அத்தியாயம் 7
காலை எட்டு மணிக்கு தன் தங்கை மகன் நவநீத கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன் திரும்பி வர மணி பத்தாகிவிட்டது. அவன் வருவதை பார்த்து அவனது அன்னை
“டேய்.. காலையிலயே குழந்தைய தூக்கிட்டு எங்கடா போன..??”
என்று கேட்க அதற்கு அவனோ
“நான் என் மாப்ளைக்கு ஊர் சுத்தி காட்டி கூட்டிட்டு வந்தேன்ம்மா..”
என்று கூற அதற்கு அவரோ
“டேய் அதை சொல்லிட்டு கூட்டிட்டு போக மாட்டியா.. குழந்தைக்கு பசிக்கும்ல..”
என்று கூறியபடி குழந்தை கைகளில் இருந்த விளையாட்டு சொப்பு சாமான்களை பார்த்து
“என்னடா இது.. ஏற்கனவே உன் அப்பா, தாத்தா வாங்கி கொடுத்ததே அவ்வளவு இருக்கு இதுல நீ வேற இன்னும் வாங்கி கொடுத்திருக்க..”
என்று பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கு தன் மனைவி மகளுடன் வந்த நபர்
“தம்பி..”
என்று குரல் கொடுக்க, திரும்பி பார்த்த தமிழ் அவரை பார்த்து
“உள்ள வாங்கண்ணே.. வாங்க க்கா..”
என்றவன் அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்து தன் அம்மாவிடம் தன் தந்தை அல்லது தாத்தாவை அழைக்க சொல்ல, அவரும் அழைக்க சென்றார்.
சில நாழிகைகளில் சுந்தர்ராஜன் வந்ததும் மூவரும் அவர் முன் எழுந்து நின்று அவரை வணங்க, அவர்கள் மூவரையும் அமர சொன்ன சுந்தர்ராஜன் அந்நபரை பார்த்து
“சொல்லு சண்முகம்..”
என்று கூற அதற்கு அவரோ
“ஐயா போன தடவை வெள்ளாமை வெதைக்க பணம் வாங்கிருந்தேன்.. உங்க ஆசிர்வாதத்தால அறுவடை அமோகமா நடந்து இந்த வருசம் கை நிறைய லாபம் பார்த்தேன்.. அதான் உங்ககிட்ட வாங்குன பணத்தை குடுத்துட்டு அப்படியே என் மவளுக்கு கல்யாணம் பேசி இருந்தேன் அது கூடி வந்துடவே உங்களுக்கு பத்திரிகை வச்சுட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்தோம்..”
என்று கூற அதற்கு அவரோ
“அப்டியா சண்முகம்.. எல்லாம் உன் மனசு மாதிரி நல்லதாவே நடக்கும்.. இது உன் உழைப்புக்கு கிடைச்ச பலன் தான் இதுல நான் எங்கிருந்து வந்தேன்..”
என்றபடி அவர் கொடுத்த பத்திரிகையை வாங்கி பார்த்துவிட்டு மெல்ல எழுந்து தன் மனைவியுடன் சேர்ந்து நிற்க, சண்முகமும் அவரது குடும்பமும் அவரிடம் ஆசி பெற்றனர். அதன்பின் சில நாழிகைகள் பேசியவர்கள் கிளம்பும் நேரம் வர
“அய்யா பணம்..”
என்று ஞாபகமாக பணத்தை கொடுக்க, அதற்கு சுந்தர்ராஜனோ
“ஆஹ்.. ஒரு நிமிசம் சண்முகம்..”
என்றவர் திரும்பியவாறு
“அம்மா.. யாழினி..”
என்று தன் பேத்தியை அழைக்க
“தோ.. வரேன் தாத்தா..”
என்று பதில் கொடுத்தபடி வந்தவளை பார்த்து
“இந்தாம்மா.. சண்முகத்துக்கிட்ட அந்த பணத்தை வாங்கிக்க..”
என்று கூற உடனே அவளும் அதை வாங்கிக் கொண்டு தன் தாத்தாவை பார்த்து
“என்ன பணம் தாத்தா இது..”
என்று கேட்டாள் அதற்கு அவரோ
“போன வருசம் வெள்ளாமை வெதைக்க பணம் வாங்கிட்டு போனதும்மா இப்ப அறுவடை முடிஞ்சு திரும்ப கொடுக்குறாங்க..”
என்று கூறியதும் அதை அவள் உள்ளே எடுத்துச் செல்ல உடனே சண்முகம் அவளை பார்த்து
“ஒரு நிமிசம்மா..”
என்க அவள் அங்கேய நிற்க உடனே அவர் சுந்தர்ராஜனை பார்த்து
“அய்யா.. அப்படியே உங்க பேத்தி கையால கல்யாணம் ஆகப்போற என் மவளுக்கு குங்குமம் கொடுக்க சொன்னீங்கன்னா..”
என்று கூற அதற்கு சுந்தர்ராஜன் தன் பேத்தி யாழினியை பார்த்தார். உடனே அவளது அம்மா அர்ச்சனாவும் பூஜை அறையிலிருந்து குங்கும சிமிழ் எடுத்து வந்து கொடுத்தார். அதை வாங்கி அந்த பெண்ணின் நெற்றியில் யாழினி திலகமிட அடுத்து அர்ச்சனா ஒரு தாம்பூல தட்டில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பழம் வைத்து அதை யாழினியிடம் கொடுக்க அதில் அந்த பெண்ணின் தந்தை சண்முகம் கொடுத்த பணத்தையும் உடன் வைத்து அதை அந்த பெண்ணிடம் கொடுத்து
“இந்தாம்மா.. வாங்கிக்கோ..”
என்று கொடுக்க அதை அந்த பெண் வாங்க தயங்கியபடி தன் தந்தையை பார்க்க உடனே யாழினி
“இது பெரிய வீட்டுல இருந்து கொடுக்குற சீறு வாங்கிக்கோ உங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டார்..”
என்று கூறி தன் தாத்தாவை பார்த்து
“என்ன தாத்தா நான் சொல்றது சரிதானே..”
என்க அதற்கு அவரும்
“நீ சொன்னா சரிதான்டாம்மா..”
என்க அந்த பெண்ணின் தந்தையும் சம்மதமாய் தலையசைக்க அந்த பெண் அதை வாங்கி கொண்டாள். அதன்பின் அவளது தந்தை
“ரொம்ப சந்தோசம்ய்யா..”
என்று கூறி அங்கிருந்து தன் மனைவி மகளை அழைத்துக் கொண்டு மனநிறைவுடன் கிளம்பினார்.
இப்போது இங்கு நடந்த அனைத்தையும் தன் அறையிலிருந்து வெளியே வந்த வெற்றி செல்வி பார்க்க அவளுக்கோ ஏகப்போகமாக கோபம் வர மனதுக்குள்ளே
‘யார் வீட்டு பணத்தை யாரு யாருக்கு தானமா கொடுக்குறது..’
என்று நினைத்து கொண்டு மீண்டும் தன் அறைக்குள்ளேயே சென்று கதவை சாற்றி கொண்டாள்.
உள்ளே சென்றவள் தனக்கு தானே
‘என்ன இது..?? நானும் வந்த நாள்ல இருந்து பார்க்குறேன் எல்லாத்தையும் அவக்கிட்டேயே சொல்றாங்க.. ஏன் அவ குங்குமம் கொடுத்தா தான் அந்த பெண்ணுக்கு நல்லது நடக்குமா..?? நான் குடுத்தா நடக்காதா..??’
‘இவரும் என்னடான்னா ஒன்னுமே பேசாம கல்லு மாதிரி அப்படியே உட்கார்ந்து இருக்காரு..’
‘வீட்டுக்கு வந்த மருமக என்னைய விட்டுட்டு வாழப்போன வீட்லருந்து வாழாவெட்டியா வந்தவள இப்டி கவனிக்குறாங்க.. எதை சொன்னாலும், எதை கேட்டாலும் அவ பேரை தான் சொல்றாங்க.. என்னதான் நடக்குது.. அப்ப நான் எதுக்கு இங்க மருமகளா வந்துருக்கேன்..’
என்று அவளை அவளே கேட்டுக் கொண்டிருக்க கதவை திறந்து பால் டம்ளருடன் உள்ளே நுழைந்தான் அவள் ஆசையாய் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அவளது காதல் கணவன் தமிழ்ச் செல்வன்.
உள்ளே வந்தவன் அவளிடம் எடுத்து வந்த பால் டம்ளரை நீட்டியபடி
“என்ன மேடம்க்கு இன்னும் தூக்கம் கலையலியோ..”
என்று கேட்க அதற்கு அவளோ
“ம்ஹூம்..”
என்றபடி அவன் நீட்டிய பால் டம்ளரை வாங்காது முகத்தை வேறுபக்கமாக திருப்பி கொண்டாள். அதை பார்த்து சிரித்தவன் அந்த டம்ளரை பக்கத்திலிருந்த டேபிளில் வைத்துவிட்டு அவளின் பின்னால் அமர்ந்து அவளின் இடையை சுற்றி தன் கையால் வளைத்தவன் அவளது மேடேறிய வயிற்றில் தன்னவள் சுமக்கும் தன் குழந்தையை தடவிக் கொடுத்துக்கொண்டே அவளை லேசாக வலிக்காதவாறு இறுக்கி அணைத்தபடி அவள் தோள் மீது தன் தாடையை பதித்தவாறு
“காலையிலயே மேடம்க்கு என்ன ஆச்சு.. ஏன் மூட் அவுட்டா இருக்கீங்க..??”
என்று கேட்க அதற்கு அவள் மீண்டும் முகத்தை திருப்பியவாறு
“நீங்க என்கிட்ட பேசாதீங்க..”
என்க அதற்கு அவனோ
“ம்ச்.. என்னனு சொன்னா தானே எனக்கு தெரியும்.. அப்பதானே அடுத்த தடவை அதை திருத்திக்க முடியும்..”
என்று அவளது தோளில் முகத்தை பதித்தவாறு கூற அதற்கு அவளோ
“ம்ஹூம்.. பின்ன என்ன நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் எல்லாத்துக்கும் இந்த வீட்ல உங்க தங்கச்சியையே முன்ன நிறுத்தி பேசுறாங்க.. சரி அவங்க தான் பேசுறாங்கன்னா நீங்களும் அதை பத்தி ஒன்னுமே கேட்க மாட்றீங்க..அப்ப நான் எதுக்கு இங்க இருக்கேனாம்..”
என்று கேட்க அதை கேட்டு முதலில் அவளது இடையிலிருந்த பிடியை லேசாக தளர்த்தியவன் பின்பு அவள் சொன்னதை சிறுபிள்ளை பேச்சாக எண்ணி அவளை மீண்டும் அணைத்தபடி
“இதோ பாருங்க மேடம்.. அது இந்த வீட்டோட பழக்கம் எந்த நல்லகாரியமாக இருந்தாலும் அதை அவள முன்ன வச்சு தான் செய்வாங்க.. இன்னைக்கு வரைக்கும் அது அப்படி தான் நடக்குது இனிமேலும் அது அப்படி தான் நடக்கும்.”
என்று அவன் கூற அதை கேட்டவுடன் அவளுக்கு கோபம் இன்னும் ஏறியது அதில் அவனின் பிடியை தளர்த்தி அவன் அணைப்பிலிருந்து விலகியவள் அவனை பார்த்து
“எல்லாத்துக்கும் அவதான் முன்ன நிப்பான்னா நான் எதுக்கு உங்கள கட்டிகிட்டு இங்க மருமகளா வந்தேனாம்.. அதுக்கு நான் எங்க வீட்லயே இருந்திருப்பேனே..”
என்று அவள் கூற அவள் பேசிய பேச்சில் லேசாக அவனுக்கு கோபம் வந்தாலும் அதை அவள் முன் காட்டாதவன் அவளை அழைத்து பக்கத்தில் அமர வைத்து
“இங்க பாரு ஆரம்பத்துல இருந்தே இங்க எல்லாத்தையும் என் தங்கச்சி தான் கவனிச்சுட்டு வர்றா.. அவ இல்லைனா இங்க எதுவுமே ஓடாது.. அதுவுமில்லாம எங்க குடும்பத்துல ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பிறந்த பெண்பிள்ளை அவ, அதனால எங்க வீட்ல எந்த நல்லது நடந்தாலும் அவளை முன்ன வச்சு தான் செய்வோம் நீ எப்படி உங்க வீட்டுக்கு ஒரே பெண்பிள்ளையோ அதேபோல தான் இங்க அவளும்..”
“அதனால தேவையில்லாம நீ இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் இந்த நேரத்துல கோபப்படாம இந்த பால குடிச்சிட்டு நல்லா ரெஸ்ட் எடு.. ”
என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து வெளியே வந்தவன் ட்ரெஸ் சேஞ்ச் செய்துக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான். அன்றிலிருந்து இதேபோல் அவ்வப்போது வெற்றிச் செல்வி, யாழினியை பற்றி தமிழிடம் பேசப்போக அது அவர்கள் இருவருக்குமான உறவை தூரமாக்கியது.
அதுமட்டுமின்றி இத்தனை வருடங்களாக தன் பிறந்த வீட்டில் ஒரு இளவரசியை போல வளர்ந்துவிட்டு அதன் பிறகு தன் கணவனோடு கலெக்டர் கெஸ்ட் அவுசில் கலெக்டர் மனைவியாக வாழ்ந்தவளுக்கு ஏனோ இப்போது இந்த வீட்டில் தனக்கான அங்கிகாரம் இல்லாதது போல் அவள் உணர ஆரம்பித்தாள்.
அதனால் இனி இங்கு இருப்பது தனக்கு தான் அவமானம் என்று எண்ணியபடி ஒருநாள் இரவு தன் கணவனிடம் மீண்டும் நாம் ஏன் கலெக்டர் கெஸ்ட் அவுசுக்கே போக கூடாது என்று கேட்க, அதற்கு அவன் சம்மதிக்கவில்லை.
இதனால் மேலும் கோபமடைந்த செல்வி அடுத்த நாள் காலையிலேயே தனியாக கிளம்பி தன் அம்மா வீட்டிற்கு சென்றாள். வீட்டிற்கு வந்த வெற்றி செல்வியை அழைத்துச் சென்று அவளது அறையில் அமர்த்திய அவளது அன்னை
“ஏய்.. என்னடீ.. ஏன் ஒருமாதிரி இருக்க என்னாச்சு.. நீ மட்டும் தனியா வந்து இருக்க மாப்ள வர்லயா..??”
என்று கேட்க அதற்கு அவளோ
“இல்லம்மா.. நான் வந்தது அவருக்கு தெரியாது..”
என்க உடனே அவரது அன்னை சாரதா
“ஏய்.. என்னடீ சொல்ற.. வயித்துபுள்ளக்காரி இந்த சமயத்துல மாப்ளைக்கு தெரியாம தனியா வந்தேன்னு சொல்ற..”
என்றவர் உடனே அருகில் நின்றுக் கொண்டிருந்த தன் மகன் செழியனை பார்த்து
“டேய் செழியா.. இவ என்னடா சொல்றா..?? மாப்ளைக்கு போன் போடு..”
என்க அதற்கு அவனோ
“அம்மா.. ஒரு நிமிஷம் இருங்கம்மா..”
என்று கூறி தன் தங்கை பக்கத்தில் அமர்ந்தவன் அவளின் முகத்தை நிமிர்த்தியவாறு
“என்னாச்சுடாம்மா..”
என்று கேட்க உடனே அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது அதை பார்த்தவன் மனமோ உள்ளுக்குள் வேதனையில் துடித்தது. மீண்டும் ஒருமுறை அவளை பார்த்து
“என்னாச்சுடாம்மா..”
என்க உடனே அவள் அங்கு நடந்த அனைத்தையும் தன் அண்ணன் முன் கூறி அழுதுவிட்டு
“எல்லாத்துக்கும் அவள தான் கூப்பிடுறாங்க.. அவ ஆசிர்வாதம் பண்ணா தான் நல்லது நடக்குமா..?? நான் பண்ணா நடக்காதா..?? அவ தொட்டு கொடுத்தா தான் விளங்குமா..?? ஏன் நான் தொட்டு குடுத்தா விளங்காதா..?? இப்படி எதுக்கு எடுத்தாலும் யாழினி.. யாழினி.. யாழினின்னு அவ பேரையே சொல்றாங்கண்ணா..”
“அந்த வீட்டுல எனக்கு எந்த மரியாதையும் இல்லன்னா.. அந்த வீட்டுல இருக்கவங்க தான் அப்படி இருக்காங்கன்னா என்னை கட்டுனவரும் அப்படி தான் இருக்கார் அவ எது சொன்னாலும் அதுக்கு அப்படியே தலையசைக்குறார் எதுனாலும் அவளை கேட்டு தான் முடிவெடுக்குறார் எனக்கு அங்க இருக்கவே பிடிக்கலைன்னா.. நான் இங்கயே இருந்துடுறேன்..”
என்க அதை கேட்ட செழியனுக்கு யாழினி மீதும் தன் தங்கையின் கணவன் தமிழ்செல்வன் மீதும் கோபம் வந்திட அதில் அவனது புஜங்கள் இரண்டும் புடைத்துக் கொண்டது.
வெற்றிச் செழியன் பற்றி சிறிய இன்ட்ரோ பார்த்துட்டு கதைக்கு உள்ள போகலாம்..
இதோ.. இவன் தான் நம்ம கதையோட பர்ஸ்ட் ஹீரோன்னு நான் நம்பிட்டு இருக்கேன் ப்ரெண்ட்ஸ்
பேரு வெற்றிச் செழியன். இவர் எதை தொட்டாலும் அதுல வெற்றி தான் தோல்வி இவருக்கு பழக்கமே இல்லை.
வெளிநாட்டுல பேஷன் டிசைனிங் ல மாஸ்டர்ஸ் முடிச்சுட்டு அப்படியே அங்க ஒரு லீடிங் ப்ராண்டட் பேப்ரிக் கம்பெனியில் (அதாங்க துணிகடை) பேஷன் டிசைனராக வேலை செய்துட்டே அப்படியே அந்த ஊரிலேயே உள்ள பெரிய யூனிவர்சிட்டியில் சேல்ஸ் & மார்க்கெட்டிங் கோர்ஸ் தேர்ந்தெடுத்து படிச்சுட்டு இருந்தார்.
அதுமட்டுமா இவர் வெளிநாட்டு காலேஜ்ல படிக்கும்போது இவரை போலவே தமிழ்நாட்டுல இருந்து வந்த ஒரு ஜூனியர் பொண்ணு இவர் மனசை கேட்க இவரும் அதை கொடைவள்ளல் கர்ணன் போல தூக்கி தந்துட்டார்.. இப்ப ரெண்டு பேரும் லவ்வாங்கியோ லவ்வாங்கி செய்ய அதை ரெண்டு பேர் வீட்டுக்கும் சொல்லி இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு பேருக்கும் நிச்சய தாம்பூலம் பண்ணப்போறாங்க
வெளிநாட்டு படிப்பை முடிச்சுட்டு அனுபவ ரீதியா வேலையை கத்துகிட்டு ஊர் திரும்பிய நம்ம ஹீரோ இப்ப அவரோட தாத்தா வரதராஜனோட கம்பெனில எம்.டி யா வேலை பார்க்குறார் புதுசா திறந்து இருக்குற கார்மென்ட் செக்சனுக்கு அய்யா தான் ஹெட்டு..
தாத்தாவுக்கு மட்டுமில்லை அந்த குடும்பத்துக்கே செல்லபிள்ளை இவர்தான்.. தங்கச்சி மேல உயிரு.. அதேபோல செல்விக்கும் அண்ணனா அவ்ளோ பிடிக்கும்.. அம்மா, அப்பாட்ட சொல்லாததை கூட அண்ணன்கிட்ட ஒப்பிச்சுடுவா.. இதுதான் இவரோட எஸ்.டி.டி..
ரைட்டு இப்ப கதைக்கு வருவோம்..
கோபத்தில் அவனது புஜங்கள் விரிவதை கவனித்த அவனது அம்மா சாரதா அவனை பார்த்து
“டேய்.. இவ சொல்றதை கேட்டு நீ எதுவும் செய்து வைக்காத இது அவ லைப் மேட்டர். இதை பொறுமையா தான் ஹேன்டில் பண்ணணும்.. தாத்தா வந்ததும் பேசலாம்..
என்க அவனுக்கும் அது சரியென்று தோன்ற தன் தங்கையை பார்த்து
“சரிடாம்மா நீ ரெஸ்ட் எடுத்துக்க.. நான் பார்த்துக்குறேன்..”
என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான். அன்று மாலையே தமிழ் தன் மனைவியை தேடி அவளது பிறந்த வீட்டிற்கு வந்தான். அங்கு வந்தவனை சாரதா உபசரிக்க
“அத்தை, செல்வி..”
என்க அதற்கு அவரோ
“செல்வி அவ ரூம்ல இருக்கா மாப்ள.. நான் போய் வர சொல்றேன் நீங்க உட்காருங்க மாப்ள..”
என்க அதற்கு அவனோ
“இல்ல அத்தை நானே போய் பார்த்துக்குறேன்..”
என்று கூறி அந்த முதலாவது தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளை இரண்டு இரண்டாக தாண்டியவன் நேராக அவள் அறை கதவை தட்ட வெளியே தட்டுவது தன்னவன் எனதறியாது செல்வி கதவை திறக்க தன்னவளை பார்த்தவன் அக்கணமே அவளை கட்டியணைத்து கொண்டு அவளது தோளில் சாய்ந்தவாறு கண்கலங்கியபடி அவளை பார்த்து
“ஏன்டீ ஒருவார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாம்ல..”
என்க தன்னவன் அணைப்பில் தன்னை மறந்தவளுக்கு இப்போது அவன் அணைத்திருக்கும் பிடியில் வலி உணர அதை வெளிப்படுத்தியவளாய்
“ஆ..”
என்று கத்த அப்போது தான் தன்னவளை அவன் எப்படி அணைத்து இருக்கிறான் என்பதை உணர்ந்தவன் அவளை விட்டு விலகி அவள் முன்னே மண்டியிட்டு அவளது வயிற்றை தடவி கொடுத்துவிட்டு அதில் தன் இதழ் பதித்தவனாய் அவளை பார்த்து
“வலிக்குதாடீ..”
என்று கேட்க அவளோ அவனை பார்த்து தன்னை மறந்தவளாய் லேசாக புன்னகைத்து
“இல்ல..”
என்று கூற அவளை அப்படியே இடையோடு கட்டியணைத்து அவள் வயிற்றின் மேல் தலை வைத்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த அவளது அம்மாவும் அண்ணனும் அதை பார்த்து மனதில் மகிழ்ச்சியடைய அதை கவனித்த செல்வி உடனே அவளது கணவனை தட்டியவாறு அவனுக்கு அவர்களின் வருகையை உணர்த்த அவர்களை பார்த்த அவனும் சட்டென்று எழுந்து கொண்டு
“சரி நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம் நீ காணோம்ன்னு தெரிஞ்சதும் பதறியடிச்சு ஓடி வந்துட்டேன்..”
என்க அதற்கு அவளும்
“சரி நான் ரெடியாகிட்டு வர்றேன் நீங்க கீழ வெயிட் பண்ணுங்க..”
என்று கூறி தன்னை தயார்படுத்திக் கொள்ள உள்ளே சென்றாள். அதேசமயம் அங்கு கையில் தேநீர் கோப்பையுடன் நின்றிருந்த சாரதா அவனிடம் அதை கொடுக்க அதை வாங்கிக்கொண்டு கீழே வந்தவன் அதை பருகி கொண்டிருந்தான். அப்போது அவனருகில் அமர்ந்திருந்த செழியனுக்கு என்னதான் தன் தங்கையை தமிழ் அழைத்துச் செல்ல வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏனோ அவன் மனதின் ஓரத்தில் அவனது தங்கை யாழினியை பற்றி கூறியது உறுத்தலாகவே இருந்தது.
அதனால் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் தமிழிடம் பேச்சு கொடுத்த வண்ணம் அப்படியே அவனிடம்
“மச்சான் நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே..”
என்க அதற்கு அவனும்
“என்ன மச்சான் சொல்லுங்க..”
என்க உடனே செழியன் தமிழை பார்த்து
“வீட்டுக்கு வந்ததும் தங்கச்சி எல்லாம் சொன்னா.. நீங்க ஏன் அவ கேட்டா மாதிரி கலெக்டர் கெஸ்ட் அவுஸ்க்கு போய் கொஞ்ச நாள் தங்க கூடாது.. இந்த டைம்ல அவ சந்தோசம் தானே நமக்கு முக்கியம்..”
என்க அதை கேட்ட தமிழ், செழியனை பார்க்க உடனே செழியன்
“அப்படி உங்களுக்கு கெஸ்ட் அவுஸ்ல தங்க விருப்பமில்லைனா சொல்லுங்க அந்த மாவட்டத்துலயே ஒரு நல்ல பெரிய வீடா பார்த்து வாங்கிடலாம் அதுல நீங்க என் தங்கச்சி உங்க அம்மா, அப்பா, தாத்தா எல்லாரும் தங்கிக்கங்க..”
என்க அதற்கு தமிழோ
“அப்ப என் தங்கச்சி..”
என்க அதற்கு செழியனோ
“அவங்க இப்ப இருக்க உங்க வீட்லயே இருக்கட்டும் மச்சான் வேணும்னா அதை அவங்களுக்கே கூட கொடுத்துடுங்க.. அப்படி அந்த வீடு பழைய வீடா இருக்குன்னு பீல் பண்ணாங்கன்னா சொல்லுங்க அவங்களுக்கும் ஒரு புது வீடு பார்த்து என்ன தேவையோ அதை ஏ டூ இசட் வரை செய்து கொடுத்துடலாம்.. நீங்க எப்பயாவது அவங்கள பார்க்கனும்னா போய் பார்த்துட்டு வாங்க..”
என்று கூற இதை கேட்ட தமிழ் செழியனை பார்த்து
“சரி மச்சான் நீங்க சொல்றதை நான் யோசிக்குறேன் இப்ப நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா..?? அதுக்கு நீங்க பதில் சொல்லுவீங்களா..??”
என்று கேட்க அதற்கு செழியன்
“ம்.. கேளுங்க மச்சான்”
என்க உடனே தமிழ் அவனை பார்த்து
“இப்ப நீங்க விரும்புற உங்க வருங்கால மனைவிக்கும் உங்களுக்கும் கல்யாணம் நடந்த பின்னாடியும் இதே போல உங்க தங்கச்சி உங்க வீட்டுல வந்து தங்க அது ஒருவேளை உங்க மனைவிக்கு பிடிக்கலைன்னு சொன்னா உங்க தங்கச்சியை நீங்க தனியா வச்சுடுவீங்களா..”
என்று கேட்க அதை கேட்டதும் சுர்ரென்று சீறியவனாய்
“அது எப்படி.. அவ அண்ணன் நான் இருக்கும்போது அவளை ஏன் நான் தனியா வைக்கனும்..”
என்று கேட்க அதற்கு தமிழோ
“அதேபோல நான் மட்டும் ஏன் என் தங்கச்சிய தனியா வைக்கனும்..”
என்க தமிழ் கேட்ட கேள்விக்கு செழியன் வாயடைத்து போக மீண்டும் தமிழ்
“சும்மா புருஷன் கிட்ட கோவிச்சுட்டு உங்க வீட்டுக்கு வந்து தங்கிட்டு போற உங்க தங்கச்சிய பார்க்கும்போதே உங்களுக்கு கஷ்டமா இருக்குன்னு சொல்றீங்களே..”
“கல்யாணமான ஒரே வருசத்துல இனி தனக்கு வாழ்க்கையே இல்லைன்னு உட்கார்ந்து இருக்க என் தங்கச்சிய பார்க்கும்போது எனக்கு எப்படி இருக்கும்ன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்..”
என்று கூறி தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் மீண்டும் செழியனை பார்த்து
“அதேபோல நான் ஒன்னும் என் தங்கச்சி விசயத்தை மறைச்சு உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணல.. முதல்லயே எல்லாத்தையும் சொல்லி அவ சரின்னு சொன்னதுக்கு அப்புறம் தான் கல்யாணம் கட்டுனேன்..”
என்று கூறி தன் மனைவி வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
View attachment 1197