எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூநிஷா வின் " சாய்ந்தேனே நானும் மெல்ல! " - கதை திரி

Status
Not open for further replies.

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 9
ஈஸ்வர், வருணா வீட்டிற்கு வரும் போது, வாசலிலேயே இரு குடும்பங்களும் இவர்களின் வரவை எதிர்பார்த்து நின்றிருந்தனர்.

வண்டியை நிறுத்தியதுமே, " ஏன் பா இவ்வளவு லேட்டு?. அப்போதே கிளம்பிட்டீங்கன்னு சொன்னீங்களே?" என்றார் கோசலை பொதுவாக

"கிளம்பி வந்துட்டு இருக்கும் போது, குடிகாரன் ஒருத்தன் தேவையில்லாமல் வந்து வம்பு பண்ணிட்டான். அவனை சமாளிச்சிட்டு வர லேட்டாகிடுச்சு அத்தை" என்றான் ஈஸ்வர். யாரென்று சொல்லாமல்

"குடிகாரனா? யாரது?. நம்மக்கிட்ட வந்து வம்பு பண்றது?" என்றார் கோபால் யோசனையாக

"சக்தி மாமா தான் பெரியப்பா வம்பு பண்றார். அதோட கார எங்க மேல விடுற மாதிரி வேற வந்தாங்க. அதோட தேவையில்லாமல் வரம்பு மீறி எங்களையும் .. " என்று வருணா விளக்கும் போதே,

இடையிட்ட ஈஸ்வர். " நீ வீட்டுக்கு போ. வாசலில் வைச்சு வீட்டு விசயத்தை பேசுவியா?. அதான் வந்தாச்சுல்ல?. அத்தை எதாவது சாப்பிட கொடுங்க. உள்ளே போ " என்று அதட்டியதும் மறு மொழி கூறாமல் விறுவிறுவென உள்ளே சென்று விட்டாள்.

"என்னாச்சு மாப்பிள?. அந்த சக்தி வம்பு பண்ணாணா?" என்றார் ராமன் தன்னறியாமல். இதுவரை ஈஸ்வர் என்று தான் அனைவருமே அழைத்து பேசுவர்.

இருவரும் வந்து இறங்கிய போது, பார்த்த அனைவருக்குமே அவர்களின் ஜோடி பொருத்தம் கண்களை நிறைத்திருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கூட பார்த்திராவர்கள்!. இன்று ஈஸ்வரின் சொல்லிற்கு மறுமொழி கூறாமல் வருணா சென்றது, ஏதோ புரிதலுடன் கூடிய இணையை போன்று தோன்ற! ராமன், அவரறியாமலே மாப்பிள்ளை என்று அழைத்திருந்தார்.

பலவருடங்களாக, மனதில் இருந்தது வார்த்தைகளாக வெளிப்பட்டதா?. இல்லை மீண்டும் கோசலையின் அண்ணன் குடும்பத்தினர் வந்து வம்பு வளர்ப்பதால்! ஒரு தந்தையாக மனதில் எழுந்த கலக்கத்தால்! வருணாவுக்கு திருமணம் முடித்து விட வேண்டும் என்ற உந்துதலினால் வந்ததா? என்பதை ராமன் கூட அறிந்திருக்க மாட்டார். ஏனோ! அந்த நேரத்தில் அப்படி தான் இயல்பு போல அழைத்திருந்தார்.

"ஆமாம் மாமா. குடிச்சிருந்தான். கொஞ்சம் ஒவரா தான் பேசினான். நீ எதுக்கு அழைச்சிட்டு வர?. நீ என்னை அவளை லவ் பண்றியா?.அப்படி இப்படின்னு!. செம்ம கடுப்பாயிடுச்சு. ஆமான்டான்னு சொல்லிட்டேன் " என்றவன். " ஏன் மாமா? இன்னும் இவங்களை விட்டு வைச்சிருக்கீங்க?. போலீசில் சொல்லி, முட்டிக்கு முட்டி தட்ட சொல்ல வேண்டியது தானே?" என்றான் ஆதங்கமாக

ஈஸ்வர் பேச்சினூடே, வருணாவை லவ் பண்ணுவதாக சக்தியிடம் சொன்னதை சொல்லி, பிறகு தனது ஆதங்கத்தையும் சொல்ல, முன்னதை கவனத்தில் கொள்ளாமல் பின்பு சொன்னதற்கு மட்டுமே பதிலளிக்கும் படி ஆனது.

"இத்தனை நாள் சும்மா தான் இருந்தான். இப்போ திரும்பவும் வம்பு பண்றான். இதுக்கு மேல் நாம சும்மா இருக்க போறதில்லை" என்றார் ராமன் முகம் இறுக

அதே நேரம் விஷ்ணுவும் வர, " என்ன எல்லாரும் வெளியிலேயே நின்னு பேசிட்டு இருக்கிறீங்க?ஏதாவது பிரச்சனையா?" என்றவன். " நீ எப்போ டா வந்த? வந்தவுடனே போன் பண்ண மாட்டியா?" என்று உரிமையாக கடிந்தும் கொண்டான்.

"சும்மா தான் டா பேசிட்டு இருக்கோம் " என்றவன். "உன் வேலையெல்லாம் முடிஞ்சுதா?" என்றான்

" நாளைக்கு கொஞ்சம் இருக்கு "

"நாமே சேர்ந்தே பார்க்கலாம் " என்றவன். " வரேன் மாமா " என்றவன். பைக்கிலிருந்தே இறங்கி, தள்ளிக் கொண்டே வாசலில் நிறுத்தி விட்டு, விஷ்ணுவுடன் பேசியபடி உள்ளே சென்று விட்டான். மறுநாளும் விஷ்ணுவுடன் தான் பொழுது சென்றது.

மில் திறக்கும் நாளன்று பரபரப்பாகவே இருந்தான் விஷ்ணு. அவனது கனவு நிஜமாகும் நாள் இன்று தானே!. அதிகாலையிலேயே ராஜூ குடும்பத்துடன் வந்து விட்டார். குளித்து தயாராகி, அரிசி ஆலைக்கு அனைவரும் வரவும் புரோகிதர் பூஜை செய்ய தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. ஹோமத்தின் முன் கோபால் மற்றும் வேணி அமர்ந்திருந்தனர்

கோசலை வருபவர்களுக்கு தர வேண்டிய பரிசு பொருட்களை எடுத்து வைக்க, லாவண்யா மற்றும் வருணா உடன் சேர்ந்து எடுக்க வைக்க ஆரம்பித்தனர்

ஹோமம் முடிந்து , குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைப்பதற்கான வேலைக்காக கோசலை எழுந்து செல்ல,

"வரூ " என்றாள் லாவி மெல்ல,

"என்ன டி?"

"நான் உங்க அண்ணாவுக்கு கிப்ட் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன். அதை நீ அவரிடம் கொடுத்திடுறியா?" என்றாள் பாவமாக

"ஏன்?நீயே கொடு"

"ம்க்கும். அப்படியே வாங்கிக்கிற மாதிரி தான்" என்றாள் நொடித்துக் கொண்டு

"நான் கொடுத்தால் சந்தேகம் வரும் லாவி. அதோட, அதை நீயே கொடுக்கிறதுல தான் எனக்கும் விருப்பம்"

"எனக்கு மட்டும் ஆசையில்லையா வரு. நான் கொடுத்தால் உங்க அண்ணா வாங்க மாட்டாங்களே!" என்றாள் ஆதங்கமாக

"தனியா கொடுத்தால் வாங்க மாட்டாங்க. ஆனால் எல்லாருக்கும் முன்னால் கொடுத்தால் மறுக்க முடியாதே!" என்றாள் வரு
 

Sirajunisha

Moderator
"எப்படி.. ?" என்றவளின் முகம் பிரகாசமாக, " என் செல்லக் குட்டி டி நீ" என்று வருவின் கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தமிட்டவள். பிறகு கலகலத்து பேசியபடி வேலையை தொடர்ந்தாள்.

குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் போதே, குத்து விளக்கு ஏற்ற முடிவெடுத்தனர்.

"ஏன் விஷ்ணு?. பெரிய ஆளுங்களை எல்லாம் இன்வைட் பண்ணியிறிக்கீங்கன்னு கோபால் சொன்னான். அவங்க யாரும் வர வேணாமா?" என்றார் ராஜூ

"அவங்க விழாவுக்கு வருவாங்க மாமா. அவங்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வோம். ஆனால் நம்ம குடும்பத்துக்கு ஆட்கள் வைச்சு மட்டும் தான் மாமா திறப்பு விழா. அவங்களை எல்லாம் கூப்பிட்டால்! நான் பெரியவனா? நீ பெரியவனானு ஈகோ பார்ப்பாங்க. விவசாயத்தையும் விவசாயிகளையும் நம்பி தொழில் பண்ண போறோம். யாரிடமும் சின்னதாக கூட மனக்குறை வைச்சிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.

என்னதான் சிலர் அரசியலில் பெரிய ஆளாக இருந்தாலும்! அவங்க அடிப்படையில் விவசாயிகள் தான். அதனால் எல்லாரையும் ஒரே மாதிரியே பார்த்திடலாம்னு இந்த முடிவு. விசயம் கேள்வி பட்டாலும் வேறு யாரையும், தன்னை விட முக்கியமா கருதலை என்கிறதே அவங்கஅவங்களுக்கு போதுமானதா இருக்கும் மாமா " என்று நீண்ட விளக்கத்தை கொடுத்தான் விஷ்ணு.

"தொழில் நெளிவு சுளிவெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்க! நிச்சயம் நீ மிகப் பெரிய ஆளா வருவ. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா " என்றார் நெகிழ்ந்து

"என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா " என்று டக்கென்று ராஜூவின் காலில் விழுந்து விட்டான். அவன் எதையும் சிந்திக்கவில்லை. அவரது உளமார்ந்த ஆசிர்வாதத்தில், " காலில் விழுந்து வணங்கு ' என்று உள்ளுணர்வு உணர்த்த காலில் விழுந்து விட்டான்.

"நல்லாயிருப்பா.. நல்லாயிருப்பா" என்றவர். அவன் தலையில் மற்றொரு முறை ஆசிர்வதித்து கன்னத்தில் தட்டி அனுப்பி வைத்தார்.

மூன்று குடும்பங்களும் , வேலைக்கு வந்த ஆட்கள் மட்டுமே இருக்க, குத்து விளக்கு ஏற்ற வருணாவை அழைத்தான் விஷ்ணு.

"வருணா வா டா " என்றான் விஷ்ணு கனிவாக

"நீயும் வா அண்ண " என்றவள். " லாவி நீயும் வா " என்று இருவரையும் அருகில் நிற்க வைத்துக் கொண்டு, குத்து விளக்கை ஏற்றிம் போது, லாவியின் கையையும் சேர்த்து பிடித்துக் கொண்டாள். பெரியவர்கள் கை தட்டி, தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

லாவண்யா உண்மையிலேயே நெகிழ்ந்திருந்தாள். ' கடவுளே, என்னுடைய விஷ்ணுவுக்கு தொழிலும் வாழ்க்கையும் என்னென்னைக்கும் ஏறுமுகமாகத்தான் இருக்கனும். நீ தான் கூடவே இருந்து எங்களை வாழ்க்கையில் கணவன் மனைவியாக சேர்த்து வைக்கனும். எங்க மூன்று குடும்பமும் சீக்கிரமே உறவால் ஒரே குடும்பமாக மாறனும்" என்று வேண்டுதலை வைத்தவள்.

வருணா நகர்ந்ததும். தள்ளி நின்றிருந்த விஷ்ணுவிடம், " இது உங்களுக்கான கிப்ட் " என்று சிறிய கவர் செய்த பெட்டி ஒன்றை அனைவர் முன்னிலையிலேயும் கொடுத்தாள்.

"எனக்கா? எனக்கெதுக்கு?" என்றான் விஷ்ணு திகைத்து

"நீங்க வர்றவங்களுக்கு நினைவு பரிசு கொடுக்கிறதில்லையா?அது போலத்தான் இது " என்றாள்.

விஷ்ணு அப்போதும் தயங்க, " வாங்கு அண்ணா" என்றாள் வரு அதட்டலாக

அவளது அதட்டலை கண்டு, ஈஸ்வரின் புருவம் ஏறி இறங்கியது. விஷ்ணு, அதன் பிறகு வாங்கிக் கொள்ள!

"அதில என்ன இருக்குன்னு பாருண்ண" என்றாள் வரு ஆர்வமாக

இதை கேட்டு, விஷ்ணுவின் இதயம் ஏகத்துக்கும் எகிறியது. 'என்ன தான் அவள் காதலை மறுத்திருந்தாலும்! இதில் பரிசாக, காதல் சின்னம் எதுவும் இருந்து விடுமோ என்று பயந்தான். ஏனென்றால்! வேணியிடமும் அவன் தந்தை கோபாலிடமும் அவர்களது மில் சம்மந்தமான விசயங்களை கேட்டு தெரிந்து கொள்வதை அவன் அடிக்கடி கேட்டிருக்கானே!. இது! அவன் மீது அவள் வைத்துள்ள நேசத்தை இன்னும் மறக்கவில்லை என்பதற்கான அறிகுறி தானே! அதனால் தான் விஷ்ணு பயந்ததும்.

"பிறகு பார்த்துக்களாம் வருணா" என்று விஷ்ணு நேரத்தை தள்ளிப்போட

"சின்ன பாக்ஸ் தானே ணா. பிரி. நானும் பார்க்கிறேன்" என்றாள் ஆவலாக

வரு, விஷ்ணுவுடனான சிறு பிள்ளைத்தனம் அங்கே பழக்கமான ஒன்று என்பதால்! யாரும் அவளை கண்டிக்கவில்லை. மறுக்க முடியாமல் விஷ்ணு அதை பிரிக்க,
சிறிய பெட்டியினுள், வெள்ளியிலான சிறிய கைகாப்பு இருந்தது.

"ஐ! காப்பு! " என்றாள் வருணா சந்தோஷமாக

"இது சாதாரண வெள்ளி காப்பு மட்டுமில்லை. இதுல முருகளோட வேல் பதிந்திருக்கு! விரதமிருந்து பூஜையில வைச்சு, வேல் பதிச்சு கொடுத்தாங்க. ரொம்பவும் விசேஷமானது. தொழில் செய்றவங்களுக்கு, கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை இருக்காது. வருமானமும் பெருகும்" என்றாள் லாவி

தன் மேல் கொண்டிருந்த அக்கறையில் மனம் கனிய, " ரொம்ப தேங்க்ஸ் " என்றான் மனமாற

"இப்போதே போட்டுக்கோ விஷ்ணு" என்றார் ராஜூ

கைகளில் போட உள்ளே நுழைக்க, சற்று சிரமம்பட, லாவி எந்த தயக்கமுமில்லாமல் அவனது கைகளை சற்றே அழுத்தி போட்டு விட்டவள். "மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றாள் சந்தோஷமாக

சின்ன புன்னகை சிந்தியபடி, ஆமோதிப்பாக தலையசைத்தான். அடுத்தடுத்து பெரியவர்களும் விளக்கேற்றி, விஷ்ணுவுக்கு பரிசளித்தனர்.

ஈஸ்வர், புதிய லேப்டாப் ஒன்றை பரிசளித்தான். ராஜூ ஐ போன் பரிசளித்தார். " எதுக்கு இவ்வளவு காஸ்டிலியா?" என்று விஷ்ணு தயங்க!

"இதெல்லாம் உன் தொழிலுக்கு உபயோகமா இருக்கும் விஷ்ணும். மறுக்காமல் வாங்கிக்கணும்" என்றார் ராதா அன்பான கண்டிப்புடன்.

அடுத்தடுத்து ஆட்கள் வர ஆரம்பித்து விட கோசலை, வருணா மற்றும் லாவண்யாவை வீட்டுக்கு போக சொல்லி விட்டார். இருவரையும், ஈஸ்வர் தான் காரில் அழைத்து சென்றார். வீடு வரும் வரை இருவரும் வழவழத்துக் கொண்டிருந்த போது,

"ஏன் வரு? மேற்கொண்டு என்ன செய்யப் போற படிக்கப் போறியா? இல்லை வெர்க் பண்ண போறியா?" என்றாள் லாவி.

"ரிசல்ட் வரட்டும் லாவி. அதுவரை இங்கே ஆடிட்டர் ஒருத்தரிடம் வேலைக்கு போன்னு அண்ண சேர்த்து விட்டிருக்கு தானே!. அதையே கன்டினியூ பண்ணிப்பேன். நீ என்ன செய்யப் போற?"

"வேர்ல்ட் டூர் போகப் போறேன்" என்றான் லாவி கிண்டலாக

"நிஜமாவா!" என்றாள் வரு உண்மையென நம்பி

இதை கண்ணாடி வழியே கண்ட ஈஸ்வருக்கு, ' எதை சொன்னாலும் நம்பிடுவியா?' என்று அவள் தலையில் கொட்டனும் போல கை பரபரப்பது.

"ஆமாம்"

"அப்போ நானும் வரேன் டி "

"சரி. நீயும் நானும் மட்டும் போகலாம்"

"வீட்டில நம்மை தனியா விடுவாங்களா?"

"மாட்டாங்கள்ள! அப்போ என்ன பண்ணலாம்?"

"வேணி பெரியம்மாவை கூட சேர்த்துக்கலாம்!"

"அவங்க உங்கம்மா வராமல் வர மாட்டாங்க. அதனால, நீ, நான் இரண்டு அத்தைங்க மட்டும் போகலாம்"

"கூடவே பெரியப்பாவை சேர்த்துக்கலாம் லாவி. அவங்க பிளைட்ல எல்லாம் போனதே இல்லை தெரியுமா?" என்றாள் பாவமாக

"அப்போ! உங்க அப்பா போயிருக்காரா? இல்லை தானே. ராமன் மாமாவையும் சேர்த்துக்கலாம்!'

"சரி. அப்போ ராதா அத்தையும் வரட்டும். எங்கம்மா பெரியம்மா எல்லாரும் இருக்கும் போது, நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணுவாங்க"

"எங்கம்மாவை விட்டுட்டு எங்கப்பா இருக்க மாட்டாரே?"

"அப்போ மாமாவும் வரட்டும். மாமா என்ன கேட்டாலும் எனக்கு வாங்கி தருவாங்க!" என்றாள் சந்தோஷமாக

இதையெல்லாம் கேட்டபடி வந்து கொண்டிருந்த ஈஸ்வருக்கு, தன்னை தானே கொட்டிக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது. நிஜமாக போவது போலவே இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சு மேலும் தொடர,

"விஷ்ணு அண்ணாவும் வரட்டும் லாவி"

"வேணாம் வரு. அவங்க பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. வேலை அதிகமா இருக்கும். அதனால என் அண்ணனும் உன் அண்ணணும் வேணாம்!" என்றாள் லாவண்யா முடிவாக

இதை கேட்டு, சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன். திரும்பி இருவரையும் முறைத்தான்.

"நீங்க எல்லாரும் ஊர் சுத்த போவீங்க? . நாங்க மட்டும் இங்கே இருக்கனும்?" என்றான் காண்டாகி

"ஐ! நான் ஜெயிச்சுட்டேன். எடு ஐநூறு" என்ற வரு. லாவியின் பேக்கிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்துக் கொண்டாள்.

ஈஸ்வர் புரியாமல் பார்க்க! " போ அண்ண!" என்று சிணுங்கியவள். விசயத்தை கூற ஆரம்பித்தாள். இது வழக்கமாக நடக்கும் ஒன்று!

யாராவது தனியாக இருக்கும் போது, இருவரும் தங்களுக்குள் உண்மை போலவே பேச ஆரம்பிப்பார். இதில் பல விசயம் சாத்தியமில்லாததாக இருக்கும். ஆனால் அதை பற்றி சிந்திக்காமல், உண்மை என நினைத்து கேட்டுக் கொண்டிருந்த நபர் இவர்களின் பேச்சினுள் நுழைந்து விட்டாள். ஜெயித்தவருக்கு தோற்றவர் பணம் தர வேண்டும்.

பேசும் முன்பே! இருவரும் பந்தயம் கட்டிக் கொள்வர். லாவி, தன் அண்ணன் இதை நம்ப மாட்டார் என நினைத்திருக்க! கடைசியில் நம்பியது போலத்தானே பேசி விட்டான். இதை லாவி சொன்னது போல! அடப்பாவிகளா? இதுவரை இப்படி எத்தனை பேரிடம் வம்பு வளர்த்திருங்க?" என்றான் ஆதங்கமாக

"டூ மாமாஸ், டூ அத்தைஸ், அம்மா, அப்பா, இப்போ நீ அண்ட் அவர் ப்ரண்ட்ஸ்" என்ற லாவியின் பட்டியல் நீண்டு கொண்டே போனது.

"போதும்! போதும்!. ரொம்ப லென்த்தா போயிட்டே இருக்கு!" என்று வடிவேலு பாணியில் சொன்னவன். வண்டியை மீண்டும் ஸ்டார்ட் செய்து அவர்களை வீட்டில் இறக்கி விட்டு கிளம்பி விட்டான். இரண்டுதையும் சேர விட்டால்! நம்மை பைத்தியமாக்கி விட்டுடுங்க" என்று புலம்பியபடி ஆலைக்கு கிளம்பி விட்டான்.

சிரித்தபடி உள்ளே வந்த லாவியின் போன் இசைத்தது. ராதா தான் அழைத்திருந்தார். அழைப்பை இணைத்து,

"என்னம்மா?" என்றாள்.

"உன்னை மட்டும் தனியா போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி விடேன்!" என்றார் பரபரப்பாக

மறுப்பு சொல்லாமல், செல்பி எடுத்து அனுப்பி வைத்து விட்டு, " என்ன விசயம்மா? போட்டோவெல்லாம் கேட்கிற?" என்றாள் வரு கொடுத்த காபியை கொடுத்தபடி

"நல்ல சம்மந்தம் வந்திருக்கு லாவி. வெளிநாட்டுல பெரிய கம்பெனியில் நல்ல போஸ்ட்ல இருக்கிறாராம். போட்டோ பார்த்தேன். நல்ல லட்சணமான பையன். உன்னை கேட்கிறாங்க. எங்க எல்லாருக்கும் விருப்பம்" என்றார் சந்தோஷமாக

"இப்போ என்னம்மா என் கல்யாணத்துக்கு அவசரம்?" என்றாள் லாவி அழுகையை அடக்கி,

"கல்யாணம் பண்ற வயசு உனக்கு வந்திடுச்சு லாவண்யா. மாப்பிள்ளை பார்க்கனும்னு தான் அப்பா சொல்லிட்டு இருந்தாங்க!. நல்ல இடம் வரும் போதே முடிச்சிடலாம்னு அப்பா பேசிட்டு இருக்காங்க. உனக்கு பிறகு ஈஸ்வருக்கும் பார்க்கனுமில்ல. எல்லாம் உன் நல்லதுக்கு தான் செய்றோம்" என்றவர். பிறகு பேசுவதாக அழைப்பை துண்டித்தார்.

மனதில் ஒருவன் நிறைந்திருக்க! மணக்கோலத்தில் இன்னொருவருடனும் அமருவாளா?.காலம் ! வைத்து காத்திருப்பது என்னவோ? பொறுத்திருந்து பார்ப்போம்..
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 10
லாவண்யா கலக்கமாக அமைந்திருப்பதை கண்டு, " என்னாச்சு லாவி?. ஏன் என்னவோ போல இருக்க?" என்றாள் வரு.

"அம்மா செல்பி எடுத்து அனுப்ப சொன்னாங்க. வரன் ஏதோ வந்திருக்காம்!. நல்ல இடம்! அப்பா பேசுறாங்கன்னு சொல்லி, அம்மா பீதியை கிளப்புறாங்க" என்றவளின் கண்கள் கலங்கி இருந்தது.

"பொண்ணுன்னு இருந்தால் கேட்க தான் செய்வாங்க லாவி. இதில பொண்ணு பார்க்கிறது! ஜாதகம் பொருந்தி வர்றது! இப்படின்னு வரிசையா ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் இருக்கு!. கவலைப்படாதே!. அதே நேரம் நீ இன்னொரு முறை அண்ணணிடம் பேசு!" என்றாள் வரு

"ம்ம். முயற்சி செய்கிறேன் " என்ற லாவி அத்தனை நேரம் இருந்த சந்தோஷம் குறைய எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

இங்கே! பெண்களை விட்டு விட்டு வந்த ஈஸ்வர் நேராக அரிசி ஆலையில் காரை நிறுத்தி விட்டு உள்ளே வர, ராஜூ மற்றும் ராதாவுடன் மதிக்கத்தக்க தோற்றமுடைய ஆண் பெண் இருவர் நின்று பேசிக் கொண்டிருந்னர். அருகில் கோபால் மட்டும் நின்றிருந்தார். அவர்களை பார்த்தபடியே அருகே வந்து நிற்க,

"இது தான் என்னுடைய மகன் ருத்ரேஸ்வரன் " என்று அறிமுகப்படுத்தினார் ராஜூ.

"ஹலோ " என்று மரியாதை நிமித்தமாக கை குலுக்கினான்.

"இவர் நமக்கு ஒரு வகையில் சொந்தம். பெயர் துரை. அது அவர் மனைவி மணிமேகலை. இவருக்கு பையன் இருக்கார். பெயர் வசந்தன். வெளிநாட்டு கம்பெனியில் நல்ல பொசிசனில் வேலையில் இருக்கார். நம்ம லாவண்யாவை பெண் கேட்குறாங்க" என்றபடி மணமகன் பற்றிய விவரம் அடங்கிய ரிசியூம் தாளை கொடுக்க, ஈஸ்வர் அதை பார்க்க ஆரம்பித்தான்.

"பையன்னு சொன்னதும்! நானும் சின்ன பையன்னு நினைச்சிட்டேன். உங்களுடைய பிஸ்னஸை பையன் தான் பார்த்துக்கிறாரா?" என்றார் துரை.

"ஆமாங்க. அதோட, தனியா டெக்ஸ்டைஸ் தயாரிக்க கம்பெனியும், ஏற்றுமதி வியாபாரமும் செய்யறான்" என்றார் ராஜூ

"எனக்கு ஒரு பொண்ணும் இருக்கான்னு சொன்னேனே. இப்ப தான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறாள். பையனுக்கு கல்யாணம் முடிந்ததும் இரண்டு மூனு வருசத்துக்கு பிறகு, மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருந்தோம். உங்க பையனை பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிட்டு போயிட்டுது. நாம ஏன் பெண் கொடுத்து பெண் எடுக்க கூடாது?. கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு தொடர்ந்து படிச்சுக்கட்டுமே?" என்றார் கேள்வியாக

பெண் கொடுத்து பெண் எடுப்போம் என்ற வார்த்தையில் ஈஸ்வர் திடுக்கிட்டு நிற்க, அதே நேரம் இவர்கள் பேசுவதை கேட்டபடியே ராமன் அங்கு வந்து நின்றிருந்தார்.

"இல்லைங்க. அது சரியா வராது. என் பையனுக்கு சின்ன வயசிலேயே ஒரு பெண்ணை பேசி வைச்சிட்டோம். என் பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும். என் பையனுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிடுவோம்" என்றார் ராஜூ. பதில் துரைக்கு என்றாலும்! பார்வை ராமனிடம் இருந்தது.

அவரும் ஆமோதிப்பாக தலையசைத்தபடி கோபாலை பார்க்க! அவரும் ஆமோதித்தார்.

இவர்களின் மௌன பரிமாற்றத்தை கவனிக்காமல், ராஜூ பேசியதை கேட்ட ஈஸ்வர்! அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான். எதற்கு இவ்வளவு அதிர்ச்சி? என்றெல்லாம் புரியவில்லை. மனது படபடப்பாக இருந்தது. பொண்ணை பேசி முடித்து விட்டாங்களா?இதை பற்றி நம்மிடம் பேசியதே இல்லையே?.இவங்களா முடிவெடுத்தால்! அதற்கு நான் ஒப்புக் கொள்ளனுமா?' என்று மனம் அங்கலாய்க்க

அதே கேள்வியை துரை கேட்டிருந்தார். "சின்ன வயசில முடிவு பண்ணதையெல்லாம் இப்போ பேச முடியுமா? . அதுக்குள்ள பசங்க மனசு மாறியிருக்கலாமே?" என்றார் துரை விடாமல்

'அதானே!' என்று நினைத்த ஈஸ்வரின் மனதில் வருணாவின் முகம் தன்னையறியாமல் வந்து போனது.

இப்படியே பேசிக் கொண்டிருந்தால்! யார்? என்ன? என்று கேள்வி எழும். அருகில் ஈஸ்வர் வேறு நின்றிருப்பதால்! பதிலும் சொல்ல முடியாது நிலை என்பதால்!

"என் பொண்ணுக்கு பேசறது என்றால் பேசலாம். மற்றபடி பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிறது எல்லாம் சரியா வராதுங்க!" என்றார் ராஜூ திட்டவட்டமாக

துரை மேலும் ஏதோ கூற வர, "என்னங்க ஒரு நிமிசம் இங்கே வாங்க" என்று தனியே அழைத்த, அவரது மனைவி மணிமேகலை! என்ன கூறினாரோ? தலையை தலையை ஆட்டிய துரை. கடைசியாக வந்து,

"சரிங்க. நாங்க பொண்ணை எப்போ பார்க்க வரலாம் சொல்லுங்க. முதலில் பையன் கல்யாணத்தை முடிச்சிடறேன். என் பொண்ணுக்கு யார் பிராப்தம்னு எழுதியிருக்கோ அதன்படியே நடக்கட்டும் " என்றார் நயந்து

" அப்போ சரிங்க, நாங்க சென்னை போயிட்டு நல்ல நாள் பார்த்து சொல்றோம். அப்போ பொண்ணு பார்க்க வாங்க!" என்று பேசி முறையாக அனுப்பி வைத்தனர்.

மறுநாள் ராஜூ தன் குடும்பத்துடன் கிளம்பினார். ஈஸ்வர் வெளிப்பார்வைக்கு இயல்பு போல இருந்தாலும்! உள்ளுக்குள் ராஜூ சொன்ன விசயமே ஓடிக் கொண்டிருந்தது. வந்தவுடன் இருந்த மகிழ்ச்சி தற்போது இல்லை.

காதல் என்று மகன் எதுவும் சொல்லி விடுவானோ?என்று பயந்து தான் ராஜூ, பெண் பார்த்து வைத்திருப்பதாக ஈஸ்வரிடம் சின்ன கோடிட்டு காட்டியிருந்தார். ஈஸ்வருக்கோ, பரிதவிப்பான நிலை. எதனால் இப்படி?. அவனுக்கு என்ன வேண்டும் என்று கூட சொல்லத் தெரியவில்லை. உள் ஜூரம் போல மனம் சோர்ந்து கிடந்தது.

லாவண்யா மற்றும் ஈஸ்வர் இருவருமே அவரவர்களுக்கான யோசனையில் உழன்றபடியே பெற்றோருடன் சென்னை புறப்பட்டிருந்தனர்.

மாப்பிள்ளை வசந்தன் வேலை, குடும்பம் பற்றி விசாரித்து விட்டு திருப்தி என்றதும் பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெண் பிடித்து விட, அன்றே நிச்சயதார்த்த நாள் குறிக்கப்பட்டது. அடுத்த பதினைந்து நாளில் பெண் வீட்டில் உறவுகள் முன்னிலையில் நிச்சயித்து கொள்வதாகவும், பிறகு மூன்று மாதங்கள் கழித்து திருமணம் என்று பெரியவர்களால் நாள் குறிக்கப்பட்டது.

நிச்சயதார்த்த செய்தியை கேள்விபட்டு, வீட்டிலுள்ளவர்கள் மகிழ்ச்சியில் இருக்க! வருணா தான் தவித்துக் போனாள். உடனே லாவண்யாவுக்கு அழைத்து விட்டாள்.

அழைப்பு இணைக்கப்பட்டதும். "என்ன லாவி? நான் கேள்விபட்டதெல்லாம் உண்மையா?. வீட்டில் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்களா?" என்றாள் ஆதங்கமாக

"ம்ம் " என்றவளின் குரலில் உயிர்ப்பே இல்லை.

"உனக்கு பிடிக்கலைன்னு மாமாவிடம் சொல்லியிருக்கலாமே?" என்றாள் ஆதங்கமாக

"என்னோட விருப்பத்தை கேட்கவே இல்லை வரு. நல்ல இடம்னு அவங்களே பேசி முடிச்சிட்டாங்க" என்றாள் வருத்தமாக

"உங்க அண்ணன் கூட உன் விருப்பத்தை கேட்கலையா?" என்றாள் கோபத்தை அடக்கி

"அண்ணணிடம் கூட இந்த பையனை முடிக்க போறோம்னு தகவல் போல சொல்றாங்க!. அண்ணன் என் முகத்தை பார்க்குது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. அமைதியா நின்னுட்டேன்."

"உனக்கும் இதில் விருப்பம்னு நினைச்சிருப்பாங்களோ?"

"அப்படித்தான் நினைக்கிறேன்!"

"இப்போ என்ன செய்யப் போற லாவி?. உங்க வீட்டில் விஷ்ணு அண்ணண் மேல தான் விருப்பம்னு சொல்லிப்பாறேன்"

"ம்கூம். சொன்னால் விஷ்ணுவிடம் விசாரிப்பாங்க. ஆனால் அவருக்கு என் மேல எந்த விருப்பமுமில்லைனு தெரியவரும். எல்லாருக்கும் தர்ம சங்கடம்" என்றாள் நிதர்சனம் புரிந்தவராக

"ம்ம் " என்றாள் வருவும் ஆமோதிப்பாக. மேற்கொண்டு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

"கல்யாணத்துக்கு மூனு மாசம் இருக்கு!. அதுக்குள்ள ஏதாவது வழி கிடைக்கும் பார்க்கலாம் " என்றவள். பொதுவான விசயங்களை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

நிச்சயதார்த்தத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சோலையூரிலிருந்து இரண்டு குடும்பங்களும் கிளம்பி வந்து விட்டனர். வீட்டிலேயே நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்! வேலைகள் வரிசைகட்டி இருந்தன.

வந்தவுடனேயே வேலைகளை கையிலெடுத்துக் கொண்டனர் இரு குடும்ப பெரியவர்களும். விஷ்ணு, ஈஸ்வரோட வெளி வேலைகளில் இணைந்து கொள்ள!. வருணா தான் திணறி கொண்டிருந்தாள்.

ராதிகாவுடயே நெருங்கிய சொந்தங்களின் பகட்டான தோற்றத்தை கண்டு, லாவண்யாவுடனே நிற்க வேண்டியிருந்தது. இதில் லாவண்யா முகத்தில் வருத்தமோ கலக்கமோ இல்லாமல், மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு, குழப்பமே மிஞ்சியது. இதை பற்றி தனியே விசாரிக்கவும் முடியவில்லை.

அன்று மாலை நிச்சயதார்த்தம் . காலையில் ராதாவிடம் வந்து நின்றாள் வரு, " அத்தை" என்றபடியே

"என்ன வரு?"

"அத்தை, நான் குளிக்கனும் எங்கே குளிக்கிறது?. எல்லா பாத்ரூமும் ஃபுல்லா இருக்கு" என்றாள் சிணுங்கலாக

காலை டிபனை செய்து கொண்டிருந்த கோசலை, " அஞ்சு மணிக்கே எழுப்பி விட்டேன்ல! அப்போவே எழுந்து குளிக்காம! எட்டு மணிக்கு வந்து நிற்கிற?" என்றார் அதட்டலாக

"அம்மா, நைட்டெல்லாம் தூங்கவே முடியலை மா. எவ்வளவு நேரம் டிவி சத்தம் கேட்டுச்சுன்னு உனக்கே தெரியும்ல. " என்றாள் ஆதங்கமாக

"இடத்துக்கு தகுந்தது போல நடந்துக்க தெரியனும் வரு. சும்மா வெட்டி பேச்சு பேசக் கூடாது " என்று கண்டித்தார் வேணி.

"பெரியம்மா" என்றாள் சலுகையாக

"நீ போய் ஈஸ்வர் அறையிலிருக்கிற பாத்ரூமில் குளிச்சிட்டு வந்துடு " என்றார் ராதா சட்டென்று

"நானா! அங்கேயா?" என்றாள் அதிர்ந்து

"ஆமாம் வரு. ஈஸ்வர் வெளியில் போயிருக்கான். வர ரொம்பவே நேரம் ஆகும். நீ அங்கேயே குளிச்சிட்டு, ரெடியாகி வந்து விடு. நகையையும் கையோட எடுத்துக்கோ " என்று விட்டு, மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு, மாடியேறி சென்றாள். ஈஸ்வரின் அறைக்கதவை திறக்கும் போது, அவளறியாமல் உடல் சிலிர்த்தது. மெல்ல அடி எடுத்து உள்ளே வைத்தவள். சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். டைல்ஸ் தரையின் பளபளப்பை மேலே சீலிங் பொருத்தப்பட்டிருந்த லைட்டின் வெளிச்சத்தில் கூடுதலாக தெரிந்தது.

ஏசி அணைக்கப்பட்டிருந்தாலும்! அதன் குளுமையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருந்தது அறை. க்குவின் சைஸ் கட்டில மெத்தைகளுடன் போடப்பட்டிருந்தது. அதனையடுத்து வார்ரோப். தனித்தனியாக கதவுகளுடன். ஒரு கதவில் மட்டும் முழுமையாக கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது.

ஏதோ மெல்லிய நறுமணமுடன் உள்ளே நுழைந்ததிலிருந்து வீசிக் கொண்டிருந்தது. இது ருத்ரனுடைய அறை என்று நினைக்கும் போதே! அடி வயிற்றில் பட்டாம்பூச்சு பறந்தது. நன்றாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள். தன்னை சமன் செய்து கொள்ள முயன்றாள். ஓரளவு அதில் வெற்றியும் பெற, கொண்டு வந்து துணிகளை ஓரமாக வைத்து விட்டு, டவல் சோப் சகிதம் பாத்ரூமில் நுழைந்து கொண்டாள்.

குளித்து,ஈரம் போக வேறுடை மாற்றிக் கொண்டு வந்தவள். தலையை ஈரம் போக துடைத்து, தலை சீவி, இரண்டு பக்கமும் சுருட்டி பஃப் வைத்து ஹேர்பின் குத்தியவள். பின்னால் முடியை தளர்வாக பின்னி ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டாள்.

அடுத்து, ராதிகா கொடுத்த புடவையை கையிலெடுத்தாள். மஞ்சள் நிற பட்டுப்புடவை, கருநீல நிற பார்டர். உடல் முழுவதும் பட்டு ஜரிகை பளபளவென ஜொலித்தது. அடுத்து இரண்டு கைகளிலும் வளையல்கள் அணிந்தவள். காதிற்கு குடை ஜிமிக்கி போட்டு விட்டு, கழுத்திற்கு ஆரத்தை அணிய முயன்று கொண்டிருந்தவள். ஒரு வழியாக நிமிர, எதிரே இருந்த கண்ணாடியில் ஈஸ்வர் இவளை பார்த்தபடியே உள்ளே வருவது தெரிந்தது.

திகைத்து இவள் திரும்ப! ஈஸ்வரும் உள்ளே வந்து விட்டான். நிச்சயமாக அங்கே வருணாவை அவன் எதிர்பார்க்கவில்லை. உள்ளே வரும் போது, ' யாரது ?என் அறையில்!. பர்மிஸின் கேட்காமல் எப்படி வந்தாள்?' என்று கோபமாகத்தான் உள்ளே நுழைந்தான். முகத்தை அவன் கவனித்திருக்கவில்லை.

திரும்பியதும் வருணாவை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் அதிர்ந்த முகமே காட்டியது. தலை முதல் பாதம் வரை அவளது பார்வை தொடர, கைகளை பிசைந்தபடி அவஸ்தையாக நின்றாள். மீண்டும் அவள் முகத்தில் பார்வை நிலைக்க விட்டவன். அப்படியே நின்று விட்டான்.

எதுவும் பேசவில்லை! தேடிய பொருள் கை சேர்ந்த உணர்வு!. அப்படியே நிற்பதை கண்டு, அங்கேயிருந்து செல்ல, வாயிலை நோக்கி வந்தாள். ஈஸ்வரும் அங்கேயே நிற்பதால்! அவனை இடிக்காமல் பக்கவாட்டில் குறுக்காக செல்லும் நிலை. அதே போன்று நகர,

அவனை நெருங்கி வரும் வரை பொறுமை காத்தவன். மிக நெருங்கமாக வந்தவன். வாயில் பக்கம் கை வைத்து அவளை நகர விடாமல் நிறுத்தியிருந்தான்.

வருணா திகைத்து பார்க்க! " என் அறையில் என்ன பண்ற?" என்றான் மெதுவாக

"அத்தை தான் குளிக்கனும்னு சொன்னதும். இங்கே வந்து குளிக்க சொன்னாங்க" என்றாள் படபடப்பாக

"குளிச்சிட்டியா? "

"ம்ம்ம்"

"சாப்பிட்டியா?"

"இல்லை " என்பது போல மறுப்பாக தலையசைத்தாள்.

"அம்மாவிடம் பூ வாங்கி கொடுத்திருக்கேன். வாங்கி வைச்சுக்கோ" என்றான் கிசுகிசுப்பாக

தலையை ஆமோதிப்பாக ஆட்டி வைத்தாள். வருணாவுக்கும் அவனை விட்டு நகர தோன்றவில்லை. இருவரையும் கட்டி வைத்தது போல மாய வலையில் சிக்கி நின்றிருந்தனர்.

"இந்த டிரஸ் நல்லாயிருக்கா?" என்றாள். ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக

"ம்ம்ம் " என்றவன். கொசுவத்தை சரியா வைக்கலையா?" என்றான்.

அவள் குனிந்து பார்க்க! அவளது தலை அவன் புஜத்தில் உரசியது. " இரு நான் சரி பண்றேன்" என்றவன். சற்றும் யோசிக்காமல் அப்படியே குத்துகாலிட்டு அமர்ந்து, நன்றாக இருந்ததை மீண்டும் அதே போன்று வைத்தவன். " ம்ம். இப்போ ஒ.கே " என்றபடி எழுந்தவன். இப்போது நேருக்கு நேராக அவளிடம் நெருங்கி நின்றான்.

ஈஸ்வரது செயலில் அதிர்ந்திருந்தவள். மீண்டும் அவனது நெருக்கத்தில் திகைத்து பார்க்க! அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"எ.. என்ன?" என்றாள் திணறி

இப்போது அவளது இரு பக்கமும் கைகளை வைத்து அவளை நகர விடாமல் நிற்க,

"எ.. என்.. என்ன பண்றீங்க?" என்றவளின் குரல் வெளியே வரவில்லை. (வெறும் காத்து தான் வருது மொமெண்ட்)

நெற்றியோட நெற்றி முட்டி, கண்களை மூடி அப்படியே நின்றிருந்தான். அவனுக்கே உரிய மணத்தை ஆழ்ந்த் சுவாசித்தவன்.
வருணாவில் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

சற்று பொருத்து பெருமூச்சு விட்டபடி அவளை விட்டு நகர்ந்தவன். அவளது முகத்தை பார்த்து, முகத்தில் வந்து விழுந்த ஒற்றை முடியை காதோரம் ஒதுக்கி விட்டபடி,

"லாவண்யா கூடவே இரு. சொந்தக்கார பசங்க வந்திருக்காங்க. தேவையில்லாமல் பேச வருவானுங்க. லாவண்யா கூட இருந்தால் கிட்ட வர மாட்டானுங்க" என்றவன்.

"நீ போ " என்றபடி நகர, அவனது செயலில் இதுவரை மூச்சை இழுத்து பிடித்து நிறுத்தியிருந்தவள். அடித்து பிடித்து அங்கிருந்து ஓடியிருந்தாள்.

ஈஸ்வரோ, கட்டிலில் வந்து அப்படியே படுத்து விட்டான். மீண்டும் மீண்டும் அவனறையில் அவள் நின்றிருந்த தோற்றமே மனக்கண் முன் வந்து நின்றது. அதே நினைவில் மூழ்க இருந்தவனை ராஜூவின் அழைப்பு நடப்புக்கு கொண்டு வந்திருந்தது.

கீழே விஷ்ணு, எதோ வேலையாக வாசலை நோக்கி சென்று கொண்டிருக்க, " மாம்ஸ்" என்ற லாவியின் அழைப்பில் நின்று திருப்பி பார்த்தான்.

"இங்கே வாங்களேன்" என்றாள் கையசைத்து

அவளருகே போய் நிற்க, " எனக்கொரு ஹெல்ப் வேணும். அதை உங்களால மட்டும் தான் செய்ய முடியும்" என்றாள் பீடிகையாக

"என்ன?"

"இதை இந்த அட்ரஸில் இருக்கிறவங்க கிட்ட கொடுத்துட்டு வரணும். அதுவும் இப்பவே " என்றாள். பேக் செய்யப்பட்ட பை ஒன்றை காண்பித்து,

"இப்பவா?"

"ஆமாம். ப்ளீஸ் மாம்ஸ் " என்றாள் கெஞ்சலாக

அவன் அப்போதும் யோசிக்க, " என்னோட லவ்வை தான் நீங்க ஏத்துக்கலை. இது கூட எனக்காகை செய்ய மாட்டீங்களா?" என்றாள் சோகமாக

அவசரமாக சுற்றி முற்றியும் பார்த்தவன். "உனக்கு கல்யாணம் ஆகப் போகுது. இன்னுமும் இப்படி பேசறது தப்பு " என்றான் கண்டிக்கும் விதமாக

" நிச்சயதர்த்தம் கூட இன்னும் நடக்கலை. அதனார் என்னை கட்டுப்படுத்த முடியாது. மனசு என்ன சட்டைனு நினைச்சீங்களா? கழட்டி கழட்டி மாத்த! " என்றவளின் தொண்டையடைத்தது.

"இது தப்பு மா " என்றான். அவளது அழுகை கண்டு ஆதூரமாக

"உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே. விடுங்க. எனக்கு இந்த சின்ன ஹெல்ப் மட்டும் பண்ணுங்க" என்றாள்.

பெருமூச்சு விட்டவன். "சரி கொடு " என்றபடி வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

நேரம் செல்ல, மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டனர். அப்போது கோபாலனுக்கு போன் வர, அவர் பதட்டமாவதும்! பிறகு ராமனிடம் ஏதோ சொல்வதும் தெரிந்தது.

ராஜூவும் ஈஸ்வரும் வந்தவர்களை வரவேற்க, " ராஜூ, ஒரு முக்கியமான வேலை பா. ஆட்கள் வந்து நிற்கிறாங்க. நாங்க போய் பார்த்துட்டு வந்திடுறோம்" என்று வாய்க்கு வந்ததை சொல்லி விட்டு அங்கிருந்து இருவரும் கிளம்பி விட்டனர்.

"யார்? என்ன?" என்றதற்கு பதில் சொல்ல அங்கே இருவருமே இல்லை.

இதை கண்டு, லாவண்யாவின் முகத்தில் மென்னகை பூத்தது. நிச்சயதிற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்க! கவலைப்படாமல் சிரித்து கொண்டிருக்கிறாளே! காரணம் என்னவோ? பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Status
Not open for further replies.
Top