளருகில் படுத்து வயிற்றோடு அணைத்துக் கொண்டான். அப்படியே தூங்கியும் விட, அவள் எழும்பும்போது தான் அவனையும் அசைத்து எழுப்பினாள்.

அருகில் இருப்பவனை உணர்ந்ததும் அசையாமல் அப்படியே படுத்துக் கொண்டாள். அதில் மெலிதாக சிரித்தவன், கண்ணை திறக்காமலே அவள் கன்னத்தில் முத்தமிட்டு, "கோவமா அம்மு?" என்றான்.
 

priya pandees

Moderator
சப்பென்று அவன் கையிலடித்தவள், "நான் பாட்டுக்குச் சிவனேன்னு தான இருந்தேன். சும்மா இருந்தவள ஃபோட்டோ ஷுட், தோப்பு வீடுன்னு ஆச காட்டி ஏமாத்தி? மிஸ்டர் மூன் இனி எதாவது கிஃப்ட் சர்ப்ரைஸ்னு பேசுனீங்க அவ்ளோ தான் சொல்லிட்டேன். நாளைக்கு பிறக்கப் போற பிள்ள காதுல சீல் வடிஞ்சா அதுக்கும் நீங்கத் தான் பொறுப்பு. துர்வாசர் திடீர்னு ரொமான்டிக்கா பேசுறாரேன்னு நினைக்காம நம்பினேன்ல எனக்கு நல்லா வேணும்" என்றவள் மீண்டும் மீண்டும் புலம்பி மீண்டும் மீண்டுமாக அவளை அணைத்திருந்த கையில் இரண்டு மூன்று அடி வைத்தாள். கண்ணை மூடிச் சிரித்துக் கொண்டே அனைத்தையும் வாங்கிக் கொண்டான் அவன்.

அன்று அவளுடனே தங்கி, மறுநாள் காலையிலேயே தோப்பு வீட்டிற்கு அழைத்துக்கொண்டு கிளம்பினான். விதவிதமாக நான்கு உடைகளில் இருவரும் பிள்ளையை மையமாகக் கொண்டு ஃபோட்டோ எடுத்தனர். இரவில் அனைவரும் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவளை அழைத்துக் கொண்டு சென்னை சென்றிறங்கினான்.

அன்று இரவே ரத்தப்போக்கு ஆகிவிட, வயிற்று வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் நனியிதழ். மருத்துவரின் ஆலோசனையில் தான் அழைத்துச் சென்று வந்திருந்தான் யாழ்நிலவன்.

"என்னாச்சு டாக்டர். இன்னும் டூ வீக்ஸ் இருக்கே ட்யூ டேட்கு"

"இது ட்ராவல்னால வந்த ப்ளீடிங் மிஸ்டர் நிலவன்"

"என்ன டாக்டர் உங்கட்ட கேட்டுத் தானே ட்ராவல் பண்ணோம்"

"எஸ் இங்கிருந்து நேட்டிவ் போறோம் சொன்னீங்க. இது யூஸ்வல் தான் ஃபர்ஸ்ட்ல இருந்து இங்க வர்றவங்க ஆஃபட்டர் பேபி ஷவர் நேட்டிவ்னு அம்மா ஹோம் போவாங்க, நீங்க அப்டி தான் கேக்றீங்கன்னு நினைச்சு நானும் சரின்னு சொன்னேன். அகைன் அங்கேயிருந்து இங்க ஏன் சார் கூட்டிட்டு வந்தீங்க?"

"டெலிவரி இங்க தான்னு நா மென்ஷன் பண்ணேன்?" என்றான் கடுப்பின் உச்சத்தில்.

"ம்ச் அப்டிலாம் நீங்கத் தெளிவா சொன்னதா எனக்கு நியாபகமில்ல. சரி இப்ப பெயின் கூடுறதுக்கான இன்ஜெக்ஷன் போட்ருக்கு, கர்ப்ப வாய் ஓபனாச்சுன்னா நார்மலா பேபி வெளி எடுத்திடலாம், இல்லனா சி செக் தான். ரெடி ஆகிக்கோங்க." என்றுவிட்டு போனார் அவர்.

"எவ்வளவு கேர்லெஸ்ஸா பதில் சொல்லிட்டு போறாங்க. அங்க எல்லாரும் சொன்னப்பவாது கேட்ருக்கணும். ம்ச் என்னடா அப்படியொரு அசால்ட்டு உனக்கு?" என அவனுக்கு அவனே திட்டிக்கொண்டிருந்தான். உண்மையில் அதீத பயத்தில் கைக்கால்கள் எல்லாம் நடுங்கின அவனையே அறியாமல்.

"அம்மு அம்மு சாரிடி. ஏனோ பயமா இருக்கு" என மனது அரற்றத் துவங்கியிருந்தது. விஷயமறிந்து வெங்கட்பிரபு அவன் மனைவி மற்றும் அம்சாக்கா மூவரும் வந்தனர். அம்சாக்காவை பார்த்ததும், 'இந்நேரம் ஊருக்கே சொல்லிருப்பாங்களே!' எனத் தான் நினைத்தான். அவன் நினைத்தது சரியே என்பதாகச் சிவகங்கையிலிருந்து அழைப்பு வரத் துவங்கியது. நேரிலும் கிளம்பியிருந்தனர் பவித்ரம் தாத்தா குடும்பத்தினர்.

"என்ன தான் நீங்கக் காதலிச்சு கல்யாணம் கட்டிட்டாலும், அடுத்த சந்ததி வந்தப்றம் கூடப் பாக்க மாட்டேன்னு எப்டி வீம்பா இருக்க முடியுது உங்க வீட்டாளுங்களுக்கு. பழகுன புள்ளையேன்னு நானே பதறி ஓடியாறேன். இங்க இருந்து போன புள்ளைகள திருப்பி அனுப்பிருக்காங்களே! அப்டியா காதலிச்சு நீங்க வீணா போய்ட்டீங்க? நல்லமாறி வாழுத புள்ளைங்கள வாழ்த்துனா என்னவாம்? நல்லா கேட்டுட்டு தான் வந்துருக்கேன் நானு" என அம்சாக்கா அவர் போக்கில் திட்டிக்கொண்டிருக்க, நேரம் சென்று தான் அவனுக்கு அவர் பேச்சின் சாராம்சம் புரிந்தது. அவன் மனைவி ஆரம்பித்து வைத்த காதல் கதை எங்கு வந்து நிற்கிறது என அந்நேரத்தில் நினைக்கச் சிரிப்பும் வந்தது‌.

"அராத்து வந்துடுடி தனியா இருக்கேனாட்டுமே தோணுது" என மனதோடு அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அதே மருத்துவமனையில் அவன் மாணவன் ஒருவன் தலைவலியால் அனுமதிக்கபட்டிருந்தான். பத்து மாதத்திற்கு முன் அவர்கள் கல்லூரியில் நடந்த ஸ்டைரக்கில் நடந்த அடிதடியில் அதைத் தடுத்துக் கொண்டிருந்த யாழ்நிலவனை அடிக்க வந்த மற்ற கல்லூரி மாணவனிடமிருந்து அடி விழாமல் அவன் விலகிவிட, நிலவனுக்கு பின்னால் நின்றிருந்தவன் பின்னந்தலையில் அந்த அடியை வாங்கிருயிருந்தான்‌, அன்று ரத்தம் கூட வராத அந்த அடியால் இன்று அவன் உயிரே ஊசாலாடிக் கொண்டிருந்தது. தான் வாங்க வேண்டியதை இன்னொருவன் வாங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை அறியாமல் பிள்ளையைக் கையிலேந்த காத்திருந்தான் யாழ்நிலவன்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 13

"சார்!" என்ற குரலில் யாழ்நிலவன், வெங்கட்பிரபு இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கு அவர்கள் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் நின்றனர்.

"இங்க என்னடா பண்றீங்க?" என்றான் வெங்கட்பிரபு.

அவர்கள் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, "அப்ப நீங்கச் சந்தோஷ பாக்க வரலையா சார்? அவன பாக்க வந்து தான் இங்க நிக்றீங்கன்னு நினைச்சு உங்கள கூட்டிட்டு போக வந்தோம்" என்றான் அந்த மூவரில் ஒருவன்.

"இல்ல. நிலவன் சார் வைஃப்ப இங்க டெலிவரிக்காக அட்மிட் பண்ணிருக்காங்க அதுக்கு தான் வந்தோம். சந்தோஷுக்கு என்னாச்சு?" என வெங்கட் கேட்கவும்,

"தெரில சார். நேத்து ஈவ்னிங் நாங்க எல்லாருமா ஹோட்டல் போக ப்ளான் பண்ணோம், கிளம்பி பாதி தூரம் போயிட்ருக்கும் போதே வண்டிய சறுக்கிட்டான். பின்னாடி இருந்த விஜய்ட்ட, தலை கிண்ணுண்ணு பிடிக்குதுடான்னு சொல்லி ரெண்டு நிமிஷத்துல ஸ்கிட்டாகிடுச்சு. தெருக்குள்ளன்றதால நாங்க ரொம்ப ஸ்பீடா போகல, அவங்க ரெண்டு பேருக்கும் அடியும் பெருசா இல்ல. விஜய் அப்பவே கைய தட்டிவிட்டு எந்திருச்சுட்டான். ஆனா சந்தோஷ் எந்திரிக்கவே இல்ல சார். அப்பவே இங்க கூட்டிட்டு வந்துட்டோம். ஆனா இப்ப வர அவன் கண் முழிக்கல சார். என்னன்னே தெரியல" என்றனர் மூவருமாக.

"டாக்டர் என்ன சொன்னாங்க?" என்ற நிலவனுக்கு,

"ஸ்கேன்‌ தான் எடுத்துருக்காங்க. ரிப்போர்ட் வரட்டும்னு சொன்னாங்க. மேல அவன் அப்பா, அம்மா, தாத்தா இருக்காங்க. கூட்டமா இருக்க வேணாம்னு நாங்க இங்க கீழ ரிஷப்ஷன்ல உக்காந்துருந்தோம். பிரபு சார பாத்துட்டு தான் வேகமா வந்தோம் சார்"

"அம்சாக்கா இங்க இருந்து பாத்துக்றீங்களா. நாங்க போய் அந்தப் பையனுக்கு எப்டி இருக்குன்னு கேட்டுட்டு வந்துடுறோம்" என்றான் நிலவன் அம்சாவிடம்.

"போய்ட்டு வாங்க தம்பி. நாங்க தான் ரெண்டு பேர் இருக்கோமே. நீங்க அந்தப் பையனுக்கு என்னாச்சுன்னு பாருங்க" என்றார் படபடப்புடன். அவருக்கும் இருபது வயதில் ஒரு மகன் இருக்க, அந்நொடி அவனை நினைத்து இந்தப் பையனுக்காக மனதில் வேண்டிக்கொண்டார்.

வெங்கட்பிரபுவும் அவர் மனைவியிடம் கண்ணைக் காட்டிவிட்டு நிலவனோடு கிளம்பினான். அந்த மாணவர்கள் மேல்தளம் அழைத்து வந்தனர். அங்குத் தான் ஐசியுவில் இருந்தான் சந்தோஷ்.

ஐசியு வெளியே அவன் அம்மா, அப்பா, தாத்தா மூவரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு யாழ்நிலவனை நன்கு தெரிந்திருந்தது இதற்கு முன் இரண்டு முறைப் பார்த்துப் பேசியிருந்த அனுபவத்தில் முறுவலித்தனர். உடன் வந்த வெங்கட்பிரபுவையும் சேர்த்தே, "வாங்க சார்!" என்றனர்.

"டாக்டர் வந்தாங்களா?" என்றான் நிலவன்.

"இல்ல சார். சாயங்காலம் வந்து பாத்துட்டு போனாங்க. அப்றம் இன்னும் வரல. இவன் கண் முழிச்சுட்டா பரவால்ல. நேத்து சாயந்தரம், 'நைட்டு நான் சிக்கன் சாப்ட போறேன்'னு கையாட்டிட்டு போன பையன் சார். என்னாச்சுன்னே தெரியல" என்றார் அவன் அம்மா. அழுது சோர்ந்திருந்தார்.

ஏனோ இவனுக்குப் படபடத்திருந்தது. அது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் மனைவியின் நிலைமையாலும் இருக்கலாமென நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.

"எந்த டாக்டர்? அவர் நேம்?" என வெங்கட்பிரபு கேட்க,

"பத்மாவதி!" சந்தோஷின் அப்பா சொன்னார்.

"நாங்க விவரம் கேட்டுப் பாக்றோம்" என்ற நிலவன் வெங்கட்பிரபுவோடு மருத்துவர் அறை எங்கு என விசாரித்துச் செல்ல, அந்த மூன்று மாணவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

மருத்துவர் அறை சென்று செவிலியரிடம் சொல்லிட்டு வெளியே காத்திருக்க, அவர் உள்ளே சென்று அனுமதி பெற்று மீண்டும் வந்து இவர்களை அழைத்துச் சென்றார்.

பத்மாவதி, சந்தோஷின் ப்ரஃபஸ்ஸர்களுடன் வந்த அவன் நண்பர்களையும் ஒரு பார்வை பார்த்தவருக்கு விஷயத்தைச் சொல்லவே கஷ்டமாகத் தான் இருந்தது. அவர் இதுபோல் நிறைய பார்த்திருந்தாலும், வாழ வேண்டியவனின் அந்த பதின்மவயது அவரையும் கலங்கச் செய்தது.

"நீங்கச் சந்தோஷோட கிளாஸ் ஸ்டாஃப்பா?"

"ஆமா டாக்டர். சந்தோஷ், இதோ இந்த மூணு பேரும் கூட எங்க டிபார்ட்மெண்ட் தான்"

"ஓ! அவனுக்கு அடிக்கடி தலைவலி வருமா?" என்றார் பொதுவாக.

"இப்ப லாஸ்ட் ரெண்டு மாசமா தான் டாக்டர் தலைவலிக்குன்னு அடிக்கடி, அட்லீஸ்ட் டெய்லி ஒருதடவனாலும் சொல்லிடுவான். அதுக்காக ஐ செக்கப்‌ பண்ணி, க்ளாஸ்லாம் கூட மாட்டிக்கிட்டான்"

"அதுக்கு முன்ன சொன்னதில்லையா?" என்றார் அவர் நிதானமாகவே.

"இல்லையே டாக்டர். நல்லா நியாபகம் இருக்கு. செம்முக்கு இன்னும் ரெண்டு மாசந்தான் இருக்கு, தலைவலிச்சா படிக்க முடியாதுன்னு உடனே ஸ்பெக்ஸ் வாங்கி மாட்டிட்டார் அவன் அப்பா"

"எங்களுக்கு இத பத்தி எதுவும் ஐடியா இல்ல டாக்டர்" நிலவன் சொல்ல, ஆமோதிப்பாகத் தலையசைத்தார் மருத்துவர்.

"அவனுக்குத் தலைல தான் எதும் பிரச்சினையா டாக்டர்" அவர் கேட்டதை வைத்தே வெங்கட்பிரபு கேட்டான்.

"ம்ம் பின்னந்தலையில் ரத்தம் உறைஞ்சு, நல்லா கல்லு மாதிரி இறுகிடுச்சு. அது கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து, இப்ப செவன்ட்டி ஃபைவ் பெர்சென்ட் ஆஃப் த ப்ரைன் பார்ட்ட ஆக்ரமிச்சுடுச்சு, அல்மோஸ்ட் ப்ரைன் டெட் கண்டிஷன். இப்போதைக்கு அந்த மீதமுள்ள ட்வன்டி ஃபைவ் வச்சு ஹார்ட் ஃபங்கஷனாகிட்ருக்கு‌. ஹவர்ஸ் கணக்குல அதும் குறைஞ்சுட்டு வருது, வெண்டிலேட்டர் வைக்ற சிட்சுவேஷன் அல்ரெடி வந்தாச்சு" என்றார் அவர் அனைவரையும் ஒரு சுற்று பார்வை பார்த்து.

அவர்களுக்குப் புரியவே நொடிகள் எடுத்தன, பிறகும் குழப்பம் தான், "எப்டியும் புழைச்சுப்பான் தானே டாக்டர்?" என்றான் விஜய் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு.

"வாய்ப்பே இல்ல. மோர்தென் சிக்ஸ் மந்த்ஸ் இந்தக் கட்டி இறுகிருக்கு. மேபி அப்பவே ஸ்டார்டிங்லயே எங்கட்ட வந்திருந்தா கண்டிப்பா அத கரைச்சுருக்க முடியும். இனி எதுமே செய்ய முடியாது. ஹீ இஸ் கவுண்டிங் ஹிஸ் மினிட்ஸ்"

கதறியே விட்டனர் நண்பர்கள் மூவரும். வெங்கட்பிரபு தான் தோளில் தட்டி அவர்களைத் தாங்கிப் பிடித்தான்.

"எப்டி டாக்டர் இப்படி திடீர்னு ஆகும். சிம்டம்ஸ் கூடக் காட்டாமலா நோய் வரும்?" நிலவனுக்கு இன்னுமே நம்ப முடியவில்லை‌. நான்கு நாட்களுக்கு முன் கூட கல்லூரியில் பார்த்தானே.

"கண்டிப்பா சிம்டம்ஸ் காண்பிச்சுருக்கும். சந்தோஷ் அவன் ஏஜ்கு அத ஈசியா டாலரேட் பண்ணிட்டு இருந்துருக்கலாம். லாஸ்ட் டூ மந்த்ஸ் தான் ரொம்ப சிவியரா இருந்துருக்கும் வெளில சொல்லிருக்கான். சிக்ஸ் மந்த்ஸ் முன்னவே அவன் தலைல க்ளாட் ஸ்டார்ட் ஆகிருக்கணும் இல்லனா இவ்வளவு இறுகாது ஐம் சுயர். ஃப்ரம் லாஸ்ட் ஒன் இயர் இப்ப இருந்து பிஃவோர் சிக்ஸ் மந்த்ஸ் அவனுக்கு எப்பவாவது ஆக்ஸிடென்ட் ஆச்சா? பின்னந்தலையில் அடி பட்ருக்கணும் அப்போ!" என்றார் கேள்வியாக.

மற்ற எல்லோரும் யோசிக்க, "டென் மந்த்ஸ் பிஃவோர் எங்க காலேஜ்ல ஸ்ட்ரைக் நடந்தது. அப்போ கொஞ்சம் அடிதடி கூட ஆச்சு. அப்ப ஃப்ராக்ஷன் ஆஃப் டைம்ல என்ன ராட் வச்சு அடிக்க வந்த அந்த அதர் காலேஜ் பையன்ட்ட இருந்து நா விலகுனேன், பின்ன நின்ன இவன் தலையில அந்த ராட் பட்டுடுச்சு. ஆனா ப்ளட் கூட அப்ப வரல. லேசா தேய்ச்சுட்டு சண்டைல தான் மும்மரமா நின்னான் இவனும். நானும் சண்டைய விலக்கி விடுற கவனத்துல அவன நின்னு கவனிக்கல. அப்றம் அடிபட்ட எல்லாருக்கும் இங்க வந்து தான் ட்ரெஸிங் பண்ணிவிட்டு கூட்டிட்டு போனேன் டாக்டர். அதுல இவனும் ஒருத்தன்"

"எஸ் அது கூட ப்ராப்ளமா இருக்கலாம், ப்ளட் வெளில லீக்காகி இருந்தா, அப்பவே ஸ்கேன் பண்ணிருப்போம் உள்ள பிராக்சர் இருந்தாலும் தெரிஞ்சுருக்கும். அடுத்து எதும் அடி பட்டதா?"

"தெரியலயே டாக்டர். அந்த ஸ்ட்ரைக் சஸ்பென்ஷன் முடிஞ்ச ஒரே வாரத்துல காலேஜ்க்கு நாங்க எல்லாரும் சேர்ந்து தானே போனோம்" என்றான் ஒருவன்.

"டாக்டர் எதாது பண்ணுங்க ப்ளீஸ். எப்படியாவது அவன காப்பாத்திடுங்க ப்ளீஸ் டாக்டர்" என்றான் மற்றொருவன்‌.

"அப்டி ஆப்ஷன் இருந்தா நா இப்டி உக்காந்து பேசிட்ருக்க மாட்டேன். அவங்க பேரண்ட்ஸ்ட்ட கூடச் சொல்லாம தள்ளிப் போட்டுட்ருக்க ரீசன் கூட, இன்னும் டூ ஹவர்ஸ்னாலும் பையன் நல்லாகிடுவான்னு நம்பிக்கையோட தைரியமா இருக்கட்டுமேன்னு தான்" என்றார் அவர்.

"எதுமே பண்ண முடியாதா டாக்டர்?" என்றான் மீண்டும் நிலவன். அது அவன் இருக்க வேண்டிய இடமல்லவா? அவனால் அதை நினைத்தும் பார்க்க முடியவில்லை. தலையே வலித்தது அவனுக்கு.

"ப்ரைன் டெட் சார்!" என்றார் மருத்துவர் மீண்டும் அழுத்தமாக.

"உங்கள அடிக்க வந்தவன யாருன்னு சொல்லுங்க சார். அவந்தான இன்னைக்கு சந்தோஷ் நிலைமைக்குக் காரணம்? சும்மா விடக் கூடாது சார் அவன!" ஆவேசமானான் விஜய்.

"சும்மா இரு விஜய். அன்னைக்கு பிரச்சினைல இருந்த எல்லாருமே தான் இதுக்கு காரணம். நா விலகாம‌ இருந்துருந்தா கூட இன்னைக்கு அவனுக்கு அந்த நிலைமையே இல்ல. அவங்க பேரண்டஸ்கு முடிஞ்சா லாஸ்ட் வர ஆறுதலா இருங்க, ஒரு ஃபிரண்ட்டா நீங்க செய்ய வேண்டியது அது தான்"

என அதட்டி மூவரையும் வெளியே கூட்டிச் செல்ல சொன்னான் வெங்கட்பிரபுவிடம்.

"அவங்க பேரண்ட்ஸ்ட்ட நீங்களே சொல்லிடுறீங்களா?" மருத்துவர் நிலவனிடம் கேட்க,

"இல்ல டாக்டர். எனக்கு அவ்வளவு கில்ட்டா இருக்கு. அவங்கட்ட நிச்சயமா என்னால சொல்ல முடியாது. நீங்களே சொல்லிடுங்க. ஆர்கன்ஸ் டொனேட் பண்ணவும் பேசுங்க. அவனோட உறுப்புகள் மூலமா இந்த உலகத்துல இன்னும் நிறைய வருஷம் அவன் வாழட்டும்" என்றான் மூச்சை உள்ளிழுத்து.

"நீங்க காரணம் இல்ல மிஸ்டர் நிலவன். கண் முன்ன ஒருத்தங்க ராடோட வரும்போது தன்னிச்சையா மூளை நம்மள விலக வச்சிடும். பின்னாடி உள்ளவன் அடிவாங்குவான்னு தெரிஞ்சு நீங்க நகரல. சோ இதுக்கு நீங்க இவ்வளவு யோசிக்க வேண்டியதில்ல." அவராகவே அவன் முகம் வேதனையை பார்த்து ஆறுதல் கூறினார்.

"எஸ் டாக்டர் பட் இட் ஹர்ட்ஸ்(கஷ்டமா தான் இருக்கு)." என்றவன் எழுந்து கொள்ள, உடன் எழுந்து வெளியே வந்த மருத்துவர், சந்தோஷின் அப்பாவிடம் அமைதியாக விஷயத்தை கூற, அவர் தலையிலடித்துக் கொண்டு பெருங்குரல் எடுத்து அழுததில், அவர் மனைவி மயங்கிச் சரிய, தாத்தாவும் புரியாது விழிக்க, அவன் நண்பர்களும் உடன் சேர்ந்து அழ, வெங்கட்பிரபுவிற்கும் யாழ்நிலவனுக்கும் அவர்களை சமாளிக்கவே முடியாமல் திணற வேண்டி இருந்தது.

மருத்துவர் அவர்கள் நிதானமாக நேரம் கொடுத்துச் சென்றுவிட, விஷயம் பரவி கல்லூரி மாணவர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. முதலில் கதறி அழுதவர்கள் பின் அடுத்த செயல்முறைகளை கையிலெடுத்தனர். எல்லாவற்றுக்கும் ஆசிரியர்களான இவர்களை கேட்டு நின்றனர்.

அதற்குள் அங்கு நனியிதழுக்கு பிரசவ வலி வந்திருக்க, அவனை அழைக்கப் பவானி வந்தாள். அவளின் வரவிலேயே விஷயம் புரிபட, "நீங்கப் போங்க நிலவன். நா இங்க இருக்கேன்" என்றுவிட்டார் வெங்கட்பிரபு. நிலவனுக்கு மனதில் அவ்வளவு அலைக்கழிப்பு.

அன்றைக்கு அவனைக் காப்பாற்றிக்கொள்ள விலகப் போய், இன்று ஒரு உயிர் போகப் போகிறது, அதற்குத் தண்டனையாகப் பொண்டாட்டிக்கும் பிறக்கப் போகும் பிள்ளைக்கும் எதும் ஆகிவிடுமோ என அதிகமாகப் பயந்தான். அன்றைய விடியலே அவனுக்கு ரசிக்கவில்லை போல் ஒரு தோற்றம் தான்.

"என்னாச்சு அம்சாக்கா?" என்றான் அங்குப் பிரசவ வார்ட் வாயிலில் நின்றவரிடம்.

"வலி நல்லா வந்துட்டு தம்பி. பத்து நிமிஷம் தான் உங்க புள்ள வந்துரும். தலை திரும்பிட்டு வாய் நல்லா விரிச்சுட்டுன்னு நர்ஸ் சொல்லிட்டு போனாங்க" என்றார் சிரித்தபடி. பெரு மூச்சுடன் அமர்ந்துவிட்டான் நிலவன்.

அங்கு அவன் அம்மா அப்பாவைச் சம்மதிக்க வைத்து உறுப்புகள் தானம் சந்தோஷிடமிருந்து எடுக்க ஏற்பாடாகியது. விடியும் தருவாயில் அவன் கையில் அவன் மகளை ஏந்தியபொழுது சந்தோஷ் யாரிடமும் சொல்லாமலே விடை பெற்றிருந்தான். அது அவனது விதி பயன் தான் போலும்.

நிலவனின் மனைவியும் பிள்ளையும் நலமாக அவனிடம் வந்திருந்தனர். ஆனாலும் மனதில் முழுமையாகச் சந்தோஷப்பட முடியாமல் யாழ்நிலவன் நின்றான். அவனை மேலும் அதிலேயே தேங்கி நிற்க விடாமல், அவன் குடும்பமும் வந்து பரபரப்பாக்கி இருந்தது.

"அவ்வளவு சொன்னோமே கேட்டியா நீ? எதாவது ஆகிருக்கணும் அப்றம் தெரிஞ்சுருக்கும் இந்தச் சொர்ணம் யாருன்னு‌. உனக்குத் தான் கூறில்லனா அவளுக்கும் கூறில்லையே?" பாட்டி பேசப் பேச அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான், அதுவே மற்றவர்களுக்கு அவனும் அதிகம் பயந்து விட்டானெனக் காட்டியது.

நனியிதழுக்கு அனைத்தும் செவிலியர்களே பார்த்துவிட, பிள்ளையை அவன் பாட்டியும், அம்மாவும் பார்த்துக்கொண்டனர். கவிதாவும், அவள் அப்பாவும் வந்து கொண்டிருந்தனர். அம்சாகக்காவும், பவானியும் பிள்ளையைப் பார்த்து விட்டுக் கிளம்பி இருந்தனர்.

வெங்கட்பிரபு வந்து, "சந்தோஷ் பாடிய அவங்க வீட்டுக்கு எடுத்துட்டு போறாங்க நிலவன். நா அவங்ளோட கிளம்புறேன்" என்றதும் நிலவனுக்கு கண்கள் கலங்கி விட்டது. இன்னும் ஓராண்டு படிப்பிருந்தது அவனுக்கு.

அதை நினைத்தால் இன்னுமே கலங்கியது, கண்ணீரை அடக்கியவன், "நானும் வரேன் வெங்கட். ஒரு நிமிஷம்" என்றுவிட்டு உள்ளே சென்று, மனைவியை நெருங்கி நெற்றியோடு முட்டியவன், "வீடு வரப் போய்ட்டு வரேன் அம்மு!" என்றான்.

"என்ன செய்து அம்மு. ஏன் டல்லா இருக்கீங்க?" என்றாள் அவன் கலங்கிய முகம் கண்டு.

"அவகிட்ட என்னத்தடா கிசுகிசுன்னு. இந்தப் பக்கம் வா நீ?" என அதட்டினார் பாட்டி.

"நத்திங் அம்மு!" என நனியிதழிடம் சொன்னவன், "நா வீட்டுக்குப் போய்ட்டு வரேன். நீ ஆஸ்பத்திரியவே பாத்துக்குவன்னு தெரியும். அதுல முக்கியம் என் பொண்டாட்டி சரியா?" என்றான் பாட்டியிடம் இலகுவாக முயன்று,

"அப்பு புள்ளைய பாத்துக்க வேணாமா?"

"பாப்பாவ அம்மா பாத்துக்கட்டும்" என்றவன் பிள்ளையின் காலிலும் அழுந்தாது முத்தமிட்டான்.

"இப்ப எதுக்கு வீட்டுக்குப் போறேன்ற நீ?"

"ம்ச் தொண தொணன்னு கேள்வியா கேக்காத பாட்டி" என்றவன் வெளியே வந்து, அப்பா, தாத்தா, பெரியப்பாவிடம் உண்மையைச் சொல்லியே கிளம்பினான்.

அங்குச் சென்று மௌனமாக நின்று இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு வீட்டிற்குச் சென்று குளித்து மீண்டும் மருத்துவமனை வர இரவாகி இருந்தது. கருப்பையாவும், கவிதாவும் வந்திருக்க. இரவில் கவிதாவும், யாழ்நிலவனும் நனியிதழுக்கு துணையிருக்க மற்ற எல்லோரும் வீடு கிளம்பினர். அடுத்த மூன்று நாட்களும் மருத்துவமனையிலிருந்து அன்று தான் நனியிதழும், பிள்ளையும், வீடு வந்தனர்.

அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களும் அனைவரும் அங்கு அம்சாக்கா வீட்டில் தான் இருந்தனர். அவன் அப்பா, பெரியப்பா, கருப்பையா மட்டும் கிளம்பி இருக்க, யுதிஷ்டிரன், மீனாள், கல்யாணி மூவரும் வந்து பார்த்துச் சென்றிருந்தனர்.

நனியிதழை வீட்டிற்கு அழைத்து வந்ததுமே, "நிலவா இனி வேணா நீ அந்த வீட்ல போய்ப் படுத்துக்கோ" என அவனைக் கடுப்பாக்கி இருந்தார் பாட்டி.

"எனக்குத் தெரியும் என் அம்முவ எப்டி பாத்துக்கணும்னு" என இவனும் பதில் கூறி இருந்தான். ஆனால் அவளை அண்ட விடவில்லை யாரும். அவளுக்கும் உடம்பில் தெம்பே வற்றி விட்டது போல் அப்படியொரு அயர்வு. இந்தப் பத்து நாட்களும் அவர்கள் கவனிப்பில் நல்ல பளபளப்பாகி கொண்டிருந்தாள். அத்தனை பேசினாலும் வீட்டிற்கு முதல் வாரிசை பெற்று கொடுத்தவள் என்ற ஒரு காரணமே அவளை ஏற்றுக்கொள்ள வைத்து கவனிக்கவும் வைத்து கொண்டிருந்தது.

அவளிடம் சந்தோஷ் பற்றி இன்னும் நிலவன் கூறி இருக்கவில்லை, அவனும் அதைக் கடந்து வரவே முயன்றுகொண்டிருந்தான்.

"நாளைக்கு நா ஜாயின் பண்ணணும் அம்மு" அவன் குளிக்க வந்திருந்ததால் மற்ற அனைவரும் வெளியேறி இருந்தனர்.

"ஆமால்ல அம்மு. முடியுமா உன்னால?"

"எப்டினாலும் போகணும் தானே?"

"சரி நான் நாளைக்கு லீவ் போட்டுறேன். கேப் புக் பண்ணி போய்ட்டு வந்திடலாம்" என அவன் சொல்லிச் செல்ல, மறுநாள் அவர்கள் கிளம்பும் முன் பெரிய போர்க்களம் தான் வெடித்தது. பிள்ளையைத் தனியே விட்டுச் செல்லவும் முடியாது என்பதால் அமுதாவும் உடன் வந்தார் முறைப்புடன். உண்மையிலேயே நனியிதழுக்கு அவர்கள் அலப்பறையில் 'தான் பெருமைக்குத் தான் மாறடிக்கிறோமோ?' என்ற எண்ணமே வந்துவிட்டது. அவளுக்கு உறுதுணையாக இருப்பது அவள் கணவன் ஒருவன் மட்டுமே. அவனும் அவளால் முடித்தால் செய்யட்டும் எனத் தான் உடன் நிற்கிறானெனப் புரிந்தது அவளுக்கு.

புதிய அலுவலகத்தில், காலை உள்ளே சென்றவளுக்கு மதிய இடைவெளியில் தான் வெளியே வர முடிந்தது. அவளுக்கும் பால் கட்டி விட்டது, பிள்ளையும் பசியில் அழுதழுது துவண்டு விட்டது.

அவளும் அழுகையை அடக்கிக் கொண்டு ஓடி வர, "பிள்ளைய விட உன் திமிருத்தனம் முக்கியமா படுதுல்ல உனக்கு? பெரிய இவ வேலைக்குப் போய்த் தான் குடும்பத்த தூக்கி நிறுத்தப் போறா" என்றார் அமுதா கடுப்பின் உச்சத்தில்.

"அம்மு!" என அவள் கணவனை அழைத்தாள், "போன வேலை முடிஞ்சதா இல்லையா அம்மு?" என்றான் அவன். அவனும் வெகுநேரமாக பிள்ளை பசியால் அழுததால் கொஞ்சம் டென்ஷனில் தான் கேட்டான்.

"இன்னும் ஐடி வாங்கணும்" பாவமாக சொல்ல,

"எனக்கு உன் செல்ஃப் ரெஸ்பெக்ட்ல பிரச்சினை இல்ல அம்மு. பட் என் பொண்ணு இப்படி அழுறதும் பிடிக்கல" எனத் தோளில் கிடந்த பிள்ளையைக் கொடுத்து நகர்ந்து விட்டான். அழுதுகொண்டே தான் பிள்ளைக்குப் பசி ஆற்றினாள். முன்னேற்பாடாக, பாலை பாட்டிலில் ஊற்றி வைக்கும் ஏற்பாடும் செய்யத் தோன்றவில்லை அவர்களுக்கு. பிள்ளையும் பாட்டிலில் குடுத்ததும் குடிக்குமா எனத் தெரிந்திருக்கவில்லை. அதனால் நனியிதழ் தான் எல்லா பக்கமும் வதை பட்டாள்.

மாலையும் பிள்ளையை அழ வைத்தே ஓடி வந்தாள். இந்த முறை யாழ்நிலவன் எதுவும் பேசவில்லை. அமுதா தான் திட்டிக்கொண்டே வந்தார்.

"நிலவா இதெல்லாம் சரியாவே இல்ல பாத்துக்கோ. புள்ள மேல பாசமில்லாதவளாம் எதுக்கு புள்ள பெத்துக்கணும். இத்தன நாளும் பால் குடுக்குற வேலையவாது பாத்தா இனி அதையும் செய்யமாட்டா போலிருக்கு. பேசாம பவுடர் பால பழக்கிவிட்டு நாங்க தூக்கிட்டு போறோம். நீ காலேஜ்கு போ இவ அவ புது வேலைக்குப் போட்டும். பிள்ளைய நாங்களே வளத்துக்குறோம்" என்றதும், மடியிலிருந்த பிள்ளையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் நனியிதழ்.

வீட்டிற்கு வந்து அவர் அத்தனையையும் சொல்லி‌விட, சொர்ணம் அவரைவிட அதிகமாகப் பேசிவிட்டார்.
 

priya pandees

Moderator
"நீ ஒன்னுமே தர வேணாம். புள்ளைய ஒழுங்கா வளத்து குடு போதும். என்னம்மா வாக்கபட்ட இடத்துக்குத் தக்கன நடந்துக்கணும்னே உன் தங்கச்சிக்கு தெரிலயே. என் பேரனுக்காக மட்டுந்தான் அவ எங்க வீட்டு மருமகளா இருக்கா. ஆனா கொள்ளு பேத்திய பாக்க முடியாதுன்னா அவ இங்க இருக்கவே வேணாம். உங்கப்பா வீட்டுக்கே கூட்டிட்டு போயிடு. பிள்ளைய நாங்க எப்படியும் வளர்த்துக்குவோம்" என வறுத்தெடுத்து விட்டார். கவிதாவும் பாவமாகத் தான் விழித்து நின்றாள்.

"நாந்தான் சொன்னனே நிலவா. ஒரு மூணு வருஷம் கழிச்சு வேலைக்குப் போட்டும்னு. இப்ப இதழுக்கும் தானே கஷ்டம் இது?" என்றார் தாத்தாவும்.

அவன் யாருக்கும் பதில் சொல்லாமல், நனியிதழிடம் மட்டும் தனியாக, "கண்டிப்பா உன்னால சமாளிக்க முடியுமா அம்மு? இல்ல நான் குடுக்குறேன் அந்த நூறு பவுன, நீ அப்றமா வேலைக்குப் போ, எனக்கு ப்ராப்ளம் இல்ல" என்றான் பொறுமையாகவே.

"என்னால முடியும்னு நினைச்சு தான் அம்மு ஒத்துட்டேன். இப்போ இப்படி ஆளாளுக்கு பேசும்போது டவுனா ஃபீல் ஆகுது. நா என்ன பண்ணட்டும் நீங்களே சொல்லுங்க?" என்றாள். அதிகமாக அழுததில் குரல் கரகரத்தது.

"எயிட் அவர்ஸ் உக்காந்து வேலை பாக்க முடியுமா அம்மு உனக்கு?"

"தெரியலையே. டிரை தான் பண்ணணும்." என்றாள் கலங்கும் கண்களைத் துடைத்துக் கொண்டு. அவளுக்கு முதல் முதலில் கிடைத்த வேலையை விட்டுக் கொடுக்கவும் மனதில்லை, பிள்ளையைக் கஷ்டபட விடவும் மனதில்லை. மதியம் பிள்ளை பசியில் அழுத அழுகையை அவளால் என்றும் மறக்க முடியாது. அதுவே அவளை வெகுவாக அசைத்திருந்தது.

ஒரு ப்ரஃபஸ்ஸராக அவளின் மனநிலை தெளிவாகப் புரிந்தது அவனுக்கு, கல்லூரியில் அனைத்து பெண்களுக்கும் வேலை எவ்வளவு. அவசியம் என எடுத்து கூறுபவன் அவன், அவனுக்கே அவன் மனைவியை புரியாமல் போகுமா? அவளருகிலேயே அமர்ந்து அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள, வெடித்து அழுதாள்.

"நான் பாப்பாவ நல்லா பாத்துப்பேன் அம்மு. அவங்கள தூக்கிட்டு போக வேணாம்னு சொல்லுங்க. நான் பாப்பாவ அழ விடமாட்டேன்" எனக் கதறி அழுதவளை, தோளோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அடுத்து வந்த நாட்களில் பிள்ளை பசியாற மட்டுமே அவளிடம் வரும், மற்ற நேரங்களில் எல்லாம் பாட்டி, அமுதா, தாத்தா தான் வைத்திருந்தனர். கவிதா ஊருக்குக் கிளம்பியிருந்தாள்.

நனியிதழுக்கு அதும் கஷ்டமாகத் தான் இருந்தது. பிள்ளையை அதிகமாகத் தேடினாள். ஆனால் வேலை அவளைப் பிடித்து வைத்தது. அவள் புதிது என்பதால் அதிக வேலையும் கொடுக்கபடவில்லை, கொடுக்கும் வேலையைக் கற்றுக் கொள்ளவே அவளுக்கு நேரம் பிடித்தது.

இரவு எட்டு மணிக்கு மேல் தான் அவள் கைகளுக்கு வருவாள் அவள் மகள். பாதி தூக்கமும் பாதி விழிப்புமாக மகளுக்கு இரவு கழிய இவளுக்குத் தான் கண்ணை இருட்டிக் கொண்டு வரும் தூக்கம். அதற்காகவே யாழ்நிலவன் தான் இரவில் பிள்ளையை பார்த்துக் கொள்வான்.

இரண்டு மாதங்கள் இப்படியே கடந்திருக்க, "இன்னும் இங்கேயே இருக்க முடியாது நிலவா, பிள்ளைக்கு நம்ம வீட்ல வச்சு தான் பேர் வைக்கணும்‌. இவ அங்க வந்து பிள்ளைக்கு ஆறு மாசம் ஆகுற வர இருக்கட்டும். சாப்பாடு ஊட்டத் தொடங்குனப்றம் அங்க எங்கட்ட விட்டுட்டு வந்தானா நாங்க பாத்துப்போம். அதுவரை நீ இங்க தனியா தான் இருந்தாகணும். அவள உடனே அலைய வைக்க முடியாதன்னு‌ தான் ரெண்டு மாசம் இங்கன பொறுமையா இருந்துட்டோம் இனி அங்க கூட்டிட்டு போறது தான்‌ சரியா வரும்" என்றவர் அவன் பதிலையே எதிர்பார்க்கவில்லை.

அவனாலும் எதும் சொல்ல முடியவில்லை. இரண்டு மாதங்களாக இங்கிருந்து பார்த்துவிட்டனர். இனியும் இருங்கள் எனச் சொல்ல முடியாது என நன்கு புரிய, நனியிதழை தான் கிளம்ப சொன்னான். அவளுக்கு மனதே இல்லை அங்குச் செல்ல, ஆனால் வேறு வழியும் இல்லாததால் கிளம்பினாள்.

ஊருக்கு வந்ததும் அவர்கள் கடையிலேயே, ஐம்பது பவுன் நகைக்குப் பாண்ட் வாங்கினர். மீதி ஐம்பதில் முப்பத்தைந்து கருப்பையா முதலிலேயே தந்திருக்க, இப்போது குத்தகை நிலத்தின் ஒரு வருட வருமானத்தில் பதினைந்து பவுன் வாங்கி தந்திருந்தார். அவளின் முதல் இரு மாத சம்பளத்தையும் முழுவதும் கட்டி தான், மீதத்தை மாச தவணையில் கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாள்.

பாண்ட் என்பதாலும் மருமகளுக்காகவும் செய்கூலி சேதாரமின்றி தங்கத்தின் இன்றைய விலை மட்டும் அதில் குறிப்பிட பட்டிருந்தது. அவளின் மாத சம்பளம் முப்பத்தைந்து ஆயிரம் கணக்கிட்டு ஆறு வருடங்கள் கட்ட வேண்டும் என அதில் போடப்பட்டது. இடையில் மொத்த பணம் செலுத்தி இந்தப் பாண்டை ரத்தும் செய்து கொள்ளலாமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்தையும் படித்து விட்டு யாழ்நிலவன் தலையசைப்பில் தான் கையெழுத்திட்டாள் நனியிதழ்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 14

"என் சமத்து அப்பாவ மிஸ் பண்ணுவீங்களா? ஆனா இந்தக் குட்டிய அப்பா ரொம்ப மிஸ் பண்ணுவேன்டா" என இரண்டு மாத மகளை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான் யாழ்நிலவன். அன்று தான் யாழிதழ் எனப் பிள்ளைக்குப் பெயரிட்டிருந்தனர்.

"நானுந்தான் மிஸ் பண்ணுவேன் அம்மு!" என மூஞ்சை சுருக்கி அவனை இடித்துக்கொண்டு வந்தமர்ந்தாள் நனியிதழ்.
அவளையும் ஒரு கையால் அணைவாகப் பிடித்துக் கொண்டவன், "நானுந்தான் உங்க ரெண்டு பேரையும் மிஸ் பண்ணுவேன். இவள இப்படி நினைச்ச நேரம்லா தூக்கி கைக்குள்ள வச்சுக்க முடியாதில்லையா அத தான் சொல்லிட்ருந்தேன்டி" என்க,

"ரெண்டு மாசத்துல வந்துருவேன், பாப்பாவ இங்கலாம் விட்டுட்டு வரமாட்டேன். நம்ம கூடவே இருக்கட்டும்" என்றாள் அவள்.

"அவங்க சும்மா உன்ன கடுப்பேத்த சொல்றாங்கடி. நீ நான் நம்ம பாப்பா தான் நிரந்தரம்"

"நிஜமாவா?"

"ம்ம். நைட்டு பாப்பாவ பாத்துக்கணும் அம்மு. டே டைம்ல கொஞ்சம் தூங்கிக்கோ அவங்க பாத்துப்பாங்க. நைட்‌ நீ தான் கவனமா பாக்கணும்."

'நம்பிக்கை இல்லையோ?' எனப் பாவமாகப் பார்த்தவள், "சரி அம்மு." என்று மட்டும் கூறி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"நீ என் மேல சாஞ்சுருக்கறத எப்டி பாக்றா பாரு" என அவன் மகளைக் காண்பித்து சிரிக்க, பிள்ளை இருவரையும் கண்களைச் சுருக்கி பார்த்திருந்தது.

"கால ஒரு நிமிஷம் கீழ வைக்க மாட்டேங்குறா. சுருக்கி சுருக்கி எந்நேரமும் அது ஏர்ல தான் இருக்கு" என அவளும் செல்லமாகப் பிள்ளை கன்னத்தை நிமிண்ட,

"வயித்துக்குள்ள அப்டிதானே வச்சுருந்துருப்பா, இனி தான் நீட்டப் பழகுவா, என்னடா யாழி?" எனக் கொஞ்சிக் கொண்டான்.

"சூப்பர் நேம் அம்மு. எப்டி யோசிச்சீங்க?"

"நா ஃபர்ஸ்ட்டே டிசைட் பண்ணிருந்தேன், நம்ம நேம்ஸ்ல வர்ற எழுத்து வர்றமாறி இல்லனா நம்ம நேம் மீனிங்க்ல வர்ற மாதிரி நேம் தான் நம்ம பேபிக்குன்னு. கண்டிப்பா உனக்கும் பிடிக்கும்னு தான் சர்ப்ரைஸா வச்சுருந்தேன்"
"மிஸ்டர் மூன் பாப்பா வந்தப்றம் தான் நீங்கச் சர்ப்ரைஸா குடுக்க ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க"

திரும்பி பார்த்துச் சிரித்தவன், "நீ ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்ற அம்மு, அதுக்காகவே நா உன்ன ச்சில் பண்ண சர்ப்ரைஸ் பண்றேன்" என்றதும் அவன் கழுத்தோடு கட்டிக் கொண்டு எக்கி கன்னத்தில் முத்தமிட்டாள்.

முகத்தை மட்டும் திருப்பி அருகில் இருந்த அவள் உதட்டில் அழுந்த முத்தமிட்டவன், இன்னுமின்னும் மூழ்க, வீறிட்டாள் அவன் கையிலிருந்த பிள்ளை, "பாப்பாவ பிடி. நான் கிளம்புறேன்" என எழுந்து கொண்டான். அவன் கிளம்புவதும் அழுகையைத் தர, அடக்கிக் கொண்டு நின்றாள்.

"டேக் கேர் அம்மு!" என ஒருமுறை அணைத்து விடுவித்து, பிள்ளை உச்சியில் முத்தமிட்டு, பையோடு வெளியேறினான்.

அன்றைய இரவு அவளுக்குத் தூங்கா இரவு தான். பிள்ளை அழுதால் தெரியாமல் போகுமோ எனப் பயந்து பயந்து விழித்து விழித்துப் பார்த்தே பொழுது விடிந்திருந்தது‌. காலையிலேயே பிள்ளையை வந்து வாங்கிச் சென்றுவிட்டார் பாட்டி. குளித்து உடை மாற்றித் தான் மீண்டும் கொண்டு வருவாரெனத் தெரிந்ததால் இவளும் அதற்குள் தயாராகி உண்டு முடித்தாள்.
பதினொரு மணி முதல் மாலை ஏழு இவள் வேலை நேரம். பத்து மணிக்கு வந்தவர், "இந்தா பிள்ளைக்குப் பசி அமத்து" எனக் கொண்டுக் குடுத்துவிட்டு செல்ல, அவளுக்குக் கண்ணைச் சுழற்றியது தூக்கம். பக்கத்தில் படுக்க வைத்துப் பிள்ளைக்குப் பசியாற்றியவள், அப்படியே தூங்கியிருக்க, அதீத பால் சுரந்து பிள்ளை திணறி, மூச்சு முட்டியதால் பயந்து வீறிட்டு அழுதாள். அமுதமும் அவள் முகமெங்கும் தெரித்திருந்தது. அதில் இன்னும் அழுதாள் பிள்ளை.

அவள் அழுகையில் தான், நனியிதழ் என்னோவோ ஏதோ என அடித்துப் பிடித்து எழுந்து அவள் உடையைச் சரி செய்ய, பாட்டியும், அமுதாவும் உள்ளே ஓடி வந்திருந்தனர்.

"என்ன செஞ்ச. பிள்ள ஏன் இப்டி அழுறா?" எனப் பாட்டி அதட்டிக் கொண்டே பிள்ளையைத் தூக்கி சேலையில் அவள் முகம் துடைத்துத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுக்க,

"பால் இல்லையா உன்ட்ட? பசில அழுறாளாத்தே?" என்றார் அமுதா.

"மூஞ்செல்லாம் தெரிச்சுருக்கு, பால் இல்லையான்ற நீ?" என்றார் பாட்டி முறைத்துக் கொண்டு,

"பால் குடுக்காம கீழ படுக்க வச்சுருக்காளேன்னு தான் கேக்கறேன் த்தே"

பிள்ளை அழுததில் நனியிதழுக்கும் கண்கள் கலங்கி இருந்தது, அவளுக்கே தெரியவில்லை பிள்ளை ஏன் அழுகிறாளென அவளும் பரிதவித்துத் தான் முழித்தாள்.

"பிள்ளைய பசி அமத்தலையா நீ?" என்றார் அவள் கலங்கிய கண்களைப் பார்த்துக் கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொண்டு.

"அமத்துனேன் நைட்டெல்லாம் முழிச்சதுல கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்" என்றாள் பாவமாக.

"அப்ப நீ தூங்கி, பிள்ளைய கீழ விட்டுட்டியா?" எனப் பதறினர்,

"இல்ல பக்கத்துல தான் படுத்திருந்தா. நானும் கை போட்டுப் பிடிச்சுட்டு தான் அமத்துனேன். முழிச்சு பாக்கும்போதும் அழுதாலும் என் கைக்குள்ள தான் இருந்தா. நீங்கத் தூக்கும்போது இங்கன தானே படுத்திருந்தா?" என்றாள்,

பிள்ளை இப்போது அழுகையை நிறுத்தி இருக்க, பாட்டி கையில் அணைவாகப் பிடித்துக் கொண்டவர், "பிள்ளைய படுக்கப் போட்டு அமத்துனியா?"

"ஆமா."

"உனக்கு என்ன தான் தெரியும்? பிள்ளைக்கு மொத ஆறு மாசத்துக்கு மடில வச்சு தலைய ஏந்தி பிடிச்சு தான் பால் குடுக்கணும், இல்லனா மூச்சு முட்டிரும், நல்ல வேளை பிள்ளை வாயெடுத்துட்டு அழப் போய்ச் சரியா போச்சு, இல்லனா என்ன ஆகிருக்குமோ? இதுல படிச்சு வேலைக்குப் போகக் கிளம்பிட்டா கூறே இல்லாம. வரவர உன்ட்ட பிள்ளைய குடுக்கவே பயமா இருக்கு"

"அப்டி படுத்துட்டு குடுக்க கூடாதுன்னு தெரியாது பாட்டி எனக்கு"

"உனக்கு எது தான் தெரியும்? நூறு பவுன் வேணும்னு கேட்டதும் வந்த ரோஷம் புள்ளைய பாத்துக்றதுலையும் இருக்கணும்னு தெரியுமா?" என்றார் காட்டமாக,

"சொல்லித் தாங்கத் தெரிஞ்சுக்குறேன். எல்லாத்தையும் கத்துக்க நா ரெடி தான். கத்துகுடுங்க எனக்கு" என்றாள் நேராக. அவள் அறியாமல் செய்த பிழைக்கெல்லாம் குனிந்து போக வேண்டியதில்லையே.

"நல்லா பேசு எதையும் செஞ்சுறாத" என்றவர் வெளியேறிவிட,
"உன்ட்ட புள்ளைய குடுத்துட்டு இனி காவல் வேற இருக்கணும் போல நானு" என முனங்கி விட்டு அமுதாவும் வெளியேறினார்.

"முருகா!" எனத் தலையைத் தாங்கி அமர்ந்து விட்டாள் நனியிதழ். அடுத்தடுத்து பிள்ளை அழும்போது கொண்டு வருபவர்கள் அங்கேயே அமர்ந்து விட, இவள் தான் அழுகையை அடக்கித் திரும்பி அமர்ந்து பிள்ளைக்குப் பசியாற்றுவாள்.

இரவு பிள்ளையைத் தன்னிடம் கொண்டு தரும் நேரமும் தாண்டி இருக்க, லேப்டாப்பை மூடி எடுத்து வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தாள். எல்லோரும் வரவேற்பறையிலிருந்து தான் பேசிக்கொண்டிருந்தனர்.

இவளும் மெல்ல சமையலறை சென்று பார்க்க, அமுதாவும், கல்யாணியும் வேலையில் இருக்க, மீனாளும் கை வேலையை அமைதியாகப் பார்த்து நின்றாள்.

"நா எதாவது செய்யட்டுமா த்தே?" என இவளும் கேட்டு நிற்க, மூவரும் இவளைத் திரும்பிப் பார்த்தனர்.

மாமியார்கள் பதில் சொல்லும் முன், "உனக்கு எது தெரியுமோ அத நீயே எடுத்துச்செய் இதழ். கேட்டுட்டு நிக்க வேணாம்" என மீனாள் சொல்ல, இரு மாமியார்களும் அவளை முறைத்தனர்.

"சாப்பாட்டு மேசைய ஒதுக்கி எல்லாம் எடுத்துக் கொண்டுபோய் வை" என்றார் கல்யாணி. நனியிதழும் அதைச் செய்ய நகர்ந்தாள்.

"அவள ஏத்திவிட்டு உனக்குக் கூட்டணி சேர்க்காத மீனா" என்ற அதட்டலும் அவள் காதில் விழுந்தது, சிரித்துக் கொண்டாள்.

பிள்ளை பசிக்கு அழவும், அவளிடம் பிள்ளையைக் கொடுத்து விட்டு மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தனர், அடுத்த அரைமணி நேரத்தில் இவள் சாப்பிட வர, தாத்தா பிள்ளையை வாங்கி கொள்ளவும். இவள் மட்டும் சாப்பிட அமர, மீனாள் வந்து சேர்ந்து கொண்டாள்.

"நீங்க இன்னும் சாப்பிடலையா க்கா?"

"நீ தனியா சாப்பிடுவியே கம்பெனி குடுப்போம்னு இருந்தேன். அதும்போக நாம சேர்ந்து இப்டி‌ பேசிட்டுருந்தா அவங்களுக்கு பிடிக்கல தான? அப்ப நாம அத‌ செய்றோம் சரியா?" என்க,

"ஏன்க்கா?" என்றாள் சிரித்தே,

"நம்ம காசிப் பேசாமலே பேசுறோம்னு நம்புறாங்க, நாம பேசி அத உண்மை ஆக்குவோம்னு சொல்றேன்" எனப் பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட்டனர்.

"அவங்களுக்கு நல்லா டஃப் குடுக்றீங்க போலயேக்கா"

"இல்லனா நிறையா அவங்களே பேசுவாங்க நம்ம வேடிக்கை பாக்கணும் இதழ்"

"ம்ம் யாழிய இங்கேயே வச்சுக்கற மாறியே பேசுறாங்க க்கா. எனக்கு அது வேற பயமா இருக்கு"

"அதெல்லாம் விடாத. அவங்க பிள்ளைய அவங்க வளத்துட்டாங்க தானே உன் பிள்ளைய நீ வளத்துக்குறேன்னு சொல்லு"

"கைலயே குடுக்க மாட்டேங்குறாங்க"

"அது நீயா தேடிட்டது. இந்தப் பீரியட என்ஜாய் பண்ணு அப்றமா வொர்க்க பாருன்னு நானும் சொன்னேன் நீதான் கேட்டுக்கல"

"இதும் எனக்கு முக்கியம் தானேக்கா? இஷ்டப்பட்டு பிடிச்சு, உடம்பு வலிக்கத் தான் வேலையும் பார்க்குறேன் தெரியுமா?"

"அப்ப ஃபீல் பண்ணாத இதழ். ஈசியா மூவ் பண்ணு எல்லாத்தையும் எல்லாரையும்." எனச் சாப்பிட்டு முடித்திருந்தாள் மீனாள். அதன் அர்த்தத்தை யோசித்தே இவளும் கைக்கழுவ எழுந்தாள்.

அடுத்தும் பிள்ளை அவளிடம் வரவில்லை. பின் நேரமாவதை கண்டு, "பாட்டி யாழிய குடுங்க" என இவளேச் சென்று கேட்க.

"பிள்ளைக்குப் பசி அமத்திட்டு கொண்டு வந்து குடுத்திடு. அழுதா நைட்டு நானே தூக்கிட்டு வந்து தரேன். எங்களால நீ தூங்கிருவியோன்னு நைட்டு முழுக்க பயந்துட்டே இருக்க முடியாது. எப்படியும் இங்க இருக்க போற புள்ள தானே? இப்பவே இருந்து எங்கட்ட இருக்கட்டும்" எனப் பாட்டி சொல்ல,

"நோ‌ பாட்டி. என் புள்ளைய நா வளப்பேன் எவ்வளவு கஷ்டப்பட்டும் நா வளத்துக்குறேன். உங்கள விட எனக்கு என் பொண்ணு மேல அக்கறை அதிகமாவே இருக்கு. தெரியாதத சொல்லிக் குடுங்க, அதுக்காகப் பாப்பாவ பிரிக்க நினைக்காதீங்க" என்றவள் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள். எல்லார் முன்பும் தான் பேசிவிட்டாள், கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் சொல்லாமல் வருவது சரியாகபடாததால் பேசி விட்டாள்.

அடுத்து அவர்கள் நிலவனுக்கு தான் அழைப்பார்கள் எனத் தெரிந்ததால் அவளே அழைத்தாள், "சொல்லு அம்மு. வேலை முடிஞ்சதா? பாப்பா என்ன பண்றா?" என்றான் அவன்.

"நீங்க இப்ப தான் சாப்பிடுறீங்களா?"

"ஆமாடி"

"சாப்ட்டு கூப்பிடுறீங்களா?"

"பரவால்ல அம்மு சொல்லு. டல்லா பேசுறியே பாட்டி எதும் திட்டிட்டாங்களா?" என்றான் அவனே, இரண்டாம் அழைப்பில் அவர் பெயர் மின்னி மறைந்து கொண்டிருந்ததும் ஒரு காரணம்.

"ம்ம்." என்றவள் காலையிலிருந்து இப்போது வரை நடந்ததை வேகமாகச் சொல்லி முடித்தாள்.

"குட் அம்மு. அவங்க பாப்பா நல்லதுக்கு தான் சொல்றாங்க ஆனா அத சொல்லத் தெரியல. நீயே பாத்துக்கணும்ன்னு சொன்ன தானே அத நீ கரெக்ட்டா செய், அப்றம் அவங்களால பேச முடியாது"
அவன் அதட்டாமல் சொல்லிய விதத்தில் நிதானமானவள், "அவங்களையும் பேசாம என்னையும் எவ்வளவு நேக்கா தப்ப திருத்திக்கோன்னு பாடமெடுத்திட்டீங்க மூன், என்ன கேடின்னுவீங்களே நீங்கத் தான் சரியான கேடி" என்றாள்.

"உங்கூட சேந்து தான்டி கேடி ஆகிட்டேன்"

"இப்டி வேற சொல்லிக்கோங்க. சரி என்ன சாப்பிடுறீங்க?" என அவர்கள் அடுத்தடுத்த பேச்சில் செல்ல, நடுவே வீடியோ அழைப்பில் பொண்ணையும் பார்த்துவிட்டு வைத்தான். அடுத்தே அவன் அம்மா, பாட்டி அழைப்பை ஏற்றான்.

அவர்களிடமும், "நா அவகிட்டையும் சொல்றேன் பாட்டி. அவளுக்கு நீ சொல்லிக் குடு. முதலாளியா இல்லாம பேத்தியா நினச்சு சொல்லிகுடு" எனப் பேசிவிட்டு வைத்தான்.

அன்றைய இரவும், பாதி தூக்கமும் விழிப்புமாகத் தான் நனியிதழுக்கு கழிந்தது. அதுவே வழக்கமுமானது. வேலை, பிள்ளை, தூக்கமின்மையென ஒருவழி தான் ஆகிக் கொண்டிருந்தாள். ஆனாலும் ஒரு வைராக்கியம், அவளால் முடியும் என உடம்பை தான் கெடுத்துக் கொண்டிருந்தாள்.

மறுவாரத்தில் ஒரு நாள் அவளே பிள்ளையைக் குளிக்க வைக்க முயன்று, சரியாகத் துவட்டாமல் போக, பிள்ளையும் சளி, காய்ச்சலும் வந்து துவண்டு விட்டாள். அதற்கும் வறுத்தெடுத்து விட்டனர் அவளை. ஆனால் அவளும் என்று தான் கற்றுக் கொள்வது? அதனால் பிள்ளையோடு அடுத்த ஒரு வாரமும் சளியால் அவளும் சேர்ந்தே அவதிபட்டாள். யாழ்நிலவனும் இரண்டு நாட்கள் விடுப்பெடுத்துக் கொண்டு வந்திருந்து பிள்ளையைப் பார்த்துக்கொண்டான்.

ஆனால் அதன்பிறகு அவளே தான் குழந்தையைத் தினமும் குளிக்க வைத்தாள், அதற்கு அவளாகவே நன்கு பழகிக் கொண்டாள். நாட்கள் செல்ல, பிள்ளையின் நான்காம் மாதத்தில் ஒரு நாள், காலையிலிருந்தே பிள்ளை ஒருவித எரிச்சலில் அழுது கொண்டே இருந்தாள். பால் குடித்தாலும், தூக்கத்திலும் என ஒரே அழுகை தான்.

வயிற்று வலிக்கு உண்டான வீட்டு மருந்து, மருத்துவர் கொடுத்த மருந்து என எதுவும் வேலை செய்யவில்லை, ஆளாளுக்கு தூக்கி சமாதானம் செய்து பார்த்தனர் எதுவும் வேலைக்காகவில்லை. இரவை நெருங்கியபோது தான் நனியிதழ் மடியில் படுத்திருந்த பிள்ளை அதிகமாக உடலை வளைத்துக் கத்தி அழ, கைக்கால் முதுகு எனத் தடவி கொடுத்துப் பார்த்தபோது, காதில் சீல் வெடித்து வலிந்து வந்தது தெரிந்தது.
அந்தக் கருப்பு நிற திரவத்தில் பிள்ளை ஒரு பக்கம் அழ, நனியிதழ் ஒரு பக்கம் அழுதாள். சொர்ணம் பாட்டி தான், "காதுல சீல் பிடிச்சுருக்கு அதான் காலைல இருந்து அனத்திட்டே இருந்துருக்கா. இந்தா கூடச் சேந்து அழுறத மொத நிப்பாட்டு. வத்தல்ல இருக்க விதைய கீழ தட்டிட்டு, லேசா அடுப்புல சுட வச்சு அதுல தேங்காய் எண்ணெய் ஊத்தி எடுத்துட்டு வா" என அதட்ட,

"வத்தலா? அது எவ்வளவு காந்தும். பாப்பா அல்ரெடி அழுதுட்டுருக்கா வெறும் எண்ணெய் கூடப் பரவால்ல, நீங்கச் சும்மா எதையாவது ஊத்திடாதீங்க" என இவளும் அதட்டி பிள்ளையையும் தரமாட்டேன் எனக் கட்டிக்கொண்டாள். பாவம் பிள்ளையும் வலியால் அழுது கரைந்தது.

"இவ கேட்டுக்க மாட்டா, நீ போய் எடுத்துட்டு வா அமுதா." என்றதும் அவர் சென்று எடுத்து வர, இவள் பிள்ளையைத் தரமாட்டேன் என்க, அவளிடமிருந்து பிள்ளையைப் பறித்துத் தான் அந்த எண்ணெயை யாழி‌ காதில் ஊற்றினர். ஆனால் பிள்ளையின் அழுகை பட்டென்று நின்றுதான் விட்டது அந்தச் செய்முறையில்.

"அம்புட்டு தான். இதெல்லாம் கை வைத்தியம். புள்ளைய குளிப்பாட்டினா காதெல்லாம் நல்லா காட்டன் துணி வச்சு துடைச்செடுக்கணும், இல்லனா இப்டி தான் சீழ் வடியும்." என அவளுக்கும் ஒரு கொட்டு வைத்துவிட்டே சென்றார்.
பிள்ளை அதன் பிறகு அமைதியாகத் தூங்கிவிட்டாள். ஆனால் மறுநாளும் சீழ் வடிந்தது, "மிச்ச மீதி எல்லாம் வெளில வர‌ வேணாமா?" என்ற பாட்டியைக் கண்டு கொள்ளாமல், நிலவனுக்கு அழைத்து வர வைத்தாள். அவன் வந்தே மருத்துவமனை அழைத்துச் சென்றான். மற்ற யாரும் பாட்டியை மீறி வரமாட்டார்கள், அவரும் போக விடமாட்டார் என்பதாலேயே அவனை வரவழைத்தாள்.

"படிச்சவங்க மாறி நடக்க மாட்டீங்களா? சின்னப் பிள்ளைங்க காதுல எண்ணைலாம் ஊத்த கூடாதுன்னு எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா சார். சில பேபிஸ்கு சின்னப் பிட்போல ஹோல்ஸ் இருக்கும் இயர் டர்மஸ்ல நீங்க எண்ணெய்லாம் ஊத்தினா இயர் ட்ரம்ஸ தான் அஃபெக்ட் பண்ணும். காது கேட்காம பண்ணிடும்னு சொல்றேன். அதனால தான் நாங்களே ஒன் இயர் பிலோ பேபிஸ்க்கு இயர் ட்ராப்ஸ் கூட ப்ரிஃபர் பண்ண மாட்டோம். அது ஆட்டோமெட்டிக்கா க்ளோஸ் ஆகணும். இனி இப்படி செய்யாதீங்க ப்ளீஸ்" என திட்டி தீர்த்து விட்டார்.

"பாப்பா ரொம்ப அழுதா டாக்டர். அதான் அழுகைய நிப்பாட்ட எண்ணெய் ஊத்திட்டாங்க" என்றான் யாழ்நிலவன்.

"அதுக்கு பேராசிட்டமால் குடுக்கலாம். வலி குறைஞ்சு அழுகைய நிப்பாட்டிடுவாங்க. அப்றம் நீங்க ஹாஸ்பிடல் வந்து தான் பாக்கணும். இது ஃபீடிங் எடுக்கும்போது புரை ஏறுனா அதுல பிடிக்குற சளினால வரக் கூடியது. சளிபிடிக்காம பாருங்க வராது" எனத் திட்டவே செய்தார் அவர். அதன் பின் அவர் எழுதித் தந்த நாலைந்து மருந்துகளை வாங்கிக்கொண்டு வெளியே வர, ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் இவளைக் கண்டு கையசைத்து வேகமாக வந்தனர்.

"யாரு அம்மு அவங்க, நம்மள தான் கைக்காட்றாங்களா?" என அவர்களை எங்கேனும் பார்த்திருக்கிறோமா என்று யோசித்தான் யாழ்நிலவன்.

"நல்ல இருக்கியாம்மா? நனியிதழ் தான உன் பேரு‌. எனக்கு அப்ப உன் பேர கேட்டதுமே ரொம்ப பிடிச்சது, மூணு வருஷமாது இருக்கும்ல இன்னும் மறக்கவே இல்ல‌ பாத்தியா?" என்றவர், அவள் கையிலிருந்த பிள்ளையைக் கன்னத்தைத் தடவி, "பொம்பள புள்ளையா? பிள்ளைக்கு எத்தன மாசமாகுது? நீ புருஷனோட வாழப் போகலன்னுலாம் சொன்னாங்களா எங்களுக்கு ரொம்ப வருத்தமா போச்சு. வந்து பேசலாமான்னு கூட நினைச்சோம் அப்றம் நம்ம போய்ப் பேசுறது தான் அங்க பிரச்சினை ஆகிடுமோன்னு பயமாவும் இருந்தது அதான் வரல. இப்ப இப்டி‌ பார்க்கவும் தான் சந்தோஷமா இருக்கு" என்றார் அவர் போக்கில் அந்தப் பெண்.

யாரோ நம்மைத் தெரிந்தவர்கள்போல் என நினைத்து இருவரும் சிரித்து தான் நின்றனர் அவரிடம், "பாப்பாக்கு நாலு மாசம்" என்றாள் நனியிதழ் அதற்கு மட்டும்.

"சென்னைல தான் இருக்கியா?"

"ஆமா இப்ப பாப்பாவ பாத்துக்கணுமே அதனால இங்க என் மாமியார் வீட்ல இருக்கேன்"

"ஆமா பெரியவங்க துணை வேணுமே. அம்மா இருந்தா உன் அம்மா பாத்து விட்ருப்பாங்க. அக்காவையும் கட்டி குடுத்தாச்சு, அவளும் மாச கணக்குல வந்திருந்து பாக்க முடியுமா? மாமியார் வீடு தான் உனக்கு அடைக்கலம். என் நாத்தனாருக்கு தான் அது குடுத்து வைக்கல. ம்ச் நாப்பாட்டுக்குப் பேசிட்டே போறேன். என்ன ஆஸ்பத்திரி வந்துருக்கீங்க. பிள்ளைகளுக்கு உடம்பு முடிலயோ?"

"ஆமா. நீங்க எங்களுக்குச் சொந்தமா? சாரி எனக்கு உங்கள‌ ஞாபகம் வர மாட்டேங்குது" என்றாள் என்னவும் தப்பா எடுத்துப்பாரோ எனத் தயங்கிக் கொண்டே.

"மொத நம்மள யாருன்னே சொல்லாம‌ பேசிட்டே போயிட்டடி நீ?" என அதட்டிய பக்கத்திலிருந்தவர், "உனக்கு அந்தக் கிஷோர மாப்பிள்ளையா கொண்டு வந்தாங்களேம்மா. அவன் கூடக் கல்யாணத்தன்னைக்கு போய்ச் சேந்துட்டானே? அவன் என் மருமகன் தான். என் தங்கச்சி மகன். ஆனா அவனுக்கு அப்படியொரு நோய் இருக்குன்னு எங்க யாருக்குமே சொல்லலமா, இல்லன்னா நானே வேணாம்னு சொல்லிருப்பேன். நானும் பொண்ண பெத்து வச்சுருக்கேன், நா அப்படி ரிஸ்க் எடுப்பேனா? எவனோ சோசியக்காரன் சொன்னான்னு இப்டி செய்வாங்களா? மன்னிச்சக்கம்மா" என்றார் அவர்.
 

priya pandees

Moderator
"அந்தச் சோசியக்காரன் ஊர்ல நிறைய பேர் சாபத்த இப்டி செஞ்சு வாங்கிருப்பான் போல, ரெண்டு மாசம் முன்ன அவனோட ஒரே பேரன் அல்ப ஆயுசுல போய்ட்டான். காலேஜ் படிக்குற பையன், தலை வலிக்குதுன்னு விழுந்தவன் எந்திரிக்கவே இல்லையாம். எல்லாம் அவர் சேத்து வச்ச பாவம் தான்னு இப்ப அந்தத் தொழில விட்டுட்டாராம். அவர் விட்டா போதுமா? அவரால பாதிக்கபட்டவங்க வாழ்க்கை எத்தனையோ யாருக்கு தெரியும். ஏதோ உன் நல்ல நேரம் இந்தத் தம்பி கைக்குப் போய்ச் சேந்துருக்கம்மா." என்றார் அவரின் மனைவி.

யாழ்நிலவனுக்கு தலைவலியில் கடந்த மாதம் இறந்தவன் என்றதும் இவனுக்குச் சந்தோஷ் தான் நினைவிற்கு வந்தான். அவன் அந்த யோசனையில் நிற்க, நனியிதழுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, திரும்பிக் கணவனைப் பார்த்தாள்.

"உன்ன பாத்ததும், ரெண்டு வார்த்தை பேசிடணும்னு தோணுச்சு அதான் வந்தோம்மா" என்றார் மீண்டும் அந்தப் பெண்மணி.
"எனக்கு என்ன சொல்லன்னு தெரியல, எனக்குக் கல்யாணம் இவரோட தான் நடந்தது, அது மட்டுந்தான் மனசுல இருக்கு. வேற யாரையும் எனக்குத் தெரியாது. அதனால எனக்குப் பெரிய கன்ஃப்யூஷன் இல்ல. நீங்கக் கிஷோர்னு சொல்றவரு முகம் கூட எனக்குத் தெரியாது" என்றாள் லேசாகச் சிரித்துக்கொண்டே.

"ம்ம் என் தங்கச்சி தான் எதையும் பொறுமையா செய்யலையே, நேரா கல்யாணத்த முடிக்றதுல தான குறியா இருந்தா" என்றார் அந்த மனிதர் பெரு மூச்சுடன்.

"அந்த ஜோசியர் பையன் இறந்துட்டான்னு சொன்னீங்களே? அந்தப் பையனுக்குச் சென்னையா?" என நிலவன் திடீரெனக் கேட்க,

"ஆமா தம்பி. உங்களுக்குத் தெரியுமா?" என அதிசயப்பட்டார் அவர்.

"ம்ம்கூம் அவர தெரியாது. நீங்கச் சொன்ன மாதிரி தான் என்ட்ட படிக்ற பையன் போன மாசம் இறந்து போனான், அத வச்சு கேட்டேன்"

"இருக்கலாம் தம்பி அந்தப் பையன்
பேரு சந்தோஷுன்னு நினைக்கிறேன், அதானடி? ஆனா காலேஜ் பேரு தெரியல"

இவனும் ஆமோதித்து, "ம்ம் சந்தோஷ் தான்" என்றதும், நனியிதழும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

"பாத்தீங்களா உங்க கண்ணு முன்னாடியே கொண்டு வந்துருக்கு அந்த விதி. ஆனா அந்தப் பையன் என்‌ன செய்வான் பாவம்!" என்றார் அவரே.

"ம்ம்!" என மட்டும் சொல்லிக் கொண்டான் யாழ்நிலவன், அவனுக்கு அழியா நினைவைக் கொடுத்தவன் அல்லவா அந்தச் சந்தோஷ்.

அந்நேரம் அங்கு வந்த செவிலியர், "ம்மா உங்கள எவ்வளவு நேரம் கூப்பிடறது, வாங்க டாக்டர் கூப்பிடுறாங்க" என்றதும், "என் தங்கச்சிக்கு தான் யூட்ரஸ்ல ஏதோ கட்டின்னு காட்ட‌ வந்தோம்." என்றவர் கிளம்புவதாக தலையசைக்க, "பாத்துக்கோம்மா. உன் அப்பா வெள்ளந்தி குணத்துக்கே அவர் பிள்ளைக ரெண்டு பேரும் நல்லாருப்பீங்க." என்று அந்தப் பெண்மணியும் சொல்லிச் செல்ல, இவர்களும்‌ தலையசைத்து விடை கொடுத்தனர்.

திரும்பி வரும் வழியில், "சந்தோஷ் நம்ம டிபார்ட்மெண்ட்டா அம்மு?" என்றாள். அவளுக்கு அவனை அவ்வளவு தெரிந்திருக்கவில்லை.

"ம்ம் உனக்கு ஜுனியர். பட் அவன் நமக்குப் பெரிய ஹெல்ப் பண்ணிருக்கான் அம்மு" என்றான் ஆழ்ந்த மூச்செடுத்து.

"எப்போ? என்ன ஹெல்ப்?" எனப் பிள்ளைக்கு உடையைச் சரி செய்து கொண்டு சாதாரணமாகத் தான் கேட்டாள்.

"அன்னைக்கு நா வாங்கிருக்க வேண்டிய அடிய‌ தான் அவன் வாங்கிட்டு இன்னைக்கு இல்லாமலே‌ போய்ட்டான் அம்மு!" என்றவனை பேச்சின்றி அதிர்ந்து பார்த்திருந்தாள் நனியிதழ்.

 

priya pandees

Moderator


அத்தியாயம் 15

"ஏன் அப்டி சொல்றீங்க?" என்றாள் படபடப்புடன்,

"நான் பின்னாடி அவன் நிக்றான்னு கவனிக்கலடி, ஒருத்தன் என்ன அடிக்க வந்தான் நா விலகினேன் அவன் தலைல அந்த அடி விழுந்துட்டு. அவனும் அப்ப அதுக்கு பெருசா ரியாக்ட் பண்ணல, பட் அது அவன் தலைக்குள்ள பெரிய இஷ்யூ ஆகி, ஃபோர் மந்த்ஸ் ஃபிவோர் நம்ம பாப்பா பிறந்த சேம் டேட்ல அதே ஹாஸ்பிடல்ல தான் இறந்து போனான். எனக்கு அது ஏதோ ஒரு கில்ட் அம்மு"

"ஓ!" என்றவள் இரண்டு நிமிட அமைத்திக்கு பின், "அந்தச் சந்தோஷ் பாவந்தான் அம்மு. ஆனா அவனுக்கு அடிபடவும் நீங்கக் காரணமில்ல, அவனும் உங்கள காப்பாத்தல, அது ஒரு கோயின்சிடன்ஸ். யார் வாழவும் யார் சாகவும் இன்னொருத்தர் காரணமா இருக்க முடியாது, பெர்சனலா அவங்கவங்க தான் அதுக்கு முதல் ரீசனா‌ இருப்பாங்க அம்மு" இருவருக்குமான சமாதானமாகவே அதைக் கூறினாள்.

"ம்ம் மேபிடா!" என்றவன், அவர்கள் வீடும் வந்திருக்க பிள்ளையை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டு இறங்கினான். மீண்டும் மீண்டுமாக யோசித்து அவனே சற்று தெளிந்திருந்தான் என்பதால் நனியிதழ் சொன்னதும் உடனே கேட்டுக் கொண்டான்.

"டாக்டர் என்ன சொன்னாரு?" என்றார் பாட்டி அவர்கள் இருவரும் வீட்டினுள் நுழைந்ததுமே.

"இனி எண்ணெய்ய ஊத்துனேன் வெண்ணெய்ய ஊத்துனேன்னு எதாது செஞ்சா, ஊத்துன ஆள என்ட்ட கூட்டிட்டு வாங்க, நா ஒரு எண்ணெய் காய்ச்சி அவங்க வாய்ல ஊத்துறேன்னு சொல்லிட்டாரு" என்றவன், பின் முறைப்புடன், "அங்க திட்டு வாங்கி முடியல இனி எதாது உன் இஷ்டத்துக்கு செய்யாத சொல்லிட்டேன். உன் காலம் மாறி இல்ல இப்போ. எதுக்குனாலும் அவங்கட்ட தான் போய் நிக்கணும்"

"படிக்காம வந்து உக்காந்து வைத்தியம் பாக்குற டாக்டர்ட்ட போயிருப்படா நீ. அவனுக்குப் பொறாமை இப்டி எல்லாரும் வீட்லயே வைத்தியம் பாத்துட்டா சோத்துக்கு நாம ‌என்ன செய்யன்னு. அதான்‌ உன்ட்ட அப்டி பேசிருப்பான்‌"

"வரியா போய் நம்ம ரெண்டு பேரும் அவருக்குப் பரீட்சை வச்சுட்டு வருவோம்?" என‌ முறைத்தான் இவனும்.

"வாத்தியார் நீதான? நீயே போய்ப் பரீட்சை வை, பெயிலா போனா உன் காலேஜ்ல சேத்து படிக்கக் கூட வை. அப்படி இலவச சேவை தான் நிறையா செய்வியே நீ!"

"உனக்கு என் பொண்டாட்டிய கொஞ்சலன்னா தூக்கமே வராதில்ல?"

"ஆமா ஆமா உன்ன விடக் கம்மியா தான்டா கொஞ்சுறேன் நானு" என அதற்கும் முகத்தை நொடிக்கவே செய்தார் சொர்ணம்.

"அந்தக் கழுத்த அப்டியே ஒரு நாள் திருப்பிடுறேன் பாத்துட்டே இரு." என்றவனும் முறைத்துவிட்டே உள்ளே சென்றான். இவர்கள் சண்டையில் எப்போதோ பிள்ளையை வாங்கிக்கொண்டு அவர்கள் அறை சென்றிருந்தாள் நனியிதழ்.
அவன் உள்ளே சென்றபோது மருத்துவமனை சென்று வந்ததால் பிள்ளைக்கு உடல் துடைத்து வேறு உடை மாற்றி, அவளும் மாற்றிக் கொண்டு பசி அமர்த்திக்கொண்டிருந்தாள்.

சிரித்துக் கொண்டே அவளருகில் சென்றமர்ந்து கழுத்தில் முத்தமிட்டவன், "இங்க இருந்து நிறைய கத்துக்கிட்டு பொறுப்பாகிட்டியா அம்மு?" என்க,

"நக்கல் தானே‌‌ மூன்?"

"இல்லடி நிஜமாவே சேஞ்ச் தெரியுதே"

"அப்ப‌ இதுக்கு முன்ன பொறுப்பில்லாம‌ இருந்தேனா நானு?"

"அப்படி மொத்தமா சொல்லிட முடியாட்டியும் கொஞ்சம் கொஞ்சம் அப்படி தான்" என்றவனை நான்கடி போட்டாள். அவன் பதிலுக்கு மீண்டும் மீண்டுமாக அவளைக் கழுத்தோடு அணைத்து முத்தமிட்டான்.
பிள்ளைக்கு ஆறு மாதமாகவும், அன்னம் ஆகாரம் கொடுக்கத் துவங்கியதும் சென்னை கிளம்பிவிட்டாள். பாட்டியும் பிடிவாதமாக நின்று பார்த்துவிட்டு, பின் அவரே கிளம்பி அவர்களோடு சென்னை வந்தார். இப்போதும் இரண்டு வீடாகத் தான் இருந்தது. பொருட்களை ஒரே வீட்டில் அடைக்க முடியாமல் இரண்டு வாடகை கொடுத்துக்கொண்டிருந்தான் நிலவன். நனியிதழ் சிவகங்கை செல்லவுமே கருப்பையாவை வாடகை கொடுக்க வேண்டாமென நிறுத்திவிட்டான்.

"அடேய் ஒருத்தனுக்கு எதுக்குடா ரெண்டு வீடு. பொறுப்பே இல்லடா உனக்கு" எனப் பாட்டி வந்ததுமே ஆரம்பிக்க,

"சீரு கேட்டது நீதான?" என்றான் அவனும் பதிலாக. நாளொரு சண்டையும் பொழுதொரு தகராறுமாகப் பாட்டியும் பேரனும் இருப்பதால், நனியிதழ் அவரிடம் இடி கொஞ்சம் கம்மியாகவே வாங்கினாள்.

தனி வீடாக ஒன்றை விலைக்கு வாங்க தேடிக் கொண்டிருந்தான் நிலவன். இனி அங்குத் தான் இருவரும் என்பதால் அப்படி தேடினான்.

லோனெடுத்து விலைக்கும் வாங்கிவிட்டான். பிள்ளைக்கு ஒரு வயதை அந்தப் புது வீட்டில் தான் கொண்டாடினர். மாடி தோட்டத்தை மறக்காமல் அங்கும் ஏற்படுத்திக்கொண்டான்.
மறுமாதத்தில், ஒரு நாள் திடீரென்று நனியிதழை அலுவலகம் வரச் சொல்ல, "இனி டெய்லி வரச் சொல்லிடுவாங்களோ அம்மு?" எனப் பயந்து தான் நின்றாள்.

"எதுக்கு கூப்பிடுறாங்கன்னு எதும் கெஸ் பண்ண முடியலயா? எதும் மிஸ்டேக் பண்ணியா நீ?"

"இல்ல அம்மு. இப்ப தான் ஒரு ப்ராஜெக்ட் முடிஞ்சது, அடுத்து ந்யூ வொர்க் இன்னும் அலாட்‌ பண்ணவே இல்ல. அந்த ப்ராஜெக்ட்ல கூட நல்லா பண்ணிருக்கேன்னு என் மேனேஜர் ஸ்பேஸிஃபை பண்ணி க்ரூப் கால்ல விஷ் பண்ணாரு‌"
"மேபி அதுக்கு நேர்ல விஷ் பண்ண கூடக் கூப்டிருக்கலாமே அம்மு?"

"எது ஒரு‌ மாசம் கழிச்சா? அதுக்கு அப்பவே விஷ் பண்ணி, பார்ட்டிலாம் பண்ணிட்டாங்க. நாந்தான் நேர்ல பழகாம பார்ட்டி மட்டும் போகவான்னு போகல"

"சொல்லவே இல்ல நீ?"

"போனா‌ தானே சொல்லணும்? போகாம எதுக்கு சொல்லணும்? அதுலையும் உங்க பாட்டியா பார்ட்டியான்னு வந்தா கண்ண மூடிட்டு பாட்டி தான்னு தொடுவேன், அவ்வளவு பாசம் அவங்க மேல எனக்கு" என்றவள் பாவணையில் வெடித்து சிரித்தான் யாழ்நிலவன்.
மறுநாள் அலுவலகம் சென்றதும் தான் தெரிந்தது அவர்கள் குழுவைப் புது ப்ராஜெக்ட்டை டேக் ஓவர் செய்ய யூஎஸ் செல்லச் சொல்கின்றனர் என்று.

"விநோத் என் சிட்சுவேஷன் தெரிஞ்சும் நீங்க இதுல என்ன ஆட் பண்ணிருக்க வேண்டாம்" என்றாள் பொறுமையாகவே.

"இதுக்கு முந்தின ப்ராஜக்ட் வந்த சேம் பிராஞ்ச் தான். அவங்க தான் அதே டீம் கேட்டாங்க. ஒரு ஆள மாத்தினாலும் அவனுக்கு நா டீடைல் குடுக்கணும் அவன் ஏன் மாத்துன எதுக்கு மாத்துனன்னு வறுத்தெடுப்பான் நனியிதழ். த்ரீ மந்த்ஸ் தான். ஒரு நியூ ஜாயினிக்கு இப்டி ஆப்பர்சுனிட்டி கிடைக்காது. இன்கிரிமெண்ட் வித் டபுள் சேலரி"

"எல்லாம் ஓ.கே. எனக்கு ஒன் இயர் பேபி விநோத்"

"ஒரு த்ரீ மந்த்ஸ் மட்டும் பாத்துக்க ஆள் இல்லையா? அப்பப் பேபிய உங்க கூடக் கூட்டிட்டு போறீங்களா?" என்றதும், சந்தோஷபட்டவள், "அதுக்கு ஆப்ஷன் உண்டா?" என்றாள்.

"வில் ட்ரை" என்றார் மேனேஜர்.

"நானும் என் ஹஸ்பண்ட்ட கேக்கணும் விநோத்!" என்றுவிட்டே வீடு திரும்பினாள்.

யாழ்நிலவனிடம் கேட்கவே அதிகம் பயந்தாள், இரவு உணவின்போது, "என்ன சொன்னாங்க அம்மு?" என்றான் அவனாகவே.

"யூ.எஸ் போகச் சொல்றாங்க அம்மு. த்ரீ மந்த்ஸ் மட்டுமாம். பாப்பாவயும் கூடக் கூட்டிட்டு போலாம் சொல்றாங்க. நீங்களும் த்ரீ மந்த்ஸ் லீவ் போட்டுட்டு வர்றீங்களா? ஒரு லாங் ஹனிமூன் போய்ட்டு வருவோம்?" என்றவளை முறைத்துப் பார்த்தான்.

"பாப்பாவ‌ நல்லா பாத்துப்பேன்" அதற்கும் அவனிடம் அதே பார்வை,
"உங்களையும் மிஸ் பண்ணுவேன்!" அதற்கும்.

"உங்க பாட்டி தொல்லை இல்லாம நாம மட்டும் மூணே மாசம். இன்னொரு பேபி கூட இந்த ஹனிமூன் எஃபெக்ட்ல வந்தாலும் எனக்கு டபுள் ஓ.கேத்தான்" என்றவளை எக்கி தலையிலேயே கொட்டினான்.

"கோவமா அம்மு?"

"நீ தான் போகணும்னு முடிவு பண்ணிட்டியேடி பின்ன என்னத்துக்கு இந்தப் பாவமா மூஞ்சு காட்டுற?"

"இல்ல இல்ல நீங்களும் வந்தா தான்"

"நோ அம்மு. எனக்கு த்ரீ மந்த்ஸ் லீவ்லாம் குடுக்க மாட்டாங்க. உனக்கும் அது தெரியும், சும்மா விளையாடக் கூடாது. போகணும்னு தோணினா போய்ட்டு வா. பட் பாப்பா இங்க தான் இருப்பா. புது ப்ளேஸ் ரெண்டு பேருக்கும். அண்ட் அவளுக்கும் க்ளைமேட் டைமிங் ஃபுட்னு எல்லாம் செட்டாகணும், அது சரி வராது. நீ மட்டும் போய்ட்டு வா." என முடித்துக் கொண்டான்.

'வேலை வேலையெனத் தங்களை மறந்து விடுவாளோ' என்றே தோன்றிவிட்டது அவனுக்கு. ஆனாலும் அவள் முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கவில்லை அவன். வீட்டில் சொன்னப்போதும் ஆளாளுக்கு திட்டித் தீர்த்தனர், கருப்பையா கூட, "நீ உன் வாழ்க்கைய மட்டும் பாக்குற இதழு. அதுல உன் புருஷனையும் பிள்ளையும் இழந்துறாத." என முகத்துக்கு நேரே கூறிவிட்டார்.

மனமெங்கும் பாரம், பிரிவின் வலி, மற்றவர்களின் முறைப்பும், அவன் அம்முவின் விலகல், என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டும் கிளம்ப வேண்டும் என்பதில் உறுதியாக நின்றாள். அது அவனை மொத்தமாக அவளிடமிருந்து விலக்கி நிறுத்தியது. அவளைப் பிரியவும் முடியவில்லை, அவள் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தவும் பிடிக்கவில்லை என்ற நிலையில் இருந்தான் அவன்.

மறுநாள் கிளம்ப வேண்டும், "அம்மு!" என நிலவன் முன் சென்று நிற்க,

"எல்லாம் பேக் பண்ணிட்டியா?" என்றான் இதமாகவே, நாளைக் கிளம்புகிறாள் என்றதில் அவனுக்குமே ஆற்றாமையாக இருந்தது.

"ம்ம் என் மேல கோவம் தானே அம்மு?"

"ஆமான்னு சொன்னா என்ன செய்வ அம்மு?" என்றான் அவன் பதிலுக்கு,

"இல்லம்மான்னு சும்மா பேச்சுக்குக் கூடச் சொல்லலாம்" என அவன் மடியில் அமர்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள் அவளாகவே.

"சரிடி இல்ல. கவனமா போய்ட்டு வா. நல்லா தூங்கி எழுந்திரி. அதில்லாம தான் ரொம்ப டயர்டா இருக்க."
என அவள் தலைகோதியவனை இன்னும் இறுகக் கட்டிக்கொண்டாள். எப்போதும் அவள் முடிவிற்கு துணை நிற்பவனை இன்னும் இன்னுமாகப் பிடித்தது அவளுக்கு.

"சாரி அம்மு."

"டேக் கேர்டி."

"பாப்பா என்ன மறந்திடுவாளோ?"

"சான்ஸ் இருக்கு." என்றவன்‌ முதுகில் அடித்தாள்.

"என் ஃபோட்டோ காமிச்சுட்டே இருக்கணும் நான் திரும்பி வந்ததும் அவ‌ என்ட்ட‌ வரணும்"

"இது வேறயா?"

"ஆமா. இல்லனா உங்க பாட்டி இதான் சான்ஸ்னு பிள்ளையோட ஜுட்‌ விட்ருவாங்க"

"நா அப்டிலாம் விட‌மாட்டேன்டி, என் பொண்ணு என்னோட தான் இருப்பா"

"நா அப்படி இல்லன்னு சொல்ல வர்றீங்களா?"

"ம்ச் கிளம்புற நேரத்துல சண்ட வேணாம் அம்மு, ப்ளீஸ்" என்றவன், ஏற்கனவே குழந்தை பிறப்பால் இருந்த பிரிவாற்றலையும் இனி பிரிய போகும் மூன்று மாதத்தையும் சேர்த்து அவளுள் இறக்க முற்பட, அவளும் அதில் பங்கெடுத்துக் கொண்டாள். பிள்ளை தூங்கி இருக்க, இருவரும் விடியும்வரை பிரிய மனம் இல்லாமல் கொண்டாடி திண்டாடித் தவித்துவிட்டனர்.
மூன்று மாதங்களும் இருவருக்கும் பிரிவுப் போராட்டம் தான். பாட்டியும் அமுதாவும் பிள்ளையைப் பார்த்துக் கொண்டாளும் நனியிதழைத் தேடி அழுத பிள்ளை ஏங்கி காய்ச்சலை இழுத்துக் கொண்டாள். அதில் அவ்வளவு தொலைவிலிருந்த நனியிதழும் நொந்து விட்டாள். ஆனால் நினைத்ததும் வந்துவிடும் தூரமில்லையே அவள் சென்றிருக்கும் இடம்.

பாட்டியும் அமுதாவும் எப்போதும் போல் நனியிதழை போட்டுத் தான் வறுத்தெடுத்துவிட்டனர். யாழ்நிலவன் தான் விடுப்பெடுத்துக் கொண்டு பிள்ளையோடே இருந்து காய்ச்சலைக் குணப்படுத்தினான். அப்பாவும் மகளும் அதில் அதிகத்திற்கும் அதிகமாக ஒட்டிக் கொண்டனர். அதன்பின் வீடியோ அழைப்பில் கூட அம்மாவும் மகளும் பார்த்துக்கொள்ளவில்லை, பார்த்தாள் அதிகம் ஏங்குகிறாளென நிறுத்திவிட்டான் நிலவன்.

"மூன் நல்லா பழி வாங்கிட்டாரு!" எனத் தனியாக அழத் தான் முடிந்தது அவளால். அவன் சற்றும் இறங்கி வரவில்லை.

மூன்று மாதம் எப்போதடா முடியும் என நாட்களை எண்ணி எண்ணி கடத்தி ஊர் திரும்பினாள் நனியிதழ், விமான நிலையம் சென்று வரவேற்றனர் அப்பாவும் மகளும், இவளை இரண்டு நொடி உற்று பார்த்த பிள்ளை, அப்பா தோளில் சாய்ந்து கொண்டதில் கத்தி அழுதுவிட்டாள் நனியிதழ்.

"ம்ச் அம்மு, பாப்பா உன்மேல கோவம் அதான் திரும்பிட்டா, கொஞ்சம் நேரம் போனா அவளே வருவா பாரு" எனச் சமாதானம் செய்தவன் ஒரு கையால் அவளையும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்த, நனியிதழ் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

"மூணு மாச கேப்புக்கு உங்க சென்டிமென்ட் ஓவரா இருக்குன்னு சொல்லப் போறாங்கடி உன் கொலீக்ஸ்." என்றவன் கிசுகிசுப்பில் தான் திரும்பித் தன்னுடன் வந்தவர்களைப் பார்த்தாள். அவரவர் அவரவர் வீட்டினருடன் பேச்சுவார்த்தையில் இருக்க, அவளைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் கையசைத்துவிட்டு கிளம்பினாள்.
மறுநாள் அலுவலகம் சென்று அனைத்தையும் ஒப்படைத்து வந்தவள், அடுத்த நாள் முதல் கணவன் குழந்தையென ஐக்கியமாகி விட்டாள்.

"எத்தன நாள் லீவ் அம்மு?" என்றான் இரண்டு நாட்கள் கடந்தபின்.

"ஒரு‌வாரம் வெயிட் பண்ணுங்க நானே சொல்றேன்" என்றவளை விசித்திரமாகப் பார்த்துச் சென்றான்.

மறு வாரத்தில், "அம்மு நாம ஊருக்குப் போயிட்டு வருவோமா?" என அவளே வந்து கேட்கவும்,

"உன்ன பாரீன் கூட்டிட்டு போனதுல வேலை பாக்காம கோட்ட விட்டுட்டியா? உன் சேட்டை தெரிஞ்சு உன் ஆபிஸ்ல வேலையவிட்டு தூக்கிட்டானா?" எனப் பார்த்தவனை, முறைத்துப் பார்த்தாள்.

"நானே வேலைய விட்டு நின்னுட்டேன்."

"ஏன்டி?"

"எனக்கு இன்க்ரிமெண்ட்டோட மூணு மாசம் ஃபாரீன் போனதுக்கு சேத்து, மூன்றரை லட்சம் தந்துருக்காங்க, நகைக்கு இத செட்டில் பண்ணிட்டா என் கோட்டா ஓவர், இரண்டு வருஷம் பாப்பா கூட இருந்துட்டு, மேபி நாம லாஸ்ட் ஒன் வீக் நீங்கக் கத்துக்குடுத்த பாடத்துல பேபி வந்தா அதையும் வளர்த்து விட்டுட்டு இரண்டு பேரும் ஸ்கூல் போனப்றம் நா வேலைக்குப் போறேன்" என்றவளை கண்ணை விரித்துப் பார்த்தான் நம்பாமல்.

"எதுக்கு திடீர்னு இந்த முடிவு?"

"எனக்கு மொத மொத கிடைச்ச வேலைக்குப் போணும்னு ஆசை ப்ளஸ் நகைக்கான அமௌன்ட்டயும் ஃபுல்லா சீக்கிரம் செட்டில் பண்ணிடணும்னு ஆசை. ரெண்டும் இப்ப நடந்திருச்சு, ஃபாரீன் போனா இன்க்ரிமெண்ட்டோட டபுல் சேலரி சொன்னாங்க, அதான் சீக்கிரம் செட்டில் பண்ணிடலாம்னு கிளம்பிட்டேன். இப்ப இத செட்டில் பண்ணிட்டா, நம்ம ஃபீரி ஆகிடலாம்ல அம்மு?" என்றவளை அயர்ந்து தான் பார்த்தான்.

"எனக்காக நான் எப்ப கேட்டாலும் சரி சொன்ன என் அம்முக்காக, நானும் டைம் ஸ்பெண்ட் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன். சோ இன்னும் டூ, த்ரீ இயர்ஸ்கு ஃபேமிலிக்காக மட்டும், அப்றம் லைஃப் லாங் எனக்காகவும் சேத்து வாழ்ந்துக்குறேன்" என அவனை கட்டிக்கொண்டு குதித்தாள் யாழ்நிலவனின் மனைவி.

"பெரிய மனுஷி." என அவள் தலையில் தட்டி இலகுவாக கடந்துச் சென்று விட்டான் யாழ்நிலவன்.

"அவ்ளோ தான் ரியாக்ஷனா?" எனப் புலம்பியவள், "அம்மு!" என அவன் பின்னரே வர,

"அம்மு, நமக்குப் பிடிச்ச மாதிரி வாழதான்டி இந்த வாழ்க்கை. அதுல இந்த விட்டுகுடுத்து போறதுன்றது நாம அதுக்கு அழகு சேக்றது. அவங்க சொல்லிட்டாங்க இவங்க சொல்லிட்டாங்கன்னு இல்லாம, நமக்குச் சரியா நம்மளால இது முடியுமா அது மட்டுந்தான் பாக்கணும், முடியும்னா அது எதுவா இருந்தாலும் ஒரு கைப்பாத்திடணும். எனக்கு உன்ன பிரிஞ்சு இருக்கறது தான் கஷ்டம், கூடவே இருந்து வேலைக்குப் போறதுல ஒரு கஷ்டமு இல்ல" என நிதானமாகக் கூறினான்.
"எனக்கும் ஒரு ப்ரேக் வேணும் அம்மு. படிச்சுட்டே கல்யாண லைஃப், வேலை பாத்துட்டே பேபி கேரிங், இப்டி தான் போயிடுச்சு, சோ சின்ன ப்ரேக் என் ஹஸ்பண்ட் அண்ட் பேபிக்காக மட்டுமில்லாம எனக்காகவும்" என அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டுத் தொங்கியவளை, தானும் அழுத்தமாக அணைத்துக் கொள்ள, தத்தி தத்தி நடந்து வந்த மகள் அவர்களின் கால்களைக் கட்டிக்கொண்டாள்.

ஒரு பெண்ணுக்கு தனி சம்பாத்தியமும் சுயமரியாதையும் அதிக அவசியம். அதே நேரம் குடும்ப பொறுப்பும் அவசியமே! அதற்கு ஆணின் துணையும் அவசியமே! யாழ்நிலவனின் ஒத்துமையால் அதை சிறப்பித்துக் கொண்டாள் நனியிதழ். இருவரும் ஒருவருக்கொருவர் என எழுதபட்டதால் மட்டுமே அன்று ஒன்றினைக்கப்பட்டனர். அந்த ஆசிர்வாதத்தோடே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து இந்த வாழ்க்கையை சிறக்க வாழட்டும்.

நன்றி
 
Top