Sowndharyacheliyan
Writer
வான்மழை 22:
நாட்கள் அதிவிரைவாக ஓடியது. அவரவர் அவர்களது வாழ்கையில் முன்னேற ஓடிக் கொண்டிருந்தனர்.
அன்றைக்கு வருணாவும், பேச்சியும் வெளியே சென்று வந்ததிலிருந்து, சுபாவின் அதிகாரமும், முக்கியத்துவமும் அங்கே ஆட்டம் காண தொடங்கியது.
முன்னர் போல் அனைத்தையும், அவளது கைக்குள் வைத்திருப்பதாக பெருமைபட்டுக் கொள்ள முடியவில்லை சுபலட்சுமியால். ஏனென்றால் அங்கே அவள் தான் எல்லாம் என மறைமுகமாக அவள் ஏற்படுத்தி வைத்திருந்த பிம்பம் எல்லாம் உடைய தொடங்கியிருந்தது.
அவளது முடிவிற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள், அவளிடம் ஒருமுறை கலாந்தாலோசித்து இருந்த குடும்பத்தினர், இப்போது அதே அளவு வருணாவிடமும் கேட்டு செய்ய ஆரம்பித்திருந்தனர்.
சுபாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அனைத்தும் வருணாவிற்கும் கொடுக்கப்பட்டது.
இரண்டு மருமகள்களையும் சரிசமமாக அவர்கள் நடந்த, அவையாவும் சுபாவின் கண்ணிற்கு அவளை ஒதுக்கி வைப்பதாகவே பட்டது. இதில் சுபாவின் அம்மாவின் அறிவுரைகள் வேறு அவளை பயத்திலேயே உழல வைத்திருந்தது.
இப்படி இருந்த நிலையில் தான் தைப்பொங்கல் வந்தது.
“குரு வருணாவுக்கு பொங்கச்சீரு கொடுக்கனுமேயா ஞாபகம் இருக்கா”? முனிஸ்வரி கேட்டிட,
“ம்ம் இருக்கும்மா, என்னென்னனு லிஸ்ட்டு போடுங்கம்மா வாங்கிடலாம்..”
“அதெல்லாம் மல்லிக்கிட்ட, சொல்லிட்டேன்ப்பா முன்னரே.”
“சரிம்மா, நான் மல்லிக்கிட்ட வாங்கிக்கிறேன்.”
“அப்பறம் குரு.!” என்றவர் தயங்கிட,
“என்னம்மா? சொல்லுங்க!”
“எய்யா! அதான் வருணாவோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சே, நம்ம கிருஷ்ணாக்கும், கெளரிக்கும் பரிசம் மட்டுமாவது போட்டு வைப்போமோ, பொண்ணை பெத்தவ இன்னும் எத்தனை நாளுய்யா காத்துட்டு இருப்பா. பார்வதி ஒன்னும் சொல்லலைனாலும் நம்மதானேய்யா அடுத்து நடக்கிறது பாக்கணும்.”
என்றவர் பேசும்போது மல்லிகாவும் வந்து விட்டிருந்தார்.
“ஆமாங்க, அத்தை சொல்றதும் சரிதான். நானே இதைப் பத்தி உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.” என,
“எனக்கும் இந்த யோசனை இருந்ததும்மா, ஆனா வருணா கல்யாணம் இப்போதானே முடிஞ்சது. அடுத்து பொங்கல் வேற வருதே. அதான் கொஞ்சம் யோசனையா இருந்தது, அடுத்தடுத்து விசேசம்னா உறவுக்காரங்க என்ன பேசுவாங்களோன்னு தான் தயக்கம்.”
“எய்யா குரு, உறவுசனத்துக்கு வேற வேலை இல்லை, அவிங்க பேசுறவங்க பேசிட்டோ தான் இருப்பாங்க.அதுக்காக நம்ம பிள்ளைக வாழ்க்கையை பாக்காம இருக்க முடியுமா என்ன? பொங்கலுக்கு முன்னாடி நிச்சயத்தை மட்டுமாச்சும் வச்சுக்கலாமேப்பா.”
“சரிம்மா, நான் மச்சான்கிட்ட பேசிட்டு வரேன்.” என்றவர் கையோடு கெளரியின் அப்பாவிற்கு அழைத்துப் பேசினார்.
“அம்மா! அக்காகிட்டயும் மச்சான்கிட்டயும் பேசிட்டேன். அவுங்க சரின்னு சொல்லுற மாதிரிதான் பேசுறாங்க. நம்ம நாளைக்கு வருணா வீட்டுக்கு போய்ட்டு, அவுங்ககிட்ட தகவல் சொல்லிட்டு பரிசத்துக்கு நாள் குறிச்சிட்டு வரலாம்.” என்றவர் அடுத்தவர் வேலையை பார்க்க சென்று விட,
பெண்கள் இருவரும் அவரவர் மகள்களிடம் தகவலை பரிமாறச் சென்று விட்டனர்.
செய்தியை கேட்ட நொடி துள்ளிக் குதித்து விட்டாள் வருணா.
“அம்மா, நெசமாத்தான் சொல்லுறீங்களா?”
“ஆமா வருணா, நாளைக்கு நாங்க நேர்ல வந்து முறையா சொல்லிக்கிறோம் இதை, அதுவரைக்கும் நீ ஏதும் பேசிக்காதே சரியா? நான் உன் மாமியாருக்கு போனை போட்டு நாளைக்கு வர்ற தகவலை சொல்லிடுறேன்.” என்றவர் இன்னும் பிற கேள்விகளில் அவள் நலம் விசாரித்துவிட்டு வைத்தார்.
அவர் போனை வைத்த அடுத்த நிமிடம் கெளரிக்கு அழைத்து விட்டாள் வருணா.
அதற்குள் அங்கே கெளரிக்கும் தகவல் சொல்லப்பட்டிருக்க, பிறகென்ன தோழியர் இருவர் சேர்ந்தால் பேச்சிற்கா பஞ்சம் அங்கே. இருவரது பேச்சுகளும் நீண்டது.
“வருணா! வருணா!” பேச்சியின் குரலில் அவர்கள் பேச்சு முடிவுக்கு வந்திருந்தது.
“சொல்லுங்கத்தை” என்றபடி வந்தவளை கண்டவர்,
“உங்க அப்பாம்மா நாளைக்கு வர்றாங்களாம்.உனக்கு சொன்னாங்களா?”
“இப்போதான் அத்தை சொன்னாங்க!”
“சரி, நாளைக்கு லீவு போடுறியா?”
“இல்லத்தை, அம்மா ஸ்கூலுக்கு போய்ட்டு மதியத்துக்கு மேல்தான் வருவாங்க, நானும் மதியத்துக்கு மேல் பர்மிசன் போட்டுட்டு வந்திடுறேன்.”
“அப்போ சரி, மதிய சாப்பாட்டுக்கு இங்க வர்ற மாதிரி பாத்துக்கோ” என்றவர், அவளிடம் கலந்தாலோசிக்க ஆரம்பித்தார் அடுத்த நாளின் உணவைப் பற்றி.
இதனைக் கேட்ட சுபாவிற்கு, எதற்காக அவர்களின் இந்த திடீர் வருகை என புரியவில்லை. மெல்ல அங்கிருந்து நழுவி தனதறைக்கு சென்றவள், தனது தாயிடம் விசயத்தை தெரிவிக்க,
“என்னவாம் திடீர் வருகை தராங்க?”
“தெரியலைம்மா!”
“தெரியலைன்றதை தவிர வேற என்ன தெரியும் உனக்கு?”
“அம்மா!!”
“சரி, சரி விடு நாளைக்கு நான் அங்க வரேன்.எதுக்கு வந்திருக்காங்கன்னு நாளைக்கு பாத்துக்கலாம்.”
“அப்போ அத்தைக்கிட்ட நீ வர்றதை சொல்லிடவாம்மா?”
“அதை எதுக்கு சொல்லிக்கிட்டு?”
“இங்க வருணா அம்மா நேராவே அத்தைக்கு போன் போட்டு சொன்னாங்க, அவங்க இங்க வர்றதை. இப்போ அவுங்க ரெண்டுப் பேரும் நாளைக்கு என்ன சமைக்கலாம்னு பேசிட்டு இருக்காங்க. நானும் நீ வர்றதை சொல்லிடுறேன்.”
“அது எல்லாம் ஒண்ணும் வேண்டாம்.இப்போ போய் நீ சொன்னா, என்னமோ வீம்புக்கு வர்ற மாதிரி தெரியும். நான் நாளைக்கு எதோச்சையா வர்ற மாதிரி வந்துக்கிறேன்.” என்றிட, அதற்கு மேல் பேசவில்லை அவள்.
பின் முகிலன் வரும் வரை பேசிக் கொண்டிருந்தவர்கள், இரவு உணவினை சமைக்க ஆரம்பித்திருந்தனர்.
உணவினை முடித்துவிட்டு அனைவரும் உறங்கச் சென்றிருந்தனர். கணவனின் கைவளைவுக்குள் இருந்த வண்ணம் வருணா, நாளை பெற்றோரின் வருகையையும் அதற்கான காரணத்தையும் கூறியிருக்க,
“பாருடா, மச்சானுக்கு கல்யாணமா?” என அவன் சிரிக்க,
“பாவம்ங்க அவுங்க ரெண்டுப் பேரும். எனக்காக தான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.”
“அதுசரி, என்னை தவிர மத்த எல்லாரும் பாவம்தான் உனக்கு. எனக்கு கொஞ்சம் பாவம் பாரு தப்பில்லை.” என்றவன் முழுவதுமாக அவளுள் தொலைய ஆரம்பித்திருந்தான்.
அடுத்த நாள் குருவும்- மல்லியும் வந்திருந்தனர். மகாலிங்கமும் பரணியும் கூட அங்குதான் இருந்தனர். மதியத்திற்கு மேல் கடைக்கு செல்லவில்லை.
“வாங்க அண்ணா, மதினி சாப்பிடலாம்!” அவர்களை அழைத்து உணவினை பரிமாறிய வேளை,
“சுபா!” என்றபடி வந்தார் அவளின் தாய் வள்ளியம்மை வந்தார்.
“அடடே! வாங்க மதினி” முத்துப்பேச்சி வரவேற்க,
“வாங்க அக்கா!” மல்லிகாவும் பேசிட,
“ம்ம்ம் ஒருவேளையா பழனி வரை வந்தேன்.அதான் சுபாவை பாக்கலாம்னு வந்தேன்.” என,
“அதுக்கென்ன, பொண்ணை பாக்க நேரம் காலம் பாக்கனுமா என்ன? வந்து சாப்பிடுங்க மதினி” பேச்சி அவரையும் உணவுண்ண அழைத்திருந்தார்.
அனைவரும் உண்டு முடித்த நேரம், வந்தான் முகிலன்.
“வாங்கத்தை, வாங்க மாமா” என முறையாக அவர்களை வரவேற்றவன்,
“வாங்க வள்ளி அத்தை” என அவரையும் அழைத்திட,
“பார்ரா! நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுறேனா முகிலா.” சிரித்தபடி அவர் நக்கலாய் இழுக்க,
“தெரியப் போய்தானே உங்களை கூப்பிட்டேனேத்தை.” அவர் போட்ட முதல் பந்தினையே நோ பாலாக மாற்றி அவரை வாயடைக்க வைத்திருந்தனர்.
“எல்லாரும் சாப்பிட்டாச்சா வருணாக்ஷி!”
“ம்ம் ஆச்சுங்க, நீங்க வாங்க சாப்பிடலாம்.”
முகிலன் உண்ண, அவனிற்கு பரிமாறியபடி வருணா நிற்க, மற்ற அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.
மகள் புகுந்த வீட்டில் பொறுப்பாளர் இருப்பதை கண்டு திருப்தியாய் இருந்தது பெற்றவர்களுக்கு.
“உங்க அம்மாவையும் அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்லை குருசாமி.” மகாலிங்கம் கேட்டிட,
“அம்மா, அக்கா வீட்டுக்கு போய்ருக்காங்க லிங்கம்.” என்றவர் அடுத்தடுத்து தொழில்களை பற்றி பேசிட, பெண்கள் குடும்ப விசயங்களை பற்றி பேசிக் கொண்டனர்.
“கிருஷ்ணாக்கு பரிசம் போடலாம்னு இருக்கோம் மதினி, அதைப் பத்தி தான் பேச வந்திருக்கோம். மாப்பிள்ளை வரட்டும்னு காத்திருக்காரு போல, வருணா அப்பா.” மல்லி கூற,
“அப்டிங்களா மதினி ரொம்ப சந்தோஷம். முகிலனும் வந்திடட்டும், அண்ணா அவரோட மாப்பிள்ளைக்கு தானே காத்திருக்காரு, இருக்கட்டும் இருக்கட்டும்.”
“பொண்ணு எல்லாம் பாத்துட்டீங்களா என்ன? ஒரு தகவலும் சொல்லலை?” வள்ளியம்மை இடைப்புக,
“என் பெரிய நாந்தனார் பொண்ணு கெளரி தான் அக்கா, முன்னரே பேசி வச்சது தான்.”
“யாரு? முகிலன் தம்பி கல்யாணத்துல வருணாக்கூட இருந்துச்சே அந்த பிள்ளையா?”
“ஆமா அவதான்.”
“அந்த பிள்ளை சரியான வாயாடியால தெரிஞ்சா, அன்னைக்கே வருணாவை விட அந்தபிள்ளை தானே அதிகம் பேசிட்டு இருந்தது. ஹான் இப்போ தான் ஞாபகம் வருது, அதான் அந்த பொண்ணு உங்க பிள்ளை பின்னாடியே சுத்திட்டே இருந்தாளா,
நான் கூட நினைச்சேன், மாமா பையானா இருந்தாலும், இந்த பொண்ணு ஏன் இப்புடி சுத்திட்டு இருக்குன்னு.” என அவர் எதோச்சையாக பேசுவது போல், நொடியில் கெளரியின் குணத்தை கேள்விக்குறியாக்கி விசத்தை கக்கிட,
கேட்டுக் கொண்டிருந்த மல்லிகாவிற்கு முகம் கசங்கி விட்டது.வள்ளியம்மை பேசிய தோரணையில்.
பேச்சி கூட ஒரு நொடி திகைத்து விட்டார் அவர் வார்த்தைகளின் ஜாலத்தில். அடுத்து அவர் பேசிடும் முன், முகிலன் வந்து விட பேச்சு தடைப்பட்டு விட்டது.
“அப்பறம் மாப்பிள்ளை வேலை எல்லாம் எப்புடிப் போகுது?” குருசாமி சம்பிரதாயமாக ஆரம்பிக்க,
“நல்லா போகுது மாமா, கிருஷ்ணாவையும் கூப்பிட்டு வந்திருக்கலாமே?”
“வந்திருக்கலாம் தான், ஆனா அவன் கல்யாணத்தைப் பத்தி தான் பேச்சுன்றப்போ, அவனை கூட்டிட்டு வர்றது சரியாப்படலை மாப்பிள்ளை அதான்.”
“அடடே! நல்ல விசயமாச்சே இது, குரு. தேதி குறிச்சாச்சா?” மகாலிங்கம் கேட்க,
“இல்லை லிங்கம், அதைப் பத்தி தான் பேச வந்தோம்.கெளரிக்கும், கிருஷ்ணாக்கும் சின்னதுலயே பேசி வச்சது. வருணா கல்யாணம் முடியிறதுக்கு தான் காத்திருந்தோம்.
அதான், அம்மா பரிசம் மட்டுமாவது இப்போதைக்கு போட்டுக்கலாம். அப்பறம் தை மாசத்துல,பொங்கல் முடிஞ்சு கல்யாணத்துக்கு பாத்துக்கலாம்னு. அக்கா, மாமாக்கிட்டயும் பேசிட்டேன். அவுங்களுக்கு சம்மதம் தான்.
சரி உங்க கிட்ட தகவல் சொல்லிட்டு, பரிசத்துக்கு தேதிய குறிச்சிடுவோம்னு வந்தோம்.”
“ஜோசியர் யாரைப் பாக்குறிங்க? மதினி?” மல்லிகாவிடம் பேச்சி கேட்க,
“நம்ம பழனிமலை ஜோசியர்தான் மதினி, அத்தை சொல்லித்தான் விட்டாங்க, இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு. உங்ககிட்ட பேசிட்டு உங்களையும், அண்ணாவையும் கூப்பிட்டுட்டு அப்படியே தேதி குறிச்சிட்டுப் போயிடலாம்னு தான் வந்தோம். ஏங்க அண்ணனை கூப்பிடுங்க.” மல்லி கணவரிடம் கண் காட்ட,
“ஆமா, லிங்கம் உங்களை அழைக்கனும்னு தான் வந்ததே, வாங்களேன், ஒரு எட்டு போயிட்டு வந்திடலாம்.”
“அதுக்கென்ன தாரளமா போகலாம்.வெயில் குறையட்டும் டீயை குடிச்சிட்டுக் கிளம்பலாம்.” என்றிட, அதன் பின் அவர்களிடம் பேசுவதற்கு அதிகம் இருந்தன.
பின், மாலை ஆனதும் தேநீரை குடித்துவிட்டு அனைவரும் புறப்பட்டனர்.
சுபா, அவளின் அம்மாவை தவிர.
பரணி கடையில் இறங்கி கொள்வதாக சொல்லி உடன் செல்ல, பெண்ணையும், மாப்பிள்ளையையும் குருசாமி அழைத்திருக்க, அங்கே வள்ளியம்மையை அழைக்க ஆளில்லாமல் போனது.
மல்லாகவிற்கு அவரையும் கூப்பிடும் எண்ணம் தான், ஆனால் அவர் சற்று முன்பு, பேசிய பேச்சில் அவரை கூப்பிடும் எண்ணத்தை கைவிட்டிருந்தார். ஏனோ, அவரிடம் இருந்து சற்று விலகி இருப்பதே நல்லது என அவரின் உள்மனம் அரற்றியதில், அதை கடைபிடிக்க தொடங்கி விட்டார்.
தன்னை ஒரு வார்த்தை அவர்கள் அழைக்காததில் பெரும் கடுப்புக்குள்ளாகிப் போனார் வள்ளியம்மை. அதன் விளைவு, சுதாவின் மூளை சலவை செய்யப்பட்டது அவரது வார்த்தை எனும் விசத்தால்.
இங்கே, ஜோசியரிடம் சென்றிருந்தவர்கள் அடுத்த வாரத்திலேயே ஒரு நல்ல முகூர்த்த நாளினை குறித்து வாங்கி, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியிருந்தனர்.
கிருஷ்ணாவின் நிச்சயம் முடிந்து, வருணாவை பொங்கல் சீரோடு புகுந்த வீடு கொண்டு சென்று விடுவதாக, குருசாமி வீட்டினர் முடிவு செய்திருந்தனர். அதனைக் கொண்டு கணவன், மனைவி இருவருக்கும் ஒரு வார்த்தைப் போர் ஏற்பட்டது.