எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 35

Privi

Moderator

வெய்யோன் யாருக்கும் காத்திராமல் அவன் கடமையை செய்ய காலையிலே புலர்ந்து விட்டான். கோவிலில் எளிமையாக அலங்காரங்கள் மின்ன, ஏணையர்கள் முகத்தில் சந்தோசம் ஜொலித்திட... மணமகன் அறையில் மாப்பிள்ளை தீர்க்கமாக அமர்ந்திருக்க, மணமகள் அறையில் பெண் பதத்தட்டோடு அமர்ந்திருக்க, அய்யர் முதலில் மாப்பிள்ளையை அழைக்க, மச்சினன் துணையிடு மாப்பிள்ளை கல்யாண மேடை ஏறி வர, சடங்குகள் இனிதே ஆரம்பமானது.​

மாப்பிள்ளை சடங்குகள் முடிய அய்யரோ "பெண்ணை அழைச்சிண்டு வாங்கிகோ" என குரல் கொடுத்தார்.​

முன்னே கையில் பூச்செண்டோடு பட்டு பாவாடை மின்ன மகிழினி நடக்க, அவளுக்கு பின்னால் ஐந்து பெண்கள் இரு இரு பெண்களாக வரிசையில் நின்று விளக்குகளை ஏந்தி கொண்டு நடக்க அவர்களுக்கு பின்னால் மணப்பெண் தோழி கையை பிடித்துக்கொண்டு மணப்பெண்ணுக்கே உரித்தான வெக்கத்தோடு உமையாள் நடந்து வந்தாள், மணமேடை ஏற...​

அவள் நடந்து வருவதை கண்களில் கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்தான் நீலகண்டன். தமக்கையின் வாழ்வு சீராகப்போகும் மகிழ்ச்சி அவனுக்கு. மேடை ஏறி ருத்ரனின் அருகில் அமர்த்தாள் உமையாள்.​

உறவுகள் சூழ்ந்து நிற்க படபடப்புபுடன் ருத்ரனை பார்க்க, அவனோ ‘நான் இருக்கிறேன்’ எனும் விதமாக கண்களை மூடி திறந்தான். அவன் அருகினில் மகிழினி நிற்க, அவளை அழைத்து அவன் மடியினில் அமர்த்திக்கொண்டான்.​

இதனை பார்த்த பார்வதி அம்மாவுக்கும் , கமலம் அம்மாவிற்கும் மன மகிழ்ச்சியாக இருந்தது. சிறிது நேரத்தில் ஐயர்​

"கெட்டி மேளம்.... கெட்டி மேளம்....” என கூற நாதஸ்வரமும் மேளமும் இசைக்க அய்யர் திருமாங்கல்யத்தை எடுத்து ருத்ரன் கையில் கொடுத்தார். திருமாங்கல்யத்தை கையில் வாங்கி இன்னும் ஒரு முறை அவள் சம்மதத்தை எதிர்பார்த்து அவள் கண்களை பார்த்தான்.​

அவளும் அதனை புரிந்த்து கொண்டு “சம்மதம்” என கண்களை மூடிந்திறந்தாள். அவள் கண்களையே பார்த்து மணமகன் சத்தியம் அதாவது​

கண்ணே கனியே உன்னை கைவிட மாட்டேன்​

சத்தியம் சத்தியம் இது சத்தியமே !​

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே​

சத்தியம் சத்தியம் இது சத்தியமே !​

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே​

தூய்மையான என் சத்தியம் புனிதமானது…​

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன் !​

பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன் !​

செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன் !​

நெற்றிப்பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன் !​

கைப்பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்கு கேளேன்…​

ஒவ்வொரு வாதம் முடியும் போது உன்னிடம் தோற்பேன் !​

நாத மலர்ச்சி மலரும் வயதில் மார்பு கொடுப்பேன் !​

நோய்நொடியுடன் நீ விழுந்தால் தாய்மடியாவேன் !​

சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன் !​

உந்தன் உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன் !​

உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன் !​

உன் வாழ்வு மண்ணில் நீல என்னுயிர் தருவேன் !​

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே​

தூய்மையான என் சத்தியம் புனிதமானது…​

என அவள் கண்களை பார்த்து கொண்டே மனதிற்குள் இவை அனைத்தையும் சொல்லி சத்திய பிரமாணம் செய்துகொண்டே அவள் கழுத்தில் இரண்டு முடிச்சினை போட்டான்.​

மூன்றாவது முடிச்சிக்கு கயல் கை நீளும் பொழுது அதனை தடுத்தவன், "அந்த முடிச்சியையும் நானே போடுறேன்" என கூறி அவனே முடிச்சிட்டான்.​

ஏனோ இப்போது உமையாள் கண்களில் கண்ணீர்... அவள் நெற்றில் குங்குமம் வைக்க திரும்பியவன், அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டு அவள் கண்ணீரையும் துடைத்து விட்டான். 'அழாதே' என கண் அசைவிலே கூறினான்.​

அவளும் மெலிதாக புன்னகைத்து விட்டு "சரி" என தலையாட்டினாள். எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் முடிந்து மணமக்கள் பார்வதியின் இல்லத்திற்கு சென்றனர்.​

பார்வதி அம்மா மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து சென்று விளக்கேற்ற வைத்தார். சிறிது நேரம் பேசிவிட்டு நீலன் அவன் வீட்டிற்கு செல்ல ஏதனித்தான்.​

ருத்ரனும் பார்வதியும் எவ்வளவு வற்புறுத்தியும் வீட்டிற்கு செல்வதில் உறுதியாக இருந்தான். செல்லுமுன் அவன் அக்காவிடம் சென்று அவளை இறுக அனைத்து விடுவித்தான்.​

"போயிட்டு வரேன் அக்கா" என கூறினான். அவளும் கண்கள் கலங்க "சரி என தலை அசைத்தாள்.​

ஒட்டித்திரியும் அக்கா தம்பி இல்லை தான் ஆனால் அவர்கள் தாயிக்கு பின் நீலனுக்கு தாயாகத்தான் மாறியிருந்தாள் உமையாள். அருணை திருமணம் செய்த பின்னும் அவன் அவள் கூடவே தான் இருந்தான். அதன் பின்னும் இருந்தான்.​

இனி அப்படி இருக்க முடியாதே. ஆனாலும் இந்த பிரிவு அவனுக்கு மகிழ்ச்சிதான். திரும்பி மகிழை தூக்கியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு கயலுடன் வீட்டிற்கு புறப்பட்டான்.​

பார்வதி அம்மா உமையாளை சிறிது நேரம் ஓய்வெடுக்க கூறினார். மகிழினியோ ருத்ரனின் கையை பிடித்துக்கொண்டே சுற்றி திரிந்தாள். பின்னேரம் அடுத்த சடங்குகளுக்கு பார்வதி அம்மா தயார் படுத்தி கொண்டிருந்தாள்.​

இரவு நேரம் வந்தது பார்வதி அம்மா உமையாளிடம் வந்து "உமையமா எனக்கு தெரியும் இந்த சடங்கு உனக்கு சங்கடத்தை தரும் ஆனால் நான் முறையே எல்லா சடங்குகளையும் ஏற்பாடு செய்து விட்டேன். அதை ஏற்பதும் ஏற்காததும் உங்களிடம் தான் இருக்கு." என கூறினார்.​

அவளும் தலை ஆட்டிக்கொண்டே அவள் அறைக்கு சென்றாள். அவள் அறைக்கு வந்த சிறிது நேரத்திலே மகிழினி ருத்ரனுடன் அறைக்குள் நுழைந்தாள். உமையாள் மகிழினியை பார்த்து​

"மகிழ் வா… அம்மா உன்னை தூங்க வைக்கிறேன்." என கூறினாள்.​

அதற்கு அவளோ "மா அப்பா என்னை கதை சொல்லி தூங்க வைக்க போறாங்க..." என சொல்லி அவனுடன் ஒட்டி படுத்து கொண்டாள்.​

உமையாளோ மகிழை பார்த்து "சரிதான் போடி" என கூறி முதுகு காட்டி படுத்து கொண்டாள். ருத்ரன் வாய் விட்டே சிரித்து விட்டு மகிழுக்கு கதை சொல்ல ஆரம்பித்து விட்டான்.​

நள்ளிரவு தாண்டிருக்கும் உமையாளுக்கு தாகம் எடுக்க தண்ணீர் குடிக்க எழுந்தாள். அப்போது பக்கத்தில் படுத்திருக்கும் இருவரையும் பார்த்தாள். மகிழ் ருத்ரனின் நெஞ்சில் படுத்திருந்தாள்.​

ருத்ரன் மகிழின் தலையில் கை வைத்து அவளை அரவணைத்து படுத்திருந்தான். உமையாளின் மனதில் நிம்மதி உணர்வு. இனம் புரியாத மகிழ்ச்சி. கிடைக்க பெறாது என நினைத்த தந்தியின் அன்பு இப்போது அவள் மகளுக்கு கிடைத்து விட்டதே.​

தண்ணீர் குடித்தவள், பின் அவர்களை பார்த்து கொண்டே அவர்கள் அருகினில் படுத்து கொண்டாள். படுத்த உடனே உறங்கியும் போனாள். மறுநாள் காலையில் ருத்ரன் கண் விழித்த பொது மகிழ் அவன் மீது படுத்திருந்தாள்.​

உமையாள் இடம் காலியாக இருந்தது. ருதரனோ " எழுந்துட்டா போல" என கூறிக்கொண்டு மகிழின் தலையில் முத்தம் ஒன்றை பதித்து விட்டு அவளை அவன் மேலிருந்து தூக்கி மெத்தையில் படுக்க வைத்தான்.​

தன்னை சுத்தப்படுத்தி கொண்டவன், பூஜை அறைக்கு சென்று முருகனை வணங்கினான். பின் சமையலறை பக்கம் சென்றவன் அங்கு சிரித்து பேசிக்கொண்டே சமையல் செய்து கொண்டிருந்த பார்வதியையும் உமையாளையும் பார்த்தான்.​

அவர்களின் சிரிப்பு அவனுக்கு நிம்மதியை அளித்தது. அவன் கண்கள் உமையாளை ரசிக்கவும் தவறவில்லை. இப்படியே அவர்கள் வாழ்க்கை அமைதியாக இரண்டரை மாதத்தை கடந்திருந்தது. அன்று மகிழினியை பாலர் வகுப்பில் சேர்க்கும் நாள்.​

காலையிலேயே எழுந்து மகிழினியை தயார் படுத்தியவள் பின் அவளும் தயாராகி ருத்ரானுக்காக காத்திருந்தாள். ருத்ரனுக்கு காத்திருக்கும் வேளையில் பார்வதி அம்மா மகிழுக்கு காலை உணவை ஊட்டி விட்டார்.​

அவர்களை வெகு நேரம் காக்க வைக்காமல் ருத்ரனும் சீக்கிரமே தயாராகி வந்தான். பின் மூவரும் பாலர் பள்ளிக்கு புறப்பட்டனர். பள்ளியில் வடிவம் ஒன்றை கொடுத்து அதை பூர்த்தி செய்ய சொன்னார்கள்.​

அதில் மாணவர் பெயர் எனும் இடத்தில் உமையாள் "மகிழினி ருத்ரன்" என எழுதியிருந்தாள். ஆம் ருத்ரன் மகிழினியை சட்டபூர்வமாக தத்தெடுத்து விட்டான். எந்த ஒரு காரணத்திற்காகவும் அவளுக்கு உண்மை தெரிய கூடாது என்று இருவரும் நினைக்கிறார்கள்.​

மகிழினி ருத்ரனின் நேருக்கமும் அதிகரித்து விட்டது. இப்போதெல்லாம் உமையாளை கழட்டி விட்டுட்டு ருத்ரனும் மகிழினியும் ஊர் சுற்ற தொடங்கி விட்டனர்.​

எவ்வளவு வேலை இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துக்காக செலவழிப்பான் ருத்ரன். பார்வதிக்கு புரிந்தது இன்னும் உமையாளும் ருத்ரனும் அவர்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க வில்லை என்று இருப்பினும் இருவர் முகத்திலும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை.​

கால போக்கில் அவர்கள் வாழ்க்கையும் மாறிவிடும் என திர்கமாக நம்பினார் பார்வதி அம்மா. மகிழினியை பள்ளியில் சேர்த்து விட்டு இருவரும் அவர்களின் வேலைக்கு செல்ல காரில் ஒன்றாய் புறப்பட்டனர்.​

ருத்ரன் உமையாளை அவள் வீட்டில் கொண்டு விட போனான். அவள் இன்னும் தொழிலை அங்கு வைத்துதான் செய்து கொண்டு இருக்கிறாள். அதனால் தினமும் அங்கு சென்று வருவாள். நீலனும் வீட்டில் இருந்து தான் வேலைக்கு செல்கிறான்.​

ருத்ரனுக்கு உமையாளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு வளர ஆரம்பத்திருத்து. அவளை புரிந்து கொண்டு அவளுக்காக காத்திருந்தான். ஆனால் அவளிடம் தன் எதிர்பார்ப்பை ஜாடையாக கூறி கொன்டே இருந்தான். கார் அமைதியாக செல்கிறது என்று ருத்ரன் கார் ரேடியோவை ஓன் செய்தான். அதில்​

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே…​

நீலம் கூட வானில் இல்லை​

எங்கும் வெள்ளை மேகமே…​

போக போக ஏனோ நீளும் தூரமே…​

மேகம் வந்து போகும் போக்கில்​

தூறல் கொஞ்சம் தூறுமே…​

என் அச்சம் ஆசை எல்லாமே​

தள்ளி போகட்டும்….​

எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே​

உன்னை சேரட்டும்….​

நான் பகல் இரவு​

நீ கதிர் நிலவு​

என் வெயில் மழையில்​

உன் குடை அழகு​

என பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது. இருவருக்குள்ளும் ஒரு வித உணர்வு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர். பின் சுதாரித்து ருத்ரன் சாலையை பார்த்து காரை ஓட்டினான். தொடர்ந்து​

கத்தாழ முள்ள முள்ள​

கொத்தோடு கிள்ள கிள்ள​

குலையோடு அள்ள அள்ள வந்த புள்ள​

முந்தான துள்ள துள்ள​

மகராசி என்ன சொல்ல​

முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ளநீ வேண்டுமே​

எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே​

என இவ்வரி வரும்போது ருத்ரன் அந்த வரிகளை அந்த ராகத்துடன் சேர்ந்து பாடினான். உடனே அவனை திரும்பி பார்த்தாள். அவனுக்கோ உதட்டில் சிரிப்பு. அவளும் சிரித்து கொண்டே மீண்டும் சாலையை பார்த்தாள்.​

ஒலி இல்லா உலகத்தில்​

இசையாக நீயே மாறி​

காற்றில் வீசினாய்​

காதில் பேசினாய்…​

மொழி இல்லா மௌனத்தில்​

விழியாலே வார்த்தை கோர்த்து​

கண்ணால் பேசினாய்​

கண்ணால் பேசினாய்….​

மீண்டும் அந்த ராகத்துடன் சேர்ந்து இந்த வரிகளை பாடினான்​

நூறு ஆண்டு உன்னோடு​

வாழவேண்டும் மண்ணோடு​

பெண் உனைத் தேடும் எந்தன் வீடு​

என அவன் பாடி முடிப்பதற்கும் அவள் வீடு வருவதற்கும் சரியாக இருந்தது.​

அவள் சிரித்து கொண்டே காரிலிருந்து இறங்க போக, அப்போது ருத்ரனோ “எனக்கு வேலை விரைவில் முடிந்து விடும். இங்கு வந்து வெயிட் பண்றேன், உன் வேலையை முடித்து விட்டு வா சேர்ந்து வீட்டுக்கு போகலாம்” என கூறினான்.​

அவளும் "சரி" என தலை அசைத்தாள்.​

மீண்டும் "ரொம்ப காக்க வைக்காதே" என இரு பொருள் பட பேசினான்.​

அவளும் அதை புரிந்து கொண்டே மெலிதாக சிரித்து கொண்டு "நான் காக்க வைக்க வில்லை... ஒதுங்கி இருந்தால் நான் ஒன்னும் செய்ய முடியாது. ஆஹ்… வீட்டுக்கு வராமல் எனக்காக வெளியே காத்திருப்பதை கூறினேன். நான் சென்று வருகிறேன்." என கூறி நீக்காமல் நடந்து சென்றாள்.​

அவனோ செல்லும் அவளை பார்த்து கொண்டே அவளின் கூற்றில் உற்சாகமடைந்தான். அவனும் விசில் அடித்து கொண்டே காரை எடுத்து கொண்டு அவன் அலுவலகத்திற்கு புறப்பட்டான்.​

வீட்டினுள் புன்னகையுடன் நுழைந்தவளை வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்த நீலன் பார்த்து​

"அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்க போல? என்ன கதை?" என ஆர்வமாக கேட்டான்.​

அதற்கு அவளோ "ஒன்.. ஒண்ணுமில்லையே" என திக்கி திணறியவள் "உனக்கு வேலைக்கு மணியாக வில்லையா? என் முகத்தை பார்த்தால் வேலைக்கு சென்று விடலாமா? கிளம்புடா வேலைக்கு." என கூறி அவள் அலுவல் அறைக்குள் சென்றாள்.​

நீலனுமே போகும் அவளை புரியாமல் பார்த்து விட்டு வேலைக்கு புறப்பட்டான். அவன் சென்ற சிறிது நேரத்தில் கயல் வேலைக்கு வந்து விட்டாள். அவளும் உமையாளின் இந்த மாற்றத்தையும் அவள் எதையோ நினைத்து திடீரெனெ சிரிப்பதையும் பார்த்து குலம்பி தான் போனாள்.​

"அண்ணி நீங்க சரி இல்லையே... அண்ணன் ஞாபகமா என்ன?" என்றாள்.​

உமையாளோ வெட்கம் தாளாமல் "போடி" என கூறி விட்டு வேலையை தொடர்ந்தாள்.​

மாலை ஆறு மணியளவில் உமையாள் வீட்டு அழைப்பு மணி சத்தம் கொடுத்தது. உமையாள் தான் கதவை திறந்தாள். வாசலில் ருத்ரன் நின்றிருந்தான். அவளை பார்த்து நான் ஒதுங்கி இல்லை இதோ வந்துட்டேன்" என கூறினான்.​

அவளோ அவனை வெக்கத்தோடு பார்க்க அவனும் வீட்டினுள் நுழைந்து கொண்டே "கிடைக்க பெறாத விஷயம் எல்லாம் இன்று கிடைக்குமோ?” என கூறினான்.​

அவள் முகம் இன்னும் சிவந்தது. தலையை குனித்து கொண்டே “இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு ஒரு பதினைந்து நிமிடம் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு வருகிறேன்.” என கூறினாள்.​

உடனே அங்கு வந்த கயலோ "அண்ணி நான் எல்லாம் சுத்தம் செய்து விட்டேன். நீங்கள் அண்ணனுடன் செல்லுங்கள். என்றாள்.​

ருத்ரனும் "போலாமா?" என கேட்டான்.​

அவளும் சரி என தலை அசைத்து, அவளின் கைப்பை எடுத்து கொண்டு ருத்ரனுடன் சென்றாள். காரில் இருவருமே அமைதியாக இருந்தனர். உமையாள் பதட்டமாக இருந்தாள்.​

அவள் உள்ளங்கை முதற்கொண்டு வேர்திருந்தது ஏசி காரிலும். கார் ஒரு இடத்தில் நிக்க அப்போதுதான் சுற்று புறத்தை பார்த்தாள்.விலையுயர்ந்த நவீன முறையில் ஒரு உணவகத்தின் முன் அவர்களது கார் நின்றது.​

விலையுயர்ந்த விளக்குகள் தொங்க விட்டு பார்ப்பதற்கே அழகாக இருந்தது அந்த உணவகம். அவள் அவனை கேள்வியாக பார்க்க, "வா... இங்க டின்னரை சாப்பிட்டு விட்டு போகலாம்." என கூறி காரிலிருந்து இறங்கினான்.​

அவளும் அவனுடன் இறங்கினாள். இருவரும் ஒன்றாய் உணவகத்திற்குள் நுழைந்தார்கள். அங்கு அவர்களுக்கென ஒதிக்கீடு செய்து வாய்த்த இடத்தில அமர்ந்தார்கள். உணவகத்தில் மங்கிய விளக்குகள் மட்டுமே ஒளிர்ந்தது.​

அவர்கள் அமர்ந்திருக்கும் மேஜையில் மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேற்கத்திய இசை மெலிதாக கேட்க அந்த சூழலே ரம்யமாக இருந்தது. ஆர்டர் செய்த உணவுகள் வர இருவரும் அமைதியாகவே உண்டனர்.​

உண்டு முடித்து விட்டு சிறிது நேரம் ஏதும் பேசாமல் இருவரும் அமர்ந்திருந்தனர். பின் ருத்ரன் "பிடிச்சிருக்கா?" என கேட்டான்.​

உமையாளோ "எது?" என மறு கேள்வி கேட்டாள்.​

"எல்லாமே தான்" என்றான் ருத்ரன்.​

பிடித்திருப்பதாக தலை ஆட்டினாள் உமையாள்.​

"என்னை?" என்று மீண்டும் கேள்வி கேட்டான்.​

அதற்கு பட்டென தலை குனிந்த உமையாள் "ரொம்ப" என்றாள். அவன் இதழ்கள் தாராளமாகவே புன்னகையை சிந்தியது. வெக்கம் அவளை பிடிங்கி தின்றது. இருவரும் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றனர்.​

வீடு சத்தம் இன்றி அமைதியாக இருந்தது. உமையாள் ருத்ரனை பார்க்க, "அம்மாவும் மகிழும் கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள். தாமதமாகத்தான் இருவரும் வருவார்கள் என கூறி கொண்டே அவளை முழுங்கிவது போல் பார்த்தான். அவன் பார்வை வீச்சை தங்க முடியாமல்​

"நான் குளித்து விட்டு வருகிறேன்.” என கூறி, அவர்கள் அறைக்கு சென்று, இரவு ஆடையை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் சென்றாள். ருத்ரனுமே அவனின் இரவு ஆடையை எடுத்து கொண்டு பக்கத்துக்கு அறையில் உள்ள குளியல் அறைக்குள் சென்றான்.​

இருவரும் ஒரே நேரத்தில் அவர்களை சுத்தம் செய்து கொண்டு வர, உமையாளை பார்த்தவுடன் ருத்ரனின் பொறுமை காற்றில் கரைந்து போனது. அவளை நெருங்கி சென்றான்.​

உமையாளுக்குமே அவனது நெருக்கம் பதட்டத்தை ஏற்படுத்தியது. நெருங்கி வந்தவன் அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தான். உமையாளுக்கோ ஒரு நிமிடம் மூச்சு நின்ற உணர்வு.​

அவள் கால் பெரு விரலை தரையில் அழுத்தி கொண்டாள். நெற்றி தொடங்கி இரு கண்கள், இரு கன்னம்என ஒவ்வொன்றாக இறங்கி கொண்டே வந்தான். அவள் இதழை தீண்டும் முன்​

"ஆரம்பிச்ச நிறுத்துவது கஷ்டம் டி... உனக்கு?" என கேட்டு அவளை பார்க்க​

அவளோ " சம்மதம்” என கண்கள் மூடி திறந்து அவள் சம்மதத்தை கூற... அவள் இதழ் தேனை ருசிக்க தொடங்கினான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக அவள் வசம் இழக்க அவளை தூக்கி கொண்டு மஞ்சத்தில் தஞ்சம் அடைத்தான்.​

ஆடைகளுக்கு விடுதலை தந்து, இருவரும் ஒருவருக்குள் ஒருவர் கவி பாட ஆரம்பித்தனர். அவளை முழுதாக ஆட் கொண்டு விட்டே தள்ளி படுத்தான் அவளவன். இது அவள் தானா என்ற சந்தேகத்திலும், வெட்கத்திலும் அவனை பார்க்காது முதுகு காட்டி படுத்து கொண்டாள் உமையாள்.​

ருத்ரன் அவளை இழுத்து அவன் மீது போட்டு கொண்டு அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான். திடீரென அவன் மார்பில் ஈரப்பதத்தை உணர்ந்து அவள் முகத்தினை துக்கி பார்க்க, அவள் கண்களில் கண்ணீர்.​

அவள் ருத்ரனை பார்த்து "என் வாழ்க்கைக்குள் வந்ததற்கும் மகிழ் வாழ்க்கைக்குள் வந்ததற்கும் ரொம்ப நன்றி" என்று கூறினாள். அவள் கண்ணீரை துடைத்து விட்டு, அவள் நெற்றியில் முத்தம் பதித்து "நீயும் மகிழும் தாண்டி என் வாழ்க்கைக்கு கிடைத்த வரமே . உங்கள எப்போவுமே என் உயிருக்கு நிகராய் காதலிப்பேன்." என கூறி மீண்டும் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்தான்.​

ருத்ரன் மீண்டும் அவள் கண்களை பார்த்து "நீ…. வேண்டுமே...' என பாட்டாக பாட, "நான் எப்போது தடுத்தேன்." என அவள் கூறி முடிப்பதற்குள் அவள் இதழ்களை சிறை செய்தவன் பின் அவளை பேச விடவில்லை. இருவரின் இல்லறமும் இனிதே தொடங்கியது.​

 
Top