எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நேசம் கொண்ட நெஞ்சம்மடா (கதை திரி)

Status
Not open for further replies.

Kavisowmi

Well-known member
நேசம் கொண்ட நெஞ்சம்மடா..

1

"இதுதான் உன்னுடைய முடிவா சக்தி. "

"ஆமாம் பாட்டி நான் முடிவு பண்ணிட்டேன். அப்பா கொடுத்த வாக்கை நான் நிறைவேற்றணும்னு..யாரையும் ஏமாத்திட்டதா அப்பாவை குறை சொல்லக்கூடாது அதனாலதான் இந்த முடிவு."

" ஆனா இது சரியா வரும்னு நினைக்கிறியா.. சக்தி."

"வரணும் பாட்டி. எனக்கு சொல்ல தெரியலை.. என்னோட முடிவு இதுதான். அப்பா பத்தி உங்களுக்கு நல்லா தெரியும் இல்லையா .

அவர் ஒன்னு முடிவு பண்ணிட்டார்னா மாத்தவே மாட்டாரு .நிச்சயமா அப்பாவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றணும் என்கிற எண்ணம் துளி கூட இல்லை.
நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியுமே."

"இப்படி மாறி போவான்னு நான் நினைக்கவே இல்ல சக்தி. இந்த நிமிஷம் வரைக்கும் அவனோட மாற்றத்தை என்னால் ஜீரணிக்க முடியல ."

"அதுதான் பாட்டி எனக்கும் ஆச்சரியமா இருக்குது .பணம் வந்தால் இப்படி மாறிடுவாங்கலா என்ன? "

"முன்னாடி நடந்தது எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி எப்படி இருக்க தோணுது சக்தி.. "

"சரி பாட்டி இனிமே மாத்தி மாத்தி பேசி எதுவும் ஆகப் போறதில்லை நான் முடிவு பண்ணிட்டேன். அதை நோக்கி புறப்படவும் தயாராகிட்டேன்.

எனக்கு வேண்டிய எல்லாத்தையுமே எடுத்தாச்சு பாட்டி .அப்பா கேட்டாங்கன்னா நீங்க சொல்லிடுங்க .

சொல்லி சமாளிக்க வேண்டியது உங்களோட பொறுப்பு. இன்னமும் ரெண்டு நாள்ல நான் வேலையில் ஜாயின் பண்ணி ஆகணும் .

அங்க போனதும் எல்லா டீடெயிலும் உங்களுக்கு சொல்றேன் பாட்டி".

" ஜாக்கிரதையா இருக்கணும் சக்தி எனக்கு உன்னை நினைச்சா நிறைய பயமா இருக்குது .

உன் வீட்டிலேயே நீ மட்டும் தான் கொஞ்சம் வித்தியாசமானவள். உனக்கு முன்னாடி நாலு அக்கா இருந்தாலும், அவங்க கிட்ட பாசத்தையோ நேர்மையான குணத்தையோ நான் பார்த்தது இல்லை.

என்கிட்ட இந்த அளவுக்கு பாசமா இருந்ததும் கூட வேற யாரும் இல்ல நீ மட்டும் தான்".

" பாட்டி அப்பா கூட இருக்க ஏனோ உங்களுக்கு விருப்பம் இல்லை . எப்போ அப்பா கல்யாணம் முடிச்சுதோ அந்த நிமிஷமே நீங்க இதோ இந்த வீட்டுக்கு வந்துட்டீங்க.

அம்மா உங்களை நல்லவிதமா பார்த்துகிட்டாலுமே உங்களுக்கு அப்பா கூட இருக்கு விருப்பம் இல்லை .

அம்மா கூட ரொம்ப நல்லவங்க தான் ஆனால் சூழ்நிலை கைதி. அப்பாக்கு முன்னாடி அவங்களால அதிர்ந்து பேச முடியாது.

இதுல கொடுமையான விஷயம் என்னன்னா அப்பா மாதிரியே என்னோட நாலு அக்காக்களும் பிறந்தது தான் .

அப்பா மாதிரியே அவங்களால ஈஸியா மாறிட முடிஞ்சது ஆனால் என்னால அப்படி இருக்க முடியல பாட்டி .

நடந்த ஒவ்வொன்றையும் கூட இருந்து பார்த்ததேன் இல்லையா.. இன்றைக்கு இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறோம்னா அதற்கு ஒரு வகைல அப்பாவோட நண்பரும் தானே காரணம் .

அது என்னைக்குமே இல்லை என்று ஆகிவிடாதே .."

"புரியுது சக்தி நீ சொல்றது ஆனால் ஏன் இந்த பயலுக்கு இப்படி புத்தி போச்சுன்னு என்னால யோசிக்கவே முடியல .

உனக்கு தெரியாது சக்தி இரண்டு முறை அவங்க இங்க வந்து இருந்தாங்க .

உன் அப்பா மூஞ்சி கொடுத்து பேசல இதெல்லாம் இந்த நடு வீட்டு ஹால்ல தான் எல்லாமே நடந்துச்சு தெரியுமா".

"பாட்டி நான் ஒரு முறை உங்க கூட இருந்தேனே.. எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு தானே இருந்தேன்? தொழில் தொடங்கும் போது ஆரம்பத்துல அப்பாவுக்கு அவ்ளோ பணத்தை உதவி செஞ்சது அவரோட நண்பர் தான்.

ஆனா அந்த நண்பருக்கு எப்படி துரோகம் செய்ய மனசு வந்ததுன்னு தான் எனக்கு இன்னமும் புரியலை".

" என்ன செய்றது எல்லாமே விதி போல இருக்கு .அவனுக்கு தாராள மனசு பிசினஸ் ஆரம்பிக்கிறேன்னு சொல்லவும் யோசிக்காம பணத்தை எடுத்து கொடுத்தான் .

ஆனா அவங்க கேட்டது ஒன்னே ஒன்னு தான். நீ அஞ்சு புள்ளைங்கள வெச்சிருக்கற.. ஏதாவது ஒரு பொண்ணை என் பையனுக்கு கட்டித் தரணும் .இத மட்டும் தான் அவன் கேட்டது .ஆனால் உன் அப்பனுக்கு விருப்பம் இல்லாம போயிடுச்சு அதுக்கு காரணம் என்ன தெரியுமா?..

பணம் வர ஆரம்பிக்கவும்.. அந்தஸ்து,தகுதி கீழ தெரிஞ்சிருக்கு…அதுக்கு ஏத்த மாதிரி தான் உன்னோட அக்காக்களும்..

ஏதாவது ஒரு பொண்ண கட்டி கொடுன்னு மறுபடியும் வந்து கேட்கும்போது ரொம்ப பேசிட்டான் .

என் பொண்ணுங்க வசதியா வீட்ல இருக்காங்க. உன் வீட்டில் வந்து எப்படி இருப்பாங்க அப்படிங்கிற மாதிரி..

அதே நேரத்தில் அவன் ஒன்னும் கஷ்டப்படலையே ..அவனும் ஓரளவுக்கு வசதியா தான இருந்தான். ஏன் உன் அப்பா இப்படி பண்ணினான்னு இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு புரியல.

நானே ரொம்ப ஆசைப்பட்டேன் தெரியுமா? கௌரியவோ சரண்யாவையோ ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரை கல்யாணம் பண்ணி கொடுப்பான்னு நினைச்சேன் ஆனா எதுவுமே நடக்கல .

கடைசியில ஒரு கட்டத்துக்கு மேல இனி கேட்டு பிரயோஜனம் இல்லை எல்லாமே மாறிடிச்சில்லன்னு புரிஞ்சிகிட்டு மனசு வருத்தத்தோட போனான்.

அன்னைக்கு தான் அவனை கடைசியா பார்த்தேன் அந்த பையன் எவ்வளவு அழகா இருத்தான்னு தெரியுமா .. போட்டோ காட்டினான் சும்மா ராஜா மாதிரி இருந்தான்."

"யாரையும் குறை சொல்லிட முடியாது பாட்டி .அப்பாவுக்கு அவங்க பொண்ணுங்க போகிற இடத்துல கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சாங்க..

அங்க தான் பிரச்சனை ஆரம்பம் ஆச்சு .முன்னாடி சொன்னதை மறந்துட்டாங்க தான் இல்லன்னு சொல்ல மாட்டேன் .ஆனால் அவர்களுடைய இடத்தில் இருந்து பார்க்கும்போது அவங்க செஞ்சது சரிதான்னு தோணுது".

" என்னமோ போ சக்தி கொடுத்த வாக்கை மனுசனா பொறந்தா காப்பாத்தணும் இல்லையா..

ஈசியா தூக்கி வீசினால் அதற்கு அர்த்தம் என்ன ?"

"பாட்டி நீங்க எந்த காலத்துல இருக்கீங்க .காலம் மாறிடுச்சு பாட்டி சொன்னதெல்லாம் செய்யணும்ங்கிற அவசியம் கிடையாது.

இன்றைக்கெல்லாம் பத்திரத்தில் எழுதி வாங்கினா கூட அது இல்லைன்னு சொல்றதுக்கு ஆட்கள் இருக்கிறார்கள் .அதனால ஒரேயடியா இப்படித்தான் இருக்கணும்னு சொல்லிட முடியாது.. "

"என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ சக்தி .உன் அப்பாவ குறை சொன்னா உன்னால ஒதுக்கவே முடியாது .ஆனால் அதே நேரத்தில் அப்பா செய்யறது தப்புன்னு உனக்கு தோணுது இல்ல.."

" என்ன பாட்டி செய்றது இந்த பொண்ணுங்களோட நிலைமையை இது தானே..

சரி தப்புங்கிறதை முகத்துக்கு நேரா சொல்ற நிலைமையிலா நாம இருக்கிறோம் எதனை வருஷம் தாண்டினாலும் .

சில விஷயத்துல ஈஸியா தட்டி உட்கார வைத்து பேசக்கூடாது.. இதை செய்யக்கூடாது ,இது மாதிரி நூறு கண்டிஷன் இன்னமும் நம்ம பின்னாடி வால் மாதிரி வந்துகிட்டு தான இருக்குது."

"நீயேன் சக்தி உன்னோட அக்காங்க மாதிரி இல்ல.."

"ஆமாம் பாட்டி அவங்கள மாதிரி இருந்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது .

நானும் அவங்களை மாதிரி ஜாலியா என்னோட வாழ்க்கையை அனுபவிச்சிருக்கலாம் ஆனா எனக்கு அது மாதிரி இருக்க தோணலையே.. நான் என்ன செய்யறது.

அப்பாவும் அவங்க நண்பரும் உங்க முன்னாடி பேசின ஞாபகம் இப்பவும் வந்துகிட்டு இருக்குது .நான் என்னதான் செய்யட்டும். என்னால அதிலிருந்து தாண்டி வர முடியல..

அன்னைக்கு கடைசியா போகும்போது அப்பாவோட ஃப்ரெண்ட் எப்படி அடிபட்ட மாதிரி மன வருத்தத்தோட போனாரு தெரியுமா .

அதுக்கு பிறகு நடந்தது எல்லாமே உங்களுக்கு தெரியும் இல்லையா.. அது கில்டி ஃபீலிங் என்னை துரத்திகிட்டு இருக்குது."

"சக்தி அப்புறம் நீ ஏன் கவலைப்படற.."

" என்ன பாட்டி எப்படி கேக்குறீங்க நடந்தது எல்லாத்துக்குமே ஒருவகையில் இவங்களும் தானே காரணம்.

அன்றைக்கு வேதனையோட வண்டி எடுத்துட்டு போனவங்க ஆக்சிடென்ட்ல சிக்கிட்டாங்க அப்பாவோட நண்பர்..

அதுக்கு பிறகு நடமாட்டமே சுத்தமாக குறைந்து போச்சு .இதுவரைக்கும் சக்கர நாற்காலியில் தான் இருக்கிறதா தகவல் .

இது கூட அப்பா ஒரு நாளும் சொன்னது இல்ல .சமீபத்துல தெரிஞ்சுகிட்டது .

இதெல்லாம் பார்க்கும்போது எவ்வளவு வருத்தமா இருந்தது தெரியுமா.."

"நீ தனியா வருத்தப்பட்டு என்ன ஆகிட போகுது சக்தி.. நடந்து முடிந்தது எதையும் இனி சரி செய்ய முடியாது சக்தி ."

"ஆனா அப்பா கொடுத்த வாக்கை என்னால காப்பாற்ற முடியும் பாட்டி உங்களுக்கே தெரியவில்லையா…

ஏற்கனவே மூணு அக்காவுக்கு கல்யாணம் பண்ணி முடிச்சுட்டாங்க இன்னும் இருக்கிறது ஒரு அக்கா மட்டும் தான் .அவளுக்கும் அப்பா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாச்சு..

நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன் பாட்டி .அப்பாவோட வாக்கை நான் காப்பாத்தணும்னு .நான் நிச்சயமா அந்த பையனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் .."

"ஆனா அவங்க இதுக்கு சம்மதிக்கணுமே சக்தி .இந்த நிமிஷம் வரைக்கும் நம்ம குடும்பத்து மேல அத்தனை வெறுப்போடு தானே அவங்க இருக்காங்க."

" அப்படித்தான் நானும் நான் கேள்விப்பட்டேன் பாட்டி . ஆனா நிச்சயமா என்னால முடியும் பாட்டி."

சரிதான் உன்னோட அப்பா பேரை சொன்னாலே அவங்க பக்கத்துல கூட சேர்த்துக்க மாட்டாங்க ..ரெண்டாவது முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு".

" சொல்லுங்க பாட்டி கேட்கறேன்.."

" உனக்கும் அந்த பையனுக்கும் கிட்டத்தட்ட 10 வயசுக்கு மேல வித்தியாசம் இருக்கும் .நம்ம பெரியவளோட வயசு அந்த பையனுக்கு.. அது உனக்கு தெரியுமா".

" அதனால என்ன பாட்டி 10 வயசு வித்தியாசத்தில் இதுவரைக்கும் யாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதில்லையா .

எனக்கு இன்னைக்கு 23 வயசு ஆகுது பாட்டி அப்படின்னா அவருக்கு 33 வயசு.. எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை பாட்டி .

இன்னமும் சொல்லப் போனால் என்னை ரொம்ப நல்லாவே பார்த்துக்குவார்ங்கற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்குது.

பாட்டி இன்னைக்கும் அவங்க ஒன்னும் கெட்டு போயிடலை பாட்டி சென்னையில் ரொம்ப பெரிய அளவுல பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க .அவங்க ஆபீஸ்ல கிட்டத்தட்ட நூத்தம்பது பேர் வேலை செய்றாங்க உங்களுக்கு தெரியுமா."

"இப்ப நீ என்ன செய்யப் போற சக்தி ".

"வெரி சிம்பிள் பாட்டி ஏற்கனவே அவங்க கம்பெனியில வேலை கேட்டு அப்ளிகேஷன் அனுப்பி இருக்கிறேன்.

வர சொல்லி இருக்கிறாங்க நிச்சயமா வேலை கிடைக்க என்ன செய்யணுமோ அத்தனையும் செய்வேன்.

எனக்கு என் மேல நம்பிக்கை இருக்குது .நிச்சயமாக வேலை கிடைக்கும். பக்கத்துல இருந்து பார்த்து, பழகும் போது நிச்சயமா ஏதாவது ஒரு மேஜிக் நடக்கும்".

" எனக்கு என்னமோ ரிஸ்க் எடுக்கறீயோன்னு தோணுது சக்தி. ஒரு வேளைஅந்த பையன் இப்போ வேற மாதிரி இருந்தா என்ன செய்வ..

உனக்கு பொருத்தம் இல்லாதவனா குணத்துல சரியில்லாதவனா இன்னமும் சொல்லப்போனால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தால் என்ன செய்வ?"

" ரொம்ப ஈசி பாட்டி .. எதுவுமே சொல்லாம விலகி வந்துடுவேன்.

அப்பா கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறது என்னவோ உண்மைதான் .

அதுக்காக மோசமான ,குணக்கேடான ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு நான் தியாகி கிடையாது.

ஈசியா விலகி வந்துடுவேன் அதனால நீ தேவை இல்லாம பயப்பட வேண்டாம் பாட்டி.

அந்த காலத்துல சொல்ற மாதிரி நான் கல்யாணம் பண்ணிக்குவேன் அவரை திருத்தி காட்டறேன்னு சொல்லி என் வாழ்க்கையை கெடுத்துக்க மாட்டேன்.. பி ப்ராக்டிகல்.. அதனால என்னை பத்தின பயம் உனக்கு தேவையே இல்ல பாட்டி".

"என்னதான் பிறந்தது என் மகனுக்குனாலும்.. பிறந்ததிலிருந்து நீ என் கூட தான் இருக்கிற சக்தி உன்னை வளர்த்தினது நான் தான் .அப்படி இருக்கும் போது உன்னை பத்தி பயப்பட வேண்டியதும் நான் தானே.."

"அதனாலதான் பாட்டி இப்படி யோசிக்கிறேன் போல இருக்கு. சரி பாட்டி புறப்பட தயாராகிறேன் .நீங்க அப்பாகிட்ட சொல்லிடுங்க சென்னையில வேலை கிடைச்சிருக்கு போய் இருக்கிறா அப்படின்னு.."

ம்ம்..

"என்ன பாட்டி இத்தனை தயக்கத்தோடு சொல்லறீங்க ."

"இல்ல வேலைக்கு போறதா சொன்னா அவன் கத்துவான்.. அது உனக்கு தெரியும் தானே.."

" பின்ன வேற என்ன பாட்டி சொல்ல போறீங்க.. உண்மைய சொல்லிடுங்க.. எப்படியும் உங்க கிட்ட பேசினா உடனே அடுத்ததா எனக்கு தான் கூப்பிடுவாங்க. நான் அங்ககிட்ட பேசறேன் .‌கொஞ்ச நாள் தானே ..

கொஞ்ச நாள் வேலைக்கு போகணும் பா அப்படின்னு பிடிவாதமா சொல்லிடறேன் சரியா.."

"சரி ஜாக்கிரதையா இருக்கணும் எத்தனை மணிக்கு புறப்படணும். அங்க போய் எங்க தங்கவே".

" ஐயோ பாட்டி குழந்தைகிட்ட விசாரிக்கிற மாதிரி விசாரிச்சுக்கிட்டு இருக்கீங்க.. ஆல்ரெடி ஹாஸ்டல் பார்த்து ரெடியா இருக்குது .

நான் போனதும் அங்க தங்கிடுவேன். என்னோட பிரண்டு ஒருத்தி அங்க இருக்கிறா.. எல்லாத்தையும் பாத்துக்குவா ..

நான் சென்னை போனதும் உங்களுக்கு கால் பண்ணுறேன் .அப்புறமா ஹாஸ்டல் போனதும் அடுத்ததா போன் பண்ணுறேன் சரியா.."சொல்லிவிட்டு புறப்பட்டால் சக்தி.

இவளது தந்தை மீது மட்டுமல்ல இவர்களின் ஒட்டு மொத்த குடும்பத்தார் மீதும் வெறுப்பை மட்டுமே சுமந்து கொண்டு அங்கே ஒருவன் காத்திருந்தான்.
 

Kavisowmi

Well-known member
2

அந்த பிரம்மாண்டமான ஹோட்டலில் மீட்டிங் ஹாலில் அனைவரையும் அமர வைத்திருந்தனர் .

என்பதிற்கும் மேற்பட்டோர் அந்த இட்டர்வியூவர்க்காக வந்திருந்தனர். அதில் சக்தியும் ஒருத்தி ..

வந்த நேரத்தில் இருந்தே அந்த இடத்தை மட்டுமல்ல சுற்றிலும் இருந்தவற்றை பிரமிப்போடு கவனித்துக் கொண்டிருந்தால்.

ஏனென்றால் இந்த இடம் கூட மாதவனுக்கு சொந்தமானது தான்.

எப்படி ஒருநாள் இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு இலக்கை எட்ட முடிந்தது சற்று ஆச்சரியமாகவே கவனித்தல்.

அங்கிருந்த பணியாளர்கள் சுறுசுறுப்பாக வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர் .

எல்லோரிடமுமே ஏதோ ஒரு பரபரப்பு தொற்றி இருந்தது .அனைத்தையுமே சற்றே உட்புறமாக இருந்த இருக்கையில் அமர்ந்தபடி தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது .

அவளைப் பொருத்தவரையிலுமே இந்த வேலை மிக முக்கியமானது.

நிச்சயமாக மாதவனுக்கு அருகே செல்வதற்கு இந்த வேலை அவளுக்கு மிக மிக முக்கியம்.

யார் இன்டர்வியூ செய்யப் போகிறார்கள் என்பது கூட தெரியாது சற்று பதட்டத்தோடு அமர்ந்திருந்தாள்.

சரியாக பத்து மணி எனும் போது மாதவனே நேரடியாக வந்திருந்தான். கூடவே அவனுடைய சகோதரனையும் அழைத்துக் கொண்டு..

மாதவனின் வயது 30 பிளஸ்களில் இருந்தாலுமே இப்போது 25 வயது சொல்லும் அளவில்தான் இருந்தான். கட்டுமஸ்தான உடல்வாகு 6 அடி இருந்தான். நல்ல சிவந்த நிறம்..

இவனை பார்த்து நீண்ட நாட்கள் ஆகி இருந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு பார்த்தது.

அப்போது ஒல்லியாண்ட தேகம் உயரமாக வளர்ந்து இருந்தான். இத்தனை நிறமாக கூட இருந்ததாக நினைவில்லை .ஆனால் இப்போது பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது.

கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் உடல் மட்டுமல்ல ‌..பணத்தில் செழுமை அவனுக்கு இன்னும் கம்பீரத்தை கொடுத்து இருந்தது.

தெளிவான முகம் தீர்க்கமான பார்வை உதட்டில் எப்போதும் தோற்றிக் கொண்டிருக்கும் சிரிப்பு என ஒரு நிமிடம் பார்த்தாலுமே முகம் அப்படியே மனதிற்குள் பதிவாகியிருந்தது .

நிச்சயமாக இவளை பார்த்தால் அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது .

வருடங்கள் ஆனாலுமே இவளுடைய தோற்றத்தில் நிறைய மாற்றம் இருந்தது

அப்போதெல்லாம் முடியை நீளமாக வளர்த்து இருக்க வில்லை .

சிறு வயதில் இருந்தே பாட்டியின் வீட்டில் இருந்ததினால் தலை முடி பராமரிக்க எளிதாக இருக்கும் என்று இவளுக்கு பேபி ஷாலினி கட்டிங் என்பது போல ஒரு கட்டிங் வெட்டி விட்டிருந்தனர்.

தலை முடி வேறு மிக அதிகம்.. கிட்டத்தட்ட சட்டியை கவிழ்த்து வைத்தது போன்ற தோற்றம்.

இப்போது போல நீளமான தலை முடி அப்போது கிடையாது.

நிறம் கூட அப்போதெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது ஏனென்றால் பாட்டி வீட்டில் வளர்ந்ததினால் எப்போதுமே ஒரே ஆட்டம் பாட்டம் என சுற்றுபவன்.

பாதி நேரம் வெயிலோடு உறவாடி கொண்டிருப்பவள் சக்தி.

இந்த நிறம் கூட பள்ளி படிப்பு முடிந்த பிறகு வந்தது. காலேஜிற்கு செல்லும் போது பாட்டி இயற்கை மூலிகை இது அது என சொல்லி நிறைய முகத்தில் தேய்த்து இந்த நிறத்தை கொண்டு வந்திருந்தார் .

எப்போதுமே பாட்டி சொல்வது தான் கருப்பா இருந்தா உனக்கு கல்யாணமே ஆகாது பார்த்துக்கோ கிண்டலாக சொன்னாலுமே ஒவ்வொரு முறையும் திரும்ப சக்தி சண்டையிடுவாள்.

அப்படின்னா மனிதர்களோட மனதுக்கு மதிப்பே இல்லையா பாட்டி.. நிறத்துக்கு மட்டும்தான் மதிப்பா..

நிறத்தை பார்த்து தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லி யாராவது வந்தா அப்படிப்பட்ட மாப்பிள்ளையே வேண்டாம் .

அந்த மாப்பிள்ளை எந்த ஊருக்கு ராஜாவா இருந்தாலும் எனக்கு அதை பத்தி கவலை கிடையாது .

இது எல்லாமே காலேஜுக்கு செல்ல ஆரம்பித்த பிறகு இருவருக்கும் நடக்கும் செல்ல சண்டை.. ஆனால் உண்மையிலேயே சக்தி கருப்பு கிடையாது மாநிளத்திற்கும் சற்று அதிகமான நிறம் தான்.

அவனைப் பார்த்த சில நிமிடங்களிலேயே நினைவு எங்கெங்கோ சுற்றி வந்திருந்தது சக்திக்கு..

சற்றே தன்னுடைய எண்ண ஓட்டத்தை அடங்கியவள் சுற்றி நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தால்..

ஆபீஸ் அறை போல சிறு செட்டிங் செய்து இருக்க அந்த இடத்தில் உள்ளே சென்று இருவரும் அமர ஒவ்வொருவராக உள்ளே சென்று வந்து கொண்டிருந்தனர்.

இன்டர்வியூ தொடங்கிய சில நிமிடங்களிலேயே நேரம் வேகமாக நகர ஆரம்பித்தது .அடுத்தடுத்ததாக வேகமாக ஒவ்வொருவரையும் அழைத்துக் கொண்டிருந்தனர்.

வெளியே வந்து கொண்டிருந்த ஒவ்வோருவரின் முகத்தையும் பார்த்த போது இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை .

சோகமாக சிலர் சற்றே கோபத்தோடு சிலர் என ஒவ்வொரு உணர்ச்சிகளையும் காட்டிக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தனர் .

அவர்களை பார்க்கையில் ஓரளவுக்கு புரிந்தது.இன்டர்வியூவில் எடா கூடமாக நிறைய கேள்விகளை கேட்கிறான் என்று ..

எளிதாக நிறைய பேரை நிராகரித்து கொண்டிருந்தனர் என்பது இவளுக்குமே ஓரளவுக்கு புரிந்தது .

இவர்களுடைய நிறுவனம் வளர்ந்து வரும் புதிய நிறுவனம் ..அவர்களது முக்கியமான வேலையே பிரபல நிறுவனங்களுக்கு விளம்பர படங்களை தயாரித்துக் கொடுப்பது..

சிறுசிறு நிறுவனங்கள் தொடங்கி பெரிய துணிக்கடை நகைக்கடை என சற்று வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது..

தற்போது புதியதாக ஒரு கிளை துவங்கி தலைமை நிறுவனத்தை அங்கு கொண்டு செல்வதற்காக முடிவு செய்திருந்தனர் .

அதற்கான இன்டர்வியூ வேலைதான் வேகமாக நடந்து கொண்டிருந்தது..

பழைய நிறுவனத்தில் இருந்து ஒரு சிலரை மட்டுமே புதிய நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வது என முடிவு செய்திருந்தனர்.

மற்றவர்கள் அனைவருமே பழைய நிறுவனத்திலேயே தொடர்ந்து பணி புரிய வேண்டும்.

பழைய நிறுவனத்தை தன்னுடைய தம்பி குரு கவனித்துக் கொள்வான்.

புதியதாக தொடங்கும் நிறுவனம் முழுக்க முழுக்க மாதவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் .

இந்த முடிவு எடுக்க கூட முக்கியமான காரணம் குரு தான் .

குருவிடம் இன்னமுமே நிறைய விளையாட்டு தனம் இருந்தது. எப்போது எந்த வேலையில் சொதப்புவான் என்பது இது வரையிலும் தெரியாது ஒவ்வொன்றுக்கும் இவனுடைய உதவி வேண்டும்.

முதலாவது தம்பி என்கின்ற செல்லம்.. அடுத்ததாக சிறுவன் என்கின்ற கவனிப்பு..

உண்மையில் குரு இவனை விடவும் ஐந்து வயது சிறியவன் தான் ஆனாலும் என்னவோ இவன் மிகவும் பெரியவன் போலவும் அவன் மிகவும் சிறியவன் போலவும் நடந்து கொள்வான்.

இன்னமும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட 15 வயது சிறுவனை எப்படி நடத்துவானோ அது போல தான் ஒவ்வொரு முறையும் அவனை நடத்துவது ..

குருவும் அண்ணா நினைப்பது போல அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை .

சற்று பொறுப்பு நிறைந்தவன் தான் ஒன்று செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டால் அதை சரியாக செய்து கொடுப்பவன் .

மாதவனின் கவனிப்பு எல்லாமே கண்டிப்பு என்று சொல்லி விட முடியாது. அது ஒரு வகையான பாசம் அன்பு அதனின் வெளிப்பாடு தான்.

இது குருவுக்கு தெரியும் அதனால் அவன் எதையுமே கண்டு கொள்வது இல்லை .

இன்னமும் சொல்லப்போனால் அண்ணனின் முகத்தில் இருக்கும் சிரிப்பின் அதே அளவு இவனுடைய முகத்திலும் எப்போதுமே ஒட்டிக் கொண்டிருக்கும் .

சில நேரங்களில் இக்கட்டான சூழ்நிலைகளில் பிரச்சனை என்று வரும் போது சற்று மாதவன் யோசிப்பது போல தெரிந்தால் எதையாவது சொல்லி அவனை கலகலப்பாக்குபவனும் இவன் தான்.

குருவைப் பார்க்கையில் மாதவனின் ஜெராக்ஸ் என்பது போல தோற்றத்தில் தான் இருந்தான்.
கிட்டத்தட்ட அவனின் உயரம் நிறத்தில் தான் சற்று வித்தியாசம் இருவருக்கு நடுவிலும்..மற்றபடி பெரியதாக இருவருக்கும் வித்தியாசம் கிடையாது.

கேள்விகள் அனைத்தையுமே குரு தான் கேட்டுக் கொண்டிருந்தது. மாதவன் ஒரு வார்த்தை கூட வந்தவர்களிடம் பேசவில்லை.

அமைதியாக வந்தவர்களை கவனிப்பது மட்டுமே அவனுடைய வேலை ..

தீர்க்கமான சில நிமிட பார்வையிலேயே அவர்கள் பேசுவதை கவனித்து வேலைக்கு சரி வருவார்களா இல்லையா என முடிவு செய்து செலக்ட் செய்து கொண்டிருந்தான்.

குரு வந்தவர்களிடம் கல கலப்பாக பேசி அவர்களைப் பற்றி அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டிருந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாண்டிய நிலையில் சக்தியை அழைத்து இருந்தனர் .சற்று பதட்டத்தோடு தான் உள்ளே சென்றது.

உள்ளே சென்றவள் இருவரையும் பார்க்க நிறைய குழப்பம் வந்திருந்தது .

இதில் யார் மாதவன் என்கின்ற குழப்பம் நிறையவே இருந்தது கிட்டத்தட்ட இருவருமே ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பதாக தோன்றியது. .

அதே நேரத்தில் மாதவன் சற்றே தீர்க்கமான பார்வையோடு நெற்றியை சுருக்கியபடி இவளின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தான்.

அந்த பார்வையை ஒரு நிமிடம் சந்தித்தவளுக்கு மனதிற்குள் புதியதாக ஒரு பயம் தோன்றியது.

எங்கே தன்னை கண்டு கொண்டார்களோ என்கின்ற சிறு பதட்டம் தோன்ற..அந்த பதட்டத்தை மறைத்தபடி இருவரையும் நிமிர்ந்து பார்த்தால் சக்தி.
 

Kavisowmi

Well-known member
3

அதே நேரம் மாதவனுக்கு போனில் அழைப்பு வந்து கொண்டிருந்தது ."ஒரு நிமிடம் "என்று சொன்னவன், அருகில் அமர்ந்திருந்த குருவை பார்த்தபடி நீ பார்த்து செலக்ட் பண்ணு .முக்கியமான போன் கால் கொஞ்ச நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு போனை கையில் எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

அவன் நகரவும் தான் சக்திக்கு கொஞ்சம் அசுவாசமாக உணர ஆரம்பித்தாள்.

குரு மாதவனை போல கிடையாது மிகவும் கலகல பேர் வழி..

எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு நகரக்கூடியவன்.

வீட்டில் நடத்த சிறு சிறு பிரச்சனைகள் கூட ஆரம்பத்திலேயே இவனுக்கு தெரியும். தந்தையின் இன்றைய நிலைக்கு காரணம் யார் என்பது கூட அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அவரைப் பொறுத்த வரைக்கும் இது எல்லாமே ஒன்றுமே கிடையாது இப்படித்தான் அவன் யோசித்தது.

ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்காக தந்தை தேவையில்லாமல் கண்டதையும் யோசித்து நோயை இழுத்துக் கொண்டார் .

இதுதான் அவனுடைய இன்று வரையிலுமான கருத்து .இதை பல முறை மாதவனிடமும் கூறியிருக்கிறான்.

மாதவனை பொருத்தவரைக்கும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்பவன் .

தந்தை ஒரு வார்த்தை சொன்னால் அதற்கு மறுப்பு என்றைக்கும் தெரிவித்தது கிடையாது.

இப்போதும் சற்று கலக்கத்தோடு அமர்ந்திருக்க" ஹலோ "என்று அவளுக்கு முன்பாக கையால் சொடக்கிட்டு அழைத்து இருந்தான் குரு. சற்றே திகைத்தபடி குருவை பார்க்க.." என்ன கனவு காண ஆரம்பிச்சுட்டிர்களா..

உள்ளே வரும்போது அண்ணாவோட முகத்தை பார்த்து அவ்வளவு பயத்தோட கவனிச்ச மாதிரி இருந்தது . நான் உங்களை நல்லாவே கவனிச்சேன் என்ன விஷயம் "என்று கேட்க ..வந்து என்று தடுமாறியவள் பிறகு ஒருவராக சமாளித்துக் கொண்டு.." இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம் எங்கே எனக்கு வேலை இல்லைன்னு சொல்லிவிடுவார்களோ அப்படிங்குற சின்ன பயம் இருந்துச்சு அதனால தான் அப்படி பார்த்தேன்".

" அப்படியா.. சொல்றதை நம்பலாமா.."

" பின்ன நம்ப மாட்டீங்களா.."

" இல்லையே எனக்கு என்னமோ வேற மாதிரி தான் தோணுச்சு.."

"வேற மாதிரின்னா எப்படி சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன் ".இப்போது சக்தி இயல்புக்கு திரும்பி இருந்தாள்.

அவளுடைய வழக்கமான துடுக்கத்தனம் பேச்சில் வர ஆரம்பிக்க ,"எஸ் இப்ப பயமில்லாமல் பேசுற மாதிரி இருக்குது .ஆனா பார்க்கும்போது எங்கே கண்டுபிடிச்சிடுவாங்களோ அப்படிங்கற மாதிரியான தோற்றம் முகத்துல தெரிஞ்சது ."

"என்ன சார் இது ரொம்ப அநியாயமா இருக்குது. இப்படியெல்லாம் பேசாதீங்க .நான் இங்க வந்து இருக்கிறது வேலைக்காக..

எனக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா என்கிற பதட்டம் நார்மலா எனக்கு வருது சகஜம் தானே ..

அதுக்காக ஏன் இவ்வளவு பெரிய வார்த்தை சொல்லணும் ."

"சரி அது போகட்டும் எதுக்காக உங்களுக்கு இந்த வேலை முக்கியம் அதை சொல்லுங்க .பிறகு வேலை கொடுக்கலாமா இல்லையான்னு நான் யோசிக்கிறேன்".

என்ன சார் இது இப்படி கேட்டா என்ன அர்த்தம். நான் கிராமத்தில் வளர்ந்தவ.. என்னோட ஊரு திருச்சி பக்கத்துல ..

பாட்டியும் நானும் தான் சின்ன வயசுல இருந்தோம்.. படிச்சு முடிக்கவும் இங்க வேலை கிடைக்கும்கிற தைரியத்துல பிரண்டு கூட ஹாஸ்டல்ல தங்கி இருக்கிறேன் .

கொஞ்சம் பதட்டம் இருக்கத்தானே செய்யும் வேலை கிடைக்குமா கிடைக்காதா அப்படிங்கற மாதிரி.."

"கொடுங்க உங்க சர்டிபிகேட் எல்லாம்.. அப்புறமா கொஸ்டின் கேட்கிறேன்" என்று அவளுடைய சான்றிதழ்களை வாங்கியவன் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான்.
பார்க்க பார்க்கவே கண்கள் ஆச்சரியத்தில் விரிய ஆரம்பித்தது.

அடேங்கப்பா நிறைய டேலண்ட் இருக்கிற ஆள் போல இருக்குது .எல்லாத்திலேயும் ஃபர்ஸ்ட் ..காலேஜ் டாப்பர் வேற ..

அப்புறம் எப்படி வேலை கிடைக்காது அப்படிங்கிற நம்பிக்கைக்கு போனீங்க .தெரிஞ்சுக்கலாமா.."

"இன்றைக்கு வேலை கிடைக்கிறது பெரிய விஷயம் தானே அவ்வளவு சீக்கிரம் கிடைக்கிறது இல்லையே.."

"சரி நீங்க படிச்ச படிப்புக்கும் இங்க தேடி வந்த இந்த ஆபீஸ்க்கு நிறைய வித்தியாசம் இருக்குது தெரியுமா?"

" தெரியும் சார் ஆனால் என்னோட பெஸ்ட் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்குது".சொல்லி விட்டு அமைதியாக அமர்ந்திருக்க..

" சரி இன்னும் ஒரே ஒரு கேள்விதான் எங்க ஆபீஸ பத்தி உங்களுக்கு என்ன தெரியும் .

சில வார்த்தைகள் சொல்லுங்க பாக்கலாம் ".

"நான் என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல ..நான் இந்த பீல்டுக்கு புதுசு இது .ஒரு விளம்பர கம்பெனி அது நல்லா தெரியும்.

பேப்பர்ல வர்ற விளம்பரத்திலிருந்து காலண்டரில் போடற போட்டோ கிராபில இருந்து டிவியில வர்ற விளம்பரம் இன்னமும் நெட்ல நிறைய விளம்பரங்கள் உங்க நிறுவனம் தான் எடுத்து செய்கிறார்கள் .

இன்னமும் சொல்லப்போனால் நம்பர் ஒன் இடத்தில் தற்சமயம் நீங்க தான் இருக்கீங்க வளர்ந்து வருகிற ஏஜென்சி .

இது எல்லாம் எனக்கு பத்திரிகை மூலமா தெரிஞ்சுக்கிட்டது இதுக்கு மேல தெரிஞ்சுக்கணும்னா நான் இங்க தொடர்ந்து வேலை செஞ்சா இன்னமும் நிறைய தெரிஞ்சுக்கலாம்னு நினைக்கிறேன்."

" நாங்க ஆல்ரெடி ஆட்களை செலக்ட் பண்ணியாச்சு. அப்புறம் ஏன் இந்த இன்டர்வியூன்னு கேட்கிறீர்களா..

அடிஷனலா இன்னும் கொஞ்சம் பேர் இருந்தா நல்லா இருக்கும் அப்படிங்கறது அண்ணாவோட ஆசை சோ அதனால தான் எடுத்துக்கிட்டு இருக்கோம் .

உடனே கன்ஃபார்ம் எல்லாம் பண்ண மாட்டாங்க. வேலை நிரந்தரமாகாது . மினிமம் ரெண்டு வருஷமாவது ஆகும் அதுவரைக்கும் சராசரியான சேலரி தான் உங்களுக்கு கிடைக்கும்."

"எனக்கு வேலை மட்டும் இருந்தா இப்போதைக்கு போதும் பணம் பிரச்சனை கிடையாது."

" இப்படித்தான் சொல்லிட்டு வருவீங்க பிறகு பணம் பத்தல சம்பளம் கம்மி என்னால மேனேஜ் பண்ண முடியல .

இந்த மாதிரி எல்லாம் கம்ப்ளைன்ட் நிறைய சொல்லுவாங்க .அதுக்காக தான் முன்னாடியே இந்த விஷயத்தை சொல்றது."

" எனக்கு வேலை இருந்தா போதும் என்னால கத்துக்க முடியும் ".

"ஓகே இவ்வளவு தூரம் சொன்னதால இதுக்கு மேல உங்ககிட்ட கேட்க எதுவும் இல்லை .

நிச்சயமா உங்களுக்கு வேலை உண்டு அப்புறமா பேர் எல்லாம் சொல்ல வேண்டியது இல்லை .

நான் ரொம்ப பிரெண்ட்லியானவன் என் பேரு குரு ஓகேங்களா ..

மாதவன் சாருக்கு மரியாதை கொடுத்தா போதும். ஏன்னா அவர் கொஞ்சம் ஸ்டிட்டு.. மரியாதையை எல்லார்கிட்டயும் எதிர்பார்ப்பாரு..

தப்புன்னு தோணுச்சுன்னா யோசிக்கவே மாட்டார் அந்த நிமிஷமே வேலையை விட்டு தூக்க கூட செய்வாரு .ஆனா நான் அப்படி கிடையாது .

ஓகே ஆல் த பெஸ்ட் "என்று இவளை அனுப்பி வைக்க மனதிற்குள் குதூகலத்தோடு நகர்ந்தால் சக்தி.

அதே நேரத்தில் தன்னுடைய தந்தையோடு பேசிக் கொண்டிருந்தான் மாதவன்.

"அப்பா நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னது தான் இன்னொரு முறை இது சம்பந்தமா என்கிட்ட பேசாதீங்க..

இப்போ நீங்க இருக்குற இடத்துல எல்லா வசதியும் சரியா இருக்குதா அதுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும் .

டாக்டர் வழக்கமா வருவாங்க . சீக்கிரமா கொஞ்சமாவது நடக்கணும் அதுதான் என்னோட ஆசை மத்தபடி இப்போதைக்கு எதை பத்தியும் யோசிக்கறதா இல்ல புரிஞ்சுதா.."

"கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்க போறதே இல்லையா மாதவா.."

" நான் எப்ப அப்படி சொன்னேன்.. சும்மா கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு சொல்லாதீங்கப்பா..

இன்னும் நான் போக வேண்டியது ரொம்ப இருக்குது..அதுக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிக்க தயாரா இல்லை.."

"நான் அனுப்பிய போட்டோவில் அந்த பொண்ணுக்கு ஏதாவது குறை இருக்குதா ".

"அப்பா இப்ப இந்த பேச்சு தேவையா.. நிஜமா கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு உங்களுக்கு ஆசை இருந்தா குருவிற்கு பாருங்கள்..

தயவு செய்து என்கிட்ட இது பத்தி பேசாதீங்க ..நான் உங்களுக்கு வாக்குறுதி தரேன்.

கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே ..நிச்சயமா கல்யாணம் பண்ணிக்குவேன் .

ஆனா இப்ப இல்ல அது மட்டும் புரிஞ்சுகிட்டா போதும் சரியா. இனி எதை பத்தியும் என்கிட்ட பேசாதீங்க..

வேலை நேரத்தில் பாதியில் அடிக்கடி கூப்பிட்டு தொந்தரவு பண்ணாதீங்க.."

" மாதவா நான் உனக்காக ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன் அந்த பொண்ணோட போட்டோ கூட அனுப்பி வச்சேன்.

நீ எந்த ரெஸ்பான்ஸ்சும் பண்ணல அதனாலதான்.."

"இதுவரைக்கும் எந்த போட்டோவை நான் பார்க்கல .."

"டேய் உன்னோட மெயில் ஐடிக்கு தான் அனுப்பி வைத்திருக்கிறேன் எனக்காக ஒரு நிமிஷம் ஒதுக்கி அந்த போட்டோவை பார்த்தா என்ன".

"ஒகே உங்கள் பிடிவாதத்தால் தான் இருப்பாங்க.. சரி சாயங்காலமா பார்க்கிறேன் .ஆனா போட்டோவை பார்த்த பிறகு என்னோட பதில் இதுவா தான் இருக்கும் .

எனக்கு கல்யாணம் பண்ணிக்க இப்போதைக்கு விருப்பம் இல்ல அது நீங்க புரிஞ்சுக்கணும் .

உண்மையை சொல்லணும்னா இப்போதைக்கு என்னால ஆபீஸ்சை விட்டே நகர முடியாது .வேலை விசயமா ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்குறேன்.

இந்த நேரத்துல ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி அவளை பாத்துக்கணுங்கறது எல்லாம் டூ மச்.."

" எங்க போனாலும் அவளையும் கையோட கூட்டிட்டு போ அததான உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்குறேன்."

" சாரிப்பா கல்யாணம் பண்ணினா அந்த பொண்ணுக்கு நேரம் ஒதுக்கணும்..

இப்போதைக்கு என் கிட்ட நேரமே கிடையாது அந்த அளவுக்கு பிசியா இருக்கேன்.

ஒரு பொண்ணுக்காக நேரம் ஒதுக்குற அளவுக்கு என்கிட்ட டைம் இல்ல புரிஞ்சுதா ."

"திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்கிற மாதவா எனக்கு உன்னை பார்க்கும் போது ரொம்ப வருத்தமா இருக்குது".

" வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை பா".

"முடிவா என்னதான் சொல்ற.."

" சாரிப்பா இப்ப மட்டும் இல்ல எப்ப கேட்டாலும் என்னோட பதில் இதுதான்..

இப்போதைக்கு கல்யாணத்தை பத்தி யோசிக்கவே இல்ல. நீங்க கட்டாயமா கல்யாணம் பண்ணி வச்சாகணும்னு முடிவு பண்ணீங்கன்னா ..குருவுக்கு பொண்ணு பாருங்க .எனக்கு ஆட்சேபனை கிடையாது .நான் போக வேண்டியது தூரம் ரொம்ப இருக்குதுப்பா ".

"ஏண்டா என்னோட பிரண்டு தன்னுடைய பொண்ண கல்யாணம் பண்ணி தரல அப்படிங்கறதுக்காகதான் இப்படி ஒரு முடிவு எடுத்தியா.."

" என்ன பேசறீங்க பா.. யாருப்பா அந்த ஆளு ..அந்த ஆளோட பொண்ணை தாண்டி உலகத்துல வேற பொண்ணே இல்லையா..

அவரோட பொண்ண விடவும் அழகான ஆயிரம் பெண்கள் கிடைப்பாங்க .அது ஒரு விஷயமே இல்ல .

நீங்கதான் உங்க பிரண்டோட பேச்சிலிருந்து இன்னும் வெளியே வராமல் நோயை இழுத்து வச்சுட்டு உட்கார்ந்து இருக்கீங்க .

மாற வேண்டியதுதான் நீங்கதான் சரியா. நான் இப்ப போனை வைக்கிறேன் .ஊருக்கு வருவேன் அப்போ உங்கள பார்த்து பேசுகிறேன் .

அதுவரைக்கும் உடம்பை கவனமாக பார்த்துக்கோங்க .ஏதாவதுனா நான் உங்களுக்கு கூப்பிடுறேன் .

முக்கியமான விஷயமா இருந்தா மட்டும் எனக்கு கால் பண்ணுங்க தயவு செய்து பொண்ணோட ஃபோட்டோவை பாரு அப்படின்னு சொல்லிட்டு எனக்கு கூப்பிடாதீங்க" சொல்லிவிட்டு உள்ளே நுழைய மேலும் இரண்டு பேரை செலக்ட் செய்து வைத்திருந்தான் குரு .

"மூணு பேரை செலக்ட் பண்ணி இருக்கிறேன் அண்ணா .இந்தாங்க ப்ரோபைல பாருங்க .

உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க. ஒரு வேலை இதுல யாராவது சரியா வர மாட்டாங்கன்னு தோணுச்சுன்னா அவங்கள நீங்க ரிஜெக்ட் செஞ்சுக்கலாம்" என்று ப்ரோபைலை நீட்ட ..பார்க்காமலேயே "நீ செலக்ட் பண்ணினா சரியாத்தான் இருக்கும் வை பார்த்துக்கலாம் "என்று விட்டு வெளியேறினான் மாதவன்.
 

Kavisowmi

Well-known member
4

ஹாஸ்டல் வந்த உடனேயே சக்தி தன்னுடைய பாட்டிக்கு போனில் அழைத்து சொல்லி இருந்தாள்.

"பாட்டி எனக்கு வேலை கிடைச்சிருச்சு பாட்டி நான் பாத்துட்டேன் .என்னோட ஹீரோவை>>" என்று சொல்ல சிரிக்க ஆரம்பித்தார் .

"பாட்டி நீ இப்ப எதுக்காக நீ சிரிக்கிற.."

"நீயே முடிவு பண்ணிட்டா போதுமா சக்தி .மாதவனும் அதுக்கு சம்மதிக்க வேண்டும் இல்லையா .."

"அதெல்லாம் சம்மதிக்க வச்சிடலாம் பாட்டி .அதுக்காக தானே இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன்."

" சரிதான் முதல்ல உன்னோட அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லணும் .என்ன செய்யப் போற.."

" இதுவரைக்கும் நான் கூப்பிட்டு பேசல பாட்டி .உனக்கே தெரியும் இல்லையா ..ஏதாவது சொல்லி சமாளி .

நான் சென்னையில் கொஞ்ச நாள் வேலைக்கு போகணும்னு பிடிவாதமா என் கிட்ட சண்டை போட்டுட்டு போயிட்டான்னு சொல்லு.."

" நான் சொன்னா மட்டும் உன்னோட அப்பா சும்மா இருந்திருவானா.. உடனே உன்னை வர சொல்லுவான் இல்லாட்டி அவனே நேரா புறப்பட்டு வருவான்."

"இந்த ரெண்டுல ஒன்னு கூட நடக்கக்கூடாது பாட்டி அதனால நீ என்ன செய்வியோ..

ஏது செய்வியோ தெரியாது நீ தான் சமாளிக்கிற.."

" சக்தி எனக்கு கொஞ்சம் பயமாவே இருக்குது. குறைச்சது எவ்வளவு நாள் ஆகும் நீ அங்க இருந்து இங்க வர .."

"என்ன பாட்டி நான் வந்திருக்கிறது என்னோட வாழ்க்கையைத் தேடி திரும்ப நான் மறுபடியும் அங்க வரவேன்னு நினைக்கிறியா.."

" இப்படி பேசாத சக்தி எனக்கு ரொம்ப கவலையா இருக்குது. நீ முடிவு பண்ணினால் போதுமா மாதவனும் சம்மதிக்கணும் இல்லையா..

நீ முதல்ல சின்ன பொண்ணு உனக்கும் அவனுக்கும் வயது வித்தியாசம் ரொம்ப அதிகம் அது உனக்கு தெரியும் தானே .."

"பாட்டி அத பத்தி எல்லாம் நான் கவலையே படல .இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு நான் மாதவனை பார்த்தேன்.

எப்படி இருக்கிறார் தெரியுமா? சும்மா ஜம்முன்னு.. நெஜமாவே என்னை விடவும் 10 வயசு பெரியவன்னு சொன்னால் யாருமே நம்ப மாட்டாங்க .

என்னை விடவும் ஒன்னு ரெண்டு வயசு பெரியன்னு சொல்லலாம்.. அந்த மாதிரி தான் இருந்தாங்க..

நானே ஆச்சரியமா பாத்துட்டு வந்திருக்கேன் தெரியுமா.. இவருக்கு வயசே ஆகாதா அப்படின்னு நினைச்சுட்டு வந்தேன் .

கடைசியாகப் அவரோட அப்பா கூட நம்ம வீட்டுக்கு வந்தாங்க இல்லையா ..

அதே மாதிரி தான் இருக்கிறார் பெருசா வித்தியாசம் இல்ல. என்ன முகம் கொஞ்சம் மெச்சூரிட்டி ஆன மாதிரி இருக்குது.

பழைய மாதிரி முகம் இல்லை கொஞ்சம் தீர்க்கமான பார்வை எதிராளியை ஊடுருவி பாக்குற மாதிரி பார்க்கும்போது எனக்கே ஒரு நிமிஷத்துக்கு பயமா இருந்தது தெரியுமா.

எங்கே என்னை கண்டுபிடிச்சிடுவாரோ அப்படின்னு கூட நினைச்சேன் .

நல்லவேளை அவருக்கு ஞாபகம் இல்லை என்று நினைக்கிறேன் என்னை பத்தி அவர் கேர் பண்ணிகலை தெரியுமா ."

"சத்தி உன்னை அவன் பார்க்கும் போது உனக்கு அதிகபட்சம் இருந்தால் 10 வயசு இருக்குமா அவ்வளவுதான் இருக்கும் .

ஆனா இப்போ நீ முன்ன மாதிரி இல்லையே.. உன்கிட்ட எவ்வளவு சேஞ்சஸ் தெரியுது.

தலைமுடி இடுப்பு வரைக்கும் நீண்டு இருக்கும் இரட்டை சடை போட்டு பிண்ணி இருப்ப.. இப்ப நீ அப்படியா இருக்கிற ..பேஷன்னு சொல்லி இத்துண்டு தலைமுடியை வச்சுக்கிட்டு சுத்திகிட்டு இருக்கிற".

" என்ன பாட்டி இங்க அங்க சுத்தி கடைசியில தலைமுடியில் வந்து நிற்கற பாத்தியா ..அங்க நிக்கிற நீ என்ன சொன்னாலும் நான் தலைமுடி எல்லாம் வளர்க்கிற ஐடியாவே கிடையாது சரியா. இப்ப போனை வை .

நான் உனக்கு சந்தோஷமான நியூஸ் சொல்லிட்டேன். அதே மாதிரி நீயும் என்னை காப்பாத்துற வழியை பாரு..

அப்பா ஒரு வேலை என்னை பார்க்கிறதுக்காக இங்க வரேன்னு சொன்னார்னா எதையாவது சொல்லி சமாளி ..இப்ப நான் போனை வைக்கிறேன்."

என்றைக்கு பாட்டி கிட்ட தான் வளர்வேண்ணு சொல்லி என் கூட வந்து தங்கினாலோ அன்னையிலிருந்து இவளை காப்பாற்றி விடறதே என்னோட வேலையா போச்சு.

பார்க்கலாம் எல்லாத்தையுமே சமாளிச்சு வந்தாச்சு .இத சமாளிக்க மாட்டேனா…

நாம ஒன்னும் பெருசா தப்பு பண்ணலையே ..ஏற்கனவே இவன் செய்யறதா சொன்ன ஒரு விஷயத்தை மகள் செய்து முடிப்பேன்னு நிற்க்கறா..

என்ன இருந்தாலும் என் பையனோட ரத்தம் தானே.. என்னோட பேத்தி உடம்பிலயும் ஓடும்..

அவனுக்கு எந்த அளவுக்கு பிடிவாதம் இருக்குதோ அதே அளவுக்கு பிடிவாதம் என் பேத்திக்கும் இருக்கும் இல்லையா..

நிஜமா இந்த கல்யாணம் நடக்கும் எனக்கு நம்பிக்கை இருக்குது. மாதவா நான் காத்திருக்கிறேன் டா ..

உங்க ரெண்டு பேர் கல்யாணத்தை பாக்குறதுக்காக".. சொன்னபடியே நகர்ந்தார்.

அதே நேரத்தில் இது எதுவுமே தெரியாமல் மாதவன் தன்னுடைய வேலையில் பம்பரமாக ஈடுபட்டிருந்தான்.

குருவை அழைத்தவன் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைக்கான உத்தரவுகளை வேகமாக பிறப்பித்துக் கொண்டிருக்க அத்தனையையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான் குரு.

" என்னடா நான் கேக்குறதுக்கு எந்த பதிலும் சொல்லாம எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிக்கொண்டு இருக்கிற..

ஏதாவது நான் சொல்றதுல தப்பு இருந்தா சொல்லலாம் நம்ம சேஞ்ச் பண்றதுனா பண்ணிக்கலாம்."

"அண்ணா உனக்கே தெரியும் நீ என்ன முடிவு எடுத்தாலும் அது சரியா இருக்கும் .

ஒவ்வொரு போட்டோவும் ஒவ்வொரு மாடல் கிட்ட இருந்து எடுக்கணும்னு நம்ம முடிவு பண்ணி இருக்கிறோம்.

நாளைக்கு சரியான நேரத்துக்கு மாடல் எல்லாரும் வந்துருவாங்க.. போட்டோ சூட் எடுத்தால் முடிஞ்சு போச்சு ."

"முக்கியமான விஷயம் குரு போட்டோ ஷூட் எடுக்கும்போது ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு பாரம்பரியத்தை பிரதிபலிக்கிற மாதிரி இருக்கணும்.

இதைத்தான் நான் யோசிச்சு வச்சிருக்கேன் .உனக்கு வேற ஏதாவது ஐடியா இருந்தா சொல்லலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல."

"அண்ணா உன்னோட அளவுக்கு என்னால யோசிக்க முடியாது. நீ சொன்ன சரியா தான் இருக்கும்.

எனக்கு வேற எந்த ஐடியாவுமே தோணல .ஒருவேளை நாளைக்கு போட்டோ ஷூட் எடுக்கும்போது ஏதாவது தோணுச்சுன்னா சொல்லறேன்".

" முக்கியமான விஷயம் குரு .. எந்த பொண்ணையும் அரைகுறை டிரஸ்ல போட்டோ எதையும் எடுத்துடாதீங்க நாம கொடுக்க போறது கொஞ்சம் பெரிய நிறுவனம் ..

அவங்க தன்னோட கிளையண்ட்டுக்காக ரெடி பண்ற காலண்டர் இது ..முகம் சுளிக்கிற மாதிரி இருக்க கூடாது அப்படிங்கிறது அவங்களோட முக்கிய கண்டிசன்கள்ல ஒன்னு ஞாபகம் இருக்கட்டும்."

"அப்படி மட்டும் சொன்னா சரி வராது குரு நீ கூட நின்னு இந்த வேலையை முடிக்கணும் புரிஞ்சுதா .

நான் சாயங்காலமா தான் வருவேன் வேற ஒரு விளம்பர படம் எடுக்க நமக்கு சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறேன் .

முக்கியமான ஒருத்தர் நாளைக்கு என்னை சந்திக்கிறேன்னு சொல்லி இருக்காங்க அவங்கள பாக்க போறேன் ."

"அண்ணா நீ போற எந்த மீட்டிங்கா இருந்தாலும் அது சக்ஸஸ் தான் அதனால நீ தேவை இல்லாம பயப்பட வேண்டாம்".

"தன்னம்பிக்கை இருக்கலாம் குரு தலை கனம் இருக்கக் கூடாது . முன்ன மாதிரி கிடையாது குரு .

இப்ப நிறைய போட்டி வந்துடுச்சு நமக்கு ஆப்போசிட்டா நிறைய கம்பெனி ஒவ்வொரு ஆர்டரையும் தட்டி பறிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள் .

அதில் இருந்து மீண்டு நம்ம கம்பெனிக்கான விளம்பரத்தை நம்ம கிட்ட கொண்டு வர்றதே பெரிய வேலையா இருக்குது."

"தெரியுது ணா.. நானும் சீரியஸா என்னோட வேலையை கவனிக்கிறேன் ."

"தெரியும் டா. உங்களோட சீரியஸ் என்னன்னு ..டேய் நாளைக்கு வரும் மாடல்களுக்கு ஜூஸ் கொடுக்கறேன்னு அவங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்காத புரிஞ்சுதா..

வேலைக்கு ஆஃபீஸ்ல இருந்து ஆட்களை அழைச்சுக்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து உனக்கு வேண்டியதை சொல்லு .

அப்பப்போ ஏதாவது டவுட் இருந்தா எனக்கு போன் பண்ணு .."

"அண்ணா நீ வேலை விஷயத்துல ரொம்ப கரெக்டா இருப்ப.. உனக்கு வேலை முடிஞ்சா மட்டும்தான் அடுத்ததை பத்தி யோசிப்ப.. ஆனா நான் அந்த விஷயத்துல கொஞ்சம் வீக் தான்.

எனக்கு வேலையும் நடக்கணும் அதே நேரத்துல போர் அடிக்காம இருக்கணும் .

அதுக்காக என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்வேன்".

" சரிடா எது எப்படியா இருந்தாலும் சரி ரொம்ப நேரத்துக்கு கால்ஷீட் வாங்கலை..

காலையில பத்து மணிக்கு வந்தாங்கன்னா மூணு மணிக்குள்ள எல்லாத்தையும் அனுப்பி வச்சாகணும். ஞாபகம் வச்சுக்கோ மதியானம் லஞ்ச் எல்லாருக்கும் சொல்லியாச்சு..

ஆபீஸ்ல இருந்து ஒன்னு ரெண்டு பேரை ஹெல்ப்புக்கு கூப்பிட்டுக்கோ புரிஞ்சுதா.."

ஒகே ணா..

"சரி நான் இப்போ புறப்படுகிறேன் நாளைக்கு ஆபீஸ் வரமாட்டேன் பொறுப்பா எல்லாத்தையும் கவனிச்சுக்கோ..

புதுசா வேலைக்கு எடுத்து இருக்கிறவங்கள்ல ரெண்டு பேரை கூப்பிட்டுக்கோ.. ஏற்கனவே நான் உன்கிட்ட சொல்லி இருக்கிறேன்.

நம்ம ஆபீஸ்ல எல்லாருக்குமே எல்லா வேலையும் தெரியணும். அடிமட்ட வேலையில் இருந்து டேபிள்ல உட்கார்ந்து செய்யற வேலை வரைக்கும் செய்ய தெரியணும் ..

நான் இது மட்டும் தான் செய்வேன்னு சொல்லி யாரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து விடக்கூடாது புரிஞ்சுதா".

" புரியுது ணா.. நான் பாத்துக்குறேன். நீங்க அந்த இடத்துல இருந்தா எப்படி வேலை நடக்குமோ அதே மாதிரி நடத்திக்காட்டறேன்".

" சரிதான் பிரச்சனை எதுவும் இல்லாம முடிஞ்சா சரிதான். உன்னை நம்பி முதல் முதல்ல விடறேன்.

எப்பவுமே ரெண்டு பேரும் தான் ஸ்பாட்ல இருப்போம். நாளைக்கு என்னால இருக்க முடியாது ".

"அண்ணா இதையே எத்தனை தடவை சொல்லுவீங்க நான் பாத்துக்குறேன்."

"உன்னை நம்பறேன் டா.. " என்றபடி வெளியேறினான் மாதவன்.
 

Kavisowmi

Well-known member
5

காலை எட்டரையை தாண்டி இருந்தது வெகுவேகமாக புறப்பட்டுக் கொண்டிருந்தால் சக்தி.

நிமிடத்திற்கு ஒரு முறை மணியை பார்ப்பதும் அதே வேகத்தில் புறப்படுவதுமாக இருந்தாள்.

அதே நேரத்தில் போனில் அழைப்பு விடாமல் வந்து கொண்டிருந்தது.. "பாட்டி போன் பண்ணாத.. என்னோட அவசரம் தெரியாம இப்பதான் கூப்பிடனுமா "என சொன்னபடியே வேகமாக சென்று போனை அட்டென்ட் செய்தாள்.

" சொல்லு பாட்டி எதுக்காக காலையிலிருந்து விடாமல் போன் பண்ணிக்கிட்டு இருக்கிற.. நீ ஃபோன் பண்ணறது காலையிலிருந்து இது மூணாவது முறை தெரியுமா ..

உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்ல. இன்னைக்கு நான் முதல் முறை வேலைக்கு கிளம்ப போறேன் .

நானே பதட்டமா கிளம்பிகிட்டு இருக்கேன் .அதுக்கு ஏத்த மாதிரி நீயும் திரும்பத் திரும்ப கூப்பிட்டா என்ன அர்த்தம்".

" சக்தி எனக்கு திடீர்னு ஒரு யோசனை தோணுச்சு அதனாலதான் அதை உன்கிட்ட கேட்டு கிளியர் பண்ணிக்கிறதுக்காக ஃபோன் பண்ணினேன்."

" அதை இப்பவே கேட்டுணுமா வேலைக்கு போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்த பிறகு நீ கேட்க கூடாதா".

" இல்லை சாயங்காலத்துக்குள்ள நான் மறந்து போயிட்டா என்ன செய்யறது .அதனாலதான் இப்போ உன்கிட்ட கேட்கறேன்".

"கேளு கேளு எதா இருந்தாலும் சரி சீக்கிரமா கேட்டு முடி.. ரெண்டு நிமிஷம் தான் உனக்கு டைம். ஓகே வா".

" சக்தி நீ தான் சொன்ன இல்ல மாதவனுக்கு ஒரு தம்பி இருக்கிறதா..*

" ஆமா அதுக்கு என்ன இப்போ மாதவனோட தம்பிக்கும் மாதவனுக்கும் எத்தனை வருஷம் வித்தியாசம் .."

"இதை என்கிட்ட கேட்கத்தான் இவ்வளவு அவசரமா கூப்பிட்டியா.. இப்ப எதுக்கு பாட்டி உனக்கு இதெல்லாம் ..

இது தெரிஞ்சு நீ என்ன செய்ய போற.. சீக்கிரம் சொல்லு ."

"சரி சரி இரு.. மாதவனை விடவும் அஞ்சு வயசு சின்னவன்னு சொன்னாங்க ..

பேரு குரு பயங்கர கல கல பேர் வழியாம்.. அவர் இருக்கிற இடத்தில் எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருப்பாங்களாம்.

ஆபீஸ்ல அன்றைக்கு வெளியே வரும் போது பேசிக்கிட்டது போதுமா.."

" ஓகே ஓகே சக்தி இன்னும் ஒரு கேள்விதான்."

" நீ எதுவும் இப்ப கேட்டுக்கிட்டு இருக்காத ..எதா இருந்தாலும் சரி சாயங்காலமா வந்து சொல்லு."

" சக்தி இப்பவே சொல்லி முடிச்சிடறேன்.. சின்ன விஷயம் தான்..

நீ மாதவனை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஏதாவது கட்டாயம் இருக்குதா என்ன ? இல்ல தானே நீ ஏன் குருவை கல்யாணம் பண்ணிக்க கூடாது .

உங்க அப்பா கிட்ட கேட்டது இதை தானே ..என் வீட்டுக்கு ஒரு பொண்ணை மருமகளா கொடுக்கணும்னு.. அது பெரியவனா இருந்தா என்ன? சின்னவனா இருந்தா என்ன ?என்ன சொல்ற.."

"திடீர்னு ஏன் இப்படி எல்லாம் கேக்குற ..வழக்கமா இப்படி எல்லாம் கேட்க மாட்டியே ..சொல்லு பாட்டி".

" வந்து சக்தி பெரிய பையனுக்கும் உனக்கும் கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேலன்னு சொன்ன இல்ல.

சின்ன பையனா இருந்தா அஞ்சு வருஷம் வித்தியாசம் தானே வரும்.. அதுதான் யோசிச்சேன் ".

"நீ ரொம்ப யோசிக்கிற பாட்டி ..தேவை இல்லாம உன் மூளையை நிறைய செலவு பண்ணாத சரியா..

என் மனசுக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன். நீ சொல்றதுனால எதையும் நான் கேட்க போறது கிடையாது .

என் மனசுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன். உனக்கு தான் தெரியுமே .."

"அது தெரியும் ஆனாலும்..*

" சரி பாட்டி நான் இப்போ ஆபீஸ் போறேன் .நீ சொன்னதை நான் கொஞ்சம் யோசிக்கிறேன் சரியா..

மறுபடியும் இத பத்தி நீ பேசக்கூடாது நானே இன்னமும் முடிவு பண்ணலை.. ஜஸ்ட் இப்போ ஆபீஸ்க்குள்ள மட்டும்தான் போயிருக்கிறேன்.

இனி மேல் தான் பார்த்து புடிச்சு போய் கல்யாணம் பண்ணுவேனா இல்ல எதுவுமே சரி வராதுன்னு திரும்பி வந்துவிடுவேனா தெரியாது அதனால நீயா கற்பனையா ஏதாவது யோசிச்சிட்டு இருக்காத சரியா.."

"நீயும் கண்டிக்க ஆள் இல்லைன்னு உன் இஷ்டம் போல சுத்திக்கிட்டு இருக்காத புரிஞ்சுதா ".

"எனக்கு நல்லாவே புரியுது பாட்டி நீ என்னை பத்தி கவலைப்பட வேண்டாம் புரிஞ்சுதா..

நான் உன்னோட வளர்ப்பு எப்பவுமே தப்பு செய்ய மாட்டேன் .அதை நீ மட்டும் நம்பினால் போதும்.

ஏற்கனவே ரொம்ப லேட்டாகிடுச்சு…முதல் நாளே லேட்டா போனேன்னு வை அது அவ்வளவு நல்லா இருக்காது சரியா பை..

மறுபடியும் போன் பண்ணி என்னையை டார்ச்சர் பண்ணிடாத இனி சாயங்காலம் தான் உன்கிட்ட பேசுவேன் .

இடையில நீ கூப்பிடக்கூடாது புரிஞ்சதா" சொல்லிவிட்டு நகர்ந்தால் சக்தி.

நேரம் சரியாக பத்து மணியை கொண்டிருந்தது . இன்னமும் சில நிமிடங்களே பாக்கி இருந்தது.

அவசர அவசரமாக அந்த பெரிய வளாகத்திற்குள் ஓடிக் கொண்டிருந்தால் சக்தி .

என்னதான் நேரத்தோடு புறப்பட்டாலுமே சென்னையில் இருந்த டிராபிக்கின் உபயத்தால் நேரம் வேகமாக நகர்ந்து இருந்தது.

முதல் நாளில் லேட்டாக செல்லக்கூடாது என்கின்ற முடிவோடு ஓடிக் கொண்டிருந்தால்.

சரியாக ஆபீஸ்க்குள் நுழையவும் அங்கிருந்து நிறைய பேர் கூட்டமாக நின்றிருக்க அவர்களோடு இவளும் இணைந்து கொண்டாள் .

இவள் உள்ளே நுழைந்ததை பார்த்த குரு அப்படியே நேரத்தை பார்த்தவன் "நாட் பேட் இன்னமும் சில நிமிஷம் இருக்குது .எப்படியோ உள்ளே வந்துட்ட ..
ஓகே சீக்கிரமா புறப்படு "என்று விட்டு நடக்க ஆரம்பிக்க கூட்டத்தோடு நின்றிருந்த அனைவருமே நின்ற இடத்தில் சிறு புன்னகையோடு இவளை கவனிக்க ஆரம்பித்தனர்.

இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை வேகமாக குருவிற்கு பின்னால் நடந்தபடியே .."எங்க சார் வரணும்..எனக்கு தெரியலையே.."

" உனக்கு தெரியலையா .நீ எதுக்காக இங்க வந்திருக்கற.. ஞாபகம் இருக்குதா .".

"வேலை செய்றதுக்காக வந்திருக்கிறேன் ".

"ஆமா நானும் அதை தான் சொல்றேன் புறப்படு போகலாம்.."

" அதுதான் எங்க ?எதுவுமே சொல்லாம போகலாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்.."

"நீலாங்கரையில இருக்கிற ரெஸாட்டுக்கு இப்போ கிளம்புறோம் .."

"எதுக்காக என்ன கூப்பிட்டுகிட்டு இருக்கீங்க .எனக்கு புரியல .."

"உனக்கு எத்தனை தடவை சொல்றது .இங்க இதுதான் வழக்கம்..

வேலைக்கு சேர்ந்த அன்னிக்கு என் பின்னாடி வான்னா வந்தாகணும் இத்தனை வருஷமா இது தான் நடந்துகிட்டு இருக்கு .

வேணும்னா சந்தேகம் இருந்தா இங்க நிக்குறவங்க கிட்ட கேளு."

" நீங்க பேசுற எதுவுமே சரி கிடையாது ..இருங்க ஒரு நிமிஷம்.."
வேகமாக நின்றிருந்தவர்களுக்கு அருகே வந்து அவர்களின் முகங்களை பார்த்தபடி.." சார் என்னமோ சொல்றாரு இப்ப அவர் பின்னாடி கிளம்பனும்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.. வழக்கமாக இதுதான் நடக்கும்னு சொல்லறார்.. எனக்கு எதுவும் புரியல.."

" சார் சொன்னா சரியாத்தான் இருக்கும். நாங்க எல்லாருமே அப்படித்தான் .

சார் வர சொன்னாருன்னா அவர் பின்னாடி போகணும் .இது இந்த ஆபீஸ்ல வழக்கம் தான்."

" என்ன நீங்க பேசுறது எதுவுமே நல்லா இல்லையே ".வேகமாக மறுபடியும் குருவின் முன்னால் சென்று நின்றால் .

"இத பாருங்க சார் நீங்க ஏதோ தப்பா நினைச்சுகிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன் .

நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் கிடையாது .நான் இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டேன்".

" ஹலோ என்ன ஓவரா பேசிகிட்டு இருக்குற ..வேலைக்கு சேரும் போது என்ன சொன்ன ஞாபகம் இருக்குதா..

எந்த வேலையா இருந்தாலும் செய்வேன்னு சொன்ன.. அதுதான் நான் இப்ப கேட்டுக்கிட்டு இருக்கிறேன் ".

"என்ன சார் நீங்க விளையாடறீங்களா ..ஆபீஸ் வேலை ஏதா இருந்தாலும் செய்வேன்னு தான் சொன்னேன் .

உங்க பின்னாடி நீலாங்கரைக்கு வர வேற ஆள பாருங்க நான் அதுக்கு எல்லாம் வரமாட்டேன் .

நான் இந்த வேலை செஞ்சு சம்பாதித்து தான் சாப்பிடணும் என்கிற அவசியம் எனக்கு கிடையாது.

இந்த வேலை பிடிக்காட்டி இந்த நிமிஷமே தூக்கி வீசிட்டு போய்கிட்டே இருப்பேன் ".

"அப்படியா மேடம் தூக்கி வீசிட்டு போயிடுவீங்களா ..

என்னவோ அன்னைக்கு இன்டர்வியூல அப்படி கண் கலங்கி போய் கேட்டீங்க .

இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம் நான் சென்னைக்கு புதுசு அப்படி இப்படின்னு ..

அத்தனை கதை சொன்னீங்க அப்போ அதெல்லாம் பொய்யா.. இதோ உன்னோட ஒரிஜினல் முகம் இது தானா சொல்லு தெரிஞ்சுக்கறேன்."

கோபமாக குரு கூற சக்தியின் கண்கள் கலங்கிவிட்டது .குரு சொன்ன ஒவ்வொன்றையும் தவறாக இவள் நினைத்திருக்க இதற்கு மேலும் அவளைக் கலவர படுத்த கூடாது என நினைத்தவன் சட்டென சிரித்திருந்தான்.

"இப்ப எதற்காக சிரிக்கிறீங்க.."

" பின்ன சிரிக்காம என்ன செய்வாங்க சக்தி .உங்களுக்கு தெரியும் தானே ..

இந்த ஆபீஸ் விளம்பர படங்கள் எடுக்கிற ஆபீஸ் .இன்றைக்கு ஒரு போட்டோ சூட் இருக்குது .

அதுக்காக தான் உங்கள கூப்பிட்டுகிட்டு இருந்தேன் .எங்க மாதவன் அண்ணாவோட முக்கியமான கண்டிஷனே ஒன்னே ஒன்னு தான் .

இங்க இருக்குற எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியணும் .
இன்றைக்கு ஃபோட்டோ ஷூட் இடத்துக்கு போக பத்து பேர் ரெடியாக இருக்கிறாங்க.

அவங்க கூட நீங்களும் வரணும் அவ்வளவுதான் .பெருசா வேலை எல்லாம் இருக்காது. சின்ன சின்ன வேலைகள் மட்டும் தான் இருக்கும்.

நீங்க தைரியமா வரலாம் எங்கள் நிறுவனத்தோட முக்கியமான கொள்கை என்ன தெரியுமா?

பெண்களுக்கான பாதுகாப்பு அவங்களோட பாதுகாப்ப உறுதி செய்யறது மட்டும் தான் எங்களோட குறிக்கோள் .அதனால தைரியமா எங்க கூட எங்க வேணும்னாலும் வரலாம் .

சபா இங்க வா "என்று குரல் கொடுக்க அந்த கூட்டத்திலிருந்து ஒருவன் வேகமாக ஓடி வந்தான்.

" இவங்க சக்தி உனக்கு கீழ இவங்கள வேலை செய்ய வச்சுக்கோ ..

ஒவ்வொரு வேலையை பத்தியும் தெளிவான டீடைலா சொல்லி அவங்களுக்கு புரியவை .

ட்ரைனிங் கொடுக்கறது இன்றிலிருந்து உன்னோட வேலை..

இவன் ரொம்ப கலகலப்பு ..அனேகமா அவனை மாதிரி தான் நீயும்னு எனக்கு தோணுது .அதனால உனக்கு கரெக்ட்டா மேட்ச் ஆவான் ஓகேவா இப்போ புறப்படலாமா.."

"இப்படி தான் ஒரு நிமிஷத்துல பயப்படுத்துவீங்களா .எந்த அளவுக்கு பயந்துட்டேன் தெரியுமா.."

" முதல் நாள் இல்லையா சக்தி..ரேக்கிங் மாதிரி.. இங்க வேலை செய்ற எல்லார்கிட்டயுமே இது மாதிரி ஏதாவது ஒரு ரேக்கிங் பண்ணுவோம். முக்கியமா யார் கடைசியா வராங்களோ அவங்க கிட்ட..

இன்னைக்கு கடைசியா நீ தான் வந்த.. அதனால மாட்டிக்கிட்ட.. ஒருவேளை கொஞ்சம் முன்னாடி வந்து இருந்தா கடைசியா யார் வராங்களோ அவங்க சிக்கி இருப்பாங்க .லேட்டா வந்தது உங்க தப்பு தானே.."சொல்லிவிட்டு சிரிப்போடு நகர சற்று முறைத்தபடி அவனை பின்தொடர்ந்தாள்.

"இந்த மாதிரி மூஞ்ச தூக்கி வைச்சுகிட்டு வரக்கூடாது சக்தி கலகலப்பா வரணும் . இன்னும் கொஞ்ச நேரத்துல வேன் புறப்பட்டுடும் ஆட்களோட வண்டியில் ஏறிக்கோங்க…

அங்க போட்டோ சூட்டுக்கு தேவையான நிறைய பொருட்கள் இங்க வேன்ல பின்னாடி எடுத்து வச்சிருக்காங்க .

இன்னமும் இரண்டு நாளைக்கு என்னென்ன வேலை எப்படி செய்றாங்க என்கிறது அப்சர்வேஷன் மாதிரி பார்த்து தெரிஞ்சுகிட்டா மட்டும் போதும்.

பிறகு கொடுக்கிற வேலையை செய்யலாம் புரியுதா.."

" அப்படின்னா எனக்கு ஆபீஸ்ல வேலை கிடையாதா ".

"அப்படி இல்லையே.. இன்னமும் இரண்டு நாளைக்கு நீலாங்கரை ரெசார்ட்ல தான் இந்த டீமுக்கு வேலை..

அந்த டீம் கூட நீங்களும் இருக்கீங்க ஓகேவா? நிறைய கேள்வி கேக்குறீங்க பதில் சொல்ல தான் என்னால முடியாது போல இருக்கு" சொல்லிவிட்டு நகர்ந்தான்.

சபரி இவளை அழைத்துக்கொண்டு இருந்தான்.."சக்தி ஒரு நிமிஷம் இங்க வாங்க "என்று கூற வேகமாக அவனுக்கு அருகே சென்று நின்றால்.

" சொல்லுங்க சபா என்ன செய்யணும் ".

"இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம் .வண்டியில வந்து உட்காருங்க .. எங்கேயாவது இறங்கிடாதீங்க .

அப்புறமா உங்கள தேடறது எனக்கு பெரிய வேலையா போயிடும்".

" ஏன் சபா இப்படி சொல்றீங்க காணாமல் போவதற்கு நான் குழந்தை கிடையாது ".

"அதெல்லாம் நல்லா தான் பேசுறீங்க ஆனா என்கிட்ட வேலைக்கு வர்றவங்க எல்லாம் அராத்தா தான் வராங்க.

இதுவரைக்கும் யாருமே சொன்ன பேச்சு கேட்டது எல்லாம் கிடையாது தெரியுமா .."

"அப்படியா ஆனாலும் உங்களுக்கு தைரியம் தான் .பார்த்த சில நிமிஷத்திலேயே என்னை அராத்து சொல்றீங்க பாத்தீங்களா.."

" அம்மா தாயே அதுக்காக நீ அந்த மாதிரி எதுவும் பண்ணிடாத புரியுதா.. சீக்கிரமா போகலாம். எல்லாரும் புறப்பட்டு வண்டியில் ஏறிக்கிட்டாங்கன்னா அப்புறமா நம்மள மறந்துட்டு விட்டுட்டு போயிடுவாங்க .

அப்புறம் அடிச்சு புடிச்சு ஆட்டோ புடிச்சு தான் போகணும் .இங்க இருந்து அங்க போறதுக்குள்ள சாயங்காலம் ஆகிடும் புரியுதா "என்றபடி வேகமாக நகர்ந்தான்.

பண்ணிரெண்டு மணியை நெருங்கிய போது அங்கே போட்டோ சூட் துவங்கி இருந்தது .

வந்திருந்த பெண்கள் அனைவருமே 12 விதமான பாரம்பரிய உடையில் அமர்ந்திருந்தனர் .

ஒவ்வொருவரையும் பார்க்கும்போது இவளுக்கு பிரமிப்பாக இருந்தது கூட வந்தவர்கள் அனைவருமே பம்பரமாக வேலை செய்து கொண்டிருந்தனர் .

இவளையும் கூட ஒரு பெண்ணிற்கு அலங்காரம் செய்ய அனுப்பி வைத்திருந்தனர்.

அந்தப் பெண்ணிற்கு சக்தியை பிடிக்கவில்லை. என்ன காரணம் என்று இவளுக்கு சுத்தமாகவே தெரியவில்லை .

சற்று அதிகாரமாக இன்னமும் சொல்லப்போனால் நிறைய அலட்டலுடன் அந்த பெண் நடந்து கொண்டாள்.

அவ்வப்போது குருவிடம் சென்று வழிவதை பார்க்கும் போது இவளுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது .

அந்த பெண்ணிற்கு குருவின் மேல் நாட்டம் இருக்கிறது என்று.. தேவை இல்லாமல் சென்று வழிந்து கொண்டிருக்க அதற்கு ஏற்றார் போல குரு சக்தியிடம் சில வேலைகளை அவ்வப்போது சொல்லி வாங்கிக் கொண்டிருந்தான்.

சக்தியை அழைப்பது அவளுக்கு துளி கூட பிடிக்கவில்லை அதன் காரணமாக இவளிடம் முறைத்துக் கொண்டு இருந்தாள்.

ஹலோ என்று சப்தம் கேட்கவும் வேகமாக திரும்பி பார்த்தால் சக்தி.

குரு கையில் ஜூஸ் டம்ளரோடு நின்றிருந்தான்." என்ன சார் என்ன செய்யணும்.. இத யார்கிட்ட கொண்டு போய் கொடுக்கணும்.."

"ஹலோ இத யார்கிட்டயும் கொடுக்க வேண்டாம் .இது நீ குடிக்க.. அதுக்காக தான் கொண்டு வந்தேன்.

நேரம் என்ன ஆகுது தெரியுதா 11 மணி.. எல்லாருக்குமே பிரேக்கிங் டைம் ..

எல்லாரும் அவங்க அவங்க ஜூஸ் காஃபின்னு பிடிச்ச மாதிரி வாங்கி சாப்பாட்டு கிட்டு இருந்தா ..நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கிற .."

"இல்ல இங்கே மேடம் தான் ஏதோ கேட்டுக்கிட்டு இருந்தாங்க. என்னை எங்கேயும் நகர விடல ".

"அது தெரிஞ்சதால தான் நானே எடுத்துட்டு வந்தேன் .இதை முதல்ல குடி அதுக்கப்புறமா வேலையே பார்க்கலாம் ".

"என்ன குரு சார் வேலை பத்து மணிக்கு தான் ஸ்டார்ட் ஆச்சு .இப்ப 11 தான் ஆகுது அதுக்குள்ள பிரேக்கிங் டைம்.."

" உனக்கு இன்னும் தெரியல இது விளம்பர ஃபீல்டு ..இங்க அப்படித்தான் .

வர்றவங்க எல்லாருமே கொஞ்சம் அலட்டலோட தான் வருவாங்க.. அவங்களுக்கு பிடிச்ச மாதிரிதான் ஜூஸ் வேணும் சாலட் வேணும்னு கேப்பாங்க .

நாம அரேஞ்ச் பண்ணி கொடுத்து தான் ஆகணும் .ஏன்னா நமக்கு வேலை ஆகணும் இல்லையா..

ஒண்ணுமே இல்லாத சின்ன விஷயமா தான் இருக்கும் .ஒரு நாள் ஃபுல்லா நம்மளை காக்க வச்சு வேலையை நடக்க விட மாட்டாங்க..

நேரம் போக போக நமக்கு நஷ்டம் ஆகும் .ஒரு நாளைக்கு அவங்களுக்கு கொடுக்கிற சம்பளம் மட்டும் இல்ல .

மத்த செலவுக்கான வாடகை அது இதுன்னு செலவு தலைக்கு மேல ஏறிடும் .

ஒவ்வொரு விளம்பர படத்துக்குமே குறிப்பிட்ட அமௌன்ட் மட்டும்தான் ஒதுக்கீடு செய்யறது .அதுக்குள்ள தான் நாம நடத்தியாகணும்.

அப்ப இதையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகணும் ".

"அப்படியா இது எனக்கு தெரியாது".

"இது எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் இங்க வேலை செஞ்சீங்கன்னா உனக்கே புரியும் ..

அடுத்த முறை இது மாதிரி ஏதாவது ஒரு ஷூட்டிங் விஷயமா வந்தோம்னா.. நீயே நிறைய கத்துக்கிட்டு அதன்படி செய்ய ஆரம்பிச்சிடுவ.. இப்ப புதுசு தானே..

ஓகே சீக்கிரமா குடிச்சிட்டு அந்த டம்ளரை கொடுக்கிறியா.."

"பாருங்க குரு சார் எனக்கு ஜூஸ் எல்லாம் குடித்து பழக்கம் கிடையாது".

" ஆனால் நீ குடிச்சு ஆகணும்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வெயில் அதிகமா இருக்கும் .இன்னைக்கு அந்த ஸ்விம்மிங் பூல் கிட்ட தான் சில போட்டோஸ் எடுக்கணும் .

உன்னை குடை எல்லாம் கூட எடுத்துட்டு வந்து பிடிக்க சொல்லுவாங்க .வேற வழி இல்ல வெயில்ல நின்னு தான் ஆகணும்".

" அப்படியா ".

"உன்னை பார்த்தா தைரியமான பொண்ணு மாதிரி இருக்குது ஆனா காலையில ஒன்னும் இல்லாத ஒரு சின்ன விஷயத்திற்கு கண் கலங்கும் போது எனக்கு ஐயோடான்னு இருந்தது .

ஒருவேளை ஆளுக்கும் குணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று தோணுச்சு ".

"அப்படி கிடையாது நான் என்ன நினைச்சேன்னா.. "

"என்ன சொன்னா தானே எனக்கு தெரியும்".

" நான் இந்த நிறுவனத்தின் மேல சில அபிப்பிராயங்கள் வைத்திருப்போம் இல்லையா ..

அது அப்படி இல்ல அப்படிங்கற மாதிரி ஆகும்போது நம்மளையும் அறியாமல் வருமே ஒரு பதட்டம் அதுதான் இன்னைக்கு காலையில வந்தது .

அதனாலதான் சட்டுனு அப்படி ரியாக்ட் பண்ணிட்டேன் மத்தபடி எனக்கு பயம் எல்லாம் கிடையாது".

"சக்தி சொன்னா நான் இப்ப நம்பி தானே ஆகணும்."

"சொன்னா ஒத்துக்க மாட்டிங்களா குரு சார் ".

"ஓகே ஓகே சரி நம்ம இப்ப வேலையை பார்க்கலாமா சாயங்காலம் வரைக்கும் இங்க தான் வேலை இருக்கும் .

நாளைக்கு காலைல வழக்கம் போல நேரா ஆபீஸ் வந்துருங்க .அங்கிருந்து வண்டி கிளம்பி இங்க வரும் .

வண்டியில நீங்க எறிக்கலாம் ரெண்டு நாள் மட்டும்தான் இங்க வேலை பிறகு ஆபீஸ் வொர்க் தான் இருக்கும் .

கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கலாம் ஒன்னும் அவசரம் இல்ல .பதட்டம் எல்லாம் பட வேண்டாம் .

நம்ம சபா இருக்கிறானே புதுசா எந்த பொண்ணு வேலைக்கு சேர்ந்தாலும் சரி கூட பிறக்காத உடன்பிறவா சகோதரனா மாறிடுவான் .அதனால தைரியமா இருக்கலாம் .

இனிமே தேவையில்லாம யாராவது ஏதாவது பேசினா கூட தைரியமா உன்னோட முடிவை சொல்லிடலாம் ஓகேவா.."

" கட்டாயமா சார்.."

"சரி இதை சொல்வதற்காக தான் இந்த ஜூஸ் டம்ளரோட உன்னைத் தேடி வந்தேன்.

இனிமே நீ பார்த்துக்கோ யார்கிட்டயும் தரம் இறங்கி போகணும்னு அவசியம் கிடையாது உன் மனசுல என்ன தோணுதோ அதை தைரியமா எல்லார்கிட்டயும் பேசலாம் .

தப்புன்னா தைரியமா சொல்லலாம் அதுக்கு முழுக்க முழுக்க சுதந்திரம் உண்டு .நம்ம ஆபீஸ்ல எல்லாருமே பிரெண்ட்லியாக தான் பழகுவாங்க..

அப்புறமா இந்த ரெண்டு நாள் மட்டும் இல்ல அடிக்கடி சூட்டிங்காக பக்கத்துல எதாவது ஒரு இடம் சுத்தி பார்க்குறதுக்கு கூட போகலாம் அது கூட நீ விருப்பப்பட்டால் மட்டும்தான்..

விருப்பம் இல்லனா யாரையும் எங்கேயுமே வரச்சொல்லி கம்பெல் பண்ற பழக்கம் நம்ம ஆபீஸ்ல இருக்குற யாருக்குமே கிடையாது ஓகேவா.."

"ஓகே சார் ".

"வேற ஏதாவது தெரிஞ்சுக்கணுமா தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சுன்னா தைரியமாக கேட்கலாம்.

எந்த டவுட் இருந்தாலும் நான் கிளியர் பண்ணி தரேன் ."

"சொன்னதே போதும் சார்..எனக்கு அவ்வளவு திருப்தியா இருக்குது எனக்கு நிறைய தைரியம் தன்னம்பிக்கை வந்துடுச்சு .

நிச்சயமா இது எனக்கேத்த ஆஃபீஸ் தான் .சேரும்போது கூட கொஞ்சம் பதட்டம் இருந்தது .இப்போ எனக்கு அந்த பதட்டம் எல்லாம் இல்ல.

என் குடும்பத்தில் நான் எப்படி இருப்பேணோ அது மாதிரியான ஒரு ஃபீல் எங்க கிடைக்குது ."

" அப்புறமா சக்தி.. இப்போ நீ அசிஸ்டன்ட் வேலை செய்ற அந்த பொண்ணு கொஞ்சம் ஒரு மாதிரி..

கொஞ்சம் மிரட்டி கிட்டே தான் இருப்பா.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.."

" என்ன சார் ரொம்ப அந்த பொண்ணுக்காக வக்காலத்து வாங்குகிற மாதிரி இருக்குது.. உண்மையிலேயே அந்த பொண்ண உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ".

" அப்படின்னு சொல்ல முடியாது ஆனால் பார்த்த நாளிலிருந்து அந்த பொண்ணு அப்படித்தான் ரியாக் பண்ணிக்கிட்டு இருக்கா..

நான் பல டைம் சொல்லி பாத்தாச்சு இன்னமும் சொல்ல போனா வேலைக்கு வர்றதே எனக்காகன்னு தான் சொல்லுவா..

கேட்க நல்லா தானே இருக்குது அப்படியே சிரிச்சு நகர்த்து போக வேண்டியதுதான்.. பார்க்கலாம் நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கும் இல்லையா."

" ஆனா உங்க குணத்துக்கும் அந்த பொண்ணுக்கும் சுத்தமா மேட்ச் ஆகாதுன்னு தோணுது ."

"அண்ணா கூட அடிக்கடி இததான் சொல்லுவாரு ..அந்த பொண்ணு பேரு நிஷா ".

"தெரியும் சார் இப்பதான் பேரை கேட்டேன் ."

"பார்த்துக்கோ வேற ஏதாவது பிரச்சனைனா என்ன கூப்பிடு. நான் வந்து சமாதானப்படுத்திடுவேன்."

" நீங்க வந்து பேசணும்னு கட்டாயம் எல்லாம் கிடையாது. ஒருவேளை எதிரில் வந்து நின்னாலே அந்த பொண்ணு சரியாயிடுவான்னு நினைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் சக்தி..

"வாயாடி பொண்ணு" என்று வாய்க்குள் முனுமுனுத்தபடி நகர்தான் குரு.
 

Kavisowmi

Well-known member
6

இரண்டு நாட்கள் வேகமாக நகர்ந்து இருந்தது நிஷா சக்தியை உண்டு இல்லை என ஆக்கி இருந்தாள்.

இருவருக்கும் நடுவே பெரிய மௌன யுத்தமே நடந்தது .ஒவ்வொன்றிற்கும் நிஷா சக்தியை குறை சொல்ல, சக்திக்கோ எங்கே சென்று முட்டிக் கொள்வது என்கின்ற நிலை..

எப்போது இந்த வேலை முடியும் ஓடிவிடலாம் என்கின்ற நிலைக்கு வந்திருந்தால் .

இதில் நடு நடுவே குருவிடம் சென்று வேறு இவளை கம்ப்ளைன்ட் செய்து கொண்டிருந்தாள்.

அவனுக்கு இருவருடைய சண்டையை பார்க்கும் போது சிரிப்புதான் வந்தது.

ஜூஸ் வேண்டும் என்று காலையில் ஆரம்பிக்க சக்தி எடுத்துக் கொண்டு சென்றால்.. சில நிமிடத்திலேயே அவளுடைய மெனு மாறி இருக்கும்.

சாலட் வேண்டும் என்று மறுபடியும் அனுப்பி வைப்பாள் .சாலட் எடுத்துச் சென்றால் சப்பாத்தி வேண்டும். இப்படியாக இவளை அலக்கழித்து கொண்டு இருந்தால் .
கூடவே குருவே பார்த்து.. "வழக்கமா எனக்கு டச்சப்புக்கு கூட்டிட்டு வர்ற அந்த பொண்ணையே கூப்பிட்டுட்டு வந்து இருக்கலாம்ல..

எதுக்காக இந்த பொண்ண நீங்க அழைச்சிட்டு வந்தீங்க "என்று கம்ப்ளைன்ட் வேறு வாசிக்க.. குரு சிரித்தபடியே.." என்ன நிஷா இப்படி பேசினா என்ன அர்த்தம்!! இவங்க புதுசா வேலைக்கு ஜாயின் பண்ணி இருக்கிறாங்க .

அண்ணா தான் செலக்ட் பண்ணினது .இங்க வரதுக்கு கூட அண்ணா தான் ஆட்களை செலக்ட் பண்ணி அனுப்பி வச்சாங்க.

நான் அவங்ககிட்ட இது மாதிரி எல்லாம் சொல்ல முடியாது ."

"என்ன குரு இப்படி சொல்றீங்க.. அந்த கம்பெனி உங்களுக்கும் சொந்தம் தானே..

உங்களுக்கும் உரிமை இருக்குது இல்லையா.. நீங்க கேக்குற ஆட்களை ஏன் அவர் தர மாட்டாரு.."

" இதெல்லாம் டூ மச் ..இது அண்ணனா பார்த்து வளர்த்த கம்பெனி .இங்க நான் ஒரு எம்லாயி தான். உனக்கே தெரியுமே..

பணம் செலவு பண்றதுல இருந்து ஒவ்வொன்னுக்குமே நானும் கணக்கு கொடுத்தாகணும்.. என் இஷ்டம் போல எல்லாம் செலவு பண்ண முடியாது.

முக்கியமான விஷயம் என்னன்னா எனக்கும் இதுதான் பிடிச்சிருக்கு . அண்ணா சொல்றத கேட்டு அப்படியே நடக்க தான் எனக்கும் விருப்பம் ."

"இப்படி சொன்னா எப்படி குரு .காலம் மாறிக்கிட்டு இருக்குது. இன்னைக்கெல்லாம் அண்ணன் தம்பி பாசம் அப்படின்னு எதுவுமே இல்ல .

அப்படின்னு சொன்னா நீங்க என்ன செய்வீங்க .."

"வெரி சிம்பிள் நீ என்ன வச்சு பார்த்துக்க மாட்டியா .."

"அய்யோ குரு சார் என்ன இது இப்படி சொல்லிட்டீங்க "என்று அசடு வழிந்தபடி சிரித்துக்கொண்டே நகர்ந்தால் நிஷா .

"அப்பா இனி பிரச்சனை இருக்காது சக்தி பார்த்துக்கோங்க.."

" சார் இதெல்லாம் டூ மச் ..இவங்க ரொம்பவே டீப்பா உங்க லைஃப் குள்ள வர்ற மாதிரி இருக்குது ".

"என்ன செய்வது சக்தி நான் அண்ணாவோட ஆபீஸ்க்குள்ள வந்த அந்த நேரத்தில் இருந்தே எனக்கு நிஷாவை நல்லா தெரியும் .

அவளும் மாறவே இல்ல நானும் மாறவே இல்ல .இப்போ முடிஞ்சதுன்னா அடுத்த முறை எப்போ பார்ப்போம்ணு தெரியாது அதனால தேவை இல்லாம கவலைப்பட வேண்டாம்.

இன்னையோட இங்க ஒர்க் முடிஞ்சு போச்சு .நாளையிலிருந்து ஆபீஸ்ல தான் உங்களுக்கு வேலை.. இன்னமும் உங்களுக்கு என்ன வேலைன்னு பிரிச்சு தரலை.

நாளைக்கு நீங்க ஆபீஸ் வந்தா தான் தெரியும் . அண்ணா பார்த்துட்டு ஏதாவது முடிவு பண்ணுவாரு.."

" ஓகே சார் ..நாளைக்கு பார்க்கலாம்" என்று நகர்ந்தால் சக்தி .

அடுத்த நாள் காலை மிகவும் இனிமையாக விடிந்தது காலையிலேயே வள்ளி பாட்டி இவளை அழைத்து இருக்க சந்தோசமாக பேச ஆரம்பித்திருந்தால்.

" பாட்டி ரெண்டு நாள் ரெக்கை கட்டி பறந்து போச்சு .எனக்கு இந்த வேலை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

பாட்டி ஒரே இடத்தில இருக்கிற வேலை கிடையாது .நிறைய கத்துக்கலாம் இங்க தெரியுமா".

" சரிதான் படிச்ச படிப்புக்கும் சேர்ந்த வேலைக்கும் சம்பந்தமே கிடையாது இதை சொன்னால் நீ என்னை முட்டாள் என்று பேசுவ .."

"சரி பாட்டி எதுக்காக காலையிலேயே பேசி கடுப்பேத்திக்கிட்டு இருக்குற.. அப்பா போன் பண்ணினாங்களா..

அப்பாகிட்ட விஷயத்தை சொன்னியா சென்னைக்கு வேலைக்கு போயிருக்கறா அப்படின்னு ".

"அதெல்லாம் நேத்தே பேசி முடிச்சிட்டேன். கோபத்துல திட்டிட்டு போனை வச்சுட்டான்.

எல்லாம் நீ கொடுக்கிற இடம் .. அதனால தான் அவ இப்படி நீ இஷ்டத்துக்கு பண்ணறா அப்படின்னு எனக்கு ஒரே திட்டு.."

" சரி பாட்டி அதுக்கு நீ என்ன சொன்ன.."

" நான் என்ன சொல்லுவேன் நீ எப்படி இருக்கிறாயோ அப்படித்தான் உன்னோட பொண்ணும் இருப்பா ..

நீ எப்படி பிடிவாதமா சொன்ன பேச்சைக் கேட்காமல் உன் இஷ்டம் போல செய்யலையோ அதையேதான் உன் பொண்ணு பண்ணறா..

நான் எத்தனை நேரம் தான் சமாளித்கறது.. கொஞ்ச நாளைக்கு போயிட்டு தான் வரட்டுமே ..இன்னும் ஒருத்தி இருக்கிறால்ல ..

அவளுக்கு கல்யாணம் முடிச்ச பிறகு தானே நீ சக்திக்கு மாப்பிள்ளை பார்க்கணும் .அதுவரைக்கும் டைம் இருக்குதில்லையா ..

ஆசைக்கு கொஞ்ச நாளைக்கு போகட்டுமே.. வேலைக்கு சேர்ந்த கம்பெனி சரியில்லாட்டி அவ அந்த இடத்தில் இருப்பான்னு நினைக்கிறியா ..

ஏதோ கேம்பஸ்ல வேலை கிடைச்சதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தா ..அப்படித்தான் சமாதானம் சொல்லி வைத்திருக்கிறேன்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நீ வர பாரு சக்தி ரொம்ப நாளைக்கு என்னால பிடிச்சு வைக்க முடியாது புரியுதா.

ஒரு வேளை நீ செய்கிற ஆபீஸ்க்கு உங்கள் அப்பா வந்தா அவ்வளவுதான் பிரச்சனை பெருசாகிவிடும் .

உங்க அப்பாவுக்கு அவரோட நண்பரோட குடும்பத்தை சுத்தமா பிடிக்காது .தெரியும் தானே.."

" பாட்டி இங்கே அவரோட நண்பரோட பேரையா ஆபீசுக்கு பெயர் வைத்திருக்கிறாங்க..இங்க எந்த முதலாளியுமே ஆபீஸ்ல எல்லாம் வந்து உட்காருவது இல்லை.

ஆபீஸ் பெரிசா இருக்குது அவ்வளவுதான். நீயும் தாராளமா ஒரு நாள் அப்பாவை கூட்டிட்டு இங்க வந்து பார்த்துட்டு போகலாம்.

அப்புறமா மாதவன் ஆகட்டும் அவரோட தம்பி ஆகட்டும் முகத்தில் நிறைய சேஞ்சஸ் இருக்குது.

நீ பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அந்த சின்ன பையன் இங்க இல்ல.. அப்பாவே நேரில் பார்த்தா கூட அடையாளம் நிச்சயமா தெரியாது .

அந்த அளவுக்கு சேஞ்சஸ் ஆகி இருக்கிறாங்க அதனால நீ அதை பத்தி எல்லாம் கவலைப்படாத..

நீ தைரியமா இரு ஒரு வேளை பார்க்கணும்னு புறப்பட்டாங்கன்னா யோசிக்கவே வேண்டாம் .அவங்க கூட புறப்பட்டு நீயும் வா.

இங்க சென்னையை சுத்தி பார்த்த மாதிரி இருக்கும் .உனக்கு சுத்தி காட்டுவதற்காக இங்கே நிறைய இடம் கூப்பிட்டு போகணும்னு முடிவு பண்ணி இருக்கிறேன்.

நீ வந்தா ஒரு வாரம் என் கூட தங்கணும்.. நம்ம ஜாலியா சுற்றி பார்க்கிறோம்.. என்ன பாட்டி சொல்ற.."

" பேச்செல்லாம் ரொம்ப வேக்கியாணமா பேசுற ..அதுல எந்த குறையும் சொல்லிட முடியாது. ஆனா இங்க நான் தான் பக்கு பக்குன்னு இருக்கிறேன் ".

"ஏன் பாட்டி என்னை நினைச்சு நீ பயப்படற .."

"இப்பவும் சொல்லறேன் சக்தி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சுக்கோ ..

ஒருவேளை அந்த பையன் பழைய மாதிரி இல்லாம ஆள் மாறி இருந்தா.. குடிகாரனா இருந்தால்..

நீ வேற விளம்பர கம்பெனி எடுக்கிறார்கள் .ஷூட்டிங் நடக்குது இப்படி அப்படின்னு சொல்ற..

நானும் இது சம்பந்தமா நிறைய விஷயம் கேள்விப்பட்டிருக்கிறேனே அங்கே இருக்கிறவர்கள் எல்லாருமே தப்பானவங்களா தான் இருப்பாங்க."

" பாட்டி தேவை இல்லாம உளறிக்கிட்டு இருக்காத புரியுதா .நீ நினைக்கிறது ரொம்ப தப்பு பாட்டி.. எல்லோரும் அப்படி கிடையாது.

அப்புறமா தப்புனு தோணுச்சுன்னா அந்த நிமிஷமே நான் புறப்பட்டு வந்துடுவேன் .

என்ன பார்த்துக்க எனக்கு நல்லாவே தெரியும் புரிஞ்சுதா ..அதனால என்னை பத்தி கவலைப்படறதை விட்டுட்டு நீ சந்தோஷமா வீட்ல இருக்கிற வேலையை பாரு .

உன்ன தொந்தரவு பண்றதுக்கு இப்போ நானும் இல்ல அடுத்த முறை பார்க்கும் போது மினிமம் ஒரு ரெண்டு மூணு கிலோவாவது நீ வெயிட் போட்டு இருக்கணும்.

அதே மாதிரி ஒல்லியா இருந்தா ஒத்துக்க மாட்டேன் பாத்துக்கோ.."

" போடி இவ வேற நான் என்ன பேசிக்கிட்டு இருக்குறேன். இவ என்ன சொல்லிக்கிட்டு இருக்குறா.. நீ ஃபோன்னை வை.. காலையிலேயே ஆபீஸ் போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தல்ல ..கிளம்பு .."

"ஆமாம் பாட்டி அத தான் சொல்ல நினைச்சேன் .இன்னையிலிருந்து நான் என்னோட ஆளை பார்க்க போறேன் ".

"என்னடி பேச்சு இது ..இப்படி எல்லாம் பேசி பழகாத.. எனக்கு சுத்தமா பிடிக்கல . அதென்ன என்னோட ஆளு அப்படிங்கறது.. அப்படியெல்லாம் சொல்லாத புரியுதா .."

"சரி பாட்டி எங்க முதலாளியை நான் பார்க்க போறேன் சரியா ..இப்ப போனை வைக்கட்டுமா .ஆனாலும் உன்னை கடுப்பேத்தி பார்த்தா அவ்வளவு ஹாப்பியா இருக்குது பாட்டி "சொல்லிக்கிட்டு போனேன் வைத்தாள்..

வழக்கம் போலவே வேகவேகமாக புறப்பட்டு ஆபீசுக்குள் சென்றால் சக்தி .

காலையிலேயே எல்லோரும் பரபரப்பாக அமர்ந்திருந்தனர்.. நேரத்தை பார்க்க தினமும் 10 மணி ஆகவில்லை.

"சரியாகத்தானே வந்திருக்கிறோம் அப்புறம் ஏன் எல்லோரும் பரபரப்பா இருக்கிறாங்க. வழக்கமா சொன்ன நேரத்தில் முன்னாடியே வரனும் போல இருக்கே .

இந்த ஆபீஸ்ல சொன்ன ரூல்ஸை விடவும் சொல்லாத ரூல்ஸ் நிறைய இருக்கும் போல இருக்கே", நினைத்தபடி நேராக சபாவிடம் சென்று நின்றாள்.

" குட் மார்னிங் சார் நான் வந்துட்டேன்".

" நேரம் என்ன ஆகுது பாரு".

" பாத்துட்டேனே இன்னும் கூட பத்து நிமிஷம் இருக்குது ".

"சரிதான் முதல்ல நேரத்தை சரியா பார்க்க கத்துக்கோ புரிஞ்சுதா.. ஆபிசுக்கு சொன்னா சொன்ன டைம் வரணுங்கற கட்டாயம் எல்லாம் கிடையாது .

அரை மணி நேரம் முன்னாடியே வந்தாகணும் அதுவும் மாதவன் சார் இருக்கும்போது.. டைம் ரொம்ப கரெக்டா கீழ் அப் பண்ணனும் .

இப்படி லேட்டா இனி வந்திடாத புரிஞ்சுதா".

" சார் நானே புதுசுதானே.. இனி கவனமாய் இருப்பேன்."

" ஓகே இனி லேட்டா எல்லாம் வராத மாதவன் சாருக்கு இது சுத்தமா பிடிக்காது.

ஓகே நம்ம இப்ப நேரா குரு சார் கிட்ட போகணும் ."

"நானும் வரணுமா.."

" பின்ன நீயும் வர வேண்டாமா .யார் யாருக்கு என்ன வேலைன்னு இன்னைக்கு பிரிச்சு தர்றதா சொல்லி இருக்காங்க .

அதனால தான் எல்லாரும் காலையிலேயே ஆஜராகியாச்சு. நீ தான் லேட் ..உனக்காக தான் இத்தனை நேரம் நான் இதே இடத்தில உட்கார்ந்து இருந்தேன் சீக்கிரமா வா "என்று அழைத்துக் கொண்டு செல்ல அங்கே குரு பரபரப்பாக ஏதோ ஒரு பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.

"குரு சார் குட் மார்னிங் "என்று குரல் தர ,"சக்தி பஸ்ட் ஃபுளோர்ல ஜெராக்ஸ் மெஷின் இருக்கும் மூன்று செட் ஜெராக்ஸ் போட்டு உடனே எடுத்துட்டு வா."

" சார் நானா.."

"நீ தான் வேற யார் இருக்காங்க சீக்கிரமா போ "யோசனையோடு கையில் வாங்கியவள் சபாவின் முகத்தை பார்க்க .."அதான் சார் சொல்றாரு இல்ல. சீக்கிரமா போ" என்று சொல்லிவிட்டு நிற்க வேறு வழியில்லாமல் வேக வேகமாக சென்றாள்.

மூன்று ப்ளோர்களைக் கொண்ட அந்த கட்டிடம் முழுவதுமே இவர்கள் வாடகைக்கு எடுத்திருந்தனர்.

கீழே இருந்த அனைத்துமே தனித்தனி கேபின்களாக பிரிக்கப்பட்டு வேலை செய்வதற்காக இடம் ஒதுக்கீடு செய்திருந்தது.

மேலே இரண்டு ஜெராக்ஸ் மிஷின் போட்டிருக்க இன்னொரு பெரிய அறை ஒன்று இருந்தது .

மீட்டிங் ஹால் போல…முக்கியமான விருந்தினர்கள் வந்தால் அவர்களை சந்தித்து பேசுவதற்காக அந்த இடம் தனியாக ஒதுக்கி இருந்தனர்.

மூன்றாம் மாடியில் இருப்பது எல்லாமே சூட்டிங் சம்பந்தமான உடைகள் கேமராக்கள் அது சம்பந்தமான பொருள்கள் வைப்பதற்காக ஒதுக்கி இருந்தனர்.

வேகமாக படி ஏறியவள் ஏற்கனவே ஒருவன் நின்று ஜெராக்ஸ் எடுப்பதை பார்க்கவும் வேகமாக இவளது பேப்பரை அவனிடம் நீட்டினாள்.

"சார் இது மூணு செட் எடுத்து கேட்டாங்க "என்று நீட்ட.." கொடு" என்று வாங்கி கொண்டான்.

அதற்கு மேல் அங்கே என்ன செய்வது என தெரியாமல் இரண்டு நிமிடம் தயங்கி நின்றவள் பிறகு வேகமாக கீழே இறங்கி வந்திருந்தாள்.

நேராக குருவிடம் செல்ல .."ஜெராக்ஸ் எடுக்க சொன்னேன் அந்த பேப்பர் எல்லாம் எங்கே ?"என்று இவளிடம் கையேந்த.. இவளோ.." மேல ஒருத்தர் ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அவர்கிட்ட எடுத்துட்டு வரச் சொல்லி கொடுத்துட்டு வந்திருக்கிறேன்". என்று சொல்ல.. ஒரே நேரத்தில் குரு மட்டும் அல்ல சபாவும் அதிர்ச்சியோடு இதை திரும்பி பார்த்தனர் .

"என்ன காரியம் பண்ணி வச்சிருக்கிற சக்தி. உன்னை தானே எடுத்துட்டு வர சொன்னேன் .

நீயேன் அங்க நிற்கிறவர் கிட்ட கொடுத்துட்டு வந்த "என்று சபா இவளிடம் எகிற ,இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை .

"என்ன சார் ரெண்டு பேரும் விளையாடுறீங்களா ..நானே இங்க வேலைக்கு புதுசு .எனக்கு ஜெராக்ஸ் எல்லாம் எடுக்க தெரியாது .

அந்த மெஷின்ல ஒரு நாள் கூட நான் ஜெராக்ஸ் எடுத்தது இல்லை யாராவது ஒருத்தர் வந்து சொல்லி தரணும் இல்லையா .

நீங்க எதுவுமே சொல்லல போய் எடுத்துட்டு வான்னா..நான் என்ன செய்ய முடியும்.

ஏற்கனவே அங்க ஒருத்தர் எடுத்துக்கிட்டு இருந்தாரு.. ஒருவேளை அவர் தான் ஜெராக்ஸ் எடுக்கிறவர் போல இருக்குன்னு சொன்னேன்..

அவரும் சரின்னு வாங்கிகிட்டாரு நான் திரும்பி வந்துட்டேன் இதுல என்னோட தப்பு என்ன இருக்கு.."

"மை காட் அங்க நின்றது யார் தெரியுமா சக்தி ".

"யார் சார் எனக்கு தெரியலையே பின்னாடி மட்டும் தான் பார்த்தேன் அவ்வளவுதான் அவரோட முகத்தை கூட பார்க்கலையே ".

"சரிதான் இன்றைக்கு நம்ம எல்லாருக்குமே நேரம் சரியில்ல.. இப்ப வந்து கத்த போறாரு.."

" என்ன சொல்றீங்க குரு சார் .எனக்கு புரியல.. எதுக்காக கத்தணும்.."

" என்ன உங்களுக்கு புரியல ..நேரா மாதவன் அண்ணா கிட்ட கொண்டு போயி பேப்பரை கொடுத்துட்டு வந்திருக்கிற..

காலையில அந்த பேப்பரை நான் இன்னும் ரெடி பண்ணி வைக்கலாம்னு அந்த கத்து கத்திட்டு போனாரு ..

அவசர அவசரமா எடுத்து வச்சா திரும்ப அவர்கிட்டயே கோர்த்து விட்டுட்டு வந்து இருக்கிற.. சத்தம் உன்னை வச்சுக்கிட்டு நான் என்னதான் செய்யப் போறேன்னு தெரியல.."

"மை காட் நான் வேணும்ணா திரும்ப போயி அந்த பேப்பர்சம் வாங்கிட்டு வந்துரட்டுமா .."

"திரும்பவும் அங்க போய் நின்னீங்கனா மறுபடியும் திட்டு வாங்குவீங்க. சபா நீ சக்தியை கூப்பிட்டு உன்னோட கேபினுக்கு போ..

ஏதாவது வேலை இருந்தா செய்யச் சொல்லு நான் சமாளித்துக்கொள்கிறேன் "என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜெராக்ஸ் பேப்பரோடு உள்ளே நுழைந்து இருந்தான் மாதவன்.

அழுத்தமான ஒரு பார்வையை சக்தியின் மேல் பார்த்தபடி திரும்பி குருவை பார்க்க,"அண்ணா நான் ஜெராக்ஸ் எடுக்க சொன்னது அந்த பொண்ணை தான்..

அந்த பொண்ணுக்கு ஜெராக்ஸ் எடுக்க தெரியாதாம்..யாரோ வேலை செய்றவங்கன்னு நினைச்சு.."

" நோ ப்ராப்ளம் அதெல்லாம் பிரச்சனை இல்ல .ஆனா இதை பைல் பண்ண சொல்லி எப்ப சொல்லிட்டு போனேன்.

நீ இன்னும் அதை ஒண்ணுமே பண்ணல. நீ இப்பதான் பேப்பரே ரெடி பண்ணி இருக்கற..

அதை ஒழுங்காக கூட அரேன்ஜ் பண்ணலை.. பேஜ் நம்பர் கூட ஒழுங்காக இல்லை.. என்ன வேலை செய்ற நீ ..

குரு உனக்கு சொன்னா எப்பவுமே புரியுதா.. எப்பவுமே விளையாட்டுத்தனமா தான் இருப்பியா ..

இதுல உனக்கு ஏத்த மாதிரியே ஒரு ஆளை வேலைக்கு வேற புடிச்சிருக்குற" என்று சக்தியை பார்க்க அதே நேரத்தில் சபா.." சார் நான் ட்ரைன் கொடுத்து சரி பண்ணிடறேன் சார் .ஒன்னும் ப்ராப்ளம் இல்ல .நீ முதல்ல வா இங்க நிக்காத "என்று இவளை நகர்த்திக்கொண்டு சென்றான்.

சில நிமிடங்களிலேயே ஐயோடா என்பது போல இருந்தது சக்திக்கு.. எப்போதுமே இப்படித்தான் இருப்பானோ…

என்னடா வாழ்க்கை இது என்பது போல தான் மனதிற்குள் தோன்ற யோசனையோடு நகர்ந்தாள்.
 

Kavisowmi

Well-known member
7

அடுத்த பத்தாவது நிமிஷம் சபாவோடு சக்தியையும் அழைத்திருந்தான் மாதவன் .

சக்தி அவனோடு செல்ல இவளுக்கு பெரியதாக எதுவும் தோன்றவில்லை எதற்காக இருக்கும் என்கின்ற யோசனையோடு அங்கே சென்று நிற்க ,கிட்டத்தட்ட 200க்கும் மேல் பேப்பர்களை எடுத்து இவள் புறமாக நீட்டினான் மாதவன்.

" ஜெராக்ஸ் எப்படி எடுக்கணும் என்கிறது தெளிவா சொல்லிக் கொடு சபா..எனென்ன செட்டிங் இருக்குது எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கணும் புரிஞ்சுதா.." என்று நீட்ட திரு திரு என விழித்துக் கொண்டிருந்தால் சக்தி .

"/எப்படி முழிச்சா என்ன அர்த்தம் வேலைக்கு தானே வந்திருக்கற.."

" வேலைக்கு தான் வந்திருக்கிறேன் இல்லன்னு சொல்லல ..ஆனா இந்த எடுபிடி வேலை எல்லாம் நான் செய்யணுமா".

"இங்க வேலை செய்ற எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியணும் அதுதான் முதல் ரூல்ஸ் புரிஞ்சுதா..

இதை எடுத்து முடிச்சிட்டு வா பிறகு அடுத்த வேலையை சொல்லறேன்" என்று சொல்லிவிட்டு தன்னுடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தான் மாதவன் .

எந்த ஒரு நிமிடமும் இவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஏதோ ஒரு மரத்திடம் பேசுவது போல சொல்லிவிட்டு அமர்ந்து இருக்க உள்ளுக்குள் கோபம் சுழல ஆரம்பித்தது சக்திக்கு..

மொத்த பேப்பரையும் கையில் வாங்கியவள் "துரைக்கு முகத்தை பார்த்து பேசுறதுக்கு பயம் போல இருக்குது . என்னமோ முன்னாடி மரத்து கிட்ட பேசுற மாதிரி அப்படி முகத்தை வச்சுக்கிட்டு இருக்கனுமா.. எப்ப பார்த்தாலும் பாறை மாதிரி முகத்தை இறுக்கமா வச்சுக்கிட்டு பார்த்தாலே எரிச்சலா இருக்குது.."

வாய்க்குள் முணுமுணுத்தபடி வேகமாக நடக்க சபா பின்னால் ஓடி வர வேண்டியதாக இருந்தது.

" என்ன சக்தி கொஞ்சம் மெதுவா நட எங்கேயாவது விழுந்து கிடக்க போற.."

" இப்ப அது மட்டும் தான் குறைச்சல் இல்லையா "என கேட்டபடியே வேகமாக நான்கு படிக்கட்டுகளை ஏறியவள் அங்கிருந்து அடுத்த படிக்கட்டில் கால் வைப்பதற்கு பதிலாக தவறுதலாக வேறு இடத்தில் காலை வைக்க சட்டென சரிய ஆரம்பித்தாள்..

கையில் வைத்திருந்த பேப்பர்கள் எல்லாமே அந்த ரூமில் பறக்க ஆரம்பித்தது.

" அச்சச்சோ போச்சா.. இப்படி வேண்டாத வேலை செஞ்சுகிட்டு இருக்கிற ..சுத்தம்.." என்று சொன்னபடியே இவளை விழாமல் பிடித்து நிறுத்தி இருந்தான் சபா.

"என்ன சபா நான் வேணும்னா செஞ்சேன் .தவறிடுச்சு நான் என்ன செய்யறது."

" நல்ல வேளை விழுந்து பல்லை ஒடச்சுக்கலை.. அது வரைக்கும் செஃப்.."

" சொன்ன நேரத்திற்கு வேலையை முடிச்ச மாதிரி தான்.. சீக்கிரமா பேப்பர்ஸை பொறுக்க ஆரம்பி" என்று சொன்னபடியே ஒவ்வொரு பேப்பரையும் சேகரிக்க ஆரம்பித்தனர் இரண்டு பேரும்.. இதை எல்லாவற்றையுமே கீழிருந்து அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.

சக்தி மேல் கோபம் வர வேகமாக எழ.. குருவும் கூட அருகில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவன் இதை கவனித்திருந்தான்.

"அண்ணா விடு தெரியாம நடந்துடுச்சு .நீ போய் ஏதாவது கத்தி வச்சிடாத ..அந்த பொண்ண பதட்டத்தில் இது மாதிரி நடந்துக்கிட்டா போல இருக்கு.."

" என்னடா பதற்றம் எந்த இடத்திலையுமே நிதானம் தவறக்கூடாது இது கூட தெரியாதா.."

"அண்ணா அந்த பொண்ணு சின்ன பொண்ணு.. மெச்சூரிட்டி எதிர்பார்க்கிறது தப்பு. அதுவும் முதல் முதல்ல இங்கே ஆபீஸ்ல தான் வேலைக்கு சேர்ந்து இருக்கிறா..

இத்தனை நாளா எப்படி விளையாட்டுத்தனமாக இருந்தாலோ தெரியாது. கொஞ்சம் அனுசரிச்சு தான் ஆகணும் ".

"இப்படியே சொல்லிக்கிட்டு உட்கார்ந்து இருந்தா நமக்கு ஒன்னுக்கு நாலு வேலையா சேர்த்து வைப்பா போல இருக்கு.

ஒரு வேலையை ஒரு தடவை செய்வாங்களா திரும்பத் திரும்ப அதையே செய்வாங்களா.. இரு வரேன்" என்று சொன்னபடி கோபமாக அறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.

ஒவ்வொரு பேப்பராக வேகமாக பொறுக்கிக் கொண்டிருந்தாள் சக்தி.. இதில் வேலைக்கு நடுவே மறைப்பது போல நின்றவனை பார்த்து.."சார் கொஞ்சம் வழியை விடுங்க பேப்பரை எடுக்கணும்" என்று சொன்னபடியே நிமிர்ந்து பார்த்தால் சக்தி.

மாதவன் நின்றிருந்த தோற்றம் என்னவோ வெகு உயரமாக தெரிந்தான்..சட்டென சிறு பயத்தோடு எழுந்து நின்றால் சக்தி.

" என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற ஒரு வேலை சொன்னால் ஒழுங்கா செய்யத் தெரியாது அப்படித்தானே.."

" ஐயோ இல்ல சார் தெரியாம கைதவர்தளா.."

" மொத்த பேப்பரையும் பறக்க விட்டுட்ட அப்படித்தானே ..உனக்கு நிறைய நேரம் எல்லாம் டைம் கிடையாது .

முழுசா ஒரு மணி நேரம் தான் டைம்.. இதை எல்லாத்தையும் எடுத்துட்டு போயி லைனா அலைன் பண்ணி ஜெராக்ஸ் எடுத்து கொண்டு வந்து என் டேபில்ல வைக்கணும் .

ஜஸ்ட் ஒரு மணி நேரத்துல புரிஞ்சுதா" என்று சொல்லிவிட்டு நகர்தான்.

அங்கிருந்த அனைவருக்கும் உதட்டில் சிறு சிரிப்பு தோன்றி இருந்தது .இங்கே இவள் செய்யும் வேலையை பார்க்கையில் ஐயோ பாவம் என்று நினைப்பதா..
அல்லது மனம் விட்டு சிரிப்பதா என்று தெரியவில்லை.

தங்களுக்கு அருகே இருந்த பேப்பரை கூட வேகமாக எடுத்து இவள்ப்புறமாக கொடுத்தனர்.

"மறுபடியும் திட்டு வாங்காத.. சீக்கிரமா செஞ்சு முடி" என்று இலவச இணைப்பாக சிறு அட்வைஸ் சொல்ல.. "உங்க அட்வைஸ் எல்லாம் யாருக்கு வேணும் .எல்லாம் என் நேரம் இன்னைக்கு யார் முகத்தில் முழிச்சேனோ தெரியவில்லை..

காலையில் இந்த பாட்டி தான் போன் பண்ணுச்சு .இனிமே சொல்லிடனும் காலையில் கிளம்பும்போது போன் பண்ணினா என்ன செய்வேன்னு தெரியாது அப்படின்னு "என்று சொன்னபடியே நகர்ந்தால் சக்தி.

"முதல்ல பேப்பரை லைனா அடுக்கு சக்தி பிறகு இங்கே வா .நான் சொல்லி தரேன் ".

"இப்ப இதுதான் முக்கியமா சபா.."

" காலைல இருந்து கடுப்பாகிக்கிட்டு இருக்கறேன்".

"யாரால .."

"எல்லாம் உன்னால தான் காலையில சொன்ன வேலை எதையாவது ஒழுங்கா செய்யறையா..

காலையில சொல்லும்போதே எனக்கு ஜெராக்ஸ் எடுக்க தெரியாதுன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இவ்வளவு தூரம் பிரச்சனை வந்திருக்காது .

கொண்டு போய் மாதவன் சார்கிட்டயே நீட்டிட்டு வந்து இப்ப பாரு ..மறுபடியும் உன்னை ஜெராக்ஸ் எடுக்க கத்துக்கோன்னு அனுப்பி வச்சா..

பேப்பர் எல்லாம் பறக்க விடற.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் நீ வேலை செய்வியா சக்தி .

இதையெல்லாம் சரி பண்ணிட்டு நம்ம புறப்படவே சாயங்காலம் ஆயிடும் போல இருக்கு .

இதுல வேற சார் ஒரு மணி நேரத்துல முடிச்சுட்டு டேபிள்ல கொண்டு வந்து வைக்கணும்னு சொல்லிட்டு போயிருக்காங்க .

நான் அவ்வளவுதான் போல இருக்கு எனக்கு தான் நேரம் சரியில்லை சக்தி .

உனக்கு ட்ரெயின் பண்றதுக்குள்ள எனக்கு தெரிந்த கொஞ்சம் கொஞ்சம் வேலையும் மறந்துரும் போல இருக்கு ".

'சும்மா என்னையவே குறை சொல்லாதீங்க சபா சார் ."

"இது ஒரு வார்த்தை மட்டும் டக்குனு சொல்லிடு ".

"சரி இனி சார் எல்லாம் சொல்லல அண்ணான்னு சொல்லறேன் போதுமா .."

"சபா அண்ணா இனிமே இது மாதிரி ஆகாம பார்த்துக்கிறேன் ".

"இதெல்லாம் எத்தனை நாளைக்கு எனக்கு ஒன்னும் புரியல ஆனா ஒரு விஷயம் மட்டும் தெளிவா தெரியுது உன் கிட்ட நான் ரொம்பவே கஷ்டப்பட போறேன்னு நினைக்கிறேன்."

மிக வேகமாக வரிசையாக அடுக்க ஆரம்பித்தால் சக்தி .கிட்டதட்ட அரை மணி நேரம் முடிந்திருந்தது .

அடுத்த அரை மணி நேரத்தில் வேகவேகமாக ஜெராக்ஸ் எடுக்க இவளுக்கும் சொல்லித்தர சில நிமிடங்களிலேயே புரிந்து கொண்டு வேக வேகமாக எடுக்க ஆரம்பித்தால் சக்தி.

" ரொம்ப சீக்கிரமா கத்துக்கற சக்தி.. உண்மையை சொல்லு ஏற்கனவே நீ வேற எங்கேயாவது ஜெராக்ஸ் எடுத்து இருக்கிற தானே .."

"சும்மா கிண்டல் பண்ணாதீங்க சபா இது தான் முதல் முறை..நான் மாதவன் சார் கிட்ட நல்ல பேர் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன் அதனால தான்."

" இங்க செய்ற வேலையில சின்ன தப்பு கண்டுபிடிச்சா கூட மாதவன் சார் சும்மா இருக்க மாட்டார் புரிந்ததா..

பேப்பர்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கான்னு இன்னொரு முறை செக் பண்ணிட்டு கொண்டு போய் சார்கிட்ட கொடு .நான் போகட்டுமா ".

"என்ன விளையாடுறீங்களா பாதியில விட்டுட்டு போனா என்ன அர்த்தம் .

இந்த பேப்பரை கொண்டு போய் சார்க்கிட்ட கொடுக்கிற வரைக்கும் நீங்க என் கூட இருக்கணும் புரிஞ்சுதா ".

"என்னம்மா .. நான் உனக்கு ட்ரெயின் பண்ணனும் அதை விட்டுட்டு நீ என்னை மிரட்டிக்கொண்டு இருக்கிறாய்? இதெல்லாம் வேலைக்காகாது ."

"இத பாருங்க சார் ஏற்கனவே அவர் என் மேல பயங்கர கோவத்துல இருக்கிறார் .

இதுல தனியா வேற எதையாவது எடுத்துட்டு போயி மறுபடியும் நான் திட்டு வாங்க தயாராக இல்லை.

என் கூட வந்து அது சரி பண்ணி கொடுத்துட்டு போங்க பிறகு நான் வரேன் ."

"உன்னைய வச்சுட்டு நான் என்னதான் செய்யப் போறேன்னு தெரியல சக்தி .கொடு நானே கொண்டு வரேன் ".

"இல்ல சார் பேப்பர் தானே வெயிட் எல்லாம் இல்ல .நானே கையில கொண்டு வரேன் ".

'ஆமா மறுபடியும் படியில் இறங்கறேன்னு பறக்க விட்டுடாத.. ஒரு வேளை விட்டேன்னு வச்சுக்கோயேன் இன்னைக்கு முடிச்சுது .

உன்னோட வேலை மட்டும் இல்ல என் வேலையும் மொத்தமா முடிவுக்கு வந்திடும்.

ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்கன்னு சீட்ட கிழிச்சு கைல கொடுத்து அனுப்ப போறாங்க..

" நடக்காதது எல்லாம் நினைக்க கூடாது சபா.. "

"உனக்கு மாதவன் சார் பத்தி தெரியல ஓரளவுக்கு ஒழுங்கா வேலை செஞ்சா மட்டும்தான் ஆபீஸ்ல வச்சிக்குவாரு .இல்லன்னா ஈசியா ரிசைன் லெட்டர் கையில் எழுதி கொடுத்து அனுப்பி வைத்து விடுவார் ".

"அது எப்படி முடியும் வேலைக்கு சேரும் போது மட்டும் மூணு மாசம் நோட்டீஸ் கொடுக்கணும்னு எழுதி வாங்கிட்டு தானே சர்டிபிகேட் வாங்குறாங்க .

அதே நேரத்துல அவங்களுக்கு பிடிக்கலைன்னா உடனே அனுப்பிடுவாங்களா இதெல்லாம் நியாயமே கிடையாது".

" என்னம்மா விட்டா ரெண்டு நாளில் போராட்டம் பண்ணுவ போல இருக்கு அதெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது .

இது பெரிய ஆபீஸ் அப்படி எல்லாம் ஈஸியா நீ நினைக்கிறது எல்லாம் சொல்லிட முடியாது புரிகிறதா .

இது மாதிரி வேற யார்கிட்டயும் பேசிகிட்டு இருக்காத சரியா சீக்கிரமா வா "என்றபடி அழைத்து சென்றான் .

மாதவன் வாங்கி மேலோட்டமாக செக் செய்தவன் வாங்கி வைத்துவிட்டு.." சரி சபா அந்த பொண்ணுக்கு டைப்பிங் தெரியும்னா அது சம்பந்தமாக ஏதாவது வேலை கொடுப்போ "என்று சொல்லிவிட்டு தன்னுடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தான்..

அதன் பிறகு நேரம் மெல்ல நகர ஆரம்பித்தது .கொடுத்த டைப்பிங் வேலை மிக மிக மெதுவாக செல்வதாக தோன்றியது சக்திக்கு..

அவளுக்கு டைப்பிங்கை பொருத்தவரைக்கும் வேகமாக அடிக்க வரும் ஆனால் கொடுத்ததோ சில பேப்பர்களை மட்டுமே ..

அதை மாலை வரைக்கும் பொறுமையாக எந்த எழுத்து பிழையும் இல்லாமல் அடித்து தர வேண்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்து இருந்தான் சபா.

சபா நகரவுமே அருகில் இருந்த பெண் மெல்ல பேச்சு கொடுத்தால் ..

"ஹலோ நான் ஜான்வி.. உன்னோட பெயர் என்ன ?"

"என் பெயர் சக்தி உனக்கு தெரியாதா .."

"தெரியும் ஆனாலும் ஃபார்மாலிட்டிக்கு கேட்கணும் இல்லையா .அதுக்காக கேட்டேன்".

" ஜான்வி ரொம்ப அழகா இருக்குது பேரு .."

"ஆபீஸ்ல கூட எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க.."

"ஜான்வி இங்க ஆபீஸ்ல சேர்ந்து எவ்வளவு நாள் ஆச்சு ."

"நான் இங்க வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது ஏன் கேக்கற "என்று சொன்னபடியே அவ்வப்போது எதிரே நிமிர்ந்து பார்த்தபடி வேலை செய்ய.. ஜான்வியின் கண்கள் போகும் திசையை எளிதாக கண்டுகொண்டால் சக்தி .

"என்ன ஜான்வி மேடம் அடிக்கடி குரு சாரை எட்டி எட்டி பாக்குற மாதிரி இருக்கு .என்ன இங்க நடந்துகிட்டு இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா .."

"ஏய் என்ன உளர்ற ..நான் யாரையும் பார்க்கலை.. சாதாரணமா தான் பார்த்தேன்.

எப்பவுமே கம்ப்யூட்டர் ஸ்கின்னையே பார்த்துகிட்டு இருக்க முடியாது இல்லையா .அதனாலதான் நிமிர்ந்து பார்த்தேன் ".

"அதான் அதே தான்… பர்டிகுலரா குரு சாரை பார்க்கற ஜான்வி.. உண்மையை சொல்லு.. இங்க என்ன நடக்குது .அதுவும் நீ பார்த்த பார்வைகளை ரசனை நிறையவே கொட்டிக் கிடக்குது .என்ன விஷயம்.."

" வந்து சக்தி எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு .."

"ஹேய் நான் கேட்டதற்கான பதில் இது கிடையாது ஒழுங்கா நேரடியா விஷயத்த சொல்லு ."

"வந்து உன்கிட்ட சொல்றதுக்கு எனக்கு என்ன தயக்கம் .எனக்கு உண்மையிலேயே குரு சாரை ரொம்ப பிடிக்கும் .

நான் இங்கே ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்ததே அவருக்காக தான்.."

"புரியவில்லையே எப்படி முன்னாடியே குருவை உனக்கு தெரியுமா ".

'வந்து ஒரு முறை கடற்கரையில் ஒரு ஷூட்டிங் போயிட்டு இருந்தது .அப்ப என் பிரண்டுங்க கூட அங்க நான் போயிருந்தேன்.

அப்பதான் ஒரு சாரை முதன் முதலில் பார்த்தேன் .அவரோட ஹெல்ப்பிங் மத்தவங்க கிட்ட பேசுறது இப்படி எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு .

அதுக்கு பிறகு இவங்களோட ஆஃபீஸ் நம்பரை தேடி எடுத்து இங்கே வேலைக்கு சேர்ந்துட்டேன்.

இன்னைக்கு வரைக்கும் நான் அவரை பார்க்கிறது அவருக்கு தெரியாது ".

"இது ஒரு தலை காதலா.. எனக்கு தெரியாம போச்சே.."

" அப்படி இல்ல வந்து.."

" ஏற்கனவே நிஷான்னு ஒரு பொண்ணு குரு சாரை ரூட் விட்டுக்கிட்டு இருக்கிறா..
அது உனக்கு தெரியும் தானே.."

" தெரியும் நானும் நிறைய முறை செட்ல பாத்து இருக்கிறேனே.. இன்னமும் சொல்லப்போனா அந்த நிஷாவுக்கு நான் தான் டச்சப் பண்ணி விடுவேன்.
நிறைய முறை வேலை செய்து இருக்கிறேன்".

"நீதானா அது.. வழக்கமா வர்ற பொண்ணை கூப்பிட்டுட்டு வந்து இருக்கலாம்ல அப்படின்னு அந்த பொண்ணு சொன்னா..நீ தானா.."

" சரிதான் குரு சார்க்கு பிரண்ட்டு ஆகணும்னா குரு சார் கிட்ட தானே பேசணும் .நீ எதுக்கு குரு சைட் அடிக்கிற அந்த பொண்ணு கிட்ட நல்ல பேர் வாங்க ட்ரை பண்ணுற எனக்கு சுத்தமா புரியவே இல்லை.."

"அப்படி இல்ல சக்தி அப்படி செய்தால் குரு சார் என்னை கவனிப்பாருன்னு நெனச்சேன்."

" சரிதான் குரு சார் கவனிக்கனும்னா அதுக்கு ஏத்த மாதிரி செய்யணும்.

இந்த மாதிரி கொடுத்த வேலையை கரெக்டா செய்தால் எப்படி கவனிப்பாரு ..

மத்தவங்கள விடவும் நீ வித்தியாசமா தெரியனும்னா அதுக்கு நீ வேற மாதிரி தான் முயற்சி பண்ணனும்".

" எப்படி எனக்கு புரியல ".

"இனி இங்க தான நான் வேலை செய்ய போறேன் உனக்கு சொல்லித்தரேன்.

சரி உன்ன பத்தி சொல்லு உன்னோட அம்மா அப்பா குடும்பம் எல்லாம் எங்க இருக்கிறாங்க நீ எங்க இருந்து வர்ற..

இந்த மாதிரி நிறைய கேள்வி இருக்கு அது எல்லாத்துக்கும் கரெக்டா பதில் சொன்னேனா கட்டாயமா நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்."

"அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. ஓரளவுக்கு நல்ல வசதியும் கூட ..

நான் வேலை செஞ்சுதான் சம்பாரிச்சு சாப்பிடணும் என்கிற கட்டாயம் கிடையாது .

இந்த நிமிஷம் வரைக்கும் ஹாபி மாதிரி தான் இங்கே வேலைக்கு வந்துட்டு இருக்கேன் .

இன்னமும் ரெண்டு வருஷம் இங்க தான் வேலை செய்வேன்னு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் அதனால் இப்போதைக்கு வீட்டில் கல்யாணத்துக்காக எல்லாம் அவசரமா பார்க்க எல்லாம் மாட்டாங்க."

"ஓகே கேட்க சுவாரசியமாதான் இருக்குது".

" சரி நீ உன்ன பத்தி சொல்லு.."

"என்னை பத்தி சொல்ல எதுவுமே இல்லை .நான் என்னோட பாட்டி கூட வளர்ந்தவ .. இப்போ இங்க வேலை செய்யறேன் அவ்வளவுதான்."

"குரு சார் கிட்ட நெருங்க எனக்கு உதவி செய்வதான.."

" கட்டாயமா செய்வேன் அந்த நிஷா பொண்ணை விடவும் 100 மடங்கு நீ நல்ல பொண்ணு .ஏனோ தெரியல பார்த்த உடனேயே உன்னை எனக்கு பிடிச்சிடுச்சு .அதனால உனக்காக என்ன உதவி கேட்டாலும் செய்வேன் சரி இப்போ என்னை வேலை செய்ய விடறியா.."

"டைப்பிங் உனக்கு தெரியும் தானே இல்ல நான் சொல்லித் தரணுமா சக்தி".

" சரிதான் டைப்பிங் எல்லாம் அடிக்க தெரியும் . இன்னமும் ஸ்பீடா என்னால அடிக்க முடியும் .சபா இதை கையில கொடுத்துட்டு போயிட்டான்.

என்ன செய்றதுன்னு தெரியாம மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தா தட்டிக்கிட்டு விளையாண்டுக்கிட்டு இருக்கிறேன்..

இங்க ஆபீஸ்ல யாரு நல்லா டைப்பிங் செய்வாங்க.. ஜான்வி".

"இப்போதைக்கு நான் மட்டும்தான் கொஞ்சம் வேகமாக செய்வேன் மத்தபடி எல்லாருமே கொஞ்சம் ஸ்லோவாதான் ..

அப்புறமா முக்கியமான ஏதாவது டீடைல் அடிக்கிறதுன்னா நான் தான் அடிச்சு தருவேன்"சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மாதவன் குரல் கொடுத்து அழைத்திருந்தான்.

" ஜான்வி கொஞ்சம் இங்க வாங்க.. கொஞ்சம் வேகமா டைப் பண்ணனும் வர முடியுமா "என்று கேட்க அவளுக்கு முன்னதாகவே சக்தி எழுந்து மாதவனை நோக்கி நகர்ந்து சென்று இருந்தால் .

"சார் என்னால வேகமா டைப்பிங் அடிக்க முடியும் நான் வேணும்னா உங்களுக்கு உதவி செய்யட்டுமா" என்று கேட்க அவளுடைய முகத்தை பார்த்தவன் ..

"வேண்டாம் உனக்கு கொடுத்த வேலையை மட்டும் நீ செஞ்சா போதும் .

ஒரு வேலையை ஒரு தடவை முடிக்காம இரண்டு முறை சொதப்பி வச்சேனா..

ஜான்வி உங்கள தான் கூப்பிட்டேன்" என்று சொல்ல கோபமாக தன்னுடைய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டால் சக்தி .

ஜான்வி அவளை விட்டு நகரும்போது "இந்த மாதிரி எல்லாம் மாதவன் சார்கிட்ட ஆட்டிட்யூட் காண்பிக்காத சக்தி .அவருக்கு இது பிடிக்காது .

யாரை கூப்பிடறாங்களோ அவங்கதான் வேலை செஞ்சு கொடுக்கணும். இன்னொரு முறை இது மாதிரி செஞ்சு திட்டு வாங்கிடாத ..

ரொம்ப கோபம் வந்ததுன்னா கத்த ஆரம்பிச்சுடுவாரு .எதிர்ல இருக்குற நாம என்ன சொன்னாலுமே அவருக்கு புரியாது.

வேலையில ரொம்ப கரெக்டா இருக்கணும்னு பார்ப்பாரு ."

"நீ சும்மா எதுவும் சொல்ல வேண்டாம் .அவர்தான் அவசரமா அடிக்கணும்னு கேட்டாங்களேன்னு எழுந்து ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சேன்."

அதே நேரம் வேறு ஒரு வேலையாக வெளியே வந்த மாதவன் இவளுடைய இருக்கைக்கு அருகில் வந்து இரண்டு நிமிடம் நின்று பார்த்தான்.

இவளோ கொடுத்த பேப்பரை பார்த்து ஒவ்வொரு எழுத்தாக விளையாடி கொண்டு இருந்தால்..

ஒவ்வொரு எழுத்தாக தேடி தட்டிக் கொண்டிருப்பதை பார்த்தவன் ."எப்படி இது தான் உன்னோட வேகமா …இவ்வளவு வேகமா அடிக்கிற நீதான் எனக்கு உதவி செய்றதா கேட்டியா..

எதுக்காக இப்படி எல்லாம் பொய் பேசி பழகுற .பொய் சொல்றவங்களை எனக்கு சுத்தமா பிடிக்காது .

காலையிலிருந்து உன்னை மட்டும்தான் கவனிக்கணும்னு நினைக்கிறியா.. எனக்கு ஆயிரம் வேலை இருக்குது "சற்று கோபமாக கூற ..வேகமாக திரும்பியவள் ஒன் மினிட்ஸ் சார் நில்லுங்க ..இதோ என்றபடி வேகமாக டைப் அடிக்க ஆரம்பிக்க ..அவளுடைய வேகத்தை பார்த்தவன் ஒரு நிமிடம் திகைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்கள் சிமிட்டும் நேரத்திற்குள் மூன்று பேப்பரையும் அடித்து இவன் புறமாக நீட்டி இருந்தால்.

டைப்பிங் பொறுத்த வரைக்கும் என்கிட்ட எழுத்துப்பிழை எல்லாம் எப்பவுமே வராது .கூடவே வேகமாக என்னால் அடிக்க முடியும்.

சாயங்காலம் வரைக்கும் நான் இந்த வேலையை மட்டும் தான் செய்யணும்னு சொல்லிட்டு போனதால தான் என்ன செய்றதுன்னு தெரியாம இங்கே உட்கார்ந்து இருந்தேன் .

இதுவும் முடிஞ்சுது இப்பவாவது நம்புவீங்களா ..பொய் சொல்ற பழக்கம் எனக்கு துளி கூட கிடையாது .

என் பாட்டி என்னை அப்படி வளர்க்கல ..சின்ன வயசுல இருந்தே சொல்லிச் சொல்லி தான் வளர்த்தாங்க .

எனக்குமே பொய் சொல்ல வராது.. சரியோ தப்போஉண்மையை பேசி பழகணும். இதை அடிக்கடி சொல்லுவாங்க .

இப்ப மட்டும் இல்ல சாகுற வரைக்கும் சில விஷயங்களை நான் மாத்திக்க மாட்டேன் போதுமா "என்று சொல்ல ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் " சரி என் கூட எழுந்து வா "என்று விட்டு நகர்ந்தான்..

ஜான்வி உள்ளே அமர்ந்திருக்க அவளை எழுதியவன் அந்த இடத்தில் அமர வைத்தான்.

"இன்னமும் ரெண்டு நிமிஷத்துல ஒரு மீட்டிங் இருக்கு .அங்க பேசுற எல்லாத்தையும் நீ வேகமாக டைப்பிங்கா கோட் வேர்ட் மாதிரி அடிச்சு கொடுக்கணும் .

அதுதான் உனக்கு வேலை புரியுதா கொஞ்சம் வேகமாக இருக்கணும் சரியா" என்று படி ஆன்லைனில் மீட்டிங்கை தொடங்கி இருந்தான் மாதவன் .

வெளிநாட்டு கம்பெனி விளம்பரம் ஒன்றை இவர்களிடம் எடுத்து தர கேட்டுக் கொண்டிருந்தனர்.

அதனுடைய டீடைல் ஒவ்வொன்றையுமே வேகமாக கேட்டுக் கொண்டிருக்க.. கேட்டவற்றையெல்லாம் அடிக்க ஆரம்பித்திருந்தால் சக்தி .

கிட்டத்தட்ட அரை மணி நேரம் தாண்டி இருந்தது மீட்டிங் முடிய ..முக்கியமான விஷயங்கள் அனைத்துமே வேகமாக தட்டச்சில் ஏற்றி இருந்தால் சக்தி.

அவர்களுடைய தேவை அவர்களுக்கு எந்த மாதிரியான விளம்பர படம் வேண்டும் . இன்னும் சில கண்டிஷன்கள் என வரிசையாக தெளிவாக அடித்து முடித்தாள்.

அடுத்த நிமிடமே அவன் புறமாக நீட்டி இருந்தால் வேகமாக வாங்கியவன் ஒவ்வொரு பக்கமாக திருப்பிப் பார்க்க அத்தனை திருப்தி அவனுக்குள் ..புன்னகை முகத்தில் விரிந்து இருந்தது .

"காலையிலிருந்து சரியாக வேலை செய்யவில்லை என்று திட்டு வாங்கினாலும் கூட இப்ப செஞ்சிருக்கிற வேலை ரொம்ப நல்லா இருக்கு தேங்க்ஸ் சக்தி .

இனி ஏதாவது இது மாதிரியான வேலை இருந்தா உன்னை தான் கூப்பிடுவேன் "என்று இவளை அனுப்பி வைக்க வானத்தில் பறக்காத குறையாக மகிழ்ச்சியோடு தன்னுடைய இருக்கையை நோக்கி நகர்ந்தால் சக்தி.

மலையில் அனைவரும் மொத்தமாக ஒரு இடத்தில் அமர்ந்து டீ காபி ஜூஸ் என விருப்பமானது எடுத்து குடித்துக் கொண்டிருக்க அந்த இடத்திற்கு குரு வந்து சேர்ந்தான்.

" வெரி குட் சக்தி நானும் கூட காலையில நீ சொதப்பன சொதப்பலுக்கு சீக்கிரமா இரண்டு ஒரு நாளிலேயே உன்னோட சீட்டு கிளிஞ்சிடும்னு நினைச்சேன் .

ஆனா அப்படி எதுவுமே நடக்கல அண்ணன் கிட்டயே வெரி குட்னு சொல்ற அளவுக்கு பேர் வாங்கிட்ட.. ஆச்சரியமா இருக்குது ".

"சார் இதெல்லாம் ரொம்ப சாதாரணம். என்னிடம் எவ்வளவு டேலண்ட் இருக்கு தெரியுமா.."

" அப்படியா என்னென்ன டேலண்ட் இருக்கு சொல்லு பார்க்கலாம்.."

" அதெல்லாம் சொன்னா வராது சார் நீங்க எல்லாம் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் .நான் என்ன சொன்னாலும் தற்பெருமை மாதிரி ஆகிடாதா .."

"இல்லாட்டி கூட தற்பெருமையை உனக்கு கிடையாது இல்லையா.." என்று பேச மெல்ல ஜான்வி அவளுக்கு அருகே வந்து நின்றாள்.

" சார் இவங்க ஜான்வி .."

"தெரியுமா என்ன கேள்வி ஆபீஸ்ல தானே வேலை செய்றாங்க .ஒன் இயருக்கு மேல வேலை செய்றாங்க நல்லா தெரியுமே ..ஏன் திடீர்னு இவங்களை எனக்கு அறிமுகப்படுத்தறீங்க.."

"சும்மாதான் சார் தெரிஞ்சு வச்சுக்கோங்க ..நல்லது தானே ..

நல்ல பெண்ணு ஏதாவது ஹெல்ப் வேணும்னா நீங்க தைரியமா இவங்க கிட்ட கேட்கலாம் ".

"சரிதான் ஆபீஸ்ல ஐம்பதுக்கும் மேல வேலை செய்றாங்க…முக்கியமான என்னோட வேலை என்ன தெரியுமா..

பைனான்ஸ் மட்டும்தான் அண்ணா கொடுக்குற பணத்தை கரெக்டா செலவு பண்ணனும் .

அது மட்டும் தான் என்னோட வேலை என்னென்ன செலவு பண்ணினோம் என்பதை டீடைலா எழுதி அண்ணா கையில ரிட்டன் கொடுக்கணும் அவ்வளவுதான் .

அதை தாண்டி எனக்கு அங்க பெருசா எந்த வேலையும் கிடையாது ஆபீஸ் ஒர்க்கு ,விளம்பரம் ,மற்ற வேலை எல்லாத்தையுமே கவனிக்கிறது அண்ணா மட்டும்தான்.

அதுவும் ரெண்டு நாளா தான் சீட்ல இருக்கிறாங்க .. இல்லாட்டி இந்நேரம் ஊர் ஊரா சுத்த கிளம்பி இருப்பாரு .."

"எதுக்காக ஊரு ஊரா போகணும்.."

" சில விளம்பரத்துக்கு பர்டிகுலரி இந்த மாதிரி இடத்துல தான் வேணும்னு கூட கண்டிஷன் பண்ணுவாங்க .

அந்த மாதிரி இடத்தை தேடணும்னா என்ன பண்ண முடியும் .."

"அச்சச்சோ அப்படின்னா விளம்பரம் எடுக்க நிறைய செலவாகுமே.."

" அதெல்லாம் அவங்க செட்டில் பண்ணிடுவாங்க அண்ணா கிட்ட இந்த மாதிரி வேணும்னு சொல்லும்போதே அதற்கான பேமென்ட் சொல்லி அட்வான்ஸ் மாதிரி வாங்கிடுவாங்க."

" எது எப்படியோ கேட்க நல்லாத்தான் இருக்குது . குரு சார் நீங்க வேணும்னா வேற ஏதாவது பேசுங்க ஜான்வி எவ்வளவு கலகலன்னு பேசுறா தெரியுமா "என்று ஜான்வி குருவோடு நிற்க வைத்துவிட்டு நகர்ந்தாள்.

"சக்தி சரியான விளையாட்டு பொண்ணா இருப்பா போல இருக்கு சம்பந்தமே இல்லாம உன் கூட என்ன நிக்க வச்சுட்டு போறா" என்று கேட்டபடியே ஜான்வியை பார்க்க ஜான்வியோ குருவின் முகத்தையே ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

இத்தனை நேரம் கவனிக்காத ஒரு விஷயம் இது ..குருவிக்கு சற்றே ஒரு மாதிரியாக தோன்ற ஆரம்பிக்க.. "என்ன ஜான்வி வித்தியாசமா பார்க்கற மாதிரி இருக்குது.

இத்தனை நாளா இந்த ஆபீஸ்ல தான் நானும் இருக்கிறேன் சரியா" என்று விட்டு மெல்ல நகர்ந்தான். போகும் அவனைத்தான் இன்னமும் பார்த்துக் கொண்டிருந்தால் ஜான்வி.

ஒரு வருடமாக இங்கே வேலை செய்கிறாள்.இதுவரையிலுமே ஒரு நாள் கூட குரு இவளிடம் பேசியது கிடையாது .

முதல் முறையாக முகத்தை பார்த்து பேசியவன் நகர்ந்து செல்ல பிரம்மிப்போடு நம்ப முடியாமல் கவனித்தால் ஜான்வி.
 

Kavisowmi

Well-known member
8

"பாட்டி எதுக்காக இப்போ தேவை இல்லாம அப்பாவை நீங்க கூப்பிட்டு வர்றீங்க.."

"நீ சும்மா சொல்லாத சக்தி.. உன் அப்பா பிடிவாதம்மா நீ வேலை செய்யற கம்பெனியை பாக்கணும்னு ஒரே சத்தம் ..என்னால ஒன்னும் பண்ண முடியல. அதனால தான் அழைச்சிட்டு வரேன் ".

"இங்க மாதவனை பார்த்துட்டா என்ன நடக்கும் தெரியுமா.. அடுத்த நிமிஷம் அவர் என்னை இழுத்துட்டு போயிடுவாரு.."

"இத பாரு சக்தி இது தான் நடக்கும்னா யாராலேயும் மாற்ற முடியாது. நான் சொல்ல வர்றது உனக்கு புரியுதா.."

"பயப்படாத யார்கிட்டயும் நீ மாட்டிக்க மாட்ட.. நீ என்ன உன்னோட ஆஃபீஸ் க்குள்ளேயா உன்னோட அப்பாவை கூப்பிட்டுட்டு போய் சுத்தி காட்ட போற.. இல்ல..உன்னோட முதலாளியை தான் நேரா பார்த்து பேச போறாரா..

ரெண்டுமே நடக்க போறது இல்லல்ல.. வெளிய நின்னு பார்த்துட்டு உன்கிட்ட பேசிட்டு கிளம்ப போறாரு..

நீ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ.. ஏதாவது சமாதானம் பண்ணி அனுப்பி விடு பிறகு பொறுமையா பேசிக்கலாம்.."

"பாட்டி உங்கள வச்சுக்கிட்டு நான் என்னதான் செய்றதோ தெரியல .

ஒரு சின்ன விஷயம் இது கூட உங்களால சமாளிக்க முடியாதா.."

" உங்க அப்பனுக்கு நீ வேலை செய்யறது துளி கூட பிடிக்கல புரிஞ்சுதா சக்தி ."

"இப்ப என்ன தான் பண்றது .சரி எத்தனை மணிக்கு கிளம்பி வரீங்க கிளம்பியாச்சா இல்ல. இனி தானா.."

"உன் அப்பா இப்பதான் போன் பண்ணினான்.. வந்துகிட்டு இருக்கிறானாம்..

என்னை கிளம்பி இருக்க சொல்லி இருக்கிறான்.. வந்ததும் நேரா கிளம்பி வருவோம். பயப்படாத பெரிசா எதுவும் நடக்காது .

தினமும் சொல்றது தான் .வரட்டும் பாத்துக்கலாம் .எத்தனையோ விஷயத்தை சமாளிச்சோம் .

இத சமாளிக்க முடியாதா.. சமாளிக்கலாம் நீ தான் சரியான வாயாடி ஆச்சே.. ஏதாவது பேசி உங்க அப்பா வாயை அடைச்சிடுவ.. அதுதான் எனக்கு நல்லா தெரியுமே.."

" அந்த தைரியத்துல தான் நீ இப்ப தேவையில்லாம இழுத்துட்டு வர்ற அப்படித்தானே .."

"சரி சரி கோச்சுக்காத போனை வை சக்தி" என்று சொல்ல போனை வைத்தாள்.

யோசனை முழுக்க தந்தையை சுற்றி இருந்தது. நிறைய சொத்துக்கள் இருக்கிறது .வேலை கூட சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது .

தந்தைக்கு இவள் அவருடைய ஆபீசில் வேலை செய்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்தது ஆனால் இவள் இங்கே வேலை செய்ய வருகிறாள் என்றால் நிச்சயமாக கோபப்பட்டு இருப்பார் என்று புரிந்தது .

அதற்கு காரணமும் இருந்தது. நான்கு சகோதரிகளோடு ஐந்தாவதாக பிறந்தாலுமே நால்வருக்குமே பிசினஸில் பெரியதாக ஆர்வம் இல்லை .

ஆனால் சிறு வயதிலிருந்து சற்று பிசினஸ் சம்பந்தமாக விசாரிப்பதில் இருந்து என்னென்ன செய்கிறார் என்று அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வது சக்தி மட்டுமே..

டாட்டியின் வீட்டில் பாதி நாட்கள் இருந்தாலுமே வீட்டில் நடக்கின்ற நிறைய விஷயங்கள் இவளுக்கு தெளிவாகவே புரியும் .

சகோதரிகள் என்னென்ன செய்கிறார்கள் என்பது தொடங்கி தந்தை அடுத்து என்ன பிசினஸில் ஆர்வமாக இருக்கிறார் என்பது வரையிலுமே ..அத்தனையும் அத்துபடி ..

அதிலும் சமீப காலமாக ஒரு எம்எல்ஏவிற்கு பினாமியாக தந்தை இருக்கிறாரோ என்கின்ற சந்தேகமும் இவளுக்கு உண்டு.

ஏனென்றால் கடைசி ஐந்து வருடங்களில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய பெரிய கம்பெனிகளை இவர் நிர்வகித்து வந்து கொண்டிருந்தார் .

அதுவே சற்று சந்தேகத்தை தர ..அது சம்பந்தமாக இதுவரையிலுமே கேள்வி கேட்டது கிடையாது.

நிச்சயமாக ஏதாவது சொன்னால் அவருடைய பலவீனம் எதுவோ அதை சொல்லி கேட்க தயங்க மாட்டாள். இது சக்திக்கு நன்றாகவே வரும் கைவந்த கலை..

சற்று படபடப்பாகவே ஆபீஸில் காத்திருந்தாள் சக்தி .அன்றைக்கு மாதவன் ஆபீசுக்கு வந்திருக்கவில்லை .

வேறு ஒரு வேலை விஷயமாக புறப்பட்டு இருக்கிறான் என்று தெரிய வரவும் சற்றே நிம்மதி இவளுக்கு..

இனி பிரச்சனை இல்லை வந்தால் சமாளித்து விடலாம் என்கின்ற தைரியத்தோடு நின்றிருந்தாள்.

சொன்னது போலவே சரியாக 11 மணியை தொடும்போது சக்தியின் தந்தை வாசலுக்கு அருகே வந்து இவளை அழைக்க ..வேகமாக வெளியே வந்தவள் தந்தையை அழைத்துக் கொண்டு சென்றாள்.

" ரொம்ப நாள் எல்லாம் செய்ய ஆசை கிடையாது ஜஸ்ட் ஒரு வருஷம் மட்டும்தான் ..

தயவுசெய்து என்னோட ஆசைக்கு குறுக்க நிக்காதீங்க .. சக்தி வேகமாக பேசிக் கொண்டிருக்க கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் .

சக்தி பேச பேசவே சக்தியின் முகத்தை பார்த்தவர் ..திரும்பி தன் தாயாரை பார்த்து முறைக்க.. அவர் என்ன சொல்வது என தெரியாமல் தயங்கி நின்றிருந்தார்.

அதே நேரம் குரு ஜான்வியோடு அங்கே கேட்டின்னிற்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

"அதிசயமா இருக்குது என்ன சக்தி நீங்க காபி எல்லாம் குடிக்கிறீங்களா" என்ன என்று கேட்க.. இப்போது குருவை பார்த்து திரும்பினார்.

"அப்பா இவர் கம்பெனியோட இன்னொரு எம்டி எல்லாரும் சின்னவர்ல சொல்லுவாங்க ரொம்ப ஃப்ரெண்ட்லி" என்று சொல்ல..

" உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே "என்று பதில் கூறினார்.

" பார்த்திருக்க வாய்ப்பு எல்லாம் இல்லப்பா.. இவர் படிச்சது எல்லாமே பாரின்ல தான் .

சமீபத்தில் தான் இங்க வந்து இருக்கிறார் .இந்த ஆபீஸோட மொத்த கணக்கு வழக்குகளையும் இவர்தான் பார்த்துக்கிறார் ..என்று வேகமாக சொல்ல .."நான் கேட்கவே இல்லையே "என்று சக்தியிடம் திரும்பி கூறினார் .

"ஓகே சக்தி இவர் யாருன்னு என்கிட்ட சொல்லலையே "என்று குரு கேட்க ..

"இவர் என்னோட அப்பா . என்னை பார்க்கிறதுக்காக வந்திருக்கிறாங்க இவங்க என்னோட பாட்டி இவங்கதான் என்னை வளர்த்தாங்க".

உண்மையில் குரு இவர்களை பார்த்தது எல்லாம் கிடையாது ஏ.ன் இன்று வரையிலுமே இப்படி ஒருவர் இருக்கிறார் என்கின்ற விஷயம் இவனுக்கு அந்த அளவிற்கு தெரியாது.

ஏனென்றால் மாதவனும் சரி குருவின் தந்தையும் சரி ஒரு நாள் கூட இவர்களை பற்றி பேசியது இல்லை .

அதனால் அவனுக்கு சுத்தமாகவே தெரிந்திருக்கவில்லை .பொதுவாக பேசியவன்" சரி நாங்க போய் காபி குடிச்சிட்டு வேலையை போய் பார்க்கிறோம் .நீங்க பேசிட்டு வாங்க "என்று சொல்லிவிட்டு நகர.. இப்போதும் யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஏன் பா அப்படி பாக்கறீங்க ".

"உண்மையிலேயே இவனை எங்கேயோ நான் பார்த்திருக்கிறேன். எங்கேன்னு என்னால சொல்ல முடியல ".

"அப்பா எங்கேயுமே பார்த்திருக்க வாய்ப்பு இல்லை .இது ஃபேமிலியர் ஃபேஸ்..

நிறைய பேர் இதே மாதிரி தான் இருக்காங்க..அதனால பார்த்ததும் உங்களுக்கு தோணலாம். சரி நீங்க வாங்க நான் காபி எடுத்துட்டு வரேன்" என்று நகர சற்று நேரம் நின்று முறைத்தவர் தாயாரை அழைத்துக் கொண்டு புறப்பட்டிருந்தார்.
திரும்பி வந்து பார்க்கையில் அங்கே தந்தையோ பாட்டி இருவருமே இல்லை .

வேகமாக காப்பியை அந்த டேபிளில் வைப்பவள் வாசலுக்கு வர வண்டியில் ஏறி புறப்பட தயாராக நின்றிருந்தார் ..

"ஏன் இப்படி சொல்லாம புறப்படறீங்க ".

"நீ பண்ற எதுவுமே எனக்கு பிடிக்கல சக்தி. சின்ன வயதிலிருந்து நீ இப்படித்தான் பண்ணிட்டு இருக்குற..

இதுக்கு காரணம் என்னன்னு இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு புரியல.. பத்து வயசுல பாட்டி வீட்டுக்கு வந்தவ அங்கேயே தங்கிட்ட..

எப்பவாவது ஒரு தடவைதான் வருவது ஆனால் வரும்போது எல்லாம் பிசினஸ் பத்தியும் என்னை பத்தியும் வீட்டை பத்தியும் தெளிவா கேட்டு விசாரிச்சு தெரிஞ்சுக்குவ‌.

நானும் ரொம்ப சந்தோஷப்பட்டேன் நிச்சயமா என்னோட வாரிசு சக்தியா இருப்பான்னு நெனச்சேன். ஆனா இப்பதான் தெரியுது.

உனக்கு என்னை பத்தியும் என்னோட பிசினஸ் பற்றியும் துளி கூட அக்கறையே இல்லை ".

"அப்பா இப்படி எல்லாம் பேசாதீங்கப்பா ..ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க .பிசினஸ் தான் நல்லவிதமா நீங்க இப்ப பார்த்துக்கிறீங்க.

இது என்னோட பேஷன் பா இந்த மாதிரியான ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்யணும் என்பது என்னோட ஆசை .

அதுக்காக தான் நான் எங்க வந்தேன். கொஞ்ச நாள் தானே.. ஜஸ்ட் ஒரு வருஷம் ".

"பிறகு என்ன செய்யறதா இருக்கற.. நேரா ஆபீஸ் வந்து உட்கார்ந்திருப்பியா".

" அப்பவும் என்னால உறுதியாக சொல்ல முடியாதுப்பா .ஏன்னா நாளைக்கு என்ன வேணாலும் நடக்கலாம்".

" இப்படி சொன்னா என்ன அர்த்தம்.."

"அப்பா வந்து .."
தயங்கி நிறுத்த ..வேகமாக சக்தியின் பாட்டி குரல் கொடுத்தார்.

" அவதான் சின்ன புள்ள ஏதோ ஒன்னு சொல்லறா.. அவளுக்கு சரிக்கு சரியா நீ பேசினா என்ன அர்த்தம் கொஞ்ச நாள் தானே வேலையில் இருப்பேன்னு சொல்றா..

அவளுக்கே போர் அடிச்சா புறப்பட்டு வரப்போறா.. உன்னோட மத்த பொண்ணுங்க மாதிரி இவ அழகா இருக்கணும் .

இது அதுன்னு சொல்லி மேக்கப் ல இன்வெஸ்ட் பண்றது கிடையாது. அவளுக்கு இது தோனி இருக்கு இங்க வந்து இருக்கா ..

கொஞ்ச நாள் தானே நீ பேசாம வா.. நான் பார்த்துக்கொள்கிறேன்.."

"எப்படி பாப்பிங்க.. நீங்க இருக்கிறது திருச்சியில.. அவ இருக்கிறது சென்னையில.. இவளை ஹாஸ்டல்ல இவ்வளவு கஷ்டப்பட சொல்லி கட்டாயப்படுத்தினது யாரு?".

" சரி ரொம்ப கஷ்டப்படுறான்னா நீ பேசாம ஒரு வீடு வாங்கி கொடுத்துடு.. வேலை முடிந்தது .

அந்த வீட்ல இருந்துட்டு போகட்டும் நானும் அவளுக்கு துணைக்கு வந்து இருந்துக்கிறேன் .என்ன சொல்ற.."

" நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க மா..

அவ கூட சேர்ந்து நீங்களும் ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க .என்னவோ செய்ங்க.. நான் இப்போ புறப்படுறேன் .ஆனா எப்பவுமே இந்த பொறுமையோடகிளம்புவேன்னு நினைக்காதீங்க கோபம் வந்ததுன்னா என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது.."

"சரி சரி குழந்தை மாதிரி அவகிட்ட சண்டை போட்டு எதுவும் ஆக போறது இல்ல இப்ப நீ கிளம்பி வா புரிஞ்சுதா.."

"சக்தி சொல்வத தெளிவா கேட்டுக்கோ இங்கே எப்பவுமே வேலை செய்கின்ற ஐடியாவை மறந்திடு.".

" அப்பா நான் தான் முன்னாடியே சொன்னேன்ல என்னோட ஆசைக்காக கொஞ்ச நாள் மட்டும் தான்".

" டேய் திரும்பத் திரும்ப பேசி அவளை டென்ஷன் பண்ற இதோ பாரு சக்தி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வர்ற வழியை பாரு.

இன்னொரு தடவை இது மாதிரி அப்பாவ இங்க வர வைக்காத புரிஞ்சுதா .அவர் எவ்வளவு பிசியா இருக்கறவரு "என்று சொல்லியபடியே இவளைப் பார்த்து கண்ணடித்தவர் மகனை அழைத்துக் கொண்டு நகர்ந்தார்.

வேகமாக மறுபடியும் செல்ல குரு ஜான்வியோடு வந்து கொண்டிருந்தான்.

". என்ன அப்பா கிளம்பியாச்சா.. காபி குடிக்கவே இல்ல போல இருக்கு".

"சாரி நான் எதிர்பார்க்கல அப்பா வாங்கிட்டு வரதுக்குள்ள அவர் புறப்பட்டு போயிட்டாரு ..*

"என்ன சொன்னாங்க.. ஆபிஸ்குள்ள கூட்டிட்டு வந்து சுத்தி காட்டி இருக்கலாம்ல .நம்ம ஆபிஸ்ல வேலை செய்ற பெண்களை பார்க்கும்போது கொஞ்சம் சமாதானம் ஆகி இருக்கலாம் .

கொஞ்சம் கோபமா உன்ன முறைச்ச மாதிரி இருந்தது அதனால சொன்னேன் .

வேலை செய்ற மத்த பெண்களையும் பார்க்கும்போது ஓகே நம்ம பொண்ணு பாதுகாப்பா இருக்கிறா.. இங்க இருக்கட்டும் அப்படின்னு தோணலாம் இல்லையா அதுக்காக சொன்னேன்.."

"குரு சார் நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.

அப்பாவுக்கு நான் வேலைக்கு வந்ததே பிடிக்கல .அவர் படிச்சு முடிஞ்சதும் என்னை வீட்டோட வச்சுக்கணும்னு நினைச்சாரு.."

" வீட்டோட வச்சு .. புரியல .."

"வந்து என் வீட்டில் அதுதான் வழக்கம். படித்து முடிஞ்சதுனா கொஞ்ச நாள் வீட்ல இருப்போம் அப்புறம் அவரே ஏதாவது மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சிருவார் .

நான் இதையெல்லாம் கேட்காமல் வேலைக்கு வந்து சேர்ந்துட்டேன்ல அந்த கோபம் .."

"வித்தியாசமான பேமிலியா இருக்கும் போல இருக்கு .எனிவே வாழ்த்துக்கள் சக்தி.

ஆக இங்கிருந்து வேலையை விட்டுட்டு நீங்க வீட்டுக்கு போனீங்கன்னா.. உடனே கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க அப்படித்தானே ..

அப்படித்தான சொல்றீங்க இல்ல நான் தப்பா புரிஞ்சுகிட்டேனா.."

"அப்படித்தான்னு நானே வாயால சொல்லனுமா.. வாங்க சார் வேலை நிறைய இருக்கு போய் கவனிக்கலாம்" என்று நகர்ந்து இருந்தாள்.

"அப்புறம் குரு சார் இன்னைக்கு மாதவன் சார் வேலைக்கு வர மாட்டாரா .."

"யாருகிட்ட கேக்குறீங்க என்கிட்டயா.. சக்தி".

" கேட்டது தப்பா இருந்தா விட்டுடுங்க இனி நான் கேட்கல . ஐ

"ஐயோ இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு ஆனா இன்னைக்கு ஒரு முக்கியமான விஐபி பார்க்க போயிருக்கிறார்கள் .

சொன்னா உங்களுக்கு தெரியாது சக்தி. ஜான்வி தான் ரெண்டு வருஷமா வேலை செய்றாங்க இல்லையா .அவங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.."

"என்ன .. யார் வராங்க.."

" சக்தி நம்ம மாதவன் சாரோட ஃப்ரெண்ட் பேரு நித்தியா.. அவங்க தான் இன்றைக்கு வராங்கன்னு நினைக்கிறேன் ."

"நித்யாண்ணா எனக்கு புரியல .."

"ஓகே ரெண்டு பேரும் பொறுமையா பேசிட்டு ஆபீஸ்குள்ள வந்து சேருங்க எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு .

முக்கியமான போன் கால் வேற வரும் .நான் என்னோட சீட்ல இருந்தாகணும் "என்று குரு வேகமாக நகர.. வேகமாக ஜான்வியின் கரம் பற்றி நிறுத்தியள்..

"கேட்டேனே.. யார் நித்யா.. எனக்கு தெரியாது சொல்லு".

" நம்ம மாதவன் சார் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு எல்லாரும் பேசிக்குவாங்க.."

"எல்லோரும்ணா.. எனக்கு புரியல என்ன நடக்குது இங்க .."

"ஏன் நீ எதுக்காக ஷாக் ஆகுற.."

"இது வரைக்கும் வாயை திறந்து சொன்னதில்ல ஆனா ஆபீஸ்ல எல்லாரும் அப்படித்தான் பேசிக்குவாங்க ..

ஏன்னா அந்த அளவுக்கு ரெண்டு பேரும் க்ளோஸ்ட்டா பேசிக்குவாங்க அப்புறமா ஆபீஸ் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன ப்ராப்ளம் கூட நித்யா அழகா சமாளிப்பாங்க‌.

ஏதாவது ப்ராப்ளம்னா நிறைய நேரம் அவ தான் சொல்யூஷன் தருவா..

ஆன்றைக்கு வராங்க அப்படின்னா இங்கே ஏதாவது முக்கியமான பிரச்சனை போயிட்டு இருக்கலாம் அதை கவனிக்கறதுக்காக வரலாம் இல்லனா சாதாரணமா ரெண்டு பேரும் பார்த்து பேசுறதுக்காக கூட வரலாம் .."

"ஓ அப்படியா ..அப்படின்னா உன்மையிலேயே மாதவன் சார் அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க போறாறா.."

" எதுக்காக நீ இப்படி படபடப்பா கேக்குற.. கல்யாணம் பண்ணிக்கிட்டாலுமே ரொம்ப சந்தோஷம் தானே..

ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருப்பாங்க . ஒருத்தருக்கொருத்தர் அழகா கேட்ச் பண்ணி பதில் பேசும்போது பார்க்கிற நமக்கே அவ்வளவு அழகா இருக்கும் அதனாலதான் ..

இந்த பேச்சு ஆபீஸ்குள்ள பரவி இருக்குதுன்னு நினைக்கிறேன் .மத்தபடி மாதவன் சார் யோசிக்கறது எங்களுக்கு தெரியாது.."

"ஓ.. "என்று சொன்னவள் அமைதியாக நகர்ந்தாள். மனம் முழுக்க ஒரே படப்பாக இருந்தது..

தான் தான் அவசரப்பட்டு தேவையில்லாமல் எதையெதையோ கற்பனை செய்து இங்கே வந்து விட்டோமோ..

உண்மையில் நிலைமை கை மீறி சென்று விட்டது போல இருக்கிறது.. தன்னுடைய ஆசை தவறா..

ஏதேதோ யோசனை மனதில் எழ அவளையும் அறியாமல் லேசாக கண்கள் முதல் முறையாக கலங்கியது.

தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து மாதவன் தான் தனக்கு கணவனாக வரப்போகிறவர் என்று ஒரு உருவகத்தை மனதிற்குள் நினைத்து வந்திருந்தாள்.

தந்தை பேசியது தெரியும்.. அன்றைய சம்பவத்திற்கு பிறகு நிச்சயமாக தான் மாதவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தாள்..

இவளுடைய முடிவு சரியா தவறா என்று கூட இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாது ஆனால் மனதில் தோன்றியது அப்படியே பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்திருந்தாள்.

இப்போது இங்கே நடப்பதை பார்க்கையில் மனம் லேசாக வலிக்க ஆரம்பித்தது .

எதுக்காக தேவையில்லாம வருத்தப்படற.. பெருசா ஒன்னும் நீ ஆசைப்படலையே ..

அப்பவோட வாக்குறுதியை நிறைவேற்றனும்.. அதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும் இப்படி தானே நினைச்ச..

இந்த நிமிஷம் வரைக்கும் நீ யார்கிட்டயும் உன்னோட மனசை பறி கொடுக்கலை சக்தி .

அதனால உனக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்ல. உண்மையிலேயே அந்த நித்யா பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்க போறார்னு. தெரிஞ்சதுன்னா அதுக்கு பிறகு நீ இந்த இடத்தில இருக்க வேண்டாம்.

அந்த நிமிஷமே நீ உடனே புறப்பட்டு போயிடு ..உன்னுடைய அப்பாவுக்கு நல்ல பொண்ணா இருந்துக்கோ..

இதெல்லாம் எப்பவோ நடந்த சம்பவம் தானே .. இப்பவும் இதையெல்லாம் நினைச்சுகிட்டு இருப்பானு நீ நெனச்சதே பெரிய தப்பு .

மாதவனுக்கு அது போல ஒரு எண்ணம் இருக்கிற மாதிரி எப்பவுமே தெரியல .

தான் உண்டு தன்னோட வேலை உண்டுன்னு இருக்கிறார். இன்னமோ சொல்லப்போனால் உன்னோட அப்பாவோட பேரு கூட அவனுக்கு ஞாபகம் இருக்குமோ இல்லையோ தெரியாது.

நீ தான் தேவை இல்லாம எதேதோ கற்பனையை வளர்த்துக்கிட்டு வந்து இருக்கற..

என்னவோ உன்னோட அப்பா பெரிய துரோகம் பண்ணிட்ட மாதிரி நினைச்சு இப்படி ஒரு முடிவு மனசுக்குள்ள எடுத்து வச்சிருக்கற..

உனக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்ல ..காலையில் லவ் யூ சொல்லிட்டு சாயங்காலம் பிரேக்கப் பண்ற ஆட்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள் .

அந்த மாதிரி பார்த்து வளர்ந்தவ தானே நீ.. அதுவும் அவன் இருக்கிறது விளம்பரத் துறையில்..

அவன் பார்க்காத அழகான பெண்களா.. இல்ல பெண்களுக்கு தான் பஞ்சமா ..

எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கலாம். நிச்சயமாக உன்னோட அப்பா ஞாபகம் ..உன் வீட்டில் இருக்கிற பெண்களோட ஞாபகம் அவனுக்கு துளி கூட இருக்காது .புரியுதா.. மனசாட்சி வேகமாக இடித்து உரைக்க .. ஓரளவிற்கு புரிய ஆரம்பித்தது.

சற்று அமைதியாக தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தவள் அடுத்த வேலை என்னவோ அதை கவனிக்க ஆரம்பித்தாள்.
 

Kavisowmi

Well-known member
9

இருக்கையில் அமர்ந்த ஒரு மணி நேரம் தாண்டிய போது அந்த ஆபீசே கலை கட்ட ஆரம்பித்தது.

உள்ளே வரும் போதே ஆரவாரமாக பேசிக்கொண்டு வந்தாள்.

அவளது வலது கரம் மாதவனின் கரத்தோடு இணைந்திருக்க உள்ளே நுழையவும் ஆர்ப்பாட்டமாக சத்தமிட ஆரம்பித்தாள்.

"யாரெல்லாம் புதுசா வேலைக்கு வந்து இருக்கீங்க ..அவங்களெல்லாம் அப்படியே முன்னாடி வந்து நின்னா நான் சந்தோஷப்படுவேன்.

உங்களை எல்லாம் பாக்குறதுக்காக தான் நான் இன்னைக்கு வந்திருக்கிறேன் "என்று சொல்ல.. லேசான புன்னகையோடு மாதவன் கைகளை அவளிடம் இருந்து உருவிய படி தன்னுடைய அறையை நோக்கி சென்றான்.

" மது எங்க கிளம்புற ..கொஞ்ச நேரம் இங்க நில்லு ..பிறகு போகலாம் ."

"நீ ரொம்ப எக்சைட்டடா வந்திருக்கிற நித்யா ..நீயே பேசி முடிச்சிட்டு வந்து சேரு..

எனக்கு முக்கியமான ஒரு போன் கால் இப்ப வரும் அத நான் அட்டென்ட் பண்ணி ஆகணும் "என்று நகர ..

"எப்பவுமே வேலை வேலைன்னு இருக்காத.. மாதவா கொஞ்ச நேரமாவது இயல்பா இரு..

அவங்களோட பேசி சிரிச்சு பழகு எப்பவுமே இறுக்கமாகவே இருக்காத புரிஞ்சுதா "என்று விலகி நடந்தவனை இழுத்து நிறுத்தி இருந்தாள்.

மாதவனின் கையை பிடித்து நிறுத்தியளின் கையை பார்த்த சக்திக்கு மனதிற்குள் ஏதோ ஒன்று உடையது போல இருந்தது .

முதலில் சக்தியை பார்த்தவள் அருகே அழைத்தாள்.

" நீ புதுசா சேர்ந்திருக்கிறாயா? உன்னுடைய பெயர் என்ன ?"

"நான் சக்தி".

" ரொம்ப அழகா இருக்கு உன்னோட பேரு.. .வெல்கம் இந்த ஃபேமிலிக்கு உன்னை வரவேற்கிறேன் "என்று சொல்ல ..அதற்கும் புன்னகைத்தாள்.

" நிறைய பேச மாட்டியோ .."

"அப்படி எல்லாம் இல்ல.. ரொம்ப நிறையவே பேசுவா" என்று குரு சொல்ல.."

" அப்படி என்ன பேசினா .."

"என்ன பேசினாளா.. செய்யறது எல்லாமே எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு தான் இருக்கும் ."

"வந்த அன்றைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா ..மாதவனையே வேலை வாங்கின பொண்ணாக்கும் அவ.."..

"என்ன செஞ்சா.."என்று சற்று பொறாமை வருவது போல கேட்க..

" ஏய் உடனே நீ பொறாமையா பார்க்காத…அது வேற ஒரு காமெடியான நிகழ்வு ..உனக்கு அப்புறமா சொல்றேன் "என்று குரு சொல்ல ..

"என்னவோ நிறைய நடந்திருக்கும் போல இருக்கு .இந்த மாதிரி எதுவுமே மாது என்கிட்ட சொல்றதில்ல .."

"ஓகே நான் அப்புறமா உன்னை வந்து பார்க்கிறேன் "என்று மாதவன் நகர்ந்தான்.

" ஒரு நிமிடம் " என்று மாதவனையே அவள் நகர்ந்த பிறகு தான் சக்திக்கு சற்று இயல்பாக மூச்சு விட முடிந்தது.

இவளை பார்த்த முதல் பார்வையில்லையே நித்யாவை இவ்வளவு பிடிக்கவில்லை.

அதற்கு என்ன காரணம் என்று யோசிக்கும் மனநிலையில் கூட அவள் இல்லை .

தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தவள் .தன் மனதில் தோன்றிய யோசனைகளை வேகமாக டைப் அடிக்க ஆரம்பித்திருந்தாள் சக்தி.

"சபரி ரெண்டு கப் காபி வேணும் ஸ்ட்ராங்கா.." போனில் அழைத்து சொல்ல.. சபா வேகமாக திரும்பி பார்த்தான் .

சக்தியின் முகம் தான் அவனுக்கு ஞாபகம் வந்தது."சக்தி காஃபி ரெண்டு டம்ளர் ரூமுக்கு உடனே எடுத்துட்டு போ *.

"நானா" என்று கேள்வி அவளிடம் இருந்து வர .."ஏன் என்ன ஆச்சு மாதவன் சார் ஆகட்டும் குரு சாராகட்டும் இரண்டு பேரும் காபி டீ கேட்டா இந்த ஆபீஸ்ல இருக்குற யார் வேணும்னாலும் எடுத்துட்டு போய் கொடுக்கலாம்.

இது எழுதப்படாத சட்டம் ..இங்கே அட்டெண்ட்டர் வேலைக்கு யாரும் கிடையாது தெரியும் தானே..

அவங்க அவங்க.. அவங்க வேலையை செய்யணும். ப்ளீஸ் கொஞ்சம் எடுத்துட்டு போய் கொடுத்துட்டு வந்துடு" என்று சொல்ல.." சரி "என்று நகர்ந்தாள்.

காஃபி டம்ளரோடு நேராக மாதவனின் அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய.. அங்கே நித்யா மாதவனுக்கு வெகு அருகாமையில் நின்று இருந்தாள். கிட்டத்தட்ட உடல் முழுவதும் மாதவனின் மேல் சரிந்து இருப்பது போன்ற தோற்றம் ..ஆனால் அது எதுவும் தெரியாமல் மாதவன் வேலையில் கவனமாக இருந்தான்.

இவளுக்கு சற்று அதிர்ச்சி தோன்ற "சார் "என்று குரல் கொடுத்தாள். நிமிர்ந்து பார்த்தவன்..* இங்க வை" என்று சொல்லி அப்படியே திரும்ப அப்போதுதான் நித்யா நின்றிருந்த தோற்றம் அவன் கண்களுக்கு தெரிந்தது.

" எத்தனை தடவை சொல்றது எதுக்காக இப்படி பக்கத்துல வந்து நிக்கிற ..

இப்படி பக்கத்து சீட்ல உட்காரு ..என்ன தெரியணும்னு சொல்லு "என்று கேட்க..

"போ மாது இன்றைக்கு ஃபுல்லா நான் உங்க கூட என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சுட்டு வந்தா..

எப்பவும் ஆபீஸ் கட்டி புடிச்சிட்டு உக்காந்து இருக்கீங்க ..எனக்கு உண்மையிலேயே இங்க போரடிக்குது தெரியுமா "என்று சொல்ல சிரித்தபடி.." இப்போ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தான் கிளம்ப போறேன் வேணும்னா வாயேன்..

ஆனா உனக்கு தான் பிடிக்காதே.. அங்க வந்தா போரடிக்கும்னு சொல்லுவ .."

"பின்ன ஒரே ஒரு சீனை காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் எடுப்பீங்க ..

இப்போ என்ன ஷூட்டிங் போய்கிட்டு இருக்கு ".

"ஒரு ஜூஸ் விளம்பரம் எடுத்துக்கிட்டு இருக்காங்க ."

"கலர் கலரா ட்ரீக்ஸ் பாக்கெட்டில் புதுசா வர போகுது.. "

"10 கலர்ல கலக்கி வைத்துவிட்டு பாவம் அந்த மாடல்.. எத்தனை டம்ளர் இன்னைக்கு குடிக்க வைக்கிறதா பிளான்.."

"ஹேய்..கலாய்க்கறையா.. சரியா வர வரைக்கும் குடிக்கணும்.. வேற வழி..அதுக்காக தானே நம்ம பணம் தரோம் "என்று சொல்லி மாதவன் சிரிக்க ..அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

"ஏய் நீ என்ன பண்ற.. ஏன் இங்க நின்னுகிட்டு இருக்கற.. காபி கொடுத்தாச்சுன்னா போகணும் என்கிற மேனர்ஸ் கூட உனக்கு தெரியாதா..

நாங்க பர்சனலா பேசிகிட்டு இருக்கோம்" என்று சற்று ரூடாக நித்யா சொல்ல ..ஒரு நிமிடத்தில் கண்கள் கலங்கிவிட்டது சக்திக்கு.. வேகமாக வெளியேறப் போனால் ஆனால் மாதவன் செல்ல விடவில்லை .

"ஒரு நிமிஷம் சக்தி.. ஒரு சின்ன வொர்க் இருக்கு இதை எனக்கு கொஞ்சம் செஞ்சு கொடுத்துட்டு போயேன் "என்று சில பேப்பர்களை எடுத்து நீட்டினான்.

" ஜெராக்ஸ் எடுக்கணும் இப்போ எடுக்க தெரியும் தானே ..பழகியாச்சு இல்லையா "என்று கேட்க ..ஆம் என்பது போல தலையாட்டினாள்.

"குட் சீக்கிரமா போயிட்டு இதை கொண்டு வந்து கொடுத்துடு. அப்புறமா சூட்டிங் ஸ்பாட்டுக்கு கூடவே வா கொஞ்சம் வேலை இருக்குது" என்று கூறினான்.

"இதென்ன புதுப்பழக்கம் மாதவா.. இதுக்கு முன்னாடி இப்படி யாரையுமே சூட்டிங் ஸ்பாட்டுக்கு நீ கூப்பிட்டது கிடையாது ."

"நித்யா உனக்கு தெரியுமா தெரியாதா.. நம்ம ஆபிஸோட டேர்ம் அன்ட் கண்டிஷன்.

இங்க இருக்குற எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியணும் இப்போதைக்கு கன்டென் ரைட்டிங் வேலை தான் அவளுக்கு அலர்ட் பண்ணி இருக்கு.

இந்த பொண்ணுக்கு ஒரு அளவுக்கு நிறையவே கற்பனை இருக்குது நம்ம கேட்டதை செஞ்சு தர புதுசு புதுசா ஐடியா கூட இவகிட்ட நிறைய இருக்குது.

புதுசு புதுசா சொல்றா கேட்க நல்லா தான் இருக்குது .இதுவரைக்கும் தனியா எந்த வேலையும் செய்ய விட்டது இல்லை .

இப்போதைக்கு அசிஸ்டன்ட் லெவல்ல தான் இருக்கிறா." என்று கூற.".ஒகே சார் வரேன் .. நான் மட்டும்தான் வரணுமா ".

'இல்ல உன் கூட ஜான்வி இருக்கிறால்ல .. அவளையும் அழைச்சுக்கோ ..

அங்க பெருசா வேலை எதுவும் இருக்காது".

" ஏன் அப்படி சொல்ற மாதவா எடுக்கிறது கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரம்.. சர்வர் ஆள் வேணும் தானே ".

'சரிதான் ஆனால் அதுக்கெல்லாம் வேற ஆட்கள் இருக்கிறார்கள்.."

"இல்லாட்டி பரவாயில்லை..இவளையே கொண்டு வந்து கொடுக்க சொல்லு.."என நக்கலாக சிரிக்க.. சிறு முக சுனக்கத்தோடு நகர்ந்தாள் சக்தி .

அடுத்த அரை மணி நேரத்தில் புறப்பட்டு இருந்தனர் ."மாதவா..கம்பெனி வண்டியில அவங்க எல்லாம் வரட்டும் நீயும் நானும் தனியா முன்னாடி போகலாம்."

"பெட்ரோல் நிக்கற விலையில் தனித்தனி வண்டியில் எல்லாம் போக முடியாது .

என்னோட வண்டி பெரிய சைஸ் தான் .பின்னாடி அவங்க உக்காந்துக்கட்டும்..

நீ முன்னாடி உக்காந்துக்கோ மேட்டர் ஓவர் ..இதுக்காக தனித்தனி வண்டியெல்லாம் எடுத்துட்டு வர வேண்டாம் .

ரிட்டன் வரும்போது வேணும்னா எப்படின்னு பாத்துக்கலாம் .அல்ரெடி கம்பெனி வண்டி அங்க செட்டில் இருக்கும் புரிஞ்சுதா "என்றவன் வெளியேறி நடக்க ஆரம்பிக்க.. குரு எதிரே வந்து கொண்டிருந்தான்.

" குரு நீயும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு கொஞ்சம் வந்துட்டு போ.. எனக்கு இன்றைக்கு சூட்டிங் முடிச்சே ஆகணும்.

ரெண்டு நாள் தான் டைம் இருக்குது நாம அதை எடிட்டிங் குரூப் அனுப்பி நாளைக்கு சம்பந்தப்பட்டவங்களுக்கு அனுப்பி வச்சுடணும்.. அதனால நீ இனிமே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாகணும்".

" இவ்வளவுதானா வந்துட்டா போச்சு" என்று நடக்க .. ஐந்து பேரும் சூட்டிங் ஸ்பாட் இருக்கு புறப்பட்டனர் .

நித்யாவிற்கு ஷூட்டிங் பார்ப்பது என்பது துளி கூட பிடிக்காது ஆனாலும் மாதவனுக்காக புறப்பட்டு சென்றாள்.

காரில் செல்லும்போது மெல்ல பேச்சு கொடுத்தான் மாதவன்
" உனக்கு வேற ஏதாவது வேலை இருந்தா போய் கவனிக்கலாம்.

ஏன்னா உனக்கு சூட்டிங் ஸ்பாட்ல இருக்கிறது பிடிக்காது இல்லையா.."

" அது கொஞ்சம் போரிங்கான விஷயம்தான் மாது..ஒன்னையே திரும்பத் திரும்ப செஞ்சுட்டு பாக்குறப்போ கடுப்பாக தான் செய்யும்.

அதனாலயே சில நேரம் வர பிடிக்காது தான். ஆனா இன்னைக்கு நீ அங்கே இருக்கிற.. அதனால நான் வரேன்." என்று சொல்ல இவர்களின் உரையாடலை அமைதியாக ஜன்னல் வழியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

அங்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் கலர் கலராக நிறைய ட்ரிங்க்ஸ் கலக்கி வைத்திருந்தனர் .ஆனால் சுகர் எதிலுமே போட்டிருக்கவில்லை .

கலர் மட்டும் அப்படி கண்களுக்கு விருந்தளிப்பது போல இருக்க ..ஏதோ ஒரு ஹோலி பண்டிகை நடக்கும் வளாகத்திற்குள் வந்தது போல தோன்றியது இவளுக்கு ..

கீழே கூட கலர் கலராக அதே நிறத்தில் செட்டிங் செய்திருக்க அந்த இடமே விழா கோலம் பூண்டது போல இருந்தது.

நிறைய துணை ஆர்டிஸ்ட்கள் பாதிக்கு மேல் இவர்களுடைய ஆபீஸில் வேலை செய்பவர்களும் அங்கங்கே குழுவினரோடு கலந்து இருந்தனர்.

பார்க்கும் இவளுக்கு கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

சக்திக்கு இதுபோல பார்த்தது எல்லாம் கிடையாது.

சூட்டிங் ஸ்பாட் என்பது அவள் கனவிலும் சென்று பார்க்க நினைத்த ஒரு இடம் கிடையாது.

சாதாரணமாக மால்களுக்கு சென்று இருக்கிறாள் .அங்கே இருக்கும் கூட்டத்தை பார்த்து ரசித்திருக்கிறாள்.

அதை விட்டால் கோயில் விசேஷங்களுக்கு சென்று இருக்கிறாள்.

இதுபோல ஒரு கூட்டத்தை பார்த்ததில்லை ..கொண்டாடுவது போல கலர் கலரான கண்ணை
கவரும் உடை அணிந்தவர்கள் ஆளுக்கு ஒரு கூல்டிரிங்ஸ்சை கையில் வைத்தபடி நிற்க..

நடுநாயகமாக அந்த விளம்பரத்தில் நடிக்கும் பெண்மணி கையில் ஆரஞ்சு நிற கூல்டிங்ஸ்சை கையில் பிடித்தபடி நின்றிருந்தாள்.

இவனை பார்க்கவும் ஆர்வமாக அருகில் வந்தாள்.

" மது சார் நீங்க இங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை" என ஆர்வத்தோடு ஓடி வந்து லேசாக அணைக்க ..பதிலுக்கு இவனும் பார்மாலிட்டியாக அணைத்தவன் நகர்ந்து நின்றான் .

"இன்னைக்கு இந்த ஷூட்டிங் கட்டாயமாக முடித்தே ஆகணும் அதனாலதான் நேரா இங்க வந்தாச்சு.."

" நீங்க மட்டும் தான் வந்தீங்களா உங்க பிரதர் வரலையா.."

" அவனும் வந்தாகணுமே வேலை முடிந்தாகணும்னா.. இங்கே இருந்து தான் ஆகணும் வந்துகிட்டே இருக்கிறான் .

சரி சீக்கிரமா போயி வேலையை பாருங்க.. என்ன தீம்..

என்ன கன்டென்ட் எழுதி கொடுத்திருக்கிறார்கள்.. மனப்பாடம் பண்ணியாச்சா ஷூட்டிங் எப்ப ஸ்டார்ட் பண்ண போறீங்க.."

"ஆல்ரெடி மேக்கிங் வேலை எல்லாமே முடிச்சது ஒரு தடவை ரிகர்சல் பார்த்துவிட்டு நேரா ஷூட்டிங் போட வேண்டியதுதான்..

எல்லா கலர்லேயும் கலக்கி வச்சிருக்கோம் வேணுங்கிறவங்களுக்கு அந்த கலர்ல கொடுக்கணும்..
நீங்க தான் ஐடியா சொன்னீங்க".

" ஆமா ..அது நிஜம்தான்..
சின்ன குழந்தைகள கவர் பண்ணனும்னா கலர் கலரா ட்ரிங்ஸ் கொடுத்தா மட்டும் தான் முடியும்..

டேஸ்ட்டிய பாக்க போறது இல்ல கலர் பிளேவர் தானே இப்போது குழந்தை ஆசைப்படுறாங்க .."

"ஆனா கெமிக்கல் இல்லாமல் இருந்தால் ரொம்ப சந்தோஷம்.."

"நான் ஆல்ரெடி பேசிட்டேன்.. கம்பெனிக்காரங்க சொன்னாங்க மோசமான கெமிக்கல் எதுவும் இல்ல இது ஹிட் அடிக்கிற ட்ரிங்க்ஸ்.."

"என்ன செய்றது இந்த காலத்துல எந்த குழந்தைகளுக்கும் இளநீர் வேற நல்ல குளிர்ச்சி ஐட்டம் எதுவும் பிடிக்கவில்லை .

இது போலத்தான் செஞ்சு கொடுக்க வேண்டியதா இருக்குது" என்று நகர்ந்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த இடமே அல்லோலகல்லோல பட்டது நிறைய மியூசிக் சத்தமாக ஒளிபரப்ப ஒரு பார்ட்டி காலில் எப்படி ஆட்டம் பாட்டத்தோடு இப்பார்களோ அதுபோல ஒரு நிகழ்வை அங்கே அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.

ஐந்து நிமிடத்திற்கு மேல் பொறுமையாக பார்த்தவள் பிறகு மெல்ல அங்கிருந்து நகர்ந்தாள்..

வெவ்வேறு இடம் போல.. டெக்கரேஷன் ஒரே நிகழ்வு..

வேறு வேறு விதமாக கலர் ஜூசை கைகளில் கொடுத்து சூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

கையில் வைத்து அருந்தியவள்.. ஜூசை பிரமிப்பாக பார்த்தபடி "இதுபோல ஒரு ட்ரிங்க்ஸை நான் என்னோட ஜென்மத்துல நான் குடித்ததே இல்ல..

இதோட சுவைக்கு நூறு பெர்சென்ட் கேரண்டி "என்று சொல்ல அந்த சிறு டயலாக் சொல்லி முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஐந்து ஆறு டேக் வாங்கிக் கொண்டிருந்தாள்.

" ரொம்ப சின்ன டயலாக் இது கூட ஒழுங்கா சொல்ல தெரியல .."

"இத பாரு இப்படியெல்லாம் சொல்லக்கூடாது .நித்யா விளம்பர உலகத்துல நம்பர் இடத்துக்கு வேகமா முன்னேறிக்கிட்டு வர்ற மாடல் இந்த பொண்ணு .

இந்த பொண்ணு வந்தாலே அந்த ப்ராடக்ட் ஹிட் அப்படின்னு எல்லாரும் நினைக்கிறாங்க .

என் விளம்பரம் நிச்சயமாக ஹிட் அடிக்கணும்.. எத்தனை முறை சொன்னா என்ன ?

சொல்லட்டுமே.. இன்னைக்கு இத சொல்லி முடிச்சா மட்டும்தான் வீட்டுக்கு அனுப்புவேன் என்று பேசி இருக்கேன் சோ எத்தனை நேரம் ஆனாலும் சரி கரெக்டா எடுத்து முடிச்ச பிறகுதான் கிளம்புவாங்க" என்று சொன்னபடியே கேமாராவின் வழியாக இதுவரை எடுத்த சீன்களை பார்வையிட ஆரம்பித்தான் .

அந்த நேரத்தில் தான் குரு வந்தது.

"என்ன ஆச்சு ஒர்க் எல்லாம் எப்படி போகுது" .கேட்டபடி அருகே வர

" எங்கடா வழக்கம் போல ரொம்ப ஸ்லோ.. "

"இன்னைக்கெல்லாம் முடியுமா முடியாதா .."

"குரு இன்னைக்கு முடிச்சாகணும்னு சொல்லி இருக்கிறேன் .கேமராமேன் ஆர்டிஸ்ட் அத்தனை பேர் கிட்டயும் சொல்லியாச்சு .

ஆனா இவங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியல. நேரம் தான் போய்கிட்டு இருக்குது இதுவரைக்கும் ஏழு தடவைகள் ரீகர்சல் பார்த்தாச்சு.

கேமரா முன்னாடி வந்த பிறகு கூட அஞ்சு ஆறு டேக் போயிடுச்சு .இந்த பொண்ணு கரெக்டாவே சொல்ல மாட்டேங்குறா..

நேரம் தான் போய்கிட்டு இருக்குது கடுப்பா இருக்குது ."

"ப்ரோ நான் தான் முன்னாடியே சொல்லி இருக்கிறேனே..

உனக்கு எல்லாமே உடனே முடிக்கணும்னு நினைக்கிறவன்..ஆனா இது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செட்டாகாது.

இங்கே இத்தனை பேரை கூப்பிட்டு வைத்திருக்கிறோம் .யாராவது ஒரு நேரம் ஏதாவது ஒரு வகையில சொதப்ப தான் செய்வாங்க "என்று சொன்ன ..

மறுபடியும் எடுத்து நிகழ்ச்சிகளை பார்த்தவன்." சரி நான் இங்க இருக்கணுமா கிளம்பட்டுமா "என்று குருவிடம் கேட்க..

" போரடிச்சா கிளம்பிக்கோ ப்ரோ ஒன்னும் பிரச்சினை இல்லை .நான் இருந்து பாத்துக்குறேன் .

உனக்கு என்ன நாளைக்கு எடிட்டிங் டீம் கிட்ட இது கொடுத்தாகணும்.. இன்றைக்கு சம்பந்தப்பட்டவங்களுக்கு இந்த வீடியோ போயாகணும் .அவ்வளவு தானே.."

" ரொம்ப அர்ஜெண்டு டா இந்த வாரம் எல்லா சேனலையும் இந்த விளம்பரத்தை போட போறா சொல்லி இருக்காங்க .

நம்ம லேட் பண்ணினோம்னு வச்சுக்கோயேன் அடுத்தமுறை நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது.

வேற ஏதாவது ஒரு கம்பெனிக்கு போயிடும்.. அப்படி எல்லாம் விட முடியாது. புரிஞ்சதில்ல..

நமக்கு நம்ம எப்பவுமே பிஸியா வேலை செய்யணும்னா மத்தவங்களோட ஆதரவு நமக்கு வேணும்."

" எனக்கு நல்லா புரியுது இன்னைக்கு வேலை முடிஞ்சிடும் கவலைப்படாதீங்க .."

சற்று தொலைவில் சக்தி நிற்க அவளை அழைத்தான் ."இங்க வாங்க" என்று கூப்பிட கூடவே ஜான்வியும் அழைத்துக் கொண்டு அருகே வந்தாள் சக்தி .

"சொல்லுங்க குரு சார் என்ன வேணும் .கலர் கலரா கூல்டிரிங்ஸ் வைத்திருக்கிறார்கள் ஒரு டம்ளர் எடுத்துட்டு வரவா.."

"சரி "என்று கூற.. வேகமாக மாதவன் தடுத்தான்."சக்தி கலர் மட்டும்தான் கலக்கி இருக்குது .அதுல சுகர் எதுவுமே போடல .

அப்புறமா அது கூட்டிங்ஸ் கிடையாது ஏதோ ஒரு கெமிக்கல்.. கலருக்காக போட்டு கலக்கி வைத்திருக்கிறார்கள் .மற்றபடி கூல்டிரிங்ஸோட அந்த பேக் வரல.."

"ப்ரோ அப்புறம் ஏன் இந்த விளம்பரம் எடுக்க சம்மதிச்சிங்க.. ஒருவேளை அந்த கூல்டிரிங் நல்லா இல்லாட்டி எப்படி?

கம்பெனி பேரு தான கெட்டுப் போகும் .உங்களுக்கு புரிஞ்சுதா".

" தெரியும்டா நீ இப்படித்தான் சொல்லுவேன்னு ஆனா நான் அந்த ட்ரிங்க்ஸ் வேறு வேறு கலர்ல விடறாங்க ..

ஆறு கலர் மட்டும்தான் இங்கு பிரதானமாக கலக்கி வைத்திருக்கிறேன் .ஆல்ரெடி குடித்து பார்த்தேன்.

ரொம்ப நல்லாவே இருந்தது அதனாலதான் சம்மதித்தேன் உனக்கு தான் என்னை பத்தி தெரியும்ல ..

அதுல தேவையில்லாத கெமிக்கல்ஸ் எதுவும் இல்ல .அது குடிச்சா எனர்ஜி கிடைக்கும் ..அதுக்கு அவங்க ப்ரூப் கூட வெச்சிருந்தாங்க.

ஏற்கனவே ஆய்வுக்கு போயி எந்தவித பிரச்சனையும் இல்லன்னு தெரிஞ்சு வந்த பிறகுதான்..

நான் இந்த ஆட் எடுக்கவே சமாதித்தன் புரிஞ்சுதா.."

" இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்குது ஆனால் தாகமா இருக்குது ஏதாவது குடிச்சா நல்லா இருக்கும்".

" அப்படினா.. ஷூட்டிங் விட்டு வெளியே தான் போகணும்.. மெயின் ரோட்டில் நிறைய கடைகள் இருக்கு வேணும்னா போய் வாங்கி குடிச்சிட்டு வா ".

'ஆனாலும் ப்ரோ இத்தனை கஞ்சனா இருக்க கூடாது .இத்தனை பேரை கூப்பிட்டு ஷூட்டிங் நடத்துற இவங்களுக்கு ஒரு டீ காபி கூடவா கொடுக்க மாட்ட.."

"பிரச்சனையை நீயே இழுத்து விடுவ போல இருக்கு .ஆல்ரெடி ஆர்டர் பண்ணி இருக்கிறேன் .

இன்னும் வந்து சேரல கொஞ்ச நேரத்துல வந்துடும் .வந்த பிறகு குடிக்கலாம் புரிஞ்சதா" என்று நகர்ந்தான்.

மாதவனின் பார்வை ஷூட்டிங் நடக்கின்ற இடத்தையும் அங்கு நிகழ்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருக்க ..சக்தியும் மாதவனை விடாது பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் முழுக்க ஏதோ ஒரு வித வெறுமை சூழ்ந்திருந்தது.

உண்மையிலேயே மாதவனை இந்த பொண்ணு விரும்புறது உண்மையா இருந்துச்சுன்னா..

அதுக்கு பிறகு இந்த கம்பெனியில் நான் வேலை செய்ய மாட்டேன் உடனே நான் புறப்பட்டு போயிடுவேன் .

திரும்ப திரும்ப உள் மனது இவளிடம் சொல்லிக் கொண்டிருக்க..ஜான்வி இவள் தோளை தொட்டு உலுக்கினாள். அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க .."அங்கே என்ன வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கிற" என்று இவளுக்கு அருகே வந்து நின்றாள்.

இவள் கவனிக்கின்ற திசையை பார்க்க அங்கே மாதவன் அமர்ந்திருந்தான்.." என்ன சாரையே பாக்கற.. என்ன விஷயம்.."

"வேலை எப்படி செய்றாங்கன்னு கவனிச்சேன்" என்று சொன்ன படி நகர்ந்தாள்.

அடுத்து கொஞ்ச நேரத்திலேயே மதிய உணவு கூடவே தற்போது குடிப்பதற்கு காபி ஸ்னாக்ஸ் என மொத்தமாக வந்து இறங்க.. அந்த இடமே சுறுசுறுப்பாக இருந்தது.

கலவையான சத்தங்களோடு அனைவரும் டீ சாக்ஸ் என குடித்து சிரித்துக் கொண்டிருக்க ஜான்வியோடு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தாள்.

எதையும் சாப்பிட விருப்பமில்லை இறுக்கமாக அமர்ந்திருப்பது போல் தோன்ற.. ஜான்வி மெல்ல பேச்சு கொடுத்தாள்.

" எல்லாரும் காபி குடிச்சிட்டு ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க ..

நம்ம ஆபீஸ்ல இருந்து இங்க வந்து கிட்டத்தட்ட 1:30 மணி நேரம் ஆகப்போகுது .

உனக்கு பசிக்கலையா ஏதாவது சாப்பிடு.. மதியம் சாப்பிட ரெண்டு மணி தாண்டிடும்.

சூட்டிங் இடையே எதுவும் போய் சாப்பிட முடியாது புரிஞ்சுதா.. அதை எடுத்து சாப்பிடு அருகே இருந்த ஸ்னாக்ஸை எடுத்து நீட்ட ..

"வேண்டாம் ஜான்வி.. எனக்கு மனசு சரியில்ல.."

" ஏன் இங்க வந்ததுக்கு அப்புறம் மனசு சரியில்லையா.. என்ன பேச்சு பேசிட்டு இருக்குற.. நம்மள சுத்தி கொஞ்சம் பாரு ..

எத்தனை பேர்.. எத்தனை பேர் சுறுசுறுப்பா வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க .

இதை பார்த்து உனக்கு மனசு சரியில்லாமல் போகுமா ..ஆமாம் உன்னோட பிரச்சனை தான் என்ன?

என்கிட்ட சொல்ல முடியுமா சொல்லு.. "

"எனக்கு நான்தான் பிரச்சனை ஜான்வி உனக்கு சொன்னா புரியாது" என்று நகர்ந்தாள் அதே நேரம் குரு இவளை கையால் அருகே அழைத்துக் கொண்டிருந்த..

" என்ன குரு சார் "என்று சென்று நிற்க..

" மதியம் சாப்பிடறதுக்கு இன்னும் ஒன் ஹவர்ல நேரா இங்க வந்துருங்க..

வேலை செய்யறவங்க சாப்பிட வரலைன்னு தயங்கிகிட்டு இருக்க வேண்டாம் .

மெசேஜ் அனுப்புவேன்..ஆபீஸ்ல இருந்து வந்தவங்களுக்கு மட்டும் தான் இந்த மெசேஜ்.. இங்க வேலை செய்றவங்க முன்ன பின்ன சாப்பிட்டுக்குவாங்க .

அது அவங்களுக்கு வழக்கம்தான் ஆனா ஆபீஸ்ல வேலை செய்ற நீங்க பசி தாங்க மாட்டீங்க புரிஞ்சுதா ".

"யார் சொன்னது இதையெல்லாம்.."

" வேற யார் சொல்லுவாங்க அண்ணா தான் ..அண்ணாவுக்கு யாருமே சாப்பிடாம இருந்தா பிடிக்காது .

நிச்சயமா ஏதாவது ஒன்னு சாப்பிட்டாகணும் இது அண்ணாவோட பழக்கம் .

அப்புறம் முக்கியமான விஷயம் நித்யாவுக்கு கடல் மீன் சுத்தமா சேராது .அது சாப்பிட்டா உடனே அலர்ஜி வந்துடும் .

அதனால மதியம் மீன் லிஸ்ட்ல வந்திருந்ததுனா அதை கொடுக்க வேண்டாம்."

" கடல் மீனா.. எனக்கு புரியல .."

"ஆத்து மீன்னா அவங்களுக்கு எதுவும் செய்யாது ஆனால் கடல்ல இருக்கிற ஒரு சில மீன் அவங்களுக்கு சேராது .

அதனால கடல் மீன் எதையுமே சாப்பிடறது கிடையாது அதுக்காக சொல்ல வந்தேன் சரியா .

நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன் .நீங்க வேலை முடியவும் ஆபீஸ் வண்டியில் நேரா கிளம்பிக்கோங்க .

அஞ்சு மணிக்கு மேல ஷூட்டிங் முடிஞ்சிடுச்சுன்னா நேரா ஆஃபீஸ்க்கு வரணும் என்கிற கட்டாயம் இல்லை .

நேரா உங்களோட தங்கற இடத்துக்கு போய்க்கலாம் நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு நகர யோசனையோடு நித்யாவை கவனிக்க ஆரம்பித்தாள் சக்தி.
 

Kavisowmi

Well-known member
10

சரியாக ஒரு மணி எனும் போது மாதவனின் ஆபீஸில்இருந்து வந்திருந்தவர்களுக்கு மட்டும் மெசேஜ் வந்திருந்தது.

சரியாக சாப்பிட ஒதுக்கியிருந்த இடத்திற்கு வரும் படி ..ஜான்வியும் சக்தியும் அங்கே செல்ல.. ஏற்கனவே மற்றவர்களும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர் .

தனக்கு எதிரிலிருந்து இருக்கையை காட்டி.." ரெண்டு பேரும் உட்காருங்க சீக்கிரமா சாப்டுட்டு கிளம்புங்க .நீங்க சாப்பிட்டுட்டு போன பிறகு மத்தவங்கள வர சொல்லிக்கலாம்" என்று கூறியவன் சாப்பிட ஆரம்பிக்க இவர்களுமே தட்டில் உணவை வைத்து அமர்ந்தனர் .

நித்யா மாதவனுக்கு அருகே அமர்ந்திருந்தாள். மாதவனுக்கு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும் .

மீன் குழம்பா என்ன? ஆர்வமாக நித்யா விசாரிக்க..

" எந்த மீன்னு தெரியலை நித்யா ‌.உனக்கு அலர்ஜியாக கூடிய மீனா இருந்தா ரொம்ப சிரமமாக போயிடும் .

அதனால நீ மீன் குழம்பை அவாய்ட் பண்ணிக்கோ ..மத்தது என்ன வேணுமோ எடுத்து சாப்பிடு "என்று சொல்ல ..

"சும்மா இதையே சொல்லாத மாதவா ஒரு சில மீன்கள் மட்டும் தான் எனக்கு பிடிக்காது .

மீனை பார்த்தாலே எனக்கு ஆசையை தூண்டுது "என்ற படியே மாதவனின் தட்டில் இருந்து சிறிது உணவை எடுத்து சாப்பிட.. அவளை முறைப்படி சக்தி அருகில் இருந்து மீன் குழம்பை நகர்த்தி வைத்தாள்.

" இது மீன் குழம்பு தான் ஊற்றி சாப்பிடுங்க "என்று கூற உண்மையிலேயே கடல் மீன் குழம்பு என்று எழுதிய வந்திருந்தது.

வேகமாக ஸ்டிக்கரை கிழித்து வைத்தது சக்தி தான் .

இதை தெரியாமல் நித்யா மீன் குழம்பை ஊற்றி சாப்பிட அடுத்த கால் மணி நேரத்திலேயே அது தன்னுடைய வேலையை காட்டி இருந்தது .

உடல் முழுக்க அரிப்பு தோன்ற ஆரம்பிக்க.. அங்கங்க சொறிந்தவள் சில நிமிடத்திலேயே உடல் சிவக்க ஆரம்பித்து இருந்தது.

"மாது இங்க பாரு.. சீக்கிரமா டாக்டரை போய் பாக்கணும் மீன் குழம்பு சேரல அலர்ஜி ஆகிடுச்சு.. சீக்கிரம் மாத்திரை வாங்கி சாப்பிடணும்" என்று நகர..

அதே நேரத்தில் சரியாக ஏற்கனவே எடுத்திருந்த ஸ்டிக்கரை யாருக்கும் தெரியாமல் மெல்ல சென்று அந்த பாத்திரத்தில் ஒட்டி விட்டு நகர்ந்தாள் சக்தி.

எதையுமே கவனிப்பவன் சட்டென இவளுடைய செயலையும் கவனித்திருந்தான்.

அப்போது எதுவுமே சொல்லவில்லை வேகமாக நித்யாவை அனுப்பிவிட்டு மற்ற வேலைகளை கவனித்தபடி இடையே ஒருமுறை வந்து பாத்திரத்தை பார்க்க அதில் தெளிவாக இப்போது ஒட்டி இருந்தது கடல் மீன் குழம்பு என்று ..

தெரிந்தே நித்யாவுக்கு கொடுத்திருக்கிறாள் என்று புரியவும் யோசனையோடு சக்தியை கவனிக்க ஆரம்பித்தான் .

இப்போது சற்று கலகலப்பாக இருப்பது போல தோன்றியது இவனுக்கு ..

ஏனென்றால் காலை வந்த நேரத்தில் முகம் வாட்டமாக இருப்பது போல தோன்றி இருந்தது.

ஒருவேளை பசியாக தான் அப்படி இருக்கிறாளோ என்று நினைத்து தான் சரியாக ஒரு மணிக்கு சாப்பிட அழைத்தது .

இப்போது இருக்கின்ற இந்த முகத்தோற்றம் எதையோ உணர்த்துவது போல தோன்ற யோசனையோடு மாலை வரைக்கும் அங்கே சுற்றிக் கொண்டிருந்தான்.

ஐந்தரை ஆகும் போது சூட்டிங் முடிந்திருக்க எல்லாவற்றையும் எடுத்து பேக் செய்து கொண்டு இருந்தனர் .

கதாநாயகியாக நடித்த பெண் வேகமாக ஓடி வந்து மாதவனை இருக அணைத்து கொண்டு.."

"மது சார் அடுத்து ஏதாவது வாய்ப்பு இருந்தாலும் என்னையவே அழைக்கணும் .

கூப்பிடாம இருக்கக்கூடாது உங்கள எல்லாம் நம்பி தான் நாங்க வாழறோம்" என்று வழிந்தபடி சொல்லிக் கொண்டு நகர ..இங்கே மனதிற்குள் அவளை அர்ச்சனை செய்து கொண்டு இருந்தாள் சக்தி.

" உனக்கு இன்னும் நிறைய கெமிக்கல் போட்டு அதையே குடிக்க வைத்து இருக்கணும் .

யூனிட் முழுக்க புறப்பட தயாராக இருக்க சில உணவு பாத்திரங்களை எடுத்து வைக்க வேண்டியது இருந்தது .

அந்த வேலையை கவனிப்பதற்காக சக்தியையும் இன்னும் இரண்டு ஊழியர்களையும் அனுப்பி வைத்தான்.

சக்தி ஊழியர்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருக்க சரியாக அங்கே வந்தான் மாதவன்.

" ஏன் இப்படி செஞ்ச சக்தி "என்று கேட்க ..ஒன்றும் புரியாமல் திரும்பி இவனது முகத்தை பார்த்தாள்.

"என்ன சொல்றீங்க எனக்கு புரியல".

" எதுக்காக அந்த மீன் குழம்பு ஸ்டிக்கரை எடுத்த.. பிறகு ஏன் ஒட்ட வச்ச ..அதுக்கு என்ன காரணம்னு நான் தெரிந்து கொள்ளலாமா.."

"நீங்க கேக்குற எதுவுமே எனக்கு புரியல.. வேலை முடிஞ்சுதுன்னா நான் கிளம்புறேன்" என்று நகரப் போக ..வேகமாக கையை பிடித்து இழுத்து நிறுத்தி இருந்தான்.

இப்போது அதிர்ச்சி அடைவது இவளுடைய முறையானது ஏனென்றால் மாதவனைப் பொறுத்த வரைக்கும் பெண்கள் விசயத்தில் அத்தனை நீட்டானவன் .

யாரையும் இதுவரை கைபிடித்ததாகவோ வேறு எந்த விமர்சனங்களுக்கும் உள்ளாகாதவன் .ஆனால் இன்றைக்கு இவனுடைய செய்கை இவளுக்கு அதிர்ச்சி அளித்தது.

" என்ன செய்றீங்க இதெல்லாம் சரி கிடையாது ."

"அதுக்கு முன்னாடி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு .."

"கவனிக்கல சார்".

"இப்படி எல்லாம் கதை சொல்லாத ஏன்னா நீ செஞ்ச அத்தனை வேலையும் நான் கவனிச்சிட்டேன்.

என் கண்ணுல இருந்து எதுவும் தப்பாது. ஆபீஸ்ல மட்டும் அல்ல வெளி இடத்திலும் கூட ..

சின்ன விஷயமா இருந்தாலும் என் கண்ணை விட்டு எதுவும் தப்பாது எதுக்காக அப்படி பண்ணின.."

"என்ன பண்ணினாங்க.. ரொம்ப ஓவரா பேசாதீங்க. குழம்பு ஊத்தி சாப்பிடும்போது அது தெரியாதா மீன் குழம்பா இல்லையான்னு..

ஸ்டிக்கர் வேற எழுதி ஒட்டி அனுப்புவாங்களா.. சின்னப்புள்ளத்தனமாக இருந்தது அதுதான் கிழிச்சு வச்சேன் .

அப்புறமா ஏன் கொண்டு வந்து ஒட்டன என்று திருப்பி கேட்காதீங்க நான் செஞ்ச காரியம் எனக்கு சின்ன புள்ளத்தனமா தோணுச்சு .அதனால தான் திரும்பி வந்து ஒட்டி வச்சேன்".

" நீ சொல்ற எதுவுமே நம்புற மாதிரி இல்லையே.."

"நீங்க நம்புவதற்கு நான் என்ன செய்ய முடியும். எனக்கு தோணினது செஞ்சேன் பிறகு தப்புன்னு தோணுச்சு திரும்ப ஒட்டவச்சு .

இதுல என்னோட தப்பு எதுவுமே இல்லை".

" அவ்வளவுதானா வேற எதுவும் இல்லையா.."

"நீங்களும் சராசரியானவர் தான் போல இருக்கு.. "

" நீ சொல்றது எனக்கு புரியல ".

"என்ன சொல்றது ..ரொம்ப நீட்டானவர் மாதவன் சார் அப்படி இப்படின்னு கதை சொல்றாங்க..

ஆனா எங்க வந்து பார்த்தா தானே தெரியுது. விளம்பரத்தில் நடிக்கிற பொண்ணு வந்து கட்டி பிடிக்கறா.. இங்க ஒருத்தி கூடவே இடிச்சுக்கிட்டு சுத்தறா.. ஒரு வேலை பின்னாடி சுத்துறது உங்களுக்கு அத்தனை பிடிக்குமோ…"

"என்ன உளர்ற.."கோபமாக கேட்க..

" இப்ப என்ன ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு கையை பிடிச்சு இழுத்து.. இன்னும் குற்றவாளிகிட்ட கேள்வி கேட்கிற மாதிரி கேட்டா நான் என்ன யோசிக்கிறது.

முதல்ல கையை விடுங்க சார் எ"ன்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தாள்.

ஒரு நிமிடத்தில் இவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி சென்று இருக்க ..இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை .

நான் என்ன தப்பா கேட்டுட்டேன்.. இல்ல இங்கே இப்ப என்ன தப்பா நடந்துடுச்சி .

இந்த பொண்ணு ஏன் இப்படி சீன் போட்டுட்டு போறான்னு தெரியலையே..

என்னமோ நான் தான் தப்பு பண்ணின மாதிரி பேசிட்டு போறா..

அவளுக்கு அலர்ஜி வந்திருக்கு ஏற்கனவே காலைல இவளுக்கு கூப்பிட்டு கூட சொல்லி இருக்கு.

இந்த உணவு அவளுக்கு ஆகாது அதை கொடுக்காத அப்படின்னு.. இப்ப அவதிப்பட்டுகிட்டு இருக்கிறா..

ஏன் பண்ணினேன்னு இவகிட்ட கேட்டா.. இவ என்னவோ நான் தப்பு பண்ணின மாதிரி பிளேட்டை மாத்தி போட்டுட்டு எஸ்கேப் ஆக பாக்கறா ஒன்னும் புரியல.. மாதவா என்ன நடக்குதுன்னு தெரியல என்று புலம்பிய படியே நகர்ந்தான். அதற்கு மேல் பெரியதாக எதுவும் கேட்கத் தோன்றவில்லை அவனுக்கு..

அதே நாள் அப்படி முடிய ..அடுத்த நாள் வேறு ஒரு சம்பவம் நடந்திருந்தது .

இங்கிருந்து கிளம்பிய நித்யாவுக்கு சற்றே அலர்ஜி அதிகமாக இருக்க டிரீட்மென்ட் காக ஹாஸ்பிடலில் சேர்ந்திருந்தாள்.

அந்த தகவல் வர சற்று கோபம் வந்தது இவனுக்கு…

அந்த கோபத்தை வெளிக்காட்டாமலேயே வேகமாக சக்தியை அழைத்தான்.

" என்ன சார் சொல்லுங்க ஏதாவது வொர்க் இருக்குதா.."

" நீ செஞ்சு வச்ச வேலையே ரொம்ப பெருசா தான் இருக்குது .என் பின்னாடி இப்போ கிளம்பி வா ".

எங்க? என்று தயங்கி கேட்க..

ஹாஸ்பிடலுக்கு..

"எதற்காக சார் ஹாஸ்பிடல் போகணும். உங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா."

" எனக்கு உடம்பு சரியில்லைன்னா நான் போய்க்குவேன். .உன்னை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை .முக்கியமான ஒரு கிளைன்ட்டை பாக்க போறேன்.."

"அப்படியா அவருக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா .."எதுவும் பேசாமல் வண்டியில் ஏரு ..குரு நீயும் கிளம்பி வா" என்று நடக்க ஒன்றும் புரியாமல் கூடவே சென்றாள்.

" ஏதாவது முக்கியமான நோட்ஸ் எடுக்க வேண்டியதா இருக்கும் சக்தி கண்டதையும் யோசிக்காதீங்க" என்று அழைத்து செல்ல.. காரில் பின் இருக்கையில் அமர்ந்தவள் ஏதேதோ யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.

சில நிமிடத்தில் அந்த உயர் தரமான ஹாஸ்பிடலுக்குள் நுழைய.. " ஏன் சார் கிளைண்டுக்கு ரொம்ப முடியலையோ‌..

ஹாஸ்பிடல்ல வச்சு பேசுறதுக்காக வந்திருக்கிறீர்களா?" என்று கேட்க..

" ஷட்டப் நீ வாயை கொஞ்சம் மூடிகிட்டு வரியா .ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது .

உன் மேல அத்தனை கோபத்தில் இருக்கிறேன்.."

"ஏன் இப்படி எல்லாம் கோவமா பேசுற.. அந்த பொண்ண பிடிக்கலைன்னா எதுக்காக கூடவே இவ்வளவு தூரம் அழைச்சிட்டு வரணும் ."

"ஏன்னா செய்ற தப்பான காரியத்தோட வீரியம் கொஞ்சம் புரியனும் இல்லையா .அதனால தான் இங்க அழைச்சிட்டு வந்தேன்."

" எனக்கு புரியல.. என்ன டா.. என்ன நடந்துச்சு".

" நீ பேசாம வா குரு நீயும் வா சக்தி" என்று நேராக நித்யா இருந்த அறைக்குள் அழைத்துச் செல்ல மிகவும் சோர்ந்து படுத்து இருந்தாள். முகம் முழுக்கவே சிவப்பு நிறத்தில் தடித்திருந்தது..

"நீ செஞ்ச வேலையை பாரு" என்று இவளுக்கு மட்டும் கேட்கும்படி பற்களுக்குள் கடித்து கூறியவன்.

"சாரி நித்தி.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை .நிச்சயமா இது மேல இன்னொரு முறை நடக்காது அதுக்கு நான் கேரண்டி தரேன் .

இனிமே சாப்பாடு விஷயத்துல மத்தவங்க கூட சாப்பிட தேவையில்லை.

இனி எப்ப வந்தாலும் சரி உன்னை தனியா அழைச்சுட்டு போயி உனக்கு வாங்கி தரேன் புரிஞ்சுதா" என்று கூற..

"இது சின்ன விஷயம் தான் இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. என்ன ரெண்டு நாள் இங்க தங்கி டிரீட்மென்ட் பாத்தாகணும் ரொம்ப நாளாச்சு ..

இந்த மாதிரி ஹெவியா இன்ஃபெக்சன் ஆகி ..நானே எதிர்பார்க்கல.. ஊசி போட்டு இருக்காங்க ட்ரிப்ஸ் ஏற்றி இருக்கிறார்கள் .

இங்கே வந்த பிறகு ஒரு அளவுக்கு அடங்கிடுச்சு "என்று சொல்ல.. இப்போது தான் சக்தியின் செயல் அவர்களுக்கே புரிந்தது .

கண்கள் கலங்கிவிட்டது சக்திக்கு..

வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள்.

" என்ன ப்ரோ.. என்ன நடந்துச்சு.. இப்பவாவது சொல்றியா.. சக்தி கிட்ட என்ன சொன்ன.. அவ ஏன் கண்கலங்கினா .."

"அதை அவ கிட்டையே கேளு .நான் நேரா கிளம்புறேன். நீ அந்த பொண்ண கூப்பிட்டுட்டு நேரா ஆபீஸ்க்கு போயிடு" என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க அவனின் பின்னால் வேகமாக ஓடினாள் சக்தி .

"சாரி சார்..சத்தியமா இந்த மாதிரி ஆகும்னு எனக்கு தெரியாது நான் கூட விளையாட்டுக்கு தான் சொல்றீங்கன்னு நினைச்சேன்.."

"ஒருத்தருக்கு ஒரு உணவு சாப்பிட்டால் அலர்ஜி என்று சொன்னால் அது உனக்கு விளையாட்டா..

இது மாதிரி அவளை இதுவரைக்கும் பார்த்தது கிடையாது".

" நானும் இது மாதிரி யாரையும் பார்த்தது இல்லை.. யாருக்கும் எதுவும் ஆனது இல்லை .

நான் சும்மா விளையாட்டுக்கு சொல்றாங்கன்னு நெனச்சேன் .இப்ப நான் சீரியஸ்னஸ் புரியுது இதுபோல வரும்கிறது இங்க வந்து பிறகு தான் தெரியுது.

ஐ அம் சோ சாரி நான் வேணும்னா நித்யா கிட்ட போய் சாரி கேட்டுட்டு வந்துடறேன் "என்று திரும்பி போக போக ..வேகமாக அவளது கரம் பற்றி நிறுத்தினான்.

" நீ நேரா அவ கிட்ட போய் சொன்னேன்னு வச்சுக்கோ.. உனக்கு அவளை பத்தி தெரியல ..

ஒருத்தரை பிடிக்காமல் போச்சுன்னா அவங்களோட நடவடிக்கை வேற மாதிரி இருக்கும் எந்த எக்ஸ்ட்ரீம்கும் போகக் கூடியவ அவ..

அதனால் நீ சாரி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீ செஞ்சது உனக்கு தப்புன்னு தோணுச்சு இல்லையா.. அதுவே போதும்."

குரு இப்போது இவர்களுக்கு அருகே வந்தவன்.." ஓகே ஓகே இப்போ எனக்கு புரியுது.. நல்ல காரியம் செஞ்சிருக்கிற சக்தி".

" குரு நீ பேசாத .."

"அண்ணா ஒரு சில நேரங்களில் நீ பண்றத பார்க்கும் போது எதையாவது இந்த மாதிரி கொடுத்து அந்த பொண்ணை ஆப் பண்ணி வைக்கணும்னு நானே சில நேரம் நெனச்சிருக்கிறேன் அந்தளவுக்கு கடுப்படிப்பா.."

"ஓ ..உனக்கு மனசுக்குள்ள இப்படி ஒரு எண்ணம் இருக்குதா என்ன.."

"அண்ணா உங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தமும் பார்க்க அழகா இருக்கும் ..

ஆபீஸ்க்குள்ளயே அந்த பொண்ணை தான் நீ கல்யாணம் பண்ணிக்க போறா மாதிரியான ஒரு சீன கிரியேட் பண்ணி வைத்திருக்கிறா ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் நீ அது மாதிரி ஒரு வார்த்தை கூட சொன்னதில்ல..

இன்னமும் சொல்லப்போனால் கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவே உனக்கு இல்ல ஆனாலும் ஒவ்வொரு முறையும் ஸ்ட்ராங்கா மத்தவங்கள நம்ப வச்சிட்டு கிளம்பிக்கிட்டு இருக்கறா..

சில நேரம் எனக்கு தோணும் ஏன் இந்த பொண்ணு இந்த மாதிரி நடந்துக்கறான்னு.."

"உனக்கு அவளை பிடிக்கல குரு அதனால தான் இப்படி பேசுற .."

"அண்ணா என்னை நீ பாத்துக்கிட்டு தானே இருக்குற .."

" உன் கூட பேசறதுக்கு நேரம் இல்ல நைட்டு வீட்டுக்கு வா அங்க வச்சு பேசிக்கலாம்" என்று நகர்ந்தான்.

"ஏன் குரு சார் உங்களுக்கு நித்யாவை பிடிக்காதா.."

" பிடிக்காது பிடிக்கும் என்பது எல்லாம் இல்ல ஆனா ஏனோ அந்த பொண்ணு நடிக்கிறாளோனு அப்பப்ப தோணும் .

ஏன்னா அண்ணா கிட்ட ஆர்டிபிசியலா பழகுற மாதிரி சில நேரம் தோனி இருக்கு.

இது என் மனசுக்கு மட்டும் தான் தோணுதோ இல்ல மத்தவங்களுக்கும் தோணுதா தெரியல ".

"குரு சார் நீங்க யோசிக்கிறதைத்தான் நானும் யோசிக்கிறேன் .அந்த பொண்ணு பார்க்க நல்லா இல்ல. மனசுக்குள்ள ஒன்னை வச்சு வெளியே பேசுற மாதிரி தான் எனக்கும் தோணுது".

" நமக்கு தோணி என்ன பண்றது சக்தி .அண்ணாவுக்கு அந்த பொண்ணோட உண்மையான குணம் தெரியணும்.. சீக்கிரமா தெரிய வைக்க ஏதாவது செய்யணும் அதுதான் என்னோட ஆசையும் கூட.."

" சீக்கிரமா தெரிஞ்சுக்க வச்சுடலாம் சார் என்னை நம்புங்க" என்று நகர்ந்தாள்.
 

Kavisowmi

Well-known member
11

குருவோடு நேராக ஆபீஸ்க்கு வர.. மாதவன் வந்தது மதியத்திற்கு மேல் தான் .

வந்த உடனேயே குருவை அழைத்தவன் கோபமாக பேசிக்கொண்டிருந்தான்.

" இப்போ சொல்வது தான் .நல்லா கேட்டுக்கோ எக்காரணத்தைக் கொண்டும் அந்த சக்தி பொண்ணு என் முன்னாடி வந்து நிற்கக்கூடாது.

அப்படி வந்த நின்னான்னா நான் என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது ."

"அண்ணா இதெல்லாம் தெரியாம நடந்திருச்சு .மன்னிக்க பழகிக்கணும் ..

நம்ம ஒரு கம்பெனி ரன் பண்ணிக்கிட்டு இருக்கிறோம் எல்லாரும் எப்பவுமே பர்பெக்டா இருக்க மாட்டாங்க .
அதை முதல்ல புரிஞ்சிக்கணும் ".

"நீ எதுக்காக அந்த பொண்ணுக்கு இந்த அளவுக்கு சப்போர்ட் பண்ற.. அதுக்கு காரணம் ஏதாவது இருக்குதா குரு ".

"அண்ணா திஸ் இஸ் டூ மச் ணா... இன்னொரு முறை இது மாதிரி எதுவும் பேசாதீங்க .நிஜமாகவே எனக்கு கோபம் வருது. நீங்க எப்பவுமே இப்படி கிடையாது ஏன் இப்படி மாறிட்டீங்க.."

" என்னடா மாறிட்டேன்..தப்பு பண்ணினது அவ.. நான் கூப்பிட்டு சொல்றது தப்பா.."

*சரி ணா..அது போகட்டும் இன்னைக்கு ஒரு போட்டோ ஷூட் இருக்கு கூட எப்படியும் சிலரை அழைச்சிட்டு போகணும் இல்ல அந்த பொண்ண கூட்டிட்டு போலாமா வேண்டாமா? "

"யாரையோ அழைச்சிட்டு போ எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. நான் இன்னைக்கு எங்கேயும் வர்றதா இல்ல .

இங்க நிறைய வேலை இருக்குது இன்னும் சில கஸ்டமர் பேச வர்றதா சொல்லி இருக்காங்க ..

பேசி எப்படியாவது நமக்கு அந்த ஆர்டர் வாங்கணும்".

" சரி உங்களுக்கு யார் வேணும் சொல்லுங்க அவங்கள விட்டுட்டு கிளம்பறேன்."

" சபாவை மட்டும் விட்டுட்டு போ.."

"அண்ணா ஒரு விஷயம் தெளிவு படுத்துகிறேன் .சபா இருந்தா அவன் கூட அவன் குரூப் மெம்பர்ஸ் ஒரு சிலர் இருக்கலாம் .

சொல்ல முடியாது ஒருவேளை சக்தி பொண்ணு கூட இருந்தா நீங்க என்ன செய்வீங்க .."

"குரு சக்தியை நீ அழைச்சிட்டு போ சபா கூட இங்க விட்டுட்டு போக கூடாது .எனக்கு கொஞ்சம் வேகமாக வேலை செய்ய ஆட்கள் வேணும் அடுத்தடுத்து நிறைய வேலை சொல்லுவேன் .அதுக்கு ஏத்த மாதிரி ஆளை விட்டுட்டு போ "என்றவன் ஏதோ ஒரு பைலை திறந்து வைக்க அவன் முகத்தை பார்த்தபடியே நகர்ந்தான்.

சபா அண்ணா கூட நீ போய் ஜாயிண்ட் பண்ணிக்கோ..
அப்புறம் முக்கியமான விஷயம் உனக்கு கீழ வேலை செய்ய ரெண்டு பேரை கூட வச்சுக்கோ ..யாரை வைச்சுக்க போற.."

"எனக்கு ஜான்வியும் புதுசா சேர்ந்திருக்கிற அந்த சக்தி பெண்ணும் இருக்கட்டும்".

" சரிதான் அண்ணா சக்தி பொண்ணு வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க ஆல்ரெடி முக்கியமான ஒரு கன்டென்ட் எழுத கொடுத்திருக்கிறேன் .அந்த வேலை போய்கிட்டு இருக்குது பாதியில விட்டுட்டு எழுந்து போக வைக்க முடியாது.ஏன்னா அந்த டயலாக் எல்லாம் கொஞ்சம் முக்கியமானது நாளைக்கு ஷூட்டிங்க்கு தேவை இருக்குது".

" ஓகே சக்தியே அவளோட சீட்ல உக்காந்து வேலை செய்ய விடு..ஜான்வியை உனக்கு துணையா அழைச்சுக்கோ .

நான் இப்போ வெளியே கிளம்புறேன். நான் ரெண்டு பேரை கூப்பிட்டு கிளம்புறேன்" என்று நகர்ந்தான் குரு.

ஒவ்வொருவரும் அவர்களது வேலையில் பிஸியாக இருக்க இங்கே சக்தி கூட தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தாள்.

புதியதாக ஒரு சிக்கன் கடைக்கான விளம்பரம் ..அதைத்தான் இவள் கண்டென்னாக எழுதி தர வேண்டும்..

இரண்டு கோழிகள் பேசிக் கொள்வது போல டயலாக் எழுதிக் கொண்டிருக்க ..அவளுக்கே சிரிப்பு வந்தது .

பொதுவாக கோழிகளை நிறுத்தாமல் கார்ட்டூனில் இந்த விளம்பரம் செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்தபடி எழுதிக் கொண்டிருக்க.. சரியாக சபா அங்கே வந்தான் .

"என்ன ஆச்சு சக்தி இன்னைக்கு எழுதி முடித்துவிடுவீர்களா? "

"கட்டாயம் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்".

" முக்கியமான ஒரு விஷயம் இருக்குது நான் மாதவன் சார் கிட்ட டயலாக்கை கொடுப்பேன் .அவர் படித்து பார்த்து ஓகே சொன்னா மட்டும் தான் அத சூட்டிங் எடுப்போம்.

ஒரு வேலை அவருக்கு இந்த டயலாக் பிடிக்கலன்னா வேற தான் நீங்க எழுத வேண்டியது இருக்கும் புரிஞ்சுதா .."

"ஓகே புரியுது நிச்சயமா யார் இத படிச்சு பார்த்தாலும் அவங்களுக்கு புரியும் "என்று சொன்னபடியே எழுதி முடித்தவள் அடிஷனலுக்காக இன்னும் சில டயலாக்குகளை வேறு வேறு கோணத்தில் இன்னமும் இரண்டு செட் எழுதிவிட்டு பிறகு சபாவிடம் கொடுத்தாள்.

" இந்தாங்க இதை தான் நான் எழுதி இருக்கிற டயலாக் . கொண்டு போய் காட்டுங்க .ஒருவேளை இதுவும் பிடிக்கலைன்னா வேற ஏதாவது எழுதி தரேன்னு சொல்லுங்க "என்று சொல்லிவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள்.

என்னவோ இன்றைக்கு மாதவன் மிகவும் டென்ஷனாட காணப்பட்டான்.

காலையில் நித்யாவை சென்று பார்த்த வந்த பிறகு அவனது மனநிலை ஒரு நிலையில் இல்லை நிறைய குழப்பம் மனதில் தோன்றியிருந்தது .

ஏற்கனவே இங்கே ஆபீஸில் இவர்களை பற்றிய பேச்சுக்கள் நடப்பது இவனுக்கு நன்றாகவே தெரியும் .ஆனால் அதைப்பற்றி என்றைக்குமே கண்டுகொண்டது கிடையாது. ஏனென்றால் அவனுடைய மனநிலை அது போல தான் இருந்தது.

திருமணத்தை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் அவனிடத்தில் கிடையாது .

இன்னமும் சொல்லப்போனால் நித்யாவை ஒரு நல்ல தோழியாக மட்டும் தான் இவன் மனதில் வைத்திருந்தது.

நித்யாவின் தந்தை கூட ஏற்கனவே இவனிடம் அழைத்து பேசியிருந்தார்.

" நித்யாவுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மாதவா. உன்ன போல ஒரு திறமையான பையனை பிடிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம் .

உனக்கு சம்மதம்னா உன் அப்பா கிட்ட வந்து இரண்டு பேருக்கும் கல்யாணம் பேசறேன் என்ன சொல்லுற "என்று கேட்டிருந்தார்.
ஆனால் இவன் தான் எளிதாக தட்டிக் கழித்து விட்டு வந்திருந்தான்.

"இப்போதைக்கு கல்யாணத்தை எந்த யோசனையும் இல்லை அங்கிள் அப்பாவுக்கு பிரசியோதெரபி போயிட்டு இருக்கு .

உங்களுக்கு தான் தெரியுமே அவர் கொஞ்சமாவது எழுந்து நிற்கணும் அதுக்கு முன்னாடி கல்யாணத்தை பத்தி நான் யோசிக்கிறதே இல்லை".

" மாதவா நான் சொன்னா கோச்சுக்க மாட்டேன்னாஒரு விஷயம் சொல்லுறேன் .அப்பா வாழ்ந்து முடிச்சவரு ..ஆனா வாழ போறவங்க நீயும் உன் தம்பியும்.."

"என்ன சொல்ல வரீங்க அங்கிள் நீங்க சொல்றது எனக்கு புரியல நாங்க வாழனும் அப்படிங்கறதுக்காக அப்பாவை அப்படியே விட்டுட்டு வந்துடனும்னு சொல்றீங்களா.."

" இல்ல அப்படி கிடையாது நான் அதை சொல்ல வரல ..ஆனா உங்களோட எதிர்காலத்தை பத்தியும் அவருக்கு கவலை இருக்கும் இல்லையா ..
அதுக்காக சொல்ல வந்தேன் ".

"கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு எடுத்தேன்னா நிச்சயமா உங்க பொண்ண பத்தி யோசிப்பேன் .

இப்போதைக்கு வேண்டாம் கொஞ்ச நாள் ஆகட்டும் .நீங்க எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கீங்க.

இன்றைக்கு இந்த கம்பெனி இவ்வளவு தூரம் வளர்ந்து நிற்பதற்கு முழுக்க முழுக்க நீங்க தான் காரணம் .

நித்யா சொன்னாங்கற ஒரே காரணத்துக்காக யோசிக்காமல் எனக்கு பணத்தை கொடுத்தீங்க..

இந்த காலத்துல அஞ்சு வட்டி பத்து வட்டின்னு வாங்கும் போது நீங்க என்கிட்ட வட்டியா அரை பைசா கூட வாங்கலை..

அதுவும் கூட நித்யாவுக்காகன்னு சொல்லி தான் கொடுத்தீங்க அந்த நன்றி நான் மறந்தேனா ..நான் மனுஷனாகவே இருக்க முடியாது."

"எதுக்காக மாதவா இவ்வளவு பெரிய வார்த்தை .."

"உண்மை சொன்னேன் அங்கில்.. மனுசனா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்…

எனக்கு தெரியும் நித்யாவுக்கு என் மேல விருப்பம் இருக்குது ஆனா நானும் கொஞ்சம் யோசிச்சு வச்சிருக்கிறேன் .

இன்னும் கொஞ்சம் அச்சிவ் பண்ணனும்.. கிட்டத்தட்ட எனக்குன்னு சில கோடி சொத்து இருக்கணும்.

பெரிய வீடா கட்டணும் .இப்படி நிறையவே இருக்குது. அதெல்லாம் நடந்த பிறகுதான் கல்யாணத்தை பத்தி யோசிப்பேன் ."

"அதுதான் ஏன்னு கேக்குறேன் மாதவா.. எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு நித்யா மட்டும்தான் ".

'நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியுது அங்கிள் .நிச்சயமா ஒரு பெண் பின்னாடி வர்ற எந்த சொத்தையும் நான் விரும்ப மாட்டேன் .

உங்களுக்கு என்னை பத்தி நல்லா தெரியும் தானே.. என்னால சம்பாதிக்க முடியும்..

என்னோட சொந்த உழைப்பில் தான் என் மனைவி சவுரியமா வாழனும்னு ஆசைப்படுறேன் .அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும் ."

"சரி நித்யாவும் காத்திருப்பான்னா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" இந்த பேச்சுவார்த்தை நடந்து ஆறு மாதங்கள் முடிந்திருக்கும் .

இன்று வரையிலுமே கிணற்றில் போட்ட கல்லாகவே நாட்கள் மட்டுமே நகர்ந்து கொண்டிருந்தது.

அவ்வப்போது நித்யா ஆபிஸிக்கு வருவாள்‌…கலகலப்பாக பேசிவிட்டு நகர்வாள். மற்றபடி பெரிதாக எந்த மாற்றமும் வந்திருக்கவில்லை.

யோசனை முழுக்க நித்யாவை பற்றி சுழன்று கொண்டிருக்க.. எழுதிய டைலாக்கை கொண்டு வந்து நீட்டினான் சபா.. படித்து பார்த்தவனுக்கும் கூட லேசாக புன்னகை மலர்ந்தது.

"என்ன சபா வர வர ரொம்ப டெவலப் ஆயிட்ட போல இருக்கு .படிச்சாலே சிரிப்பு வருது. இதுல கார்டூன்ல போடணும்னு வேற தனியா பிராக்கெட் போட்டு அனுப்பி வச்சிருக்கிற.."

" சார் உங்களுக்கு பிடிச்சா எனக்கு சந்தோஷம் தான்."

" சரி யார் இந்த டயலாக்கை எழுதினது அத சொல்லு ."

"நம்ம ஆபீஸ்ல புதுசா சேர்ந்திருக்குதே அந்த பொண்ணு தான் சக்தி ..அவ தான் இதை எழுதினாள்.."

இத்தனை நேரம் பாராட்டியவன் சற்று தயங்கி நிறுத்தி விட்டு.." இது மட்டும் தான் இருக்குதா இல்ல வேற ஏதாவது எழுதி வைத்திருக்கிறாளா? "

"ஏன் சார் இப்ப தான பிடிக்குதுன்னு சொன்னீங்க ..அதுக்குள்ள இப்படி கேக்குறீங்க ."

"இப்ப கொஞ்சம் பிடிக்காத மாதிரி தோணுது அதனாலதான் கேட்டேன்".

" இன்னும் கூட இரண்டு விதமான டயலாக் எழுதி இருக்கிறாங்க" என்று எடுத்துகாட்ட ஒவ்வொன்றை படிக்கும் போதும் உண்மையிலேயே அத்தனை அழகாக இருந்தது.

மூன்றுமே பெஸ்ட் என்கிற மாதிரி தான் இருக்குது .

ஆனா..

"என்ன சார் சொல்லுங்க ..நீ அந்த பொண்ணு கிட்ட போய் எதுவும் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டாம் படிச்சு பாத்துட்டு சொல்லுவாங்கன்னு மட்டும் சொல்லு "என்று வாங்கி வைக்க.. ஒன்றும் புரியாமல் நகர்ந்தான் சபா.

" என்ன ஆச்சு இவருக்கு.. வழக்கமா யாராவது அவருக்கு பிடித்த மாதிரி டயலாக் எழுதினா உடனே கூப்பிட்டு பாராட்டிடுவாரு..

இன்றைக்கு என்னடான்னா .. நல்லா இருக்குன்னு சொல்லி ஓரமா எடுத்து வைக்கிறார்.. இதுக்கு அர்த்தம் என்ன..சாருக்கு என்னமோ ஆயிடுச்சு" என்று நினைத்தபடி நகர்ந்தான்.

இங்கே இருக்கைக்கு அருகே செல்வவும் ஆர்வமாக சக்தி கேட்டாள்.

" என்ன சார் படிச்சு பார்த்தாரா அவருக்கு பிடிச்சதா .."

"எனக்கு தெரியாது ".

"தெரியாதா என்ன சொல்றீங்க.. அவர் பார்த்து ஓகே சொன்னாதானே அடுத்த வேலைக்கு போகணும்னு சொன்னிங்க .அவர் பார்க்கவே இல்லையா .ஜஸ்ட் ரெண்டே ரெண்டு பக்கமும் தானே.. அதை கூட படிக்க நேரமில்லையா ."

"அப்பா ஒரு கேள்விக்கு இவ்வளவு தூரம் பேசுவியா நீ ..சார் கொஞ்சம் பிஸியா இருக்குறாரு .

அப்புறமா படிக்கிறதா சொன்னாங்க நல்லா இருந்தா.. நாளைக்கு அப்ரூவல் பண்ணிடுவாங்க ."

"ஓ.. சரி.. இனி நான் கேட்கல.. அப்புறம் சபா சார் .."

"சொல்லு.. இப்பதான் கேக்கலன்னு மறுபடியும் கேட்கற.. "

"சரி இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. மறுபடியும் நான் கேட்க மாட்டேன் ".

"என்ன சொல்லணும் சொல்லு ".

"வந்து ஸ்கிரிப்ட் ஓகே ஆயிடுச்சுன்னா வேண்டாம் என்கிற ரெண்டு ஸ்க்ரிப்ட் நம்ம கிட்ட தருவாங்களா . "

"ஹலோ உன்னோட வேலையே கன்டென் ரைட்டிங் தான் .

கேட்கிறத எழுதி கொடுக்கணும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி.. அதனால அங்க கொடுத்ததெல்லாம் திரும்ப வராது .

உனக்கு வேணும்னா நீ தனியா கம்யூட்டரில் ஏதாவது பக்கத்துல சேவ் பண்ணி வச்சுக்கோ புரிஞ்சுதா" என்று நகர்ந்தான்.

மூன்று டயலாக்குகளையும் படிப்பு பார்த்தவனுக்கு உதட்டில் லேசாக புன்னகை விரிந்தது .

கொஞ்சம் லூஸ் தனமா ஏதாவது செஞ்சாலுமே.. கொஞ்சம் புத்திசாலித்தனமான பொண்ணு தான் போல இருக்கு .டயலாக் ஒவ்வொன்னும் அவ்வளவு அழகா இருக்குது..

இதையே நாளைக்கு கொடுத்துடலாம்" என நினைத்தவன் தனியாக டேபிளில் உள்ளே வைத்து பூட்டினான்.

அவ்வப்போது மாதவனை பார்த்தாலுமே அவன் இவளை ஏறெடுத்து பார்க்கவில்லை என்பது புரிந்தது .

'சரி அவனோட கேர்ள் பிரண்டை காயப்படுத்தி இருக்கிற.. இந்த கோபம் இருக்கத்தானே செய்யும் மனசாட்சி உள்ளிருந்து குரல் கொடுக்க.. கோபமாக அதனை அடக்கினாள்.

என்ன நீ இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிற..

அவதான் அவனோட கேர்ள் பிரண்டா.. அப்போ நான் யாரு !!நான் எதுக்காக இவ்வளவு தூரம் வந்து இருக்கேன்.. இதெல்லாம் தெரிஞ்சும் நீ இந்த கேள்வியை கேட்பியா…'

'பின்ன நான் கேட்காம வேற யார் கேட்பாங்க.. ஏற்கனவே மாதவனை பற்றி உனக்கு நல்லா தெரியும் தானே ..

நல்ல கோபக்காரன்.. எப்பவுமே இறுகிப்போனது மாதிரி தான் உட்கார்ந்து இருப்பான்.

அப்படிப்பட்டவன் கொஞ்சமா அவனோட இறுக்கத்தில் இருந்து இயல்பா பேச வந்தது உன்கிட்ட தான்.

நீயும் அதுக்கு ஏத்த மாதிரி நல்லாவே சிறப்பா செஞ்சு வச்சிருக்கிற ..மறுபடியும் எப்படி பேசுவான்னு எதிர்பார்க்கிற.."

"அதெல்லாம் பேசுவான்..திறமை இருக்கிற இடத்தில எல்லாம் தான் இருக்கும் .

கிறுக்குத்தனமும் இருக்கும் .அதி புத்திசாலித்தனமான காரியங்களும் இருக்கும் .

நிச்சயமாக ஏதாவது ஒரு காரணத்துக்காக என்னை அழைத்து பேசுவார் பாரு என்று சவால் விட்டு விட்டு நகர்ந்தாள்
 

Kavisowmi

Well-known member
12

ஒரு வாரம் வேகமாக சென்றிருந்தது ஒரு முறை தன்னுடைய வீட்டிற்கு சென்று வந்திருந்தாள் சக்தி .

பாட்டியை பார்த்துவிட்டு அப்படியே தன்னுடைய தாய் தந்தை சகோதரிகளை பார்க்க செல்ல, தந்தையோ இவளுடைய முகத்தை கூட ஏறெடுத்து பார்க்கவில்லை.

இவள் உள்ளே நுழையவுமே ஏதோ கோபத்தில் இருப்பவர் போல வெளியேறி இருந்தார் .

தயாரிடம் தான் சென்று கத்திவிட்டு வந்திருந்தாள்." இப்போது என்ன தான் பிரச்சனையாம் அவருக்கு.. பொண்ணுன்னா என்னைக்குமே வீட்லதான் இருக்கணுமா ..

இல்ல இவரோட ஆபீஸை கண்டு பிடிச்சுக்கிட்டு இருக்கணுமா..நான் படிச்சது உங்களுக்கு தெரியும் தானே..

கம்ப்யூட்டர் லைன்ல படிச்சுக்கிட்டு எப்படி போய் அப்பாவோட ஆபீஸ்ல உட்கார முடியும் .

கேக்குறதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா.."

" நீயேன் சக்தி எப்பவுமே அப்பாவுக்கு ஆப்போசிட்டாவே பண்ற ..அவருக்கு வேலைக்கு போகறது பிடிக்கல மத்தபடி உன் மேல அவருக்கு எந்த கோபமும் இல்ல."

" நீங்க என்னமோ சொல்லி சமாளிமா.. எனக்கு அதைப் பற்றி கவலையே இல்லை .நான் கொஞ்ச நாளைக்கு வேலைக்கு போவேன் என்று தான் சொன்னேன்.

நிரந்தரமா போவேன்னு சொல்லவே இல்ல ..கொஞ்ச நாள் தானே ..என்னோட ஆசைக்காக இது கூட செய்ய மாட்டாரா ம்மா " என்று கோபமாக நகர்ந்தாள்.

மறுபடியும் இங்கே ஹாஸ்டலுக்கு வந்த பிறகு நாட்கள் மெல்ல ஊர்ந்து நகர்ந்தது. ஏனென்றால் அதற்கு காரணமாக இருந்தது மாதவன்.

அன்றைய நாளுக்கு பிறகு மாதவன் இது வரையிலும் இவளிடம் பேசவில்லை .அதுவே இவளை கொன்று கொண்டிருந்தது.

"சரியான திமிர் பிடித்தவனா இருக்கிறான் ஏன் பேசினா தான் என்ன?

இவனை யாராவது ஏதாவது சொல்லிடுவாங்களா.. நானும் டயலாக் எழுதி கொடுத்து ஒரு வாரம் ஆச்சு .

இதுவரைக்கும் ஒரு ரெஸ்பான்ஸ் இல்ல நல்லா இருக்கா இல்லையா ஒரு வார்த்தை கூட சொல்லலை..

அடுத்த கன்டென்ட் கிரியேட் பண்ணுங்கன்னு ஹெட் லைன் மட்டும் கொடுத்தாச்சு.

இந்த முறை நான் எதுவும் எழுதப்போவதில்லை .யாரோ எழுதி என்னவோ செய்யட்டும் "என்று கோபமாக மனதிற்குள் நினைத்தவள் வேறு ஏதேதோ வேலையை தான் செய்தாலே தவிர கன்டென்ட் எழுதவில்லை.

கொடுத்த வேலையை செய்யவில்லை ஆனால் அங்கு இருக்கின்ற அனைவருக்கும் எடுபுடி வேலை அழகாகவே செய்து கொண்டிருந்தாள் சக்தி.

அவள் இல்லாத இடமே இல்லை என்னும் அளவிற்கு அவளுடைய பர்பாமென்ஸ் அந்த ஆபீஸில் இருந்தது .

யாராவது ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்று சொன்னால் வாங்கிக் கொண்டு நகர்வாள்.

இன்னொரு பக்கம் பார்த்தால் தரையில் உட்கார்ந்து சில கார்ட்டூன் நிகழ்ச்சிகளுக்கு கலர் எடுத்துக் கொண்டிருப்பாள்.

அடுத்தது போட்டோ ஷூட்டிற்கா.. புதிதாக ஏதாவது ஐடியா கிடைத்தால் அதையும் செய்து கொண்டு இருந்தாள்.

ஆக மொத்தம் எங்கு நோக்கினும் சக்தி என்பது போல ஒரு தோற்றம் அங்கே உருவாகிக் கொண்டிருந்தது.

மாதவன் எப்போது எல்லாம் சக்தியை பார்க்கிறானோ அப்போது எல்லாமே யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள்.

ஒரு நேரம் கையில் கேமராவை வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தால் என்றால் அடுத்த நிமிடம் கையில் மொபைல் ஃபோனோடு வேறு யாரையாவது போட்டோ எடுத்துக் கொண்டிருப்பாள்.
கலகலப்பாக.. அவளைப் பொருத்தவரைக்கும் நாட்கள் நகர்ந்தது .

மாதவன் தன்னிடம் பேசவில்லை என்கின்ற சுணக்கம் மட்டுமே மனதில் இருந்ததே தவிர மற்றபடி அங்கே அவள் மிகவும் ஜாலியாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

இவளையும் சேர்த்து ஐந்து பேர் கன்டென்ட்டிற்காக இருக்க நால்வர் புதிதாக கொடுத்த ப்ராஜெக்டிற்கு எழுதி டயலாக்குகளை கொடுத்து இருந்தனர்.

இவளுடைது மட்டும் வரவில்லை..

"என்ன சபா.. சக்தியோடது தவிர மத்தவங்களோடது இருக்குது .என்ன ஆச்சு அந்த பொண்ணு இன்னும் எழுதலையா.."

"சார் வந்து உங்களுக்கு தான் தெரியுமே.. அந்த பொண்ணு சும்மா எல்லாம் இல்லை.
ஏதாவது வேலை செய்யறா.."

" ஏதாவது வேலை செய்றா.. அது எனக்கு தெரியுது .நான் கேட்ட வேலையை செய்தாளா..

நீங்கள் தானே சொன்னீங்க அந்த பொண்ணு சம்பந்தப்பட்டது எதுவும் என்கிட்ட வரக்கூடாதுன்னு.. அதனாலதான் கண்டன்ட் ரைட்டிங் கொடுத்தை அந்த பொண்ணு எழுதலைன்னு நினைக்கிறேன்.."

"ஏன் எழுதல கேட்டு சொல்லு "

"எப்படி சார் நான் கேட்க முடியும்.. "

என்ன?

" நம்ம எல்லாம் வேலையும் செய்ய சொல்லித்தான் வேலைக்கு சேர்த்து இருக்கிறோம். இந்த வேலை தான் செய்ய சொல்லி அடம் பிடிக்க முடியாது .

வந்த நேரத்தில் இருந்து பம்பரமா சுத்திகிட்டு இருக்கறா..ஒரு நேரம் ஒரு இடத்துல இருக்குறது இல்ல".

" அதுதான் ஏன்னு கேட்டுகிட்டு இருக்கிறேன்.. அந்த பொண்ணுக்கு இன்னமும் அரை மணி நேரம் தான் டைம் ..

அதுக்குள்ள எனக்கு டயலாக்ஸ் எழுதிட்டு என் டேபிளுக்கு கொண்டு வந்து தரணும்னு சொல்லு" என்று சொல்லிவிட்டு வெளியேற.. சபாவிற்கு தான் இப்போது தலை சுற்றுகிறது .

"அந்த பொண்ணு கண்ணு முன்னாடியே வரக்கூடாதுன்னு என்னைதான் கூப்பிட்டு வச்சு பேசினாரு ..

இப்ப என்னடான்னா அந்த பொண்ணு டயலாக் எழுதி தரணும்னு கண்டிஷன் போட்டுட்டு போயிருக்கிறார் .எங்க தான் போய் முடிகிறதுன்னு தெரியல "என்று நகர்ந்தான்.

அங்கே சென்று சக்தியிடம் சொல்ல சக்தியும் அசால்டாக.." எனக்கும் இதுக்கும் சம்பந்தம் எல்லாம் கிடையாது .

நான் வேலை செஞ்சுட்டு தான் இருக்கிறேன்.. சும்மா ஒன்னும் இல்லையே ..நீங்க தானே சொன்னீங்க..

மாதவன் சாருக்கு உன்னை பிடிக்கவில்லை ..முன்னாடி வந்து நிற்க கூடாதுன்னு அப்புறம் எதுக்காக என்னோட டயலாக்ஸ் கேட்கிறாராம்".

"ஏன் சக்தி இப்படி இருக்கிற ..என்ன இருந்தாலும் மாதவன் சார் இந்த கம்பெனியோட எம்டி ..

கேட்டா செஞ்சுதான் ஆகணும் ".

"சார் எனக்கு பிடிக்கலன்னா பிடிக்கல தான் ..எனக்கு எழுதுற மூடு இல்ல ."

"அப்படியா எப்ப அந்த மூடு வரும் இன்னும் அரை மணி நேரத்துல கேட்டிருக்கிறார்.."

"அரை மணி நேரத்துல எல்லாம் என்னால முடியாது சபா சார் ..வேணும்னா சாயங்காலத்துக்குள்ள எழுதி தர ட்ரை பண்றேன் "என்று நகர்ந்தாள்.

பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு சென்றவள் ஏதேதோ யோசிக்க எதுவுமே மனதில் தோன்றவில்லை.

"என்னடா சக்திக்கு வந்த சோதனை அவசரமா ஒரு டயலாக் கேட்டா ஒண்ணுமே தோண மாட்டேங்குது..

பேசாம போய் ஒரு கப் காபி குடிச்சிட்டு வந்துடலாமா.. ஒரு வேளை அதுக்கு பிறகு எழுத தோன்றினாலும் தோணலாம்.."

வேகமாக கேன்டினை நோக்கி சென்றாள்.

காபி கட்டை எடுத்துக்கொண்டு வரும் போது தான் சரியாக எதிரில் மாதவன் வந்தது .

இவளது முகத்தை பார்த்தபடி நேராக இவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் வந்து அமர்ந்தான்.

சக்தியும் கண்டு கொள்ளவில்லை சுற்றிலும் வேடிக்கை பார்ப்பது போல தனக்கு எதிரே இருந்த காபியை பருக ஆரம்பிக்க ..

"நீ நடந்து கொள்வதெல்லாம் பார்க்கும்போது சின்ன குழந்தை மாதிரி இருக்குது தெரியுமா".. மாதவன் பேச்சு கொடுக்க ..பதில் எதுவுமே இவள் இடத்தில் இருந்து வரவில்லை .

"என்ன பேச மாட்டியா.. நீ செஞ்சது தப்பு தானே .."

"அப்படியா நான் செஞ்சது தப்பாகவே இருக்கட்டும் ஆனா அதுக்கு நீங்க நடந்துக்கிட்டது மட்டும் சரியாகிவிடுமா ".

"ஆமாம்.. ஏன் உனக்கு நித்யா மேல அத்தனை கோபம் தெரிஞ்சுக்கலாமா.."

" கோபம்ணு யார் சொன்னாங்க.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை ".

"சும்மா சமாளிக்காத எனக்கு நல்லா தெரியும். ஏதோ ஒரு கோபம் அவ மேல உனக்கு இருக்குது.. என்னன்னு எனக்கு புரியல..

சொல்லு சொன்னாதான் நான் இப்போ இந்த இடத்தை விட்டு உன்னை நகர விடுவேன்..

பதில் சொல்லாமல் நீயும் இங்கே இருந்து போக முடியாது .நானும் இங்க இருந்து நகர்ந்து போக போறது இல்ல.." சட்டமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்க..

" எனக்கெல்லாம் இதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு சொல்லி எழுந்துருச்சு போயிட்டே இருப்பேன்."

" நான் உன்கிட்ட பெருசா எதுவும் கேட்கலையே ..ஏன் அப்படி நடந்துக்கிட்டனு மட்டும் தான கேட்டேன் .

உண்மையான காரணத்தை சொன்னா உடனே என்னை விட்டுடுவீங்களா .."

"கட்டாயமா விட்டுடுவேன் ".

"ஓகே சொல்றேன் கேட்டுக்கோங்க இங்க ஆபீஸ் வந்த நாள்ல இருந்தே நான் உங்களை பார்த்து கிட்டு இருக்கேன்.

மத்தவங்க கிட்ட எப்படி நடந்து கொள்வீர்கள்? குறிப்பா இங்க இருக்கிற பெண்கள் கிட்ட நீங்க எப்படி நடந்துக்கிறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் .

ஆனா நித்யா உங்க கிட்ட அப்படியா நடந்துக்கிட்டா.. அவ நடந்துக்குறதுல நிறைய வித்தியாசம் தெரிஞ்சது .

உங்ககிட்ட நெருக்கமாக இருக்கிறது போல காட்டிக்க நினைச்சா..

உங்களுக்கு விருப்பம் இல்லாமலேயே உங்ககிட்ட நெருங்கி நின்னா அது எனக்கு பிடிக்கல.. அதனாலதான் அப்படி செஞ்சேன்."

" ஆனா நீ பண்ணினது ரொம்ப தப்பு இல்லையா.. ஒருவேளை அந்த பொண்ணுக்கு உயிருக்கு ஆபத்து வர்ற மாதிரி ஏதாவது ஆயிடுச்சின்னா.."

' ஹலோ சும்மா ஒரேடியா சொல்லாதீங்க சார். நானும் படிச்சவ தான். என்ன சாப்பிட்டால் என்ன நடக்கும்னு எனக்கு தெரியும் .

அப்படியெல்லாம் இதுவரைக்கும் அலர்ஜியால உயிர் இழந்ததா இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டது இல்ல அப்படி நடக்க வாய்ப்பு இல்லை .

அது எனக்கு நல்லா தெரியும் அதனால தான் தைரியமா அப்படி செஞ்சேன் .நான் செஞ்சது தப்புதான்.

நான் ஹாஸ்பிடல் வந்து நித்யாவை பார்த்த போதே எனக்கு புரிஞ்சிடுச்சு நான் பண்ணின தப்போட வீரியம் என்னன்னு..

இனிமே இது மாதிரியான பைத்தியக்காரத்தனம் எப்பவும் செய்ய மாட்டேன் .ஆனால் நீங்கள் என்னிடம் நடந்து கொண்டது ரொம்ப ரொம்ப அதிகம்.

உங்களுக்கு நித்யா மேடமை அத்தனை பிடிக்குமா என்ன ?"

"பிடிக்கும் பிடிக்காது எல்லாம் வேற விஷயம் ஆனா ஒரு பொண்ணு இந்த அளவுக்கு முடியாம படுக்க வைக்கிறது தப்புதானே..

அந்த கோபத்தில் தான் உன்ன திட்டினேன்".

" சரி அது போகட்டும் விடுங்க நான் எழுதிக் கொடுத்த டயலாக் பத்தி இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட சொல்லல .

பொதுவா ஒரு சின்ன விஷயம் நல்லாதா நடந்தா கூட அவங்கள உடனே அழைத்து பாராட்டுவீங்களாம்..

இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல .இதுக்கு என்ன அர்த்தம் .அப்போ என் மேல உங்களுக்கு கோபம் என்று தானே அர்த்தம் ".

"கோபமா இருந்தால் வேலையை விட்டு அந்த நிமிஷமே தூக்கி இருப்பேன். என்னை தடுக்க இங்கே யாரும் கிடையாது.

நான் எடுக்கறது தான் கடைசி டிஸிசன் ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் உன்னை நான் வேலையை விட்டு நிறுத்தலை.. அப்போ நீயே புரிந்து கொள்ள வேண்டாமா .

உன்னோட டயலாக் பிடிக்காமலா அதையே சூட்டிங் எடுத்து கொடுத்து இருப்பேன் .

அது உனக்கு தெரியும் தானே பிறகு ஏன் இந்த மாதிரியான ஒரு கேள்வி உன்கிட்ட இருந்து வருது."

"நான் இந்த டயலாக்ஸ் ரொம்ப யோசிச்சு எழுதினேன் தெரியுமா.. அத்தனை ஆர்வமா எழுதினேன். நிச்சயமா நீங்க பார்த்துட்டு உங்க முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு வரும் அப்படி எல்லாம் எதிர்பார்த்தேன்".

" சிரிக்கலைன்னு யார் சொன்னாங்க ..அதெல்லாம் சிரிக்க தான் செஞ்சேன்".

" அதையும் இந்த மூஞ்ச வெச்சுட்டு தான் சொல்லுவீங்களா "என்று கேட்க சட்டென்று சிரிப்பு அவனை தொற்றிக் கொண்டது

" நிறைய சின்ன புள்ளத்தனமான காரியங்கள் எல்லாம் பண்ற.. ஆமா எதுக்காக இந்த ஒரு வாரமா ஒரு இடத்தில் உட்காராம அப்படி அத்தனை பேருக்கும் ஓடி ஓடி வேலை செஞ்சு கொடுக்கிற..

இந்த பழக்கம் ரொம்ப தப்பானது சக்தி .இதை இப்படியே பழகி விட்டேனா ..

நாளைக்கு எந்த வேலை செய்றதா இருந்தாலும் சக்தியை கூப்பிடுங்க அப்படிங்கற மாதிரியான நிலைமை வந்துடும் அது உனக்கு நல்லது இல்ல ..

ஏன்னா நீ எப்பவுமே இப்படியே இருக்க போறது இல்ல .உனக்கு இன்னும் நல்ல பெஸ்டான வேலை கிடைக்கும் போது அதில் கவனம் செலுத்த விடாத அளவுக்கு இவங்க படுத்துவாங்க புரிஞ்சுதா..

நீ ஃப்ரீயா இருக்கிறேன்னா செஞ்சு கொடுக்கலாம். மத்தபடி உன்னோட வேலையை விட்டுட்டு போய் செஞ்சு தர வேண்டிய அவசியம் இல்ல ."

"ஓகே புரியுது எனக்கு இனி அப்படி செய்ய மாட்டேன் ".

"சரி நான் கொடுத்த இந்த வாரம் டாஸ்க்.. எப்ப முடிச்சு கொண்டு வந்து தருவ.."

" சார் இது டூ மச் நான் தான் இந்த வேலையை செய்ற ஐடியாவில் இல்லையே .."

"உதை வாங்குவ சம்பளம் கொடுக்கிறது நானு ..எனக்கு உன்னோட டயலாக் வேணும் புரிஞ்சுதா .

நாலு பேரும் என்கிட்ட சப்மிட் பண்ணியாச்சு. நீ மட்டும் தான் பேலன்ஸ் ..இதுவரைக்கும் எதுவும் எழுதாமல் சுத்திக்கிட்டு இருக்குற..

ஏதாவது எழுதிக்கிட்டு இருப்பேன்னு வந்து பார்த்தால் ..நேரா இங்க காபி ஆத்திக்கிட்டு வந்து உட்கார்ந்து இருக்கற"..

"ஆக என்ன நீங்க வேவு பாக்குறீங்க அப்படித்தானே.."

" அப்படி இல்ல சக்தி செய்கிற வேலையில கான்சிட்டேஷன் முக்கியம் புரிஞ்சுதா ..அது தான் உன்னை உயர்த்தும்."

"ஓகே சார் நான் கிளம்புறேன் உங்களுக்கு என்ன.. டயலாக்ஸ் வேணும் அவ்வளவு தானே..

இன்னும் ஒரு மணி நேரத்துல உங்க டேபிளில் இருக்கும் நீங்க எதிர்பார்த்ததை விடவும் பெஸ்ட்டா போதுமா "என்று புன்னகையோடு நகர்ந்து செல்ல ,"வித்தியாசமான பொண்ணு இவ ..இவகிட்ட தட்டி கொடுத்து வேலை வாங்குனா இருக்குறதிலேயே பெஸ்ட்டா செஞ்சு தருவா.. அந்த நம்பிக்கை நிறைய இருக்குது" சொல்லியபடி எழுந்து நகர்ந்தான்
 

Kavisowmi

Well-known member
13

"மணி என்ன ஆகுது சக்தி நீ என்ன வீட்டுக்கு போகலையா .."

"சார் ஒரு சின்ன வேலை கொடுத்தாங்க .இன்னமுமே எழுதலை.. அதனாலதான் இங்கே உட்கார்ந்து இருக்கிறேன்".

" சரிதான் நீ வேலை முடியாமல் போக மாட்ட.. அது தெரியுது ஆனால் நீ ஹாஸ்டலுக்கு போற வண்டி நிக்கணுமே ..

ஏற்கனவே ஏதோ பொதுக்கூட்டம் போடுறாங்களாம் .எல்லா ஏரியாவுலேயும் ரூட்டை மாத்தி விட்டு கிட்டு இருக்காங்க .

நீ இங்க இருந்தா பஸ் கிடைக்க வாய்ப்பு இல்லை. எப்படியும் ரெண்டு கிலோ மீட்டர் நடக்கணும் புரிஞ்சுதா.. முதலில் எழுந்திரு.. நாளைக்கு காலையில கூட வந்து வேலையை செஞ்சுக்கலாம்.."

"என்ன இப்படி சொல்ற சபா..என்ன பயம் காட்டுறியா ".

" நான் எதுக்காக உன்னை பயப்படுத்த போறேன். பிரச்சனை இப்படித்தான் போய்க்கிட்டு இருக்கு. சரி எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்"..

ஜான்வியும் ஏற்கனவே புறப்பட்டு இருக்க மிச்சம் இருந்தது இவளும் சபாவும் தான்.

குரு இன்னும் ஏதோ வேலையை அவனுடைய ஆபீஸ் அறையிலிருந்து செய்து கொண்டிருந்தான்.

இவள் வேகவேகமாக கீபோர்டை தட்டிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் ஒரு ஐடியா கிடைக்க அதை அப்படியே டயலாக்குகளாக தட்டிக் கொண்டிருந்தாள்.

முகத்தில் லேசாக புன்னகை உற்பத்தியாகி இருக்க.. எதற்காகவோ வேகமாக ஆபிஸருக்குள் வந்தவன் இங்கே இவளை பார்க்கவும் நெற்றியை சுருக்கியபடி இவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.

மாதவன் அருகே வந்து அமர்ந்தது இவளுக்கு துளி கூட தெரியவில்லை..

சபா இவனை பார்த்து "சார் "என்று எழுந்து நிற்க .."உட்காரு "என்பது போல கையால் செய்கை காட்டியவன் சக்தியைத்தான் கவனிக்க ஆரம்பித்தான்.

சரியாக அரை மணி நேரம் முடியும் வரயிலுமே நிமிர்ந்து பார்க்கவில்லை .

தாளம் போட்டது போல வேகமாக கீபோர்ட்டை தட்ங வேலை செய்து கொண்டிருக்க.. உதட்டில் புன்னகை உரைந்த படி கம்ப்யூட்டரையே பார்த்தபடி தட்டிக் கொண்டிருந்தாள் சக்தி .

இவனுக்குமே சற்று நேரம் அமரவும் சிரிப்பு உதட்டில் தொற்றி இருந்தது.

மெல்ல எழுந்து நகர்ந்தவன் அங்கே இருப்பவர்கள் மொத்த பேருக்கும் காஃபியை கிளாஸில் ஊற்றி எடுத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

" என்ன சார் நீங்க எல்லாம் இதை எடுத்துட்டு வரீங்க.. சொல்லி இருந்தா நானே கொண்டு வந்து கொடுத்து இருப்பேன்".

" சபா எதுவும் பேசாதே" என்பது போல கையை ஆட்டியவன்.." ஒரு டம்ளரை எடுத்துக்கோ" என்று சொல்லிவிட்டு சக்திக்கு அருகிலிருந்த இருக்கையில் மறுபடியும் அமர்ந்தான்.

சக்தி மறுபடியும் ஒருமுறை லேசாக படித்துப் பார்த்தவள் புன்னகையோடு அதை ஒரு போல்டர் போட்டு பத்திரப்படுத்தியவள் நிமிர்ந்து பார்க்க.. பார்த்தது மாதவனின் முகத்தைத்தான்.

சிறு புன்னகையோடு காபி டம்ளரை எடுத்து இவளுக்கு எதிராக நீட்டிக் கொண்டிருந்தான்.

" என்ன சார் இது நீங்க எப்ப வந்தீங்க".

" சரிதான் நல்ல கேள்வி.. வேலை செஞ்சா சுத்தி நடக்கிற எல்லாமே மறைந்து போயிடுமா என்ன ?

நான் வந்து சரியா கிட்டத்தட்ட அரை மணி நேரம் தாண்டியாச்சு .நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்குற ..

மணி என்ன ஆகுது பார்த்தியா.. கிட்டத்தட்ட எட்டு மணி .. ஆறு மணிக்கு வீட்டுக்கு போயிடனும் தானே ..

ஏன் இன்னைக்கு இன்னும் போகலை.."

" இந்த வாரத்தில் ஒரு நாலு நாள் கொஞ்சம் சீக்கிரம் வேலை முடிஞ்சிடுச்சு .

ஒரு மணி நேரம் முன்னாடியே வீட்டுக்கு போனேன். அதனால அதை காம்ப்ரேஷன் பண்ற மாதிரி இன்னைக்கு இங்க உக்காந்தாச்சு." என்று பேசியவள் காபியை குடித்தபடியே.." ரொம்ப நன்றி சார் நான் கிளம்புறேன். நேரம் ஆயிடுச்சு".

" சரி தான் ஏற்கனவே எந்த வண்டியுமே போக முடியாது. டிராபிக் அந்த அளவுக்கு ரஷ்சா இருக்கு இதுல நீ போவியா.."

" பஸ் கிடைக்காட்டி பரவாயில்ல சார் ஏதாவது கேப்ஸ் புடிச்சு நான் கிளம்பி போய்டுவேன் ."

"அந்த அளவுக்கு நீ பெரிய ஆளா என்ன ? ஆமாம் உன்னோட அப்பா என்ன செய்கிறார் ."விளையாட்டு போல கேட்டிருக்க அதிர்ச்சியோடு அவனது முகத்தைப் பார்த்தாள்.

" என்ன இவ்வளவு ஷாக் ஆகற.. ஏதாவது தப்பா கேட்டுட்டேனா".

" இல்ல தப்பெல்லாம் சொல்ல முடியாது ..அப்பா ஊர்ல வேலை செய்றாங்க ".

"அதுதான் என்ன வேலைன்னு கேட்டேன் ."

"வந்து.. விவசாயம் "என்று திணறியப்படியே சொல்ல..

" இதை சொல்ல ஏன் இவ்வளவு கஷ்டப்படற ..அதுவும் ஒரு வேலை தானே" என்று எழுந்தவன்" சரி என் பின்னாடி வரலாம்ல ..உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல தானே உன்னோட ஹாஸ்டல் பக்கத்துல இறக்கி விட்டுட்டு நான் வீட்டுக்கு போறேன்.

குரு என்ன நீயும் கிளம்பலையா.. போகலாம் இல்ல "என்று கேட்க "இதோ வர்றேன்" என்றப்படியே எழுந்து வந்தான்.

"சபா போதும் நாளைக்கு வந்து பார்க்கலாம்."

" ஓகே சார் ஏதோ கிளம்பிட்டேன்.. ஓகே ஆஃபீஸ பூட்டிட்டு கிளம்பிக்க காலையில வந்து பார்க்கலாம் "என்று வேகமாக குருவையும் சக்தியையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்..

"வேலை செய்ய வேண்டியது தான் சக்தி.. இவ்வளவு சின்சியரா யார் வேலை செய்ய சொன்னாங்க" கேட்டப்படியே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க ..குரு குரல் கொடுத்தான் .

"இந்த சக்தி பொண்ணு இப்படித்தான்.. வேலைன்னு ஆரம்பிச்சா நிற்கவே மாட்டா..ஓடிட்டே இருப்பா..

அதே நேரத்தில் ஓபி அடிக்கணும்னா இவளை விடவும் திறமையான ஆள ஆபீஸ்ல பார்க்கவே முடியாது ."

"என்ன குரு சார் என்னை பாராட்டுறீங்களா ..இல்ல போட்டு கொடுக்குறீங்களா? ஒரு வழியா இப்பதான் கொஞ்சம் நார்மலா பேச ஆரம்பிச்சிருக்கிறாங்க .நீங்களே துவங்கி வைப்பீங்க போல இருக்கே.."

"அடடா உண்மையை தான சொன்னேன்.. பொய் எதுவும் சொல்லலையே.. ஆனா உண்மையில் சக்தி ரொம்ப திறமைசாலி ..

அவளோட சர்டிபிகேட் எல்லாம் அன்னைக்கு பார்க்கும் போது புரிஞ்சுகிட்டேன் ".

"சரிடா நான் எதுவும் கேட்கல ..சக்தி எந்த இடத்துக்கு போகணும் சொல்லுங்க "என்று கேட்க அதே நேரத்தில் சக்தியின் மொபைலிற்கு அழைப்பு வந்து கொண்டிருந்தது.

வேகமாக போனை எடுத்து பார்த்தாள்.. பாட்டியின் நம்பரை பார்க்கவும் புன்னகை தொற்றிக் கொண்டது .

"ஹலோ பாட்டி எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ..ரெண்டு நாள் என் கூட வந்து தங்கிட்டு போறீங்களா? "

"ரெண்டு நாள் தங்கறதா இங்க உன்னோட அப்பா சரியான கூத்து பண்ணிக்கிட்டு இருக்கறான்.

நீ அங்க வேலை செய்யற இல்லையா ..அதுக்கு பக்கத்துலயே ஒரு வீடு உனக்காக வாங்கி தர்றானாம்..

இனி அங்கதான் தங்கணுமாம்.. வாடகைக்கெல்லாம் என் பொண்ணு போய் தங்கக்கூடாதுன்னு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிறான்."

" அதனால் என்ன பாட்டி வாங்கி கொடுத்தா சந்தோஷம் தான் .அங்க வேற எதுவும் பிரச்சினை இல்லையே.."

"அப்படியா சொல்ற.. அப்படின்னா உன் அப்பா கிட்ட சொல்லிடவா.. அந்த வீடு வேணும்னா வாங்க சொல்லி.."

" தாராளமா சொல்லிக்கோங்க பாட்டி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. அவர் வாங்குவதால.. அவர் சேர்த்து வைக்கிற சொத்து கூட இன்னொரு சொத்தா போய் சேரும் அவ்ளோதான் வேற என்ன.."

"சரிடி இப்பதான் நிம்மதியாச்சு .எங்க நீ வேண்டான்னு சொல்லி மறுபடியும் பெரிய சண்டை போடுவீங்களோன்னு பயந்துகிட்டு இருந்தேன்".

" பாட்டி எல்லா விஷயத்துக்கும் சண்டை போட்டா அது சரி வராது பாட்டி."

"சரி நான் ஃபோனை வச்சுடவா.. எங்க இருக்கிற ..ஹாஸ்டல் ரூமுக்கு வந்தாச்சா சாப்டாச்சா.."

"பாட்டி இன்னமும் வீட்டுக்கு போகலை.. இப்பதான் ஆபீஸ்ல இருந்து கிளம்பி வந்துகிட்டே இருக்கேன்.

மாதவன் சார் தான் என்ன கூப்பிட்டுட்டு வராங்க.."

" என்னடி என்ன நடக்குது ..கடைசில நீ சொன்ன மாதிரி தான் நடக்கும் போல இருக்கு."

"போதும் பாட்டி.. இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசாதீங்க .நான் ஃபோனை வைக்கிறேன் .

வீட்டுக்கு போன பிறகு உங்களை கூப்பிட்டு பேசுறேன் சரியா" என்று போனை வைத்தாள்.

இங்கே இவளுடைய பேச்சை கவனித்தவன்.." யார் சக்தி பாட்டியா.. உங்களுக்கு பாட்டி எல்லாம் இருக்கிறார்களா என்ன".

" சார் என்னோட பாட்டி தான் என்ன வளர்த்தாங்க ..இங்க வேலைக்கு வரும்போதும் கூட அனுப்பி வச்சது பாட்டி தான்.."

"ஓ நீங்க பாட்டியோட பெட்டா எங்களுக்கெல்லாம் அந்த அதிர்ஷ்டம் இல்ல சக்தி.

அப்பா மட்டும்தான் அவரும் கூட இப்போ நடக்க முடியாம இருக்கிறார்".

" சார் எல்லாமே ஒரு நாள் சரியாகிவிடும் .நல்லதை மட்டுமே நம்ம யோசிப்போம்."

" அது எப்படி சக்தி யார்கிட்ட என்ன பேசினாலுமே அவங்களுக்கு ஏத்த மாதிரி அழகா பேசுறீங்க .

அதுவும் பாசிட்டிவா.. உங்க வாயிலிருந்து நெகட்டிவா எதுவும் வந்த மாதிரியே தெரியல .."

"சார் இருக்கிற வரைக்கும் எல்லார்கிட்டயுமே அன்பா பாசிட்டிவா பேசறதுல என்ன குறைஞ்சிட போகுது .

எல்லாருமே என்ன எதிர்பார்க்கிறார்கள்.. காசு பணத்தையோ வேற எதையுமே கிடையாது .

நல்ல அன்பான வார்த்தை.. என்கரேஜ் பண்றது மாதிரி வார்த்தைகள் ..இதுதானே எதிர்பார்க்கிறார்கள் .

அந்த மாதிரி சின்னதா ஒரு வார்த்தைகள் கொடுத்தால் போதும் அவங்களால பெரிய பெரிய சாதனைகளை செய்ய முடியும் .

இது என் பாட்டி அடிக்கடி சொல்ற விஷயம் .நானும் எப்பவுமே அப்படித்தான்..

எப்பவுமே நெகட்டிவா யோசிக்க மாட்டேன்.. ஒன்லி பாஸிடிவ் மட்டும் தான். என்னோட வெற்றிக்கு கூட அதுதான் காரணம்.."

" என்னவோ பெரிய பிசினஸ் வுமன் பேட்டி கொடுக்கிற மாதிரி கொடுத்துக்கிட்டு இருக்குற .."குரு சொல்லி சிரிக்க.." ஏன் சார் அது கூட ஒரு நாள் நடக்கலாம் .அப்படி நடக்கும் போது இப்ப விடவும் இன்னமும் சந்தோஷப்படுவீங்க".என்று சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள் .

"ஏன் குரு அவளை டென்ஷன் பண்ற.. சக்தி அவன் சொன்னத மனசுக்குள்ள வச்சுக்காதீங்க.. விட்டுடுங்க.. அவன் விளையாட்டுக்கு அப்படித்தான் பேசுவான் .

நானும் பல டைம் சொல்லிட்டேன்.. ஏதாவது ஒன்னு இப்படித்தான் பேசி நம்மோட மூடை ஸ்பாயில் பண்ணுவான்".

" ஐயோ எனக்கு எந்த கோபமும் இல்ல சார் ஜஸ்ட் சொன்னேன்..

பாருங்க அடுத்த ரோட்டில் தான் என்னோட ஹாஸ்டல் இருக்குது. நீங்க இங்கே வண்டிய நிறுத்துனீங்கன்னா நானே போவேன் ."

"என்ன ஆச்சு ஹாஸ்டல் வாசல் வரைக்கும் வரக்கூடாதா ".

"அப்படி இல்ல சார் தாராளமா வரலாம். அந்த ரோடு கொஞ்சம் குருகலா இருக்
கும்.. அதுக்காக சொன்னேன் ".

ஓகே..

" பை சார் நாளைக்கு பார்க்கலாம்" என்று வண்டியை நிறுத்திய உடன் இறங்கியவள் மகிழ்ச்சியாக தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள்.
 

Kavisowmi

Well-known member
14

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை எல்லோருமே மகிழ்ச்சியாக வந்து அவரவர் இடத்தில் அமர்ந்திருந்தனர்.

கிட்டத்தட்ட 25 ஊழியர்கள் அங்கே குழுமி இருக்க.. ஆளாளுக்கு பேசிக் கொண்டு இருக்க கலவையான சத்தம் அங்கே கேட்டது .

இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.. சக்தி சுற்றிலும் பார்த்தவள் ஜான்வி எங்கே இருக்கிறாள் என தேடிக்கொண்டிருந்தாள்.

சற்று தொலைவில் பேசிக் கொண்டிருக்க ..அவள் இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள்.

" ஹலோ குட் மார்னிங் ..ஜான்வி இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற ..நான் உன்னை தான் தேடிக்கிட்டு வரேன்.."

" என்ன விஷயம் சொல்லு சக்தி".

" என்ன எல்லாரும் அங்கங்க கூட்டம் கூட்டமா நின்னு பேசிகிட்டு இருக்காங்க ..எனக்கு ஒண்ணுமே புரியல.. ஏதாவது விசேஷமா என்ன.."

"உனக்கு தெரியாதா இந்த வருஷத்தோட சிறந்த சாதனையாளர் விருது நம்ம மாதவன் சாருக்கு கிடைச்சிருக்குது.

சோ அத செலிபிரேட் பண்ணலாம்னு பேசிகிட்டு இருக்கிறோம் ".

"செலிப்ரேட்டா எப்படி ? ஏதாவது கேக் வெட்டி கொண்டாட போறீங்களா.."

" என்ன சின்ன குழந்தை மாதிரியே யோசிக்கிற சக்தி. கொஞ்சம் வளர்ந்த மாதிரி யோசிச்சு சொல்லு".

" குரு சார் இதெல்லாம் டூ மச் இப்படி எல்லாம் பேசக்கூடாது .

அப்படி பார்க்க போனா நீங்க மட்டும் என்னவாம்.. ரொம்ப பெரியவரா என்ன.. உங்களுக்கும் எனக்கும் ஒரே வயசு தானே இருக்கும்.."

"ஹலோ இப்போ உனக்கு என்ன தெரியணும் ..என்னோட டேட் ஆப் பர்த்தா ..

உன்னை விடவும் நான் நாலு வருஷம் பெரியவன் . அது ஞாபகம் இருக்கட்டும் ..இந்த ஆபீஸ்லயே இருக்கிறதிலேயே சின்ன பொண்ணு நீ தான் புரிஞ்சுதா..

பொதுவா எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவங்களை ஆபீஸ்க்குள்ள வேலைக்கு எடுத்ததே கிடையாது.

அப்படி மொத மொதல்ல ஒண்ணுமே தெரியாமல் எடுத்தது உன்னை மட்டும்தான்..

அதுவும் பிடிவாதமா நான் தான் உன்னை வேலைக்கு எடுத்தேன் அதனால அதை மறந்துடாம பேசிப் பழகு ..புரிஞ்சுதா.."

" என்ன சார் என்ன.. என்னை மிரட்டி பாக்குறீங்களா.. நான் இந்த ஆபீஸ்ல வேலை செய்யாம சுத்திக்கிட்டு இருக்கிறேனா..

இருக்கிற அத்தனை பேருகிட்டயும் கேட்டு பாருங்க .யார் யாருக்கு என்ன வேலை செய்யணுமோ அத்தனை வேலையும் பர்பெக்டா செஞ்சு கொடுத்திருக்கிறேன் ."

"கரெக்ட் சக்தி எல்லாருக்கும் வேலை செஞ்சு கொடுக்கிற இல்லன்னு சொல்லல ..ஆனா அதுல உன்னோட வேலை என்ன? அதை சொல்லு.."

" என்னோட வேலை என்னன்னா.. இந்த கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லணும் ."

"உனக்கென்று ஒரு வேலை தந்திருப்பாங்க இல்லையா.. அது என்ன வேலை .அதை சொல்லு.."

" அது வந்து" என்று யோசித்தவள் "குரு சார் என்ன விளையாடுறீங்களா ..அப்ப என்னை எடுப்பிடியா தான் இத்தனை நாளா இங்கே வச்சுக்கிட்டு இருக்கீங்களா".

" அப்பா இப்பவாவது உன்னோட இடம் எது என்று உனக்கு புரிஞ்சுதா எடுபிடியாக தான் இப்போதைக்கு நீ இங்க இருக்கிற.."

"வேணும்னே சீட்டிங் பண்றீங்க சார் இது கொஞ்சம் கூட சரி கிடையாது. நான் இப்படி எல்லாம் பேசினா நான் அழ ஆரம்பிச்சிடுவேன்".

" என்னடா இங்க சத்தம்" என்று கேட்டபடியே மாதவன் அங்கே வர அப்போதுதான் ஆபீசையே சுற்றிப் பார்த்தவன்." என்ன ஆச்சு ஏன் எல்லாம் ஒரு மாதிரியா அங்கங்க கூட்டம் கூட்டமா நின்னு பேசிகிட்டு இருக்கீங்க .என்னடா பிரச்சனை இங்க "என்று கேட்க ..

"அது ஒன்னும் இல்லன்னா சும்மா தான் பேசிக்கிட்டு இருந்தோம்.. அண்ணா உங்களுக்கு சாதனையாளர் விருது கிடைச்சிருக்குது.

அதனால இன்னைக்கு எல்லாரையும் அவுட்டிங் கூட்டிட்டு போகணுமாம்..அது சம்பந்தமாக தான் பேசிகிட்டு இருக்காங்க."

" எங்க போக போறோம் "ஆர்வமாக சக்தி கேட்க .. இப்ப தானே சொன்னேன்…. சின்ன புள்ள மாதிரியே நடந்துக்கறேன்னு அப்படியே பண்ற பார்த்தியா.."

" சார் விளையாடாதீங்க சார் எங்க போறோம் அதை சொல்லுங்க.."

"என்னடா இது எங்க வெளியே கிளம்பனும். எல்லாரும் கிளம்பி போயிட்டா ஆபீஸ் வேலையை செய்யறது யாரு ."

"இன்றைக்கு ஒரு நாளைக்கு எல்லாருக்கும் லீவு வேணும்னா.. ஆல்ரெடி ஷூட்டிங் எடுக்கறோம் இல்லையா ."

அருகே இருந்த மலைப்பகுதியின் பெயரை சொன்னவன் "அங்கு எல்லாத்தையும் கூப்பிட்டு போயிடலாம்.. மத்தியானம் டின்னர் அப்புறமா சாயங்காலமா காபி டிபன் சொல்லி கலகலப்பா நேரத்தை செலவு பண்ணிட்டு வரலாம்.

அப்படியே நம்மளோட ஷூட்டிங் முடிச்சுட்டு வந்துடலாம் நம்ம ஷூட்டிங் வேலை செய்வதற்கு வெளியிலிருந்து யாரையும் அழைச்சிட்டு போக வேண்டாம்.

நம்ம ஆபீஸ்ல இருக்குறவங்களை மட்டும் கூப்பிட்டு போனா போதும்.. கேமரா மேன் மட்டும் வருவாங்க.. பிளான் எல்லாம் போட்டாச்சு."

" நீ இருக்கிறியே குரு உன்னை வச்சுட்டு என்னதான் செய்யறதோ
தெரியல .சரி என்னமோ செய்யுங்க".

" என்ன ணா என்னவோ செய்யுங்கன்னு நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம் .இன்னைக்கு எங்க கூட நீயும் வர்ற…

மதியம் எப்பவும் நீ செய்வீயே மீன் பொரியல் ..அத நீ தான் செஞ்சு தரணும். சாப்பாடு கொஞ்சம் ஐட்டம் மட்டும்தான் சொல்லி இருக்கிறேன். மிச்சம் சிலதெல்லாம் நீ தான் சமைச்சு தரப்போற.. நாங்க எல்லாம் ஏற்கனவே பிளான் போட்டாச்சு".

" டேய் என்னடா விளையாட்டு.. நிறைய வேலை இருக்குது .நான் இன்னமும் கூட கொஞ்சம் அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்க்க வேண்டியதா இருக்குது ."

" ப்ளீஸ் ணா ..நீங்க கூட எப்பவுமே இப்படியே இறுகிப்போய் ரூம்குள்ளே உட்கார்ந்து இருப்பியாம்.

உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும் தானே.. எங்க பின்னாடி வா இன்றைக்கு ஒரு நாள் மட்டும் ..

ஏனென்றால் எல்லாருமே ரொம்ப ஆர்வமா இருக்காங்க நான் வண்டி கூட கொண்டுவர சொல்லிட்டேன்.

இன்னும் பத்து நிமிஷத்துல எல்லாரும் புறப்பட வேண்டியதுதான்".

" சொன்ன பேச்சு என்னைக்கு நீ கேட்டிருக்கிற ..உனக்கு இதே பொழப்பா போச்சு.

மூணு மாசத்துக்கு ஒருக்கா ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி பக்கத்துல எங்கேயாவது போகணும் உனக்கு.. சரிடா கிளம்பி வரேன்" என்று கூற.. எல்லோருமே புறப்பட்டனர்.

சூட்டிங் ஸ்பாட்டிற்கு மாடல்களும் சரியான நேரத்திற்கு வந்து கொண்டிருக்க.. வேகமாக அந்த வேலை தான் நடந்து கொண்டிருந்தது .

"இரண்டு மணி நேரம்தான் டைம்.. அதுக்குள்ள நம்ம இதை முடிச்சிட்டு நம்மளுடைய பார்ட்டி என்ஜாய் பண்ணுகிறோம்" என்று குரு ஏற்கனவே சொல்லி அழைத்துச் சென்றிருக்க.. அனைவருமே பொறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர் .

சக்தி ஒரு ஓரத்தில் அமர்ந்து இங்கே நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதுவும் கொஞ்ச நேரம் தான் பிறகு போரடிக்க ஆரம்பிக்க மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

கையில் சிறு குச்சி எடுத்தவள் அந்த காட்டு பகுதியில் மழையேறுபவர்கள் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பிக்க ..கடைசி நிமிடத்தில் தான் மாதவன் அவளை பார்த்தது .

'இவ எதுக்கு லூசு மாதிரி காட்டுக்குள்ள போறா'என்று மனதில் சொன்னவன் வேகமாக அவளை பின்தொடர ஆரம்பித்தான்.

மலைகள், காட்டு பூக்கள், செடி கொடிகள் என ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க சக்திக்கு மகிழ்ச்சி ஊற்றெடுக்க ஆரம்பித்தது .

சற்று தூரம் வேகமாக ஓடியவள் தனியாக ஒரு இடத்தில் நின்று குதித்தால்.. சில ஸ்டெப்புகளை போட்டு ஆட்டம் ஆடினாள் பிறகு ஏதோ ஒரு பாடலை மொபைலில் ஓட விட்டு அதற்கேற்றவாறு நடனமாடிக் கொண்டே நடக்க.. பார்த்துக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்த மாதவனிற்கு அத்தனை சிரிப்பு முகத்தில்..

" வழி தெரியாம எங்கேயாவது போய் சிக்கிக்கிட்டு தனியா கத்துக்கிட்டு இருக்க போற பாரு .இன்னைக்கு அதுதான் நடக்க போகுது" என்று சொன்னபடியே அவளை பாலோ செய்து கொண்டிருந்தான்.

ஒரு இடத்தில் கொத்தாக காட்டுப்பூக்கள் பூத்துக் குலுங்க மொத்தத்தையும் பொறுமையாக பறிக்க ஆரம்பித்தாள்.

அங்கே இருந்த சிறு கொடியை எடுத்து பூக்களை அதில் வரிசையாக அடுக்கி கட்ட ஆரம்பித்தவள். கடைசியாக ஒரு கிரீடம் போல தலையில் வைத்துக் கொண்டாள்.

" நான் தான் இந்த காட்டுக்கு எல்லாம் ராணி ..இந்த ராணி சொன்னா எல்லாரும் கேட்கணும்" என்று கையை ஆட்டியபடியே பேச.. அதே நேரத்தில் சரியாக அவளது முன்னாள் 2 குரங்குகள் தொப்பென மரத்திலிருந்து குதித்து நிற்க.. பயத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

" இத பாரு இப்பதான் சொன்னேன் நான் இந்த காட்டோட ராணி ..இப்படி எல்லாம் முன்னாடி குதிச்சு பயமுறுத்தக் கூடாது ஓகே "என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே குரங்குகளுக்கு அருகே ஒரு பாம்பு ஓட..

குரங்கு அதை பார்த்து கத்தியபடி ஓட.. இதை பார்த்த பயந்து கத்திக் கொண்டு வந்த திசையில் ஓட ஆரம்பித்தாள் சக்தி.

பத்து அடி தூரம் பயந்து ஓடியவள் எதிரில் இருந்த பள்ளத்தை கவனிக்கவில்லை.

திரும்பிப் பாம்பு வருகிறதா என பார்த்தபடி ஒரு அடி எடுத்து வைத்தவள் அந்தப் பள்ளத்தில் சரிந்து விழ ஆரம்பித்தாள்.

அதிக ஆழம் எல்லாம் கிடையாது. பத்தடி ஆழம் இருந்தது.. சிறு பள்ளம் அது..

எப்போதோ யானை வழித்தடத்தை மறைப்பதற்காக தோண்டி இருந்த பள்ளம்..

பள்ளத்தில் விழுந்தவள் பயத்தில் கத்த ஆரம்பித்தாள்.." ஹெல்ப்" என்று யாரும் வருவதற்கான எந்த சத்தமும் இல்லை .பயத்தோடு மறுபடியும்…" யாராவது இருக்கிறீர்களா .என்னை வந்து காப்பாத்துங்க ப்ளீஸ் "என்று குரல் கொடுக்க ..அங்கே யாருமே இருக்கவில்லை .

எப்படி ஏறி மேலே வருவது என பார்த்துக் கொண்டிருக்க அப்போதுதான் சரியாக அந்த இடத்திற்கு மாதவன் வந்து சேர்ந்தது.

மேலிருந்து கீழே இவளை பார்க்க இப்போதும் கூட தலையில் வைத்த கிரீடத்தை கையில் வைத்தபடி சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

" என்ன காட்டு ராணி மேடம் ..இங்க என்ன செய்றீங்க.. பள்ளத்துல விழுந்து என ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கிற "என்று குரல் கொடுக்க .."மாதவன் சார் நீங்களா.. தயவுசெய்து என்ன காப்பாத்துங்க ..தவறுதலா இங்கே விழுந்துட்டேன் ."

"சூட்டிங் நடக்கிற இடம் எங்க இருக்குது. நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற.. இப்படித்தான் தனியா சொல்லாம கொள்ளாம வருவியா..

மொத்த பேரும் அங்கே இருக்கிறாங்க ..இதுல யாராவது காணாம போனா கூட அங்க இருக்கிறவங்களுக்கு தெரிய போறது இல்ல .

சாயங்காலம் போகும் போது தான் ஆள் மிஸ்ஸிங்னே கண்டுபிடிக்க முடியும் ".

"சார் எதா இருந்தாலும் சரி என்னை மேல தூக்கி விட்டுட்டு திட்டுங்க ..ஏன்னை நாலு அடி வேணும்னாலும் அடிச்சுக்கோங்க .

நான் வாங்கிக்கிறேன். தப்பு என் பெயரில் தான் ..விளையாட்டு போல வேடிக்கை பார்த்துட்டே வந்துட்டேன்."

"இந்த வாய்க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல ..இங்கேயே நில்லு பக்கத்துல ஏதாவது கயிறு மாதிரி கிடைக்குதான்னு தேடிட்டு வரேன்".

" சார் காட்டுக்குள்ள கயிறு எல்லாம் எப்படி கிடைக்கும்."

"ஆமா கிடைக்காதல்ல நான் நேரா சூட்டிங் ஸ்பாட்டுக்கே போயி ஏதாவது பார்த்து எடுத்துட்டு வரேன் சரியா.."

" என்ன சார் விளையாடுறீங்களா .."

"விளையாடுறேனா.. யாரு நானா.. கிறுக்குத்தனமா ஏதாவது வேலை செஞ்சு வச்சுக்கிட்டு என்னை நீ குறை சொல்றியா..

பத்திரமா பார்த்து இரு ..இங்கே நரி, கரடி எல்லாம் கூட இருக்கிறதா சொல்லுவாங்க . சமயத்தில் புலிக்கூட இங்க வர்றதா சொல்லுவாங்க .."

"என்னது புலியா .."

"ஆமா புலி தான்.. பெருசா எதுவும் செய்யாது .ரொம்ப பசி எடுத்தால் கொஞ்சமே கொஞ்சம் உன்னோட கை கால் சதையிலிருந்து கடிச்சு சாப்பிட்டுட்டு போயிடும்.. பயப்படாத.." என்று சொல்லி நகர..

" ப்ளீஸ் மாதவன் சார் என்னை விட்டுட்டு போகாதீங்க .எனக்கு பயமா இருக்குது .என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க ".

"தனியா தானே இவ்வளவு தூரம் வந்த.. யார்கிட்டயாவது சொன்னியா..

அப்புறமா இப்ப மட்டும் என்ன தனியா விட்டுட்டு போகாதீங்கன்னு.. நான் நீ கிளம்பி போனதை பார்த்து உன் பின்னாடி வந்ததால ஆச்சு இல்லாட்டி தனியா இந்த பள்ளத்துக்குள்ள கத்திக்கிட்டு இருப்ப.."

" சும்மா அதையே சொல்லாதீங்க மேல வர்றக்கு ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சிகிட்டு இருப்பேன் "என்று சொல்ல..

" இப்ப கூட பாரேன் பள்ளத்துல விழுந்துட்டோமே எப்படி மேல வரப்போறோங்குற அந்த எண்ணம் இல்லாமல் பேசிக்கிட்டு இருக்கிற" என்றவன்..

அருகே இருந்த பெரிய கொடியை தன்னுடைய குட்டி கத்தியால் கட் செய்தான் .அதை நேரே உள்ளே தூக்கி போட்டான் .

"இதை புடிச்சிட்டு மேலே வர முடியுமான்னு ட்ரை பண்ணி பாரு.."

" இது.. இது தாங்குமா ".

"ஆமா இவ பெரிய வெயிட் பார்ட்டி பாரு.. இருக்கிறது ஒரு 40 கிலோ இருப்பியா..
அதெல்லாம் தாராளமா தாங்கும் ".

"சும்மா பொய் சொல்லக்கூடாது சார் நான் 55 கிலோவாக்கும் .."

"சரி சரி இருந்துட்டு போ ..யார் வேண்டாம்னா.. மெதுவா மேல ஏறி வர்ற வழியை பாரு.."

" சரி சரி கத்தாதிங்க இதோ "என்று மெல்ல மேலே ஏற ஆரம்பித்தாள்.

சரியாக கிட்டத்தட்ட மேலே ஏறும் நிலையில் கடைசியாக இவனுடைய கையை அவளுக்கு நேராக நீட்டினான்.

" கையை பிடிச்சுட்டு மேல சீக்கிரமா வந்துடு" என்று சொல்ல.. "இதோ சார்" என்று வேகமாக கையை பிடிக்க.. பேலன்ஸ் சரியாக கிடைக்காமல் சக்தியோடு சேர்ந்து மாதவனும் அந்த பள்ளத்தில் சரிய ஆரம்பித்தான்.


முதலில் சக்தி சரிந்து கீழே விழ அவளுக்கு மேலே வந்து சரியாக விழுந்தான் மாதவன்.
 

Kavisowmi

Well-known member
15

மொத்த உடலும் அவள் மேல் விழுந்து கிடக்க கீழே இருந்த சக்திக்கோ ஏதேதோ உணர்வுகள்.

சக்தி அந்த உலகத்திலேயே இல்லை ஏதேதோ கனவுகள் ..ஏதேதோ ஆசைகள்..

ஏற்கனவே மனம் முழுக்க அவனை பிடித்து இங்கே வந்து சேர்ந்திருக்க.. இந்த நெருக்கம் அவளுக்கு வேறு வித உணர்வுகளை தந்தது .

"சார் எழுந்திருங்கள்" என்று மெல்ல குரல் கொடுக்க ..இப்போதுதான் மாதவனுமே தான் இருந்த நிலையை பார்த்தான்.

சட்டென சரிந்து அருகே வானத்தை பார்த்தபடி மல்லாந்து படுத்தவன் "இப்ப சந்தோஷமா.. காப்பாத்த வந்தவனையும் இழுத்து குழிக்குள்ள போட்டாச்சு "என்று சாதாரணமாக பேச ..அதிர்ச்சியாக வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

" என்ன விளையாடுறீங்களா.. நானா உங்களை இழுத்து போட்டேன். கைய பிடிச்சிட்டு மேலே வா என்று சொல்லி கையை நீட்டினீங்க.. கைய பிடிச்சவருக்கு என்னோட இந்த வெயிட்ட கூட தாங்கி தூக்க முடியலை..

நீங்க எல்லாம் ஊருக்குள்ள சிக்ஸ் பேக் வச்சிக்கிறேன்னு சொல்லிட்டு வேற சுத்துறீங்க.."

"கொய்யால பள்ளத்துக்குள்ள இழுத்து போட்டுட்டு வார்த்தையை பார்த்தியா..

நான் சொன்னேனா.. சிக்ஸ் பேக் வச்சிருக்கேன் .நான் ஸ்ட்ரெந்தானவன்.. பலசாலின்னு.. யார்கிட்டயாவது சொன்னனா.."

" அப்ப நீங்க முன்னாடியே சொல்லணும்ல .. அந்த கொடியை மெதுவாதானே பிடிச்சிட்டு ஏறி வந்தேன் .

அப்படியே விட்டிருந்தீங்கன்னா அடுத்த ஸ்டெப் ஏறி நானே மேலே வந்து இருப்பேன் .

இப்ப ரெண்டு பேரும் மொத்தமா விழுந்தாச்சு .இப்ப எப்படி மேல போறது .."

"என்கிட்ட கேட்டா நீயே எதையாவது யோசி .. உன்னை நம்பி வந்ததுக்கு நான் இப்படியே உட்கார வேண்டியதுதான்".

மாதவனுக்கு சக்தியின் சிறுபிள்ளைத்தனமான காரியங்கள் எல்லாமே இன்னமும் சிரிப்பை தான் தந்து கொண்டிருந்தது .

அவனால் எளிதாக மேலே ஏறி சென்றுவிட முடியும்.. அதற்கான வழிமுறைகள் கூட அவனுக்கு தெரிந்திருந்தது .

ஏற்கனவே பலமுறை காடுகளுக்கு சென்று இருக்கிறான். ட்ரெக்கிங் கூட நிறைய முறை செய்திருக்கிறான் அப்படி பார்க்கையில் இது சிறு பள்ளம்..

எவ்வளவு உயரமாக இருந்தாலும் எளிதாக ஏறி சமதளத்தை அடையும் திறமை அவனிடம் இருந்தது. ஆனாலும் சக்தியை சற்று பயப்படுத்தி பார்க்க வேண்டும் என்று தோன்ற..

"சும்மா என்னைய குறை சொல்லக்கூடாது சக்தி .இவ்வளவு தூரம் தனியா வந்தது உன் தப்பு .

அது மட்டும் இல்லாம நேரா குழிக்குள்ள விழுந்தது அடுத்த தப்பு.."

" ஆமா சார் எல்லாம் என் தப்பு தான் குளிக்குள்ள நான் தான் விழுந்தேன். காப்பாத்த வந்த உங்களையும் இழுத்து போட்டேன்.

இப்ப எப்படி மேல போறது அதுக்கு வழியை சொல்லுங்க ".

"யாருக்கு தெரியும் ஆமா இன்னமும் இந்த கிரீடத்த நீ விடலையா" என்று கேட்க .."அழகா இருக்குதுல்ல பாருங்களேன் .எவ்வளவு அழகு .. அழகான பூ இந்த காட்டுல நிறைய இருக்குது .

இது எல்லாம் பார்க்காமல் ரசிக்காதவன் சரியான முட்டாள் தெரியுமா".

" சரிதான்.. ஏன் சொல்ல மாட்ட.. எப்படி இப்படியே இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கிறதா ".

"சார் விளையாடறீங்களா.. நீங்க முதல்ல எந்திரிங்க ..ஹாயா என்னவோ இந்த பள்ளத்தை நீங்கதான் நோண்டின மாதிரி வானத்தைப் பார்த்து படுத்தா என்ன அர்த்தம்.

இதில் இருந்து தப்பிக்கிறது ஏதாவது வழி இருக்குதா பாருங்க ."

"உன்கிட்ட போன் இருக்குதா".

" இருக்குது" என்று வேகமாக பாக்கெட்டில் இருந்து எடுத்துக்காட்ட.." அப்புறம் என்ன யாருக்காவது ஃபோன் பண்ணி இங்கே வர சொல்லு .

இந்த காட்டுக்குள்ள டவர் கிடைக்குமா என்ன?".

" யாருக்கு தெரியும் கிடைச்சாலும் கிடைக்கலாம் .இல்லாட்டியும் இல்ல எனக்கு சொல்ல தெரியல. நீ கூப்பிட்டு பாரு "வேகமாக அழைப்பு விடுத்தவள்..

" யாருக்கு கூப்பிடுறது சபா சாரை கூப்பிடட்டுமா .."

"யாராவது ஒருத்தருக்கு கூப்பிடு யார் நம்பர் இருக்குதோ அவங்க நம்பருக்கு கூப்பிடு." போன் செய்ய யாருமே எடுக்கவில்லை முக்கியமாக டவர் கிடைக்கவில்லை .

ரிங் செல்லவே இல்லை.." பாருங்க டவர் சத்தமா இல்லை .யாருக்குமே கூப்பிட முடியல ..ஆமா உங்க கிட்ட போன் இருக்கா.. நீங்க எப்படியும் வேற நெட்வொர்க் தானே வச்சு இருப்பீங்க .

உங்களோடு எடுக்குதான்னு பார்க்கலாமா .."

"அப்படியா இரு பாக்கலாம்" என்று குருவிற்கு அழைக்க ..சரியாக ரிங்ஸ் சென்று கொண்டிருந்தது .

"போன் ரிங் அடிக்குது சார் ".

"ஆமாமா இது உலக அதிசயமான விஷயம் தான் .இதுக்கு முன்னாடி நீ கேட்டதே இல்லையாக்கும் ".

"சார் விளையாடாதீங்க போன் அட்டென்ட் பண்ணினதும் உடனே எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லிடுங்க ."

"ஆமா இது எந்த இடம் உனக்கு தெரியுமா".

" தெரியலையே.. எந்த பக்கமா வந்தேன்.. வலது பக்கம் நினைக்கிறேன்.."

" வலது பக்கமாக.."

" இல்லை இடது பக்கம்னு நினைக்கிறேன்."

" விளையாட சக்தி ..கரெக்டான இடத்தை சொல்லு ".

"எனக்கு தெரியலையே சார்.."

"சரிதான் தெரியாத்தனமா உன் கூட வந்து மாட்டிக்கிட்டேன்.. "அதற்குள்ளாகவே குரு போனை அட்டென்ட் செய்திருந்தான்.

"என்ன ணா என்ன விஷயம் ..ஏன் கூப்பிட்டு இருக்கீங்க .எங்க இருக்கீங்க .ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வரணுமா ."

"சரியா போச்சு போ நான் இங்கே வலது பக்கம் ரோடு இருந்ததில்லையா .அது வழியா கொஞ்சம் உயரமான இடத்தை பார்க்கலாம் என்று நடந்து வந்தேன்.

இங்க ஒரு பள்ளத்துல விழுந்துட்டேன் வந்து காப்பாத்தணும்".

" மை காட் எந்த இடம் ணா.. சொல்லுங்க நான் இப்பவே கிளம்பி வரேன் .யாரையாவது துணைக்கு அழைச்சிட்டு வரணுமா..

" சபாவை மட்டும் கூப்பிட்டு நீ நேரா இங்க வா .. இல்ல இந்த சக்தி பெண்ணும் இங்கதான் இருக்கிறா.. அதனால ஜான்வியையும் கூட்டிட்டு வா.."

"என்னது சக்தி பொண்ணும் அங்கே இருக்கிறாளா.. என்ன ணா ரெண்டு பேரும் ஜோடியா சுத்தி பார்க்க போனீங்களா .."

"டேய் கிண்டல் பண்ணாம வந்து சேர்ற.. நானே மகா கோபத்தில் இருக்கிறேன்."

"எந்த இடம் கரெக்டா சொல்லுங்க பாக்கலாம் ."

"இடமெல்லாம் தெரியாதுடா ஒரு அரை மணி நேரம் மேல நடந்து வரணும் புரிஞ்சுதா.."

"புரிஞ்சுதுனா ரொம்ப நல்லாவே புரிஞ்சது ..ரொம்ப அழகா வழி சொல்லி இருக்கிற ..கரெக்டா வந்துடுறேன்" என்றவன் ஃபோனை கட் செய்ய..

" என்ன சார் சொன்னாங்க ".

"வருவான்.. இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள.. "

"சரி அதுவரைக்கும் என்ன செய்யறது .."

"நீ உன்ன பத்தி சொல்லு சக்தி ".

"சார் என்னை பத்தி சொல்ல பெருசா எதுவும் இல்ல .உங்கள பத்தி நீங்க சொல்லுங்க .நான் தெரிஞ்சுக்கிறேன் .

"என்னை பத்தி தெரிஞ்சுக்க பெருசா எதுவும் இல்ல .இந்த கம்பெனியை ரன் பண்ணிக்கிட்டு இருக்கேன் தம்பி என்கூட இருக்கிறான் .

அப்பா கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்கிறாங்க அவ்வளவுதான். "

"வேற எதுவுமே இல்லையா ..
ஏன் இவ்ளோ நாளா நீங்க கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க .அது தெரிஞ்சுக்கலாமா".

" ஏன் சம்பந்தம் இல்லாமல் இந்த கேள்வியை கேட்கற.. தோணும் போது கல்யாணம் பண்ணிக்குவேன் இன்னமும் அச்சிவ் பண்றதுக்கு நிறைய இருக்குது.
சரி ஏன் இந்த கேள்வி திடீர்னு.."

" இல்ல ஆபீஸ்ல எல்லாரும் பொதுவா பேசிக்கிறாங்க".

" என்னன்னு .."

அது வந்து..

என்ன சொல்லு.

" இல்ல நாம இந்த டாபிக் வேண்டாம் வேற ஏதாவது பொதுவா பேசலாம் ".

"பொதுவான்னா.. என்ன பேசணும் ".

"நீங்க எங்க படிச்சீங்க அந்த மாதிரி சொல்லுங்களேன் .."

"அதுவும் பெருசா சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை.."

"போங்க சார் நீங்க ரொம்ப போரிங் நான் என்ன கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேங்கறீங்க ..

சரி உங்க லைப்ல நடந்த கலகலப்பான விஷயம் எதையாவது சொல்லுங்களேன். கேட்கிறேன்".

" கலகலப்பா..எதுவும் பெருசா எதுவும் நடக்கலையே எல்லாமே டிராஜெரி தான்."

"சரி அதையாவது சொல்லுங்க கேக்குறேன்.

சின்ன வயசுல இருந்து உங்களுக்கு என்ன பிடிக்கும்.. என்ன பிடிக்காது உங்க லைப்ல மறக்கவே முடியாது நிகழ்ச்சின்னு ஏதாவது இருக்குதா". இந்த கேள்வியை கேட்க ..

ஒரு நிமிடம் முகம் யோசனையோடு சுருங்கியது .பிறகு அடுத்த நொடியே இயல்பாக.." அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. கசப்பான விஷயங்களை ஞாபகம் வச்சுக்க கூடாது என்பதில் நான் ரொம்ப தெளிவா இருக்கிறேன் .

அதை அப்பவே அழிச்சிடனும் மறந்துடனும் அந்த மாதிரி மறந்த விஷயங்களை திரும்ப நான் ஞாபகப்படுத்துவது கிடையாது சக்தி."

சொன்ன வார்த்தைகளில் இருந்து எதை சொல்கிறான் என்பது ஓரளவிற்கு புரிய அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

" நீ எதுக்காக அமைதியாகிட்ட நீ சொல்லு நீ மறக்க முடியாத நிகழ்ச்சி உன்னோட லைஃப்ல ஏதாவது இருக்குதா.."

" இருக்குதே கிட்டத்தட்ட 10 வருஷம் முன்னாடி என் பாட்டி வீட்ல இருக்கும்போது ஒரு நாள் ஒருத்தர பார்த்து…"

"என்ன லவ் ஸ்டோரியா.."

" கிட்டத்தட்ட அதே மாதிரி தான் .அவரை பார்த்தேன் .அவரை எனக்கு ரொம்ப பிடிச்சது அதுக்கு காரணம் நிறைய சொல்லலாம்."

"ரொம்ப அழகோ .."

"அப்போ அழகா இல்லையான்னு தெரியாது ஆனால் ஏனோ அந்த பையனை ரொம்ப ரொம்ப பிடிச்சது.

கல்யாணம்னு ஒன்னு பண்ணினால் அவனை தான் பண்ணனும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன் ".

"சரி அப்புறமா அந்த பையன் என்ன ஆனாற்."

இடையில் நடந்து முடிந்த பத்து வருஷத்துல அவனை ஒரு தடவ கூட நான் பாக்கலை..

அவ்வளவுதான் என்னோட காதல் கதை.. இன்னமும் அவனை தேடிக் கொண்டே இருக்கிறேன்.

அந்த பையனோட அந்த சிரிப்பு கண்ணுல இப்போ நெனச்சாலும் தெரியுது .அந்த ஜொலிப்பு அது இப்பவும் என் கண்ணுக்குள்ளேயே நிக்குது."

"சரி பார்த்து இத்தனை வருஷம் ஆயிடுச்சுன்னு சொல்ற ..ஒருவேளை அந்த பையன் உன்னை மறந்து இருந்தா ..நீ என்ன செய்வ.."

" கட்டாயமாக ஒரு நேரம் என்னை ஞாபகத்துக்கு வரும். ஞாபகம் வரும் போது என்னை தேடி வருவான் எனக்கு நம்பிக்கை நிறைய இருக்குது."

" ஒருவேளை அவனுக்கு வேற கல்யாணம் முடிந்து இருந்ததுன்னா".

" அப்படி எல்லாம் இதுவரைக்கும் கல்யாணம் முடியலை. எனக்கு நல்லா தெரியும். அவனுக்கான பொண்ணு நானா இருந்தேன்னா நிச்சயமா அவன் என்னை தேடி வருவான். எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்குது.."

அதே நேரத்தில் குருவின் சத்தம் எங்கேயோ கேட்க .."குரு சார் வந்துட்டாங்க "என்று வேகமாக எழுந்தவள்.." குரு சார் நாங்க இங்க இருக்கிறோம்" என்று சத்தமிட ஆரம்பித்தாள்.

துள்ளலோடு குதித்து கையை ஆட்டி காட்ட சிறித்தப்படியே எழுந்து நின்றவன் .."சிரிக்க வைக்காத சக்தி இங்கிருந்து நீ கை ஆட்டினா யாருக்கும் தெரியப்போவதில்லை. அவன் சரியா நம்ம இருக்கிற பள்ளத்துக்கு நேரா வருவான்.

உள்ளே எட்டிப் பார்த்தால் மட்டும்தான் நீ கையாட்டறது தெரியும் .அதனால எக்ஸ்ட்ராவா குதிக்காமல் பேசாமல் நில்லு."

"சந்தோசம் என்னைய கிண்டல் பண்ணாம உங்களால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுல்ல "என்று சொன்னவள்.. முகம் திருப்பி அமர்ந்திருக்க போனில் மறுபடியும் அழைத்தான் .

"உன்னோட குரல் கேட்டுச்சு அப்படியே கொஞ்சம் முன்னாடி வந்தேன்னா ..ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்னு நினைக்கிறேன் .

நாங்க விழுந்த இடத்துக்கு பக்கத்துல பெரிய மரம் இருந்தது அப்படியே கொஞ்சம் கிளைகள்.. அந்த கொடி இருக்குது ".

" அது நிறைய இருந்தது அதை அடையாளமா வச்சுட்டு .. அண்ணா இங்க ரோடு எல்லாம் அப்படித்தான் இருக்குது.

நீ என்ன புதுசா தனியா வழி சொல்லிக்கிட்டு இருக்கிற.. கவலைப்படாத..

எப்படியும் பத்து நிமிஷத்துக்குள்ள தேடி கண்டு பிடிச்சுவோம் "என்று சொன்னபடி கட் செய்தான்..
 

Kavisowmi

Well-known member
16

சொன்னது போலவே பத்து நிமிடங்களுக்கு பிறகு குருவின் சத்தம் அருகே கேட்டது.

" இப்ப சத்தம் போடு கேட்கும் ..வந்துடுவான் "என்று சற்று நகர்ந்து கைகளை கட்டியபடி அமர்ந்திருக்க.. "ஏன் சார் நீங்க சத்தம் கொடுக்க மாட்டீங்களா ..நான் தான் கத்துனுமா.."

" இல்ல இத்தனை நேரம் நீ தானே எந்திரிச்சு கையை ஆட்டி ஆட்டி கத்தினே.."

" ப்ளீஸ் விளையாடாதீங்க நீங்க மறுபடியும் போன் பண்ணுங்க ".

"அதெல்லாம் முடியாது நீ சத்தம் போடு "என்று அமர்ந்திருக்க அவனை முறைப்படி.." குரு சார் நாங்க இங்க இருக்கிறோம் "என்று சத்தம் கொடுத்தாள்..

"குரல் கேட்டுச்சு.. இன்னும் ரெண்டு நிமிஷத்துல அந்த இடத்துக்கு வந்துடுவோம் "என்று வந்ததும் குரு பார்க்க.. எழுந்து நின்ற இவளையும் சற்று நகர்ந்து ஏதோ பார்க்கிற்கு வந்து அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்த தோற்றத்தில் மாதவனையும் தான் பார்த்தான்..

"என்ன அண்ணா ..உனக்கு இது பெரிய பள்ளமா ..ஹாயா உட்கார்ந்து எங்களை வேற கூப்பிட்டு இருக்கிற.."

" டேய் என்னால மேல ஏறி வர முடியும் அது தெரியும் ஆனால் இந்த பொண்ணு எப்படி ஏறி வருவா! அதனால தான் கூப்பிட்டேன் .கயிறு எங்க ?"என்று சொல்ல ..இதோ என்று தூக்கி போட.."முதல்ல நீ போ சத்தி.."

"அப்புறமா நீங்க எப்படி வருவீங்க.."

" உனக்கு அடுத்ததா நான் வருவேன் போ" என்று கூறினான்.

இங்கே வரும் போது இருந்த மன நிலையில் தற்போது சக்தி இல்லை .

ஏதோ ஒரு கலவையான மனநிலையோடு இருந்தாள்.

மனதிற்கு அத்தனை நெருக்கமானவன் ..அத்தனை பிடித்தவன் அவனோடு இருக்கின்ற இந்த நிமிடங்களை அவ்வளவு ரசித்தாள்.

தன்னுடைய மனம் போகும் போக்கு தெரியாத அளவிற்கு அவனோடு வம்பு இழுந்து பேசிக் கொண்டிருந்தாள்.

மாதவனுக்கும் கூட இந்த பேச்சு மிகவும் பிடித்திருந்தது.

சுவாரசியமாக நிறையவே பேசி இருந்தான்..

முதலில் சக்தியை மேலே ஏற்றி அனுப்பி வைத்த சில நொடிகளிலேயே இவனும் மேலே ஏறி வந்திருந்தான்.

நிறைய ஆச்சரியம் இவளுக்குள்.. "எப்படி இவ்வளவு ஈஸியா மேலே ஏறி வந்தீங்க ".

"அண்ணாவுக்கு ஆல்ரெடி ட்ரக்கிங் நல்லாவே தெரியும். இதைவிட ஆழமான பகுதியாக இருந்தால் கூட எளிதா மேல ஏறி வந்துடுவாங்க

உனக்காக தான் இத்தனை நேரம் இங்கே உட்கார்ந்து இருக்கிறார்னு நினைக்கிறேன். சரி நேரம் ஆச்சு போகலாமா..

அங்கே ஆல்ரெடி வேலையெல்லாம் முடிஞ்சது ‌பார்ட்டி என்ஜாய் பண்ணிட்டு 5 மணிக்கு கிளம்பிடலாம் .என்று கேட்க ..

இதற்கு மேலும் மாதவனின் அருகாமையில் இருக்க இவளுக்கு என்னவோ போல் இருந்தது .மெல்ல குருவிடம் "நான் வேணும்னா வீட்டுக்கு போயிடட்டுமா.. நாளைக்கு ஆபீஸ் வரேன்.."

" சரிதான் சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் கலகலப்பா பேசி விளையாடிட்டு கிளம்பலாம் .

உனக்கு தெரியாது அண்ணா செமையா மீன் சமைப்பாங்க.. கூட ஸ்பெஷலான டிஷ்யூம் இருக்குது.

.அது எல்லாத்தையும் டேஸ்ட் பார்த்துட்டு அப்புறமா சாயங்காலம் தான் புறப்படணும் .புரிஞ்சுதா அதுக்கு முன்னாடி எங்கயும் போறன்னு சொல்லக்கூடாது.

என்ன ணா நீ இதையெல்லாம் சொல்ல மாட்டியா .இந்த பொண்ணு நல்லா தானே இருந்தா.. இப்ப ஏன் இப்படி சொல்றா.."

" நீ வேற அவளோட ஒட்டு மொத்த கிறுக்குத்தனத்தையும் நேரில் நான் பார்த்தேன்ல அதனால கூச்சப்படறாலோ..என்னவோ .."

"இத பாருங்க..
இந்த மாதிரி எல்லாம் பேச வேண்டாம் .யாருக்கு கூச்சம் எனக்கெல்லாம் அப்படி எல்லாம் எதுவும் கிடையாது.

எனக்கு என்ன தோணுதோ எல்லாத்தையும் செய்வேன்.. வாங்க" என்று முன்னால் நடந்தாள்.

அதன் பிறகு நேரம் மிகவும் கலகலப்பாக நகர்ந்தது .ஆட்டம் பாட்டம் என நேரம் நகர ஜான்வியோடு சென்று சேர்ந்து கொண்டவள் அதன் பிறகு இவர்கள் இருந்து இடத்திற்கு அருகே கூட வரவில்லை .

அவ்வப்போது மாதவன் சக்தியை பார்க்கையில் அவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை சட்டென தோன்றி மறைந்து .

இதை எதையுமே கவனிக்காமல் ஏதோ ஒரு உலகத்தில் இருந்தால் சக்தி .

இன்னமும் கூட அவளுடைய உடையில் மாதவனின் வாசம் ஒட்டி இருந்தது ..

அந்த வாசனையை அவள் உணரும் போதெல்லாம் வேறு ஒரு மனநிலைக்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.

சரிந்து விழ போகிறாள் என்று தெரியவும் அவளை தன் கை வளையத்திற்கு கொண்டு வந்தபடி தான் கீழே சறுக்கி விழுந்தது.

தலையில் அடிபடக்கூடாது என்று கடைசி நிமிடத்தில் கையை அவளது தலையோடு வைத்து தான் இவன் மேலே மொத்தமாக சரிந்தது.

இப்போது அதை நினைக்கையில் ஒரு நிமிடம் உடல் சிலிர்த்து அடங்கியது சக்திக்கு..

அந்த மனநிலையோடு தான் அன்றைக்கு வீட்டிற்குள் சென்றது.

வீட்டிற்கு சென்ற பிறகும் கூட மாதவனையே அவளுடைய மனம் சுற்றிக்கொண்டு இருந்தது..

தூக்கம் என்பது கண்களுக்கு அருகே வருவது போலவே தெரியவில்லை.

கண்களை மூடினாலேயே மாதவனோடு சரிந்து விழுந்த காட்சியே திரும்பத் திரும்ப கண் முன்னால் தோன்றி மறைந்தது.

' ஐயோ சக்தி ஏன் இப்படி இருக்கற.. நீ விடிய விடிய தூங்கப்போவதில்லை .

சந்தோஷமா விழித்திருப்ப.. ஆனா அந்த மரமண்டைக்கு சுத்தமாக எந்த பீலிங்ஸ்சும் இருக்காது .

அவன் பாட்டுக்கு தூங்கிட்டு இருக்க போறான். நீ தான் இங்க தூக்கத்தை கெடுத்துக்கிட்டு இப்படி விட்டதை வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க போற..

அவனுக்கு என்ன இருக்க போகுது.. விளம்பர உலகத்துல அவன் பார்க்காத பொண்ணுங்களா…

இதுல பத்தாததுக்கு இந்த நித்யா வேற கூடவே சுத்திக்கிட்டு இருக்கறா..

அப்படி இருக்கும் போது நம்மளோட ஞாபகம் எங்க வரும்!! தனக்குள் சொல்லிக் கொண்டவள்.. இத பாரு இன்னொரு தடவை கண்டதையும் யோசிச்சுட்டு தூங்காம இருக்க கூடாது .

ஒழுங்கா தூங்குற வழிய பாரு .ஒரு பிப்டி பர்சன்டேஜ் நம்பிக்கை கூட அவன் மேல இல்ல .

என்ன வேணும்னாலும் நடக்கலாம் ஒருவேளை உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லலாம்.. இல்ல உன்னோட அப்பாவை பத்தி தெரிஞ்ச உடனே நீ இங்க இருக்க வேண்டான்னு பிடிவாதமா அனுப்பி கூட வைக்கலாம்.

என்ன வேணும்னாலும் நடக்கும்.. நீயா தேவை இல்லாம ஏதாவது கற்பனையை வளர்த்துக்காத.. தனக்கு தானே சொன்னவள் மெல்ல கண் மூடினாள்.

அதே நேரத்தில் மாதவனும் கூட இவளுடைய உணர்வுகளைப் போலவே தான் கட்டுண்டு கிடந்தான்.

அந்த நேரம் விளையாட்டு போல சிரித்து கலகலப்பாக பேசி நகர்ந்து வந்திருந்தாலுமே .. சக்தியை முகத்திற்கு அருகே அவ்வளவு நெருக்கமாக பார்த்தது திரும்ப திரும்ப கண் முன்னால் வந்து சென்றது.

இத்தனை நாட்கள் கடந்த பிறகு முதல் முறையாக இது அவனுக்கு புது விதமான அனுபவம்..

இது போல ஒரு மன நிலையில் இது வரையிலுமே இருந்தது இல்லை.

அவள் பின்னால் தொடர்ந்த நேரத்திலிருந்து திரும்ப வந்து சேர்ந்த நிமிடம் வரையிலுமே நடந்தது எல்லாம் திரும்பத் திரும்ப கண் முன்னால் வந்து சென்றது.

அவள் சற்றும் யோசிக்காமல் கிரீடத்தை தலையில் வைத்து விட்டு குத்தாட்டம் போட்டது .

ஒரு சிறு குரங்கை பார்த்து பயந்து ஓடி வந்து பள்ளத்தில் விழுந்தது என ஒவ்வொன்றையும் நினைக்கையில் இப்போதும் சிரிப்பு வந்தது .

அவனை அறியாமல் சற்றே சத்தமாகவே சிரித்தான்.

அதே நேரத்தில் அவன் இருந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்து அமர்ந்திருந்த குரு விசித்திரமாக மாதவனை திரும்பி பார்த்தான்.

"என்ன ணா..என்ன ஆச்சு என்றைக்கும் இல்லாம எதையோ நினைச்சு சிரிக்க எல்லாம் செய்யற..

உன் முகத்தில் சிரிப்பை பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு தெரியுமா.."

" அதெல்லாம் ஒன்னும் இல்லடா இந்த சக்தி பொண்ணு இருக்கா இல்ல ..இன்னைக்கு அங்க அவ நடந்துகிட்டதை நினைச்சு பார்த்தா என்னை அறியாமல் சிரிப்பு வருது. சரியான குழந்தை மாதிரி நடந்துக்கராடா.."

" என்ன ணா அந்த பொண்ணு உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குதா.."

" ஹலோ குழந்தை மாதிரி நடந்துக்கறான்னு தான் சொன்னேன் பிடிச்சிருக்குன்னு நான் சொல்லல.."

"சரி சரி நான் எதுவும் கேக்கலை.. எனக்கு வேலை முடிஞ்சிடுச்சு. நான் போய் தூங்க போகலாம்னு இருக்கிறேன் .
நீ என்ன செய்யப் போற…"

" இப்போதைக்கு எனக்கு தூக்கம் வரும் போல தெரியல குரு .கொஞ்ச நேரம் ஆகும்.

ஏதாவது பாட்டு கேட்டுட்டு பொறுமையா தான் எந்திருச்சு போகணும் ."

"சரிதான் என் அண்ணாவுக்கு என்னவோ ஆயிடுச்சு .எப்பவுமே சரியான நேரத்துல போய் தூங்குறவன்..

இன்றைக்கு தூக்கம் வரலன்னு சொல்லிட்டு இருக்கிறான் .சீக்கிரமா அப்பாகிட்ட சொல்லணும்".

" டேய் இப்ப பேசாம போறியா இல்ல எதையாவது எடுத்து அடிக்கவா".

" சும்மா மிரட்டாத நான் இந்த மிரட்டலுக்கு எல்லாம் ஆபீஸ்ல வேலை செய்றவங்க வேணும்னா பயப்படலாம்.

நான் பயப்பட மாட்டேன்.. நான் உன்னோட தம்பியாக்கும் ..அப்படியே மிரட்டினா கூட பயப்படனும்னா.. அது ஆபீஸ்ல மட்டும் தான் .

வீட்டுக்கு வந்த பிறகு எனக்கு உன் மேல துளி கூட பயம் கிடையாது எங்க வந்து அடிச்சு தான் பாரேன் திரும்பி நான் என்ன செய்றன்னு காட்டுறேன்" என்று சொல்ல.." வரவர உனக்கு ரொம்ப குறும்பு அதிகமாயிடுச்சு இரு" என்று குருவை துரத்த ஆரம்பித்தான்.

குருவும் அவ்வளவு எளிதாக தன்னுடைய அண்ணன் கையில் சிக்கிவிடவில்லை.

நன்றாகவே ஆட்டம் காட்டினான். சோபா மீது ஏறி குதித்து.. டைனிங் டேபிளில் தாண்டி என வீர சாகசங்கள் செய்ய.. எதற்கும் விட்டுக் கொடுக்காமல் மாதவன் அவளை தொடர்ந்து துரத்தி கொண்டிருந்தான்.

கடைசியாக குரு மாதவனின் கையில் சிக்கியிருந்தது அவர்களது தோட்டத்தில் இருந்த அந்த ஸ்விம்மிங் ஃபுல் அருகில்..

யோசிக்காமல் அவனை இழுத்து நீரில் தள்ளி விட ..இருவருமே தொப்பென விழுந்தனர்.

"அண்ணா இதெல்லாம் டூ மச் ..நான் இப்போ குளிக்கிறேன்னு சொன்னேனா ..

எதுக்காக என்னை இங்க கொண்டு வந்து தள்ற.. ராத்திரி தூங்குற நேரத்துல இது தேவையா "என்று கேட்டபடியே எழுந்து நிற்க ..கூடவே இவனுமே நீரில் முங்கி எழுந்தவன்.

" பின்ன ஒரேடியா ஓட்டிக்கிட்டு இருந்தா .. அதனாலதான் தண்ணில தள்ளிவிட்டேன் .."

"நீ அடி வாங்க போற.. உண்மையிலேயே உனக்கு என்னமோ ஆயிடுச்சு .

எஏது இந்த முறை அப்பாவை பார்க்கும் போது சொல்லிட்டு வரேன்."

" என்னடா சொல்லுவ .."

"ஆபீஸ்ல ஒரு பொண்ணை.. அண்ணா ரொம்ப டீப்பா கவனிக்கிறாங்கன்னு சொல்லுவேன்".

" பிச்சிடுவேன் இதுவரைக்கும் அந்த பொண்ணை கவனிச்சி எல்லாம் பார்த்ததில்லை ".

"அப்படின்னா இனிமே பார்ப்பேன்னு அர்த்தம் பண்ணிக்கலாமா ".

"குரு மாத்தி மாத்தி பேசக்கூடாது.. பிரச்சினை நிறைய இருக்குது அதை பார்க்கவே நேரம் பத்தலை..

இதுல இன்னொரு பொண்ணை வேற போய் பார்ப்பேனா .."

"அண்ணா உனக்கு என்னதான் பிரச்சனை ஏன் இப்படி இருக்கிற.. ஆபீஸ் தொடங்கின சரி .

அது நல்ல விதமாக ரன் பண்ணிக்கிட்டு இருக்கிற.. வருமானமும் நல்லாவே கிடைக்குது.

யாரையாவது பிடிச்சிருந்தா காத்திருக்க வேண்டாம் .சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ.."

" ஏண்டா உனக்கு என்ன அவசரம்.. நீ ஏதாவது பொண்ணு பார்த்துட்டியா.."

" உடனே இப்படி சொல்ல கூடாது புரிஞ்சுதா .எனக்கு பிடிச்சதுனா இப்படி எல்லாம் காத்துகிட்டு இருக்க மாட்டேன்.

யோசிக்கவே மாட்டேன் அப்பா கிட்ட போய் சொல்லி அடுத்த என்ன செய்யணுமோ அதை செய்வேன்".

" அப்படின்னா.. என்ன ?எனக்கு முன்னாடி நீ தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நினைக்கிறேன் .*

"சோ வாட் அதனால் என்ன!! அப்பா நிச்சயமா மறுப்பு எல்லாம் சொல்ல மாட்டாங்க .

நான் இந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு கை காட்டினா போதும்.. கட்டிக்கோன்னு தான் சொல்லுவாங்க .

ஏன்னா அப்பாவோட குணம் அதுதான் ..கவலைப்படுவது உன்னை பத்தி மட்டும் தான்".

"என்னை பத்தி எதுக்காக டா கவலப்படணும்" கேட்டப்படியே ஸ்விம்மிங் பூலில் இருந்து ஏறி அருகே இருந்த திண்டில் அமர.. அவனுக்கு அருகே ஏறி அமர்ந்தவன்.
" பின்ன கவலைப்படாமல் இருக்க முடியுமா ..

எதுவுமே இல்லாம அவ்வளவு சிரமப்பட்டுகிட்டு இருந்தோம் .மேஜிக் மாதிரி இதோ இந்த ஆபீஸை திறந்த இன்னவரைக்கும் லாபம் மட்டும் தான் வந்துகிட்டு இருக்கு.

நஷ்டம் எதுவும் இல்லை..நம்ம கிட்ட வேலை செய்ற எல்லாருமே அத்தனை ஹேப்பியா இருக்காங்க..

அதுக்கு முழுக்க முழுக்க நீ மட்டும் தான் காரணம் .ஆனா உன்னோட லைஃப் பத்தி யோசிக்க மாட்டேங்குற..

எப்பவுமே ஒரு மாதிரி இறுக்கமாகத்தான் உட்கார்ந்து இருக்கற.."

" அப்படின்னு யார் சொன்னாங்க நானும் கலகலப்பானவன் தான்."

" தெரியும் ணா முன்னாடி நீ எப்படி இருந்தேன்னு எனக்கு நல்லா தெரியும்.

நான் தான் பார்த்திருக்கிறேனே ஆனால் ஏன் இப்போ இப்படி இருக்கிறேன்னு தான் எனக்கு புரியல.

சீக்கிரமாவே மாறனும்னு தான் ஆசை… சீரியஸாவே இந்த பொண்ண பிடிச்சதுனா சொல்லு நான் கல்யாணம் பண்ண அப்பாகிட்ட சொல்றேன் ".

'அடி வாங்க போற ..அந்த பொண்ணுக்கும் எனக்கும் எத்தனை வயசு வித்தியாசம் இருக்கும் உனக்கு தெரியுமா..

டேட் ஆப் பர்த் நேத்து தான் பார்த்தேன் .கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல.."

" அண்ணா பத்து வருஷங்கறது ஒண்ணுமே இல்ல.. எல்லாத்துக்கும் மனசு தான் காரணம்".

" சும்மா எதையோ சொல்லிக்கிட்டு இருக்காத.. அவ குழந்தைத்தனமா பண்ணும் போது என்னை அறியாமல் ரசிச்சேன்..

இல்லன்னு சொல்ல மாட்டேன் அதுக்காக இவ்வளவு டீப்பா நீ யோசிக்க வேண்டாம். எனக்கு குளிருது.. நான் எழுந்து போறேன்" என்று எழுந்து நடக்க..

" எத்தனை நாளைக்கு என்று பார்க்கிறேன்.. நிச்சயமா யாராவது ஒரு பொண்ணு உன்னை இம்ப்ரஸ் பண்ண வரத்தான் போறாங்க.

அது இந்த சத்தியா இல்ல ஏற்கனவே உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்குற நித்யாவா.. இல்ல ரெண்டு பேருமே இல்லாம வேற யாரும்மாவான்னு தெரியாது.

ஆனால் அந்த மேஜிக் சீக்கிரமா நடக்கும் .இது என்னோட சாபம்.. இது கட்டாயமா பலிக்கும் கேட்டுக்கோ" என்று சத்தமிட புன்னகைத்தப்படியே டவளை எடுத்து தலையை துவற்றிய படி நகர்ந்தான் மாதவன்.
 

Kavisowmi

Well-known member
17

அடுத்த நாள் நிறைய மகிழ்ச்சியோடு தான் ஆபீஸிற்கு சக்தி வந்தது .

நேற்றைய நிகழ்வுகள் நிறையவே அவளுடைய மனதை இன்னமும் சுற்றிக் கொண்டிருந்தது .

இரவு சரியாக உறக்கம் இல்லை அதனால் லேசாக கண்கள் கூட சிவப்பேறி இருப்பது போல தோன்ற அதை மறைப்பதற்காகவே இன்னமும் சற்று அதிகமாகவே மேக்கப் செய்து கொண்டு வந்திருந்தாள்.

நேராக தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்த அடுத்த நொடியே மாதவனிடம் இருந்து அழைப்பு வந்தது .

இவள் கதவை லேசாகத் தட்டி விட்டு உள்ளே செல்ல ..சென்ற உடனேயே கைகளை இவள் புறம் நீட்டினான்.

இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை "என்ன.. என்ன வேணும் "என்று கேட்க ..காபி ஏதாவது கேட்கிறானோ என்கின்ற எண்ணம் இவளுக்குள்..

" டயலாக் ஒன்று எழுதி முடிச்சது.. இன்னமுமே என் கைக்கு வரல ..எழுதி முடிச்சாச்சுனா அதை கொடுக்கிறாயா? படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுறேன்.."

"ஓ சாரி ஒரு நிமிஷம் நான் மெயிலுக்கு அனுப்பிடவா ..படிச்சு பாத்துட்டு சொல்லுங்க ".

"ஏன் பிரிண்ட் அவுட் எடுத்து வைக்கலையா ..ஆல்ரெடி அப்படித்தானே கொடுக்கறது வழக்கம் .

அன்றைக்கு என்ன புதுசா .."

"ஓகே சார் இருங்க டூ மினிட்ஸ் எடுத்துட்டு வந்து தரேன் ."

"அப்புறமா இன்னொரு வேலையும் இருக்கு. இங்க வந்த பிறகு தரேன்".

" சரி சரி.. வரேன்" என்று நகர்ந்தாள்.

பொதுவாக பேசுவது போல தோன்றினாலுமே இருவருக்கும் ஏதோ ஒரு சிறு தயக்கம் இருந்தது.

இவள் வெளியேறிய சில நொடிகளிலேயே குரு உள்ளே நுழைந்தவன் மாதவனை பார்த்து சிரிக்க..

" கொன்னுடுவேன் தேவையில்லாம எதுவும் செய்யக்கூடாது புரிஞ்சுதா அந்த பொண்ணு முன்னாடி இந்த மாதிரி சிரிச்சேன்னு வச்சுக்கோயேன் .

யாரு இருக்கிறான்னு பார்க்க மாட்டேன் இங்கயே வச்சு முதுகுல நாலு மொத்து மொத்திடுவேன்".

" ஐயோ.. நான் இல்லப்பா ..நான் வாயைத் திறக்க மாட்டேன் .எனக்கு வேலை இருக்கு நான் என்னோட கேபின்குள்ள போய் உட்கார்ந்து இருக்கிறேன் ."

இப்போதும் செல்லும் போது இவனை பார்த்து சிரிக்க.. கையில் கிடைத்த பேனாவை சரியாக அவனின் மேல் தூக்கி வீசினான் மாதவன் .

குரு சட்டென குனிந்து கொள்ள உள்ளே வந்து கொண்டிருந்த
சக்தியை நோக்கி பேனா பறந்து வர கடைசி நிமிடத்தில் பார்த்தவள் சட்டென கேட்ச் பிடித்துக் கொண்டாள்.

ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.. உள்ளே வந்தவள் மாதவனையும் குருவையும் மாறி மாறி பார்க்க.. "சூப்பர் கேட்ச் சக்தி.. நீ கிரிக்கெட்டில் இருக்க வேண்டிய ஆள் .

இருந்தேன்னு வச்சுக்கோயேன் இந்தியாவுக்கு அழகா கப் ஜெயிச்சு தருவ.."

" சும்மா கிண்டல் பண்ணாதீங்க என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும்.. ஏன் பேனாவை தூக்கி போட்டு விளையாடுறீங்களா..

நல்ல வேலை கரெக்ட்டா கேட்ச் பிடிச்சேன் .ஒருவேளை முகத்தில் எங்கேயாவது பட்டிருந்தா என்ன ஆகறது.."

" பயப்படாதீங்க பெருசா எதும் காயம் ஆகி இருக்காது "என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் குரு .

"இந்தாங்க சார் நீங்க கேட்ட டீடெயில்ஸ்.. வேற என்னமோ சொன்னீங்களே."

" இன்றைக்கு ஒரு கண்டென் எழுதவேண்டும் .அதற்கான ஹெட்லைன் டிடெயில் எழுதி வைத்திருக்கிறேன்.

இதை பார்த்து எழுதிட்டு வரணும் ஓகேவா" என்று வேகமாக எழுதி நீட்ட.. வாங்கி படித்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

" இதுவா..சரி "யோசிக்கப்படியே மாதவனின் முகத்தைப் பார்த்தாள்.

" என்ன இது ..இதுல ஒண்ணுமே இல்லையே. ஏதோ ரெண்டு லைன் கவிதை மாதிரி இருக்குது .

இத வச்சு நான் எப்படி கண்டென் கிரியேட் பண்ண முடியும். ஒரு பக்கத்துக்கு எழுத முடியும்னு சொல்றீங்க ".

'ஏன் எழுத முடியாதா.."

" நீங்களே சரியா படித்து பார்த்து சொல்லுங்க "சென்ற குரு வந்து வாங்கி பார்த்தவன்.. "இதுவா.. எனக்கு ஒன்னும் புரியல .என்ன இது.. கண்களால் கவிதை பேசினால் இவ்வளவுதானா.. இத வச்சு இந்த பொண்ணு என்ன எழுதுவா.."

"கொடுத்த தலைப்புக்கு எழுதணும் இதுதானே டாஸ்க்.. எழுத சொல்லு" என்று எழுந்து நகர போக .."சார் இதெல்லாம் டூ மச் .என்ன வேணும் உங்களுக்கு.. இப்படி கலாய்க்கிறீர்கள்..

இப்படி கவிதை மாதிரி ஒன்றை எழுதி கொடுத்தா ..நான் எப்படி எழுத முடியும் ."

"இதையே இன்னும் மூணு பேர்த்துக்கும் ஜெராக்ஸ் காபி எடுத்துக் கொடு .அவங்களும் எழுதிட்டு வருவாங்க .அப்ப தெரியும் நீ எழுத முடியுமா இல்லையானு" என்று சொல்லிவிட்டு வெளியேறினான் .

"என்ன குரு சார் உங்க அண்ணாவுக்கு என்ன ஆயிடுச்சு ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்.."

"எழுதி கொடுக்க சொல்லி இருக்காங்க ஏதாவது ஒன்னு எழுதி கொடுங்க..

இல்லன்னா மறுபடியும் அண்ணாவை ஒரு டாபிக் கொடுப்பாங்க .

கவலப்படாதீங்க அண்ணாவுக்கு அப்பப்போ இப்படித்தான் ஏதாவது வித்தியாசமா செய்ய தோணும் .

அந்த வித்தியாசமா செய்யத் தோணுற அந்த விஷயம் தான் அண்ணாவை இவ்வளவு தூரத்துக்கு உயர்த்தி இருக்கு ..சரி நான் என்னோட வேலையை பார்க்கறேன்" என்று நகர ..எடுத்துக்கொண்டு வந்ததை மற்ற மூவருக்கும் கொடுத்தவள் .ஒரு ஓரமாக அதையே பார்த்தபடி அமர்ந்து விட்டாள்.

"இது என்ன ..இது கண்ணால் பேசினால் கவிதையாய்.. இத வச்சு நான் என்னன்னு எழுதுவேன் .என்னை நல்லா பிரச்சனையில் சிக்க வைக்கிறாங்க போல இருக்கு" சொல்லியப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாள்.

நீண்ட நேரம் வரையிலுமே வேறு எந்த யோசனையும் வரவில்லை.

இப்போதைக்கு இதை எப்படி எழுதுவது என்கின்ற எண்ணம் மட்டுமே முன்னால் இருக்க பேனாவை கைகளில் சுழற்றினாள்..
சற்று நேரம் தலையை கோதினாள் என்னென்னவோ செய்து கொண்டிருக்க ..சற்றே தொலைவில் மாதவன் இவளுடைய செய்கையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

உதட்டில் சிறு புன்னகை தொற்றிக் கொண்டிருக்க.. அவளின் ஒவ்வொரு செய்கையையுமே ரசிக்க ஆரம்பித்து இருந்தான் அவனையும் அறியாமல்..

மதியம் வரையிலுமே ஏதேதோ யோசித்தவள்..சில வாக்கியங்களை மட்டுமே எழுத முடிந்தது .

கடைசியாக எடுத்து வைத்தவள் வேகமாக மறுபடியும் மாதவன் இருந்த அறைக்கு சென்றாள்.

" இத பாருங்க சார் ..நான் நல்லா யோசிச்சுட்டேன் .எனக்கு எதுவுமே சரியா வரல .

ஒரே ஒரு கேள்விதான் இருக்குது இது என்ன மாதிரி டயலாக் ..

ஐ மீன் எதுக்காக எழுதற டைலாக்.. எந்த விளம்பரத்துக்காக எழுதுறது அதை சொன்னீங்கன்னா அதுக்கேத்த மாதிரி மாற்றி எழுதி தருவேன்."

"சாக்லேட் விளம்பரம் ."

".இது போதும்.. இதுக்கு எத்த மாதிரி இன்னும் அஞ்சு நிமிஷத்துல எழுதிட்டு வரேன் "என்று நகர்ந்தாள்.

சற்றே எதிர்பார்ப்போடு காத்திருந்தான் மாதவன்.. அவனுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல இருந்தது சக்தி கொண்டு வந்து டயலாக்..

அவ்வளவு அருமையாக இருந்தது படித்து பார்த்தவனுக்கு லேசாக உதட்டில் புன்னகை தொற்றிக்கொள்ள .."ரொம்ப நல்லா இருக்குது .ஒரு ரெஸ்டாரண்ட்ல ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க அப்படித்தானே.."

ஆமா சார் .

"ஓகே மத்த மூணு பேரோடத்தையும் பார்த்துட்டு எது பெஸ்ட்டா இருக்குன்னு தோணுதோ அதை ஷூட்டிங் எடுத்துக்கலாம்.. சரி நீ போகலாம் சக்தி "என்று சொல்ல நகர்ந்தாள்.

அடுத்த ஒரு வாரம் வேகமாக நகர்ந்தது .அடுத்து அடுத்து ஷூட்டிங் இருக்க..அதற்கான இடத்தை தேர்வு செய்ய ஆளுகளுக்கு வேலையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் சக்திக்கு அவளுடைய தந்தை வீடு சொந்தமாக வாங்கி கொடுத்திருந்தார் .

பெரிய அப்பார்ட்மெண்டில் ஏழாவது மாடியில் ஒரு அறையை இவளுடைய பெயருக்கு புக் செய்து வாங்கி கொடுத்திருக்க.. அந்த வாரமே அங்கே செல்ல வேண்டியதாக இருந்தது .

வேகமாக ஹாஸ்டலை காலி செய்துவிட்டு அந்த அப்பார்ட்மெண்டில் ..அந்த வாரத்தில் குடிபெயர்ந்து இருந்தாள்.

முதல் முதலில் கூட இவளுடைய பாட்டியும் அங்கே வந்திருந்தார்.

இன்னமும் பத்து நாளைக்கு என் கூட தான் இருக்கணும் பாட்டி .இந்த இடம் செட் ஆன பிறகு நீங்க இங்க இருந்து போனா போதும் "என்று சொல்ல சரியென தலையாட்டினார்.
 

Kavisowmi

Well-known member
18

ஓரளவிற்கு அப்பார்ட்மெண்ட் வாசம் இவளுக்கு செட் ஆகி இருந்தது .

பாட்டி கூட மறுபடியும் அவருடைய வீட்டிற்கு சென்று இருந்தார் .

இங்கே இருந்து இவள் செல்லும் ஆபீசுக்கு நிறைய நேரம் ஆகவில்லை .பத்து நிமிட நேரத்தில் சென்றுவிடலாம் என்பது போல தூரம் இருந்தது .

பொடி நடையாக நடந்தால் கூட 20 நிமிடத்தில் ஆபீஸிற்குள் சென்றுவிடலாம் .

அந்த அளவு வீட்டை வாங்கி கொடுத்திருந்தார் .என்ன வீட்டை மட்டும் தான் வாங்கிக் கொடுத்தாரே தவிர அதன் பிறகு அந்த ஆபீஸ யாருடையது அங்கே யார் இருக்கிறார்கள் என்று பார்க்கும் மனநிலையில் அவர் இல்லை.

மொத்தமாகவே அந்த நிகழ்வை மறந்திருந்தார்..அவருடைய மனதில் ஒரே எண்ணம் மட்டுமே இருந்தது.

கொஞ்ச நாளைக்கு தானே.. ஒரு வருஷம் அவளுடைய ஆசைக்காக இங்கே வேலை செய்யட்டும் .பிறகு அங்கிருந்து தன்னோடு அழைத்துக் கொள்ளலாம் என்று தான் முடிவு செய்தது .

அதனால் பிறகு அதைப் பற்றி எதையும் கண்டு கொள்ளவில்லை அவ்வப்போது நலம் விசாரிப்பதோடு சரி.

பாட்டி வழக்கம் போல காலை மாலை என இரண்டு வேலையுமே ஃபோனில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார் .

நாட்கள் மெல்ல சற்று சுவாரசியமாக நகர ஆரம்பித்தது.

மாதவன் இப்போது எல்லாம் நிறையவே சக்தியை கவனிக்கிறான். சின்ன சின்ன வேலைகளை கூட வேறு யாரிடமும் கொடுப்பதில்லை சக்தியிடமே கொடுத்தான்.

காலை ,மாலை இரண்டு வேளையும் காபி கொண்டு வந்து கொடுப்பது சக்தியின் கடமை என மாறி இருந்தது .

ஆரம்பத்தில் பெரியதாக எதுவும் தெரியவில்லை ஆனால் போகப் போக இவளுக்குமே மாதவன் தன்னை கவனிக்கிறானோ என்கின்ற ஒரு சிறு எண்ணம் மனதில் எழத் தான் செய்தது .ஆனால் எந்த இடத்திலுமே அவன் தன்னுடைய மனதை வெளி காட்டிக் கொள்ளவில்லை .

எப்போதுமே சற்று கரராக இருப்பது போல பேசினாலுமே இவளிடம் பேசி முடித்த உடனேயே அவனுடைய உதட்டில் பேசியதை நினைத்து சிறு புன்னகை ஓட்டிக் கொள்ளும் .

அந்த புன்னகை அன்றைய அந்த நாள் முடியும் வரையிலுமே அப்படியே இருந்தது .

இதை யார் கவனிக்கிறார்களோ இல்லையோ குரு நன்றாகவே கவனித்துக் கொண்டிருந்தான் .

அவனுக்குமே தன்னுடைய அண்ணனின் மனநிலை நன்றாக புரிந்தது .ஆனால் கேட்டால் ஒத்துக் கொள்ள மாட்டானே..

இல்லவே இல்லை என்று சாதிப்பான்.. வயது வித்தியாசத்தை வேறு சொல்லிக் காட்டுவான் அதனால் அதை பற்றி வெளியே எதுவும் சொன்னது கிடையாது .

சரி எவ்வளவு தூரம் தான் போகிறான்.. போகட்டும் பார்க்கலாம் என்றைக்கு இருந்தாலும் ஒரு நாள் வெளியே வந்து தானே ஆக வேண்டும் .

தன்னுடைய மனதில் உள்ளதை சொல்ல வேண்டும் தானே..

அன்றைக்கு அவனைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து நகர்ந்தான்..ஆனால் அதே நேரத்தில் ஜான்வியுடனான இவனுடைய உறவும் கூட சற்று அடுத்த நிலைக்கு சென்றிருந்தது .

இப்போது ஜான்வியிடம் அடிக்கடி நன்றாகவே பேசினான்.. இன்னமும் சொல்ல போனால் அவளை அவனுக்கு நிறையவே பிடித்திருந்தது .வெளிக்காட்டிக் கொள்ளவில்லை ஆனால் அவளிடம் பேசாத நாள் நிச்சயமாக அவனுக்கு நன்றாகவே இல்லை எனும் அளவிற்கு மாறி இருந்தது .

காலை வந்த உடனேயே ஜான்வியின் முகத்தை பார்ப்பவன் இடையே ஏதாவது ஒரு சில வார்த்தைகள்.. பிறகு மாலையில் கேண்டினில் ஒரு காபி பிறகு அடுத்த நாள் இப்படி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

ஜான்வியை பொறுத்த வரைக்கும் இந்த சிறு உபசரிப்பே அன்றைய நாளை அவளுக்கு மகிழ்ச்சியாக மாற்றி தந்தது .

இதுவே போதும் எனும் மனநிலையில் இருந்தாள். குரு கவனிக்காத நேரத்தில் மட்டுமே அவனை சற்று ஆர்வமாக கவனித்தது.. மற்ற நேரங்களில் மிகவும் சீரியசாக தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து கொண்டிருந்தாள்.

எடுக்கின்ற ஒவ்வொரு விளம்பரங்களும் நன்றாகவே வெற்றி பெற்றுக் கொண்டிருக்க அந்தந்த நிறுவனங்கள் இவர்கள் ஆபீஸில் இருந்த அனைத்து ஊழியர்களுக்குமே அவ்வப்போது பார்ட்டி எனக் கொடுப்பது வழக்கம்..

அன்றைக்கும் கூட அது போல ஒரு பார்ட்டி பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்க இருக்க அனைவருக்கும் காலையிலேயே சிறு இன்விடேஷன் அனுப்பி இருந்தான் மாதவன்.

ஜான்வி மிக மிக ஆர்வமாக இருந்தாள்.. இந்தப் பாட்டில் கலந்து கொள்ள ..ஏனென்றால் அவள் வந்து சேர்ந்த பிறகு இத்தனை நாட்கள் கழித்து முதன் முதலாக இன்றைக்கு அங்கே செல்ல போகிறாள்.

சக்திக்கு பெரியதாக எதுவும் தோன்றவில்லை. சாதாரணமாக இருந்தாள்.

மாதவன் தான் இவளை அழைத்து பேசியது.." சாயங்காலமா அந்த ஹோட்டலில் பார்ட்டி இருக்குது .

நம்ம ஆபீஸ்ல வேலை செய்யற எல்லாருமே அங்க வராங்க ..நீயும் கட்டாயமாக வரணும் .

வர முடியாது லேட் ஆகும் அப்படி எல்லாம் கதை சொல்லக்கூடாது கேப்ஸ் அனுப்புவாங்க.. அதிலே வந்திடு ..ரிட்டன் அவங்க அவங்க இடத்தில் கொண்டு போய் சரியா விட்டுடுவாங்க.. புரிஞ்சுதா" என்று சொல்ல சரியென தலையாட்டினாள்.

ஜான்வியோ மிக மிக ஆர்வமாக சக்தியிடம் கேட்டு கொண்டு இருந்தாள்.

"உன்னோட இடத்துக்கு வந்துரட்டுமா.. அங்கிருந்து ரெண்டு பேரும் கிளம்பி போய்க்கலாம்".

" என்னோட அப்பார்ட்மெண்ட்டை சொல்றியா.."

" ஆமா ஏன் வரக்கூடாதா.."

" ஐயோ அப்படியெல்லாம் சொல்லல.. அப்படின்னா ஒன்னு செய்..

சாயங்காலம் போட வேண்டிய டிரஸ் எடுத்துட்டு வந்திடு.. நேரா என்னோட வீட்டுக்கு போய் ரெண்டு பேரும் கிளம்பி கேப்ஸ் வரவும் போய்க்கலாம் ‌என்ன சொல்ற ".

"இது நல்லா ஐடியாவா இருக்குது சரி அப்படியே போகலாம்" என்று சொன்னவள் மாலை இரண்டு பேருமே புறப்பட்டு தயாராக இருந்தனர் .

வழக்கம் போல கேப்ஸ்காக காத்திருக்க அழைத்து செல்ல வந்தது என்னவோ மாதவனும் குருவும் தான்.

குருவை பார்க்கவும் ஜான்விக்கு அத்தனை மகிழ்ச்சி.., சக்தி சிறு தடுமாற்றத்தோடு வந்தாள்.

" வாவ்.. வெரி பிரிட்டி.. ரொம்ப அழகா இருக்குது இந்த டிரஸ் சக்தி" என்று உள்ளத்தில் உள்ளதை மாதவன் கூற.. லேசாக அவனுடைய பாராட்டில் முகம் சிவந்தாள் சக்தி. போட்டிருந்தது என்னவோ சாதாரணமான ஒரு சுடிதார் தான். உடல் முழுக்க மறைக்கும்படி சுடிதார் முழுக்க முழுக்க கைகளிலும் கழுத்திற்கும் கற்கள் பதித்திருக்க பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.

" தேங்க்யூ வெரி மச்" என்று சொல்லி அமர.. ஜான்வியோ நேர் மாறாக சேலை கட்டி அழகாக புறப்பட்டு வந்திருந்தாள்.

" நீ என்ன ஜான்வி நாம ஹோட்டல்ல பார்ட்டிக்காக போறோம் .உங்கள பொண்ணு பாய்க்க யாரும் அங்க வரலை"என்று கிண்டல் செய்ய..

" சும்மா கிண்டல் பண்ணாதீங்க சார் முதல் முதல்ல இது மாதிரியான ஒரு பார்ட்டியில இப்பதான் கலந்துக்க போறேன்.

நானே எக்சைட்டடா இருக்குறேன் தெரியுமா".

" அதனாலதான் இந்த ட்ரெஸ்ஸ செலக்ட் பண்ணிங்களா .."

"ஏன் நல்லா இல்லையா.. வேற வேணும்னா மாத்திட்டு வரட்டுமா ".

"அதெல்லாம் வேண்டாம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. இப்படியும் வாங்க .

நம்ம ஆபீஸ்ல இருக்குறவங்க கூடவே நமக்கு விளம்பர வாய்ப்பு கொடுத்தவங்க..

அவங்க ஆபீஸ்ல இருந்து சிலர் வருவாங்க அவ்வளவுதான் .கிட்டத்தட்ட ஒரு ஃபேமிலி மாதிரி தானே நம்ம எல்லாம் இருக்கிறோம் .அதனால பயப்பட எதுவும் இல்லை.

எப்படி வந்தாலும் சரி நம்மளோட ஆபீஸ்ல இருக்குறவங்க தெரிஞ்சவங்க மட்டும் தான் இருப்பாங்க .அதனால வெளி ஆட்கள் இருப்பாங்க அப்படிங்கிற பதட்டம் எல்லாம் யாருக்கும் தேவையில்லை .

இயல்பா இருக்கலாம் சந்தோஷமா ஹாப்பியா கொண்டாடுங்க" என்று அழைத்துக் கொண்டு சென்றான்.

இவர்கள் சென்ற போதே அங்கே அத்தனை பேருமே வந்து சேர்ந்திருந்தனர் .

ஆரம்பத்தில் சிறு கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடியவர்கள் பிறகு ஆரவாரமாக பார்ட்டி துவங்கியது .

அனைத்து வகையான உணவுகளையும் பப்பே முறையில் வரிசையாக அடுக்கி வைத்திருக்க.ஆள் ஆளுக்கு பிடித்தமானதை சாப்பிட்டு கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்திருந்தனர்.

நடுநாயகமாக ஒரு ஸ்டேஜ் போல இருக்க விருப்பமானவர்கள் தங்களுக்கு பிடித்த பாடலுக்கு நடனமாடியும் ,பாடியும் தங்களுடைய திறமைகளை காட்டிக் கொண்டு இருக்க ,குரு ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன குரு உனக்கு டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்குமே.. போய் டான்ஸ் ஆட வேண்டியது தானே" என்று மாதவன் கூற ,"எதுக்கு உன் முன்னாடி நான் போய் அங்கே டான்ஸ் ஆடிட்டு பிறகு நீ என்னை பயங்கரமா கிண்டல் பண்ணுவ.. இந்த விளையாட்டுக்கு நான் வரல.. இன்றைக்கு நான் ரொம்ப சமத்தா இங்க உக்காந்து வேடிக்கை மட்டும் தான் பார்க்க போறேன்."

" என்ன ஜான்வி நீங்க எப்படி உங்களுக்கு டான்ஸ் பிடிக்குமா "என்று ஜான்வியை பார்த்து கேட்க.. "எனக்கு பிடிக்குமே".

" அப்புறம் என்ன ஒரு டான்ஸ் ஆடுங்க.. குருவிற்கு கம்பெனி கொஞுங்க.."

" என்ன ணா.. என்ன எதற்காக அந்த பொண்ணு கூட கோர்த்து விடுற.."

" கோர்த்து விடறேனா.. அந்த பொண்ணு கூட டான்ஸ் ஆட நீ ஆசைப்படுவ அதனால சொன்னேன்.. போ "என்று அனுப்பி வைத்தான்..

சக்திக்கு அருகே சற்று தள்ளி இவன் அமர்ந்திருக்க, அங்கே ஜான்வி சென்று நடனமாட ஆரம்பிக்க.. அந்த மகிழ்ச்சி சக்தியை பற்றி கொண்டது.

இவளுமே நின்ற இடத்தில் நின்று நடனமாட ஆரம்பித்து இருந்தாள்.

ஆர்வமாக கத்தி கூச்சல் போட்டு குதித்து என இவளுடைய சேட்டைகள் வேறு அளவில் இருக்க, ஸ்டேஜை பார்த்தானோ இல்லையோ சத்தியை பார்த்து நிறையவே சிரித்தான் மாதவன்.

பிறகு மெதுவாக சக்திக்கு அருகே வந்து அமர்ந்தவன்." என்ன சக்தி பயங்கர ஹேப்பி போல இருக்குது.."

" ஆமா சார் முதன் முதலில் நான் இது போல ஒரு பார்ட்டியில கலந்து இருக்கிறேன் .எல்லாமே புதுசா இருக்குது .ஹேப்பியாவும் இருக்குது" என்று சுத்தி இருந்தவர்களை வேடிக்கை பார்த்தபடி கூற ,"அப்புறம் அந்த அப்பார்ட்மெண்ட்ல குடியிருக்கறீங்களா என்ன ?"

"ஆமா சார்.. அங்க வீடு வாங்கி இருக்கு.. அதனால அங்கே செட்டில் ஆயிட்டேன்".

" என்னது அந்த அப்பார்ட்மெண்ட்லயா வீடு வாங்கி இருக்கீங்க".

" ஆமா ஏன் கேக்குறீங்க "என்று கூற.. "அவ்வளவு பெரிய ஆளா நீ *என்று அடுத்த கேள்வி கேட்க.. இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை .

"என்ன சொல்ல வரீங்க .எனக்கு புரியல .இதுல என்ன இருக்கு .."

"இல்ல அந்த அப்பார்ட்மெண்ட்டோட வேல்யூஷன் என்னன்னு தெரியுமா".

" தெரியாது ஏன் கேக்குறீங்க.."

" அப்புறம் அந்த வீட்டை யார் வாங்கி கொடுத்தா".

" என்னோட அப்பா தான் .வேற யார் வாங்கி தருவாங்க ."

"நீ இங்க இருந்து வேலை செய்யறதுனால அந்த இடத்தை வாங்கி கொடுத்தாங்களா? "

"ஆமா ஏன் அதுல ஏதாவது தப்பு இருக்கா என்ன "

"அவ்வளவு வசதியான பொண்ணா இருந்தா எதுக்காக என்னோட ஆபீஸ்க்கு நீ வேலைக்கு வரணும்".
இத்தனை நேரம் விளையாட்டு போல உளறிக் கொண்டிருக்க இப்போதுதான் அவன் கேட்டதன் அர்த்தம் புரிய.. சற்று திகைத்துப் படி அவனுடைய முகத்தை பார்த்தாள்.

" என்ன அப்படி ஷாக்கானா என்ன அர்த்தம் ..நான் கேட்டதோட அர்த்தம் உனக்கு புரியலையா".

" சார் இத பாருங்க நீங்க என்ன நினைச்சு கேட்கிறீங்கன்னு தெரியாது .ஒரு ப்ரோபர்ட்டி வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை..

அதுவும் சென்னையில மெயினான இடத்தில ..அப்பா ரொம்ப நாளாவே பார்த்துகிட்டு இருந்தாங்க..

இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் .எனக்கு பெருசா எதுவும் தப்பா தெரியல .ஏன் அதுல ஏதாவது பிரச்சனையா .."

"அந்த வீட்டோட வேல்யூசன் என்ன தெரியுமா.. அந்த அப்பார்ட்மெண்ட்ல ஒரு வீடு வாங்கணும்னா கிட்டத்தட்ட மினிமம் 2 கோடிக்கு மேல பணம் கட்டணும் .
உனக்கு தெரியுமா".

" எனக்கு இதெல்லாம் தெரியாது அங்கே வீடு வாங்கறேன்னு சொன்னாங்க .சரி வாங்கிக்கோங்கன்னு சொன்னேன் .ஏன் என்ன ஆச்சு".

" இல்ல ரெண்டு கோடிங்கிறது சின்ன தொகை கிடையாது சக்தி அது ரொம்ப பெரிய தொகை..

நீ சர்வசாதாரணமாக வேலைக்கு வரேன்னா.. அப்ப உன்னோட அப்பா பெரிய ஆளா இருக்கணும் உன்னோட அப்பா பேர் என்ன? நீங்க என்ன வேலை செய்றீங்க.."

ஒரே கேள்வியில் மாட்டிக்கொண்டது புரிய வர சட்டென பேச்சை மாற்றினாள் .

"சார் அது சொந்தமா வாங்கி இருக்காங்க அப்படிங்கறது எனக்கு தெரியாது .ஒருவேளை வேற யாருக்காவது வாங்கினதா கூட இருக்கலாம்.

எனக்கு வாடகைக்காக ஏற்பாடு பண்ணி தந்திருக்கலாம் . நான் அதை பத்தின டீடெயில் எதுவுமே கேட்கல .

நான் வேலை செய்ற இடத்திலிருந்து ஹாஸ்டல் கொஞ்சம் தூரம் அப்படின்னு அப்பா ஃபீல் பண்ணியிருந்தாங்க .

அதனால பக்கத்துல ஏதாவது ரெடி பண்ணி தரேன் போறியான்னு கேட்டாங்க சரின்னு சொன்னேன் அதனால எனக்கு முழு தகவல் தெரியாது சாரி."

"சாரி நான் கேட்டிருக்கக் கூடாது.. இங்க வேலைக்கு வர்ற உன்னால அவ்வளவு பணம் கொடுத்து எப்படி அந்த வீட்டை வாங்க முடியும் .

நானும் இப்படி கெஸ் பண்ணி இருக்க கூடாது .."

"ஏன் கேட்டேன் தெரியுமா..ஏன்னா நானும் அந்த அப்பார்ட்மெண்ட்ல ஒரு வீடு வாங்கி இருக்கிறேன் .

என்னோட அப்பா அடுத்த வாரத்தில் இருந்து அங்க தான் இருக்க போறாங்க .

நீ எத்தனாவது மடியில் வாங்கி இருக்கற.. நான் நாலாவது மாடின்னு நினைக்கிறேன் ".

"அப்படி னா.. இன்னும் வாங்கலையா..ஏன் இத்தனை குழப்பம்.."

"இனிதான் வாங்க போறேன் சக்தி.. அட்வான்ஸ் கொடுத்து எல்லா பேச்சு வார்த்தையும் ஓரளவுக்கு முடிஞ்சாச்சு .

எந்த இடத்துல வீடுன்னு இன்னும் கன்ஃபார்ம் ஆகல ..நாலாவது மாடியா இருக்கலாம் இல்லாட்டி ஆறாவது மாடியா கூட இருக்கலாம் எனக்கு சரியா தெரியல.."

"அப்படின்னா இனி நீங்களும் அங்கதான் வந்து இருக்க போறீங்களா .."

"அப்படி இல்ல சக்தி ..நான் இப்ப இருக்கிற வீடு எனக்கு ஓகே தான் ஆனா அப்பா எங்க கூட வந்து தங்க விருப்பம் இல்ல .

ஆபீஸ் வேலைன்னு பிஸியா இருக்கும் போது என்னால் உங்களுக்கு தொந்தரவு இருக்கக்கூடாதுன்னு சொல்றாரு..

அப்பாவுக்காக தான் அந்த அப்பார்ட்மெண்ட்ல வீடு பார்த்திருக்கிறேன் .அப்பாவை கவனிச்சுக்கறதுக்கு ரெண்டு ஆட்கள் உண்டு.

அதனால பிரச்சனை இல்ல.. ஹாஸ்பிடல் போகணும்.. அப்புறம் பிசியோதெரபி அழைச்சிட்டு வந்து இன்னும் கொஞ்சம் நல்லா ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்னு யோசிச்சு வச்சிருக்கிறேன். அதனால் இந்த இடத்தில் இருந்தால் இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கும்னு தோணுச்சு .அதனாலதான் அந்த அப்பார்ட்மெண்ட்ல வீடு வாங்க முடிவு பண்ணினேன் ".

"ஓகே சார் அப்பா அங்க வந்தாங்கன்னா நானும் பார்த்துக்கொள்கிறேன்.."

"ஏன் சக்தி அப்பாவ பாக்கணும்னு உனக்கு தோணுதா".

" சார் உங்களோட அப்பா இல்லையா பாக்கணும்னு ஆசைப்படுறேன்".

" அப்படின்னா ஒன்னு செய் .நான் உன்னை அழைச்சிட்டு போகட்டுமா.."

" எப்போ.."

"இந்த நிமிஷமே.. என் பின்னாடி வரியா ..உன்னை கூப்பிட்டுட்டு போறேன் ".

"இந்த நேரத்திலயா .."நேரத்தை பார்த்தவள் குழப்பத்தோடு இவனது முகத்தைப் பார்க்க .."என்ன பயப்படறீயா என்னை பார்த்து.."

" உங்கள பார்த்து எனக்கு எப்பவுமே பயம் எல்லாம் கிடையாது ."

"சரி வா குரு கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் .அப்படியே சத்தம் இல்லாம வெளியே வா.. சாப்பிட்டாச்சு தானே".

" ஓ சாப்பிட்டாச்சு சார் .."

"சரி போலாம் "என்று மெல்ல வெளியேற அவனை பின் தொடர்ந்து சென்றாள் சக்தி.
 

Kavisowmi

Well-known member
19

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு மாதவனின் தந்தையை பார்க்க போகிறாள் .

அந்த ஆர்வம் நிறையவே இவளிடத்தில் இருந்தது .ஆனால் இவளை அழைத்துக் கொண்டு வண்டியில் புறப்பட்டவனுக்குள் சிறு குழப்பம் ..அந்த நிமிடம் அவனைப் பற்றிக் கொண்டது .

"என்ன செஞ்சுகிட்டு இருக்கிற மாதவா ..எதுக்காக திடீர்னு இந்த பொண்ணை அழைச்சிட்டு உன் அப்பாவை காட்ட கூப்பிட்டுட்டு போற.. இதுக்கு என்ன அர்த்தம் உண்மையிலேயே உன் மனசுக்குள்ள அந்த பொண்ணு வந்துட்டாளா.. அதனாலதான் உன்னை அறியாமல் நீ உன்னோட சொந்த இடத்துக்கு அவளை கூப்பிட்டுட்டு போக ஆசைப்படற.."அவனுடைய மனசாட்சியும் மாறி மாறி கேள்வி கேட்க ..அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் .

சக்தியை தன்னுடைய வீட்டுக்கு வருகிறாயா என்று கேட்டு அழைத்து வந்த மாதவன் ..இப்போது அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க இவளோ ரோட்டையும் மாதவனின் முகத்தையும் மாறி மாறி பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள்.

" என்ன மாறி மாறி முகத்தை பார்க்கிற மாதிரி இருக்குது ".

'இல்ல அங்கே ரொம்ப ஆர்வமா என்னை அழைச்ச மாதிரி இருந்தது ஆனா இப்போ பேசவே மாட்டேங்கிறீங்க ..என்னை வீட்டுக்கு கூப்பிட்ட மாதவன் சாரும் ..இப்ப வண்டி ஓட்டற மாதவன் சாரும் ஒன்னுதானா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்."

" இரண்டுமே ஒன்றுதான் ஏதோ ஒரு யோசனை.. கூப்பிட்டுட்டு இந்நேரத்துக்கு போனா அப்பா என்ன சொல்லுவாங்கன்னு ஒரு யோசனையா இருக்குது."

" வீட்டுக்கு பெரியவங்க தானே அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க ..உங்களை புரிந்தவர் தானே.. "என்று சொன்னவள் சிறு புன்னகையோடு வெளியே வேடிக்கை பார்க்க ,

"சரி சரி நீ சொன்னா சரியாதான் இருக்கும்.. அப்பா எதுக்காக என்கிட்ட கோச்சுக்க போறாரு ..கோச்சுக்கறதுக்கு எந்த ஒரு காரணமும் எப்பவும் இருக்காது என் அப்பாவுக்கு நான்னா அவ்வளவு இஷ்டம்."

"அப்புறம் எதுக்கு கவலைப் படுறீங்க" என்று சொல்ல சற்று நேரத்தில் எல்லாம் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன். இவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

" அப்பா" என்று குரல் கொடுக்க வீட்டில் வேலை செய்பவன் ஒருவன் வீல்சேரில் இருந்த இவனது தந்தையை அழைத்துக் கொண்டு வந்தார் .

அவரை பார்க்கவுமே சட்டென அவருடைய காலில் விழுந்து வணங்கினால் சக்தி .

"நல்லா இரு மா நல்லா இரு "என்றவர் குழப்பத்தோடு மாதவனை பார்த்தார் ..

"அப்பா என்னோட ஆபீஸ்ல வேலை செய்யறா இந்த பொண்ணு.. பேரு சக்தி உங்களை பார்க்கிறதுக்காக அழைச்சிட்டு வந்தேன் "என்று சொல்ல.." சரிடா சரி உட்காருமா.."

"சரி அங்கிள் ..எப்படி இருக்கிறீங்க இப்போ நல்லா இருக்கீங்களா." இவள் விசாரிக்க ஆரம்பிக்க சிறு புன்னகையோடு.." எனக்கு என்னம்மா நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறேன் .

கண்ணுக்கு நிறைவா என் மேல உயிரா இருக்கிற ரெண்டு பசங்க இதுக்கு மேல எனக்கு என்ன வேணும் ".

"அப்பா ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க.. நான் சாப்பிட்ட எதாவது எடுத்துட்டு வரேன்" என்று எழுந்து உள்ளே செல்ல ..இப்போது சக்தியின் முகத்தை பார்த்தவர்..

" நீ.. ரவியோட கடைசி பொண்ணு சக்தி தானே நீ "என்று கேட்க அதிர்ச்சியாக கண்களை விரித்தாள்.

" அங்கிள் வந்து.."

" எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறேயா ம்மா ..நீ பொறந்ததும் முதன் முதலில் என் கையில தான் கொண்டு வந்து கொடுத்தான்..

கடைசியா பேசும் போது பத்து வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன் .

உன் பாட்டி வீட்டுல பேசும் போது நீ உங்க பாட்டி பக்கத்துல உக்காந்திருந்த.. என்னோட முகத்தை விடாம பார்த்துக்கிட்டு இருந்த ..
எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது அங்கிள் ".

"உங்களுக்கு எல்லாமே ஞாபகம் இருக்குதா.. எதுவுமே மறக்கலியா.."

" எப்படி மறக்கும் .அன்றைய பேச்சு வார்த்தைக்கு பிறகு கொஞ்ச நாள்ல தான் எனக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு .

அந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு தான் மாதவனும் இப்படி இறுகிப் போயிட்டான் .

இப்ப நீ எதுக்காக மாதவனோட ஆபீஸ்ல வந்து வேலை செய்றான்னு தெரிஞ்சுக்கலாமா .."

"அங்கிள் வந்து .. என்னை மனுசிடுங்க. அன்றைக்கு பேச்சு வார்த்தை நடந்ததை எப்படி நீங்க இன்னும் மறக்கலையோ ..

அதே மாதிரி தான் நானும் இன்னமும் மறக்கல அப்பா உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நான் நிறைவேற்றணும்னு ஆசைப்படுறேன்".

" புரியலை நீ என்ன சொல்ல வர்ற ".

"நான் மாதவன் சாரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் ".

"இது அவனுக்கு தெரியுமா.. உன்னோட அப்பாவோட பெயர் தெரிஞ்சுதுன்னா அவன் அதுக்கு பிறகு உன்னை அந்த ஆபீஸ்லயே வச்சுக்க மாட்டான்..புரியுதா ".

"அங்கிள் ஆனா அப்படி நடக்காது என்று தான் நினைக்கிறேன்.. நிச்சயமா அவர் என்னை புரிஞ்சுக்கவாரு .

என்னோட மனசை..என்னோட காதலை அவர் புரிஞ்சுக்கவாருன்னு நம்புறேன் ".

"இதுக்கு பேர் காதலே கிடையாது உனக்கும் அவனுக்கும் நிறையவே வயசு வித்தியாசம்..

நிச்சயமாக இந்த கல்யாணத்துக்கு எப்பவும் சம்மதிக்க மாட்டான் .நீ ஆசைப்படுவது நடக்காதுன்னு தான் தோணுது ".

"ஹலோ என்னப்பா மும்பரமா ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சிட்டீங்களா ..இந்தாங்க காபி .. உங்களுக்கும் ஒரு டம்ளர் கொண்டு வந்திருக்கிறேன் குடிங்கப்பா "என்று கொடுக்க வாங்கிக் கொண்டார் .

அதன் பிறகு ஒரு வார்த்தை கூட இருவரும் பேசவில்லை.. "என்ன பா கிச்சன்ல இருக்கும்போது நிறைய பேசின சத்தம் கேட்டது .இப்ப ரெண்டு பேரும் முகத்தை முகத்தை பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்கீங்க.."

"ஒன்னும் இல்லடா ஜென்ரலா கேட்டுக்கிட்டு இருந்தேன். எங்க இருக்கிறாங்க.. என்ன பண்றாங்க அப்படின்னு.. வேற ஒன்னும் இல்ல.

பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு வேலை எப்படி செய்றா ".

"ரொம்ப ஸ்மார்ட் பா.. செய்கிற ஒவ்வொன்றையும் பார்த்தீங்கனா உங்களுக்கே அவளை பிடிக்கும்..

வேலை பொருத்த வரைக்கும் ரொம்ப நேர்த்தி ..மத்தபடி கொஞ்சம்.. இல்லை நிறையவே குறும்புத்தனம் இருக்குது.

கலகலப்பானவள்.. இவளால நல்லாவே நேரம் போகுது ."

"சரிடா சரி நேரம் ஆகிட்டு இருக்கு.. கொண்டு போய் அந்த பொண்ண விட்டுட்டு வந்துடு. புரிஞ்சுதா".

" சரிப்பா சரி" என்று சொன்னவன் இவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் .வாசல் வரைக்கும் சென்றலள் ." ஒரு நிமிஷம் சார் இதோ வரேன்" என்று வேகமாக உள்ளே வந்தவள்.. மறுபடியும் சட்டென மாதவனின் தந்தையின் காலில் விழுந்தாள்.

" என்னோட ஆசை நிறைவேறணும் அப்படின்னு ஆசீர்வாதம் பண்ணுங்க அங்கிள் .

நான் ஆசைப்படுறது நடந்தா ரொம்ப நல்லா இருக்கும் ."

"அதுக்கு உன்னோட அப்பா எப்பவுமே சம்மதிக்க மாட்டாங்க அத புரிஞ்சுக்கோ.."

" என் அப்பா கிட்ட பர்மிஷன் வாங்க வேண்டியது என்னோட கடமை.. நிச்சயம் அப்பா சம்மதிப்பாரு ..

அப்பாவோட சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது."

" உன் அப்பா சம்மதம் மட்டும் இல்ல மாதவனோட சம்பந்தமும் வேணும்.. உன் அப்பா மேல அவ்வளவு கோவத்துல இருக்கிறான் .

இந்த நிமிஷம் வரைக்கும் வெறுக்கிற ஒரே ஆளுனா.. உன் அப்பா மட்டும் தான் .

அத தாண்டி உன்னை எப்படி ஏத்துக்குவான்னு நினைக்கிற.. ஆனாவசியமா ஆசையை வளத்துக்க வேண்டாம் .

அப்புறமா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நீ ஆபீஸை விட்டு வெளியே போயிடு.. பின்னாடி நீ தான் ரொம்ப வருத்தப்படுவ "சொல்லிவிட்டு வேலையாளை பார்த்து திரும்பியவர் "என்னை என்னுடைய ரூம்பிற்கு அழைச்சிட்டு போ .எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை "என்று சொல்ல பதில் சொல்ல தெரியாமல் வேகமாக வெளியேறினாள் சக்தி.
 

Kavisowmi

Well-known member

20

அடுத்தடுத்து நாட்கள் வழக்கம் போல மெல்ல நகர்ந்தது .

அந்த வார இறுதியில் இன்னொரு சம்பவம் நடந்தது .

மாதவனும்,குருவும் இவள் இருந்த அப்பார்ட்மெண்டிற்கு நான்கு வீடு தள்ளி வீடு வாங்கி இருக்க தந்தையோடு வந்திருந்தனர்.

எதற்காகவோ வெளியே வந்தவள் மாதவனை பார்த்து ஆச்சரியத்தில் கண்கள் விரிக்க.. மாதவனும் பார்த்து விட்டான்.

" இங்கே தான் இருக்கிறியா இரு வரேன்" என்று சொல்ல.." வாங்க சார் நான் வெயிட் பண்ணுறேன்" என்றவள் வேகமாக அவர்களுக்கு அருகே சென்றாள் .

"ஹாய் குரு சார் "என்றவள் இவனது தந்தையை பார்த்து வழக்கம் போல காலில் தொட்டு ஆசிர்வாதம் வாங்க.. மாதவன் சிரித்தான்.

" அதென்ன ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் காலில் தொட்டு ஆசீர்வாதம் வாங்கணுமா".

"அப்படின்னா என்ன அர்த்தம் மாதவன் அண்ணா.. அப்படின்னா சக்திக்கு ஏற்கனவே நம்ம அப்பாவை தெரியுமா .ஏற்கனவே பார்த்து இருக்கிறாளா என்ன ?"என்று அண்ணனின் முகம் பார்க்க .."அது வந்து "என்று தயங்கியவன். "அன்றைக்கு பார்ட்டி நடக்கும் போது சக்தியை கூப்பிட்டுட்டு அப்பாவை பார்க்க போய் இருந்தேன்.

அன்னைக்கும் இது மாதிரி தான் செஞ்சா ."சற்று குரல் சுதி இறங்கி சொல்ல ..கேட்டவன் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

" இப்ப எதற்காக நீ சிரிக்கிற.. கொஞ்சம் பேசாம இருக்கறயா" என்று சகோதரனை மிரட்ட .."என்ன ஆச்சு" என்று இருவரையும் மாறி மாறி பார்த்தாள் சக்தி .

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை விசயம் தெரிந்த பிறகு குரு தன்னை நன்றாகவே கிண்டல் அடிக்கப் போகிறான் என்பது புரிய .."மவனே ஏதாவது கிண்டல் பண்ணினேன்னா காலி பார்த்துக்கோ.‌"என்று வாய்க்குள் முணுமுணுத்தான்.

சக்தியை பார்க்கவும் மாதவனின் தந்தை "இந்த வீடு எனக்கு சரியா வரும்னு நினைக்கிறாயா மாதவா.. எனக்கு என்னவோ இது செட் ஆகும்னு தோணல ".

"அப்படி கிடையாது பா.. பக்கத்துல தான் ஹாஸ்பிடல் இருக்குது உங்களுக்கு எல்லா ஸ்பெஷலிட்டயும் சீக்கிரமா கிடைக்கும் ‌

சீக்கிரமா நீங்க எந்திரிச்சு நடக்கணும் அதுதான் என்னோட ஆசை ..

அதுக்காக தான் இவ்வளவு தூரம் வீடு பார்த்து உங்களை அழைச்சிட்டு வந்தேன் .இங்க இருந்து ஆபீஸுக்கும் பக்கம் ..நான் தங்கி இருக்கிற இடமும் கூட பக்கம்..

அப்பப்ப உங்களை வந்து பார்த்துக்கொள்வேன் .சமயத்துல உங்க கூட தங்கிட்டு கூட போகலாம் அதனாலதான்.. இந்த வீட்டை செலக்ட் பண்ணினேன் "என்று மாதவன் சொல்ல ..

"சரி உன்னோட இஷ்டம் "என்றவர் சக்தியை பார்த்து .."நீ இங்கதான் தங்கி இருக்கிறாயா? "

"ஆமா அங்கிள் ..நாலு வீடு தாண்டி அந்த வீடு தான். என்னோட வீடு".

சரி என்றவர் அதற்கு மேல் எந்த பேச்சும் பேசவில்லை.

"என்ன சக்தி ஏதோ இருக்கமா இருக்கிற மாதிரியே இருக்குது..

உன்னோட வீட்டுக்கு எல்லாம் எங்க ரெண்டு பேரையும் கூப்பிட மாட்டியா" என்று குரு கேட்க .."சாரி சார் உங்களை பார்த்த ஆச்சரியத்தில் அப்படியே நின்னுட்டேன். ப்ளீஸ் வாங்க" என்று முன்னாள் வேகமாக சென்றாள்.

" என்னது எங்களை வர சொல்லிட்டு நீ முன்னாடி வேகமா போனா என்ன அர்த்தம்" என்று குரல் தர..

மாதவனின் தந்தையோ" நீங்க வர போறீங்க இல்லையா. உங்களுக்கு ஏதாவது காபி போட்டு கொடுக்க வேகமாக போறாளா இருக்கும் .

என்னை உள்ளே கொண்டு போய் விட்டுட்டு பிறகு நீங்க ரெண்டு பேரும் போய் பார்த்துட்டு வாங்க" என்று சொல்ல ..

இங்கே இவ்வளவு வேகமாக வீட்டிற்குள் சென்றவள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை எடுத்து வேகமாக அங்கிருந்த டேபிளுக்குள் மறைத்து வைத்தாள்.

பிறகு ஹால் முழுவதையும் சுற்றி பார்க்க இவளுடைய பொருட்களை தாண்டி மத்த படி எதுவும் இல்லை .இவளும் பாட்டியும் எடுத்த ஒரே ஒரு புகைப்படம் மட்டும் டேபிளில் இருக்க அதை அப்படியே விட்டவள்..

அருகில் தங்களுடைய தன்னுடைய பெட்ரூமை எட்டி பார்த்தாள். அங்கும் குடும்ப புகைப்படம் ஒன்று இருக்க வேகமாக அதையும் எடுத்து அங்கே இருந்த டேபிளுக்கு அடியில் நகர்த்தி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல ஹாலுக்கு வர..

சரியாக வாசலில் ஹாலிங்பெல் சத்தம் கேட்டது. வேகமாக சென்று கதவை திறந்தாள்.

மாதவனும் குருவும் வந்திருந்தனர் ."வாங்க சார் என்று ன்று அழைத்தவள் அங்கிருந்து இருக்கையில் அமர வைக்க..

வீட்டை சுற்றி பார்த்தான் மாதவன்." வெரி நைஸ் ரொம்ப அழகா இருக்குது..

ரொம்ப நீட்டா மெயிண்டென் பண்ற…கிளீனிங் வேலைக்கு யாராவது வராங்களா.."

" இல்ல சார் அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க.. பாட்டி வீட்டு வேலையை எல்லாத்தையுமே எப்படி செய்யணும்னு சொல்லி தந்து இருக்காங்க.

என்னோட வேலையை நான் தான் பாத்துக்குறது வழக்கம் ".

"சரி சாப்பாட்டுக்கெல்லாம் என்ன செய்வீங்க .."

"மத்தியானம் நம்ம ஆபீஸ்ல கேண்டில்ல தானே சாப்பிடணும்.. நைட்டுக்கு மட்டும் தான் மேக்சிமம் மாவு வாங்கி வச்சிருப்பேன்.

தோசை மாதிரி ஊத்தி சாப்பிட்டுக்குவேன் .இல்லையினா கொஞ்சமா ஏதாவது சமைச்சுக்குவேன்.
அது பிரச்சனை இல்ல "என்று சொன்னவள் வேகமாக சமையல் அறைக்குள் சென்று காபி கலக்க ஆரம்பித்தாள்.

மாதவன் சுற்றிலும் ஒவ்வொன்றாக பார்த்தபடி அங்கிருந்த டேபிளை ஓபன் செய்ய ..சரியாக சக்தி அங்கே வந்திருந்தாள்.

" மாதவன் சார் காபி "என வேகமாக குரல் தர … பாதி வரைக்கும் இழுத்திருந்த டிராவை அப்படியே விட்டுவிட்டு நகர அவனிடம் காபியை கொடுத்தவள் வேகமாக வந்து டிராவை மூடி வைத்தாள்.

ஒரு நிமிடத்தில் பதற்றம் அவள் முகத்தில் வந்து சென்றது.

ஒரு வேலை திறந்து இருந்தால் இவர்களுடைய குடும்ப படத்தை பார்த்திருப்பான் .

பார்த்த பிறகு அவனுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை யோசிக்கக்கூட இவளால் முடியவில்லை .

"என்ன ..என்ன ஆச்சு சக்தி ..ஒரு டம்ளர் காபி போட்டுட்டு வரதுக்குள்ள முகம் எல்லாம் இப்படி வேர்த்திடுச்சு..

இதுல எனக்கு நானே சமைச்சுக்குவேன்னு கதை வேற சொல்றீங்க .

இதையெல்லாம் என்னை நம்ப சொல்றீங்களா "குரு இவளை கலாய்க்க ..

"சும்மா என்னைய கிண்டல் பண்ணாதீங்க சார் .நான் என்னென்ன வேலை செய்யறேன் அப்படிங்கறத ஒருநாள் என் கூட இருந்து பார்த்தா தெரிஞ்சுக்க போறீங்க .

உண்மையிலேயே நான் நல்லாவே சமைப்பேன்".

" எங்க அண்ணாவை விடவா ".

"இந்த கேள்விக்கு என்கிட்ட பதில் கிடையாது. ஏன்னா எனக்கு சமைக்க தெரியும் அவ்வளவுதான் .

உங்க அண்ணா சமையலை நான் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லையே..

சாப்பிட்ட பிறகு அவர் பெஸ்ட்டா சமைக்கிறாரா இல்லையானு சொல்லுறேன் ".

"இப்ப எதுக்காக ரெண்டு பேரும் மாறி மாறி பேசிகிட்டு இருக்கீங்க.."

" சார் இப்படி பேசினாலாவது நீங்க ஒரு நேரம் என் கையால சமைச்சு தரேன் சாப்பிட வரியானு கேட்க மாட்டீங்களா என்கிற ஒரு ஆதங்கம் தான்".

" சரிதான் உனக்கு வேணும்னா சொல்லு தாராளமா ஒரு நாள் சமைச்சு தரேன்.

இந்த வாரம் ஃப்ரீயா இருந்தா ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வருகிறாயா .. என்ன குரு நான் சொல்றது கரெக்டா.. "

நீ நடத்து ணா.. நான் எதுவும் கேட்க மாட்டேன் என்பதுபோல ஓரமாக அமர்ந்தவன்.." தாராளமா வர சொல்லலாமே ..நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் ."

"என் கூட ஜான்வியையும் அழைச்சிட்டு வருவேன் .உங்களுக்கு பிரச்சனை இல்லையே ..ஏன்னா தனியா வர ஒரு மாதிரியா இருக்கு..

அப்புறமா ஏதோ ஒரு பெரிய ப்ராஜெக்ட்க்கான டயலாக்ஸ் நிறைய எழுதணும்னு பேசினீங்க இல்லையா..

நான் என்னோட லேப்டாப்பையும் எடுத்துட்டு வரேன்.. வேணும்னா உங்க வீட்டிலேயே இருந்து வேலையை முடிச்சிட்டு அப்படியே மதியம் சாப்பிட்டுக்குறேன் .என்ன சொல்றீங்க ".

"ஆக நான் சாப்பாடு கொடுத்தா அது கூடவே வேலையை செஞ்சு தருவேன்னு சொல்ற அப்படித்தானே.. ஏன் ஆபீஸ்ல வச்சு இந்த வேலையை முடிக்க முடியாதா .."

"முடியுமே ..இல்லன்னு யார் சொன்னாங்க .சும்மா வந்து போர் அடிச்சா என்ன செய்யறது ".

"தாராளமா அண்ணாவை நம்பி வரலாம் சக்தி .போர் அடிக்காம பார்த்துக்கொள்வார் .

அவர் பன்முக வித்தகர் தெரியுமா எங்க வீட்ல ஒரு வயலின் கூட இருக்கு .

அதை அழகா வாசிச்சு அண்ணா காட்டுவாரு.."

" ரியலி உங்களுக்கு வேற என்ன எல்லாம் தெரியும் ."

"அண்ணா நல்லா நீச்சல் அடிப்பாரு பாட்டு பாடுவாரு.. டான்ஸ் ஆடுவாரு இன்னுமும் எல்லாமே..

என்னென்ன திறமைன்னு
நாம நினைக்கிறோமோ அதுல எல்லாமே அண்ணா கவராகுவார். கிட்டத்தட்ட ஃபுல் பேக்கேஜ் மாதிரி வச்சுக்கோங்க .."

"இல்ல அவன் சும்மா உளறிக்கிட்டு இருக்கிறான் சக்தி .. அவன் சொன்னதை நம்பி நீங்களா கற்பனையை வளர்த்துக்காதீங்க .

நானும் சராசரியான ஒரு ஆள் தான் எனக்கும் சில குறைகள் உண்டு."

". எப்பவுமே உர்ன்னு இருக்கறது யார்கிட்டயும் சிரிச்சு பேசாதது இப்படி நிறைய.." குரு கலாய்க்க..

" நீ சும்மா இருடா ..ஓகே சக்தி உண்மையிலே காபிக்கு ரொம்ப நன்றி. ரொம்ப நல்லா இருந்தது இந்த இடத்துல உங்கள எதிர்பார்க்கல .

இப்ப எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்குது .என் அப்பா பக்கத்துல நீ இருக்கிற.. ஏதாவதுன்னா நீ அப்பாவா நல்லா பார்த்துக்குவ..

நான் அப்பாகிட்டயும் சொல்லிடுறேன் .அடிக்கடி அப்பாவை போய் பார்த்து பேசிக்கோ புரிஞ்சுதா .."

"புரிஞ்சுதா சார் ..கட்டாயமா எனக்கு இனி அதுதான் வேலையே "என்று சொல்ல.." சரி நாங்க புறப்படுகிறோம்" என்று வெளியேறினர் இரண்டு பேருமே..

காலையில் ஆபீஸ் என்றால் சாயங்காலம் வீட்டுக்கு வந்த உடனேயே தினமும் மாதவனின் தந்தையை சென்று பார்ப்பதை வழக்கத்தில் வைத்திருந்தாள்.

முதலில் ஒரு சில நாட்கள் இவளை நிராகரித்தாலுமே பின்பு அவர் தன்னுடைய மனநிலையை மாற்றிக்கொண்டார் .

"எதுக்காக திரும்பத் திரும்ப என்னை பார்க்க தேடி வர்ற சக்தி ..

நிச்சயமா நீ ஆசைப்படுறது நடக்காது ".

"அங்கிள் அது நடக்குதா இல்லையாங்கிறது விஷயமே இல்ல இப்போதைக்கு நான் ஆபீஸ்ல வேலை செய்கிறேன் .

அப்புறமா உங்க வீட்டு பக்கத்துல இருக்கிறேன். உங்கள கவனிக்கறது என்னோட கடமை .

அதை இல்லைன்னு சொல்லி தடுக்காதீங்க."

".கடமையா அது எப்படி கடமையாகும் கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு".

" என்ன ஆனாலும் சரி அங்கிள் என்னோட அப்பாவோட பிரண்டு நீங்க ..

அது மாறிடாது எத்தனை வருஷம் ஆனாலும் சரி அந்த பேர் அப்படியே தான் இருக்கும் .

இன்றைக்கு நீங்களும் அப்பாவும் எதிரெதிர்ல முகத்தை திருப்பிக்கிட்டு இருந்தாலுமே.. ஒரு காலத்துல ரெண்டு பேரும் அத்தனை க்ளாஸ் டா இருந்தவங்க…"

அதுக்காக ..

"அதுக்காக தான் என்னால முடிஞ்ச உதவிய உங்களுக்கு செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கிறேன்.

ஒரு வகையில் இன்றைக்கு இந்த நிலைமைக்கு என்னோட அப்பா தான் காரணம் ".

"அப்படி சொல்லிட முடியாது சக்தி என்னோட ஸ்ட்ரஸ் அளவுக்கு அதிகமான மன அழுத்தம்..

ஒரு பக்கம் பேரலைசாகி விழுந்துட்டேன் .இந்த நிமிஷம் வரைக்கும் எழுந்திருக்க முடியல ..

அதனாலயே உன்னோட அப்பா மேல மாதவனுக்கு அத்தனை கோபம்.. இன்னைக்கு என்னோட நிலைமைக்கு நான் தான் முழுக்க முழுக்க காரணம் உனக்கு புரியுதா..

நிச்சயமாக அவனுக்கு நீ யார்ங்கற உண்மை தெரிஞ்சதுன்னா உன்னை தன்னோட பக்கத்திலேயே நெருங்க விட மாட்டான் .அந்த நிமிஷமே உன்னை வெளியேத்திடுவான் புரிஞ்சுக்கோ.."

"அதெல்லாம் நடக்கும் போது பார்க்கலாம் அங்கிள்.. ஏன் இப்படி நெகட்டிவாகவே பேசுறீங்க ஒருவேளை உலக அதிசயமா என்னோட அன்பை புரிஞ்சுகிட்டு என்னை ஏத்துக்க கூட வாய்ப்பிருக்கு இல்லையா.."

"அப்படின்னு ஒன்னு நடந்தா எனக்கு சந்தோசம் தான் ..நிச்சயமா அவனோட ஆசைக்க5 குறுக்க எப்பவுமே நிற்க மாட்டேன் .

எனக்கு இருக்கிறது ரெண்டு பசங்க.. ரெண்டு பேருமே அவங்களுக்கு பிடிச்ச மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழனும் அதுதான் என்னோட ஆசை.."

"சரி அங்கிள் கிளம்பறேன். நான் தினமுமே உங்கள பார்க்க வருவேன்.. அதுக்கு மறுப்பு எதுவும் சொல்லிடாதீங்க என்று நகர்ந்தாள் சக்தி.

பிசியோதெரபி பார்த்த பிறகு மாதவனின் தந்தையின் உடல் நிலையில் நிறைய முன்னேற்றம் இருந்தது .

இப்போது மெல்ல எழுந்து நிற்க துவங்கியிருந்தார் .

அடிக்கடி மாதவனும் குருவும் மாறி மாறி வந்து பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் இருவரும் வராத நாளில் சக்தி சென்று பார்த்துக் கொண்டாள்.

எழுந்து நிற்கும் அவருக்கு தோள் கொடுத்து மெல்ல நடக்க வைக்க முயற்சி செய்தாள்.

" வேண்டாமா இதெல்லாம் நீ செய்ய வேண்டாம். இங்க தான் வேலையாட்கள் இருக்கிறார்களே.."

"வேலை ஆளும் நானும் ஒன்று கிடையாது. என்கிட்ட நீங்க தயங்க வேண்டாம் .

மெதுவா பிடிச்சிட்டு எழுந்திருங்கள்.. டாக்டர் இதை எல்லாம் செய்யணும்னு சொல்லி இருக்கிறார் என்று சில எக்ஸைஸ்களை இவளுமே தனியாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தாள்.

"அப்பா பக்கத்துல நீ இருக்கிறது நிறையவே உதவியா இருக்குது சக்தி.

அப்பா அடிக்கடி சொல்லுவாங்க சக்தி பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு ..யார் வீட்டுக்கு போக கொடுத்து வச்சிருக்கறதோ தெரியலை அப்படின்னு.."

"அண்ணா எனக்கு தெரியுமே.. யார் வீட்டுக்கு போவாங்கன்னு .."

"டேய் நீ பேசாம இருக்கிறயா "என்று குருவை மிரட்டி கொண்டிருக்க.. கேட்டும் கேட்காதவள் போல அந்த அறையில் இருந்து நகர்ந்து வெளியே வந்தாள்.

சரியாக வெளியே வரும் அந்த நேரத்தில் நித்யா நுழைந்து கொண்டு இருந்தாள் .

சக்தியை பார்க்கவுமே அவளுடைய முகம் ஒரு மாதிரி மாறிவிட்டது.

வேகமாக சக்திக்கு அருகே வந்தவள் சக்தி என்று கூற.. வேகமாக அவளுக்கு அருகே சென்று "சொல்லுங்க மேம் என்ன வேணும் எதுக்காக கூப்பிட்டீங்க.."

"இன்னமங நீ இங்கதான் வேலை செஞ்சுகிட்டு இருக்கியா .."

"புரியல மேம் நீங்க கேட்கிறது ."

"நீ பண்ணின காரியத்துக்கு அப்பவே உன்னோட சீட்டை கிழிச்சு கொடுத்து இருப்பான்னு நினைச்சேன் .

ஆனா இந்த மாதவன் சரியில்ல போல இருக்கு . இன்னமும் உன்னை கம்பெனியில வச்சுக்கிட்டு இருக்கிறான். "சொல்லும்.போதே குரு இவர்களுக்கு அருகே வந்து இருந்தான்.

" வாங்க எப்படி இருக்கீங்க ..அண்ணா ரூம்ல இருக்கிறாங்க போய் பேசுங்க.

சக்தி நான் கேட்டேனே.. அந்த டாக்குமெண்ட் எல்லாம் எடுத்துட்டு வர சொன்னேன்ல..

கொஞ்சம் எடுத்துட்டு வரீங்களா ஸ்டோர் ரூம்ல இருக்குது" என்று சொல்ல.." சரி என தலையாட்டிவிட்டு நகர்ந்தாள்.

"நாலு வார்த்தை அவளை நறுக்குன்னு கேட்கலாம்னு வந்தா நீங்க பாதியிலேயே அவளை அனுப்பி வச்சிட்ட குரு".

" நித்யா நான் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது என்று தெரியவில்லை..

சக்தி இங்க ஒரு எம்பிளாயி..வேலையில எந்த குறையும் சொல்லிட முடியாத அளவிற்கு வேகமாக வேலை செய்கிற பொண்ணு .

அப்படி இருக்கும்போது அந்த பொண்ண எப்படி நாங்க வெளியே அனுப்புவோம் .இதை நீ இங்கே யோசிக்கவே மாட்டீயா".

" என்ன குரு நக்கலா பதில் சொல்ற மாதிரி இருக்குது."

" நக்கலா எல்லாம் சொல்லல ரியாலிட்டிய தான் நான் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கிறேன்.

நமக்கு சின்சியரான வேலை செய்றவங்க தானே வேணும் .ஓபி அடிக்கிற ஆள் தேவையில்லை. அவ்வளவு வேகமாக சுறுசுறுப்பா வேலை செஞ்சு கொடுக்கிறவளை நிறுத்தினா நம்ம கம்பெனிக்கு தான் நஷ்டம்.."

"ஆனா அவ லாஸ்ட் டைம் பண்ணினது உனக்கு ஞாபகம் இல்லையா.."

" புரியுது என்ன பண்ணினான்னு நல்லாவே தெரியும் .நானும் தானே ஹாஸ்பிடல் வந்தேன். .

உனக்கு உடம்புக்கு சேராத ஃபுட் கொடுத்துட்டா ஆனா எப்பவுமே அப்படியே நடக்காது இல்லையா..

அன்றைக்கு தெரியாத்தனமா அதுபோல செஞ்சுட்டா..

எதுக்கு இப்போ பழைய கதை எல்லாம் நீங்க மாதவன் கிட்ட போய் பேசுங்க .

எனக்கு கொஞ்சம் அர்ஜெண்டான வேலை இருக்கு "என்று நகர குருவை முறைக்கப்படியே மாதவன் இருந்த அறைக்குள் சென்றாள் .

"மது இங்கு நடக்கிற எதுவுமே எனக்கு பிடிக்கல .குரு என்னடான்னா அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்குது".

" எந்த பொண்ணுக்கு" என்று கேட்க..

" அதுதான் அந்த சக்தி ..அன்றைக்கு அவளால தானே எனக்கு ஃபுட் பாய்சன் ஆகி அவ்வளவு கஷ்டப்பட்டேன்.

அவள இன்னமும் ஏன் வேலைக்கு வச்சுக்கிட்டு இருக்குற ..அடுத்தடுத்து அந்த பொண்ணு இது மாதிரி தான் பண்ணுவா.. உனக்கு சொல்றது புரியுதா.."

"அப்படி எல்லாம் இல்ல நித்யா ..நீ தேவை இல்லாம பயப்படற ."

"சரி அப்பாவுக்கு பிசியோதெரபி பண்ணனும்னு சொன்ன இல்ல என்ன ஆச்சு ..

நான் ஒரு டாக்டரை சக்ஜஸ்ட் பண்ணட்டுமா ".

"அதெல்லாம் வேண்டாம் ஆல்ரெடி அப்பாவுக்கு பிசியோதெரபி துவங்கியாச்சு .

பத்து நாள் ஆகப்போகுது ".

'அப்படியா என்கிட்ட எதுவுமே நீ சொல்லல .."

"நீ பிஸியா இருப்பேன்னு நினைத்தேன் நித்யா.".

" நான் எங்க பிஸி .."

"பிரெண்டுங்க கூட ஊருக்கு போயிருந்தேன்" ..

"அது தான் நானும் சொல்றேன் .கூட ஜாலியா வெளியே போகும்போது கூப்பிட்டு நானும் தொந்தரவு பண்றது அவ்வளவு நல்லதா தெரியல .

அதனாலதான் உன்கிட்ட பேசலை".

" மது நான் உன்கிட்ட நிறைய முறை சொல்லி இருக்கிறேன். என்கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவையில்லை .

எப்ப வேணும்னாலும் நீ என்னை அழைக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன். .

ஆனா நீ இதுவரைக்கும் என்னை ஒரு தடவை கூட கூப்பிட்டது இல்ல தெரியுமா.

சரி அப்பா இப்ப எங்க இருக்கிறாங்க.."

" பக்கத்துல அப்பார்ட்மெண்ட் வாங்கணும்னு சொன்னேன்ல அங்க தான் இருக்காங்க.."

"அப்படின்னா இன்னைக்கு சாயங்காலம் நான் அவங்களை பார்க்க வரட்டுமா ".

"தாராளமா வாயேன்.. யாரு வேண்டான்னு சொன்னாங்க .சரி மாது நான் இப்போ கிளம்புறேன்" என்று வெளியேறினாள்.
 

Kavisowmi

Well-known member
21

"என்னடா சாயங்காலமா நித்யாவை கூப்பிட்டுட்டு அப்பாவை பார்க்க போறியா ."

"ஆமாண்டா வரேன்னு சொல்லி இருக்கிறா.."

"என்னை கேட்டா இதெல்லாம் தேவையே இல்லைன்னு சொல்லுவேன்..

எதுக்காக இந்த பொண்ணு இப்படி வந்து சீன் போடறா.. "

"குரு உன்னை.. பல டைம் சொல்லியாச்சு நித்யா பத்தி எதுவும் பேசாத ..அவ என்னோட பெஸ்ட் பிரண்டு ".

"எனக்கென்னமோ அப்படி தெரியல ஒவ்வொரு தடவை வரும் போதும் மேல விழுந்து விழுந்து பேசுவதை பார்க்கும் போது வேற மாதிரி தான் தோணுது .

ஏற்கனவே ஆபீஸ் குள்ள உங்க ரெண்டு பேர்த்த பத்தியும் பேசிக்கிட்டு இருக்காங்க .

அதுக்கு ஏத்த மாதிரி தான் இந்த பொண்ணு வரும்போது எல்லாம் நடந்துக்கறா..

அண்ணா நான் ஒன்னு சொல்லட்டுமா.. உன் மனசுல இருக்குறத தெளிவா அந்த பொண்ணு கிட்ட சொல்லிடு .

உனக்கு அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இருந்தா தயங்காம அப்பா கிட்ட சொல்லி அடுத்த கட்ட வேலைக்கு பாரு.

இல்லன்னா.. எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லைன்னு தெளிவா சொல்லிடு .

பின்னாடி தேவை இல்லாம பிரச்சனையை பெருசாக்காத .."

"ஏன்டா நீ இத்தனை பயப்படற.."

" நிஜமா தான் சொல்றேன் . சம் டைம்ஸ் எனக்கே பயமா இருக்குது.."

"உனக்கு என்னடா பயம்.. நமக்கு இப்போதைக்கு வர பெரும்பாலான விளம்பரங்கள் நித்தியின் மூலமா தான் வருது .

நித்யாவோட ரிலேஷன்ல இருக்கிற ஒவ்வொரு கம்பெனியுமே அறிமுகப்படுத்தி வைக்கிறா.."

"நாளைக்கு நீ முடியாதுன்னு சொல்லிட்டா அப்படியே ஆப்போசிட்டா மாறி வேலைக்கு பிராப்ளம் ஆச்சுன்னா.. என்ன செய்வ ".

"பைத்தியம் மாதிரி உளரக்கூடாது நித்யா எப்பவுமே அப்படி எதுவும் செய்ய மாட்டா.."

"அப்படி எதுவும் செய்யாட்டி ரொம்ப சந்தோஷம் தான் "என்று நகர்ந்தான்.

"சரி சாயங்காலம் அப்பாவை பார்க்க போகும் போது நீயும் கூட வா புரிஞ்சுதா ".

'நான் எதுக்கு ரெண்டு பேருக்கும் நடுவுல வரணும் இன்னைக்கு வர்ற மாதிரி இல்ல .நான் நேரா வீட்டுக்கு போயிடுவேன். நீ அவங்கள எங்கேயோ கூப்பிட்டு போ எனக்கு அத பத்தி கவலையே கிடையாது."

"ஏன்டா இவ்வளவு சீரியஸா இருக்கிற.."

' பின்ன அந்த பொண்ணு உன் கிட்ட என்ன எதிர்பார்க்கிறான்னு உனக்கு நல்லா தெரியும் .ஆனா இதுவரைக்கும் நீ பிடி கொடுக்காமல் சுத்திக்கிட்டு இருக்குற..

சம்டைம்ஸ் எனக்கு உன்னை பார்த்தா கோபம் வருது ணா ..

மனசுல இருக்குறத டக்குன்னு தெளிவா சொல்லிடு .அதுதான் நல்லது .தேவையில்லாம இன்னொரு பொண்ணோட மனசுல ஆசைகளை வளர்க்க கூடாது."

"என்னடா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லற ..அந்த மாதிரி ஒரு எண்ணத்தில் எப்பவுமே நான் நித்யா கிட்ட பழகலை.. உனக்கு தான் தெரியுமே."

"ஆனா அந்த பொண்ணு உங்கள நெருங்கி வரும் போதும் மறுப்பு எதுவும் சொல்றதில்லை.

அதுவும் எனக்கு தெரியும் .நான் என்ன சொல்றேன்னு உனக்கு தெரியும்.. சீக்கிரமா உன்னுடைய முடிவை தெளிவாக சொல்லிடு.

உனக்கு சக்தியை பிடிச்சிருக்குதுன்னா அதையும் கூட சொல்லிடு .

ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ.."

"சக்திக்கும் எனக்கும் நிறையவே வயசு வித்தியாசம் இருக்குது குரு.

நிச்சயமா அது நடக்காது அதே மாதிரி தான் நித்யாவை நான் பிரண்டா தான் பார்க்கிறேன் .

அதை தாண்டி இதுவரைக்கும் யோசிச்சது இல்ல .அதனால இதுவும் நடக்காது ".

"என்னவோ செய்..நான் இனிமே இதுல தலையிடலை.. சக்தி பொண்ணு மேல உங்களுக்கு பெருசா அபிப்ராயம் இல்லாட்டி அந்த பொண்ண கொஞ்சம் நகர்த்தியே வைங்க .

அடிக்கடி பேச வேண்டாம் தேவையில்லாமல் ஒவ்வொருத்தர் கூடவும் இணைச்சு உங்க பேர் வரது எனக்கு பிடிக்கல "சொல்லிவிட்டு வெளியேற யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.

சொன்னது போலவே மாலை சரியாக நித்யா ஆபிஸருக்குள் நுழைய.. சற்று நெற்றி சுருக்கி சக்தி பார்த்தலே தவிர வேறு ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

நிந்தியாவை தேடி சென்று பேசுவதற்கும் சக்திக்கு விருப்பமில்லை .

அதனால் எதுவும் சொல்லாமல் வேலை முடியவும் ஜான்வியோடு வெளியேறி இருந்தாள்.

ஏழு மணியை தொடும் போது மாதவன் ,குரு ,நித்யா மூவருமே மாதவனின் தந்தையை பார்க்க வந்திருந்தனர்.

இவளிருந்த அறையைத் தாண்டி தான் அவர்கள் செல்ல வேண்டும்.

செல்லும் போது பார்த்தவள் வேறு எதுவும் சொல்லவில்லை .

கதவை அடைத்துக் கொண்டு சென்று சோபாவில் அமர்ந்து கொண்டாள் மனம் முழுக்க படபடப்பாக இருந்தது சக்திக்கு.

இத்தனை நாள் இல்லாத பதட்டம் தற்போது அவளுக்கு தோன்றியிருந்தது.

ஒருவேளை ஆபீஸில் பேசுவது போல நித்யாவை திருமணம் செய்து கொள்வானோ என்று தோன்றவும் இன்னமும் பதட்டம் அதிகமாக ..முகம் எங்கும் வியர்வை பூசிக்கொள்ள நிலை இல்லாமல் இங்குமங்குமாக நடை பயின்று கொண்டு இருந்தாள்.

சரியாக 15 நிமிடம் கழித்து கதவு தட்டப்படும் சத்தம் கேட்க ..ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது.

நித்யா தான் வருகிறாள் என்கின்ற பதட்டத்தோடு வேகமாக சென்று கதவை திறந்தால் சக்தி.

நின்றது என்னவோ குருவும் மாதவனும் தான்.

" என்ன முகம் எல்லாம் வேர்வை பூசி இப்படி வந்திருக்கிற ..உடம்புக்கு எதுவும் சரியில்லையா சக்தி "என்று சற்று பதட்டத்தோடு மாதவன் கேட்க்க திருத்திரு என விழித்தாள் சக்தி .

"என்ன சக்தி அண்ணா கேட்கிறது புரியலையா ..என்ன ஆச்சு ஏதாவது உடம்புக்கு சரியில்லையா .

இப்படி திகைத்துப் போய் பாக்குறீங்க .."

"நித்யா மேடம் வந்து இருந்தாங்க இல்ல *.

"ஆமா வந்துட்டு அப்பவே போயாச்சு".

" அதுக்குள்ள போயிட்டாங்களா.." சட்டென நேரத்தை பார்க்க.."நித்யா பத்து நிமிஷத்துக்கு மேல எல்லாம் நின்னு பார்க்க மாட்டா ..
அவங்க அப்படித்தான் சக்தி "என்று குரு சொல்ல ..குரு என்று சற்றே அதட்டினன் மாதவன் .

"ஏன் ணா ஏன் ..இந்த நித்யாவை சொன்னா உங்களுக்கு அவ்வளவு கோபம் வருது .இனி நான் எதுவும் சொல்லல போதுமா.."

"ப்ளீஸ் சண்டை எல்லாம் எதுவும் போட வேணாம் .இப்படி உட்காருங்க என்ன சாப்பிடுறீங்க.."

"இன்னைக்கு நானும் அண்ணாவும் வெளியே போய் சாப்பிடறதா பிளான் பண்ணிணோம்.. நீயும் வரியா.."

" வரேனே.."

" இப்பவே புறப்பட்டு வா .போய் சாப்பிட்டுக்கிட்டு அப்படியே உன்னைய இங்க வந்து டிராப் பண்ணிட்டு நாங்க புறப்படுகிறோம்."

குரு..

"சாருக்கு நான் வருவது பிடிக்கலைன்னு நினைக்கிறேன் நீங்க ரெண்டு பேருமே போய்க்கோங்க .நான் வழக்கம்போல ஏதாவது செஞ்சு சாப்பிட்டுக்குறேன்".

" அதுக்குள்ள கோபமா சக்தி..புறப்படு நானும் உன்னை அழைச்சிட்டு போற ஐடியாவில் தான் வந்தேன்."

"அப்படின்னு சரி ரெண்டு நிமிஷம் இருங்க வந்துடறேன்" என்று வேகமாக துள்ளலோடு நகர ..குரு மாதவனை பார்த்து சிரித்தான்.

"என்னடா சிரிக்கிற .."

"இல்ல நித்யா கூட இவ்வளவு நேரம் நீ இருந்த.. அப்பா கூட பேசும் போது என்னவோ பார்மாலிட்டிக்கு பேசுற மாதிரி ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தீங்க .

பிடிக்காத ஒருத்தர் கிட்ட சிரமப்பட்டு வார்த்தைகளை தேடுற மாதிரி இருந்தது ஆனா இங்க வந்ததுக்கு பிறகு எவ்வளவு இயல்பா பேசுற புரியுதா..

ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற வித்தியாசம். உண்மையை சொல்றேன் டா..

சக்தியை பிடிச்சிருக்குனா யோசிக்கவே வேண்டாம் ப்ரொபோஸ் பண்ணிடுங்க.

சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க.. வயசு வித்தியாசம்னு கதை சொல்ல வேண்டாம் .

பத்து வருஷம் எல்லாம் இப்போ ஒண்ணுமே இல்ல முன்னாடி எல்லாம் 20 வருஷம் வித்தியாசத்தில் கூட கல்யாணம் பண்ணி இருக்கிறாங்க ."

"டேய் எந்த காலத்தில் இருக்கிற ..இந்த பேச்சை இத்தோட விடு .அவ முன்னாடி ஏதாவது சொல்லிகிட்டு இருந்தா நல்லா இருக்காது பாத்துக்கோ ".

"சரி சரி நான் எதுவும் சொல்லல.. நான் உங்க பக்கமே வரல போதுமா.."

"போலாமா சார் இந்த டிரஸ் ஓகே தானே "என்று கேட்டபடி வர.. போட்டிருந்தது ஒரு முழு பாவாடை மேலே ஒரு கிராப்ட் டாப் போன்ற ஒரு பிளவுஸ் அதற்கு மேண்டலாக ஒரு சால் நீளமாக கைகளில் பிடித்து வர.. "சோ பிரிட்டி "என்று குரு குரல் கொடுத்தான்.

" ரொம்ப தேங்க் யூ சார் .வாங்க போகலாம்" என்று வெளியே வர கூடவே இருவரும் பின் தொடர்ந்தனர்.

"சரி அண்ணா எனக்கு கொஞ்சம் வேலை இருக்குது .நான் ஒரு பிரண்டு பர்த்டேக்கு வரதா சொல்லி இருந்தேன்.

இப்ப தான் ஞாபகம் வருது நான் அப்படியே போகிறேன் .

நீங்க ரெண்டு பேரும் ரெஸ்டாரண்ட்ல போய் சாப்பிட்டுக்கிட்டு பிறகு சக்தியை இங்கே கொண்டுவந்து விட்டுடுங்க.."

" குரு என்ன சொல்ற யாரோட பிறந்தநாள் ..என்றைக்கு…

உனக்கு தனியா இன்விடேஷன் வந்ததா .."

"என்ன ணா.. இத்தனை கேள்வி கேட்கறீங்க.. இப்பதான் மெசேஜ் வந்திருக்கு பாருங்க" என்று காட்ட உண்மையிலேயே பிறந்த நாளுக்காக இவனை அழைத்திருந்தனர் .

"கட்டாயமாக போய் தான் ஆகணுமா".

" கட்டாயமாக போய் தான் ஆகணும் ணா.. ஏன்னா என்னுடைய சின்ன சின்ன சந்தோஷத்துல கூட இருந்தவன் அதனால கட்டாயமா நான் அங்க போய் ஆகணும்.

நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு பேசிகிட்டு இருங்க பை "என்று வெளியேறினான்.

உண்மையில் மாதவன் அந்த மெசேஜை நன்றாக படித்து இருந்தால் உண்மை நிலை புரிந்து இருக்கும் .

சென்ற வாரத்தில் வந்த பர்த்டே பார்ட்டிக்கான அழைப்பை தான் தற்போது காட்டியது.

நேரத்தையோ டேட்டையோ சரியாக கவனிக்கவில்லை மாதவன்..

எளிதாக வெளியே வந்தவன்.. பூ ..என்று ஊதியப்படியே நடந்தான்.

" இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறதுக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுவேன் போல இருக்கு ..

அந்த பொண்ண பிடிச்சிருக்கறது நல்லாவே தெரியுது ஆனா மனசுக்குள்ள இருக்கிறதை சொல்ல அவ்வளவு கஷ்டமா இருக்குது.

என்னதான் செய்றதோ தெரியலை.. இவங்க ரெண்டு பேரும் எப்ப தான் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுகிட்டு பேசுவாங்க எனக்கு தெரியவே இல்லை.. "சொல்லியபடி சற்று தொலைவில் இருந்த ரெஸ்டாரண்டை நோக்கி தன்னுடைய வண்டியை செலுத்தினான் குரு.
 

Kavisowmi

Well-known member
22

"குரு காரை எடுத்துட்டு போய்ட்டாங்க .நீங்க எப்படி வீட்டுக்கு போவீங்க ".

"இன்றைக்கு வீட்டுக்கு போகலை சக்தி கொஞ்சம் ஆபீஸ்ல வேலை இருக்குது . சாப்பிட்டுக்கிட்டு ஆபீஸ்ல தான் செட்டில் ஆக போறேன்.

அதனாலதான் அவன் வண்டியை எடுத்துட்டு போறான்.."

" ஓ சரி சரி "என்று நடக்க அருகில் இருந்த ரெஸ்டாரண்டில் இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர் .

தனக்கு பிடித்தமான உணவுகளை ஆர்டர் செய்ய.. சக்தியும் தனக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தாள்..

உணவுகளை கொண்டு வந்து வைக்கவுமே இருவருமே ஷேர் செய்து சாப்பிட ஆரம்பித்தனர் .

"இது எனக்கு பிடிச்ச டீஷ்.. இதை நீங்க டேஸ்ட் பண்ணி பாருங்க" என்று மாதவனுக்கு நகர்த்த மாதவனுமே அவன் வாங்கி இருந்த உணவை இவளுக்கு பாதியாக பிரித்துக் கொடுத்தான்.

"தேங்க்ஸ் இந்த நாளை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்.."

" நானும் கூட தான் சக்தி..எனக்கு இது புது அனுபவம் .உன் கூட இருக்கிற இந்த நிமிஷம் ரொம்ப ஹேப்பியா உணர்கிறேன்."

" நானும் தான் மாதவன் சார் ".

"இனிமே கூட இந்த சார் வேணுமா.."

" வேற எப்படி கூப்பிடறது".

"நீ தான் கண்டுபிடிக்கணும்" என்று எழுந்து நகர புன்னகையோடு பார்த்திருந்தாள் சக்தி.

வீட்டுக்கு சென்ற பிறகு கூட மாதவனின் ஞாபகமாகவே இருந்தது சக்திக்கு..

அன்றைக்கு பேசியது நடந்தது என ஒவ்வொன்றையும் நினைத்தவளுக்கு முகம் பூரிப்பில் சிவந்திருக்க ..

அதே நேரத்தில் சக்தியின் தந்தை அழைத்திருந்தார் .

"இந்த நேரம் கூப்பிட்டு இருக்கீங்க ..என்ன விஷயம் சொல்லுங்கப்பா".

" அடுத்த வாரத்துல சென்னை வரேன் சக்தி.. ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு .

அந்த மீட்டிகிற்கு நீயும் வரணும்னு ஆசைப்படறேன் ".

"அப்பா என்னால வர முடியுமான்னு சொல்ல முடியாது. ஏன்னா எனக்கு ஆபீஸ்ல வேலை இருக்கும்".

" சும்மா எந்த சமாதானமும் சொல்லக்கூடாது சக்தி. நீ கட்டாயமா வந்தாகணும்.
முக்கியமான விஷயம் இருக்குது ".

"என்னப்பா சொல்லுங்க .."

"அந்த மீட்டிங்ல வர்றது எல்லாருமே பெரிய ஆளுங்க.. கன்ஸ்ட்ரக்சன் சம்பந்தமா நிறைய பேரு வராங்க..

எப்படியும் பின்னாடி ஆபீஸை பார்க்க போறது நீதான.. அதனால நீ கட்டாயம் அதுல கலந்துக்கணும்.

ஏன்னா நான் எல்லார்கிட்டயும் அறிமுகப்படுத்த போறேன்.. நான் ஓய்வு பெறும் போது என்னோட பொண்ணு தான் இதை எல்லாம் கவனிப்பா அப்படின்னு சொல்ல ஆசைப்படறேன்."

" அப்பா எதுக்காக இத்தனை அவசரப்படுறீங்க ..ஒருவேளை அக்காங்க மாதிரி நானும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டா என்ன செய்வீங்க .

எனக்கு அதுல விருப்பமில்லாட்டி என்னோட விருப்பத்தை பத்தி நீங்க யோசிக்க மாட்டீங்களா.."

"சக்தி எனக்கு உன்ன பத்தி நல்லாவே தெரியும் .என் பேச்சுக்கு நீ மறுப்பு சொல்ல மாட்டே அப்படிங்கிறதுல எனக்கு அத்தனை நம்பிக்கை இருக்குது.

என்னோட ஆசை கனவு எல்லாமே என்னோட அஞ்சு பொண்ணுங்கள்ல ஒருத்தரையாவது இந்த பில்டுக்கு கொண்டு வரணும்னு தான்.

நாலு பேரும் ஏமாத்திட்டாங்க ஆனா நீ என்னை ஏமாத்த மாட்டேன்னு..இந்த நிமிஷம் வரைக்கும் நம்புறேன் .

என்னோட ஆசையை நிறைவேற்றி வைக்கிற கடமை உனக்கும் இருக்குது ".

"ப்பா.."

" காலையில எதுக்காக மாத்தி மாத்தி நம்ம பேசணும். அடுத்த வாரம் அங்க தானே வருவேன்.
அப்போ நம்ம பேசிக்கலாம்".

" அப்பா ப்ளீஸ் நான் சொல்றத கேளுங்க.."

" எப்படியும் நா வந்து மீட்டிங் அட்டென்ட் பண்ணும் போது உன் கூட தான் தங்குவேன். நம்ம நேரடியா பேசிக்கலாம்."

" நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ் "இவளுடைய பேச்சு எதையும் கேட்கவில்லை போனை வைத்திருந்தார் .

"கடவுளே காலையிலேயே ஏன் தான் என்னை இப்படி டார்ச்சர் செய்வாங்களோ தெரியல ..

நான் சொல்றத இவங்க புரிஞ்சுக்கவே மாட்டாங்களா..

நான் எப்படி …

நான் எப்படி இவருடைய ஆசையை நிறைவேற்ற முடியும் .நான் மாதவனை கல்யாணம் பண்ணினா..

அந்த கல்யாணத்துக்கு பிறகு அப்பா உங்களை பார்க்க விடுவாரா இல்லையாங்கறதே எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியல .

ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு நிச்சயமாக அவரோட மனசை மாத்தி உங்கள வந்து பார்ப்பேன்.

உங்களுக்கும் மாதவனுக்கும் நடுவுல இருக்குற இந்த மன கசப்பை ஒன்னும் இல்லாம செய்வேன் .

அதுல எல்லாம் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு ..ஆனா அதுவரைக்கும் ..

அதுவரைக்கும் நீங்க ஆசைப்படறது எப்படி நடக்கும் எனக்கு ஒண்ணுமே புரியலப்பா.."புலம்பியபடியே ஆபீசருக்கு புறப்பட்டாள்.

ஆபீஸ்ல கூட அன்றைக்கு அத்தனை குழப்பம் ..செய்த வேலை ஒன்றையும் ஒழுங்காக முடிக்கவில்லை .

எல்லாவற்றிலும் தடுமாற்றம் நிறைந்து காணப்பட்டது .

ஒரு கட்டத்திற்கு மேல் மாதவனே அழைத்து பேசியிருந்தான்.

" சக்தி ஏதாவது பிரச்சனையா பர்சனலா ஏதாவது பிரச்சனைனா ப்ரீ யா விட பாருங்க .

மனசு சரியில்லாட்டி எந்த வேலையிலேயுமே கவனம் செலுத்த முடியாது .

நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா.. நீ வேணும்னா இன்றைக்கு லீவு எடுத்துக்கோ.. சொல்றது புரியுதா ..

காலையில இருந்து நான் உன்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

நிறைய குழப்பம் உனக்குள்ள.. என்ன ஆச்சு ..செஞ்ச வேலை எதுவுமே சரியா இல்ல .
சில நேரம் இப்படித்தான் இருக்கும் ".

"புரியுது சார் தப்பு என் பெயரில் தான். இனிமே இது மாதிரி நடக்காது".

" ஹலோ நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியுதா ..

ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருந்தா நீ இன்னைக்கு லீவு எடுத்துக்கோன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறேன் .

மறுபடியும் ஒர்க் பக்கம் போனா என்ன அர்த்தம் ".

சார் வந்து ..

"இன்னும் புரியலையா வீட்ல போய் ரெஸ்ட் எடுன்னு சொல்கிறேன் சக்தி நாளைக்கு வேலையை வந்து பாத்துக்கலாம் .

இந்த வேலை எங்கேயும் ஓடிப்போயிடாது .வீட்டில் போயி ரிலாக்ஸா ரெஸ்ட் எடு. பிறகு வேலை செய்ய முடிஞ்சா வீட்ல உட்கார்ந்து கூட உன்னோட லேப்டாப்ல இந்த வேலையை முடிச்சு கொடுக்கலாம்.
நான் எதுவும் சொல்ல மாட்டேன்".

" தேங்க்யூ சார் தேங்க்யூ வெரி மச்" என்று வேகமாக நகர.." ஒரு நிமிஷம் சக்தி.. என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சுக்கலாமா.."

" அது பர்சனல் விஷயம் சார்.."

"ஓகே எனக்கு தெரிய கூடாத விஷயமா சரி நாளைக்கு பார்க்கலாம்.."

" இல்ல சார் உங்களுக்கு தெரியாதுன்னு எதுவும் கிடையாது என்னோட லைஃப்ல..

நிச்சயமா உங்ககிட்ட சொல்லுவேன் ஆனா இப்போ இல்ல ..இப்ப கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறேன் நிஜமாவே வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு சரியாயிடும்னு நம்புறேன்" என்று நகர்ந்தாள்.

ஆனால் வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே வேறு சம்பவம் நடந்திருந்தது .

மாதவனின் தந்தை எதையோ எடுப்பதற்காக தவறி சேரியிலிருந்து விழ வீடு பரபரப்பாக இருந்தது.
அருகில் இருந்ததினால் வேகமாக சென்றது முதலில் இவள் தான்.

" என்ன ஆச்சு அங்கிள்..டாக்டரை கூப்பிடனுமா" பதட்டத்தோடு கேட்க அங்கே பதில் சொல்லும் நிலையில் அவர் இல்லை .

ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றிருந்தார் .

வேகமாக பதட்டத்தோடு மாதவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

மாதவன் சார் அப்பா கீழே விழுந்துட்டாங்க . மயக்கமா இருக்கிறாங்க. எழுப்பினா எந்த அசைவும் தெரியல ..

நான் ஆம்புலன்ஸ்க்கு கூப்பிட்டுட்டேன் பக்கத்துல எந்த ஹாஸ்பிடல் கொண்டு போகணும். அதை சொல்லுங்க ..நான் நேரா அழைச்சிட்டு போறேன் .பின்னாடியே வந்து சேருங்க".

மாதவனும் கூட ஆபீஸில் இல்லை வேறு ஒரு வேலையாக சற்று தொலைவில் சென்றிருந்தான்.

குருவும் கூட ஆபீசில் அந்த நிமிடம் இல்லை .மாதவன் நிறைய பதட்டத்தோடு.." சக்தி அப்பாவை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ.. வழக்கமாக செக் பண்றது இந்த ஹாஸ்பிடல்ல தான் .

போன் பண்ணி சொல்லிட்டேன் அவங்க ரெடியா இருப்பாங்க போனதும் கூப்பிடு .

நான் இங்க ஒரு வேலை விஷயமா வெளியே வந்திருக்கிறேன் .இப்பவே உடனே புறப்படுறேன்."

" பயப்பட எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன் மாதவன் சார் .உங்க வேலையை முடிச்சிட்டு நீங்க நேரா வாங்க .நான் ஹாஸ்பிடல் போயிட்டு அப்பப்ப எப்படி இருக்கிறார் அப்படிங்கிறத அப்டேட் கொடுக்கிறேன்.

நீங்க பேசணும் என்கிற அவசியம் கூட இல்ல மெசேஜ் அனுப்பி வைக்கிறேன்.. ப்ளீஸ் பதட்ட படாதீங்க அவங்களுக்கு பெருசா எதுவும் இல்ல .

விழுந்த அதிர்ச்சியில் மயக்கம் ஆயிட்டாங்கன்னு நினைக்கிறேன். வேற ஒன்னும் இல்ல" என்று போனை வைத்தாள்…

"எனக்கு ரொம்ப பதட்டமா இருக்குது சக்தி இந்த மாதிரி நான் யோசிச்சது கூட இல்ல .

அப்பாவுக்கு இப்படியாகும்னு நான் நினைக்கவே இல்ல. எனக்கு ரொம்ப பயமா இருக்குது."

"பதட்ட படாதீங்க சார் நான் கூட இருக்கிறேன். நீங்க பயந்துக்க வேண்டாம்.

என்னோட அப்பாவ நான் எப்படி பார்ப்பேனோ அதே மாதிரி பார்த்துக்கிறேன்.

நீங்க தைரியமா உங்க வேலைய முடிச்சுட்டு வாங்க .நீங்க இங்க வந்த பிறகுதான் நான் நகர்ந்து போவேன் சரிங்களா "என்று சொல்லி போனை வைத்தாள்.

அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து பதட்டத்தோடு ஓடி வந்தான் மாதவன்.

முகம் முழுக்க பயம் அப்பி கிடந்தது..அவனை பார்க்கவும் இவளுக்குமே எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

இன்னமும் கூட உள்ளே அழைத்து சென்றவரை வெளியே அழைத்து வரவில்லை .

அவசர சிகிச்சை பிரிவின்தான் இருந்தா.ர் என்ன நடக்கிறது என்று கூட கேட்க.. டாக்டர் யாருமே இதுவரையிலும் சொல்லவில்லை.

இவளுக்குமே சற்று பயமும் பதட்டமும் தொற்றிக் கொண்டு தான் இருந்தது.

"டாக்டர் உள்ளே செக் பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க சார் .வந்ததும் பார்க்கலாம்னு நினைக்கிறேன்.

நானும் அதுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கிறேன் ."

"இன்னமுமா செக் பண்றாங்க .அப்படி என்னதான் ஆச்சு ".

"எனக்கு தெரியல சார்.. உங்க வீட்ல வேலை செய்ற பொண்ணுதான் ஓடி வந்து பதட்டத்தோட சொன்னா..

சொன்ன பிறகு உடனே இங்கே அழைச்சுட்டு வந்தோம்.."

" கூட இருந்த ரெண்டு பேரும் எங்கே?".

" அவர்களும் கூட தான் இருக்கிறார்கள் .கீழ மெடிக்கல் ஷாப்புக்கு போயிருக்கிறார்கள் "என்று சொல்ல பார்த்துக் கொள்பவர் வேகமாக இவனுக்கு அருகே வந்தார் .

"என்ன ஆச்சு.. என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க .ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ரெண்டு பேர வேலைக்கு வச்சது எதுக்காக?

அப்பாவை கவனமா பார்த்துக்கணும் என்பதற்காக மட்டும் தானே ..

ஒருத்தர் கவனிக்காட்டி கூட இன்னொருத்தர் கவனமா இருப்பிங்கன்னு சொல்லி தானே ரெண்டு பேர்த்த வேலைக்கு வெச்சேன் ."

"வந்து சார் எங்க மேல தப்பு எதுவும் இல்லை .சாருக்கு எப்பவுமே பாத்ரூம் போனா தனியா தான் போகணும் நாங்க யாரும் கூட வரக்கூடாது உங்களுக்கு தான் தெரியுமே..

இன்றைக்கும் அப்படித்தான் போனாங்க ..எதிர்பார்க்கல எப்படியோ தவறி விழுந்துட்டாங்க..

நாங்க கதவை உடைத்து அவரை இங்கே அழைச்சிட்டு வரதுக்குள்ளயே கிட்டத்தட்ட அரை மணி நேரம் தாண்டிடுச்சு" என்று சொல்லும் போது இவனாலுமே பதில் சொல்ல முடியவில்லை .

தந்தை மகனாக இருந்தாலும் கூட தன்னுடைய அந்தரங்க விஷயத்தில் நெருங்க யாரையும் விட மாட்டார்.

என்ன ஆனாலும் சரி சுயமாகவே தன்னுடைய வேலைகளை செய்து கொள்ள நினைப்பவர் .

இது இயல்பிலேயே அவருடைய குணம்..

எதுவும் பேசாமல் ஓரமாக சென்று அமர்ந்தான் மாதவன் .மனதில் அத்தனை குழப்பம் ,தவிப்பு என மொத்தமாக போட்டி போட ..எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள் சக்தி.

ஆறுதலாக அவன் கரங்களை தன்னுடைய கரங்களுக்குள் எடுத்து வைத்துக் கொண்டவள் .மெல்ல லேசாக தட்டி தர சட்டென கண்கள் கலங்கி இருந்தது மாதவனுக்கு..

"என்ன சார் இது ஏன் இப்படி கண் கலங்கறிங்க ..குரு சார் எப்பவுமே சொல்லுவாங்க.

எங்க அண்ணா ரொம்ப தைரியசாலி ..அண்ணா உடைந்து நான் பார்த்ததில்லை என்று..

சின்ன விஷயத்துக்கு இப்படி ரியாக்ட் பண்ணினா என்ன அர்த்தம்!!"

" உனக்கு தெரியாது சக்தி அப்பாவை பத்தி ஒரு காலத்துல எவ்வளவு கம்பீரமா இருந்தவர் தெரியுமா..

இன்றைக்கு அவர் இருக்கிற தோற்றம் தினம் தினம் அவரை பார்க்கும் போது அவ்வளவு கஷ்டமா இருக்குது..

அவருக்கு எதுவும் ஆகிடாது தானே..

உனக்கு தெரியாது சின்ன வயசுலயே அம்மா இறந்துட்டாங்க.. குருவுக்கு இருந்தா நாலு வயசு தான் இருக்கும்.

அன்னையிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் எங்க ரெண்டு பேரையும் அவ்வளவு நல்லா பார்த்து வளர்த்தவர்..

எங்களுக்கு நல்லது சொல்லிக் கொடுத்து நல்ல பள்ளிக்கூடத்துல சேர்த்து படிக்க வைத்து.. இப்படி அவரோட பாதி ஆயுட்காலத்தை எங்களுக்காக மட்டும் தான் செலவு செஞ்சார்.

ஒரு நாளும் தன்னோட சந்தோசத்தை பத்தி யோசிச்சது கூட கிடையாது .

அவர் நினைச்சிருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணி இருக்கலாம்.

ஏன் எங்க ரெண்டு பேர்த்த கூட யாராவது ஒருத்தரோட பொறுப்புல விட்டுட்டு ஜாலியா அவர் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி இருக்கலாம் .ஆனா என்னைக்குமே அவர் அது மாதிரி நடந்துக்கிட்டது இல்ல .

எப்பவுமே அவரோட கவனத்துல நானும் குருவும் மட்டும் தான் இருப்போம் .

இன்னைக்கு நாங்க எல்லாம் அவருக்கு செய்யறது ஒண்ணுமே கிடையாது .

அன்பு மட்டும் தான் எங்களுக்கு கொடுத்தார் .திருப்பி நாங்க வளர்ந்து ஓரளவுக்கு நல்ல ஸ்டேஜ் வரும் போது நாங்க சம்பாதிக்கிற எந்த ஒரு பொருளையும் அனுபவிக்க அவருக்கு கொடுத்து வைக்கலை.

ஒவ்வொரு நிமிஷமும் இதைப்பற்றி நாங்க நிறையவே பேசுவோம் .

அவர் துறவி மாதிரி தான் ஒரு வாழ்க்கை வாழ்ந்தார் . இன்றைக்கும் கூட அப்படித்தான் வாழ ஆசைப்படறாரு" சொன்னவனின் குரல் உடைய சட்டென தன்னுடைய தோளில் மாதுவனை சாய்த்து கொண்டாள்.

" நான் சின்ன பொண்ணு தான் சார் எனக்கு பெருசா ஆறுதல் சொல்ல தெரியாது ஆனா அப்பாவுக்கு எதுவும் ஆகாது .

அது எனக்கு நல்லா தெரியும்.. டாக்டர் வந்ததும் கேட்டு தெரிஞ்சுக்கலாம் .வெயிட் பண்ணுங்க .பதட்டமாக வேண்டாம்" ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்திலேயே குரு அங்கே வந்து இணைந்து கொண்டான்.

கிட்டத்தட்ட 4 மணி நேரம் கழித்து டாக்டர் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்தார் .

"எல்லா விதமான டெஸ்டும் எடுத்து பார்த்தாச்சு மாதவன்.. அப்பா விழுந்ததுல தலையில ரத்தம் கட்டி இருக்குது.

கொஞ்சம் ஹெவியா.. அதை உடனே நாம ரிமூவ் பண்ணி ஆகணும் இல்லனா அவங்களுக்கு இரத்தம் உறைய வாய்ப்பிருக்கு .

அப்படி ஆச்சுன்னா என்ன ஆகுன்னு சொல்ல முடியாது அதனால உடனே நம்ம ஆப்ரேஷன் பண்ணி ஆகணும் அதற்கான வேலையை பார்க்க சொல்லி இருக்கிறேன்" என்று சொல்ல இன்னும் பதற ஆரம்பித்தனர் இரண்டு பேருமே..

சக்தி அருகே இருந்து நீண்ட நேரம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். பிறகு குருவிடம்..

"வேற யாரையாவது இங்கே வர சொல்லனுமா.. உங்களுக்கு சப்போர்ட்டிங்கா இருக்கிற மாதிரி.. வேற யாராவது இருக்கிறார்களா.." என்று கேட்க..

இல்லை என்பது போல தலையாட்டினான்." எனக்கும் அண்ணாவுக்கும் இருக்கிற ஒரே ஒரு உறவு அப்பா மட்டும்தான் .

இத்தனை நாளா அப்பா தான் வழி காட்டினாங்க ..இன்றைக்கு ஒரு அளவுக்கு நல்லா இருக்கிறோம்.

சொந்தம் யார்கிட்டயும் போய் நின்னதே கிடையாது .ஆரம்ப நாட்களில் இருந்து மிடில் கிளாஸ் வாழ்க்கை தான் நாங்க வாழ்ந்தது.
பொதுவாக சொல்ல சொன்ன எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள் சக்தி.

ஒரு வேளை தந்தையோடு இணக்கமாக இருந்திருந்தால் இந்நேரம் தந்தை அருகில் இருந்திருப்பாரோ என்னவோ என்று ஒரு நிமிடம் மனதில் தோன்றி மறைந்தது.

"சரி நாங்க ரெண்டு பேரும் அப்பாவை பார்த்துக்கிறோம் நீங்க வீட்டுக்கு புறப்படுங்க சக்தி நேரம் ஆகிட்டே இருக்குது."

"குரு சார் சொன்னா கோச்சுக்க கூடாது .நான் இப்போ இந்த நிலைமையில் வீட்டுக்கு போனா என்னால நிம்மதியா இருக்க முடியாது .

நிச்சயமா படபடப்பா ,டென்ஷன் ஓட.. என்னால முடியவே முடியாது. நான் இங்கேயே ஒரு ஓரமா உட்கார்ந்து இருக்கிறேன்."

ம்.. என்றவன் தன்னுடைய அண்ணனுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டான்.

ஏதோ ஒரு மௌனம் இருவருக்கும் நடுவே இருக்க.. யார் முதலில் பேசுவது என்பது தெரியாதது போல இறுக்கமாக அமர்ந்திருந்தனர் இரண்டு பேருமே ..

சற்று தொலைவில் சக்தி மௌனமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது இரவு ஏழு மணியை தொடும் போது ஆப்பரேஷனுக்காக அழைத்து சென்றிருந்தனர்..

படபடப்பான பதட்டமான நிலை மூவருக்குமே..

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் கழித்து ஐசியூவிற்கு மாற்றி இருப்பதாக கூறினர் .

இன்னமும் 24 மணி நேரம் கழிந்த பிறகு நிலைமையை சொல்ல முடியும் என்று சொல்லி இருக்க.. நேரம் நகர ஆரம்பித்தது.
 

Kavisowmi

Well-known member
23

இரண்டு நாட்கள் தாண்டி இருந்தது மெல்ல மெல்ல சரியாகி இருந்தது மாதவனின் தந்தைக்கு..

இப்போது கூட ஐசியூவில் தான் இருந்தார். எந்த விதமான இன்பெக்ஷனும் ஆகிவிடக்கூடாது என்று சொல்லி இருக்க.. நர்ஸ்கள் மட்டுமே உள்ளே இருந்து பார்த்துக் கொண்டனர்.

இவர்களை கூட குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்க்க அனுமதித்தனர் .

சக்தி அடுத்த நாள் காலையில் வீட்டுக்கு வந்து இருந்தாள்.

வழக்கம் போல ஆபீசருக்கு புறப்பட்டு சென்றிருந்தாள். ஆபீஸில் வழக்கமான வேலை எப்போதும் போல நடந்து கொண்டிருந்தது.

குருவும் மாதவனும் ஆபீசருக்கு வரவில்லை . ஏன் என்று ஆபீஸ்ல இருந்த யாருக்குமே தெரிவித்திருக்கவில்லை .

ஏதோ முக்கியமான வேலையாக வெளியூர் சென்று இருக்கிறார்கள் என்கின்ற பேச்சு மட்டுமே அங்கே இருந்தது .

இவளுக்கு உண்மை தெரிந்தாலுமே யாரிடமும் சொல்லவில்லை ஜான்வியை தவிர ..

ஜான்விக்கு நிலைமை தெரிந்த உடனேயே குருவிற்கு அழைத்து பேசியிருந்தாள்.

"அப்பாவை பார்க்க ஹாஸ்பிடல் வரலாமா "என்று கேட்க.. "இப்போதைக்கு வேண்டாம் ஜான்வி.. இன்னமும் ஐசிவியில் தான் இருக்கிறார்கள்.

எங்களையே விடறது இல்லை.. நல்லா இருக்காங்க அந்த ஒரு தகவல் மட்டும் தான் எங்களுக்கு தந்துக்கிட்டு இருக்காங்க .

சுயநினைவு வரல.. சுயநினைவு வந்த பிறகுதான் மத்தவங்களை பார்க்க அனுமதிப்பாங்க .

அதனால சிரமப்பட்டு இங்க வர வேண்டாம். கேட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் "என்று போனை வைத்திருந்தான்.

ஜான்விக்கு சற்று மனம் சுனங்க தான் செய்தது .தன்னை அவன் தன்னுடைய குடும்பத்தோடு சேர்க்கவில்லையோ என்கின்ற எண்ணம் வர தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.

நீ என்ன லூசா? ஏன் இப்படி எல்லாம் உனக்கு தோணுது .நீ ரொம்ப நாள் எல்லாம் குரு கிட்ட பேசி பழகலை..

இருந்தா அதிகபட்சம் இந்த ரெண்டு மாசம் தான் பேசி இருக்கிற ..அதுக்குள்ள இத்தனை உரிமை எப்படி தருவார் என்று நீ நினைக்கிற.. என்று இன்னொரு மனம் கூறவும் சமாதானமாகி இருந்தாள்.

சரி காலம் இருக்கிறது இல்லையா அது எல்லாவற்றையும் மாற்றும் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

நான்கு நாட்கள் தாண்டி இருந்தது இப்போது ஒரு அளவிற்கு கொஞ்சமாக தேறி இருந்தார்.

சுயநினைவு வந்த பிறகு இரண்டு மகன்களையும் கண்டுகொண்டு நலம் விசாரிக்க இருவருக்குமே நிறைய மகிழ்ச்சி..

அன்றைக்கு காலையிலேயே வழக்கம் போல வேகமாக புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சக்தி.

மனதுக்குள் மாதவனை பற்றி தான் அசை போட்டுக் கொண்டிருந்தது.

ரெண்டு நாளா ஆபீஸ்க்கு வரலை.. ஹாஸ்பிடல்ல எப்படி இருக்கறார்..ஒண்ணுமே தெரியலை..

ஒரு அளவுக்கு மேல நெருங்கவும் முடியல ..கோபத்தோட ஏதாவது பேசிட்டா என்ன செய்யறது. என்கிற பதட்டமும் நிறைய இருக்குது.

உண்மையிலேயே கோவக்காரன் தானே ..

அவன் ஆபீசை பொறுத்தவரைக்கும் அவனுக்கு சிரிக்கவே தெரியாது..

இந்த நிலை சற்று மாறியது சக்தியிடம் மட்டும்தான்.. தன்னுடைய இருக்கத்திலிருந்து சற்றே வெளியே வந்ததும் கூட இவளுடைய சிறுபிள்ளைத்தனமான செயல்களை பார்த்து தான்.

யோசனையோடு வேலைக்கு கிளம்பினாள். வழக்கமாக பத்து மணிக்கு தான் ஆபீஸ் திறப்பது.. ஆனால் ஒன்பது மணிக்கு எல்லாம் இன்றைக்கு புறப்பட்டு இருந்தாள்.

ஏதோ ஒரு உள்ளணர்வு சீக்கிரமாக செல்ல வேண்டும் என்று எடுத்துரைக்க அவசரமாக புறப்பட்டாள் சக்தி .

அங்கே ஆபீசருக்கு சென்றபோது வாட்ச்மேன் ஏற்கனவே ஆபீசை ஓபன் செய்து வைத்திருந்தான்.

சபா கூட வந்திருப்பதாக சொல்ல சபாவை தேடினாள்..

சபா கேண்டீனில் அப்போதுதான் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

" ஹாய் சக்தி வா வா.. என்ன இன்னைக்கு சீக்கிரமா வந்துட்ட.." என்று குரல் தர .."சும்மாதான் சார் இன்னைக்கு சீக்கிரமாகவே எழுந்துட்டேன் .சரி ஆபீஸ்ல வந்து வேலையை பார்க்கலாம்னு சொல்லி இங்க வந்தேன்." என்று கூற.." வெரி குட் ரொம்ப சின்சியரா இருக்குற..

உன்னை பார்க்கும் போது எனக்கு பிரமிப்பா இருக்குது .சரி வாயேன்.. வந்து ஏதாவது சாப்பிடு ..
சாப்டியா இல்லையா".

" சார் இப்பவே என்னால சாப்பிட முடியாது 11 மணி ஆகட்டும் இப்பதான் வரும்போது சாப்டுட்டுட்டு வந்தேன்" என்றாள்.

"..."

" சரி நான் ஆபீஸ்க்குள்ள போறேன் சீக்கிரம் வாங்க "என்று கூற .."சரி சரி போ பின்னாடியே வரேன்" என்று குரல் கொடுத்தான்.

இவள் உள்ளே செல்ல அங்கே யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை .

மாதவனின் அறை ஓபன் ஆகி இருக்க வேகமாக அங்கே சென்றாள்.

ஒருவேளை காலையில் வந்திருக்கிறானோ என்கின்ற சிறு ஆர்வம் தோன்ற ..அங்கே சென்று கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்..

அங்கே மாதவன் மொத்தமாக உடைந்த படி இறுகிய கண்கள் கலங்க ,சோர்வாக இருக்கையில் அமர்ந்து இருந்தான் மாதவன்.

ஒரு நிமிடம் இவளுக்கு அவனின் நிலை பார்த்து பதட்டம் ஆக தாய்மை அந்த இடத்தில் பெருக்கெடுத்தது.. வேகமாக அருகே சென்றால் "மாதவன் சார்" என்று அழைக்க.. தான் என்ன செய்கிறோம் என்கின்ற நினைவு இல்லாமல் வேகமாக சக்தியை இழுத்து அணைத்திருந்தான் .

அமர்ந்த வாக்கிலேயே இழுத்து அணைத்தவன் வயிற்றோடு தன்னுடைய தலையை இறுக சாய்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான் .

இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமுத்தம் கண்ணீராக வெளிவந்து கொண்டிருந்தது.

ஒரு நிமிடம் திகைத்தாலுமே அடுத்தது என்ன செய்வது என புரியாமல் நின்றவள் மெல்ல தலையை கோதி கொடுக்க ஆரம்பித்தாள்.

"எல்லாமே சரியாகிவிடும் மாதவன் சார்.. எதுக்காக அழறீங்க.. அழக்கூடாது. அத்தனை பேருக்கும் நீங்க ஹீரோ தெரியுமா ..

இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் உங்களை பார்க்கும்.போது அத்தனை பிரம்மப்பா பேசுவாங்க.

வந்த நாளிலிருந்து நானும் கூட உங்களை அப்படித்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

ப்ளீஸ் அழாதீங்க அப்பா தான் கிரிடிக்கல் ஸ்டேஜிலிருந்து தாண்டி நார்மலுக்கு வந்துட்டாங்கல்ல..
இன்னுமும் ஏன் வருத்தப்படுறீங்க.."

"அது இல்ல சக்தி.. இந்த வயசுல இன்னும் கஷ்டப்படணுமா..

இன்னும் என்னென்ன ஆகணும்னு அவரோட தலையில எழுதி இருக்குது .

என்னால தாங்க முடியல எங்களுக்காகவே வாழ்ந்தார் அவரோட கடைசி காலம் கம்பீரத்தோடு இருக்கணும்னு ஆசைப்பட்டேன் .

நாளுக்கு நாள் ஒவ்வொன்றும் வரும்போது பயமா இருக்குது."

" நீங்களே உடைந்து போயிட்டா அப்புறம் உங்க தம்பிக்கு யாரு ஆறுதல் சொல்லுவாங்க.

உங்க அப்பாவுக்கு தான் யாரு தைரியம் சொல்லுவாங்க ப்ளீஸ்" என்று தலைக்கோதியப்படியே சமாதானப்படுத்தி கொண்டிருக்க.. சற்று தெளிவானவன் அப்போதுதான் இருக்கும் நிலையை புரிந்து கொண்டு சற்று என் விலகி நகர்ந்தான்.

" சாரி சாரி சக்தி.. குழப்பத்தில் இருந்தேன்.. என்ன செய்யறேன்னு தெரியாம.. ஐ அம் சோ சாரி "என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வேகமாக யாரோ வரும் சத்தம் கேட்க சற்று நகர்ந்து நின்றாள்.

படார் என கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தது நித்யா .

"என்ன மாதவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையா..விழுந்திட்டாங்கலாம்.. நீங்க ஏன் எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லல ..

காலையில் தான் அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாங்க .குரு அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கிறார் .

இந்த மாதிரி அப்பாவுக்கு அடிப்பட்டுடுச்சு.. ஹாஸ்பிடல்ல இருக்கிறதா..

நீங்க ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல .."என சலுகையாக கேட்டபடியே அவனுக்கு அருகே செல்ல ..மெல்ல தயங்கி நின்றவள் "சரி சார் நீங்க கேட்ட ரிப்போர்ட் கொண்டு வரேன் "என்று சொல்லிவிட்டு வெளியேறினாள் சக்தி.

அரை மணி நேரம் மாதவனிடம் பேசிவிட்டு புறப்பட்டு இருந்தாள் நித்யா .

இடையே ஒரு முறை காபி வரவழைத்திருக்க கொண்டு சென்றது சக்தி தான் .

எதுவும் பேசாமல் டேபிளில் வைத்துவிட்டு வெளியேறினாள் மனதிற்குள் நிறையவே குழப்பம் மறுபடியும் குடி கொண்டிருந்தது சக்திக்கு ..

என்ன நடக்கிறது தன்னை சுற்றி.. தான் ஆசைப்பட்டது நடக்குமா நடக்காதா என்று மனதிற்குள் கேள்வி எழ ,யோசனையோடு தன்னுடைய இருப்பிடத்தில் வந்து அமர்ந்தாள்.

நிறைய யோசித்துக் கொண்டிருந்தாள் சக்தி. இங்கே வேலைக்கு வரும்போது கூட தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தான் நினைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு நிலவரம் நிறையவே மாறி இருந்தது .

சக்தியே மாதவனை காதலிக்க ஆரம்பித்து இருந்தாள். எப்போதுமே ஏதோ ஒரு இடத்தில் அவனுடைய ஞாபகம் அடிக்கடி வரத்தான் செய்தது.

வெளிக்காட்டி கொள்ள முடியாமல் நிறையவே தவித்துக் கொண்டிருந்தாள் .

இந்த சூழ்நிலையில் அடிக்கடி நித்யா வந்து பேசுவதை பார்க்கையில் நிறையவே இப்போது பயம் தோன்றியது .தன்னுடைய ஆசை நிறைவேறாதோ என்று..

நித்யா சென்ற சில நிமிடங்களிலேயே மறுபடியும் மாதவன் இவளை அழைக்க.. வேகமாக உள்ளே சென்றாள்.

முகம் முழுக்க குழப்பம் குடி கொண்டிருக்க ..அவளை பார்க்கமுமே அவளுடைய மனநிலை இவனுக்கு புரிந்து விட்டது.

தானும் கூட அவளை விரும்ப ஆரம்பித்திருந்தது அவனுக்குமே புரிய.. பதில் தான் இதுவரையிலும் அவளிடம் சொல்லாமல் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தான்.

"சக்தி அப்பா சாயங்காலம் உன்னை பாக்கணும்னு சொன்னாங்க .ஹாஸ்பிடலுக்கு என் கூட வர முடியுமா ".

"நித்யா மேடம் உங்க கூட வர்றதா சொன்னாங்களே".

" அவளை வீட்டுக்கு வந்த பிறகு வந்து பார்த்துக்கோன்னு சொல்லி இருக்கிறேன் .

ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் அவளுக்கு சுத்தமா பிடிக்காது. அங்க வந்தாலுமே முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு தான் நிற்பா.

அப்பாவை பார்க்க வரும் போது அப்பா மேல அன்பு செலுத்துறவங்க பார்க்கிறது தான் நியாயமும் கூட ..

மனசுக்குள்ள ஒவ்வாமையை வச்சுக்கிட்டு அப்பாவை வந்து பார்க்கிறதுல எனக்கு விருப்பம் கிடையாது .

அதனால அவள் கிட்ட சொல்லிட்டேன். சரி என்று கிளம்பி போயிருக்கிறா.."

அதுதான் காரணமா..
அந்த அட்மாஸ்பியர் பிடிக்காது என்பதற்காக அவங்க வரலையா".

"நீ கேக்குறது எனக்கு புரியல".

" இல்ல அவங்க மேல அவ்வளவு பிரியமா உங்களுக்கு.. அதை தான் கேட்க வந்தேன்.

அவங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்காது சேராதுன்னு தெரியவுமே வர வேண்டாம்னு சொல்றீங்கன்னா அந்த அளவுக்கு அவங்க பேர்ல அன்பு இருக்குதுன்னு தானே அர்த்தம் ".

"இப்படியெல்லாம் கூட குதர்க்கமாக யோசிப்பியா? அப்பா முடியாம இருக்கறாங்க..

இந்த நேரத்துல அப்பா மேல கரிசனமா பார்த்துக்கிறவங்க தான் வேணுமே தவிர ஃபார்மாலிட்டிக்காக பார்க்கிறவங்க தேவையில்லை .

அவ அங்க வந்தா பார்மாலிட்டிக்காக மட்டும் தான் பார்த்து பேசிட்டு வருவா ..அதனால அப்பா சந்தோஷப்படுவாங்களான்னு கேட்டா.. கிடையாது.

ஆனா நீ வந்தா நிச்சயமா ஒரு சிரிப்பையாவது அவரோட முகத்துல பார்க்கலாம் .

அத பாக்கறதுக்காகவே உன்னை கூப்பிடறேன் ..இன்னமும் ஏதாவது விளக்கம் வேண்டுமா."

" இல்ல எதுவும் வேணாம் .நான் சாயங்காலமா வரேன். அப்புறமா ஜான்வியும் வந்து பாக்கணும்னு சொன்னா ..அவளையும் அழைச்சிட்டு வரலாமா ".

"அதென்ன.. எப்பவுமே துணைக்கு அவளை கூப்பிட்டுக்கிட்டே சுத்துற.. இதுக்கு என்ன அர்த்தம் ".

"இதுக்கெல்லாம் அர்த்தம் சொல்ல முடியுமா.. அவ என்னோட பெஸ்ட் பிரண்ட் நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி மனசு விட்டு பேசுவோம்.

அப்பாவுக்கு முடியல என்கிற விஷயம் இங்கே ஆபீஸ்ல யாருக்குமே தெரியாது .
ஆனா அவ கிட்ட நான் மறைக்கலை.."

"ஓகே தாராளமா கூப்பிட்டுட்டு வா. நான் குரு கிட்ட சொல்லிடுறேன் சாயங்காலமா சேர்ந்து போயிடலாம் .

திரும்ப உன்னோட வீட்டுல நான் டிராப் பண்ணிடறேன்".

" இல்ல அதெல்லாம் வேண்டாம் சார் நான் அங்க இருந்து ஏதாவது ஆட்டோ பிடிச்சு போயிடுவேன்.. அது பிரச்சனை இல்லை" என்று நகர்ந்தாள்.

சரியாக மாலையில் அங்கே ஹாஸ்பிடல் செல்ல.. இவளை பார்க்கமுமே புன்னகைத்த படியே அருகே அழைத்தார் .

"சரியான நேரத்தில் நீ தான் என்னை இங்க அழைச்சிட்டு வந்தியாம்.. குருவும் ,மாதவனும் சொன்னாங்க.

அதுலேயும் மாதவன் உடைந்து போய் இருந்த சமயம் நீ தான் நிறைய ஆறுதல் சொன்னேயாம் குரு சொன்னன். ரொம்ப நன்றி சக்தி. ".

"அங்கிள் இது என்னோட கடமை .."

"நீ ரொம்ப நல்ல பொண்ணு சக்தி உன்னை மாதிரி எத்தனை பேரு இப்போ இந்த காலத்தில் இருக்கிறாங்க .

எனக்கு உன்னை பார்க்கும் போது பிரமிப்பா இருக்குது.. சொல்லுவார்களே கடல்ல இருக்கிற முத்து நீ…என்னைக்குமே உன்னை நான் மறக்க மாட்டேன்".

' பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் அங்கிள். நான்தான் சொல்லிட்டேனே ஒரே வார்த்தையில இது என்னோட கடமைன்னு..

இனி மேல இத பத்தி பேச வேண்டாம்.. சீக்கிரமா ரெக்கவர் ஆகி வாங்க .

நான் உங்களை தினமும் வந்து பாத்துக்குவேன். பக்கத்துல தானே இருக்கிறோம் "என்று சொல்ல..

" இல்லை சக்தி இனி நான் இங்கே இருக்க மாட்டேன் .பழையபடி என்னோட தோட்டத்து வீட்டுக்கு போயிரலாம்னு முடிவு பண்ணி இருக்கிறேன் ".

"அப்பா அவசரப்பட வேண்டாம் பா இங்கேன்னா ஹாஸ்பிடல் ஸ்பெஷலிட்டி இருக்குது ".

"போதும் மாதவா திரும்ப திரும்ப இதையே சொல்லாத ..இதுக்கு அப்புறம் நான் நடந்து என்னத்த சாதிக்க போறேன் .

வேண்டாம் இருக்கிற வரைக்கும் நிம்மதியா எனக்கு பிடிச்ச இடத்தில இருக்கிறேன்..

நீ இனி இதுக்கு தடை சொல்லக்கூடாது ".

'அங்கிள் கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க .."

'நான் நிறைய யோசிச்சிட்டேன் ரெண்டு நாளா இத பத்தி தான் யோசிச்சுகிட்டு இருந்தேன் .

இனிமே நீங்க ரெண்டு பேரும் என்னை பத்தி கவலைப்படக்கூடாது மாதவா .நீங்க உங்கள் வைஃபை பாருங்க .

எனக்கு துணைக்கு ஒரு ஆள் கூட விட்டா போதும் .மத்தபடி எனக்கு எதுவுமே தேவையில்லை.

இருக்கிற காலம் வரைக்கும் தோட்டத்துல இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து முடிச்சிடறேன் ".

"அப்பா ஏம்பா இப்படி எல்லாம் பேசுறீங்க .."

"அங்கிள் ப்ளீஸ் இந்த மாதிரி எல்லாம் எதுவும் பேசக்கூடாது . இந்த ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் எப்பவுமே இப்படித்தான் நம்மளை நெகட்டிவ்வா மட்டும் தான் யோசிக்க வைக்கும்.

நீங்களும் இப்ப அப்படித்தான் இருக்கிறீங்க கொஞ்சம் சரியானா எல்லாமே சரியாகிவிடும்.."

"சரி மாதவா நீ குருவையும் அந்த பொண்ணையும் அழைச்சிட்டு வெளியே போ ..

நான் சக்தி கிட்ட ரெண்டு ஒரு வார்த்தை பேசணும்.."

" என்னப்பா பேச போறீங்க .."

"அதை நீ கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டுமா .நான் பர்சனலா அவகிட்ட தேங்க்ஸ் சொல்லனும்னு ஆசைப்படுறேன் ".

" ஓகே பா பேசுங்க "என்று வெளியேற சக்தியை அருகே அழைத்தவர் கைகளை தன் கைகளோடு பற்றிக் கொண்டார் .

"உண்மையிலேயே நீ என்னோட மகனுக்கு மனைவியா வந்தன்னா ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன் சக்தி .

ஆனா இதெல்லாம் நடக்கும்மான்னு எனக்கு தெரியல .உன்னோட அப்பா யாருன்னு தெரிஞ்சா அந்த நிமிஷம் மாதவன் என்ன பண்ணுவான் என்று எனக்கு தெரியாது .

அவன் முழுக்க முழுக்க வெறுக்கிறது உன்னோட அப்பாவை தான் .நான் சொல்றது உனக்கு புரியுதா ".

"புரியுது அங்கிள் ஆனா அதையும் தாண்டி என்னோட அன்பு ஜெயிக்கும்ணு நான் நம்புறேன்".

" உன்னோட நம்பிக்கை பழிக்கணும் என்கிறது தான் என்னோட ஆசையும் கூட.. சரி கிளம்புறதுன்னா கிளம்பிக்கோ ..

எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்குது மாத்திரை போட்டுட்டு தூங்கலாம் என்று இருக்கிறேன் ".

"ஓகே அங்கிள் சீக்கிரமா சரியாகிவிடும்.. பழைய மாதிரி சீக்கிரமா வருவீங்க எனக்கு நம்பிக்கை இருக்குது "என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்..
 

Kavisowmi

Well-known member
24

சக்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். முதல் முதலாக மாதவனின் தந்தை இவளை வெறுத்தது போல பேசினாலும் இன்றைக்கு பேசியது மிகுந்த திருப்தியை தந்தது .

நிச்சயமாக பிரச்சனை என்று ஏதாவது வந்தால் தனக்கு பக்கபலமாக அவர் பேசுவார் என்கின்ற நம்பிக்கை வரவுமே அந்த மகிழ்ச்சியோடு இவர்கள் இருந்த இடத்தை தேடிச் சென்றாள்.

சற்று நேரம் இருவரிடமும் பேசிவிட்டு புறப்பட ஜான்வியும் இவளோடு வெளியே வர ,குரு ஜான்வியை அழைத்தான் .

"ஒரு நிமிஷம் நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ".

"சொல்லுங்க சார் என்ன ?"என்று அருகே வர .."ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுட்டு பேசலாமா ..

எப்படியும் நேரம் ஆகிடுச்சு .நைட் சாப்பிட தானே வேணும்" என்று கேட்க யோசனையோடு சக்தியின் முகத்தை பார்த்தாள் .

சக்தி புன்னகைத்தபடியே "போய்ட்டு வா . உன்னோட வீட்டுக்கு போன பிறகு கால் பண்ணு "என்று சொல்லிவிட்டு மாதவனை திரும்பிப் பார்த்தாள்.

" ஓகே சார் நான் கிளம்புறேன்.."

" நான் உன்னை வந்து உன்னோட வீட்டுல விடணுமா சக்தி" என்று கேட்க .."இல்ல வேண்டாம் சார் ஆட்டோ படிச்சு போயிருக்குவேன்.

நீங்கள் அப்பாவை பார்த்துக்கோங்க நாம மறுபடியும் வழக்கம்போல நாளைக்கு ஆபீஸ்ல பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

இன்னும் சற்று நேரம் சக்தி தன்னோடு இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது மாதவனுக்கு..

தோன்றிய நொடியை வேகமாக அழைத்து இருந்தான்.." சக்தி ஒரு நிமிஷம்".

" சொல்லுங்க சார் .."

" கொஞ்ச நேரம் என் கூட இருக்க முடியுமா ..வீட்டுக்கு போய் ஏதாவது அவசரமான வேலை இருக்குதா", என்று கேட்க.. நேரத்தை பார்த்தவள் "இல்லை அப்படி எல்லாம் எதுவும் இல்லை வாங்க வரேன்" என்று சொல்ல..

" இங்க வேண்டாம் நம்ம அப்படியே கீழே போகலாமா .அங்க குட்டியா ஒரு பார்க் இருக்கு .கொஞ்ச நேரம் அங்க உக்காந்துட்டு திரும்ப வரலாம் ".

"ஓகே சார்" என்று கூடவே நடந்தாள்.

இந்த சில நாட்களில் மாதவன் நிறையவே அவதிப்பட்டு இருக்கிறான் என்பது இவளுக்கு தெரியும் .

மிகவும் சிரமமான மனநிலையோடு கடந்து வந்திருக்கிறான் என்பது இவளுக்கு புரிய, தற்போது யாராவது அருகே சற்று நேரம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் அவனோடு சென்றாள்.

ஹாஸ்பிடலில் முகப்பில் இருந்த பார்க்கில் இருந்த இருக்கையில் அமர அவளுக்கு அருகே அமர்ந்தான் மாதவன்.

இருவருக்கும் நடுவே நிறைய மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.

யார் என்ன பேசுவது என்பது புரியாமல் இருந்தது போல அமர்ந்திருந்தனர்.

சற்று நேரம் கழிவு மாதவனை திரும்பி பார்த்தாள் சக்தி.

இப்போதும் கூட அவன் ஏதோ ஒரு யோசனையில் தான் இருந்தான். இந்த உலகத்தில் அவன் இல்லை என்பது போன்ற ஒரு தோற்றம்..

எதையோ மனதிற்குள்ளாக நினைத்து உழன்று கொண்டிருக்கிறான் என்பது புரிய ,இவளுக்குமே என்ன கேட்பது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.

"என்ன யோசனை மாதவன் சார் "என்று குரல் கொடுக்க ..சற்றே தலையை கோதி விட்டவன் தயங்கிய படியே கூறினான்.

" சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் சக்தி" என்று சொல்ல சட்டென்று மனதிற்குள் ஒரு பயம் தொற்றிக் கொண்டது சக்திக்கு ..

இப்போது சொல்லப் போகிறான் நித்யாவை திருமணம் செய்யப் போவதாக.. ஏனென்றால் நித்யாவின் தந்தையும் அதைத்தானே நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறாளே..

வேகமாக அவனது முகத்தை பார்க்க "என்ன பார்க்கிற சக்தி.. ஏன் இத்தனை அதிர்ச்சி".

" இல்ல சார் சொல்லுங்க கேக்குறேன்." தன்னுடைய மனதை வெளிக்காட்டாமல் உள்ளே அலையாய் எழுந்த வருத்தத்தை மறைத்தபடி சிரமப்பட்டு புன்னகைத்தாள் சக்தி.

"வாழ்த்துக்கள் சார் எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கீங்க ".

"கூடிய சீக்கிரமே ஆனா மனசுக்குள்ள சின்ன குழப்பம் இருக்கு .அதனால தான் யோசிச்சுகிட்டு இருக்கேன் ".

"இதுல குழம்ப என்ன இருக்குது சார் அப்பாவுக்கு ஏற்கனவே முடியல நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது .

அவர் ஆசைப்பட்டது உங்களோட கல்யாணம்.. நான் பேசும் போது நிறைய முறை சொல்லி இருக்கிறார்.

ஒருவேளை உங்களோட கல்யாணம் முடிஞ்சா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார் .

தன்னோட மகன் செட்டில் ஆயிட்டாங்கறது அவருக்கு நிறைய நிம்மதியை தரும் .

எப்படியும் நீங்க குருவை நல்லபடியா பார்த்துக்குவீங்க ..அந்த நம்பிக்கை எப்பவுமே அவருக்கு இருக்குது.

உங்களை பற்றி தான் அவர் நிறைய கவலைப்படுகிறார்.." சிரமப்பட்டு சொல்ல அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

" அப்பா கூட நீங்க ரொம்ப நெருக்கமா சக்தி ..நிறைய பேசுவியா.."

" அப்படி எல்லாம் சொல்லிட முடியாது சாயங்காலம் போகும் போது நிறைய நாள் பார்த்து பேசுறதுக்காக போவேன்.

சில நேரம் பேசுவார் சில நேரம் டயர்டா இருக்குது நாளைக்கு பேசலாம் என்று சொல்லி அனுப்பி வைப்பார்."

"எதுக்காக தினமுமே வாடிக்கையா அவரை போய் பார்க்க போன.. எனக்காகவா .."

"இந்த கேள்விக்கு எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல உங்களுக்காகவும் ஒரு காரணம்.

அதே நேரத்துல உங்க அப்பாவுக்காகவும் ..ஏன்னா வயதான காலத்தில் நிறைய பேரன்ட் தனியா தான் இருக்கிறார்கள் .

தன்னோட மனசுல இருக்கிற எண்ணங்களை யார்கிட்டயும் பகிர்ந்துக்க முடியாம கிட்டத்தட்ட சிறை வாழ்க்கை மாதிரி தான் நிறைய பேர் வாழறாங்க.

நான் என்னோட பாட்டி வீட்ல போய் தங்கி அங்கேயே படிக்க முக்கிய காரணமே அதுதான் .

பாட்டியை தனியா விடக்கூடாது.. தனக்கு எல்லாருமே இருந்தாலும் தான் ஒரு அனாதை அப்படிங்கற மாதிரியான எண்ணம் எப்பவுமே வரக்கூடாதுன்னு நினைச்சேன் .

அதனாலதான் பிடிவாதமா அப்பாகிட்ட சண்டை போட்டுக்கொண்டு பாட்டி கூட போயிருந்தேன் .

பாட்டி எப்பவுமே தனியா இருக்கிறதா பீல் பண்ண விட்டது இல்ல .அதே மாதிரியான ஒரு நிலைமையில தான் உங்க அப்பாவும் இருந்தாங்க.

நீங்க ரெண்டு பசங்க இருக்கீங்க வாரத்துல கடைசி ரெண்டு நாள் அவர் கூட போயி டைம் ஸ்பென்ட் பண்ணறீங்க ..

அதை எல்லாம் அவர் என்னைக்குமே குறையா சொன்னது இல்ல.. வேலையை பார்க்கணும் அவங்க நல்லா இருக்கணும் .

அவரோட பெரிய ஆசையே அதுதான். நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் அப்படிங்கறது..

சோ இங்க பக்கத்துல வந்த பிறகு தினமுமே ஒரு தடவை போய் பேசுறதுல பெருசா எதுவும் இல்லையே..

ஜஸ்ட் ஒரு அரை மணி நேரம் அப்படித்தான் நினைச்சு போனேன்".

" நீ ரொம்ப கிரேட் சக்தி.. உன்னை பார்க்கும் போது எனக்கு பிரமிப்பா இருக்குது .ஆச்சரியமா இருக்குது இன்னமும் நிறைய சொல்லலாம்..

முதல்ல உன்னை பார்க்கும் போது ஒரு குரும்புத்தனம் விளையாட்டுத்தனம் தான் உன்னை கவனிக்க வச்சது .

ஆனால் இப்போ நீ இத்தனை பொறுப்பா நடந்துக்கும் போது ஆச்சரியமா இருக்குது."

" எல்லாருக்குமே எல்லா குணமும் உண்டு மாதவன் சார். விளையாட்டுத்தனமும் உண்டு அதே நேரத்துல ஒரு பிரச்சினைன்னு வந்தா அதை பொறுப்பா கவனிச்சிக்கிற தாய்மை உணர்வும் உண்டு ..எல்லாமே கலந்தவங்க தானே பெண்கள்..

சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க சார் .நான் புறப்படட்டுமா ".

"அவ்வளவு தானா.. பொண்ணு எல்லாம் யாருன்னு கேட்க மாட்டியா".

" எனக்கு தான் ஆல்ரெடி தெரியுமே புதுசா என்ன தெரிஞ்சுக்க போறேன்.

எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்குது .நான் கிளம்பட்டுமா ..

நான் இன்னொரு நாள் பொறுமையா கேட்டுக்குறேன் ப்ளீஸ்" பெயரை கேட்க மனம் இல்லாமல் வேகமாக எழுந்து வெளியேறினாள் சக்தி .

அவளுடைய மனநிலை முழுக்க முழுக்க மாதவனுக்கு புரிந்திருக்க உதட்டில் புன்னகை ஒன்று விரிந்தது.

" நித்யாவை சொல்லிடுவேன்னு பயந்து ஓடற சக்தி ..என் மனசுல இப்ப இருக்கிறது நீ மட்டும் தான்.

வயசு வித்தியாசம் பெருசாதான் இருக்குது ஆனா அதைப்பற்றி பெருசா நீ கவலைப்பட மாட்டேன்னு நம்புறேன்.

எனக்குமே உன்கிட்ட நேரடியா மனசுல இருக்கிறதை சொல்ல அத்தனை பயமா இருக்குது.

உனக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் எத்தனை தெரியுமான்னு ஒரு கேள்வி கேட்டுட்டா ..

என்கிட்ட பதில் கிடையாது .அந்த தயக்கம் தான் இந்த நிமிஷம் வரைக்கும் சொல்ல முடியாமல் இருக்கிறேன்.

சீக்கிரமாவே அந்த பயத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுக்கிட்டு உன்கிட்ட வந்து தைரியமா சொல்லுவேன் .ஐ லவ் யூ சக்தி.. நீ இல்லாம வாழ முடியாது அப்படின்னு ..

ஆனா அது என்னைக்கு நடக்கும் தான் எனக்கு தெரியல" மனதிற்குள் பேசியவன் எழுந்து தந்தையை காணச் சென்றான்.

அதே நேரம் இங்கே குரு ஜான்வியோடு ஹோட்டலுக்குள் நுழைந்திருந்தான்.

" என்ன சாப்பிடற ஜான்வி "என்று கேட்க.." நூடுல்ஸ் "என்று பதில் சொன்னாள்.

அவனும் கூட வெரைட்டி ரைஸ் வாங்கி அமர்ந்தவன் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான் .

"அப்புறமா சாப்பிட்ட பிறகு காபி டீ குடிக்கிற பழக்கம் இருக்குதா" என்று கேட்க .."ஆமா சார் எனக்கு டீ வேண்டும் ."

" இன்னும் சார் போடணுமா.. குருன்னு நீ என்னை கூப்பிடனும் அதுதான் என்னோட ஆசை ."

"என்ன இருந்தாலும் நீங்க கம்பெனியோட பாஸ்".

" அதெல்லாம் கம்பெனிக்குள்ள தான்.. வெளியே குருன்னே கூப்பிடு.. என்ன வேணும் ".

"எனக்கு டீ.."

" ஆனா வழக்கமாக காபி குடிக்கிறதா தானே சொல்லுவாங்க ".

"வந்து டீ குடிக்க மாறிடலாம்னு இருக்கிறேன் சார் ..உங்களுக்கு டீ தானே பிடிக்கும் ".

"ஆமாம் ஜான்வி "என்று ஆர்டர் சொல்ல சில நிமிடங்களிலேயே இவர்களுடைய டேபிளுக்கு வந்தது.
டீயை கையில் எடுத்தவள் குடிக்காமல் குருவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன என்னோட முகத்தை பார்த்தா என்ன அர்த்தம். டீ உனக்கு பிடிக்கலையா .."

"இல்ல ரொம்ப நல்லா இருக்கு" என்றவள்.."சார் எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையா இருக்குது .ஒன்னு வாங்கிட்டு வர முடியுமா "என்று சொல்ல சிரித்தபடியே எழுந்து நகர்ந்தான்.

அவன் நகரவுமே வேகமாக டம்ளரை மாற்றி வைத்திருந்தாள் ஜான்வி.. வேகமாக குரு குடித்த பாணத்தை எடுத்து குடித்துக் கொண்டிருக்க ,சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தவன் தனக்கு எதிரில் இருந்ததை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்..

குடிக்க குடிக்கவே குருவின் முகத்தில் ஒரு புன்னகை வந்து அமர்ந்து கொண்டது .

சற்று நேரம் சுற்றிலும் வேடிக்கை பார்த்தவள் கடைசியாக குருவின் முகத்தை பார்க்க ,அவனுடைய புன்னகை இவளையும் தொற்றிக் கொண்டது.

"என்ன சிரிக்கிறீங்க" என்று சொல்ல .."டீ நல்லா இருக்குதா "என்று கேட்டான் .

"ஆமா ரொம்ப நல்லா இருக்குது" என்று குடிக்க.. "அப்படியா "என்று கேட்டவள் ..தான் குடித்துக் கொண்டிருந்த டம்ளரைக்காட்டி "இந்த டீ கூட நல்லா இருக்குது" என்று சொல்ல ..புரியாமல் அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.

" சரி எப்போ சொல்ல போற ஜான்வி ".

"என்ன சொல்லணும் சார்".

" நீ சொல்ல வேண்டாம் நானே சொல்லிடவா .."

"என்ன சொல்ல போறீங்க" குழப்பத்தோடு அவனுடைய முகத்தை பார்க்க..

"ஐ லவ் யூ ஜான்வி.. எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு.."

"என்ன சொல்றீங்க" என்று அதிர்ச்சியாக கேட்க .."நீ குடிச்ச டீ ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது..

அதே மாதிரி நான் குடிச்ச காபியும் நல்லா இருக்கிறதா.." என்று கேட்க ..

"இன்னமும் புரியலையா ஜான்சி எப்போ நீ என்னோட காபியை எடுத்துக் குடிக்கணும்னு ஆசைப்பட்டாயோ அப்பவே உன்னோட மனசு எனக்கு புரிஞ்சிடுச்சு.."

கொஞ்சம் குழப்பம் நிறைய அதிர்ச்சியோடு அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.

"உனக்கு எப்படி எனக்கு பிடிச்சதை குடிக்கணும்னு தோணுச்சோ.. அதே மாதிரி எனக்குமே உனக்கு பிடிச்ச காபியை குடிக்கணும்னு தோணுச்சு.

அதனாலதான் இப்படி வாங்கினேன். ஆனால் இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை .

என்றைக்கு ஆனாலும் சொல்ல தான் போறேன் .அதை இன்னைக்கு சொல்லிடுறேன் .

என்ன சொல்ற உன்னோட விருப்பத்தை இப்பவே நீ சொல்லியே ஆகணும் "என்று அவளது கரம் பற்ற..

"குரு சார் ப்ளீஸ் கையை விடுங்க எல்லாரும் பாக்குறாங்க ".

"ஹலோ இந்த கதையெல்லாம் இங்க ஆகாது .இது பைவ் ஸ்டார் ஹோட்டல் ..யாரு என்ன பண்றாங்க என்பதை யாரும் வேடிக்கை எல்லாம் பார்க்க மாட்டாங்க .

சொல்லு.. பதில் சொன்னாதான் இன்னைக்கு நான் உன்னை விடுவேன் ."

"உடனே சொல்லி ஆகணுமா ".

"ஆமா எனக்கு இப்பவே சொல்லி ஆகணும் .எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ .

கடைசி வரைக்கும் கூட வாழ ஆசைப்படுறேன் .இப்போ நீ சொல்லு உனக்கு என்ன பிடிச்சிருக்கா .."

"ப்ளீஸ் கையை விடுங்கள் ".

"சொல்லனும் ஜான்வி . நானும் பல முறை உன்னை கவனித்துக் கொண்டு இருக்கிறேன் .

அதுலயும் இப்போ உன்கிட்ட பேச ஆரம்பிச்ச பிறகு ஒவ்வொரு நிமிஷமும் உன்னை மட்டும் தான் பாத்துக்கிட்டு இருக்கேன் .

எப்பவுமே உன்னோட பார்வை என்னை மட்டும் தான் சுத்தி வந்துகிட்டு இருக்குது .

அதுவே உண்மையை சொல்லிடுச்சு உன் மனசுல இருக்குறத இப்ப நீ எனக்கு சொல்லி ஆகணும்."

"இன்றைக்கே ஓகே சொல்லி ஆகணுமா .."

" நாலு நாள் யோசிச்சு கூட சொல்லலாம்..ஆனா எத்தனை முறை யோசிச்சாலும் உன்னோட பதில் என்னன்னு எனக்கு தெரியும் .

சாரி இதுக்கு மேல உன்னை கேட்டு கஷ்டப்படுத்த விரும்பல நிதானமா என்கிட்ட சொல்லலாம்.."

"நான் வந்து".

" சொல்லு என்ன ஜான்வி..என்ன சொல்ல போற .."சட்டென்று கண்கள் கலங்கி கண்ணீர் வழிய ஆரம்பித்தது ஜான்விக்கு..

" எதுக்காக அழற.. நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா ஐ அம் சோ சாரி .
இத இந்த நிமிஷமே எல்லாத்தையும் மறந்துடு ".

"சார் ".

"நோ சார் ..ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் குருன்னு சொல்லு".

" உங்களுக்கு தெரியாது நான் ரெண்டு வருஷமா உங்களை காதலிக்கிறேன் .

முதல் முதலில் கடற்கரையில் உங்களை ஒரு ஷூட்டிங்ல பார்த்தேன் .

அந்த நிமிஷத்திலிருந்து உங்களை நான் கவனித்துக் கொண்டு இருக்கிறேன் .

உங்க கிட்ட பேசணும் பழகணும் உங்க கூட சேர்ந்து வாழணும்ங்கற ஆசையில தான் உங்க ஆபீஸ்க்கு வந்தேன் .

ஆனா இன்னைக்கு இதெல்லாம் நடக்கும் என்று நான் நினைச்சு பார்க்கல "என்று அழ ஆரம்பிக்க..

" ஜான்வி என்ன சொல்லிக்கிட்டு இருக்கற.. புரியுதா .."

"நிஜமா அந்த ஷூட்டிங்ல மத்தவங்க கிட்ட பேசின, பழகின அந்த ஆட்டிடியூட் ஏதோ ஒரு வகையில் என்ன பாதிச்சது .

என் மனசுக்குள்ள எப்பவோ நீங்க போயிட்டீங்க ஆனா நிஜமா நீங்க எனக்கு கிடைப்பீங்களா இல்லையானு தெரியாது.

இந்த நிமிஷம் வரைக்கும் நிறைய யோசிச்சு நிறைய நேரம் பைத்தியம் பிடிக்கிற மாதிரி கூட உணர்ந்து இருக்கிறேன்.

ரொம்ப தேங்க்ஸ் குரு எனக்கு இந்த ஒரு வார்த்தை போதும் உங்களுக்காக எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருப்பேன்.

உங்கள் அண்ணா கல்யாணம் முடிஞ்சு நீங்க அடுத்ததா நம்ம கல்யாணம் நடக்கிற வரைக்கும் நான் காத்திருக்கு தயார் "என்று சொன்னவள் வேகமாக கையை உருவியவள் இன்னமும் அழ ஆரம்பித்தாள்.

" ப்ளீஸ் குரு எதுவும் சொல்லாதீங்க இது சந்தோஷத்துல வர்ற கண்ணீர் என்று அழுகை கழந்த புன்னகையோடு கூறினாள்.
 

Kavisowmi

Well-known member
25

சொன்னது போலவே சக்தியின் தந்தை சரியாக அடுத்த வாரத்தில் இவளுடைய வீட்டிற்கு வந்திருந்தார்.

இன்னமும் கூட மாதவனின் தந்தை டிஸ்சார்ஜ் ஆகியிருக்கவில்லை ஹாஸ்பிடலில் தான் இருந்தார்.

தந்தை வந்ததினால் அன்றைக்கும் அடுத்த நாளும் லீவ் சொல்லியிருந்தாள் சக்தி.

வந்தவர் இவளிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை .

மாதவனிடம் ஹாஸ்பிடலில் இருந்து பேசிவிட்டு வந்த பிறகு சற்று சக்தி விலகி செல்வது போல தோன்றியது மாதவனுக்கு ..

அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை அவளிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க ,அதற்கான நேரம் தான் இன்று வரையிலும் அமையவில்லை.

அதே நேரத்தில் அங்கே "எனக்கு துளி கூட விருப்பம் இல்லை" தந்தையிடம் போராடிக் கொண்டிருந்தாள் சக்தி .

அவர் விடுவதாக இல்லை "நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன் சக்தி. இது பெரிய மீட்டிங் ..

அங்க போனா நிறைய ப்ராஜெக்ட் பண்ணவங்களை பார்க்கலாம். உன்னை நான் அறிமுகப்படுத்தனும்னு ஆசைப்படறேன்".

" அப்பா இதெல்லாம் டூ மச் பா.. எனக்கு இதெல்லாம் இன்டெரெஸ்ட் இல்ல .ஏற்கனவே உங்ககிட்ட பலமுறை சொல்லிட்டேன்.

நிச்சயமா நான் ப்யூச்சர்ல உங்க ஆபீஸை பார்த்துக்க போறது கிடையாது."

"நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம் சக்தி .சொன்ன பேச்சைக் கேளு. இப்ப என் பின்னாடி கிளம்பி வா .

நான் இன்னைக்கு எல்லார்கிட்டயும் உன்னை அறிமுகப்படுத்தப் போறேன்.

அடுத்ததா என்னோட கம்பெனியை பார்த்துக்க போறது என்னோட பொண்ணு தான் அப்படின்னு.."

" அப்பா ப்ளீஸ் எனக்கு இதுல துளி கூட விருப்பம் இல்ல .சொல்றது புரியுதா ".

"சக்தி ஆபீஸ்ல வந்து உட்கார்ந்து வரவு செலவு மட்டும் பார்த்துக்கிட்டா போதும் ..உன்ன்ன பில்ட் வேலைக்கு அனுப்ப போறது கிடையாது .

நீ எந்த பில்டிங்கையும் போய் பார்க்க வேண்டிய அவசியம் இல்ல.. அதற்கான ஆட்கள் நம்மகிட்ட இருக்கிறாங்க .

ரொம்ப பர்பெக்டா அவங்க வேலையை அவங்க பார்த்துக்குவாங்க ஆனா வரவு செலவுன்னு இருக்குற அந்த கணக்கு வழக்குகளை பார்த்துக்க நம்பிக்கையான ஒரு ஆள் வேணும்.

உன்னை ஒன்னும் ஆபீஸையே பார்த்துகிட்டு இருக்க சொல்லலையே.. எனக்கு சப்போர்ட்டிங்கா கொஞ்சம் வந்துட்டு போய்கிட்டு இரு..

நான் இருக்கிற வரைக்கும் மேக்ஸிமம் பார்த்துக் கொள்வேன். அதற்குப் பிறகு ..

அதுக்கு பிறகும் அந்த கன்ஸ்டிரக்ஷன் அதே மாதிரி கடைசி வரைக்கும் நடக்கணும்னு ஆசைப்படறேன்.

ஒரு இடத்துல நிக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது சக்தி. அதுக்காக நான் நிறைய போராடி இருக்கிறேன் நிறைய இழந்து இருக்கிறேன் .

அந்த இடத்துக்கு வரதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன்னு உனக்கு தெரியும் .அது ஈஸி ஒன்னும் இல்ல..

ஒன்னும் இல்லாமல் ஆக்கி விட கூடாது .அதுல தெளிவா இருக்குறேன். புரிஞ்சுதா.."

" ஓகே டாடி நான் இப்போ உங்க பின்னாடி வரேன் .பின்னாடி நடக்க போறது என்னவா வேணும்னாலும் இருக்கட்டும்.

இன்னைக்கு கவலை இல்லாம இருங்க நான் வரேன்" என்று நகர்ந்தாள்..

இவள் ஒன்று சொல்லிக்கொண்டு புறப்பட ..விதி வேறு ஒரு விளையாட்டை தொடங்கி இருந்தது.

எந்த ஹோட்டலில் இவர்களுடைய கன்ஸ்ட்ரக்ஷன் சம்பந்தப்பட்ட மீட்டிங் நடந்ததோ..

அதே ஹோட்டலில்,அதே மீட்டிங்கிற்கு வேறு ஒரு காரணத்திற்காக மாதவனும் வந்திருந்தான்.

இங்கே வீட்டில் கிட்டத்தட்ட தேவதை போல இவள் அலங்காரம் செய்து புறப்பட்டிருந்தாள்.

தந்தையோடு வரும் போது அவருடைய கௌரவம் இவளையும் சார்ந்தது அல்லவா ..

முழு அலங்காரம் அதற்கு ஏற்ற அணிமணிகளோடு கிளம்பி இருந்தாள்.

விரித்து விட்டு கூந்தல்.. அழகான உடை என மாடல் போல கம்பீரமாக புறப்பட்டு இருந்தால் சக்தி.

தன்னுடைய மகளை பார்க்கையில் அவருக்கும் அத்தனை திருப்தி, மகிழ்ச்சி..

இந்த தோற்றம் ஒன்றே போதுமே பின்னால் ஒரு நேரத்தில் ஆபீஸில் சென்று அமர்ந்தால் அந்தத் தோற்றத்தை பார்த்து நடக்கின்ற வேலைகள் சரியாக நடக்கும் என்று நினைத்துக் கொண்டார்.

மீட்டிங் காலுக்கு தன்னுடைய மகளை அழைத்து சென்று அனைவருக்கும் அறிமுகம் படுத்த ,மகிழ்ச்சியாக ஒவ்வொருவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டும் கைகுலுக்கிக் கொண்டும் நகர்ந்தாள்.

அதே நேரத்தில் மாதவனும் அதே மீட்டிங்கிற்காக வந்திருந்தான்.

ஏற்கனவே சில கான்ஸ்டருக்ஷன் வொர்க்கில் இருப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு விளம்பரம் எடுத்து தர வேண்டும் என பேசி இருக்க, மாதவன் துணைக்கு சபாவையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான்..

முதலில் இவளை பார்த்தது சபா தான் .

வேகமாக மாதவனை அழைத்து காட்டினான்." அது நம்ம சக்தி மேடம் மாதிரி இருக்கு சார் "என்று சொல்ல திரும்பி பார்க்க.. அதே நேரத்தில் சக்தியும் இவனை பார்த்து விட்டாள்.

அதிர்ச்சியோடு விழிகளை விரித்துக் கொண்டு நின்றிருக்க அருகே நின்றிருந்த இவளுடைய தந்தை இவளை தோள் தட்டி திருப்ப இருவரையும் இணைந்து பார்த்து விட்டான்.

பார்த்தவன் அந்த நிமிடமே சட்டென வெளியேறி இருந்தான்.

அதே நேரத்தில் தந்தையிடம் இருந்து நகர அவளால் முடியவில்லை.. அவனை தெரியுமே.. மனம் படபட என அடித்துக் கொண்டது .

எதையோ இழந்தது போல மொத்தமாக.. ஆழம் நிறைந்த தண்ணீருக்குள் அமிழ்ந்து மூச்சு திணறுவது போல தோன்ற.. தந்தையிடமும் நிற்க முடியாமல் செல்லும் மாதவனின் பின்னால் தொடரவும் முடியாமல் தயங்கி நின்றாள்.

சபா மாதவனின் பின்னால் வேகமாக சென்று கொண்டிருந்தான்.

" சார் நம்ம பேச வேண்டியவங்க உள்ளே இருக்காங்க .நம்ம பேசாம கிளம்பி போறோம் .".

"அவங்க கிட்ட பேசிக்கலாம் சபா இப்ப எனக்கு மனசு சரியில்ல. நேரா ஆபீஸ் போலாம் ".

"சார் வந்து".

" நான் சொல்றது உனக்கு புரியுதா வேணும்னா ஒன்னு செய்.. இந்தா இந்த டாக்குமெண்ட்ட கையில வச்சுக்கோ ..

முடிஞ்சா நீ பேசி முடித்துவிட்டு வா .நேரா ஆபீஸ் வந்து சேரு பிறகு நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன் "என்று நகர இவனுக்கு ஒன்றுமே புரியாமல் வேகமாக கூடவே சென்றான்.

" சார் உள்ளே சக்தி இருக்கிறா.. என்னன்னு பார்த்து பேசிட்டு போகலாம் ".என்று கேட்க..

" அவ கிட்ட என்ன பேசணும்னு சொல்ற ..இத்தனை நாளா அவ நம்மளை நல்லா ஏமாற்றிக்கொண்டு இருக்கிறா..

கூட இருந்தது யார் தெரியுமா அவளோட அப்பா .. தமிழ்நாட்டிலேயே பெரிய கன்சல்ட்டிங் கம்பெனி அவங்களோடது.

அப்படிப்பட்ட ஒரு பொண்ணு நம்ம ஆபீஸ்ல வந்து வேலை செய்றான்னா என்ன அர்த்தம்னு நினைக்கிற.."

" எனக்கு புரியல சார்".

" நீ எதுவும் சொல்ல வேண்டாம் எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு "என கோபமாக வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்.

எப்போது பார்ட்டி முடியும் என படபடப்பாக காத்திருந்தால் சக்தி.

பார்ட்டி முடியவுமே வேக வேகமாக தன்னுடைய வீட்டிற்கு சென்றவள் உடைமாற்றி வேகமாக ஆபீஸிற்கு சென்றாள் .அங்கே நிலைமை வேறுவிதமாக இருந்தது.

ஆபிஸருக்குள் நுழையவும் வேகமாக தன்னுடைய அறை வாசலில் இருந்து கத்தினான் மாதவன் .

"ஆபீஸ்க்குள்ள இனி நீ கால் எடுத்து வைக்க கூடாது சக்தி .இந்த நிமிசமே நீ கிளம்பி வெளியே போ "என்று சொல்ல ..என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கண்கள் கலங்க நின்று இருந்தாள்.

" சார் "என்று ஜான்வியும் கூடவே சபாவும் வந்து நிற்க.. குருவிற்கும் ஒன்றுமே புரியவில்லை.

"அண்ணா என்ன ஆச்சு.. என்ன இது" என்று கேட்டபடி அருகே வந்தான்.

" உனக்கு தெரியாது குரு நீ உன்னோட வேலைய பார்த்துகிட்டு போ .இங்க அவளுக்கு சப்போட்டா யாரும் பேசக்கூடாது .

அவளுக்கு சப்போர்ட் பண்ணவேன் அவ இங்க வேலை செய்யணும்னு யாராவது கேட்டீங்கன்னா..

அவங்களும் இந்த வேலையை விட்டுவிட்டு வெளியேறத் தயாராக இருக்கணும்.. அதுக்கப்புறம் வரப்போற அத்தனை பிரச்சனையையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.."

கோபமாக ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருக்க ..வேகமாக அவனுக்கு அருகே வந்தாள் சக்தி .

"உன்னை இப்பதான் சொல்லிக்கிட்டு இருக்கேன். உள்ளே வராத என்று …முதல்ல வெளியே போ.. வெளியே போ "என்று பிடித்து தள்ள ..சட்டென கீழே விழுந்து இருந்தாள் சக்தி .

அழுகை, அவமானம் என மொத்தமாக போட்டி போட எழ கூட தோன்றாமல் விழுந்த இடத்திலேயே அழுது கொண்டிருந்தாள் .

"அண்ணா என்ன இது ..என்ன பிஹேவியர் இது‌. எப்பதிலிருந்து இப்படி மாறுனீங்க.

சக்தி ப்ளீஸ் எழுந்திருங்கள் "என்று சக்தியை தூக்க அருகே செல்ல.. போனவனை பிடித்து நிறுத்தி இருந்தான்.

" நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. உனக்கு சொன்னா புரியாது ".

"அண்ணா எதுவா வேணும்னாலும் இருக்கட்டும் .ஆனால் நடந்துக்கறதுக்குன்னு ஒரு முறை இருக்குது இல்லையா..

இப்படித்தான் ஆபீஸ்ல மொத்த பேரும் வேடிக்கை பார்க்கிற மாதிரி நடந்துக்குவீங்களா ..நீங்க பண்றது ரொம்ப தப்பு அண்ணா.."

"நீ பேசாத குரு உனக்கு தெரியாது இவ சரியான ஏமாத்துக்காரி இவளை பத்தின உண்மை எனக்கு இப்பதான் தெரிஞ்சது ."

" எதுவா வேணாலும் இருக்கட்டும் அதுக்கு நீங்க என்ன மாதிரி பதில் சொல்லி இருக்கணும்.

இப்படித்தான் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அத்தனை பேர் பார்க்கும்போது இவ்ளோ மோசமா நடந்துக்குவீங்களா."
என்று வாதாடி கொண்டிருக்கும் போது.. ஜான்வி வேகமாக சக்தியை எழுப்பி நிறுத்தி இருந்தாள்.

கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது .

அந்த அழுகை மாதவனிடம் நான் சொல்வதைக் கேள் என்பது போல கேள்வி கேட்டு நின்றது .

ஆனால் எதையும் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.

அவனுடைய கோபமே பிரதானமாக இருந்தது. "என் வாழ்க்கையில் யாரை பார்க்க கூடாது என்று நினைத்தேனோ அவங்கள இன்னைக்கு பார்க்க வேண்டியதாயிடுச்சு .

அவரோட பொண்ணு நீ தான்னு தெரிஞ்சதுக்கு பிறகு உன்னை இந்த அளவோட விட்டேன்னு ரொம்ப சந்தோஷப்படு.. முதல்ல இந்த இடத்தை விட்டு போயிடு..

அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது ."

"அண்ணா என்னதான் நடந்தது. ஏன் இப்படி நடந்துக்கிறீங்க .சக்தி நீங்களாவது சொல்லுங்க ."

"வந்து குரு .."

"போதும் என்கிட்ட மட்டும் இல்ல என் குடும்பத்துல இருக்கிற யார்கிட்டயும் நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது இப்படியே கிளம்பி போ.

உன் கிட்ட நான் எந்த பதிலையும் எதிர்பார்க்கலை".

"நான் சொல்றதை கேளுங்க மாதவன் சார் .என்னோட பக்கத்து நியாயத்தை சொல்றதுக்கு கூட எனக்கு அனுமதி இல்லையா.."

" உன்கிட்ட நான் எதையும் கேட்க தயாராக இல்லை என்று சொல்லிட்டேன் சக்தி .

கிளம்பு இதுக்கு மேல இங்கேயே நின்னு அசிங்கப்பட்டுக்காத.. அத்தனை பேர் பார்க்க நடந்தது போதும்னு நினைக்கிறேன் .

இதுக்கு மேல தேவையில்லாம இங்க நின்னு சீன கிரியேட் பண்ணாத.. பாக்குறதுக்கு கேவலமா இருக்குது" என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல ..

"சக்தி என்ன தான் நடந்துச்சு .ஏன் அண்ணா இவ்வளவு கோபமாக இருக்கிறார்."

" என்கிட்ட இப்ப எந்த கேள்வி கேட்காதீர்கள் குரு சொல்ற நிலைமையில நான் இல்ல .

ஆனா நான் எந்த தப்பும் செய்யல அத மட்டும் உங்க அண்ணா கிட்ட சொல்லுங்க போதும் "என்று வேகமாக வெளியேறினாள் சக்தி.
 

Kavisowmi

Well-known member
26

"வந்து ரெண்டு நாள் ஆச்சு சக்தி வந்த நேரத்தில் இருந்து அழுதுகிட்டே இருந்தா என்ன அர்த்தம் ".

"பாட்டி தயவு செய்து என்கிட்ட எதுவும் கேட்காத.
நான் எந்த தப்பும் செய்யல ஆனா.."

' சொல்லு வந்த உடனேயே என்ன நடந்து இருக்கும்னு நான் புரிஞ்சுகிட்டேன் .

உங்க அப்பா அங்க மீட்டிங்கிற்காக வந்தான் .உன்னைய கூட்டிட்டு போகணும்னு சொல்லிட்டு வந்தான்.

நீ யாரோட பொண்ணுன்னு மாதவனுக்கு தெரிஞ்சிருச்சு அப்படித்தானே .

சொல்லு சக்தி.. அப்படித்தானே".

" ஆமாம்.. பாட்டி.. தெரிஞ்சுடுச்சு.. தெரிஞ்சதோட இல்லாம கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம என்னை பிடிச்சு தள்ளி விட்டுட்டாரு பாட்டி.

ஆபீஸ்க்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு ..இன்னும் என்னை நிறைய பேசினாரு உங்களுக்கு சொன்னா புரியாது".

" சக்தி இதெல்லாம் நடக்கும்னு முன்னாடியே நான் உன்கிட்ட சொல்லி இருக்கிறேன்.

உனக்கு தான் தெரியும்ல ..நடந்தது பெரிய விஷயம் அவ்வளவு சீக்கிரமா அப்பா மேல உயிரையே வைத்திருக்கிற பையனால அந்த சம்பவத்தை மறக்க முடியாது.

அதனால தான் சொன்னேன். நீ எப்பவும் போல உன் அப்பா கூட இருந்து வேலைய பாரு ..

நீ எதையுமே கேட்கல நீயா அங்க போய் இழுத்து வச்சுக்கிட்ட வ என்ன சொல்றது".

"உனக்கு தெரியாது பாட்டி.. அவரும் என்னை விரும்புகிறார் .உனக்கு சொன்னா புரியாது ".

"அவன் சொன்னானா.. மாதவன் உன்கிட்ட சொன்னானா ..நான் உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கிறேன் .

உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னேனா".

" இல்ல பாட்டி வாய் வார்த்தையா சொல்லல ஆனா அந்த கண் அந்த மனசு அது சொல்றது எனக்கு நல்லா புரிஞ்சுது .

அவர் என்னை உயிருக்குயிரா நேசிக்கிறார் .ஆனால் ஏனோ சொல்லல ".

"போதும் சக்தி ..தேவையில்லாம கற்பனையை வளத்துக்காதே .நான் தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல..

மாதவன் என்னைக்கும் தன்னை மாத்திக்க போறது இல்ல .அந்த பிடிவாத குணமும் மாறப்போவதில்லை .

நினைத்து வருத்தப்படாமல் நார்மலுக்கு வா சீக்கிரமா உன்னோட வீட்டுக்கு போய் உன்னோட அப்பாவுக்கு உதவியாயிரு..
இதுதான் என்னால சொல்ல முடியும்".

" இப்படி பேசாத என்னால தாங்க முடியல ..மாதவன் கூட வாழலைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் ".

"பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்காத புரிஞ்சுதா.. இப்படி பேசினா எதால அடிப்பேண்ணு எனக்கு தெரியாது .

உன்னை இந்த மாதிரி தான் நான் வளர்த்தேனா.. என் கூட தானே இத்தனை வருஷம் இருக்கிற போராட்ட குணம் உன் மனசுல இருக்கணும் புரிஞ்சுதா .

தைரியமா திரும்ப உன் பக்கத்து நியாயத்தை எடுத்து சொல்லணும் அத விட்டுட்டு இப்படி பேசிக்கிட்டு இருக்கிற ..

மாதவன் தான் வேணும்னா அதற்கான முயற்சியை நீ தான் செய்யணும் .

அதுக்கு முன்னாடி உன்னை பத்தி மாதவன் முழுக்க முழுக்க தெரிஞ்சுக்கணும் இதெல்லாம் நடந்தா மட்டும் தான் நீ ஆசைப்படுறது நடக்கும்.

நீயா விரும்பி ஆசைப்பட்டு கற்பனையை வளர்த்தால் எதுவும் ஆகாது. நீ அவன் கிட்ட உண்மையா இருந்தா ..

ஏதாவது ஒரு இடத்தில் அவனோட மனசுக்குள்ள நீ இருந்தேனனா ..அது நிச்சயமா வெளியே வரும் நிச்சயமாக உள்ள மிஸ் பண்ணுவான். எல்லாமே சரியாகிடும் புரிஞ்சுதா.. உளர்றதை நிப்பாட்டு.."

அதே நேரத்தில் இங்கே மாதவனிடம்.."ரெண்டு நாளாச்சு ணா…

இப்படியே உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம் .ஒரே நிமிஷத்துல சக்தியை அடிச்சு துறத்தாத குறையா வெளிய அனுப்பிட்ட..

என்கிட்ட உண்மையா இல்லை அப்படின்னு.. உண்மையை சொல்லிட்டு ஆபீஸ்க்குள்ள வந்து இருந்தா மட்டும் உள்ளே விட்டு இருப்பியா.. இல்ல தானே..

அங்கிளோட பொண்ணுன்னு தெரிஞ்ச பிறகு ஆபீஸ்ல ஏதாவது வேலை போட்டு கொடுத்து இருப்பியா இல்ல தானே.

பிறகு ஏன் இப்படி பேசுற.. அவங்க யாரையும் ஏமாத்தல ."

"ஏமாத்தி இருக்கறா என்னோட மனசை ஏமாத்தி இருக்கறா.. உனக்கு சொன்னா புரியாது ".

" நீ சொல்ற வர்றது எல்லாமே எனக்கு நல்லாவே புரியுது. நீ சக்தியை காதலிக்கிற.. அதுதான் உண்மை ..

திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்றதால அது பொய்யின்னு ஆகிடாது.

அதனாலதான் உன்னால இந்த சின்ன விஷயத்தை கூட தாங்க முடியல .

நம்ம இவ்வளவு நம்பின ஒரு பொண்ணு நம்மளை ஏமாத்திட்டா அப்படின்னு நினைக்கிற..

நிச்சயமா சக்தியும் உங்களை விரும்பினா.. ஏன் அவ பக்கத்து நியாயத்தை நீ கேட்கலை.
பிடிவாதமா அனுப்பி வச்சிட்டீங்க".

" போதும் குரு இனி அவளை பத்தி பேசாத ..நான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கணும்னு நினைக்கிறேன்.

சரி ணா அது போகட்டும் ஆபீஸ் வேலைய பத்தி யோசிச்சியா.. ரெண்டு நாளா எந்த வேலையுமே நடக்கலை.

எல்லாருமே முகத்தை முகத்தை பார்த்துக்கிட்டு வந்து உட்கார்ந்து திரும்பி கிளம்பி போயிட்டு இருக்காங்க .

யாருக்குமே எந்த டாஸ்க்கும் கொடுக்கல ..எந்த வேலையும் கொடுக்கல ..

ரெண்டு நாளா நடத்த வேண்டிய ஷூட்டிங் எல்லாத்தையும் கேன்சல் பண்ணியாச்சு.

இப்படியே ரெகுலரா பண்ணிக்கிட்டு இருக்க முடியாது .இன்னும் பத்து நாள்ல நம்மளோட ப்ராஜெக்ட் வழக்கம் போல கொடுக்கறவங்களுக்கு கொடுத்தாகணும்.

அவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லலாம்னு இருக்கற.. நடந்ததையே நினைச்சு இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா.. "

" இப்ப என்னை என்னடா செய்ய சொல்ற.."

" தயவு செய்து நாளைக்காவது ஷூட்டிங் நடந்தாகணும் .அதுக்கான வேலையே ஒவ்வொருத்தர் கிட்டயும் கொடுக்கிறியா .

என்னோட லைன்ல என்னோட வேலையை கிளியர் பண்ணி வைக்கிறேன் ."

"ஓகே.. மீட்டிங் அரேஞ்ச் பண்ணு 10 நிமிஷத்துல வரேன்."

" கொஞ்சம் இயல்பாக இரு ணா.. சக்தியை பிடிவாதமா அனுப்பி வச்சிட்ட..

அனுப்பி வச்ச அந்த நிமிஷமே நீ நியாயமா மறந்திருக்கணும் .ஆனா ரெண்டு நாளா மறக்காமல் இருக்கிறேன்னா அதற்கு காரணம் என்னன்னு கொஞ்சம் தனியா இருக்கும்போது யோசிச்சு பாரு .

நான் மீட்டிங்கு அரேஞ்ச் பண்றேன் சீக்கிரமா வந்து சேரு" என்று நகர்ந்தான்.

10 நிமிடம் கழித்து மீட்டிங் ஹாலுக்குள் செல்ல அனைவருமே சற்று தயாராக அமர்ந்திருந்தனர்.

எல்லோர் முகத்திலுமே சிறு பதட்டம் கூடவே பயம் இருந்தது ."ஹலோ கைஸ் எல்லாரும் உட்காருங்க ..

ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்தது எதிர்பாராத ஒரு ஆக்சிடென்ட் மாதிரின்னு நினைச்சுக்கோங்க .
அதை எல்லாருமே மறந்துடுங்க.."

" எப்படி சார் மறுக்க முடியும். எங்க கூட வேலை செஞ்ச பொண்ணு அந்த பொண்ணு எந்த விதத்திலும் அவளோட வேலையை நம்ம யாருமே குறை சொல்லிட முடியாது .

இங்கே இருந்த நாட்களில் அவளோட வேலையை கரெக்டா செஞ்சா ..ஆனா என்ன காரணத்துக்காக அப்படி பிஹேவ் பண்ணுனிங்கன்னு. எங்க யாருக்குமே தெரியல .

நாங்க எல்லாருமே இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை "சபா முன்னாள் வந்து கூறினான்.

" நீ மட்டும் தானா .. இன்னமும் வேற யாருக்கும் ஏதாவது கேள்வி இருந்தா கூட கேட்டுடுங்க .பதில் சொல்றேன்".

" சார் சபா கேட்ட கேள்வி தான் எங்களுக்கும் இருக்குது .சக்தி பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு..

எல்லாருக்குமே எல்லா உதவியும் தயங்காமல் செய்து கொடுத்திருக்கிறவ..

எந்த நேரமுமே சோர்ந்து பார்த்ததே இல்லை .சுறுசுறுப்பா தேனி மாதிரி இந்த ஆபீஸ்க்குள்ள வளைய வந்த பொண்ணு.

கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ஹால்ல வச்சு அசிங்கமா பேசி தள்ளிவிட்டு ..நீங்க அனுப்பி வச்சீங்க அதை எல்லாம் எங்களால மறக்க முடியாது.."

"என்ன பண்ணனும்னு சொல்றீங்க உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்கணுமா ".

"அவசியம் இல்லை சார் ..
நியாயமா நீங்க மன்னிப்பு கேட்க வேண்டியது சக்தி பொண்ணு கிட்ட தான் ..

ஏன்னா நீங்க தப்பா நடந்துகிட்டது அந்த பொண்ணு கிட்ட தான் .எங்க கிட்ட கிடையாது".

" ஓகே இதை பத்தி தான் மாத்தி மாத்தி பேசணும்னா இந்த மீட்டிங்கே தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

ஷூட்டிங் பத்தி பேசுறதுக்காக வந்து இருக்கிறேன்..".

" சார் தாராளமா பேசலாம் சார் .ஒர்க் ரொம்ப முக்கியம் தான். ஏன்னா மாசம் மாசம் கரெக்டா சம்பளம் கொடுக்கிறது நீங்கதானே ..

லாப நஷ்டம் எத்தனையோ இருந்தாலும் சரி விளம்பரமே வராட்டி கூட நீங்க எங்களுக்கு சம்பளம் கொடுத்து இருக்கிறீங்க..

அதனால கட்டாயமா நாங்க வேலை செய்வோம் ..அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வர வேண்டாம்.."

"வேற என்ன ?இப்போ பிசினஸ் பத்தி பேசலாமா .."

"எதுவுமே நடக்காத மாதிரி பேசினா என்ன சார் அர்த்தம் ."ஜான்வி முன்னாள் வந்து கேட்க.." நீங்க எல்லாம் இங்க வேலை செய்றது எனக்கு ரொம்ப நாள் கழித்து தான் தெரியும்..

நீ கூட இப்பதான் வெளியே தெரிய ஆரம்பிச்ச அப்படித்தானே.. ஜான்வி இப்போ உனக்கு தனியா நான் ஏதாவது சொல்லனுமா "குரு அங்கிருந்தவர்களை இடைமறித்தான் .

"பர்சனலா சின்ன பிரச்சனை இது எல்லாமே சீக்கிரமா சரியாகிவிடும். கூடிய சீக்கிரமே சக்தி இங்க மறுபடியும் வேலைக்கு வருவாங்க அதுக்கு நான் கேரண்டி தரேன் .

நாம இந்த பேச்சை தொடராம நடக்கிற வேலையை பார்க்கலாமா .ஆல்ரெடி ரெண்டு நாள் வேலை செய்யாமலே விட்டாச்சு .

இன்னும் இப்படியே போச்சுனா சீக்கிரமா நம்ம கம்பெனிய ரன் பண்ண முடியாம போகலாம் .நம்ம லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமே நமக்கு போட்டியா இருக்கிற மத்த கம்பெனிக்காரங்களுக்கு எடுத்துக் கொடுக்கிற மாதிரி ஆகிடும்.

சரியான நேரத்துக்கு விளம்பரம் கொடுத்தால் மட்டும்தான் நம்மளால இந்த இடத்தில் நிற்க முடியும் புரியும் தானே.."

"புரியுது சார் நீங்க சொல்றதை நாங்க நிச்சயமாக கேட்போம்.. நிச்சயமா நல்லது நடந்தா சந்தோஷம் தான் .

நீங்க இப்போ சொல்லுங்க சார் நாளைக்கு என்ன செய்யணும் ".

"வழக்கம் போல தான் நாளைக்கு டைல்ஸ் கம்பெனியோட விளம்பரம் .. அதற்கான ஷூட்டிங் நம் வழக்கம் போல நம்மளோட கெஸ்ட் ஹவுஸில் நடக்கும் .

ஆர்டிஸ்ட் கரெக்ட்டா காலைல வந்துடுவாங்க கேமரா மேன் மற்ற உபகரணங்கள் எல்லாம் எடுத்துட்டு முன்னாடியே போயிடுங்க.

பியூட்டிஷியன் மத்த எல்லாருமே அங்க அசம்பல் ஆகிடுங்க .குரு கூட இருப்பான் சாயங்காலத்துக்குள் வேலையை முடிச்சாகணும் .

இன்னமும் ஒரு வாரத்துல நம்ம அந்த கம்பெனிக்காரங்களுக்கு இந்த விளம்பரத்தை கொடுத்தாகணும் ".

"புரியுது சார் ".

"ஏற்கனவே நிறைய முறை நீங்க எல்லாருமே போயிருக்கீங்க உங்களுக்கு தனியா ஸ்பெஷலா சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன் .

எந்த குறையும் வரக்கூடாது வழக்கம் போல மதியானம் லன்ச் வந்துடும் அவ்வளவுதான் .

யார் யாரெல்லாம் போறீங்கன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ..அப்புறமா வழக்கம் போல தான் கன்டென் எழுதிக் கொடுக்கிறவங்க கரெக்டா எழுதி கொடுங்க ".

"ஓகே சார் ".

"ஒரு மணி நேரத்துல எழுதினதை கொண்டு வந்து என்கிட்ட கொடுத்தா நான் சந்தோஷப்படுவேன்" சொல்லிவிட்டு நகர்ந்தான்.

" வேலையை பாருங்க கன்டென் எழுதி கொடுக்குறவங்க கொஞ்சம் சீக்கிரமா எழுதுங்கள்..

அண்ணா கிட்ட சமிட் பண்ணிடுங்க அண்ணா ஓகே பண்ணினாங்கன்னா காலையில எடுத்துட்டு போக சரியா இருக்கும்" சொல்லிவிட்டு இவனும் நகர ஜான்வி அவனை பின் தொடர்ந்தாள்.

"என்ன ஜான்வி " என்று அவளுடைய பதிலுக்காக நிற்க.. சக்தி விஷயத்துல உங்க அண்ணா நடந்து கொண்டது ரொம்ப பெரிய தப்பு.."

" நானும் இந்த விஷயத்துல அண்ணாவுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன் .என்ன பண்ணறது..

அண்ணா பண்ணினது தப்பு தான் எனக்கும் தெரியும்".

" அது எப்படி ஒரு பொண்ண கொஞ்சம் கூட யோசிக்காமல் பிடித்து தள்ளிவிட முடிஞ்சது. இன்னமும் அந்த சம்பவம் தான் என் கண்ணுக்குள்ள நிக்குது ."

"எல்லாமே மாறிடும் ஜான்வி.. அண்ணாவோட மனசுல சக்தி மிகப்பெரிய உயர்ந்த இடத்தில இருக்கிறா..

அது இல்லங்கவும் அவரால தாங்க முடியல ..பிரச்சனை எல்லாத்தையும் உன்கிட்ட சொன்னேன்ல.. உனக்கு புரிஞ்சது தானே பிறகு நீயும் கேள்வி கேட்டா என்ன அர்த்தம் ."

"இத்தனை நடந்த பிறகும் பைத்தியம் பிடிக்கிற மாதிரி உட்கார்ந்து இருக்கிறது உங்க அண்ணா தானே.. அது உங்களுக்கு புரியுதா".

" எனக்கு நல்லாவே புரியுது ஜான்வி.. அண்ணாவோட நிலைமை என்னென்னு..

தற்சமயம் எதை பத்தியுமே முழுசா தீர்மானம் பண்ண முடியல ..நிறைய குழப்பத்தோடு இருக்கிறான்.

நிச்சயமா எல்லாத்துக்குமே நல்ல பதில் கிடைக்கும் .எனக்கு நம்பிக்கை இருக்குது .

நாம தேவையில்லாம எதையும் பேசி குழப்ப வேண்டாம் .அவர் எல்லாமே தெரிஞ்சவர் .

இந்த அளவுக்கு வருவதற்கு அவரோட உழைப்பு மட்டும் தான் காரணம்.

நிச்சயமாக அவருக்கு தெரியும்.. சக்தி மறுபடியும் இங்க வருவாங்க எனக்கு நம்பிக்கை இருக்குது."

"என்ன ஜான்வி.. பேசாமல் போனா என்ன அர்த்தம் ".

"நம்ம விஷயம் தெரிஞ்சா என்ன சொல்லுவாங்கன்னு பயமா இருக்குது ".

"நீ பயப்படத் தேவையில்லை. எப்பவுமே நான் உன் பக்கம் தான்.. அண்ணா மாதிரி குழப்பமான மனநிலையில் எப்பவுமே முடிவு எடுக்க மாட்டேன் .

அப்புறமா எனக்கு மனைவியா வரப்போற பொண்ணு.. அது நீ மட்டும் தான் .

ஒரு வேளை உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாம போனா கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பேன்".

" குரு ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க கேக்கற சக்தி எனக்கு இல்ல."

" சரி வேலையை போய் பாரு "என்று நகர்ந்தான்.
 

Kavisowmi

Well-known member
27

"அப்பா என்ன பாக்கணும்னு சொன்னீங்களாம்" கேட்டபடியே மாதவன் தந்தையின் அறைக்குள் வர ..

அவனையும் அறியாமல் சக்தி இருந்த வீட்டை கடந்து வருகையில் ஒரு நிமிடம் பார்வை அங்கே சென்று தான் விலகியது .

வீடு பூட்டிருப்பதற்கான அடையாளம் தெரிய.. ஒரு பெருமூச்சு மட்டுமே இவனிடம் வந்தது.

" குரு வந்திருந்தான் நடந்தது எல்லாத்தையும் சொன்னான். எனக்குமே அதிர்ச்சியா இருக்குது.."

"சக்தியை பத்தி சொல்றீங்களாப்பா".

" சக்தி பத்தி நான் எதுவும் சொல்லல டா. உன்னை நெனச்சு தான் அதிர்ச்சியா இருந்தது .

ஏன்னா.. எப்போ முதன் முதலில் சக்தியை பார்த்தேனோ அன்னைக்கே எனக்கு விவரம் புரிஞ்சிடுச்சு.

அவ என்னோட நண்பனோட பொண்ணுன்னு ..அவ எதுக்காக வந்திருக்கிறா அப்படின்னு அந்த நிமிசமே என்கிட்ட சொல்லிட்டா..

நீ முத முதல்ல அவளை.. நான் தோட்டத்து வீட்டில் இருக்கும் போது என்னை பார்க்க அழைச்சுட்டு வந்த ஞாபகம் இருக்குதா..

அன்னைக்கு தான் அவளை பத்தின எல்லா விஷயமும் எனக்கு தெரியும் நான் அவகிட்ட படிச்சு படிச்சு புரியற மாதிரி சொன்னேன் .

நிஜமா மாதவன் சம்மதிக்க மாட்டான் நிச்சயமா உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டான் .

உன்னோட அப்பா மேல அந்த அளவுக்கு கோவமா இருக்குறான்னு சொன்னேன். ஆனா அவ எதையுமே கேட்கல ..

என்னோட அப்பா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார் அந்த வாக்குறுதியை நான் நிறைவேத்தனும்னு ஆசைப்படறேன்.

எந்த ஆசையும் இல்லாம தான் உங்க ஆபீஸ்ல போய் சேர்ந்தேன் .ஆனா இன்னைக்கு மனசு முழுக்க உங்க மகன் தான் இருக்கிறார் என்று சொன்னா ..

இந்த தகவலை சமீபத்தில் தான் சொன்னா.. அன்னைக்கு சொல்லல உனக்கு புரியுதா மாதவா .

அந்த பொண்ணு உன் மேல உயிரா இருக்குற.. எனக்கு பதில் சொல்ல வேண்டியது நீதான் ."

"நான் என்னப்பா பதில் சொல்லணும் ."

"ஒரே ஒரு கேள்விதான் நீ யாரை கல்யாணம் பண்ணிக்க போற ..அந்த நித்யா பொண்ணையா..

உன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கிற அவளுக்கு நீ இதுவரைக்கும் பிடிக்கொடுத்து பதில் சொல்லல ..

அவளோட அப்பா என்கிட்ட போன் பண்ணி பேசி இருக்காரு நிறைய முறை கேட்டிருக்கிறார் .உன்னுடைய கல்யாணத்தை பத்தி..

நீ இதுவரைக்கும் பிடி கொடுக்கல ஆனா அன்றைக்கு ஹாஸ்பிடல்ல ஒரு நாள் முழுக்க என் கூட இருந்தான்னு தெரியும் போதே தெரிஞ்சுடுச்சு சக்தி உன் மனசுல இருக்குறான்னு உண்மைதானே.."

"அப்பா அன்னிக்கு உண்மையிலேயே மனசுல அவ இருந்தா இல்லைன்னு சொல்ல மாட்டேன் .ஆனா இப்ப இல்ல".

" அதுதான் ஏன்னு கேக்குறேன்.. அவங்க அப்பா என்னோட நண்பன்ங்கற காரணத்துக்காகவா..

அவ மேல ஏதாவது குறை சொல்ற அளவுக்கு இருக்குதா உன்னை விடவும் பத்து வருஷம் சின்ன பொண்ணு ..

அதை தவிர்த்து உன்னால எந்த குறையும் சொல்ல முடியாது மாதவா.. கரந்த பாலோட தூய்மை எதுவோ அதுதான் அவளோட மனசு..

ஆனால் அதை நீ மொத்தமா உடைச்சிட்ட ..அதுதான் நிஜமும் கூட.. சரி நான் உன்கிட்ட எதுவும் சொல்லல..

எல்லாமே உன்னோட விருப்பம் தான்.உன் வாழ்க்கையோட முக்கியமான முடிவுகளை அவங்கவங்க தான் எடுக்கணும்னு நினைக்கிறவன் நான் .

உன்னோட கல்யாணம் ஆகட்டும் குருவோட கல்யாணம் ஆகட்டும் நீங்க தான் முடிவெடுக்கணும் .

நீங்க இதுதான் பொண்ணுன்னு காட்டினா போதும் நான் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி வச்சிருக்கேன் ..

நிறைய யோசி அவள பத்தி ..அதுக்கு பிறகு ஒரு முடிவு எடு.."

"அப்பா உங்களுக்கு எப்படி இருக்குது ..நீங்க ஓகே தானே.."

" நான் பெர்பெக்ட் ஓகேடா.. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை தலையில் வலி கூட நிறையவே குறைஞ்சிடுச்சு .

இப்போ பிசியோதெரபி தயவுல எழுந்து மெல்ல எதையாவது பிடிச்சிட்டு நடக்க முடியுது .

உனக்கு தெரியாது இங்க வீட்டுக்கு வந்த நாளிலிருந்து தினமும் என்னை பார்க்க வருவா..

ஆரம்பத்துல நான் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேசினது கிடையாது பேசவும் மாட்டேன் .

முகத்தை திருப்பிக்குவேன் ஆனால் எதையுமே முகத்தில் காட்டாமல் தினமும் வருவா ..

ஏதாவது பேசுவா எனக்கு தேவையானது எடுத்து தரவா.. நாளாக நாளாக எனக்கே அவ மேல ஒரு பிடிப்பு வந்துருச்சு.

எத்தனை நாள் முகத்தை திருப்பிக்கிட்டு இருக்க முடியும்..

சின்ன குழந்தை தவழ்ந்து தன்னோட தாய் தகப்பன் கிட்டத்தட்ட வருமே.. அது மாதிரி தான் அவ ஒவ்வொரு முறையும் என்கிட்ட வந்தா ..

எல்லாத்தையுமே நான் மறந்துட்டேன் மன்னிச்சிட்டேன் ..எனக்கு தெரியும் கடைசியா நம்ம பேசும் போது அந்த இடத்தில் அந்த பொண்ணு இருந்தா..

பத்து வயசு குழந்தையா அவங்க பாட்டியோட மடியில நீ கவனிச்சிருக்க வாய்ப்பு இல்லை ஆனால் நான் அவளை பார்த்தேன். அதனால என்னால கண்டு பிடிக்க முடிஞ்சது..

அவகிட்டயே சொன்னேன். ஒரு வேலை உன்னோட காதல் உண்மையா இருந்ததுன்னா நிச்சயமா அது நடக்கும் அப்படின்னு..

இதையே தான் சக்தியும் என்கிட்ட சொன்னா ..நிச்சயமா மாதவன் சாருக்கு என் அப்பா மேல கோவம் நிறைய இருக்கலாம் .

ஆனா அதையும் தாண்டி என்னோட அன்பு அவரை என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்னு நினைக்கிறேன் அங்கிள்னு சொன்னா ..

அந்த நம்பிக்கையை பொய்யாக்க மாட்டேன்னு நினைக்கிறேன் .இப்ப நீ கிளம்பிக்கோ ..
நிறைய யோசி பிறகு முடிவெடு" சொல்லி அனுப்பி வைக்க அதே யோசனையோடு ஆபீஸில் சென்று அமர்ந்தான்.

மாலை 6:00 மணிக்கு தாண்டியது.. ஏழு மணி கூட கடந்து விட்டது. எழுந்திருக்கும் நிலையில் இல்லை அவன் .

சற்று நேரம் அவனையே கவனித்த குரு வந்து அழைத்தான் ."அண்ணா மணி ஏழாக போகுது ..நம்ம வீட்டுக்கு போகலாமா .எழுந்திரு .
ஆஃபீஸ பூட்டிட்டு கிளம்பலாம்.. "

"எனக்கு இன்னைக்கு வீட்டுக்கு வர்ற மூடு இல்ல குரு .நீ மட்டும் போய்க்கோ..

நான் கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்குது .இங்க உக்காந்து யோசிக்கிறேன் ."

"அண்ணா உன்ன தனியா விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்".

" பைத்தியம் மாதிரி பேசக்கூடாது பயப்படாதே ..வாழ்க்கையில எத்தனையோ அடி வாங்கிட்டேன்.. அதுக்காக தப்பான முடிவு என்னைக்குமே எடுக்க மாட்டேன்".

" ஐயோ அண்ணா அத நான் சொல்ல வரல .மன குழப்பத்தோடு எதுக்காக உங்களை தனியா விட்டுட்டு போகணும்னு யோசிக்கிறேன்".

" அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் தெளிவா ஆகணும்னா தனியா உட்கார்ந்து யோசிச்சா தான் முடியும் புறப்பட்டுக்கோ ".

"சரி ..பார்த்துக்கோங்க நான் ஒரு மணி நேரம் கழிச்சு கூப்பிடுறேன் ஒருவேளை திரும்ப வீட்டுக்கு வரணும்னு தோணுச்சுன்னா நானே இங்க வந்து அழைச்சிட்டு போறேன்".

" சரிடா சரி" என்று சொல்ல புறப்பட்டான் குரு.

இவன் புறப்பட்ட அரை மணி நேரத்தில் நித்யா இவனை பார்க்க வந்திருந்தாள்.

நிறைய குழப்பத்தோடு ஜன்னல் வழியே வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருக்க.. பின்புறமாக வந்து இருக அணைத்துக் கொண்டாள் நித்யா.

மாதவனுக்கு சட்டென உடல் ஒரு நிமிடம் அதிர ..வேகமாக அவளை நகர்த்தி விட்டான்.

" என்ன பழக்கம் இது புதுசா.. எதுக்காக இப்போ பின்னாடி வந்து கட்டி பிடிக்கிற.. இது எனக்கு சுத்தமா பிடிக்காது நித்யா "என்று கோபமாக கூற..

" என்ன ஆச்சு மாதவா ஏன் இப்படி எல்லாம் பேசுற ..இத்தனை நாளா இப்படித்தான் நான் உன் கூட இருந்தேன். இன்னைக்கு என்ன புதுசா .."

"என்ன பேசறதா இருந்தாலும் டச் பண்ணாம பேசணும் .உட்காரு ..என்ன விஷயமா என்னை பார்க்க வந்த.."

"நான் இன்னைக்கு ரெண்டுல ஒரு முடிவு தெரிஞ்சுக்கலாம்னு வந்து இருக்கிறேன்."

" என்ன முடிவு ..என்ன கேட்க போற.."

" இந்த ஆபீஸ் தொடங்கி கிட்டத்தட்ட மூணு வருஷம் தாண்டியாச்சு .இந்த நிமிஷம் வரைக்குமே நீ பிடி கொடுக்கலை..

என்னோட அப்பா என்னை கம்பெல் பண்ணிக்கிட்டு இருக்காங்க சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ..

மாதவன் கிட்ட பர்மிஷன் வாங்கு அப்படின்னு ..நான் அப்பாவுக்கு என்ன பதில் சொல்லட்டும் .

இதுக்கு மேல என்னால அப்பாவை காக்க வைக்க முடியாது. அப்பாவுக்கு இருக்கிறது நான் ஒரே ஒரு பொண்ணு ..

அவங்க காலத்துக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து.. நான் சந்தோஷமா இருக்கிறத பார்க்கணும்னு ஆசைப்படறாங்க.

அவங்களோட ஆசை நியாயமானது தானே ..உங்க அப்பா கிட்ட அடிக்கடி போன் பண்ணி கேக்குறாங்க..

அப்பாவும் சரியான பதில் சொல்லல அப்படின்னு சொன்னாங்க .எனக்கு ரெண்டுல ஒரு முடிவு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்."

" ஆபீஸ்ல நடந்ததெல்லாம் உனக்கு தெரியுமா ".

'தெரியும் குரு வழக்கம் போல போன் பண்ணி சொன்னான். இப்போ இங்க தனியா இருக்கிறது கூட குரு கிட்ட கேட்டுட்டு தான் வந்தேன் ."

"எதுக்காக நீ அவனிடம் கேட்க வேண்டும் .."

"அப்படி இல்ல உன்னை பார்த்து பேசணும்னு ஆசைப்பட்டேன் அதனால குருவுக்கு போன் பண்ணி கேட்டேன் .

வீட்ல இருந்தா நேரா வீட்ல வந்து பார்க்கலாம் என்று ..அவன் தான் சொன்னான். அண்ணா ஆபீஸ்ல தான் இருக்காங்க அப்படின்னு..

அதனாலதான் உடனே புறப்பட்டு வந்தேன்".

" நித்யா நான் உன்கிட்ட தெளிவா ஒரு முடிவை இப்ப சொல்லிடறேன் என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது.

ஏன்னா என் மனசுல நீ இல்ல.."

" பிறகு நான் இல்லன்னா வேற யார் இருக்காங்க ."

"இப்போதைக்கு யாருமே என் மனசுல இல்ல .."

'போதும் மாதவா திரும்ப திரும்ப பொய் சொல்ல வேண்டாம் .எனக்கு நல்லாவே தெரியும் நீ அந்த சக்தி பொண்ண காதலிக்கிறேன்னு..

அன்றைக்கு கடைசியா உன்னை பார்க்க வரும் போது கூட இங்க ஆபீஸ் ரூம்ல தான் அவ இருந்தா..

நான் உன்கிட்ட வரவுமே அவ திகைச்சு போய் பார்த்தா ..அந்த கண்ணுல அப்பட்டமா காதல் தெரிஞ்சது .

நானே அன்னைக்கு குழப்பத்தில் தான் கிளம்பி போனேன் .இங்க ஆபீஸ்ல நடந்த விஷயத்தை தெரியவும் புரிஞ்சுகிட்டேன்..

நிச்சயமா உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ தகராறு நடந்து இருக்குது.

அதனால தான் நீ அவளை அந்த மாதிரி நடத்தின அப்படின்னு..
இத்தனை தெரிஞ்சும் திரும்ப உன் கிட்ட வந்து கேக்குறேன்னு பார்க்கறியா..

ஏன்னா நானும் உன்னை லவ் பண்ணினேன்".

' நித்யா நிச்சயமா சொல்றேன் நீ என்ன காதலிக்கலை.. உனக்கு உன்னை ஃப்ரீயா விடுற கண்டுக்காத மாப்பிளை வேணும்..

அதுக்கு நீ என்னை சூஸ் பண்ணி இருக்கிற ..ஏன்னா நான் உன் கிட்ட பணம் வாங்கி இருந்தேன்.

அந்த நன்றி கடன் என்கிட்ட நிறைய இருக்குது .அந்த ஒரு காரணத்துக்காகவே உன்னை எந்த விதத்திலும் காயப்படுத்த மாட்டேன்னு நீயா முடிவு பண்ணிட்ட..

அதுக்கு ஒரு பெயர் காதல்னு வைச்சுட்டு
பின்னாடி சுத்திக்கிட்டு இருக்குற அது தான் நிஜமும் கூட.."

"தேங்க்ஸ் மாதவா நானும் நிறைய குழப்பத்தோடு தான் வந்தேன் என் மனசுல இருக்கிறது காதலா இல்ல வேற எதுவுமா அப்படி என்கிற குழப்பம் எனக்குமே நிறைய இருந்தது .

ஆனால் நீ ரொம்ப அழகான பேரு வெச்சிட்ட.. என்னோட அன்பு உண்மையிலேயே உனக்கு புரியல.

நீ சொன்னது மாதிரி கூட இருக்கலாம் ஆனா அதையும் தாண்டி உன்மேல எனக்கு நிறைய பிரமிப்பு இருந்தது .

அந்த பிரமிப்பு என்னைக்குமே மாறாது .அதுதான் உண்மையும் கூட.. தேங்க்ஸ் இப்பவாவது உன் மனசுல இருக்குறத சொன்னியே..

ஏன்னா இதுக்கப்புறம் காத்துகிட்டு இருந்தா அது அவ்வளவு நல்லா இருக்காது .

என் அப்பா சில மாப்பிள்ளைகளை பார்த்து வச்சு பிடிவாதமா என்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தாங்க .

எதாவது ஒரு முடிவை தெளிவா சொல்லி ஆகணும் அப்படின்னு.. நானும் இந்த ஒரு வாரத்துக்குள்ள சொல்லிடறதா சொல்லி இருந்தேன்.

ரொம்ப தேங்க்ஸ் அப்பா கிட்ட நான் சொல்லிடுவேன் .அவருக்கு பிடிச்ச மாப்பிள்ளையா பாருங்க..

கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்னு.. அப்பா கிட்ட வாங்கின பணத்துக்கு நீ எப்பவோ வட்டியும் முதலும் சேர்த்து கொடுத்துட்ட..

அந்த வகையில் நீ கடனாளி கிடையாது ஆனால் கடைசி வரைக்கும் எனக்கு நல்ல பிரண்டா இருப்பியா ..

அதுக்கு மட்டும் பதில் சொல்லு ஏன்னா இத்தனை நாள் உன்கிட்ட பேசி இருக்கிறேன் .

என்றைக்குமே என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியது கிடையாது .நான் பக்கத்துல வந்தா கூட விலகி போக தான் சொல்லி இருக்கிற.. அந்த நல்ல மனசு எனக்கு வேணும் கடைசி வரைக்கும் பிரண்டா.."

"உன்னோட நல்லது, கெட்டது எல்லாத்துக்குமே நான் துணையா இருப்பேன் நித்யா .

என்னோட பெஸ்ட் பிரண்டு நீ தான் அதுல எந்த சந்தேகமும் உனக்கு தேவையில்லை .

கடைசி வரைக்கும் நான் உனக்கு நல்ல பிரண்டா இருப்பேன் ."

"தேங்க்ஸ் மாதவா இது போதும் ஐ லவ் யூ சோ மச் ..ஐ மீன் பிரண்டா சொல்றேன்..

உன்ன எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ..என்னோட அன்புக்கு உரியவன் நீ ..பை ..
அப்பாகிட்ட தெளிவா பதில் சொல்லிடறேன் "என்று நகர்ந்தாள்.

அவள் சொல்லிவிட்டு போன பிறகு பெரிய பாரம் இறங்கியது போல இருந்தது.
 

Kavisowmi

Well-known member
28

அடுத்த நாள் காலை 9 மணிக்கு ரைட்டர்கள் மூவருமே வந்திருந்தனர்.

மாதவனிடம் நீட்ட வாங்கியவன் மேலோட்டமாக படித்து பார்த்தான்.. படித்த அந்த நிமிடமே கோபம் உச்சிக்கு ஏறி இருந்தது .

மொத்த பேப்பர்களையும் தூக்கி மூவரின் மேலும் வீசினான் .

"என்ன இது ..என்ன இது ..நான் என்ன கேட்டேன் .நீங்க என்ன செஞ்சு வெச்சி இருக்கீங்க .

இதுக்கு பேரு ரைடிங்கா.. இது எப்படி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எடுத்துட்டு போக முடியும் .

ஒரு விளம்பரத்துக்கு வசனம் எழுதினால் எப்படி இருக்கணும்!! கியூட்டா பார்க்க நல்லா இருக்கணும்ல ..

அடுத்த முறையும் அந்த விளம்பரம் வந்தா அந்த டயலாக்குக்காகவே மறுபடியும் பார்க்கணும். அந்த மாதிரி எழுதி தர சொன்னால்.. என்ன எழுதி வச்சிருக்கீங்க .
சின்னபுள்ள கிறுக்குன மாதிரி.. " என்று கத்திக் கொண்டிருக்க.. குரு வேகமாக உள்ளே நுழைந்தான்.

" என்ன ணா.. என்ன பிரச்சனை "

"இவங்க எழுதிட்டு வந்த எதுவுமே என் மனசுக்கு திருப்தியா இல்ல".

" ஓகே அதுக்காக ஏன் இப்படி கத்துக்கிட்டு இருக்குற ..இது உன்னோட வழக்கமே இல்லையே ..

இங்க பாருங்க நீங்க உங்களோட சீட்ல போய் உட்காருங்க .மறுபடியும் ஏதாவது சின்னதா சேஞ்ச் பண்ணி எடுத்துட்டு வாங்க ."

"சார் இதுக்கு மேல எப்படி பெஸ்ட் எழுதுவது.. எங்களுக்கு தெரியல.. ஒரு நாள் முழுக்க யோசிச்சு நிறைய ஹோம் ஒர்க் பண்ணி தான் இதை எழுதிட்டு வந்திருக்கிறோம் .

விடிய விடிய தூங்கல ..நல்ல டைலாக் கேட்பாங்க.. பெஸ்ட்டா கொடுக்கணும்னு யோசிச்சு எழுதிட்டு வந்தா சார் யோசிக்காமல் மூஞ்சிக்கு நேரா தூக்கி வீசறாரு.."

" ப்ளீஸ் ..அண்ணா கோவத்துல இருக்காங்க நீங்க போங்க நான் பாத்துக்குறேன்" என்று அனுப்பியவன்..

" என்ன ணா பிரச்சனை ..ஏன் இப்படி இருக்கிற ".

"எதுவுமே எனக்கு பிடிக்கலை டா நான் என்ன செய்யறது .எழுதுனது எதுவுமே சரியா இல்ல".

" நீ எந்த மாதிரி தான் எதிர்பார்க்கிற அதையாவது சொல்லனும்ல .நீ சொன்னாதானே அவங்க அதுக்கு ஏத்த மாதிரி யோசிப்பாங்க .

இத்தனை நாள் இங்க வேலை செய்றாங்க உங்களுக்கு தெரியும் தானே".

" நான் ஒவ்வொரு முறையும் குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்லி தரணுமா .."

"அண்ணா உன்ன வச்சுட்டு.. நான் என்ன செய்யறதுன்னு தெரியல இரு .. ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு வரேன் "என்றவன் அடுத்த சில நிமிடங்களிலேயே கொஞ்சம் பேப்பர்களை கொண்டு வந்து நீட்டினான்.

" இத படிச்சு பாரு இது ஓகே ஆகணும்னு நினைக்கிறேன்" வேகமாக படித்தவன் இவனுடைய முகத்தை யோசனையோடு பார்க்க..

" சக்தி எழுதினது தான் 15 நாளைக்கு என்னென்ன ஷூட்டிங் நடக்க இருக்குதோ அதற்கான எல்லா டயலாக்கையும்.. தனித்தனியா எழுதி வச்சுட்டு போயிருந்தா..

அவளோட டேபிளுக்குள் இருந்து தான் எடுத்துட்டு வந்தேன்."

" இத படிச்சு பாரு ..எவ்வளவு நல்லா இருக்குன்னு.."

" எல்லாரும் சக்தியாக முடியாது முதல்ல ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகோ..சக்தி இங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி இவங்க மூணு பேரும் தானே எழுதிக் கொடுத்துட்டு இருந்தாங்க .

அவங்கள்ல எது பெஸ்ட்டோ..அது மட்டும் எடுக்க பழகு. ஒவ்வொருத்தர் கிட்டயுமே சக்தியோட டயலாக்கை பொருத்திப் பார்த்து தேடிக்கிட்டு இருக்காத..

ஒவ்வொருத்தருமே வேற வேற அத புரிஞ்சுக்கோ..சக்தியோட இடத்துல யாரையுமே வச்சு பொருத்தி பார்த்து இப்படி கத்துக்கிட்டு இருக்காத புரிஞ்சுதா ..

இந்த டயலாக் இன்னைக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொடுத்து விடுகிறேன் அடுத்த முறை இவங்க எழுதுறத படிச்சு பார்த்து எது பெஸ்ட் என்று தோணுதோ அதை எடுத்து பழகு.

நீ செய்ற ஒவ்வொரு தப்புக்கும் மத்தவங்கள காரணம் காட்டாத .."

"நீயும் என்னை புரிஞ்சுக்காம பேசுற குரு ".

"அண்ணா உன்னை என்னால நல்லா புரிஞ்சுக்க முடியும் .நான் புரிஞ்சுக்காட்டி வேற யாரு புரிஞ்சிக்குவாங்க.

சரி நான் ஆட்களை கூப்பிட்டு கிளம்புறேன். நீ எந்த வேலையும் இன்னைக்கு செய்ய வேண்டாம் தயவு செய்து ரெஸ்ட் எடு .

உனக்கு ரொம்ப போர் அடிச்சா அப்பாவ போய் பாரு இல்ல அங்கயும் போகமாட்டேன்னா வேற எங்கேயாவது ஒரு இடத்துல போய் கொஞ்ச நேரம் டைம் பாஸ் பண்ணிட்டு வா புரிஞ்சுதா நான் வரேன்" என்று நகர்ந்தான்.

இதற்கு மேல் ஆபீஸில் இருந்து மற்றவர்களை சிரமப்படுத்த கூடாது என நினைத்தவன் மெல்ல எழுந்து வெளியேறினான்.

கால் போன போக்கில் எங்கெங்கோ சுற்றி கடைசியாக சென்றது அவன் தன்னுடைய தந்தை இருந்த வீட்டிற்கு..

சில நிமிடம் வரைக்கும் சக்தியின் வீட்டை வெறித்து பார்த்தவன் பிறகு தந்தையை பார்க்க சென்றான்.

இவனை பார்க்கவும் வரவேற்றார் "என்னடா என்ன.. ஆபீஸ்ல வேலை இல்லையா .இந்நேரத்துக்கு இங்க வந்திருக்கிற.."

" இல்லப்பா மனசு சரியில்ல.. எங்க போறதுன்னு தெரியாம கடைசில இங்க வந்தேன்" என்று சோர்வாக சோபாவில் அமர்ந்து கண்களை மூடினான்.

" உனக்கு ஏன் மனசு சரியில்லாமல் போகுது ..அந்த பொண்ணு அவளோட சொந்த ஊருக்கு போய் நாள் ஆகிடுச்சு.

சாதாரணமா நீ இந்த நேரத்துக்கு சரியாகி இருக்கணும்ல இன்னமும் அதையே யோசிச்சுகிட்டு இருக்கறியா.."

"இல்லப்பா மொத்தமா நான் மறக்க நினைக்கிறேன் ".

"அதனால தான் வரும் போது அவ்வளவு நேரம் அந்த பொண்ணோட வீட்டையே பார்த்துட்டு வந்தியா ..அப்பா நான் கவனித்துக் கொண்டு தான் இருந்தேன் .

சரி எப்ப தான் இயல்புக்கு வரலாம்னு இருக்கிற.."

" ஏம்பா திடீர்னு இப்படி கேக்குறீங்க".

" இல்ல இப்பதான் குரு போன்ல பேசினான்.. உன் ஆபீஸ்ல நடந்த கலாட்டா.. நீ நடந்து கொண்டது எல்லாத்தையுமே தெளிவா சொன்னான்.

நீ இங்க வந்தாலும் வருவே.. கவனிச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு தான் போனை வச்சான். அதே மாதிரி கடைசியில நீ இங்க தான் வந்து நிற்கற..

சொல்லு ஏதாவது பேசணும்னா பேசு மாதவா.."

"சக்தி எப்படி இருக்கிறாங்க தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன் பா ".

"அந்த பொண்ணு இங்க இருக்க கூடாதுன்னு துரத்தி விட்டாச்சு . அப்புறம் எப்படி இருந்தா உனக்கு என்ன ?

அதை தெரிஞ்சு நீ என்ன செய்ய போற .."

"என்னப்பா நான் நடந்து கொண்டது அதிகம் தான்."

" அதனால இப்ப என்ன செய்யப் போற ..அந்த பொண்ணை பார்த்து மன்னிப்பு கேட்க போறியா ..

முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ மாதவா. நீ எப்பவுமே அளவுக்கு அதிகமா கோபம் படற..

பல நேரம் உன் கிட்ட சொல்லி இருக்கிறேன் .நீயேன் இவ்வளவு கோபப்படற.. எனக்கு தெரியவே இல்லை .

முன்னாடி எல்லாம் நீ ரொம்ப சாப்ட் தெரியுமா.. நீ எப்பவுமே யாரையும் எடுத்தெறிஞ்சோ மனசு கஷ்டப்படுற மாதிரியே எதுவுமே பேசுற பழக்கம் உன்கிட்ட கிடையாது .ஆனால் அது எல்லாமே இப்போ நிறையவே மாறி இருக்குது .

அதுக்கு காரணம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.. நீ கோபப்பட்டது சக்தி கிட்ட இல்ல..

சக்தி இருந்த இடத்தில் அவங்க அப்பாவ பொருத்திப் பார்த்து அந்த கத்து கத்தின ..அதுதான் உண்மையில் கூட.."

"நிறையவே ஒடஞ்சு போய் போனா".

" சரி உனக்காக ஒரே ஒரு காரியம் தான் செய்ய முடியும் .அந்த சக்தியோட போனுக்கு கூப்பிட்டு பேசறேன் .

எப்படி இருக்கற.. நீ எங்க இருக்கிறன்னு கேட்டு தெரிஞ்சு உனக்கு சொல்றேன் போதுமா..

அதுக்கு மேல நீ என்ன செய்யலாம்னு இருக்கிற அதை எனக்கு முதல்ல சொல்லு….

மௌனமா இருந்தா வேலைக்கு ஆகாது மாதவா .. நீ எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும் அப்படின்னா மட்டும்தான் நான் அவ கிட்ட பேசுவேன்."

"அப்பா ப்ளீஸ் பா ..அவ எப்படி இருக்கிறான்னு தெரிஞ்சிக்க ஆசைப்படுறேன். ஒரே ஒரு தடவை மட்டும் கூப்பிட்டு பேசுங்க ."

"ஆக நீ பேச மாட்ட இல்லையா..

எப்படி கடைசி ஒருமுறை அவளோட குரலை கேட்கணும் அந்த மாதிரியா.."

"அப்பா நான் உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல".

" உன் மனநிலை எனக்கு நல்லா புரியுது மாதவா .எதா இருந்தாலும் நீ தான் முடிவு பண்ணனும். ஒரு நிமிஷம் அவகிட்ட பேசிட்டு உன்கிட்ட வரேன் "என்றவர் சக்தி நம்பருக்கு அழைத்தார்.

ஒரு முறை முழுவதுமாக ரிங் அடித்து ஓய்ந்த பிறகு மறுபடியும் அழைக்க இப்போதுதான் போனை எடுத்தாள்.

குரல் நிறைய மாறி இருந்தது போல இருக்க.." சொல்லுங்க அங்கிள் ஏன் எனக்கு போன் பண்ணி இருக்கீங்க".

" எப்படி இருக்கிற சக்தி".

" அது தெரிஞ்சு என்ன செய்ய போறீங்க அங்கிள் நான் நல்லா இல்ல .அதுதான் உண்மையும் கூட "..

"நடந்ததெல்லாம் குரு சொன்னான்.. கேள்விப்பட்டேன்..

மாதவன் கூட இருக்கிற பிரச்சினை அது ஒரு ஓரமா இருக்கட்டும். எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்குது வர முடியுமா..

அவனோட சண்டை போட்ட சரி..

நீ எதுக்காக அவ்ளோ வேகத்தோட இங்கிருந்து புறப்பட்டு போன.."

" என்ன செய்யறது அங்கிருந்து கோபமா அனுப்பிட்டாரு ..தனியா அந்த வீட்ல இருந்தா நான் என்ன செஞ்சு இருப்பேன்னு எனக்கே தெரியல.

அதனாலதான் பாட்டி கூட இருக்கலாம்னு வேகமா பாட்டிகிட்ட வந்துட்டேன் .நான் இப்போ ஒரு அளவுக்கு நார்மல் ஆகிவிட்டேன்".

"உன்னோட வார்த்தை தான் அப்படி சொல்லுது .குரல் அப்படி சொல்லலையே.."

" நான் என்ன அங்கிள் பண்ணட்டும் நான் என்ன தப்பு பண்ணினேன் இந்த நிமிஷம் வரைக்கும் நான் அவருக்கு எந்த துரோகமும் பண்ணல .

அதை ஏன் அவர் புரிஞ்சிகலை.. "சொல்லும் போதே கதறி அழ ஆரம்பித்தாள்.

"சக்தி ப்ளீஸ் அழாத.. மாதவன் எனக்கு எப்படி மகனோ..அதே மாதிரி தான் நீயும் என் நண்பனோட பொண்ணு .

உன் குடும்பத்தில் இருந்து ஒரு பெண்ணை என் வீட்டுக்கு மருமகளா.. எனக்கு மகளா அழைச்சிட்டு வரணும்னு ஆசைப்பட்டேன்.
ஆனா எதுவுமே நடக்கல.. "சொல்லச் சொல்லவே திரும்பி அழ ஆரம்பிக்க.. அதே நேரத்தில் இன்னொரு குரல் இவருக்கு கேட்டது .

போனை இவர் லவ்ட் ஸ்பீக்கரில் போட்டிருக்க.. அங்கே பேசுவது எல்லாமே தெளிவாக இவர்கள் இருவருக்கும் கேட்டது.

"யார்கிட்ட பேசிகிட்டு இருக்கிற சக்தி இப்பதான் கொஞ்சம் அழுகையை நிறுத்தி இருந்த ..மறுபடியும் அழுகா என்ன அர்த்தம் .

நான் உன்னோட அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். .

அவர் உடனே உன்னை ஊருக்கு வர சொல்றாரு .."

" எதுக்காக பாட்டி அப்பா கிட்ட சொன்னீங்க.."

" பெருசா எதுவும் சொல்லல வேலையை விட்டுட்டு வந்துட்டான்னு மட்டும் தான் சொல்லி இருக்கிறேன்.

சரி வேலையை தான் விட்டாச்சு இல்லையா .இங்க புறப்பட்டு வர சொல்லுங்கன்னு சொல்லி இருக்கறான் .

சரியா சாப்பிடறது இல்ல ஒழுங்கா தூங்கறதும் இல்லை ..பார்க்கவே பித்து பிடித்த மாதிரி உட்கார்ந்திருக்கிற ..

எத்தனை நேரம் இந்த முகத்தை நான் பார்த்துட்டு இருக்க முடியும் இதுக்கு மேல என்னால இதையெல்லாம் பார்த்துகிட்டு இருக்க முடியாது .அதனாலதான் போன் பண்ணி சொன்னேன்.

நீயா கார் எடுத்துட்டு போகணுமாம் இல்லாட்டி அவர் வந்து அழைச்சிட்டு போறதா சொன்னாரு .நான் என்ன பதில் சொல்லட்டும் ."

" வேண்டாம் பாட்டி நானே கிளம்பி போறேன். உனக்கும் கூட நான் பாரம் ஆகிட்டேன் அப்படித்தானே.."
என்றவள்.அப்பொழுதுதான் கையில் போன் இருப்பதையே கவனித்தாள்.

"முக்கியமான ஒருத்தர் கிட்ட பேசிகிட்டு இருக்கேன் பாட்டி .நீங்க போங்க. நான் இப்ப வரேன்" என்றவள்.

" இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்.. என்னோட விதி எதுவோ அது அப்படியே நடக்கட்டும் . நான் போனை வைக்கிறேன்."

அதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்காமல் வேகமாக மாதவன் வெளியேறி இருந்தான்.

சக்தி உன்னோட அழுகையையே என்னால தாங்க முடியலையே.. நான் எப்படி நீ இல்லாம இருக்க முடியும்னு நினைக்கிற..

என்ன ஆனாலும் சரி நடக்கிறது நடக்கட்டும் .இப்பவே இந்த நிமிஷமே உன்னை நான் அழைச்சிட்டு இங்க வரப்போறேன்.

அடுத்த முகூர்த்தத்தில் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் கூடவே வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் சக்தி .

இதுக்கு மேல நீயும் வருத்தப்பட வேண்டாம். நானும் வருத்தப்பட தயாராக இல்லை .இரண்டு பேருக்கு நடுவுல இருக்கிறது உண்மையான காதல்..
அது இல்லன்னு எப்பவுமே சொல்ல மாட்டேன். எப்படி மனசுக்குள்ள நுழைஞ்சேன்னு எனக்கு தெரியாது.

நித்யாகிட்ட இனி உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லும்போது நான் எந்த அளவுக்கு நிம்மதியானேன்னு எனக்கு தான் தெரியும் .

அப்பவே புரிஞ்சிடுச்சு என் மனசு முழுக்க நீ தான் இருக்கிறேன்னு.. உன்னை தவிர வேற யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.

நீ உன் பாட்டி வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்னாடி நான் உன்னை வந்து அழைச்சிட்டு வந்துடறேன் "என்று காரை எடுத்தான்.
 

Kavisowmi

Well-known member
29

சரியாக இரண்டு மணி நேரம் கழித்து காலிங் பெல் சத்தம் கேட்க வேகமாக கதவை திறந்தார் சக்தியின் பாட்டி.

" பாட்டி சக்தி எங்க? அவளை நான் அழைச்சிட்டு போக வந்திருக்கிறேன்" சொன்னவனை கூர்ந்து கவனித்தவர் .."நீ மாதவன் தானே ..உள்ள வா" என்று அழைத்தார்.

"சக்தி.. அவ.. அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாளே.. கிளம்பி ஒரு மணி நேரம் முடியப்போகுது ".

"என்ன பாட்டி ஏன் இவ்வளவு அவசரமா அனுப்புனீங்க .இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்க வைத்திருக்கலாமே.."

"சரிதான் நடந்ததெல்லாம் எனக்கு முழுசா தெரியும் .எத்தனை நாள் அவளை இப்படி வச்சுக்கிட்டு இருக்க முடியும் .வந்த நேரத்துல இருந்து அழுதுகிட்டே இருக்கிறா..

அழறவங்களை எத்தனை நேரம் தான் அப்படியே பார்க்க முடியும். அவளுக்கு மாறுதல் தேவை அதனால தான் அனுப்பி வச்சேன்".

" சரி பாட்டி எதுக்காக தனியா அனுப்பிவிட்டிங்க.."

" இதென்ன கேள்வி அவ நல்லாவே கார் ஓட்டுவா..அதனால தான் எந்த யோசனையும் செய்யாமல் வீட்டுக்கு போகணும்னு அனுப்பி வச்சேன்."

" சரி பாட்டி சக்திக்கு போன் பண்ணுங்க ..எங்க போய்கிட்டு இருக்கிறார்களோ அங்கேயே வண்டியை நிறுத்த சொல்லுங்க நான் போய் அழைச்சிட்டு வரேன்."

"ஏன் ?எதுக்காக மாதவா இன்னும் அழ வைக்கிறதுக்கா.. சக்தி வேண்டி மட்டும் அழுதுட்டா..

அவகிட்ட முதல்லயே சொன்னேன் இது உனக்கு வேண்டாத வேலை உன் அப்பா சொன்ன பேச்சைக் கேளு அப்படின்னு..

அவ தான் கேட்கவே இல்லை. அப்பா கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தனும் நான் அவரை தான் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதமா அங்கே புறப்பட்டு வந்தா..

அதற்கான தண்டனை தான் இது அனுபவிக்கட்டும் ".

"என்ன தப்பு தான் பாட்டி.. நீங்க இவ்வளவு கோவமா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சக்தி ரொம்ப நல்ல பொண்ணு ."

"அது எனக்கும் தெரியும் ..ஏன்னா நான் தான் அவளை வளர்த்தவ.. அவளுக்கு நல்லது, கெட்டது ,நியாயம் ,அநியாயம் எல்லாமே சொல்லிக் கொடுத்து வளர்த்தேன்.

அவளை எந்த குறையும் சொல்ல மாட்டேன் .ஆனா உன் விஷயத்துல அவ ஏமாந்துட்டா தானே.."

" பாட்டி நடந்ததுக்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் .தப்பு முழுக்க முழுக்க என்னோடது மட்டும்தான் .ப்ளீஸ் பாட்டி ".

"சரி என்னமோ சொல்லற ..நான் இதுக்கு மேல உங்க பர்சனல் விஷயத்தில் தலையிட மாட்டேன். நீயே அவளுக்கு போன் பண்ணி எங்க இருக்கிறாளோ அங்கேயே நிறுத்த சொல்லு .

பிறகு அழைச்சிட்டு வா.. ஆனா இன்னொரு விஷயத்தையும் சொல்லிடுறேன் .அவள உனக்கு பிடிக்கும்னு சொன்னாலுமே அவளோட அப்பா பர்மிஷன் இல்லாமல் கல்யாணம் பண்ணக்கூடாது. அதை நீ முழுசா புரிஞ்சுக்கணும் .

ரெண்டு வீட்டோட சம்மதத்தோட இந்த கல்யாணம் நடக்கணும். இது ஒண்ணுதான் என்னோட ஆசை.. உன்கிட்ட மட்டுமில்ல சக்தி கிட்டேயும் இதுதான் சொல்லுவேன்.

என்னடா இவ இப்படி சொல்றான்னு யோசிக்காத.. ஏற்கனவே சக்தியோட அப்பாவுக்கு நம்மள பிடிக்காது பிறகு எப்படி இந்த கல்யாணம் நடக்கும் அப்படின்னு நீ நினைக்க வேண்டாம்.

நீயும் இப்போ ஓரளவுக்கு உன்னோட உழைப்பாள உயர்ந்து நல்ல ஒரு இடத்தில இருக்கிற..

உழைக்கிறவங்களுக்கு கொடுக்குற மரியாதையை கட்டாயமாக கொடுத்து தான் ஆகணும் .

நான் என் பேத்தி சார்பில் அவ பக்கத்துல நின்னு அவ சார்பில் அவளோட அப்பா கிட்ட பேசுவேன். புரிஞ்சுதா ."

"சரி பாட்டி"என்றவன் வேகமாக சக்தியின் நம்பருக்கு அழைப்பு விடுத்தான் .

நீண்ட நேரம் வரையிலுமே போனை யாருமே எடுக்கவில்லை ."பாட்டி அவ எடுக்க மாட்டேங்கறா.."

" அதெல்லாம் போனை எடுப்பா ..நீ மறுபடியும் ட்ரை பண்ணு "என்று சொல்ல மறுபடியும் போனில் அழைக்க ..இப்போது போன் அட்டென்ட் செய்யப்பட்டது .

வேகமாக "சக்தி எங்கே இருக்கிற.. நீ அதே இடத்தில் இரு. நான் இப்ப வந்துடுறேன் "என்று குரல் தர.. பேசியதோ வேறு ஒருவர் .

"யார் சார் நீங்க உங்களுக்கு என்ன வேணும் .நீங்க இந்த பொண்ணுக்கு உறவினரா.."

"நீங்க யாரு பேசுறீங்க சார் ".

"இங்கே பாதி வழியில் வரும்போது வண்டி ஆக்சிடென்ட் ஆகி இருந்தது. வடி ஓட்டிட்டு வந்தது ஒரு பொண்ணு..

அந்த பொண்ணு ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள்..

நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் .. இப்பதான் போன் என் கைல கொண்டு வந்து கொடுத்தாங்க.. போனுக்கு சொந்தக்காரங்க யாரு உறவினர்கள் யாரையாவது அழைக்கலாம்னு நினைச்சேன்..
அதுக்குள்ள போன் வந்துருச்சு ."

"சார் நீங்க எந்த இடத்தில் இருக்கறீங்கன்னு சொல்லுங்கள் நான் சீக்கிரமா வரேன்" என்றவன் வேகமாக பாட்டியை அழைத்துக்கொண்டு புறப்பட்டிருந்தான்.

பதட்டமான நிமிடங்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வேகமாக வண்டியை ஒட்டிக்கொண்டு அந்த பிரதான ஆஸ்பிட்டலுக்குள் நிறுத்தினான்.

வேகமாக பாட்டியும் மாதவனும் படபடக்கும் இதயத்தோடு வேகமாக அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டிடம் கேட்டனர் .

"ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்ததா..வர்ற வழியில்.. ஆக்சிடென்ட் ..

கார் ஆக்சிடென்ட் பேர் சக்தி வயசு 23 இருக்கலாம் "என்று சொல்ல..

" புதுசா வந்த ஆக்சிடென்ட் கேஸா இப்பதான் உள்ளே கொண்டு போய் இருக்காங்க .நேரா போங்க அந்த கடைசியில் லெப்ட் திரும்பினீங்கன்னா அந்த ரூம்ல தான் இருக்கிறாங்க "என்று சொல்ல வேகமாக அங்கே சென்றனர்.

வாசலிலேயே இவர்களை அழைத்துப் பேசிய இன்ஸ்பெக்டர் காத்துக் கொண்டு நின்றிருந்தார்.

" நீங்க பொண்ணுக்கு என்ன வேணும்".

" நான் பாட்டி இந்த பையன் என் பேத்திய கல்யாணம் பண்ணிக்க போறவர்."

"ஓ சரி.. எதுக்காக தனியா விட்டீங்க".

" என்ன நடந்துச்சு இன்ஸ்பெக்டர் எப்படி அவளுக்கு அடிபட்டிச்சு ".

"உங்க பேத்தி மேல எந்த தப்பும் இல்லை. ஓரமா தான் வந்திருக்கிறாங்க எதிர்ல வந்த பஸ் பிரேக் டவுன் ஆகி கண்ட்ரோல் இல்லாம உங்க கார்ல இடிச்சிட்டாங்க..

பெருசா அடி எல்லாம் இல்ல.. நார்மலாக தான் இருக்காங்க" என்று சொல்ல பதறியபடி உள்ளே நுழைந்தனர்.

சக்திக்கு அங்கங்கே சிராய்ப்பு காயம் நிறைவே இருந்தது. .. அவளுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு இருந்தார் ஒரு செவிலியர்..

டாக்டர் அருகே இருந்து செக் செய்து கொண்டிருக்க வேகமாக அருகே சென்றனர்.

இவர்களை பார்க்கவும்" யார் இவங்களை அனுப்பினது.இங்க பேசன்டை பார்க்க வேண்டாமா.."

" சாரி டாக்டர் பதட்டத்தில் வந்துட்டோம்..இதை மட்டும் சொல்லுங்க..டாக்டர் என் பேத்திக்கு என்ன ஆச்சு இப்ப எப்படி இருக்கிறா.. ஒன்னும் பயப்படும்படி எதுவுமே இல்ல தானே" என்று பதவியபடி கேட்டார்.

" பயப்படாதீங்க பெருசா எந்த அடியும் பட்ட மாதிரி தெரியல .உள்காயம் ஏதாவது இருக்குதான்னு அவங்க கண் வலிச்சா தான் தெரிஞ்சுக்க முடியும்.

வண்டி மோதலும் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க .இன்னமும் மயக்கம் தெளியலை.. மயக்கம் தெளிய வைக்க தான் நாங்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கிறோம் .நீங்க எல்லாருமே கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணுங்க.."

மேலும் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர்.

"போய் பார்க்கலாமா டாக்டர்".

"தாராளமா போய் பாருங்க ஆனா முக்கியமான ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லிடறேன் ".

"என்ன டாக்டர் என்ன சொல்ல போறீங்க."

" உடல் அளவுல பார்த்தா பெருசா அடி எதுவும் இல்லை ஆனால் தலையில லேசா அடிபட்டு இருக்குது".

" அதனால சொல்லுங்க டாக்டர்.."

" என்ன சொல்றதுன்னு தெரியல அந்த பொண்ணோட அம்மா அப்பா எல்லாம் எங்கே இருக்கிறார்களா? "

" டாக்டர் முதன் முதலில் தகவல் தெரியவும் நாங்க தான் வேகமாக வந்தோம்.

இனிதான் அவங்க அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லணும்".

" தலையில் அடிபட்டதனால கொஞ்சம் மெமரிலாஸ் ஆகி இருக்குமோன்னு சின்ன டவுட் இருக்குது .ஏன்னா அதுக்கு ஏத்த மாதிரி கண் முழிச்சவங்க முன்னுக்குப்பின் முரணா பேசிகிட்டு இருக்காங்க.

பயப்படலாம் வேண்டாம் சின்ன வயசு தான் பெருசா எதுவும் இருக்காது .அதிர்ச்சியில் கூட இப்படி பேசி இருக்கலாம் .

அதுக்காக ஒரேடியா எல்லாத்தையும் மறந்துட்டாங்களா அப்படி எல்லாம் கேட்டுடாதீங்க .கொஞ்சம் கொஞ்சமா தான் ஞாபகம் வரும். இது தான் இப்போதைக்கு அந்த பொண்ணோட நிலைமை. சரி நீங்க போய் பாருங்க "என்று நகர்ந்தார்.

பாட்டியும் மாதவனும் வேகமாக உள்ளே நுழைய நெற்றியை சுருக்கியபடி இரண்டு பேரையும் பார்த்தாள் சக்தி.

பாட்டியை பார்த்த உடனேயே அடையாளம் தெரிந்து விட்டது வேகமாக அருகே அழைத்து அமர்த்திக் கொண்டாள்.

" வா பாட்டி ரொம்ப பயந்துட்டியா.. பயப்படாத.. எனக்கு பெருசா எந்த அடியும் இல்லை. பாரு கை காலெல்லாம் அங்கங்க லேசா சிராப்பு தான் ஆகி இருக்கு..எரியுது பாட்டி" என்று சொன்னவள் மாதவனை நெற்றி சுருக்கி யோசனையோடு பார்த்தாள்.

அவனைப் பார்த்ததற்கான ஞாபகம் எங்குமே அவளிடத்தில் இல்லை .

"இது யார் பாட்டி.. உங்களுக்கு தெரிஞ்சவங்களா "என்று கேட்க மாதவனுக்கு மட்டுமல்ல சக்தியின் பாட்டிக்குமே பெரிய அதிர்ச்சி தான்.

" இவர் உனக்கு தெரியலையா "என்று பாட்டி கேட்க ..

"தெரியலையே பாட்டி தெரிந்திருந்தால் தான் சொல்லி இருப்பேன்ல ..யார் இவர் நமக்கு சொந்தக்காரங்களா. ஆனா பார்த்த ஞாபகம் இல்லையே" என்று சொல்ல அமைதியாக அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.

சக்தியின் தந்தைக்கு அழைத்து சொல்லி இருக்க அவரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்திருந்தார். உள்ளே வரவுமே சக்தியின் பாட்டி
அனைத்து விவரங்களையும் கூற நெற்றியை சுருக்கியபடி யோசனையோடு நின்றுவிட்டார்.

மாதவன் தயக்கம் எல்லாவற்றையும் விட்டு நேரடியாக சென்று பேசினான்.

" இன்னைக்கு சக்தி இந்த நிலைமையில் இருக்கானா அதுக்கு முழுக்க முழுக்க நான் மட்டும் தான் காரணம் "என்று கண்கள் கலங்க கூற இவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

"மாதவா சக்தி கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து இரு .நான் என் மகன்கிட்ட தனியா பேசிட்டு வரேன் "என்று தன்னுடைய மகனை தனியா அழைத்து சென்றார் .கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து உள்ளே நுழைய கண் விழித்திருந்த சக்தி மாதவனிடம் ஒரு வார்த்தை கூட பேசி இருக்கவில்லை .

சுற்றி இருந்த இடம் புதியதாக தெரிய சுற்றிலும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சக்தியின் தந்தை வர அவரையுமே சரியாக அடையாளம் அவளுக்கு தெரியவில்லை.

" என்ன பாட்டி ஒவ்வொரு நேரம் ஒவ்வொருத்தர் கூட பேசிட்டு வரீங்க.. இவங்க என்ன வேணும் நமக்கு.. ஆனா எங்கையோ பார்த்த மாதிரி ஞாபகம் இருக்குது "என்று சொல்ல சக்தியின் தந்தை உடைந்து விட்டார் .

"என்னை உனக்கு மறந்து போச்சா சக்தி .நான் உன்னோட அப்பா டா "என்று சொல்ல.. "அப்பாவா நான் பாட்டி கூட தானே சின்ன வயசுல இருந்தேன்."

"நீ ஆசைப்பட்ட சக்தி..அதனால தான் அம்மா கிட்ட விட்டேன்.."அவளுக்கு எதுவுமே புரியவில்லை .

எல்லாமே பிளாங்காக இருப்பது போல தோன்றியது. பாட்டியை தவிர யாருமே அடையாளம் தெரியவில்லை.

" என்ன பாட்டி.. யாரையுமே எனக்கு தெரியல "என்று அழப்போக.. "இல்லடா இல்ல கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் தெரியும்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகமாக செவிலிய பெண் உள்ளே வந்தார் .

"பேஷன் கிட்ட ரொம்ப நேரம் பேச வேண்டாம் . வெளியே வாங்க "என்று கூறினார்.

சக்தியின் தந்தையும் மாதவனும் நேராக டாக்டரின் அறைக்கு சென்றனர்.

"டாக்டர் சக்திக்கு என்ன ஆச்சு".

" இத பாருங்க இப்ப சொல்றது தான்..பயப்பட எதுவும் இல்லை.. தலையில் அடிபட்டதனால அந்த பொண்ணுக்கு நிறைய குழப்பம் இருக்குது .

கொஞ்சம் கொஞ்சமா தான் பழசு எல்லாமே ஞாபகம் வரும் அதுவரைக்கும் அதிகமாக தொந்தரவு கொடுக்காதீங்க .

நீங்களா ஞாபகம் படுத்தனும்னு எதையாவது பேசி அந்த பெண்ணை இன்னும் அதிகம் டென்ஷன் ஆகாதீங்க .

அது அந்த பொண்ணோட இப்ப இருக்குற உடல் நிலைக்கு கஷ்டம் புரிஞ்சுக்கோங்க..

அளவுக்கு அதிகமான டென்ஷன் அந்த பொண்ணு ஆனா அது வேற மாதிரி ரியாக்ட் ஆக ஆரம்பிச்சுடும் அதனால இப்போதைக்கு எதை பத்தியுமே பேசி நியாபகப்படுத்த வேண்டாம் .

இப்போதைக்கு அந்த பொண்ணுக்கு தேவை முழுக்க முழுக்க ரெஸ்ட் ஒன்னு மட்டும் தான் .புரிஞ்சுதுங்களா "என்றார்.

"தலைக்கு ஸ்கேன் பண்ணி ஏற்கனவே பார்த்தாச்சு. பயப்பட எதுவுமே இல்லை .சின்ன அதிர்ச்சி தான்.

சீக்கிரமா சரியாயிடும்னு நம்பலாம்
ரொம்ப நாள் இங்கே ஹாஸ்பிடல்ல தங்கி இருக்கணும்னு அவசியம் கிடையாது .

இன்றைக்கு மட்டும் இங்கே இருக்கட்டும்.. நாளைக்கு
நீங்க வீட்டுக்கு கூட்டுட்டு போகிறதுன்னா தாரலாமா கூட்டிட்டு போய்க்கலாம்.

நாளைக்கு பார்மாலிட்டியா ஒரு தடவை செக் பண்ணிட்டு அனுப்பி வைக்கிறேன் "என்று சொல்ல சரி என்று தலையாட்டிவிட்டு வந்தனர் .
வெளியே வரவுமே சக்தியின் தந்தை மாதவனை பார்த்து..

"ஐ அம் சோ சாரி மாதவா நான் உன்கிட்ட ரொம்ப ரூடா நடந்துக்கிட்டேன் .இப்படி எல்லாம் ஆகும்னு நான் நினைக்கவே இல்ல.

அம்மா இப்பதான் மத்த விஷயத்தையும் சொன்னாங்க. தப்பெல்லாம் என் பெயரில் தான். நான் பொண்ண தரவே மாட்டேன்னு சொன்னேன்.

ஆனா அவ உன்னை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லி அங்க கிளம்பி வந்து இருக்கிறா.. உன்கிட்ட வேலை செஞ்சதே அம்மா சொல்லி இப்பதான் தெரிஞ்சது."

"அங்கிள் வசதியில்ல.. பொண்ணை இவன் பத்திரமா நில்ல விதமா பார்த்துக்க மாட்டான்னு சொல்லித்தான் நீங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கல..

ஆனா நான் இப்போ ரொம்ப நல்லாவே இருக்கிறேன் .கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது சக்தியோட மட்டும் தான் அதுல ரொம்ப தெளிவா இருக்கிறேன்.

அவ எப்படி இருந்தாலும் சரி அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்". என்று கேட்க கண்கலங்கி விட்டார் சக்தியின் தந்தை.

"பொதுவா பொண்ணுக்கு குறை இருக்குன்னு தெரிஞ்சதுனா எப்படியாவது தப்பிச்சுக்கலாம்னு யோசிக்கிறவங்க மத்தியில நீ ரொம்ப வித்தியாசமானவன் தான்.

தப்பு பண்ணிட்டேன் .உன் அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நான் இப்ப நிறைவேற்றி வைக்கிறேன் .

" எனக்காக பிறந்தவ சக்தி ..அவள் எப்படி இருந்தாலும் சரி. நான் ஏத்துக்க தயாராக இருக்கிறேன் இப்போதைக்கு அவளுக்கு சரியாகற வரைக்கும் அவளை பத்திரமா பார்த்துக்கணும் .அத மட்டும் தான் நான் யோசிக்கிறேன்."

பாட்டி இவர்களை தேடி வந்தவர் பொதுவாக கூறினார்." சத்தியை மறுபடியும் நான் இருக்கிற இடத்துக்கு அழைச்சிட்டு போயிடுறேன் .நான் நல்லபடியா பாத்துக்குவேன்."

அம்மா..

" ஆமாண்டா இத்தனை நாள் அங்க தான இருந்தா.. அங்கே இருக்கட்டும் சரியாகற வரைக்கும் பிறகு வீட்டுக்கு அழைச்சிட்டு போய்க்கலாம் என்ன சொல்ற.."

"சரிம்மா நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்"என்றார்.
 

Kavisowmi

Well-known member
30

ஒரு மாதம் கழித்து தூங்கி எழுந்தவள் பாட்டியிடம் வேகமாக விசாரித்தாள்.

"அப்பா, அம்மா, அக்கா எல்லாம் என்ன பண்றாங்க .அவங்கள பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரி தோணுது.

எதுக்காக எனக்கு அப்படி தோணுது, என்று கேட்க அத்தனை மகிழ்ச்சி சக்தியின் பாட்டிக்கு ..

"அது ஒன்னும் இல்லடா அவங்க வருவாங்க .நான் போன் பண்ணி சொல்றேன் ."

"எதுக்காக பாட்டி அவங்க வரணும் நாம போயிட்டு வரலாமே ."

"இல்ல சக்தி கொஞ்ச நாளைக்கு இங்கேயே இரு.. அங்க அப்பாவோட பிசினஸ்ல கொஞ்சம் பிரச்சனையாம்.
அதை பார்த்துகிட்டு இருக்கிறாரு".

" என்ன பிரச்சனை.. என்ன ஆச்சு பாட்டி .ஏன் அப்பாவோட பிசினஸ் நல்லாத்தானே போகுது ."

"அது நல்லா தான் போகுது வழக்கமாக இருக்கிற சின்ன சின்ன பிரச்சனைதான் .

அத அவன் பார்த்துக்குவான்.. நான் போன் பண்ணி சொல்றேன் .உங்க எல்லாத்தையும் பார்க்க கேட்கறா அப்படின்னு "என்று சொல்ல..
சரி என தலையாட்டினாள் .

அதன் பிறகு நாட்கள் வேகமாக நகர்ந்ததே தவிர.. பெரியதாக எந்த மாற்றமும் அவளிடத்தில் இல்லை.

ஒரு கட்டத்தில் பாட்டியை அழைத்து மாதவன் பேசினான்.

. "அவளுக்கு என்னை ஞாபகமே வராதா.. நான் நடந்து கொண்டது தப்புதான். அத்தனை பேர் முன்னாடி அவளை தள்ளிவிட்டேன்..

அதுக்காக தான் கடவுள் எனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்து இருக்கிறார்.. நான் யாருங்கற அந்த அடையாளமே அவளுக்கு தெரியாம போயிடுச்சு."

"இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணு மாதவா ..அதற்கு பிறகும் அவளுக்கு ஞாபகம் வரலைன்னா நம்ம வேற ஏதாவது வழி செய்யலாம்.

எனக்கும் ஒன்னும் புரியல.. உன்கிட்ட பேசாம அவளாள எப்படி இருக்க முடியுது".

"பாட்டி மறுபடியும் சென்னைக்கு அழைத்து வாங்க".

" புரியல என்ன சொல்ல வர்ற.."

" மறுபடியும் அவளை என்னோட ஆபீஸ்ல வேலைக்கு அனுப்பி வைங்க பாட்டி. நிச்சயமா இங்க இருக்குற ஒவ்வொருத்தரையும் பார்க்கும்போது ஞாபகம் வரும்."

" நீ சொல்றதும் நல்ல யோசனையா தான் தெரியுது. இரு நான் சக்தியோட அப்பாகிட்ட கேட்டு சொல்லறேன் ."

சக்தியுன் தந்தையிடம் உடனே அழைத்துப் பேச அவருக்கும் கூட அதுவே சரி என்று தோன்றியது.

மகளுக்கு தங்களை ஞாபகம் வந்தது அத்தனை சந்தோஷம்..

உடனே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார்.

சக்தியோடு மாலை வரையிலுமே இருந்தவர். செல்லும் போது அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் எடுத்து அவளிடம் நீட்டினார்.

" இந்த கம்பெனிக்கு நீ ஏற்கனவே அப்ளிகேஷன் போட்டு இருக்கிற சக்தி..

அவங்க நீ வேலைக்கு செலக்ட் ஆயிட்டதா அனுப்பி வைத்திருக்கிறார்கள் ..

வீட்டு அட்ரஸ் போட்டு தான் அனுப்பி இருக்கிற.. அதனால வீட்டுக்கு வந்துருச்சு.." வாங்கி பார்த்தாள். கவரை திறந்து திருப்பி பார்த்தவள் உள்ளே படித்து பார்க்க அவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லை .

"நீங்க தான்.. உங்க ஆபீஸ்ஸை கவனிக்கணும்னு தானே முன்னாடி சொல்லிக்கிட்டு இருந்தீங்க .

இப்ப என்ன வேலைக்கு போக சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தரீங்க ".

"அது வந்து சக்தி உன்னோட பாட்டி தான் சொன்னாங்க கொஞ்ச நாளைக்கு அவளுக்கு வெளியுலகமும் புரியணும் .

அதனால கொஞ்ச நாளைக்கு வெளியில் வேலைக்கு அனுப்பு அப்படின்னு ..அம்மா சொன்னது சரின்னு தோணுச்சு அதனாலதான் இந்த முடிவு எடுத்தேன்.. உனக்கு பிடிக்கும்னு வேண்டாம்".

" சரிப்பா நீங்க சொன்னா சரிதான் நான் இப்போ சென்னை போனா எங்க தங்கறது."
நிறைய கேள்விகளை கேட்டாள். சற்றே கண் கலங்கினாலும் சிரித்தபடியே பதில் கூறினார் .

"சென்னையில் ஒரு வீடு வாங்கி இருக்கிறேன் சக்தி .அந்த கம்பெனிக்கு பக்கத்துல தான் இருக்குது .

அங்க நீ உன்னோட பாட்டியையும் அழைச்சிட்டு போ .உனக்கு செட் ஆகுற வரைக்கும் பாட்டி அங்க இருக்கட்டும் .

பிறகு வேணும்னா பாட்டி இங்கே வருவாங்க..உனக்கு பிடிச்சா வேலை செய்..

இல்லாட்டி எப்ப வேணும்னாலும் நீ உடனே கிளம்பி வரலாம். நான் உன்னை எதுவும் சொல்ல மாட்டேன்" என்று சொல்ல மகிழ்ச்சியோடு புறப்பட்டாள்…

புதன்கிழமை ஆபீசுக்கு வரச் சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் இருக்கு. அதை எடுத்துக்கொண்டு மற்ற சர்டிபிகேட்களை எடுக்க ஆரம்பித்தாள்.

" பாட்டி எனக்கு நிறைய குழப்பமா இருக்குது . போனதும் வேலை தருவாங்களா ..இல்ல இன்டர்வியூ மாதிரி வைப்பாங்களா ".

"அது எப்படி இன்டர்வியூ வைக்காம வேலை தருவாங்க. நீ போய் இன்டர்வியூவை அட்டென்ட் பண்ணு..

அது அவங்களுக்கு திருப்தியா இருந்தா உடனே வேலைக்கு எடுத்துக்குவாங்க ".

"பாட்டி அது பெரிய கம்பெனி தெரியுமா. அவங்களோட வேலையே விளம்பரம் எடுப்பதுதான் .

நிறைய விளம்பரங்கள் அவங்களோடது டிவியில ,ரேடியோவில வந்துகிட்டு இருக்கு தெரியுமா."

" எனக்கு இதெல்லாம் எங்க தெரியும் சக்தி .நான் இருக்கிறது வீட்டில்.. நீ போய் பாரு உனக்கு பிடிச்சா மட்டும் வேலை செஞ்சா போதும்.
இல்லாட்டி நீ உடனே வந்துடலாம்".

" சரி பாட்டி என்று கூறப்பட்டாள். நேராக அன்றைக்கு ஆபீசிற்குள் நுழைய அனைவருமே மகிழ்ச்சியாக இவளை பார்த்தனர் .

இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை "என்ன இந்த ஆபீஸ்ல எல்லாருமே ரொம்ப ஹேப்பியா இருப்பாங்க போல இருக்கே "என்று தயங்கியபடியே அங்கிருந்த ரிசப்ஷன் பெண்ணிடம் போய் நின்றாள்.

" இன்னைக்கு எனக்கு இன்டர்வியூ இருக்கிறதா போட்டு இருக்காங்க காலைல பத்து மணிக்கு.. நான் அட்டென்ட் பண்ண வந்திருக்கிறேன்" என்று சொன்னபடி சுற்றிலும் வேடிக்கை பார்த்தாள்.

"என்ன சுத்தி பாக்கறீங்க".. சக்தி என்று சொல்ல சட்டென்று திரும்பி அவளை பார்த்தாள்.

" என்னோட பேரு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா.. எப்படி? நான் இப்பதான் முதல்முறையை இங்கே வரஏன".

" வந்து ..நான் தான் உங்களுக்கு அந்த இன்டர்வியூ லெட்டரை அனுப்பினது . அதனால தெரியும்.

நீங்க நேரா உள்ளே போங்க மிஸ்டர் குரு என்று சொல்லி ஒருத்தர் உங்களை இன்டர்வியூ பண்ண தயாரா இருக்கிறார் .

அனேகமா இன்னைக்கு வேலையை கொடுத்துடுவாங்க .இன்னைக்கே நீங்க ஜாயின் பண்ண வேண்டியதா இருக்கும் ".

"அச்சச்சோ நான் வீட்ல எதுவும் சொல்லிட்டு வரலையே .."

"பரவால்ல போன் பண்ணி நீங்க கேட்டுக்கலாம்" என்று புன்னகைத்தபடியே சொல்லி அனுப்ப ..இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

வேடிக்கை பார்த்தபடியே நடக்க சட்டென சபாவின் மேல் மோதி இருந்தாள்.

" சாரி சாரி சாரி" என்று நகர்ந்து நிற்க.. சபா இவளை பார்த்து.." ஹேய் பரவால்ல ..அதனால ஒன்னும் இல்ல .சுத்தி வேடிக்கை பார்த்துட்டு வந்ததால் கவனிக்கலை போல இருக்கு .டேக் கேர் "என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் .

"என்னடா இந்த ஆபீஸ்ல எல்லாருமே ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க போல இருக்கு . அநியாயத்துக்கு நல்லவங்க மா இருக்கிறாங்களா"மனதிற்குள் நினைத்தபடி குருவின் முன்னால் சென்று அமர.. அவனும் இவளுடைய சர்டிபிகேட்களை ஒவ்வொன்றாக பெயருக்கு நோட்டமிட்டவன்.

" அப்புறமா சொல்லுங்க சக்தி உங்களுக்கு இந்த வேலை பிடிச்சிருக்கா.. தற்சமயம் தற்காலிக பணியாளரா தான் உங்களை எடுக்கிறோம் .

நீங்க எதிர் பார்க்கிற வேலையை உங்களுக்கு கொடுக்க முடியாது நாங்க கொடுக்கிற வேலையை தான் நீங்க செய்ய வேண்டியதா இருக்கும்.

இந்த ஆஃபீஸை பொறுத்த வரைக்கும் எல்லாருமே எல்லா வேலையும் செஞ்சாகணும் ".

"தெரியும் சார் ".

"தெரியுமா எப்படி ?"

"இல்ல நீங்க உங்களோட டெர்ம் அன்ட் கண்டிஷன்ல இதை கோட் பண்ணி இருக்கீங்க .அதான் படிச்சு பார்த்தேன் ".

"ஓகே ஓகே" என்றான்.

"ரொம்ப டீப்பா இண்டர்வியூ பண்ணி தான் வேலைக்கு எடுப்பதா கேள்விப்பட்டேன் ".

"இல்ல இன்னைக்கு.. இப்போதைக்கு அதெல்லாம் தேவையில்லை. ஏன்னா எங்களுக்கு இந்த போஸ்டிங்க்கு உடனே ஆள் தேவை இருந்தது .

அதனால யார் வர தயாரா இருக்காங்களோ அவங்களுக்கு அனுப்ப சொல்லி இருந்தாங்க ".

"ஓகே சார் ".

"நீங்க உங்களோட சீட்ல போய் உட்காரலாம் .இருங்க ஒரு நிமிஷம்" என்று வேகமாக சபாவை அழைக்க..

"சொல்லுங்க சார்.."

" இவங்க சக்தி.. புதுசா வேலையில் ஜாயின் பண்ணி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு டேபிள் கொடுங்க..
கூட இருக்குறவங்கள அறிமுகப்படுத்தி விடுங்க "என்று சொல்ல சரி என்று அழைத்து சென்றான்.

இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை இவளுக்கு ஏற்கனவே முன்பு அமர்ந்திருந்த இருக்கையில் இவளை அமர வைக்க ,சற்று நேரம் சுற்றிலுமே பார்த்தவளுக்கு எங்கேயோ இதையெல்லாம் பார்த்தது போல தோன்ற ஆரம்பித்தது.

இன்னமும் சரியாக ஞாபகம் வரவில்லை. ஆனாலும் மனதில் ஏதோ ஒரு மூலையில் இது எல்லாமே ஏற்கனவே நடந்தது போல தோன்ற ஆரம்பிக்க ..தலையை அமுத்தி கைகளால் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.

சில நிமிடங்கள்தான் அப்படி அமர்ந்திருப்பாள் அப்போது ஜான்வியின் குரல் கேட்டது.

" ஹலோ குட் மார்னிங் "என்று கேட்க.. நிமிர்ந்து பார்த்தாள்.
கையில் காபி டம்ளரோடு வந்தவள் இவள் புறமாக நீட்டினாள்.

" என் பேரு ஜான்வி நான் இங்க ரெண்டு வருஷமா வேலை செய்கிறேன் .காபி குடிக்கிறியா "என்று இவளிடம் நீட்ட.." நான் கேட்கவே இல்லையே".

" ஆனால் தலையில கை வைத்துக்கொண்டு இருக்கிறதை பார்த்தேன். தலைவலியோன்னு நினைச்சு எடுத்துட்டு வந்தேன் ".

"இதையெல்லாம் செய்வீர்களா".

"இந்த ஆபீஸ்ல நம்ம புதுசா இப்பதான பார்க்கிறோம். நம்ம அறிமுகப்படுத்திக்க இது நல்ல வழி இல்லையா.. அதனால கொண்டு வந்தேன். குடிங்க "என்று நீட்ட வாங்கிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் சபா அங்கே வந்தவன்.. "மீட்டிங் இருக்கு.. வாங்க என் டீம் மெம்பர்ஸ் எல்லாருமே.."என்று சொல்ல சக்தி ஒன்றுமே தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.

ஜான்வி வேகமாக சக்தியை மெல்ல தட்டினாள்."சபாவோட டீம்ல தான் உன்னை ஆட் பண்ணி இருக்காங்க அதனால நீயும் வந்தாகணும்".

" அப்படியா" என்று வர அங்கே குருவோ சவாவிற்கு நிறைய வேலைகளை சொல்லிக் கொண்டிருந்தான்.

கூடவே நிறைய ஜெராக்ஸ் பேப்பர்களை கையில் கொடுக்க.. அவனும் யோசிக்காமல் சக்தியின் புறமாக நீட்டி இருந்தான்.

"இதை ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க மொத மாடியில இருக்கு ஜெராக்ஸ் மெஷின் "என்று சொல்ல யோசனையோடு வாங்கிக்கொண்டு முதல் மாடிக்கு சென்றாள்.

அங்கே ஏற்கனவே ஒருவன் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருக்க.. "சார் இதை ஜெராக்ஸ் எடுத்து கொடுக்க சொன்னாங்க என்று நீட்ட திரும்பி அவளது முகத்தை குறுகுறு என பார்த்தவன் எதுவும் சொல்லாமல் கையில் வாங்கிக் கொண்டான்.

இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ ஒரு உணர்வு மொத்தமாக தாக்க வேகமாக கீழே இறங்கி வந்துவிட்டாள்.

தன்னுடைய இருக்கையில் சென்று அமர சில நிமிடங்களிலேயே குரு மறுபடியும் அழைத்தான்.

" ஜெராக்ஸ் கேட்டனே ஏங்க அந்த பேப்பர்ஸ் .உங்க கிட்ட தான நான் கொடுத்தேன்" என்று கேட்க ..சபாவோ இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை .

"வந்து மேல ஒருத்தர் ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு இருந்தாங்க .அவங்க கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன்".

" என்ன இப்படி பண்ணி வச்சிருக்கீங்க அவர் யாருன்னு தெரியுமா. போயும் போயும் வேற ஆளே உங்களுக்கு கிடைக்கலைமா வந்து கத்த போறாரு "என்று சொல்லவும் சரியாக மாதவன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது .

"யார் கிட்ட நான் கொடுத்தேன்" என்று சொல்ல.." சாரி ணா இவங்க புதுசு "என்று சமாளிக்க ஆரம்பித்தான் குரு.

இருவரின் முகத்தையும் புரியாமல் பார்த்தவள் பிறகு வேகமாக நகர்ந்து சென்று விட்டாள்.

அவள் செல்லவுமே ஓய்ந்து அமர்ந்து விட்டான் மாதவன் ."இதெல்லாம் சரிப்பட்டு வருமா.. எனக்கு தெரியலையே குரு அவளுக்கு சுத்தமாவே ஞாபகம் இல்ல.

நம்ம முகத்தைப் பார்த்தா தோணும்ல.. எங்கேயாவது பார்த்து இருக்கிற மாதிரி அப்படின்னு எதுவுமே அவளுக்கு தோணலை தெரியுமா".

"அண்ணா ஒரே நாளில் எதுவும் ஞாபகம் வந்துடாது. கொஞ்சம் கொஞ்சமா தான் வரும். உனக்கு தான் தெரியுமே ..அவளோட அம்மா அப்பாவோட ஞாபகமே இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் வந்து இருக்கு.

இங்கு வந்து பழகுனது ஆறு மாசம் கூட கிடையாது. அப்புறமா உடனே ஞாபகம் வரணும்னா என்ன அர்த்தம் வெயிட் பண்ணி பார்க்கலாம்.."

நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தது பெரியதாக எந்த வித்தியாசமும் அவளிடத்தில் இல்லை .

காலையில் வந்தால் என்றால் ஜான்வியோடு மிகவும் நெருக்கமாக இருந்தாள். பிறகு சபாவோடு நிறையவே அரட்டை அடித்தாள்.

அனைவருமே இவளிடம் மிக மிக அன்பாக நடந்து கொண்டனர்.

இதையெல்லாம் தாண்டி மாதவன் 24 மணி நேரமுமே சக்தியை ரசித்து கவனித்துக் கொண்டிருந்தான்.

சற்று தொலைவில் இருந்தாலும் கூட பார்வை சக்தியை சுற்றிக்கொண்டே இருந்தது .

சில நேரங்களில் இவளே நிமிர்ந்து பார்த்து ஜான்வியிடம் கூறியிருக்கிறாள்.

" மாதவன் சாருக்கு என்ன ஆச்சு எப்பவுமே கொஞ்சம் வித்தியாசமா என்னை கவனிக்கிற மாதிரி தெரியுது "என்று சொல்ல ..ஜான்வி விளையாட்டு போல"ஒருவேளை உன்ன லவ் பண்றாரோ என்னவோ யாருக்கு தெரியும்" என்று கூற.." சீச்சி இப்படியெல்லாம் சொல்லாத.. அவர் எவ்ளோ பெரிய ஆளு .அதுவும் இந்த ஆபீஸ்ல அவரைப் பார்த்தாலே அத்தனை பேரும் பயந்து நடுங்கறாங்க .ஆனால்.."

" என்ன சொல்லு சக்தி .சொன்னா தானே தெரியும் ".

"ஆனா என்கிட்ட எப்பவுமே கோபமா பேசின மாதிரியே தெரியல .நான் என்ன சொன்னாலும் சரி சரின்னு தலையாட்டுகிறார் அதுதான் ஆச்சரியமா இருக்குது."

மெல்ல நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது .இவள் தங்கி இருந்த வீட்டிற்கு அன்று மாலையில் வந்தபோது நேராக தெரிந்த மாதவனின் தந்தை தங்கியிருந்த வீடு இவளின் கண்களுக்கு பட்டது.

சட்டென தலைக்குள் ஏதோ வலிப்பது போல தோன்ற ..தலையை கைகளால் பிடித்தபடி சீக்கிரமாக கதவை தெரிந்து கொண்டு உள்ளே சென்று அமர்ந்தாள்.

ஏதேதோ ஞாபகங்கள் மனதில் வலம் வர ஒன்றுமே புரியவில்லை .

வேகமாக ஜான்விமை அழைத்தாள். "என்ன சக்தி..இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கிற. ஏதாவது வேணுமா ".

"எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது ஜான்வி .என்னென்னவோ தோணுது.."

" என்னமோ தோணுதுனா எனக்கு புரியல கொஞ்சம்.. புரியிற மாதிரி சொல்றியா".

" நான் இப்ப தங்கி இருக்கிற வீட்டுக்கு நாலு வீடு தாண்டி இருக்கிற அந்த வீட்டுக்குள்ள நான் போன மாதிரி தோணுது .

அங்க ஒரு பெரியவர் வீல்சேரில் உட்கார்ந்த மாதிரி எல்லாம் தோணுது .ஆனா அந்த வீடு பூட்டு இருக்குது இப்போ.. ஏன் எனக்கு இது மாதிரி எல்லாம் தோணுதுன்னு தெரியல ".

"நீ கண்டதையும் யோசிக்க வேண்டாம் .இப்போ ரெஸ்ட் எடு நான் அங்க நேரா வரேன்" என்று சொன்னவள் அடுத்த அரை மணி நேரத்தில் சக்திக்கு அருகே வந்து இருந்தாள்.

"தேங்க்ஸ் ஜான்வி.. நான் எதிர்பார்க்கவே இல்லை. புதுசா ஒரு இடத்துக்கு வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாளிலேயே இவ்வளவு க்ளோஸ் பிரிண்ட் கிடைப்பேண்ணு"..

"விடு அது போகட்டும் இப்ப தலைவலி பரவாயில்லையா ".

"இப்போ ஓகே தான் நார்மலா இருக்கிற மாதிரி தான் இருக்குது."

" சரி நாளைக்கு ஷூட்டிங்க்கு வெளியே அழைச்சிட்டு போறேன்னு சொல்லி இருக்காங்க .காலைல கிளம்பி வரணும் .ஞாபகம் இருக்குதா. குரு சார் அப்புறம் மாதவன் சார் ,நம்ம யூனிட்ல பாதிக்கு மேல அங்க வருவாங்க".

" ஓ ..சரி ஓகே .நான் வந்துடுறேன்" என்று சொன்னாள்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல மறுபடியும் சூட்டிங் ஸ்பாட்டிருக்கு இவர்களை அழைத்துச் செல்ல எல்லாமே பார்த்தது போல தோன்ற ஆரம்பித்தது .

ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்த்தவள் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள்.

சற்று தூரத்தில் தெரிந்த அந்த பாதை ஏற்கனவே ஒருமுறை சென்று குழியில் விழுந்தது ஞாபகம் வர இந்த பாதையில் சென்றால் என்ன?என யோசிக்கப்படியே பாதி தூரம் நடக்கும்போது சட்டென பழைய ஞாபகங்கள் எல்லாமே அவளுக்கு வந்து இருந்தது.

இத்தனை நாட்களாக நடந்ததும் ஞாபகம் வர ,தன் தந்தையே இங்கே அனுப்பி வைத்திருக்கிறார் என்பதும் புரிய அவளுக்குள் அத்தனை மகிழ்ச்சி.

வேகமாக திரும்ப ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அங்கிருந்தவர்கள் அத்தனை பேரையுமே சுற்றிலும் கவனிக்க வேலை முடியவுமே அனைவருமே இவளிடம் அன்பாக ஓரிரு வார்த்தை பேசி விட்டு நகர்ந்தனர் .

மாதவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை சற்று தொலைவில் அமர்ந்து இவளை தான் கவனித்துக் கொண்டிருந்தான். அந்த பார்வையே இவளுக்கு பல அர்த்தங்களை சொன்னது.

ஜான்வி இவளுக்கு பிடித்தமான உணவுகளை கொண்டுவந்து நீட்டினாள்.

அமைதியாக வாங்கிக் கொண்டவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அமைதியாக உணவு உண்ண ஆரம்பிக்க அவளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தாள்.

"ஜான்வி குருவை எப்ப கல்யாணம் பண்ணிக்க போற" என்று கேட்க சட்டென அவளுடைய முகத்தைப் பார்த்தாள்.

"சக்தி உனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சா.."

"கொஞ்சம் முன்னாடி தான் விஷுவல் மாதிரி நிறைய தோணுச்சு .ஞாபகம் வந்திருச்சு ஜான்வி.. என்ன நடந்துச்சு எனக்கு கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றியா."

" மை காட் இது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா இரு நான் சீக்கிரமா போய் மாதவன் சார்கிட்ட சொல்லிட்டு வரேன்.

அவருக்கு தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா? இத்தனை நாளா எந்த மாதிரி இருந்துச்சு தெரியுமா "என்று வரிசையாக பேச.. சட்டென அவளுடைய கரம் பற்றி தடுத்தாள்.

" நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் .என் பின்னாடி வா" என்று தனியே அழைத்துச் செல்ல .."என்ன சக்தி ..என்ன பேச போற ."

"எனக்கு எல்லாமே ஞாபகம் வந்துருச்சு. முன்னாடி நடந்தது இப்ப நடந்துகிட்டு இருக்கிறது.

எல்லாமே இடையில் என்ன நடந்துச்சு.. அதை கொஞ்சம் சொல்றியா ".

"ஒரு சின்ன ஆக்சிடென்ட் அதுல கொஞ்சம் ஞாபகத்தை மறந்துட்ட.. அத திரும்ப கொண்டு வரணும்னு தான் மறுபடியும் இங்க ஆபீஸ்க்குள்ள உன்னை வரவழைச்சாங்க.

மாதவன் சார் உன்ன உயிருக்கு விரும்புகிறார். உங்கள் கல்யாணத்துக்கு உங்க அப்பா கூட சம்மதம் சொல்லிட்டாங்க.."

:"ஆனா.. இப்போ இங்க வந்து சேர்ந்த பிறகு மாதவன் எதுவுமே என்கிட்ட பேசின மாதிரி தெரியலையே .."

"முன்னாடி நிறையவே காயப்படுத்திட்டாரு அதனால கொஞ்சம் பயமா கூட இருக்கலாம் கொஞ்சம் தள்ளி தான் நிற்கிறார்.."

"இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படியே இருக்கட்டும் ஜான்வி. நீ எந்த விஷயத்தையும் சொல்ல வேண்டாம்.

நிறையவே என்னை கஷ்டப்படுத்திட்டாரு.. எனக்கு அவர் மேல நம்பிக்கை வரணும் முழுக்க முழுக்க இனிமே என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குவாருங்கற நம்பிக்கை வந்தா மட்டும் தான் பழைய ஞாபகம் வந்ததை சொல்லணும்.."

" என்ன நீ பேசிகிட்டு இருக்கிற அவர் செஞ்சத நெனச்சு வருந்தாத நாளை கிடையாது. நிமிஷத்துக்கு நிமிஷம் சக்தின்னு உயிரை விட்டுக்கிட்டு இருக்கிறார்.."

"இத்தனை நாளா அவரோட அன்பை நான் புரிஞ்சுக்காமலே இங்கே இருந்திருக்கிறேன் .இன்னும் கொஞ்ச நாள் வரைக்கும் நீ சொல்லக்கூடாது .

நிறைய வேண்டாம் ஜஸ்ட் ஒரு ரெண்டு நாள் முடியுற வரைக்கும் எனக்கு பழைய ஞாபகம் வந்ததா சொல்லக்கூடாது.

அவர் என்னை கவனிச்சுக்கறத முழுக்க முழுக்க நான் அனுபவிக்கணும்னு ஆசைப்படுறேன் அதனால சொல்றேன் ".

"என்ன சக்தி நீ .."

"உனக்கு சொன்னா புரியாது மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட ஏற்படற சின்ன மாற்றம் கூட எளிதா கண்டுபிடிச்சுக்கலாம் .அந்த மாதிரி மாதவனால என்ன கண்டுபிடிக்க முடியுதா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும் .அதனால கேட்கிறேன்".

" சரி என்னவோ செய் நான் ரெண்டு நாள் வாயைத் திறக்க மாட்டேன் ஆனா இங்க ஆபீஸ் வந்தேன்னா உளறினாலும் உளறிடுவேன் .

அதனால ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிட்டு லீவ் எடுத்துக்கிறேன் அந்த ரெண்டு நாளுக்குள்ள நீங்களே பேசி முடிவெடுங்க ..

ஆனா அதுக்கப்புறம் நீ சொல்லாமல் இருக்க கூடாது. நீ சொல்லாட்டி நானே வந்து சொல்லிடுவேன் புரிஞ்சுதா" என செல்லமாக மிரட்டியவள் இவளை அழைத்துக்கொண்டு மறுபடியும் ஷூட்டிங் நடக்கின்ற இடத்திற்கு வந்தாள்.

மாலை வரையிலுமே சூட்டிங் இருக்க மகிழ்ச்சியோடு அவரவர் புறப்பட்டு செல்ல.. இவளுமே வீட்டிற்கு புறப்பட்டாள்.

மாதவன் வேகமாக சக்திக்கு அருகே வண்டியை நிறுத்தியவன்." என் கூட வண்டியில வா சக்தி..

உன்னோட வீட்டுல கொண்டு போய் விட்டுடறேன் "என்று சொல்ல சரி என சந்தோஷமாக தலையாட்டி காரிக்குள் அமர்ந்தாள்.

ஜான்வியும் குருவும் கூட பின் இருக்கையில் அமர அமைதியாக சிறு புன்னகையோடு வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள்.

" என்ன சக்தி ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கறீங்க .ஏதாவது பேசலாம்ல "குரு எடுத்துக் கொடுக்க ஜான்விக்கும் கூட அத்தனை புன்னகை முகத்தில்…

"வந்து குரு சார் ஒரு கேள்வி கேட்கலாமா" குருவின் புறமாக திரும்ப.." என்ன கேள்வி சக்தி கேளுங்க".

" நீங்க இந்த ஜான்வியை விரும்புகிறீர்களா என்ன?" சட்டென்று கேட்கவும்.. ஏற்கனவே நீர் அருந்துவதற்காக வாட்டர் பாட்டில் எடுத்து வாயில் வைத்தவனுக்கு புரையேறி இருந்தது .

"என்ன சக்தி திடீர்னு இப்படி ஒரு கேள்வியை கேக்குறீங்க."

" சட்டுனு தோணுச்சு அதனால தான் கேட்டேன்.. இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க. ஆமான்னா சொல்லுங்க ."

"என்ன நீங்க அண்ணா முன்னாடி இப்படி எல்லாம் கேட்டா என்ன அர்த்தம் ."

"ஏன் உங்களுக்கு உங்க அண்ணான்னா பயமா "என்று மாதவனை பார்க்க .."அய்யோ அப்படியெல்லாம் அவனுக்கு எந்த பயமும் கிடையாது அவன் என்னை நல்லாவே ஏச்சிடுவான்."

"உங்க அண்ணனுக்கு தான் உங்கள பத்தி தெரியுதே.. அப்புறம் என்ன சொல்ல வேண்டியது தானே."

"இப்பவா "

"ஆமா இப்பதான் சொல்லணும் .நான் ஜான்வியை விரும்புகிறேன் அவளை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தைரியமா சொல்ல வேண்டியது தானே ".

"என்னங்க நீங்க.. சட்டுனு கார்ல ஏறின உடனே இப்படி போட்டு மாட்டி விட்டா என்ன செய்ய..

நான் கல்யாணம் பண்ணனும்னா அதுக்கு முன்னாடி எங்க அண்ணா கல்யாணம் பண்ணனும் .அது நடந்த பிறகு தானே என்னோட கல்யாணத்தை பத்தி யோசிப்பாங்க."

" அப்படின்னா மாதவன் சார்.. ஏன் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்க ."ஒன்னும் தெரியாதவள் போல கேட்க ..

"கல்யாணம் பண்ணலாம் சீக்கிரமே அதற்கான நாளை தான் பார்த்துக்கிட்டு இருக்கிறேன்.."

"அப்புறம் என்ன உங்க அண்ணாவே கல்யாணத்துக்கு ஓகேங்குற மாதிரியே சொல்றாங்க.

நல்ல பொண்ணா பார்த்து சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்களும் செட்டில் ஆகுற வேலையை பாருங்க "என்று சொன்னவளுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

மாதவனோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை .நேராக சக்தியின் வீட்டில் சக்தியின் இருப்பிடத்தில் வண்டியை நிறுத்த.." ரொம்ப நன்றி சார் .காலைல பாக்கலாம் "என்று உள்ளே சென்றாள்.

வீட்டுக்கு செல்லவுமே முதலில் பாட்டிக்கு தான் அழைத்து பேசியது .ஞாபகம் வந்து விட்டது என்று சொல்ல அவருக்குமே அத்தனை மகிழ்ச்சி…
 

Kavisowmi

Well-known member
31

குருவின் அறைக்குள் வேகமாக நுழைந்தாள் ஜான்வி.

" சார் எனக்கு ரெண்டு நாளைக்கு லீவு வேணும்" என்று கேட்க வேகமாக ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் இழுத்து தன்னுடைய கையணைப்பிற்குள் நிறுத்தி இருந்தான்.

சட்டென அவனை நகர்த்தி விட பார்க்க ..விலக விடவில்லை குரு.

"அதென்னடி முன்ன எல்லாம் லீவ் எடுக்க மாட்ட.. இப்ப என்னை காதலிக்க ஆரம்பிச்ச பிறகு அடிக்கடி லீவு எடுக்கிற மாதிரி இருக்கு ."

"இந்த மாதிரி எல்லாம் பேசினா நல்லா இல்ல ..முதல்ல கையை விடுங்க "சற்று அதட்டலாக குரல் கொடுக்க.. எதற்கும் கேட்பவன் போல தெரியவில்லை .

"கேட்டதற்கு பதில் சொல்லு".

" விளையாடாதீங்க குரு யாராவது பார்த்துட போறாங்க ".

"ஹலோ எப்போ உன்னை காதலிக்க ஆரம்பிச்சேனோ அப்பவே வெளியே இருந்து பார்த்தா உள்ளே தெரியாத அளவுக்கு என்ன செய்யணுமோ செய்தாச்சு..அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல ".

"ப்ராடு அடி வாங்க போறீங்க ..முதல்ல நகருங்க" என்று நகர்ந்தவள்.
அவனை நகர்த்தி விட்டு எதிரில் இருந்து இருக்கைக்கு அருகே நகர்ந்து நிற்க .."எதற்காக இப்ப உனக்கு லீவ்..அதுக்கான காரணத்தை கரெக்ட்டா சொன்னனா உனக்கு லீவு தருவதை பற்றி யோசிக்கிறேன் ".

"சும்மா மிரட்டாதிங்க குரு .உங்களால லீவு தர முடியவில்லைனா நான் நேரா மாதவன் சார் கிட்ட லீவு லெட்டரை சப்மிட் பண்ணிட்டு கிளம்பிகிட்டு இருப்பேன்".

" உனக்கு ரொம்ப கொழுப்பா போச்சு.. சரி சரி லீவ் லெட்டர் கொடு நானே அண்ணா கிட்ட அனுப்பி விடுறேன் .என்ன காரணத்துக்காக அதை சொல்லு.."

"வேண்டாம் குரு காரணம் எல்லாம் கேட்கக்கூடாது .ரெண்டு நாள் நான் என் பிரண்டு கூட போயி தங்க போறேன்".

" யாரு சக்தி கூடயா.."

" ஆமா ரெண்டு நாள் அவ கூட இருக்கணும்னு கூப்பிட்டு இருக்கிறா.. அதனால் அவ கூட தங்கி போறேன் ".

"சரியான காரணத்தை சொல்லிட்ட.. இப்ப நான் தர மாட்டேன்னு சொன்னேன்னு வச்சுக்கோயேன் அண்ணா ஏன் லீவு தரலன்னு கேட்பான் .

வழக்கமா மெயில்ல லீவ் கேட்டு அனுப்புறது தானே வழக்கம் ..இன்றைக்கு என்ன நேர்லயே லெட்டரோட வந்திருக்கிற ".

'எப்படியும் ரெண்டு நாளைக்கு உங்களை பார்க்க போறது இல்ல அதனால தான் கண் குளிர ஒரு தடவை பார்த்துட்டு கிளம்பலாம்ல.."

" அப்படி நினைத்து வந்தியா.. ரெண்டு நாளைக்கு என்னோட ஞாபகம் மட்டுமே இருக்கிற மாதிரி உனக்கு ஒன்னு தரட்டுமா" என்று சொன்னவன் எதிர்பாராத நேரத்தில் இழுத்து சட்டென்று உதட்டில் முத்தமிட வேகமாக அவனை நகர்த்தி விட்டாள்.

" இதெல்லாம் டூ மச் குரு .இது மாதிரி வேலை செய்யாதிங்க ..இது என்ன புது பழக்கம் ".

"ஹலோ கல்யாணத்துக்கு பிறகு ஏதாவது ஞாபகம் வச்சிருக்கற மாதிரி மெமரி வேணும் இல்ல அதுக்காக தான் இதையெல்லாம் சேகரிச்சு வச்சுக்கிட்டு இருக்குறேன்".

" இந்த மாதிரி எல்லாம் பண்ணுனீங்கன்னா இனி உங்க ரூமுக்குள்ள வரவே மாட்டேன் .

எதா இருந்தாலும் சீட்டில் வந்து நீங்களே கேட்டு வாங்கிக்கோங்க புரிஞ்சதா". கோபம் கூடவே சிறு வெட்கத்தில் முகம் சிவக்க பேசிக் கொண்டிருந்தாள்.

" ஓகே ஓகே இனிமே இது மாதிரி எல்லாம் நடந்துக்க மாட்டேன் . என்னை நீ நம்பலாம் அதிசயமா எப்பவாவது ஒரு நேரம் தான் என்னோட ரூமுக்குள்ள வர்ற..அதையெல்லாம் நிறுத்த வேண்டாம்."

"இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ஒரு சர்ப்ரைஸ் இருக்குது ".

"யாருக்கு ".

"உங்களுக்கும் உங்க அண்ணாவுக்கு ஏன் எல்லாருக்குமே .."

"அப்படி என்ன சர்ப்ரைஸ் சொல்லிட்டு போக மாட்டியா".

" சான்சே இல்ல ..ஏன்னா நான் வாக்கு கொடுத்து இருக்கிறேன். யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் இரண்டு நாள் வரைக்கும் அப்படின்னு ..

இன்னும் சொல்லப்போனா அந்த ரெண்டு நாளைக்குள்ள உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது உளரிட கூடாதுன்னு சொல்லி தான் லீவ் எடுத்துட்டு போறேன். புரிஞ்சுதா".

" ஜான்வி ப்ளீஸ் என்னன்னு சொல்லிட்டு போ .."

"வாய்ப்பே கிடையாது நான் கிளம்புறேன் .அதுவும் எதிர்பார்க்காம முத்தம் கொடுத்தல்ல..

அதுக்கான பனிஷ்மென்ட் நெனச்சுக்கோ ..இரண்டு நாளைக்கு என்னவா இருக்கும்னு யோசிச்சுகிட்டே இரு புரிஞ்சுதா" என்று நகர்ந்தாள் ஜான்வி..

அங்கே சக்தி பாட்டியிடம் பேசியவள் பிறகு தாய் தந்தையிடம் உண்மையை கூற அவர்களுக்கும் அத்தனை மகிழ்ச்சி..

மொத்த பெரும் புறப்பட்டு வருவதாக சொல்லி இருக்க ,மகிழ்ச்சியோடு இன்னொரு வேலை செய்ய சொன்னாள்.

" நெஜமாவா சொல்ற சக்தி".

" ஆமா ஏன் மா நான் கேட்டா எதுவும் செய்ய மாட்டீங்களா ..என்னப்பா நீங்களாவது சொல்லுங்க ".

"சக்தி நீ கேட்டு எதுவும் மாட்டேன்னு சொல்ல மாட்டேன். நான் நேரா வரேன்.. எல்லோரையும் கூட்டிட்டு வரேன் போதுமா ".

"ரொம்ப ரொம்ப சந்தோஷம் சீக்கிரமா வந்து சேருங்க.."

" அப்புறமா ஏற்கனவே நாலாவது அக்காவுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்துட்டதா சொன்னீங்கல்ல ..

அக்காவோட கல்யாணம் முடிஞ்சு அடுத்த ரெண்டு மாசத்துல எங்களோட கல்யாணம்..ஒகே வா.. அதையும் ஞாபகம் வச்சுட்டு வாங்க.."

"அத பத்தி ஏற்கனவே பேசி முடிவு பண்ணிட்டேன் சக்தி. ஆல்ரெடி கல்யாணம் பத்திரிகை கூட அக்கா கல்யாணத்துக்கு ரெடி ஆயிடுச்சு.

அவளோட கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டு மாசம் எல்லாம் இல்ல அடுத்த ஒரு மாசத்திலேயே நல்ல முகூர்த்தம் இருக்கு.

அன்னைக்கே பேசி முடிக்கலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். இடையில ஒரே ஒரு சின்ன வருத்தம் .

உனக்கு பழசு ஞாபகம் வரணும் அதனாலதான் என்ன பண்ணலாம்னு பேசிகிட்டு இருந்தோம். கடவுள் புண்ணியத்துல எல்லாமே சரியாயிடுச்சு நாங்க சீக்கிரமா அங்கே வரோம்."

இரண்டு நாட்கள் மாதவனிடம் இவள் போனில் கூட அழைத்துப் பேசவில்லை .

மாதவன் தினமுமே இரண்டு வேளை அழைத்தான் .

போனை எடுக்கவும் இல்லை. அவனுக்குள் நிறைய குழப்பம்..

என்ன ஆச்சு இவளுக்கு.. நல்லா தானே போய்கிட்டு இருந்தது .ஏன் இப்போ ஃபோனை கூட எடுக்க மாட்டேங்கறா..

ஏற்கனவே பழசு எல்லாம் ஞாபகம் இல்ல.. ஆனா போன் நம்பரை பார்த்தா ஹலோ என்ன எதுன்னு கேட்கலாம்ல ..அதுக்கு கூடவா இவளுக்கு சிரமமா இருக்குது" யோசனையோடு ஜான்வியை அழைத்து இருந்தான்.

ஜான்வி மாதவனின் நம்பரை பார்க்கவும் வேகமாக அட்டென்ட் செய்தாள்.

" சொல்லுங்க சார் என்ன விஷயம்".

" சக்தி எங்க இருக்கிறா‌."

" இங்க தான் சார் .நான் சக்தி கூட தான் இருக்கிறேன். ரெண்டு நாள் லீவ் போட்டு இருக்கறேன்.

அவ கூட தான் டைம் ஸ்பென்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறேன்."

" சரி ஏன் சக்திக்கு போன் பண்ணுனா எடுக்க மாட்டேங்கறா".

" ஐயோ அது தெரியலையே சார் இருங்க என்னன்னு நான் கேட்கிறேன் ."

"முடிஞ்சா உன்னோட போனை கொண்டு போயி சக்தி கைல கொடு நான் அவகிட்ட ரெண்டு வார்த்தை பேசணும் ".

"சார் ஒரே நிமிஷம்" என்று வேகமாக சக்தியிடம் கொடுக்க ..என்ன என்று கேட்காமல் வாங்கினாள்.

" ஹலோ சக்தி ..நான் மாதவன் ".

"மாதவன் சார் சொல்லுங்க என்ன விஷயம் .என்ன திடீர்னு என்னை கூப்பிட்டு இருக்கீங்க ."

"ஏன் போன் பண்ணா எடுக்க மாட்டீயா ..நான் உன் கிட்ட முக்கியமான தகவல் கேட்கிறதுக்காக போன் பண்ணினேன்".

" என்ன தகவல் சொல்லுங்க ".

"ஆல்ரெடி நான் ரெண்டு நாள் லீவுன்னு மெயில் பண்ணி இருந்தேன் .நீங்க கவனிக்கலையா".

" ஓ அப்படியா ..கவனிக்கலன்னு நினைக்கிறேன். எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி டயலாக் எல்லாம் எழுதி கொடுத்தீங்க .

அதோட ஸ்டேட்மென்ட எனக்கு வேணும் அனுப்ப முடியுமா".

" இப்பவே அனுப்பனுமா சார் ."

"ஆமா இப்பவே அனுப்பனும் முடியாதா .."

"முடியும் இதோ ஒரே நிமிஷம் அனுப்பி வைக்கிறேன் "என்று போனை கட் செய்தவள் .

"என்ன ஆச்சு என்னவாம்.. மாதவன் சாருக்கு.." என்று ஜான்வி கேட்க அவளுடைய முகத்தைப் பார்த்து சிரித்தாள்.

" சாருக்கு என்கிட்ட பேசாம இருக்க முடியலையாமாம்..சம்பந்தமே இல்லாம ஸ்டேட்மெண்ட் கேட்கிறார் ஆல்ரெடி ரெகுலராவே அனுப்புறது வழக்கம் தானே ..

மெயில் ஐடிக்கு போகுது தானே.. அப்புறம் எதுக்காக கேட்கிறாராம்."

" இது எல்லாம் நான் கேட்க முடியாது ஜான்வி. எதுக்காக போன் பண்றாங்கன்னு தெரியும் அப்புறம் என்ன நீ".

" ஆனாலும் நீ பண்றது ரொம்ப தப்பு சக்தி .இப்படி அவர போட்டு படுத்தி எடுக்கக் கூடாது. ஏற்கனவே ரொம்ப தவிச்சு போய் சுத்திக்கிட்டு இருக்கிறார் ."

"சுத்தட்டுமே ஏன் சார் என்கிட்ட நடந்துக்கிட்டது எல்லாம் சரின்னு சொல்றியா ".

" ஓகே ஓகே கூல் அவர் பண்ணினது தப்புதான் ஏதோ ஒரு கோபத்துல அன்னைக்கு அப்படி நடந்துருச்சு..

அதுக்காக அதையே சொல்லி இப்படி போட்டு படுத்தி எடுப்பியா.."

" நாளைக்கு என்னோட வீட்ல இருந்து எல்லாருமே வராங்க .எங்க தெரியுமா மாதவன் சாரோட அப்பா வீட்டுக்கு ..

நானும் கூட அங்க தான் போக போறேன் .அங்க போயிட்டு மாதவன் சாரையும் குருவையும் அங்க அழைக்க போறேன் நீ என் கூட இருப்ப தானே ."

"நான் தான் ஆல்ரெடி சொல்லிட்டேனே ..உன் கூட தான் எப்பவுமே இருப்பேன்னு".

" அப்புறம் என்ன ?விடு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தானே ..தவிக்கட்டும் தப்பே இல்ல".

" உன்னால நான் குரு கிட்ட கூட சொல்லல தெரியுமா .நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது என்று வேற சொல்லிட்ட .."

"குரு அவங்க அண்ணா மேல எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் என்று எனக்கு நல்லா தெரியும் .நீ குருகிட்ட சொன்னேன்னா அடுத்த நிமிஷமே மாதவனுக்கு தகவல் போய்விடும் .

அதன் பிறகு மாதவன் சார் அங்க இருப்பார் என்று நினைக்கிறாயா? நேரா என்ன தேடி வந்திடுவார் அதனாலதான் சொல்ல வேண்டாம் என்று சொன்னேன் .

நிறைய நாள் எல்லாம் இல்லையே இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தானே.. இன்னைக்கு நிறையவே பேசலாம் .

அப்புறம் உன்னோட குரு என்ன சொல்றாரு .."

"என்ன சொல்றாருன்னா எனக்கு புரியல ".

"எப்ப கல்யாணம் பண்ணிக்கிறதா ஐடியா சார் இப்போ முன்னாடி மாதிரியெல்லாம் இல்ல போல இருக்கு. நிறைய மாறியாச்சு போல இருக்கு".

" என்ன மாறிட்டாங்க ..எப்பவும் போல தான் இருக்கிறாங்க ".

"சும்மா கதை விடாதே முன்னாடியெல்லாம் வெளியே இருந்து பார்த்தா குரு என்ன செய்றாருன்னு நல்லா தெரியும்.

இப்ப புதுசா கண்ணாடி எல்லாம் மாற்றி வைத்திருக்கிறார் .உள்ளே இருந்து பார்த்தா வெளியில் இருக்கிறவங்க என்ன பண்றாங்கன்னு தெரியும் .

ஆனா வெளியில் இருந்து பார்த்துக்குறவங்க உள்ளே என்ன செய்றாங்கன்னு தெரியாது .அந்த அளவுக்கு ரொம்ப சேஞ்ச் பண்ணி இருக்கிறார்..

என்ன அடிக்கடி டச்சிங் டச்சிங் நடக்குதோ".

" ஏய் என்ன நீ இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிற ..அதெல்லாம் எதுவும் இல்லை".

" சரி நீ சொன்னா நான் நம்புறேன் சரியா "என்று நகர்ந்தாள்
 

Kavisowmi

Well-known member
32

சரியாக அடுத்த நாள் காலையிலேயே ஜான்வியை அழைத்துக் கொண்டு மாதவனின் தந்தை வீட்டிற்கு கிளம்பி இருந்தாள்.

சக்தியின் தாய் தந்தை சகோதரிகள் கூடவே பாட்டியும் கூட அங்கே நேராக வருவதாக சொல்லி இருக்க.. காலையிலேயே மாதவனின் தந்தையிடம் அழைத்து பேசியிருந்தாள்.

"அங்கிள் எனக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு ..அப்பா அம்மா பாட்டியோட நாங்க இன்னைக்கு அங்க வரோம் ."

"வாம்மா தாராளமா வா .கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குது "

"அங்கிள் நீங்க இப்ப எப்படி இருக்கிறீங்க ".

"நான் ரொம்பவே நல்லா இருக்கிறேன் . என்னோட நண்பனை பார்த்து ரொம்ப வருஷம் ஆன மாதிரி இருக்குது .வந்து பார்த்தால் சந்தோஷப்படுவேன்".

சொன்னது போலவே அனைவருமே அங்கே வந்து இருந்தனர்.

" அங்கிள் உங்க ரெண்டு பசங்களையும் இங்கே வர சொல்லுங்க .முக்கியமான விஷயம்ன்னு சொல்லுங்க .சக்தி சம்பந்தப்பட்டது என்று சொல்லுங்கள். அவர்கள் உடனே பதறி அடிச்சு ஓடி வருவார்கள்.. இனிமே கொஞ்சம் ஸ்லோவா தான் வேலை போகும் .அடுத்த ஒரு வாரம் கழிச்சு தான் ஷூட்டிங் கூட வச்சிருக்காங்க. அதனால பிஸி எல்லாம் இல்ல .பதட்டப்படாமல் வர சொல்லுங்க. உடனே கிளம்பி வருவாங்க ."

"சரி மா சரி" என்று அழைக்க அவர்கள் இருவருமே புறப்படுவதாக கூறியிருந்தனர் .

மாதவனின் தந்தையும் சக்தியும் தந்தையும் பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

சக்தியின் தந்தை யோசிக்காமல் மாதவனின் தந்தையின் கரம் பற்றி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்.

" என்ன மன்னிச்சிடுடா நான் ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன்."

". அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. நீ அன்னைக்கு அவ்வளவு பிடிவாதமா சொன்னதால தான் .இன்னைக்கு இந்த அளவுக்கு உயரமான ஒரு இடத்துக்கு என் பையனாலயும் வர முடிஞ்சது.

அன்னைக்கு நீ சொன்னது மனசுல பதிவாகிடுச்சு. நிச்சயமா பணம் சம்பாதிக்கணும் தானும் ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வரணும்னு போராடி ஜெயிச்சு முன்னேறி இருக்கான்.

உன்னை நான் தப்புன்னு எப்பவுமே சொல்ல மாட்டேன் பழசை எல்லாம் யோசிக்க கூடாது..

சொல்லு.. எப்ப என்னோட மருமகளை என் வீட்டுக்கு அனுப்பி வைப்ப.."

" என்னோட நான்காவது பொண்ணுக்கு கல்யாணம் பேசி இருக்கிறேன்.. அவளுக்கு கல்யாணம் முடிச்ச உடனே அடுத்த ரெண்டு மாசத்துல இவளோட கல்யாணத்தையும் முடிச்சுடணும்னு நானும் முடிவு பண்ணி இருக்கிறேன்.

அன்னைக்கு நான் தான் வாக்குறுதி கொடுத்தேன் .ஆனால் ஏன் மனசை மாத்திக்கிட்டேன்.

எந்த பெண்ணையுமே கொடுக்காம காலம் தாழ்த்திக்கிட்டு வந்தேன்னு புரியல ஆனா கடவுள் முடிவு பண்ணி இருக்கிறார் .

என் வீட்டு பொண்ணு தான் உன் வீட்டு மருமகளா வரணும்னு.. என்ன கடைசி பொண்ணுக்கு அந்த கொடுப்பினையை கொடுத்து இருக்கறார்."

"சக்தி பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வர்றதுல எனக்கு அத்தனை சந்தோஷம் தெரியுமா" இருவருமே பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்திலேயே மாதவனும் குருவும் வந்தனர்.

"அப்பா அவசரமா கூப்பிட்டு இருக்கீங்க ஏதாவது ப்ராப்ளமா" என்று கேட்டபடியே உள்ளே நுழையே இங்கே இருந்தவர்களை பார்க்கவும் நெத்தியை சுருக்கி யோசித்தபடி தந்தையின் முகத்தை பார்த்தான்.

" என்னப்பா என்ன நடக்குது இங்க"

குருவுக்குமே புரியாத நிலைதான் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருக்க.. சற்று நேரத்தில் காபியோடு சக்தி ஹாலுக்குள் பிரவேசித்தாள்.

"இந்தாங்க மாதவன்.. இத எல்லாருக்கும் கொடுங்க "என்று மாதவனின் கையில் கொடுத்துவிட்டு நகர ..அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை .

அங்கிருந்த அனைவருக்கும்.. முகத்தில் புன்னகை தொற்றிக் கொண்டது .

ஜான்வி கூட புன்னகையோடு வந்து அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

ஒன்றும் புரியாமலேயே அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் காபி டம்ளரை கொடுத்து கொண்டு வர சத்தியும் கூட ஒரு டம்ளரை வாங்கிக்கொண்டு அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

ஒன்றுமே புரியாமல்.. வேலையால் வரவும் அவனிடம் டிரேயை கொடுத்து விட்டவன். அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர.." சரி இப்ப நம்ம பேச ஆரம்பிக்கலாமா "என்று சக்தி கூற.. ஒன்றுமே இவனுக்கு புரியவில்லை .

"என்ன பேசணும் சக்தி .எனக்கு புரியல ".

"எப்பவுமே மாப்பிள்ளை வீட்ல இருந்து தான் பொண்ணு வீட்டுக்கு வந்து பொண்ணு பார்ப்பீங்களா ..

ஒரு சேஞ்சுக்காக பொண்ணு வீட்ல இருந்து மாப்பிள்ளை வீட்டில் வந்து மாப்பிள்ளை பார்க்க கூடாதா" என்று சொல்ல குருவுக்கு மட்டுமல்ல ஜான்விக்குமே சிரிப்பு உதட்டில் தோற்றி இருந்தது.

என்ன விளையாட்டு இது என்பது போல சக்தி பார்க்க சக்தியின் பாட்டி புன்னகைத்தபடியே. " சக்திக்கு பழசு எல்லாமே ஞாபகத்துக்கு வந்துடுச்சு அதை சொல்றதுக்காக தான் இங்கே வந்தோம்" என்று சொல்ல ..

"நீங்க அப்படி எல்லாம் தப்பிச்சு ஓடிட முடியாது தெரியுமா .நான் சக்தி எனக்கானவர் நீங்கதானே ..

எப்பவோ கடவுள் எழுதி வெச்சிட்டாரு" என்று சொல்ல.." அது என்னமோ உண்மை தான் மா "என்று பாட்டியும் பதில் கூறினார்.

குருவுக்குமே மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது .வேகமாக சக்தியை பார்த்து "அப்புறமா சொல்லுங்க உங்களுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா ..

மாப்பிள்ளை கிட்ட நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க "என்று கேட்க..

அவளும் தயாராக "நான் இந்த காலத்து பொண்ணு.. அந்த காலத்து பொண்ணு மாதிரி கிடையாது..

என் கிட்ட வீட்டு வேலை எல்லாத்தையுமே நீயே செய்யணும்னு எதிர்பார்க்க கூடாது.

வாரத்துல மூணு நாள் நான் வேலை செஞ்சா ..அடுத்த மூணு நாள் நீங்க வேலை செய்யணும் .துணி வாஷ் பண்றதுல இருந்து வீடு கிளீன் பண்றது வந்து எல்லாமே அப்படித்தான்‌ என்ன சொல்றீங்க "என்று கேட்க சிரித்தபடி ..

"அதனால் என்ன? தாராளமா செஞ்சிடலாம் ".

"அப்படின்னா ஓகே .அப்பா எனக்கு இந்த பையன் ஓகே தான்னு தோணுது நீங்க என்ன சொல்றீங்க".

" எனக்கு கூட பொண்ணு ரொம்ப புடிச்சிருக்கு.."

" ஒரே ஒரு சின்ன ரெக்வஸ்ட் மட்டும் தான் எனக்கு இருக்கு ".குரு இடைமறிக்க..

"என்ன சொல்லுங்க செஞ்சிடலாம் ".

"எனக்கு இருக்கிறது ஒரே ஒரு அண்ணன்.. எங்க அண்ணன் மேல் கை நீட்டி அடிச்சிட கூடாது .

நான் ரொம்ப பார்த்து பார்த்து வளர்த்து இருக்கிறேன் .அவன் கிட்ட நீ சண்டை போடக்கூடாது எதா இருந்தாலும் பொறுமையா சரின்னு சொல்லி பொறுத்து போகணும் என்ன சொல்ற .நான் இதை மட்டும் தான் கேட்கிறேன்."

குருவும் கலாய்க்க ஆரம்பிக்க.. அப்பா என்னப்பா.. என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க எல்லாரும் சேர்ந்து கூப்பிட்டு வைத்து கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா "என்று கோபமாக மாதவன் கேட்டான்.

"மாதவா கோபப்படக்கூடாது அவ சும்மா விளையாட்டிட்டு இருக்கிறா.." சக்தியின் பாட்டி கூற .."சரி பாட்டி இந்த பொண்ணு மாப்பிள்ளை எல்லாம் தனியா பேசுறதுக்கு அனுமதி எல்லாம் தர மாட்டீங்களா.. நான் கொஞ்சம் .. இல்ல நிறையவே பேச வேண்டியது இருக்குது "என்று சொல்லி எழ.. அங்கிருந்து வேகமாக சக்தி தோட்டத்தை நோக்கி நகர்ந்தாள்.

"அப்பா பொண்ணு ஃபுல் ஃபார்ம்ல இருக்குற ..நான் ரெண்டு ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன் நீங்க பேசிக்கிட்டே இருங்க" என்று வேகமாக சக்தியை பின் தொடர்ந்தான்.

தோட்டத்திலிருந்து இருக்கையில் சக்தி அமர்ந்து இருக்க.. அவளுக்கு அருகே வந்து அமர்ந்தவனின் மனதிற்குள் அத்தனை நிம்மதி..

பேச்சு எதுவுமே வரவில்லை சற்று நேரம் அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள்..அருகே நெருங்கி அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் .

"என்ன ரொம்ப பயந்துட்டீங்களா".

" பின்ன பயப்படாம இருப்பேனா மனசுக்குள்ள நீ இருக்கிற என்று தெரியும் ஆனால் ஏதோ ஒரு கோபத்தில் அன்றைக்கு அப்படி நடந்துகிட்டேன்.

பிறகு பார்த்தால் ஆக்சிடென்ட்.. காதுலை புரிஞ்சுகிட்டு உன்னை தேடி வரும் போது ஆக்சிடென்ட் ..
அத தொடர்ந்து இதனை பிரச்சனை".

" தெரியும் மாதவன் சார் அப்பா சொன்னாங்க. எப்படி இருந்தாலும் சரி உங்க பொண்ண நான் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னீங்களாமே ..

அந்த நிமிஷமே அப்பா பிளாட் தெரியுமா ..நான் தான் தப்பு பண்ணிட்டேன் இப்படிப்பட்ட ஒரு நல்ல பையனோட மனசை நான் தான் வருத்தப்பட வைத்துவிட்டேன் என்று நிறைய புளம்பினாரு ..

ஆனா பாருங்க உங்களுக்கு நான்னு எழுதி வைத்திருக்கும் போது அது எப்படி ?

எனக்கு முன்னாடி இருக்கிற நாலு பெண்கள்ல யாரையாவது கல்யாணம் பண்ணி தருவாங்கன்னு யோசிக்க முடியும் ."

"அதுவும் சரிதான் சரி இதுக்கு மேல எல்லாம் என்னால காத்துக்கிட்டு இருக்க முடியாது சக்தி.

எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லு".

" ஹலோ என்ன விளையாடுறீங்களா எனக்கு மூத்தவ ஒருத்தி இருக்கிறா.. இப்பதான் மாப்பிள்ளை பார்த்து ரெடி ஆகி இருக்குன்னு சொல்றாங்க அவளுக்கு கல்யாணம் முடிஞ்சுதுன்னா அடுத்த ஒரு மாசத்திலேயே உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது."

"சரி இப்ப எல்லாரும் எதுக்காக வந்திருக்கிறாங்க .அதை சொல்றியா".

" எதுக்காக வருவாங்க நான் தான் அங்க வச்சு சொன்னேனே.. மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று.."

" அடிப்பாவி உன்னை எல்லாம்.. என்னை வைத்து நீ விளையாடிகிட்டு இருக்கிறல்ல ".

"என்ன பொண்ணுன்னா சும்மாவா.. அவ பண்ற அத்தனை பைத்தியக்காரத்தனத்தையும் சகிச்சுக்கணும்ல

அதுக்கு இப்படி எல்லாம் டெஸ்ட் பண்ணி பார்த்தா தான தெரியும்".

" சக்தி உனக்காக எது வேணும்னாலும் சகிச்சுக்குவேன் அத நீ முதல்ல புரிஞ்சிக்கணும்.."

தெரியும் என்று சொல்லியபடி எழுந்து நிற்க.. சட்டென ஒரே நிமிடம் கிடைத்த இடைவெளியில் லேசாக இழுத்து அணைத்தவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு எதுவுமே நடக்காதது போல நகர்ந்து நிற்க.. முகம் முழுக்க சிவந்தபடி.." நீங்க இருக்கீங்களே மாதவன் சார் .ரொம்ப மோசம் "என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் சக்தி.
 

Kavisowmi

Well-known member
33

மாலை வரையிலுமே மாதவனின் வீட்டில் தான் இருந்தனர் .இரண்டு மாதத்தில் சக்தியின் தமக்கை திருமணம் என்று முடிவு செய்திருக்க அடுத்த ஒரு மாதம் கழித்து இவர்களுடைய திருமணம் முடிப்பதாக பேசி முடிவெடுத்து இருக்க, மாதவனின் தந்தை மகிழ்ச்சியோடு தலையாட்டினார்.

அதே நேரத்தில் குரு தந்தைக்கு அருகே வந்தவன் மெல்ல குரல் கொடுத்தான்.

" அப்பா அண்ணாவுக்கு கல்யாணம் பண்றீங்க ஓகே ..அப்படியே இந்த தம்பியை கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்க ".

"ஏண்டா உனக்கு என்ன அவசரம்.. உனக்கு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு பொண்ணு பாக்க ஆரம்பிச்சா பத்தாதா ".

"அப்பா ரெண்டு வருஷமா என்னப்பா இப்படி சொல்றீங்க."

" நீ எதுக்குடா இவ்வளவு ஷாக் ஆகுற மாதவன் என்ன நடக்குது உன் ஆபீஸ்ல..

இவன் வேற யாராவது பொண்ண சைட் அடிக்கிறானா என்ன ?இவன் கிட்ட அந்த அளவுக்கு திறமை எல்லாம் கிடையாது.."

"வந்து .."என்று ஆரம்பிக்கும் போதே வேகமாக ஜான்வியை அழைத்து கொண்டு தந்தையின் காலில் விழுந்திருந்தான்.

" அங்கிள் எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க "என்று ஜான்வி கூற.. குருவோ சாஸ்ட்ராங்கமாக நீட்டி நிமிர்ந்து காலில் விழுந்து இருந்தான் .சட்டென பார்க்கவும் சிரித்து விட்டார்.

" என்னடா நடக்குது இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கிற.. எல்லாம் சரி அதுக்கு இப்படியா.."

" வேற வழியே இல்லையேப்பா நீங்க ஓகே சொன்னாதான் எல்லாமே நடக்கும். எங்க விஷயம் அண்ணா உங்களுக்கு கூட அந்த அளவுக்கு தெரியுமான்னு தெரியல.

என்னால ரொம்ப நாள் எல்லாம் காத்திருக்க முடியாதுப்பா..

ஆல்ரெடி இப்பவே இந்த பொண்ணு என்ன ரெண்டு வருஷத்துக்கு மேல காதலிச்சுகிட்டு இருக்கிறா..

இதுக்கு மேல டைம் கொடுக்கிறது நல்லது இல்லை என்று தோணுது".

' சரிடா சரி அதுக்காக உடனே பண்ணி வைக்க முடியுமா.. அவனுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு ஆறு மாசமாவது டைம் வேண்டாமா".

" ஆறு மாசமா அவ்வளவு நாள் எதுக்காகப்பா .."

"பின்ன வேற என்ன செய்ய சொல்ற".

" அப்பா அண்ணா கல்யாண மேடையிலேயே ஒரு ரெண்டு செகண்ட் அவங்கள நகர சொல்லிட்டு.. ரெண்டே ரெண்டு நிமிஷம் அந்த மேடையை கடன் கொடுத்தீங்கன்னா.

அந்த கல்யாணம் மண்டபத்துலயே நானும் கல்யாணத்தை முடிச்சுக்குவேன் .

ஏன் அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் ஒரே மண்டபத்துல ஒரே நேரத்துல கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்குதா என்ன?".

" அடப்பாவி இப்படியா மாறுவ "என்று மாதவன் கேட்க்க.." பின்ன டைம் கிடைக்கும் போது மனசுல என்ன இருக்கோ அதெல்லாம் சொல்லிடனும்.

மனசுக்குள்ள சொல்லாம இருந்த பின்னாடி ஏதாவது பிரச்சனைனா உட்கார்ந்து அழக்கூடாதுல்ல.. என்னப்பா நான் சொல்றது கரெக்ட் தானே.."

சட்டென அங்கிருந்த அனைவருமே சிரிக்க ஆரம்பித்தனர்.

"அப்புறம் சக்தி இனி அங்க வேலை செய்யனுமா..*

" அப்பா இதெல்லாம் டூ மச் பா நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியாச்சு .மாதவன் சார் நீங்க என்ன சொல்றீங்க . நான் வேலைக்கு வரலாமா இல்ல வீட்ல தான் இருக்கணுமா".

" ஐயோ உன்னை யாரு வேண்டான்னு சொன்னாங்க அங்கிள் இந்த மாதிரி எல்லாம் முடிவு எடுத்துடாதீங்க .

கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னாடி தான் உங்க பொண்ண நீங்க அழைச்சிட்டு போகணும் இது என்னோட ஆர்டர் .

நான் இதுவரைக்கும் சக்தி கிட்ட நிறைய சண்டை தான் போட்டு இருக்கிறேன் .

மனசு விட்டு ஒரு நாளும் பேசுவதில்லை .இனிமே பேச போறேன்.. அவ கூட ரொம்பவுமே நல்லவிதமா பழகணும்னு ஆசைப்படுறேன் .

அதனால கட்டாயமா நீங்க மறுப்பு சொல்லக்கூடாது."

"சரி ..ஒரு விஷயத்தை ரெண்டு பேருமே ஞாபகம் வச்சுக்கணும் மாதவா. நீ மட்டுமல்ல குரு நீயும் தான் உங்களோட வாழ்க்கை துணை ரெண்டு பேருமே உங்க ஆபீஸ்ல இருக்குறாங்கன்னு கவனமெல்லாம் அவங்க மேல இருந்தா உங்களோட வேலை எப்படி நடக்கும் இத பத்தி யோசிக்கிறீங்களா.."

"பாட்டி என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க .அண்ணா எல்லாம் இந்த விஷயத்துல ரொம்ப ஸ்டிட்டு..

அண்ணாவை நம்பி யாரை வேணும்னாலும் கூட விடலாம். தப்பா எதுவும் நடக்காது".

" அப்படின்னா நீ தான் சரியில்லைன்னு சொல்ல வரியா "

"ஐயோ பாட்டி ..என்ன பாட்டி இப்படி எல்லாம் பேசறீங்க. என்னையும் தாராளமா நம்பலாம். நான் என்னோட அண்ணா ரெண்டு பேருமே அப்பாவோட வளர்ப்பு நிச்சயமா தப்பு செய்ய மாட்டோம்..

கவலையே படாதீங்க .. கல்யாணம் நடக்கற கடைசி நிமிஷம் வரைக்கும் ஆஃபீஸ்ல இருக்குற யாருக்குமே இந்த விஷயம் தெரியாம நாங்க பார்த்துக்கொள்வோம் .

அந்த அளவுக்கு நேர்மையா நியாயமா நடந்துக்குவோம் .எங்களை நம்பி தாராளமா அனுப்பி வைக்கலாம் என்றவன் சக்தி ஏதாவது சொல்லுங்களேன்.."

"பாட்டி நான் தான் முன்னாடியே உங்க கிட்ட சொன்னேன்ல.. எனக்கு கண்டென் ரைட்டிங்னா ரொம்ப பிடிக்கும்.

நிறைய எழுதணும் இன்னும் கொஞ்ச நாளைக்கு அங்க ஆபீஸ்ல வேலை செய்கிறேன் .நிச்சயமா கல்யாணத்துக்கு பிறகு அங்க போகலாமா வேண்டாமா என்பதை பத்தி பிறகு யோசிக்கலாம் .

இப்போ கல்யாணம் வரைக்கும் நான் அங்க போறேன். எனக்கு மாதவனை நல்லாவே தெரியும். நீங்க கவலையே படாதீங்க .

அப்புறமா நான் உங்க பேத்தி பாட்டி. தப்ப நிச்சயமா பண்ண மாட்டேன் நிச்சயமா .அவர் என்கிட்ட வந்தார்னா கூட நான் உங்ககிட்ட சொல்லிடுறேன் எப்படி.."

"சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் சக்தி .உன்னையும் எனக்கு தெரியும் மாதவனையும் எனக்கு தெரியும் .

நிச்சயமா தப்பு செய்ய மாட்டீங்க சரி இன்னைக்கு இந்த நாள் மகிழ்ச்சியா முடிஞ்சது. அப்புறமா ஜான்வி நீ சொல்லு உன்னோட அப்பா எப்போ வந்து கல்யாணம் பேச போறாரு.."

"பாட்டி அப்பாவுக்கு ஏற்கனவே விஷயம் தெரியும். நான் இங்க ஆபீசுக்கு வேலைக்கு வரும்போது.. அப்பவே என்னோட ஆசையை அவர் கிட்ட சொல்லிட்டேன் .

அவருக்கு நான் நல்லா இருக்கணும் அது மட்டும் தான் அவரோட ஆசை.. அதனால நான் நாளைக்கே வந்து பேசலாம்னு சொன்னா கூட உடனே வந்துருவாங்க".

" சரி சரி சீக்கிரமா நல்லது நடக்கணும் .அதுதான் என்னோட ஆசை" சொல்லிவிட்டு அன்றைக்கு அவர்கள் அனைவருமே புறப்பட ..அடுத்த நாள் வழக்கம் போலவே ஆபீஸிற்கு வந்தனர் .

வந்த நேரத்தில் இருந்தே மாதவனின் பார்வை சக்தியை சுற்றிக் கொண்டிருக்க ..குருவின் பார்வையோ ஜான்வியை பின் தொடர்ந்தது.

மாதவன் குரல் கொடுத்தான்." சபா எனக்கு ஒரு காபி வேணுமே கிடைக்குமா "என்று சொல்ல சாபாவோ சக்தியை பார்த்தான் .

"சக்தி மாதவன் சாருக்கு ஒரு காபி வேணுமாம் கொடுத்துட்டு வர முடியுமா . எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. குடுத்துட்டு வந்துடுங்களேன்" என்று சொல்ல இங்கே இவளுக்கு ஞாபகம் வந்தது ஆபீஸில் உள்ள யாருக்குமே தெரிந்திருக்கவில்லை .

என்னவோ மாதவனுக்கு உதவி செய்வதாக நினைத்து சக்தியை அனுப்பி வைக்க.. சக்தியோ புன்னகையோடு காபியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் .

"என்ன சார் ..என்ன காபி எல்லாம் கேக்குறீங்க அதுவும் நான் தான் போகணும்னு உங்க ஒர்க்கர்ஸ் எல்லாம் என்னை துரத்தி விடுறாங்க.."

"பின்ன மாதவன்னா சும்மாவா.. அப்படித்தான் செய்வாங்க."

" ஹலோ நான் பேசாம எல்லார்கிட்டயும் சொல்ல போறேன் எனக்கு எல்லாமே ஞாபகம் வந்துருச்சு .

இனி இது மாதிரி நடந்துக்காதீங்கன்னு.."

"நம்முடைய என்கேஜ்மென்ட் அன்னைக்கு கல்யாண விஷயம் எல்லார்கிட்டயுமே சொல்லிக்கலாம். ஆனா உனக்கு ஞாபகம் வந்தது தாராளமா சொல்லித்தான் ஆகணும். இப்பவே போய் சொல்லிடலாம் "என்று எழுந்து வெளியே வந்தவன்.

" ஹலோ கைஸ்.. எல்லாரும் ஒரு நிமிஷம் திரும்பி பாக்குறீங்களா "என்று சொல்ல அனைவருமே எழுந்து நின்றனர் .

"நம்ம சக்திக்கு பழையது ஞாபகம் வந்துடுச்சு. இந்த சந்தோஷமான விஷயத்தை உங்ககிட்ட இப்ப சொல்றேன்.

இந்த மகிழ்ச்சியை கொண்டாட இன்றைக்கு மதியம் லஞ்ச் எல்லோருக்கும் என்னோட செலவுல...ஒகே.. விருப்பப்பட்டத நீங்க வாங்கி சாப்பிட்டுக்கலாம்.. என்ன வேணுமோ ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கோங்க .இன்னிக்கு பில் நான் பே பண்ணிடறேன் "என்று சொல்ல ஒரே நேரத்தில் கைதட்டி ஆரவாரமாக.." தேங்க்யூ சார் தேங்க்யூ வெரி மச்" என்று குரல் கொடுத்தனர்.

"சக்தி நான் கூட கொஞ்சம் பேசணும் என்கூட வர முடியுமா."

" எங்க போகணும் "என்று சக்தி யோசனையோடு கேட்க .."அதை இங்க வச்சு தான் கேட்பியா. என் பின்னாடி வா" என்று கையைப் பிடித்து கொண்டு வெளியேறினான் மாதவன் .

ஜான்விக்கும் அத்தனை சிரிப்பு குருவை பார்த்து கூறினாள். "பாருங்கள் உங்க அண்ணாவுக்கு தைரியத்தை ..ஆபீஸ்ல இருக்குற அத்தனை பேர் முன்னாடி தைரியமா வெளிய அழைச்சிட்டு போறாரு.."

"அண்ணா இதுவரைக்குமே சக்தி கிட்ட மனசு விட்டு எதுவுமே பேசினது இல்ல ஜான்வி .அதனால போவாங்களா இருக்கும்.

நீ அதெல்லாம் கண்டுக்காத நீ என் பின்னாடி வருகிறாயா. எங்கேயாவது வெளியே போகலாம்".

" வாய்ப்பே இல்ல எனக்கு வேலை நிறைய இருக்கு .*

"சரி அப்படின்னா ஒரு நிமிஷம் என்னோட ஆபீஸ் ரூமுக்கு வந்துட்டு போயேன் *.

"ஹலோ என்ன சார் என்ன ?எப்படி இருக்கு உடம்பு.. உள்ள வந்தேன்னா பளார்னு கன்னத்தில் இரண்டு வைப்பேன் பரவாயில்லையா..

அன்னைக்கு மாதிரி எல்லாம் ஏமாந்த நேரத்துல முத்தம் தரலாம்கிற ஐடியாவுல சுத்திக்கிட்டு இருக்காதீங்க .

எல்லா நேரமும் ஜான்வி அன்னைக்கு மாதிரியே பே ன்னு நிற்க மாட்டா புரிஞ்சுதா" என்றபடி லேசாக அவனை இடித்து விட்டு நகர்ந்து சென்றாள்.

அருகிலிருந்த ரெஸ்டாரன்ட்குல் இரண்டு பேருமே நுழைந்தனர்.

அங்கிருந்து இருக்கையில் அமர்ந்தவன் சிலவற்றை வேகமாக ஆர்டர் செய்தபடி சக்தியை பார்க்க ஆரம்பித்தான்.

"இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்".

" என்ன அர்த்தமா.. நீ என்கிட்ட மறுபடியும் வருவியா.. வரமாட்டியாங்கற பயம் நிறைய இருந்தது தெரியுமா..

எல்லாமே சரியாகிவிட்டது என்று நினைக்கும் போது அத்தனை சந்தோஷமா இருக்குது.

என்னால காத்திருக்க முடியாது சக்தி சீக்கிரமாவே கல்யாணம் பண்ணிக்கணும் ."

"இப்ப யாரு உங்கள காத்திருக்க சொன்னாங்க. அக்காவோட கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்குது.

நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் மாதவன். அதுக்கு நீங்க சம்மதிப்பீர்கள் என்று நினைக்கிறேன்..

நான் கண்டினியூவா இங்க வேலைக்கு வர்ற ஐடியாவுல இல்லை. அப்பா சொன்னது தான் சரின்னு தோணுது .

நிச்சயமா உங்க கூட இங்கே இருந்தேன்னா.. நீங்க வேலையை சரியா செய்ய மாட்டீங்க .அது எனக்கு நல்லாவே புரியுது".

" என்ன சக்தி இப்படி சொல்ற ".

"பின்ன.. நேத்திக்கு தான் நம்ம வீட்ல வச்சு அவ்வளவு தூரம் பேசினோம் ஆனால் இங்க வந்த கொஞ்ச நேரத்துலயே உங்களால சரியா இருக்க முடியல .

இது சரிவராது மாதவன் சார் அதனால நான் வேலையை ரீசைன் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கிறேன்."

அப்படின்னா..

" என்ன சொல்றது அப்பவோட ஆபீஸ் இனி போய் பார்க்க போறேன். கல்யாணத்துக்கு இன்னமும் மூணு மாசம் தான் இருக்கு."

" அதுதான் ஏன்னு கேக்கறேன் சக்தி. மூணு மாசத்துல நீ அங்க போய் என்ன செய்யப் போற ."

"அப்பாவ பொருத்தவரைக்கும் சென்னையில் ஒரு பிரான்ச் ஆரம்பிச்சு அதை என் பொறுப்பில் கொடுக்கணும் என்கிறது அவங்களோட ரொம்ப வருஷத்து கனவு..

ஒரு பொண்ணா அந்த கனவையும் நிறைவேற்றி வைக்கிறது என்னோட பொறுப்பு தானே.."

" அப்படின்னா என்னோட ஆபீஸ்ல இனி வேலை செய்ய மாட்டியா".

" அப்படின்னு யார் சொன்னாங்க எப்பவுமே உங்க ஆபிசுக்கும் எனக்கும் உண்டான தொடர்பு போகவே போகாது.

என்ன பாக்கறீங்க கன்சல்டிங் ஆபீஸ் இங்க மாத்துன பிறகு எங்க நிறுவனத்தோட மொத்த விளம்பர தயாரிப்பையும் உங்ககிட்ட தான் கொடுக்க போறேன் .

சோ வாரத்துல நாலு நாள் எப்பவும் போல உங்க ஆபீஸ்க்கு வந்து உங்களை பார்த்துட்டு போவேன் கவலையே பட வேண்டாம்.

அதையெல்லாம் தாண்டி இன்னொன்னு சொல்ல வேண்டியது இருக்குது ".

"என்ன சுத்தி சொல்லு".

" ஐ லவ் யூ ஐ லவ் யூ சோ மச்.. அன்னைக்கு அந்த பத்து வயசுல உங்கள பார்க்கும்போது எனக்கு என்ன தோணுச்சுன்னு தெரியாது.

அன்னைக்கு ஆசையும் காதலும் கூட கிடையாதுன்னு தான் நினைக்கிறேன் .உங்களை பார்க்கும் போது ரொம்ப பிடிச்சது.

உங்க கூட இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு என் மனசுக்குள்ள தோனிச்சு .அதுதான் மனசுக்குள்ள வளர வளர கூடவே வளர்ந்தது போல இருக்குது.

சரியான நேரத்தில் உங்ககிட்ட வந்துட்டேன். உங்களோட அன்பை கூட என்னால பெற முடிஞ்சிடுச்சு ஆனா இடையில் அப்பா யாருன்னு தெரிஞ்சதுனால பிரச்சனையாகி என்னென்னவோ நடந்துருச்சு.

பழையபடி உங்ககிட்ட சேர்ந்துட்டேனு நினைக்கும் போது அத்தனை சந்தோஷமா இருக்குது".

" எனக்கும் சக்தி நானும் இதுவரைக்கும் உன்கிட்ட சொன்னது இல்ல .

ஐ லவ் யூ சோ மச் எனக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு உங்க அப்பா மேல நிறைய கோபம் இருந்தது ஆரம்பத்துல..

அதுக்கப்புறம் நாள் பட நாள்பட எல்லாமே போயிடுச்சு .இங்க வந்து ஆபீஸ் தொடங்கி ஒரு அளவுக்கு உயரம் வர ஆரம்பிக்கும் போது உங்க அப்பாவோட ஞாபகம் துளி கூட இல்லை .

இன்னமும் சொல்லப்போனால் கொஞ்சம் மரியாதை தான் வந்தது. நிச்சயமா அன்னைக்கு அப்படி சொல்லி இருக்காட்டி என்னால இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது .அது 100% உண்மை..

உயர்ந்த இடத்துக்கு வரணும். பணம் சம்பாதிக்கணும் .உங்க அப்பா முன்னாடி வந்து பொண்ணு கேக்கணும் இப்படி எல்லாம் யோசிச்சதே இல்ல.

ஆனா என்ன நம்பி வர்ற பொண்ணுக்கு எல்லாமே இருக்கணும் அது மாதிரியான ஒரு எண்ணம் மனசுக்குள்ள வெறி மாதிரி இருந்துச்சு .

அத நோக்கி உழைச்சேன். ஓரளவுக்கு ஜெயிச்சும் காட்டிவிட்டேன். ஆனால் கடவுளோட சித்தம் இதுதான்னா மாத்திக்கவா முடியும்.

அன்னைக்கு சீரியஸா சொன்னாரோ.. விளையாட்டுக்கு சொன்னாரோ.. என்னோட ஒரு பொண்ண உங்க வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைக்கிறேன்னு..

கடவுள் கூட அந்த நிமிஷமே ஆசீர்வாதம் பண்ணிட்டாரு போல இருக்கு.. நீ கரெக்டா என்கிட்ட வந்து சேர்ந்துட்ட.."

"உண்மைதான் மாதவன் .. என் மனசுக்கு இப்போ நிறைவாய் இருக்குது .நான் இந்த ஆபீஸ்க்கு வரும்போது நிறைய பயம் குழப்பம் இருந்தது.

முதல்ல உங்க ஆபீஸ்ல எனக்கு வேலை கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன் .

வேலை கிடைச்சது பிறகு உங்ககிட்ட எப்படி நெருங்கறதுன்னு நெனச்சேன்.

ஒவ்வொருத்தர்கிட்டயும் முறைச்சுக்கிட்டு இருந்தீங்க நடுவுல நித்யா வேற வந்து நிறையவே குழப்பி விட்டா ..

நான் தான் அவசரப்பட்டு வந்திட்டேனோன்னு பயப்படாத நாளே கிடையாது .

எத்தனையோ நாள் தூங்காம கூட இருந்தேன். உங்க அப்பாகிட்ட ரொம்ப நல்லவிதமா பழகினேன்.

நெருங்கி பேச ஆரம்பிச்சேன் உங்க அப்பா கூட சொன்னது ஒரே விஷயத்தை மட்டும் தான்..

நிச்சயமா அவன் சம்மதிக்க மாட்டான் அப்படின்னு சொன்னாங்க ஆனா எல்லாமே மேஜிக் மாதிரி மாறிடுச்சு .

எங்க அப்பாவை நினைச்சு தான் ரொம்ப பயந்தேன். அவர் கூட உடனே சம்மதிச்சுட்டாரு ..அதுக்கு காரணம் கூட உங்களோட நல்ல மனசு தான்.

எந்த ஒரு மனுஷனுமே சுயநினைவு இல்லாமல் பழையதை எல்லாம் மறந்துட்டு கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி இருக்கிற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல மாட்டாங்க.

நீங்க சொன்னீங்க அந்த செகண்ட் அப்பாவோட மனசு மாறிடுச்சு.. எல்லாமே நல்ல விதமா நடந்துடுச்சு ரொம்ப தேங்க்ஸ்க்ஷ.

நான் இன்னைக்கு மட்டும் தான் இங்கே இருப்பேன் .நாளைக்கு காலையில அப்பா கிட்ட போறேன். நீங்க இதுக்கு சம்மதிக்கணும்.

என்ன சொல்றது அப்பா என்னைக்கு உங்ககிட்ட பிடிவாதமா பொண்ண தரமாட்டேன்னு சொன்னாங்களோ..

அந்த நாளில் இருந்து நான் அவங்க கூட இல்ல பாட்டி வீட்லதான் இருந்தேன்.

இத்தனை வருஷம் தாண்டியாச்சு அப்பா இருக்கிற இடத்துக்கு அதிகமா போனதே கிடையாது ஆனா நம்ம கல்யாணம் வரைக்கும் அப்பா கூட திகட்ட திகட்ட அவர்களுடைய அன்பை வாங்கிக்கணும்னு ஆசைப்படறேன் .

எல்லாரும் மனசார சந்தோஷமா என்னை உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கணும் இதுதான் என்னோட ஆசை ."

'நிச்சயமா சக்தி நான் உன்னோட ஆசைக்கு என்னைக்குமே தடையாய் இருக்க மாட்டேன். தாராளமா போலாம் ஆனால் நிறையவே மிஸ் பண்ணுவேன்.

முன்னாடி எப்படியோ தெரியாது. இப்ப மனசு முழுக்க நீதான் இருக்கிற".

" அதனால என்ன தினமும் பேசலாம். வாரத்துல ரெண்டு நாள் ஒருத்தருக்கு ஒருத்தர் நேரடியா சந்திக்கலாம்.

உங்களுக்கு தோணும்போது நீங்க என்னை தேடி வாங்க .எனக்கு தோணும்போது நான் உங்களை தேடி உங்களை பார்க்கறதுக்கு வருவேன்." கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேசி மகிழ்ச்சியோடு வெளியேறினார்
 

Kavisowmi

Well-known member
34

சரியாக மூன்று மாதம் கழித்து திருமணம் நிச்சயம் செய்திருந்த அந்த நாளில் உறவினர்கள் மொத்த பேரும் அங்கே கூடி இருந்தனர்.

சிரிப்பு,மகிழ்ச்சி என போட்டி போட்டு கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம் முழுவதுமே..

சக்தி சொன்னது போல அடுத்த நாள் தந்தையிடம் வந்தவள்.. தந்தையின் ஆசைப்படி தந்தையின் கம்பெனியில் வேலை பழக ஆரம்பித்தாள்.

சரியாக ஒரே மாதம் அனைத்து வேலைகளையும் நன்றாகவே கற்றுக் கொண்டாள் .

தந்தை சொல்ல சொல்ல ஒவ்வொன்றையும் அதேபோல கவனிக்க ஆரம்பிக்க, தந்தைக்கு அத்தனை மகிழ்ச்சி ஒரு மாதம் கழித்து சென்னையில் ஏற்கனவே தந்தை ஆசைப்பட்டது போல இவர்களுடைய ஆபீசை ஓபன் செய்திருந்தனர் .

சக்தியின் தலைமையில் அங்கே வேலை நடந்து கொண்டிருக்க, இவர்களுடைய மொத்த நிறுவனத்தின் விளம்பரங்களையும் மாதவனிடம் ஒப்படைத்து இருந்தனர்.

வேலை நிமித்தமாக வாரம் இரண்டு முறை மாதவனை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தாள்.

இவர்கள் பிரிந்து வேலை செய்வது போலவே தோன்றவில்லை .எப்போதுமே நெருக்கமாக இருப்பது போல இருந்தது இவர்களுடைய மனநிலை..

அவனுக்குமே ஏதாவது சந்தேகம் வந்தால் யோசிக்காமல் சக்தியை அழைத்து பேசினான்.

அதே போலத்தான் சக்தியும் தனக்கு உண்டான வேலை பற்றி அங்கே நடக்கும் நிலவரங்களையும் கூட பகிர்ந்து கொண்டாள்.

நாட்கள் வேகமாகவே ஓடி இருந்தது இதோ திருமணம் மண்டபத்தில் தேவதை போல அலங்காரம் செய்திருக்க அவளின் கழுத்தில் மாலையிட தயாராக மணமேடையில் காத்திருந்தான் மாதவன்.

சரியான முகூர்த்த நேரத்தில் மணமகளை அழைத்துக் கொண்டு வந்து.. அங்கு அமர வைக்க ..தலை குனிந்த படி அவன் அணிவித்த மங்கல நானை ஏற்றுக் கொண்டாள்.

அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் வேகமாக நடந்து கொண்டிருக்க.. இங்கு குருவோ ஜான்வியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஜான்வியின் தந்தை கூட திருமணத்திற்கு வந்திருக்க.. இவர்களுடைய திருமண முடிந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் குருவின் நிச்சயம் அங்கே நடந்தேறியது.

ஜான்விக்கும் குருவுக்கும் அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் என பேசி முடித்திருக்க.. ஜான்விவோ மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு துணை பெண்ணாக சக்தி நின்று கொண்டிருக்க குருவிற்கு அருகே மாதவன் நின்று மற்ற பொறுப்புகளை கவனித்துக் கொண்டான்.

ஜான்வி முந்தைய நாளில்தான் தன்னுடைய வேலையை ரீசைன் செய்து கொண்டு வந்திருந்தாள்.

"குரு ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க கல்யாணம் வரைக்கும் என்னால இங்க வேலைக்கு வர முடியாது. அப்பா என்னை இவ்வளவு நாள் தனியா விட்டது பெரிய விஷயம்.

அப்பா ஆசைப்படி கொஞ்சநாள் அவங்க கூட இருக்கணும் இல்ல..

அப்பாவுக்கு செல்ல மகளா கொஞ்ச நாள் அப்பா கூட இருக்கிறேன் .நம்ம கல்யாணத்துக்கு பிறகு நான் உங்க கூட தானே வந்து இருக்க போறேன்".

" ஹலோ அப்ப கூட நீ உன் அப்பா வீட்டிலேயே இருந்துக்கலாம். நான் அங்க தங்கறதுனாலும் தங்கிக்கிறேன் .எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை ".

"தெரியும் குரு நீங்க இப்படி தான் சொல்லுவீங்கன்னு ஆனா அதெல்லாம் நல்லா இருக்காது நம்ம வேணும்னா அப்பாவ நம்ம கூட கூப்பிட்டு வச்சுக்கலாம் என்ன சொல்றீங்க ".

"எப்படி செஞ்சாலும் சரி ஜான்வி.. நீயும் நானும் இருக்குற இடத்துல நம்மள சுத்தி நம்ம உறவினர்களும் எப்பவுமே கூட இருக்கணும் இதுதான் என்னோட ஆசை "என்று சொல்ல மகிழ்ச்சியோடு தலையாட்டி இருந்தாள்.

இதோ நிச்சயதார்த்த தேதி முடிவாகி இருக்க மகிழ்ச்சியோடு தலை குனிந்த படி அமர்ந்திருந்தாள் ஜான்வி .அருகே இருந்த சக்தி அவளை கிண்டல் செய்து கொண்டே இருக்க.. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் திரும்ப சக்தியை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

"என்ன விளையாடுறீங்களா புது பொண்ணு.. இன்றைக்கு உனக்கு பஸ்ட் நைட் ஞாபக இருக்குதா ..

பஸ்ட் நைட்டுக்கு நான் தான் உன்னை ரெடி பண்ணி அனுப்பனும். இப்படி எல்லாம் வம்பு பண்ணிக்கிட்டு இருந்தேன்னா அப்புறமா பார்த்துக்கோ. என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது."

" என்னடி இப்படி பேசுற ".

"பின்ன ஓவரா கிண்டல் பண்ணினா என்ன பண்றது . காதலுக்க ஆரம்பிச்சது என்னவோ நீதான் லேட்..

நாங்க எல்லாம் உனக்கு முன்னாடியே சீனியர் தெரியுமா ..சீனியருக்கு மரியாதை கொடுத்து பழகணும் புரிஞ்சுதா" என்று திரும்ப மிரட்ட அங்கே மகிழ்ச்சியோடு சிரிக்க ஆரம்பித்தாள் சக்தி .

"அப்பா செமையான ஆளு தான் போ.. என்னமா வாயை அடைக்கிற.. குரு ரொம்பவே பாவம் ".

"அப்படியா ..குரு பாவமா.. எனக்கு என்னமோ மாதவன் சார் தான் பாவம்னு தோணுது "என்று சொல்ல..ஏய் என்று மிரட்ட.. மகிழ்ச்சி மட்டுமே அங்கே குடி கொண்டிருந்தது.

ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு நாள்..

ஜான்வி நிற்க முடியாமல் வந்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

"என்னாச்சு ஜான்வி..ஏன் இப்படி வாந்தி எடுக்குற.. கண்டத்தையும் சாப்பிடாதன்னு சொன்னா சொன்ன பேச்சை கேக்குறியா..

இஷ்டம் போல கிடைச்சது எல்லாத்தையும் சாப்பிட வேண்டியது இப்ப பாரு.. உடம்பு முடியாம யார் கஷ்டப்படறா "கேட்டவன் தாங்கி பிடித்து கொண்டிருக்க ..

"பேசாம போயிடு குரு .நான் பயங்கர கடுப்புல இருக்கிறேன் .ஏதாவது அசிங்கமா சொல்லிட போறேன்.."கோபமாக கத்தினாள்.

" என்ன தாண்டி ஆச்சு சொன்னாதானே எனக்கு தெரியும் .நீ பாட்டுக்கு திட்டினா என்ன அர்த்தம்".

" உனக்கு தெரியாது நெஜமா மனசாட்சியை தொட்டு சொல்லு உனக்கு தெரியவே தெரியாதா ".

"ஓகே எனக்கு தெரியலடி அதனால தானே கேட்கிறேன். என்ன ஆச்சு ".

"என்ன ஆச்சு ..என்னடா ஆச்சு இங்க பாரு "என்று பிரக்னன்சி கிட்ட எடுத்து அவன் முன்னால் நீட்டினாள்.

" எல்லாம் உன்னால தான்.. இரண்டாவது மாசம் புரிஞ்சுதா கல்யாணம் பண்ணி முழுசா மூணு மாசம் கூட முடியல.

எல்லாம் உன்னால தான் .நான் ஒரு வருஷம் வரைக்கும் ப்ரீயா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.

நிறைய ஊருகளுக்கு போகணும் இப்படி என்னென்னவோ ஆசைப்பட்டேன் எதையுமே பண்ண விடாம செஞ்சிட்ட இப்ப சந்தோஷமா ".

"ஐயோ இதுதான் விஷயமா.. இதுக்கு நீ சந்தோஷம்தான் படனும் .எதுக்காக கோவிச்சுக்கற ..உங்க அப்பா ஆல்ரெடி கல்யாணம் அன்னைக்கு என்ன சொன்னாரு தெரியுமா".

" போதும் குரு ஏதாவது பேசிடாத" என்று இங்கே முறைத்துக் கொண்டு இருக்க ..அங்கே மாதவன் சக்தியை கைகளில் தாங்கிக் கொண்டிருந்தான்.

அவளும் கூட மாதமாக தான் இருந்தாள். மூன்றாவது மாதம் தொடங்கி இருக்க ..அவளும் கூட இவனை திட்டிக் கொண்டுதான் இருந்தாள்.

"இதெல்லாம் உங்களால வந்ததுதான் மது . நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்.. அட்லீஸ்ட் ஆறு மாசமாவது ப்ரீயா இருக்கணும்னு சொன்னேன் கேட்டீங்களா .

மூணு மாசத்துல வயித்துல குழந்தையை கொடுத்தாச்சு .இப்ப பாருங்க என்னால சுத்தமாவே முடியல" என்று சலித்துக் கொள்ள..

"இதெல்லாம் கடவுளை கொடுக்குற வரம் சக்தி. இப்படி எல்லாம் பேசக்கூடாது".

" சும்மா சமாதானம் சொல்லாதீங்க அண்ணனும் தம்பியும் இந்த விஷயத்துல ரொம்ப கரெக்டா இருக்கிறீங்க ".

"என்ன சொல்ற நீ .எனக்கு சொல்றது புரியல ".

"என்ன புரியல அங்க ஜான்வியும் மாசமா தான் இருக்கிறா..காலையில் போன் பண்ணி சொன்னா அதைத்தான் சொன்னேன்" என்று சொல்ல ..

"எது எப்படியா இருந்தா என்ன நமக்கு பொறுப்பு அதிகமாயிடுச்சு. வாரிசு வந்துருச்சு இனிமே ரொம்ப கவனமா இருக்கணும்ல" என்று சொன்னவன் அவளை அணைக்க வர, பதிலுக்கு சக்தி கைகளை தட்டி விட்டாள்.

" ஒழுங்கா அந்த பக்கம் போய் உட்காருங்க"என்று சொல்ல.." நிஜமாக என்னோட முகத்தை பார்த்து சொல்லு "என்று கேட்டபடியே அருகே வர ,சரியாக மறுபடியும் வாந்தி வரவும் சரியாக இருந்தது.

வேகமாக கைகளில் தாங்கிக் கொண்டான்." எல்லாம் உங்களால தான் மது" என்று கோபம் குறைந்து சினுங்களாக சொல்ல .."ஓகே ஓகே இன்னும் கொஞ்ச நாள் தான் .டாக்டர் தான் சொன்னாங்கல்ல இந்த வாந்தி எல்லாம் சரி ஆகிடும்" என்று தன்னுடைய பாணியில் சமாதானம் செய்தான்..

அங்கே இவர்களது இல்லத்தில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது.

முற்றும்.
 
Status
Not open for further replies.
Top