priya pandees
Moderator
அத்தியாயம் 9
"உன் தம்பி வாழ்க்கைய கொஞ்சம் மெனகெட்டுனாலும் சீக்கிரம் சரி பண்ண பாக்கணும் லதா. இப்படியே விட்டா அந்த பொண்ணு மொத்தமா ஒதுங்கிடும், பிடிப்பில்லாம போய்டும், அப்றம் சேர்க்குறதே ரொம்ப கஷ்டமாகிடும்" என சுரேந்தர் ஊர் சென்றதும் கூறியதற்கு,
"நீங்க எதுக்கு அவங்க வீட்டுக்கு போய் சமாதானம் பேசுனீங்க? அதும் என்ட்ட கூட சொல்லல, எங்க அம்மாவையும் காலைல சொன்னதும் நல்லா கேட்டுவிட்டுட்டேன். புருஷன் வேணும் புகுந்த வீடு வேணும்னு அக்கறை அவளுக்கு தான் வேணும். நீங்க ஆளாளுக்கு போய் பேசுற அளவுக்கு அவள நாம என்ன கொடுமை படுத்தி விரட்டியாவிட்டோம்? நீங்க செய்றதுலயே ஊருக்குள்ள நாம தான் தப்பு பண்ணுத மாதிரி ஃப்ரேம் பண்ணுறீங்க" என சிடுசிடுத்தாள்.
"அப்ப உன் தம்பிக்கு அது வேணாமோ?" என்றான் சுரேந்தர்.
"எது?" என புருவம் சுருக்க,
"அதான்மா குடும்பத்துமேல அக்கறை வேணும்னியே அதான்"
"அவனுக்கு அக்கறை இருக்க போயி தான அங்க இருந்து உழைச்சு கொட்டுறான்"
"பொண்டாட்டி பிள்ளைகள சந்தோசமா வச்சுக்குறதும் அவனோட அக்கறைல வரணும்ல?"
"இவ அவன சந்தோசமா இருக்க விட்டாதான அவனுக்கும் அந்த எண்ணம் வரும்? அமெரிக்கா போய் செட்டில் ஆகணும்னு கனவு கண்டுட்டா அது நடக்கலன்னதும் அவன்ட்ட பிள்ளைகள கூட காட்டாம பலி வாங்குறா. தங்கமான புருஷன் அமஞ்சும் இவளுக்கு அவன கொண்டாட தெரியலனா, யாருக்கு நஷ்டம்? அமெரிக்கா கூட்டிட்டு பேகலன்னா வாழ மாட்டாளாமா?"
"அப்படி சொல்லித்தான கட்டி வச்சீங்க? அப்ப அந்த பொண்ணு ஆசபடுறதுல என்ன தப்பு?"
"ஏங்க அதுக்கு அவனோட ஃபினான்ஸும் ஒத்து வரணும்லங்க? ஆசைப்பட்டா ஒரு பத்துநாள் போய் இருந்து சுத்தி பார்த்துட்டு வரணும், ஏன் நாம போய்ட்டு வரல? அது மாதிரி போய்ட்டு வர வேண்டியது தான? அங்கேயே இருக்க நினைச்சா முடியுமா?" என்றாள் வெடுக்கென்று.
"ம்ச் இப்டி மாத்தி மாத்தி சொல்லிட்ருந்தா என்ன அர்த்தம்? மனோ எங்கள பார்க்க கூட விருப்பபடல, நாங்க அவ்ளோ நேரம் வெயிட் பண்ணோம் வரவே இல்ல, நம்மள பாத்து பேச கூட பிடிக்காம, வெறுத்து போச்சு அந்த பொண்ணுக்கு. இனியும் வெயிட் பண்றது நல்லதில்ல, உன் தம்பிட்ட பேசி நல்ல முடிவா எடுக்க பாரு. அமேரிக்கா, ஆப்பரிக்கான்னு பேசாம, இது அவன் வாழ்க்கைன்னு நினப்புல பேசு" என சுரேந்தர் சொல்லி முடிக்கவும், நேரத்தை பார்த்தவள், அவனுக்கு அங்கு இரவு பத்து மணி இருக்கும் என்ற கணக்கில் அழைத்துவிட்டாள்.
"சொல்லுக்கா?" என்றவன் இன்னும் கணினி முன் தான் அமர்ந்திருந்தான்.
"உன் பொண்டாட்டிய பார்த்து சமாதானம் பேசலாம்னு, அம்மா, அப்பா உன் அத்தான் மூணு பேரும் போய் அவ வீட்ல உட்கார்ந்திருந்தா, வேலை இருக்கு உங்கள பார்க்க எனக்கு இஷ்டம் இல்லன்னு முகத்துல கரிய பூசி அனுப்பிருக்கா. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா மாமனார் மாமியார்னு மரியாதை இல்லாம அவங்களையும் பார்த்து பேச வரல, கல்யாணம் பண்ணி வச்ச என் புருஷனையும் சேர்த்து அவமான படுத்திருப்பா? இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலடா தம்பி. என்னைக்கு நேர்ல பார்த்தாலும் இதுக்கு நாலு வார்த்தை அவள கேட்காம விட மாட்டேன் சொல்லிட்டேன்" என படபடவென பொறிந்தவளை கண்டு சுரேந்தர் தலையிலேயே அடித்துக் கொண்டான்.
"உன்ட்ட என்ன சொன்னேன் நீ அவன்ட்ட என்ன பேசுற?" என திட்டிவிட்டு வாங்கியவன், "மாரா!" என்றழைக்க,
"சொல்லுங்கத்தான்?" என்றான் சாதாரணமாக,
"ஏன்டா உன் அக்கா இவ்ளோ சொன்னதுக்கு நீ இந்நேரம் ஆக்ரோஷமாகிருப்பன்னு நினைச்சேன்?" என நக்கலாக கேட்க,
"அந்த ஆசை வேறயா அத்தான் உங்களுக்கு?" என்றான் அவனும் சாதாரணமாக,
"என்ன பண்ணிட்ருக்க?"
"வேலை தான்"
"அதுசரி. கிஷோருக்கு கல்யாணம் தெரியும்ல? டிக்கெட் போட்டுட்டியா? நீ போடுத மாசத்துல தான் அவனுக்கு கல்யாணம்னு உன் மாமா முடிவா இருக்காங்க தெரியும்ல?"
"லீவ் கிடைக்கணும்ல த்தான்?"
"அமெரிக்கா ராணுவத்துலயா வேலை பாக்குற நீ? ஐடில தான? மூணு வருஷமா லீவே எடுக்காம சேர்த்து வச்சுருக்கதுக்கே உனக்கு டபுள் பேமெண்ட்ல லீவு தருவான்டா அவன். இங்க இருக்கவனெல்லாம் கிறுக்கனா நினச்சு சும்மா அடிச்சு விடுறது. திருவள்ளுவர்ட்ட கேட்கட்டா? வருஷத்துக்கு நாலுதடவ அவன் வந்துட்டு தான போறான், அவனுக்கு மட்டும் லீவு கிடைக்குது உனக்கு கிடைக்கலயோ?" என பேச,
"இதுக்குத்தான் அவன இன்ஸ்டால ஃபாலோ பண்றீங்களா நீங்க?" என பதில் கேள்வி கேட்டான் மார்க் ரத்தின சுருக்கமாக.
"பின்ன, உன்ன நம்பி பொண்ண கேட்டு நாங்க தான கட்டி வச்சோம், பொம்பள பிள்ள வாழ்க்கை சும்மா விட்டுட்டு வேடிக்கை பாக்க சொல்றியா? நானும் பொம்பள பிள்ளைய பெத்து வச்சுருக்கேன்ல? உன் அக்கா பேசி சரி பண்ணுவான்னு, நானும் பொறுமையா இருந்து பாத்துட்டேன், இனி இருந்தா சரியா வராதுன்னு படுது"
"அவ்வளவு நம்பிக்கையா அத்தான் என்மேல?"
"முன்ன இருந்துச்சுடா இப்ப எல்லளவும் கிடையாது. எப்ப வர்ற நீ? அந்த பிள்ள பாவம்டா. எதுக்கு சண்டை போட்டு இப்படி பழி வாங்கிட்ருக்க?"
"அவள நா என்ன கொடுமையா படுத்துறேன்? என்னைய தான் அவ வச்சு செஞ்சுட்ருக்கா" என சிடுசிடுத்தான்.
"வந்து பேச போறியா இல்லையா நீ? குடும்பம் வேணுமா வேணாமா உனக்கு? பிள்ளைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சுட்டு, அந்த பிள்ளை அம்மா வீடே கதின்னு கடக்கவா அவங்க கல்யாணம் பண்ணி வச்சாங்க? நீ இத சரி பண்ணியே ஆகணும் மாரா"
"என் தம்பிய எதுக்கு இறங்கி வர சொல்றீங்க நீங்க? வேலைய விட்டுட்டு வான்னு சொல்றவ தான் நல்ல பொண்டாட்டியா?" என சண்டைக்கு வந்தாள் லதா.
"உனக்கு சேர்த்து வைக்க இஷ்டம் இல்லனா பேசாம இருடி. நா பாத்துக்குறேன்" என திட்டிவிட்டிருந்தான். உண்மையில் இதுவரை இவ்வாறு நேரடியாக மார்கண்டேயனிடம் சுரேந்தர் பேசவில்லை, எப்போவாது பேசும்போதும், "வந்தா என்னடா? பிள்ளைகளுக்கு உன்னைய தேடும்ல" என தான் சொல்லி கடந்து சென்றுவிடுவான். பள்ளி விடுமுறைக்கு அமெரிக்கா செல்லும்போதும், லதாவையும் பிள்ளைகளையும் மட்டுமே அனுப்பி வைப்பான்.
"மனோவையும், அந்த பசங்களையும் சேர்த்து கூட்டிட்டு போ லதா" என அவளிடம் இவன் சொன்னாலும், இவனிடம், "கேட்டு பாக்குறேன்" என்பவள், சாம்பவியிடம் சொல்லி கேட்க சொல்ல, மனோ மறுத்துவிட, "வரலனுட்டா, அவங்க பிரச்சனைய அவங்க தான் சரி பண்ணிக்கணும். புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ளலாம் மூணாவது மனுஷங்க போனா நல்லார்க்காது, அது என் தம்பிக்கும் பிடிக்காது" என்றுவிட்டு கிளம்பிவிடுபவள், அவளை பற்றி குறை கூறுவதற்கு மட்டும் மறந்ததே இல்லை. இப்படி தான் இத்தனை நாட்களும் கடந்திருந்தது.
இன்று அவர்கள் வீட்டு விஷேசத்துக்கு வந்திருந்த சாம்பவியிடம் மனோவை பற்றி பேசாதவர்களே இல்லை என்கலாம்.
"அந்த புள்ள அம்புட்டு கடந்து அல்லாடுது, வெளிநாட்டுல வேலை பாக்குறவுக எல்லாம் ஊர்ப்பக்கமே வராமலா இருக்காக? உங்க புள்ள ஏன் வர்றதே இல்ல? அங்க எதுவும் பிரச்சனையோ? மனோவ வேணாம்னுட்டீகளோ? அவ ஏன் இங்கேயே வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டா? ஆண்டாளும் கிடந்து அம்புட்டு புலம்புவா" என ஆளாளுக்கு பேசியதில் தான் இவனும் அவர்களோடு அங்கு கிளம்பி சென்றிருந்தான்.
அங்கிருந்த அந்த இரண்டு மணிநேரத்தில், மனோவின் அண்ணி அறையில் இருந்து கொண்டு வெளியே எட்டியே பார்க்காதது, ஞானமும், ஆண்டாளும் பாவமாக நின்றது. விவரம் தெரியும் கிருஷ்ணனே இவர்களை யாரோ வெளியாளாக பார்த்து ஒதுங்கியது, இறுதியில் மனோ அவர்களை பார்க்கவே மறுத்தது எல்லாம் சேர்ந்து ஒருவிதத்தில் பயத்தை கொடுத்துவிட்டிருந்தது.
'இவ்வளவு நாள் கடத்தினதே தப்போ?' என நினைக்க வைத்திருந்தனர்.
"மாரா, நீ அசால்ட்டா இருக்கடா, இருக்குற வர சாதரணமா இருந்துட்டு அப்புறம் புலம்பாதடா. எனக்கு நெஜமா பயமா இருக்கு" என அவ்வளவு வருத்தப்பட்டு பேசினான் சுரேந்தர்.
"என்னவோத்தான் ஆளாளுக்கு வந்து அட்வைஸ் பண்ணும்போது தான் நா அப்படி என்ன பண்ணிட்டேன்னு கேட்க வருது. ஒருவேளை நா அங்க வராம இருந்தா என்ன செய்வீங்கன்னு பாக்க தோணுது. சும்மா விட்ருந்தாலே நானா எப்பவோ வந்துருப்பேன், மாத்தி மாத்தி, உனக்கு கொஞ்சுமும் அக்கறை இல்ல, ஏன் இப்புடி இருக்க, இப்படி இருக்க எதுக்கு கல்யாணம் பண்ணின, பிள்ளை பாசம் கூட இல்லையா உனக்கு? அப்பப்பா எவ்ளோ கொஸ்டின்ஸ்? நீங்க இப்படிலா பேசினதால நா கிளம்பி வந்தா அப்ப நீங்க பேசினது தான் நிஜம்னு நானே அத ஒத்துட்டேன்னு தான அர்த்தம் ஆகிடும்?" என அழுத்தமாக கேட்டான்.
"ஏன்டா அப்ப உன்ன ஒன்னும் சொல்ல கூடாதா? நீ வருஷ கணக்குல மனோவ ஏமாத்திட்ருக்கது தப்பில்லையா?"
"நா ஏமாத்துறேனா?" என பல்லை கடித்தவன் அக்கா கணவனாகிவிட்டபடியால், அடுத்து வந்த ஆங்கில கெட்ட வார்த்தையை வாய்க்குள்ளேயே அடக்கி கொண்டு, "கல்யாணம் ஆனாலும் என்னோட வைஃப் அங்க தான்னு சொல்லியும் அவங்களுக்கு ஹோப் கொடுத்து ஏமாத்தினது நீங்களும் உங்க மாமியாரும். உங்கள விட்டுகுடுக்க முடியாம, அவளும் சின்ன பிள்ளையாச்சேன்னு சட்டுன்னு சொல்ல முடியாம இன்னும் கொஞ்ச நாள், கொஞ்ச நாள்னு நா அவகிட்ட பொய் சொன்னதும் கூட உங்களுக்காகத்தான். எங்களுக்குள்ள சண்டையே இதுக்கு மட்டுந்தான் வரும், அப்ப யார் காரணம்னு நீங்களே புரிஞ்சுக்கோங்கத்தான்"
"சரிடா, எல்லாமே எங்களால தான். இப்ப ஏன் மூணு வருஷமா இந்த பக்கமே வராம மனோட்டயும் பேசாம இருக்க?"
"அது இதேமாதிரி வேறொரு பிரச்சனைல ஆரம்பிச்சு எங்கேயோ வந்து, பணப்பிரச்சனைல முடிஞ்சிருச்சு, கோச்சுகிட்டா. நானும் அதிகம் பேசிட்டேன். முதல்ல அவ மேல உள்ள கோவத்துல வரல, அப்றம் அப்றம் வந்தாலும் அவள பாக்க முடியாதுன்ற எரிச்சல்ல வரல" என்க,
"வந்தா தான பாக்க முடியுமா முடியாதான்னு தெரியும்?"
"ம்ச், ஐயோ அத்தான் உங்களுக்கு புரியல" என்றவன் பெருமூச்சோடு, "முதல்ல பேசாம இருந்தப்போ ஒன்னும் பெருசா தெரியல இப்ப இவ்ளோ நாள் கடத்திட்டு அவ பேரண்ட்ஸயும் ஃபேஸ் பண்ண கில்ட்டா இருக்குத்தான், அதான் தள்ளி போட்டுட்டே வரேன்" மேலும் மேலும் கேட்கிறாரே என்ற கடுப்பில் சொல்லியும்விட்டான்.
"எதுனாலும் வந்து பேசு மாரா, அப்பதான் பிரச்சனை சால்வ் ஆகும்"
"உண்மைய சொன்னா சிரிக்க கூடாது" என அவன் கூறவுமே சுரேந்தர் லேசாக சிரித்தான்.
"சொல்லு முதல்ல"
"அக்காவ விட்டு தள்ளி வாங்க"
"இங்கன எங்கிட்ட இருந்தா இவ்ளோ நேரம் அவ வாய் சும்மா இருந்துருக்குமா? நா திட்டவும் அப்பவே அவ கிச்சன் போய்ட்டா. நீ சொல்லு"
"உண்மைக்கு எனக்கு மனோவ ஃபேஸ் பண்ண பயமா இருக்குத்தான்" என கூறிவிட்டு முகத்தை கை கொண்டு மூடிக்கொண்டான், இதுவரை அவனுக்கு அவனே ஒத்துக்கொள்ள மறுத்ததை சுரேந்தர் ஆறுதலாக கதைக்கவும் மனதிலிருந்து வர கொட்டியிருந்தான். சுரேந்தருக்கு குபீர் சிரிப்பு வந்தாலும், வாயை கப்பென்று மூடிக்கொண்டான்.
"அவகிட்ட பேசிட்டே இருக்கும் போது ஆயிரம் சண்டை போட்ருக்கோம், அப்பவே நிறைய கேட்பா, இப்ப கேப் விட்டுடேனா, நீங்க மாமாலாம் அவள பாத்துட்டு வந்தப்றம் ஒவ்வொரு தடவ சொல்றதையும் கேட்டதும், கொஞ்சம் பகீர்னு தான் இருக்கும், இதோ இப்ப ரெண்டு மாசம் முன்ன, கிருஷ்ணா உடம்பு சரியில்லாம இருந்தப்ப, என்னைய ஃபினான்ஸியலா கூட தேடல அவ, நானா பேச நினச்சப்ப கூட, நேர்ல வர சொல்லுங்கன்னு சொன்னா, நா கேட்ட அவ வாய்ஸ், மூணு வருஷம் முன்ன நா கேட்டட்டு இருந்தது இல்ல, இதுல வேறென்னவோ இருந்தது அத்தான். அதுல இருந்து தான் எனக்கு பயமே. நா இல்லாமலும் இருந்துருவாளோன்னு நிஜமா பயம் வருது அத்தான் அப்பப்போ"
"இப்படியே நீ அங்க இருந்தனா கடைசி அதான் நடக்கும் மாரா"
"வந்துட்டா மட்டும்?"
"பொண்டாட்டி வேணாமா உனக்கு?"
"அப்டிலாம் அவள விட்டு குடுத்துட மாட்டேன்" என்றவன் மறுபடியும் அமெரிக்க மார்கண்டேயன் மோடிற்கு மீண்டிருந்தான்.
"கிஷோர் கல்யாணத்த நெக்ஸ்ட் மந்த்ல வைக்க ப்ளான் பண்ண சொல்றேன், நீ லாங் லீவ் எடுத்து டிக்கெட் போட்டு கிளம்பி வா"
"லீவ் அப்ரூவல் வாங்கிட்டு சொல்றேன்"
"அப்புறம் உன் இஷ்டம். இப்பவே மனோ ஏதோ டிசைட் பண்ணிட்ட மாதிரி தான் தெரியுது, நீ அத இன்னும் ஈசியாக்காம இருக்க என்ன செய்யணுமோ செய்" என முடித்துவிட்டான் சுரேந்தர்.
மார்கண்டேயன், அவனை மீறித்தான் இவ்வளவும் சுரேந்தரிடம் பேசியிருந்தான். ஈகோ பார்ப்பவன், அவ்வளவு எளிதில் வார்த்தையை விட்டுவிட மாட்டான். அவனுக்கு அவனிடம் எதுவும் தவறென்று இப்போதும் தோன்றவில்லை தான், ஆனால் அவன் மனைவி அதிகமாக தள்ளி சென்றுவிட்டாளோ என்ற பயம் உள்ளுக்குள் வந்திருப்பது நிஜம். அதை அவனே நினைக்க கூடாதென்று ஒத்தி போட்டுக்கொண்டே வந்திருக்க, இன்று அவள் அவன் வீட்டினரயும் பார்க்க மறுத்ததில், 'உனக்கும் இது தான் நிலைமை!' என குதித்து கொண்டு வெளி வந்திருந்தது.
அதன்பின்னும் அலுவலகத்தில் இருந்தபடியே கணினி முன்னமர்ந்து தீவிர யோசனையில் இருந்தான். 'அவளுக்கு மட்டுமா கோவம் எனக்கும் தான் கோவம்' என முறுக்கி கொண்டு தான் இத்தனை நாளையும் கடத்தியிருந்தான்.
'இப்ப அவகிட்டயே பேசிட்டா என்ன?' என சட்டென்று தோன்றிவிட, மனம் மாறும் முன் அழைத்துவிட எண்ணி அழைத்தும்விட்டான், அவள் தான் எடுக்கவில்லை, ஐந்து, பத்து, பதினைந்து முறை அழைத்துவிட்டான், வாட்ஸாப், பேஸ்புக், இன்ஸ்டா, ஐஎம்ஓ, என அனைத்திலும் அழைத்துவிட்டான் அந்தபக்கம் தான் அழைப்பு ஏற்கபடவேயில்லை.
பள்ளியில் இருந்தவள், முதல் அழைப்பிலேயே, முதல் நாள் அவன் பெற்றோரை பார்க்காமல் அனுப்பியதற்கு சண்டையிடத்தான் அழைக்கிறான் என நினைத்தாள், தொடர்ந்து வந்த அழைப்புகளில் அதை உறுதியும் செய்து கொண்டாள். ஆனால் அந்த எண்ணிக்கை பத்து, பதினைந்து என வரவும் பயம் கொடுக்க ஆரம்பித்தது. 'அங்கு அவனுக்கு எதுவும் என்றாலும் இவளுக்கு தான் முதல் அழைப்பு வரும் என முன்பே கூறியிருக்கிறானே, அதனால் விடாமல் அழைக்கின்றனரோ, தற்போது அங்கு நல்லிரவாகிற்றே!' என ஓரிரு நொடிகள் அவளுக்கு பதைபதைத்துவிட்டது.
'நாமளே கூப்பிடுவோமா?' என பயந்து இவள் அழைத்த நொடி அழைப்பை ஏற்றிருந்தான் மார்க். கையிலேயே வைத்துக்கொண்டு அடுத்து அழைப்போமா வேணாமா என பார்த்திருந்தவன், அவளின் பெயர் தாங்கி வரவும் எடுத்துவிட்டான்.
"ஹலோ? ஹலோ?" என இவள் பதறி வேகமாக கேட்க,
"உயிரோடத்தான்டி இருக்கேன்" என்றிருந்தான் அதட்டலாக. அடுத்த நொடி பட்டென்று வைத்துவிட்டிருந்தாள்.
"அடிங்!" என மீண்டும் மீண்டும் அழைக்க, அவள் எடுக்கவில்லை என்றதும், "நேர்ல வந்தேன் அடி வெளுத்துவிட்ருவேன்டி" என குறுஞ்செய்தி அனுப்ப, அதை கவனித்தவள், நெட்டை மொத்தமாக அனைத்து வைத்துவிட்டாள்.
"மனோ!" என பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது அவனால். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் அவன் தாய்மாமாவிடம் பேசி கிஷோரின் கல்யாண தேதியை உறுதி செய்தவன், இந்தியாவிற்கு பயணச்சீட்டும் எடுத்துவிட்டிருந்தான். அதை அவளுக்கு கூறவும் இல்லை, கூற நினைத்தாலும் முடியாதே! அவள் தான் அன்று அனைத்து வைத்த நெட்டை, அவன் இந்தியா வந்துவிட்டான் என செய்தி கிடைத்த பின்னரும் கூட ஆன் செய்யவே இல்லையே!
"கல்யாணத்துக்கு வருவல்ல, வா. நேர்ல தான பேசுவ. வா பேசலாம்" என முடிவோடு தான் காத்திருந்தான். இந்தியா வந்தும் நறுமணந்திக்கு அவன் செல்லவில்லை, பிறகு எவ்வாறு அவனை தேடி அவள் செல்வாள்? ஆனால் அவன் தீவிரமாக அவளை எதிர்பார்த்து காத்திருந்தான்.

Last edited: