priya pandees
Moderator
அத்தியாயம் 12
அன்று வெள்ளிக்கிழமை, ஞானமும், ஆண்டாளும் கிஷோரின் அதாவது மார்க்கின் தாய்மாமா வீட்டு திருமணத்திற்கு கிளம்ப, மனோ மிக அமைதியாக பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.
"நீ தான் அவள ஏத்திவிட்டு மொத்தமா கிளம்பவிடாம பண்ணிட்ட மீனம்மா. இதுல அவள கிளப்ப முடியாதுன்னு அன்னைக்கு பத்திரிகை வைக்க வந்தவங்கள அங்க நேரா வேற அனுப்பி கல்யாணத்துக்கு சொல்ல வச்சு, அவ்வளவு கிளாட்டா பண்ணிட்டு இன்னைக்கு இவ வரவே இல்லனா அங்க என்ன பேசுவாங்க?" என ஆண்டாள் தான் மீனம்மாவிடம் முனங்கி கொண்டிருந்தார்.
"நானா அவ கையையும் காலையும் கட்டிபோட்டு வரவிடாம வச்சுருக்கேன்? அம்மா தான நீயி அரட்டி பேசி கூட்டிட்டு போயேன் ஆண்டாளம்மா, எதுக்கு இங்கன நின்னு முனங்குறவ?"
"ஆமா என் பேச்ச கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பா. இப்ப அங்க போயி என்னன்னு சமாளிக்க நானு. மாப்ள வேற வந்துருக்காறாம். அவுக இறங்கி வர்றப்ப நாம முகத்த திருப்ப கூடாதுல்ல? இவ மூணு வருஷமா காத்துருக்கதலாம் விட்ருவாங்க, ஆம்பளயாளு அங்க வந்துட்டு இவ வருவான்னு எதிர்பாத்து நிக்கைல இவ வராம போறது தான் பெரிய விஷயமா பேசுறமாதிரி ஆவும், வந்துட்டு கூட அந்த மனுஷன்ட்ட சண்டைய போடலாம்ல இவ?"
"அவர் அமெரிக்காவுல இருந்து இன்னைக்கு தான் வந்துருக்காறாமா? அங்கன பேசுறவுக பேசுனா கேட்டுட்டு நிக்காம பதில் சொல்ல பாருங்க, வந்து ஒரு வாரமா என்ன செஞ்சாக உங்க வீட்டு பையன்னு நாம தான் கேட்கணும் ஆண்டாளு"
"மீனம்மா? நமக்கு நம்ம புள்ள வாழ்க்கை சரியாவணும், சண்டைய புருஷனும் பொண்டாட்டியும் தான் போட்டுக்கணும். எந்த மல்லுகட்டுனாலும் அவங்க ரெண்டு பேரும் சரி பண்ணிக்குறது தான் நல்லது, நாமளே நீங்க வந்தா என்னனு எடுத்து குடுக்க கூடாது"
"என்னங்கேன். வந்து ஒரு வாரமாச்சுல்ல? அவரு பொண்டாட்டி பிள்ளைக தான? தானா வந்து கூட்டிட்டு போனா என்னவாம் அவருக்கு? நியாயத்துக்கு கிருஷ்ணாவையும் இன்னைக்கு கூட்டிட்டு போக கூடாது நீங்க. ஆனா அதையே அந்த புள்ள சரின்னு விட்ருக்கு" என இவர் சண்டைக்கு வர,
"இத தான் சொல்றேன். இப்படி உசுப்பேத்தி தான் அவள யோசிக்கவே விடல நீ"
"நியாயத்த பேச கூடாதாமா? மனோக்கு நா சொல்லிதர தேவையே இல்ல, அவளுக்கே எல்லாம் தெரியும், அவ சரியாத்தான் நடக்குறா"
"நீ இங்கன இருந்துட்டு எல்லாம் பேசுவத்தா. அங்கன போய் கல்யாணத்துல முகத்த காமிச்சுட்டு வர போற எங்களுக்கு தான தெரியும்"
"நா வரமாட்டேம்னா சொல்றேன்? என்னைய அவங்க அழைக்கவே இல்ல, ஆனாலும் மனோக்காக போவேன். போகட்டா? போய்ட்டு ரெண்டுல ஒன்னு கேட்டுட்டு வந்துடட்டா?" என்றார் மீனம்மா.
"அதுசரி டிவோர்ஸ் வாங்காம திரும்ப வந்துருவியா நீயி? ஏற்கனவே அத தான சொல்லிட்டே இருக்க, வாய்ப்பு கிடைச்சா விட்டு வைச்சுருவியா? என்னைக்கு இருந்தாலும் அவ புருஷனோட வாழ போயிருவா, ஏன்னா இது புருஷன் பொண்டாட்டி சண்டை. நாம முகத்த முறிச்சுட்டா பிள்ளைய போய் பாக்க வர இருக்க முடியுமா சொல்லு? எனக்கு அறுபது உனக்கு எழுபதுன்னு இருக்கோம் இன்னும் எவ்ளோ நாளைக்கு அவள தாங்க முடியும்? அப்புறம் அவ ஒத்தைல நிக்கவா?" என பேசிக்கொண்டிருக்க,
"கிளம்பாம என்ன செய்ற ஆண்டாளு?" என வந்தார் ஞானம்.
"ஆட்டோக்கு சொல்லிட்டீங்களா?"
"ம்ம் இப்ப வந்துருவான்" என்றவர், "மனோ!" என அழைக்க,
"என்னப்பா?" என்றவளும் பள்ளிக்கு தயாராகி கண்ணனோடு வந்து நின்றாள்.
"கிருஷ்ணா எங்க?" என்றார் அவளிடம்.
"அப்பவே கிளம்பி வந்துட்டானே? தாத்தாட்ட போறேனுட்டு தான் வந்தான். ம்ச் மண்ணுல உருள போயிருப்பான்பா கவனிக்கலையா நீங்க?" என முறைத்தவள், "கிருஷ்ணா!" என கத்தி அழைக்க,
"நீ இருலே நா பாத்து கூப்பிட்டுக்குறேன்" என்றவர், வாசலுக்கு விரைந்துவிட,
"அங்க வர இவன கூட்டிட்டு போறது சரி. அவன் கேட்டான்னு எதையும் வாங்கி குடுக்காதீங்க, அப்புறம் வாந்தி எடுத்து ஒருபாடு படுத்திடுவான். அப்பாக்கு சொல்லிட்டே இருங்க, இல்லனா ரெண்டு பேரும் தான் கஷ்டபடுவீங்க" என்க,
"நீ வந்தா என்ன மனோ?"
"மூணு நாளா இத தான் பேசிட்ருக்கோம்மா. எனக்கு அங்க வந்து பாவமா நிக்க விருப்பமில்ல, ஆளாளுக்கு வந்து அட்வைஸ் பண்ணுவாங்க அத கேட்கவும் பொறுமை இல்ல. முக்கியமா நீ பார்த்து கட்டிவச்சவரு முன்ன வந்து நிக்க இஷ்டமே இல்ல. புரியுதா? அங்க யாராவது வந்து கேட்டாலும், அவளுக்கு இங்க வர இஷ்டமே இல்லயாம்ன்னு சொல்லிட்டு வாங்க"
"அடேங்கம்மாடி! உன் அம்மாவும் அப்பாவும் இப்படி மட்டும் அங்கன சொல்லிட்டாகன்னா இன்னைல இருந்து நா ஊமையாகிடுறேன் மனோ" என்றார் மீனம்மா.
"மீனம்மா!" என மனோ, ஆண்டாள் இருவரும் ஒன்றுபோல ஆட்சேபிக்க,
"நடக்காததுன்னு உங்களுக்கே தெரியுதுல்ல, பேசாம கிளம்புங்க எல்லாம்"
"சரி, மல்லிகா அசமந்தமா இருந்தாலும் பிள்ளைக்கு அவளயே செய்ய சொல்லு அதையும் செஞ்சு நீட்டாத மீனம்மா" என பேச, வெளியே ஆட்டோ சத்தம் கேட்டது.
"சரித்தா நா பாத்துகிடுதேன். நீங்க பாத்து போய்ட்டு வாங்க" என மீனம்மா சொல்ல, ஆண்டாள் நேராக மல்லிகா அறை வந்து கதவை தட்ட பிள்ளையுடன் வெளியே வந்தாள் அவள்.
"காலைல உனக்கு தான் நாங்க சாப்பிட வான்னு சொல்லணும்னா, பிள்ளை நீ பெத்தது தான? அதுக்கு என்ன குடுக்கணும்னு பாத்து குடுக்க மாட்டியா? அதுக்கும் ஒரு ஆளு சொல்லணுமா உனக்கு?" என ஆண்டாள் அதட்டவும்,
"விடியகாலைல மூணு மணிக்கு தான் தூங்கினா. இப்பதான் ரெண்டு பேரும் எந்திச்சே நிக்றோம்" என மெதுவாக அவள் சொல்ல,
"வேலைக்கு போக ஆரம்பிச்சதும் என்னதான் செய்ய போறியோ? நைட்டுக்கு அவ வயித்த நல்லா நிறைச்சுவிட்டாளே, நல்லா தூங்குவான்னு சொன்னா கேக்கவும் மாட்டேங்குற"
"ஆண்டாளம்மா. ஆட்டோ வந்துட்டு வா" என ஞானம் சத்தம் கொடுக்க, "பாத்துக்கோ மீனம்மா. போய்ட்டு வரோம்" என கிளம்பிவிட்டனர். கிருஷ்ணனோடு ஞானமும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார், ஆட்டோவில் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பழூருக்கு பேருந்து ஏறிவிடுவர்.
அவர்கள் சென்றதும், "நானும் கிளம்புறேன் மீனம்மா" என ஒருகையில் கைபையோடு சாப்பாட்டு பையும், இன்னொரு கையில் கண்ணனை பிடித்தபடி வந்தவள் முகம் மிகவும் சோர்வாக இருந்தது.
"மூஞ்சியேம்தா வாடிபோய் இருக்கு, புருஷன தேடுனா ஒரெட்டு போய்ட்டு சண்டைனாலும் போட்டுட்டு வாயேன்" என்றார் அவள் முகத்தை ஊன்றி கவனித்து மீனம்மா.
"பீரியட்ஸ்!" என முறைத்தாள் மனோ.
திரும்பி காலன்டரை பார்த்தவர், "ஒரு வாரம் முன்னவே வந்துட்டாக்கும்? அது கூட உன் புருஷன பார்த்து பயப்படுது பாறேன்" என்க,
"ஏற்கனவே கடுப்புல தான் இருக்கேன், இடக்குமடக்கா பேசி என்னையும் பேச வைக்காத மீனம்மா"
"உனக்கு ஸ்கூலுக்கு லேட்டாகுது பாரு" என்று ஜகா வாங்கிவிட்டார்.
"ஆமா. சரி நா போய்ட்டு வரேன்" என அவளும் வண்டியை எடுத்துவிட்டாள்.
"அங்க மனோவ தேடுவாங்க தான?" என அதுவரை வேடிக்கை பார்த்து நின்ற, மல்லிகா கேட்க.
"அங்கேயே இருந்து தேடிகிட்டு இருந்தா தேடிகிட்டே மட்டும் இருக்க வேண்டியது தான்"
"இன்னைக்கு மனோ போகலனு நாளைக்கு எல்லாம் பஞ்சாயத்து பண்ண கிளம்பி வந்துட்டா?"
"வரட்டும் வந்தா தான முடிவு தெரியும்"
"ஒருவேளை வரலைனா? மறுபடியும் கோச்சுகிட்டு மனோ வீட்டுகாரர் அவர் பாட்டுக்கு அமெரிக்கா கிளம்பிட்டா?"
அவளை மார்க்கமாக பார்த்தவர், "நாம பஞ்சாயத்து பண்ண அமெரிக்கா கிளம்பிருவோம். டிக்கெட் மனோ மாமியார் வீட்டு கணக்குல எழுதுவோம். நாமளும் அமெரிக்காவ பாத்தமாதிரி ஆகும்ல?" என சொல்ல,
அவரை திரும்பி பார்த்தவள், கண்களை சுருக்கி, "எப்ப பார்த்தாலும் கிண்டல் மீனம்மா உங்களுக்கு. நா பாத்ரூம் போய்ட்டு குளிச்சிட்டு வரேன் இவள பிடிங்க" என மகளை குடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.
"ஏன்டி குட்டி, நாமளும் அமெரிக்கா போவோமா?" என கேட்டவாறு சின்னவளை கொஞ்சியபடி வாசலில் அமர்ந்து விட்டார் மீனம்மா.
ஆண்டாளும், ஞானமும் அங்கு சென்றதுமே, பார்த்த அனைவரும் முதலில் கேட்டது, "மனோ வரலியா?" என தான்.
"வரணும்னு தான் சொல்லிட்ருந்தா திடீர்னு உடம்புக்கு முடியல"
"நம்புற மாறியா இருக்கு. புருஷன் வந்துருக்கும்போது வந்து நின்னாதான அவனயும் இழுத்து பிடிக்க முடியும். இப்படி விட்டுட்டு நிக்குதே இந்த புள்ள? நீங்களாவது எடுத்து சொல்லி கூட்டிட்டு வந்துருக்க வேணாமா? பொம்பள பிள்ளை வாழ்க்கையாச்சுல்ல? கட்டிக்குடுத்துட்டு கைக்குள்ளயே வச்சுக்க போறீகளா?" என பேச பேச, அமைதியாக கேட்டுதான் இருந்தனர்.
மேல் தளத்தில் நடக்கும் பந்தியில் நின்ற மார்கண்டேயனிடம், "மாரா உன் மாமனார், மாமியார் வந்தாச்சு, போய் பேசிட்டு வா" என மாமா முறையில் ஒருவர் சொல்ல,
"இதோ போறேன் மாமா" என சிரித்தவாறு, தலையை கோதி சரி பண்ணிக்கொண்டு படியில் வேகமாக இறங்கி வர, எதிரே கீழேயே அவர்களை கண்டான். ஒரு நொடியில் பார்வையில் அவர்களை சுற்றி மனோ அங்கில்லை என்று கண்டுகொண்டான். 'உள்ளே சென்றுவிட்டாளா? இல்லை இனிதான் வருகிறாளா?' என ஆராய்ச்சியோடு தான் அருகில் வந்தான். அவர்களும் நிமிர்ந்து அவனை கண்டனர்.
வாசலில் இருந்து சற்று உள்ளே தான் நின்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். நேவி ப்ளூ நிறத்தில் சட்டையும் வெள்ளை நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தான் மார்கண்டேயன். பார்த்ததும் மரியாதை தரும் தோற்றம் தான் அவனுக்கு, அதிலும் எப்போதும் நேர்த்தியான உடையில் இருக்க, சட்டென்று கோவமாக யாருக்கும் பேசிவிட தோன்றாது அவனிடம்.
மூன்று வருடங்கள் கழித்து மருமகனை பார்ப்பதால், புதிதாக மாப்பிள்ளையை பார்ப்பவர்கள் போல கொஞ்சம் ஆர்வமாகவே பார்த்து கொண்டனர். கிருஷ்ணா தான், "அப்பா!" என அதிர்ந்து பார்த்தான். அவனிடம் அப்பாவை பார்க்க போவதாக கூறியிருக்கவில்லை.
அவனுக்கு தெரியும், அப்பா என்பவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்று. யாராவது கேட்டாலும், அதை தெளிவாக சொல்லியும்விடுவான். ஆனால் அவன் அப்பாவிடம் பெறும் அனைத்து அரவணைப்பும் தந்து கொண்டிருப்பது பாலாவும், ஞானமும் தான். அதனால் மார்கண்டேயனை கண்டதும் பாய்ந்து கொண்டெல்லாம் செல்ல தோன்றவில்லை. பார்த்ததும் அடையாளம் தெரிய, குறுகுறுவென பார்த்தபடி தாத்தா கையிலேயே நின்று கொண்டான்.
"வாங்க மாமா, வாங்கத்த. எப்படி இருக்கீங்க?" என வெகு சாதரணமாக கேட்டான் மார்க். மூன்று வருடங்களாக அவர்கள் பெண்ணிடம் பேசவில்லை, அவர்கள் பேர பிள்ளைகளை தேடவில்லை, அவர்களின் பொறுப்பை ஏற்று மாதத்திற்கான தொகையை கூட அனுப்பவில்லை. இன்று நேரில் வந்து நின்றதும், எதுவுமே நடக்காதது போன்ற முக பாவனையில் பேசுகிறான். ஆனால் திருமண வீட்டில் அவனிடம் என்ன தர்க்கம் செய்துவிட முடியும்? அதனால் அவன் கேள்வியை விடுத்து, "வாங்க! எப்ப வந்தீங்க?" என கேட்டார் ஞானம்.
"ஒரு வாரம் ஆச்சு" என்றவன், அவரின் கீழ் நின்ற கிருஷ்ணனை அருகில் இழுத்து தோளோடு அணைத்து தன் இடுப்போடு இறுக்கி பிடித்து, உச்சந்தலையை தடவி குனிந்து முத்தமிட்டான். கிருஷ்ணன், அவன் கைக்குள் அசையாமல் நின்றான்.
"எப்ப வீட்டுக்கு வர்றீங்க?" என்றார் ஞானம் அடுத்ததாக.
"ஊருக்கு கிளம்பும்போது மனோவ விட வருவேன்ல மாமா அப்ப வரேன்" என்றவன் மறுபடியும் அவர்களைச் சுற்றி பார்வையால் மனோவையும் தேடினான்.
"உன் பொண்டாட்டியவா தேடுத? அவ வரலியாம் உடம்பு சரியில்லையாம்" என்றார் அவன் சித்தி ஒருவர்.
"நிஜமாவா மாமா?" என்றவன் முகமே சடுதியில் மாறியிருந்தது.
"ம்ம் வரல" என்றார் ஞானம். 'திரும்ப போவேன் அப்ப கொண்டு விடுவேன்' என சொல்பவனிடம் வேறு என்ன சொல்லியும் சமாளிக்க விரும்பவில்லை அவர்.
"நிஜமாவே உடம்பு சரியில்லை தான?"
"ஆமா மாப்ள" என்றார் ஆண்டாள் வேகமாக. கொஞ்சம் பயந்து தான் போனார்.
"சரி நா போய் பார்த்துட்டு வரேன்" என்றவன், "கார்த்தி, மாமாட்ட பைக் கீ வாங்கிட்டு வா" என்றான் சித்தி மகனிடம்.
"இங்க கல்யாணத்த நல்லபடியா முடிச்சுவச்சுட்டு நாளைக்கு கூட வாங்க மாப்ள" என்றார் ஞானம்.
"வேணும்னே பேசுறீங்களா மாமா? நா இங்க எப்பவாது தான் வர்றேன், அவங்க தான் எப்பவும் என் அம்மா அப்பாவ பார்த்துக்குறாங்க. அப்படிபட்ட என் மாமா வீட்டு பங்க்ஷன் நா இருந்து ஹெல்ப் பண்ணணும்னு தான் வந்துட்டு அங்க வரல. இதனால தான் அவ வரலையா?" என்றான்.
"அவளுக்கு உடம்புக்கு முடியல மாப்ள அதான் வரல" என்றார் மறுபடியும் ஆண்டாள்.
"அத தான் நா போய் பார்த்துக்குறேன், இவ்ளோ நாள் வெயிட் பண்ணதே ஒரு வாரத்துல வந்துட போறாங்கன்னு தான்" என்றவன், "கிருஷ்ணாவையும் கூட்டிட்டு போறேன்" என அவனை பிடித்திழுக்க, அவன் தாத்தாவின் மறுகையை பிடித்துக்கொண்டான்.
"வா கிருஷ்ணா!"
"தாத்தா கூட வரேன்"
"அம்மாவ பாக்க தாத்தா வீட்டுக்கு தான் போறேன் வா" என்றான் இதமாகவே.
"தாத்தா கூட பஸ்ல தான் வருவேன். அம்மா வீட்ல இல்ல ஸ்கூல் போய்ட்டாங்க"
"ஸ்கூல்?" என பல்லை கடித்தவன், "அப்ப பொய்தான்ல?" என ஞானத்திடம் கேட்க,
"முக்கியமான வேலை!" என அவர் முடிக்குமுன், "பரவால்ல மாமா" என கிருஷ்ணனை இழுத்துச் சென்று வண்டியில் முன்னால் அமர வைத்தவன் வண்டியை எடுத்துவிட, கிருஷ்ணா, "தாத்தா தாத்தா!" என அழைத்து அவ்வளவு அழுகை அழுதான். மண்டப வாசலில் சொந்தங்கள் ஒரு கூட்டமே பார்த்து நிற்க, மார்கண்டேயனுக்கு இன்னும் இன்னும் கோவம் அதிகரித்தது. மார்க்கின் அம்மா, அப்பா, அக்கா குடும்பம் வரும் முன் கிளம்பியிருந்தான்.
"அப்பா கூடத்தான போறான். பிள்ளை பிடிக்கிறவன் தூக்கிட்டு போற மாதிரி அழுறான். அப்பாவ தேடவே விடாம வளத்துட்டாளா மனோ?" என ஒருவர் சொல்ல,
"இவேன் வராம கடந்தா பிள்ளை எப்புடி ஒட்டுவான்?" என்றார் இன்னொருவர்.
"சரி சரி. அவேன் பொண்டாட்டிய அவனே போய் கூட்டிட்டு வரட்டும். இப்படியே விட்டா ரெண்டு பேரும் ரெண்டு திசைல தான் நிப்பாங்க. பிள்ளைக தான் பாவம். நீங்க வாங்க" என ஆண்டாளையும் ஞானத்தையும் உள்ளே அழைத்து சென்றுவிட்டனர் அவன் சொந்தங்கள். அவர்களோடு உள்ளே சென்று விட்டவர், அரைமணி நேரம் கழித்து தான் தனியே வந்து மனோவிற்கு அழைத்து விஷயத்தை பகிர்ந்தார்.
"ப்பா!" என்றவள் இதை எதிர்பார்த்திருந்தாலும், 'திமிர் பிடித்தவன்! வராமல் இருந்தாலும் இருப்பான்' என நினைத்திருந்தாள். இப்போது வருகிறான் என்றதும், 'சரி வரட்டும், பார்த்துகொள்ளலாம். செய்றதெல்லாம் செஞ்சுட்டு சாருக்கு கோவம் வேற வருமோ? ஒரு வாரத்துக்கே அவ்ளோ கோவம் வருதுன்னா எட்டு வருஷத்துக்கு எனக்கு எவ்ளோ கோவம் வரணும்? வரட்டும் இதோட ரெண்டு பேர் கோவத்தையும் அளந்துடுறேன் இன்னைக்கு' என முடிவுக்கு வந்துவிட்டாள்.
மார்கண்டேயன் வரும் வழியில், "எங்கூட வர இவ்வளவு அழுவியா கிருஷ்ணா? அப்பா கூட வர இஷ்டம் இல்லையா? ரொம்ப நாளா அப்பா பேசலன்னு கோவமா?" என மெதுவாக கேட்க,
"இல்ல! தாத்தாகிட்ட போறேன்" என தான் சொல்லி அழுதான்.
"அப்பா கூட பேசமாட்டியா நீ? நா பேசாததுக்கு சாரிடா" என்றும் சொல்லி பார்த்தான்.
"தாத்தா!"
"பெரிய பையன் தான நீ? இப்படி அழலாமா? அப்பா உனக்கும் கண்ணனுக்கும் டாய்ஸ்லாம் நிறைய வாங்கிட்டு வந்துருக்கேன். வேணுமா?"
"வேணும்!" என்றான் அதற்கு மட்டும்.
"நாம போய்ட்டு அம்மாவையும் கண்ணனையும் கூட்டிட்டு வருவோம், இங்க அப்பாச்சி வீட்ல தான் எல்லாம் இருக்கு. வந்து எடுத்து தரேன்" என சொல்ல,
"அங்க வர மாட்டேன். இங்க தாத்தா கூட மாமா கூட தான் இருப்பேன்" என்றான் தெளிவாக.
"ஏன் அங்க வரமாட்ட?"
"எனக்கு ஃப்ரண்ட்ஸ் இங்க தான் இருக்காங்க. தாத்தா, மாமாலாம் இங்க தான் இருக்காங்க"
"அங்க வந்தாலும் ஆச்சி தாத்தா இருக்காங்க, புது ஃப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க"
எங்கும் கூட்டிச் சென்றுவிடுவானோ என பயந்தவன், "தாத்தா கிட்ட போணும், தாத்தா" என அழ துவங்கிவிட,
"தாத்தா பஸ்ல வராங்க. நாம பைக்ல போவோம். அழாம வரணும்" என கொஞ்சம் குரலை உயர்தவும், இன்னும் கத்தி அழுதான், ஆனால் மனோவிடம் போல் கையை காலை உதறி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, எதிர்த்து பேசவரவில்லை. அப்பா அடித்துவிடுவாரோ என்ற பயம் இருக்க, அழுதுகொண்டு மட்டும் வந்தான்.
"கிருஷ்ணா!" என்றதும் சத்தம் கொஞ்சம் குறைந்தது, கொஞ்சம் தூரம் சென்றதும், அழுத அழுகைக்கும் வண்டியின் எதிர்காத்திற்கும், வண்டியிலேயே வாந்தி எடுத்தான்,
"டேய்! வாந்தி வந்தா சொல்லலாம்ல வண்டிய நிறுத்திருப்பேன்ல?" என பேசியபடி, அடுத்து வந்த ஊருக்குள் ஒரு டீகடையில் நிறுத்தி, அவரிடம் தண்ணீர் வாங்கி அவனுக்கும் வாய் கழுவி, வண்டியையும் லேசாக கழுவி, அவனுக்கு பாலும் தனக்கு டீயும் வாங்கி குடித்து அவன் குடித்து முடிக்கும் வரை பொறுமையை இழுத்து பிடித்து தான் மீண்டும் கிளம்பினான்.
ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் குடித்த பாலையும் வெளியே தள்ளினான் கிருஷ்ணன், வண்டியில் முதலில் எடுத்திருந்த வாந்தி வாடையின் காரணம் மறுபடியும் அவனுக்கு வாந்தி வந்திருந்தது. இந்த முறையும் வண்டியிலும் அவன் உடையிலும் எடுத்திருக்க, கிறங்கிவிட்டிருந்தான் மகன். அப்படி கிறங்கி அவன் மேலேயே சாய்ந்திருந்தவனை திட்டகூட முடியவில்லை மார்க்கினால்.
சின்னவன் சட்டையை மட்டும் கழற்றி, அதை வைத்தே வண்டியை துடைத்து மலை பாறையில் தூக்கி வீசிவிட்டு, தன்னை பார்க்க திரும்பி அமர வைத்து தன் சட்டையோடு சேர்த்து அணைத்து பட்டன் போட்டவன், வண்டியை எடுத்து அடுத்து வந்து நிப்பாட்டிய இடம் மனோ வீடு தான்.
மீனம்மா மாலை சிற்றுண்டிக்காக மாவை எடுத்து வந்து வாசலில் செல்வோர் வருவோரை பார்த்தவாறு பிசைந்தபடி இருக்க, மார்கண்டேயனின் வண்டி வந்து நின்றதில் புருவம் உயர்த்தி தான் பார்த்தார்.

Last edited: