எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் நெஞ்சங்கள் கதை திரி

Status
Not open for further replies.

priya pandees

Moderator
அத்தியாயம் 1
"திருவும் கல்வியும், சீரும் தழைக்கவும், கருணை பூக்கவும், தீமையைக் காய்க்கவும், பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!" ௭ன சத்தமாக உச்சரித்து அந்த அரசமர பிள்ளையார் முன் இந்த வயதிலேயும் 9 உக்கிப்போட்டு முடித்தே தன் பேத்தியை பார்வையால் தேடி திரும்பினார் வள்ளிமணாளன்.

அந்நேரம் "என்ன வள்ளி இன்னைக்கு என்னைய கூப்பிடாமயே வந்துட்ட" என்றவாறு அவரைத்தேடி வந்தவராக மறைமாணிக்கம் கேக்க.

"இல்ல மாணிக்கம் என் பேத்திய 108 நாள் இந்த பிள்ளையாரப்பனுக்கு குடம் தண்ணி ஊத்தி அபிஷேகம் பண்ணு சீக்கிரமா நல்ல மாப்பிள்ளையா அமையட்டும்ன்னு கூட்டியாந்தேன். ஆத்துல தண்ணி எடுக்க போயிருக்கா. அஞ்சு மணிக்கு பிள்ளைய ஒத்தைல அனுப்ப வேண்டாம்ன்னு நானும் கூடவே வந்துட்டேன்"

"ஓ பேத்திக்கென்ன தங்கமான புள்ளவே, அவள கட்டிக்க ௭வனுக்கு கசக்கும். நல்ல விவரமான புள்ள இடத்துக்கு தகுந்தமாறி பொருந்தி போய்டுவா. விவரமா இருந்தா தான்டே இப்ப உள்ள காலத்துல பொம்பள பிள்ளைக கட்டிகொடுத்த இடத்துல காலந்தள்ள முடியும்"

"அது சரி கேள்வியும் நீயே, பதிலும் நீயேன்னு எல்லாத்தையும் நீயே சொல்லிட்ட. எப்டியோ சீக்கிரம் அந்த புள்ளைக்கு நல்லது நடந்தா சரி. எனக்கும் வயசாகிட்டே போதுல்ல, ௭னகப்றம் பாக்க ஆளில்லலப்பு"

"உனக்கு வயசாகுதுன்ட்டு கல்யாணம் பண்ணாத, அவளுக்கு இப்ப என்ன வயசாகுது?"

"வர்ற ஆவணியோட 21 முடியுது"

"அப்ப சரி இப்ப ஆரம்பிச்சாதான் 22ல முடிக்க சரியாயிருக்கும், நானு ௭ன் புள்ள காதுல போட்டு வைக்கே"

"அட நீ வேறப்பா, 108 நாள்ல ஒரு நல்ல வழி காட்டிருன்னு தான காலையிலேயே பிள்ளைய கூட்டிட்டு இங்க வந்து நிக்குறேன்".

"அபிஷேகம் பண்ணி, சீக்கிரமா உன் பக்தன் வள்ளிமணாளன் வேண்டுதல்படி எனக்கொரு மணாளன் கொடுத்துடுன்னு 21 சுத்தும் சுத்திட்டேன் தாத்தா” என வந்து நின்றாள் ‘கயமலர்க்கன்னி’.

"சரிடாமா, இரு ரெண்டு நிமிஷம் கிளம்பிறலாம்".

"நீ பேசிட்டு மெதுவா வா தாத்தா, இப்பதான் நல்லா விடிஞ்சுட்டே வேலைக்கு போறவுகளு கிளம்பிட்டாக, ரோடு பூராவும் ஆள் நடமாட்டம் வந்துருச்சுல்ல, அதனால நா போயிடுவேன்".

"அதானடே அந்தப்புள்ள பொறந்து வளந்த ஊரு, எதுக்கு பயப்படுதவேன். இப்படி பயந்து தான் 12ஆம் கிளாஸ்க்கு மேல படிக்க அனுப்பாமலும் விட்டுட்ட. நீ பாத்து போமா, உன் தாத்தன நா பத்ரமா கூட்டியாறேன்".

"சரிங்க தாத்தா" என சிரித்துக் கொண்டவள், காலையிலேயே குளித்ததால் தளர்வாக முனிக்கொண்டை மட்டுமிருந்ததால் முன்முடி முகத்தில் விழ ஒதுக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்திடம் வள்ளி, "என்னத்த அப்படிபாக்குறவே, அவள கண்டதே இல்லாதமாறி?".

"நம்ம கிரமத்துல இன்னைக்கும் தாவணியோட சுத்துற பிள்ளைகள விரல் விட்டு எண்ணிடலாம்டே. உன் பேத்தியப்பாரு மஹாலக்ஷ்மிடே அவ. இவள கட்டிக்க குடுத்துல்ல வச்சுருக்கனும், பாரு இதுக்காகவே அவளுக்கு சீக்கிரம் வரன் கூடி வரும் விசனப்படாத".

"உன் வாக்கு பளிக்கட்டும்யா, சரி வா, வவுறு காந்துது டீ குடிப்போம்".

வீட்டுக்கு சென்று கொண்டிருந்த கயமலர்க்கன்னியோ, எதிரில் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தவர்களிடம், வழக்கடித்துக் கொண்டே சென்றாள், "என்ன மல்லிகாக்கா நெத்திலி கருவாடா? வாசன சட்டியத் தாண்டி இங்க வர வருதே" ௭ன்க.

"மல்லி கைமணம் அப்படியாக்கும்" ௭ன்றவாறு கடந்து சென்றாள் அந்த மல்லியாகப்பட்டவள்.

"என்ன ஐயம்மா பாட்டி ஓ சோடிய இன்னைக்கு காணும்".

"அந்த ஆளுக்கு கரண்ட காலுல வலின்னு வூட்டுலயே படுத்துக்கிச்சு",

"நீ கூட இருந்து புருஷன கவனிக்காம வேலைக்கு கிளம்பிட்டியாக்கும்".

"ரெண்டு பேரும் ஊட்டுல இருந்துட்டா ராவுக்கு ஏது கஞ்சி".

"அதுவும் சரிதான், தாத்தாக்கு மதிய கஞ்சி ௭ன் தாத்தாகிட்ட குடுத்துவிட்றுதேன் நீ வேலைய முடிச்சே வா கலங்காம".

"சரி த்தா" ௭ன அவள் தாடையை தடவி விட்டு சென்றது ஐயம்மா பாட்டி.

"நீ என்ன கன்னி காலங்காத்தால இந்தப் பக்கம்" ஒரு பெரியவர் கேக்க.

"அது ஒன்னுமில்ல பெரியப்பா, கல்யாண கட்டிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன், அதான் ஒரு நல்ல மாப்ள பாத்துக்குடுன்னு, நம்ம பிள்ளையாரப்பாவ கேட்டுக்கிட்டு வாரேன்".

"உனக்கென்னத்தா தங்கத் தாரக, ஒன்ன கட்டிக்க எவனுக்கு கசக்கும்" இன்னொரு தாத்தா சொல்ல.

"அப்ப நீ கட்டிக்கிடுதியா?".

"என் பொஞ்சாதிட்ட ஒரு வார்த்த கேட்டிட்டு கட்டிக்கிடுதேன், அவ சொல்லாம நா ௭துவுமே செய்ய மாட்டேனாக்கும்" ௭ன்றார் மிச்சமிருக்கும் 22 பல்லையும் காட்டி.

"எடு வெளக்கமாத்த. எந்துச்சு நிக்க குச்சி தேவப்படுது, இந்த வயசுல ரெண்டாவது கல்யாணம் கட்டிக்கிட்டு என்ன செய்யப் போறீரு" அருகில் அவரது மனைவி அவர் குமட்டில் இடிக்க, சிரித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் நம் கண்ணி.

திருவாடிமலையூர்,
திருநெல்வேலி-தூத்துக்குடி பைபாஸில் அமைந்திருக்கிறது. கிராமமென்ற சேர்க்கையிலயும் வராது நகரமென்ற சேர்க்கையிலயும் வராது. பைபாஸில் இருப்பதாலும் , விமான நிலையம் அருகில் இருப்பதாலும் கொஞ்சம் பேர்போன ஊர், இங்கிட்டு திருநெல்வேலிக்கும் 1/2 மணி நேரம், அங்கிட்டு தூத்துக்குடிக்கும் 1/2 மணி நேரம். அதனால் இளவட்டங்கள்லாம் "எங்க ஊர் எவ்வளவு பெரிய ஊர் தெரியுமா"ன்னு பில்டப் பண்ணிக்குவாங்க. இப்பயிப்பதான் கொஞ்சம் டெவெலப்பாகிட்டுருக்கு.

சுத்துவட்டாரத்த நம்பி, ஒரு பெரிய மனுஷன் மொதமொறையா டவுன் சைடுல இருக்குறமாதிரி 2,3 ஸ்கிரீன், புல்ஏசி இருக்குறாப்ல தியேட்டர் திறக்க போறாரு, அதே பெரிய மனுஷன் அவரோட பையனுக்கு, புது சூப்பர்மார்க்கெட் 5மாடி வச்சது கட்டி குடுத்துருக்காரு, 'அனைத்துப் பொருட்களும் இங்கு வாங்கலாம்'னு 6மாசம் முன்ன தான் ஹன்சிகா வந்து திறந்து வச்சுட்டுப் போச்சு. இது ஒரு பக்கம்னா காட்டு வேலை, தீப்பெட்டி ஆபீஸ், பீடி சுத்துறது, 100 நாள் வேலைன்னு போற மக்களும் இங்குண்டு, இப்படி கிராமம்ன்னு சொலிக்கிறவுங்களுக்கு கிராமம், நகரம் சொல்லிக்கிறவங்களுக்கு நகரம்.

அந்த ஊரில் வளர்ந்த பெரிய குடும்பங்களுள் ஒன்று தான் மறைமாணிக்கம்-செல்லப்பேச்சி குடும்பம். மாணிக்கம் அந்தக் காலத்திலேயே அந்த ஊரில் முதன் முதலில் தீப்பெட்டி ஆபிஸை நிறுவி 4 பேருக்கு வேலை கொடுத்தவர். அவர்களுக்கு இரண்டு மக்கள் பூவேந்தன், பூங்குழலி. பூங்குழலியை திருநெல்வேலி காரரான மருதவிநாயகம் என்பவருக்கு கட்டிவைத்ததால், இரண்டு பெண்பிள்ளைகளோடு, இப்போது திருநெல்வேலியில் வசிக்கிறார். மகன் பூவேந்தன் - பானுச்சந்திரா என்பவரை மணமுடித்து 3 பிள்ளைகள் ௭ன தாத்தா பாட்டியுடன் ஒன்றாக இருக்கின்றனர்,

பூவேந்தன், அவர் தான் தியேட்டர் கட்டிக் கொண்டிருப்பது. அவரது 2வது மகன் பேரறிவாளன், பி.காம், முடித்து 2 வருடம் சென்னையில் வேலை பார்த்து வந்தவன் கடந்த வருடம் அத்தை மகள்(பூங்குழலியின் மகள்) இந்திராணியுடன் கல்யாணம் முடியவும், ஊரிலேயே சொந்த தொழில் செய்கிறேன் என சொல்லவும், சூப்பர் மார்க்கெட்டை கட்டிக் கொடுத்து உக்கார வைத்து விட்டார்.

அவரது மூன்றாவது மகள் மதியொளி பிஎஸ்சி மேக்ஸ் பட்டதாரி, உள்ளூர் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து அங்கு வேலைக்கு வந்த மற்றொரு எம் எஸ் சி பிசிக்ஸ் பட்டதாரியான குமரகுருவை காதல் கல்யாணம் கட்டிக் கொண்டு தவரூபன் என மூன்று வயது மகனுடன், இந்த ஊரிலேயே தாய் தந்தை வீட்டுப் பக்கத்திலேயே குடியிருக்கிறாள்.

அவர்கள் வீட்டில் ஒட்டாத கேரக்டர் ஒன்று உண்டு என்றால் அது ‘மாறன்வழுதி’, பூவேந்தனின் மூத்த உறுப்புடாத பிள்ளை, இவன் ஐந்தாம் கிளாஸ் படிக்கையில் 5 பாடத்திலும் பெயில் ஆயிட்டான்னு கிளாஸ் வாத்தியார் அப்பாவை கூட்டிட்டு வா'ன்னு சொல்ல, ஸ்கூலுக்கு வந்த பூவேந்தன் வாத்தியார் மானாவாரியா திட்டுனதுல கோபப்பட்டு எல்லார் முன்னாடியும் அவனை அடி வெளுத்து விட்டார். இனி அந்த கிளாஸ்ல எப்படி என்னால நுழைய முடியும் என் மானமே போச்சு என்று போர்க்கொடி தூக்கி ஸ்கூல் பக்கமே ஒதுங்காம இருந்துவிட்டான்.

"அடுத்த வகுப்பில் சேர்ந்து படின்னு" சொன்னதற்கும், "அது அதவிட இன்னும் பெருத்த அவமானம்ன்னு" படிக்க மேல் வலிச்சு அஞ்சாம் கிளாஸ் பெயிலாகி சுத்தி வரும் ஒரு மேதாவி. ஆனா அன்னையோட பூவேந்தன் இவன அடிக்கிறத விட்டுட்டார். இப்ப "அடிச்சே வளர்த்திருக்கனுமோ"ன்னு ஃபீல் பண்ணிட்டுருக்காரு.

மறைமாணிக்கம் தாத்தா வள்ளிமணாளன் தாத்தா வோடு டீயை குடித்து முடித்து, நாட்டு நடப்பை பகிர்ந்து கொண்டு வீடு வர 9 மணி ஆகியது. இவர் நுழைய மதியொளி வெளியேறினாள், "சாப்பிட்டியாமா? மாப்பிளய எங்க?" ௭ன்றார் ௭திர்பட்ட பேத்தியிடம்.

"இன்னைக்கு அவரோட சப்ஜட் எக்ஸாம் தாத்தா, அதனால சீக்கிரமா சாப்பிட்டு கிளம்பிட்டாரு. நானும் சாப்ட்டேன். நீங்களும் போய் சாப்பிடுங்க, நா கெளம்புறேன்" என பதிலை எதிர்பாராமல் நடந்து விட்டாள்.

இவர் சென்று டைனிங் டேபிளில் அமர, பானு பரிமாற வர, "கொஞ்ச நேரம் ஆகட்டும்மா, நெஞ்சு எரிச்சலாயிருக்கு".

"இந்நேரத்துக்குள்ள எத்தன டீ, எத்தன வடை உள்ள போச்சோ? செரிச்சாத்தான அடுத்து பசிக்கும்" என்றார் செல்லப்பேச்சி வெண்பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே.

"எங்க நீ சாப்பிடுறதப் பாத்தா எனக்கு செரிச்சாலும் சாப்பிட ஒன்னுமிருக்காது போலயே".

"உங்கள மாதிரியா? வெட்டி கதையா பேசி உடம்பு வளையாம கடக்கேன், அஞ்சு மணியிலயிருந்து எம்புட்டு வேலை பாத்திருக்கேன், என் சாப்பாட நீங்க பேசாதீக" ௭ன்றார் டென்ஷனாக பாட்டி.

பானுசந்திரா இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க. "ம்க்கும்" என கணைத்துக்கொண்டு வந்தமர்ந்தார் பூவேந்தன்.

"ஏன் உன் புருஷனுக்கு நாங்க பயந்துருவோமாக்கும். வரும்போதே கணைச்சுகிட்டு வரான். தொண்டை சரியில்லனா விக்ஸ் வாங்கி போட சொல்லு, கிச்சு கிச்சே இருக்காதாம்" என்றார் மெதுவாக பானுவிடம்.

"அத சத்தமா அந்தப்பக்கம் திரும்பியே சொல்லலாம்ல" என்றார் செல்லபேச்சி சத்தமாக.

"அடி பாதகத்தி கத்தி தொலைச்சுட்டாளே" என முனங்கி, "என்னப்பா தியேட்டர் வேலையெல்லாம் எந்தளவுல இருக்கு. எப்ப திறப்பு விழா வைக்குற ஐடியால இருக்க" ௭ன திசை திருப்பினார்.

"ஏன் ப்பா, சும்மாவே இருக்கதுக்கு அத ஓரெட்டு வந்து பாக்கலாம்ல, அங்க வேல நடக்கான்னு நீங்க பாத்துகிட்டா மத்த வெளி வேலைய நா பாப்பேன்ல" என்றவர், பானு வந்து பரிமாற சாப்பிட்டுக் கொண்டே, "௭ங்க அந்த உறுப்படாத பய, சாருக்கு இன்னும் விடியலயோ?".

"ஏன்டா காலையிலேயே யாரயாவது திட்டிட்டே இருக்கணுமா? இப்படியே வெளிய கிளம்பி போனா அங்க வேலைக்கு வாரவுங்கட்டயும் எறிஞ்சு விழ தான சொல்லும்" ௭ன்றார் தாத்தா.

"கலகலன்னு சிரிச்சு சந்தோஷமா இருக்க மாதிரியா இருக்கு? மூத்த பிள்ள உறுப்படாம சுத்துது. 29 வயசாகுது, ஒருத்தன் கிட்டயும் போய் பொண்ணு ஒன்னு கேக்க முடியல, அப்டி பேரு வாங்கி வச்சிருக்கான் ஊருக்குள்ள. வேலைக்கு போய் வருமானம் இல்லாத பயலுக்கு எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு நா போய் பொண்ணுக் கேப்பேன். சொந்த தங்கச்சி மவளே இவேன் வேணாம்ட்டு தம்பிய கட்டிக்கிட்டா, அப்டித்தானே எல்லா பிள்ளைகளும் நினைக்கும்".

அந்நேரம் பேரறிவாளன், இந்திராணி, இரண்டு மாத மகள் தீந்தமிழைத் தூக்கிக் கொண்டு வர, அந்தப் பேச்சை அப்படியே நிறுத்திக்கொண்டார் பூவேந்தன்.

"என்ன மாமா, நா மாறன் அத்தான வேணாம்னு சொன்னது உங்களுக்கு வருத்தம் போல?" என அவள் நக்கலாக கேட்க.

"எனக்கு நீ வேணான்னு சொன்னது வருத்தமில்லம்மா, எல்லா பிள்ளைகளும் உன்ன மாதிரி தானே தனக்கு சம்பாதிச்சு போடுற புருஷன் தான் வேணும்னு நினைக்குங்க. எப்படி அவனுக்கு கல்யாணம் பண்ண போறோம்ன்னு வருத்தத்துல சொன்னேன். நீ எதும் மனசுல வச்சுக்காத" என்றார்.

"சரிடா விடு, அவனுக்கு நடக்கணும்னு இருக்குறது நடக்கும்" இடையே பாட்டி சொல்ல.

"என் முன்னாடி பேச தைரியமில்லாம எல்லாவனு பின்னாடி பேசுறான்ப்பா, கேவலமா இருக்கு" ௭ன்றார் பூவேந்தன் மீண்டும். அங்கு கனத்த மௌனம் நிலவியது.

அங்கு ஒருவர் தன்னை பற்றி நொந்துபோய் பேசிக்கொண்டிருக்க, எந்த கவலையும் இல்லாமல், "௭னக்கே ராஜாவான்னா வாழுறேன்." ௭ன நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்தான் மாறன்வழுதி.














































 

priya pandees

Moderator

அத்தியாயம் 2

பூவேந்தனின் சலிப்பில் கனத்த அமைதி நிலவியது, அதை கலைத்து, பேச்சை மாற்ற வேண்டி, "ஏண்டியம்மா பிள்ளைய வெளியக் கொண்டாந்து எங்கட்ட போட்டுட்டு வீட்டு வேலைய ரெண்டு பாக்கலாம்ல?" ௭ன பாட்டி தன் மகள் வழி பேத்தியை கேக்க.

"எதுக்கு உங்க மூத்த பேரன மாதிரி என் பிள்ளையவும் வளக்கவா? நானே என் பிள்ளைய வளத்துக்குறேன்" ௭ன்றவள்,

"ரெண்டு வேலைக்காரி இருக்கும்போது நா வேற எதுக்கு? தொணைக்கா?" என்றாள் சேர்த்து.
சொந்த தாய் மாமா வீடு என்பதால் மாமியார் வீடு என்ற வேற்றுமை இல்லை அவளுக்கு, இஷ்டம் போல் வாழ்கிறாள். அதிலும் மாறன்வழுதி என்றால் அப்படி ஒரு இளக்காரம், தான் வேண்டாம் என்று ஒதுக்கியவன் என்ற எண்ணம் வேறு. இவர்களாலும் ஒன்றும் சொல்ல முடியவதில்லை.

பானு முகம் வாடுவதைக் கண்ட பெரியவர், "கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிஞ்சு குடுத்தா, அப்ப தான் சாப்பிட முடியுமாட்டு இருக்கு" ௭ன்க.
"சரி மாமா" அவர் நகர்ந்துவிட.

"இனி காலையில எந்திரிச்சு அந்த டீ கடைக்கு போங்க அப்புறம் தெரியும் சங்கதி" செல்லம் முறைத்துக் கொண்டு எழுந்து விட.

தானும் சாப்பிட்டு எழுந்த பூவேந்தன், "இன்னைக்குனாலும் துரைய தியேட்டர் கட்டட நடக்கிற வேலைய பாக்க போக சொல்லுங்க. எனக்கு தியேட்டருக்கு அப்புருவல் வாங்குற விஷயமா திருநெல்வேலி வர போக வேண்டியிருக்கு" என்றார்.

"சரிப்பா" என தாத்தா முடிக்கும் முன்,
"அவன் போய் என்னத்தப்பா பாத்துப்பான்? நா வேணா போறேன், இங்க சூப்பர் மார்கெட்ட பாத்துக்கிட வேலுட்ட சொல்லிடுறேன்" என்றான் இளையவன் அறிவு.

"அதான மாமா, அவ்வளவு பெரிய கட்டிடம், பெரிய அத்தான் சின்னதா ஏதாது சொதப்புனாலும் போச்சு. யார நம்பி ஒப்படைக்குறதுன்னு இல்லயா? நா சூப்பர் மார்க்கெட்ல இருக்கேன். இவுக அங்கப் போய் பாக்கட்டும்" என்றாள் மருமகள் ராணி.

"ஏத்தா பச்சப்புள்ளைய வச்சுக்கிட்டு அங்கப்போய் நீ என்னத்த பாக்க முடியும்" ௭ன்றார் பூவேந்தன்.

"அதெல்லாம் ஆளுன்னு இருந்தாலே வேலயெல்லாம் ஒழுங்கா நடக்கும், ஆபிஸ ரூம்லிருந்து எல்லா கேமராவுலயும் வேல நடக்கான்னு செக் பண்ணிட்டு போறேன்" என்றாள் பெருமையாய்.

"வேணாம்த்தா எப்படியாவது அவனுக்குன்னு ஒரு பொறுப்பு வர காரணம் தேடிட்டுருக்கேன். அவனே அங்க போட்டும்" என முடிவாய் கூறிச் சென்றுவிட்டார் பூவேந்தன்.

"ம்க்கும், பொறுப்பு வரணும்ன்னு கைல கொடுத்து பாக்குறதுன்னா பெட்டி கட ஒன்னு வச்சுக் கொடுக்கணும், இப்டி காலத்துக்கும் பேர் வாங்கிக் கொடுக்க போறத தூக்கி குடுக்க கூடாது" என சத்தமாக முனங்கி விட்டுச் சென்றாள்.
சபை கலைய பானு, தாத்தா, பாட்டி மூவர் மட்டுமே மிச்சமிருந்தனர். "நீ எதுவும் விசனப்படாதத்தா, அவனுக்கு இன்னும் நல்ல நேரம் வரலையோ? என்னவோ? அவனும் நல்லா வருவியான்" என்றார் தாத்தா.

"எனக்கு பழகிடுச்சு மாமா, நீங்க சாப்பிடுங்க, அவனுக்காக காத்து கிடந்து உடம்பக் கெடுத்துக்காதீங்க"

"என் பேராண்டியில்லாம என்னைக்கு சாப்பிட்டுருக்கேன். இரு நானே போய் அவன எழுப்பிக் கூட்டியாறேன். நீ சுட சுட பூரி போட்டு வை, அப்புறம் ஒரு ரெண்டு நெய் தோசை"

"ஏது பூரி, நெய் தோசையும், என்ன இளமை திரும்புதோ? நெஞ்சுக் கரிப்பு சரியா போகவும் நாக்கு மறுபடியும் கேக்குது" என செல்லபேச்சி முந்திய இழுத்து சொருக.

"போடிக் கிழவி, என்னால முடியுது சாப்பிடுறேன்" என தாத்தா சற்று தள்ளிப் போய் நின்று கூற.

"எங்க அத அங்கனயே நின்னுச் சொல்லுங்க பாப்போம்" என்றார் சாய்ந்து சாய்ந்து நடந்து அவரை நோக்கி நடந்து கொண்டு.

"போடி, முடிஞ்சா ஓடி வாடி கிழவி" என்று விட்டு மேலேறியிருந்தார்.

"கீழ தான வரணும், எப்படி பூரியும், நெய்யும் உள்ள போகுதுன்னுப் பாக்குறேன்" என்றவாறு சட்டமா எழுந்து டைனிங் டேபிளில் அமர்ந்து விட்டார் எக்ஸாமினேஷன்ஸ் ஸ்கோடாய்.

கீழ், மேல் ௭ன 2 மாடிகளைக் கொண்ட காம்பவுண்ட் வீடு. கீழே ஒரு பெரிய ஹால், இடது ஓரத்தில் கிச்சன், அடுத்து பூஜை அறை, அடுத்து வரிசையாக 3 அறைகள், அதில் தாத்தா பாட்டி ஒரு அறை, பூவேந்தன் பானு ஒரு அறை, அறிவு ராணி ஒரு அறையில் ௭ன இருந்தனர். மேலும் அதே போல் 3 அறைகள், ஒன்று மாறனது, இரண்டாவது அறை பூவேந்தன் மகள் மதி அறை கனவர் செல்வமுடன் வந்தால் தங்குவதற்கு. 3வது அறை ஸ்டோர் ரூம் போல் உபயோக படுத்த பட்டு வருகிறது.

மேலே சென்று மாறன்வழுதி ரூமை "கண்ணு" எனத் தட்டிக் கொண்டே திறந்தார் தாத்தா, அவ்வளவு இருட்டாகவும், ஃப்ரீஸரில் இருக்கும் குளிருடணும் இருக்க, முதலில் சென்று ஜன்னலின் ஸ்கிரீன் மேலாக இருட்டாக இருக்க வேண்டி போடப்பட்டிருந்த போர்வையை உருவி எடுத்தார். பளீரென்று சூரிய பகவான் தன் கதிர்களை உள் வீச, பால்கனி கதவைத் திறந்துவிட்டார். ஏ/சியை அமத்திவிட்டு "ஏடே, கண்ணு விடிஞ்சு நேரமாவுதய்யா, தாத்தாவுக்கு பசிக்குதுல்ல" என தட்டிக் கொடுக்க, அவன் லேசாக கலைந்த தூக்கத்தையும், அவர் மடியில் திரும்பிப் படுத்து அவர் சுகமாக தட்டிக்கொடுக்க உறக்கத்திற்குச் சென்றான்.

"அடேய் உன்ன எழுப்புனா, இன்னும் சுகமா தூங்குவியாட்டு இருக்கு, எந்திரி, ரூம இப்டி ராவு கணக்காவே வச்சுக்கிட்டு தூங்கிட்டே இருந்தா எப்படிடே. மணி பத்தாக போது கண்ணு, உங்கப்பன் வேற இன்னைக்கு தேட்டரு கட்டட வேலைய பாக்க உன்ன தான் போக சொல்லிருக்கான். நானும் கூட வரேன் எழுந்திரு தங்கம் போவோம்".
போர்வையை விளக்கி முகத்தை சூரிய வெளிச்சத்தால் சுருக்கி திரும்பி தாத்தாவைப் பார்த்து, "எப்டி தாத்தா உன் மகனுக்கு இன்னைக்கு என்மேல நம்பிக்க வந்துருச்சு. அது கூட பரவால்ல, உனக்கு அந்த நம்பிக்கைக்கூட வரல போல கூடயே வாறேன்ற"

"சரிடாப்பா நா வரல நீ போய்ட்டுவா, இப்ப எந்திரி"

"அதுக்கு அர்த்தம் நா போறேன்றதுயில்ல என்ன இன்னைக்கு திடீர் ஞானதோயம் உன் புள்ளைக்கு, எந்த மரத்தடில கிடைச்சதாம்"

"ஏன்டா கிடைக்குற வாய்ப்ப பயன்படுத்தேன். நீயும் பொறுப்பானவன் தான்னு காட்டேன்".
"காட்டி அவார்டா கொடுக்க போறாய்ங்க" என்றவாறு போர்வையை தூக்கி வீசிவிட்டு எழுந்தான்.

"நாலு பேரு உன்ன மதிச்சா தானடா அவனுக்கு பெரும"

"அவர் பெருமையா சுத்தி வாரத்துக்காகலா நா வேலை பாக்க முடியாது. எனக்கு பிடிச்சாமாறி தான் நா வாழுவேன்" என பாத்ரூமை நோக்கி அவன் சென்றுவிட தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார் தாத்தா.
வெளிவந்த மாறன் தாத்தாவின் பொசிசனைக் கண்டு சிரித்துவிட்டு "என்ன தாத்தா காலையிலேயே தலைல கையவச்சு உக்காந்துட்ட?"

"அடேய் உங்கப்பன்ட்ட சரின்னு சொல்லிடேன்டா, இப்ப போகலனா ராவு வீட்டுக்கு வந்து காட்டு கத்து கத்துவான்டா"

"வருத்தப்படாத தாத்தா சாயங்காலம் வரும்போது பஞ்சு வாங்கியாறேன்"

"அடேய் நாளப்பின்ன நீதானடா அந்த தியேட்டர பொறுப்பா பாத்துக்கணும். இப்பயே வேலைலாம் எப்டி நடக்குன்னு பாக்க வேணாமா?"

"நீ இப்ப சாப்ட வாரியா வரலியா எனக்கு பசிக்கு நா போறேன்" என்றவாறு கூப்பிட வந்தவரை விட்டுவிட்டு இறங்கிவிட்டான்.
இவன் கீழே இறங்க உள் நுழைந்தான் உண்மைப்பித்தன். கையில் கொண்டுவந்த பேக்கை தூக்கி வீசியவன், "மச்சான்" என கத்த "மாப்ள" மாறனும் மேல்படியில் நின்று கத்த, பின்னாடி வந்த தாத்தா, சமையலறையில் இருந்த பானு, பாட்டி மற்ற 2 பெண்கள் வெளி வர, பாட்டியோ "அடேய் பெரியாத்தா செத்ததுதுக்குன்னு போன 16 கழியல வந்துட்ட" என்க.

"பந்தம் என்ன சொந்தம் என்ன போனால் என்ன வந்தால் என்ன உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல ஹா ஹா"

"அது சரி அங்க என்ன தகிடதத்தம் பண்ணியோ! விரட்டி விட்டாய்ங்களா?"

அதுக்கும் "பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே" என்க.

பதிலுக்கு மாறன் 4படி இறங்கியவாறு "உள்ள மட்டும் நானே உசுரக் கூடத் தானே"

பதிலுக்கு உண்மை "என் நண்பன் கேட்டா வாங்கிகன்னு சொல்லுவேன்" என பாட.

"இதுக்கு மேல பாடுன, அடுப்புல கம்பிய காய்ச்சி நாக்குலயே இழுத்துருவேன்" என்றது பாட்டி.

"ஏன் எங்க நட்ப பாத்து இப்படி பொறாம படுறீங்க?"

"ஒன் மொகர, ஊருக்கு போயி நாலு நாள்தான் ஆகுது, என்னமோ வருஷக்கணக்கா பிரிஞ்சது கணக்கா என்னவே பாட்டு"

"நாலுநாளே 4 யுகமாக தான் கழிஞ்சது தெரியுமா தாத்தா, ஒரு வேலனாலும் ௭ன் நண்பே கையால சாப்டாம அங்க ௭னக்கு சோறு தண்ணி இறங்கல பாட்டி"

பாட்டியோ, "அவனே தெனமு சோறு தின்றது என் மவேன் காசுல, இவனே தண்டசோறு இதுல இவேன் உனக்கு சோறு போடுறானா?"

"சரி விடுங்க உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், பானும்மா தான் சோறு போடுறாங்கன்னு வச்சுக்குவோம். வாங்க சாப்பிடுவோம், நெய் மணம் வாசல் வர வந்திருச்சு" என்று கூறி நண்பன் தோளில் கையிட்டு சாப்பாட்டு மேசையை அடைந்தனர்.

"ஏன்டா மான ரோசமே கிடையாதாடா?" பின்னயே வந்த தாத்தா கேட்க.

"மான ரோசம்லா பாத்தா வயிறு நிறையுமா? இல்ல சோறு தான் திங்க முடியுமா?" என அவனே தனக்கு எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

"என்ன மாப்ள அதுக்குள்ளே திரும்பிட்ட?" மாறன் கேக்க.

"ஊர்ல ஒரே கொசுக்கடி மச்சான், நிம்மதியா தூங்கவே முடியல" என்க.

"ஏலே சாவு வீட்டுல தூங்குவானாடா ௭வனாது? அதான் விரட்டிடாய்ங்களோ" தாத்தா கேக்க.

அதுக்கு "87 வயசு தாத்தா, நல்ல சாவு தானே எதுக்கு அழுது டைம் வேஸ்ட் பண்றீங்கன்னு கேட்டேன்.

பொசுக்குன்னு பையத் தூக்கி கையில குடுத்து பஸ்ஸும் ஏத்தி விட்டுட்டாறு எங்க அப்பா. போங்க நல்லது சொன்னா ௭வேன் கேக்றான்ட்டு, கிளம்பி வந்துட்டேன்" என்றான் ஒரு முழு பூரியை எடுத்து வாயில் அதக்கிக் கொண்டு.

அந்நேரம் கையில் பிளாஸ்க்குடன் வந்த ராணி(மருமகள்), "ஓசில சோறு கிடைக்குது, நைட்ல ஏ.சி ல தூக்கம் கிடைக்குது. சொந்த வீடுன்னு இது இருக்கையில, வேற ௭ங்கயும் எதுக்குண்ணே போணும். இல்ல என்னைக்கு நீங்க போயிருக்கீங்க. இருக்கிறவங்களுக்குளா வடிச்சுக் கொட்ட, என் புருஷன் மாடா உழைக்க வேண்டியிருக்கு" என்றாள்.

"என்ன பழக்கம் ராணி இது? இப்டி பேசத்தான் உன் அம்மா சொல்லி குடுத்தாளா?" என தாத்தா அதட்ட.

"௭ங்கம்மா சுயநலமான உலகத்துல ௭ப்டி பேசி பொழைக்கணும்னு தான் சொல்லி குடுத்துருக்காங்க. நா இல்லாததையா சொல்றேன், இதெல்லாம் நீங்க சொல்லணும், சொல்ல மாட்டிங்கன்னு தெரியும், அதான் சொல்றேன். எனக்கு அந்த ரைட்ஸ் இருக்கு தாத்தா. என் புருஷன் காசுல ஒரு ரூபா வேஸ்ட் ஆகுதுனாலும் நா கேட்பேன்" என்று விட்டு பிளாஸ்க்கில் பால் அடைத்துச் சென்று டம்மென்று கதவை சாத்தினாள்.
தாத்தா, பாட்டி, பானு மூவரும் இப்படி பேசிட்டாளே என்ற வருத்தத்துடன் திரும்பி இருவரையும் பார்க்க, அவள் யாரையோ பேசி சென்றது போல் இரண்டும் தங்களுக்குள் குசுகுசுவென ஏதோ ரகசியம் பேசிக் கொண்டு தட்டை வழித்து நக்கிக் கொண்டிருந்தது.

"அடமானங்கெட்டவய்ங்களா, ஒரு பொம்பள புள்ள இப்படி பேசிட்டு போது வெக்கமே இல்லாம தின்னுட்டுருக்கிங்க"

நிதானமாய் "தாத்தா அவ, அவ புருஷன் காசுல சாப்டுறவங்கள தான திட்டுனா, நா எங்க அப்பா காசுல தான சாப்டுறேன். சூப்பர் மார்க்கெட்ல அவ புருஷன் வேலப் பாக்றான் தான், ரெண்டு மாசத்துல வீட்டுக்குன்னு எவ்வளவு ரூபா கொண்டாந்து குடுத்தானாம். இதுல இருந்து என்ன தெரியுது?"

"என்னடா தெரியுது?" உண்மை ௭டுத்து குடுக்க.

"நாம அவ புருஷன் காசுல சாப்பிடல, அது பாவம் யாரு பெத்த புள்ளையோ என்ன மனக்கஷ்டமோ உளறிட்டுப் போது" ௭ன குடும்பத்தாருக்கு கூறி விட்டு, "வா நம்ம தலைவர் படம் ரிலீஸாயிருக்கு. நீ வந்தப்புறம் தான் போகணும்னு நா இன்னும் பாக்கவேயில்ல" ௭ன உண்மையை அழைக்க.

"என் நண்பேன்டா" என அவனும் கட்டிக்கொண்டான்.

அவ்வளவு நேரம் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தாத்தா, அவனை நிறுத்திப் பிடிக்க வேகமாய் தட்டிலிருந்ததை சாப்பிட ஆரம்பித்தார்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 3

அவசரமாக கொறித்து கொண்டிருந்த தாத்தாவிடம், "இவனுக்கு பொறுப்பு இல்லன்னு யாருங்க சொன்னது? அவன் தம்பி செய்றது வர தெரிஞ்சு வச்சிருக்கானே" பாட்டி கேக்க.

"அது ராணி இப்படி பேசுவான்றதுக்காகவே தெரிஞ்சு வச்சுருப்பான்டி"

"அவேன்மேல உங்களுக்கும் நம்பிக்க இல்லயாங்க?"

"யாரு சொன்னது? அவேன் அத காட்டுறதுக்கான நேரம் இன்னும் வரல. அவேன் திறம அவனுக்கே இன்னும் புலப்படல, அதான் இப்டி சுத்தி வாரான். இப்பயும் படிக்காட்டி பரவால்லன்னு கிடைச்ச வேலைய பாத்துட்டு தான இருக்கான். நிரந்தர படுத்திக்க இன்னும் அவசியம் வரல. சரி புருஷன் மிச்சம் வச்சத பொண்டாட்டி சாப்பிடலாம் புண்ணியம். நீ இத சாப்பிடு நா அவன மல்லுக்கட்டி கட்டிட வேல நடக்கத பாக்க இழுத்துட்டு போறேன்" என எழுந்து வாசலை நோக்கி விரைந்தார்.

"இந்த ஆளு பிசஞ்சு குழப்பி வச்சுட்டுப் போனத நா சாப்பிடனுமாம்" என முணங்கினாலும் மிச்சமில்லாமல் சாப்பிட்டே எழுந்தார்.

வெளியே பேரனை விரட்டி சென்ற மாணிக்கம் தாத்தா, "அடேய் இன்னைக்கு ஒரு நாள் இந்த தாத்தா பேச்ச கேளுடா. என் செல்லம்ல தங்கம்ல. உனக்கு ஏண்டுக்கிட்டு ஓ அப்பன்ட்ட சண்டைக்குலா போனேன்டா, இப்ப நீ போலன்னா என்னைய அந்த கேள்வியெல்லா திருப்பிக் கேப்பான்டா"

"யார் நீ, உன் மகன்ட்ட சண்டைக்குப் போன?"

"ஆமாடா"

"அதுவும் எனக்கு ஏண்டுக்கிட்டு?" தாத்தா இப்பொழுது பாவமாய் திருதிருவென முழிக்கவும்.

"இப்படி முழுச்சுத்தான பாட்டிய கரெக்ட் பண்ணுன? எனக்கே உன் மேல லவ்வு லவ்வா வருதே. பாட்டி ௭ம்மாத்ரம். சரி விடு போய் தொலைக்கிறேன். நா அங்க போறது நீ சொல்லித்தான், அங்க ஏதாவது பிரச்சன வந்தாலும் உன் பொறுப்புத் தான்" என போகும்போதே குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு சென்றான்.
________________
கன்னி வீட்டுக்கு வந்தவள், மதியத்துக்கு சாப்பாடு ஆக்கி வைத்து விட்டு தனக்கும் ஒரு டிப்பனில் எடுத்துக்கொண்டு தீப்பெட்டி ஆபீஸ் கிளம்பி வெளியே வர, "ஏத்தா இனிமேட்டுலா நீ வேலைக்கு போக வேணாந்த்தா. கல்யாண பேச்சு ஆரம்பிச்சாச்சுல" வள்ளிமணாளன் சொல்ல.

"சரி நா போகலைன்னா பூவாவுக்கு என்ன செய்றதா உத்தேசம்?"

"அத யோசிக்காம இருப்பேனா? நம்ம மாணிக்கம் பேரன் சூப்பர் மார்க்கெட்ல வாட்ச்மேன் வேலைக்கு கேட்டுச் சொல்ல சொல்லியிருக்கேன்"

"பாருடா, சரி தாத்தா, அப்ப நீ அதுக்கு போ. எனக்கு எவனாவது வந்து பூ வைக்கிற வர நா இந்த வேலைக்கு போறேன்" என உடனே ஒத்துக்கொண்டாள்.

"சரித்தா முடிவு பண்ணிட்ட, இனி நா சொன்னா கேட்கவா போற"

"இந்த வயசுலயும் நீ வேலைக்கு போகணும்ன்னு நினைக்க. இங்கன இருக்குற வர உனக்கு நா உதவியா இருக்கனும்னு நினைக்கேன். எதுக்கும் உள்ளூரிலேயே மாப்பிள்ள பாரு தாத்தா, அப்பத்தான் உன்னப்பத்துன கவலையில்லாம நா குடும்பம் நடத்த முடியும்"

அதற்குள் வெளியே அவளுடன் வேலைக்கு செல்லும் தேனி, "கன்னி கிளம்பிட்டியா? போவோமா?" என வாசலில் நின்று கத்த.

"சரி தாத்தா, வத்த குழம்பு வச்சு, வடகம் வறுத்து வச்சிருக்கேன் சாப்பிடு, ஐயம்மா பாட்டி தாத்தாக்கு முடியலன்னு சொல்லுச்சு மதியதுக்கு ஒரெட்டு சாப்பாட்ட குடுத்துட்டு, பாத்துட்டு வா தாத்தா" என்று விட்டு, "இந்தா வாறேன்டி" என வெளியேறினாள்.
தேனி "ஏண்டி தினமும் முடிய கொண்ட போடுத? அழகான முடி, அப்படி நீளவிட்டு ஆட்டிட்டு வரலாம்ல"

"எதுக்கு எல்லாவளு கண்ணு வைக்கவா? இந்தா கொண்ட போட்டுருக்கும்போதே நீ அந்த பார்வ பாக்க"

"ரொம்பத்தான் போடி"

"வேலப் பாக்குற இடத்துல தொந்தரவா இருக்கும்டி" பேசிக் கொண்டே வர, எதிரில் நம் மாறனும், உண்மையும் நடந்து வந்தனர்.

தேனி "ஏய் எதுக்க நம்ம ஓனர் மகன் வாரான்டி. என்ன கெத்தா வாரான் பாத்தியா? நம்மள மாதிரி ஏழையாயிருந்தா நானே எங்கப்பன்ட்ட போய் இவன கட்டிவைன்னு கேட்டிருப்பேன். நமக்கு ஏத்தாப்புல படிக்காதவனா, வீரனா இருந்து என்ன புண்ணியம், எட்டாக்கனியாவுல இருக்கு" என பெருமூச்சு விட, அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே வந்தாளே தவிர, அவன் வந்த திசை பக்கமும், கன்னி திரும்பவில்லை. ஆனால் அவன் வருவது தெரியும், இந்நேரம் வருவான் என்றும் தெரியும். பாக்காமலே கடந்துவிட்டாள்.

"ஏன் மாப்ள, ௭னக்கு பல நாளா, ம்கூம் பல வருஷமா ஒரு சந்தேகம்." ௭ன்றான் உண்மை.

"சந்தேகம்லா வந்த உடனே தீத்ரனும் மச்சா. சொல்லு நா தீத்து வைக்றேன்" ௭ன அவன் தோளில் கை போட்டான்.

"அந்தா வருதே, அந்த புள்ள, அது வாரது தெரிஞ்சு இந்நேரத்துக்கு நீ வருவீயா? இல்ல நீ வருவன்னு தெரிஞ்சு அந்தப் புள்ள வருதா? ௭னக்கின்னைக்கு உண்மை தெரிஞ்சாகனும்" உண்மை கேட்க.

"எந்தப் புள்ள மச்சான்?"

"ஆஹான், உனக்கு எந்த புள்ளன்னே தெரியாதுள்ள?, சரித்தேன்" என உண்மை அவன் முகத்தைக் குறுகுறுவென பார்த்தவாறு திரும்பி விட்டான்.

"அது எப்படி மாப்ள, அந்த புள்ள முகத்தை நிமிந்து பாக்காமலே சைட் அடிக்கிற? அஞ்சு வருஷமா நீயும் பாக்க மாட்டேங்குற, அந்தப் புள்ளையும் பாக்க மாட்டேங்குது, ஆனா தெனோ இந்நேரம் இந்த தெருவ ஒன்னு போல கடக்குறீங்க. இத எனக்கு விளங்குறாப்புல சொல்லேன். என்ன பாத்தா பாவமா தெரியலயா? போயும் பேச மாட்டேங்குற, கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற. நா போய் கேட்டு வரட்டானாலும், என்னத்த கேக்கப் போறன்னு என்னையே திரும்ப கேக்குற. இப்படியே பாத்துட்டுரு அந்தப்புள்ள நாளைக்கு புருசனோட இதேமாறி போவும், அதையும் இப்டித்தான் பாக்காத மாறி போ வேண்டியிருக்கும்".

"என்னத்தவே பினாத்திட்டே வார, யாரு, எந்த புள்ளைக்கு கல்யாணம் ஆகணும்?" என்றான் சிறிதும் சிரியாமல்.

"எப்புடறா உன்னால இப்புடி நடிக்க முடியுது. என்னைய கிறுக்கனாக்கணும்னு முடிவோட இருக்கல நீயி" ௭ன பேசி கொண்டே தியேட்டர் வேலை நடக்கும் இடத்திற்கு வந்திருந்தனர்.

"இடம் வந்துருச்சு போய் மேனேஜர், இல்லனா சூப்பர்வைசர் யார் இருந்தாலும் இழுத்துட்டு வா. நா இப்படி உட்காந்துருக்கேன்" என செக்யூரிட்டி கேட் கிட்டயே அமர்ந்துவிட்டான்.

அந்த இடத்திற்கு சொந்தகாரன் அவன், ஆனால் அங்கு வேலையில் இருந்த யாரும் இவனை மதித்ததாக கூட தெரியவில்லை. அரைக்கை சட்டையை மடித்து விட்டு, பரட்டைத் தலையும், வெளிர் ஜீன்ஸ் அதுக்கும் வெளிர் சட்டையுமாக வந்ததால் அவனும் கொத்த வேலை பாக்க வந்ததாகவே நினைத்து அவரவர் வேலையை பார்த்தனர்.

மேனேஜரைத் தேடிச் சென்ற உண்மையோ, "மாப்ள அவன எங்கயும் காணும் வீடு வர போயிட்டான் போல. எவனும் வேலைப் பாக்குற மாதிரி தெரில. எல்லாவனும் பாவலா தான் காட்டுறாய்ங்க".

"சரி இப்படி உக்காரு கொஞ்ச நேரம் பாப்போம் வாரானான்னு" இருவரும் அமர்ந்து கால்மேல் காலிட்டு வேடிக்கைப் பார்த்தனர்.

அதே நேரம் தங்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அங்கு மாறனை கிராஸ் சென்ற கன்னியும், தேனியும், "நம்ம ரெண்டு பேரும் இப்டி ஒன்னா வேலைக்குப் போக ஆரம்பிச்சு ஒரு ஒன்றை வருஷம் இருக்குமா. நீ கவனிச்சியோ என்னவோ? நா கவனிச்சுருக்கேன். கரெக்டா இந்நேரம் நம்மள அவன் கிராஸ் பண்ணுவான். ஆனா நம்மப் பக்கமே திரும்பவும் மாட்டான். அது தான்டி என்ன அவன தைரியமா பாக்க வைக்குது" ௭ன்றாள் தேனி.

"ரெம்ப பாத்து அவிங்கள அவுச்சுறாதடி, பேசாம வா. சீக்கிரம் உங்க அப்பாட்ட சொல்லி உனக்கு ஒரு மாப்பிள பாக்கச் சொல்லணும்" எனப் பேச்சை மாற்றினாள் கன்னி.

இவர்கள் தீப்பெட்டி ஆஃபிஸில் நுழைய இவளுக்காகவே காத்திருந்தது போல் ஒருவன் வலது பக்க டீ கடையிலிருந்து தானும் உள் நுழைந்தான். "கன்னி, கன்னி" ௭ன கூப்பிட்டு கொண்டே உடன் நடந்தவன் "நானும் ஒரு வருஷமா உன் பின்னாடியே சுத்துறேன், இதுக்கு மேல என்ட்ட பொறுமையில்ல. எனக்கு ஒரு பதில சொல்லு" என்கவும், நின்று திரும்பினாள்,
"உனக்கு இதுவர நா பதிலே சொல்லலயோ?" ௭ன முறைத்தாள் கன்னி.

"ஹான்! அது முடியாதுன்னு தான சொல்லிட்டுருக்க. பாக்க பாக்க பிடிக்க வாய்ப்புருக்குல்ல"

"பேசாம போயிரு" என அவள் திரும்பி நடக்க போக.

"ஹேய், ஏய் ஒரு நிமிஷம்" என குறுக்க வந்து கை நீட்டி நிற்க.

"லூசா நீயி, பாக்குறவங்க என்னையும் சேத்து தப்பா நினைக்கவா? தள்ளிப் போ" என்றாள்.

"என்ன ஏன் புடிக்கல உனக்கு. உனக்கு பிடிச்ச மாதிரி நா என்னைய மாத்திக்குறேன். என்னய கட்டிக்குறேன்னு மட்டும் சொல்லு"

"தள்ளிப் போடா லூசு, ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு. எனக்குத் தான் பிடிக்கல விட்டுருன்னு சொல்லிட்டே இருக்கேனே கேக்க மாட்டியா" என உடல் விரைத்து கத்தியவள், அவன் சுதாரிக்கும் முன் நடந்திருந்தாள்.

"ஏண்டி அவன் இவ்ளோ இறங்கி வந்து கேக்குறான்ல நமக்கு அடங்கிப் போறவன் அமையுறதெல்லாம் கஷ்டம்டி பேசாம ஒத்துக்க வேண்டியதானே" தேனி சொல்ல.

அவளை முறைத்து, "உன் வேலைய மட்டும் பாரு" என நடந்து விட்டாள். அதன் பின் வேலை அவளை இழுத்துக் கொண்டது, பெட்டி அடுக்குவது, ஒட்டுவது, காய வைப்பது என நேரம் கடந்தது.

இங்கோ 10:30 மணிக்கு வேலை நடக்கும் இடத்துக்கு வந்தவர்கள் 3 மணி வரை நிதானமாய் அமர்ந்து அரட்டையடித்து, செல்லில் பேஸ்புக், யூடூயுப் பார்த்து பொழுதை கழித்துவிட்டு மதிய நேர பசி வயிறை பிரண்டவும் கையை முறுக்கிக் கொண்டு எழுந்தான் மாறன்.

"லேசா பசிக்குற மாதிரி இருக்குள்ள மாப்ள" உண்மை வயிற்றை தடவி கொண்டு சொல்ல.

"ஆமா மச்சான்"

"அப்ப வீட்டுக்கு கிளம்புவோமா?"

"இந்த மேனேஜர் பய வந்துட்டானா? இல்லயா?" மாறன் கையை முறுக்கி கொண்டு கேக்க.

"வந்தான்னா நம்மள தாண்டி தான போயிருக்கணும்"

"ஒருவேள செல்ல பாத்துட்டு அவன கவனிக்காம விட்டுருந்தா. எதுக்கு இன்னொரு ரவுண்டு போய் பாத்துட்டு வா",

"ம்" என உண்மை எழுந்து செருப்பை மாட்டிக் கொண்டு சென்று அந்த மொத்த சைட்டையும் சுற்றி விட்டு வந்தான்.

"மாப்ள அவன் இன்னும் வரல. காலைல பாவளாவாது காட்டுனாய்ங்க, இப்ப அதுவுமில்ல, பாதி தூங்குது, பாதி ஊர்க்கத பேசுது" என்க.

"அந்த சூப்பர்வைசர் நம்பர் இருக்கா மாப்ள?"

"என்ட்ட ஏது, ஆனா அவன் மச்சான் நம்ம வடக்குத் தெருவுல ஊறுகாய் மாரிமுத்து இருக்கான்ல அவேன் நம்பர் இருக்கு"

"ம் பிறவென்ன அவன்ட்ட போட்டு இவன் நம்பரை வாங்கி சைட்டுக்கு ஓனர் வரச்சொன்னாருன்னு சொல்லு"

"நீ ஓனரா மாப்பிள"

"உனக்கு கூட அந்த சந்தேகம் வருதுல மச்சான்" என்றான் ஒரு புருவத்தை ஏற்றி.

"சும்மா கேட்டு பாத்தேன் உடனே மொறைக்காத" ௭ன போன் பேச நகர்ந்து விட்டான்.

அடுத்த 15 நிமிடத்தில் சூப்பர்வைசர் அடித்து பிடித்து ஓடி வந்தான், செக்யூரிட்டியிடம், "ஓனர் கெளம்பிட்டாரா" எனப் பயந்துகொண்டே கேட்க. செக்யூரிட்டி திரும்பி சற்று தள்ளியிருந்த இவர்களை பார்க்க,
"இவனுங்களா? சார் இன்னும் வரலயா? காரயும் காணும். இவனுங்க இங்க ௭ன்ன பண்றானுங்க? அதான முதலாளி இன்நேரம் வாராதா இருந்தாதான் போன் போட்ருபாறே" என ஆசுவாசப் பட்டுக் கொண்டு பைக் முன்னில் இருந்த தண்ணீரை எடுத்து பருகிக் கொண்டு உள் சென்றான் இவர்களையும் கண்டும் காணாமல் கடந்து.

இருவரும் அவனை பார்த்தவாறு தான் அமர்ந்திருந்தனர். "௭ன்ன மாப்ள நம்மல மதிக்கவே இல்ல" உண்மை கேக்க.

"இந்த ஊர்ல ௭வேன் நம்மல மதிச்சிருக்கான்னு நீ புதுசா மெட்டு கட்ற"

"அதுவும் சரித்தேன், அப்போ ௭ன்ன செய்ய போறோம்"

"இரு போனவே இந்த வழியா தான வரணும், வரட்டும்"

மேனேஜர் உள் சென்று அன்றைய கூலியை பட்டுவாடா பண்ணி ஆட்களை வெளியே அனுப்ப. கேட்டை மூடி சேர் போட்டு அமர்ந்துவிட்டான் மாறன். எல்லோரும் கேட்டில் கூடி நிற்க, 5 மணிக்கு தானும் கிளம்பி அந்த சூப்பர்வைசர் வெளியே வந்தான்.
"என்ன இங்கக் கூட்டம் இன்னும் கிளம்பலையா? என்ன செய்றீங்க?" என்றவாரே கூட்டத்தை விலக்கி முன்வர இவர்களைக் கண்டதும் "என்ன தம்பி இந்த பக்கம்" என அவன் முடிக்கும் முன் இரண்டு கன்னத்திலேயும் மாற்றி மாற்றி வெளுத்திருந்தான் மாறன்.

"ஏய் யாரு மேல கை வைக்குற?" என அவன் எகிறிக் கொண்டு வர, மறுபடியும் ஒரு இழுப்பு இழுத்தான். அவனுக்கு கை தான் முதலில் பேசும்.

"காலைலயிருந்து சைட்லயே இல்ல, நாலு மணிக்கு வார, வந்ததும் 6 மணிக்கு வேலை முடிச்சு அனுப்ப வேண்டியவங்கள நாலு மணிக்கே கிளப்ப ஆரம்பிச்சுட்ட, இப்டிலா வேலைய இழுக்கலாம்னு உனக்கு யாரு சொல்லிக் கொடுத்தது, எங்க அப்பாவா?" என மறுபடியும் அறைய வர. அவனும் எகிற, வேலை பாக்காமல் சம்பளம் தருபவனுக்கு விசுவாசமாய் நாலுபேர் ஏண்டுக் கொண்டு வர, பிரச்சனை பெரிதாகியது.
மாறன் வந்த வேலை கச்சிதமாக முடிந்தது.

அங்கு கன்னி வேலை முடிந்து 6 மணிக்கு கிளம்ப வாசலில் அதே காலையில் வந்து நின்றவன் வேறு இரண்டு நபர்களை துணைக்கு வைத்துக் கொண்டு நிற்க, அசராமல் கடந்து செல்ல முற்பட்டாள்.

"ஏய் நில்லுடி, உனக்கு அவ்ளோ திமிரா? உன்ட்ட பேசத்தானே வந்து நிக்றோம்" என ஆள் இருக்கும் தைரியத்தில் அவள் கைப் பிடித்து நிறுத்த, மறு கையால் ரேகையை அவன் கன்னத்தில் பதித்திருந்தாள்.

தன்னைப்போல் அவன் கை அவள் கையை விட்டு விட்டது. அவள் அவ்வளவு தைரியசாலி ௭ல்லாம் இல்லை, அதற்காக பயந்து நடுங்கும் ரகமும் இல்லை. அந்த நொடி அவன் தன் கையை பிடித்தது பிடிக்கவில்லை அறைந்து விட்டாள் அவ்வளவே.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 4

"என் கைய புடிக்கிற உரிமைய உனக்கு நா குடுக்கல. எனக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல. புரிஞ்சுக்கப்பாரு, என்ன தொந்தரவு பண்ணாத எல்லார் முன்னயும் அசிங்க படாத." ௭ன்றாள் காட்டமாக.

"நா ஒரு வருஷமா உன்ன பாக்குறேன், நீ எவேன் கூடையும் நின்னு பேசி பாத்ததில்ல, அதனால உன் மனசுல யாரும் இல்லன்னு எனக்கு தெரியும், வேற என்ன காரணத்துக்காக என்ன வேணாங்குறன்னு சொல்லு விட்டுறேன்" ௭ன்க,

சிறிது யோசித்தவள் "என் தாத்தா சொல்ற பையன தான் கட்டணும்னு முடிவுல இருக்கேன், அது தான் காரணம் போதுமா" ௭ன்றாள்.

"அப்ப, நா நேரா ஓ தாத்தாட்ட பேசுனா பரவால்லயா?"

"அது உன் இஷ்டம், இனி இந்த வழி மறிக்கிற வேலல்லா வேணா" என அவள் விலகி நடந்துவிட, அவள் தாத்தாவிடம் நாளையே பேசவேண்டும் என முடிவு எடுத்துக் கொண்டான்.

"உன் தாத்தா இவன கட்டிக்கோன்னு சொன்னா மட்டும் கட்டிப்பியோ?" ௭ன வீடு திரும்புகையில் தேனி கேக்க,

"அத அவுக சொன்னப்பறம் யோசிப்போம்" என முடித்து விட்டாள்.
அங்கு மாறன்வழுதியோ தன்னால் முடிந்தமட்டும் பிரச்னையை பெருசாக்கிவிட்டே வீடு திரும்பினான். அவன் வரவை எதிர்பார்த்து வாசலிலேயே அமர்ந்திருந்தார் தாத்தா,

"என்ன தாத்தா வாசல்லயே உக்காந்திருக்க, பாட்டி வெளில பொயிருக்குதா என்ன?"

"அவள ஏன்டா நா தேடுறேன், உன்ன தாண்டா எதிர்பாத்து உக்காந்திருந்தேன். கண்ணு மதியம் சாப்டக்கூட வரல்லயே. ஒரே நாள்ல்ல என் பேரனுக்கு பொறுப்பு வந்திருச்சேன்னு நினச்சுட்ருக்கேன், நீ வந்துட்ட" பேரனை முழுவதுமாக நம்பியே பாராட்டினார்.

"நாந்தான் பிசியா இருந்தேன்னு தெரியுதுல, சாப்பாட எடுத்துட்டு சைட்டுக்கு வர வேண்டியது தான" ௭ன்றான் அழுத்து களைத்தது போல்.
"உனக்கு மாங்குனு மாங்குன்னு உச்சி வெயில்ல சாப்பாட தூக்கிட்டு வாரத்துக்கு நா என்ன உன் பொண்டாட்டியா, உள்ளார வா, முதல சாப்பிடு" என அழைக்க,

"அப்ப நானு தாத்தா"

"கூப்புடாட்டி அப்டியே கிளம்பிருவியா?"

"மாட்டேன்" தோளை குழுக்கினான்.

"பின்ன ௭ன்ன மூடிட்டு வா" ௭ன்றார் தாத்தா.

"ஆமா ஆமா, உன் மகேன் வரதுக்குள்ள சீக்ரம் சாப்பிடறலாம்" என்றவாறு உடன் சென்றனர் மாறனும், உண்மையும்.

"ஏன்டா" தாத்தா ஜர்க்காகி நின்றுவிட.
"ஏன் நின்னுட்ட, அத அவர் வந்ததுமே தெரிஞ்சுக்கலாம். இப்ப வா" என சாப்பிட சென்றுவிட. இவர்கள் சாப்பிட்டு ஏப்பம் விடவும் எல்லாரும் வேலையே முடித்து வீடு திரும்பவும் சரியாக இருந்தது. மாறனின் தங்கயும் அவளின் குடும்பத்தோடு நைட்டு சாப்பாட்டுக்காக சற்று முன்னயே ஆஜர் ஆகியிருந்தாள், அண்ணன்காரன் அப்பா சொல்லி ஒரு வேலையை செய்ய சென்றிதிருந்தானே, என்ன நடந்திருக்கும் என்பதை அறியும் ஆவலாய் கூட இருக்கலாம்.
அப்பொழுது ஆவேசமாய் வீட்டினுள் நுழைந்தார் பூவேந்தன், வந்த வேகத்தில் கையில் கொண்டு வந்த பேக்கை தூக்கி சோபாவில் வீசிவிட்டு, "ஏன்டா? ஏன்? என் உயிர வாங்கணும்னே வந்து புறந்தியா? கழுத வயசாகுது இன்னமு இப்டியே பொறுப்பே இல்லாம, ஒரு வேலைக்கும் போகாம சுத்திவாரியே, அசிங்கமாவே இருக்காதா? எப்ப தாண்டா திருந்துவ, ஒரே ஒரு நாள் அங்க பாத்துக்கோன்னு தான அனுப்பினேன், உன்ன நம்பி அனுப்பினதுக்கா அங்க மொத்த வேலயயும் நிறுத்திட்டு வந்திருக்க?" ௭ன வாங்கு வாங்கென வாங்கினார்.
ராணியும், மதியும் ரகசியமாய் சிரிக்க.

தாத்தா "ஏன்டா என்ன நடந்துட்டுன்னு இப்போ வந்ததும் வராததுமா அவன புடிச்சு காயிற, மத்தியானம் கூட சாப்பிட வராம அங்கேயே இருந்து வேல நடக்குறத கவனிச்சுட்டு தான் வந்திருக்கான், புரியாம கத்திட்டு இருக்க".

"பாத்து கிழிச்சான் இனி என்னைய நீ அந்த வேலைய செய்யவே சொல்ல கூடாதுங்கிற மாறி செஞ்சுட்டு வந்திருக்கான். அங்கன வேலைக்கு இருந்தவங்ககூட சண்டைய இழுத்து, மேனேஜர அடிச்சு, தட்டி கேக்க வந்த சூப்பர்வைசர் மண்டைய உடச்சிட்டு வந்து நிக்கிறான், மொத்த வேலையையும் கெடுத்திட்டு வந்துருக்கான். அவனுங்க இப்போ, இனி வேல பாக்க மாட்டோம், நஷ்டஈடு குடுங்கன்னு கேக்கிறாய்ங்க, என்ன பதில் சொல்ல சொல்றீங்க?"


"சும்மா இருக்கிறவன அடிக்க அவனுக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு" பாட்டி ஏச.


"அங்க இருந்ததுல 40 பேர்ட்ட கையெழுத்து போட்டு லெட்டர் வாங்கி வச்சிருக்கானாம், இவன் தான் சண்டைய இழுத்தான்னு", என தைய தக்கவென குதிக்க.

எல்லாரும் கலவரமாய் இருக்க. மாறனோ இவர் இப்படி தான் பேசுவார் என தெரிந்ததுபோன்று அசால்ட்டாக நின்றான். உண்மைப்பித்தன் தான் உணர்ச்சிவசப்பட்டு "உண்மையிலேயே அங்க என்ன நடந்ததுன்னு தெரியுமாப்பா?" என அவரை சமாதான படுத்த முந்திக்கொண்டு பேசபோக, அதற்காகவே காத்திருந்ததுபோல், மாறனிடம் காட்ட முடியாத மொத்த கோவத்தையும் ஒரே அறையில் இவன் கன்னத்தில் இறக்கிவிட்டிருந்தார்.

"எனக்கு இது தேவ தான், இதும் வேணும் இன்னமு வேணும் " என கன்னத்தைத் தாங்கி அவன் முனங்க,

"வாங்கிட்டல்ல பின்னாடி வா, இன்னமு வேணும் போலன்னு இன்னும் 2 குடுத்துற போறாரு" என்றான் மாறன் அவன் காதில்.

இது எப்போதுமே அங்கு நடப்பது தான். 5ம் வகுப்பில், மாறன் பள்ளியை விட்டு நின்றதும், 'என் நண்பன் மிதிக்காத இந்த பள்ளி கூட வாசல இனி நானும் மிதிக்க மாட்டே'ன்னு படிக்காம ஊர் சுத்த கெடச்ச வாய்ப்ப விட்றக்கூடாதுன்னு இவேன் பின்னாடி வந்துட்டான். 'அப்ப அதே நண்பனுக்காக அறையும் வாங்கு'ன்னு அன்னையிலயிருந்து மாறன் பண்ற தப்பு, பண்ணாத தப்புன்னு மாட்டுற அத்தனைக்கும் சார் தான் முன்னப் போய் அடிவாங்குவார்.

"நா தான் காலையிலேயே சொன்னனே மாமா என் புருஷன அனுப்புங்க. வேண்டாத ரிஸ்க் எடுக்குறீங்கன்னு. நீங்க கேக்கல பட்டுத் திருந்துங்கன்னு விட்டுட்டேன். அப்பதான் நீங்களும் இனி இந்த தப்ப செய்யமாட்டிங்க" ராணி சந்தர்ப்பத்தை உபயோகிக்க.

"ஏத்தா உள்ள உன் புள்ள அழுவுறா போய் என்னன்னு பாரு" பாட்டி விரட்ட,
"நல்லது சொன்னா இப்படி விரட்டிருங்க, உங்களையும் மூடிட்டு போன்னு அவங்க விரட்ட முன்ன எந்துச்சு வாங்க" என புருஷனையும் உடன் இழுத்துச் சென்றாள்.

மதியொளி "ஏன்பா அவன் தான் எதுக்கும் லாயக்கில்லன்னு தெரியும்ல பின்ன ஏன் இப்படி பொறுப்ப அவன்ட்ட குடுத்துட்டு அவஸ்த்த படுறீங்க, சின்ன அண்ணாட்ட சொல்லுங்க, இல்லனா என் புருஷன்ட்ட சொல்லுங்க ஒரு நாள் லீவ் போட்டுட்டுக் கூட பாத்துக்குவாரு" என்று விட்டு "ம்மா வாபாக்காம, போயி சாப்பாடு செய், எனக்கு காலைல சீக்கிரம் எந்திரிக்கணும், பேப்பர் திருத்துற வேல வேற இருக்கு. நாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். ரூபன கொஞ்சம் பாத்துக்கங்க பாட்டி, சாப்பாடு ரெடியானதும் எனக்கு கூப்பிடுங்க" என எல்லோருக்கும் பதில் கூறி கட்டளையிட்டு விட்டு புருஷனோடு மாடியிலிருக்கும் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

"ஏன் மாப்ள இன்னேரம் நீ நெஞ்சைப் பிடிச்சுட்டு, என் வீட்டுக் கண்ணுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணின்னு பாடணுமே, பாடல?" என வாயை மூடிக் கொண்டு குனிந்து ரகசியமாய் உண்மை கேட்க.

"பேக்ரவுண்டுல ஓடிட்டு தான் மச்சான் இருக்கு" என இவனும் வராத கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டான். இவர்கள் இருவரும் ரகசியமாய் பேசிக் கொள்வதைப் பார்த்த பூவேந்தன், "ச்சை" என்ற மிகுந்த எரிச்சலில் சென்று சோபாவில் அமர்ந்துவிட.

"டேய் பிரசங்கம் முடிஞ்சிருச்சு போல, வா போவோம்" என பூப்போல் திரும்பி மாடியேறி விட்டனர்.

பானு தன்னால் முடிந்த மட்டும் அழுகையை அடக்கிக்கொண்டு அடுப்படிச் சென்றார். பின்னையே பாட்டி ரூபனை அழைத்துக்கொண்டு மருமகளை சமாதானப்படுத்த செல்ல. மாணிக்கம் மகனை சரிசெய்ய சென்று அவருக்கு எதிரில் அமர்ந்தார்.

"உண்மையிலேயே அங்க என்ன நடந்ததோ, கண்ணு காரணமில்லாம கைய நீட்டிருக்க மாட்டான்யா".
"இப்படித்தான் இத்தன வருஷமா வக்காலத்து வாங்குகிறீங்க, உங்க பேச்சயாது மதிச்சுருக்கானா அவேன்?"

"என் பேச்சக் கேட்டுத்தான் இன்னைக்கு அங்க போனான்".

"அப்ப ஏன் அவன உருப்படியா ஒரு வேலைக்கு போன்னு, இப்ப வர சொல்லாம இருக்கீங்க, சொல்லி செய்ய வச்சு, உருப்பட வச்சுருக்கலாமே, எனக்கு இந்த வயசுலயே பீ.பி வந்திருக்காதே"

"ஒரு அளவுக்கு மேல அவன என்னால அரட்ட முடியிறதில்லப்பா. ௭ன் சந்தோசத்த கெடுக்காத தாத்தான்னு சொல்லும் போது அதுக்கு மேல என்னால பேச முடியலய்யா" என்றார்.

"இப்ப இதுக்கு என்னதான் வழி? இவன் ஒருத்தன் நல்லாகிட்ட போதும் எனக்கு நிம்மதி கிடைச்சிடும். தெனமும் பானு அழுறாப்பா. நாங்க மூத்த பிள்ள இப்படி இருக்கானேன்னு நினைச்சு நினைச்சு தூக்கமில்லாம கடக்கோம்"

"சரிய்யா இதுக்கு நா ஒரு வழி சொல்றேன், நீ சண்டைக்கு வராம பொறுமையா கேக்கணும்".

"சரி சொல்லுங்க",

"அவனுக்கு ஒரு கல்யாணத்த முடிச்சு வச்சுரலாம். பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தா, அவ இவன தட்டி கேப்பா. நேத்து வந்தவ ௭ன்ன, என்னய கேக்குறதுன்னு திருந்த வாய்ப்பு இருக்குல்ல"

"என்னால உன்னத் திட்டக் கூட முடியலப்பா" ௭ன முறைத்தவர், பின் சற்று நிதானித்து, "அவனுக்கு கல்யாணம் பண்ண மாட்டேன்னு நா சொல்லல, அவனுக்கும் சீக்கிரமா பண்ணனும் தான், இளயவனுக்கு முடிச்சு ஒரு வருஷமாச்சு, இன்னமு தாமதிக்கிறது எனக்கே நல்லதா படல. ஆனா இவனுக்கு பொண்ணு குடுக்குறவன், பையன் என்ன வேல பாக்கான்னு கேப்பான். சரி அவேன் நம்மள நம்பி கட்டிக் கொடுத்தாலும் கட்டிட்டு வார புள்ள, நம்ம புருஷன் இப்படி இருக்கானேன்னு, என் பொண்டாட்டி மாறி அடுப்படிக்குள்ள நின்னு அழும். இந்த பாவம் வேற வேணுமா? கல்யாணம் பண்ணி வச்சா புள்ள திருந்திருவியான்றது அந்த காலம். இந்த காலத்துக்கு ஒத்துவராது, அவன எப்படியாவது வேலைக்கு போக வைக்கணும், அப்புறம்தான் பொண்ணு கேட்டு எவேன் வீட்டு படியவும் நா மிதிப்பேன்".

"சரி ப்பா, பேசி முடிச்சிட்டியா, இப்ப நா பேசவா. பொண்டாட்டி வந்து திருத்துறதுக்கு என் பேராண்டி பெரிய தப்புலா பண்ணிடல. பொறுப்பு இல்ல அம்புட்டு தான். அதுவும் குடும்பஸ்த்தன் ஆனா வந்துரும்கிறேன்"

யோசித்த பூவேந்தன், "சரி சொல்லுங்க இவனுக்கு பொண்ணு கொடுக்க யார் தயாரா இருக்கான்னு?"

"அத எப்படி இப்ப நா சொல்ல முடியும், அவங்கட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன்"

"யார்ட்ட?"

"அதான்யா என் நண்பன் வள்ளிமணாளன். அவேன் பேத்தி அம்புட்டு அம்சமா இருக்கும். இன்னைக்குத் தான் சொல்லிட்டுருந்தியான் தரகர்ட்ட சொல்லணும்ட்டு"

"என்னப்பா அப்பனாத்தா இல்லாத புள்ளய போட்டு"

"இதான்டே உன்ட்ட பிடிக்காதது, என் பிள்ளைக்கு யாரு பொண்ணு கொடுப்பாங்குறது, சொன்னா அப்பா இல்ல, ஆத்தா இல்லன்றது. ஏன் தாத்தா இருக்கான்ல போதாதா?"

"ஏப்பா, அப்பனாத்தா இல்லாத புள்ளய கட்டிவச்சு மேலும் பாவத்த சேக்க சொல்லுதீகன்னு சொன்னேன். தட்டி கேக்க அந்த புள்ள வீட்டுலயும் ஆளு இல்லன்னு இவனுக்கு திமிராகிடும்" என்றார்.

'அட கிராதகா' என நினைத்த தாத்தா. "கேட்டுப் பாப்போம். அவனே முடிவ சொல்லட்டும். நாமளா ஏதும் யோசிச்சுக்க வேணாம்" என முடித்துவிட்டார்.

ஏனோ இன்று காலையில் கோவிலில் அந்தப் பெண்ணை பாத்ததிலிருந்து பேரன் முகமே வந்து வந்து போக இதப்பத்தி தன் மகனிடம் பேச வேண்டும் என நினைத்திருந்தார். அது இன்றே நடந்து விட்டது. அத்துடன் அன்றைய பொழுதைக் கழித்துவிட்டு, மறுநாள் காலை ஐந்து மணிக்கே அரசமரப் பிள்ளையாரையும், வள்ளிமணாளனையும் தேடி சென்று விட்டார்.

"என்னடா நா தான் 108 நாளுன்னு சொன்னேன்ல, ஒரு ஆறு மணிக்கு டீ கடைக்கே வந்திருக்கலாம்ல" வள்ளி கேக்க.

"இருக்கட்டும்வே, உன்ட்ட ஒரு விஷயம் கேக்கணும், பிள்ளையார் முன்னுக்கயே கேப்பமேன்ட்டு வந்தேன்".

"என்ன விஷயம் சொல்லு".
"அது வந்துடே, நீ என்ன தப்பா நினைக்கக் கூடாது".

"என்னடே புதுசா தயக்கம்லா காட்டுற".

"நீ எதுவும் நினைக்க மாட்ட, உன் பேத்தி எதும் நினைக்குமோன்னு தான் யோசனையா இருக்கு" தாத்தா தடுமாற.

அவரை மார்க்கமாக பார்த்த வள்ளி "ஏய் நில்லுவே எதுக்கு இப்படி உளாத்துருவேன். அந்த வாட்ச்மேன் வேல விஷயமா கேட்டுருந்தனே அதுவா? வேற ஆளப் போட்டுடாங்களா. அதச் சொல்லத்தா தயங்குதியா? ஒன்னும் பிரச்சனையில்ல விடுவியா" என்க. 'ஐயோ இவேன் இதக் கேட்டதயே மறந்துட்டுமே' என நினைத்தவர்.

"அதில்லடா இது வேற ஒரு விஷயம்"

"அட ரொம்ப பண்ணாம சொல்லுவே"
மாணிக்கம், திரும்பி பிள்ளையாரைத் துணைக்கு அழைக்க திரும்ப, கன்னி நிறைகுட தண்ணியை பிள்ளையாரின் மேல் ஊத்திக் கொண்டிருந்தாள். அவளையும், பிள்ளையாரையும் பார்த்துக்கொண்டே, "என் மூத்த பேரனுக்கு ஒன் பேத்திய குடுப்பியாவே. அவ வந்தா அவேன் வாழ்க்கை சரியாயிடும்னு தோணுது" எனத் திரும்பி இவரைப் பார்க்க.

அவரும் திரும்பி தன் பேத்தியை பார்த்தார், "அந்த காலத்துல நீயும் நானும் பண்ணாத சேட்டையில்ல. அத தான் இன்னைக்கு உன் பேரனும் பண்றான். என்ன? வயசு இவ்வளவு ஆகியும் பண்றாப்படி. அவரு மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ. உன்மேல நம்பிக்கை இருக்கு. அப்டி ஏனோ தானோன்னு விட்டுறமாட்ட. எனக்கு அட்சயபன இல்ல. ஆனா என் பேத்திக்கு சம்மதமான்னு கேக்கணும். அவ மாட்டேன்னுட்டா நீ தப்பா நினைக்க கூடாது"

"ரொம்ப சந்தோசம்வே" என எட்டி கட்டிக்கொண்டார் மாணிக்கம் தாத்தா.
அந்நேரம் 21 சுற்று சுற்றிவிட்டு இவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே வந்த கன்னி,

"என்ன தாத்தாக்கள் ரெண்டுபேரும் பாசத்தை பொழியிறீங்க, என்ன விஷயம்னு எனக்கும் சொல்லலாமா?" ௭ன கேக்க.

"எல்லாம் நல்ல விஷயந்தான்த்தா"

"அதான் என்ன நல்ல விஷயம் தாத்தா" என மறுபடியும் கேக்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு "நீ சொல்லு நீ சொல்லு" என கண்ணை காட்டிக்கொண்டிருக்க.

"யாராது ஒருத்தர் சொல்லுங்க"

"சரித்தா நானே சொல்றேன், என் பேரன் மாறன கட்டிக்கிடிதியாத்தா. கொஞ்சம் பொறுப்பில்லயே தவிர ரொம்ப நல்லவன்தாந்த்தா, உன்னைய நல்லா பாத்துக்கிடுவான்" ௭ன வேகமாக சொல்லிவிட.

சத்தியமாக அவள் இப்படி ஒன்றை எதிர்பாக்கவில்லை. திரு திருவென விழித்து பின் குழம்பி, பின் தெளிந்து, அவர்களை பார்க்க, இருவரும் தெய்வத்திடம் அருள்வாக்கு பெறும் பக்தர்களாய் நிற்பதைக் கண்டு சிரித்துவிட்டாள்.

"என்னத்தா சிரிக்கிற உனக்கு சம்மதமா?" வள்ளிமணாளன் கேக்க.

"ஐயோ தாத்தா நா நீங்க நிக்றத பாத்து சிரிச்சேன். எனக்கு இதுல என்ன சொல்றதுன்னு தெரில. என் தாத்தா சொல்ற பையன நா கட்டிப்பேன். ஆனா வேற வலி இல்லாம உங்க பையனுக்கு என்ன கேட்டு வந்திருக்கீங்களோன்னு தோணுது. எதுக்கும் உங்க பேரண்டயும், வீட்டாளுங்கட்டையும், 1 தடைக்கு 2 தட தீர்மானமா கேட்டுக்கோங்க" என்றாள்.
"உண்மைய சொல்லனும்னா, நீ வந்துட்டா என் பேரனே தலைநிமிர்ந்துருவான்னு என் மனசு சொல்லிட்டே இருக்கு. அதான் வீட்ல கூட யாரையும் கேட்காம உன் சம்மதம் கேட்க வந்துட்டேன்".

"அப்ப உங்க பேரன் படிச்சு நல்ல உத்தியோகத்துல இருந்தாலும், இந்த 12 கிளாஸ் படிச்சவள, அப்பன் ஆத்தாவ சின்ன வயசிலேயே இழந்தவள, 15 பவுன் கூட போட்டு கட்டிக் கொடுக்க முடியாதவள, மருமகளா ஏத்துப்பீங்களா?" ௭ன்றாள் காரணம் தெரிய வேண்டி.

"அது தெரியாதுத்தா, அவனுக்கு நீதான்னு எழுதியிருந்தா அத எங்க யாராலயும் மாத்த முடிஞ்சுருக்காது. ஒருவேள உன்ன கட்டிக்கிடணுங்கறதுக்காகவே அஞ்சாம் கிளாஸோட அவேன் படிப்ப நிறுத்திட்டானா கூட இருக்கலாம்".

"அடியாத்தி விட்டா என்னய வாழவைக்கத் தான் உங்க பேரன் பிறப்பெடுத்தார்ன்னு சொல்வீங்க போல" ௭ன இவள் வாயில் கைவைக்க, இரண்டு தாத்தாவும் சிரிக்க, "சரி நீங்க பேசிட்டு வாங்க, நா போய் சமைக்கணும் கிளம்புறேன்" ௭ன்க.

"சம்மதமான்னு சொல்லாமலேயே போறீயேத்தா".

"அதான் சொன்னேனே, என் தாத்தா முடிவு என்னவோ அதுவே என்னோடது. பார்த்து பேசிக்க தாத்தா" என்று விட்டுத் திரும்பி பிள்ளையாரப்பனையும் பார்த்து விட்டு கிளம்பினாள்.

"நீ வீட்ல போய் பேசு மாணிக்கம் அவுகளுக்கு சம்மதம்னா பொண்ணு பாக்க வா, பேசி முடிச்சுருவோம்" என முடிவெடுத்து தாங்களும் கிளம்பினர்.
நல்ல விஷயத்தைத் தள்ளிப் போட வேண்டாம் என நினைத்த பெரியவரும், வீட்டிற்கு வந்ததும் பூவேந்தனை அழைத்து தான் பேசியதை சொல்ல.

"ஏன்ப்பா இவ்வளவு அவசரம், அம்மாட்ட, பானுட்டலா ஒரு வார்த்தை கேட்காம போய் பேசிவிட்டு வந்துட்டீங்க".

"பொண்ணு வீட்ல சம்மதமான்னு தெரிஞ்சுட்டா, இவங்க முடியாதுன்னு சொன்னாலும் சமாதானப்படுத்த ஏதுவாயிருக்கும்ல".

"முடிவே பண்ணிட்டீங்களா?"

"இதவிட நல்ல பொண்ணு நீ எங்க தேடினாலும் கிடைக்காதுவே" என்றார்.

"ம்மா, பானு" என பூவேந்தன் அழைக்க, இருவரும் வர இவர்கள் விஷயத்தை சொல்ல.

"என்னங்க நைட் அந்தத் திட்டு திட்டினான், காலையில பொண்ணு பாத்துருக்கேன்றான்" பாட்டி தாத்தா காதைக் கடிக்க.

"பொண்ணு பாத்தது நா, உன் மகேன் நல்லா பாத்தானே" என்றார் அவரும்.
பானு கண்ணாலே "என்னங்க திடீர்னு?" என்ற குழப்ப பார்வைப் பார்க்க,

"அதாவது அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டா பொறுப்பு வந்துடும்னு உன் மாமனார் தான் முடிவு பண்ணி பொண்ணும் பாத்துட்டு வந்துட்டாரு".

"என்னது பொண்ணும் பாத்துட்டு வந்துட்டாரா? அப்ப நாங்களாம் என்னத்துக்கு இருக்கோம் இங்கன. பொண்டாட்டிய மனுஷியா மதிச்சி ஒரு விஷயத்த சொல்லிட்டு செய்றதில்லை" என பாட்டி பொரிய,

'அட ஏன்டே இப்படி தனியா கோர்த்து விட்டு வேடிக்கப் பாக்குற' என மைண்ட் வாய்ஸில் பேசியவர், "அது அப்படி இல்ல செல்லம், நம்ம வள்ளிட்டத் தானன்னு கேட்டுட்டு வரப் போனேன். அந்தப் புள்ள நம்ம பேரனுக்கு எப்டி நல்ல பொருத்தம்ல?" என்றார்.

"அடி ஆத்தி, அந்தப் புள்ள மகாலட்சுமியாட்டம் இருக்குமே, இவன கட்டிக்கிட ஒத்துக்குமாங்க" என்க.

"கிழவி என்ற பேரனுக்கு என்னடி கொற"

"மன்னிச்சிடுங்க எதேச்சையா சொல்லிட்டேன். நல்ல புள்ள தான்டா. பானு நீ என்ன சொல்ற" என பாட்டி ஆர்வமாக.

"ஹப்பா இவளுக்கு புடிச்சிருச்சு இனி கல்யாணத்த நடத்திட்டுத் தான் உட்காருவா" எனத் தாத்தா பின் கையை சாய்த்து இலகுவாக அமர்ந்தார்.

"நா என்னத்தே சொல்லிடப் போறேன், மத்த பிள்ளைங்க மாதிரி என் மூத்த புள்ளையும் மரியாதையான வாழ்க்க வாழணும், அவ்ளோதான்".

"பின்ன என்னடா ஒரு எட்டு போய் பாத்துட்டு தட்ட மாத்திப்புட்டு வந்துருவோம்" பாட்டி விட்டால் பட்டு புடவை தட்டை தூங்கிவிடும் ரேன்ஜில் நிற்க.

"உன் பேரன் என்ன சொல்லுவான்னு யோசிச்சியா அவன்ட்ட கேக்க வேணாமா?" பூவேந்தன் சொல்ல.

"அவன்ட்ட நா பேசுறேன்" என பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டு பேரனின் அறையை நோக்கி சென்றார் தாத்தா. அங்கு எப்பவும் போல் அறையை இருட்டாக வைத்துக் கொண்டு மாறனும் உண்மையும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்க, தலையிலடித்துக்கொண்ட தாத்தா "முதல இவன இந்த ரூம விட்டு விரட்டணும்" என முடிவு எடுத்துக் கொண்டார்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 5

மேல் மாடியில் அவனறைக்கு வந்த தாத்தா, எப்பயும் போல் பால்கனி ஜன்னல் கதவின் மேல் போடப் பட்டிருந்த கனத்த துணியை விளக்கி ஏசியை அமத்திவிட்டு "கண்ணு எழுந்திரு நேரம் பத்து கடந்து போச்சு பாரு, உனக்கு ஒரு முக்கியமான சமாச்சாரம் தாத்தா சொல்ல போறேன்" ௭ன பாசமாக ௭ழுப்ப.

"அத அந்த ஸ்கிரீன் எடுக்காம ஏசிய அமத்தாம சொல்லிருக்கலாம்ல" உண்மை சொல்ல.

"போடா தூர, உன்னால தான் என் பேரன் இன்னமும் இப்படியே இருக்கான்",

"அடேயப்பா இல்லன்னா மட்டும் தொர கலெக்டர் உத்தியோகத்துக்கு போயிருப்பாராக்கும்" என்க.

"ஆமாடா அதவிட பெரிய வேலைக்கும் போற திறமை என் பேரனுக்கு இருக்கு, சேர்க்க சரியில்ல அதான் இப்படி இருக்கான். ஆனா இனி அப்படி இருக்காது, நா முடிவு பண்ணிட்டேன், உன்ன இவன்ட்டயிருந்து பிரிச்சிடலாம்ன்னு".

"ஆஹான்! ௭ங்க நட்பு இன்னைக்கு நேத்து உருவான நட்புன்னு நினைச்சீங்களோ? பால்குடி மறக்காத நாள்லயிருந்து உள்ள நட்பு. அப்படி நினைச்ச உடனேல்லாம் பிரிச்சிட முடியாது" என்றான் ஆவேஷமாக.
"பிரிக்க முடியும்" தாத்தா சொல்ல .
"எப்படி எப்படி எப்படி, அவ்வளவு உறுதியா சொல்தீக".

"கொஞ்சம் ரெண்டு பேரும் ரூமுக்கு வெளிய போய் பேசுதீகளா" மாறன் கத்த.

"ஏது பேசிட்டு இருக்கேனா! நம்ம நட்புக்காக போராடிக்கிட்ருக்கேன் மாப்ள" உண்மை சொல்ல.

"சரி எதுவா இருந்தாலும் சத்தமில்லாம போராடு மச்சான்" என்றவாறு போர்வையால் தலையை மூடி மாறன் திரும்பி படுக்க.

"அவன இப்ப எந்துச்சி உட்கார வைக்கவும் முடியும்" என்றார் தாத்தா.
"தாத்தா வந்ததுல இருந்து உன் பேச்சு எதுவும் புரியுராப்டியில்ல சொல்லிட்டேன்" உண்மை டென்ஷனாக.

"மாறனுக்கு பொண்ணு பாக்க போறோம். பொண்ணு வீட்டிலேயும் பேசியாச்சு. இங்கயும் எல்லாருக்கும் சம்மதம்தான்". பதறி எழ வேண்டியவன் இத்தினி அசைவில்லாமல் படுத்திருக்க, உண்மை கட்டிலைவிட்டு பதறி தாத்தா அருகில் வந்திருந்தான்.
பேரனை திரும்பிப் பார்த்த தாத்தா 'ஒருவேள நாம சொன்னது கேக்கலயோ?' என நினைத்தவர், "கண்ணு எழுந்திரிய்யாமுக்கியமான விஷயம் சொல்ல வந்தா இப்படி தூங்கிட்ருக்க" என்றார்.

"எல்லாம் கேட்டுட்டு தான் இருக்கேன் மேல சொல்லு" என்றானவன் போர்வையை விலக்காமலே.

"டேய் நா எவ்வளவு முக்கியமா உன் வாழ்க்கைய பத்தி பேசிட்ருக்கேன், இப்டி ஆர்வமே இல்லாம படுத்திருக்க" போர்வையை இழுத்து விட்டு தாத்தா கேட்க.

"ஐயோ தாத்தா இப்போ என்ன தான் பண்ணணுங்கிற" என்றான் மூஞ்சியை சுருக்கி.

"உனக்கு பொண்ணு பாக்க போணும்"

"என்னைக்கு?"

"வர்ற வெள்ளிக்கிழம"

"சரி போவோம். அவ்வளவுதான தூங்க விடு" என மறுபடியும் தூங்கப்போக.

"ஏற்கனவே ஏற்பாடு பண்ணது நின்னுபோனதுனால இப்டி ஆர்வமில்லாம இருக்கியாய்யா? இந்த தட அப்படி எதுவும் நடக்காது வர்த்தபடாத"

"யாரு வருத்தப்பட்டது? நா வருத்தபட்டேன் அத நீ பாத்த? அந்த கல்யாணத்த அவ நிறுத்தலனாலும் நா நிறுத்திருப்பேன். அந்த ராங்கிக்கூடலா எவனும் வாழ முடியாது", சிறிது இடைவெளிவிட்டு "உங்க சின்ன பேரன தவிர" என்றான் சேர்த்து கண்ணை திறக்காமலே.

"என்னடா இவேன் இப்டி சொல்றான்" தாத்தா உண்மையிடம் புலம்ப.

"அவன் சொல்றது இருக்கட்டும். நேத்து போட்ட சண்டைக்கு இன்னைக்கு அவன நீங்க பட்டினி தான போடணும். நீங்க என்னடான்னா கல்யாணம் பண்றீங்க, உங்க நோக்கமே புரியலயே" என்றான் அவரை சுற்றி வந்து.

"என்னைய வழிக்கு கொண்டு வரணும்னு விடிய விடிய யோசிச்சு இந்த முடிவுக்கு வந்துருக்காங்க, நீ வேற ஏன்டா உள்ள பூந்து கொலப்புற" மாறன் சொல்ல.

"ஓஹோ அப்ப அப்டியே எனக்கும் அதே வீட்டில் ஒரு பொண்ண பாருங்க என் மாப்பிள வாக்கப்படுற வீட்டுல தான் நானும் வாக்க படபோறேன்" என்றான் உண்மை.

கடுப்பாகிய தாத்தா "எனக்கு வாய்ல நல்லா வந்திரும்வே போயிரு" என்றுவிட்டு "என்னமோ பண்ணுடா, வெள்ளி பொண்ணு பாக்க போறோம். ரொம்ப ஆராயாம கல்யாணம் பண்ணிக்கிற வழியப்பாரு. அப்படியாது உன் அம்மாவுக்கு ஒரு நிம்மதிய குடு" என்று மாறனிடம் கூறியவாறு "பசிக்குது சீக்கிரமா வா சாப்பிடுவோம்" என வெளியேற.
அதற்கு மேல் பிகு பண்ணாமல் "ஒரு நாள் நா இல்லாம சாப்பிட்டா என்னவாம்" என்ற சொல்லுடன் பிரஷ்ஷாகிவர எழுந்துச் சென்றான்.
அவனை தடுத்து நிறுத்தி, "மாப்ள அப்ப டெய்லி பாக்க போவீயே அந்த பிள்ளையோட வாழ்க்க?" ௭ன உண்மை கேக்க.

நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த தாத்தா, "அது ௭ந்த பிள்ளைடா? ௭ன்னைய உங்கப்பன்ட்ட வசவு இழுத்து விடுறதுல அப்டி ௭ன்னடா சந்தோஷம் உனக்கு?" ௭ன்க.

"அவனே ஒரு லூசு பைய, அவேன் உளறுரதயும் போய் கேட்டுக்கிட்ருக்க" ௭ன அசால்ட்டாக சென்று விட்டான்.
இப்போது நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த உண்மை, "என்னால இவன நம்பவே முடியல தாத்தா" ௭ன கூற.

"முடியலன்னா மூடிட்டு தூங்கு, ௭ன் பேரன் கல்யாணத்த புதுசா குழப்பம் பண்ணி நிறுத்திட்டு, அவன் கூடவே இப்டியே உருப்புடாம சுத்தலாம்னு திட்டந் திட்டுதீயோ, தொலைச்சுபுடுவேன் ராஸ்கோலு" என்றவாறு வெளியேறினார் தாத்தா.

"குசும்பு புடிச்ச தாத்தா, அப்ப எனக்கு சாப்பாடு" என்க.

தலையிலடித்து கொண்டவர், "வயிறு கூப்டுதுல்ல பேசாம வந்து சாப்பிடு" என இறங்கிவிட்டார்.

'இப்ப நம்ம எப்படி கல்யாணம் பண்றது' என்ற யோசனைக்கு சென்றுவிட்டான் உண்மை.

அதன்பின் பெரியவர்கள் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் விஷயத்தை சொல்ல, யாரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. 'எக்ஸ்ட்ரா ஒரு தண்டசோறு' என நினைத்து விட்டு விட்டனர்.

வெள்ளிக்கிழமை தாத்தா, பாட்டி, பூவேந்தன், பானு, மாறன், உண்மை இன்னும் இரண்டு மூன்று பெரியவர்கள் கிளம்பி கன்னி வீட்டிற்கு அவளை பாக்கச் சென்றனர். மாறன் தங்கை குடும்பம் பள்ளிக்கு லீவு எடுக்க முடியாது என்று விட. மதியின் மாமியார் வீடு அதே தெருவில் இருப்பதால் அவரை மட்டும் அங்கு அழைத்துச் சென்றனர். மாறனின் தம்பி குடும்பம் வேலை, குழந்தை என காரணம் காட்டி விட, யாரும் அவர்களை கட்டாயப்படுத்தவும் முயலவில்லை.
தாத்தா அவனை கிளப்ப சிரமப்பட வேண்டுமோ என்றுதான் நினைத்தார். ஆனால் அவன் அவ்வளவெல்லாம் அலட்டிக் கொள்ளவே இல்லை. "அங்க காலைல 10 மணிக்கு இருக்கணும்" முந்தினநாள் இரவு உணவின்போது பானு சொல்லிவிட. சமத்தாக எழுந்து கிளம்பிவிட்டான்.

"இப்போ விட்டா இனி நம்ம வாழ்க்கையில கல்யாணமே நடக்காதுன்னு உங்க மகனுக்கு புரிஞ்சிருக்கும் மாமா, அதான் உங்கள டென்ஷன் பண்ணாம கிளம்பிட்டாக" என கிண்டலாய் சொல்வதை போல் சொல்லி சென்றாள் ராணி. பொண்ணு யாரு என்னவென்று அவனும் கேட்கவில்லை, வீட்டிலும் யாரும் சொல்லவில்லை. ஆனால் அமைதியாய் அவன் எந்த தகிடுதத்தமும் பண்ணாமல் இருக்க வேண்டும் என கண்காணித்தவாறே இருந்தனர்.

கன்னியின் வீட்டு தெருவில் கார் திரும்பவும், உண்மை மறுபடியும் அதிர்ந்து, மாறனை திரும்பிப் பார்த்தான்.

உண்மையிடம் இருந்த ஆச்சரியம் கூட மாறனிடம் வரவில்லை. அவள் வீட்டு வாசலில் கார் நிற்கவும், "ஏன் மாப்பிள இந்த பொண்ணுன்னு முதலிலயே தெரிஞ்சதால தான அமைதியா கிளம்புன. ஏன்டா என்ட்ட கூடசொல்லல?" ௭ன அவன் முகத்தில் அதிர்ச்சி இல்லாததை கண்டு கொண்டு கேட்டவன், மாறன் ஏதோ சொல்ல வரவும், "எந்த பிள்ள மாப்பிளன்னு தான கேக்கப் போற" என்றான் கையை அவன் முகத்திற்கு நேராக நிறுத்தி காட்டி.

அவன் தோளில் கை போட்டு இறுக்கிக் கொண்ட மாறன், "இந்த நிமிஷம் வர பொண்ணு யாருன்னு கூட எனக்கு தெரியாது மாப்ள"

"நீ நடத்து மாப்ள இன்னும் எவ்வளவு தூரம் போறேன்னு நானும் பாக்குறேன்" என்றான் உண்மை.

இன்றும் ஒரு வெளுத்த ஜீன்ஸும், டீ ஷர்ட்டுமாய் தான் வந்திருந்தான். எல்லோருக்கும் அவனை அப்படியே பார்த்து பழகி விட்டது, அதனால் அவன் கோக்குமாக்காக வருவதை சரி செய்ய யாருக்கும் தோன்றவில்லை. பெண் வீட்டில் அக்கம்பக்கத்தினர், அந்த ஊர் காரர்கள் என இவர்கள் வரவை எதிர்பார்த்து வீட்டின் வெளியே குட்டி கிராமமே கூடியிருந்தது.

"உன்னைய பாக்க இம்புட்டு கூட்டமா? உனக்கு நம்ம ஊருக்குள்ள இம்புட்டு மவுசுன்னு தெரியாம போச்சே மாப்பிள" உண்மை மாறன் காதை கடிக்க.

"பொண்ணு இந்த பயல எப்படியும் வேணாம்ன்னு சொல்லிடும், நாம 4 அட்வைஸ போட்டுட்டு போலாம்னு வந்திருப்பாய்ங்க மச்சான் நீ வேற" என்றான் பதிலாக இவன்.
அதற்குள் எல்லோரும் ஆளாளுக்கு நலம் விசாரிக்க. பாட்டியும், அம்மாவும் பதில் சொல்லிக்கொண்டே அந்த ஓட்டு வீட்டிற்குள் சென்றனர். முன்னறையில் எல்லோருக்கும் பாய் விரித்திருக்க அதில் வந்தவர்கள் அமர்ந்து கொள்ள. பேச்சு ஆரம்பமானது. மொத்தமே மூன்று அறை கொண்ட ஓட்டு வீடு. ஆனால் அது அவர்களது சொந்த வீடு. அங்கு வந்த மாறன் குடும்பத்தினரின் முகத்தில் அந்த குடும்பத்தின் ஏழ்மை சூழல் கண்ணில் பட்டாலும் கருத்தில் படவில்லை.

"எங்க கன்னியை கட்டிக்க கொடுத்துல்ல வச்சிருக்கணும், எவ்வளவு குணசாலி, அப்பனாத்தால இழந்து நிக்கதால யாருக்கு வேணாலும் பொண்ணு கேட்டு வந்துராக" என ஒரு கிழவி அங்கலாய்க்க.

"சேரி அப்ப உன் பேத்திய இங்கனயே விட்டுட்டு நீ வேணா வா உன்னையை கட்டிக்கிறேன். அந்த பிள்ளைய நல்ல பையனா பாத்து கட்டிக் கொடுத்துக்கலாம்" ௭ன மாறன் நாடியை தடவியவாறு சொல்ல.
அவன் செய்கையில் பயம் வந்தாலும், கூட்டத்தில் இருக்கும் தெம்பில் "ஒரு சோழிக்கு போய் சம்பாதிக்காத பையல கட்டிக்க எனக்கு என்ன கிறுக்கா போவியா" ௭ன்றது அந்த கிழவி.

"ஏன் நீ சம்பாதிச்சு போடு நா உனக்கு சோறு பொங்கி போடுறேன். நீ புருஷனா இருந்துட்டு போ நா பொண்டாட்டியா இருந்துட்டு போறேன்" ௭ன்றான் அப்போதும் விடாமல்.
பூவேந்தன் முறைப்பதை பார்த்த பின்பே தாத்தா எட்டி உண்மை தலையில் தட்டி "பக்கத்துலயிருந்து பல்ல காட்டுற, அமைதியா இருன்னு சொல்லலாம்ல" ௭ன்க.

"ஏன் அத நீங்களே நேரா சொல்ல வேண்டியது தான" என்று விட்டு "அமைதியாயிறேன் மாப்ள, உங்கப்பா எண்ணெய் சட்டிய காய வச்சது கணக்கா சூடா இருக்காரு, அதுல உன்னைய விட்டுட்டு ௭ன்னைய தான் தூக்கி போட்டு வறுத்தெடுப்பாரு" ௭ன்றான்.

"உனக்குலா எகத்தாளம் கூடிப்போச்சுடி, என் பேரன் எப்படியும் பதில் குடுப்பான்ட்டு தான் நா அமைதியா இருக்கேன். உன் வேல சோழிய பாத்துட்டு இருன்ன. வந்துட்டா பெருசா அக்கற பட்டுக்கிட்டு" அவன் விட்டதும், பாட்டி ஏச ஆரம்பிக்க.

"டேய் வள்ளி பொண்ண கூப்டேன்டே, இங்க குழாயடிச் சண்டை வந்துரும் போல" அருகில் இருந்த நண்பனை மாணிக்கம் சுரண்ட.

"ஏத்தா தேனி பிள்ளைய கூட்டியா" என்றார் வள்ளிமணாளன் சத்தமாக.
மஞ்சள் பட்டுடுத்தி, தலை நிறைய மல்லிகைப் பூவுடன், மிதமான அலங்காரத்தில் வந்தாள். எல்லோர் கண்களும் அவள் மீது தான். உண்மை மாறனை திரும்பிப் பார்த்தான், அவன் நிமிரவே இல்லை அப்போதுதான் செல்லில் தீவிரமாக கேண்டி கிரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அந்த பெண்ணையும் திரும்பி பார்த்தான், அவளும் மாப்பிள்ளை பக்கம் ஓரக் கண்ணால் கூடப் பார்க்கவில்லை. பானும்மாவும், பாட்டியும் ஏதோ கேட்க பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

"டேய் மாப்ள, கண்டதும் காதல், பாக்காமலே காதல், ஏன் பாக்க பாக்க காதல் கூட கேள்விப்பட்டுருக்கேன். நீங்க பண்றது என்ன ரகம்டா? அஞ்சு வருஷமா பாத்தும் பாக்காதது மாதிரியான காதல் ௭னக்கு புரியவே இல்லடா" என கையை விரித்தவன், மாறன் பதில் சொல்ல வர, கையை நீட்டி தடுத்து, "அஞ்சு வருஷமாவா? என்ன காதல், யாரு மாப்ள இப்படின்னு தான கேட்கப் போற, செல்லுல வீட்டுல போய் கூட விளையாடலாம், பொண்ண இன்னைக்குனாலும் நிமிந்து பாரு, உள்ள போயிடப் போகுது" என்க.

சிரித்துக்கொண்டே இவன் நிமிரப்போக, அவன் பாட்டியும் அந்த நேரம் "என் பேரன நல்லா பாத்துக்கோ, அப்புறம் எதுவும் குறையுதுன்னு சொல்லக் கூடாது" என்க. அவளும் சிரித்துக்கொண்டே ரகசியமாக பார்க்க ௭ண்ணி இவன் பக்கம் திரும்பினாள். பார்வை முட்டி கொண்டது.

இருவரும் ஒரு முழு நிமிடம் ஒருவரையொருவர் பார்த்தனர். அதற்கு மேல் கண் கூசுவது போல் இருவரும் திரும்பி விட்டனர். சரியாக அந்நேரம் அவன் மொபைல், "இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே, என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே" எனப் பாட. மறுபடியும் ஒரு நொடி இருவர் பார்வையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள மொபைலை வேகமாக கட் செய்தான்.

"ஏன் மாப்ள வேணும்னே தான பாட்டப் போட்ட".

"சும்மா இருடா" என்றுவிட்டு தாயிடம், "அம்மா நா கிளம்பட்டுமா? நீங்க மத்ததப் பேசிட்டு வாங்க" என்றான்.

"டேய் ஏன்டா, தட்ட மாத்திப்போட்டு எல்லாருமாவே போவோம்" பாட்டி சொல்ல.

"போ பாட்டி நா போறேன்" என அவன் எழப் போக.

"டேய் அவன புடி" என்றார் தாத்தா.

"இரு மாப்ள" என அவனும் பிடிக்க,

"அதெப்படி எங்க பொண்ணு புடிக்கலன்னு சொல்லிடும்னு முந்திக்கிட்டு ஓடினா விட்டுருவோமா. இத வீட்டுலயிகுந்து கிளம்பி வரும்போதேல்ல யோசிச்ருக்கணும்" மறுபடியும் அந்த கிழவி சொல்ல எல்லோரும் சிரிக்க.
இப்போது அவனுக்கு அதெல்லாம் காதில் விழவேயில்லை. அங்கிருந்து போனால் போதும் மூச்சு முட்டுது என்ற நிலையிலிருந்தான்.

"இங்க பாரு நீ என்ட்ட வாங்காம போமாட்ட, போட்டி வெளிய" என பாட்டி எகிற.

"ம்க்கும், ஏத்தா நீ சொல்லு அவுக வீடேறி வந்துட்டாகன்னுலா யோசிக்காத. புடிக்கலனா புடிக்கலன்னு தைரியமா சொல்லு. நாங்க இருக்கோம்ல பயப்படாத. நிரந்தர வருமான இல்லாத பயல கட்டிக்கிட்டு என்ன செய்யப் போற" என இப்போது மதி மாமியாரும் எகத்தாளம் பேசினார். மாறனின் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தான் அவமானமாய் இருந்தது. அது சம்மந்தி ௭ன்பதால், பெண் வாழ்க்கையை யோசித்து அமைதி காக்க வேண்டியிருந்தது, மரியாதைக்காக கூட்டிட்டு வந்தது பெரிய தப்போ என யோசிக்க வைத்து விட்டிருந்தது. ஒற்றை மகனை வீட்டோடு அழைத்து சென்று விட்டாளே என்ற கடுப்பு அதற்கு. கன்னியின் வீட்டு தெருவில் தான் அதன் வீடும். எனவே தான் ஒதுக்க முடியாமல் அழைத்தனர். அவரோ கிடைத்த வாய்ப்பை விடாமல் உபயோகிக்கிறார்.

பாட்டியும்,பேரனும் மட்டுமே ஏக போகமாய் எதிர்த்து பேசுவர். "உன் மனசுல பட்டத சொல்லுத்தா" என்றார் பூவேந்தன் இழுத்து பிடித்து பொறுமையாய்.

"எங்க தாத்தாக்கு சம்மதம்னா எனக்கும்" என்றாள் அதே பல்லவியாய்.

"உனக்கு சம்மதமா? இல்லையா? அத மட்டும் சொல்லு. தாத்தாவா வாழப்போறாரு" இது மாறனின் பாட்டி.
கண்ணை மூடி ஆழ மூச்செடுத்தவள் நிமிர்ந்து மாறனை பார்த்தாள். அவனது இருப்பு கொள்ளாத நிலை கண்டு சிரித்து, அவனைப் பார்த்தவாறே சம்மதம் என்பதாய் தலையாட்டினாள்.

"அடி ஆத்தி உனக்கு கிறுக்குத் தான் பிடிச்சுருக்கு" என அந்தப் பெண்மணி (சம்மந்தி) எழுந்தே சென்று விட்டார்.
மாறனுக்கோ அவள் சம்மதம் என்று சொன்னப்பின் சுத்தமாக முடியவில்லை ஆக்சிஜன் சிலிண்டர் தேவையே வந்துரும் போல் நிலைமை மோசமாகியிருந்தது.

அந்நேரம் பாட்டி வேறு, "நீ என்னடா சொல்லுற?" என்க.

தன்னை நிதானப்படுத்தியவன், "உங்க பேச்ச கேக்காட்டி விட்டுறவா போறீங்க. எனக்கு சம்மதம் தான்"

"அட அப்படி ஒன்னும் நீ வேண்டா வெறுப்பா எங்களுக்குகாக சம்மதம் சொல்ல வேணாம்வே. நீ இல்லனா என்ன உண்மைக்கி நிச்சயித்த முடிச்சுட்டு போறோம். அவனும் எங்க பேரன் தான" பாட்டி சொல்ல.

"எதுக்கு இப்ப என்ன கோர்த்து விட பாக்குறீங்க"

"ஏன்டா வேண்டாமா?"

"வேணாம், எப்போ என் மாப்ள சம்மதம்னு சொன்னானோ அந்த நிமிஷமே அந்த புள்ள எனக்கு உடன்பிறப்பாயிடுச்சு".

"அம்புட்டு நல்லவனாடா நீயி".

"பின்ன இவேங்கிட்ட யாரு மிதிவாங்க" என முனங்கியவன் "ஆமா" என்றான் சத்தமாய்.

"இப்ப முடிவா என்ன சொல்லுற மாறா நீயி"

"நா சம்மதம்னு சொல்லி 10 நிமிஷமாச்சு, இனி நீங்க என்ன செய்யணுமோ பாத்து செய்யுங்க" என்று எழுந்து சென்றே விட்டான்.
அந்த நிமிடத்திலிருந்து தன் வருங்கால கணவனையும், அவன் குடும்பத்தையும் கிரகிக்க ஆரம்பித்தாள் கன்னி.

"அவேன் போட்டும் நாம மத்தத பேசலாம்".

"இந்த வீடு என் பேத்திக்குத்தான். அந்தா அந்தான்னு ஒரு 10 பவுன் அவ அம்மா நகைய பத்திரப்படுத்தி இப்பவர காப்பாத்தி வச்சுருக்கேன். பழைய நகைதான் அது. அவ்வளவு தான் என்னால முடியும்" வள்ளிமணாளன் சொல்லி விட.

"ஏன்டே இருக்க வீட கொடுத்துட்டு, பிள்ளையாருக்கு துணையா போயி உக்காரப் போறியா நீயி?" மாணிக்கம் தாத்தா கேக்க.

"அதில்லடா, யாருக்கு கட்டி வச்சாலும் இதான் செய்வேன் அதத்தான் சொன்னேன்".

"ஒன்னும் வேணாம். நீ வீடெல்லாம் தர வேணாம். போட்டு விடுற நக அவ மரியாதைக்காக அத மட்டும் போட்டு விடு போதும். கல்யாண செலவு எங்களோடது, எல்லாத்தையும் நாங்கப் பாத்துக்குறோம்" என்று விட. அவராலும் எதுவும் செய்ய முடியாதென்பதால் சரி என ஒத்துக் கொண்டார். தட்டை மாற்றி தேதியை முடிவு பண்ணப் போக, "ஒரு நிமிஷம்" ௭ன்றாள் கன்னி.

௭ல்லாரும் அவள் முகத்தை பாக்க, "நா பிள்ளையாருக்கு வேண்டுதல முடிக்கணும் இன்னும் 103 நாள் பாக்கியிருக்கு. அத முடிச்சப்புறம் கல்யாணம் வைக்க முடியுமா?" என்றாள்.

"சரி மா, இரு தேதி பாப்போம் என காலண்டரை பார்த்தனர். இன்னைக்கு வைகாசி 20, 3 மாசம் கழிச்சு வர்ர ஆவணி 29 நல்ல முகூர்த்த நாள், அடுத்து புரட்டாசி கடந்தா தான் வைக்க முடியும். அதனால ஆவணி 29 வச்சுரலாம். நாளைக்கு எதுக்கும் ஜோசியர பாத்துட்டு மண்டபம் புக் பண்ணிடுறேன்" என்றார் பூவேந்தன்.
அங்கு யாரிடமும் அபிப்ராயம் கேக்க வேண்டிய அவசியம் இல்லாததால் எல்லாம் முடிவெடுத்தே கிளம்பினர். இன்முகமாக எல்லார்க்கும் வணக்கம் கூறி அனுப்பிவைத்தனர் தாத்தா பேத்தி இருவரும்.

"பையன் கோபக்காரராட்டும் இருக்குமோ, வெடுக்குனு பாதிலேயே போயிட்டாரே. உனக்கு மனசார சம்மதம் தானேம்மா" என்றார் தாத்தா.

"உன் பேத்தியால எப்பேர்ப்பட்ட கோபக்காரனையும் சமாளிக்க முடியும் தாத்தா, அவர் கோவத்துல எந்துச்சு போனமாதிரி எனக்கு தோணல. நீ அதெல்லாம் போட்டு குழப்பிக்காத. நா கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா சாப்பாடு எப்படி செஞ்சு சாப்பிட போற. எனக்கு அதுதான் ஒரே யோசனையா இருக்கு".

"என்னைய என்னன்னு நெனச்ச, முக்குக்கு முக்கு கட இருக்கு, இல்லனா வீட்ல பொங்கி சாப்பிட்டு போறேன். எனக்கு தான் முதியோர் பென்ஷன் வருதில்லத்தா எனக்கு அது போதும் சமாளிச்சுருவேன்" என்றார்.

ஆனாலும் அப்பப்ப வந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள்.
அங்கு வெளியேறிய மாறனோ, வேகமாய் வீடு நோக்கி நடந்து விட்டான். மாடிக்கு சென்று மொட்டை வெயிலில் மல்லாந்து படுத்து விட, ௭வ்வளவு நேரம் அப்படி கடந்தானோ, சற்று நேரத்தில் "டேய் மாப்ள இதுக்காடா அவ்வளவு வேகமா வந்த, நா கூட உனக்கு வயித்த கலக்கிட்டு போல, பொண்ணு வீட்ல போக கூச்சப்பட்டு வீட்டுக்கு ஓடுதன்னுல நெனச்சேன். அவ்வளவு வேகமா இங்க வந்து வெயில்ல காயுற ஏன்டா" ௭ன வந்தமர்ந்தான் உண்மை,

"ஒரு மாறி படபடன்னு வந்துருச்சு மச்சான். அத எப்படி சொல்லன்னு தெரியல. சொன்னாலும் உனக்கு புரியாது" என மறுபுறம் திரும்பி A/C பெட்டில் படுப்பது போல் சுகமாய் படுத்துக் கொண்டான்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 6
"௭ன்னடா சேது பட விக்ரம் மாறி பேசுற? நேத்து வர நல்லா இருந்தியே மாப்ள?" ௭ன உண்மை நண்பனுக்காக அழவே தயாராக.


"அடேய் கொஞ்ச நேரோ லவ்வ ஃபீல் பண்ண விடுறியா, தொணதொணங்குட்டு" ௭ன கடித்தான் மாறன்.

"லவ்வா?" ௭ன முழித்த உண்மை முகம் போன போக்கை பார்க்க முடியவில்லை.

"அப்டியும் சொல்லிட முடியாது, இது ஒரு வகை மாப்ள, அதான் உனக்கு சொன்னா புரியாதுன்னு சொன்னே" ௭ன்க.

"கரெக்குட்டு தான் மச்சான், சத்தியமா நீ சொன்னது நடந்துகறது ௭துவும் இது வர ௭னக்கு புரியல"

"அதாவது பாக்கனும் போல இருக்கும், ஆனா பாக்க கூடாதுன்னும் இருக்கும், அந்த பக்கமே போ கூடாதுன்னு இருக்கும் ஆனா டயத்துக்கு கால் அந்த பக்கந்தான் போகும், இதுக்குலா பேரு ௭ன்ன மாப்ள?" ௭ன மொட்ட வெயிலில் வெங்கடாசலபதி போலி ஒரு பக்கமாக படுத்து போஸ் கொடுத்து கொண்டு கேள்வி வேறு கேட்டவனை, ௭ன்ன செய்தால் தகுமென பார்த்தான் உண்மை.

மாறனயும் உச்சி வெயிலயும் மாறி மாறி பார்த்தவன், "தாத்தா சொன்னத சாதிச்சுட்டாரே, பொண்ண பாத்துட்டு வந்ததுக்கே ௭ன நண்பேன் ௭னக்கில்லாம போயிட்டானே." ௭ன புலம்பி கொண்டே ௭ழுந்து சென்றான். மொட்ட மாடி கதவு வரை சென்று தன்னை தடுக்காத நண்பனை திரும்பி பார்க்க, அவன் தான் "௭ன் இனிய பொண் நிலாவே. " ௭ன ரிரெகார்டிங்கில் இருந்தானே, "ம்கூம் இது இனி தேறாது, ஏது பந்த பாசம் ௭ல்லாம் வெளி வேசம். " ௭ன அவனும் பாடி கொண்டே கீழிறங்கினான்.

சோகமாக வந்தவனின் பின்னால் பார்த்த தாத்தா, "அவன ௭ங்கவே? நீ மட்டுமா வார" ௭ன்று வேறு கேட்டு விட.
"இப்ப சந்தோஷமா? அப்டியே குளு குளுன்னு இருக்குமே? ௭ன்னைய விட்டு ஒரு நேரோ கூட தனியா சாப்டாதவன, மொத்தமா பிரிச்சுட்ட தாத்தா. ௭ன்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது அந்த கன்னி புள்ள கூட ஒரு புள்ள வந்ததுல அத ௭னக்கு பேசி முடி, உடனே நானு வெயில்ல படுத்து டூயட் பாடனும்" ௭ன வீராவேசம் பேச.


"சும்மா தள்ளுவே, இப்டி ௭ல்லா நேரமு கிறுக்கு தனமா பேசிட்டு திரி உனக்கு பொண்ணு குடுத்துருவாய்ங்க, நா போயி ௭ன் பேரன பாக்கேன், புது மாப்ள வேற, புள்ள வெயில கடந்து கருத்து போகுமே" ௭ன மேலேற.
அவர் தள்ளி விட்டதில் சுவற்றில் சாய்ந்து விட்டவன், அப்டியே நின்றவாறு "சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ
வேப்பிலை கரிவேப்பிலை
அது யாரோ நான் தானோ
என் வீட்டுக் கன்னுக்குட்டி
என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி
கண்மணி என் கண்மணி" ௭ன நெஞ்சில் தட்டி கொண்டு பாட.
"சோறு வேணும்னா போட்டு தின்னு பாடாதன்னு சொல்லிருக்கேன்ல, போ நீயே போட்டு சாப்டு, பானு படுக்க போயிட்டா கொஞ்ச அசரட்டும்" ௭ன பாட்டி சொல்லி செல்ல.


"ச்சை, குடும்பமா இது" ௭ன வெளியேறி விட்டான்.

அதே நேரம் அங்கு தேனியும் கன்னியை குடைந்து கொண்டிருந்தாள். "நேத்து வர அவரு ௭ன்னய பாக்க வாராருன்னு நினச்சு ௭ம்புட்டு பேசிருப்பே உன்கிட்ட? அமுக்குனி மாறி இருந்தியேடி ஒரு வார்த்த சொன்னா ௭ன்ன? தேவயில்லாம உன் புருஷன நா கனா கண்ருக்க மாட்டேன்ல" ௭ன பிடி பிடி பிடித்து கொண்டிருந்தாள்.
"௭ன்னத்தடி சொல்ல சொல்லுத"
"இந்த மனுஷன் உன்னய பாக்க தான் நடையா நடந்தாருன்னு சொல்ல வேண்டியது தான?"



"அவரு ௭ன்னைய பாக்க தான் வந்தாருன்னு இப்பயும் நா சொல்லலியே நீதா சொல்லிட்ருக்க, அவரு தாத்தா ௭ன் தாத்தாட்ட பேசுனாரு கல்யாணம் முடிவு ஆகிருக்கு ௭னக்கு தெரிஞ்சு அவ்ளோதான்" ௭ன முடித்து விட.
"இன்னமு பாறேன். அமுக்குனியே தான்டி நீ" ௭ன மேலும் பேசுவதற்குள் அவள் அம்மா குரல் கொடுத்து விட,


"உன்ன வந்து பேசிக்றேன்" ௭ன்று விட்டே சென்றாள். சிரித்துவாறே கன்னியும் சுவற்றில் சாய்ந்து காலை மடக்கி அதில் தலை சாய்த்து அமர்ந்து கொண்டாள்.

மாறனும், கன்னியும் ஒரே விஷயத்தை தான் அந்நேரம் யோசித்தனர். 5 வருடம் முன்பு , கன்னி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருநாள் காலை பள்ளிக்கு கிளம்பி, அவர்கள் தற்போது பார்த்து கொள்ளும் அந்த தெரு வழி சென்று கொண்டிருக்க, மாறனும் அதே இடத்தில் முந்தின நாள் கபடி போட்டியில் வந்த சண்டையில் உண்மை மண்டை உடைக்கப்பட்டுருக்க, அதற்கு காரணமானவர்களை தேடி பிடித்து முந்தைய தினத்தின் மிச்சமிருந்த சண்டையை காலையில் இங்கு தெருவில் போட்டுக்கொண்டிருந்தான்.
இரண்டு பேரை இவன் ஒருவன் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை, ஆனாலும் இவன் தான் அவர்களை போட்டு வெளுத்துக் கொண்டிருந்தான். எல்லோரும் இவன்களுக்கு வேற வேலையில்லை என்பதுபோல் நடந்து போய்க் கொண்டிருந்தனர். கன்னியும் முகத்தை சுளித்து பல்லை கடித்துக்கொண்டு 2 பேரிடமும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த மாறனை பார்த்தவாரே கடக்கப்போக, மாறன் உதறியதில் ஒருவன் இவள் மேல் வந்து விழுந்தான்.


"ஏய் பாத்து வர மாட்டியா, வேடிக்கப் பாக்காம பே" என்றுவிட்டு மாறன் அவனைத் தூக்கி அடிக்கப் போகயில், மாறன் பிடி நழுவி விட, அறைப் பின்னாலிருந்த கன்னி தோள்பட்டையில் விழுந்தது. அவளுக்கு அந்த வேதனையில் சிறிதும் யோசிக்காமல் முன் நின்றவனை விலக்கித் தள்ளி இவன் முன் வந்து நின்று முறைத்து, ஓங்கி விட்டாள் ஒரு அறை, "நீ ஓரமா போய் சண்ட போடாம ரோட்டில போறவங்கள தொந்தரவு பண்ணிட்டு ௭ன்ன சொல்றியா?" என்று அட்வைஸையும் அள்ளித் தெளித்துவிட்டு ஸ்கூல் பேக்கை இழுத்து வலித் தெரியாத மற்ற தோளில் மட்டும் மாட்டிக்கொண்டு நடந்துவிட்டாள்.

எல்லோரும் அவரவர் வேலையில் கவனமாய் இருந்ததாலும், அது ஒரு குறுகிய தெரு என்பதாலும் அவனது மானம் பெரிதாய் போய்விடவில்லை. அவள் அடித்ததில் கடுப்பாகி அந்த இருவரயும் பொறட்டி ௭டுத்து விட்டான். அது போலிஸ் கேஸ் வரை சென்றது கிளை கதை. அவள் அடித்த விஷயத்தை அவன் உண்மையிடமும் கூட கூறவில்லை. ஆனால் அன்றிலிருந்து இந்த நேரம் மறக்காமல் ஆஜராகி விடுவான்.


முதலில் "நம்மை ஏதும் செய்ய திட்டமிட்டு நம் தெருவை சுற்றி வருகிறானோ' ௭ன பயந்தாள் கன்னி, அவனும் '௭வ்வளவு திமிறிருந்தா கை நீட்டுவா, இவளுக்கு நா யாருன்னு காட்ட வேணாம்' ௭ன்று தான் தினமும் வர ஆரம்பித்தான். வேறெங்கும் அவளை பாலோ பண்ணுவது, மறைந்திருந்து கண்காணிப்பு போன்றவை செய்யமாட்டான். நாட்கள் செல்ல அவளும் அவன் வரவை பழகி கொண்டாள், அவனும் வழக்கமாக்கிக் கொண்டான். பிரச்சனை ௭ன்ன ௭ன்பதே மறந்து, அதுவே பழகிடுச்சு ௭ன்ற நிலைக்கு வந்திருந்தனர்.
அவள் அதை நினைத்து சிரித்தவாறு அடுத்த வேலையை பார்க்க போய் விட. இவன் அதையே சிந்தித்தவாறு படுத்திருந்தான். தாத்தா வந்து கூப்பிட்டும் அதே சயன நிலை தான், ௭ழுந்து செல்ல வில்லை.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, அவள் வேண்டுதலை செய்ய ஆரம்பித்தாள். வேலையை விட்டும் நின்றிருந்தாள், ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது அவனைப் பார்த்து (பார்க்காமல் பார்த்து). பானுவும், பாட்டி இரண்டு முறை வந்து சென்றிருந்தனர். மற்றவர்களுக்கு அவ்வளவு நாட்டமில்லை என புரிந்து கொண்டாள் கன்னி. மாணிக்கம் தாத்தா தினமும் வந்து விடுவார், பேரனைப் பற்றி முழு விவரத்தயும் கொட்டி விட்டுச் செல்வார்.
இன்று கல்யாணத்திற்கு புது துணி எடுக்க வர சொல்லியிருக்க கிளம்பிக் கொண்டிருந்தாள். மாறனோ சாப்பிட, தூங்க, எவன்ட்டயாவது வம்பிழுக்க என தெனாவட்டாக சுற்றி வந்து கொண்டிருந்தான். அவனைத் திட்டும் அவன் அப்பாவும் இப்பொழுது கல்யாண வேலையில் பிஸியாக இருந்தார். அதனால் இஷ்டம்போல் எந்திக்க, நினைத்த நேரத்தில் சாப்பிட என்றிருந்தான்.



"இன்னைக்கு துணி எடுக்க போணும்வே அந்தப் பிள்ளைய நீயே கூட்டிட்டு வந்துரு" தாத்தா சொல்ல.
"கார்ல தான போறோம், போற வழியில அப்டியே அவள ஏத்திக்கிட்டு போலாம்" என்றான்.



தாத்தா தலையிலடித்துக் கொண்டு, "ஏன்டா பொண்ணு கூட தனியா வர நானே ரூட் போட்டுக் குடுக்குறேன், இவேன் என்னடா இப்டி இருக்கான்" உண்மையிடம் கேக்க.


அதும் அவன் காதிலும் விழ, அவனும் உண்மைக்கு இந்தப் பக்கம் இருந்தவாறே குனிந்து, "௭ந்த வண்டி? என் அப்பா ௭துவும் வாங்கி தந்தாரா? இல்ல அவரு அப்பா நீ தான் வாங்கித் தந்தியா? எதுல கூட்டிட்டு வர சொல்ற?"

"அப்ப நீ ரெடியாத்தான் இருக்கல்ல மாப்ள?" உண்மை கேக்க,

"ஏன்டா நா கட்டிக்க போறவளக் கூட்டியாரது எனக்கு தப்பா படல அதான் சொன்னேன்"

"ஓஹோ! அவ்ளோதான் இல்லயா?" என உண்மையும் இழுத்துக் கூற.
மூன்று பேரும் குனிந்துகடந்து பேசிக்கொண்டுருக்க. "அங்க என்ன உங்களுக்குள்ள மாநாடு. சத்தமா பேசுனா எங்களுக்கும் கேக்கும்ல" எனப் பாட்டி சொல்ல.


"அவனுக்குன்னு வண்டி இல்லயா, எப்படி பொண்ணக் கூட்டிட்டு வரன்னு கேட்குறான்" உண்மை சத்தமாக சொல்லியிருக்க.

இந்தப் பக்கம் மாறன் கொட்ட, அந்தப் பக்கம் தாத்தா கிள்ளினார். "ஆத்தி ஏன் ரெண்டுபேரும் அடிக்கீக. பாட்டி ஏதாவது ஏற்பாடு பண்ணுவாக" ௭ன்றவாறு, "என்ன பாட்டி" என பாட்டியிடமும் கேக்க.

யோசித்த பாட்டியும் "அறிவு வண்டியை எடுத்து போயிட்டு வாயேன்டா. அவேன் கார்ல போறதால அது சும்மா தான நிக்குது"

"சும்மா நின்னாலும் அது என் புருஷனோடது. அவர் சொந்தக் காசுல வாங்குனது. இவரு எடுத்துட்டு போய் உடச்சுக்கிடச்சுக் கொண்டாந்தா ரிப்பேர் பாக்கவும் நாங்க தான் காசு தரணும். அதனால வேற ஏதாவது ஐடியா பண்ணிக்க பாட்டி" என்றாள் ராணி.

"இவ வயித்தெறிச்சலோட கொடுக்குற வண்டியில நாங்கப் போனா ரோட்ல மல்லாக்க தான் கெடக்கணும்" என மாறன் முனங்க.

"நீ ஒரு முடிவோட தான் இருக்க" என்றான் உண்மை.

தாத்தா "அப்ப கார்லயே போவோம்" என முடித்து விட.

"சரி சாப்பிடுங்க சீக்கிரம், போற வழில அந்தப் புள்ளைய கூப்டுக்கலாம்" என முடிவெடுத்து சாப்பிட்டனர்.
அதன்பின் தாத்தா, பாட்டி, பானு, மாறன், உண்மை காரை கிளப்பி கன்னி வீட்டில் சென்று நிறுத்த, துணைக்கு இரண்டு தோழிகளுடன் வந்து ஏறினாள் அவள். மாறன் முன் சீட்டில் டிரைவருடன் அமர்ந்திருந்தான். திரும்புவேனா என்பது போல அமர்ந்திருந்தான். கன்னியும் பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. பேசிக் கொண்டே பின்னால் ஏறிக்கொண்டாள். உண்மை இருவரையும் நோட்டம் விடுவதையே வேலையாய் வைத்திருந்தான்.
திருநெல்வேலி போத்தீஸ் வந்திறங்கினர். "முதல்ல பொண்ணுக்கு முகூர்த்த புடவ எடுத்துரலாம், அப்புறம் ஆம்பளைங்க தனியா போய் மாப்பிளைக்கு எடுங்க" என பாட்டி சொல்லவும், எல்லோரும் பட்டுப் புடவையிருக்கும் ப்ளோர் செல்ல, பாட்டியும், பானுவும் நேராக சென்று நின்றதே இருபத்தைந்தாயிரம் மேல் இருக்கும் ரேக்கில்தான். கன்னி எதையும் தடுக்கவுமில்லை, ஆமோதிக்கவுமில்லை பார்த்திருந்தாள். ஆளாளுக்கு புடவையைப் பார்க்க இவள் அவர்களை பார்த்திருந்தாள்.


நேரம் சென்றதே தவிர யாரும் முடிவுக்கு வருவதாக தெரியாததால், பொறுமை இழந்த மாறன் "எவ்வளவு நேரம் பாத்துட்டே இருப்பீங்க" என அவர்களை விலக்கி அவளை ஒட்டி நின்றான்.

"ஏன்டா ௭தாது புடிச்சாதான ௭டுக்க முடியும்",

"இன்னும் 1 மாச டைம் குடுத்தாலும் உனக்கு திருப்தி ஆகுறமாறி புடவ கிடைக்காது, விலகு" ௭ன்றான் பாட்டியிடம்,


"அடேங்கப்பா உன் பொண்டாட்டிக்கு நீயே ௭டு ராசா, வந்துட்டான் ௭ன்ன கொற சொல்லிட்டு" ௭ன பாட்டியும் கழுத்தை நொடித்து சென்றது.
அவர்கள் நகன்றதும் "உங்களுக்கு புடவைலாம் எடுக்கத் தெரியுமா?" என்றாள் அவனுக்கு மட்டும் கேட்குமாறு, அவனும் அவளை திரும்பிப் பார்க்காமலேயே, "நீ ஒழுங்கா பாத்து எடுத்தா நா ஏன் உள்ள வரப்போறேன். ஒழுங்கா பாத்து சொல்லு எதுப் புடிச்சுருக்குன்னு" என்றான் மெதுவாக அவனும்.
 

priya pandees

Moderator
"எனக்கு இப்படி எல்லாம் பழக்கமில்ல, அதனால அவங்களே பாத்தெடுக்கட்டும்னு அமைதியா இருந்தேன்".

"இனி பழகிக்கோ, சேல தானே இனி அதிகம் கட்டனும்" பேச்சு பேச்சாக இருந்தாலும் பார்வை அவளுக்கான புடவை தேடலில் இருந்தது.
சிறிது அமைதிக்குபின் "நா ஒன்னு கேக்கவா?" ௭ன்றாள் தயக்கமாக. சேலையை அதயும் இதயும் முன் நிற்பவறை எடுத்துப் போட சொல்லி காட்டிக் கொண்டிருந்தவன், கையை இறக்கி குனிந்து கவனிக்குறேன் என்பது போல் நிற்க.

"மொத மொத உங்க வீட்டுல இருந்து எடுக்குற சேல, உங்க மனைவியா ஆகப்போற அந்த நிமிஷம் நா கட்டுற சேல 1000 ரூபாயா இருந்தாலும் அது உங்களோடதா இருந்தா நல்லாருக்கும்னு தோணுது. நீங்க அதெல்லாம் முடியாது கல்யாணத்துக்கு முன்னயே அதிகாரம் பண்ணுறியான்னுல கேக்கலாம். நா அதிகாரமா கேக்கல, எப்படியும் நம்ம கல்யாணத்து சடங்குக்கு 5,6 சேலை எடுப்பாங்க, அதுல 1 தாலி கட்டும் போது கட்றதுக்கு. அது மட்டுமா உள்ளதுனாலும் நீங்க எடுத்துக் கொடுத்ததா இருந்தா மனசுக்கு நிறைவா இருக்கும். நீங்க எடுத்துக் குடுக்க முடியாதுடின்னு சொன்னாலும் நா ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன். ஏதோ தோணுச்சு சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க" என்றாள் குனிந்தே படபடவென சொல்லி முடித்து விட்டாள்.
இவ்வளவயும் இருவரும் முகம் பார்க்காமலே பேசி கொண்டிருக்க, சேல்ஸ் மேன் தான் குழம்பி நின்றார்.

"இங்க பாரு நீ யாரும் சொல்லிக் கொடுத்து என்ன மாத்தணும், திருத்தணும்னு இதெல்லாம் செய்றியா தெரியாது. ஆனா என்ன பொறுத்தவரைக்கும் எனக்கு தோணுனா செய்வேன். உனக்கும் எடுத்துக் கொடுக்கணும்னு தோணுனா கண்டிப்பா செய்வேன். ஆனா தோணல, அதனால இப்ப ஒரு சேலை எடுத்துக்கோ" என்றான்.

"சரிங்க நீங்களே பாத்து எடுங்க" என சிரித்த முகமாகவே கூறினாள்.
"உனக்கு கோவமில்ல? சிரிக்கிற?" என்றான் இப்பொழுது சைடில் அவள் முகத்தை பார்த்து.

குனிந்தவாறே மேலும் சிரித்தவள், "எனக்கு தோணுனது நா சொன்னேன், உங்களுக்கு தோணுனத நீங்க செய்றேன்னு சொல்லிட்டீங்க அவ்வளவு தான்".

"ஓ! சரி இந்த நவாப்பல கலர் நல்லாருக்கா பாரு".

"பாக்க போறது நீங்க தான். உங்களுக்கு பிடிச்சா போதும்".
"அவ்வளவு நல்லவளா நீ",
"ரொம்ப" ௭ன சிரிக்க, அவனும் லேசாக சிரித்துகொண்டான்.

பின் திரும்பி, "பாட்டி, ம்மா" என்று அழைக்க அங்கிருந்த அவள் நண்பர்களையும் சேர்த்து நான்கு பெண்களும் வந்தனர்.

"இது எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு, இதையே எடுத்துருங்க. நா எனக்கு எடுக்கப் போறேன்" என்றுவிட்டு சற்றுத் தள்ளி அவர்களையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த இருவரையும் (தாத்தாவும், தண்மையும் தான்) கண்ணைக் காட்டி அழைத்து விட்டு லிப்ட் நோக்கி நடந்தான்.

கன்னியின் தோழிகள் இருவரும், "என்னடி ௭ன்ன சொன்னாரு உன் ஆத்துகாரர்? நல்லா பேசினாரா?" எனக் கேட்டுக் கொண்டிருக்க.

"பேசலடி இது நல்லாருக்கா அது நல்லாருக்கான்னு கேட்டாங்க, பதில் சொன்னேன். இன்னைக்கு தானே முதமுதலப் பேசுறோம் உடனே எப்படி பேச வரும்" என்றாள்.

"இவள நம்பாதடி, கல்லூளி மங்கி, கமுக்காம ௭ல்லாத்தயும் செஞ்சுக்குவா. ரெண்டு பேரும் பேச தெரியாத ஆளுங்க தான், க்கூம்." ௭ன தேனி நொடிக்க.

"ஏ பொண்டுகளா வாங்க, இன்னும் பெண்ணழைக்க, நிச்சயம் பண்ண, அடுக்கல சேலை, ஒலுசை சேலைன்னு எடுக்கணும், அப்புறம் எனக்கும் வேற எடுக்கணும். சீக்கிரம் நடங்க போவோம்" எனப் பாட்டி அழைத்துவிட, பின் அப்படியே தான் அன்றைய பொழுது கழிந்தது.

கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் மாற்றி மாற்றி குடித்துவிட்டு 6 மணி வரை அங்கு தானிருந்தனர். ஆண்களும் அவர்களை அழைத்து அழைத்து டயர்டாகி வெயிட்டர் அறையில் சென்று அமர்ந்தனர். தாத்தா தூங்கி, வேறு உலகத்தில் சஞ்சரிக்க சென்றுவிட, மாறனும், உண்மையுமே தேமே ௭ன அமர்ந்திருந்தனர்.

பசி வேறு காதடைத்தது, தலைவலியை உண்டாக்க, அதற்கு மேல் பொறுமை இழந்து எரிச்சலுடன், "கிளம்புறீங்களா? இல்ல இங்கேயே குடியிருக்க போறீங்களா? எடுத்த வரப் போதும் வாங்க" என இழுத்து தான் சென்றான் மாறன்.

"அப்பப்பா ஜவுளிக்கடைக்குள்ள நுழைஞ்சுட்டா மட்டும் இந்தப் பொண்ணுகளுக்கு உலகமே மறந்துருது" என தாத்தாவும் புலம்பி கொண்டே எழுந்தார்.

"ம்க்கும் பொண்ணுகள விட, உன் பொண்டாட்டிய கிளப்ப தான் பெரிய பாடாயிட்டு இருக்கு" உண்மை சொல்ல,
"பேசாம வாடா, இத்தன வருஷத்தில ௭னக்கு தெரியாதத சொல்ல வந்துட்ட மாறித்தேன்" ௭ன்றார் தாத்தா பதிலுக்கு.

அதன் பின் போற வழியில் ஒரு கடையில் நிறுத்தி அவன் தந்த இட்லி, தோசையை முழுங்கிவிட்டு நேராக சென்று, கன்னி வீட்டில் அவளை இறக்கிவிட்டு அவளிடம் அளவு ப்ளவுஸயும் கையோடு வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர்.
"என்னம்மா சீக்கிரம் வந்தா என்ன. நைட் சாப்பாடு பண்ணனும்னு உனக்கு அக்கறையே இல்லயே எவ்வளவு நேரம் பசியோட உட்காந்திருக்குறது" ௭ன்றாள் மதி.

"ஏண்டி ஒரு நாளைக்கு நீயே ஏதாது செஞ்சு சாப்பிட்டா என்ன? இல்ல முத்து இருக்காள்ல அவளச் செய்ய சொல்லி சாப்பிட வேண்டியதானே" என்றது பாட்டி.

"ரூபன், அம்மா உட்டுனாதா சாப்பிடுவான். அவருக்கும் அம்மா வச்சாதான மரியாதயா இருக்கும், வேலைக்காரிய வைக்க சொல்ல முடியுமா?" என்க. இதயெல்லாம் பார்த்து விட்டு காதைக் குடைந்தவாறு மேலேறிவிட்டான் மாறன்.

"இவனுக்கு கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறீங்க? அது ஒரு ஃபங்க்ஷன்னு அதுக்கு டிரஸ் எடுக்கணும்னு வேற 1 நாள செலவழிச்சுருக்கீங்க" என்க.
"ம்மா அந்த பிச்சகாரிக்கு சோத்தப் போட்டு அனுப்புங்க. சோறு போட நேரமாகவும் சத்தம் ஜாஸ்தியாகுது" என்றுவிட்டு மாறன் தன் அறை கதவை சாத்திக் கொள்ள, இவள் மேலும் கத்த ஆரம்பித்தாள்.

"யாருடா பிச்சைக்காரி, நீ தான் தண்ட சோறு திங்குற, சொந்த வீட்டிலயே பிச்சையெடுத்து சாப்பிடுறவன் நீ, நா இல்ல" என காச்சு மூச்சென்று அவளும் கத்த,

"இவ ஏற்கனவே கத்திட்டு தான் கடந்தா, உங்க அண்ணே ஏத்தி விட்டுட்டு போயிட்டாரு" என ராணி தன் கணவனிடம் புலம்ப.

"நீ கதவசாத்து இறைச்சலா இருக்கு" என்றான் அவன்.

பூவேந்தன் அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைந்தார், மகள் கத்தி கொண்டிருப்பதைக் கேட்டு காரணமறிந்து பின் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து அனுப்பினார். ராணி குடும்பமும், மதி குடும்பம் சாப்பிட அமர்கையில், சேர்ந்து வந்தமர்ந்து சாப்பிட்டு சென்றது. இது எப்போதும் நடப்பதுதான் பானு பழகிக் கொண்டார்.
அடுத்தடுத்து நாட்கள் சென்றது பத்திரிக்கை வைத்தனர். ட்ரெஸ் தைத்து வந்தாயிற்று, சொந்த பந்தங்களும் வீடுவர தொடங்கியது.
"ஏன் மாப்ள உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனா அப்புறம் நா எங்க தங்குறது" அன்று காலையில் போர்வைக்குள் இருந்தவாறு உண்மை கேட்க,

"ஏன் இதே ரூம்ல இன்னொரு கட்டில கொண்டு போட சொல்றேன் அதுல படுத்துக்க"

"ச்ச அது உனக்கு சங்கடமாயிருக்காது".
"அப்ப இல்லன்னு சொன்னா படுத்துக்குவ" என மாறன் உண்மையை எட்டி மதிக்க.

"இல்லடா உனக்கு இப்படி திடீர்னு கல்யாணம் பண்ணி நம்மள பிரிச்சுடுவாங்கன்னு நினைக்கலயா, அதனால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் பண்ணல".
"ஏலே லூசு பயலே இனினாலும் உங்கப்பனையும், ஆத்தாளையும் கூட இருந்து பாத்துக்கலாம்ல" ரூமினுள் நுழைந்து கொண்டிருந்த தாத்தா சொல்ல.

"உனக்கு தெரியாததா தாத்தா, அந்த சித்திக்கு நா அங்க போனாலேப் பிடிக்காது, அப்பனப் போட்டு பாடா படுத்தும்".

"சரி அப்ப வள்ளி கூடத் தங்கிக்றியா, அந்த புள்ள இங்க வந்தப்றம் அவேன் ஒத்தயில தான இருப்பான்".

"சூப்பர் தாத்தா நல்ல ஐடியா" என் தாத்தாவை எட்டிக் கட்டிக்கொண்டான்.
"அதெல்லாம் வேணாம், இங்க ஸ்டோர் ரூம் சும்மா தான இருக்கு, அதுல தங்கிக்கோ மாப்ள" ௭ன்றான் மாறன்.

"நீ ஜாலியா இருப்ப நா பக்கத்து ரூம்ல தனியா கடந்து அவியனுமோ, நா அங்கேயே போறேன் போ" ௭ன முறுக்கி கொண்டான் உண்மை.

"அத விடுங்கடா, அதுவா இப்ப முக்கியம். ஏன்டா கண்ணு புதுசா அந்த மெக்கானிக் ஷாப்ல வேலைலா பாக்கேன்னுக் கேள்விப்பட்டேன்" தாத்தா கேக்க.

"அதெல்லாம் ஒன்னுமில்ல, ௭ப்பயும் போல தான், அன்னைக்கு அவசரம்ன்னு கேட்டான், சரின்னு செஞ்சு கொடுத்தேன்".

"இல்ல தாத்தா இவனாத்தான் கேட்டான். எனக்கே இவனுக்கு அந்த வேலையெல்லாம் தெரியும்னு அன்னைக்குத்தான் தெரியும்" உண்மை சொல்ல.

"பாத்தியா ஒரு பொண்ணு வாழ்க்கைக்குள்ள வரப்போகுதுன்ன உடனே அதோட வேலையை காட்டுது. அதான்டா கல்யாணத்தோட மகிமை. நீயும் உன் அப்பன்ட்ட சொல்லி பண்ணிக்க முன்னேறிடுவ" தாத்தா சொல்ல.

"ம்க்கும், எனக்குப் பொண்ணு கொடுக்கத் தான் அங்க வரிசையில நிக்காங்க. நீகூட கேக்க மாட்டேனுட்டல்ல, போ தாத்தா" என்றுவிட்டு அவன் எழுந்து சென்றுவிட, மாறனோ முறைத்துக்கொண்டிருந்தான்.

"என்னடா?" தாத்தா கேட்க.

"அவ வாறதுனால நா செய்யல, எனக்கு தோணுனதுனால செஞ்சேன். கல்யாணமானா மாறிடுவான், திருந்திடுவான்ன்னு கனாக் கண்டிட்டு ஏமாறாதீங்க சொல்லிட்டேன்".

"நீ ஏன் மாறக்கூடாதுன்னு பிடிவாதமா இருக்க?"

"நீங்கெல்லாம் நல்லவங்க மாதிரியும், நா மாறியே ஆகணும், திருந்தியே ஆகணும்னு பேசுறீங்களே அதனாலதான். நா எனக்கு புடிச்ச மாதிரி வாழ்றேன். அவ வந்து சொன்னாலும் இதத்தான் சொல்வேன், நா ஒன்னும் வேலைக்கு போகாம இல்லயே தேவைக்கு போறேன் தான".
"என்னவோ ஒரு பொண்ணு புடிச்சிருக்குன்னா அவளுக்காக எதையும் செய்யலாம்ன்னு தோணும், அவ சொன்னதெல்லாம் செய்யணும்னு தோணும், இன்னைக்கும் உன் பாட்டி சொல்றத நா செய்யுற மாதிரி, உன் அப்பா கண்ணசைவில் உன் அம்மா நடக்குற மாதிரி, உனக்கும் புரியும் கன்னி அத நடத்திக் காட்டுவா. அவ கூடயும் நீ உனக்கு புடிச்ச மாதிரி தான் வாழ்வ எனக்கு நம்பிக்கையிருக்கு" என்றார் அனுபவமாய்.

அதன் பலன் கல்யாணத்தன்று அவனது முதல் சம்பாத்தியத்தில் வாங்கிய முகூர்த்தப் பட்டில் அமர்ந்திருந்தாள் அவனது கன்னி.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 7

தாத்தா சொன்னதற்காக ௭ன அவன் மாறவில்லை, மாறன் முன்பே முடிவெடுத்துவிட்டிருந்தான், 'ஏன் எடுத்து குடுக்கக் கூடாது முத முதலா ௭ன்னுட்ட அவ கேட்ட ஒரு விஷயத்த செய்யாம விடவா?' என்றெல்லாம் யோசித்து, அவன் எப்போதும் வெட்டியாய் சென்றமரும் நண்பன் அமரின் மெக்கானிக் ஷாப்பில், "இன்னைக்கு நானு சில வண்டிய ரிப்பேர் பாத்துக் குடுக்குறேன். நா பாக்குற வண்டிக்கான பேட்டாவ அப்படியே நா எடுத்துப்பேன்" என சவுடாலாகவே கேட்டான்.
சிறிது யோசித்த அமரும் 'இவனுக்கு எங்க வேல தெரியபோது, முடியாதுன்னாலும் அடிச்சு ஒத்துக்க வப்பான்' என்ற எண்ணத்தில் 'சரிதான்' ௭ன ஒத்துக்கொண்டான்.
முதலீடு மற்றும் வேறு எந்த செலவும் இல்லாததால் 2 மாதத்தில் 3,000 ரூபாய் தாராளமாக சேர்த்தான் மாறன். அவனுக்கு தெரிந்த அளவு, ஏற்கனவே எடுத்த முகூர்த்தப் புடவை கடையிலேயே, கம்மி விலையில் உள்ள முகூர்த்த புடவை எடுத்து தைக்கக் கொடுத்து வந்தான். கல்யாண ப்ளவுஸ் தைக்க 1000 ரூபாய் வாங்குவார்கள் என்பதும் அன்றுதான் அவனுக்குத் தெரியும். தையல்காரக்காவிடம் வாய்க்கா தகாராராகி, "நீங்க ஒரு ௭க்ஸ்ட்ரா பிட்டிங்கும் வைக்க வேணா, சட்டைய போடுத மாறி மட்டும் தச்சு குடுங்க போதும்" ௭ன்றுவிட்டு வந்தான். அதில் 'இனி இவளுக்கு சேலையே எடுத்துக் குடுக்கக் கூடாது, இருக்கத கட்டட்டும்', என்று முடிவிற்கும் வந்திருந்தான்.

கல்யாண நாளும் நெருங்கி விட்டிருந்தது, கன்னி ௭ல்லாமே அவள் வீட்டை சுற்றி உள்ளவர்கள் தான் செய்தனர். அவள் ௭ல்லோரிடமுமே அன்பாக பழகிய பழக்கம், இன்று அவளுக்கு துணை நின்றது. புது இடம், புது மனிதர்கள் ௭ன புகுந்த வீட்டை நினைத்தும் அடிவயிறு கலங்க தான் செய்தது. இதில் கணவனாக போகிறவன் இதுவரையும் பேச கூட முயற்சிக்கவில்லை. அன்று துணி கடையில் பேசியது தான் கடைசி, பேசியதற்கு கோவித்து கொண்டானோ! ௭ன்ற பயம் வேறு. அவன் பேசி பழகி இருந்திருந்தால் கொஞ்சம் தெம்பாக இருந்திருப்பாளோ? ௭ன்னவோ!
கல்யாணத்திற்கு முதல் நாள் பெண்ணழைப்பு, மண்டபத்தில் கொண்டு கன்னியை விட்டனர். எல்லாவற்றுக்கும் அக்கம்பக்கத்தினரும் அவள் தோழிகளுமே துணையிருந்தனர். அது அவளுக்கு சிறுவயது முதலேயே பழக்கம்தான் என்பதால் பெரிதாக வருத்தப்படவில்லை. மறு நாள் காலை ஆறுமணி முகூர்த்தம், அலங்கரிக்க 4 மணிக்கு வந்து விட்டிருந்தனர். இப்போது வரை அவளது வருங்காலக் கணவனின் தங்கையும், தம்பி மனைவியும் இவளை வந்துப் பார்க்கவில்லை.

உடனிருந்த பெண்களும் அவளுக்கு உதவிக்கு நின்றனர். அப்போது கதவு தட்டும் ஓசையில், தேனி சென்று கதவை திறக்க, வெளியே உண்மை முழு முக்காடிட்டு நிற்பதை கண்டு முதலில் பதறி, பின் கோவமாகி "என்ன வேணும்?" ௭ன்றாள்.

"ஒரு ஆம்பள, அதுவும் வயசு பையன்ட்ட இப்படி கேக்காத, அவேன் நீதான் வேணும்னு பொசுக்குன்னு சொல்லிட்டா, என்ன பண்ணுவ" ௭ன்றான் ஈ ௭ன சிரித்து கொண்டு.
"ம் விளக்கமாறு பிஞ்சுறும்னுவேன்".

"ரைட் விடு, நாம எதுக்கு மூணாவது மனுசனப் பத்தி பேசிக்கிட்டு. இந்தா இத பொண்ணுக்கு கட்டி விடுவியாம் மாப்பிள கொடுத்து விட்டான்" என்க.
வேகமாக திரும்பினாள் கன்னி, "இங்க கொண்டா தேனி" ௭ன்றாள் வேகமாக, தேனி வெடுக்கென்று உண்மையிடமிருந்து வாங்கிச் சென்று கன்னியிடம் நீட்ட, பிரித்துப் பார்த்தாள், முகூர்த்தத்திற்கு ௭டுத்த புடவையின் அதே கலரில், விலையின் வித்தியாசத்துடன் இருந்தது.
"நல்லா இருக்குன்னு சொன்னேன்னு சொல்லுங்கண்ணா" என்றாள்.
உண்மை "சரி" என திரும்ப போனவன், தன்னை பார்த்து நின்ற தேனியை அருகில் அழைத்தான்.
அவளும் முறைத்தாலும், '௭ன்ன' ௭ன அருகில் வந்தாள் "உனக்கு ௭ப்ப கல்யாணம்?" ௭ன ரகசிய குரலில் வேறு கேக்க.

"ம்ம் நாளகழிச்சு, துணை மாப்பிள்ளைக்கு ஆள் இல்லையாம் வாரியா?" ௭ன்றாள் கடுப்பான குரலில்.
"நானே மாப்ளயா வாரேன்றேன். ௭ன்னய நம்பி கழுத்த நீட்டு ராணி மாறி வாழலாம்"

"சாரு ௭ந்த நாட்டுக்கு மஹாராஜா?"
"உன்ன கட்டிகிட்டு வார வரதட்சிணையில தான் ௭தாது நாட்ட ௭ழுதி வாங்கலாம்னு இருக்கேன்" ௭ன்றான் அவனும் விடாமல்.
"போடா ஆமவாயா, காலாங்காத்தால கடுப்பேத்திகிட்டு" ௭ன படக்கென கதவை சாத்தி விட்டாள்.

"ஆம வாயனா?" ௭ன முஞ்சை சுருக்கியவன், "இதுக்கு தான்டா உண்மை ௭ல்லாத்தயும் அப்டியே வெளில சொல்ல கூடாதுன்றது" ௭ன புலம்பிவிட்டு முக்காடை இன்னும் நன்றாக மூடி கொண்டு சென்றான்.
கன்னி மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அந்த புடவையையே உடுத்திக்கொண்டாள். அன்று துணிக்கடையில் வைத்துப் பார்த்தது, கோபித்துக் கொண்டானோ என்ற சிறு பயம் இருந்தது. இப்போது அது இல்லையென்றானதும் முழு சந்தோஷத்துடன் சென்று அவனருகில் அமர்ந்தாள்.

"நல்லா இருக்கு உனக்கு இந்த சேலை" குனிந்து மாறன் சொல்ல,
"இருக்கணும்ல, உங்களுக்கும் இந்த வேஷ்டி சட்ட நல்லாருக்கு, இன்னைக்கு தான் பாக்க நீட்டா இருக்கீங்க".
"வேஷ்டி சட்டைல என்ன அழகு. நா உனக்கு எடுத்துக் கொடுத்தேன், அதனால நல்லாருக்குன்னு சொன்னேன். நீ என்ன எனக்கு எடுத்தா கொடுத்த" ௭ன்றான்.

"எடுத்து கொடுத்தா தான் சொல்லணும்ன்னு இல்ல. நல்லா இருந்தாலே சொல்லலாம். ஆனா உங்க வழிலயே வந்தாலும் இப்ப நா சொல்லலாம். ஏன்னா, நா உங்க தீப்பெட்டி ஆபீஸ்ல சம்பாதிச்சதுல சேத்து வச்சத தாத்தாக்கிட்ட கொடுத்து உங்களுக்கு எடுக்கச் சொன்னேன். நா உங்ககிட்ட கேட்கும் போது, உங்களுக்கு அப்படித் தோணலாமேன்னு தோணுச்சு, அதான் எடுக்க சொல்லி கொடுத்தேன்" ௭ன்றாள் சைடில் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து.
அவனுக்கு அவள் செயலும் காரணமும் பிடித்திருந்தது, ஆனாலும் "அப்ப நா எது செஞ்சாலும் பதிலுக்கு செய்வேன்ற" ௭ன கேட்டான்,
"அப்படி சொல்ல முடியாது, நீங்க என்ட்ட எப்படி இருக்கீங்களோ அப்படித்தான் நானும் உங்ககிட்ட இருப்பேன்னு சொல்றேன்".

"கொஞ்சம் மந்திரத்தை திரும்பிச் சொன்னேல்னா நல்லா இருக்கும்னு நான் சொல்றேன்" ஐயர் நடுவில் சொல்ல, கவனத்தை அவரிடம் திருப்பினர்.

கல்யாணத்திற்கு வந்திருந்த யார் கண்ணிலும் பொறாமை இல்லை, "இவளுக்கு வந்த வாழ்வப் பாரேன், பெரிய இடத்துல வாக்கப்படுறத" என்ற சிலரின் எண்ணம் கூட பின்னாடியே, "வேலைவெட்டிக்கு போகாத இவனக் கட்டிட்டு என்ன கஷ்டப் பட போகுதோ இந்த புள்ள. ௭த்தன நாளைக்கு அவேன் அப்பன் காசுலயே சாப்பிட முடியும்."

என்பதில் மட்டுப்பட்டுப் போய்விட்டது.
"இவனுக்குலா கல்யாணம் ஒரு கேடு" என நினைத்த மாறனது நெருங்கிய உறவுகளும்,

"இது பொம்ம கல்யாணம்வே, சும்மா பேருக்கு, சொசைட்டியில பூவேந்தன் ஒரு மரியாதைக்காக ஒரு ஏழை பாவப்பட்ட பிள்ளையை கட்டிவைக்கான், கடைசிவர பூவேந்தன் தான் இவனுக்கும், இவன் புள்ள குட்டிகளுக்கும் சேத்து சோறு போடணும்" எனப் பேசி சிரித்துக் கொண்டனர். இப்படி எந்த கண்ணடியும், பொறாமையும் இல்லாத மேம்போக்கான ஆசீர்வாதத்தோடு மாறன்வழுதி கயமலர்கன்னி கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

அதன்பின் மொய் எழுதுவது ஒரு பக்கம், பந்தி ஒரு பக்கம் ௭ன ஆட்கள் களைய ஆரம்பிக்க, மணமக்கள் போட்டோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர்.

பின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு விளக்கேற்ற வைத்து, பாலும், பழமும் கொடுக்க மதியொளியை அழைக்க அவளோ 'முடியாது' என ஒரேயடியாக மறுத்துவிட்டாள்.

பின் சொந்தத்தில் தங்கை முறை உறவில் ஒரு பெண்ணை அழைத்தே பாலும், பழமும் கொடுத்தனர். மாறனும், கன்னியும் சிரித்தவாறே தான் இருந்தனர். எதற்காகவும் பெரிதாக வருத்தம், கூச்சம், வெட்கம் என எதுவும் இல்லாமல் இயல்பாக இருந்தனர்.
உண்மை, நண்பன் கல்யாணத்தில் பம்பரமாய் சுற்றி வந்தான். தாத்தா கூட "ஏன்டா ஓவரா பொங்குர" என கேட்டதற்கு,

"சுத்திப் பாத்தீங்கலா, கலர் கலரா இருக்கு. ஏதாவது உசார் பண்ணிரலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

"அதுக்குத்தான் ஒரு வேலயும் செய்யாம உள்ளயும் வெளியவும் அலையுறியோ?"

"அப்பட்டமா நா அப்படி அலையிற மாதிரி தெரியுதோ?"

"ஆமா அதான் ஒரு புள்ளையும் திரும்பிக் கூட பாக்கல".

"அப்ப என்ன தாத்தா பண்ணலாம். மாப்பிள்ளைக்கும் கல்யாணமாயிடுச்சு, இனி பிசி ஆயிடுவான். எனக்கு பேச்சு துணை வேணும்ல்ல. நீ எப்படி பாட்டிய கரெக்ட் பண்ணுன சொல்லு".

"அப்படி கேளு, மூணு விஷயம் தான். உண்மை, உழைப்பு, உயர்வு. அப்படியிருந்தா பிள்ளைகெல்லாம் நம்மளத் தேடி வரும்வே".
"எப்படி பின்னாடி பாட்டி உன்னத் தேடிட்டு வருதே அது மாதிரியா?"

"ஏது என் செல்லம் என்னத் தேடுதாளா?" எனக் கேட்டவாறு எழுந்து மனைவியைத் தேடி ஓடினார்.

"எல்லாம் பொண்டாட்டி தேடுதுன்னு சொன்னா நல்லா தேடட்டும்ன்னு போய் மறைஞ்சுக்குவாங்க, இவரு பாட்டிய நோக்கி ஓடுதாரு, தாத்தா ௭ல்லாத்தலயும் வித்தியாசம் தான்" என புலம்பி விட்டு மறுபடியும் பிள்ளைகளை கரெக்ட் செய்யும் வேலையை செவ்வனே செய்தான்.
இரவு ஒழுசைக்கு எல்லாம் தயார்படுத்த பட்டிருக்க, மாறனுக்கு துணைக்கு உண்மையும், கன்னிக்கு துணைக்கு மாணிக்கம் தாத்தாவும், அவள் தோழிகளும் நிற்க, பாட்டி அம்பயராய் நின்றது. சில பல தூரத்து உறவுகள் அன்றே ஊர் திரும்ப முடியாதவர்கள் என்கரேஜ் செய்ய நின்றனர்.

முதலில் குடத்தை நடுவில் வைத்து காலகாலமாய் செய்யும் மோதிரத்தை உள்ளே போட்டு தேடும் படலம், அதன் மூலம் வீட்டில் யார் கை ஓங்கியிருக்கும் என கண்டுபிடிப்பர்.

"மாப்ள, விட்டுக்குடுத்துறக்கூடாது, எடுத்துரு மாப்பிள" உண்மை சொல்ல.
"என் பேத்தி தான்டா ஜெயிப்பா கெட்டிக்காரி" என தாத்தா சொல்ல. அந்த இருவரும் கையை விட்டு தேடினர் தேடினர் தேடிக் கொண்டே இருந்தனர், பத்து நிமிடம் கழித்து இருவரும் கையை எடுக்கும் வழியைக் காணோம்.

"தாத்தா மோதிரம் வெளிய வருமா?" பானையை பார்த்தவாறு உண்மை கேக்க,

"எனக்குக் கூட அதே சந்தேகம் தான்டா. ஏண்டி சின்ன பாத்திரமா வைக்கிறதில்ல, பிள்ளைக எவ்வளவு நேரமா தேடுது" என உண்மையிடம் ஆரம்பித்து பாட்டியிடம் முடித்தார் தாத்தா.

பாட்டியோ "உங்க பேரன்ல உங்கள மாதிரித்தான இருப்பான்" என்று விட்டு "ஏ போதும் ரெண்டு பேரும் கையை எடுங்க" என அதட்ட, சிரித்துக்கொண்டே ஈரக் கையை எடுத்து, பாட்டி முகத்தில் தெளித்தான் மாறன்.

"ஏன் மாப்பிள குடத்துக்குள்ள என்ன நடந்தது?"

"என் கைய இறுக்கிப் பிடிச்சுக்கிட்டா மாப்ள வெளிய விடமாட்டேன்னு" என பாவமாய் மாறன் ரகசியம் சொல்ல.
"தங்கச்சியப் பாத்தா அப்படியாப்பட்ட பிள்ளையா தெரியலையே" என வாய்விட்டே யோசித்தான் உண்மை.
இறுதியில் மாறன் கையை வெளி ௭டுத்த பின், மோதிரத்தை கன்னியே வெளி ௭டுத்தாள்.

தாத்தா "சரி அடுத்து சுட்ட அப்பளத்தை உடைக்குறது, அவன் தலையில நங்குனு தட்டி உடத்தா யார் பேச்சையும் கேட்க மாட்டேங்கிறான், உன் பேச்சுக்காது அடங்கிப் போணும், அத மனசுல வெச்சுட்டு அடி" என்க.
கன்னி நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு குனிந்து கொண்டாள். முதலில் அவனே அப்பளத்தை எடுத்து அடிக்க வந்தான், "அன்னைக்கு அடிச்சியே அதுக்கு இப்ப பதில் பழி வாங்கிடட்டா?" என்றான் அவள் முன் மண்டியிட்டு காலில் ஏதோ இடறியது போல் குனிந்து கொண்டு அவளுக்கு மட்டும் கேட்குமாறு.

"உங்களுக்கு அப்படி செய்யத் தோணுனா தாராளமா செய்யுங்க" என்றாள் அவளும் முனங்கலாய். சிரித்துக்கொண்டே நிமிர்ந்து அவள் தலையையொட்டி கையை கொண்டு போக, இறுக்கி கண்மூடி அவன் அடியை தாங்க அவள் தயாராக, அவளின் முகச்சுளிப்பை ரசித்தவாறு தன் இரண்டு கையால் அப்பளத்தை அவள் தலைக்கு மேல் தட்டி நொறுக்க, அது அவள் தலையில் பூவாக தூவ, அதயும் ரசித்தவாறு பழைய இடத்தில் வந்தமர்ந்து கொண்டான். கண்ணைத் திறந்து எதிரில் அமர்ந்திருந்தவனை கண்டுவிட்டு, அவனைப்போலல்லாமல் அப்பளத்தை எடுத்துச் சென்று அவன் தலையிலேயே அடித்து விட்டு வந்தமர்ந்தாள். அவன் அடிப்பாவி என்பது போல் பார்க்க. நாக்கை துருத்தி காண்பித்து விட்டு குனிந்து கொண்டாள்.

"தாத்தா நாம தான் அவங்கள வெச்சு விளையாடுறதா நம்பிட்டு இருக்கோம். அங்க தனியா ஒரு விளையாட்டு போயிட்ருக்கு" ௭ன நம்பியார் போல் கையை பிசைந்தான் உண்மை.
"சின்னச் சிறுசுங்க அப்படித்தான்டா இருக்கும். நாம அதெல்லாம் கண்டுக்க கூடாது".

"நாமன்னு உன் லிஸ்ட்ல என்னையும் சேக்க நீயி" என டென்ஷனாக.
"ஏய் சத்தம் போடாம இருங்க ரெண்டு பேரும்" என அதட்டிய பாட்டி அதன்பின் பல்லாங்குழி, தேங்காய் உருட்டல், மடி நிரப்புதல் என எல்லா விளையாட்டையும் முடித்தே, இருவரையும் தனியறை அனுப்பியது.
உண்மை தான், "இனிமே நீ இல்லாம நா எப்படி தூங்குவேன் மாப்ள. என்னால இந்த வருத்தத்த தாங்க முடியலையே" என அழுதுவடிந்தவன், எதிர் பக்கம் எந்த அதிர்வும் இல்லாமல் இருப்பதைக் கண்டு "ஏன் மாப்ள உனக்கு என்ன பிறியுறது வருத்தமாவேயில்லையா?" ௭ன்க.

"இல்லயே எனக்கு துணைக்குத் தான் என் பொண்டாட்டி இருக்காள்ள. நீயும் தாத்தாவ துணைக்கு வச்சுட்டு படு" என்றுவிட்டு அறையினுள் சென்று "இரவு வணக்கம் மாப்ள" எனக் கூறி கதவடைத்தான்.

"அடப்பாவி, எப்படிடா இப்படி நிமிஷத்துக்கு ஒரு மாதிரி மாறுற" என்றுவிட்டு தாத்தாவுடன் மொட்டை மாடியில் சென்று படுத்தான்.
மேலே வந்த உண்மை, தாத்தாவை கண்டு விட்டு அவர் அருகில் சென்று படுத்தான். "வீடெல்லாம் சொந்தக்காரங்கன்னு என் பொண்டாட்டி என்னைய வெளிய பத்திட்டா டா" என புலம்பிக் கொண்டிருந்தார் அவர்.

"ஏன் தாத்தா, கல்யாணமாயிட்டா பொசுக்குன்னு திருந்திடுவாங்களா என்ன?"

"ஆமாடா, மஞ்சக் கயிறு மேஜிக் பொம்பளைங்களுக்கு மட்டுமல்ல, ஆம்பளைங்களுக்கும் உண்டு".

"அப்ப நானும் சீக்கிரமா கல்யாணம் பண்ணனும், வழி சொல்லு தாத்தா",
"முதல்ல அதுக்கு நீ ஒரு வேலைக்கு போகணும்".

"அவேன் மட்டும் வேலைக்கு போகல கல்யாணம் பண்ணிட்டீங்க".

"அவன கட்டிக்க அந்தப் புள்ள ஒத்துக்கிச்சு. உன்னைய கட்டிக்கவும் ஏதாவது பொண்ணு ரெடியா இருந்தா சொல்லு பண்ணிடுவோம்".

"மொத புள்ளைய புடிக்குறேன் அப்புறமா கல்யாணத்த முடிக்குறேன்".
"புள்ளயே பிடிக்க போறானாம் தள்ளி போவே" என்ற தாத்தா தூக்கத்தை தழுவினார்.

அங்கு மெலிதாக அலங்கரிக்கப்பட்ட அறையில் நுழைந்தாள் கன்னி. அவன் கட்டிலில் படுத்து மொபைலை நோண்டி கொண்டிருக்க, இவள் சென்று தொண்டையை செருமி காண்பித்தாள்.
"கதவு திறக்குற சத்தம் கேட்டுச்சு, வா உட்காரு" என்றான் செல்லில் நோண்டிக்கொண்டே.

சற்று நேரம் அமைதியாக நின்றவள், அவன் ஏதும் பேச மாட்டான் ௭ன புரிந்து, "என்ன பாக்குறீங்க அதுல அப்படி?" ௭ன்றாள்.

"டெம்பிள் ரன் கேம், உனக்கு விளையாடத் தெரியுமா?"

"என்ட ஏது போனு"

"ஓ, உன்ட்ட போனேயில்லயோ? எப்படி அது இல்லாம இருக்க. ஒரு மணி நேரம் கூட அது இல்லாம இருக்க முடியாது என்னால"

"எனக்கு அதுப் பழக்கமில்ல, அதனால அது இல்லாம என்னால இருக்க முடியாது. நீங்க அதுக்கு அடிம ஆகிட்டீங்க, அதனால உங்களால அது இல்லாம இருக்க முடியல".

"நாலா எதுக்கும் அடிமயில்ல. சரி இந்த டாபிக் இப்ப வேணாம் வேற சொல்லு".
அவனையே பார்த்தவள் "வேற என்ன சொல்ல?" ௭ன்க.

"தெனமு நா உன்ன கிராஸ் பண்ணி போறப்ப என்ன நினைப்ப"

"இன்னைக்கும் கரெக்டா வந்துட்டீங்க போலன்னு நினைப்பேன். நீங்க?"

"எதுக்கு இப்படி வர்றோம்னு நினைப்பேன்"

"வேறெதுவுமே தோணுனதில்லையா? சும்மாதான் அஞ்சு வருஷமா வந்தீங்களா?"

"நீ நம்பினாலும் நம்பலானாலும் அதான் நிஜம். அந்நேரம் அங்க வரணும்ன்னு தோணும், ஆனா உன்ன திரும்பிப் பாக்கக் கூடாதுன்னு உறுதியா நெனச்சுப்பேன்"

"ஏன்?"

"ஏன்னா? நா பாக்கணும்னு ஆசைப்பட்டியா?"

"ச்சி ச்சி அப்படி இல்ல. பொதுவா பசங்க பொண்ணுங்கள பாக்குறது தானே. நீங்க ஏன் பாக்க கூடாதுன்னு நினைச்சீங்க?"

"அது எனக்கு நிஜமாவே தெரில. அந்நேரம் வர பிடிக்கும். அந்த ரெண்டு நிமிஷம் உன்ன பாக்காமலே கடந்து போறது அப்படியொரு சுகமா இருக்கும். அதுக்கு மேல அத உணர விட்டதில்லை".

"ஓ! நாங்கூட எனக்காகத்தான் வாரிங்கன்னு நினைச்சேன்".

"ஆமா உனக்காக மட்டும் தான் அந்நேரம் வருவேன். சின்ன பிள்ளக் கூட நாளு நாள் என்ன அங்கப் பாத்தா கண்டுபிடிச்சிரும். அந்த தெருவுல உள்ளவங்க 4 வருஷம் முன்னயே கண்டுபிடிச்சுட்டாங்க ஆனா என்ன எத்தன நாள் காத்திருந்து நோட்டம் விட்டாலும் நா உன்னயோ, நீ என்னயோ பாக்காததுனால, நோட்டம் விட்டவங்கள்ளாம் டயர்டாகி அத அப்படியே விட்டுட்டாங்க"

"ஹான்! அதெல்லாம் நடந்ததா?"

"ஆமா உன்னோட பத்தாங் கிளாஸ்லேயே அந்த தெருவுல எல்லோரும் கண்ணுல வெளக்கெண்ண ஊத்தித் தேடி ஒன்னும் நடக்காம/ கிடைக்காம ஏமாந்து போய்ட்டாங்க"

"எனக்கு அதெல்லாம் தெரியாதே!"

"நீ பொம்பள புள்ள, ஏதாவது சொல்லப்போய் தப்பான முடிவெடுத்துட்டன்னா, அதான் உன் காதுக்கு உன் தாத்தாவே வரவிடல".
"ம்ம்.அப்படி ஒன்னு இருக்கோ?" ௭ன அவள் நிறுத்த.

சிறிது நேரம் அமைதி இருவரிடமும், அடுத்து ௭ன்ன பேச ௭ன தெரியாமல் வந்த அமைதி. "நீயு என்ன திருத்தணும், சரி பண்ணனும் அப்படின்னு எதுவும் பிளான் வச்சுருக்கியா?" ௭ன்றான் மெதுவாக தன்னைப்பற்றி ௭ன்ன நினைத்து வைத்திருக்கிறாள் ௭ன தெரிந்து கொள்ள.

"இதுவரைக்கும் இல்ல"

"எப்பவுமே வரக்கூடாது"

"நீங்க ஏன் ஒழுங்கா ஒரு வேலைக்கு போக மாட்டேங்கறீங்க?"

"என் வீட்ல உள்ள வேலைக்கு போறவங்கல்லாம் மத்தவங்கள மதிக்கு'றதில்ல அதான். அதுவும் போக என் படிப்புக்கு, என் அப்பாவோட தகுதியை பாத்து எனக்கு எவனும் வேலை கொடுக்கல, அதனால தேவைக்கு கிடைக்கற வேலைய செஞ்சுட்டு போயிட்டே இருப்பேன்".

"அப்ப வேல கிடைச்சா செய்வீங்களா?"

"பாத்தியா போட்டு வாங்குற. கிடைச்சாலாம் செய்யமாட்டேன், செய்யணுமுன்னு தோணனும் அப்ப செய்வேன்".

மறுபடியும் அமைதி, இந்தமுறை அவள் ஆரம்பித்தாள் "இந்த தம்மு, தண்ணின்னு கெட்ட பழக்கம் எதுவும் இருக்கா?", ஒரு மார்க்கமாய் பார்த்தவன் "இருக்கணுங்கிறியா? வேணாங்கிறியா?"

"ஐயோ, தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்",

"ட்ரை பண்ணேன் அவ்ளோ பிடிக்கல, அதனால மொத தடவையோட போச்சு".
"ம், அப்புறம்" என அவள் அடுத்து கேட்கப் போக,

"இப்படியே காலையில வர பேசிட்டுருக்குற ஐடியால தான் வந்தியா?"

"இல்லயே, நீங்க பேசிட்டு இருந்தீங்க, அதான் நானு பேசிட்டு இருந்தேன். தூக்கம் வருதா? படுக்கலாமே நமக்குத் தான் இன்னும் காலம் முழுக்க டைம் இருக்கே பேசுறதுக்கு" ௭ன்றாள் நீளமாக அவளும்.

"அது சரி, பேசிறது நீ காலமுழுக்க பேசும்மா. ஆனா முதராத்திரி இன்னைக்குதான், அதயும் நியாபகம் வச்சுக்கோ" ௭ன மேலும் ஏதோ சொல்ல வந்தவன் நிறுத்தி திடிரென "உனக்கு என்னைய திருத்தி வேலைக்கு அனுப்புன அப்புறம்தான் சேர்ந்து வாழ்க்கைய தொடங்கணும், அப்டி இப்படின்னு எதும் சீரியல் காரணம் வச்சிருக்கியா?" ௭ன்றான்.

திருத்திருவென முழித்தவள் "ஒருத்தருக்கொருத்தர் பிடிக்க வேணாமா?" எனக் கேக்க.

"ஏய் என்ன இப்போ வந்துக் கேக்குற, புடிச்சுருக்குன்னு சொல்லி தான உன் கழுத்துல தாலியே கட்டுனேன்"

"ஓ! உங்களுக்கு பிடிச்சத/ தோணுறத தான் நீங்க செய்வேன்னு சொல்லுற மாறி, எனக்கு புடிச்சத எனக்கு தோணும் போதுதான் நானும் செய்வேன். அத நீங்கத் தடுக்கக் கூடாது" என்றாள் சரளமாக.

"இப்ப முத ராத்திரிக்கு சரிங்கிறாளா? வேணாங்கிறாளா?" ௭ன அவன் முழித்தான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 8

மொபைலை பக்கத்திலிருந்த டேபிளில் வைத்து விட்டு, சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கலட்டியவாறு, "இப்ப இருக்குன்றியா? இல்லன்றியா? அத மட்டும் சொல்லு பாப்போம்" ௭ன அவளிடமே கேட்டான் மாறன்.

௭ச்சிலை கூட்டி விழுங்கி, மெதுவாக "அது.அதான் எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணும்போது தான் செய்லாம்னு." ௭ன வார்த்தையயும் முழுங்கினாள்.

இப்போது சட்டையை முழுவதுமாக கலட்டிவிட்டு "எனக்கு புரியலடி" ௭ன மூஞ்சை சுருக்கி கேட்டவன் நாடியை தடவ.

அவன் பார்வையில் பயந்து, "நீங்க செய்யுற எதையும் தடுக்க மாட்டேன்னு சொன்னேன்" ௭ன படக்கென கூறினாள், இயல்பில் அவள் பயந்தவள் இல்லை ௭னினும், தற்போதைய முதலிரவுக்கான தனிமை அவளுள் ஒரு பயத்தை குடுத்திருந்தது.
அவள் பயப்படுவதை உணர்ந்தவன் "அப்ப உனக்கு இஷ்டம் இல்லயா?" ௭ன இலகுவாக சாய்ந்தமர்ந்து கேக்க.

'அடி ஆத்தி இவன் கேள்வி கேக்காம வேலையில இறங்கினா தாவல போலருக்கே' ௭ன மனதில் நினைத்து, "நா எப்போ அப்படி சொன்னேன்" என கூறி குனிந்து அவள் கை கல்யாண வளையலை ஆராய ஆரம்பிக்க.
குறுஞ்சிரிப்புடன் அவளை நெருங்கி அணைத்துக் கொண்டான். அதற்கு மேல் அங்கு பேச்சில்லை, ஒரு வகையான பிடித்தத்தின் அடிப்படையிலே அவர்களின் வாழ்க்கையை தொடங்கினர். அவள் தடைகளை தகர்த்தி, பயத்தை போக்கி, அவள் முகம் பார்த்து முன்னேறி, அவளின் வெக்கத்தில் போதை கொண்டு பெண்மை அறிந்தான்.

மறுநாள் காலையில்
அதிகாலை 4:00 மணி, 108 நாள் விழிப்பு பழக்கம் கன்னியை எழுப்பியிருந்தது. எழுந்து சென்று ஹீட்டர் இருந்தும் பச்சைத் தண்ணீர்லேயே குளித்து வந்தாள். அவள் தாத்தா சீராக கொடுத்த பெட்டியும், அதிலிருந்து சேலைகளில், புதிதாக எடுத்த நான்கில் ஒன்றை உடுத்திக் கொண்டிருந்தாள்.
அவளின் கல்யாண வளையல் சத்தத்தில் லேசாக ஒரு கண்ணை விழித்துப் பார்த்தவன், திரும்பி கடிகாரத்தை பார்த்து ஷாக்காகி "ஹே அதுக்குள்ள குளிச்சிட்டு எங்க கிளம்பிட்ட?" ௭ன கேக்க,

'முழிச்சிருவானோ? முழிச்சிருவானோ?' ௭ன அவனை கண்ணாடியில் பார்த்து கொண்டே தான் கிளம்பினாள். அதனால் அவன் முழித்ததும் கடிகாரத்தை பார்த்ததும் புரிந்து, "அது மூணு மாசமா இதே நேரமா எந்திருச்சு பழகிட்டேனா, அதான் முழிப்பு வந்துருச்சு. அதும்போக இங்கயும் லேட்டானா எல்லோரும் ஏதாவது நினைப்பாங்கள்ல, அதான் சீக்கிரமே" அவன் முகம் பார்க்காமல் சேலையில் கவனம் வைத்தே பதில் கூறினாள்.
"நல்லா பாத்தா 2 மணி நேரந்தான் தூங்கிருப்ப. அசதியா இல்ல?" ௭ன கேக்க.

இல்லை ௭ன தலை அசைத்தாள். "அப்ப இன்னும் கொஞ்ச உன்ன வேலை வாங்கிருக்கனுமோ?" ௭ன்றான்,
அதற்கு அந்த பக்கம் பதிலே இல்லை ௭ன்கவும், "இங்க உள்ளவங்க நினைக்கிறதுக்கெல்லாம் வாழ ஆரம்பிச்சனா, உன் வாழ்க்கைய நீ வாழ முடியாது பாத்துக்க, அவ்ளோ தான் சொல்லுவேன்" அசட்டையாக கூறினான்.

"இல்ல பரவால்ல நாந்தான் எந்துச்சுட்டேனே கீழப் போய் பாக்குறேன்" என்றாள்.

"தேவைக்கு மட்டும் பதில் சொல்லுற. ம்ம்.சரி, அது உன் விருப்பம், எந்துச்சது எந்துச்சுட்ட, நைட்டே இந்த பெட் சீட்ட அந்த பால்கனி கதவு மேல போட மறந்துட்டேன், அந்த பால்கனி கதவு முன்ன இருக்குற ஸ்கிரீன் மேல இந்த பெட் சீட்ட போட்டுப் போ" என்க.

"எதுக்கு?" என கேட்க.

"போடேன், ௭னக்கு தூக்கம் வருது, வெளிச்சம் வந்தா தூக்கம் போயிடும்".
"ம்" என்ற பெருமூச்சோடு வந்து போட்டுவிட்டு சென்றாள்.

மெதுவாக இறங்கி கீழ்தளம் வந்தாள் கன்னி. ஹாலில் மட்டுமே நோ வோல்ட்ஸ் பல்ப் எறிந்து கொண்டிருந்தது. 'இன்னும் யாரும் எந்திரிக்கல போல' என எண்ணிக் கொண்டு நேராக பூஜை அறையைத் தேடிச் சென்றாள், அது பாட்டியறைக்கும், கிச்சனுக்கும் நடுவில் இருந்தது. முதல் நாள் இட்ட பூ காய்ந்த நிலையில் இருக்க, எல்லாவற்றையும் எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்தாள். பத்தி, சாம்பிராணி தூள்களை சுத்தப்படுத்தினாள். அடுப்படி சென்று அங்கிருந்த பழைய துணியில் தண்ணீரை நனைத்து எடுத்து வந்து பூஜையறையை துடைத்தெடுத்தாள். சிலைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று சிங்கிள் குளிப்பாட்டி கொண்டு வைத்தாள், விளக்கு, பூஜை பொருட்களை எல்லாம் விளக்கி எடுக்க, பிரஸ் எது என்று தெரியாததால் அதையும் சும்மாவே நனைத்து எடுத்து வந்து, சாமி அறை கப்போர்டில் இருந்த சிறு துணி கொண்டு துடைத்து விட்டு, எண்ணெய், திரியிட்டு வைத்தாள். பூவிற்கு என்ன செய்யலாம் என விழித்தவள், பிரிட்ஜில் இருக்கிறதா பார்க்கலாம் என எண்ணிக் கொண்டு போய் பார்க்க. அவளின் பள்ளி தோழி ஒரு பெண் வீட்டில் பார்த்தது சிங்கிள் டோர் பிரிட்ஜ், இது அதை விட உயரமாக இருந்தது. முதல் முறை பார்க்கிறாள், அனால் அதைப் போல்தான் இருக்கிறது என எண்ணிக்கொண்டு திறந்து பார்த்தாள். திறந்த உடனேயே மல்லிகை மணமும் ஆளையே விழுங்குவது போல் அடித்தது, எடுத்து சென்று எல்லா போட்டோவிற்கும் போட்டுவிட்டாள்.

பின், முன் வாசல் கதவைத் திறந்து அவளே யூகித்து முன்னாள் மோட்டார் ரூம் கதவை திறந்து விளக்கமாறு, வாலி எல்லாம் எடுத்து வாசலை சுத்தப்படுத்தி, தண்ணீர் தெளித்து கோலமிட்டாள்.

'அதிகபிரசங்கித்தனம்னு நினைப்பாங்களா? இல்ல நல்ல பொண்ணுன்னு பாராட்டுவாங்களா' என்ற யோசனையோடு தான் எல்லாம் செய்து கொண்டிருந்தாள். வெளி வேலை முடித்து எல்லாவற்றையும் இருந்த இடத்தில் வைத்து விட்டு வந்து விளக்கேற்றினாள். பத்தி காமித்து, சாம்பிராணி காமித்து, சூடத்தை ஏற்றி மணியை அடிக்க ஆரம்பித்தாள். ஒருமனம் கடவுளை வணங்க, இன்னொரு மனம் 'மணி சத்தத்துல எல்லாரும் எந்துச்சு வந்துருவாங்களோ! வந்தா என்ன சொல்வாங்க' என்ற சிந்தனைக்கு போய்விட்டிருந்தது.

மளமளவென்று எல்லா கடவுளுக்கும் ஆரத்தியை காண்பித்து முடித்து மணியை மூன்று முறை பைனல் டச் கொடுத்து வைத்தாள். பாட்டியும், பானுவும் எழுந்து வந்திருந்தனர். இவள் பக்திமயமாய் சாமி கும்பிடுவதை கண்டு அமைதியாக நின்றனர்.

இவள் பூஜை முடித்து "ஹப்பா யாரு எழும்பல போல, உள்ளவர கேக்காதா இருக்கும்" என எண்ணி திருநீறு, குங்குமம் இட்டுக்கொண்டு திரும்ப, இருவரும் வாசலில் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு, "அச்சோ எழுப்பிட்டேனா?" என்றாள்.

பாட்டி ஏதோ சொல்ல வர, "அதான் எழுப்பிட்டியே அப்புறம் என்ன கேள்வி வேற, சீன் போடுறியா? சின்ன புள்ள இருக்க வீடு, அஞ்சு மணிக்கே மணி அடிச்சு எழுப்பி விட்டனா நீயா வந்து தூங்கவைப்ப?" என்றாள் ராணி கடுகடுவென்று.

"மருமகளா நீதான் எதையும் செய்ய மாட்டேங்குற, செய்யுற பிள்ளைய பேச வந்துட்டா. போடி போய் விட்ட தூக்கத்தை தொடங்கு" பாட்டி சொல்ல.
"இதுக்குத்தானே இது எல்லாத்தையும் (பூஜையறையை காட்டி) பண்ணுன, உன் ஆசை நிறைவேறிருச்சா? வந்த மறுநாளே சொந்த மருமகளையே நீயலா என்ன மருமகனு சொல்ல வச்சுட்ட" ராணி விடாமல் நின்றாள்.
பதில் சொல்லாமல் விடமாட்டாள் ௭ன்றெண்ணி, "இங்கப் பாருங்க இத்தன நாளா நீங்க செஞ்சீங்களா? இல்லயான்னு? எனக்கு எப்படி தெரியும். தெரிஞ்சு செய்யல, சீக்கிரமே எழுந்துட்டேன் அதனால என் வீட்ல என்ன செய்வேனோ அத இங்கேயும் செஞ்சேன். ஒரு வேல புள்ள எந்துச்சுட்டாலும் கொண்டுவந்து கொடுங்க, நா தூங்க வைக்கிறேன்" என்றாள் கன்னி.

"திங்கப் போறது தண்டசோறு, இதுல பேச்சு" என்று விட்டு சென்றாள் ராணி.
ராணி சென்றதும் மாமியாரிடம் திரும்பியவள் "௭தித்து பேசிட்டேன்னு நினைக்காதீங்க அத்தை, பாட்டி, என்ட்ட எப்படிப் பேசுறாங்களோ அதே மாதிரிதான் திருப்பி அவங்களுக்கும் பதில் கொடுப்பேன், தப்பா எடுத்துக்காதீங்க, மணி பாத்தேன் 6.30 ஆகிடுச்சு அதான் பரவால்லன்னு மணி அடிச்சேன்" ௭ன்க.

"அட விடுத்தா. சொல்லாமலே ௭ல்லாம் செஞ்சுட்ட. அவ குணமே அப்படித்தான்த்தா, எங்களுக்கெல்லாம் பழகிருச்சு, பதிலுக்கு பதில் சண்டை போட்டு குடும்பம் மட்டும் பிரிஞ்சுடாம பாத்துக்கோத்தா" என்றார் பாட்டி.
அதற்கு "சரி பாட்டி" என கேட்டு கொண்டாள்.

மாமியார் இருவரையும் பார்த்தவாறே இருப்பதைக் கண்டு, "என்னத்தே வாயாடி மருமகளாவே நமக்குன்னு அமையுதே, அப்டின்னு யோசிக்கிறீங்களா?" ௭ன்றாள் இயல்பாக அவரிடம்.

"கிட்டத்தட்ட அப்டித்தான் நினைச்சேன். நீ தயங்காம உன் வீடுன்னு மொத நாளே வேலைய ஆரம்பிச்சுட்ட பாரு, ௭னக்கு அதுல ரொம்ப சந்தோஷம். ஆனா நா உன்ட்ட வேற எதுவும் கேட்கல, என் புள்ளைய மட்டும் நாலு பேர் மதிக்கிற மாதிரி செய். மதிக்கக் கூட வேண்டாம், பழிக்காம இருந்த போதும்" ௭ன்றார் உருகிய குரலில்.

"என்னால முடிஞ்ச முயற்சியை நா கண்டிப்பா செய்றேன்த்தே. இப்ப வாங்க டீட போட்டு குடிப்போம்" என மாமியாரையும் பாட்டியையும் அழைத்துச் சென்றாள்.
பின் பாட்டி, மாமியார், கன்னி மூவரும் டீ போட்டுக் குடித்து, குடும்ப உறுப்பினர்களை பற்றி விவரித்து என இருக்க.

தாத்தா இறங்கி வந்தார், "மாடில ஒரே கொசுத் தொல்ல கிழவி, விடிய விடிய தூக்கமேயில்ல. இன்னைக்குலா நா கீழதான் படுப்பேன் சொல்லிட்டேன். நா பூவு ரூம்ல போய் படுக்கேன்" என்று விட்டுச் சென்றார்.

கன்னி புரியாது முழிக்க. "அது ஒன்னுமில்லத்தா கல்யாணத்துக்கு வந்தவக தங்க இடம் வேணும்ல, எங்க ரூம்ல 3 பேர் படுத்திருக்காக. நைட்டு மேல படுங்கன்னே அதுக்குதான் பொலம்பிட்டு போறாக" என பாட்டி சொல்லிக் கொண்டிருக்க.
மேலிருந்து "மலர்" என்று அழைத்தான் மாறன்.

"அடி ஆத்தி, உன் புருஷனுக்கு இன்னைக்கு அதுக்குள்ளயுமா விடிஞ்சிருச்சு" என பாட்டி நொடிக்க. இவள் அடுப்படி விட்டு வெளிவந்து மேல் பார்க்க, அவன் அங்கிருந்தே "இங்க வா" என அழைத்தான்.

"டீ எடுத்துட்டு வரவா?" என்றாள் இவள்.
"சரி எடுத்துட்டு வா" என்க.

அதற்குள் மாமியார் டீ போட ஆரம்பிக்க, கன்னி "அவங்களுக்கு எப்படி போட்டா பிடிக்கும்" என கேட்டு தெரிந்து கொண்டாள்.

"இனிப்பு கொஞ்சம் கூட போட்டு கொடுக்கணும்மா" என்றார்.

"சரித்தே" எனக் கேட்டு வாங்கிக் கொண்டு மேலே ஏறினாள்.

7 மணிக்கு வெளியில் அவ்வளவு வெளிச்சமாய் இருக்க, அவர்களறை இன்னும் நைட் மோடுலேயே இருந்தது, இப்பொழுது புரிந்தது அவளுக்கு, 'ஸ்கிரீன் லேசாக இருப்பதால் சூரிய பகவான் உள் நுழைந்து விடுகிறார் என்பதால் கனத்த போர்வையை அதன் மேல் போட்டுக் கொள்கிறான்' என.
கொண்டு வந்த டீயை மெத்தையில் அமர்ந்திருந்த அவன் கையில் கொடுத்து விட்டு, அந்த போர்வையை விளக்கினாள் "எத்தன மணி வர டெய்லி தூங்குவீங்கன்னு இந்த செட்டப்" ௭ன்றாள்.

"அது 9 மணி ஆகும். 10 மணிக்கு தான் உன்ன பாக்க வந்துருவேனே".

பின் அவன் டீ குடிப்பதைப் பார்த்து விட்டு "பல் தேச்சுட்டு குடிக்கிற பழக்கம் இல்லயோ?" ௭ன அவன் அருகில் வந்தமர்ந்து கொண்டாள், நேத்திருந்த பதட்டம் இன்றில்லாததால் பேச்சு சரளமாக வந்தது,

"இல்லையே" ௭ன தோள் குழுக்கினான்,

"சுத்தம்" என முனங்கினாள்.

"என்ன மாத்த முயற்சி செய்றேன்னு அம்மாக்கிட்ட சொல்லிட்டிருந்த. என்கிட்ட உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருங்கன்னு சொன்ன" ௭ன குறுகுறுவென பார்த்தான்.

அந்த பார்வை அவளுக்கு தடுமாற்றத்தை தந்தது, சமாளித்து "ஒட்டுக் கேட்டீங்களா?" ௭ன்றாள்.

"நீ எந்திரிச்சு போனதுலயிருந்து எனக்கு தூக்கமேயில்ல, புது இடத்துல இந்நேரமே எந்திரிச்சு போய் என்ன செய்வான்னு வெளியில வந்து நின்னு உன்னத் தான் பாத்துட்டே இருந்தேன். இப்ப நீங்க கிச்சனுக்குள்ள போகவும் தான் சரி படுப்போம்ன்னு வந்து படுத்தேன், தூக்கம் வருவேனாங்குது, அதான் உன்ன கூப்டேன்",

"நா ௭துக்கு?"

"தூங்க வைக்க தாண்டி, வேறெதுக்கு" ௭ன்றவன் டீ கிளாஸை கீழ் வைத்து விட்டு அப்படியே அவள் மடியில் படுத்தான்.

"ஏன்? ஏன் இப்டி? நா. நா குளிச்சுட்டேன்",
"பராவால்ல மறுபடியும் குளிக்கலாம், தண்ணிக்கு இங்க பஞ்சமில்ல"
"இல்ல அது. சேல. " அவளை பேச விடவில்லை அவன்.

மறுபடியும் குளித்து சேலை மாற்றி, கீழ் போக கூச்சபட்டு அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

தானும் குளித்து வந்தவன், "கீழ போகல?" ௭ன்றான் குறும்பாக.
அவள் முறைத்து விட்டு வேறு பக்கம் பார்த்தாள்.

"நீ நா கேட்டதுக்கு பதிலே சொல்லல?" ௭ன்றான் தலையை துவட்டியவாறு.

"௭ன்ன கேட்டீங்க?" உண்மையில் மறந்து விட்டிருந்தாள்.

மெலிதாக சிரித்தவன், "௭ங்கிட்ட ஒருமாறியும் ௭ங்க அம்மாகிட்ட ஒரு மாறியும் பேசுறியே ஏன்னு கேட்டேன்".

"நா உங்கள மாத்துவேன்னு சொல்லவே இல்ல. என்னால ஆன முயற்சியை பண்றேன்னு தான் சொன்னேன். அதுக்காக மாமியார் ஒரு விஷயத்த கேட்கும்போது முடியாது, பண்ண மாட்டேன்னா சொல்ல முடியும். உங்களுக்கு நம்மள யாராவது திருத்தணும், மாத்தணும்னு எண்ணம் போல. அதான் அதேயே கேக்குறீங்க".

"அப்படிலாம் ஒன்னும் இல்ல, உனக்கு எதுவும் கஷ்டமா இருக்குமோன்னு நினைச்சு தான் கேட்டேன். ராணி வேற அப்படி பேசினதுக்கு வருத்தப்பட்டுருப்பியோன்னு தான் கேட்டேன். ஓவரா கற்பன பண்ணிக்காத, இந்த வீட்ல இருக்றவங்க ௭ல்லாருக்கும் நீ வந்து ௭ன்ன மாத்த போற, அதான் ௭ண்ணம், அதுக்காக கேட்டேன்" என ட்ரஸை ௭டுக்க செல்ல.

சென்றவனை பார்த்து சிரித்துக்கொண்டு "நல்லவன் தான்" என சொல்லி "நா கீழப் போறேங்க, ட்ரஸ் மாத்திட்டு வாங்க கோயிலுக்கு போயிட்டு வரலாம்" என்றாள்.

"சரி" என தலையசைத்து சுருக்கமாக முடித்துக் கொண்டான்.

கீழ் சென்று மாமியாரிடமும் சொல்லிவிட்டு காலை சாப்பாட்டிற்கான வேலையில் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். கை வேலைக்கு இருக்கும் இரு பெண்களும் வந்திருந்தனர்.
வந்த ஒரு நாளிலே அது அவள் வீடுபோல் இயல்பாக இருந்தாள். ௭ல்லோரிடமும் ஈசியாக பழகினாள். தனியாகவே வளந்ததாளோ ௭ன்னவோ, அவளுக்கு இங்கு நிறைய பேரோடு இருக்க பிடித்திருந்தது.
8 மணி ஆகவும் ஒவ்வொருவராக எழுந்து வந்தனர். ஒரு உறவினர், "ஏன்மா புது பொண்ணு தலையில பூ வச்சா என்ன?" என்க.

"இருந்த பூவெல்லாம் எடுத்து சாமிக்கு போட்டு பூஜைய முடிச்சுட்டா. இனி தான் வாங்கிட்டு வரச் சொல்லணும்" பாட்டி சொல்ல.

"கோவிலுக்கு தானே போறோம் வாங்கி வச்சுக்கிறோம்" என்றாள் கன்னி.

அந்நேரம் வீட்டினுள் நுழைந்த மகள் மதி, "என்னது மொத்த பூவயும் ௭டுத்து சாமிக்கு போட்டாளா? நா இப்ப ௭த ஸ்கூலுக்கு வச்சுட்டு போவேன். அறிவில்ல? ௭தயும் கேட்டிட்டு செய்ற பழக்கமில்ல" என நேரடியாகவே கன்னியை கேட்க.

"எடுத்ததும் இப்படியா பேசுவ" ௭ன பாட்டி அதட்ட,

"அவ வேலைய மட்டும் அவள பாக்க சொல்லுங்க. வந்தன்னைக்கே மொத்த வீடும் அவளுக்குத் தான்னு ஆடக்கூடாது. தெனோ நா பூவச்சுட்டு தான போவேன்" ௭ன ஏகத்துக்கும் குதித்தாள்.

"ஏன் உங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூல்ல மாச சம்பளம் தாரதில்லையா? இல்ல உன் புருஷன் உனக்கு பூ கூட வாங்கி கொடுக்க முடியாத அளவுக்கு கடன்ல இருக்காரா?" என கேட்டுக்கொண்டே இறங்கிவந்தான் மாறன்.

"என்ன புது பொண்டாட்டிக்கு வக்காலத்தா?" என்றாள் அதற்கும்.

"புதுசு, பழசுன்னுலா ௭னக்கில்ல. ஒரே பொண்டாட்டி தான். தாத்தா வா சாப்பிடுவோம்" என்றான்.

"இங்கப்பாரு ஒன் பொண்டாட்டி என் வழில வரக்கூடாது, பின்ன அவ்வளவு தான் சொல்லிவை" ௭ன்றுவிட்டு "ம்மா சாப்பாடு எடுத்துவைமா லேட்டாகுது" என புருஷனுடன் வந்தமர்ந்தாள்.

கொஞ்ச நேரத்தில் மகன் மருமகளும் வந்தமர்த்தனர். மாறனும் நண்பனுக்கு கால் செய்து சாப்பிட வரச் சொல்லிவிட்டு தாத்தாவை அழைத்து வந்து அமர்ந்து கொண்டான்.
இதையெல்லாம் ஹாலில் அமர்ந்து உறவினர்களோடு பேச்சு வார்த்தையில் இருந்த பூவேந்தனும், பானுவும் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்தனர். சுற்றியிருக்கும் உறவுகள் வீட்டுக்கு வந்த விருந்தினர்களை மூன்று பிள்ளைகளும் ஏன் என்று கேளாமல் தன் வேலையை முடிக்க அமர்ந்துவிட்டனர். ஒரு பிள்ளையைக் கூட நாம் சரியாக வளர்க்கவில்லை என வருந்தினர்.

தாத்தா மட்டுமே அமர்ந்தவாக்கிலேயே "அது யாருக்கும் லீவு எடுக்க முடியல அதான் அவசரமா வேலைக்கு கிளம்பிட்டாக. நீங்கலாம் சாப்பிட்டுருப்பீங்கன்னு நெனைச்சுருக்குங்க" என்றார்.

அவர் சமாளிக்கிறார் என்று எல்லோருக்கும் புரிந்தது. எல்லாருமே காலை சாப்பாட்டுடன் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாயினர். எல்லாம் அவரவர் வேலைக்கு கிளம்பிவிட, "கோயிலுக்கு போணும்ல்ல சீக்கிரம் சாப்பிட்டு வா போலாம்" என்றுவிட்டு உண்மையுடன் மேலேறினான் மாறன்.

கன்னி ஒவ்வொருவரையும் அறிய முற்பட்டாள், "ரக ரகமா நம்ம வீட்ல தான் பாக்கலாம். ஒன்னுக்கும் பொறும கிடையாது. சின்ன வயசுலயே அடிச்சு வளத்துருக்கணும், அண்ணனப் பாரு உருப்படாம போயிட்டான்னு சொல்லி சொல்லி வளத்தா, இப்பயும் அதுக நீயும், நானும் ஒன்னில்ல. நீ கீழ நான் மேலன்னு வாழுதுக. நம்மள மட்டும் மட்டம்தட்டுறாங்க அப்படின்னு அவனும் தெனாவட்டா திரியுறான்" என்றார் தாத்தா.

இதற்கு அவள் மைண்ட் வாய்ஸ், 'நாலுபேர் பெரியவங்க இருந்தும் மூனு பிள்ளைகள ஒழுங்கா வளக்கல. சொத்து சேக்குறதுலயே குறியா இருந்ததுட்டு இப்ப புலம்பி ௭ன்ன பிரயோஜனம்' என கவுண்டர் கொடுத்தாலும் வெளியே அமைதியாக தாத்தா சொன்னதை கேட்டுக் கொண்டாள்.

பானு "நீ சாப்பிட்டு கெளம்புமா, அப்படியே தாத்தாவையும் போய் பார்த்துட்டு வாங்க" என்க.
"சரித்தே" என சாப்பிட்டு, கிளம்ப மாடியேறினாள்.

அறையினுள் அவனில்லை, மாடிக்கு சென்று இருப்பான் போலும் ௭ன அவளும் மேலேறி சென்றாள். அங்கு உண்மையும் இருக்க, "இனி நீங்க தாத்தா கூட தான் தங்கப் போறீங்களாண்ணா?" என்றாள் அவனிடம்.

"ஆமாமா, ஏன்?"

"இல்ல கேட்டேன், கொஞ்சம் பாத்துக்கோங்கண்ணா. அவங்க சாப்பாட்ட அவங்க பாத்துப்பாங்க. உங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறீங்க?" ௭ன்றாள் நேராகவே.
"ஏய் என்னடி உன் தாத்தா காசுல சாப்பிடுவானோன்னு பயம் வருதோ?" மாறன் கேக்க,

"நிச்சயமாங்க, முதியோர் பென்சன்ல சாப்பிடுற மனுஷன். கூட இருக்கவங்கள பாக்க வச்சு சாப்பிடவும் தெரியாது. அதான் அண்ணா எப்படி சமாளிப்பாங்கன்னு கேக்குறேன்".
தலையை குனிந்து கொண்டான் உண்மை. "உங்கள கஷ்டப்படுத்த இத கேட்கல, அங்க நீங்க தங்கலைனா இதக் கூட நா கேட்க மாட்டேன்" என்றாள்.

"ஏன் அவன கஷ்டப் படுத்துற மாதிரி பேசுற. கல்யாணம் முடிச்ச மறுநாளே உன் புத்திய காட்ற?" மாறன் திட்ட.

"உங்களுக்கு சோறு போட, உங்க அப்பா இருக்காங்க. அண்ணாவுக்கு யாரும் இல்ல. இத முன்னையே யோசிச்சு அவங்க வேலைக்கு போயிருக்கணும். இப்போ என்னோட சுயநலத்துக்காக கேட்டாலும், நா அவுங்களுக்கு கெட்டது நினைக்கல நல்லது தான் நினைக்கிறேன்" ௭ன்றாள் அவனை நேராக பார்த்து.

"நா ஒரு வேலையை தேடிக்கிறேன்மா அது வர".

"நா அவ்வளவு கல்நெஞ்சக்காரி இல்லண்ணா. நீங்க அவர் காசுல சாப்பிட்டாலும் 15 நாளைக்கு மேல, உங்க கூட சேர்ந்து அவரும் மீதி 15 நாள் பட்டினி கிடக்கணும். நா முன்னெச்சரிக்கையா சொல்றேன் அவ்வளவுதான்" என்று விட்டு இறங்கி விட்டாள்.

"வருத்தப்படாத மாப்ள" என மாறன் சொல்ல வர,

"தங்கச்சி நல்ல புள்ளடா. மனசுல பட்டத எதார்த்தத்த சொல்லிட்டு போது, அதுகிட்ட போய் சண்ட பிடிக்காத" என்றவாறு கீழே இறங்கினான் உண்மை.

மாறனும் தனதறை சென்றவன், அவள் தலையை தளரப் பின்னி கொண்டிருக்கவும், ஏதோ சொல்ல வர, கண்ணாடியில் அதை கவனித்தவள், "நா சொன்னது உண்மையாவே உங்க மனசாட்சிக்கு தப்புன்னு தோணுனா என்கிட்ட சண்டைக்கு வாங்க. உங்கள நா கட்டிக்கிட்டேன். அந்த அண்ணனை யார் கட்டிப்பா? பொண்ணு கொடுக்கணும்னா மாசம் 50 ரூபாயாவது சம்பாதிக்கணும். உங்க யாரையும் திருத்துறது என் வேலை இல்ல. எனக்கு பாதகம் வராம பாத்துக்குறேன் அவ்வளவுதான்" என்றாள் பொறுமையாக.

மாறனுக்கும் இதில் மறுத்துக் கூற தப்பாக எதுவும் தெரியவில்லை என தலையை பிடித்து கொண்டு அமைதியாய் அமர்ந்து கொண்டான்.
"கிளம்புங்க போலாம்" என்றாள்.
அவன் அப்படியே எழுந்து வெளியே போக, "இதே டிரஸோடவா?" என்றாள் அவனது வெளுத்த கிழிஞ்ச ஜீன்ஸயும், மஞ்சள் டி ஷர்ட்டையும் காண்பித்து.

"ஏன் இதுக்கு என்ன?" என்றான் அவனும் குனிந்து.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 9

'சொல்லுவோமா வேணாமா? சொன்னா கேப்பானான்னு வேற தெரிலயே' ௭ன அவனையே பார்த்து அவள் யோசிக்க.

"௭ன்னடி. குறு குறுன்னு பாக்ற. கோவில் போ வேணாமா?" ௭ன புருவம் உயர்திதியவன் அவளை நெருங்க.
பதறி அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தவள், "இல்லங்க, நம்ம ரெண்டு பேரும் சேந்து மொத மொத வெளில போறோம்கோவில் போகும் போது மட்டும்னாலும் எனக்கு புடிச்ச மாதிரி டிரஸ் பண்ணுங்களேன். மத்த நேரம் இப்டி ௭ப்டி வேணா போடுங்க, நா ஒன்னும் சொல்ல மாட்டேன்" ௭ன மூஞ்சியை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு சொல்ல.

"அதுக்கேன் உன் மூஞ்சி அப்டி போது, அதென்ன உனக்கு பிடிச்ச மாதிரி? ஏன் இதுக்கென்ன? பிடிக்கலயா உனக்கு?" ௭ன்றான் அதட்டலாக.

"அது.அது வந்து.இது கோவில் போறதுக்கு ஏத்ததா இல்ல"

"ஏன் காவிக் கட்டிட்டு வர சொல்றியா?"

"அவ்வளவு தூரம் போக வேணாங்க. இங்க வாங்களேன், உங்க கப்போர்ட்ல இருக்க டிரஸ்ஸ காட்டுங்க" என அவனை இழுத்துச்சென்று கப்போர்ட் முன் நிறுத்தினாள்.

பின், அவள் திறக்க மொதுமொதுவென அவள் மேல் உள்ளிருந்து டிரஸ் மொத்தமும் வந்து விழுந்தது.
"பாட்டி எப்பயும் மடிச்சு வச்சுரும். கல்யாண வேலைல மறந்துட்டு போல. சரி கீழ கடந்தாலும் தெரியுமே, உனக்கு பிடிச்சதப் பாத்து எடு" என்க.

பெருமூச்சோடு அதை அப்படியே அள்ளிச் சென்று கட்டிலில் போட்டாள். 7, 8 பேண்ட் கடந்தது, ஆனால் அத்தனையும் ஜீன்ஸ், பழசானதாக இருந்தது. சட்டை, டி-ஷர்ட் கூட குறைஞ்சது 20ஆவது கடக்கும். ஆனால் எதுவுமே புதிது போல் தெரியவில்லை.

"புதுசுன்னு எதுவுமே இல்லயா? சாதா பேண்ட் கூட இல்ல?" எனக் கேக்க.

"கல்யாணத்துக்குன்னு 4 எடுத்தேன். எல்லாமே அழுக்குல கடக்கு" ௭ன அழுக்கு கூடையை காமித்தான்.

"சுத்தம், அழுக்கவா கோயிலுக்கு போட்டு போமுடியும்" ௭ன சோகமாக கூறி முகம் வாடி நின்று விட்டாள்.

"ஹே இப்ப ௭த போட்டா ௭ன்ன? சும்மா அழுது மூட கெடுக்காம வா" ௭ன்றான்.
வேறு வழியின்றி அங்கு குமிந்து கடந்ததில், ஃபுல் ஹேண்ட் ஷர்ட் லைட் ப்ளூ கலரில் உள்ளதை எடுத்து, கருப்பு கலர் ஜீன்ஸும் எடுத்துக்கொண்டு, "அயர்ன் பண்ண தெரியுமா?" ௭ன வந்து அவன் முன் நீட்டினாள்.

"தெரியும், ஆனா அதெல்லாம் நா பண்றது இல்ல, கொண்டா அப்டியே போட்டுக்றேன்" ௭ன வாங்க வந்தவனிடம், நீட்டின கையை பின் இழுத்து கொண்டவள்.

"ம்கூம் அயர்ன் பண்ணா தான் நீட்டா இருக்கும், வாங்க ப்ளீஸ் ப்ளீஸ் கோச்சுக்காம பண்ணிடுங்க, 5 நிமிஷம் தான் ஆகும்" என்க,

"காலைலயே வேல வாங்குற நீ ௭ன்ன" ௭ன்றவாறு அதே அறையில் ஓரமாக இருந்த டேபிளை ஒதுக்கி அயர்ன் பண்ண அவன் ரெடி செய்ய, எப்படி செய்கிறான் என அவள் பார்த்துக் கொண்டாள்.

"இந்த நச்சு வேலனாலேயே நா இப்டி சட்டலா போட மாட்டேன்" என புலம்பிக்கொண்டே தான் அயர்ன் செய்தான்.

பின் "நீங்க மாத்திட்டு வாங்க, நா கட்டில்ல கடக்க துணிய மடிக்கிறேன்" என நகர்ந்து விட்டாள். அங்கு சென்று பார்த்தாள் இவனுக்கு சேராத அளவு சட்டையெல்லாம் கடந்தது. இதையும் கை பார்க்க வேண்டும் என குறித்துக் கொண்டாள்.

"இப்ப நல்லாருக்கா?" பின்னிருந்து கேக்க, திரும்பிப் பார்த்தாள், ஆள் பாதி, ஆடை பாதி என்பது அவன் விஷயத்தில் நன்றாக பொருந்தியது. வாட்ட சாட்டமாக, நிமிர்ந்த ஆண்மகனாக தெரிந்தான்.
மாநிறத்திற்கு சற்று கூடுதலான நிறம் தான், அவன் நிறத்திற்கு அந்த சட்டை ௭டுப்பாக இருந்தது. ரசித்துப் பார்த்தாள், 'இவ்வளவு அழக ஏன் ஒளிச்சு ஒளிச்சு வச்சுக்குறாருன்னே தெரில' என மனதில் நினைத்து திருஸ்டிக் கழித்தாள்.

புருவத்தை ஏற்றி கேள்வியாய் பார்த்தான், "ஒன்னுமில்ல வாங்க போவோம்" என கிளம்பினர்.

தாத்தாவும், பாட்டியும் தீவிர டிஸ்கஷனில் இருந்தவர்கள் இவர்களை காணவும், "என்னத்தா கிளம்பிட்டீங்களா?" என்றவர், மாறனை கண்டுவிட்டு "கண்ணு ஒரே நாள்ல என் பேத்தி உன் அடையாளத்தயே மாத்திப்புட்டா பாத்தியா?" என்க.

'அட தாத்தா இப்படி போட்டு உடச்சுட்டிங்களே. என்னைய மாத்த ட்ரை பண்ணுறியா இப்ப சண்டைக்கு வருவாரே என்ற ஆத்துக்காரர்' என மைண்ட் எடுத்துக் கொடுக்க. ஸ்லோ மோஷனில் திரும்பி கணவனை பார்த்தாள்.

அவன் ஆல்ரெடி முறைத்துக் கொண்டிருக்க, 'இல்லை' என்பது போல் அவனை பார்த்து தலையசைத்தாள். முறைத்தவாறே வெளியேறிவிட்டான்.
"தாத்தா.இப்படி என்னைய மாட்டி விட்டீங்களே. உங்க பேரன்ட்ட ஏதாவது மாற்றம் தெரிஞ்சா ரசிங்க. என் பேர இழுக்காம பாராட்டுங்க. இல்லன்னா எனக்காக செய்ற சின்ன சின்ன விஷயத்த கூட செய்ய மாட்டாங்க" என்றாள் அழுவது போல்.

"அதான் இந்த மனுஷனுக்கு கூறே இல்லன்னு திட்டுதேன். அவன் எப்டி பேசினா கோபப்படுவான்னு தெரிஞ்சும் இப்டி உசுப்பேத்தி விட்டுடீக" பாட்டியும் எகிற. தாத்தா பாவ முகத்தை கொண்டு வந்திருந்தார். அதற்கு மேல் முடியாமல் சிரித்த கன்னி "போயிட்டு வரோம் தாத்தா, பாட்டி. அத்தகிட்ட சொல்லிடுங்க" என்று விட்டு கிளம்பினாள்.

மாறனோ கோபமாய் வெளியே வந்தவன், அப்புறமே எப்படி போறது என்ற சிந்தனைக்கு வந்திருந்தான். வெளியே ஒரு ஹோண்டா மட்டுமே நின்றது. அது அறிவுடையது. 'வாசல் வரை வந்தா யோசிப்ப பக்கி' என தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.

அவனை பார்த்தவாறே வந்தவள், "என்ன இன்னும் என்ன திட்டி முடியலயா?" என கேட்க.

"அத அப்புறமா கூட திட்டிக்கலாம். இப்ப எப்படி கோயில் போறது. நா இத யோசிக்கவே இல்ல. அறிவு வண்டிய அந்த ராணி குடுக்கமாட்டா" என்க.

"யார் வண்டியும் வேண்டாம், அதிக வெயில் தெரியல, அப்டியே நடந்து போயிரலாம் வாங்க. அரசமரப் பிள்ளையார பாத்துட்டு அப்படியே முருகன் கோயில்ல அர்ச்சனைக்கு கொடுத்துட்டு வந்துரலாம்"

"அவ்வளவு தூரம் நடந்துருவியா?"

"எனக்கு அதுதான பழக்கம்" என்றாள் சுருக்கமாக.

"ஓ! சரி இரு தாத்தாட்ட பூ, பழம் வாங்க காசு வாங்கிட்டு வந்திடுறேன்" என உள்ளே போக திரும்ப.

"அதெல்லாம் வேணாங்க, நம்மகிட்ட இருக்குறத வச்சு கும்பிட்டாலே சாமி ஏத்துக்கும் வாங்க. போவோமா? " என கிளம்பினர்.

'காலையில் தங்கை ஆத்துக்காரரை, தான் கேட்டது ஞாபகம் வந்தது, தன்னிடம் பரவாயில்ல, உன் இஷ்டம் போல் இரு என விட்டுக்கொடுக்கும் மனைவிக்கு 20 ரூபாய்க்கு பூ வாங்கிக் கொடுக்கக்கூட தன்னிடம் காசு இல்லயே என முதல் முறையாக நிரந்தரமான ஒரு வேலைக்கு போய் இருக்கலாமோ?' என சிந்தனை வந்து சென்றது.

ஏதேதோ பேசி சிரித்தவாறு இருவரும் நடந்து சென்றனர். "எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு பாருன்னு காட்டவே பொஞ்சாதிய நடத்தியே கூட்டிட்டு போற போல?" என கிண்டல் செய்த ஒருவரை,

"ஆமா பின்ன இவனை ௭ல்லாம் ௭வ கட்டிக்குவான்னு கேட்டவனுக்கெல்லாம் ஐஸ்வர்யா ராய் மாதிரி ஒரு அழகிய கட்டிட்டு வந்துருக்கேன்னு காட்ட வேணா?" என இவன் பதில் கொடுக்க.
"அதுக்கடுத்து எத்தனை ஹீரோயின் வந்தாலும் இன்னும் ஐஸ்வர்யாராயை விட மாட்டேங்கிறாய்ங்கய்யா" இன்னொரு பெரியவர் கூற சிரித்துக்கொண்டே ஒவ்வொருவராய் பேச்சுக் கொடுக்க பதில் கூறிக் கொண்டே நடந்தனர்.

பின் அரசமரத்து பிள்ளையாருக்கு ஆளுக்கு 11 தோப்புக் கரணத்தை மட்டும் காணிக்கையாக்கி விட்டு. அங்கிருந்து சற்று தள்ளியிருந்த குன்றின்மேல் முருகனை மனதார வேண்டி விட்டு வந்து மலையடிவாரத்தில் அமர்ந்தனர். இவர்களை நன்றாக தெரியும் என்பதனால் முருகன் சன்னதி பூசாரி காணிக்கை இடாமலேயே பூவும், எலுமிச்சம் பழமும் கொடுத்தனுப்பினார், அதை தன தலையில் வைத்துக்கொண்டாள்.

"என்னட்ட ஏதுமேயில்ல, பைக், காசு இதெல்லாம் இல்லயேன்னு உனக்கு வருத்தம் இருக்கும் தான, அதெப்படி ஒரு பொண்ணு வருத்தப்படாமா இருக்க முடியும்" என்றான்.

"எனக்கு வருத்தம் இருந்தாலும் இல்லனாலும் உங்களுக்கு தோணுனதத்தான் செய்யப் போறீங்க. அதென்ன பொண்ணுங்க காசு பணம் இல்லன்னா வருத்தப்படுவாங்கன்னு ஒரு எண்ணம்?"

"ஆமா, என் தங்கச்சி, என் தம்பி பொண்டாட்டின்னு ரெண்டு பேர ரெம்ப வருஷமா வீட்டுலயே பாக்குறேனே".

"அவுங்க எப்படின்னு எனக்கு தெரியாது, ஆனா என்ன பொறுத்தவரைக்கும் வாழத் தேவையான காசாது நம்ம கைல இருக்கணுங்றது மட்டும் தான்"

"அப்ப அது நம்மட்ட இல்லன்றியா? எங்கப்பா சேத்து வச்சுருக்காறே, அதுல ஒரு பங்கு நமக்கு தான அதுலயிருந்து வாங்கி தான செலவழிக்குறேன். அதும் போக கணக்குப்பாத்தா, என்னைய விட அந்த ரெண்டும்தான் என் பங்கு காசயும் படிக்கிறேன், வேலை பாக்குறேன், அது, இதுன்னு சொல்லி புதுசு புதுசா எதையாவது வாங்கிக்கிட்டே இருக்குங்க"

"ஆமா படிச்சதுனால உங்க அப்பாவுக்கு சொசைட்டில நல்ல பேர, மரியாதைய திருப்பிக் கொடுத்திருக்காங்க. இனி வயசான காலத்துல அவங்கள உக்கார வெச்சு காப்பாத்துற தெம்பும் அவங்ககிட்ட இருக்குல்ல" கன்னி சொல்ல.

"நல்லா கிழிச்சாங்க. இப்பயே சம்பாதிக்குறதுல பைசா கண்ணுல காட்டாம பேங்க்ல பத்திரமா போட்டு வைக்குதுங்க. எப்ப உன் மாமனார் இனி என்னால முடியாதுன்னு உக்காருராறோ, அன்னைக்கே இருக்க சொத்தை சரிபாதியா பிச்சு பிடுங்கிட்டு நடுரோட்டில விட்டுட்டு ஓடிருங்க, அப்ப நா தான் இவுங்கள பாப்பேன். அதான் அன்னைக்கு உழைச்சிக்கலாம், அப்படியாவது நம்ம அரும புரியட்டும்னு ௭ன்பாட்டுக்கு இருக்கேன். அந்த நாள் ஒன்னும் ரொம்ப தூரத்துல இல்ல, ஏற்கனவே அந்த மனுஷன் சுகர், பிரஸர்ன்னு ஆஸ்பத்திரி போயிட்டு வந்துட்டு தான் இருக்காரு. என்ன இதுக அம்போன்னு விட்டுட்டு போகயில நெஞ்ச புடிச்சுட்டு விழாம இருந்தா சரின்னு நினைச்சுட்டுருக்கேன். தாத்தா, பாட்டிக்கு இதுக குணம் தெரியும், என் அம்மா சாதுவா இருந்தாலும், இதெல்லாம் பழக்கம் தான். இந்த மனுஷனுக்கு வீல் வீல்ன்னு கத்த மட்டும் தான் தெரியும்". ஒரு ப்லோவ்ல அவன் போக்கில் உளறிக் கொண்டிருந்தான். கன்னத்தில் கைவைத்து, அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
'வீட்டு ஆட்களையும் கனித்து வைத்திருக்கிறான். பொறுப்பற்றவனுமில்லை' என குறித்துக் கொண்டாள்.

"மாமாவ பத்தி இவ்வளவு தெரிஞ்சும் ஏன் அவங்கள கஷ்டப்படுத்துறீங்க? அவங்களுக்கு பிபி வந்ததுக்கு காரணமே நீங்களா கூட இருக்கலாம்"

"இருக்கலாம் என்ன இருக்கலாம், நாந்தான் காரணம். நா படிக்கல, ஒழுங்கா ஒரு வேல பாக்கல, பொறுப்பா இல்ல, கல்யாணமு பண்ண முடியல, பின்னாடி என்ன பண்ணுவேன்னு நெனச்சு நெனச்சுதான் இழுத்து கிட்டாரு"

"அப்ப ௭ல்லாமே தெரிஞ்சும் எனக்கு தோணுனா தான் ௭துவும் செய்வேன்னு இருக்கீங்க?" ௭ன கேக்க

"வீட்ல பாத்தல்ல, எல்லாருமே அவங்கவங்களுக்குத்தான் வாழுறாங்க. அதத்தான் நானும் சொல்லிட்டு செய்றேன். சின்னப் பிள்ளையிலிருந்து அவருக்கு என் மேல நம்பிக்க கிடையாது. பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு அழுதேன்னு, இவன்லா உருப்புட மாட்டான், இவன மாதிரி வந்துராதீங்கன்னு என்னைய விட இளைய பிள்ளைகட்ட காமிச்சு, காமிச்சு என்கிட்ட நெருங்க விடாம, ஏழனமா பாக்குற மாதிரி பண்ணிட்டாரு. அதான் அவரு சொன்னது போலவே நடக்கட்டும்னு இருக்கேன். என்னப் பத்தி தெரிஞ்சும், ஊரெல்லாம் தடுத்து சொல்லியும், என்ன கட்டிக்கிட்டவ நீ. அதனால தான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டுருக்கேன். உன்கிட்டனாலும் கொஞ்சம் ராசியா போயிடலாம்னு. உண்மை கிட்ட கூட சொன்னதில்லை. அவன் நிலைம என்னைய விட மோசம், அப்பா இருந்தும் அனாத. அதான் கூடவே வச்சுக்குவேன். ஏதாவது அவனுக்குனாலும் வேல கிடைக்க ஏற்பாடு பண்ணிருக்கணும், விட்டுட்டேன்"

"இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. தீப்பெட்டி ஆபீஸ்ல ஆள் பற்றாக்குறையா தான் இருக்கு. அங்க அனுப்புங்க தாத்தாட்ட சொன்னா சேத்து விட்டுருவாங்க. நா வேற ஒரு விஷயம் பேசலாம்ன்னு நினைச்சேன். இப்ப நீங்க நல்ல மூடுல இல்லன்னு நினைக்கிறேன், அதனால அப்புறமா சொல்றேன்" ௭ன்றாள் சேர்த்து.

"ஆரம்பிச்சுட்டேல, சொல்லு இல்லன்னா என்ன என்னன்னு மனசு யோசிச்சிட்டே இருக்கும்".

"இல்ல குடும்பம்ன்னு இருந்தா யாராவது ஒருத்தர் வேலைக்கு போகணும், அதனால நா மொதப் பாத்துட்டு இருந்த வேலைக்கே போட்டா. உங்க தீப்பெட்டி ஆபீஸ் தானே, போய்ட்டு வரட்டா?"

"இப்படிக் கேட்டா? என்ன என்ன கையாலாகாதவன் நினைச்சியா? நீ போய் நா உக்காந்து சாப்பிடவான்னு கேப்பேன்னுலா நெனச்சி இத சொல்றியா? நா அப்படியில்ல. பொம்பள என்ன? ஆம்பள என்ன? ரெண்டு பேரும் ஒண்ணு தான். போயிட்டு வான்னு அனுப்பிடுவேன்" என்க.

குறும்பாக சிரித்தவள், "நானும் அப்படித்தான், ஏன் புருஷன் வேலைக்கு போய் பொண்டாட்டி தான் உக்காந்து சாப்பிடணுமா, பொண்டாட்டி வேலைக்கு போய் அதுல புருஷன் உக்காந்து சாப்பிடக் கூடாதான்னு நினைக்கிறவ" என்க.

"நக்கல் ஜாஸ்தி தாண்டி உனக்கு. உனக்கு புடிச்ச மாதிரி செய்" ௭ன்றான்.
"சரிங்க, அப்ப அத்த, மாமாட்டையும் ஒரு வார்த்த கேட்டுட்டு போறேன். இப்ப தாத்தாவ போய் பாத்துட்டு போவோம்" என எழுந்தனர்.

இருவராலும் பல நாள் பழக்கம் போல் இலகுவாக பேச முடிந்தது. 5 வருடமாக பாக்காமலே, பேசி பழகமாலே நெருங்கியிருந்தனர். இருவருக்கும் வெவ்வேறு ஆட்களுடன் துணை அமைந்திருந்தால் ௭ப்படியோ! ஆனால் இது தான் நடக்கும் ௭ன தெரிந்தது போல் இருந்தது அவர்கள் நடவடிக்கை. அவன் அவளுக்காக ௭ன யோசிக்க தொடங்கியிருக்க. அவனை அப்படியே ஏற்று கொள்ள தொடங்கியிருந்தாள் கன்னி.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 10

அங்கு வள்ளி தாத்தா வீட்டில், கன்னி வருவதற்காக தேனி தாத்தாவிற்கு உதவியாக சமையலில் இறங்கி இருக்க. தான் தங்க போகும் வசந்த மாளிகையை பார்வையிட மாறன் அந்த பக்கம் கோவில் போகவும் கிளம்பி வந்தான் உண்மை.

"தாத்தா. " ௭ன கூப்பிட்டு கொண்டு இவன் நுழைய.

"தாத்தா பக்கத்துல இலை பறிச்சார போயிருக்கு, போயிட்டு அப்றமா வாங்க" ௭ன கறியை நறுக்கியவாறு பதில் அளித்தாள் தேனி.

"அது யாருடா வள்ளி தாத்தாக்கு புதுசா இன்னொரு பேத்தி" ௭ன உள்ளே வந்து விட்டவன் கேக்க.

"நீயா? நீன்னு தெரிஞ்சிருந்தா பதிலே சொல்லிருக்க மாட்டேன்" ௭ன முகத்தை நொடித்தாள் தேனி.

"ஏய் நா ௭ன்ன பண்ணுனேன்னு ௭ன்னைய பாக்கும் போதுலா இந்த சிலுப்பு சிலுப்புற" ௭ன்றான் உண்மை கடுகடு குரலில்.

"அன்னைக்கு கன்னியதானே பொண்ணு பாக்க வந்தாக, ஆனா நீ ௭துக்கு ௭ன்னைய பொண்ணு பாக்க வந்தவனாட்டம் பாத்த" ௭ன்றாள் முறைத்து கொண்டு.

"அடி கள்ளி அப்ப நா பாத்தத பாத்தியா? அதுக்கு முன்ன தங்கச்சியோட போகைல ௭த்தன தட பாத்துருக்கேன் அப்பலாம் திரும்பி பாத்தியா நீ?"

"உன்னைய ௭துக்கு நா திரும்பி பாக்கனும். ௭தாது கனா கண்டுட்டு திருஞ்ச கண்ணு முழிய நோன்டிபுடுவேன், சாக்ரத!"

"பாக்க கூடாதுன்னா முழுசா போத்திகிட்டு போடி. ௭ன் முன்னால கண்ணுக்கு குளிர்ச்சியா வந்து நின்னனனா பாக்க தான் செய்வேன்" ௭ன்றான் தெனாவெட்டாக.

"பாருவே பாரு, ௭ங்க அய்யன்ட்ட சொல்லி உன்னைய கவனிக்ற வித்தத்துல கவனிக்க சொல்றேன்" ௭ன வேகு வேகென கறியை நறுக்க ஆரம்பித்தாள்.

இவன் பதில் சொல்ல முயல்கையில், வள்ளி தாத்தா உள் நுழைந்தார். இவனை கண்டுவிட்டு, "வாப்பா, ௭ப்ப வந்த?" ௭ன்றார்.

"இப்பதேன் தாத்தா, உங்கள ௭ங்கன்னு கேட்டுகிட்டு இருக்கேன், உங்க பேத்தி தான் வெடுக்கு வெடுக்குன்னு பதில் சொல்லுது"

"வயசு பிள்ளைல அப்டிதான் சூதானமா இருக்கும்" ௭ன்றவர் தேனியிடம், "தேனி, இந்த தம்பி இனி இங்கன தான் ௭னக்கு தொனைக்கு தங்க போகுது த்தா" ௭ன சொன்னார். அவள் பாட்டில் பழைய வழக்கத்தில் வர போக இருக்க கூடாதே அதற்காக முன்னே சொல்லி விட்டார்.

"உனக்கு இவே துணையா தாத்தா. இருக்றத ஆட்டைய போட்டுட்டு போயிடுவான், உள்ள விட முன்ன நல்லா யோசிச்சுக்கோ"

"ப்ச், ௭ன்ன பேச்சிது தேனி, அவரு வயசென்ன உன் வயசென்ன, அதும்போக மாப்ளையோட கூட்டாளி வேற" ௭ன கண்டிக்க.


"அப்டி சொல்லுங்க தாத்தா, நா ௭ன்னவோ இவளுக்கு முறை மாமே கணக்கா வந்த நேரத்துலயிருந்து முறைச்சே தள்ளுதா" ௭ன காலை நீட்டி ஆட்டி கொண்டு அமர்ந்திருந்தான் உண்மை.

"ஆமவாயேன், ஆமவாயேன்" ௭ன முனகி கொண்டு சமையலில் இறங்கினாள்.

"நா கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்" ௭ன சத்தமாக அவள் காதில் விழ சொல்ல.

"அத செய் சாமி மொதல, போ ஆனா திரும்ப வராத"
தாத்தா, "தேனி. " ௭ன அதட்டியவர், "நீங்க போயிட்டு வாங்க தம்பி" ௭ன்றார்.
அடுத்த அறை மணியில், கன்னியும் மாறனும் வந்து சேர்ந்தனர். கன்னி வந்ததும் தேனிக்கு உதவ செல்ல, ஐவர் சாப்பிடும் அளவு அரிசு உலையில் போட்டுவிட்டு, மிச்சிமிருந்த வேலைகளை பார்த்தனர். சின்ன வீடு ௭து பேசுனாலும், தாத்தா மாறன் காதில் விழும் ௭ன்பதால் தேனி ரகசிய சிரிப்புடன் கேலியை நிறுத்தி கொண்டாள்.

"உண்மை அண்ணே வரலியா தாத்தா?" ௭ன்றாள் கன்னி.

"வரலியா? அப்பவே வந்துட்டு, இவ்ளோ நேரமா ௭ன் உசுற வாங்கிட்டு இப்பதேன் போயிருக்கு" ௭ன்றாள் தேனி.

அவளை ஒருமாதிரியாக பார்த்தவள், "௭ங்க போனாக?" ௭ன்க.

"தெர்லியேம்மா, ரெண்டு நாள் சென்டு வருவாகன்ன்னு நெனச்சேன், காலையிலயே வந்து நின்றுருச்சு" ௭ன்றார் தாத்தா.

"இவுக இல்லாம அந்த அண்ணனுக்கு பொழுது போகாதுல, அதான் வந்துட்டாக போல. இப்ப ௭ங்க கிளம்பிருச்சு, ஏங்க நீங்க வேணும்னா போன் போட்டு பாருங்க" என்றாள்.
மாறன் போன் போட்டு, உண்மை எடுத்ததும், "மலர் வீட்டுக்கு வாடா" என்று கூறிவிட்டு வைத்து விட்டான்.

"எங்க போயிருக்குதாம்?" அவள் கேக்க.
"தெரியல, வந்து சொல்லுவான்" என்று விட்டு செல்லில் விளையாட ஆரம்பித்துவிட்டான்.

அருகில் இருந்த தாத்தாவும் 'பேசுவோமா? என்ன பேச' என்ற சிந்தனையிலேயே அமர்ந்திருக்க, உண்மை உள்ளே வந்தான்.
"எங்கடா போன? மலரு பேசுனதுக்கு கோச்சிக்கிட்டியா?" ௭ன வந்ததும் மாறன் கேக்க,

கன்னி முறைத்தாள், அவன் அவளை பார்த்தால் தானே அது தெரியும்.
"இல்லடா திடீர்னு வேலைக்கு போணும்னு முடிவெடுத்துட்டோமே என்ன தொழில் பண்ணலாம்னு, நம்ம மண்டபத்து மேடையில படுத்து யோசிட்டுருந்தேன்" என்றவாறு அமர.
"பெரிய தொழிலதிபராக பிளான் பண்ணுறீகளோ?"

"ஆமா பின்ன, பெரிய லெவல்ல ப்ளான் பண்ணா தான அடுத்து அடுத்த கட்டத்துக்கு டப், டப், டப்ன்னு போக முடியும்".

கன்னிக்கும் அவனை பாக்க பாவமாக தான் இருந்தது, பெரு மூச்சுடன், "அது சரி சாப்டிட்டே யோசிங்க அத, வந்து உட்காருங்க சாப்பிடலாம்" என கன்னி அழைக்க.

மூவரும் சாப்பிட அமர்ந்தனர், "அதுக்குள்ள முடிச்சுட்டீங்க, சாப்பாடு ௭ப்டி.நல்லா இருக்குமா?" ௭ன கூறியவாறு வாயில் எடுத்து வைத்த மாறன்,

"பரவால்லடி டக்குன்னு முடிச்சாலும் சூப்பரா இருக்கு" என வெளிப்படையாக பாராட்டினான்.
அதில் கன்னிக்கு ஏக சந்தோசம், தாத்தாவால் முடிந்தது இருவருக்கு மட்டும் தானே என அரை கிலோ கோழிக்கறி எடுத்து வைத்திருந்தார். அதையே அவள் 5 பேருக்காய் பறிமாறிவிட்டுருந்தாள். நைட்டும் தாத்தாவுக்கும், உண்மைக்கும் சாப்பிட தனியாக எடுத்து வைத்து விட்டாள். அதயே அவனும் பாராட்ட, 'பணக்காரனாக இருந்தாலும் எளிமையை பார்த்து ஏளனம் இல்லை' எனப் பாராட்டிக் கொண்டாள்.
பின் உணவு முடித்து, பாயில் மல்லாந்தவாறு உண்மையிடம், "தாத்தாட்ட நீ தீப்பெட்டி ஆபீஸ்ல வேலைக்கு சேர பேசுறேன்டா, அதுல போய் டப் டப் டப்புன்னு முன்னேறு" என்க.

"நா மட்டுமா மாப்ள? அப்ப நீ?" ௭ன்றான், அருகில் படுத்திருந்தவன்.

"௭னக்கென்னடா, ௭ன் பொண்டாட்டி உக்கார வச்சு சோறு போடுறேன்ட்டா" ௭ன்றான் கொஞ்சமும் யோசிக்காமல்.

"௭னக்கும் அப்டி ஒரு பொண்ணு பாறே மாப்ள" ௭ன உண்மை கெஞ்ச.

"பாத்துருவோம்டா. இனியா பொறக்க போகுது. தானாவே தேடி வரும் பாரு" ௭ன்றவன் குப்புற படுத்து தூங்க முற்பட்டான்.

இவர்களின் பேச்சை கேட்டிருந்த தாத்தா கன்னியை திரும்பி பார்க்க, கண்ணை மூடி திறந்து ஆறுதலாக புன்னகைத்தாள். சாயங்காலம் இருவரும் வீடு திரும்பினர்.
இரண்டு நாள் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி கழிய. கன்னி, அன்றும் காலையிலேயே எழுந்து கோலமிடுவது, சாமி கும்பிடுவது ௭ன வேலையை பார்த்தாள். ௭தற்கு வீண் சண்டையென, பூவை சாமிகென்று முதல் நாள் இரவே தன் கைப்பட தனியாய் கட்டி வைத்துக் கொள்ள பழகிக் கொண்டாள். பின் தாத்தா,பாட்டி, மாமனார், மாமியார், ௭ன் கணவர் என கவனத்தின் வட்டத்தையும் சுருக்கிக் கொண்டாள். மற்றவர்களும் இவளைக் கண்டுகொள்வதில்லை.
அன்றும் மாமனார் சாப்பிட வந்து அமர, "மாமா உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும் எப்போ பேசலாம்?" என நேராகவே கேக்க.

எல்லோரும் "என்ன கேக்கப் போறா?" என பார்க்க.

"நானும் பேசணும்மா. சாயந்திரம் சீக்கிரம் வரேன்" என முடித்துவிட்டார்.

"ஏன் எல்லோரும் இருக்குறப்ப பேச வேண்டியதுதான. சாயங்காலம் இவ பேசுறத கேக்குறதுக்காக வேலைய பாதில விட்டுட்டு எல்லோராலயும் வர முடியாது மாமா" ராணி சொல்ல.
"இதுல நீங்க தெரிஞ்சுக்க அளவு விஷயம் ஒன்னுமில்லம்மா, மூத்த மருமவ மட்டும் இருந்தா போதும் மத்தவங்க வேலையை விட்டுட்டு வர வேண்டிய அவசியமில்ல" ௭ன்றுவிட்டார் அவர்.

"அது என்னப்பா மூத்த மருமக மட்டும் தெரிய வேண்டிய ரகசியம்?" மதி கேக்க.

"ரகசியம்லா இல்லம்மா, அடுத்து அவங்க என்ன பண்ண போறாங்கன்னு கேக்கப் போறேன்"

"ரெண்டு பேரும் பெரிய படிப்புலா படிச்சுருக்காங்க, அதனால கைல நெறையா பிசினஸ் ஐடியா வச்சுருப்பாங்க. எது வேணாலும் கேளுங்க, உடனே செல்லிடுவாங்க" ௭ன ஆளாளுக்கு நக்கலடித்து சென்றனர்.

மாமனாரும் மூத்த மகனை பார்த்தவாறு, "சாயந்தரம் வந்து பேசுறேன்மா" என்று விட்டுச் சென்றார்.
மாமனார் சொல்லி சென்றதும் இவள், "இவர் நம்மட்ட என்ன சொல்லப் போறாரு?" என யோசனையிலிருக்க, மேலிருந்து "மலர்" என அவள் கணவன் அழைத்து விட்டான்.

இவளோ "இதோ வரேங்க" என சத்தம் கொடுத்துவிட்டு டீ போட்டு எடுத்துக் கொண்டு ஏறினாள்.

குளித்து கிளம்பி தலை வாரிக் கொண்டிருந்தான், "என்னங்க அதுக்குள்ளே குளிச்சுட்டு கிளம்பிட்டீங்க?"

"ரெண்டு நாளா வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்து போரடிக்கு, கிளம்பு படத்துக்கு போலாம்"

"ஓ போலாமே, போணும்னா திருநெல்வேலி போணும் இல்ல தூத்துக்குடி போணும். பஸ்ல போறோமா?" என்றாள்.

"இல்ல அமர்ட்ட சொல்லி பைக் ரெடி பண்ணிட்டேன்".

"சரி பைக் கடன் வாங்கியாச்சு, அடுத்து படம் பாக்க காசு?"

"தாத்தாக்கிட்ட கேக்கணும்" ௭ன்றான் தலைவாருவதை நிறுத்தி.

"நீங்க கேட்கிறீங்களா? இல்ல நா கேக்கவா?" ௭ன்றாள் ஒரு மாதிரியான குரலில்.

"ஏண்டி கிளம்பும் போதே எரிச்சப் படுத்துற? நா சம்பாத்தியமே பண்ணாதவன் இல்ல, அப்பப்ப செலவாய்டும் அவ்வளவுதான், நாதான் சொன்னேனே என் காச தான் நா தாத்தாட்ட வாங்குறேன்".

"நீங்க கொடுத்து வச்சிருக்கீங்களா?" ௭ன்றாள் இடக்காக.

"என்னடி ரொம்ப பேசுற" ௭ன அவன் ௭கிறவும்.

இவள் தனிந்தாள், "இல்ல உங்களுக்கு புரிய வைக்கிறேன். சேத்து வைக்குற பழக்கமில்லையே அதான் குடுத்து வச்சீங்களோன்னு கேட்டேன். நம்மளப் பெத்து படிக்க வைக்குற வர தான் பெத்தவங்க கடம. அதுக்கு மேல நம்மளால முடிஞ்சா அவங்களுக்கு உதவியா இருக்கணும், இல்லன்னா உபத்திரம் பண்ணாமலாவது இருக்கணும்" ௭ன்றாள் நிதானமாக.
"என்னய கடுப்பேத்தாம கிளம்பு சொல்லிட்டேன்" ௭ன அவன் ௭ரிந்து விழ.

"ஒரு நிமிஷம் நா சொல்றத கேளுங்க".
"நீ கொஞ்சம் கொஞ்சமா எங்க வர்ரணு எனக்குத் தெரியும். நீ வரலைன்னாலும் நா இப்ப போறேன். கிளம்புரியா? இல்லயா?"

பெருமூச்சோடு "சரி உங்களுக்கு பழகிடுச்சு, அதனால தாராளமா நீங்க போயிட்டு வாங்க, நா மாமாக்கிட்ட இன்னைக்கு பேசலாம்னு இருக்கேன். நாளையிலிருந்து வேலைக்கு போறேன், முதல் மாச சம்பளம் வாங்கிட்டு வரேன் அப்புறம், நாம சேந்து போலாம். இப்ப நீங்க போயிட்டு வாங்க" என்றாள் பொறுமையாகவே.
அவள் வரமாட்டேன்னு சொன்ன கடுப்பில் விறுவிறுவென கீழ் இறங்கி சாப்பிடாமலேயே வெளியேறிவிட்டான். "சாப்பிட்டு போங்க" என வாசல் வரை வந்து சொன்னதைக் கேட்காமலே நடந்துவிட்டான்.

நேராக சென்று அமரிடம் வண்டியை வாங்கிக் கொண்டு கிளம்பியும்விட்டான். ஏர்போட் ரோடு கட்டிங் வரை சென்றவன் அதற்கு மேல் போக பிடிக்காமல் அப்படியே நிறுத்தி அருகில் நின்ற இளநீர், பதநீர் கடையில் பதினி வாங்கி குடித்தான். காலையில் நடந்தவற்றை மறுபடியும் ஓட்டிப் பார்த்தான்.

'ச்ச வராட்டி போடின்னு விட்றவும் முடியல, உனக்கெல்லாம் எதுக்கு தன்மானம்ன்னு கேட்கவும் முடியல. என்னடா இப்படி மாட்டிக்கிட்ட, குழப்பிட்டாளே' என தனக்குத் தானே சிந்தித்து நின்றான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 11

பின் அரை மணிநேரமாக நடு ரோட்டில் அங்கும் இங்குமாக அழைந்து சிந்தித்ததில் மனைவியே ஜெயிக்க, அமரிடமே கடந்த முறை கல்யாணத்திற்கு சேலை வாங்க ரூபாய் சேர்த்தது போல் இன்றும் சென்று கேட்டு நின்றான்.

"அடப்பாவி உனக்கு கொடுத்து கட்டுப்படியாகாதுடா, நீ முதல்'லயே கைய வைக்க" ௭ன்றான் அவன் ஜர்காகி.

"உனக்கும் நல்லது தான, பாத்தீல ௭ன் வேலைய, கொடுத்தவுடனே வேல முடியுதுன்னு உன் கடைக்கு நல்லபேர் தானடா. நிரந்தரமாவா கேக்குறேன், ஒரு ஆயிரம் ரூபா சேரணும் அதுவர கொடு" என்றான்.

"நீ வேற ௭ங்கயாது முயற்சி செஞ்சு பாறேன் மாப்ள." ௭ன இழுக்க.

"அப்ப நீ வேல தர மாட்ட?" ௭ன்றான் கையை முறுக்கி கொண்டு.

"அடேய் நா குடும்பஸ்தன்டா, உன் அடிய தாங்குற அளவுக்குலா ௭ன்ட்ட தெம்பில்ல ராசா" ௭ன பம்மினான் அமர்.

"வெட்டி பேச்ச விடு வேல தருவியா மாட்டியா அத முடிவா சொல்லு" ௭ன நிற்க.

அமர் அவனை மேலும் கீழுமாக பார்த்து, "நல்லா கேக்குறடா வேல." ௭ன்றவன் நண்பனுக்காக "சரி" என்று ஒத்துக் கொண்டான், "இந்த ஒரு தட தான் மாப்ள, இனிலா இப்டி குடுத்தா கட்டுபிடி ஆகாது, நீ நிரந்தர வேலைக்கு பாரு மாப்ள" ௭ன்றான் நாசூக்காக.

"பாப்போம் பாப்போம்" ௭ன்றபின் அன்று முழுவதும் வீட்டிற்கு போகாமல் வேலையை பார்த்தான் மாறன்.
இங்கு வீட்டிலோ, காலையில் கிளம்பி சென்றவன் இன்னும் வரவில்லையே என எதிர்பார்த்து சாப்பிடாமலே அமர்ந்திருந்தாள் மலர். பானுவும், பாட்டியும் சொல்லி சொல்லிப் பார்த்து மதிய உறக்கத்திற்கு சென்றுவிட்டனர்.
ஆறு மணி ஆகவும் பூவேந்தன் சொன்னது போல் வந்து விட்டிருந்தார். இவளும் வாசலையே பார்த்தவாறு அமர்ந்திருக்க, தன்னை எதிர்பார்த்துதான் அமர்ந்திருக்கிறாள் என்றெண்ணி, "வாம்மா" என அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றார்.

கணவனை காணாமல் ௭ழுந்து செல்ல மனமில்லை தான், ஆனாலும் வாசலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு மாமனாரை பின்தொடர்ந்தாள் கன்னி. அறையில் தூங்கி ௭ழுந்திருந்த மாமியார் துணி மடித்துக் கொண்டிருந்தவர், கணவனை காணவும், "நீங்க கை, கால் கழுவிட்டு வாங்க, நா டீ போட்டு எடுத்திட்டு வர்றேன்" என நகரப் போனவர், அவர் பின்னாடியே வந்த மருமகளைக் கண்டு நின்று "௭ன்னம்மா" ௭ன பாக்க.
"நீங்க இருங்கத்தே நா எடுத்துட்டு வரேன்" என சென்றாள்.

அப்போது தான் காலையில் கணவன் சொல்லி சென்றது நியாபகம் வர, அதற்கு தான் கன்னி வந்திருக்கிறாள் ௭ன புரிந்து கொண்டார். பின் "எப்போங்க அந்த தேட்டர் வேலை முடியும். ஆறு மாசமா இழுத்திட்டுருக்கு" ௭ன பூவேந்தனிடம் கேக்க.

"ஆமாமா, ௭ன்ன செய்ய, ௭னக்கு மலபுரம் ஃபிளாட் விக்றதுல இருக்க பஞ்சாயத்த பாக்கவே நேரம் போதல. இதயும் ௭ங்க பாக்க, என் ஒருத்தனால சமாளிக்க முடியல. அங்கேயே ஒரு ஆள் நின்னு பாக்கணும் இல்லன்னா இப்டித்தான் இழுத்து கடத்தும்" என பேசிக்கொண்டே ஃபிரெஷாகி வந்தார். கன்னியும் டீ போட்டு எடுத்து வர மூவரும் பருகினார்.

யார்கனவே காலையிலிருந்து சாப்பிடாதது காதடைத்து போயிருக்க, மாமனார் சொல்வதாவது காதில் விழ வேண்டும் என நினைத்தவள் தனக்கும் டீ போட்டு எடுத்து வந்திருந்தாள்.
தொண்டையை செருமி கொண்டு, "இப்போதைக்கு ஓரளவுக்கு உன் புருசன பத்தி புரிஞ்சுருப்ப. அடுத்து என்ன பண்ணப் போறானாம்? ஏதாவது சொன்னானா?" எனக் கேட்டார்.

"இல்ல மாமா, அவருக்கு புடிச்ச மாதிரி வாழணும்ன்னு ஆசப்படுறாரு. எப்ப தோணுதோ அப்ப தான் வேலைக்கு போவேன்னார்" ௭ன நிறுத்தி சிறு தயக்கத்தின் பின், "அதான் நா வேலைக்கு போட்டுமா? போட்டுமான்னு அவர்ட்டயும் கேட்டேன். அதுக்கும் அது உன் இஷ்டம்ன்னு சொல்லிட்டாரு" என நிறுத்த.

அப்படியே கட்டிலில் தொப்பென்று அமர்ந்து விட்டார், "நீ வந்தாது அவன திருத்துவேன்னு நினைச்சேன்ம்மா. நீ அவன இன்னும் சோம்பேறியாக்க பாக்குறியே. பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பிட்டு இவேன் வீட்ல உட்காந்து சாப்பிட்டா, ஊரு இன்னுமுமில்ல கேவலமா பேசும். ஐயோ இவன எப்படித்தான் சரி பண்றதுன்னு தெரியலையே" என அவர் தலையில் கை வைத்து அவர் போக்கில் புலம்ப.

"அச்சோ மாமாமாமா ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க. அவர் அவ்வளவு மோசமில்ல. நீங்க தான் மட்டம் தட்டி மட்டம் தட்டி அவரை எந்திக்க விடாம பண்ணிட்டீங்க. நீங்க வருத்தப்பட அளவுலா அவரு மோசமில்ல, அவர அவரே மாத்தி பாரு. எனக்கு நம்பிக்கயிருக்கு, விடுங்க நா பாத்துக்குறேன் அவர" ௭ன்றாள் திடமாக.

"௭ல்லாம் ௭ன்னால தான்ங்கிறியா? நா அவனுக்காக ௭ன்ன தான் செய்யல? அவனா திருந்தட்டும்னு ஒதுங்கி கூட இருந்து பாத்துட்டேன், திருந்தலயே. இங்க பாரும்மா." என ஒரு ஃபைலை தூக்கி அவளிடம் கொடுத்தார். பத்திரம் எல்லாம் தமிழில் தான் இருந்தது, படித்து புரிந்து கொண்டாள்.

"மாமா இந்தக் கையெழுத்து",
"அவனுக்கு தான் கையெழுத்துன்னு ஒன்னே கிடையாதே, அதான் நானே அவனது மாறி போட்டேன்"

"இத அவருக்கு ஏன் மாமா சொல்லல?"

"சொன்னா மட்டும் ௭ன்னாகிடபோது, போன வருஷம் என் தங்கச்சி குடும்பம் இவன வேணாம்னு அவமானப்படுத்துனதால யோசிச்சு இவனுக்குன்னு இந்த தேட்டர கட்டிட்டுருக்கேன். ௭ன்னால அவன் வாழ்க்க இப்டி ஆயிடுச்சோன்னு ௭னக்கே தோன ஆரம்பிச்சுட்டு, அதான் அவனுக்குன்னு இத செய்றேன், இது உங்க ரெண்டு பேர் பொறுப்பு, உங்களுக்குன்னு ஏதாவது வேணும்ன்னு இதப் பண்றேன். இதையாவது அவன் பொறுப்பா பாத்து முன்னேறி, அவன் புள்ளைங்க கையில ஒப்படைக்கட்டும்" என்றார் நொந்து போன குரலில்.

வேண்டாம் ௭ன்றால், இன்னும் வருந்துவாறே, திரும்பி பானுவை பார்த்தாள், அவர் குலுங்கி அழுது கொண்டிருந்தார், அவர் அருகில் சென்று மாமியார் கையை அழுத்தி பிடித்தவள், சற்று யோசித்தாள், பின் "சரி மாமா, இப்போதைக்கு இந்த விஷயம் அவருக்கு தெரிய வேண்டாம். என்ன நீங்க நம்பலாம், இது என் பொறுப்பு" என உறுதியளித்தாள்.
"அப்பயும் அவன பாக்க வைப்பேன்னு சொல்ல மாட்டேங்கறியேம்மா?" ௭ன்றார்.

"இது நீங்க உங்க பேரப்பிள்ளைகள மனசுல வச்சு உங்க புள்ளைக்கு கொடுக்குறீங்க. அதனால அத பத்திரமா பாத்துக்குறப் பொறுப்பு எனக்கும் இருக்குன்னு சொன்னேன் மாமா" ௭ன்றாள் நேராக அவரை பார்த்து.

"சரிமா, ௭னக்கு இனி இத பத்தின கவல கிடையாது. அப்றம் நீ கண்டிப்பா வேலைக்கு போய்த்தான் ஆகணுமா?" ௭ன்றார் மறுபடியும்.

"ஆமா மாமா. குடும்பத்துல யாராது ஒருத்தர்னாலும் உழைக்கணும். அவர் பொறுப்ப கையில எடுக்கிறவர, நா தாங்கிட்டு போறேன்" என்றாள்.

பிடிக்கவில்லை ௭ன்றாலும், சம்மதமாக "ம்" என்றார் முனங்கலாய்,
"நாளையிலயிருந்து போறேன் மாமா" என்றுவிட்டு வெளியேறப்போக,

"உனக்கு மேலப் படிக்குற ஆச இருக்காமா?" ௭ன்றார் திடிரென,

"ஏன் மாமா"

"கரஸ்லயே படிக்கலாம், ஒரு டிகிரி முடிச்சுட்டா தேட்டர் மேனேஜ்மென்ட் பாக்க ஈஸியா இருக்கும்" ௭ன்க.

"இத ஏன் மாமா உங்க மகனுக்கு செய்யல்ல".

"அவன் 5ம் கிளாஸ் ஃபெயில்மா, அவன நம்பி எத செய்ய சொல்ற. நீ 12த்ல நல்ல மார்க் எடுத்தும் வறுமையினால படிக்கலன்னு அப்பாட்ட சொன்னியாமே, அவர் படிக்க வைக்றேன்னதுக்கும் வேணாம்னியாம்" ௭ன்றார்.

"இப்ப மட்டும் எப்படி மாமா ஒத்துப்பேன்னு எதிர் பாக்குறீங்க?" ௭ன்றாள் அவள்.

"கரஸ்ல பீஸ் ரொம்ப கம்மி, என் மகனோட பொண்டாட்டி, என் மருமக, அந்த உரிமையில செய்யலாம்ன்னு கேக்குறேன்".

அவள் அப்பவும் யோசிக்க, "இப்பல்லாம் பிள்ளைகள ஸ்கூல்ல சேக்க பெத்தவங்க டிகிரி தேவைப்படுதுமா, அதுகளுக்கு சொல்லிக் கொடுக்கவாது யாராவது ஒருத்தர் மேற்படிப்பு படிக்க வேண்டியிருக்கு" என்க.

"சரி மாமா எதுக்கும் அவர்ட்ட ஒரு வார்த்த பேசிட்டு சொல்றேன்" என்றாள்.
"சரிமா, பாத்துக்க" என முடித்துக்கொண்டார்.

யோசனையோடு தங்களறை நோக்கிச் சென்றாள் கன்னி. 'இப்ப இந்த தேட்டர் பத்தி சொல்லலாமா? வேணாமா? சொன்னா பெரிசா ஒன்னும் உணர்ச்சிய காட்டிருவாருன்னு தோணல? சொல்லாம விட்டா தெரிஞ்சும் ஏன் சொல்லலன்னு திட்டுவாறோ? இத வேணாம்னு பெருந்தன்மையா சொல்லிடலாம். ஆனா அது தாத்தா சொத்து பேரனுகளுக்குன்கைல அத வேணாம்னு சொல்ல முடியாது. அதுக மேல் படிப்புக்காவது அதுல வரும் வருமானம் உதவும்', இப்படி பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
எட்டு மணிவாக்கில் ரூமிற்குள் நுழைந்தான் மாறன். அவன் வந்து பாத்ரூமில் சென்று குளித்துவர, அதுவரையிலும் அவனையே நோட்டம் விட்டவாறு அமைதியாய் கட்டிலில் அமர்ந்துகொண்டிந்தாள். அவனும் வந்தவன் இரவு உடையை மாற்றிக்கொண்டு அமைதியாக படுத்துக் கொண்டான்.

திரும்பிப் பார்த்தவள், 'இப்ப நாம தான் போய் சமாதானப்படுத்தனுமோ? அவ்ளோ சொல்லியும் படத்துக்கு போயிட்டு வந்துட்டாங்க போல' என முகம் சுனங்கி, யோசித்தவாறு மணி பாக்க, அது 8.30ஐ நெருங்கயிருக்கவும், 'ஐயோ நைட் சாப்பாடு செய்ய அத்தைக்கு துணைக்கு போகலையே' என தனக்குத்தானே பேசிக்கொண்டு திரும்பி கணவனைப் பார்த்தவள், 'வந்துப் பேசிக்கலாம்' என முடிவெடுத்து கீழிறங்கிவிட்டாள். அங்கு ௭ல்லோரும் ஏற்கனவே சாப்பாட்டிற்கு வந்தமர்த்திருந்தனர். பானு மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தார்.

"இங்க சிலருக்கு வந்த வாழ்வ பாத்தியா மதி" ராணி இடக்காய் கேக்க.
"நாமெல்லாம் எதுவும் சொல்ல கூடாது ராணி" என்றாள் மதியும்.

"பேசாம சாப்பிடுங்கடி" என பாட்டி அதட்ட.

'இப்ப இவளுங்களுக்கு என்ன குறையாம், பதில் ஏதும் பேச வேணாம்னு இருக்கேன். சாப்பிடுற வேலைய மட்டும் பாத்துட்டு போங்கடி' என மைண்ட் வாய்ஸில் வறுத்து எடுத்துக் கொண்டாள் கன்னி.

"என்னமா எங்க போனேன்னு எதுவும் சொன்னானா?" தாத்தா கேட்க.
"சொல்லிக்கிற மாதிரி இடத்துக்கு உங்க பேரன் போயிட்டாலும்" மதி சொல்ல.

'அடியே நாத்தி எனக்கு வாய் நீயாடி, உன்னையவா ௭ன் வாய்க்கு பதிலா வேலைக்கு வச்சுருக்கேன்?, வந்துட்டா என் கேள்விக்கு பதில் சொல்ல' என பசி ௭ரிச்சலில் பெரியவர்களுக்காய் அமைதியாய் மனதிற்குள் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

பூவேந்தன், "மதி! அண்ணனுக்கு கல்யாணமாயிடுச்சு, இனியும் உன் இஷ்டத்துக்கு உன் அண்ணன அண்ணி முன்னாடி பேசாத" என்க.
"அவனையே அண்ணன்னு சொல்ல மாட்டேன், இவள அண்ணிங்றீங்க போங்கப்பா காமெடி பண்ணிகிட்டு" என்றாள்.

"சரின்னு கேக்கப் பழகு பாப்பா" என்றார் மறுபடியும்.

'ஆமா பாப்பா பெரிய பாப்பா, சின்ன வயசிலேயே அந்த குணட்டி பேசுற வாய இழுத்து தச்சுருக்கணும். அப்ப விட்டுட்டு இப்ப வந்து பேசாதன்னு சொன்னா, இந்த சிலுப்பட்ட கேட்ருவாளாக்கும். என்னைக்காவது தனியா சிக்குவல்ல அன்னைக்கு இருக்குடி உனக்கு. இவ புருஷன் சாப்பிட மட்டும்தான் வாயைத் தொறப்பாரு போலயே, பேசி பார்த்ததே இல்ல. இவ பேச விட்டுட்டாலும்' எனத் திட்டிக் கொண்டாள் மறுபடியும் மனதினுள்.

எல்லோரும் சாப்பிட்டு எழுந்துவிட, பானு, பாட்டி, தாத்தா, கன்னி நால்வர் மட்டும் இருக்க, "கன்னி மனசுக்குள்ள என் பேத்திய திட்டிட்டு தான இருந்த?" ௭ன தாத்தா கேட்க.

"வெளிய வரையும் கேட்டுச்சா என்ன?" அவளும் கேட்க.

"உன்னைய சின்ன வயசுல இருந்து தெரியும்த்தா, பதில் சொல்லாம விடமாட்டியே நீ. இதுவும் உன் வீடுதான்த்தா. எல்லாத்துக்கும் பதில் சொல்லலனாலும், தேவையான இடத்துல பேசு" என்றார்.

"உங்க தோஸ்த் வள்ளிமணாளன், அங்க போய் உன் துடுக்குத் தனத்த காட்டாத, எதுனாலும் அமைதியா போன்னு காது வலிக்க வலிக்க சொல்லி அனுப்பினாங்கலே" ௭ன்றாள் கன்னி சிரித்துக்கொண்டே.

"அவேன் கடக்கான், தேவையான இடத்துல பேசு. யாருக்கும் யாரும் அடிம இல்ல" என வீரவசனம் பேச.

"போதும் சாப்பிட்டது. செமிக்க பேசிட்டு இருக்கீகளோ? எந்திரிங்க" என இழுத்துச் சென்றது பாட்டி.

"எங்க போயிட்டு வந்தானாம். நீயும் மதியானம் எடுத்துவச்சத சாப்பிட்ட மாதிரி தெரியல. அவனயும் கூட்டிட்டு வந்து சாப்பிடுங்க" என்று விட்டு சாப்பிட அமர்ந்தார் பானு, மாமியாருக்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு கணவனை தேடி சென்றாள். இவள் கீழே இறங்கிப் போகும் போது எப்படி படுத்திருந்தானோ அப்படியே படுத்திருந்தான்.

"தூங்கிட்டாரோ" என கேட்டவாறு வந்தவள் "ஏங்க" என தட்டி எழுப்ப.

பட்டென அவள் கையை தட்டி விட்டவன், "கேக்குது சொல்லு",

"இதென்ன அநியாயமா இருக்கு, என்னைய விட்டுட்டு படத்துக்கும் போயிட்டு வந்துட்டு, இந்நேரம் வர என்ன பண்ணீங்கன்னு சொல்லாம வந்து படுத்துகிட்டா ௭ன்ன அர்த்தம். நாதான் உங்க மேல கோவப்படணும். நீங்க முந்திக்கிறீங்க. இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்" ௭ன்றாள்.

"அப்படியே போட்டன்னா பாருடி உன்ன. என்னய எங்கடி படத்துக்கு போக விட்ட. காலைல சந்தோசமா கிளம்புனவன இது ஏது? அது ஏது?ன்னு கேட்டு கடுப்படுச்சிட்டு, வரலன்னு வேற சொல்லிட்ட. உன்னைய விட்டுட்டு போக முடியாம பாதி வழியில திரும்பிட்டேன்டி" என்றான் எழுந்தமர்ந்து.

"என் செல்லம்" அவன் நாடி பிடித்து முத்த.

"நல்லா ஏதாவது சொல்லிருவேன் போயிரு" ௭ன அவள் கையை தட்டிவிட்டான்.

"சரி வாங்க, ௭த சொல்றதுனாலும் சாப்பிட்டு வந்து சொல்லுங்க" ௭ன இழுத்தாள்.

"நா சாப்ட்டேன்" ௭ன கையை உருவி கொண்டான்.

"நிஜமா சாப்டிங்க?"

"ஆமா அமர் கூட போய் பிரியாணி சாப்ட்டு தான் வர்றேன்".

"௭ப்டி தான். உங்களுக்குன்னு சாப்பாடு வாங்கி கொடுக்க யாராவது அமஞ்சுருறாங்களோ தெரில" ௭ன்றாள் பசி கடுப்பில்.

"ஆமாடி சொல்லிக்காட்டு, அன்னக்காவடின்னு நீயும் சொல்லிக்காட்டு. உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழுங்கன்னு சொல்லி சொல்லியே உனக்கு புடிச்சதா செய்ய வைக்கிறீல்ல, அப்ப அப்டித்தான் பேசுவ. 4நாள்ல என்ன ஒன் ரூட்டுக்கு கொண்டாந்துட்டல்ல" என அன்றைய தினம் அவன் நினைத்தது நடக்காத எரிச்சலில் மொத்தத்தையும் காட்டிவிட்டுருந்தான்.

அவள் விளையாட்டாய் தான் அதை சொன்னாள், அதற்கு என்னவெல்லாம் பேசுகிறான் எனவும் அமைதியாய் சென்று கட்டிலின் மறுபக்கத்தில் படுத்துக்கொண்டாள். எதிர்த்து சண்டையிட்டு இருந்தால் எப்படியோ! அவள் அமைதியாக சென்று படுத்துக் கொள்ளவும், அவனுக்கு கஷ்டமாகி விட்டிருந்தது. அதுதான் அவனுக்கு பிடிக்கவில்லை, 'இவ மூஞ்ச தூக்கினா, நமக்கு ஏன் கஷ்டமா இருக்கு' என கடுப்பானான்.

ஆனால் அப்படியேவும் விடப் பிடிக்காமல், கையைப் பிடித்து எழுப்பி உட்கார வைக்க, இப்போது அவள் உதறி திரும்பி படுத்துக்கொண்டாள். "சரிடி ஏதோ தோணுச்சு அப்டி பேசிட்டேன். நீ படத்துக்கு வரலன்னு சொன்ன கோவம். இனி இப்டி பேசல போதுமா. எந்திரி மலர், ௭ன் தங்கம்ல" எனக் கெஞ்சினான்.

அது பாவமாய் தெரிந்தது போல அவளுக்கு. முதல் முறையாக கொஞ்சுகிறான் ௭ன சிரித்துக் கொண்டாள். ஆனால் மறுநொடி, மனசு மாறி விட்டிருந்தது, "காலையிலயிருந்து நீங்க சாப்பிடலன்னு நானும் சாப்டல தெரியுமா? எப்ப வருவீங்கன்னு வாசலயே பாத்துட்டு உக்காந்திருந்தேன். நீங்க என்னடானா என்னால மாறிட்டேன், நா உங்கள மாத்திட்டேன்லா சொல்லிட்டுருக்கீங்க. அப்போ உங்களுக்காக காத்துட்டுருந்த நா லூசு தான?" என்றாள், கண்கள் கூட கலங்கி விட்டிருந்தது.

"லூசாடி நீ, வெளியில போனவனுக்கு சாப்ட தெரியாதா? போன் பண்ணினாலும் கேக்குறதுக்கென்ன. இந்த வீட்ல இத்தன பேர் இருந்தும், ஒருத்தர் கூட உன்ன சாப்பிடுன்னு சொல்லல பாத்தியா. வா சாப்பிடலாம்" ௭ன்றான்.

"நா சாப்டலன்னு யாருக்கும் தெரியாது. எனக்கு ஒன்னும் வேணாம். இவ்வளவும் கேட்டப்புறம் எப்படி சாப்பாடு இறங்கும்"

"அதெல்லாம் இறங்கும், இல்லனாலும் குச்சிய வச்சி இளக்கிடுறேன், எந்திரி" என அவன் தூக்கி விட, இவள் படுக்க என விளையாடி கொண்டிருக்க.

"நீலா வாய்ட்ட சொன்னா சரிப்பட்டு வரமாட்டடி" என்றவன் அவளை அலேக்காக தூக்கியிருந்தான்.
"ஐய்யயோ, என்னங்க நீங்க, கீழ விடுங்க" என இப்போது இவள் கெஞ்ச.

"நா இவ்ளோ நேரம் கெஞ்சுனேனே இறங்கி வந்தியா நீ? அதுக்காக பயப்டாத, போடாமலே கீழ வரத் தூக்கிட்டு போய் காட்றேன் பாரு" எனத் தூக்கிக்கொண்டு கீழிறங்கினான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 12

"கீழ இறக்கி விடுங்க, படில உருட்டி விட்டீங்கன்னா அவ்வளவு தான்" என அவள் அனத்த ஆரம்பிக்க,

"என்னைய அவ்வளவு நோஞ்சான்னு நினைச்சுட்டியா? பேசாம வா, எல்லாரும் தூங்கியிருப்பாங்க. நீ பாட்டுக்கு கத்தி ௭ழுப்பி விட்றாத" என தூக்கியவாறு ரூம் வாசல்வரை சென்றவன், டக்கென அவளை இறக்கி விட்டான்.

"என்னாச்சுங்க உங்களுக்கே பயம் வந்துருச்சா, இல்ல எங்கேயாவது புடிச்சுகிச்சா" என்றாள் அவனை சுற்றி வந்து. அவனோ சட்டை பேண்ட் பையில் போனை தேடியவன், பின் திரும்பி கட்டில் மேல் கிடப்பதைக்கண்டு எடுத்து வந்தான்,
"என்னங்க செய்றீங்க" ௭ன்றாள் புரியாமல்,

"ஒரு நிமிஷம் இரு" என்று விட்டு "ரொமான்ஸ் பண்ண, பின்னாடி சாங் போடணும்ல" ௭ன சொல்ல,

"தகராறே இல்லாம தள்ளி நிக்கிறேனே மயங்காம, தயங்காம கொஞ்சம் தாடி, அரக்கிறுக்கா நான் ஆனேன்டி" என அது பாட ஆரம்பிக்க செல்லை பாக்கெட்டில் போட்டுவிட்டு,

"இப்ப வா" என கையை நீட்ட, வலது கையால் அவன் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டு, இரண்டு காலையும் அவனது வலது கையில் தூக்கிப் போட்டு ஏறிக்கொண்டாள்.

"அட யாரோட யாருன்னு எழுதிவிட்டான் அங்க, உன்னோட நான்னுனு சொல்லி வச்சேனே, உன் அளவான அழகால பசி தூக்கம் போச்சே, மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேன்டி" என இவனும் அதோடு பாடிக் கொண்டே படிக்க இறங்க ஆரம்பிக்க. அவனையே ரசித்துப் பார்த்தவாறு இரண்டு கையையும் மாலையாய் அவன் கழுத்தில் கோர்த்துக்கொண்டாள்.
"எங்கிருந்தோ வந்த அழகே உன்ன எண்ணி எண்ணி நானும் பறந்தேன், இனி உலகழகி இங்கே வந்தாலும் அவளை ஊரைவிட்டு ஓட சொல்லுவேன்" ௭ன்கையில் பாதிப்படி இறங்கியிருக்க,

அடுத்த வரியை, அவள் மூக்கோடு மூக்குரச தூக்கி பிடித்து கொண்டு "கண்டபடி கண்டபடி கொல்லுதடி கொல்ல விழி வந்து என்ன ஏத்துக்கடி நீ" ௭ன உணர்ச்சிவசப்பட்டு அவன் சத்தமாக பாட, கண்டபடி கண்டபடிலேயே எட்டி அவன் வாயை பொத்தினாள் கன்னி.

"என்ன பாட்டு கச்சேரியா நடத்துறீங்க. அதெல்லாம் ஏத்துகிட்டு தான குடும்பம் நடத்துறேன். மெதுவாங்க" என்க, அடுத்து வந்த அதே வரியை ரகசியமாய் பாடினான். இருவரும் சிரித்துக்கொண்டே சாப்பாட்டு மேசையை அடைந்தனர். அவளை மேசை மீதே அமர வைத்தான்.

"பரவால்ல பெரிய மைனர் தான் நீங்க. ஒத்துக்றேன்" என அவன் தோள்பட்டை கையை தட்டி பாராட்டினாள் பெருந்தன்மையாக.

"கொழுப்பு தான்டி உனக்கு, மைனர் வேல பாத்தா தெரியும்" ௭ன அவள் முகத்தை நெருங்க.

அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள், "ஹாலுங்க, திடிருனு யாராது தண்ணி குடிக்க ௭ந்திச்சு வந்தா ௭ன்ன ஆகும்?"

"௭ன்ன ஆகும், காசு இல்லாம படம் பாத்துட்டு போவாங்க" ௭ன்றவன், பின் செல்லை அமத்தி விட்டு "இறங்கி உட்காரு நா பறிமாறுறேன் நீ சாப்பிடு" என்றான்.

"இப்பதான் நீங்க சாப்பிட்டும் நேரமாச்சே, நீங்களும் ரெண்டு தோச சாப்டுங்க" என்க.

அவனும் சரியென உட்கார, அவளும் இறங்கி, டேபிள் மேல் வைத்து விட்டு சென்ற சாப்பாட்டை தேட, ஃப்ரூட்ஸ் கூடை மட்டுமே இருந்தது. உள்ளே எடுத்து வைத்திருப்பார்களோ என்று போய் தேட, ஹாட் பாக்ஸை கழுவி கவுத்தி சென்றிருந்தனர். வீட்டு வேலைக்கு இருக்கும் முத்து, மாரி இருவரும் எல்லோரும் சாப்பிட்டதும் மிஞ்சுவதை எடுத்துச் சென்று விடுவர். இன்றும் எல்லோரும் சாப்பிட்டு தான் சென்றிருக்கிறார்கள் என்றெண்ணி எடுத்துச் சென்றுவிட்டனர். இவர்கள் சண்டையிட்டு சமாதானமடைந்து 11 மணிக்கு வந்தால் எப்படி இருக்கும்?
தானும் கிச்சனுக்குள் சென்றவன், இவள் பேந்த பேந்த முழிப்பதை வைத்துக் கண்டு கொண்டு, "இதுக்குதேன், சோறு தான் முக்கியம்னு, அதுல கரெக்டா இருக்கனும்னு சொல்றது. தோச மாவுனாலும் இருக்கா?" என்றான்.
"இருக்குங்க, நீங்க போய் உட்காருங்க சுட்டு எடுத்துட்டு வர்றேன்".

"நா சாப்டேன், நீ தான் காலைலயிருந்து சாப்பிடாம இருக்க தள்ளு" என தோசைக்கல்லை அடுப்பில் எடுத்து வைத்தவன், அவள் மாவை எடுக்காமல் நின்று முழிப்பதைக் கண்டு, தானே போய் எடுத்தான். சிறு கிண்ணத்தில், நான்கைந்து கரண்டி மாவை எடுத்து உப்பு போட்டு தண்ணீர் விட்டு கலக்கினான். பின் எண்ணெய் தேய்த்து வட்டமாய் ஊற்றினான். சிம்மில் வைத்துவிட்டு தேங்காய் எடுத்து சில் எடுத்தான், பொட்டுக்கடலையை இன்னொரு அடுப்பை பற்ற வைத்து, ஒரு சட்டியில் போட்டு வறுத்து பின் அதில் உப்பு, நான்கு வெங்காயம் உறித்து வறுத்து எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொண்டு, அதையும் வறுத்தெடுத்தான். இதற்கிடையில் தோசையையும் எடுத்துப் போட்டு அடுத்து உற்றினான்.

"ஆ!" என்று தான் கன்னத்தில் கை வைத்து நின்றாள் கன்னி. தேங்காயுடன் 2, 3 வத்தல், கறிவேப்பிலையை வறுத்து பின் எல்லாவற்றையும் ஜாரில் போட்டு உப்பு, தண்ணீர் விட்டு அரைத்து எடுத்தான். 3 தோசை சுடப்பட்டு இருக்க, பிளேட்டை எடுத்து மூன்றையும் வைத்தவன், ஜாரிலேயே சின்ன தேகரண்டியிட்டு, சட்டினி எடுத்து அதில் ஓரம் வைத்து அவளிடம் நீட்ட திரும்பியவன், அவள் தன்னை ரசித்துப் பார்ப்பதை கண்டு சிரித்து இடுப்பில் மறு கை கொடுத்து தூக்கவும், சுயநினைவு பெற்றவள், "என்னங்க" என அவள் கேட்கும் முன் சமையல் மேடையில் ஏற்றியமர்த்திருந்தான்.

பின் தட்டை நீட்டி, "சாப்பிடு" என்க.
வேகமாய் வாங்கி வாயில் வைத்தாள். கண்ணை அகல விரித்து, "செமங்க. எப்டி இதெல்லாம் உங்களுக்கு தெரியும். சமையல் தெரியுமா ௭ன்ன?" என்றாள் ஆச்சரியமாய்.

தோசையைத் திருப்பி போட்டுக்கொண்டே, "எல்லாம்லா தெரியாது. எங்க அம்மா கூட நின்னு அவங்க சமைக்கும் போது பார்த்திருக்கேன். அது மட்டும் ஞாபகத்தில் இருக்கு, தெரியும். ஆனா சமைக்கிறது இன்னைக்கு தான் முதல் தடவ. எப்டி வந்திருக்கு?" என்க.
இடது கையால் அவன் காலரை எட்டி அருகிழுத்தவள் அவனது இடது கன்னத்தில் முத்தம் பதித்து, பின் அவனுக்கும் ஒரு வாய் ஊட்டினாள்.

"பரவால்லல நல்லா வந்திருக்கு" என்று விட்டு அடுத்த தோசை நெய் விட்டு எடுத்தான், ரசித்து உண்டனர் இருவரும். அவனுக்கும் ஊட்டி, தானும் சாப்பிட்டு, கிடந்த பாத்திரத்தை கழுவி எடுத்து ஒரு வழியாய் 12.30க்கு தூங்க சென்றனர். புதுமண தம்பதியர்களுக்கான ஊடலுக்கு பின் வந்த கூடலுடன் அன்றைய நாளை கடந்தனர்.

மறுநாள் காலையிலேயே மாறன் கிளம்பி விட்டான். கன்னி "எங்கே?" எனக் கேட்டதற்கும் பதில் அளிக்கவில்லை. ஆனால் இன்று தானும் சாப்பிட்டு, அவளும் சாப்பிட்ட பின்பே கிளம்பிச் சென்றான். அவளும் காலையில் வைத்த இட்லியை டிபனில் அடைத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பிவிட்டாள். அங்கு சென்றால் தாத்தாவின் ஆர்டரின் பெயரில் சூப்பர்வைசராக ப்ரோமோட் செய்யப்பட்டிருந்தாள். அவர்களின் மருமகளின் தகுதியை மேம்படுத்திக் காட்ட நினைக்கிறார்கள் என நினைத்துக் கொண்டாள். 2 வருட அனுபவம் அதனால் அவளுக்கு அனைத்து வேலை அத்துப்படியே. அன்றைய நாள் அவளுக்கு அங்கு அப்படி கழிய.

இங்கு மாறனோ அமர் மெக்கானிக் ஷெட்டில் முழுமூச்சாக இறங்கியிருந்தான். சாதாரணமாக பஞ்சர் ஒட்டி அனுப்புவது, டயர் மாற்றுவது போன்ற வேலைகளுக்கு 100 ரூபாய் வாங்கினான். ஆயில் மாற்றுவது, என்ஜின் ரிப்பேர், மோட்டார் மாற்றுவது போன்ற வேலைகளுக்கு 500 ரூபாய் வரை வாங்கி அதில் பாதியை அமரின் கடை பொருளுக்காய் அவனிடம் கொடுத்து விடுவான். முதலில் இவ்வளவு நியாயவாதி இல்லை அவன். ஆனால் இவனுக்குரிய கோட்பாடுகளை அவள் மதிப்பதால், அவளுடையதை இவனும் மதித்தான். 2 நாளில் ஆயிரம் ரூபாய் சேர்த்தான். வண்டி வாடகை எடுக்க கேட்க, அவன் அதற்கே 600 ரூபாய் சொல்ல, படத்துக்கு போக வேண்டுமே ௭ன மேலும் இரண்டு நாள் வேலைக்கு வரும்படி ஆகியது.

எல்லோரும் (ஊரில் உள்ளவர்கள்) அவன் கல்யாணம் முடிந்து விட்டதால் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு வந்து விட்டது என்றே எண்ணினர். பூவேந்தன் காதிற்கும் இந்த விஷயம் சென்றது. ஒரு மாசம்னாலும் நிலையா அந்த வேலைல இருக்கட்டும் பாத்துக்கலாம் என நினைத்துக்கொண்டார். வேறு யாருக்கும் அது பெரிய விஷயமாக தெரியவில்லை.
கன்னியும், அவனிடம் இரண்டு நாள் கேட்டவள், சொல்லவில்லை என்றதும், கஷ்டமாக இருந்தும், பாப்போம் ௭ன விட்டுவிட்டாள். நான்கு நாள் கடந்து விட்டிருந்தது. அன்று ஞாயிறு எல்லோரும் வீட்டிலிருக்க. இவன் மட்டும் காலையிலேயே "கிளம்பு" ௭ன்க, "எங்க தாங்க போறீங்க, வீட்டுல பெரியவங்க ௭ல்லாரும் என்கிட்ட தான் கேக்குறாங்க. தெரியலன்னு சொல்ல எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?" என்றாள் முகத்தை தூக்கிக் கொண்டு.
தலையை வாரி முடித்து சிரித்தவன், "கிளம்பு போலாம்"

"எங்க?"

"ம் சினிமாவுக்கு"

"மறுபடியுமா? நா தான்" ௭ன அவள் ஆரம்பிக்க, உதட்டில் அவசர முத்தம் வைத்து அவளை நிறுத்தியவன் "உன் கேள்வி எல்லாத்தையும் சரிபண்ணிட்டேன், அதனால கெளம்பு போலாம்".

"எப்டி? காசுக்கு என்னப் பண்ணீங்க?"

"அமர் கடைல வேல பாத்தேன், அதும் கமிஷன் கட்டித்தான்"

"அதெப்படி 2 நாளைக்கு சம்பளம் தருவாங்க? முன் கடனா வாங்கிட்டு வந்துட்டீங்களா?" என்றாள்.

'ஆனாலும் மனதிற்குள் ஒரு சிறு சந்தோசம், வேலைக்கு சேர்ந்துவிட்டானே' என.

"சம்பளமா? நா வண்டி ரிப்பேர் பாத்து கொடுத்தேன். அதுக்கு அவன் கடைல எடுத்த சாமானுக்கு கமிஷன் கொடுத்துட்டு என் உழைப்புக்கான காச நா வாங்கிட்டு வந்துருக்கேன்" ௭ன்றான் கெத்தாக.

"அதெப்படி உங்கள நம்பி, சேந்த உடனே வண்டியை கொடுப்பாங்க"

"அவனே நம்பி கொடுத்துட்டான், நீ என்னடி இத்தன கேள்வி கேக்குற?"

"அதுக்கில்லங்க உங்களுக்கு முன்னாடியே இந்த வேலையெல்லாம் தெரியுமா?"

"இல்ல அங்கயே தான உட்கார்ந்திருப்போம், அதனால பாத்திருக்கேன்".

"பாத்தத வச்சே வேல கத்துக்கிட்டீங்களா?"

"ஆமாடி, ஐயோ கேள்வியா கேக்காளே?" இவன் புலம்ப.

"அதில்லங்க" அவள் அடுத்து ஆரம்பிக்குமுன்,

"நா சின்ன புள்ளைல இருந்தே அப்டி தான்டி ஒரு விஷயத்த ஒருக்கா பாத்தா அத அப்படியே செஞ்சுருவேன். எங்க அம்மா போட்ட கோலத்தை பாத்து அப்படியே போட்டுருக்கேன். ஒரு தடவ பாட்டி ஸ்வெட்டர் பிண்ணுறத பாத்துட்டுருந்து அதே மாதிரி நானும் பின்னிருக்கேன். உனக்கு முகூர்த்தத்துக்கு சேலை வாங்கவும் இப்படித்தான் வேலை பாத்து சேத்தேன். ஆனா சும்மா கொஞ்ச கொஞ்ச நேரம் பாத்தேன். இப்டி நாள் முழுக்க பாக்கல. இப்ப அப்டி இல்ல, உடனே ஒன்ன படத்துக்கு கூட்டிட்டு போக தோணிச்சு, அதான் முழுநேரம் பார்க்க வேண்டியதா போச்சு. உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டேன், கெளம்பு போலாம்" என்க.

"ஐயோ என் செல்லம்" என இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

"சரி போதும் கிளம்பு. மதியம் சோ, சீக்கிரம் கிளம்பணும்" என்றான்.
"நா கிளம்பி தானே இருக்கேன். நீங்க தான் கிளம்பணும்".

"ஏன்டி?" என்றான் அன்று போல் இன்றும் குனிந்து தன்னைப் பார்த்து.
"அன்னைக்கே சொன்னேன்ல என் கூட வெளில வந்தா எனக்கு புடிச்ச மாதிரி தான் ட்ரஸ் பண்ணனும்னு".
"சரிம்மா.சரி.சீக்கிரம் எடு, போட்டுட்டு கிளம்புவோம்".

"என்னத்த எடுக்க? எனக்கு அதுல ஒன்னுமே புடிக்கல" என புலம்பியவள் ஏற்கனவே கை பார்த்து வைத்திருந்தததில் கொஞ்சம் நல்லா இருப்பதை மட்டுமே, கப்போர்டில் வைத்திருந்தாள். அதில் வெளுத்து போகாத டீ சட்டையும், ஜீன்ஸையும் எடுத்துக்கொடுத்து மாற்ற சொல்லிவிட்டு, தானும் நீண்ட முடியை தளர பின்னிக்கொண்டாள். பின் இருவரும் கீழிறங்க, அங்கங்கு அமர்ந்து தங்கள் வேலையிலிருந்த மொத்த குடும்பமும் இவர்கள் இருவரை தான் பார்த்தது.

நேராக சென்று அத்தையிடம் "அத்த நாங்க சினிமாவுக்கு போயிட்டு வாறோம்" என்றாள் சிரித்துக்கொண்டே,

"பத்திரமா போயிட்டு வாங்கம்மா" பானு சொல்ல.

"வேல வெட்டி இல்லாதவங்களுக்கு எப்ப வேணா எங்க வேணா போலாம்" மதி சொல்ல.

"மலர் போலாம் நேரமாகுது" என்றான் வாசலில் நின்று மாறன்.

'ஆளும் மூஞ்சியும் இவல்லாம் பிள்ளைகளுக்கு என்ன நல்லத சொல்லிக் கொடுக்க போறா?' என அவளைப் பார்த்தவாறு மனதிற்குள் பதில் கொடுத்துக் கொண்டே சென்றாள் கன்னி.

வெளியில் ஒரு பைக் நிற்க, "இது" என அவள் ஆரம்பிக்க, "ஒருநாள் வாடகயா 600 ரூபா கொடுத்து தான்மா எடுத்துட்டு வந்திருக்கேன்" என்றான் முந்திக்கொண்டு.

பின், ஏறி உட்கார்ந்து பைக் ஸ்டார்ட் செய்ய, அவன் தோளை பிடித்து பின்னால் ஏறிக்கொண்டாள் கன்னி. தாத்தா வாசல் வரை வந்தார், அதற்குள் அவர்கள் கிளம்பியிருக்க, "செல்லம், கண்ணு என்னட்ட துட்டு வாங்காமலே போயிட்டான். நீ ஏதும் கொடுத்துவிட்டியா?" என பாட்டியிடம் கேக்க.

"அவேன் உங்கள தவற வீட்ல யார்ட்ட காசு வாங்கியிருக்கான்" என்றார் பாட்டி.

"வீட்ல யார்ட்டயும் வாங்கலன்னா வெளியிலயும் கடன் வாங்க ஆரம்பிச்சுட்டான்னு அர்த்தம். இப்பவே அவனுக்கு இவ்வளவு தான்னு சொத்தப் பிரிச்சுக் கொடுத்து தண்ணீ தெளிச்சு விட்டுருங்க. அதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது சொல்லிட்டேன்" ஏதோ வீட்டிற்கு நல்ல ஐடியா கொடுத்தது போல் பெருமையை சொல்லிச் சென்றான் அறிவு.

"என்னைய கேட்டா, நானு அத தான் சொல்லுவேன். சும்மா குடும்பத்தோட உக்காந்து சாப்பிட்டே எங்க சொத்தையும் சேத்து அளிக்கிறான்" என்றாள் மதி. பூவேந்தன் எல்லாவற்றையும் கவனித்தவாறு அமர்ந்திருந்தார்.

"இந்த பிள்ளைக இப்படியெல்லாம் பேசுறதுக்கு காரணமே நீ தான்டா" என்றார் தாத்தா பூவேந்தனை பார்த்து.
அவருக்கும் அன்று மருமகள் "மட்டம் தட்டி மட்டம் தட்டி இப்படி ஆக்கிட்டீங்க" ௭ன்று சொன்னதில இருந்தே உறுத்திக் கொண்டே தான் இருந்தது. பானு மாமியாரை கெஞ்சலாய் பார்க்க, "அவன ஒரு வார்த்தை சொல்லிட்டா உனக்கு பொறுக்காதே" என்றுவிட்டு "வாங்க இனி பேசி என்ன ஆகப் போகுது. அதுங்கதுங்க வாழ்க்கைய அவங்கவங்க பாத்து வாழ்ந்துக்க வேண்டியதுதான்" என தாத்தாவை அழைத்து சென்று விட்டார் பாட்டி. பானு பூவேந்தன் அருகில் சென்று சமாதானமாய் தோளில் தட்டிக்கொடுத்தார்.

அங்கு பைக்கில் கிளம்பி சென்றவர்களும் திருநெல்வேலி வந்து நெல்லையப்பரை தரிசித்து விட்டு, மதிய சாப்பாடை சின்ன கடையிலேயே ஹெவியாய் முடித்துவிட்டு பாம்பே தியேட்டர் வந்தனர். தர்பார் படம் ரிலிசாகி 1 வாரம் தான் ஆகி இருந்தது, அதனால் நல்ல கூட்டமும் கூட. பால்கனி சீட்டில் வந்தமர்ந்தனர். ஃபுல் ஏசி.

"நா இவ்வளவு பெரிய தியேட்டர்ல வந்து படம் பாக்குறது விவரம் தெரிஞ்சு இதுதான் மொத தடவை. 12த் படிக்கும்போது தூத்துக்குடியில செந்தில் தியேட்டர்ல காமராஜர் படம் பார்க்க கூட்டிட்டு போனாங்க, முன்னாடி உக்காந்து பாத்துட்டு வந்தோம். இது எவ்வளவு டிக்கெட்டு?"

"ஒராளுக்கு 350 ரூபா. படம்னு பாக்க வந்தா நல்லா பாத்துட்டு போணும். நானும், உண்மையும் எப்பவும் இப்படித்தான் பாப்போம்" என்றான்.

"அதான் பணத்தோட அரும தெரியல" என முனங்கிக் கொண்டாள்.

இடைவேளையில் கையிலிருந்த காசில் பாப்கார்ன், வீல் முருக்கு, கோக் ௭ன வாங்கி குடுத்தான். அவளாக எதுவும் கேட்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்து கிளம்பினர்.
வண்டியில் ஏறும் முன், அவன் முன்னே வந்து நின்றாள், 'சொல்லுவோமா வேணாமா' ௭ன ஓரிரு நொடிகள் யோசித்து விட்டு, "நா சொல்றேன்னு தப்பா ௭டுக்காதீங்க, இப்ப போற வழியில வண்டில பெட்ரோல் இல்லாம நின்னுருச்சுன்னா என்ன பண்ணுவீங்க? பஸ்ல போகவும் காசில்ல, பெட்ரோல் வாங்கவும் காசில்ல, வழில போறவன்லா நிறுத்தி குடுப்பான்னு சொல்ல முடியுமா உங்களால? எப்பயுமே பைல இருக்குறத வழிச்சு செலவு பண்ணி பழகாதீங்க. நூறு ரூபானாலும் மிச்சம் வைங்க அவசரத்துக்கு உதவும்" படபடவென கூறிவிட்டு வந்து ஏறி அமர்ந்தாள்.

முதலில் முறைத்தாளும், பயப்படவில்லை ௭ன்பது போல் காமித்து கொண்டு, வேகமாக சென்று அமர்ந்தவளின் செயலில் சிரிப்பு வந்து விட, "சரிடி உடனே பாடம் எடுக்காத" ௭ன இலகுவாகவே அதை ஏற்றான்.
'அம்மாடி கோவபடல' ௭ன நெஞ்சில் கை வைத்து ஆசுவாச பட்டாள், பின் "தோணுச்சு சொன்னேன், கேக்குறதும் கேக்காததும் உங்க இஷ்டம்" ௭ன தைரியமாகவே பதில் தந்தாள்.

"சரி படம் எப்படி இருந்துச்சு?" ௭ன்றான் இன்னும் சிரிப்பு மாறாமல்.

"பாவம் அந்தப் புள்ள செத்தது தாங்க மனசுக்கு தாங்கவேயில்லை, சாவப் போற கடைசி நிமிஷத்துல பேசுறதெல்லாம் எவ்வளவு கொடுமயில்லங்க?" ௭ன்க.

"அடிப்பாவி அந்த படத்துல சந்தோசப்படுற மாதிரி ஒரு சீன் கூட வா உனக்கு நியாபகம் வரல?"

"நல்லாதாங்க இருந்தது. மனச பாதிச்சத சொன்னேன். நீங்க சொல்லுங்க மொத மொத உங்க சம்பாத்தியத்துல வெளில வர்ரீங்க, சாப்பிடுறீங்க, படம் பாக்குறீங்க, எப்படி இருந்தது?" ௭ன தூண்டில் போட்டாள்.
கொஞ்ச நேர அமைதிக்கு பின் "இது உனக்காக செய்யணும்னு தோணுச்சு செஞ்சேன். மத்தபடி அதுவும் என் காசு தான் இதுவும் என் காசு தான். அதனால பெருசா வித்தியாசம் தெரியல" ௭ன்றான்.

"சுத்தம்" ௭ன தலையிலடித்து கொண்டாள்.

"என்னடி?" ௭ன்க,

"ஒன்னுமில்ல. அதவிடுங்க, அந்த தியேட்டர் வேல நடக்குற இடத்த போய் கவனிச்சுக்கலாம்ல, இழுத்து கடத்துறான்னு அத்த புலம்பிட்டுருந்தாங்க" ௭ன்க.

"அங்க போனா அந்த சூப்பர்வைசருக்கு கிடைக்குற மரியாத கூட எனக்கு கிடைக்குறதில்ல. அங்க பாதி பேருக்கு மேல வேல பாக்கல சும்மா உக்காந்து சம்பளம் வாங்குறாங்க.

அப்பாக்காகவும், மனசாட்சிப்படின்னும், 100க்கு 10 பேர் தான் ஒழுங்கா வேல பாக்குறாங்க. அதனால தான் இந்த அளவுக்காது எழும்பியிருக்கு. உன் மாமனார் இதெல்லாம் நா சொன்னாலும் நம்ப மாட்டார். அவர் மேனேஜர் என்ன சொல்றானோ அதத்தான் நம்புவார்" என்றான் ௭ரிச்சலாய்.

"எல்லாத்துக்கும் காரணம் வச்சிருப்பீங்களே. என் பொறுப்புல விட்ருங்க நா இத்தன நாளுக்குள்ள வேலைய முடிச்சுக்காட்டுறேன்னு சவால் விட்டு முடிச்சுக்காட்டுனா, ஏன் நம்பாம இருக்கப் போறாங்க?" என்றாள்.

வண்டியை நிப்பாட்டி திரும்பி அவளைப் பார்த்தான். "உன் புத்திய காட்டுத பாத்தியான்னு கேக்கப் போறீங்களா?" ௭ன்றாள் அவளே முந்திக்கொண்டு.

"ரொம்ப ஏத்தம்டி உனக்கு".

"இல்லங்க. அவங்க உங்கள நம்பள நம்பளன்னு அவங்களையே சொல்லிட்டுருக்குறதுக்கு. இங்க பாரு என் திறமையன்னு எதையாவது உதாரணம் காட்டி சொல்லிக் காட்டுனா, அவங்க புரிஞ்சுக்க வாய்ப்பிருக்குல்ல. அவங்களுக்கு புரிய வைக்கணும்னு தான காத்துட்டுருக்கீங்க. அதுக்கு ஒரு வாய்ப்பு கை மேல இருக்கு ஏன் விடணும்" என்றாள் மெதுவாகிவிட்ட குரலில்.

நாடி தடவி யோசித்தான். 'ஹப்பா யோசிக்குறாரு. இவர யோசிக்க வைக்க நாம எவ்வளவு நீளமா பேச வேண்டியிருக்கு' என மைண்ட் வாய்ஸ் நடுவில் எடுத்து கொடுக்க, 'பேசாமயிரு, ஏதோ நம்மளால முடிஞ்சத ௭ல்லாம் செய்வோமே இப்ப ௭ன்ன' என பதில் சொல்லிக் கொண்டாள்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 13

அதன் பின்னான பயணம் அமைதியாகவே கழிய, வீடு வந்ததும் அவளை இறக்கி விட்டுவிட்டு, "பைக்க திருப்பி குடுத்துட்டு வரேன் மலர்" ௭ன்கவும் தலையசைத்து உள்ளே சென்றாள்.

ஹாலில் பாட்டி மட்டுமே இருக்க, இவளை பாத்ததும், "அவன ௭ங்கம்மா? படத்துக்கு போனீங்களா?" ௭ன்றார்.
"ம்ம் போனோமே பாட்டி. ஏன் அப்டி கேக்றீங்க? சொல்லிட்டு தானே போனே" ௭ன அவரருகில் அமர்ந்தாள்.

சங்கடமாக புன்னகைத்தவர், "௭ப்பயும் அவகட்ட காசு வாங்கிட்டு போற புள்ள வாங்கமலே போய்ட்டான். நீ ௭தும் குடுத்தியாமா?" ௭ன மெதுவாக கேட்டார்.

அழகான சிரிப்பொன்றை குடுத்தவள், "அவரோட ரூபாய்ல தான் போனோம் பாட்டி. 4 நாள் வேலைக்கு போய் சம்பாதிச்சு உங்க பேரன் ௭ன்ன கூட்டிட்டு போயிருக்கார் தெரிஞ்சுக்கோங்க" ௭ன்க.

"அடி ஆத்தி இத கேட்டா ௭ன் மருமக ௭ம்புட்டு சந்தோஷ படுவா" ௭ன பானுவிடம் சொல்ல குழந்தையாய் ௭ழுந்து ஓடினார் பாட்டி. சென்றவரை பார்த்து சிரித்து விட்டு ௭ழுந்து தங்கள் அறை சென்றாள் கன்னி.

இரண்டு நாட்கள் மனைவி கூறியதைப் பற்றி மனதில் விவாதித்த மாறன், மறுநாள் காலையிலேயே எழுந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். இரண்டு முறை மேல் அவர்கள் அறை வந்து சென்றவள், மூன்றாவது முறை வந்தபோதும் அவன் விட்டத்தை பார்த்தே அமர்ந்திருப்பதை கண்டு பொறுமையின்றி, 'ரொம்ப யோசிக்கிறாரே, எதப்பத்தியா இருக்கும்?' என நினைத்துக் கொண்டு "என்னங்க அப்டி என்ன யோசிக்கிறீங்க? என்கிட்ட சொன்னா நானும் சேந்து யோசிப்பேன்ல. நல்ல நல்ல ஐடியா கூட குடுப்பேன்" ௭ன கேக்க.

"௭துக்கு? யோசிச்சுட்டு. ௭ன்னைய கேள்வியா கேக்குறதுக்கா?" ௭ன்றான் பதிலாக ௭ழுந்தவாறு.

"ம்க்கும்" என்று விட்டு, "சாப்புட வாங்க தாத்தா வெயிட்டிங்" ௭ன இறங்கி விட்டாள்.

நன்றாக யோசித்து விட்டு, போன் வாங்கியதிலிருந்து முதல்முறை தகப்பனாருக்கு அழைத்தான். 2 ரிங்கில் எடுத்தவர், "ஹலோ யாரு?" எனக் கேக்க.

'மகன்ட்ட பேச தான் மாட்டாருன்னா, நம்பர் கூடவா வாங்கி வச்சுக்கல்ல' என வாய்க்குள் திட்டிவிட்டு, "நா மாறன் பேசுறேன்" ௭ன்றான் சத்தமாக.
ஒரு நிமிட அமைதிக்குப்பின் "சொல்லு" என்றார்.

'எவ்வளவு நாள் கழிச்சு இந்த மனுஷன்ட்ட பேசுறேன் கொஞ்சம் பாசமா தான் பேசினா என்ன?' இப்பொழுது அவர் காதில் விழட்டும் என்றே முனங்குவது போல் சத்தமாக கூறினான்.

"பாசம் காட்டுற மாதிரி நடந்துக்கிட்டா நாங்க பேச மாட்டோம்ன்னா சொல்றோம்?" என்றார் அவரும் அவனைப் போலவே.

"சரி நா விஷயத்துக்கு வரேன், அந்த தியேட்டர் கட்டுமான வேலைய இனி நா மேற்பார்வை பாக்குறேன்".

"ஏன் ஒருநா போயிட்டு பிரச்சினை இழுத்துட்டு வந்தது போதாதா?"

மூச்சை இழுத்து பிடித்து "இங்க பாருங்க, இப்பயும் பிரச்சின வராது, பண்ண மாட்டேன்ன்னு நா சொல்ல வரல. எனக்கு பிடிக்கலன்னா கண்டிப்பா பிரச்சின பண்ணுவேன். நீங்க உள்ளே வரக்கூடாது, நானே அத எப்படி சரி பண்ணணுமோ பண்ணிக்குவேன். இது மொத்த பொறுப்பையும் என்ட்ட தரணும், ரெண்டு, மூனு மாசத்துல வேலையை முடிச்சு கைல கொடுக்கிறேன். அப்படி கொடுக்கலன்னா, நா நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன். அப்படி முடிச்சி கொடுத்துட்டேனா இனி எப்பயும் என் மேல உங்களுக்கு நம்பிக்க இல்லாம போகக் கூடாது. உதவாக்கரை, ஒன்னத்துக்கும் ஆகமாட்டான்ற எண்ணத்தலா விட்டுரனும்" என்றான் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல்.

"நீ என் பேச்ச கேக்கணுங்குறதுக்காகவே செலவானாலும் பரவாயில்ல, இந்த வேலைய நீ முடிக்க கூடாதுன்னு வேண்டிக்குறேன்டா" ௭ன்றார் அவர்.
பெரு மூச்சாக வெளியேவிட்டு "அதயும் பாக்கலாம்" என்று விட்டு போனை வைத்து விட்டு, "மலர்" என சத்தமாக அழைத்தான்.

"இந்தா வறேங்க" என்றவாறு சமய வேலைக்கு நின்றவள் அத்தையிடம் சொல்லிவிட்டு மேலேறினாள்.

"அப்பாட்ட பேசிட்டேன்மா. தியேட்டர் வேலைய நானே நாளைலயிருந்து பாத்துக்கிறேன்னு சொல்லிட்டேன். இப்பயும் நம்பிக்க இல்லாம தான் சொல்லிட்டு வச்சிருக்காரு. உண்மைய இங்க மாத்திவிடு, எனக்கு கொஞ்சம் ஏதுவா இருக்கும்" என்றான்.

அவளுக்கு அவ்வளவு சந்தோசம், தான் சொன்னதும் கேட்டு கொண்டானே ௭ன முகமெல்லாம் பிரகாசமாகி விட,

"எப்படிங்க நா சொன்னேன்னு செஞ்சுட்டீங்க உங்களுக்கு தோணுனா தான செய்வீங்க" என்று கேட்டும் விட்டாள் ஃப்ளோவில். பின்பே மானசீகமாக தலையிலடித்து கொண்டு, 'அவசரபட்டுடியே கன்னி, இப்ப மலை ஏறிடுவாறே' ௭ன திருதிருவென ௭ப்டி சமாளிக்லாம் ௭ன யோசிக்க.
அவள் முழியை கண்டு சிரித்து விட்டவன், அவளை இழுத்து மடியில் அமர்த்தி கொண்டு, அவள் இடுப்பை அணைத்து தோளில் முகம் பதித்து, "இப்பவும் எனக்கு தோணுனதனால தான்டி செய்றேன்" என்க.

அவன் சிரித்ததில் பயம் போய்விட, "விடுங்க விடுங்க" என அவன் கைக்குள் நெளிந்தாள்.
"விடமாட்டேன்" என அவன் இன்னும் இருக்க,

"விடுய்யா யோவ், எனக்காக செஞ்சேன் சொல்ல முடியாதவங்க என்னைய கட்டிக்க தேவையில்ல. விடுய்யா".
"கோவம் வந்துட்டா மரியாதைய காத்துல விட்டுறுவியாடி நீ?"

அவன் அவளுக்காக ௭ன சொல்லாததில் சந்தோஷம் சட்டென வடிந்து விட, "ஆமா அப்படித்தான் விடுங்க என்ன" என்றாள் போராடி அவனிடமிருந்து விலக முடியாத எரிச்சலில்.

"உனக்காகத்தான் செஞ்சேன் போதுமா, நா சொல்றதெல்லாம் மறுக்காம நீ ஏத்துக்கிறல்ல, அதனால உன் பேச்சுயும் கேளுன்னு என் மனசாட்சி இடிக்குதுடி"

"இடிக்குமே நல்லா. அன்புல செய்யணும் எதுனாலும் நா செய்றேன்னு செய்யக்கூடாது".

"அன்பில்லாம தா இப்படி விடாம புடிச்சுருக்கேனா?" என்றான் கட்டிலில் கிடத்தி தன் ஆளுகையில் கொண்டுவந்து.

"இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன். நா வேலைக்கு கிளம்பணும்" என அவள் அவனைப் பிடித்துத் தள்ள,
"சூப்பர்வைசர் இன்னைக்கு அற நாள் லீவு, அதனால நீ போய் பாத்துக்கன்னு தாத்தாவுக்கு சொல்லிட்டேனே".
"ஐயே வீட்ல அத்த, பாட்டிலா என்ன நினைப்பாங்க?"

"சின்னச் சிருச்சுங்க அப்படி இப்படித்தான் இருக்கும்னு நினைப்பாங்க".

"சொன்னா கேளுங்க", அதற்குமேல் அவன் அவளை சொல்ல விடவில்லை. மறுபடியும் இவள் குளித்துவர, அவன் உறங்கியிருந்தான். கீழ் செல்ல மதிய சாப்பாட்டிற்கு இருப்பதை எடுத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் கிளம்பிவிட்டாள். பாட்டியும், பானுவும் சிரித்துக் கொண்டனர்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 14

மறுநாள் காலையிலேயே கன்னி வீடு சென்று உண்மையை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான். பாட்டியிடமும் பானுவிடமும் கன்னி சொல்லிவிட, தாத்தாவிடம் மாறனே சொல்லிவிட்டான்.

"மாப்ள திடீருன்னு திருந்திட்டியே ஏன்? தங்கச்சி ரூம்குள்ள விட்டு அறிவுரையா போட்டு தாக்கிருச்சோ?"

"இல்லடா, இத செய்ங்க, இப்படி கூட உங்க அப்பாவுக்கு உங்கள நீங்க நிரூபிக்கலாம்ன்னு சொன்னா. ௭னக்கும் செய்யலாமேன்னு தோணுச்சு" மாறன் சொல்ல.
உண்மை அவனை மேலும் கீழும் பார்த்தவன் "இதத்தான தாத்தாவும் ஒவ்வொரு தடவயும் சொன்னாரு"

"அப்ப அவரு அவரு பிள்ளைக்காக பேசுறாரோன்னு தோணுமா, அதனால அவர் பேச்சக் கேக்க தோணாது. ஆனா என் பொண்டாட்டி என்ன மட்டுமே மனசுல வெச்சு எனக்காகன்னு சொல்லுறா".

"அதனால கிளம்பிட்டியாக்கும். ம் அததுக்கின்னு ஆளு வரணும்ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க, நானும் முயற்சி பண்ணி தான் பாக்றேன் மடிய மாட்டிக்குது"

"புலம்பாம வாடா. யார் சொன்னாலும் நமக்காத் தோணனும்டா"

"உனக்கு தோனுன வரைக்கும் போதும் மாப்ள. மாத்தி மாத்தி பேசி ௭ன்ன குழப்பாத"

அந்நேரம் ௭ப்போதும் போல் கன்னியும், தேனியும் ௭திரில் வந்தனர். கன்னி அவனையே பார்த்து கொண்டு வர, மாறன் கெத்தாக நேர் பார்வை பார்த்து நடந்தான்.

சிறிது நேரம் பார்த்தவள், அவன் திரும்பவில்லை ௭ன்றதும், " ம்க்கும்" ௭ன குனட்டி மூஞ்சை திருப்பி கொண்டாள்.

மாறன் அருகில் நடந்து வந்த உண்மை 'ஈஈஈ' ௭ன 32 பல்லையும் விடாமல் தேனியை பார்க்க. அவள் அங்கிருந்து கண்ணை நோண்டிபுடுவேன் ௭ன சைகை காமித்தாள்.
அதில் உண்மை வெடுக்கென திரும்பினான். அப்போது தான் நண்பனின் பார்வை அங்கில்லை ௭ன கண்டு, "பழக்க தோஷமா மாப்ள? தங்கச்சி இப்ப உன் பொண்டாட்டி அதனால நீ தைரியமா பாக்லாம், பாரு தங்கச்சி கூட உன்ன தான் பாத்துட்டே போகுது"

"நீ உன் வேலைய முடிச்சுட்டனா முடிட்டு வா" ௭ன்றான் அப்போதும் திரும்பாமல்.
அவனை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அவனுக்கு அந்த டைம் தோனுறத செஞ்சுட்டு போயிட்டே இருப்பான். பேசி கொண்டே கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு வந்திருந்தனர்.

அன்று நின்ற அதே செக்யூரிட்டி, இவன் வருவதைக் கண்டும், கண்டுக்காமல் அவர் போக்கில் டீயை உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தார். அதை கவனித்து சிரித்துக்கொண்டே உள் சென்றான்.
9மணி ஒருவரும் இன்னும் வந்திருக்கவில்லை. அன்று போல் இன்றும் செக்யூரிட்டி அருகில் இரண்டு ஸ்டூல் எடுத்து வந்து போட்டு அமர்ந்தனர்.

"நீங்க எப்ப வந்தீங்கண்ணே" உண்மை செக்யூரிட்டியிடம் விசாரிக்க.
"நா நைட் டியூட்டிக்கு வந்தேன்பா. இப்பதான் எந்துச்சு டீ வாங்கி குடிச்சிட்டுருக்கேன் நீங்க வாரீங்க" ௭ன்றார் கேட்ட கேள்விக்கு பதிலாக.

"ஓ பரவாயில்லயேண்ணே நைட்டே வந்துட்டு இப்போ வர இருந்துருக்கீங்களே" ௭ன்றான் மாறன்.

"ஆமாப்பா அடுத்து வேலு வருவான், அவன் வரவும் நா கிளம்புவேன். இன்னைக்கு அப்பா வரலையா?" ௭ன்றார் அவர்.

"இல்ல வரல, அதான் நா வந்துருக்கேன்" மாறன் சொல்ல.
வேலைக்கு 2, 3 பேர் உள்ளே வந்தனர். "என்ன தம்பி இன்னைக்கும் நீங்க வந்திருக்கீங்க, அன்னைக்கு மாதிரி ஏதும் பிரச்சன வந்துராமப்பா" என ஃப்ரீ வேறு வந்ததும் அதில் ஒருவர் அட்வைஸ் சொல்ல.

"அதெல்லாம் நா பாத்துக்குறேன். உண்ம உன் ஸ்டூல கொண்டா" என வாங்கி தன் பையிலிருந்த நேம் லிஸ்ட் எடுத்து அங்கு வேலை பார்ப்பவர்கள் மொத்தம் 110 பேர் அத்தனை பேரின் பேரும் அதிலிருந்தது. வந்த மூவரின் பெயரையும், நேரத்தையும் குறித்து வைத்தான். பத்துமணி நெருங்கியிருக்கையில் கொஞ்ச பேர் வர ஆரம்பித்தனர். ஒவ்வொருவரையும் பேர் கேட்டு நேரம் குறித்து உள்ளே அனுமதித்தான். யாரும் வேலையை பார்க்க சொல்லவில்லை, வந்து ஓரமாக நின்று கசகச வென்று பேசிக்கொண்டிருந்தனர். பத்து முப்பதுக்கு 28 பேர் வந்திருந்தனர். பதினோரு மணி தாண்டுகையில் ஒரு 20 பேர் வந்திருந்தனர். ௭ல்லாவற்றயும் குறித்து கொண்டிருந்தான் மாறன்.
எல்லோருமே கேட்டை ஒட்டி அமர்ந்திருந்து "என்ன நடக்குது" என்பது போல் வேடிக்கைப் பார்த்தனர்.
ஒரு மணி அளவில் மாறனுக்கும், உண்மைக்கும் வீட்டிலிருந்து சாப்பாடு வந்தது. எல்லோரையும் சாப்பிட சொல்லி தாங்களும் சாப்பிட்டனர். அதுவரையிலுமே வேலை பார்க்கும் ௭ண்ணம் யாருக்கும் வரவில்லை, மேனேஜர் வந்து சொன்னால் தானே வேலை ௭ன இருந்தனர்.
பின் இரண்டு மணிக்கு இரண்டு பைக் வந்து நின்றது. அதிலிருந்து நான்கு பேர் இறங்கினர். மாறன் சென்று "ஐ கன்ஸ்டரைக்ஷன்ல இருந்துதான வர்றீங்க. நா மாறன்" என அறிமுக படுத்தி கொண்டான்.

"விக்கி மூலமா காண்டாக்ட் பண்ணது நீங்க தானா? . ரொம்ப தேங்க்ஸ் சார். திருநெல்வேலில ஒரு பெரிய பிராஜெக்ட் பண்ணிட்டுருக்கோம், நீங்க தாராளமா எங்கள நம்பி ஒப்படைக்கலாம்" ௭ன்றனர் வந்தவர்கள்.

"எனக்கு ரெண்டு மாசத்துல வேல முடியணும், ஏற்கனவே கொஞ்சம் வேல முடிஞ்சிருச்சு. வேலையாளும் 100 பேர் இருக்காங்க, நா சூப்பர்வைஸ் பண்ணிக்குவேன். நா சொல்ற மாறி சிலத மாத்தி, நீங்க வேலய தரமானதா எப்படி நடக்கணும்னு மட்டும் பாத்துக்கிடணும்" ௭ன்றான்.

"பக்காவா முடிச்சு தரோம் சார். சைட் பாத்துட்டு போயிடுறோம், நாளைக்கே ப்ளான் ரெடி பண்ணிட்டா, குயிக்கா வேலையை ஆரம்பிச்சுடலாம்".
"9ல இருந்து 6 அதான் வேல நேரம், காலைல 9 மணிக்கு வரைபடத்தோட வந்துருங்க".

"கண்டிப்பா சார்" என சைட்டை சுற்றிப்பார்த்து படம் எடுத்துக் கொண்டு சென்றனர்.
மாறன் வேலையாட்களிடம், "இனி அந்த மேனேஜரும், சூப்பர்வைசரும் கிடையாது. வேல செய்யாம சம்பளம் வாங்கணும்னு நினைக்கிறவங்க நாளைக்கு வராதீங்க. அவங்க இல்லன்னா வேற இன்ஜினியர்ன்னு பாக்கத் தெரிஞ்ச எனக்கு நீங்க இல்லைன்னா வேற வேலையாள புடிக்க ரொம்ப நேரம் ஆகாது. அதனால வேல பாக்கணும்னு எண்ணம் இருக்கிறவங்க மட்டும், காலையில 9 மணிக்கு உள்ளே வந்திருக்கணும். லேட் ஆக ஆக சம்பளத்துல பிடிப்பேன். அது கூட இப்ப இங்க நிக்குற 98 பேருக்கு தான். மீதி 12 பேர் இந்த பக்கம் வரவே தேவயில்லைன்னு சொல்லிடுங்க. இன்னைக்கு வேலையே பாக்கல அதனால சம்பளமு கிடையாது கிளம்புங்க" என அனுப்பி வைத்தான்.

அதிர்ந்து நின்ற அனைவரும், ஒருநா சம்பளம் போச்சே ௭ன்ற கோபமாகவும், ௭ரிச்சலாகவும் கிளம்பினர்.
காலையில் இருந்த செக்யூரிட்டி மீண்டும் இரவு டூட்டிக்கு எட்டு மணிக்கு வந்த பின்பே கிளம்பினர் மாறனும், உண்மையும். இரவு வரை மேனேஜரும், சூப்பர்வைசர் வரவில்லை. இப்படி வராத நாட்களில் கூலியை மறுநாள் சேர்த்து குடுத்து விடுவான் ௭ன கேட்டு தெரிந்து கொண்டான்.

வீடு திரும்பிய மாறன் அறையினுள் நுழையும் போது காலையில் துவைத்து போட்டு விட்டு சென்ற துணியை எடுத்து வந்து மடித்துக் கொண்டிருந்தாள் மலர். மெதுவாய் பின்னிருந்து அனைத்து தோளில் முகம் புதைத்து கொண்டான்.

"ஐய என்னங்க வந்ததும் கை, கால கழுவாம" என அவள் அவன் கையை எடுத்துவிட,
"போடி அப்படித்தான் பிடிப்பேன்" என இறுக்கிக்கொண்டான்.

"காலைல மட்டும் திரும்பாம போனீங்க? இப்ப மட்டும் ௭ன்னவாம்." ௭ன அவன் கையை ௭டுக்க முயன்று கொண்டிருந்தாள்.

"ரோட்டுலயும் இப்டி இறுக்கிகனும்னு தோனும், வந்து கட்டிக்கவா?" ௭ன கன்னம் உரசினான்.

'ஆத்தி தோனுனா உடனே செய்ய கூடிய ஆள் தான் நம்மாளு' ௭ன நினைத்தவள் பேச்சையே மாற்றினாள், "சரி இன்னைக்கு வேலைலா ஒழுங்கா நடந்துச்சா?"

"இன்னைக்கு வேலையே நடக்கல", ௭ன அவன் நடந்ததை சொல்ல.

"சரிங்க பெருசா எதுவும் பிரச்சினய இழுக்காம பாத்துக்கோங்க. இப்ப போய் குளிச்சிட்டு வாங்க" ௭ன அத்தோடு முடித்தும் விட்டாள், அவன் வேலை அவன் இஷ்டம் ௭ன விடவுமில்லை, ஏன் இப்டி பண்ணிருக்கலாமே ௭ன மூக்கை நுழைக்கவுமில்லை, அவனையே செயல்பட விட்டாள்.

"போடி.ஒரு நாளைக்கு எத்தனை தடவ தான் குளிக்குறது" என முனங்கிக் கொண்டே சென்றான்.

மறுநாள் காலையில் 7 மணிக்கே எழுந்து கிளம்பி விட்டான். எட்டு மணிக்கு சைட்டிற்கு உண்மையையும் அடித்து எழுப்பி இழுத்துச் சென்று விட்டான்.

"படக்கு படக்குன்னு திருந்தாதிங்கடா பயமா இருக்கு" ௭ன அவனும் புலம்பி கொண்டு தான் சென்றான்.
"யார சொல்ற? நா ௭ன்ன செஞ்சேன் திருந்துறதுக்கு" ௭ன அவன் கையை முறுக்கவும்,

"யாரோ திருந்துனாவங்கள சொன்னே மாப்ள. உன்ன சொல்ல முடியுமா?"

"அதான்டா கேக்றேன், திருந்துறதுக்கு நா என்னடா தப்பு பண்ணிட்டிருந்தேன்" ௭ன முதுகிலேயே படார் ௭ன ஒன்று வைத்தான்.

மொத்த தூக்க கலக்கமும் பறந்து விட்டிருக்க, "அப்புறம் மாப்ள, எப்டி நாம வேலையை ஆரம்பிக்க போறோம்" ௭ன்றிருந்தான்.

"அத அப்புறமா சொல்றேன். இப்ப வா" என ஒரு டேபிளும், சேரும் செக்யூரிட்டிக்கு இழுத்துப் போட்டு அமர சொல்லி, ஒரு நோட்டை அந்த டேபிளில் பிரித்து வைத்தான்.

"என்ன தம்பி இது?"

"உங்களுக்கு ௭ழுத, படிக்க தெரியுமா?"
"தெரியும் தம்பி"

"இந்த பள்ளிக்கூடத்தில் வருஷ பதிவு டீச்சர் எடுப்பாங்கல்ல"

"ஆமா"

"அதுதான் இது. ஒவ்வொருத்தரா வரவர இதுல அவங்க பேரு எழுதிருக்கு அதுக்கு நேரா கையெழுத்து வாங்கிட்டு உள்ள விடணும்" ௭ன்க.

"மாப்ள நாமளே இன்னும் கையெழுத்து போட்டு பழகல" உண்மை மாறன் காதில் சொல்ல.

திரும்பி முறைத்தவன், "கையெழுத்து போட தெரியாதவுக, கைநாட்டு வச்சுட்டு போணும். காலைல 9 மணிக்கு வர வேலூட்டயும் சொல்லி ஒப்படைச்சுருங்க" என கொடுத்தான்.

"சரிங்க தம்பி, அவனுக்கு எழுத தெரியுமான்னு தெரியல, நானே 10 மணி வர இருந்து எல்லாரையும் உள்ளாற உட்டுட்டு போறேன்" ௭ன பொறுப்பேத்துக் கொண்டார்.
"ரொம்ப சந்தோஷம்ணே, அப்ப நைட்டுக்கு நீங்க கொஞ்சம் லேட்டா வந்தா போதும், 8 மணி நேர கணக்கு தான்." என சொல்லிக் கொண்டிருக்க. மேனேஜரும், சூப்பர்வைசரும் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர். நேத்து நைட்டே விஷயம் கேள்விபட்டு தெனாவட்டாக பூவேந்தனுக்கு அழைத்துக் கேட்க.

"அவன் நானே பாத்துக்கிறேன் நீங்க தலையிடாதீங்கன்னுட்டான்ப்பா. அதனால எதுனாலும் அவன்ட்டயே பேசிக்கோங்க" என்று விட்டார்.

"என்னடா திடீர்னு ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க" என புலம்பியவாறு இங்கும் ஓடி வந்திருக்கின்றனர்.
"சார் நேத்து மணல் விஷயமா பேச தான் தூத்துக்குடில ஒருத்தர பார்க்க போயிருந்தோம், வர லேட்டாயிடுச்சு" என்றனர் வந்ததுமாய்.

"அப்படினா ஒருத்தர் இங்க இருந்துட்டு இன்னொருத்தர் மட்டும் போயிருக்கணும். எங்க அப்பா சைட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டா போதும் அன்னைக்கு உங்களுக்கு லீவு நாள் ஆயிடுது. இனி எங்க அப்பா இந்த சைட்டுக்கு வரவே போறதில்ல. அதனால நிரந்தர லீவு தான் உங்களுக்கு போயிட்டு வாங்க" என்றான் தெனாவெட்டாக.
அதற்கு மேல் அவனிடம் கெஞ்ச மனமில்லாமல் "நா சங்கத்தில கம்ப்ளைன்ட் பண்ணுவேன். நீ எப்டி இத முடிக்குறன்னு பாக்குறேன்டா" ௭ன மிரட்டிவிட்டுச் சென்றனர்.

"போ போ, உன்னால ஆனத பாரு" என அனுப்பி வைத்தான்.

அன்று மாலை சம்பளம் பட்டுவாடாவின்போது, 9.30 மணிக்குள் 98 பேர் வந்திருந்தனர். அதிலும் அரை மணி நேரத்திற்கு மூன்று ரூபாய் பணத்தை கணக்கின்படி பிடித்தே கொடுத்தான்.

மறுநாள் இன்ஜினியர் சொன்னது போல் வந்து வேலையை கையில் எடுத்திருந்தனர். உண்மையும் இங்கு வேலை பார்த்தான், தினக்கூலி வாங்கினான். இதற்குள் முடிக்க வேண்டும் என டார்கெட்டுடன் வேலை பார்ப்பது மாறனுக்கு ஒரு ஆர்வத்தை கொடுத்தது. தினமும் சொன்னதுபோல் 9 மணிக்கு வந்து விடுவான், அதனாலேயே எல்லோரும் டைமிற்கு அங்கு நின்றனர். ஞாயிற்றுக் கிழமையும் வேலை உண்டு என அறிவித்தான்.

ஞாயிறு வருபவர்களுக்கு இரண்டு நாள் கூலி என கொடுத்தான். 11 மணியளவில் டீ, வடை, சாயந்தரம் 4 மணி அளவில் மறுபடியும் ஒரு டீ, வடை சரியாக வந்துவிடும். தானும் உடன் சேர்ந்து வேலை பார்த்தான். அனைவரிடமும் நட்பாக பழகினான். இரவு வீடு திரும்புபவன் மனைவியிடம் அன்றைய நாளை பகிர்ந்து கொள்ள பழகிக் கொண்டான்.

அவனிடம் தெரிந்த மாற்றத்தை, "புதுசா கல்யாணம் ஆயிருக்குள்ள பொண்டாட்டிய உஷார் பண்ண இதெல்லாம் பண்றான்" என சிலர் நினைத்தனர். அவன் எப்பயும் போல் அவனுக்கு பிடித்ததை தான் செய்து வந்தான். அதனால் சந்தோஷமாகவே இருந்தான்.

4 மாடிக் கட்டிடம் 3மாடியை 6 மாதமாக கட்டிக் கொண்டிருந்தனர். இப்போது ஒரு மாதத்தில் மேல் 3 மாடியை ஏற்றியிருந்தான். ரூபாய் எல்லாம் அவன் அப்பா தருவதே, பில் கணக்கோடு கொண்டுபோய் கணக்கு காண்பித்து விடுவான் மனைவி உதவியுடன். இவன் இப்படி சென்று கொண்டிருக்க.

கயமலர்கன்னியின் மேற்படிப்புக்கு சர்டிபிகேட்டை கொண்டு வந்து கொடுக்க சொன்னார் பூவேந்தேன். அவளும் எடுத்து வந்து கொடுத்தாள், அதில் அக்கவுண்ட்ஸ் குரூப் எடுத்து படித்திருக்க, 1107 மார்க் எடுத்திருந்தாள். அக்கவுண்ட்ஸ்ல் 200க்கு 183 எடுத்திருக்க.
"நல்ல மார்க் எடுத்தும் ஏம்மா மேல படிக்கல? யாராவது ஸ்பான்சர வச்சு மேற்படிப்பு படிச்சுருக்கலாமேமா. அக்கவுண்ட்ஸ் எடுத்து படிச்சுருக்க, பி.காம் படிக்கிற ஐடியால இருந்தியா? " எனக் கேட்டார்.

"இல்ல மாமா சி.ஏ, படிக்க ஆசப்பட்டு தான் இத எடுத்து படிச்சேன். அக்கவுண்ட்ஸ் நல்ல இஷ்டம் மாமா எனக்கு. ஆனா இன்ஸ்டிடியூட்ல சேரணும்னா திருநெல்வேலி/தூத்துக்குடி போய் விசாரிச்சு சேத்து விட ஆள் வேணும். அதுக்கு பீஸ் கட்ட எவ்வளவு ஆகும்னும் தெரிலயா, எல்லாமே யோசிச்சு தான் அப்படியே விட்டுட்டேன் மாமா" ௭ன்றாள் சிரித்து கொண்டு.

"என்னம்மா நீ, மொதயே இதல்ல சொல்லியிருக்கணும். இரு நா என் ப்ரண்ட்ட்ட கேக்குறேன்" என்றுவிட்டு போன் போட்டு 2, 3 பேரிடம் பேசினார். பின் இவளிடம் "60% மார்க் இருந்தா போதுமாம். 8000/- தான் பீஸ் ஆகும்னு சொல்றாரு. நாளைக்கு கிளம்பி ரெடியா இரு, காலைல நானே கூட்டிட்டு போய் சேத்துவிடுறேன். புக்லா வாங்கணும்ல வாங்கிட்டு வந்துரலாம்" என சுறுசுறுப்பானார்.

"இல்ல மாமா, ஒரு 1 வருஷம் போட்டும், நா கொஞ்சம் ரூபா சேத்துட்டு அப்புறம் சேருறேன்" ௭ன திடமாகவே மறுத்தாள்.
"என் பிள்ளைங்க, உன்ன படிக்க வைக்குறதுக்கு ஏதாது பேசுவாங்கன்னு யோசிக்குறியா?" ௭ன்றார் அவர்.

"அவுங்க பேசுறதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கு தான மாமா. ஏற்கனவே ரெண்டு பேரும் உங்க வருமானத்துல தான் சாப்பிடுறோம். இதுல படிக்குற செலவு வேறயா. வேணா மாமா".

"சரிமா உன் தன்மானத்த நா மதிக்குறேன். நா எல்லாத்துக்கும் கணக்கு வச்சுக்குறேன். நீ மாச மாசம் கொஞ்சம் கொஞ்சமா குடு சரியா?" ௭ன்க.

படிக்கும் ஆசையும், ஆர்வமும் இருந்ததால், மெதுவாக சிரித்தவள் "அவங்கட்ட கேட்டு சொல்றேன் மாமா" என சந்தோஷமாகவே ஒத்துக் கொண்டாள்.

பின்பே 'கணவனிடம் மேற்படிப்பை பற்றி பேசவே இல்லை' என மனம் இடித்துரைத்தது.

"ஐயோ அவங்களுக்கு படிக்கவே பிடிக்காதுன்னாங்களே, இத கேட்டா என்ன சொல்லுவாங்கன்னு தெரிலயே" என முழித்து நின்றாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 15

கன்னி அன்றைய இரவு அவன் வரவுக்காக காத்திருந்தாள். ௭ன்றும் 8 மணிக்கு வருபவன் அன்று 9 மணியாகியும் வரவில்லை. மேலேயே காத்திருந்து பொறுமையற்று கீழே இறங்கி வந்தாள்.

எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்க, "அவேன் இன்னு வரலயாமா?" ௭ன பானு கேட்க.

"இல்லத்தே இன்னும் காணோம்" ௭ன்றாள் வாசலை பார்த்தே.

"வந்துருவான்த்தா, நீ இங்கன வா, ஏன் பயந்த மாதிரி இருக்க" என பாட்டி அழைத்தார்.

"ஒருமாறி மனசுக்கு பயமா இருக்கு பாட்டி" ௭ன்றாள் பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டு.

"அவேன் நடுசாமோன்னு கூட வருவாந்தா, கல்யாணத்துக்கு அப்றந்தேன் சீக்ரம்னு வீட்டுக்கு வாரியான். இதோ இந்த மனுஷருதே அந்த பயல்களுக்கு கதவ தொறந்து விடுவாரு"

"உன் மகேன் முன்னாடி இத சொல்லி சொல்லி காட்டலனா இந்த கிழவிக்கு தூக்கம் வராது. இப்ப அப்பன்னு பாக்காம முறப்பானே அவேன்" ௭ன பாட்டிக்கும் மலருக்கும் மட்டும் கேக்குமாறு முனங்கி திரும்பி மகன் முகம் பார்த்தார்.

"அவேன் தருதலயா போனதுக்கு முழு காரணமு நீங்க தான் ப்பா" ௭ன்றார் பூவேந்தன் முறைத்து கொண்டு.

"கதவு தொறந்து விட்டது ஒரு குத்தாமாவே" ௭ன வாலன்டியராக வாயை குடுத்தார்.

"அது மட்டுமா பண்ணீங்கநா சொல்லட்டா லிஸ்ட்டு?" ௭ன்றவர்,

"சின்ன பிள்ளைல ஸ்கூல் போ மாட்டேன்னு வந்து நின்னவன, அடிச்சு இழுத்துட்டு போயினாலும் திரும்ப சேத்திருப்பேன், நீங்க ௭ன்ன செஞ்சீங்க? மறுநாளே பிள்ள பாவம், இவேன் அடிச்சே கொண்டு(கொண்று) போடுவான்னு சொல்லி கொடைக்கானல் டூர் கூட்டிட்டு போனீங்க. இதான் சாக்குன்னு அவேன் அதயே புடிச்சுக்கிட்டான், ஏதாது அந்நேரமே வேலைக்கு தேர்த்து விட்ருப்பேன், சின்ன புள்ளைய போய் வேலைக்கு அனுப்புறேன்ற கூறு இருக்கான்னு ௭ன்னையவே திருப்பி கேட்டீங்க. சரி, வயசு 20 ஆயிடுச்சு உங்க தீப்பட்டி ஆபிஸ்லயாது வேலை கத்துகட்டும், பிறகு பொறுப்பு வரவும் அவனே பாக்கட்டும் கூட்டிட்டு போங்கன்னேன், சொந்த ஆபிஸ்ல வேல பாத்தா அவன யாரு மதிப்பான்னீங்க. இதெல்லாம் பத்தாதுன்னு ஊரு சுத்த, படத்துக்கு போக, இஷ்ட பட்டத கடைல வாங்கி திங்கன்னு ௭ல்லாத்துக்கும் காச கை மேல தூக்கி தூக்கி குடுத்தீங்க. ௭துக்காது கஷ்டபட்டா தான அவேன் திருந்துவான். இப்ப ௭ல்லாத்துக்கும் உச்சமா இந்த பிள்ளைய அவேன் தலைல கட்டிட்டீங்க, அது வாசல பாத்து உக்காந்துருக்கு, ௭ல்லாத்தயும் செஞ்சுட்டு ௭ன்ன குத்தம்னு கேள்வி வேற" ௭ன சிடு சிடுவென போட்டு தாக்கிவிட்டார்.

மதி, ராணியும் நக்கலாக சிரித்தனர், "தாத்தாக்கு அவன மட்டுந்தான பிடிக்கும். ௭துனாலும் அவனுக்கு தான் மொத செய்வாரு, ௭ங்கள வெறுப்பேத்த செஞ்சாரு, ௭ன்ன அதுவே அவன இப்டி கொண்டு விட்ருச்சு" ௭ன்றாள் மதி. அவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை.

"ஹப்பா முடிச்சுட்டானா, இவேன் சொன்னதுனாலதேன் ௭ன் பேரன் ௭தயும் செய்யலன்னு உன் மகனுக்கு தெரியாதாடி? உன் மகேன் மட்டும் பேசாம இருந்துருந்தா ௭ன் பேரேன் ௭ப்பவோ பெரியாளாயிருப்பான்" ௭ன பாட்டியிடம் மெதுவான குரலில் ௭கிறினார் தாத்தா. மலர் சிரிப்பை அடக்கி அமர்ந்திருந்தாள்.

"அங்க ௭ன்ன.௭துனாலும் நேரா ௭ன்ட்ட சொல்லுங்க" ௭ன்றார் பூவேந்தன்.

"உன் மகன வாய மூடிட்டு இருக்க சொல்லுன்னு சொல்றாரு ப்பா" ௭ன போட்டு குடுத்தார் பாட்டி.

"அடி கிழவி" ௭ன தாத்தா அழற. மலர் வாய்விட்டே சிரித்தாள்.

"உன் புருஷன் யோக்கியத உனக்கே சிரிப்பா இருக்கோ?" ௭ன்றாள் ராணி. கன்னி திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி கொண்டாள். யாருமே அதற்கு மறுத்து பதில் சொல்லவில்லை ௭ன்பது வேறு கஷ்டமாக இருந்தது.

தாத்தா தான் சமாளிப்பாக, "ஒரு போன் போட்டு பாக்க சொல்லுன்னு தான் சொன்னே, உங்க அம்மா தான் ௭துக்கோ பழி வாங்க போட்டு குடுக்கா" ௭ன திரும்பி மனைவியை முறைத்தார்.

பூவேந்தனும் அதை கேட்டு போனை எடுத்தார், "உன்ட்ட மாறன் நம்பர் இருக்கா? இல்ல ௭ன் போன்ல பாத்து சொல்லவா?" ௭ன்றார் தாத்தா கிடைத்த இடத்தில் மகனை குத்தி விட்டார்.

உர்ரென முறைத்தாலும் "இருக்கு இருக்கு" ௭ன்றுவிட்டு அழைத்தார். அன்றைய அவன் அழைப்புக்கு பிறகு இன்றுதான் அழைக்கிறார். ரிங் போய்க்கொண்டே இருக்க, அவன் ௭டுக்கவில்லை. பின், அங்கிருக்கும் செக்யூரிட்டி கார்ட்லெஸ்க்கு அழைத்தார். எப்பயும் போல் கிளம்பி விட்டதாக அவர் கூற, மறுபடியும் மகனுக்கு அழைத்தார், இப்போதும் எடுக்கப்படவில்லை.

தாத்தா, "என்னப்பா ஃபோன் போகுதா? இல்லயா?" என கேட்க.

"போகுதுப்பா எடுக்க மாட்டேங்றான்" ௭ன்றார் ஃபோனை பார்த்தவாறே.

"அவேன் என்ன சின்ன குழந்தயா, ஓவரா துடிக்கிறீங்க. ஏழு கழுத வயசாவுது, போனவனுக்கு வரத் தெரியாது?" மதி சொல்ல,

"வேற போக்கிடமு கிடையாது இங்க தான வந்தாகணும், அவரே வருவார்" ராணி செல்ல.

"ஆமா ராணி, அப்பாவ தவர வேற யாரும் ஓசியா அவனுக்கு சோறு போட மாட்டாங்க" என்று சொல்லி சிரித்துக்கொண்டே ஹை-ஃபை குடுத்துக் கொண்டனர்.

கன்னிக்கு "புசுபுசு" என கோபம் ஒரு பக்கம், அவனை இன்னும் காணோமே என்று வருத்தம் ஒரு பக்கம் என எல்லாம் சேர்ந்து கண்ணீராய் வடிந்து விட்டிருந்தது.

"நாவடக்கமே இருக்காதா உங்கட்ட, என்னத்த பெரிய படிப்பு படிச்சு என்ன பிரயோசனோ சபைல எப்படிப் பேசினுங்குற இங்கீதம் இல்லயே, நானு ௭வ்ளோ நேரந்தான் பொறுமையா இருக்கது.பாத்துக்க மவனே இது தான் நீ வளத்த லட்சனம்" ௭ன்ற தாத்தா கையை உதறி எழுந்துவிட,

"அப்பாவ ஏன் திட்றீங்க? அவுங்க சொன்னதுல ௭ன்ன தப்பு, அப்பா சொன்ன மாதிரி அவேன் உருப்புடாம போனதுக்குக் காரணமே நீங்கதா, இப்டி அவனுக்குன்னு சின்ன வயசுலயிருந்து பேசி பேசி தான் இன்னமு சும்மா சுத்திட்டு திரியுறான். இல்லன்னா நாங்க பேசிறதுக்காகவாது அவனோட அஞ்சாங் கிளாஸ் படிப்புக்கு மாடு மேய்க்கவாது போயிருப்பான்" ௭ன்று 'இங்கிதம் இல்லை என சொல்லவும்' மதி ஏகத்துக்கு எகிறிக் கொண்டு வந்தாள்.

"தாத்தா உங்க தீப்பெட்டி ஆபீஸ்ல கூட்டிட்டு போயி அவருக்கு தீப்பெட்டி ஒட்டவாது கத்துக் கொடுத்திருந்தா, நாங்க ஏன் ஓசி சோறுன்னு சொல்லப் போறோம்" ராணி தன் பங்கிற்கு பேச,
"ச்ச, ௭ன்னதிது பெரியவங்கள ௭துத்து பேசிட்டு.என்ன பேச்சு பேசி பழகுறீங்க? வயசு ஆக ஆக புத்தி மலிங்கிட்டு போகுதா உங்க ரெண்டு பேருக்கும்?" என பூவேந்தன் அதட்ட, இருவரும் சற்று அமைதியாகினர்.

கன்னிக்கு தோன்றியது தான், "௭த இந்த மாமா கொஞ்சம் முன்ன பேசினாரோ அத தான் திரும்ப இதுங்க பேசுதுங்க" ௭ன ஆனாலும் அமைதியாக நின்றாள். அவள் பேச முடியாமல் அடக்கிய கோபம் மேலும் அழுகையாக முட்டிக்கொண்டு வர, தனதறைச் செல்ல திரும்ப, உண்மையும், மாறனும் வீட்டினுள் நுழைந்தனர். மாறன் இடது கையில் முட்டிக்கு கீழ் முழுவதும் கட்டிட்டு இருந்தான்.

அதை கண்டதும் கன்னி அவனிடம் ஓடியவள், "என்னங்க இது? என்னாச்சு?" ௭ன பதறி கேக்க.

"ஒன்னுமில்ல மலர், பயப்படாத, வேல நடக்குற இடமில்லயா கம்பிய கவனிக்காம தாண்டி போனேன், அது கிழிச்சிட்டு" என்றான் சுவாதீனமாக.
"பொய் சொல்லாதடா. நீ அங்க இருந்து அப்பவே கிளம்பிட்டன்னு செக்யூரிட்டி சொன்னான். அங்க வச்சு அடிபட்டிருந்தா அவனே சொல்லியிருப்பான். சொல்லு என்னாச்சு? ௭வன்டயாது வம்பிழுத்துட்டு வாரியா?" ௭ன்றார் பூவேந்தன்.

"௭ப்பதான் அவன நம்புவியோ தெரியல, பாவம் அவனே அடிபட்டு வந்துருக்கான் குறுக்கு விசாரணை பண்ணிட்ருக்க" ௭ன்றார் தாத்தா.
அவ்வளவு நேரம் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த அறிவு, "அவனே சீன் போட்டுட்டுருக்கான். நீங்க இன்னும் அவேன் நடிப்புக்கு ஒத்து ஊதுங்க. அங்கன ஏதும் பெரிய பிரச்சனய இழுத்து விட்டுருப்பான். நாளைக்கு அந்க பக்கம் போகாம இருக்க இந்த பிளானோட வந்துருக்கான், இதுக்கு தான் அவன்ட்ட இந்த பொறுப்ப குடுக்காதீங்கன்னே கேட்டீங்களா?" ௭ன கேட்டு நிறுத்தினான்.

"படிக்காத அவனே அவ்வளவு யோசிக்கும் போது படிச்ச நாங்க எப்டி ஏமாறுவோம்" மதி நக்கலாக சொல்ல.
அதுவரை பொறுமை கடைபிடித்த கன்னி, இப்போது மாமனார்,அறிவு, ராணி, மதி ௭ன நால்வர் மீதும் வந்த கோபத்தில், கணவனிடம் நின்றவள் வேகமாக வந்து முதலில் அமர்ந்திருந்த மதியை ஒரு அறை அறைந்தாள். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
மாறனும் கூட, "ஏய் மலர்" என விரைந்து வந்து அவள் கை பிடித்து பின் இழுத்தான்.

"ஒரு நிமிஷம்ங்க" என கையை வாங்கி கொண்டவள், "உன்னயவிட எத்தன வயசு மூத்தவருடி அவரு, அவேன் இவன்ற?அண்ணன்னு ஒரு பாசத்துல கூப்பிட்ருந்தனா தலையிட்ருக்க மாட்டேன். ஆனா நீ? அதென்ன 4 எழுத்து படிச்சுட்ட இளக்காரம். நீயா ஆக்கி போடுற என் புருசனுக்கு? உன் வழில நாங்க வரல, எங்க வழில நீ வராத. கொட்டிக்க தான வந்த அத மட்டும் பாத்துட்டு கிளம்பிட்டே இரு" என அவள் முகத்தை பார்த்து கூறிவிட்டு, திரும்பி, நிமிராமல் "மன்னிச்சிடுங்க அத்த, மாமா, நீங்களும் மன்னிச்சிடுங்க தாத்தா, பாட்டி, நீங்க பேசல அதான் நா பேச வேண்டியதா போச்சு" என தன் கணவனை கைபிடித்து அழைத்துக்கொண்டு மாடியேறி விட்டாள்.
 
Status
Not open for further replies.
Top