Sowndharyacheliyan
Writer
வான்மழை 23:
அன்றைய வேலையை முடித்து விட்டு அறையினுள் நுழைந்த முகிலனை, அவன் மனையாள் இல்லாத வெறுமையான அறையே வரவேற்றது.
அவள் இல்லாத இடம் வெறிச்சோடி தெரிய, ஒருவித சோர்வுடன் முகம் கழுவி வந்தவன், அப்படியே கட்டிலில் விழுந்து கண்மூடினான்.
அவனது அருமை மனைவி, அவளது அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறாள். அவள் கிளம்பி சென்று இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. இன்னும் இரண்டு நாளில் கிருஷ்ணாவின் நிச்சயம்.
மல்லிகா, மகளை ஒருவாரம் இருக்கும் போதே, தன்னுடன் அழைத்துக் கொண்டார். அங்கிருந்து பள்ளிக்கு இரண்டு நாட்கள் வந்து விட்டு சென்றவள், அதன் பின் விடுமுறை எடுத்துக் கொண்டாள்.
அவள் கேட்டதும் சரியென்று அனுப்பி வைத்துவிட்டவனிற்கு, அதன் பின்னான வெறுமை முகத்தில் அறைந்தது.
சேட்டைக்காரி! எந்நேரமும் எதையாவது நோண்டியபடி அறையினுள் திரிவாள். அப்படி இல்லை என்றால், கீழே இருப்பாள்.
மனைவியை நினைத்த வேளை அவளே அலைப்பேசி வழியே வந்தாள் வீடியோ கால் மூலமாக,
“ஹாய் வாத்தி, காலேஜ் முடிஞ்சு வந்தாச்சா?” கையில் மருதாணி வைத்திருப்பாள் போலும், அதனை ஊதியபடியே இவனிடம் பேசினாள்.
“ம்ம்ம்” என்றவனின் பார்வை முழுவதும் பாவையின் முகத்தில் மட்டுமே!
‘அம்மா வீட்டுக்கு போனதும், புஸ்டியாகிட்டாளோ! கன்னத்துல எக்ஸ்ட்ரா சதை போட்டிருக்கே! ஆளும் பளபளன்னு இருக்கா?’ அவளை பற்றிய ஆராய்ச்சியில் அவன் இறங்கியிருக்க,
“ஏங்க! என்னங்க!” என விதவிதமாய் அழைத்தும் அவனது போனதில்லை கலையாகும் போக, சட்டென அவளது கண்கள் மின்ன,
“டேய் முகிலா!” என காட்டுக் கத்தலாய் கத்திட, அதில் சுயம் பெற்றவன்
“அடிங்க! யாரை பார்த்துடி டா போடுற? நேர்ல இல்லன்ற தைரியமா? வந்தேன்னு வையி அந்த கன்னத்துல் வந்திருக்கிற எக்ஸ்ட்ரா லாட்ஜ்ஜை கடிச்சு துப்பிடுவேன்!” என்றவனின் குரலில் இருந்த மிரட்டல், அவன் முகத்தினில் இல்லை.
“பின்ன என்னவாம், எவ்வளவு நேரம் கூப்பிடுறது உங்களை, அதெப்படி கரெக்ட்டா நான் டா போட்டதும், உங்களுக்கு கேட்டுச்சு?” அவள் புருவம் உயர்த்த,
“அதெல்லாம் ரகசியம், சொல்லுறதுக்கில்லை!”
“ரொம்பத்தான், இப்போதான் வந்திங்களா?”
“ஆமா!”
“இதென்ன டிரஸ் கூட சேன்ஞ் பண்ணாம இருக்கீங்க?”
“ம்ம்ம் ரூமுக்குள்ள வந்ததும்தான், நீ இல்லைன்னது புரிஞ்சுதா, அதான் அந்த சந்தோசத்துல அப்புடியே படுத்துட்டேன்.” உண்மையை மறைத்து அவளிடம் வம்பிழுக்க,
அதுவரை, நான் இல்லாததை அவனிற்கு வெறுமையாய் இருக்கிறதுப் போலும், என நினைத்து அவனின் போச்சை ஆவலை கேட்டவள், அவனது கடைசி வரியில் அப்பட்டமாய் முறைத்தாள்.
“வாத்திக்கு கொழுப்பு தானோ! நான் இல்லாம இருக்க முடியலை தானோ?”
“அப்புடி எல்லாம் இல்லையே, நீ இருந்தா தான், ஏதாச்சும் லொடலொடன்னு பேசிட்டு இருப்ப, இப்ப பாரு எவ்வளவு அமைதியா இருக்குன்னு.” என்றவனின் பேச்சில் அந்த அமைதி பிடிக்காதது அப்பட்டமாய் தெரிந்தது.
“அப்போ என்னை நீங்க மிஸ் பண்ணலை?”
“இல்லையே!” என்றவனின் முகம் அவனது மனவோட்டத்தை துள்ளியமாய் காட்டியது.
“நீங்கதானே சீக்கிரமே அனுப்பி விட்டீங்க.” என அவள் சிணுங்க,
“பின்ன, உங்க அம்மா கேட்கும் போது எப்புடி மறுக்குறது? அதுவும் இல்லாம இது உங்கண்ணா நிச்சயம், கெளரிக்காக நீ இருக்க வேண்டாமா?” என்றவனின் குரல் மெதுவாய் ஒலித்திட,
“சரி நீங்க எப்போ வரீங்க? அம்மாவும் கேட்டுட்டே இருக்காங்க?”
“ம்ம் நாளனைக்கு தானே நிச்சயம். நாளைக்கு நைட் வரேன்.”
“நாளைக்கு லீவு சொல்லிட்டு காலையிலேயே வாங்களேன்.”
“நாளைக்கு லீவு எடுக்க முடியாது வரு, நிச்சயம் வெள்ளி தானே, அடுத்த இரண்டு நாள் லீவு தானே. இப்பவே எடுத்துட்டா, அப்பறம் கல்யாணத்துக்கு கஷ்டமாகிடும்.”
“ம்ம் சரி, அப்போ நாளைக்கே காலேஜ் முடிஞ்சு, அப்படியே இங்கு வந்திடுங்களேன்.”
“வரு, வீட்டில இருக்குறவங்களை கேட்க வேண்டாமா? நான் மட்டும் எப்புடி வர்றது?”
“ஏங்க, சொல்ல மறந்துட்டேன். அதை சொல்லதான் கால் பண்ணேன். அண்ணா நிச்சயம் முடிஞ்சு, அங்க நம்ம வீட்டுக்கு வர்றப்பவே பொங்கல் சீரு கொடுத்திடலாம்னு அப்பா சொல்லிட்டாரு.
காலையிலயே அதைப் பத்தி அத்தை,மாமாக்கிட்ட அப்பா பேசிட்டாங்க. அண்ணா நிச்சயத்துக்கு நாளைக்கே வர சொன்னாங்க.மாமாவும் நாளைக்கு சாயந்திரமே வந்திடறதா சொன்னாங்க. அதால பிரச்சனை இல்லை. நீங்க நாளைக்கு காலையிலே வாங்களேன்.”
“ம்ஹீம், நாளைக்கு மதியத்துக்கு மேல அங்க நேரா வந்திடுறேன் வரு.”
“ம்ம் சரிங்க, பொங்க சீருக்கு நம்மளுக்கு டிரஸ் எடுத்து கொடுப்பாங்க. பணமா வச்சிடவான்னு அப்பா கேட்க சொன்னாங்கங்க.”
“ம்ச் வரு, இது எல்லாம் தேவையா?”
“எது எல்லாம்?”
“இந்த பொங்க சீரு எல்லாம்? அதான் கல்யாணத்தேக்கே அவ்ளோ சொஞ்சாங்க தானே.”
“என்னங்க பேசுறீங்க? இது எல்லாம் சம்பிரதாயம். எனக்கு பிறந்து வீட்டு சீரு. அதை வேண்டாம் சொல்லுறீங்க.”
“நான் வேண்டாம்னு சொல்லலை. அதுக்கு அவசியம் இல்லைன்னு தான் சொல்லுறேன். இப்போ நீ கொண்டு வந்து தான் இங்க நிறையனும்னு இல்லை தானே.”
“அப்போ, மேகலா அண்ணி நீங்க கொடுக்கிற சீரை வச்சு தான் வாழுறாங்களா என்ன?” பட்டென அவள் வார்த்தைகளை விட,
“வருணாக்ஷி!” கோபமாய் அதட்டலிட்டான் அவன்.
“எதுக்கு இப்பே உங்களுக்கு கோபம் வருது? நீங்க என்னை கேட்டதை தானே நானும் திருப்பி கேட்டேன்.”
“அக்காவும், நீயும் ஒண்ணில்லை வருணா!”
“அப்புடி என்ன வித்தியாசம்? எல்லா கல்யாணமான பொண்ணுங்களும் இந்த சீர் விசயத்துல ஒண்ணுதான்.
நான் கொண்டு வந்து தான் அங்க நிறையனும்னு இல்லை. ஆனா இந்த சீரு எனக்கும், என் பொறந்த வீட்டுக்கும் இருக்குற தொப்புள்கொடி உறவா அறுந்திடாமா இருக்கிறதுக்கு தான்.
அங்கே, அண்ணிக்கு என்ன கொறை? அண்ணா அவ்ளோ நல்லா பாத்துக்கிறாங்க. ஆனா, இருந்தாலும் தீபாவளி சீரு, பொங்கச்சீருன்னு வருசம் தவறாம, நம்ம வீட்டுல இருந்து கொண்டுப் போயி கொடுக்கிறீர்களே, எதுக்கு?
உங்களுக்கு உங்க அக்காவுக்கும் இருக்கிற உறவை நிலைநாட்டனும்னு தானே. எவ்வளவு சொத்து சொகம் இருந்தாலும், ஒரு பொண்ணுக்கு அவ பொறந்த வீட்டுல இருந்து சாதராண சேலை வந்தாலும், அது தங்கம் மாதிரி நினைச்சு அவ்ளோ சந்தோசப்படுவாங்க. ஏன்னா? அது பொறந்த வீட்டு சீருன்ற ஒரு சொல் போதும். நான் என்ன அவ்வளவு உள்ளிட்டு வரப் போறேனா என்ன? என் பெத்தவங்களுக்கு தெரியும், எனக்கு என்ன செய்யனும்னு. அப்புடி ஒன்னும் அள்ளி கொட்டிடா மாட்டாங்க.
எவ்ளோ அசால்ட்டா சொல்லுறீங்க, அவசியம் இல்லைன்னு? நாளைக்கு உங்க பொண்ணுக்கு இப்புடி சொல்லுவீங்களா?”
“ஆமா, நீ இப்புடி உங்கம்மா வீட்டுல போய் ஒரு வாரம் இருந்துக்கோ, பொண்ணு வந்த மாதிரிதான். குந்திதேவி ஆகலாம்னு ஏதும் ப்ளான்ல இருக்கியோ.? ஏன்? இரண்டு நாள் முன்ன போயிருந்தா ஆகாதா? வாய்க்கு மட்டும் கொறைச்சலில்ல.”
“இவ்வளவு வாய் ஆகாது உங்களுக்கு. இப்புடி சலிச்சிக்கிறவரு எதுக்கு எங்கம்மா கேட்டதும் சரிங்கத்தைன்னு அனுப்பிவிட்டிங்க? முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே.”
“நான் சொன்னா? உடனே பைய தூக்கிடுவியா நீயி? உங்கம்மா கேட்கும்போது எப்புடி மறுக்குறது? உனக்கு தெரிய வேண்டாமா? இது தான் சாக்குன்னு, நான் சொன்னதும் மூட்டைமுடிச்சை கட்டிட்ட, நான் உன்னை தேடுவேன்னு தெரிஞ்சும், நீ போயிருக்கன்னா, எவ்வளவு தைரியம் உனக்கு. தப்பெல்லாம் நீ பண்ணிட்டு, என்னைய அதட்டுவியா நீ?” நொடியில் அவளை குற்றவளாக்கி விட்டவனின் பேச்சு சாதுர்யத்தில் அசந்து தான் போனாள்.
அப்போது தான் ஒன்று உரைத்தது அவளிற்கு, அவன் பேச்சின் திசையை மாற்றி விட்டதை,
“ப்ஃராடு வாத்தி! என்ன பேசிட்டு இருந்தோம். அதை அப்புடியே ட்ராக் மாத்தி விட்டு, இப்போ என் மேல தப்பு சொல்லுறீங்களா?” அவள் எகிறிட,
“வருணா!”
“மூச்! டாபிக்கை சேன்ஞ் பண்ணீங்க கடுப்பாகிடுவேன். அவ்வளவு இளக்காரமா இருக்கா, எங்கம்மா வீட்டு சீரு உங்களுக்கு?”
“பல்லை தட்டிடுவேன் வருணாக்ஷி! யோசிச்சுப் பேசு.உன் இஷ்டத்துக்கு வார்த்தையை விடுவியா?”
“அப்போ, எதுக்காக வேண்டாம்னு சொன்னீங்க? காரணத்தை சொல்லுங்க.”
“நான் சொல்ல வர்றதை மொத நிதானமா கேளு. இங்க இதுவரைக்கும் சுபா அண்ணி சீரு எதுவும் கொண்டு வந்ததில்லை. அவுங்க வீட்டு நிலை தெரிஞ்சதால யாரும் இதைப் பத்தி கேட்டுக்கிட்டதில்லை.
இப்போ, நீ கொண்டு வந்தா அவுங்களுக்கு கஷ்டமா இருக்கும் இல்லையா? நம்ம அம்மா நம்மளுக்கு அப்புடி தரலையேன்னு பீல் பண்ணுவாங்க, அதோடு சொந்தக்காரங்களுக்கு அண்ணியை பேச ஒரு காரணம் கிடைச்சிடும். அதுக்குத் தான் இந்த சீரு எல்லாம் அவசியம் இல்லையேன்னு சொன்னேன்.” ஆரம்பத்தில் வேகமாய் பேசியவன் மனைவியின் அசையா பார்வையில், அவனது குரல் கீழிறங்கி ஒலித்தது.
அவனிற்கே, அவனது தவறு புரிந்ததே!
“சோ, உங்க அண்ணியோட மனசு, அவுங்களோட உணர்வுகள் கஷ்டப்பட்டிட கூடாதுன்னு, என்னோட சந்தோசத்தை, எங்க அம்மாப்பா மனசை குழி தோண்டி புதைக்கச் சொல்லுறீங்க சரியா.” என்றவளின் பேச்சும், பார்வையும் அப்பட்டமாய் அவனை குற்றம் சாட்டியது.
“என்ன வருணா, இப்புடி பேசுற. ஜஸ்ட் சீரு தானே வேண்டாம்னு சொன்னேன். அதுக்கேன் இந்தளவு சீரியஸ் ஆகுற? இவ்வளவு டீப்பா யோசிக்கனும்னு இல்லை.”
“உங்களுக்கு வேணும்னா சீரியஸ்ஸா இல்லாம இருக்கலாம். ஆனா ஒரு பொம்பளைபிள்ளைய பெத்து, ஆளாக்கி அதை கல்யாணம் கட்டிக் கொடுத்து, சீரு எல்லாம் செய்யனும்னு, சிறுக சிறுக சேர்த்து வச்சு இருக்கிற எங்கப்பாம்மாக்கு இது சீரியஸ்ஸான்னா விசயம் தான்.
உங்க அண்ணிக்காக, என் பொறந்த வீட்டு உறவை, பந்தத்தை வேண்டாம்னு சொல்லுறீங்க,
இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? அடுத்தவங்களுக்காக நான் ஏன் என்னோட சந்தோசத்தை விட்டுக் கொடுக்கனும். பெத்த பொண்ணுக்கு சீரு கூட கொடுக்க முடியலையான்னு எங்கம்மா அப்பா ஏன் பேச்சு வாங்கனும்?
அப்போ, இதேது உங்கண்ணனுக்கு குழந்தை இல்லாம இருந்திருந்தா அப்பவும் இப்படிதான் பேசுவீங்களா, எங்கண்ணி மனசை கஷ்டப்படும் நம்மளும் குழந்தை பெத்துக்க வேண்டாம்னு. அடுத்து இதையும் சொல்லுவீங்களோ, எங்கண்ணியோட தங்கச்சிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, அதனால கிருஷ்ணாவுக்கும் கல்யாணம் பண்ணாதீங்க, ஏன்னா அதை பார்த்தா எங்கண்ணி தன்னோடு தங்கச்சிக்கு கல்யாணம் ஆகலையேன்னு பீல் பண்ணுவாங்கன்னு சொல்லுவீங்களோ?”
“அடி பிச்சிடுவேன் ராஸ்கல்! என்னடி உளறிட்டு இருக்க? மெண்டலா நீ! எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போட்டு பேசுற.”
“ஆமா, உங்களை கட்டியிருக்கேன்ல அப்போ நான் மெண்டல் தான்.”
“வருணா, இதை ரொம்ப எமோஷனல் ஆக்குற நீயி. ரொம்ப பெரிய பிரச்சனையா மாத்தாதே விடு.”
“இன்னமும் நீங்க பேசறது தப்புன்னு உணரலைல நீங்க?”
“தப்புத்தான்டி போதுமா! விடு இந்தப் பேச்சை. நீ என்ன வேணும்னாலும் கொண்டு வா, இனி இதுல நான் தலையிட மாட்டேன்.”
“ம்ஹீம்! இப்பவும் நீங்க பேசின விசயத்தோட வீரியம் புரியலை உங்களுக்கு. பேசுற எல்லாத்தையும் பேசிட்டு அசால்ட்டா விடுன்னு சொல்லுறீங்க.”
“ம்ச் இப்போ நான் என்னதான்டீ பண்ணனும்னு சொல்ற.”
“நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம். முடிஞ்சா, என்கிட்ட கேட்டதையும், சொன்னதையும் அத்தைக்கிட்ட போய் கேட்டுப் பாருங்க பாக்கலாம். அப்போ தெரியும் நான் ஏன் இப்புடி பேசுறேன்னு.
நான் வைக்கிறேன் இதுக்கு மேலேயும் பேசுனா, நான் இன்னமும் அதிகமாகத்தான் பேசுவேன்.” என்றவள்,
“வரு! வரு!” என்றவனின் பேச்சை காதில் வாங்காமல் இணைப்பைத் துண்டித்திருந்தாள். அடுத்தடுத்து இவன் அழைப்பு விடுத்தும் அவள் ஏற்கவில்லை.
“அய்யோ!” என தலையிலடித்துக் கொண்டான் இவன்.
“தேவையில்லாம இதை பேசிட்டோமோ. அவ சொன்ன மாதிரி அம்மாக்கிட்ட போய், ஏன் அக்காக்கு இன்னும் சீர் கொடுக்குறீங்கன்னு கேக்கவா முடியும்? அசிங்கமா நினைக்க மாட்டாங்க. கூடப்பொறந்தவளுக்கு செய்ய கணக்கு பாக்குறியேடான்னு பேச மாட்டாங்க.” என தன்னைத்தானே திட்டிக் கொண்டவனுக்கு, இந்த விசயத்தை தவிர்த்திருக்கலாம் என ஆயிரம் முறையாக எண்ணிக் கொண்டான்.
‘வருணா சொன்னதுப் போல், மேகலாவின் கணவன் அவளை தங்கமாய் தாங்கினலும், தாங்கள் சீர் கொண்டும் செல்லும் பொருட்களை கண்டால் அவளின் முகம் சந்தோசத்தில் மிளிரும். அதனைக் கண்டு இவனும் கர்வம் கொண்டிருக்கிறானே, என்ன நடந்தாலும் என் அக்காவிற்கு அவளது பிறத்த வீட்டு சொந்தம் அற்றுப் போகாது என்று, எத்தனை தடவை பெருமை பேசியிருக்கிறான்.
இப்போது அதையேதானே அவனது மனைவியும் விரும்புகிறாள். அதில் தவறில்லையே! தான் உணரும் பெருமை, கர்வத்தினை கிருஷ்ணாவும் உணர வேண்டாமா? அவனின் உரிமையை தட்டிப் பறிக்க பார்த்திருக்கேனே.’ என தன்னையே நிந்தித்துக் கொண்டவனுக்கு, தனது தவறு புரிந்தது.
அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டானே! வருணா சொன்னதுப் போல் அண்ணிக்காக பார்த்து மனைவியின் மனதினை உடைத்து விட்டானே.
“நீதான்டா பைத்தியம், அவ இல்லை.பேசத் தெரியாம பேசி வச்சிருக்கிக்கியேடா, உனக்கு வாய் தான்டா சரியில்லை. சனிப்பகவான் என் நாக்குல உட்காந்திருக்காருப் போல” என்றவனுக்கு, மிகவும் கலவையாய் போய்விட்டது.
மனைவியின் உணர்வுகளை கஷ்டப்படுத்தி விட்டான் என்று நன்குப் புரிந்தது அவனிற்கு. அவளை எப்படி சமாதானம்
செய்வது என தெரியாமல் விழித்தவனிற்கு, அவள் பேசிய வார்த்தைகளில் ஒப்புதல் இல்லை. தான் பேசியதற்கு பதிலுக்கு அவளும் வார்த்தைகளை விடுவாளோ? என கோபம் கொண்டான்.