'சுயம் நோக்கு '
எதை பெறவும்
எங்கும்
எதற்காகவும்
எதை கொள்ளவும்
எவருக்காகவும்
எதுவும் வேண்டாம்
என்றே இழந்திடு மொத்தம்
இருந்தும் உணர்ந்திடு
இழக்க நீ உன் சுயம்
இருக்கும் உயிரும் உனக்கு மிச்சம்
இழந்திடு அதையும் அப்போதே...
உன் சுயம் அறிய நீயும்
உனை அறி பின்னே
உன் சுற்றம் அறிவாய்

Last edited: