subageetha
Moderator
Manjam 24
இங்கு சென்னையில் அதிதி நிரஞ்சனின் வற்புறுத்தலில் டிக்கஆரம்பித்தவள், கொஞ்சம் கொஞ்சமாக அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு விட்டாள். வினய் மனதில் தோன்றுவது போல எந்தவித யோசனைகளும் அவள் மனதில் இல்லை. எதிலிருந்தோ தப்பித்து வந்தவளுக்கு படிப்பது பெரிய ஆறுதல் ஆகிவிட்டது. வித்யா விஸ்வம் இருவரும் அவள் படிப்புக்கு தேவையான உதவிகளை செய்வதும்,பாடங்களில் வரும் சந்தேகங்கள் தீர்ப்பதற்கு அவளுக்கு சொல்லி தருவதுமாக நாட்கள் கழிந்தது. ஒரு வருடம் முழுதாக பயிற்சி செய்த பிறகு தான் பரிச்சை எழுத போவதாக முடிவு செய்துவிட்டாள் அதிதி. அவள் சொன்னதற்கு வித்யா விஸ்வம் இருவருக்கும் தயக்கம். ஆனால் 'அவள் சொல்வதுதான் சரி' என்றான் நிரஞ்சன்.
இப்பொழுதெல்லாம் நிரஞ்சனும் அதியும் காலை தினமும் பார்க் சென்று உடற்பயிற்சி செய்வதும், பிறகு, அவள் தயாரான பிறகு அவளை கொண்டு போய் வகுப்புகளில் போய் விட்டுவிட்டு தானும் தயாராகி அலுவலகம் செல்வதுமாக நேரம் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது.
அதிதி மனதில் தேவையற்ற யோசனைகள் இல்லாத அமைதி என்றால், நிரஞ்சன் மனதிலோ அதிதியின் மீதான காதல் அவள் அருகில் இன்னும் விசுவரூபம் எடுக்க தன்னை கொஞ்சம்கூட கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில், தன் காதலை எப்படி சொல்வது என்றும் தெரியாமல் சஞ்சல மனதுடன் தவித்துக் கொண்டிருக்கிறான்.
நடுவில் இரண்டு முறை வாரக்கணக்கில் பெங்களூருவில் தங்கிவிட்டான் நிரஞ்சன். அவன் இல்லாத அந்த நேரங்களில் அதிதி மிகவும் சோர்ந்து தான் போனாள். அவனை அவள் மனது வெகுவாக தேடியது. அதை அவனிடமே வாய்விட்டு சொல்லவும் செய்தாள். அப்படி சொன்னவளிடம்', என்னோட ஒர்க்கிங் ப்ளேஸ் பெங்களூரு தான் அதி. நீ வேணும்னா என்னோட வந்து தங்கி கோ... இங்கிருந்தே படிப்பியாம்... வேணும்னா கிளாசுக்கு பார்க்கவா ' என்ற விளையாட்டு போல் தன் மனதில் உள்ளதையும் வெளிப்படுத்தி விட்டான். அவன் சொன்னதைக் கேட்டவளுக்கோ பதில் என்ன சொல்வது என்று புரியாமல் அங்கே கொஞ்ச நேரம் மௌனம். நிரஞ்சன் சொல்வதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்று புரியாமல் அதை விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தாள் அதி.
நிரஞ்சனுக்கோ எப்படி தன் மனதில் உள்ளதை அவளுக்கு எப்படி புரிய வைப்பது?
இதைவிட தெளிவாக நீ இங்கே வந்து விடு என்று எப்படி சொல்ல முடியும்!அவளுடன் திருமண உறவு பற்றிய எண்ணமே அவனுக்கு அந்த நொடி எழவில்லை. தன் சிறு வயது தோழியை பிரிந்து இங்கு தனியாக இருக்கிறேன் என்ற உணர்வு.
அவளை பிரிந்திருக்க முடியாமல் சென்னைக்கும் பெங்களூருவுக்குமாக பிரயாணம் செய்து களைத்து போனான். அவனது இந்த நடவடிக்கைகளை பார்த்த அவன் அம்மாவோ, சுமna பற்றி கேட்டு அவனை துளைக்க தொடங்கிவிட்டார். இன்னொரு புறம் சுமனா மனதில் நிரஞ்சனுடனான உறவு தன்னிடமிருந்து விலகுவது போன்ற தோற்றம்.
காதல் என்பது எதுவரை?
கல்யாணம் என்பது ஆகும்வரை...
யாருக்கு மாப்பிள்ளை யாரோ... அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ....
சுமநாவின் பயம் அர்த்தமற்றது என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. எப்பொழுதுமே உள்ளுணர்வு நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதில்லை. அதை சொல்லும் தகவல்களும் பொய்ப்பதில்லை. நாம் தான் பெரும்பாலான நேரங்களில் உள்ளுணர்வு சொல்வதை புறம் தள்ளி நமது அறிவின் பால் முடிவுகளை எடுக்க துணிகிறோம்.
சுமனா இப்பொழுது அதே நிலைமையில் தான் இருக்கிறாள். அவளது அறிவு எப்பாடுபட்டாவது நிரஞ்சனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று அடம் செய்ய, அவளது மனமோ ஆரம்பத்திலிருந்தே நிரஞ்சனுக்கு எனது காதலில் ஈடுபாடு இல்லை. அதையும் மீறி நான் தான் எனது அப்பாவை வற்புறுத்தி அவனை சந்திக்க செய்தேன். இப்போது அவன் நடவடிக்கைகளில் மாற்றம் என்பது எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று அவளுக்கு புத்தி சொல்ல அதை ஏற்கும் மனநிலையில் அவள் இல்லை. பரீட்சை முடிந்த பிறகு நேராக அலுவலகத்திற்கு வந்தவளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. முன்பானால் அவன் அடிக்கடி சென்னை சென்று கொண்டிருந்தான்.இப்போது மாதக்கணக்கில் அங்கேயே தங்கி விடுகிறான். அவனை தொடர்புகொள்ள சுமனா முயலும்போது பெரும்பாலும் அவன் அலைபேசி அழைப்பை ஏற்பது இல்லை. மீண்டும் மீண்டும் செய்யும் முயற்சிகள் அவளின் பொறுமையை சோதிக்கின்றன. திரும்ப அழைப்பான் என்று நினைத்தால் அதுவும் கிடையாது. கிட்டத்தட்ட அவர் நடவடிக்கைகள் உன் தொடர்பில் எனக்கு இஷ்டமில்லை என்று தெரிவிக்கின்றது. இந்த நிலையில் கல்யாணத்தைப் பற்றி எப்படி அவனுடன் பேச முடியும்? அவனைப் போன்ற ஒருவனை இழப்பதில் எந்த பெண்ணுக்குமே உடன்பாடு இருக்கப்போவதில்லை. சுமனா ஒரு முடிவுக்கு வந்தவளாக நிரஞ்சனின் அம்மாவுக்கே அழைத்துவிட்டாள். அவள் பேச்சைக் கேட்ட நிரஞ்சனின் அம்மாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு சற்று சுதாரித்தவர் மெல்ல மெல்ல பேச்சு கொடுத்து நிரஞ்சன் நடந்துகொள்ளும் முறை பற்றி முழுவதுமாக அறிந்து கொண்டார்.
சுமனா இதை எதிர்பார்த்து தான் அவருக்கு அழைத்ததே! அவள் நிச்சயம் மோசம் போகவில்லை. இனி நிரஞ்சன் இவ்வாறு நடந்து கொள்வதற்கு கேட்கக்கூடிய உரிமையுள்ள ஒரே ஆள் அவனது அம்மா மட்டும்தான். அவன் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது, என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் சுமனா. இவளது நடவடிக்கைகளையும், இவ்வளவு தவிப்பையும் ஆர்யன் நிச்சயம் எதிர்பார்த்திருக்க வில்லை. அவனுக்கு தெளிவாய் தெரிந்து போய்விட்டது தனது காதல் நிறைவேறுவதற்கு எந்த வழியும் இல்லை என்று. 'நான் உன்னை இவ்வளவு நேசிக்கிறேன். எனது காதலை பற்றி உனக்கு ஒன்றுமே இல்லையா?நான் காதலிப்பது உனக்கு புரியவில்லையா, எப்பொழுதுமே உதாசீனப்படுத்தும் ஆணைத்தான் -பெண்கள் சுற்றுவார்களோ?என்றெல்லாம் மனதிற்குள் மறுகியவனுக்கு நிரஞ்சன் மிது கோபம் கூட வந்தது.
பிடிக்கவில்லை என்றால் முன்பே நேரடியாக சொல்லி இருக்க வேண்டியதுதானே... எதற்காக இந்த கண்ணாமூச்சி ஆட்டம் என்று நிரஞ்சனிடம் ஆக்ரோஷமாய் சண்டைபோட வேண்டும் போல் ஒரு உணர்வு ஆரியன் மனதினுள்.
தன் காதல் ஒரு வழிப் பாதை தானா என்று சுமனா ஒருபுறமும், தன் காதல் நிறைவேற வழியே இல்லையா என்று ஆரியன் ஒருபுறமும் யோசித்துக் கொண்டிருக்க, சென்னையில் நிரஞ்சன் அதிரடியாய் களத்தில் இறங்கி விட்டான். அதிதி விவாகரத்து பெற வேண்டியது ஒன்றுதான் அவனுக்கு பெரும் தடையாக இருந்தது.
பெங்களூருவில் அதிதி அருகிலில்லாத தனிமையை உணர்ந்தவனுக்கு, இதற்கு மேலும் அதிதி இல்லாமல் ஒரு நாள் கூட நகர்த்த முடியாது என்பது தெளிவாக புரிந்து விட்டது. அலுவலகத்தில் கூட சுமனாவை தன்னை சந்திக்க விடாமல் தவிர்க்க தொடங்கிவிட்டான். எந்த விதத்திலும் சுமனாவை அருகில் நெருங்க விடாததன் மூலம் தனது விருப்பமின்மையை அவளைப் புரிந்து கொள்வாள் என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தான் நிரஞ்சன். ஆனால் அவனது இந்த கணக்கீடுகளே, அவளது கோப உணர்வை தூண்டி, அதுபோல் வெறியாக மாறி அவனையும் அதிதியையும் பிரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் என்று தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நிதானமாக இந்த பிரச்சனையை கையாண்டிருப்பான். தன்னைப் பற்றியும் அதிதியை பற்றியும், தன் அதிதியை திருமணம் செய்து கொள்வது பற்றியும் யோசித்தவனுக்கு வேறொரு பெண்ணின் ஏமாற்றம் எவ்வளவு ஆழமானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
நிரஞ்சனும் சாதாரண மனிதன் தான். அவன் ஒன்றும் தெய்வப்பிறவி கிடையாது. அவனது அடிப்படை குணம் கோபம். அதிதி அவன் வாழ்வில் வந்த பிறகுதான் நிதானம் என்ற ஒன்றையே கற்றுக் கொண்டான். முடிவுகள் எடுப்பதிலும் ஒன்று வேகமாக முடிவெடுத்து விடுவான். இல்லாவிட்டால் நிதானமாக முடிவெடுப்பதற்கு முன் விஷயமே முடிந்து போய்விடும். அதியி டம் தன் காதலை சொல்லவும் இவ்வாறு தாமதப்படுத்தியதில்தான் இருவரின் வாழ்க்கை பாதை மாறி விட்டதோ?
இப்பொழுதும் நேராக சுமனாவை சந்தித்து தனது மனோ நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைக்க முயன்றிருக்கலாம்... அல்லது அவளது தந்தைக்கு தொடர்புகொண்டு தனது விருப்பமின்மையை தெரிவித்திருக்கலாம். இரண்டும் இல்லாமல் அவளை தவிர்ப்பது எந்த விதத்தில் சரி? இது ஒரு முடிவு ஆகாது. ஆனால் இந்த அடிப்படையை புரிந்து கொள்வதற்கு நிரஞ்சனுக்கு பக்குவம் போதவில்லை.
நிச்சயம் அவன் நல்ல காதலன் தான்.., அதிதியை பொறுத்தவரை. ஆனால், சுமனா விஷயத்தில் அவன் நடந்து கொள்ளும் முறை சரியில்லை.
சென்னைக்கு வந்துவிட்ட நிரஞ்சன் அதிதியுடன் அதிக நேரத்தை செலவிட்டான். படிக்கும் காலத்தில் இருவரும் ஒன்றாகவே இருக்கும் நேரங்களை மீண்டும் மீண்டும் அதிதி நினைவு கூர்ந்தாள். அவ்வளவு நேரம் இல்லாவிட்டாலும் கூட, காலையில் அதி கண் விழிப்பது நிரஞ்சன் முகத்தில்தான். இரவு நேரங்களில் அவன் அலுவலகம் முடிந்து தாமதமாக வரும் சமயங்களில் அவனுக்கு வாசல் கதவைத் திறந்து விட்டு, அவனுக்கு உணவு பரிமாறி, தூங்கப் போகும் போதும் நிரஞ்சன் முகம்தான். அவளுக்கு இந்த நிமிடங்கள் பிடித்திருக்கிறதா?விடுப்பு நாட்களில் அவள் உடனே அமர்ந்து கொண்டு அவளுக்கு பாடங்கள் சொல்லித் தருவதும், பின்னர் அவளை கூட்டிக்கொண்டு எங்கேயாவது வெளியே செல்வதுமாக அவனை தடுப்பதற்கு வித்யா -விஸ்வம் இருவராலும் முடியவில்லை. அதிதியின் முகத்தில் பரிபூரணமான சந்தோஷம் மிளிர்கிறது. நிரஞ்சனை தடுக்க போய் அதிதி பழையபடி தனது மனதிற்குள் சுருங்கி விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவள் பெற்றோருக்கு.
ஆனால் நிலைமை அவர்கள் கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்று இருவருக்குமே புரிகிறது. என்ன செய்யவேண்டும்...எப்படி செய்யவேண்டும் வேண்டும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். நிரஞ்சனோ இவர்களது யோசனையை முறியடிப்பதற்கு என்றே இன்னும் வேகமாக முன்னேறுகிறான். எப்படியும் இந்த முறை பெங்களூரு செல்லும் பொழுது அதிதியை தன்னுடன் கூட்டிச் சென்று விடவேண்டும் என்று அவனது காதல் இதயம் அவனுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது. அதை மீறும் சக்தி அவனிடம் கிடையாது.
சுமனா அழைத்த பிறகு, வெகுநாட்களுக்கு நிரஞ்சனின் அம்மா தீவிர யோசனையில் இருந்தார். முன்புபோல நிரஞ்சன் அவன் அம்மாவிடம் அதிகம் பேசுவதில்லை. அதற்குக் காரணம் அவன் அம்மாவிற்கு அவன் அதிதியுடன் அளவுக்கு மீறிய நெருக்கம் காண்பிப்பதும், அவள் வீட்டிலேயே தங்கி இருப்பதும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து இன்னொரு ஒரு வீட்டில் அவர்கள் வீட்டு விஷயங்களை தலை விட்டுக்கொண்டு என்று அவன் செய்யும் காரியங்கள் எதுவுமே பிடிக்கவில்லை என்று தெரிந்ததினால்தான்.
இதற்கு இன்னொரு காரணம் அவன் அம்மா மீது அவன் வைத்திருக்கும் பயம். நிச்சயம் அவனுக்கு தெரியும் அதிதியை திருமணம் செய்து கொள்வதற்கு அவன் அம்மா ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவன் அம்மா சொல்வதை கேட்பதை தவிர வேறு வழி இல்லை. ஆனால், எந்த காரணத்தைக் கொண்டும் அதிதியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை வாழ்க்கை துணையாக அங்கீகரிக்க முடியாது என்பது அவன் அளவில் நிரந்தரம். இந்த பிரச்சனைகளை கையாள தெரியாமல் தான் அவன் தன் அம்மாவை தவிர்க்கிறான். இது எல்லாம் அவன் அம்மாவுக்கு நன்றாகவே புரிகிறது.
ஆனால் இவ்வளவு நாள் விட்டுதான் பிடிக்க வேண்டும் என்று நாள் கடத்தியது தவறு என்று அவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அவனுக்கு 'தானே அழைத்து, தான் அவனை சந்திக்க விரும்புவதாகக்கூற, நிரஞ்சன் மனதில் ஆயிரம் கேள்விகள். இதற்கு மேலும் அம்மாவிடம் எப்படி சமாளிப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.
அதிசயமாக அந்த வாரக்கடைசியில், அவன் அதிதியை விட்டுவிட்டு, தன் அம்மாவை சந்திக்க வேண்டும் என்று கிளம்பிவிட்டான். அவன் அம்மா அவனை "இங்க வீட்டுக்கு வா" என்றுவிட்டார். விருப்பமே இல்லாமல் பல வருடங்கள் கழித்து அவன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான். வீட்டில், சுகுமாரன் தனது மனைவி பிள்ளைகளுடன் சந்தோஷமாய் விளயாடி சிரித்து கொண்டிருக்க அவனது தந்தை இவற்றையெல்லாம் ஆனந்தமாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். வீட்டினுள் நுழைந்தவுடன் நிரஞ்சன் மனதில் ஒரு வெறுப்பும், அசூசையும் கலந்த உணர்வு. தான் இந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நாளை கசப்புடன் நினைவு கூர்ந்தான். அடுத்த கணம் அவன் அம்மா மீது அளவு கடந்த கோபம் தோன்றியது. தன் வாழ்நாளில் இந்த வீட்டிற்குள் நுழையவே கூடாது என்ற தீர்மானத்தை ஒரே வார்த்தையில் அவன் அம்மா தவிடு பொடியாக்கி விட்டாள்.
அந்த நேரத்தில் அதிதி மட்டும் இருந்திருக்கா விட்டால், இன்று என் வாழ்க்கை எப்படி திரும்பி இருக்கும்... என்ற எண்ணம் அவனுக்குள்.
இந்த எண்ணமே அவன் அம்மாவிடம் அவனுக்கு பேசுவதற்கு தைரியத்தை கொடுத்தது. இவன் உள்ளே நுழைந்தவுடன் அத்தனை நேரம் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்த சுகுமாரன் அமைதியை தத்தெடுத்து கொண்டான். அவன் அப்பாவும் நிரஞ்சனை இந்த நேரத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சுதாரித்துக்கொண்டவர்
''அம்மா மாடியில் ரூம்ல இருக்காங்க பாரு'' என்று தனது சம்பாஷணையை முடித்துக்கொண்டார். லேசான தலையசைப்புடன் வேகமாக எட்டுக்களை வைத்து படியேறியவனுக்கு கோவத்தில் உடம்பு முழுவதும் உஷ்ணத்தை கக்கியது.
அவன் அம்மாவுக்கோ அவனது உணர்வுகள் கண்டிப்பாய் தெரியும். ஆனால் அவருக்கும் வேறு வழியில்லை. இது போன்ற விஷயங்களை பொதுவிடங்களில் வைத்து பேச முடியாது. அதிதியின் வீட்டிற்குச் சென்று இது போன்ற விஷயங்களை பேசுவதும் சரியல்ல. அதைப்போல், என்றைக்கு இருந்தாலும் நிரஞ்சன் இந்த குடும்பத்தின் உடனான தொடர்பை விடுவதிலும் அவருக்கு இஷ்டமில்லை. இந்த குடும்பம் தான் அவனது அடையாளம். யார் என்ன சொன்னாலும், இந்த குடும்பத்தில் நிரஞ்சன் ஓர் அங்கம்தான். அவன் தனது உரிமையை இப்படி விட்டுக் தரக்கூடாது என்று அவர் யோசித்தார். நாளை அவனுக்கு திருமணம் என்றால் அவனது அப்பா அண்ணா அவனது குடும்பம் என்ற அறிமுகம் அவசியம். அவன் யாரும் இல்லாத அனாதை அல்ல... படிக்கும் சமயத்தில், அவனுக்கு அதி செய்த உதவி அவன் வாழ்க்கை பாதையை எல்லாவிதத்திலும் மாற்றிவிட்டது. நல்ல மாற்றங்கள் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அதிதியை திருமணம் செய்து கொள்வதை எப்படியாவது தவிர்த்தாக வேண்டும். போயும் போயும், தனது மகனுக்கு செகண்ட் ஹாண்ட் மனைவியா என்று யோசித்தாள் நிரஞ்சனின் அம்மா.
தானும் ஒரு ஆணுக்கு இரண்டாவது மனைவியாய் வாக்கப்பட்டு தனது மகனின் பல இன்னல்களுக்கு காரணமாய் இருந்து விட்டோம், ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு மோசமாக யோசிக்க கூடாது என்று வாகாய் மறந்துவிட்டாள் அந்தப் பெண்மணி.
நிரஞ்சன் ஆனால் இதையெல்லாம் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை.
நிரஞ்சன் அதிதியை மணந்து கொண்டால் அது தியாகம் என்று நினைத்தாள் நிரஞ்சனது தாயார். இந்த சமயத்தில் இன்னும் காதல் மிச்சமிருக்கும் நம்புவதற்கு அவள் தயாராக இல்லை. தன் மகன் அப்பேர்பட்ட தியாகங்களை செய்வதற்கு தான் என்றும் அனுமதிக்கப் போவதில்லை என்று மனதில் சூளுரைத்துக் கொண்டாள் நிரஞ்சனது அம்மா... அவனது காதலை எப்படி அவன் அம்மாவுக்கு அவன் புரிய வைப்பான்?