kani suresh
Moderator
அத்தியாயம் 1
இரவு நேரம். சாலையே வெறிச்சோடி இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் மட்டும் தனியாக நின்றுக் கொண்டிருந்தாள்.
வெளியில் தைரியமாக நிற்பது போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவள் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
'சுற்றிலும் யாராவது வருகிறார்களா ?'என்று அவள் கண்கள் மீண்டும் மீண்டும் ரோட்டையே நோக்கிக் கொண்டிருந்தன..
'இரவு வேளையில் தனியாக இப்படிச் சிக்கிக் கொண்டோமே…' என்ற எண்ணமே அவளின் மனதை பதற வைத்தது.
அந்த நேரத்தில், திடீரென ஒரு போலீஸ் ஜீப் வந்து அங்கு நின்றது.
அது நின்ற அடுத்த நொடியே, என்ன விஷயம் என்று தெரியாமலே, அவளின் மனதில் பயம் பரவியது.
ஜீப்பிலிருந்து ஒரு உயரமான ஆண்மகன் இறங்கி, அமைதியாக நடைபயின்று அவள் அருகே வந்தான்.
“என்ன மேடம், இந்த நேரத்தில் இங்கே ஏன் நிக்கிறீங்க?” என்று கேட்டான்.
அவன் கேட்ட விதமே அவளுக்கு மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
'இந்த நேரத்தில் இங்கே நிற்பதைப் பார்த்து என்னை தவறாக நினைத்துவிடுவாரோ?' என்று உள்ளுக்குள் அஞ்சி நடுங்கினாள்.
ஆனால் அந்த ஆண்மகன் அவளைத் தவறாக நினைக்கவில்லை.
'இவளை எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே…!' என்று நினைத்தான். ஆகையாலே, அவளை ‘மேடம்’ என்று மரியாதையாக அழைத்தான். இல்லையென்றால், “என்னம்மா, இந்த நேரத்தில?” என்று கேட்டிருப்பான்.
அவன் வகிக்கும் பதவி அப்படிப்பட்டது. அவள் அமைதியாக நிற்பதைப் பார்த்து, அவனே மீண்டும் கேட்டான்.
“மேடம், இப்படி பேசாம நின்னா என்ன அர்த்தம்?”என்றான் .
அதன் பிறகு ,தான் அவள் தன்னைக் திடப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினாள்.
“என் பெயர் உதயநிலா. அருகில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். இன்று லேட் நைட் வேலை முடிந்தது. நான் வருவதற்குள் கடைசி பேருந்தும் போய்விட்டது. அதனால் தான் இங்கே நிக்கிறேன். என்னுடன் வேலை செய்பவர்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தான்… தயவு செய்து என்ன தப்பா நினைக்காதீங்க…” என்று பயத்தில் உளறினாள்.
அவன் சிரித்தபடி,
“உங்களைத் தப்பா நெனச்சேன்னு நினைச்சீங்களோ ?” என்று கேள்விக் கேட்டான்.
அடுத்த நொடி அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் குரலில் குற்றச்சாட்டோ , கிண்டல் கேலியோ ?இல்லை என்பதை அவனது முகம் எடுத்துரைத்தது.
“உங்க வீடு எங்கே? இருக்கு சொல்லுங்க. நான் கொண்டு போய் விடுறேன்" என்றான்.
அவள் இன்னும் தயக்கத்திலேயே நின்றாள்.
அதை கவனித்தவன்
“பயப்பட வேண்டாம். நான் ஒரு போலீஸ் அதிகாரி. என் ஜீப்பையும், நான் போட்டு இருக்கும் டிரெஸ்ஸையும் பார்த்தாலே தெரியும். நான் பொறுக்கி இல்லை. என்னை நம்பலாம்.”
அவள் இன்னும் பேசவில்லை.
சிறிது நேரம் கழித்து அவன் தனது மொபைலை எடுத்து யாரோ ஒருவரிடம் பேசினான். சில நிமிடங்களில் ஒரு பெண் போலீஸ் அங்கு வந்தார்.
“அம்மா, இவர் என் மேல் அதிகாரி தான். நீங்க நம்பி பயப்படாம உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க.அவர் பத்திரமா,பாதுகாப்பாக உங்கள் வீட்டுல விட்டுடுவார்" என்றார்.
ஆனால், அப்போதும் அவளின் பயம் சிறிதும் குறையவில்லை.
அந்த நேரத்தில் அவள் ஏறும் பேருந்து வந்தது.
அவளிடம் நின்று இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த பெண் போலீஸ், ஆண் போலீஸ் என இருவரையும் பெரிதாக கருத்தில் கொள்ளாமல், இருவரிடமும் ஒரு வார்த்தையும் கூறாமல், உள்ளுக்குள் பயப்பந்து உருள வந்து நின்ற பேருந்தில் ஏறிக்கொண்டாள் நிலா..
பேருந்து நகரத் தொடங்கியது.
ஆனால் அவளின் மனம் அங்கேயே நின்றது.
அந்த ஆணின் முகம், அவன் குரல், அவன் கண்களில் இருந்த நேர்மை எல்லாம் அவள் நினைவில் சுற்றிக் கொண்டே இருந்தது.
ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
'அவரை நம்பியிருக்கலாமோ?' என்ற கேள்வி அவளின் உள்ளத்தில் வண்டாய் குடைந்தது
அவள் அந்த இரவு ஏற மறுத்த ஜீப்பில் தான், ஒருநாள் அவளின் வாழ்க்கை பயணம் தொடங்கப் போகிறது என்பதை அப்போது அவள் அறியவில்லை.
அவள் தவிர்க்க முயன்ற அவன் தான், ஒருநாள் அவளின் நிழலாக, அவளின் பாதுகாப்பாக, அவளின் வாழ்க்கைத் துணையாக மாறப் போகிறான் என்பதையும் அவள் அறியவில்லை…
நிலாவின் வீட்டிற்கு செல்லும் பேருந்து வந்தவுடன் அவள் பெண் போலீஸ் ,ஆண் போலீஸ் இருவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் பேருந்தில் ஏறி சென்று விட்டாள் அவளின் வீட்டை நோக்கி..
பேருந்தில் ஏறியதில் இருந்து அவளின் நினைவு முழுவதும் அந்த ஆண் மகனே ஆக்கிரமித்து இருந்தான்.
நிலா எம் எஸ் சி ஐ டி முடித்துவிட்டு, ஐடி கம்பெனியில் வேலை செய்பவள்...
நிலாவிற்கு ஒரு அண்ணன் இருக்கின்றான். அவன் பெயர் உதயகுமார் .அப்பா அன்பழகன் ,அம்மா அமுதவள்ளி நிலாவின் குடும்பத்தில் இருப்பவர்கள் இவர்களே....
நிலா இறங்குமிடம் வந்தவுடன் அவள் இறங்கி, அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் நடந்து சென்றுக் கொண்டு இருந்தாள்.
ஏதோ உந்துதலில், சிறிது நேரம் கழித்து திரும்பிப் பார்த்தாள்.
அந்த ஆண் போலீஸ் பெண் போலீஸ் வந்த பைக்கை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு ,ஜீப்பை அந்த பெண் போலீஸிடம் ஒப்படைத்து விட்டு, இவன் நிலாவை அதாவது நிலா வந்த பேருந்தை பாலோ செய்து கொண்டு வந்தான் .
பிறகு நிலா இறங்கியதில் இருந்து நிலாவை பாலோ செய்து கொண்டு வந்தான்...
நிலா தவறாக எடுத்துக்கொண்டு திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள் .
அவளின் வீடு வந்த நிம்மதியில் நிலா திரும்பிப் பார்த்து அவனிடம் ஒரு பழுப்பு காட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றாள் ...
அவள் வீட்டிற்கு பத்திரமாக சென்றுவிட்டாள் என்று தெரிந்தவுடன், அவன் அவனின் வீட்டிற்கு வண்டியை விட்டான்.
அவன் தான் நம் கதையின் நாயகன் சிவரஞ்சன்.
அனைவராலும் "சிவா!" என்று அழைக்கப்படும் "சிவா ஐபிஎஸ் ".
ஆனால், அவன் வேலை செய்யும் இடத்தில் அவனக்கு பெயர் "எஸ் ஆர் "சிவரஞ்சனை சுருக்கி எஸ் ஆர் என்று அழைப்பார்கள்...
அவன் அலுவலகத்தில் அவனைக் கண்டால் அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள் .
நேர்மையாகவும், தைரியமாகவும் செயல்பட கூடியவன்.
ஆனால் ,அவன் பயப்படக்கூடிய ஆள் விரைவில் அவனிடம் வந்து சேர்வாள்....
நிலா வீட்டிற்குள் நுழையும் போது அவளின் அண்ணன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டி விட்டு," என்ன விட்டுவிட்டு ,நீ மட்டும் தனியா கொட்டிகிற ,தடிமாடு ! தடிமாடு ! தீனிமூட்டை!" என்று முனகி விட்டு அவளின் அறைக்குச் சென்றாள்...
"கழுதை! நீ ஏண்டி லேட்டா வந்துட்டு என்ன திட்டிட்டு போற.. நீ வர்றதுக்கு லேட் ஆனதுக்கு நான் சாப்பிடாம என் வயிறை காய போடணுமா?" ...
அண்ணன் ,தங்கை இருவரும் எலியும் புனையுமாக ..டாம் அண்ட் ஜெர்ரி போல் எந்நேரமும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால், உள் மனதில் பாசம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது...
அப்பா அன்பழகன் அப்பொழுதுதான் ரூமில் இருந்து வந்து," குட்டிமா! இவ்வளவு நேரம் எங்க டா போன? இவ்ளோ லேட்டா வர?"எனக் கேட்டார்.
"அப்பா ! பஸ் மிஸ் பண்ணிட்டேன். அதான் இப்போ வந்த லாஸ்ட் பஸ் புடிச்சு வர லேட் ஆகிடுச்சு.."என விளக்கம் அளித்தாள்..
"சரிடாமா கை கால், முகம் ,கழுவிட்டு வா சாப்பிடலாம்!" என்று அன்பழகன் கூற .
அதற்குள் அமுதவள்ளி சமையலறையில் இருந்து அனைத்து சாப்பாடுகளையும் சூடு செய்து எடுத்துக் கொண்டு வந்து வைத்தார்.
வீட்டில் அனைவரும் ஒன்றாக தான் அமர்ந்து சாப்பிடுவார்கள் இரவு வேளையில் ...
ஏனென்றால் ,வீட்டில் இருக்கும் அனைவரும் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் ....
ஆகையால் ,காலை ,மதியம் அவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசக்கூட முடியாது என்ற சூழ்நிலையால் ,இரவு வேளையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள்...
அமுதவள்ளி சாப்பாடு அனைத்தும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஃப்ரெஷ் ஆகி கொண்டு நிலா வெளியில் வந்தாள் .
வெளியில் வந்தவள் தனது அம்மாவை பின்னால் இருந்து கட்டிக் கொண்டாள் ...
"வள்ளி இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டையா ?சாரி என்னை மன்னிச்சு !" என இரு கைகளையும் காதில் வைத்து மன்னிப்பு வேண்ட.
அவர் அமைதியாக இருக்கவும்..
"என்னால, இன்னைக்கு உனக்கு ஹெல்ப் பண்ண முடியல இல்ல.." என்றாள்...
"வாலு என் மேல இருந்து கையை எடு டி முதல்ல.. எப்போ பார்த்தாலும் கட்டிப்பிடிச்சிக்கிட்டு " என்றார் வள்ளி...
"அது என்னடி எப்போ பாரு! நீ தான் நெல்லு குத்தி பேர் வச்ச மாறி என் பேரை ஏலம் விடுறது!"
"உன்ன நான் பேர் சொல்லிக் கூப்பிடாம அப்புறம் யாரு வள்ளி டார்லிங் !" கூப்பிடுவாங்க .
"ஓ! எங்க அப்பா அன்பு சொல்வாரர்னு கனவு கான்றிங்களோ ?"என வம்பிழுத்தாள் .
அவள் ஒரு வாலு பெண்...
பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் .
சாப்பிடும் வேளையில் ,"நிலா குட்டி என்னாச்சு? இன்னைக்கு வீட்டுக்கு வர இவ்ளோ லேட்?" என கேட்க ...
நடந்த விடயங்களை ஒன்று விடாமல் அனைத்தையும் கூறினாள்.
தன் பெற்றவர்களிடம்," அப்பா என்ன அந்த போலீஸ் பாலோ செஞ்சிட்டு வந்தார் .. அவர் பார்க்க ஹீரோ மாதிரி இருந்தார் தெரியுமா?" என்று ரசனையாகக் கூற..
அதற்கு ,அவளின் அண்ணனோ ,அவளின் காதை திருகி கொண்டே ,"உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா, அம்மா அப்பா, கூட பிறந்த அண்ணன் கிட்டையே ஒரு பையன் அழகாக இருக்கான்னு சொல்லுவ .." என்றான்.
அவளோ ," நீயும் ஒரு பொண்ணையும் கரெக்ட் பண்ண மாட்டா? நானும் கரெக்ட் பண்ண கூடாதுன்னு சொல்ற? என்ன பாலிசி டா உண்ணுது?" என்று எகிறினாள்...
"அடிவங்க!"என அவன் தலையில் கொட்ட,
"நா சைட் அடிச்சேன்னு மட்டும் தான சொன்ன. அவனை லவ் பண்றேன்னு ஒன்னும் சொல்லலையே...பார்க்க அழகாக இருந்தா சைட் அடிப்பாங்க தான்..
நீ எந்த பொண்ணையும் பார்த்ததே இல்ல.. சைட் அடிச்சதே இல்ல பாரு! போ டா டோமொட்டோ ! நீ நல்லவன்னு நம்புவனு நினைச்சியோ?"என கலகலவென சில்லறையை சிதற விட்டது போல முத்து பற்கள் தெரிய சிரித்தாள்...
வள்ளி ,அன்பு இருவரும் சிரித்துக் கொண்டே "நிலா அவனை எதுக்கு இப்போ வம்புக்கு இழுக்கிற? "என்றனர்.
"ஆமா! ஆமா! நீங்க ரெண்டு பேரும் கொடுக்கிற செல்லம் தான் அவளை இப்படி எல்லாம் பேச சொல்லுது ...என்னவோ போங்க!" என முனகினான் உதயா..
"டேய் உதயா! அவளுக்கு எப்போ என்ன செய்யனும்னு தெரியும் டா.. அப்படி ஒரு வேலை அவளுக்கு யாரையாவது பிடிச்சு இருந்தா , அவனை பிடிச்சு இருக்குன்னு நாளைக்கே வந்து சொன்னாலும் நாங்க அவனை நல்லவனா ? என பார்த்துட்டு அவ விருப்பப்படியே அவனுக்கே கட்டி வச்சுடுவோம் ..நாங்க ஒன்னும் காதலுக்கு எதிரி இல்லையே?" என்றனர் மலர்ந்த முகத்துடன்..
ஏனென்றால் ,நிலாவின் அப்பா அம்மா இருவரின் திருமணமும் காதல் திருமணம் தான்.
அதனால் ,அவர்கள் என்றுமே காதலுக்கு எதிரி இல்லை....
தன் மகளோ , மகனோ காதலித்தார்கள் என்றால் ,நல்ல குடும்பமா ?என்று மட்டும் பார்த்துவிட்டு,அவர்களுக்கே திருமணம் செய்து வைப்பார்கள் என்று சிறுவயதில் இருந்தே இருவரிடமும் சொல்லி தான் வளர்த்தார்கள்..
...
அதனால் தானோ என்னவோ இன்று வரை உதயா ,நிலா இருவரும் யாரையும் விரும்பவில்லை ...
அவர்களுக்கு யாரையும் விரும்பும் எண்ணம் கூட இதுநாள் வரை வந்ததில்லை.
ஆனால் ,இனி வரும் காலங்களில் நிகழலாமா ?என்று பொறுத்திருந்து பார்ப்போம்....