priya pandees
Moderator
அத்தியாயம் 13
"ஃபாரீன் சாரு! வருவீகன்னு நினைச்சேன் அதுக்கு இம்புட்டு அவலாதியா வந்து நிக்கீக? அமெரிக்காவுல என்னன்னு மூணு வருஷம் இருந்தீக, அங்கன உங்கள பூதம் எதும் பாட்டில் போட்டு அடைச்சு வச்சுட்டோ?" என கேட்டபடி வேகமாக வந்தவர், "கிருஷ்ணா, ஏலே! வாந்தி எடுத்துட்டானா?" என்றார் அவரே.
"ஆமா. இவனுக்கு ட்ராவல் ஒத்துக்காதா இல்ல அல்ரெடி உடம்பு சரியில்லையா?" என்றவன் தன் உடையை தளர்த்தி அவனை நிமிர்த்திவிட,
அவனை தூக்கியவாறு, "எங்கன போனாலும் எதுல போனாலும் வாந்தி எடுத்துட்டே தான் வீடு வந்து சேருவான்" என்றவர் நேராக வாசல் ஓரத்தில் படிக்கூடு அடியில் இருந்த கழிப்பறைக்குள் அழைத்துச் சென்று அவனை மேல்கழுவ வைக்க, கண்ணை திறந்து திறந்து மூடியபடி தான் இருந்தான் கிருஷ்ணன்.
"மனோ எப்ப வருவா மீனம்மா?" என்றான் கொஞ்சம் சத்தமாக. இன்னும் வண்டியை விட்டு இறங்கி வீட்டினுள் வரவில்லை.
மீனம்மா உள்ளிருந்தே, "நாலு மணிக்கு வந்துருவா. நீங்க உள்ள வாங்க" என்றழைக்க,
"ஸ்கூல் நேம் என்ன?" என்றான் அடுத்த கேள்வியாக.
அவனை திரும்பி பார்த்தவர், தலையை அசைத்தபடி, "வி.எஸ்.வி ன்னு கேளுங்க, வழி சொல்லிருவாங்க" என்றதும் கிளம்பிவிட்டான்.
அவள் தினமும் வந்து செல்லும் மலை பாதையை இருபக்கமும் பார்த்தவாறு தான் பள்ளிக்கு வந்து சேர்ந்தான். இவன் கிளம்பியதுமே, "மனோ, உன் வீட்டுகாரர் அங்க தான் வந்துட்ருக்காரு" என அழைத்து சொல்லிவிட்டார் மீனம்மா.
"இங்க எதுக்கு வரவிடுறீங்க? எல்லாரும் வேடிக்கை பார்க்கவா? அங்கேயே பிடிச்சு வைக்க வேண்டியது தான? நாந்தான் இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேனே?"
"நா பிடிச்சு வைக்கவா? வாசல் நின்னுட்டு அப்படியே கிளம்பிட்டாரு. கிருஷ்ணாவ கூட்டிட்டு வந்துட்டாக, ஒரே வாந்தி, இப்பதான் குளிக்க வச்சுருக்கேன், மல்லி ஓமதண்ணி போட்டு குடிக்க வைக்கேன், நீ அவர பேசி சரிகட்ட பாரு. கோவமா வந்தமாதிரி தெரியல" என பேச,
"என்னைய பாத்ததும் போன கோவம் மொத்தமா வந்துரும்" என எரிச்சலாக தான் சொல்லி வைத்தாள். அவனை பார்க்க போகிறோம் என்றதும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் கிளர்ந்தாலும் அதையும் தாண்டி நின்றது அவன் மேல் உள்ள கோவம், அதும் இப்போதிருக்கும் உடல்நிலைக்கு அவளின் மனநிலை யார்மீதுடா எதையும் கொண்டு அடிப்போம் என்று தான் இருந்தது, அதனால் அன்று போல படபடப்பு பயம் எதுவும் இல்லாமல் தலைவலியோடு மட்டும் தான் அமர்ந்திருந்தாள்.
பத்து நிமிடத்தில் வந்தும்விட்டான், வெளியே மஹிமாவிடம் அவன் விசாரிக்கும் கணீர் குரல் இவளை இங்கு வெகு எளிதாக சலனபடுத்தியது. அவன் இவ்வளவு செய்தும் பிடித்தம் தொலையாது இருப்பது தான் அவளின் பிரச்சனையே, அதைத்தான் அவன் அவனுக்கு சாதகமாகவும் உபயோகித்து கொள்கிறான்.
"ம்கூம், இந்த டைம் நீ ஈசியா தெரிய கூடாது மனோ!" என தலையை அழுத்தமாக தேய்த்து குடுத்தவள், மணியை திரும்பி பார்த்து கொண்டாள். பள்ளி முடிய இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது.
அங்கு வெளியே,வெளிநாட்டில் ஊரிய நிறத்தில் கொஞ்சம் உயரமாக திமிராக வந்து நின்றவனை, மஹிமா, 'பே!' என பார்க்க.
"மனோரஞ்சதிம், அவங்கள பாக்கணும்" என்றான் அவனாகவே.
"அந்த ரூம்!" என அவள் காட்டிய அறையை திரும்பி பார்த்தான், 'அட்மினிஸ்ட்ரேட்டர்!' என்ற பலகை இருந்தது, 'இவ டீச்சர் இல்லையா இங்க?' என யோசித்தவன், நகர போக. பள்ளிக்கு வேலைக்கு போகிறாள் என கேள்விபட்டதும், அவள் படிப்பிற்கு ஏற்ற வேலைதானே என்றதோடு முடித்து கொண்டிருந்தான்.
"அட்மிஷன் விஷயமா சார்?" என நிறுத்தினாள் மஹிமா.
தமயந்தி அவனையே பார்த்திருக்க, அவரையும் சுருங்கிய பார்வை பார்த்தவாறே, "பெர்சனல் விஷயம்" என்றவன், கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே செல்ல, புது அறிவியல் ஆசிரியருக்காக வந்த ரெசுயூம்களில் மொழியறிவு, திறமைகள்(ஸ்கில்ஸ்) அடிப்படையில் அதை பிரித்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தவள், அவன் உள்ளே நுழையவும் நிமிர்ந்து பார்த்தாள்.
அடர் பிங்க் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள் மனோ. குட்டியாக நெற்றியிலும், வகுட்டிலும் வைத்திருந்த குங்குமம், முக சோர்வையும் தாண்டி அவளை அம்சமாக காட்டியது அவனுக்கு.
"மூஞ்சு மட்டும் புத்தர் ரேஞ்சுக்கு சாந்தமா வச்சுகடி" என பெருமூச்சுவிட்டான், உண்மையில் தொலைவில் இருக்கும்வரை அவன் போக்கில் தான் இருப்பான், ஆனால் இங்கு வந்துவிட்டால், அவள் அருகிலேயே வேண்டும். அவனும் திணறி அவளையும் திணறடித்துவிடுவான் மொத்தமாக. வந்திருக்கும் பத்து இருபது நாட்களில் அவன் காட்டும் பாசமும், ஒட்டுதலும் அரவணைப்பும் எப்போதும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என அவள் சொல்ல, 'எப்பவாது வர்றனால தான் இதெல்லாம் அப்படியே இருக்கு. இங்கேயே இருந்தா உனக்கு இவ்ளோ ரசிக்காது மனோ!' என்பது அவன் வாதமாக இருக்கும்.
"உள்ள வாங்க சார். என்ன விஷயம்?" என எதிர்புறமிருந்த நாற்காலியையும் அவள் சுட்டி காட்ட, ரசனை பார்வை போக முறைத்து பார்த்தான் மார்க்.
"மூஞ்சிய இப்படி வச்சு வச்சுத்தான என்னைய ஏமாத்துற? ஆனா செய்றதெல்லாம் வில்லி வேலை. ஏன்டி கல்யாணத்துக்கு வரல?" என அவள் முன் சென்று நிற்க.
"அட்மிஷன் விஷயமா? டொனேஷனா? இல்ல ஜாப் அப்ளை பண்ண வந்துருக்கீங்களா? ப்ரின்ஸிபல் பாக்கணுமா?" என்றாள் விடாமல்.
"ஓஹோ!" என்றவன் நிதானமாக, கை சட்டையை லேசாக மேல் ஏற்றிவிட்டவாறு அவள் முன்னால் இருந்த சேரில் சாய்ந்தமர்ந்து, கை இரண்டையும் மேலே தூக்கி நெடிப்பு எடுக்க, அசராமல் தான் பார்த்திருந்தாள் மனோ.
"எப்படியும் நா வருவேன்னு தெரியும். அதனால ப்ரீபேர் பண்ணிருப்ப, பண்ணது வர எல்லாத்தையும் பேசி முடி, அப்புறம் நாம நம்ம பஞ்சாயத்துக்கு வரலாம்" என்றான் அவனும் விரைப்புடன்.
"எதுக்கு வந்துருக்கீங்கன்னு இன்னும் சொல்லவே இல்ல? ஸ்கூல் விஷயமா யார பாக்கணும் நீங்க?"
"எம்.எ.பி.எட் தான நீ? எதுக்கு ஆபிஸ்ல உட்கார்ந்துருக்க" என்றான் அந்த அறையை சுற்றி பார்த்து.
"என் வேலை என் இஷ்டம். நீங்க எதுக்கு வந்துருக்கீங்க?"
"இதையே நா சொன்னா மட்டும் சண்டைக்கு வர்றடி நீ? என் வேலையும் என் இஷ்டமா இருக்கணும்ல?"
"நீங்க எட்டு வருஷமா சொல்லி குடுத்ததுல தான் நா இப்ப சொல்றேன்"
"எட்டு வருஷமா இத மட்டுமா சொல்லிகுடுத்தேன் உனக்கு?"
"ஷ்! இது ஸ்கூல். உங்களுக்கு ஸ்கூல் சம்மந்தமா எதாவது பேசணும்னா பேசலாம், இல்லனா கிளம்புங்க"
"அமெரிக்காவே கிளம்பிடவா?"
"உங்க இஷ்டம்"
"என் இஷ்டத்துக்கு என்ன வேணா பண்ணட்டுமா அப்ப?"
"சண்டை போட வந்துருக்கீங்களா?"
"ஆமா!"
"ஓகே! ஃபோர் ஓ க்ளாக் வர வெளில வெயிட் பண்ணுங்க, அப்றம் சண்டை போட்டுக்கலாம்" என்க,
"நக்கலாடி பண்ற?" என்றான் முறைப்புடன்.
"இங்க வச்சே பேசணுமா உங்களுக்கு?"
"வா வெளில போலாம்"
"ஸ்கூல் டைம் முடியாம வர முடியாது. எனக்கு என் வேலை முக்கியம், இப்போதைக்கு என்னையும் என் பிள்ளைங்களையும் பாதுகாக்குறது இந்த வேலை தான்" என்றாள் அவனை நேராக பார்த்து.
"உன்ன வேலைய விட்டுட்டு வர சொல்லல, இன்னும் ரெண்டு மணிநேரம் தான இருக்கு, பெர்மிஷன் போட்டு வா, பேசணும்" என பல்லை கடித்தான்.
"நீங்க பேசவீங்கன்னும், நா உங்கட்ட பேசணும்னும் அஞ்சு வருஷமா வெயிட் பண்றேன் நானும், ஒரு ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ண முடியாதோ உங்களுக்கு?" என காட்டமாக தான் கேட்டாள்.
"அப்ப வர மாட்ட?"
"மாட்டேன்" உடனே மறுத்தாள்.
"கண்ணா எங்க?"
"எதுக்கு?"
"அவனுக்கு ஹாஃப் டே தான ஸ்கூல்?"
"உங்களுக்கு யார் சொன்னா அப்படின்னு?"
"எனக்கு தெரியும்டி, ப்ரீகேஜி படிக்குறவனுக்கு எவ்வளவு நேரம் ஸ்கூலுன்னு கூடவா தெரியாது?"
"அதெல்லாம் தெரிஞ்சுக்க உங்களுக்கு டைம் இருக்காதே? தனிமை டிஸ்டர்ப் ஆகுமே?"
"ரொம்ப பண்ணாத மனோ"
"நா பண்றது ரொம்பனா? நீங்க பண்ணது?"
"கண்ணன எங்கன்னு சொல்லு?"
"அவன அடையாளம் தெரியுமா? உங்க பிள்ளைய பார்த்ததும் கண்டு பிடிச்சுடுவீங்களா?" என புருவம் உயர்த்தினாள். முறைப்புடன் வெளியேவே சென்றுவிட்டான் மார்க். அவ்வளவு ஆவேசத்தையும் அடக்கி கொண்டு வெளியே காத்திருப்போருக்கான நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான். மஹிமா, விஜி, தமயந்தி மூவரும் அவனையும் மனோவின் அறையையும் மாறி மாறி பார்த்தனர். தெரிந்தாலும் கண்டுகொள்ளவில்லை அவன். உள்ளே பேசியது முழுமையாக கேட்கவில்லை என்றாலும், காரசாரமான வாக்குவாதம் என்றவரை வெளியில் இருப்பவர்களுக்கு எட்டியிருந்தது.
"மனோவோட வீட்டுகாரரா நீங்க?" என உரக்க கேட்டார் தமயந்தி.
"ஏன் மேரேஜ் சர்டிஃபிகேட் கேட்பீங்களா அடுத்து?" என்றான் கடுப்பாக, அதிலேயே மஹிமா, விஜி இருவரும் கப்சிப் என்றமர்ந்துவிட,
"அவளுக்கு ஏத்த புருஷன் தான். விதன்டாவாததுக்கு பொறந்துங்க போல ரெண்டும்" என முகத்தை சுளித்தவாறு அவரும் குனிந்து கொண்டார்.
சற்றுநேரத்திற்கெல்லாம் சண்முகசுந்தரம் வந்திருந்தார். ஞானம் தான் அழைத்து விஷயத்தை கூறியிருந்தார், அதனாலயே மார்கண்டேயனை பார்க்கும் ஆர்வத்தில் மிக வேகமாக கிளம்பி வந்திருந்தார்.
"வாங்க மாப்ள! எப்படி இருக்கீங்க. எங்க புள்ளைய பார்க்க இவ்ளோ வருஷமாகிபோச்சா உங்களுக்கு. உள்ள வாங்க" என ஆர்ப்பாட்டமாக அவனை அவர் அறைக்குள் அழைத்துச் சென்றார். மனோவிற்கு கேட்டாலும் அமைதியாக அமர்ந்து கொண்டாள், அவர் உரிமையாக மனோவின் கணவனை மாப்பிள்ளை என்றழைத்ததை கேட்ட தமயந்தியின் முகத்தை இப்போது பார்க்க வேண்டுமே என ஆவலாக கூட இருந்தது. இருந்த இடத்தை விட்டு நகராமல் இருந்து கொண்டாள்.
அடுத்த இரண்டு மணிநேரம் அவர்கள் இருவரும் அந்த அறைக்குள் தான் இருந்தனர். காபியும், ஸ்நாக்ஸும் மஹிமாவிடம் சொல்லியே வரவழைத்து கொண்டனர். என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை, தெரிந்துகொள்ளவும் ஆர்வபடவில்லை, நான்கு மணியாகவும் எழுந்து வெளியே வந்தாள், "பை மனோ மேடம். உங்க சார் உள்ள தான் இருக்காங்க" என மஹிமா சிரிக்க,
"இருக்கட்டும் மஹிமா. பை" என வெளியே வந்தவள், அங்கேயே குழந்தைகளுக்கான விளையாட்டு அறையில் இருந்த கண்ணனை அழைத்துக் கொண்டு வீடு கிளம்பிவிட்டாள்.
வீட்டினுள் நுழைந்து, கண்ணனை உடைமாற்ற வைத்து, அவள் உடை மாற்ற அறைக்குள் நுழைய, வந்திருந்தான் மார்கண்டேயன்.
"உங்க மக என்ன ஓடி விளையாண்டுட்ருக்கா? உங்க ட்ரைனிங்க் தான எல்லாம்?" என கேட்டுக்கொண்டு தான் உள்ளேயே நுழைந்தான்.
டிவி முன்னிருந்த சோஃபாவில் கிருஷ்ணாவும், அவன் அருகில் பால் பாட்டிலுடன் அமர்ந்திருந்த கண்ணனும் அவனை தலையை நிமிர்த்தி அன்னார்ந்து பார்த்தனர்.
"நீங்க மட்டும் ஃபாரீன் போய் கண்ணாமூச்சி ஆடுனீங்க தானே ஃபாரீன் சாரு?" என்றார் மீனம்மா.
"குடும்பமா பழி வாங்குறீங்களோ?" என்றவன், "என்னடா பார்வை? உன்ன அடையாளம் கண்டுபிடிக்க முடியாதோ எனக்கு? உங்க அண்ணன மாதிரி நீயும் நா தூக்கினா அழுவியா?" என கண்ணனை தூக்க போக, அடுத்த நொடி துள்ளி தாவி அவன் அம்மாவிடம் ஓடியிருந்தான் கண்ணன்.
"மனோ உள்ள தான் இருக்கா" என மீனம்மா சொல்லவும்,
"வரட்டும் அவளே" என கிருஷ்ணன் அருகில் அமர்ந்து விட்டான். மீனம்மா உள்ளே சென்று, கண்ணனையும், வெளியே வந்து கிருஷ்ணாவையும் அழைத்துக்கொண்டு, மல்லி அறையில் இருந்தவளை தட்டி வெளியே வர சொல்ல, அவளும் வந்து, இவனிடம் 'வாங்க!' என்றுவிட்டு நிற்க.
"அவங்க ரெண்டு பேரும் பேசட்டும். வா, நாம பிள்ளைகள கூட்டிட்டு பார்க் போய்ட்டு வருவோம்" என்றதும், அவளும் கிளம்பிவிட்டாள்.
மனோ, குளித்து வேறொரு மெரூன் நிற சுடிதாரில் முகத்தை துடைத்தவாறு குளியலறையிலிருந்து வெளியே வர, வீடே அமைதியாக இருந்தது உறுத்தியது.
"மீனம்மா! கிருஷ்ணா எங்க? டிவி சத்தம் கேட்கல?" என அவள் அறைக்குள்ளிருந்து வெளியே வர, மார்கண்டேயன் மட்டுமே செல்லை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவள் வரவும் நிமிர்ந்து பார்த்தவனுக்கு மறுபடியும் பெருமூச்சு தான்.
"ம்க்கும்" என்ற செருமலுடன் அவள் உள்ளே செல்ல திரும்ப,
"இங்க வாடி நீ" என அழைத்து நிறுத்தினான்.
"என்ன மிரட்றீங்க? என்ன சண்டை போடனும் உங்களுக்கு? சொல்லிட்டு சீக்கிரம் கிளம்புங்க, எனக்கு தலவலிக்குது டீ குடிக்கணும்" என வந்து அவன் மறுபக்கம் கையை கட்டிக்கொண்டு நின்றுவிட்டாள்.
"கண்ணனுக்கு என்னைய யாருன்னு தெரியாதா?"
"எப்படி தெரியும்? எத்தன தடவ வந்து பார்த்து பேசி, தூக்கி கொஞ்சிட்டீங்க அவன? அடையாளம் தெரியுமான்னு கேட்டதும் கோவம் வருதோ உங்களுக்கு? அடையாளம் தெரியாத மாதிரி நடந்துட்டது நீங்க தான், அவனுக்கு உங்கள யாருன்னே தெரியாது"
"நீ ஏன் சொல்லி தரல?"
"உன்னைய குடுக்க தெரிஞ்ச உன் அப்பாவுக்கு உன்னைய பொறுப்பேத்துக்க தெரியலன்னு சொல்லி தந்துருக்கணுமோ?"
"என்னடி நக்கலா பேசிட்டே போற? நானும் பொறுமையா இருந்தா சீண்டி விடுற நீ. பொறுப்பில்லையா எனக்கு?" என எட்டி சோஃபாவின் அந்தப்பக்கம் நின்றவள் தலையில் நங்கென்று கொட்டிவிட்டான்.
"அறிவிருக்கா உங்களுக்கு. ஏற்கனவே தலைவலில இருந்தேன், இப்படிதான் கொட்டுவீங்களோ? என்ன நெனப்புல அடிக்கவெல்லாம் செய்றீங்க? உங்களுக்கு அந்த ரைட்ஸ்லாம் இனி எப்பவும் கிடையாது. சும்மா ஓவர் அட்வான்டேஜ் எடுக்குறதெல்லாம் வேணாம். அதுலாம் நமக்கு இடைல காலாவதி ஆகி வருஷம் ஓடிருச்சு. பழைய நெனப்பு எதுவும் இருந்தா அழிச்சுருங்க. நினச்ச நேரம் வர்றது புருஷன்ற உரிமை கொண்டாடுறது, மானே தேனேன்றது அப்புறம் கண்காணாம பொண்டாட்டியும் பிள்ளையும் எப்படியோ நாசமா போட்டும்னு போட்டுட்டு ஓடிடுறது. இனி உங்கள யாரும் பிடிச்சு வைக்கபோறதும் இல்ல, ஏன் எதுக்குன்னு எந்த கேள்வியும் கேட்க போறதும் இல்ல, முக்கியமா நா கேட்கவே மாட்டேன். நா, எப்ப வருவீங்கன்னு கேட்டாலே உங்களுக்கு எரிச்சலா வருமே? இனி அப்படி ஒரு கேள்வியே உங்கள பார்த்து கேட்கவே மாட்டேன், மாட்டேன். எங்க வேணா போங்க எத்தன வருஷம் வேணாலும் தனியாவே இருங்க. அதே தான் உங்களுக்கும், என்னைய கேள்வி கேட்குறது, இதோ இது மாதிரி அதட்டி பேசுறது, குரல் உயர்த்துறது, கை நீட்டுறது எதுவும் இருக்க கூடாது. மீறி ட்ரை பண்ணீங்க நா மனுஷியா இருக்க மாட்டேன். எங்கிட்டயும் உங்களுக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. உங்க வழில நீங்க போலாம் என் வழிய நா பாத்துப்பேன். அதுக்காக டிவோர்ஸ்லாம் குடுத்துடுவேன்னு நினைக்க வேணாம். என்னைய பேசுற ரைட்ஸ் தான் உங்களுக்கு கிடையாது, அதுக்காக பிள்ளைகள இனிஷியல் இல்லாம விட முடியாது, அது கடைசி வர உங்க பொறுப்பு தான். அத நீங்க தட்டிகழிக்கவும் கூடாது. ஒரு வருஷமா பெத்த பிள்ளைங்க பொறுப்ப கூட எடுத்துக்காம இருக்கோமேன்னு உறுத்தல? உங்க பிள்ளைக்கு எங்க அம்மா அப்பா எதுக்கு சோறு போடணும்? ஒன்னு நீங்க போடணும் இல்ல நா போடணும், நா என்னைக்கும் என் பொறுப்புல இருந்து விலக மாட்டேன், ஆனா நீங்க அல்ரெடி விலகி நின்னு ஒரு வருஷம் ஓடிபோச்சு, இங்க ரெண்டு பிள்ளைங்கள என்னவோன்னு விட்டுட்டு அங்க எப்படி ஒவ்வொரு வேலையும் சாப்பிட முடிஞ்சது உங்களால? இனி அதுமட்டும் இருக்க கூடாது, வந்து வந்து பிள்ளை மட்டும் குடுக்க தெரிஞ்சதுல, அவங்களோட பொறுப்ப ஏத்துக்கவும் செய்யணும். செய்றீங்க. வேறென்ன பேசணும், சீக்கிரம்?" என இரு புருவம் உயர்த்தி அவள் நின்ற தோரனையில், மார்கண்டேயன் அமைதியாக பார்த்தபடி தான் அமர்ந்திருந்தான்.
"என்ன பார்வை? எல்லாம் சொல்லிட்டேன்ல? வேறெதுவும் இல்ல. கிளம்பலாம் நீங்க. அமெரிக்காவே கூட நீங்க இப்படிக்கா கிளம்பலாம் நா தடுத்தே நிப்பாட்ட மாட்டேன்"
"ஓ! அந்தளவுக்கு ஆகிடுச்சு?" என்றவன் ஒரு கையால் நாடி தாங்கி கதை கேட்டான் பாவனையாக.
புருவம் சுருக்கி பார்த்தாள், "டிவோர்ஸ் வெளிப்படையா இல்ல, ஆனா நமக்குள்ள டிவோர்ஸ் தான். பிள்ளைங்க பொறுப்பு மட்டும் தான் நம்மளுக்குள்ள இனி ரிலேஷன்ஷிப்"
"ஹான்! அப்புறம்?" என அவன் கேட்ட தினுசில்,
"எந்திச்சு வெளில போங்க முதல்ல"
"போகலன்னா?"
"விளையாடுறீங்களா கிளம்புங்க முதல்ல"
"எப்படி எப்படி? வந்து வந்து பிள்ள மட்டும் தந்துட்டு போறேனா நானு?" என்றவன் முறைப்புடன் எழ,
'நா அவ்வளவு பேசுனதுல எத மட்டும் கேட்குறான் பாரு கடங்காரன்' என தான் முறைப்புடன் நின்றாள். அவன் நடந்து நெருங்கி அவளிடம் வர, அருகில் எதாவது அவனை அடிக்க ஏதுவாக கிடைக்குமா என பார்வையை சுழற்றினாள் மனோ. ஆனாலும் ஒரு இஞ்ச் நகராமல் அதே இடத்தில் அவனை எதிர்கொள்ள தயாராக நின்றாள்.