எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதிலாடும் காதல் மந்தாரா

subasini

Moderator
மனம் - 1

அழகிய கார்காலம் அது... மேகங்கள் என்றும் ஆதவனைத் தன் புகைத் தாவனிக்குள் ஒழித்து வைத்துக்கொள்ளத் துடிக்கும் கார்காலம் மயில்களுக்குக் கொண்டாடம் தான்.

அழகிய நன்நாளில் புனிதாவிற்கும் கங்காதரனுக்கும் இரட்டைக்குழந்தைகள் பிறந்தது.
பெண் குழந்தையென்றால் லட்சுமியின் வரவு என்று ஆனந்தம் அடைந்தவருக்கு, இரண்டுமே பெண் பிள்ளைகள் என்றதும் அவரின் கால்கள் நிலத்தில் நிற்க வில்லை.

வீடே ஆனந்தத்தில் ஆரவாரமாகக் கொண்டாடியது பிள்ளைகளின் வரவை.
தனக்கு இரடிப்புச் சந்தோஷத்தைத் தந்த மனைவியைக் காண அவர் மனம் துடிக்க, ஒர் அந்த மருத்துவமணையின் வராந்தாவில் காத்திருந்தார் கங்காதரன்.

தன் பிள்ளைகள் இந்தப் பூமியில் கால்பதித்த அந்நொடி, இந்த உலகமே அழகாகத் தோன்றியது கங்காதரனுக்கு. நடுத்தர வர்க்த்தைச் சேர்ந்த அவருக்கு இனி இந்தப் பிள்ளைகளை, நல்ல விதமாக வளர்த்திப் பெரிய ஆட்களாக வளரவேண்டும் என்ற எல்லாத் தந்தைக்கும் உண்டாகும் கனவும் சேர்ந்தே பிறந்தது.

தன்னுடன் துணைக்கு வந்திருக்கும் தங்கையிடம் " எப்போ அவளைக் கூட்டி வருவாங்கத் தங்கம்" என்று கங்காதரன் கேட்டார். கணவனை இழந்துக் கைம்பெண்ணாக யாருமில்லாமல் நிராதரவாக இருப்பவருக்கு, அவர் அண்ணன் கங்காதரன் தான் ஆதரவு தந்தார். தன் ஒற்றைப்பிள்ளையோடு அண்ணன் வீட்டில் வந்து தங்கிக்கொண்டார், தங்கம்.

“கொஞ்சம் பொறுமையாக இருங்க அண்ணா, குழந்தைகளைப் பாருங்க ரோசாப்பூவாட்டம். எல்லாம் எங்க அண்ணியோட சாடையில் இருக்காங்க. உங்க பொண்டாட்டியை இன்னும் கொஞ்ச நேரத்தில் கூட்டி வருவாங்க” என்றாள் தன் அண்ணனிடம்.

"அம்மா பாப்பாவைக் காட்டுங்க, என்னிடம் தாங்கம்மா ஆசையாக இருக்கு " என்ற தங்கத்தின் மகனை அடக்கினார்.
"தம்பி இப்ப எல்லாம் நீ தூக்கவே கூடாது, குழந்தைகள் பெரிசு ஆனதும் தான், உனக்கு ஆசையாக இருக்கென்றால், என்னிடம் வந்து உக்காந்துப் பார்த்துக்கோ" என்ற அம்மாவின் முகத்தைப் பார்த்து,
"பட்டுபோல இருக்காங்க அம்மா" என்றான் மகேந்திரன். தன் மாமாவின் மக்களைக் கண்ட ஆனந்தம் அவனிடம்.

நேரம் கடக்க மக்களில் ஒருத்தி, பாலுக்கு அழத் தொடங்கினாள். அங்கே வேகமாக வந்த நர்ஸ் முதலில் அழுதப் பிள்ளையை வாங்கிப் போய்ப் பாலூட்ட வைக்கச் சென்ற அடுத்த நொடி, மற்றவளும் அழத் தொடங்கினாள். இந்தச் சிறு நிகழ்வே வரும் காலத்தை எடுத்துக்கூறும் விதம் இருந்ததை உணர்ந்தார் தங்கம்.
இருந்தப்போதும் இரட்டைக்கழந்தைகள் என்றால் இப்படியெல்லாம் இருக்கும் என்று அவரே ஒரு கருத்தை உருவாக்கினார் இங்கே.

கங்காதரனின் பொறுமையை ரொம்பச் சோதிக்காமல் மனைவியைக் காண அழைத்தனர் மருத்துவர்.

இரண்டுக்குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த தன் காரணமாக, மிகவும் சோர்ந்து போய்ப் படுத்து இருக்கும் தன் மனைவியைக் கண்டதும், கண்ணில் இரு துளி நீர்ப் பிறந்தது.

மனைவியின் மேல் காதலை மீறியப்பாசம் கங்காதரினடம் வெளிப்பட்டது. தந்தை ஆனதை விடத் தன்னவளின் சோர்வு அவரைத் துன்புறுத்தியது. அவரின் சோகமான முகத்தைப் பார்த்ததும் , "என்னங்க, ஏன் இப்படி இருக்கீங்க, ஆண் பிள்ளை இல்லை என்று வருத்தப்படறீங்களா?" என்று தன் கணவனின் சோகத்திற்குக் காரணம் கேட்டாள் புனிதா .

"என்னடிப் பேச்சு , ஆணோ பெண்ணோ எல்லாம் ஒன்று தான், நான் உன்னோட சோர்வான முகத்தைப்பார்த்து அச்சச்சோ, என் பொண்டாட்டி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாளோ? என்று வருத்தப்பட்டா இப்படிக் கேட்கற நீ" என்று முகத்தைத் திருப்பியவரைப்பார்த்துச் சிரித்தாள் புனிதா.

"ஆமா ,ஆமா, நான் எதாவது சொல்லிறப் போறேனுங்க, ஆளுக்குக் கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் எப்படி. நான் கஷ்டப் படகூடாது நினைச்ச என் பக்கத்திலேயே வந்து இருக்கக் கூடாது" என்று அவரைக் கேலிச் செய்தாள் புனிதா. மனைவியின் கேலியில் அவள் முகம் பார்த்தவர், சோர்ந்துப்போய் இருக்கும் தாய்மை நிறைந்த அவள் முகத்தைப்பார்த்ததும் அவருக்குக் காதல் கரைப் புரண்டது.

மெல்லக் குனிந்து அவள் இதழில் தன்னைத் தந்தை என அழகான அந்தஸ்த்துத் தந்து, உயர்த்திய அவளின் காதலுக்கு அச்சாரம் வைத்தவரின் கண் கலக்கித்தான் போனது.

கணவனின் காதலில் பரவசம் அடைந்த புனிதாவிற்கு அவள் கடந்த வந்த வலி, பட்ட வேதனை எல்லாம் மறந்து போனது. தலைவணங்கிக் காதலைப் பரிசளிக்கும் கணவன் மட்டுமே தன் முன்னே நிற்பதைக் கண்டாள்.

அவர்களின் மோன நிலையைக் கலைத்தனர் அவர் பெண் பிள்ளைகள். "வந்துருவாளுக இனி" என்று கணவனை முறைத்த தன் மனைவியைப் பார்த்து அழகாகச் சிரித்தார் தேவதைகளின் தந்தை.

மருத்துவமணையில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தனர் கங்காதரன் குடும்பத்தினர்.

இரண்டு தேவதைப் பெண்களுக்குப் பெயர்ச் சூட்டும் நாளும் வந்தது. தாரா, தாரிகா என்று அழகான பெயர்களை வைத்து அழகுப்பார்த்தனர் தங்கள் பிள்ளகைளுக்கு.
நாட்கள் வருடங்கள் ஆக வருடங்கள் சில ஓடியதில் பிள்ளகைளும் வளர்ந்தனர்.

தங்கத்தின் மகன் மகேந்திரன் தன் மாமானின் மக்களைப் பாரபட்டமின்றிப் பார்த்துக்கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
தாரா மற்றும் தாரிகா இரண்டு பேரில், தாரிகா கொஞ்சம் கசண்டி, குசும்பு அதோடு சுயநலமாக இருந்தாள்.

இருவரும் பள்ளியில் பயின்றுக்கொண்டிருந்தனர்.
தாரா மிகவும் பொறுப்பான பெண்ணாக இருந்தாள். எளிமையாக நேர்க்கொண்ட பார்வையோடு வலம் வந்தாள். தாரிகாவிற்கு அழகுவழிந்தது என்றாள் தாராவிற்கு அழகு அவளின் கம்பீரமும் தைரியமுமாக இருந்தது.

படிப்பில் இருவரும் நன்றாகப் படித்தாலும், தாரா அதில் முன்னில் இருந்தாள். தாரிகாவும் படிப்பாள், எப்படியும் உருண்டுப் பிரண்டு தன் முன் அமர்ந்து இருக்கும் தாராவின் தயவில் தாராவிற்குச் சரிசமமாக மதிப்பெண் வாங்கி விடுவாள். தாராவின் தயவில் பள்ளியில் முதல் மூன்று இடங்களில் வந்து கெத்தாக நடந்தாள் தாரிகா.

சிறு வயதில் இருந்தே அவளுக்கு எல்லாம் விட்டுக்கொடுத்து, அவளை அனுசரித்து என்று பழகியதால் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை தாரா.

தாராவிற்கு அவள் லட்சியமே நன்றாகப் படித்துத் தன் தந்தையின் முகத்தில் பிறக்கும் அந்தப் புன்னகையைக் காண்பது தான். தாரிகாவும் நன்றாகப் படித்தாள் அவருக்கு ஆனந்தம் இரட்டிப்பாகும் என்பது மட்டுமே அவள் நினைத்தாள். அதற்காக என்ன வேணாலும் செய்யும் நிலையில் வளருபவள் தாரா.
"தாரா, என்ன பண்ணற? அம்மாக்கு இந்த வேலையில் கொஞ்சம் உதவலாம் இல்லை" என்று சமையலறையில் இருந்து கத்தினாள் புனிதா.

"என்னம்மா நீங்க, உங்களிடம் சொல்லிட்டுத் தானே எழுத உக்காந்தேன், அவளைக் கூப்ப வேண்டியது தானே" என்றாள் சின்னவள்.

"தங்கம் அத்தை வீட்டிற்குப் போயிட்டா டி, நீ வா என் செல்லம் தானே" என்று அவளுக்கு ஐஸ் வைத்தாள் அவள் தாய்.

"இப்படி என்னைய மட்டுமே ஆல் டைம் ஃபோக்கஸில் வைச்சுட்டு, அவளைக்கோட்ட விட்டுருங்கம்மா நீங்க” என்ற படி வந்தாள் தாரா… அம்மாவிற்கு உதவுவதற்கு.

"ஏன்டி, இப்படி எல்லாம் பேசுற, அவள் என்ன பண்ணிட்டா, இப்படி எதற்கு எடுத்தாலும் அவளைக் குத்தம் சொல்லிட்டுச் சுத்தற" என்று கடிந்தத் தாயிடம்,

"அம்மா , அவள் நல்லதற்குத் தான் சொல்லறேன். உங்களுக்குப் புரியவில்லை என்றால் ஒன்றும் பண்ண முடியாது. அவள் எப்பவும் பரிட்சையில் என்னிடம் கேட்டு எழுதறாள் என்று சொன்னேன், பாவம் சொல்லிக்கொடு என்று சொன்னீங்க, நானும் சொல்லிக்கொடுத்தேன்.

அதுதான் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கம்மி ஆகிருச்சு. எல்லாம் என்ன சொன்னீங்க, நன்றாகப் படிக்கறப் பிள்ளை இந்தத் தடவை ஏதோ மார்க் கம்மி ஆகிருச்சு, அதனால் பள்ளியிலும் அவள் கேட்ட க்ரூப் குடுத்துட்டாங்க ஆனால் காலேஐ் அப்படி இல்லை அம்மா.

இந்தப் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில், அவள் என்ன பண்ணி வச்சு இருக்கா என்று தெரியவில்லை, அப்பா கேட்டால் நீங்க தான் பேசணும், என்னை எல்லாம் கேட்டாருன்னா, இவ்வளவு வருஷமும் உங்க செல்லம் எப்படிப் பாஸானாள் என்று நான் சொல்ல வேண்டி வரும், அப்பறப் என்னிடம் கோபித்துக்கொள்ளக் கூடாது" என்றாள் தாரா.

"ஏன் பாப்பா இப்படிச் சொல்கிறாய், அவள் நல்ல மார்க் வாங்குவாள், நீ வேணுமென்றால் பாரு" என்றாள் புனிதா.

“அவள் ஆடின ஆட்டம் ஸ்கூலிலேயே தாங்க முடியாமல் போச்சு, இனி காலேஜ் வேற, என்னெனப் பண்ணப் போறாளோ என்ற பயமே எனக்குக் காலேஜ் போற அந்த ஆர்வத்தைக் குறைச்சுருச்சும்மா” என்று ஆதங்கப்பட்டாள்.

இவ்வளவு சேட்டைகளுக்குச் சொந்தக்காரி, தன் அத்தையின் ஸ்மார்ட் போனில் சமூக வலைத்தலத்தில் அவள் வகுப்புத்தோழனிடம் கருகும் வரையில் கடலை வறுத்துக்கொண்டிருந்தாள்.

தாரிகா.... என்று இரண்டு இதயத்தின் குறியீட்டினை அனுப்பி 'என் இதயம் அது நீ வாழும் இடம்' என்று அவளைச் சுகிப்பிக்கும் வார்த்தைகளை அள்ள வீசிக்கொண்டிருந்தான் ஒருத்தன்.

இப்படித் தன் அழகில் மயங்கித் தன் பின் சுற்றும் விடலைப் பையங்களை அலய விடுவது அவளுக்கும் நன்றாக இருந்தது. பருவ வயதின் தாக்கம் அப்படி என்ன சொல்ல.

"இந்தப்போனுல என்னத்தச் செய்வியோ? உங்க அம்மா பாரு அங்க கத்திட்டு இருப்பாள், நீ என்ன இங்க வந்து ஓபி அடிக்கிறாயா? தாரிகா" என்றார், தங்கம்
தங்கத்தின் வார்த்தைகளையெல்லாம் கேட்டப்படியே அங்கே வந்தான் மகேந்திர்ன.

மகேந்திரனுக்குத் தாரிகாவின் செய்கை எல்லாம் தெரியும். ஆனால் கண்டுக்கொள்ள மாட்டான். 'இந்த வயது அப்படி' என்று விட்டு விடுவான். ஆனால் தாரா அப்படி இல்லை என்பதும் அவனுக்குத் தெரிந்து இருந்தது.

மாமானின் பிள்ளைகள் இரண்டு பேரும் அழகாகா இருந்த போதும் கண்ணியமாக நடந்துக்கொண்டான். தன் தாயிக்கு எந்த அவப்பெயரும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

அடைக்கலமாக வந்து இடத்தில் அனைத்தும் எனது என்று உரிமைக்கொண்டாட மனம் இல்லை அவனுக்கு. அவன் தொடங்கி இருக்கும் கட்டுமானப் பொருட்கள் விற்பனைக்கூடத்தை, அடுத்த அளவில் கொண்டு செல்லும் அவன் பயணதில் இந்த மாதிரியான சிந்தனைகளுக்கு நேரமில்லை.

“உணவு உண்ண வந்தவனிடம் பார்த்தாயாடா உன் மாமன் மகளை, அவள் அம்மாவை ஏமாற்றிவிட்டு, இங்க வந்து இந்த ஃபோனை நோண்டிட்டு இருக்காள்” என்று தங்கம் குற்றம் வாசித்தாள்.
"விடுங்கம்மா, இந்தக் காலத்தில் எல்லாம் அப்படித்தான். நீ சும்மா அவளை எதாவது சொல்லாட்டே இருக்காதே! அப்பறம் வருவதை நிறுத்திருவாள்" என்றான் மகேந்திரன்.

"இல்ல மகி அவள் நல்லதுக்குத் தான் சொல்லறேன். தன்னைச் சுற்றி என்ன நடக்குது தெரியாமல் எப்பொழுதும் ஒரு மாய உலகத்தில் இருப்பது போல அவள் சுத்திட்டு இருக்கா டா" என்றார் ஆதங்கமாக.

“எல்லாம் சரி ஆகிரும் அம்மா. காலேஜ் படிக்கப்போற, படிப்பு அவளை மாற்றி விடும்” என்று சொன்னவன் தானும் அதையே நம்பினான். அவள் படிப்பு அவளை நல்வழிப் படுத்திம் என்று.

ஆனால் விதி என்று ஒன்று இருக்கும் அல்லவா. நாம் நினைத்தெல்லாம் நடந்தால் அதற்கு என்ன வேலை.

மகேந்திரன் மாமான் வீடு பக்கத்தில் இருந்தாலும், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவன். அதனால் எதுவும் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்று விட்டு விடுவான். அது குடும்பத்திற்கு நல்லது என்று நினைத்தான்.

அன்னையிடமும் பல தடவைச் சொல்லி இருக்கின்றான். உங்கள் அண்ணன் வீட்டு விஷயத்தில் தேவை இல்லாமல் சென்று உங்கள் கருத்தைச் சொல்லதீர்கள். உங்களிடம் கேட்டால் சொன்னால் போதும் என்று. மகனின் பக்குவமானப் பேச்சில் இருக்கும் உண்மையை உணர்ந்த, தங்கமும் மகன் சொல்லைத் தட்டுவதில்லை.

இந்தக் காலத்தில் காதல் என்பது ரொம்பச் சாதாரணமாகி விட்டது. பேருந்து நிறுத்ததில் இளவட்டம் அடிக்கும் கூத்தை அவனும் பார்க்கின்றானே.
மகேந்திரன் வந்தவுடனே அங்கிருந்து மெதுவாகக் கிளம்பினாள் தாரிகா. தான் பயன்படுத்திய அனைத்தும் ஃபோனில் இருந்து அழித்தி விட்டவள். இதெல்லாம் தன் புத்திசாலித் தனமாகக் கருதினாள் தாரிகா. ஒரு நாள் நாம் பிடிபடுவோம் என்று அவள் நினைக்கவில்லை.

வேகமாக வீட்டிற்கு வந்தவள், "அம்மா, என்ன சமைத்து வைத்திருக்கீங்க" என்று சமையலறையில் பாத்திரங்களை உருட்டினாள்.

"என்னடி, பண்ணிட்டு இருந்த அத்தை வீட்டில்" என்று தாயின் விசாரிப்புகளை எல்லாம் விளையாட்டுதனமாகத் தவிர்த்தாள் தாரிகா. அவளின் குறும்பில் எல்லாம் மறக்கும் தாயை எப்படிப் புரிய வைக்க என்று தெரியவில்லை தாராவிற்கு.

விதி இதுவானால் எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்று மனதைத் திடப்படுத்தினாள். தன் உடன் ஒட்டிப்பிறந்தவளுக்காக எல்லாம் தாங்கும் தூண்னாக மாறிப்போனாள் தாரா.

இரவு உணவிற்கு வந்த கங்காதரன் " தாரா, எந்தக் கல்லூரியில் சேரணும் என்று யோசிச்சு வச்சு இருக்கீங்காளா? என்று இருவரையும் பார்த்துக்கேட்டார்.

"ரிசலட் வரட்டும் அப்பா" என்றாள் தாரா.

"தாரிகாவோ ஊரிலேயே மிகப்பெரிய கல்லூரியில் சேருவது தான் என் கனவு" என்று கூறினாள்.

"அதற்கு நிறைய ஃபீஸ் கட்ட வேண்டி இருக்கும் என்று கேள்விப் பட்டேனே தாரிகா" என்றார், கங்காதரன்.

"ஆமாம் அப்பா, ஆனால் நல்ல மார்க் வாங்கினால், கவுன்சிலங் மூலம் போனால் பணம் நம்ம, கட்டுப்பாட்டில் இருக்கும்" என்றாள் தாரா. மேலும் "அதற்குத் தான் ரிசல்ட் வரட்டும் என்று சொல்லறேன்" என்று தெளிவாகச் சொன்னாள் தன் தந்தைக்கு. அதற்கு என்ன செய்வேண்டும் எல்லாத் தகவல்களும் தன் தந்தைக்குச் சொல்லிக்கொடுத்தாள்.

தாரா , தந்தையிடம் சொல்லிக்கொண்டிருக்கும் தகவல்களை எல்லாம் கேட்டதும், தாரிகாவிற்கு மனதின் ஓரம் ஒரு பயம் எட்டிப்பார்த்தது.

'நான் பாஸாகிருவேனா? ஆண்டவா நான் பாஸானால் உனக்குத் தேங்காய் உடைக்கிறேன்' என்று ரெடிமேடாக ஒரு வேண்டுதலை வைத்தாள் கணபதிக்கு.
நம்மோட கடமையைச் சரிவரச் செய்தால் கடவுளின் அருள் என்றுமே நமக்குத் தானே.

அடுத்த நாள் ரிசல்டிற்காகக் காத்திருத்தனர் வீட்டில் இருக்கும் அனைவரும்.

இந்த முடிவுகள் எப்படி வரும் என்ற அனுமானம் மகேந்திரனுக்கு இருந்ததால் அவன் தன் கடைக்குச் சென்று விட்டான்.
தங்கம் தான் காலையிலேயே கோயில் சென்று தன் அண்ணன் மக்கள் இருவரும் நல்லவிதமாகத் தேர்ச்சிப் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிராசாதத்தைக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார்.

தாரா எப்பொழுதும் போல எந்தப் பதட்டமும் இல்லாமல் நிதானமாக இருந்தாள். தேர்வு எழுதும் வரைத்தான் அவள் போராடுவாள், எழுதி முடித்தப்பின் என்ன எழுதி இருக்கோமோ அதற்கான மதிப்பெண் நம்மை வந்து சேரும் எனபதில் தெளிவாக இருந்தாள்.

தாரிகா, பதட்டமாகவே இருந்தாள். இந்தத் தடவைக் கடந்த பத்தாம் வகுப்பின் முடிவுகளை விட நல்லவிதமான மதிப்பெண் வரவேண்டும் என்று இஷ்ட தெய்வங்களுக்கு எல்லாம் வேண்டினாள்.

மதிப்பெண் வந்தது. எப்பொழுதம் போன்றே தாரிகா, குறைவான மதிப்பெண் எடுத்துப் பாஸாகியிருந்தாள்.

அவளின் கல்லூரிக்கனவில் விரிசல் விழுந்தது. நினைத்த க்ரூப் கிடைக்கும் என்பது சந்தேகம் என்று கங்காதரன் முடிவுச்செய்தார். தாரா நல்ல மதிப்பெண் எடுத்துதிருந்தாள். அதற்கு அவள் எதிர்பார்த்தக் கல்லூரியில் பொறியியல் படிப்பிற்கான வகுப்புக் கிடைக்கும்.

மிகவும் சந்தோஷமான மனநிலையில் முழுவதுமாகக் கொண்டாட முடியாமல் தவிக்க வைத்தது பெற்றவர்களை. தாரிகாவால் என்ன முடியுமோ அந்த மதிப்பெண் எடுத்து இருந்தாள். அவளைக் குறைச்சொல்லவும் இல்லை.

பெற்றவர்களுக்குத் தன் பிள்ளைத் தேர்ச்சி அடைந்ததே பெரிய சந்தோஷம் என்று நினைத்தனர். தாரிகாவின் மதிப்பெண் அவர்களை எப்படித் தனித்தனித் கல்லூரியில் படிக்க வைக்க எனச் சிந்திக்கத் தொடங்கினர் பெற்றோர்.

பிறந்ததில் இருந்து பள்ளிப் படிப்பு வரை ஒரே பள்ளி, ஒரே வகுப்பு என்று படித்து வந்த இருவரும். இப்போது தனித்தனியாகப் படிக்கச்செல்ல வேண்டும் என்பதில் பயம் வந்தது பெற்றவர்களுக்கு. தாரிகாவை எப்படித் தனியாக அனுப்பவ என்று சிந்தித்தனர். தேர்ச்சி பற்றி அறிய ஃபோன் செய்த மகேந்திரனிடம் இதைப் பற்றிக் கேட்டார், கங்காதரன்.

"என்ன மகேந்திரா, பண்ணலாம் இப்போ தாரிகாவை வேறு காலேஜ் சேர்த்துவதா? உனக்கு என்ன தோன்றுகிறது சொல்லு" என்று கேட்டார் அவன் மாமன்.

அவர்கள் ஊரில் இருக்கும் பெரிய கல்லூரியின் பெயரைச் சொன்னவன்," இந்தக் காலேஜில் தாரிகாவை ஆர்ட்ஸில் சேர்த்திட்டு, தாராவிற்குப் பொறியியலில் சேர்த்தி விடுங்க மாமா, அப்பொழுது ஒரே காலேஜ் போவாங்க" என்றான் மகேந்திரன். தன் மாமனுக்குச் சுலபமாக ஆலோசனை வழங்கினான்.

"ம்ம் நீ சொல்லறதும் சரிதான் மருமகனே" என்றவர் கல்லூரியில் சேர்க்க வேண்டிய வேலைகளைத் தொடங்கினார்.
கல்லூரி வாழ்க்கையைத் திசைத்திருப்பும் இடமாக இருவருக்கும் அமையும் என்று கனவிலும் சிந்தித்து இருக்க மாட்டார்கள். காலம் கற்றுத் தரும் பாடத்தை வலிக்க வலிக்கக் கற்கப் போவது இரண்டு பேரில் யாரெனப் புதிரோடு அவர்கள் கல்லூரிப் பயணம் தொடங்கியது.

தொடரும்…
 
மலர் – 2
எதுவும் எழுதாமல் வைத்திருக்கும் கரும்பலகையான என் மனதில்,
அழியாத காவியமாக நீ எழுதும் காதல் ...
கீர்த்தனையாக ஒலிக்கும் நம் வாழ்வில்...

கல்லூரி என்பது பூந்தோட்டம் அதில் பல வர்ணத்தில் மலரும் மலர்கள் போன்றவர்கள் மாணவ மாணவியினர்.

தங்கள் வாழ்க்கையில் பல வர்ணஜாலங்களைப் படைக்கும் கல்லூரி வாழ்க்கை, மாயாஜாலம் போன்று கண் மூடித் திறப்பதற்குள் பல விந்தைகளைப் படைத்து மறைந்து விடும்.
அதன் தடங்கள் அழகானாதாக இருந்தால் வரும் காலம் சந்தோஷமாக இருக்கும் . துயரமாக இருந்தால் அதன் தடங்களின் தடயங்கள் ரணங்களாக இருக்கும்.

எந்தக் கவலையும் இல்லாமல் தன் வலதுக் காலை எடுத்து வைத்தாள் தாரிகா. அந்தக் கலைக்கல்லூரியில் எல்லாம் மேல் தட்டு மக்களே இருந்தனர். அதனால் அவளுக்கும் அவர்களைப் போன்று மாறா மனம் உந்தியது. முதல் நாளே அவளுக்கு எல்லாம் அதிசயமாக இருந்தது.

"தாரா, பாரேன் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்காங்க , பேசாமல் நானும் இப்படி டிரஸ் எடுத்து இருக்கலாம்" என்று எதிரே சென்ற பெண்ணின் ஆடையின் அழகில் மயங்கிவாறே கூறினாள்.

"அவங்களுக்கு நல்லா இருக்கும் தாரிகா, நமக்குச் செட் ஆகணும் இல்லையா, அதனால் பார்த்து அப்பறம் எடுக்கலாம்" என்று அவளைத் திசைத் திருப்பினாள்.

"ஆமா ஆமா, சொன்னதும் நீ ஓகே சொல்லிட்டாலும், சரியான பாட்டி தான் நீ , உன்னோட காலேஜில் இன்னும் செமயாக இருப்பாங்களாமாடி எல்லாம் பசங்களும், நான் கேள்வி பட்டேன் டி, என்ன பண்ண எனக்கு இது தான் யோகம் போல, பரவாயில்லை உன்னைப் பார்க்க அடுக்கடி அங்கே வருவேனே" என்றாள் சிறு பிள்ளைப் போல.
தாரிகாவின் ஆர்வமும் அவளின் உற்சாகமும், கல்லூரியில் ஜாலியாக இருக்கலாம் பள்ளியில் படித்தது போன்று கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் என்றெல்லாம் கனவுக் கண்டிருந்தாள்.
அதை நன்றாக உணர முடிந்தது தாராவிற்கு.

அவளின் கல்லூரியில் சேர்த்தியதும் தாராவின் கல்லூரிக்கு வந்தனர்.

அங்கே பார்த்ததும் தெரிந்தது. மிகவும் கண்டிப்பும் படிப்பும் அருவியாக ஒடுவது போல் ஒரு மாயை உணர்ந்தாள் தாரிகா. 'நல்ல வேலை நாம ஆர்ட்ஸ் எடுத்தோம்' என்று நூறாவது முறையாகத் தனக்குத் தானே சொல்லுக்கொண்டாள்.

எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் தாராவின் சேர்க்கையை உறுதிச் செய்தனர்.

பின்னர் அவர்களுக்குத் தங்குவதற்குத் தனியாகத் தங்கும் விடுதிப் போன்று வாடகைக்கு ஒரு வீடு எடுத்தனர். அப்பொழுதுத் தான் அடிக்கடி வந்து பிள்ளைகளோடு தங்கிப் பார்த்துக்கொள்ள முடியும் என்று எண்ணினர் கங்காதரன் தம்பதியினர்.

இதெல்லாம் கூட இருந்து பார்த்துக்கொண்டான் மகேந்திரன்.

தங்கும் வீட்டில் இருவருக்குத் தேவையான வசதிகள் பார்த்துப் பார்த்துச் செய்துக்கொடுத்த பெற்றோரைப்பார்த்து மனதில் இவர்களுக்காகவே நன்றாகப் படித்துப் பெரிய அளவில் வரவேண்டும் என்று உறுதி எடுத்தாள் தாரா.

நாம் நினைப்பதெல்லாம் நடக்கத்தான் விட்டு விடுவான நம்மைப் படைத்தவன். அவனுக்குப் போர் அடிக்கும் போது, அவன் விளையாடுவதே நம் வாழ்க்கையில் அல்லவா.

இருபாலரும் படிக்கும் முறையைக் கொண்டு வந்ததே ஆண், பெண் இருவரும் எல்லா விதத்திலும் சமம். நமக்குள் பேதமில்லை என்று உணரவைக்கத் தொடங்கியது. பேதமின்றிப் பழகினர் தான்.. ஆனால் காதலின் பிறப்பிடம் கல்லூரி... அங்குத் தான் தங்கள் மனம் துணையைத் தேடும். காதலும் பேதமின்றி வலம் வந்தது.


கல்லூரியின் முதல் நாள் தாரிகாவிற்கு. பொறியியல் துறை என்பதால் தாராவிற்குக் கல்லூரித் திறக்க இன்னும் நாட்கள் இருந்ததால் அது வரை தங்கள் வீட்டில் இருந்தே தாரிகா, தனியாகச் சென்று வந்தாள் கல்லூரிக்கு. அவர்கள் எடுத்த வாடகை வீட்டிற்குத் தாராவோடு போனால் போதும் என்று கூறிவிட்டாள் அவள் அம்மா. தாரிகாவை, தனியாக விட்டாள் சரியாகாது என்ற பயம் புனிதாவிற்கு மனதில் இருந்தது .

தங்களுடைய அறையில் தயாரிக்கொண்டிருக்கும் தாரிகாவைப் பார்த்ததும், " தாரு, உன்னோட காலேஜ் ரொம்ப ஜாலியாக இருக்கும் நினைக்கிறேன் . உன்னோட காலேஜ் லைஃப் என்ஜாய்ப் பண்ணிக்கோ, அட் தி, சேம் டைம் உன்னோட படிப்பிலும் கவனம் இருக்கணும். பிரென்ட்ஸ் பார்த்துச் செலக்ட் பண்ணு டி, எந்தச் சிக்கலிலும் போய்ச் சிக்கிறாத, இது நம்ம ஸ்கூல் இல்லை , நம்ம மேல் தப்பு இருந்தாலும் கெத்தாகப் போய் மிரட்டி அவங்கள ஏமாத்த, பார்த்து நடந்துக்கோடி" என்று அறிவுரைக் கூறினாள் தாரா.

ஆரம்பிச்சுட்டா என்று மனதில் புலம்பியவள் அவள் அருகே வந்து " ரொம்பப் பயபடாதே தாரா, எனக்குத் தெரியாதா ஸ்கூல் போன்று இருக்காதுக் காலேஜ் " என்றாள்.

"ம்ம் நீ நல்ல பிள்ளை என்று தெரியுமே.. ஆனால் இந்த மேக்கப் கொஞ்சம் அதிகம் தானடி" என்று கேலிச் செய்தாள் தாரா.

"அப்படியா, சொல்லற" என்று மீண்டும் கண்ணாடி முன் போய் நின்றவள், "ஆமாம் இந்த இதழில் அடித்த சாயம் கொஞ்சம் தூக்கலாக இருக்கு, இதற்குப் பதிலாக வேற டல் கலர்ப் போட்டுக்கிறேன்" என்று அதை மாற்றியவள் கல்லூரிக்குக் கிளம்பினாள்.

தாரிகாவிற்குக் கட்டுப்பாடோடு வளர்ந்ததால் கல்லூரி அவளுக்குச் சுதந்திரப் பூமியாகத் தோன்றியது. தன் வகுப்பில் இருக்கும் எல்லோரையும் வியப்பாகப் பார்த்தாள். வேக வேகமாகத் தங்கள் நட்புகளை உருவாக்கி ஆனந்தமாக வலம் வரும் இந்தக் கல்லூரி வளாகம் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மிதப்பது போன்ற ஒரு தோற்றம் அவள் மனதில் உண்டாகியது.

நட்போ காதலோ அங்கே எல்லாம் வேக வேகமாக நடந்தேறிக்கொண்டிருந்தது. இதையெல்லாம் பார்த்த மிரண்டுப்போனாள் தாரிகா என்றால் தவறு.
அவள் இதெல்லாம் சாதரணமாக எடுத்துக்கொண்டாள். இந்த மாறி வரும் காலக்கட்டத்தில் ஆண் பெண் நட்பு அதன் எல்லையில் இருந்தால் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தாள். எல்லை எது என்பதுதான் இங்குப் பிரச்சனை.

எல்லாம் அழகாக மாற‌த்தொடங்கியது தாரிகாவிற்கு…
கனவும் கல்லூரியும் இணைந்தே பயணித்தது அவளுக்கு…

மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்…

அதில் அவளுடைய முறை வந்ததது…
என்ன செய்வது எனச் சில நொடிகள் தயங்கியவள் பின்னர் அழகான‌ப் பாடலைப் பாடினாள்…

“மழை அழகா…
வெயில் அழகா…
கொஞ்சும் போது மழை அழகு…
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு”
என்ற தன் குரலில் அழகாகப் பாடினாள்…
அவளது குரல் இனிமையாக இருந்தது என்பதைக் காட்டிலும் அவள் பாடிய இந்த வரிகள் அவள் குரலில் அழகாக இருந்தது…

இந்தப் பாடலைக் கேட்ட, பல மாணவர்கள் யாரிவள் தேவதை என்று ரசித்தனர்…

நவநாகரீக அழகு என்று இல்லாமல் நிதானமான அழகு அவளிடம் இருந்தது…

அவள் முகத்தில் இருக்கும் ஒப்பனை இங்கிருந்த பெண்களுடன் ஒப்பிட்டதில் குறைவாக இருந்ததாக உணர்ந்தாள் தாரிகா… அதுவே அவளை மிகவும் அழகாகக் காட்டியது உணரவில்லை தாரிகா.
அன்றைய முடிவில் நளினி அவளுக்குத் தோழியாகக் கிடைத்தாள.

கல்லூரியில் தாரிகாவின் வகுப்பைச் சேர்ந்த சதீஷ் அவள் பாடலில், அழகில் மயங்கி அவள் யாரென விசாரித்துக்கொண்டிருந்தான்.

அவனும் இந்தக் கல்லூரிக்குப் புதியவன் என்பதால், அவள் யாரெனக் கண்டு பிடிக்க முடியவில்லை, இங்கே தானே வருவாள் கண்டுப்பிடுத்து விடாலம் என்று வகுப்பறைக்கு வந்தவனுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது. அவன் வகுப்பில் நிலவென வீற்றிருந்தாள். அவளைக்கண்டதும் சதீஷ்ற்கு, காதல் அலைவரிசைப் பண்ணிசைத்தது.

நளினியும் அவளும் ஓரே ஊர் என்றாலும் அவ்வளவு பழக்க மில்லை இந்தக் கல்லூரியில் தான் அவளைப் பார்த்து நட்புக்கொண்டாள் தாரிகா. இருவரும் சேர்ந்தே பஸ் ஏறித் தங்கள் ஊருக்கு வந்தனர். அதில் அவர்கள் நட்பு நல்ல இறுகிப் பிணைத்தது இந்தப் பேருந்துப் பயணம்.

நாட்கள் அதன் போக்கில் பயணிக்கக் கல்லூரி வாழ்க்கை அதிகம் வகுப்பறையில் கழிந்தது. தாரிகாவோ நளினியிடம் எதையோ மிகவும் சுவாரிசியமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசும் போது அவள் முகம் காட்டும் அபிநயங்களில் வீழ்ந்துக்கொண்டிருந்தான் சதீஷ்.

சதீஷ், பெரிய செல்வந்தரின் வீட்டு இரண்டாம் வாரிசு... அவனுக்குக் கவலை என்பது எதுவும் அறியாமலேயே வளர்ந்து வந்தவன். அவனுக்கு வேணும் என்று நினைத்தாலே அதைச் செயல் படுத்திவிடும் அளவுக்கு அவன் மேல் பாசம் வைத்திருக்கும் அண்ணனுக்குத் தம்பியாகப் பிறந்தவன் சதீஷ். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தம்பிக்குத் தந்தையாக இருந்து அவனைத் தன் பிள்ளையெனப் பாசம் காட்டி வளர்த்தினான் அவன் அண்ணன்.

தாயின் சிறகில் இவ்வளவு காலம் இருந்தவனுக்குத் தனியாகக் கல்லூரியில் படிக்கும் போது கொஞ்சம் சிறு பிள்ளைத் தனம் மாறி, வரும் காலங்களில் பொறுப்பாக இருப்பான், அதே போன்று வெளி உலகம் அவனுக்குக் கற்றுத்தரும் அனுபவம் தொழிலில் துறையில் அவனுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து அவனை இந்தக் கல்லூரியில் சேர்த்தி இருந்தான் அவன் அண்ணன்.

அண்ணன் நினைத்தது நடக்குமா என்பது கேள்விகுறித்தான்... ஆனால் அனுபவம் அவனுக்கு ஏற்பட்டது.. அது தன் அண்ணன் நினைத்தது போன்றில்லாமல் அவன் இளமைக்கால அனுபவம் தான் கற்றுக்கொண்டான் சதீஷ்.

காதல் அவனை ஆளுவதால் காணும் எல்லாம் அழகாகச் சதீஷ்ற்குத் தோன்றியது.
எப்படியாவது தாரிகாவோடு நட்பை ஏற்படுத்தி மெல்ல மெல்ல அவளிடம் தன் காதலைச் சொல்லி விடாலம் என்று மனதில் நினைத்தவன், அதற்கு முதலில் நளினியின் நட்பை நாடினான்.

நளினியிடம் அவன் நட்பை உருவாக்கினான். அவர்கள் நல்ல நண்பர்காளாக வலம் வந்தனர். அவர்கள் நட்பைப் பார்த்துக் ஒரு கட்டத்தில் தாரிகாவிற்கே அவனோடு 'ப்ரென்டு' என்று கைக்கலுக்கத் தோன்றியது. இதைத் தானே எதிர்ப்பார்த்தான் அவனும்.

"நளினி, சில நோட்ஸ் எல்லாம் எதைப்பார்த்திப் படிக்கிறாய்" என்று கேட்டாள் தாரிகா.

"அதெல்லாம் எனக்குக் கவலையே இல்லையடி, அதெல்லாம் சதீஷ் தருவான், அவன் அழகாக எக்ஸ்பிளைன் பண்ணித் தருவான் டி" என்றாள்.

"ஆமாம் என் கூடத்தானே சுத்திட்டு இருக்க அப்பறம் எப்படிச் சொல்லித்தாரான் நான் பார்த்தே இல்லை" என்றாள் தாரிகா.

"தினமும் நாங்க ஃபோனில் பேசிப்போமடி, அப்போ நான் எனக்கு இருக்கும் சந்தேகமெல்லாம் கேட்டுப்பேன், அதே போல நாங்க வீக் எண்டு அருகே இருக்கும் மாலுக்குப் போனோம், அவன் அவ்வளவு பாதுகாப்பாகக் கூட்டிப்போனான். பயமே இல்லாமல் நானும் கூடப் போனேன்" என்றாள்.

"உங்க வீட்டில் திட்ட மாடாடங்காளாடி" என்றாள் பாவமாக.

"அவன் என்ன விட எங்க அம்மாவிடம் நல்ல பேசுவான் செம க்ளோஸ் இரண்டு பேரும். அவன் தான் இப்படிப் போகலாம் வாங்க அம்மா கூப்பிட்டான்" என்றான் அம்மா தான் நீங்க போய்ட்டு வாங்க என்று அனுப்பி விட்டாங்க" என்றாள் நளினி.

நளினியின் கூற்றில் எந்தப் பயமும் இல்லாமல்பழகக் கூடிய நல்ல தோழன் சதீஷ் என்று மனதில் நினைத்தாள்.

நாட்கள் அதன் போக்கில் போகச் சதீஷிடம் நட்புடன் கைக்கோர்க்கும் நாளும் வந்தது தாரிகாவிற்கு.

கல்லூரியின் வேலை நாட்களிலேயே இடையில் ஒரு நாள் கல்லூரி எதிர்பாரவிதமாக லீவ் விட்டது. எல்லாம் வெளியே போகத் திட்டம் இட, இந்த மூவரணியும் வெளியேப்போகலாம் என்று முடிவுச்செய்தனர்.

அதேப்போல் கிளம்பிப் போயினர். நல்ல ஜாலியாகச் சென்றது அவர்கள் விடுமுறை. மூவரும் சுற்றிக்கொண்டிருக்கும் கொஞ்ச நேரத்தில் நளினிக்குப் போன் கால் வந்தது.

" ஹாலே, என்னம்மா என்ன ஆச்சி" என்று பதட்டமாகக் கேட்டாள்.

கால் வழுக்கிக் கீழே விழுந்துட்டேன் அது தான் உன்னைக் கூப்பிட்டேன் கொஞ்சம் வர முடியுமா? அப்பாக்கு வேலைக்கு இருக்கு இப்ப வர முடியாது சொன்னாரு என்றாள் நளினியின் தாய்.
அதைக்கேட்டதும் சரிம்மா இப்பவே வரேன்" என்றவள், தாரிகா மற்றும் சதீஷிடம் "நீங்க என்ஜாய், பண்ணிங்க நான் அம்மாவைப் பார்க்கப் போறேன்" என்றாள்.

"இல்லை நளினி நாங்களும் வரோம்" என்றவன் இருவரையும் தன் இரு சக்கர வாகனத்தில் அமர்த்தி அவளோட வீட்டிற்குக் கூட்டிச்சென்றான்.

தாரிக்காவிற்கோ, எல்லாம் அவளை மீறி நடப்பது போன்று தோன்றியது. நேரம் மாலை ஆகியதால் வீட்டிற்கு வேறு செல்ல வேண்டும் என்ற பயமும் அவளை வாட்டியது. தன் தோழியின் இக்கட்டான சூழல் தெரிந்ததாதல் அதை வெளிக்காட்டமல் இருந்தாள்.


நளினியின் தாயை மருத்துவமணைக்கு அழைத்துச்சென்று, எல்லாம் பார்த்து அவர் காலுக்கு மருந்து இட்டு,அவர்களை ஆட்டோ ஒன்றில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி விட்டான் சதீஷ்.
அவன் அக்கறையில் மனம் நெகிழ்ந்தது என்னமோ தாரிகா மட்டுமே.

நல்ல நண்பன் இவன் என்று மனதில் பூரித்தாள்.

அவர்கள் சென்றதும். "நான் இங்கேயே எதாவது ஆட்டோ பிடித்து வீட்டுற்கு போகிறேன், ஏற்கனவே லேட் ஆச்சு" என்று பயந்தாள் தாரிகா.

"ம்ம் ஆமாம் வா, நானே உன்னை விட்டறேன்" என்றவன் அவள் அனுமதிக் கேட்காமலேயே, ம்ம் வண்டியில் ஏறு" என்றான்.

என்ன செய்ய என்று தயங்கியவளின் முகம் பார்த்து "உன்னை நான் எதுவும் பண்ண மாட்டேன், வா இப்படியே யோசித்துட்டு இருந்தால் இன்னும் நேரம் தான் ஆகும். உன்னைத் தனியாக அனுப்பவும் பயமாக இருக்கிறது, அது தான் சொல்லறேன்" என்றான் சதீஷ். அவன் கூற்றில் இருந்த உண்மையில் அவனோடு அவன் வண்டியில் ஏறினாள் தாரிகா.

மனம் முழுவதும் காதலோடு அவளைத் தன் பைக்கில் இருத்தி, கூட்டிச்செல்லும் இந்தப் பயணத்தை மிகவும் ரசித்தான் சதீஷ்.

உரசாதத் தோளுகளும்
பேசாத இதழ்களும்
தொடாதக் கரங்களும்
இணையாத இதயங்களும்
ஒன்றாகப் பயணிக்கும்
இந்தப் பயணமும்...

தொடரும்...
 
Top