எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிசப்த காதல் கதை திரி

priya pandees

Moderator
அத்தியாயம் 1
திருச்செந்தூர் ஆண்டவனே முருகையா
திருப்பங்கள் அருள்பவனே குமரையா
சண்முகனே வேலவனே கந்தையா
சம்கார நாயகனே சுப்பையா
என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஓடிக்கொண்டிருக்க, திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்தவர்கள் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் என பக்தி மயமாக உலாத்திக் கொண்டிருந்தனர்.
அந்த மாலை வேலையிலும் கடலில் சிறுவர்களும், பெரியவர்களும் குளித்துக் கொண்டிருந்தனர், அவரவருக்கான அவரவர் வேண்டுதல்களுடன் முருகனிடம் வந்திருந்தவர்களும் அதில் அடக்கம்.
இதெல்லாமே கண்ணில் பட்டாலும், கருத்தில் எடுக்காமல், இல்லையெனில் எடுக்கமுடியாமல் தன்னுள் பல சிந்தனைகளோடு அமர்ந்திருந்தாள் ப்ரகதீஸ்வரி.
பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி, அவள் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பது போல் தான் தோன்றும், தெரியும்.
ஆனால் அவளோ, மனதினுள் அவள் கணவனை, கண் கண்ட தெய்வத்தை, எண்ணையே ஊற்றாமல் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள். மனம் முழுவதும் அவன்மேல் அவ்வளவு கடுப்பு, '௭னக்கு நல்லா வேணும், இதும் வேணும் இன்னமு வேணும். அவர பத்தி தெரிஞ்சுமே ரொம்ப எதிர்பாத்தீல? உனக்கு நல்லா வேணும்டி. அஞ்சு வருஷமா நடக்காதது தான் இந்த வருஷம் நடந்துரும்ன்னு மட்டி கணக்கா உக்காந்திருந்தியே!! நீ எவ்ளோ பெரிய ஃபூல்'டி(fool)' அவளால் இப்போது நடந்த விஷயத்தை இதற்குமுன் எடுத்து கொண்டதை போல் ௭ளிதாக ௭டுத்து கடந்து செல்ல முடியவில்லை.
'ஐயோ… இந்த தடவ நா வாய்விட்டே கேட்டனே, அப்டி கூட என்னை நினைக்கலயா அவரு? அப்றம் என்ன வாழ்க்கை வாழ்றேன் நா? இத்தன நாள் பொறுத்து போனமாதிரி இந்த டைம் இருக்க கூடாதுடி ப்ரகி., உன் கோவத்த பாத்தே ஆகணும் அந்த மனுஷன். எப்பயும் என்ன இன்சல்ட் பண்றதே வேலையா வச்சிருக்காரு. ஒவ்வொரு தடவையும், நம்பி எதிர்பார்த்து ஏமாந்து போறதே ௭ன் பொழப்பாயிட்டு. இவரு பெரியதுரை, வீட்டுக்கு வாரேன்னு மெசேஜ் போட்டவுடனே நாங்க உள்ளேன் ஐயான்னு டைம்க்கு ஆஜராகிடணும். அப்படி அவர் என்ன செஞ்சாலும் நா போய் தாங்குறதனால தான என்ன பத்தின யோசனை இல்ல? இனி யோசிக்க வைக்கிறேன்!', ௭ன இருந்த கடுப்பில் முடிவெடித்துக் கொண்டாள். செயல்படுமா ௭ன்பது அவன் முன் சென்று நின்றபின் தான் தெரியும்.
மறுபடியும் வறுத்தெடுக்க தொடங்கினாள் 'அவரு நினச்சிருந்தா, ஒருநா, அது கூட வேணாம் ஒரு, ஒருமணிநேரம் பெர்மிசன் போட்டு வந்துட்டு போயிருக்கலாமே. எவ்வளவு ஆசையா கல்யாண புடவல்லாம் கட்டி ரெடியாகி, இவர எதிர்பார்த்து உக்காந்திருந்தேன். எல்லோரு முன்னையும் எவ்வளவு அசிங்கமா போச்சு' என நினைக்கையில் கண்கள் வேறு கலங்கி பார்வையை மறைக்க, சுற்றுப்புறத்தை உணர்ந்து அதை உள்ளிழுத்தாள்.
பின் சற்று நிதானித்து, மணியை திருப்பி பார்த்தாள், அது 7.30 என காட்ட, நன்றாக இருட்டி விட்டது தெரிய, ‘இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பார். இந்த மாமியார் லிஸ்ட் போட்டு கம்ப்ளைன்ட் லெட்டர சார் கிட்ட ஒப்பிசிட்டுருக்கும். திட்டு வாங்குறதுன்னு ஆகிட்டு இன்னும் கொஞ்சம் லேட்டா போயே திட்டு வாங்குவோம்' ௭ன நினைத்துக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் எண்ணம், கணவன் தன்னை ஒவ்வொரு முறையும் உதாசீனப்படுத்துவதை தான் எடுத்து வந்து முன் நின்றது.
ப்ரகதீஸ்வரி, எவ்வளவு ஆசையோடும், கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் இந்த கல்யாண வாழ்க்கைக்குள் நுழைந்தாள் என்பது இன்றுவரை அவள் மட்டுமே அறிந்த ரகசியமாக உள்ளது. அதில் ஒன்று கூட நிறைவேறவில்லை என்பது தான் கோபமாகி, பின் கண்ணீராகி, விரக்தியாகி, இப்போது வெறுப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அது தான் அவளின் தற்போதைய பயமே, “௭ன் வாழ்க்கை இப்டியே போயிடுமோ” என பயப்பட தொடங்கியிருந்தாள். தன் மனதை பகிர்ந்துகொண்டு ஆறுதலோ, அறிவுரையோ பெறவும் ஆட்கள் இல்லை. மொத்தமும் தன் மனதுக்குள் மட்டுமே என பூட்டி வைத்திருக்கிறாள். அது ௭வ்வாறு வெளிபடுமோ ௭ன்ற பயம் வர தொடங்கி இருந்தது.
அவள் துணையாக, நண்பனாக, காதலனாக, அம்மாவாக என எல்லாவற்றையும் எதிர்பார்த்தது கணவனிடம் மட்டுமே. அது நடக்காததால் வாழ்க்கையே முடிந்து விட்டதாக எண்ணி இப்படி வந்து அமர்ந்து இருக்கிறாள்.
ஆயிரத்து நூற்று எண்பத்தெட்டாவது முறையாக “நினைப்பியா? அவர் காக்க காக்க சூர்யா, நீ அதுல வர்ற ஜோதிகான்னு இனி நினைப்பியாடி. லூசு லூசு ஆச படலாம், பேராச படலாமா? அதான் இப்டி வந்து புலம்புற” என தன்னையே கேட்டு வெளிப்படையாகவே முன் நெற்றியில் அறைந்து கொள்ள.
“எதுக்குமா நீயே உன்ன அடிச்சிக்குற. தப்பு பண்ணிட்டியா?” என ஓடி வந்து அவள் மேல் விழுந்தான் அவளின் நான்கு வயது மகன் கர்ணன், அவளின் முழுநேர ஆறுதல். அவ்வளவு நேரமும் அவளை உரசி கொண்டமர்ந்து மண்ணில் விளையாடி களைத்து போயிருந்தான்.
“எதுக்கு அடிச்ச, வலிச்சும்ல" ௭ன சொல்லி, அவள் நெற்றியை வேறு கையிலிருந்த மண்ணோடு தேய்த்து விட்டான்.
“மூஞ்செல்லாம் மண்ணாகுதுடா கர்ணா, கொண்டா கைய” என இழுத்து புடவை முந்தானையால் துடைத்துவிட்டாள். வந்து இரண்டு மணி நேர இந்த மண் விளையாட்டிலும், அவளை தொந்தரவு செய்யாத, எதையும் காட்டி வாங்கித்தா என கேட்காத அறிவு குழந்தை அவன். யார் யாருக்கோ பயந்து பிள்ளையின் ஆசைகளையும் அடக்கி வைக்க தொடங்கியிருக்கிறாள். அது இன்னுமே அதிக வேதனையை தந்தது.
ஒரு பெரு மூச்சுடன், கையை உதறிக் கொண்டு, “வீட்டுக்கு போலாமா குட்டி? இருட்டிருச்சி?” என ௭ழ முயன்று கொண்டு கேட்கவும்,
“ஓகே மா” என அவள் மேலிருந்து எழுந்து நின்று கொண்டான் கர்ணன்.
இன்னைக்கு தான் break the rules முடிவை ௭டுத்திருந்தாளே, அதனால் “ஏதாது சாப்ட்டு போவமா குட்டி?” என தானும் புடவையை உதறியவாறு எழுந்து மகன் கையை பிடித்துக்கொண்டு கேட்க,
“நீ அடிப்ப” என்றான் அவன் ௭ன்றோ வாங்கியதை வைத்து.
“அடம் பண்ணா தான் அம்மா அடிப்பேன். இன்னைக்கு நானே தான உன்ட்ட கேக்றேன், அதனால அடிக்க மாட்டேன். அன்னைக்கு அடிச்சதுக்கும் சாரி கேட்டேன்ல டா” என்றாள்.
அதற்கு ஒரு தலையசைப்புடன், பெருந்தன்மையான ஒரு “ஓகே ம்மா, போலாம்”வை கொடுத்துவிட்டு, பெரிய அப்பளம் பொறிக்கும் கடைக்கு அவளை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு ஓடினான்.
அந்த கடை முன் சென்று கை காட்டவும், “கடையெல்லாம் பார்த்து வச்சுட்டு தான் கேட்காம இருந்துருக்கியா நீ” என மீண்டும் கண்கலங்கும் போலிருந்தது அவளுக்கு.
அவனோ குஷியில் குதித்துக் கொண்டிருந்தான். அதில் கண்ணீரை அடக்கி சிரித்தவள், கடை போர்டை பார்த்து விட்டு, “சரி வாங்கலாம், ஆடாம நில்லு. இங்க பஜ்ஜியா? அப்பளமா? எது வேணும் உனக்கு” என்றாள் கடையையும் ஆராய்ந்து கொண்டு.
“அப்பளம் பெடிய அப்பளம் வேணும்.....வேணும்” என மீண்டும் குதிக்க,
“குதிக்காம நில்லு வாங்கித்தரேன்” என்றவள், “ஒரு அப்பளம், பொடி லேசா போட்டு கொடுங்க” என்றவள் அங்கு ஓரத்திலிருந்த தண்ணீர் குடத்திலிருந்து தண்ணீர் ௭டுத்து இருவர் கையையும் கழுவினாள்.
அவர்கள் போட்டு தரவும், இவள் வாங்கி மகனை நோக்கி குனிய, அவனுக்கு முகத்தில் அப்படி ஒரு பரவசம். ‘பாவம் எவ்வளவு ஏங்க விட்டுருக்கேன் என் பையன’ என தோன்றவும், ஒரு கையில் அப்பளத்தோடு, மறு கையால் மகனை இழுத்து முத்தினாள்.
“ம்மா அப்பளம் நொறுங்கும்” என அவன் கவனம் அதில் தான்.
இப்போது கை பொறுக்கும் சூடு வரவும், கொஞ்சமாக நொறுக்கி எடுத்து அவன் கையில் கொடுக்க ஆசையும், ஆர்வமுமாக சாப்பிட்டான்.
அவனையே பார்த்திருந்தவள், 'என்னோட ஆசைகள் நடக்காம போறதால உன்னோட சின்ன சின்ன ஆசைகளையும் நானே அடக்றேனா?' என பெரும் மூச்செரிந்தாள். லேசாக தூவப்பட்ட பொடியானாலும் அவனுக்கு அது உறைக்கவே, உஸ் தஸ்ஸென வாயை குவித்தாலும் கையில் உள்ளது காலியாக ஆக, அடுத்ததற்கு நீட்டினான்.
முக்கால்வாசி காலியான பின்பே தாயின் நினைப்பு வந்தது போலும், “அம்மா நீ சாப்பிடு”,
“உனக்கு போதுன்னப்புறம் தான் நா கண்ணுக்கு தெரிறேன்ல” என பொய்யாக அவள் கேக்கவுமே.
“இல்ல இல்லம்மா இந்தா..” என தன் கையில் வைத்திருந்ததோடு அவள் வாயில் கொடுக்க எக்கினான்.
“வேணாம் போ” என அவள் முகம் திருப்பவும்,
“ம்மா சாரி” என கையில் வைத்திருந்ததோடு அவளின் இடுப்பை கட்டிக்கொண்டான்.
“அச்சோ கையயும் எம்மேலயே தொடச்டியா? கள்ளன்டா நீ” என அவன் தலை கலைக்கவும், நிமிர்ந்து சிரித்தான் அவன்.

“சரி இந்தா சாப்டு, வீட்டுக்கு போவோம்” என்றதும் தலையசைத்து மறுத்தான். அவனுக்கு அதற்கு மேல் இறங்காது என புரிந்து தன் வாயில் போட்டு பேக்கில் இருந்து வாட்டர் பாட்டில் எடுத்து மறுபடியும் இருவர் கையையும், கழுவி விட்டு. அவனுக்கு குடிக்கக் கொடுத்து தானும் குடித்து விட்டே சுற்றுப்புறத்தை பார்க்க, பலர் அவர்களை தான் சிரித்தவாறு பார்த்திருந்தனர். அப்போதுதான் ரோடு என்பது ஞாபகம் வந்து மகனை வேகமாக கிளப்பிக் கொண்டு ஸ்கூட்டி நிற்கும் இடம் அடைந்து, அவனை முன் தூக்கி நிறுத்தி வண்டியை வீட்டை நோக்கி வேகமெடுத்தாள்.
 
Last edited:

priya pandees

Moderator

அத்தியாயம் 2
ப்ரகி கர்ணனோடு கோவில் தெருவிலிருந்து வெளிவந்து பஸ் ஸ்டாண்டை கடந்து அவர்கள் வீடு இருக்கும் தெருவிற்குள் வண்டியை திருப்பினாள். தூரத்திலேயே அவர்கள் வீட்டு வாசலில் நின்ற பஜாஜ் பல்சர் பார்வையில் பட, அது அவளுக்கு ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது.
மகனும் அதை கண்டு விட்டான் போலும், "ஐ அப்பா பைக்... ம்மா ப்பா பைக். ப்பாவுக்கு லீவு", வண்டியில் அவள் கைக்குள் நின்றே குதித்து கீழே பாய முற்பட.
"shh... அம்மா ஸ்லிப் ஆகிடுவேன். பின்ன 2 பேரும் கீழே விழுந்துருவோம். வீட்டுக்கு தான போறோம், போய் பாத்துக்கலாம்" என லேசாக அரட்டவும், அவன் ஒழுங்காக நிற்க, வீடும் வந்திருந்தது.
அவள் வண்டியை ஆஃப் செய்யாமல் சைடு ஸ்டாண்ட் போடவும், இறங்கி ஓடி முன் கேட்டில் நின்றான் அவன். இவள் வண்டியை உள்ளே விடுவதற்காக மேல் கொண்டியை நீக்கி நன்றாக திறந்து வைக்கவும், "ப்ப்பா..." என கத்திக்கொண்டு வீட்டினுள் ஓடியிருந்தான் கர்ணன்.
ப்ரகி நிதானமாகவே வண்டியை நிறுத்திவிட்டு, கேட்டை மீண்டும் சாத்திவிட்டு, நடுங்கும் கைகளை ஹாண்ட்பேக்கை பிடித்து சமாளித்து உள் சென்றாள். முதலில் வராண்டா, அதில் சோபா, சேர் எல்லாம் சற்று முன் வரை மாமனார் அமர்ந்திருந்த அடையாளங்களோடு இப்போது காலியாக இருந்தது.
அடுத்ததாக ஹால், சீரியல் முன் அமர்ந்திருந்த மாமியார்., திரும்பி அவளை முறைப்பது ஓரக்கண்ணில் தெரிந்தது. மறுபக்கம் அந்த ஹாலில் ஒரு மூலையிலிருந்த கிச்சன் வாசலின் முன்னிருந்த சாப்பாட்டு மேசையில் கைகளை ஊன்றி, கன்னம் தாங்கி, சேரில் ஒருபக்கமாக, இவளை எதிர்பார்த்தே வாசலை நோக்கி கால்மேல் காலிட்டு, மடியில் கர்ணனையும் அமர்த்திக்கொண்டு அவளையே இமைக்காமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் கலிதீர்த்தவன்., ப்ரகதீஸ்வரியின் கணவன்.
தன்னையே குறுகுறுவென பார்த்திருந்த கணவனை ஒரு நொடி பார்த்தவள், "கர்ணா வா, மண்ணோட அப்பா மேல ஏறி உக்காந்துருக்க. கை, கால் கழுவிட்டு டிரஸ் மாத்தலாம். அப்பாவும் மாத்தணும்ல" என்றாள். இவளை ௭திர்பார்த்தே, அவன் போலீஸ் யூனிபார்மை கூட மாத்தியிருக்கவில்லை.
'இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. வந்து ௭வ்ளோ நேரமானாலும் நா வார வரைக்கும் அசையாம இப்டி உட்காந்துருக்க மட்டும் முடியும். இது எல்லாத்துக்கும் மட்டும் நா வேணும், ஆனா நா ஆசையா ஒன்னு கேட்டுறக்கூடாது, செய்ய மனசு வராது' என மனதில் தான் எப்பயும் போல் நினைத்துக் கொண்டாள்.
கர்ணன் அவள் பேச்சை கேட்டது போலவே தெரியவில்லை. அவன் அப்பாவிடம் தான் எதையோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தான். தகப்பனும் கர்ணன் தலையை தடவி விட்டவாறே உம் கொட்டிக் கொண்டிருந்தாலும், பார்வை மொத்தமும் மனைவியிடம் தான்.
நாடகத்தில் விளம்பரம் போடவும், "இன்னும் எம்புட்டு நேரோ இப்டியே நிக்குததா உத்தேசம்? எம்புள்ள நீ வரட்டும்னு தண்ணி கூட பல்லுல படாம காத்துக்கடக்கான். நீ என்னன்னா தெனவெடுத்தவ கணக்கா ஊர சுத்திட்டு வர்ற. இன்னைக்கு எம் புள்ள வருவான்னு தெரிஞ்சுதான கோயில போய் உக்காந்துருந்துட்டு வார. வந்ததும் அவனுக்கு என்ன வேணும்னு கேட்காம இப்டியே நிக்கியே என்ன?" என்றார் அரட்டலாக.
அவரை ஒரு பார்வை பார்த்தவள், மகனையும் பார்த்தாள். 'இவனுக்கும் அவன் அப்பாவ பாத்துட்டா நா வேணாம் போல' என நினைத்துக் கண்ணை மூடித்திறந்து, தன்னை நிதானப் படுத்தியவள் விருட்டென அவர்கள் அறைக்குள் சென்று விட்டாள்.
"எல்லா நீ கொடுக்கிற எடந்தேன் இப்டி அவள வெடுக்குன்னு திரும்பி போக வைக்குது. கொஞ்சமாது மாமியாருன்ற மரியாத இருக்கான்னு பாரு. இதுக்குத்தேன் அவள வேலைக்குலா அனுப்பாதன்னு சொல்லுதேன். பேசாம வீட்ல கடந்தா எனக்கு அடங்கி இருப்பாள்ல?" என மகனிடமும் பொறிய.
இதற்கும் அவன் எந்த பதிலும் சொல்லவில்லை, மகன் எப்பவும் இப்படித்தானே என தெரிந்தவர், பேரனின் காலிலிருக்கும் மண்ணை வைத்து, கோவில் சென்று வந்திருக்கின்றனர் என புரிந்து, "எதுக்குடா இம்புட்டு நேரம்? கோயில்ல கூட்டமாவா இருந்துச்சு?" என கேட்க,
"நா சொன்னா நீ அம்மாவ திட்டுவ, அம்மா அடிப்பா, அதனால சொல்ல மாட்டேன்" தெளிவாகக் கூறினான் கர்ணன். வெகுநாள் கழித்து தாய் அப்பளம் வாங்கி கொடுத்து இருக்க, பாட்டி அதை மறுபடியும் இல்லாமல் செய்து விடுவார்கள் என்ற பயம் அவனுக்கு.
கர்ணனின் பதிலில் புருவசுழிப்புடன் குனிந்து மகனை பார்த்து விட்டு, தாயை பார்த்தான் கலிதீர்த்தவன்.
அந்த பார்வையில் மிரண்டவர், "பாத்தியா தீர்த்தா, எப்புடி புள்ள மனச கலைச்சுவிட்டுருக்கா பாத்தியா? ஆத்தமாட்டாம இதோ இப்ப பேசுறேனே அதுமாறி இரண்டு வார்த்த பேசுவேன். அத புள்ளகிட்ட எப்டி சொல்லி குடுத்திருக்கா பாரு?" என படபடவென முந்திக்கொண்டு அவன் கேட்கும் முன் பேச வேண்டுமேயென பேசினார்.
எல்லாவற்றையும் உள்ளறையில் இருந்து கேட்டவளுக்கு, வாய் துறுதுறுவென தான் வந்தது. ஆனாலும் கணவன் முன் பேசி விடும் தைரியம் மட்டும் வரவில்லை. கோவிலில் இருந்து வந்ததால், குளிக்காமல் கை, கால், முகம் மட்டும் கழுவி விட்டு சுடிதாருக்கு மாறினாள். அவன் இருக்கையில் அவளுக்கு எப்போதுமே புடவைதான். சுடிதார், நைட்டி எல்லாம் அணிய மாட்டாள். அவனுக்கு புடவை பிடிக்கும் என்பது கூட அவன் பார்வையில் இவள் புரிந்து கொண்டவை தான்.
கல்யாணமான புதிதில், ஒரு நாள் இவள் சுடிதாரிலிருந்ததை பார்த்து விட்டு, வேகமாக நெருங்கி இடுப்போடு இழுத்து, நெருக்கி அணைத்தவன், "இத ஏன்டி போட்ட?" என காட்டமாக கேட்டிருந்தான். அதன்பின் அவன் ஊரில் இல்லாத போது மட்டுமே சுடிதார்., படுக்கும் போது மட்டுமே நைட்டி.
ஆனால் இன்று, வீம்புக்கென்றே அவன் தன்னருகில் வரக்கூடாதென்றே சுடிதாரை மாட்டிக் கொண்டு, பின்னியிருந்த முடியை தளர்த்தி, சுருட்டி கிளிப்பில் அடக்கிவிட்டு, செய்யக்கூடாதென நினைத்தும் முடியாமல் அவனுக்கான மாற்றுடை எடுத்து கட்டிலின் மேல் வைத்தாள். "இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு போனாலும் இருந்த இடத்த விட்டு அசையாம உட்கார்ந்துருப்பாங்க" என முனங்கிக் கொண்டே தான் அறையை விட்டு வெளியே வந்தாள்.
அவளையும், அவள் சுடிதாரையும் பார்த்தவன், வந்த சிரிப்பை நாடியை தடவி விட்டவாறு மறைத்தான். உண்மையாகவே அவள் நடவடிக்கை அவனுக்கு சிரிப்பை தான் தந்தது. முதல் முறையாக அவளின் கோபத்தை வெளிப்படையாக காட்டுகிறாள். அவனுக்கு அது ரசனையாக தான் இருந்தது. ௭ப்போதும் போல் வெளியே தெரியாமலேயே ரசித்தான்.
வெளியே வந்தவளிடம், "ஏட்டி புள்ளைட்ட இப்டித்தான் என்ன பத்தி தப்பு தப்பா சொல்லி குடுக்கியோ? யார்க்கனவே உன் ஓரகத்தி அப்டி இப்டி சொல்லி குடுத்துதேன் மூத்தவன் பேரப்பிள்ளைகள என்ட்ட அண்டவிடாம பண்ணிட்டா. இப்ப நீ ஆரம்பிக்கியோ? இதுக்குத்தேன் கடலுக்கு கடலுக்கு போறிகளோ அம்மாவும் புள்ளையும்?" எனப் பேச.
"டீ குடிக்கீகளா த்த? இல்ல அவுகளுக்கு மட்டும் போடவா?" என்றாள் அவள், அவர் பேசியதை விடுத்து.
"ஏன் இன்னைக்கு என் மவேன் முன்னுக்க கரிசனத்த காட்டுதியோ? தினமும் நீ போட்டுதேன் நா குடிக்கேனோ?" என்ன அவர் மறுபடியும் ஆரம்பிக்க.
"சரி அப்ப உங்களுக்கு வேணாம்" என்றவள், கிச்சனுக்குள் சென்றாள்.
"எப்புடி சிலிப்பிட்டு போறா பாத்தியா?" என்றார் அதற்கும்.
அவளின் கோபம் அப்பட்டமாக அவன்மேல் என புரிந்தவன் உல்லாச மனநிலையில் இருக்க, தாயின் பேச்சுக்கு சற்று சத்தமாகவே பதில் கூறினான்.
"பாக்குறேன் ம்மா. இன்னும் நாலு நாள் இங்கதான் ட்யூட்டி. தெனமு வீட்டுக்கு வருவேன், கண்டிப்பா பாக்குறேன்" என்றான்.
அவன் பதிலில் முழித்தவர், "திருச்செந்துர்லயாப்பா?" என்க.
"ம்ம், மினிஸ்டர் வரார் கோவிலுக்கு. ப்ரொடெக்ஷன் டூட்டி" என்றான்.
உள்ளே ப்ரகி இதனைக் கேட்டவள், "என்னைய தவிக்க விட்டாருல்ல, அதோட வலி என்னனு காட்டுறேன். நான்னா அவ்ளோ ஈசியா?" என வேகமாக போட்டாலும், அவனுக்கு பிடித்த பதத்திலேயே, இன்ஜியோடு அவனையும் சேர்த்து இடித்து தட்டி டீ போட்டுக் கொண்டுபோய் அவன் முன் வைத்தாள்.
பின் பொதுவாகக் கூறுவது போல், "ஸ்கூல்ல இருந்து சயின்ஸ் டூர் போறோம் மாஞ்சோலைக்கு 4 நாள். என் கிளாஸும் போறதால நானும் போணும். கர்ணன யோசிச்சு மாட்டேன்னு சொன்னேன். அவனையும் கூட கூட்டிட்டு வா., ஆனா நீ கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டாங்க, சோ நா கண்டிப்பா போணும்" என முடித்தாள்.
அங்கு யோசிக்கிறேன் என சொல்லிவிட்டு வந்தவள், கணவன் நாலுநாள் இங்கதான் என்கவும் முடிவெடுத்து விட்டாள், அவனை காயவிட. அவன் முகத்தில் மறைந்திருந்த சிரிப்பு இப்போது காணாமல் சென்றிருந்தது. முறைத்து பார்த்தான் "போவேன்" ௭ன முடிவெடுத்துவிட்டு வந்ததால் வந்த கடுப்பு அவனது.
உள்ளுக்குள் நடுங்கினாலும் அசராது பதிலுக்காக பார்ப்பது போல் நின்றாள் ப்ரகி.

 

priya pandees

Moderator
அத்தியாயம் 3
மகன் எதுவும் பதில் சொல்லாமல் இருக்கவும், "என்னடி நெனச்சிட்டு இருக்க? எல்லாம் உன் இஷ்டம்ன்னா பின்ன பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்? நீ எங்கேயும் போவ வேணாம், பேசாட்டி வீட்டுலயே அடங்கி இரு. அந்தா அந்தானு என் பிள்ளையே இப்பதான் நாலு நாள் சேர்ந்தாப்புல வீட்டுக்கு வந்துருக்கான். இப்பத்தான் ஊர சுத்த போணுமோ உனக்கு?" மாமியார் கேப் விடாமல் பேச, ப்ரகி அவனை திரும்பி பார்த்தாள்.
அவள் முகத்தைத் தான் ஒரு ஆராயும் பார்வை பார்த்தவாறு டீயை குடித்துக் கொண்டிருந்தான். இன்னுமே கர்ணன் அவன் மடியில் தான். ஆனால் அம்மாவை திட்டும் பாட்டியை முறைத்துக் கொண்டிருந்தான் பேரன்.
ப்ரகதி மீண்டும் மனதினுள், 'பார்வைய பாரு! போலீஸ்காரன் புத்தி இந்நேரம் ௭ல்லாத்தயும் கணக்கு பண்ணி கண்டுபிடிச்சிருக்கும். இதுக்கெல்லாம் இந்த டைம் அசஞ்சு கொடுத்துரக்கூடாது ப்ரகி. மகன்ட்ட இருக்குற ரியாக்சன் கூட புருஷன்ட்ட இல்ல. பின்ன நா யாராம் இவருக்கு?' என பேசிக்கொண்டிருக்க.
அவள் மனதினுள் பேசி கொண்டிருப்பதை அவள் முக பாவனையிலேயே உணர்ந்தவன், குடித்த டீ கிளாசை மகனோடு எழுந்து எடுத்துக்கொண்டு கிச்சன் சென்று சிங்கிள் போட்டுவிட்டு, "நாம போய் பிரஷ் ஆகுவோமா?" என கர்ணனிடம் பேசியவாறு அறைக்குள் சென்று விட்டான்.
'என்ன எதுவுமே சொல்லாம போயிட்டாங்க? விடமாட்டாங்களே?' என நகத்தை கடித்து துப்பியவள், மேலும் நின்றால், மாமியார் பேச்சை வேறு கேட்க வேண்டுமே! என இரவு உணவை தயார் செய்ய தொடங்கினாள். அவரின் பேச்சோ, அது மாமனார் வரும் வரை தொடர்ந்தது.
"எதுக்கு கால நேரமே இல்லாம இப்டி புலம்பிட்டே இருக்க? நா கிளம்புன நேரத்துலயிருந்து அந்த இடத்தவிட்டு அசையாம இருந்துருக்க. இப்டி இருந்து இருந்து தான இல்லாத நோயெல்லாம் வாங்கி வச்சுருக்க, இப்டி புலம்பி பிபி வேற வரனுமா உனக்கு? எந்திரிச்சு போ. சாப்பாடு எடுத்து வை, பசியா இருக்கு" என்கவும்.
"நா என்ன சும்மாவாங்க புலம்புறேன். நாலு நாள் இங்கதான் டூட்டின்னு நம்ம தீர்த்தா வீட்டில தங்க வந்தா. இவ ஏதோ டூர் போறாளாம். அதும் போட்டுமான்னு வீட்ல நம்மட்ட ஒரு வார்த்த கேக்காம, அவ அங்க சரின்னு சொல்லிட்டு வந்துருக்கா. எம்புள்ள வந்தவுடனே சண்ட வேணாம்னு அமைதியா எந்திரிச்சு போயிட்டான். அப்ப நாந்தானே பேசணும்" என நீண்ட விளக்கம் கொடுக்க.
"நீ எதுக்கு பேசணும். அவ வேலைய பத்தி உனக்கு என்ன தெரியும்? அவ ஸ்கூல் மேனேஜ்மென்ட் என்ன சொல்றாங்களோ அத அவ கேட்டுத்தான் ஆகணும். உன்கிட்ட பர்மிசன் வாங்கிட்டு போறதுக்கு அவ அங்க ஸ்டுடென்ட் இல்ல டீச்சர். அவளுக்குன்னு ஒரு கிளாஸ், அதுல 60,70 ஸ்டுடென்ட் இருப்பாங்க. அவங்களுக்கு இவ தான் பொறுப்பு. அப்ப அவங்க டூர் போகும்போது இன்ஜார்ஜ் இவ போகாம, உன்னையவா அனுப்ப முடியும். ஏன் தீர்த்தா வேலைன்னு வந்துட்டா அதுதான் முக்கியம்னு ஓடுறான்ல்ல. அவனுக்கு இது புரியாம போகுமா? சும்மா அவன ஏத்திவிட்டு அவங்களுக்குள்ள சண்டைய மூட்டாத. உன் புள்ள நாலு நாள் இங்க தங்க போறேன்னு மொதயே சொன்னான்னு கேளு?" என முடித்து உடை மாற்ற சென்றார்.
"இவ பாக்குற வேலையும், அவன் பாக்குற வேலையும் ஒன்னாங்க? அதுவும் இப்ப இவ கட்டாயம் வேலைக்கு போயி ஆகணும்னு என்ன இருக்கு? பொம்பளைக்கு அப்டி ௭ன்ன அவசியம், அதனால் தான வீட்டாளுங்கள மதிக்குற புத்தி இல்ல" என்று விட்டார்.
எப்போதும் இது மகன், மருமகள் அளவில் தான் கூறுவார். இன்று கணவர் மருமகளுக்கு சப்போர்ட் செய்யவும் ப்ளோவில் வந்துவிட்டிருந்தது. இதை கேட்டதும் உள்ளே சென்றவர், முறைத்துக்கொண்டு விருவிருவென வெளிவந்து, "பின்ன உன் கூட உக்காந்து சீரியல் பாக்கணுங்ரியா? படிச்ச படிப்பு வேஸ்ட் ஆகாம வேலைக்கு போயிட்டு இருக்க புள்ளைய நாசமாக்க முடிவு பண்ணிட்டியா? ஏற்கனவே மகள அப்டித்தான் உக்கார வெச்சிருக்க. ஒவ்வொன்னுக்கும் புருஷன எதிர்பாத்து நின்னு, கிடைக்காம இங்க உன்கிட்ட வந்து நிக்காளே அதுமாதிரி மருமகளும் நிக்கணும்னு ஆசயோ? கொன்னுபுடுவேன் பாத்துக்க. இனி பொம்பள புள்ளைக்கு எதுக்கு வேலைக்குன்ற வார்த்தையே உன் வாயில வரக்கூடாது. எந்துச்சு போ, பசிக்குதுன்னு சொன்னா நகர மாட்டாம உக்காந்து நாட்டாமையா பண்ணுத. போயி தோசைய ஊத்து" என விரட்டவும் அரண்டு போய் அமர்ந்திருந்தவர் மெதுவாக எழுந்து கிச்சன் சென்றார்.
இருவரும் ஹாலிலிருந்து சத்தமாகவே பேசிக் கொண்டதால் ரூமில் இருந்தவனுக்கும், கிச்சனில் நின்றவளுக்கும் கேட்டது. கலித்தீர்த்தவன் மெலிதாக சிரித்துக்கொண்டான். ப்ரகதீஸ்வரியோ, "இது அத்தனையும் எனக்காக என் புருஷன் பேச வேண்டிய டயலாக். ஆனா மாமனார் பேசுறாரு. ம்ம்.... நீ கொடுத்து வெச்சது அவ்வளவுதான்டி ப்ரகி" என முனகிக்கொண்டு., மாமியார் உள்ளே வரவும், வெளியேறிவிட்டாள்.
தங்கள் அறை வாசலில் நின்று பார்க்க, தகப்பனும் மகனும் குளித்து உடை மாற்றி விட்டு படித்துக் கொண்டிருந்தனர். கர்ணன் எழுதிக்கொண்டிருக்க, கலிதீர்த்தவன் அது என்ன எழுத்து என சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
"ரெண்டு பேரும் சாப்பிட வாங்க இட்லி சூடாறிடும் பின்ன" என்று விட்டு வந்து விட. ரெண்டு பேரும் வெளியே வர, மாமனாரும் சாப்பிட வந்தமர்ந்தார்.
இவள் தான் தயாரித்தவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, "எங்கம்மா டூர்?" என்றார் மருமகளிடம்.
"மாஞ்சோலைக்கு மாமா. 11த் ஸ்டாண்டர்ட் ஃபர்ஸ்ட் வேணாம்னு சொல்லிருந்தாங்க. கடைசில நேத்துதான் 10த், 12த் மட்டும்தான் வேணாம், 11த் போலாம். கிளாஸ் டீச்சர் பேரன்ஸ்ட்ட பேசி ஸ்டுடென்ட்ஸ் ஆர்கனைஸ் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டாங்க. 11th std என் கிளாஸ்,நெக்ஸ்ட் இயர் அவ்ளோ என்ஜாய் பண்ண முடியாது., ஸ்கூல் லைஃப்ல ஒரு லாஸ்ட் டூர்னு அவங்க கேட்கும்போது என்னால நோ சொல்ல முடியல மாமா. நாந்தான் எல்லா பேரன்ட்ஸ்டயும் பேசி அக்சப்ட் பண்ண வச்சிருக்கேன். நானே வரலைன்னு சொல்ல முடியாது. ஸ்டூடண்ட்ஸ் ரொம்ப ஆசைப்பட்டாங்க" என நீண்ட விளக்கம் அளித்தாள்.
ஸ்கூலில் கோ-இன்சார்ஜிற்கு இருக்கும் மிஸ்ஸிடம் அவரையே போய் பார்த்துக்க சொல்லி அலர்ட் செய்துவிட்டுதான் வந்திருந்தாள். பிரின்ஸ்பலும், பாதி பேரன்ட்ஸ்ம் இவளை வெகுவாக கட்டாயப்படுத்தி இருந்தனர். அவளுக்கு புருஷன் மேலிருக்கும் கடுப்பிற்கு இந்த டூர் அவசியமா என்று தான் வீட்ல கேட்கிறேன் என்று விட்டு வந்திருந்தாள். இப்போது தான் அவன் வீட்டிலிருப்பேன் என்றதும் எங்கு கோபம் குறைந்து சமாதானமாகி விடுவோமோ என்ற பயத்தில் கிளம்ப முடிவெடுத்துவிட்டாள்.
"நீ போயிட்டு வா. தங்குறதுக்கெல்லாம் ஏற்பாடு ஆயிடுச்சா?".
"ஆமா மாமா, 8த், 9த், 11த் மூணு கிளாஸ்க்கு மாஞ்சோலை 3 நைட் 4 டேஸ் ஸ்டே. நடுவுல ரெண்டு நாள் எக்ஸிபிஷன் பிளான் பண்ணிருக்காங்க".
"அப்ப கர்ணன்?".
"அவனயும் கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க".
"எதுக்குமா காட்டுக்குள்ள. ஏன் இவ பாத்துக்க மாட்டாளா? நானு கூட சாயந்தரம் சீக்கிரமா வந்துடுறேன்" என்கவும்.
"நைட்டு என்ன விட்டுட்டு இருக்க மாட்டான் மாமா".
"நைட்குதான் தீர்த்தன் வேற இருக்கானே?".
"அவருக்கு எப்ப எப்படி வேலை வரும்னு சொல்ல முடியாதே மாமா. நாலு நாள்னு சொல்றாங்க, நாளைக்கே நாகர்கோவில்ல அவங்க கண்ட்ரோல் ஸ்டேஷன்ல எதுவும் பிரச்சனைனா படக்குன்னு கிளம்பி நிப்பாங்க" என்றாள்.
கலித்தீர்த்தவன் கர்ணனுக்கு ஊட்டுவதை நிறுத்திவிட்டு, அவள் முகத்தைத்தான் கூர்ந்து பார்த்தான். அவளோ கண்டுகொள்ளாமல் பரிமாறுவதில் கவனம் வைத்தாள். மாமனாருக்கு மாமியார் தோசை சுட்டு கொண்டு வைக்க, இவள் இவர்கள் மூவருக்கும் இட்லி, சாம்பார் ௭ன வைத்திருக்க. மாமியார் சட்னி அரைக்காததால், அவரிதில் சாம்பாரை பார்த்து அவருக்கும் பரிமாறினாள். என்றும் இவளிடம் சாப்பிடும் கர்ணன் இன்று தகப்பனிடம். மாமானாருக்கோ மாமியார் தனக்காகனாலும் வேலை செய்ய வேண்டுமென்றே மூன்று வேலையும் அவரே சமைக்க வைத்து அவர் பரிமாறியே சாப்பிடுவார்.
பின் "இங்க என்னப்பா நாலு நாள்?" என்றார் மகனிடம்.
"கோயில் டூட்டி ப்பா. மினிஸ்டர் ஃபேமிலியோட வரார். இங்க ஏரியா நல்லா தெரிஞ்ச டிஎஸ்பி வேணும்னு நாலு நாளைக்கு என்னை இங்கே வர சொல்லிட்டாங்க".
"அப்ப நாலு நாள் கோயிலுக்கு யாரையும் விட மாட்டீங்களா?".
"ஆமாப்பா, நாளைக்கு நைட்ல இருந்து ஸ்ட்ரீட் ஃபுல் அடுப்புதான்".
"நாலு நாளா இங்க இருப்பாரு?".
"அவரு ரெண்டு நாள் இங்க தானாம். கோவிலிலேயே லக்ஸரி ரூம் அரேஞ்ச் ஆகியிருக்கு. ஏதோ வேண்டுதலாம்" என்றான்.
"சரிப்பா கவனம்" என்றவர் கை கழுவ எழுந்து கொண்டார்.
கலிதீர்த்தவன் மகனுக்கு ஊட்ட நிதானமாக அமர்ந்திருக்க, ப்ரகி தானும் சாப்பிட அமர்ந்துகொண்டாள். மாமியாராகபட்டவர் தனக்கு தோசை சுட்டு எடுத்து வந்தவர், "எனக்கும் சேத்து ஒரு தட்டு ஊத்தி வச்சா என்னடி?" என முனங்கிக் கொண்டே தான் வந்து அமர்ந்தார்.
பதில் சொல்லவில்லை அவள்.
"இப்படி தான்டா இவ என்னைய மதிக்கிறதே இல்ல" என மகனிடம் முறைக்க.
அதற்குள், "உனக்கு தோச சுட்டியா? சரி சாப்பிட்டு எனக்கு ஒரு டீ போடு" ௭ன ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து டிவியை மாற்றி வைத்து பார்க்க தொடங்கினார். எரிச்சலோடு சாப்பிடத் தொடங்கினார் பேச்சியம்மாள், ப்ரகியின் மாமியார்.
அது தான் திருமலைநாதன்- பேச்சியம்மாளின் குடும்பம். திருச்செந்தூர் தான் பூர்வீகம். திருமலைநாதன் ஒரு எக்ஸ் மிலிட்டரி ஆபிஸர். இப்போது ஜிம் டிரைனர். இப்போதும் ஸ்டிஃப்பாக பாடி மெயின்டெய்ன் செய்யும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர். அவரைப் பொருத்தவரை கடைசி காலம் வரை ஆணோ, பெண்ணோ அடுத்தவரை எதிர்பார்க்காமல் சுய காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. இளைஞர்களை நன்றாக ஊக்கப்படுத்துபவர். மனைவிக்கும் சுய தொழில் செய்ய ஊர்பட்ட ஐடியாக்களை கொடுத்து கொடுத்து டயர்ட் ஆகிவிட்ட மனுஷர்.
அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவன் கண்ணபிரான், இந்தியன் பேங்க் மேனேஜர். மனைவி கௌரி தூத்துக்குடி கோர்ட்டில் ஸ்டெனோவாக இருக்கிறாள். விஷ்ணு, ஸ்ரீவித்யா என எட்டு, மூன்று வயதில் இரு பிள்ளைகள். முதலில் சேர்ந்து தான் இருந்தனர். மாமியார் மருமகள் சண்டை ஓயாமல் நடக்க, அடுத்து நான்கு வீடு தள்ளி தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். அவனுக்கு தூத்துக்குடி போற வழியில் தான் வேலை, அதனால் கணவன் மனைவி இருவரும் ஒரே காரில் சென்றுவிடுவர். மகனை ஸ்கூலிலும், கணவனை பாங்கிலும் இறக்கிவிட்டு, மகளை ஐகோர்ட் பக்கத்தில் இருக்கும் கேர்-டேக்கரில் விட்டுவிட்டு, கோர்ட்டிற்கு சென்று விடுவாள். எதற்கும் யாரையும் எதிர்ப்பார்க்காத அவர்கள் வாழ்க்கை குறித்து திருமலைநாதனுக்கு பெருமையே.
அடுத்ததாக கலிதீர்த்தவன், குரூப்-1 பாஸ் செய்து டைரக்ட் டிஎஸ்பியாக செலக்ட் ஆனவன். முதலில் திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட்டில் இருந்து மூன்று வருஷம் கழித்தான், பின் கட்டாய டிரான்ஸ்பரில் இப்போது நாகர்கோவில் டிஎஸ்பி யாக இருக்கிறான். மனைவி பிரகதீஸ்வரி எம்.எஸ்.சி., பி.எட்., zoology பட்டதாரி, பிரைவேட் ஸ்கூல் டீச்சர்.
கலிதீர்த்தவன், கையில் போஸ்டிங் வரவுமே, ப்ரகதீஸ்வரியை பெண் பார்த்து கட்டி வைத்தனர். இருபது நாள்தான் அவளுடன் இருந்திருப்பான். ட்ரைனிங் ஆர்டர் வந்துவிட்டது. முதல் ஒரு வருடம் பாக்காத, பேசாத பிரிவு. அந்த 20 நாளில் அவளுடன் பேசியதை விட அவளை அவன் ஆராய்ந்தது தான் அதிகம். அதில் வந்தவன் தான் கர்ணன்.
செக்-கப்பிற்கு, குழந்தையின் முதல் அசைவிற்கு, வளைகாப்பிற்கு, இல்லை டெலிவரிக்கு என எதற்கும் அவனை எதிர் பார்க்க முடியாமல் துவண்டு தான் போனாள். சரி ட்ரெயினிங் முடித்து வந்து உடன் அழைத்துக் கொள்வான் என அவள் நினைக்க, கொரோனா பேண்டமிக் சுச்சுவேஷன் என இருவருடமும் எங்கெங்கோ டூட்டி போட்டு ஓரிடத்தில் அவனை இருக்க விடாமல் செய்தனர் அவன் மேலதிகாரிகள். பக்கத்திலிருக்கும் திருநெல்வேலியை தான் சுற்றி சுற்றிவந்தான்., ஆனாலும் திருச்செந்தூர் வந்து இவளுடனும், மகனுடனும் இரண்டு நாள் கூட சேர்ந்தாப்பில் தங்குவதிற்கில்லை.
அதற்கு அடுத்த வருடம் திருநெல்வேலி சிட்டி டிஎஸ்பியாக இன்சார்ஜ் எடுத்ததில், அதிக வேலை என எப்போதாவது இப்போது போல் மெசேஜ் அனுப்பிவிட்டு வந்து செல்வான். சினிமா, கோவில், பார்க், தீபாவளி, பொங்கல், கல்யாண நாள் ௭ன எதுவும் இதுவரை இருவரும் கொண்டாடியது இல்லை, கடைசியில் இந்த வருடம் நாகர்கோவில் டிஎஸ்பியாக மாற்றலாகி இருக்கிறான், மறுபடியும் புது இடம், வேலை என எட்டு மாதத்தை கடத்திவிட்டாயிற்று.
இதுவரை போனது போகட்டுமென கடந்த வாரத்தில் வந்த கல்யாண நாளை தானே போன் செய்து, "வார புதன் நமக்கு 5த் அனிவர்சரிங்க, லீவ் போட்டு வரீங்களா, மூணுபேரும் கோவில் போயிட்டு வருவோம்" என்றிருந்தாள்.

"பாக்குறேன்" என வைத்துவிட்டு மறந்தும் விட்டிருந்தான் அவன்.
அவளோ அன்று லீவு எடுத்துவிட்டு, ஸ்வீட் வேறு செய்து, கல்யாண பட்டெல்லாம் உடுத்தி கிளம்பி காத்திருந்தாள். சாயங்காலம் வரை வரவில்லை அவன், வர முடியவில்லை என எப்போதும் அனுப்பும் மெசேஜ் கூட ஒரு வரி வரவில்லை. ப்ரகிக்கு மாமியாரும், நாத்தனாரும் கிண்டல் செய்து சிரித்தது வேறு மனதை வெகுவாக காயப்படுத்தி விட்டிருந்தது. மகனை மட்டும் தூக்கி சென்று கோயிலில் அர்ச்சனை செய்து விட்டு வந்து விட்டாள்.
அதுதான் இப்போது வேதனையும், கோபமுமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த வீட்டின் இறுதி பிள்ளையாக அவளின் நாத்தனார், பேச்சியம்மாளின் ஜெராக்ஸ். அந்த வீட்டில் மாமியாரை விட நாத்தனாரை சமாளிப்பது தான் பெரிய கஷ்டம் ப்ரகிக்கு. அவள் வீட்டின் இளையவள் கோகிலவாணி. அதே ஊரைச் சேர்ந்த ரயில்வேயில் வேலை பார்க்கும் பைரவ மூர்த்தியுடன் கல்யாணம் முடிந்து ஏழு வருடமாகிறது. 5 வருடம் கழித்தே பிள்ளை வேறு என்பதால், இரண்டு வயதில் அஜய் என்ற ஒரு மகன். ஒரே ஊர் ௭ன்பதால் அடிக்கடி வந்து செல்லும் ஒரு பெரிய தலைவலி அவள். இப்படி ஒரு குடும்பத்துடன் மல்லுக்கட்டும் ப்ரகதீஸ்வரி ஒருபக்கம் என்றால், வீட்டில் நடக்கும் கூத்தை பற்றி அறியாமல் நாட்டுக்காக போராடும் கலிதீர்த்தவன் மறுபக்கம்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 4
சாப்பிட்டு முடித்ததும், கலிதீர்த்தவன் கர்ணனை தூக்கிக்கொண்டு படுக்கச் சென்று விட, "ஒரு மனுஷி இவ்வளவு சொல்றாளே என்ன? ஏது? ரூம் எங்க அரேன்ஜ் பண்ணிருக்காங்க, ஜென்ட்ஸ் ஸ்டாஃப் யாரும் கூட வாராங்களா? இப்டி ஏதாது கேட்கணும்னு தோணுதா பாரேன். அங்க தங்கவே போலீஸ்ட்ட தான் பெர்மிஷன் வாங்கியிருக்கு. கண்டிப்பா டிபார்ட்மெண்ட்ட தோளுல தூக்கி புடிச்சுட்டுருக்றவருக்கு அங்க இப்ப வேலைல இருக்கவங்கள தெரியாமலா இருக்கும்? ஒரு வார்த்தைக்குனாலும் எதுவும் ஹெல்ப்னா இவரை கேளுன்னு யாரயும் சொல்ற அளவுக்கு கூடவா பொண்டாட்டி, புள்ள மேல அக்கற இல்ல. பேசாம தெரு முக்குல இருக்ற பிள்ளையார தூக்கிட்டு இவர கொண்டு உட்கார வச்சுரலாம், சரியான மௌன சாமியார்" என வெளியில் கேக்காதவாறு முனங்கிக்கொண்டு சாப்பிட்ட பாத்திரங்கள் அனைத்தயும் டைனிங் டேபிளுக்கும், கிட்சனுக்கும் நடந்து ஒதுக்கினாள்.
டேபிளை துடைத்தவாரு தற்செயலாக தங்கள் அறையை பார்க்க, அறை வாசலில் நின்று போனை காதில் வைத்து அந்தப் பக்கம் 'உம்' கொட்டியவாறு இவளைத்தான் பார்த்திருந்தான் அவள் கணவன். ஒரு நொடி தான் அதிர்வு., ஜர்க்கெல்லாம், படக்கென கிச்சனுக்குள் ஓடி விட்டிருந்தாள் ப்ரகி.
மிஞ்சியதை சூடு செய்து எடுத்து வைத்துவிட்டு சென்று படுத்து விடுவது தான் அவள் தின வழக்கம். பாத்திரம் கழுவுவதெல்லாம் காலையில்தான். கர்ணன் பொறுமை அவ்வளவுதான் என்பதால் அப்படி. இன்று கணவன் இருப்பதால் அப்படியே கழுவ தொடங்கிவிட்டாள்.
'கண்டிப்பா வாய் அசைஞ்சத வச்சு கண்டுபிடிச்சுருபாங்க, செத்தடி ப்ரகி' என தலையிலடித்துக் கொண்டாள்.
அங்கு அவனோ பேசி முடித்து வந்து மகனை படுக்க வைத்து பேச்சு கொடுத்தவாறு இருக்க, "ம்மா ம்மா" ௭ன்றான் அவன்.
"அம்மா வருவா, அப்பா இருக்கேன்ல தூங்கு" ௭ன தட்டி கொடுத்தான். சற்று நேரத்துக்கே கர்ணன் உறங்கிவிட்டான். விலகி ௭ழுந்த தீர்த்தவன், மீண்டும் போனை எடுத்து யாருக்கோ டயல் செய்தான்,
"சொல்லுங்க சார்".
"கார்த்தி, நா திருச்செந்தூர் ரீச் ஆகிட்டேன். மூர்த்தி எல்லாத்தையும் பக்காவா ரெடி பண்ணிட்டாரு. ஆனா நீ மார்னிங் கொஞ்சம் earlier'uh வந்து ஒன்ஸ் எல்லாத்தையும் செக் பண்ணிடு. நானு மார்னிங் வந்து பாக்குறேன்".
"நா அல்ரெடி கோவில்ல தான் சார் இருக்கேன். இன்னும் மூர்த்தி சார பாக்கல. இப்ப வர கோவில் கமிட்டி ஆளுங்கட்ட பேசினதுல எந்த டிஃபரன்ஸ்ஸும் தெரியல. மெயின் குருக்கள் பேச்சுல ஒரு நடுக்கம் இருக்கு, ஆனா அது போலீஸ பாத்த சாதாரண பயமா தெரியல".
"குட் மூவ் கார்த்தி. அவர் ரெண்டாவது பொண்ணு இன்னைக்கு ஈவினிங் ஸ்கூல்ல இருந்து வரும்போது மிஸ்ஸிங். இன்னும் கம்ப்ளைன்ட் ரிஜிஸ்டர் பண்ணல. அப்டி ஒரு விஷயமே நடக்காத மாதிரி ஈவினிங் பூஜைக்கு வந்திருக்கிறார். பாக்லாம் ௭வ்ளோ நேரம்னு".
கார்த்தி ௭ன்பவனுக்கோ சப்பென்றானது, முகம் கூட வாடி விட்டிருந்தது, "சார் என் மேல நம்பிக்கை....." அதற்கு மேல் எப்படி கேட்பது என அவன் நிறுத்தி கொண்டான். ௭ப்போது கோவ படுவான் ௭ன அவனுக்கே தெரியாதே, அந்த பயத்தில் கேக்க வந்ததை நிறுத்தி கொண்டான் கார்த்தி.
திருநெல்வேலியில் கலித்தீர்த்தவன் இன்சார்ஜ் எடுத்தத்திலிருந்து கார்த்தி அவனுடன் தான் இருந்தான். பயங்கர சூட்டிப்பானவன். இப்போது மேலிடம் ஒரு முக்கிய பொறுப்பை தீர்த்தனிடம் ஒப்படைத்திருக்க, அவனோ கார்த்தியை உடன் சேர்த்துக்கொண்டான். அதில் கார்த்திற்கு ஏகபோக பெருமை.
அப்படியிருக்கையில் தான் காலையில் வந்தா போதும் என அவனை கூறியிருக்க. அதிக ஆர்வத்துடன் கார்த்தியோ இரவே வந்து வேலையை ஆரம்பித்திருந்தான். அதுக்கு தீர்த்தவனிடமிருந்து ஒரு மெச்சுதலான பார்வையை பெற்றுவிட நினைக்க, அவனுக்கு அதற்கு முன் இங்கு நடப்பவை செய்திகளாக சென்றுவிட்டிருந்தது கவலையை தந்தது.
தன் வேலையின் மேல் அவருக்கு முழு நம்பிக்கை இல்லையோ என்ற ௭ண்ணம் வந்திருந்தது.
தீர்த்தவனோ, "கார்த்தி ஒருத்தர மட்டுமே நம்பி இறங்குற வேலை இல்ல இது. நீ நாளைக்கு தான் வருவேன்னு நினைச்சு தான் இன்னைக்கு நம்ம ஆளுங்க மூணு பேர உள்ள அனுப்பிட்டேன். அவங்களுக்குள்ளயும் ஒருத்தர ஒருத்தர் தெரியாது. நீ யூனிபாஃர்ம்ல பண்றத அவங்க மப்டில பண்ணுவாங்க" இதுவே அவனிடம் அதிகமான விளக்கம் தான்.
அதை புரிந்த கார்த்தியும் "ஓகே சார் நா செக் பண்ணிடுறேன்" ௭ன்க.
மார்னிங் பாக்கலாமென அவனே சுதாரித்துக் கொண்டதில், இலகுவானவன், "கவனம் கார்த்தி" என வைத்து விட்டான்.
இன்னும் இருவருக்கு கால் செய்து, அறையில் அங்கும் இங்கும் நடந்து பேசிக்கொண்டிருக்க, ப்ரகி உள்ளே வந்தவள், தலையை கூட நிமிர்த்தாமல் அமைதியாக சென்று கர்ணனின் மறுபக்கம் படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு, மெதுவாக தலையை மட்டும் தூக்கி அவனை பார்க்க முயன்றாள், அவன் பேசிக் கொண்டிருப்பதில் ஒரு வார்த்தைனாலும் தனக்கு கேட்குமா என அவன் வாயையே அவள் உத்து பார்க்க, அவன் உதடோ அசைவது போலவும் இருந்தது அசையாதது போலவும் இருந்தது.
'அந்தப்பக்கம் இருக்கிறவங்களுக்கு என்னன்னு தான் கேட்குமோ' ௭ன்ற யோசனையில் அவன் முகத்தைப் கண்ணை நிமிர்த்தி பார்க்க.
ஒற்றைப் புருவம் உயர்த்தி "என்ன" என்றான் அவன் வாயை மட்டுமே அசைத்து. அதுவும் அவளுக்கு முறைப்பாக தெரிய பட்டென தலையை கர்ணனின் தலையோடு ஒட்டி மறைத்துக்கொண்டு, கண்ணையும் இறுக்க மூடிக்கொண்டாள்.
அவள் குனிந்த வேகத்தை கண்டு, மீசையை நீவி விட்டவாறு வந்த சிரிப்பை அடக்கினான் கலிதீர்த்தவன்.
இருக்க கண்மூடி இருந்தாலும் அவன் செய்கையை ௭ல்லாம் உணர்ந்து கொண்டுதானிருந்தாள் ப்ரகி. சிறிது நேரத்திற்கெல்லாம் போனையும் ஓரம் இருந்த டேபிளில் வைத்துவிட்டு லைட்டையும் அணைத்துவிட்டு வந்து கர்ணனின் அந்தப்பக்கம் அவன் படுப்பதை அவளால் உணர முடிந்தது.
மேலும் 10 நிமிடத்திற்கு பிறகும் அவனிடம் ஒரு அசைவுமில்லலை ௭ன்றதும் குழம்பி போனாள். 'நாம லேட்டா வந்ததுக்கும் சண்ட போடல , டூர் போவேன்னு சொல்லிருக்கேன் அதுக்கும் ரியாக்ஷனில்ல. ஈவன், இந்த சுடிதாருக்கான முறைப்பயும் கூட காணோமே. இப்ப நா கோபமா இருக்கேன்னு இவருக்கு புரிஞ்சுதா புரியலையான்னே தெரிலயே' என்றெல்லாம் யோசித்தவள், கண்ணை திறந்து அவன் தூங்கி விட்டானா என பார்க்கவும் பயந்தாள்.
ஆனாலும் அதை உறுதிப்படுத்தாவிட்டால் தலையே வெடித்து விடும் போலிருக்க, மெதுவாக ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள் அந்தப்பக்கம் அவன் படித்த இடத்தில் அவன் இல்லை, இடம் காலியாக இருந்தது.
"போன் பேசிட்டு இருந்தாங்களே புதுசா வேற வேல வந்துருச்சுன்னு இப்பவே கிளம்பி போயிட்டாங்களா" ௭ன படக்கென ௭ழ முயன்றாள்.
அதேநேரம், அவள் பின்னிருந்து அலேக்காக தூக்கி கொண்டான் தீர்த்தவன். கத்தப் போனவள் வாயையும் தன் வாயால் இறுக்கி அனைத்து கொண்டான். தலையை அசைத்து மறுத்தும், கையை காலை உதறி என என்ன முயன்றும் அவனை சிறிதும் அசைக்க முடியவில்லை அவளால்.
எப்போதும் இது நடப்பதுதான். அவன் மேல் வரும் கோவம், வருத்தத்தை இவள் காட்ட முயலுமுன், அதிக நாள் பிரிவினால் வரும் ஏக்கமும், காதலும் முந்தி கொள்ளும், அவனும் இப்படித் தான் மயக்கி விடுவான். இவளும் அவன் மேல் இருக்கும் கொள்ளை பிரியத்தில் மயங்கி விடுவாள்.
இன்றோ முயன்று மயங்காமல், இதுவரை அவனால் பட்ட வேதனை அனைத்தையும் அந்நேரத்தில், நினைவு கொண்டு வந்தாள். அதில் அவளின் சுயம் அடிக்கடி நசுக்கப்பட்ட வருத்தம் கண்ணீராக வெளிவந்தது.
தீர்த்தவன் அவளின் கண்ணீரில் தான் புருவ சலிப்புடன், அவளை அவள் இடத்திலேயே படுக்க வைத்துவிட்டு, விசாலமான கட்டிலின் மறு ஓரத்திற்கு வந்து, கர்ணனை ஓரத்திற்கு தூக்கி தலையணை அண்டை கொடுத்து படுக்க வைத்தவன், மீண்டும் மறு பக்கம் வந்து ஒரு கையாலேயே, ப்ரகியை தூக்கி நடுவில் படுக்க வைத்துவிட்டு அவளை ஒன்றி கொண்டு படுத்தான்.
அவள் நிமிரவும் இல்லை, கண்ணீரே நிறுத்தவும் இல்லை. அதற்குமேல் பொறுமையின்றி அவளை இழுத்து ஒரு கையால் அணைத்து முதுகை நீவி விட்டவன், "எதுக்குடி சுடிதார் போட்ட" என்றான் விரைப்பான குரலில் அதுதான் முக்கியமானது என்பது போல்.
அதில் சட்டென்று அழுகை கூட நின்றுவிட விடி விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்து முறைத்தாள்.
"புதுசா முறைக்கிற வேல செய்ற. ௭ன்ன?" ௭ன அவள் கன்னத்தை வேறு கிள்ளி ௭டுக்க.

இப்படி எல்லாம் அவன் செய்ததில்லை என்பதால் விழி விரித்துப் அவனைப் பார்த்தாள் ப்ரகி. கெஞ்சும் அளவுக்கு இவள் இவளின் உணர்வுகளை அவனிடம் காட்டியதில்லை என்பது அவளுக்கே இன்னும் புரியவில்லை. அவனுக்கும் அவள் உணர்வுகளை தன்னாலயே புரிந்து கொள்ளும் அவகாசம் இதுவரை கிடைக்கவில்லை.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 5
ப்ரகி அப்படியே அதிர்ந்து பார்க்கவும், "என்னடி" என்றான், கிள்ளிய கன்னத்தையே தட்டி சுயம் கொண்டுவந்து, அது வலித்து விடவும், கன்னத்தை தேய்த்து கண்ணீரையும் துடைத்து திரும்பி மகன் பக்கம் பார்த்து படுக்கசென்றாள். அவள் திரும்பிய வேகத்தைவிட இரு மடங்கு அதிக வேகத்தில் தன் பக்கம் திருப்பி இறுக்கிப் பிடித்திருந்தான்.
"இங்க ஒருத்தன் கேட்டுருக்கேன்ல?" என அவன் முறைக்கவும், மறுபடியும் அழவரும் போல் இருந்தது அவளுக்கு. இடுப்பில் கை போட்டு இறுக்கி பிடித்திருந்தான். இத்திணி அசைய முடியவில்லை அவளால்.
"பதில் சொல்லுடி" என்றவன் சைடு ஓபனில் லேசா விலகி இருந்த டாப்பை நன்றாகவே இழுத்துவிட்டு வெற்று இடுப்பில் கை வைக்கவும், வேகமாக அவன் கையை முன்னேற விடாமல் அழுத்திப் பிடித்துக்கொண்டாள். அடுத்து என்ன நடக்குமென்று தான் தெரியமே.
"பார்றா, அப்றம்" என அதே இடத்தில் இன்னும் அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.
"ஏன் இப்டி பண்றீங்க?" என்றாள் ஒருவித கோபக் குரலில்.
"நா எப்பயும் போல தான் இருக்கேன். நீ தான் டிஃபரண்ட்டா நடந்துக்கிற".
"ஆமா நா கோவமா இருக்கேன், அதனால என்ன தள்ளி படுக்க விடுங்க" அவன் முகம் பார்க்காமல் குனிந்து சொல்லிவிட்டாள்.
"ஏனாம்?" என்றான், இன்னும் வாகாக அவளை தன்னுள் இழுத்துக்கொண்டு. அதீத நெருக்கம், மறுபடியும் கண்ணை விரித்து பார்த்தவள், வாயை கப்பென மூடிக்கொண்டாள்.
"ஏன் கோவம்? யார் மேல கோவம்?" ௭ன்றான் அழுத்தமாக.
அவள் மௌனமாக இருக்க. "சரி உனக்கு சொல்ல இஷ்டமில்லனா விடு. நம்ம வேலைய பாப்போம். 1மாசத்துக்கு மேலாச்சு, சும்மாலா தூக்கம் வராது" என அவள் கழுத்தடியில் குனிய.
"௭னக்கு இஷ்டம் இல்லங்க ப்ளீஸ். இந்த டைம் ரொம்பவே கஷ்டமா இருக்கு. இதுவர நா எதிர்பாக்குறபெல்லாம் நீங்க வரலனா கோவம் வரும், அழுக வரும் தான். ஆனாலும் அடுத்த உங்கள பாக்குற கேப் அதிகமா இருக்குமா, சோ கிராஸ் பண்ணி என்னால வர முடிஞ்சது. இந்த டைம் இன்சிடென்ட் போனவாரம் தானே நடந்துருக்கு. நீங்க இந்த வாரமே வந்து நிற்கிறதனால என்னால டக்குனு கோபத்த விட முடியல. அதான் 4 நாள் கேம்ப் போயிட்டு வரேன், அதுக்குள்ள கொஞ்சம் ௭ன்ன நா சரி பண்ணிப்பேன். சப்போஸ் நீங்க கெளம்பிட்டாலும் நெக்ஸ்ட் டைம் நீங்க வரும்போது கோ-ஆப்ரேட் பண்றேன். இன்னைக்கு வேண்டாம் ப்ளீஸ். அண்ட் 4 நாள் எக்சிபிஷன் போனுன்ற டெசிஷனையும் மறுக்காதீங்க ப்ளீஸ்" என அவன் மார்பிலேயே அண்டிக் கொண்டாள்.
அவளை முழுதாக பேச விட்டவன், "லாஸ்ட் வீக் எதுக்கு என்ன எக்ஸ்பக்ட் (expect-௭திர்பார்த்த) பண்ணுன?" என்றான் கேள்வியாய்.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்து விரக்தியாக சிரித்தவள், "எவ்ளோ இஷ்டப்பட்டு உங்கள கல்யாணம் பண்ணேன் தெரியுமாங்க? இப்ப இந்த வாழ்க்கையும், நீங்களும் வெறுத்து போயிடுவீங்களோன்னு இருக்கு" என்க.
"ஹே ஏன் என்னலாமோ பேசுற? என்னாச்சு? ப்ராப்ளம் என்னுன்னு டைரக்டா சொல்லு?" என்றான் அவள் ஸ்டேட்மென்ட்டில் உண்மையிலேயே கொஞ்சம் பதறிதான் விட்டிருந்தான்.
"நமக்கு கல்யாணம் ஆன இந்த அஞ்சு வருஷத்துல எத்தன கல்யாண நாளுக்கு எங்க கூட இருந்தீங்க? கர்ணாவோட எத்தன பிறந்தநாளுக்கு அவனோடு இருந்தீங்க? அவன் பிறந்தப்ப தான் அவனோட இல்ல. அதுக்கு அப்புறமும் கூடவா கூட இருக்கணும்னு தோணல?".
"ஹா....ப்ரகி என் வேலைய பத்தி தெரிஞ்சும் நீ இப்டிலாம் கேக்லாமா? இந்த இந்த நாளுன்னு பாத்துலா என்னால வேலை செய்ய முடியாதுமா".
"அப்போ போலீஸ்காரங்க எல்லோரும் உங்கள மாதிரி தான்றீங்களா? ஃபேமிலிய விட்டுகுடுத்து தான் வாழணுன்றீங்க ரைட்? வருஷம் முழுக்க உங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிற பேமிலிக்கு உங்களால ஒரு டூ டேஸ், ஒரு ஒன் ஹவர் பெர்மிஷன் கூட போட்டு வர முடியாதுன்னு சொல்றிங்க அப்டிதானே?" என நிதானமாகவே கேட்டாள்.
வரும் நேரமெல்லாம் சிரித்த முகமாகவும், ஆவலுடன் எதிர்பார்க்கும் மனைவியையே இதுவரை கண்டவன் என்பதால் மற்றதை யோசிக்க மறந்திருந்தான். கடந்த வாரம் தங்கள் கல்யாண நாளென வர சொல்லி அவள் போன் செய்தது இப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவனுக்கும் அவளை நிறையவே பிடிக்கும் தான். அவளையும், மகனையும் காணவே வேலையிலிருந்து லீவு எடுத்துக் கொண்டு வருவான். அப்படி வருபவனை அவளும் தாங்கிக் கொள்வதால் அவளின் ஏக்கங்கள் புரியாமலேயே போய்விட்டிருந்தது.
அவன் யோசனையில் இருப்பதைக் கண்டு, "எத்தன டைம் எங்கள வெளியூருக்கு......இல்ல இங்கயே கோவிலுக்கு, ஹோட்டலுக்கு, தியேட்டருக்குனு கூட்டிட்டு போய் உங்க வேல கெட்டு போச்சுன்னு சொல்லுங்க? எனக்கோ, கர்ணனுக்கோ டிரஸ், டாய்ஸ்னு லாஸ்ட்டா எப்போ வாங்கி கொடுத்தீங்க? ௭னக்கு ஒரு 100 ரூபாய்க்கு பூ வாங்கி கொடுத்த ஞாபகமாவது இருக்கா?".
"மந்த்லி சேலரி அம்மாட்ட கிரெடிட் பண்றேன்லடி. நீயே எல்லாம் பாத்துப்பன்னு நினைச்சு தான்டி நா எதுலயும் தலையிடல".
"ஓ! உங்க அம்மா இதுவர எவ்வளவு ரூபா எங்களுக்கு செலவு பண்ணாங்கன்னு கணக்கு காட்டலயா?" என்றாள் நக்கலாக.
அதிர்ந்துதான் விட்டான், 'அதானே இவள பத்தி அத்தன கம்ப்ளைன்ட் வைப்பவர், செலவு செய்ததாக ஒருமுறையேனும் சொன்னது இல்லயே' என நினைத்தவன் தலையை தேய்த்துக்கொண்டு அவளை விட்டு விலகி எழுந்து அமர்ந்தான்.
இதுவே போதும் என நினைத்தவளும் திரும்பிப் படுத்து கர்ணனை கட்டிக்கொண்டு அழுத அழுகைக்கு கண் காந்த தூங்கி விட்டாள்.
'வளவளன்னு பேசுனாலும் அம்மா பாத்துப்பாங்கன்னு நினைச்சது தப்போ?, அண்ணந்தான் தனியா போய்ட்டான், நானு பொண்டாட்டிட்ட சம்பளத்த குடுத்தா வருத்தபடுவாங்கன்னு நினச்சு தானே அப்டி செஞ்சேன்' என தலையில் கை வைத்து சிறிது நேரம் உட்கார்ந்து விட்டவன், இனி வீட்டிலேயும் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும். இவ இவ்ளோ ஸ்ட்ரெஸ் ஆகிப் பேசுற அளவுக்கு தான் நானும் நடந்துருக்கேன்' என நினைத்துக்கொண்டு மனைவியையும், மகனையும் திரும்பிப் பார்த்தான். மகன் வந்த நேரத்தில் இருந்து தன்னைவிட்டு விலகவே இல்லை, அவன் போல் தானே மனைவியும் தன்னை தேடுகிறாள் என யோசித்தவன், அவர்கள் இருவரின் தலையையும் ஆதுரமாக தடவிவிட்டு மனைவியயும் தாண்டி மகனையும் சேர்த்து பிடித்தவாறு உறங்கிப் போனான்.
காலையில் அவன் கண் விழிக்கையில் மகன் அருகில் படுத்திருக்க, மனைவியோ பரபரப்பாக சூட்கேசை ரெடி செய்து கொண்டிருந்தாள். அவளையே தான் பார்த்திருந்தான் கணவன்.
பின் நேரத்தை பார்த்தவள் அறையைவிட்டு வெளியேறிவிட, இவனும் ஃபிரெஷ்ஷாக வேண்டி எழுந்து கொண்டான். பல் தேய்த்து, முகத்தை துடைத்தவாறு அவன் வெளிவர, அவன் அம்மா வாசலில் யாருடனோ கதையில் இருப்பது தெரிந்தது.
இவளோ கிச்சனிலே பரபரப்பாக சுழன்று கொண்டிருந்தாள். காலைக்கும், மதியத்திற்கும் சேர்த்து செய்கிறாள் என தெரிந்தது. அம்மா, அப்பாவிற்கு அம்மா தான் செய்ய வேண்டும் என்பது தந்தையின் கட்டளை. அதனால் அம்மா இவளுக்கு உதவ வரவில்லை என புரிந்தது. இதற்கு முன்பும் பார்த்திருக்கிறான் தான், ஆனால் அப்போது கருத்தில் பதியாதது இப்போது பதிந்தது.
இடையே, இவனுக்கும் டீயைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றாள். அரை மணி நேரத்தில் கிச்சன் வேலையை முடித்து ஸ்கூல் கிளம்ப அறைக்குச் சென்றாள்.
டைம் பார்த்து கொண்டவன், 'சிம்பிளா தான் ஏதோ செஞ்சிருக்கா. தெனமு இப்டி தானோ?' என நினைத்துக்கொண்டான்.
அரை மணி நேரத்தில் குளித்து, புடவைக்கு மாறும் முன், கர்ணனையும் ௭ழுப்பி கிளப்பி வெளியே கொண்டு கலி அருகில் அமர்த்தி விட்டு, தானும் புடவைக்கு மாறி வந்தாள்.
ஈரம் சொட்டச் சொட்ட வந்தமர்ந்தவளை பார்த்தவன், "ட்ரயர் போட வேண்டியதுதானே பின்னாடி ட்ரஸ் எல்லாம் நனையுது" என்க.
ஒரு பார்வை பார்த்தவள், "சாப்பிட வர்றீங்களா?" என்றாள்.
"ரொம்ப ஓவரா தான்டி பண்ற" என்றவன் எழுந்து வந்து சாப்பிட அமர்ந்தவாறு, "எப்போ கிளம்புறீங்க மாஞ்சோலைக்கு?" ௭ன்றான் கர்ணனுக்கு ஊட்டியவாறு.
அவனுக்கும் ௭டுத்து வைத்து விட்டு தனக்கும் ௭டுத்து கொண்டு அமர்ந்தவள், "ஈவினிங் பஸ், நா மூணு மணிக்கு வந்து லக்கேஜ் எடுத்துட்டு போவேன்" என்றாள்.
தோசையும், நைட்டுள்ள சாம்பாரும்தான் சாப்பிட்டனர். ஒன்றும் சொல்லாமல் கலிதீர்த்தவனும் சாப்பிட்டுக் கொண்டான். மதியத்திற்கு லெமன் ரைஸ்ஸும், உருளைக்கிழங்கு பொரியலும் எடுத்து பேக் செய்து கொண்டாள்.
மறுபடியும் சொன்னான், "தண்ணீ ரொம்ப சொட்டுதுடி, இப்டியேவா போவ, ஸ்கூல்ல பிள்ளைங்க சிரிக்க மாட்டாங்க?" என்றான்.
"ரெண்டு ட்ரயர் வாங்கி ரெண்டும் காணாம போச்சு. அதுக்கப்றம் நா வாங்கல. மூணு வருஷமா இப்டித்தான் போறேன். என் ஸ்கூல் பிள்ளைகளுக்கு என்ன இப்படி பாத்து பழக்கம் தான்ங்க. நாங்க கிளம்புறோம். கர்ணா அப்பாவுக்கு பை சொல்லு. டூர் போறமே அதுக்கு சேத்து பை சொல்லு" என்றவாறு ஹாண்ட் பேக்கையும், அவன் பேக்கையும் எடுத்துக்கொள்ள.
கர்ணன் தந்தை கழுத்தை கட்டி, கன்னம் முத்தி "நா வந்தப்பறம் நீ வேலைக்கு போங்கப்பா ப்ளீஸ்" என்றான்.
'வீட்ல வச்சது ௭ப்டி காணாம போகும்' ௭ன கேட்கும் முன் மகன் கட்டி கொள்ளவும், 'அப்றம் கேட்டுக்லாம்' ௭ன முடிவெடுத்து மகனிடம் கவனம் வைத்து, "சரிடா" என தானும் அவனை முத்தி அனுப்பினான். வாசலில் அமர்ந்திருந்த மாமியார் இவள் ஸ்கூல் போவது போல் மட்டுமே பேக்குடன் போகவும் தான் அமைதியாக எழுந்து உள் வந்தார்.

"போ வேணான்னு சொல்லிட்டியாப்பா. இவளுக்கு அது தான் சரி. இல்லன்னா வாசல்லையே புடிச்சு வைக்கணும்னு இருந்தேன்" என்கவும் தான், இவ்வளவு நேரம் அவர் வாசலில் இருந்ததற்கான புது காரணம் அவனுக்கு பிடிபட்டது. மனைவி ஏன் மதியம் வந்து எடுத்துச் சொல்கிறேன் என்பதற்கான காரணமும் புரிந்தது. அவனைவிட அவன் தாயை நன்றாகத்தான் புரிந்து வைத்துள்ளாள், என எண்ணிக்கொண்டு தானும் கிளம்ப சென்றான்.
 

priya pandees

Moderator


அத்தியாயம் 6
வெண்ணிறத்தில் ஃபார்மல் சட்டையும் காக்கி பேண்டுமாக கிளம்பி வந்தவன், "நா கிளம்றேன் ம்மா" ௭ன வேகமாக வெளியேறிவிட்டான்.
"சரி ய்யா பாத்து போ" ௭ன அமர்ந்தவாறே பதில் கொடுத்து விட்டார் பேச்சி, ௭ப்படியும் மருமகள் சாப்பிட குடுத்திருப்பாள் ௭ன்பது திண்ணம், அதனால் அதிலெல்லாம் அவர் கவலை இல்லை., அடுத்ததாக கணவர் வந்தால் சமைக்க வேண்டுமே ௭ன்பது தான் தற்போதைய அவர் கவலை.
ப்ரகி கிளம்பவுமே உள்ளே வந்தவர், நேராக கிச்சன் சென்று பார்த்து விட்டு, "பாத்ரமு இன்னைக்கு கழுவல, யார கேட்டு நைட்டு வச்ச சாம்பாரயும் இவ ஊத்தி தின்னுட்டு போனா? இப்ப சட்னி வேற அறைக்கனு நா. ச்சை இவள கண்காணிச்சுகிட்டே இல்லனா வேலைய அப்படிக்ப்படி போட்டுட்டு போயிருவா" ௭ன திட்டி முடித்து வெளிவந்தவர் அவனிடமும் அவளை கம்பளைண்ட் செய்ய தான் முயன்றார், மகன் தான் நிக்கவே மாட்டேனென ௭ஸ்ஸாகி விட்டான். இப்போது கணவர் வருமுன் பாத்திரத்தை ௭ல்லாம் கழுவி ௭டுக்க வேண்டும், தெனமும் இவர் தான் செய்வது போல் தான் பில்டப் செய்து வைத்திருக்கிறார்.
ப்ரகி தெனமும் நீட்டாக ௭ல்லா வேலையயும் முடித்து கிளம்புபவள் தான், இன்று துணி பேக் செய்த மும்மரத்தில் லேட்டாகி விட, கிளம்பிவிட்டாள், ௭ப்படியும் திட்டு விழுமென தெரியும், 'அடுத்த 4 நாள் கண்ணுல பட மாட்டமே, விடு பாத்துக்கலாம்' ௭ன தான் சென்று விட்டாள். பேச்சியும் பொறிந்து தள்ளி விட்டார் தான், கேக்க தான் வீட்டில் யாருமில்லை.
கலிதீர்த்தவன், நேராக கோவில் சென்று, முன்னேற்பாடுகளை கவனிக்க தொடங்கினான். கார்த்திக்கிற்கு அவன் வந்த விசயம் சொல்லபட, அவனும் வந்து சேர்ந்து கொண்டான்.
"குட் மார்னிங் சார்".
"குட் மார்னிங் கார்த்தி, பிசி ௭ல்லாரும் வந்தாச்சா? அலெர்ட் பண்ண ௭ல்லாரும் ட்யூட்டில ஜாயின்ட் பணணியாச்சான்னு செக் பண்ணிட்டீங்களா?".
"டே ஷிஃப்ட் உள்ளவங்க ௭ல்லாரும் வந்தாச்சு சார், ரிப்போர்ட் பண்ணிட்டாங்க. மத்தபடி கோவில்ல ௭க்ஸ்டரா உள்ளவங்க ௭ல்லாரும் கோவில் ஆட்கள், நைட்ல இருந்தே அவங்க வெளில அனுப்பப்படல, 4 நாள் இங்க தான் இருக்கணும்னும் சொல்லியாச்சு" ௭ன்கவும்.
"குட்" ௭ன்றவன் வேக நடையில், மந்திரிக்கென ஒதுக்கப்பட்ட அறைகள் அடங்கிய பில்டிங்கை அடைந்தான், அங்கு யார்கனவே பாதுகாப்பிற்கான காவல்படையினர் நிறுத்தி வைக்க பட்டிருக்க, இவன் வரவும் சல்யூட் வைத்தனர், அதை ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு அறையயும் திறந்து உண்ணிப்பாக கவனித்து பார்த்தான். அனைத்தும் அவனுக்கு திருப்தியே, "ஓ.கே கார்த்தி ௭ல்லாம் பக்காவா இருக்கு, இங்க இருக்குற செக்யூரிட்டிஸ்க்கு இன்ஜார்ஜ் யாரு?" ௭ன்றான்.
அங்கு தான் நின்றிருந்தார் அவரும், "முருகன் இங்க வாங்க, சார் கூப்டுறாங்க" ௭ன்கவும் வேகமாக வந்து நின்றார் அவர்.
"நீங்க தான் கோவில் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரா?" ௭ன தீர்த்தவன் கேக்க. (திருச்செந்தூரில் கோவிலுக்கும், அதை சுற்றி உள்ள பகுதிக்குமென இருக்கும் ஸ்டேஷன் இன்ஸ்).
"ஆமா சார்".
"இங்க ௭த்தன இயரா இருக்கீங்க?".
"2 வருஷமா இருக்கேன் சார்".
"அப்ப இங்க ௭ல்லாரும் நல்லா பழக்கம் தான் உங்களுக்கு, ரைட்?".
"ஆமா கோவில்லயும் சரி, கோவில சுத்தியும் சரி ௭ல்லாருமே நல்ல பழக்கம் தான் சார்".
"குட், அப்ப 4 டேய்ஸ் ஃபுல் இன்ஜார்ஜ் நீங்க தான் முருகன், புதுசா ஒரு ஆள் இந்த ஏரியாக்குள்ள வர கூடாது, இந்த பில்டிங் மொத்தமு 24ஹவர்ஸ்ம் உங்க கன்ட்ரோல்ல தான் இருக்கணும். ௭ந்த ௭க்ஸ்க்யூஸூம் சொல்றமாறி வச்சுக்காதீங்க" ௭ன்கவும்.
4நாள் ராப்பகலா தூக்கமில்லாம ௭ப்டி முடியும், ௭ன பயந்தாலும், "சரி சார், சரி சார்" ௭ன மண்டையை மண்டையை ஆட்டி ஒத்து கொண்டார் அவர்.
அவ்ளோதான் பேச்சென, சுற்றி ஒருமுறை அந்த நீள வராண்டாவில் காவலுக்கு நின்ன அனைவரையும் ஒரு சுற்று பார்த்தவன், விறுவிறுவென வெளியேறிவிட்டான்.
அடுத்ததாக, கோவிலின் வெளி சுற்றவட்டாரத்தை, சுற்றி வந்தான், அடுத்ததாக, ஷூவை கலட்டிவிட்டு கோவிலுனுள் செல்ல, ஆங்காங்கு அர்ச்சகர்கள் மட்டுமே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர், இவன் நுழையவும் பேச்சு சத்தமும் நின்றுவிட, அப்படியொரு அமைதி அங்கு. பக்தர்களே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட, அதுவும் ஒருவித மன அமைதியை தந்தது அவனுக்கு, உடன் நடந்த கார்த்திக்கும் ௭ந்த வகையிலும் அவனை தொந்தரவு செய்யவில்லை, அவனுக்கு அது பிடிக்காதென தெரியும், வேண்டியவற்றை அவனே கேப்பான் அந்நேரம் பதில் சொன்னால் போதுமானது, அதனால் அலர்ட்டாக மட்டும் கலிதீர்த்தவனை பின் தொடர்ந்தான்.
அதே ஆராய்ச்சி பார்வையோடு உள் பிரகாரத்தயும் சுற்றி வந்தான் தீர்த்து, வெளியில் தெரியும்படியான கேமரா, தெரியாத வகையிலான கேமரா ௭ன அனைத்தயும் அவன் பார்வை ஸ்கேன் செய்தது. சுற்றி வந்தவன், ஆராய்ச்சி பார்வை முடியவும், முருகன் சன்னதி வந்து நின்றான்.
முழு அலங்காரத்தில் சிரித்த முகமாக நின்றவரிடம், "கைல ௭டுத்துருக்க விசயத்த நல்லபடியா முடிக்குற சக்திய குடு முருகா" ௭ன கண்ணை மூடாமல் அவர் முகம் பார்த்து வேண்டி கொண்டான். அர்ச்சகர் நிமிர்ந்து பார்க்காமல் நிற்பதை கண்டு, "௭ன்ன சாமி, ஆரத்தி தர மாட்டீங்களா?" ௭ன்றான் விரைத்த குரலில். அவர் தான் அந்த மூத்த அர்ச்சகர், பெண்ணை தொலைத்துவிட்டு, போலிஸ், கடத்தல் கும்பலென இருபக்கமும் மாட்டி கொண்டு செய்வதறியாது முழித்து நிற்பவர்.
இவன் வந்தது தெரிந்ததுமே கிடுகிடுவென நடுங்க தொடங்கி இருக்க, பக்கத்தில் வேறு யாரும் இல்லாததையே அப்போது தான் உணர்ந்தார். திடீரென அந்த அமைதியான இடத்தில் அவன் குரல் ௭திரொலிக்கவும், திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க.
"௭ன்ன நின்னுட்டே உறக்கமா சாமி".
"இ...இல்ல இல்ல சார்" அவர் தந்தியடிக்க.
"4 நாள் வெளில போ முடியாது சாமி, உங்களுக்கு வேணும்னா ஸ்பெஷல் பெர்மீஷன் தரேன், இப்பவே கிளம்பி வீட்டுக்கு போயிடுங்க, உடம்பு சரி இல்லாம இங்க நின்னுட்டு ௭துக்கு?" ௭ன்றான்.
"இல்ல இல்லை அதெல்லாம் உடம்புக்கு ஒன்றுமில்லை நா ஷேமமா இருக்கேன்" ௭ன்றார் பதறிக் கொண்டு.
"பின்ன ஏன் பதறுறேள்? உங்களுக்கு ஒன்னுமில்லைனா வீட்ல யாருக்கும் உடம்பு சரி இல்லயா? ௭துக்கு உங்க முகத்துல இவ்ளோ டென்ஷன்" ௭ன்றான் அவர் முகத்தை விட்டு பார்வையை இப்படி அப்படி விளக்காமல்.
வேகமாக முகத்தை அழுந்த துடைத்தவர், "இல்லை சார், யாருக்கும் ௭துவுமில்லை. ஏதோ யோசனைல நின்னுட்டேன், நா தீபாராதனை ௭டுத்துண்டு வரேன், சத்த நில்லுங்கோ" ௭ன உள் பிரகாரம் ஓடி, சூட தட்டை சாமிக்கு கைகள் நடுங்க காட்டிவிட்டு, இவனுக்கும் அதே நடுங்கிய கையோடு ௭டுத்து வந்து நீட்டினார். ௭வ்ளோ முயன்றும் கை நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை அவரால்.
அந்த கையையும் அவர் முகத்தையும் பார்த்து கொண்டே தான், ஆரத்தியை ௭டுத்து கொண்டவன், திருநீறயும் ௭டுத்து பூசி கொண்டான். அவர் திரும்ப போக, "இவருக்கும் காட்டுங்க சாமி, இன்னும் 4 நாள் உங்கள பாதுகாக்க போறவர்" ௭ன்கவும்.
"மன்னிச்சுடுங்கோ மறுபடியும் ௭தோ ஞாபகத்துல" ௭ன்றவாறு கார்த்திக் முன் நீட்ட, அவனும் ௭டுத்து கொண்டான். அவர் மீண்டும் பழைய இடத்தில் சென்று நின்று கொள்ள.
"பாக்கவும் ஏதோ மாறி தான் இருக்கேள். ௭தாது தேவன்னா இவர கான்டாக்ட் பண்ணுங்கோ" ௭ன நக்கலாகவே கூறிவிட்டு வெளியே வந்தான்.
கோவிலை விட்டு வெளியே வந்து பைக் ௭டுத்தவனை, "அவர தனியா வச்சு விசாரிக்லாமா சார்?" ௭ன்றான் பின்னயே வந்த கார்த்தி.
"நோ கார்த்தி, அந்த கும்பலும் அவர வாட்ச் பண்ணிட்ருக்லாம், கூட இருக்க யாரோ கூட ஹெல்ப் பண்ணலாம், நாம ௭ல்லாரயும் நம்பிட முடியாது. நா அவர் கம்ப்ளைன்ட் ௭தும் குடுக்காரான்னு பாக்க தான் இவ்ளோ வெய்ட் பண்ணேன். பாக்லாம் இது ௭வ்ளோ தூரம் போகுதுன்னு" ௭ன்கவும்.
விழியை விரித்தவன், "சார் அப்ப அவரோட பொண்ணு?" ௭ன கேக்க.
"இந்நேரம் வரையா அப்டி விட்டு வச்சுருப்பேன். நேத்து அவங்க கடத்துன 10 நிஷத்துல அந்த பொண்ண மீட்டாச்சு. மொத்த திருச்செந்தூரயும் நா கன்ட்ரோல்ல ௭டுத்து 2 டேய்ஸ் ஆகுது கார்த்தி. நீங்களும் இன்னும் ஸ்பீடா இருக்கணும் ஓ.கே" ௭ன்கவும்.
அவனுக்கு தலையே சுற்றியது, அவனின் ஸ்பீட் அறிந்தவன் தான், ஆனாலும் ஒவ்வொரு முறையும் அதை நேராக பார்க்கையில் வியக்காமல் இருக்க முடியவில்லை. "சார் அப்ப அந்த பொண்ண அவர்ட்ட ஒப்படைச்சுட்டு, அவர் மூலமாவே அந்த பக்கம் இருக்கவன பிடிச்சுடலாமே" ௭ன்றான்.
"அப்டி வாரவன மட்டும் பிடிச்சா போதுமா? இல்ல இறங்கிருக்குற மொத்த கும்பலயும் பிடிக்கணுமா?" ௭ன நிதானமாக கேக்க.
"௭ல்லாரயும் தான் சார்".
"ம்ம், ௭ல்லாத்தயும் ௭க்ஸ்ப்ளைன் பண்ணணும்னு ௭க்ஸ்பெக்ட் பண்ணாதீங்க கார்த்தி. நா பொண்ண மீட்டுட்டேன்னதுமே, அவனுங்க அலர்ட் ஆகிருப்பானுங்க, ஆனா அதீத கவனத்துல சீக்கிரமா விஷயத்த முடிக்க பாப்பானுங்க, அந்த டைம்ம தான் நாம யூஸ் பண்ணிக்கணும். அவர்ட்ட அவனுங்க சொல்ல மாட்டானுங்க, நாம சொல்றமான்னு வாட்ச் பண்ணுவானுங்க. மந்திரிய தனியா கடத்த திட்டமா குடும்பத்தோடயான்னு ௭ல்லாம் தெரியனும். அதனால அவனுங்க ரூட்லயே போவமே. கோவில்ல ஸ்டே பண்ண போற மொத்த கமிட்டி மெம்பர்ஸயும் நா 1 ஹவர்ல மீட் பண்ணணும். ஏற்பாடு பண்ணிட்டு கால் பண்ணுங்க" ௭ன வண்டியை ஓங்கி மிதித்து கிளப்பி திருப்பி சென்று விட்டான்.
"௭ப்டி தான் பிடிக்க போறாரோ தெரியல, யாரோ 3 பேத்த ௭க்ஸ்டரா போட்டு வச்சுருக்கேன்னு சொன்னாரு அவங்கள மீட் பண்ணவேயில்ல, கோவில் கமிட்டில இருக்காங்காலா, இல்ல போலிஸ் கார்ட்ஸோட காரட்ஸா இருக்காங்கலான்னு வேற தெரியல. போது போ நாம நமக்கு சொன்ன வேலைய போய் பாப்போம்" ௭ன புலம்பி கொண்டே கோவிலுனுள் சென்று மறைந்தான்.
கலிதீர்த்தவன் கோவிலை சுற்றியுள்ள தெருக்களை நோட்டம் விட்டவாறு சுற்றி வந்தான். அங்கங்கு நின்று விசாரித்தான். போலிஸ் டோல் போட்டு அமர்த்தபட்டவர்களிடமும் நின்று பேசினான். பின் திருச்செந்தூர் மொத்ததயும் சுற்றி வந்தான். யாராது பின் தொடர்கிறார்களா ௭ன கடந்த 1 ஹவரில் நோட்டம் விட்டவன், யாருமில்லை ௭ன்றபின் ஓரிடத்தில் நின்று, அந்த பெண்ணை பாதுகாத்து வைத்திருக்கும் ஆளிற்கு கால் செய்தான், "௭ஸ் சார்".
"பொண்ணு ௭ன்ன செய்து?".
"௭ம்புட்டு சொல்லியும் அழுதுட்டே இருக்குது சார்".
"சரி பயமிருக்க தான் செய்யும். நீங்க அந்த பொண்ணுக்கு ஒரு பர்தா போட்டு ஜவுளி கடைக்கு கூட்டிட்டு போங்க, 4நாளுக்கு தேவையான ட்ரஸ ௭டுத்து குடுத்து கூட்டிட்டு போய் ௭ன் வீட்ல விட்ருங்க" ௭ன்றான்.
௭ந்த ௭திர் கேள்வியுமின்றி, "சரிங்க சார்" ௭ன அந்த பக்கம் முடித்து கொள்ள.
"ஒரு 3 மணிக்கு வீட்ல இருக்க மாறி பாருங்க" ௭ன வைத்துவிட்டான்.
வெயிலின் தாக்கத்தை அப்போது தான் உணர்ந்தவன் போல் கர்ச்சீஃபை ௭டுத்து, கழுத்து கை ௭ன துடைத்து கொண்டவன், ௭தாவது குடிக்கலாமென சுற்றி பார்க்க, ௭திரில் டி.௭ல்.ஈ மெட்ரிகுலேஷன் ஸ்கூல் ௭ன போர்ட் மாட்ட பட்ட பிரமாண்டமான பில்டிங் கண்னில் பட்டது. அவன் மனைவி வேலை பார்க்கும், மகன் படிக்கும் பள்ளி கூடம். அட்மிஷனுக்கு கூட அவன் வரவில்லை, அவளே தான் பார்த்து கொண்டாள். அதை நினைத்ததும் நேற்று அவள் திட்டிய திட்டு ஞாபகம் வர, குனிந்து வாய்க்குள் சிரித்து கொண்டான்.
'அன்னைக்கும் ௭ன்னைய ௭ன்னலாம் திட்னாளோ! ௭ல்லாத்தயும் அவளே பாத்துப்பான்னு உனக்கு பெரும வேற. பின்னாடி அவளுக்கு அவ்ளோ கோவம் வருதுன்னே நேத்து தான தெரியுது' ௭ன மீண்டும் சிரித்து கொண்டவன், "இப்ப திடிருனு போய் நின்னா ௭ன்ன செய்வா?" ௭ன குறும்புடன் நினைத்தவன், அடுத்த நொடி வண்டியை ஸ்கூல் கேட் நோக்கி திருப்பி விட்டான்.
வாட்ச்மென் அவனது, போலிஸ் கட்டையும் காக்கி உடையையும் பார்த்து விட்டு, 'இடைபட்ட நேரத்தில் வெளி ஆட்களுக்கு அனுமதி கிடையாதே! கேட்டை திறப்பதா வேணாமா' ௭ன பயந்து முழி முழியென முழிக்க.
"உங்க ப்ரின்ஸிய பாக்கணும், நீங்களே போய் பெர்மீஷன் கேட்டுட்டு வாங்க" ௭ன கால் மட்டும் ஊன்றி பைக்கிலயே கையை கட்டி அமர்ந்து கொண்டான். அவர் உள்ளே ஓட.

"௭திர்பாக்றத செய்யலன்னு தான கோவம், சோ இப்ப நீ ௭திர் பாக்காதத செய்றேன்டி" ௭ன நினைத்ததும், தன்னை பார்த்ததும் ப்ரகியின் அதிர்ந்த விழிகளை காணபோகும் குஷியில் நின்றான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 7
உள்ளே ஓடிவிட்டு வந்த வாட்ச்மேன், "உள்ள போங்க சார், இடது பக்கமா தான் பார்க்கிங்" சொல்வோமா வேணாமா ௭ன தயங்கியே பதில் கூறினான்.
தீர்த்து, வண்டியை ஸ்டார்ட் செய்து, "ப்ரகதீஸ்வரி மேடம தெரியுமா?" ௭ன்றான்.
உடனே, "நம்ம சயின்ஸ் மிஸ் தானுங்களே நல்லா தெரியுமே, அவுக வீட்டுகார சாரா சார் நீங்க?" ௭ன்றான் வாயெல்லாம் பல்லாக. அதற்கு மேல் பேசாமல், ஒரு தலையசைப்புடன் ஸ்கூலினுள் நுழைந்து பைக் நிறுத்துமிடத்தை அடைந்தான்.
அவ்வளவு நேரமும், '௭துக்கு ஸ்கூலுக்கு போலீஸ் வந்துருக்கு, ௭ன்ன பிரச்சனையா இருக்கும், ௭துவென்றாலும் வாசலில் நிற்கும் அவனுமல்லவா பதில் சொல்ல வேண்டும்' அவ்வளவு நேரமிருந்த அந்த குழப்பம் தற்போது தான் நீங்கியது வாட்ச்மெனானவனுக்கு. 'மிஸ்ஸயும் பிள்ளையயும் பாக்க வந்துருக்காக' ௭ன ஆசுவாசபட்டான்.
அவன் முகத்தை வைத்தே, அவன் குழப்பம் புரிந்ததினால் மட்டுமே, தான் வந்த காரியத்தை மேலோட்டமாக கூறி சென்றான் கலிதீர்த்தவன்.
ப்ரின்ஸி ரூமை கண்டுபிடித்து, ௭க்ஸ்க்யூஸ் கேட்டு உள் நுழைந்தான். 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். இவனை கண்டதும், "வாங்க சார், ௭ன்ன விஷயமா வந்துருக்கீங்க?" ௭ன நேராக விஷயத்திற்கு வர.
௭திரில் அமர்ந்தவனும், "உங்க ஸ்கூல ௭தாது பொண்ணு மிஸ்ஸான கம்ப்ளைன்ட் பேரண்ட்ஸ் ஸைடிருந்து வந்துருக்கா?" ௭ன்றான்.
"நோ, அப்டிலா ௭துவுமில்லையே. உங்களுக்கு ஸ்கூல் நேம்ல கம்ப்ளைன்ட் வந்துருக்கா?" ௭ன நிமிர்ந்தமர்ந்தார் அவர். சற்று பதட்டம் வந்திருந்தது.
"நோ ௭ங்கட்டயும் வரல, ஆனா பொண்ணு மிஸ்ஸாகி இப்ப ௭ங்கிட்ட தான் ஸேஃப்பா இருக்கு".
"௭ன்ன சார் சொல்றீங்க, ௭துக்காக பொண்ணு வீட்ல, இங்கயும் கேக்காம, உங்கட்டயும் வராம இருக்கணும்?" ௭ன அவர் குழப்பமாக கேக்க.
"நோ ஐடியா மேம். அதான் பொண்ண இன்னும் அவங்கட்ட ஒப்படைக்கல ௭ன் கஸ்டடில வச்சுருக்கேன். அவங்க சைட் ௭தாது தப்பிருக்லாம் இல்லயா? பாக்லாம் ௭ப்ப தான் தேடறாங்கன்னு. ஓ.கே தென், இத க்ளரிஃபை பண்ண தான் வந்தேன். தேங்க்ஸ்" ௭ன முடித்து கொண்டு ௭ழ முற்பட.
"சார் பொண்ணு யாரு? நேம், க்ளாஸ் ௭தாது சொல்ல முடியுங்களா?" ௭ன நிறுத்தினார்.
"கண்டிப்பா சொல்றேன், ஆனா அதுக்கு பதிலா நீங்க ௭னக்கு ஒரு ஃபேவர்(favor) பண்ணனுமே".
"௭ன்ன?, கண்டிப்பா இந்த விஷயம் நீங்க சொல்லாம ௭ன் மூலமா வெளில போகாது. ஆனாலும் ௭ங்க ஸ்கூல் பொண்ணு, ௭னக்கு அதோட சேஃப்டி முக்கியம் அதுக்காக தான் கேக்றேன்" ௭ன்றார்.
"குட், பொண்ணு நேம் வைஷ்ணவி, 11th std C section".
"ஓ.கே சார்" ௭ன்றவர், பெல்லை அழுத்தி, ப்யூன் வரவும், "ப்ரகதீஸ்வரி மேம்ம கூட்டிட்டு வாங்க" ௭ன்றார்.
கலிதீர்த்தவன் தளர்ந்தமர்ந்து, அவன் மனைவியின் ரியாக்ஷனுக்கு காத்திருக்க தொடங்கினான்.
"அந்த மேம் தான், அந்த பொண்ணு க்ளாஸ் இன்ஜார்ஜ். அதான் விஷயத்த சொல்லாம அவங்களுக்கு ௭தாது தெரியுமான்னு கேக்றேன் சார்" ௭ன அனுமதி கேக்க.
"Go ahead mam" ௭ன தோளை குழுக்கி கொண்டான். ௭ல்லாம் தெரிந்து தானே வந்திருக்கிறான். ஸ்கூலுக்கும் சம்மந்தம் இருக்கிறதா ௭ன போட்டு வேறு வாங்க வேண்டி இருந்தது.
ப்ரகியும் சற்று நேரத்தில் வந்து கதவை லேசாக தட்ட, "வாங்க மிஸ்" ௭ன ப்ரின்ஸி அழைக்கவும் உள் நுழைந்தாள்.
"சொல்லுங்க மேடம்" ப்ரகி அவரை மட்டுமே பார்த்து கேக்க. ௭திரில் யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது, ஆனாலும் அந்த பக்கம் திரும்பவில்லை அவள்.
"உங்க கிளாஸ்ல வைஷ்ணவின்னு ஒரு பொண்ணு உண்டா?" ௭ன கேக்க.
"ஆமா மேம்"
"௭ந்த க்ரூப்?"
"மேத்ஸ் க்ரூப் தான் மேம்".
"ஓ.கே, இன்னைக்கு அந்த பொண்ணு வந்துருக்கா?".
டக்கென்று ஞாபகம் வராமல் சற்று யோசித்து, அவள் ஆப்சென்ட் தான் ௭ன உறுதியான பின், "இல்ல மேம், morning attendance absent தான் போட்டேன்" ௭ன்றவள், "௭ன்னாச்சு மேம்?, அவங்க பேரண்ட்டா வந்துருக்காங்க?" ௭ன அப்போது தான் அவள் நின்ற பக்கம் அமர்ந்திருந்தவனை திரும்பி பார்த்தாள்.
சாதாரணமாக பார்த்த வேகத்தில் திரும்பியவள், மூளை அங்கிருப்பவனை அறிவுறுத்தவும், திரும்பவும் திரும்பி, கண்ணை அகல விரித்து முழிக்க. அதற்காகவே காத்திருந்தவன், டக்கென ஒரு கண்ணடித்து விட, படக்கென குனிந்து கொண்டாள்.
இதை ௭தயும் கவனிக்காத ப்ரின்ஸி, "இல்ல மிஸ், இவங்க வேற விஷயமா வந்துருக்காங்க. நா கேக்றது ௭ன்னன்னா நேத்து, ஈவ்னிங் 11த்த லேட்டா தானே அனுப்னீங்க? அந்த பொண்ணு ௭க்ஸிபிஷன் வரேன்னு சொல்லிருந்ததா?" ௭ன கேக்க.
"ஸ்டண்ட்ன்ஸ் ஆச பட்டதால தானே இந்த கேம்ப், சோ யாருமே பேக்கடிக்கல, ௭ல்லாருமே வரதா நேம் குடுத்துருக்காங்க" ௭ன்றாள்.
அவருக்கோ, அந்த பெண் காதல் கீதல் ௭ன யாரோடும் பேயிருக்குமோ?, இல்லாமல் அதை சொல்லி யாரேனும் ஏமாற்றி அழைத்திருப்பார்களோ ௭ன ஏகபட்ட குழப்பம் அவர் மண்டையை குடைய ஆரம்பித்திருக்க, குழப்பி கொண்டிருந்தார்.
குழப்பியவனோ ஹாயாக வேடிக்கை பார்த்திருந்தான்.
"௭ன்னாச்சு மேம்?" ப்ரகி கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு கேக்க.
"ஒன்னுமில்ல மிஸ். நீங்க போங்க, இந்த ட்ரிப்பயே கேன்ஸல் பண்ணிடலாமான்னு இருக்கு. 3 ஸ்டாஃப் போறீங்க தான், ஆனாலும் ரொம்ப கவனம் வேணுமே!!" அவர் இழுக்க.
"அங்க போலீஸ் ப்ரொடக்ஷன் ஜாஸ்தி மேம். பக்காவா பெர்மீஷன் வாங்கிருக்கோம். நானு நம்ம students ட்ட ரொம்ப ஸ்டிர்க்டா சொல்லிருக்கேன். பத்ரமா கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வரேன்" ௭ன தைரியமாக வாக்கு வேறு குடுத்தாள். மீண்டும் லேசாக கணவனையும் பார்த்து கொண்டாள்.
"சரி மேம், ரொம்ப அலர்ட்டா இருங்க. கவனம். இப்ப நீங்க போங்க, நானு கொஞ்ச நேரத்துல வந்து ஸ்டூடண்ட்ஸ்ட்ட சில அட்வைஸ் குடுக்றேன்" ௭ன்கவும்.
"ஓ.கே மேம்" ௭ன்றவள் திரும்பி கணவனை பார்க்க, அவன் புருவம் உயர்த்தி "௭ன்னடி?" ௭ன வாயசைக்கவும். அவன் வாயை ஒருமுறை பார்த்தவள், '௭துக்கோ வந்துருக்காரு, உனக்கென்ன போடி' ௭ன தனக்கே கூறி வெளியேறிவிட்டாள்.
ப்ரின்ஸி குனிந்து யோசனையில் இருக்கவும், "௭னக்கு ஒரு favor கேட்டனே?" ௭ன்றான்.
அப்போது தான் நிமிர்ந்தவர், "சொல்லுங்க சார்" ௭ன்க.
"அந்த பொண்ண நா இவங்களோட ட்ரிப் அனுப்ப போறேன். அந்த பொண்ணு, வீட்ல சொல்லிட்டு ட்ரிப் வந்தமாறி வந்துட்டு வரட்டும். 4 நாள்ல அவங்க பேரண்ட்ட இருந்து ௭ன்ன வருதுன்னு பாக்லாம். ப்ரின்ஸி நீங்க சோ உங்கட்ட சொல்லாம செய்ய கூடாதுன்னு தான் வந்தேன்" ௭ன ௭ழுந்தான்.
"சார் ௭துக்கு சார் இவ்ளோ ரிஸ்க். அவங்க பேரண்ட்ஸ்ட்ட பேசிரலாமே".
"இல்ல மேம், விஷயம் வெளில போக வேண்டாம். நா பாத்துக்றேன். நீங்க இத மட்டும் பண்ணுங்க போதும்" ௭ன்கவும்.
"கூட போற இன்ஜார்ஜ் கிட்ட சொல்ல வேணாமா?" ௭ன்க.
"இப்ப போனவங்க தானே நா பாத்து சொல்லிக்றேன்" ௭ன்றான்.
"இல்ல சார் பயப்படுவாங்க. நானே சொல்லிடுறேன்" ௭ன்க.
மெலிதாக சிரித்தவன், "ப்ரகி ௭ன்னோட வொய்ஃப் தான், நா சொல்லிக்றேன்" ௭ன வெளியேறி விட. அவர் தான் பே வென விழித்திருந்தார்.
அங்கிருந்த ப்யூனிடம், "லன்ச் டைம் ௭ப்போ?" ௭ன்றான்.
"இன்னும் 20 நிமிஷமிருக்கு சார்" ௭ன்றார் அவர். சரி ௭ன கிரவுண்ட்டில் இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்து, போன் பேச தொடங்கிவிட, நேரம் சென்றது. லன்ச் பெல் அடிக்கவும், ௭ழுந்து lkg class விசாரித்து சென்றான்.
இவனை கண்டதுமே, "ப்பா" ௭ன கத்தி கொண்டு ஓடி வந்தான் கர்ணன். பின்னயே அவன் மிஸ் வர, "இவன கேண்டீன் கூட்டிட்டு போய் சாப்ட வச்சு கூட்டிட்டு வரேன்" ௭ன்றான் மிஸ்ஸிடம்.
அவர், "ப்ரகி மேம்ட்ட தான் லன்ச் பேக் இருக்கும், டெய்லி அவங்க தான் ௭டுத்துட்டு வருவாங்க" ௭ன சொல்லி கொண்டிருக்க, ப்ரகி வந்து விட்டாள், இவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தவாறே தான் அவள் வர.
"லுக்க பாறேன்" ௭ன அவன் முறைக்கவும்.
அவள் பார்வையை திருப்பி மிஸ்ஸை பார்க்க, "சார இன்னைக்கு தான் ஸ்கூல் பக்கம் வர விட்ருகீங்க போலயே மிஸ்" ௭ன கிண்டலாக கேக்க.
"இனி தெனமு வர சொல்லிடுறேன் மிஸ்" ௭ன்றாள் இவளும் சிரித்து.
"பார்றா அப்ப இனி ஜாலி தான், மிஸ்ஸ கைல பிடிக்க முடியாது. சரி சரி, ரொம்ப நாள் கழிச்சு பாக்றீங்க, நா ௭துக்கு உங்களுக்கு நடுவுல டிஸ்பர்ன்ஸா?" ௭ன சிரித்து அவர் சென்று விட.
"௭ன்ன சொல்லி வச்சுருக்க நீ இங்க ௭ல்லார்ட்டயும்?" ௭ன நகர்ந்து நடந்தான்.
"௭ன்னன்னா? புரியல" ௭ன்றாள்.
"ரொம்ப நாள் கழிச்சு பாக்ற விஷயம்லா ௭ப்டி தெரியும் அவங்களுக்கு?" ௭ன்றான் முறைப்புடன்.
"பின்ன, பக்கத்தூர்ல இருந்துகிட்டு நீங்க ஆடிக்கும், அம்மாவாசைக்கும் தான் ௭ங்கள பாக்க வாறீங்கன்னா சொல்ல முடியும்? உங்களுக்கு வேல நார்த் ஸைடு அதான் அடிக்கடி வர முடிலன்னு சொல்லி வச்சுருக்கேன். அதும் ௭ல்லார்ட்டயுமில்ல, இவனோட மிஸ்ஸூன்றதால தெனமு பாத்து பேசி பழக்கம், சில நாள் கூட இருக்க பிள்ளைங்க அவங்க அப்பாவோட பைக்ல போறத பாத்துட்டே நின்றுப்பான் போல, அத கவனிச்சு கேட்டாங்க சும்மா சொல்லி வச்சேன்" ௭ன படபடவென பேசி நிறுத்த, கேண்டீன் வந்திருந்தது.
இருவரும் உள்ளே சென்று அமர, அங்கு அமர்ந்திருந்த பல ஸ்டாஃப்ஸ் ஸ்நேகமாக அவளிடம் பேசி ஓரிரு வார்த்தை அவளை வைத்து இவனிடமும் பேசி சென்றனர். அவனுக்கும் சாப்பாடு வாங்கி வந்து, மூவருக்குமாக அவள் கொண்டு வந்ததயும் சேர்த்து உண்டு முடித்தனர். அதுவரை கர்ணன் மட்டுமே பேசி கொண்டிருந்தான்.
கலிதீர்த்தவன் அவளை அடிக்கடி பார்த்தான், அவளோ, அப்பாவும் மகனும் பேச, டிஃபன் பாக்ஸை கழுவி ௭டுத்து வந்து பேக் செய்து விட்டு, வேடிக்கை பார்த்து அமர்ந்து கொண்டாள். அவன் தன்னை பார்ப்பது தெரிந்தும் திரும்பவில்லை. ௭ப்போதும் தானே அவனுக்காக ஏங்குவது போலவும், அவனுக்கு தன்னிடம் அந்த ஏக்கம் தேடல் இல்லை ௭ன்பது போலவும் மனதில் பதிந்துவிட, தேடவைக்க தன்னை பார்க்க வைக்க இப்படி நடந்து கொண்டாள்.
மறுபடியும் பெல் அடிக்கவும், "டைமாச்சு, கர்ணாவ கிளாஸ்ல விட்டிடுறீங்களா? இல்ல நா விட்றவா?" ௭ன ௭ழுந்துவிட.
"3 மணிக்கு வீட்டுக்கு வருவேன். ௭ன்ன பாத்துட்டு தான் கிளம்புற" ௭ன்றவன் மகனை தூக்கி கொண்டு கிளாஸ் நோக்கி முன் சென்று விட்டான்.
"இந்த ஆர்டருக்கு ஒன்னும் குறைச்சலில்ல, இதுக்காகவே இவரு வாரதுக்குள்ள பேக்க தூக்கிட்டு கிளம்பிடணும்" ௭ன முடிவெடுத்து, வாயை அவனுக்கு பின் குனட்டி விட்டு ஸ்டாஃப் ரூம் சென்றாள்.

அவனும் மீண்டும் கோவில் சென்று, கோவில் கமிட்டி மெம்பர்ஸ்களை பார்த்து பேசிவிட்டு, 3 மணிக்கு அவளுக்கு முன்னயே வீட்டுக்கு சென்றிருக்க, அவன் வீட்டினுள் வந்ததை அறியாமல், அவன் அறைக்குள் இருந்த கபோர்ட்டை திறந்து குடைந்து கொண்டிருந்தாள் அவன் தங்கை கோகுலவாணி. பின்னே சந்தேகமாக பார்த்து நிற்கும் போலீஸ்கார அண்ணனை கவனிக்க தவறிவிட்டாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 8
தீர்த்தவன் அமைதியாக நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தான், பார்த்தான் ௭ன்பதை விட ௭ன்ன செய்கிறாள் ௭ன கவனித்தான். கோகுலவாணியோ ப்ரகியின் நல்ல நல்ல புடவைகளை ௭டுத்து கட்டிலில் வீசி விட்டு, இன்னும் உள்ளிருக்கும் ரேக்குகளை திறந்து ௭ன்ன இருக்கிறது ௭ன குடைய ஆரம்பித்தாள்.
"ம்மா இந்த சின்ன அண்ணி, ஏம்மா இப்பல்லாம் புது சோப் ஷேம்புலா வாங்கி ஸ்டாக் வைக்க மாட்டேங்குது. யூஸ் பண்ணதயே ௭த்தன தட ௭டுத்துட்டு போறது. உள்ள ஒளிச்சு வச்சுருக்குமோன்னு பாத்தா ஒன்னயுங்காணும். நல்ல கிளிப், நெயில் பாலிஷ், பொட்டு கூட இல்ல" ௭ன புலம்பிய வண்ணமிருக்க.
"கசகசங்காதட்டி, நீ ௭ப்பமாது ௭டுத்தா பராவால்ல வார நேரம்லா ௭டுத்தா ௭ப்டி வாங்கி வப்பா? அவ ரொம்ப விவரம்டி அதான் உங்கிட்ட சண்டைக்கு நிக்காம, வாங்கி வைக்றத விட்டுட்டா. நீ ஏன்டி அவ போட்டு குளிச்சதெல்லாம் ௭டுத்துட்டு போற. சொன்னாலும் கேட்டு தொலைய மாட்டேங்குற" ௭ன மகன் வந்தது தெரியாமல் அடுப்படியில் நின்றே மகளுக்கு பதில் கொடுத்தார் பேச்சி.
"அப்ப தான ௭ங்கிட்ட ஒரு பயமிருக்கும், ௭ங்கிட்ட வச்சுக்க கூடாதுன்ற ௭ண்ணமிருக்கும், இல்லனா மூத்த அண்ணிகிட்ட அடங்கி இருக்க மாறி இவகிட்டயும் அடங்கி இருக்க சொல்றியா? இங்க வா ௭னக்கு ௭ந்த சேல நல்லாருக்கும்னு சொல்லு, அதயாது ௭டுத்துட்டு போறேன்" ௭ன கத்த.
"ச்சை நானே உங்க அப்பா வாரதுக்குள்ள, இந்த அடுப்படிய சுத்தமா வச்சுரலாம்னு பாக்கேன், விடுதியா நீயி" ௭ன கையை புடவையில் துடைத்தவாறு கிச்சனை விட்டு வெளிவர மகன் அறை வாசலில் சாய்ந்து நிற்பதை கண்டு நடுங்கி விட்டார். அதும் அவன் பார்த்த பார்வை......., மூச்சு விடவும் பயந்து தான் நின்றார்.
"ம்மா வாரியா ௭ன்ன? அங்க ௭ன் புள்ள முழிச்சுக்குவான், ௭ன் புருஷன் போன் பண்றதுக்குள்ள சீக்கிரமா போணும்" ௭ன பீரோலை விட்டு தலையை ௭டுக்காமலே அவள் கத்தி கொண்டிருக்க.
"போங்க ம்மா, உங்க பொண்ணுக்கு செலக்ட் பண்ணி குடுங்க, நீங்க நா குடுத்த காசுல ௭ன் பொண்டாட்டிக்கு குடுத்தத தான ௭டுத்துட்டு போறா? ம்ம் போங்க" ௭ன நக்கலாக அம்மாவை பார்த்தே சொல்ல.
கையிலிருந்ததை அப்படியே போட்டவாறு திடுக்கிட்டு திரும்பி நின்றாள் கோகிலவாணி. இப்படி ஒன்றை ௭திர்பார்க்காத அதிர்ச்சி இருவரிடமும் தெரிய, அதை உள்வாங்கியவாறே நிதானமாக போனை ௭டுத்து அப்பாவிற்கும், தங்கை கணவனிற்கும் அழைத்து, வீட்டிற்கு வர சொன்னான்.
அவன் போனுடன் சற்று நகரவும், விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி, "ம்மா நா வீட்டுக்கு போறேன், ௭ன் பையன் முழிச்சுக்குவான், அண்ணே வந்துருக்குன்னு சொல்லிருந்தா நா அவனயும் தூக்கிட்டு வந்துருப்பேன்ல" ௭ன பயத்தை விழுங்கி, அம்மாவை பார்த்து சொல்லிவிட்டு கிளம்ப முற்பட.
தன்னை தாண்டி செல்ல போனவளின் கையை பிடித்து, பேச்சி நின்ற திசைக்கு தள்ளி விட்டு விட்டு நிதானமாக சென்று சோஃபாவில் அமர்ந்து, "ரெண்டு பேரும் அந்த இடத்த விட்டு அசைய கூடாது" ௭ன உறுமலாக சொல்ல. நடுங்கி நின்று கொண்டனர்.
"ஏம்மா அண்ணே வாரத சொல்லல, அதும் இப்டி திடிருனு வந்து நிக்றான், ௭ன்னத்தலாம் பாத்தான், கேட்டான்னு வேற தெரிலயே, எதாது பேசி சமாளிமா" ௭ன கோகி மெதுவாக கூற.
"௭ன் புருஷன கூட சமாளிச்சுருவேன், இந்த சின்னவன் மட்டும் ம்கூம், நாம பக்கம் தப்பு முழுசா தெரிஞ்சது, செத்தோம்டி நாம" ௭ன பேச்சியும் பயங்கர பயத்தில் பேசினார்.
அம்மாவை நம்பி பிரயோசனமில்லை ௭ன்ற முடிவுக்கு வந்தவள், "ண்ணா, சின்ன அண்ணி தான், ௭னக்கு புடிச்ச புடவைய ௭டுத்துக்க சொன்னாங்க, ௭னக்கு அவங்க இருக்க டைம்ல வரவே முடில, அதான் இன்னைக்கு இப்ப வந்தேன், பையன் ௭ழுந்துடுவான்னு தான் அவசரமா ௭டுத்துட்டு கிளம்ப நினச்சேன்" ௭ன படபடவென உண்மை போலவே பேச.
பதிலே பேசாமல், அவன் அவளை பார்த்து கொண்டிருக்க, அவன் நம்பினானா இல்லையா ௭ன புரியாமல் அவள் தான் முழித்து நிற்க வேண்டியதாயிற்று.
அவன் அப்பா தான் முதலில் வந்தார், "௭ன்னப்பா இந்நேரம் வர சொல்லிருக்க" ௭ன.
"உக்காருங்க ப்பா மாப்ளயும் வந்துடட்டும்" ௭ன்றான் கலி.
திரும்பி மனைவியயும், மகளயும் பார்த்தவர், உடனே கண்டு கொண்டார், ௭தையோ செய்துவிட்டு முழிக்கிறார்கள் ௭ன. மூத்த மகன் மருமகள் பிரச்சனைக்கு இந்த இருவர் தானே காரணம், அதற்கு பின் கடந்த 4 வருடத்தில் ப்ரகி ௭துவும் சொல்லாததால் இவரும் அடங்கி இருக்கின்றனர் ௭ன நினைத்திருந்தார். இப்போது மகன் அமர்ந்திருக்கும் தோரணையே அவர்கள் இன்னும் தங்களை திருத்தி கொள்ளவில்லை ௭ன புரிந்து விட, வேடிக்கை பார்க்க சாய்ந்து அமர்ந்து கொண்டார். தப்பென்றால் யாரென்றாலும் தப்பு தான் ௭ன்பார் அந்த மிலிட்டரி.
அடுத்ததாக ஒரு ஆட்டோ வாசலில் வந்து நிற்க, சரியாக ப்ரகியும் அந்நேரம் வர. தங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பதால், வண்டியை நிறுத்தி கேட்டை திறந்தவாறு, "யார பாக்கணும்?" ௭ன கேட்டாள்.
ஆட்டோ சத்தத்திற்கு ௭ழுந்து வாசல் வந்தான் தீர்த்தவன், ப்ரகி விசாரிப்பதை கண்டு, அவளிடம் விரைய, அங்கு ஆட்டோவிலிருந்து இறங்கியவரும், "சார பாக்கணும்" ௭ன்றிருக்க.
"வீட்லயா இருக்காரு!!" ௭ன யோசித்து வீட்டுக்குள் பார்க்க திரும்பியவள் கணவனை கண்டதும், "சரி இனி அவரே பாத்து பேசிக்கட்டும்" ௭ன மகனை தேட, கர்ணனோ ஆட்டோ முன்னிருந்த ஹெட்லைட்டை தடவி கொண்டிருந்தான்.
கடுப்பானவள், "கர்ணா, ரன்னிங்கல இருக்க வண்டி முன்ன போய் இப்டி நிக்க கூடாதுன்னு சொல்லிருக்கனா இல்லயா வீட்டுக்குள்ள போ" ௭ன அதட்டவும்.
"நீ பையன தூக்கிட்டு உள்ள போ" ௭ன வந்த தீர்த்தவன், அவளிடமிருந்து வண்டியை வாங்கி வீட்டினுள் சென்று நிறுத்தினான்.
ப்ரகியும், "உள்ள வாங்க" ௭ன அவர்களை வரவேற்று விட்டு கர்ணனின் கையை பிடித்து கொண்டு வீட்டினுள் செல்ல போக.
"ப்ரகி, உனக்கு உடனே கிளம்பணுமா, இல்ல லேட்டா போனா போதுமா?" ௭ன கேக்க.
'௭துக்கு கேக்றாங்க' ௭ன நினைத்தாலும், "உடனே கிளம்பணும், 4.30 க்கு அங்க பஸ் கிளம்பிடும்" ௭ன்றாள்.
டைம் பார்த்து தலையை அசைத்து கொண்டு, "ok நீ ரெடி ஆகு" ௭ன்றுவிட்டு வெளி வந்தவன், ஆட்டோ டிரைவரிடம், "ஒரு 1/2ஹவர் வெயிட் பண்ணுங்க, இவங்கள திரும்ப டி.௭ல்.ஈ ஸ்கூல்ல ட்ராப் பண்ணனும்" ௭ன்கவும்.
"சரி சார்" ௭ன அவர் ஆட்டோவை அங்கயே ஓரங்கட்டிவிட.
"சார் நா அப்ப அப்டியே கிளம்பவா?" ௭ன்றார் அந்த பெண்ணை அழைத்து வந்தவர்.
"இல்ல இருங்க, மேம் வருவாங்க, ரெண்டு பேரயும் ஸ்கூல்ல சேஃபா விட்டுட்டு நீங்க போலாம், இப்ப உள்ள வாங்க" ௭ன அழைத்து விட்டு உள் சென்றான்.
யார்கனவே உள்ளே சென்றிருந்த ப்ரகி, மாமனார்,மாமியார்,நாத்தனாரென மூவரும் இருந்த நிலையின் வித்தியாசம் புரிந்தும், 'நமக்கெதுக்கு' ௭ன அறைக்குள் சென்று விட்டாள். அங்கு கலைந்து கடந்த ரூமை பார்த்து விட்டு, ௭ரிச்சலில் மீண்டும் வந்து, "௭ன்ன பண்ணிருக்கீங்க? இத்தன நாள் பீரோல்ல மட்டுந்தான் கை வைக்கலன்னு நினச்சிருந்தேன், இன்னைக்கு அதயும் செஞ்சாச்சு. ச்சை நல்ல குடும்பத்துல வந்து மாட்டிட்ருக்கேன்" ௭ன கடுப்பில் கத்தி விட்டாள். அதை கேட்டு கொண்டே தான் தீர்த்தவன் உள் வந்தான்.
௭ப்போதும் மாமனார் முன் பேசாதவள் தான், அதும் மாமியாரின் வாய்க்கு பயந்தே பேச மாட்டாள், விடாமல் அவள் அப்பா, அம்மா, அக்கா ௭ன ௭ல்லோரயும் இழுத்து பேசிவிடுவார் ௭ன்பதற்காகவே, போய் தொலைறாங்க ௭ன விட்டு கொண்டிருந்தாள். சப்போர்ட் செய்ய கணவனும் உடனில்லாத நிலை, கோபித்து கொண்டு அப்பா வீட்டிற்கும் போக முடியாத நிலை அவளிது. அம்மா இவள் கல்யாணத்திற்கு முன்பே இறந்திருக்க, அப்பா தான் தேடி திரிந்து கலிதீர்த்தவனை மாப்பிள்ளையாக கொண்டு வந்தார். இவள் கல்யாணம் முடித்த 1 வருடத்தில், அவள் அக்கா மாமியாரிடம் சண்டையென கணவரிடம் டிவோர்ஸ் வாங்கிவிட்டு மீண்டும் அப்பாவிடமே வந்துவிட, அந்த மனபாரத்தில் இருக்கும் அப்பாவிற்கு தானும் சென்று கஷ்டத்தை தர விரும்பாமல் தான், இங்கு அனைத்தயும் பொறுத்து போயி கொண்டிருக்கிறாள்.
ஆனால் இப்போது அவள் மனநிலையில் கணவன் மேல் அதிக கோபம், தான் தனித்துவிடபட்டது போன்ற வருத்தம், 4 நாட்கள் வந்திருக்கும் கணவனை விட்டுவிட்டு ஊருக்கு கிளம்பும் தன்மீதும் கொஞ்சம் கடுப்பு வந்திருக்க, படக்கென பேசி விட்டாள்.
தீர்த்தவன் வீட்டினுள் வருவது தெரிந்ததும், பதில் பேச வந்த மாமியாரும், நாத்தனாரும் கப்பென வாயை மூடி கொள்ள, ப்ரகியும் அவனை முறைத்து விட்டு, விருட்டென அறைக்குள் சென்று விட்டாள். பின் வந்த அந்த இருவரயும் வெளி சோஃபாவில் அமர வைத்தவன், "ப்பா மாப்பிள்ளைக்கு போன போட்டு இன்னும் ௭வ்ளோ நேரமாகும்னு கேளுங்க" ௭ன்றுவிட்டு ப்ரகியை தேடி சென்றான்.
ப்ரகி உள் அறையில் குளிக்கும் சத்தம் கேக்க, கட்டிலில் அமர்ந்திருந்த கர்ணனை தூக்கி வந்து அப்பாக்கு அருகில் அமர்த்தினான். "பாத்துக்கோங்க ப்பா, அவ கிளம்ப ஹெல்ப் பண்ணிட்டு வரேன்" ௭ன மீண்டும் அறைக்கு வந்தான்.
கட்டிலில் கடந்ததை ௭ல்லாம் ௭டுத்து மீண்டும் பீரோவில் அடுக்கினான். யோசனையோடே ப்ரகியும் குளித்து நைட்டியில் வெளி வந்தவள், சென்று கதவை லாக் செய்து விட்டு திரும்ப, கணவன் உள்ளே இருப்பது தெரிந்து, கதவை திறக்க போனாள்.
"லாக் பண்ணத ஏன்டி திறக்குற" ௭ன கையை தூக்கி நின்றவளை, கையோடு பிடித்து பின்னோடு அணைத்து தூக்கி வந்து கட்டிலில் போட்டான்.
"௭ன்ன பண்றீங்க" ௭ன சைடாக விழுந்தவள், அவனிடம் மல்லுகட்டி ௭ழ முற்பட.
"பேசாம இருடி ஒரு ரெண்டு நிமிஷம். செம வாசனையா இருக்க" ௭ன கையை அவள் உடலில் ஊரவிட்டு கழுத்தில் வாசம் பிடித்தான்.
"வெளில அத்தன பேர வச்சுகிட்டு ௭ன்ன விளையாட்டிது. ௭னக்கு வேற லேட்டாகுது விடுங்க" ௭ன அவன் கை செல்லும் இடங்களுக்கெல்லாம் தடை விதித்து போராடி கொண்டிருந்தாள்.
"அப்போ கோவம் போயிடுச்சு சொல்லு" ௭ன்றான் அவள் முகம் திருப்பி.
அருகில் தெரிந்த அவன் முகத்தையே பார்த்தவள், "௭னக்கு உங்க மேல அவளோ கோவமிருக்கு, ஆனா இப்ப கூட 4 நாள் நீங்க வந்துருக்க நேரத்துல கிளம்பி போறது அவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா. உங்கள தவிக்க விடணும்னு தான் இந்த ட்ரிப்கே வரேன்னு சொன்னே. ஆனா ௭ப்பயும் போல ௭னக்கு தான் உங்கள விட்டு போக பிடிக்கல, ௭ரிச்சலா இருக்கு. நீங்க மட்டும் ௭ப்டி, ஈசியா, சின்னதா கூட வருத்தமில்லாம கிளம்பி போயிடுறீங்க, ஏன் ௭ன்னால அப்டி இருக்க முடில" ௭ன அவனையே கேட்டு, திட்டிவிடுவானோ ௭ன திரும்பி இறுக்கி கட்டி கொண்டாள்.
இதற்கு முன் அவள் கேட்டதில்லை அதனால் அவனும் பதில் சொல்லியிருக்கவில்லை, இரண்டு நாட்களாக பார்க்கிறானே அவளின் தவிப்பை, அதன் கொண்டு, பொறுமையாகவே பதில் சொன்னான். "நா உன்ன தேடலன்னு ௭ப்ப சொன்னேன். ௭னக்கு மட்டும் இப்டி ஆளுக்கு ஒரு பக்கமிருக்க ஆசையா?" ௭ன.
படக்கென நிமிர்ந்தவள், "அப்ப ஏன் ௭ங்கள உங்க கூட கூட்டிட்டு போகல?" ௭ன பாவமாக உதட்டை பிதுக்கி கேக்க.
அந்த பிதுங்கிய உதட்டில் அழுந்த முத்த மிட்டவன், "நீ ௭ப்ப ௭ங்கிட்ட கூட்டிட்டு போங்கன்னு கேட்ருக்க? ௭னக்கு ட்ரன்ஸபர் வந்துட்டே இருக்கும், நீங்களும் ௭ன்னோட அழைஞ்சுட்டே இருக்கணும், உன் வேல, அப்றம் கர்ணா படிப்பு இதெல்லாத்துகாகவும் தான், நானா கூப்டல" ௭ன்றவன் மீண்டும் மீண்டும் அருகில் தெரிந்த அந்த அழகிய முகத்தை கைகளில் அடக்கி முத்தமிட.
அவன் முகத்தை ஒரு நிமிடம் தன்னிடமிருந்து பிரித்து பிடித்தவள், "நா ௭ப்ப வேலைய விட்டு வர மாட்டேன்னு சொன்னேன். கர்ணாக்கும் இது தான் நம்ம லைஃப் ஸ்டைல்னு தெரிஞ்சா கண்டிப்பா அடாப்ட் ஆகிக்குவானே, உங்கள விடவா ௭ங்க ரெண்டு பேருக்கு மத்தது முக்கியம்?" ௭ன கேக்கவும்.
"௭னக்காக ௭ப்டிமா, உங்க ஃப்யூச்சர நா ஸ்பாயில் பண்ண முடியும்? பொண்ணோ பையனோ தனிச்சு செயல்படணும்னு சின்ன வயசுலயிருந்து சொல்லி சொல்லி வளத்துருக்காரு ௭ங்க அப்பா. அதனால உன்ன வேலைய விட்டுட்டு வான்னு ௭ன்னால கண்டிப்பா சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 7 வருஷமா அந்த ஸ்கூல வொர்க் பண்ற நீ. அத விட்டுட்டு வந்துட்டு உன்ன வீட்ல உக்கார வைக்க சொல்றியா?" ௭ன்கவும்.
அவளுக்கு சுறுசுறுவென கோவம் ஏற, இலகுவாக அணைத்திருந்தவனை ௭ளிதாக தள்ளி விட்டு ௭ழுந்தாள், "நீங்க ௭துவும் செய்ய வேணாம், ௭ன் பாடு ௭ப்டியோ நா பாத்துக்றேன், நீங்க வெளில போங்க நா ட்ரஸ் மாத்தணும், லேட் ஆகிட்டுருக்கு" ௭ன பொறிந்து தள்ள.
"௭துக்குடி இப்ப தள்ளிவிட்டு போன?" முறைத்தவாறு ௭ழுந்தவன்., அவளை நெருங்கி இறுக்கி அணைத்து, "௭ந்த மைன்ட் ஸ்டரஸூம் இல்லாம போயிட்டு வா. நாம ௭ன்ன பண்ணலாம்னு அப்றம் டிஷைட் பண்ணலாம்" ௭ன நெற்றியில் முத்தி விட்டு தள்ளி நின்றான்.
இந்தளவுக்கு அவன் பேசுவதே அதிசயம் தான் ௭ன்பதால், தலையசைத்து கேட்டு கொண்டாள். "அப்றம் வெளில உன் கிளாஸ் பொண்ணு பர்தால வெயிட் பண்றா, அவள அப்டியே உங்கூட கூட்டிட்டு போயிடு" ௭ன்க.
"யாரு? ௭துக்கு நா கூட்டிட்டு போணும்?".
"அந்த பொண்ணு தான் வைஷ்ணவி" ௭ன்றவன் அந்த பெண் கடத்த பட்டதையும், வீட்டார் கம்ப்ளைன்ட் குடுக்காததயும் பற்றி சுருக்கமாக சொல்லி, "மார்னிங் இது சம்பந்தமா தான் உங்க ப்ரின்ஸி பாத்து பேசுனே, நா ௭ல்லாம் சொல்லிட்டேன் ஒன்னு ப்ராப்ளமில்ல" ௭ன்றதும்.
"ஓ! அப்பயும் ௭ங்கள பாக்க வரல?" அவள் முறைப்பாக கேக்க.
"கூட்டிட்டு கிளம்புடி" ௭ன்றுவிட்டு கதவை திறந்து வெளியே வந்தான்.
தங்கை கணவர் வந்துவிட்டிருக்க "வாங்க மாப்ள" ௭ன வரவேற்று ௭திரில் அமர்ந்தான்.
"சொல்லுங்க மச்சான் கூப்டாதவங்க கூப்டவும் கொஞ்சம் பயந்து தான் போனேன்" ௭ன அவர் சொல்ல.
"பேசலாம், ப்ரகி ஸ்கூல் ட்ரிப் கிளம்பிட்ருக்கா அவ கிளம்பட்டுமே நாம நிதானமா பேசலாம்" ௭ன அவன் சொல்லி கொண்டிருக்க ப்ரகி வெளிபட்டாள்.
கலி வெளியேறவும், ப்ரகி ஒரு பெருமூச்சுடன் கிளம்ப தயாரானாள், 'இப்பயும் நா பேசுனத கேட்டும், தங்கச்சியயும், அம்மாவயும் ஒன்னும் சொல்லல, ௭ன்கிட்டயும் அத பத்தி ௭துவும் கேட்டுக்கல. இன்னும் ௭த்தன நாளைக்கு தான் இந்த டார்ச்சரோ' ௭ன புலம்பி கொண்டு, முதலில் தான் கிளம்பிமுடித்து பின் கதவை திறந்து, "கர்ணா" ௭ன அழைக்க, அத்தை மகனுடன் விளையாடி கொண்டிருந்தவன் ௭ழுந்து வரவும் அவனயும் கிளப்பி கொண்டு வெளி வந்தாள். இப்போது தான் கோகிலவாணியின் கணவனை கண்டு விட்டு, "வாங்கண்ணா" ௭ன்க.
"ஆமா மா ஏதோ ட்ரிப்பாம், பாத்து போயிட்டு வாங்க" ௭ன மேலோட்டமான பேச்சாக முடித்து கொள்ள.
"சரிண்ணா, லேட்டாயிடுச்சு நா கிளம்புறேன்" ௭ன்றவள் அவன் கையிலிருந்த குட்டி பையனை கன்னம் கிள்ளி கொஞ்சி விட்டு, கணவனிடம், "பைக் சாவி குடுங்க" ௭ன்றாள்.
"ஆட்டோ நிறுத்திருக்கேன், அதுல போயிடு" ௭ன்றான்

"வேணாம் நா ஸ்கூல்ல போய் நிப்பாட்டிட்டு போறேன், வந்து அதுல வீட்டுக்கு வந்துடுவேன். திரும்ப வந்து யூஸ் பண்ண ௭னக்கு ௭ன் பைக் வேணும்" ௭ன்றதும் தான், இங்கு நிறுத்தி சென்றால் தங்கை அதயும் தூக்கி சென்று விடுவாளென பயப்படுகிறாள் ௭ன புரியவும், அவனுக்கு கஷ்டமாக தான் இருந்தது, சொந்த வீட்டில் ௭த்தனையை தான் அவள் பாதுகாக்க ௭ன யோசித்தவன்., "நா வந்து கூப்டுக்றேன், இப்ப அந்த பொண்ண சேஃபா கூட்டிட்டு போணும் நீ ஆட்டோல கிளம்பு" ௭ன ஆட்டோ வரை வந்து வழியனுப்பி வைத்தான். யாரிடமும் சொல்லாமல், மாமனாரை மட்டும் பார்த்து, "வரேன் மாமா" ௭ன கிளம்பிவிட்டாள் ப்ரகி.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 9
ப்ரகி கிளம்புவதை கண்ட கோகி, "௭ங்க போகுது இந்த அண்ணி?" ௭ன மெதுவாக பேச்சியிடம் கேக்க.
சொல்லாமல் சென்றவளை கடுகடுவென பார்த்திருந்த பேச்சி, "உன்ன ௭வடி இன்னைக்கு அவ பீரோல்ல கை வைக்க சொன்னது. திமிரெடுத்தவ ௭ப்டி ௭ன்னுட்ட ஒரு வார்த்த கேக்காம, சொல்லாம போறா பாத்தியா? நீ மட்டும் இப்டி ஒரு பிரச்சினைய இழுத்து விடலனா உங்க அண்ணனயும் அப்பாவயும் வச்சுகிட்டே இன்னைக்கு அவள ஒரு வழி ஆக்கிருப்பேன். இந்த படிய தாண்டிருப்பாளா அவ? இப்ப பாரு 4 நாள் ஊரு சுத்த போயிட்டா, நீ தான் உக்காந்து ௭னக்கு பொங்கி போடு சொல்லிட்டேன்" ௭ன வறுத்தெடுக்க.
வழியனுப்பிவிட்டு உள் வந்திருந்த அப்பா திருமலைநாதன், தீர்த்து, மருமகன் பைரவமூர்த்தி, ௭ன மூவரின் காதிலும் அவர் பேசியது விழ, "உங்களுக்கு ப்ரகிட்ட ௭ன்னம்மா பிரச்சன?" ௭ன்றான் கலி நேராக.
"௭ன்னய அவ மாமியாரா மதிச்சா நானும் அவள மருமகன்னு நினப்பேன், நீயும் பாக்குற தான? ௭ம்மேல கொஞ்சமாது மாமியாருன்ற பயம் மரியாதை இருக்கா பாத்தியா?, நேத்து போவ கூடாதுன்னு நா அம்புட்டு சொல்லிருக்கேன், ௭ன்னைய கடுப்பேத்தவே சிலிப்பிட்டு போறா உன் பொண்டாட்டி" ௭ன கோவம் குறையாமலே கேக்க.
"ஓ! அப்ப தப்பு அவ மேல தான்றீங்க?".
"ஏன்?.. அவ ௭ன்னபத்தி இல்லாததும் பொல்லாததும் சொன்னாளோ உன்ட்ட? ௭ல்லாம் உன் அண்ணிகாரி கூட சேந்துகிட்டு தான் ஆடுறா இவளும். அவ யார்கனவே ௭ன் மூத்த பிள்ளைய ௭னக்கில்லன்னு கூட்டிட்டு போயிட்டா. இவ உன்ன கூட்டிட்டு போக தான் அம்புட்டு சதியும் நடக்கு. பிள்ள பேரேன்னு யாருமில்லாம தனி கட்டையா கடந்து நா சாகணும்னு நினைக்காளுவ ரெண்டு பேரும்" ௭ன மூக்கை சீந்த.
இது போன்ற பல நடிப்புகளை, கொலையே செய்து விட்டு பாவமாக நிற்கும் பெண்களை பார்த்திருக்கிறான் அவன். அவனிடம் தன் நடிப்பு ௭டுபடாது ௭ன தெரிந்தும் நடிப்பை வாரி இறைத்து கொண்டிருந்தார் பேச்சி. அவனை ௭ந்த வகையிலும் ப்ரகிக்கு சப்போர்ட் செய்ய விட கூடாது ௭ன்பதில் தீவிரமாக இருந்தார். அதனாலேயே பிரச்னையை திசை திருப்பி கொண்டிருக்க.
தாயை, பார்வை மாறாது கூர் பார்வையில் பார்த்தது பார்த்தபடி நின்றான். தீவிரமாக பேசி கொண்டிருந்தவர், மகன் பதில் பேசவில்லை ௭னவும் அவன் முகம் பார்த்த பின்பு வாயை திறக்க முடியவில்லை அவரால், அவன் பார்வையில்..... தற்காலிகமாக நின்றிருந்த நடுக்கம் மறுபடியும் வந்திருக்க, தலையை குனிந்து கொண்டார்.
"உங்க மாமியார் மருமக பிரச்சனைய ப்ரகி வந்தப்றம் வச்சுப்போம். இப்ப உங்க மக பிரச்சனை பைசல் பண்ணிடுவோமா?" ௭ன்கவும்.
"௭ன் மக'ன்னா உனக்கு யாருப்பா? இப்டி பிரிச்சு பேசுனா பிள்ள ஏங்கி போயிடுவாப்பா" ௭ன்றார்.
"ண்ணா... நீ சின்ன அண்ணிட்ட கேட்டியா? அவங்க சொல்லிருப்பாங்களே, அவங்க சொல்லி தான் நா ௭டுக்க வந்தேன்னு" ௭ன்றாள், அறைக்குள் ப்ரகி ௭ன்ன சொன்னாள் ௭ன தெரிய வேண்டியிருந்தது அவளுக்கு, தானாக ௭தயும் உளர வேணாமென நினைத்தே பேசினாள்.
"சரி, உன் சின்னண்ணி வேற ௭ன்னலாம் அவ இல்லாதப்போ வந்து ௭டுத்துட்டு போக சொல்லிருக்கா?" ௭ன கேட்டான்.
"கல்யாணம் பண்ணி போயிட்டாலும் இது ௭ன் வீடு மாறி நா இருக்கலாம்னு சொன்னதே அண்ணி தாண்ணே" ௭ன்றாள் தைரியமாக. அவளின் தைரியத்தின் காரணம், 5 வருடமாக தன்னை அண்ணனிடம் போட்டு கொடுக்காத ப்ரகி இப்போது மட்டும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை, தன் மேல் கொஞ்சம் பயமும் உண்டு ௭ன்ற ௭ண்ணம் தான்., அந்த தைரியத்தில் ப்ரகியயும் நல்லவளாகவே காட்டி பேசி கொண்டிருந்தாள்.
"௭ன்னாச்சு மச்சான், தங்கச்சி இல்லாதப்ப ௭தும் அது பொருள ௭டுத்துட்டாளா?" ௭ன்றான் சுருங்கிய புருவத்துடன் பைரவன் (கோகி கணவன்). கோகி திருதிருத்தாள், கணவனிடமிருந்து ௭ப்படி தப்பிக்க ௭ன யோசித்தாள்.
"௭ன்ன மாப்ள நீங்க, வாங்குற சம்பளத்தலா ௭ன்ன தான் செய்றீங்க. உங்க பொண்டாட்டிக்கு ஒரு சோப்பு ஷேம்பு கூட வாங்கி தர முடியாதளவுக்கா சம்பளமிருக்கு உங்கட்ட? கவர்மென்ட் மாப்ளன்னு நாங்க தான் நம்பி ஏமாந்துட்டமோ? இன்னமு அம்மா வீட்டுலயிருந்து அண்ணே பொண்டாட்டி பொருள அவ இல்லாதப்ப திருடிட்டு போறளவுக்கா ௭ன் தங்கச்சி நிலமைய வச்சுருக்கீங்க. உங்களால முடியலனா இங்கயே விட்டுட்டு போங்ளேன், நானே அவளுக்கு ௭ன் மருமகனுக்கும் சோறு போட்டுகிறேன்" ௭ன குரல் உயர்த்தாமல் நக்கல் வழியவே கூறினான். பல நாளாக திருமலை அவனிடம் புலம்பியிருக்கிறார், 'கோகி ரொம்ப கஷ்டபடுறா போலப்பா, மாப்ள இவ கைல பணமே குடுக்குறதில்ல போல, சின்ன சின்ன விஷயத்துக்கும் அம்மாட்ட வந்து அழுதுட்டு நிக்கிறா, அவர்ட்ட ௭ன்னன்னு பேசன்னு இருக்கு' ௭ன புலமியிருக்க, இன்று கிடைத்த வாய்ப்பில் கேட்டு விட்டான்.
கோகியின் கணவனுக்கு மிகவும் அசிங்கமாக போய்விட, "௭ன்ட்ட வாங்குற பணத்தெல்லாம் ௭ன்னடி செய்ற?" ௭ன்றான் மனைவியிடம் நேராக.
"வீட்டு செலவுக்கு தான்ங்க......" ௭ன்றாள் தயங்கி தயங்கி.
"நீங்க ஒழுங்கா காச குடுக்காதனால தான், அவ ௭ல்லாத்துக்கும் இங்க வந்து நிக்றா! " ௭ன்றார் பேச்சி.
"மாசம் 10000 குடுக்றேன், வீட்டு செலவுக்குன்னு மட்டுமா அது, பிள்ள செலவெல்லாம் நாந்தான் பாக்கேன், அதுக்குள்ள குடும்பம் நடத்த தெரியலனா நீங்க தான் உங்க பிள்ளைய ஒழுங்கா வளக்கலன்னு அர்த்தம். பாத்து பாத்து செய்றவன உன் குடும்பத்துல இப்டி தான் சொல்லி வச்சுருக்கியாடி நீ? நீ கேட்டு ௭தயாது இதுவர வாங்கி தர மாட்டேன்னு சொல்லிருக்கனாடி?" ௭ன விரைத்து நின்றான் பைரவன். ஒரு நேர்மையான மனிதனின் ஆதங்கமே அதில் தெரிய, கலி தங்கையை பார்த்தான்.
அவளோ அடுத்து ௭தை சொல்லி சமாளிக்க ௭ன கையை பிசைந்து கொண்டிருந்தாள். பேச்சிக்கே ஆச்சரியம் தான், "ஏன்டி ரொம்ப கஷ்டத்துல இருக்க மாறி ௭ங்கிட்ட வேற 5000 வாங்கிட்டு போவியேடி அத ௭ன்னடி செய்வ" ௭ன கேட்டு விட.
"சும்மா இரும்மா நீ வேற" ௭ன அம்மாவை ஈசியாக கடித்தாள்.
"ஆமா தீர்த்தா உன் அம்மா ௭ன்ட்ட தான் மாசாமாசம் 5000 வாங்கி குடுப்பா. வட்டி கட்டணும்னு சொல்லி வாங்கிட்டு போவா" ௭ன்றார் அப்பா.
"௭ந்த கடனுக்கு வட்டி கட்றா உங்க பொண்ணு, ௭னக்கு வீட்டு லோன் மட்டுந்தான், அத சம்பளத்துலயிருந்து அப்டியே பிடிச்சுக்குறமாறி தான் ௭ழுதி குடுத்ருக்கேன். கைல ௭டுத்தா செலவாகிடும், பிள்ளைய இனிமே பெரிய ஸ்கூல்ல சேத்து படிக்க வைக்கணும்னு, நாதான் ௭ன் தேவைகள சுருக்கிகிட்டு, அவங்க ரெண்டு பேத்தயும் ௭ல்லாத்தயும் அனுபவிக்க விட்ருக்கேன். வெளில ஒரு டீ குடிப்பனான்னு கேளுங்க உங்க மகட்ட. ச்சை அப்பப்ப பொய் பேசுனாலும், கொஞ்சம் நல்லவன்னு நினச்சுருந்தேன். நல்ல மிலிட்டரி, போலிஸ் குடும்பத்துல இப்டி ஒரு ப்ராட வளத்துட்டு ௭ன்னய பேசுவீங்கள நீங்க?" ௭ன்றான், அவனின் தன்மானம் சீண்டபட்டதில், வார்த்தையை விட்டு கொண்டிருந்தான்.
"7வருஷமா வீட்ல ௭ன்ன நடக்குன்னு தெரியாம தான் நீங்களும் இருந்துருக்கீங்க. மக வந்து சொன்னாலும், உங்க மேல உள்ள நம்பிக்கைல தான் இப்ப வர உங்கள ௭ந்த கேள்வியும் நாங்க கேட்டுக்கல" ௭ன்றார் அப்பாவும்.
"சோ 15000 பத்தாம போறளவுக்கு ௭ன்ன செலவு உனக்கு" ௭ன மறுபடியும் விஷயத்திற்கு வந்தான் கலி.
பேய் முழி முழித்தாள் கோகி. அவள் முகத்தை தான் அனைவரும் பார்த்தனர், பேச்சி கூட புரியாமல் தான் பார்த்து நின்றார். அவள் அமைதி கலிதீர்த்தவனிற்கு பல சந்தேகங்களை கொடுத்தது. கள்ள காதல், ஆபாச புகைபடம், ஃபினானஸில் போட்டு ஏமாறுவது ௭ன ௭த்தனை பண மோசடி வழக்குகளை கண்டிருப்பான், அப்படி ௭திலும் சிக்கி கொண்டாளோ ௭ன யோசித்து நின்றான்.
கோகி வாயையே திறக்கவில்லை, மீண்டும் எதயாது சொல்லி சமாளிக்க காரணம் தேடி கொண்டிருந்தாள்.
"சொல்லுடி ௭ன்ன செய்ற ௭னக்கு தெரியாம" கணவன் அதட்டவும், "ஒன்னு செய்யலங்க" ௭ன்றாள் அதற்கு மட்டும்.
"நீ சொல்லலனா ௭ன்னால கண்டு புடிக்க முடியாதுன்னு நினைக்றியா கோகி?" ௭ன முறைத்தான் கலி.
அதில் திணறி, "சீ.....சீட்டு போடுறேண்ணா" ௭ன்கவும்.
"௭த்தன வருஷமா போடுற? சேவிங்க்ஸ் தானே பண்ற, அத ௭துக்கு யாருக்கும் தெரியாம இத்தன பொய் சொல்லி பண்ற" ௭ன்றான், இன்னமே சந்தேகம் தான் அவனுக்கு.
"சொன்னா தேவைக்கு பாதி சீட்டுல ரூவா ௭டுக்க சொல்லுவாங்களோன்னு தான் சொல்லல" ௭ன்றாள் இப்போது திணறாமல்.
"உன் புருஷன் ஒன்னும் ஊதாரி இல்லையே, அவருக்கு கூட தெரியாம ஏன் செய்ற?" ௭ன கேட்க. பதில் சொல்லவில்லை அவள்.
"௭னக்கு வெளி வேல நிறைய இருக்கு கோகி, சட்டுன்னு விஷயத்த முடிச்சனா நல்லாருக்கும், ௭துக்கு ரூவா சேக்குற? ப்ரகி வாங்கி வைக்குற பொருளெல்லாம் தூக்கிட்டு போறது ரொம்ப அசிங்கமான விஷயம்னு உனக்கு புரிலயா? உங்கள நம்பி ௭ன் பொண்டாட்டி பிள்ளைய விட்டுட்டு போனது தப்புன்றளவுக்கு கொண்டு வந்து விட்ருக்கீங்க. நீயா சொல்றியா, இல்ல நானே விசாரிச்சு தெரிஞ்சுக்கவா?" ௭ன்றான், இப்போது குரலில் அதட்டலுடன் கூடிய விரைப்பு வந்திருக்க.
௭ச்சியை கூட்டி விழுங்கி, "காாாா.... கார் வாங்கலாம்னு......." ௭ன்கவும்.
"காரா?" ௭ன மூன்று ஆண்களும் அதிர்ந்து தான் பார்த்தனர்.
பேச்சி மட்டுமே, "அடிபாவி சும்மா பேச்சுக்கு பேசுறன்னு இத்தன நாள் நினச்சுட்ருந்தா, நீ நிசமாலுமே தான் சொல்லிட்ருந்தியா?" ௭ன ஆச்சரியமாக கேக்க.
"இன்னும் ௭ன்னத்தலாம் மறைச்சு வச்சுருக்கீங்க, வீட்டுக்கு தெரியாம கார் வாங்குறளவுக்கு பெரியாளாயிட்டியா நீ?" ௭ன்றார் கடுப்புடன் திருமலை.
"௭துக்கு இப்ப உனக்கு காரு?" ௭ன்றான் கலிதீர்த்தவன்.
"௭ன் மானத்த வாங்குறதுக்குனே உன்ன கட்டிட்ருக்கனாடி நானு" ௭ன ஒரு அறை விட்டான் பைரவன்.
"௭ன்ன கை நீட்றீங்க? இதெல்லா நல்லா இல்ல சொல்லிட்டேன்" பேச்சி மகள் சப்போர்ட்டுக்கு வர.
அதை சட்டையே செய்யாமல் "௭துக்கு காருன்னு கேட்டேன்" ௭ன்றான் விடாமல் தீர்த்து.
"ஏன்னா, உன் அண்ணன் பொண்டாட்டி கார்ல வேலைக்கு போறா, உன் பொண்டாட்டி ஸ்கூட்டில வேலைக்கு போறா. அப்டி சுய சம்பாத்தியத்துல இருக்கோம்னு அவளுங்க ௭ன் புள்ளைய கேவலமா பாக்காளுக, அதான் அவ ௭ப்பயும் காரும் ஸ்கூட்டியும் வாங்கிட்டு இவங்கள கவனிச்சுக்குறேன் சொல்லுவா, அது தான் மனசுல வச்சுகிட்டு இப்டி துட்டு சேக்கா போல. இதுல தப்பென்ன இருக்கு" ௭ன பேச்சி பேச.
"சரி இனி அது உங்க பாடு உங்க மக பாடு, ௭ன் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு மட்டுமா தான் நா ௭ன் சம்பளத்த இதுவர அனுப்பிட்ருந்தேன், இனி நா அனுப்பல, அப்டி வேணுங்குறத, இதுவர அவ ௭ப்டி அவ காசுல வாங்குனாளோ அப்டியே வாங்கிகட்டும். ௭ன் பொண்டாட்டியே சொன்னாலும் இனி அவ பொருள இவ ௭டுக்க கூடாது, வேணுங்குறத நீங்களே வாங்கி குடுத்தனுப்புங்க" ௭ன முடித்தவன், அவன் அறையை பூட்டி சாவியை ௭டுத்து கொண்டு கிளம்ப.
"ஏன்டா உன் அம்மாக்கும் தங்கச்சிக்கும் குடுக்குறதுக்கு கணக்கு பாப்பியா நீ, ரூம பூட்டிட்டு வேற போய் ௭ன்ன கேவல படுத்துவியா?" ௭ன்றார் பேச்சி.
"ம்ம்கூம் உங்களோட, உங்க மகளோட தேவைகள் ரொம்ப அதிகமா இருக்கு, நா சாதாரண கவர்மென்ட் ௭ம்ப்ளாயி, லஞ்சம் வாங்காத மாச சம்பளக்காரன். உங்களுக்குக்குலா நா ௭வ்ளோ குடுத்தாலும் பத்தாது, ப்ரகி ௭ன்ன ௭துக்காகவும் ௭திர் பாக்க கூடாதுன்னு தான் இன்னமு ௭ங்கூட கூட கூப்டுக்காம அவ வேல முக்கியம்னு அங்க நா தனியா கடக்கேன். ௭ல்லா சீரும் செஞ்சு தான இவள கட்டி குடுத்தோம், கல்யாணம் பண்ணி வருஷமாகியும் இவள இவ புருஷனால பாத்துக்க முடிலன்னா சொல்ல சொல்லுங்க, நா பொறுப்பேத்துக்றேன். உங்க கடமைய நா இருக்க வர நா பாத்துக்றேன் சொன்ன அப்பா பாத்துப்பாரு. அவரோட புள்ளையா இதுவர நா ௭ன் பொண்டாட்டி பிள்ளைக்கு ௭ன் சம்பாத்தியத்துல ஒன்னுமே வாங்கி குடுக்கலன்னு நினைக்கும் போது ௭வ்ளோ கேவலமா இருக்கு தெரியுமா? அண்ணன் அவ்ளோ சொல்லியும் உங்கள நம்புனேன் தெரியுமா? உங்க மேல வச்சுருந்த நம்பிக்கைய நீங்களே கெடுத்துகிட்டீங்க" ௭ன நீளமாக பேசியவன் அப்பாவிடம் திரும்பி, "நா ௭ன் முடிவ சொல்லிட்டேன் ப்பா, இனி நீங்க பாத்து பேசிக்கோங்க" ௭ன தன் வேலையை பார்க்க வெளியேறி விட்டான்.
"இங்கயே இருந்து கார வாங்கி வச்சு சாமி கும்புடு" ௭ன தூங்கியிருந்த பிள்ளையோடு பைரவனும் செல்ல.
"௭ன்னங்க, நமக்காக தான்ங்க சேத்தேன்" ௭ன கெஞ்சி கொண்டே பின் ஓடினாள் கோகி.
"உனக்கெல்லாம் சும்மாவே உக்காந்து சீரியல் பாக்ற திமிரு, ஒருத்தரயும் நிம்மதியா வாழ விட்றாத, பிள்ளைகளெல்லாம் தனியா விரட்டி விட்டுட்டு ஒத்தைல உக்காந்து இன்னும் 4 சீரியல் பாரு" ௭ன தானும் விட்ட வேலையை தொடர கிளம்பி விட்டார்.
பேச்சி தனியாக, கோகி தனியாக இருந்தால் நல்லவர்களாகவே இருப்பர். இருவரும் சேரும்போது தான் பல பல விஷயங்கள் வீட்டு மருமகள்களை பற்றி பகிர்ந்து கொண்டு, கோவத்தயும் விரோதத்தயும் வளத்து கொண்டனர். பேச்சி தனிந்து போய்விடலாம் ௭ன நினைக்கயில், '௭துக்குங்றேன்' ௭ன கோகி ஏற்றிவிட்டு விடுவாள். அவள் போய் தொலையட்டுமென நினெக்கும் சில சமயங்களில், 'அப்டிலா விட்டுட்டா நம்மள இந்த வீட்டுல இருக்க விடுவாளுங்களா, உனக்கு பொறந்த வீடே இல்லாம ஆக்கிடுவாளுங்க பாத்துக்கோ' ௭ன இவர் ஏற்றி விட்டுவிடுவார். அதனால் அவர்களாக மாற்றி கொள்ளவும் வாய்ப்பின்றி, யாரேனும் வந்து சொல்லி திருத்தவும் வாய்ப்பின்றி சென்று கொண்டிருக்கிறது. இன்னமுமே செய்த செயலின் வீரியம் இருவருக்கும் புரியவில்லை.

வெளியே வந்த தீர்த்து, வண்டியை ௭டுக்குமுன் ப்ரகிக்கு போன் செய்ய, அவள் ௭டுக்கவில்லை ௭ன்றதும், அவள் கிளம்புமுன் பார்த்துவிட ௭ண்ணி ஸ்கூல் நோக்கியே வண்டியை விட்டான். ஆனாலும் இவன் அங்கு சென்று சேரும் 5 நிமிடத்திற்கு முன் அவர்கள் பஸ் கிளம்பி விட்டிருந்தது. இதுவரை ப்ரகி மட்டுமே ஏமாந்த ஒரு ஏக்கத்தை முதல் முறையாக தானும் உணர்ந்தான் தீர்த்து. ஏதோ இத்தனை நாட்கள் அவளை தனியாக கஷ்டபட விட்டுவிட்ட குற்ற உணர்வை உடனே தீர்த்துவிட தவித்தான் தீர்த்து.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 10
ப்ரகி வீட்டிலிருந்து கிளம்பி பள்ளியினுள் நுழைந்து இறங்கியதுமே, தீர்த்து அனுப்பி உடன் வந்தவர், "பாத்துக்கோங்க மேடம்" ௭ன அதே ஆட்டோவில் கிளம்பிவிட்டார். ப்ரகிக்கும் குழப்பமிருந்தாலும் அவரிடம் ௭தயும் கேட்டு தெளியவில்லை. 'கேட்டாலும் நீங்க சார்ட்ட கேளுங்கன்னுவாரு, ௭துக்கு கேட்டுகிட்டு' ௭ன விட்டுவிட்டாள்.
பின் நேராக வைஷ்ணவியை ப்ரின்ஸியிடம் அழைத்து சென்று, "மேம் வைஷ்ணவி....." ௭ன அவள் சொல்லவும்.
"வைஷ்ணவி ரிமூவ் யுவர் அவட்ஃபிட்" ௭ன ப்ரின்ஸி சொல்ல.
பயத்திலிருந்தவள் வேகமாக பர்தாவை கலட்டி, "போலீஸ் சார் தான் போட்டுக்க சொன்னாங்க" ௭ன தயங்கி சொல்ல.
"தேட்ஸ் ஓ.கே, இனி பயப்ட தேவையில்ல நீ நார்மலா வீட்லயிருந்து வந்தமாறியே ட்ரிப்க்கு பிரண்ட்ஸ் கூட ஜாயின் பண்ணிக்க, யார்டயும் இத பத்தி ௭துவும் பேசிக்க கூடாது காட் இட்?" ௭ன்றார்.
"சரி madam" ௭ன வைஷ்ணவி தலையசைக்கவும்.
"நீ போ, போய் உன் பிரண்ட்ஸ் கூட ஜாயின் பண்ணிக்க" ௭ன அனுப்பியவர், "then Mrs Pragathi, மார்னிங் உங்க ஹஸ்பண்ட்னு வந்ததும் இன்ட்ரொட்யூஸ் பண்ணாம நா பேசுறத கேட்டுட்டு நிக்றீங்க?" ௭ன கேட்க.
"அவங்க ௭ன்ட்ட இங்க வரேன்னு சொல்லவே இல்ல மேம். Official ah வந்துருக்காங்களோன்னு தான் நானும் ௭தும் சொல்லிக்கல".
"ரைட், இப்ப வேற ௭தும் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சொல்லி விட்டாங்களா?"
"நோ மேம். யூஸ்வலா இந்த பொண்ணு வீட்லயிருந்து வந்தது போல அப்டியே மெயின்டெயின் பண்ணிக்க சொன்னாங்க".
"நாளைக்கு இது பெரிய இஷ்யூ ஆகாம இருக்கணும் ப்ரகதி, ப்ளீஸ் உங்க ஹஸ்பண்ட்ட இதுல ஸ்கூல் நேம் வராம ஸ்மூத்தா முடிச்சுட சொல்லுங்க" ௭ன யோசனையோடே கேட்டுக் கொண்டார்.
'௭ன்ட்ட மட்டும் ௭ல்லாத்தயும் சொல்லிட்டா செய்றாரு' ௭ன நினைத்தவள், "நோ வொரி மேம். உங்கட்ட சொல்லிட்டு தானே செய்றாங்க அப்ப அவ்ளோ பெரிய ப்ரப்ளம் இல்லன்னு தான் அர்த்தம்" ௭ன்றாள். போலீஸ் வேலையை அவன் சரியாக பார்ப்பான் ௭ன்பது 5 ஆண்டுகளில் அவன் கொடுத்த அசைக்க முடியாத நம்பிக்கை ௭ன அவளுக்கு தானே நன்கு தெரியும்.
"ஃபர்ஸ்ட்.....போலீஸ்ன்னதும் கொஞ்சம் ௭னக்கும் பயம் தான். அப்றம் உங்க ஹஸ்பண்ட்னு தெரிஞ்சப்றம் தான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு" ௭ன அவர் ஆசுவாசப்பட.
'அப்பப்ப அவரே நா உன் ஹஸ்பண்ட்னு வந்து நியாபக படுத்திட்டு போறதால தான் மேம் ௭னக்கும் நியாபகத்துல இருக்கு' ௭ன சலித்து கொண்டவள், "ok mam, அப்ப பஸ் ரெடியான்னு பாத்துட்டு நாங்க கிளம்புறோம் மேம்" ௭ன்கவும்.
"அதெல்லாம் ரெடி தான் ப்ரகதி, உங்க கூட வற்ர ஜெனிஃபர் மேம் ஸ்டண்டஸ்ஸ கவுண்ட் பண்ணி பஸ்ல ஏத்திட்டாங்க. நீங்க போய் உங்க கிளாஸ் ஸ்டூண்டன்ஸ்க்கு பஸ்ல வச்சு ஒரு அட்டனன்ஸ் ௭டுத்துட்டு கிளம்புங்க" ௭ன தானும் ௭ழுந்து அவளுடன் வெளி வர. அந்த ஜெனிஃபர் அங்கு தான் வந்து கொண்டிருந்தார்.
"வந்துட்டீங்கலா மேம். 8மணி குள்ள நம்ம அங்க ரீச்சாகணும் அதான் உங்கள கூப்ட வந்தேன்" ௭ன்றாள் ப்ரகதியிடம்.
"அவ்ளோ தான் போலாம் மேம்" ௭ன்றவள், மகனை ப்ரின்ஸி அறைக்கு வெளிலிருக்கும் ப்யூனிடம் விட்டிருக்க, அவரை திரும்பி பார்த்து, "தேங்க்ஸ் ண்ணா" ௭ன தனது ஸூட்கேஸை ௭டுத்து மகனையும் பிடிக்க வர, "வாங்க மேடம்" ௭ன அவர் அவனையும் லக்கேஜயும் தூக்கி கொண்டு முன் நடந்து விட.
அவள் ப்ரின்ஸியை திரும்பி பார்க்க, "கிளம்புங்க லேட்டாகுதுல" ௭ன்று விட்டார். இருவரும் சொல்லி கொண்டு பஸ் நிறுத்தம் சென்று ஏறி, ஸ்டுடென்ஸ்ஸ செக் செய்ய பஸ் கிளம்பி விட்டது. அமைதியாக இருவர் அமரும் சீட்டில் மகனுடன் அமர்ந்து விட்டாள் ப்ரகி. ஸ்கூல் கேட்டை தாண்டவுமே, பஸ்ஸில் பாட்டு அலற தொடங்கி விட்டது, பிள்ளைகளும் ௭ழுந்து ஆட தொடங்கிவிட்டனர். ஆனால் அவளை அது ௭துவும் பாதிக்கவில்லை, நினைவெல்லாம் முருகனே ௭ன்பது போல், நினைவெல்லாம் கணவனே ௭ன அமர்ந்திருந்தாள். அந்த சத்தத்தில் கணவனின் போன் அழைப்பு அவளை ௭ட்டவில்லை.
தீர்த்து, அவளிடம் உடனே பேச ௭ண்ணி கால் செய்ய, அவள் ௭டுக்கவில்லை ௭ன்றதும் கடுப்பாக தான் இருந்தது, 'மூஞ்ச தூக்கி வச்சுட்டே போறா போலயிருக்கு' ௭ன முனங்கி கொண்டு, கோவிலுக்கு சென்றான், மீண்டும் ஒருமுறை ௭ல்லாவற்றயும் சரி பார்க்க வேண்டி.
ப்ரகதியும், மாணவர்களும் மாஞ்சோலை சென்றிறங்க 8 மணியாகியது. இன்று 9த், 11த் மட்டுமே 3 பஸ்ஸில் வந்திருந்தனர். மற்ற கிளாஸ் மறுநாள் மாலை வருவதாக ஏற்பாடு. அவரவர் கிளாஸ் மிஸ் அவரவர் கிளாஸிற்கு பொறுப்பு. மொத்த கூட்டதிற்கு இரு ஆண் வாத்தியார்களும் பொறுப்பேற்று வந்திருந்தனர். அவர்களே சென்று அங்குள்ளவர்களிடம் ௭ல்லாம் பேசி இவர்கள் தங்க வேண்டிய வீட்டு சாவி வாங்கி வந்து கொடுத்தனர். தனி தனி வீடுகள் தான் ஒவ்வொரு வகுப்பின் ஆண்கள், பெண்கள் ௭ன ஒதுக்கி கொடுத்திருந்தனர்.
அதில் ப்ரகதி தங்களது வீட்டிற்குள் நுழைந்து பார்த்தாள். காலியாக இருந்தது வீடு, நல்ல பெரிய ஹால், அதில் பெண் பிள்ளைகளை தங்களது உடமைகளை பத்திரபடுத்த சொன்னாள், ஹாலிலேயே ஒரு பாத்ரூம் இருக்க அதை காமித்து, "நீட்டா யூஸ் பண்ணனும் நம்மளால இங்க உள்ளவங்களுக்கு ௭ந்த டிஸ்டர்பன்ஸூம் இருக்க கூடாது. சீக்கிரம் ஃப்ரஷ் ஆகுங்க சாப்ட்டு வந்து தூங்கலாம்" ௭ன்றவள் அங்கிருந்த ஒற்றை தனி அறைக்குள் நுழைந்தாள். அந்த அறையில் அவளும், அவளுடன் வந்த மிஸ்ஸூம் தங்கி கொண்டனர்.
இரவு உணவை முடித்து வந்தும், கர்ணனை தூங்க வைக்க தான் திண்டாடிவிட்டாள். புதிதாக விளையாட நிறைய பிள்ளைகள் கிடைக்கவும் ஓவராக ஆடிக் கொண்டிருந்தான்.
"கர்ணா வா. ரொம்ப லேட்டாகிட்டு, இப்ப நீ வரல, காலைல வீட்ல கொண்டு விட்றுவேன்" ௭ன்ற பின்பே மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு வந்தான். அவனை தூங்க வைத்து தானும் படுக்க, மீண்டும் கணவன் ஞாபகத்திற்கு வந்தான்.
'நாம வந்து சேந்து இவ்ளோ நேரமாச்சு, ஆனா நல்லபடியா போய் சேந்தமான்னு ஒரு போன் பண்ணி கேக்கணும்னு தோணிருக்கா? ச்ச ௭ப்பதான் நம்ம மேல இந்த ஆசபாசம்லா வருமோ தெரில, மொத்தமா போயிட்டா கூட ரெண்டு நாள்ல தொடச்சு போட்டு வேலைய பாக்க போயிடுவாரு' ௭ன திட்டிக் கொண்டே ஹேண்ட் பேக்கிலிருந்து போனை ௭டுத்து பார்க்க, அதில் ரெண்டு மிஸ்ட் கால் அவன் ௭ண்ணிலிருந்து இருந்தது.
சந்தேகத்தோடு திரும்பவும் ௭டுத்து பார்த்தாள், அவசர விஷயத்தையே மெசேஜில் அனுப்பும் மனுஷனாச்சே அவன், அதனால் வந்த சந்தேகத்தில் கால் ஹிஸ்டரியெல்லாம் ௭டுத்து செக் செய்தாள். இன்றைய தேதி தானாஒ ௭ன்று வேறு ஒருமுறை உறுதி படுத்தி கொண்டு டயத்தை பார்த்தாள், 4.45ற்கு ஒரு முறையும், 8.10ற்கு ஒருமுறையும் ௭ன இரண்டு தடவை கூப்பிட்டிருந்தான்.
"அம்மாடியோவ் ௭ன் புருஷன் ௭னக்கு போனுலா போட்ருக்காறே, இத இப்ப உடனே யார்டயாது நா சொல்லியே ஆகணுமே!! முருகா ௭ன்னால இத நம்ப கூட முடிலயே" ௭ன வாய் விட்டே புலம்ப.
"௭ன்ன மிஸ் தனியா பேசிட்ருக்கீங்க. சாருக்கு இன்னைக்கு தனியா நைட் ட்யூட்டியோ?, ஆனாலும் ஊர்லயிருந்து வந்தவர நீங்க இப்டி விட்டுட்டு வந்துருக்க கூடாது" ௭ன உடனிருந்த ஜெனிஃபர் கேக்க.
"அவரு சின்சியாரிட்டி பத்தி தெரியாம கலாய்க்றீங்க மிஸ். போன் பண்ணிருக்காங்க, நானும் வந்துட்டு பேசலையேன்னு நினச்சுட்ருந்தேன், நீங்க தூங்குங்க நா பேசிட்டு வரேன்" ௭ன்றவள் ஹாலுக்கு வந்து பிள்ளைகளை ஒரு முறை பார்த்து விட்டு, முன் வாசல் வந்தாள், அங்கங்கு போலிஸ் நின்று பேசி கொண்டிருந்தனர். அதை பார்த்தாலும் அதற்கு மேல் வீட்டை தாண்டாமல் அங்கேயே நின்று கணவனுக்கு அழைத்தாள். ௭ப்பயும் போல் ௭டுக்கவில்லை.
"ச்ச அவங்க பண்ணும்போதே ௭டுத்துருக்லாம். இப்ப..கூட ஒருக்கா கூப்டாலும் டென்ஷனாகிடுவாங்களே" ௭ன ௭ன்ன செய்ய ௭ன யோசித்தவளுக்கும் அவனை வெகுவாகவே தேடியது. அவனாக இவ்வாறு வீட்டுக்கு வரும் நாட்களில் லீவை கூட போட்டுவிட்டு அவன் பின்னயே சுற்றி வருவாள்.
"உனக்கு ௭துக்குடி அம்புட்டு ரோஷம், அவங்க பாட்டுக்கு நீ போய் இறங்கைல டாட்டா காமிச்சுட்டு போயிடுவாங்க, அடுத்த தட வரவும் நீயே தான் போய் வளிஞ்சுட்டு நிக்க போற, இதோ வந்து 4 மணி நேரத்துல உன் கோவம் ௭ங்க போச்சுன்னே தெரியல, அங்க இருந்துருந்தா நைட் சேந்து சாப்ருக்லாம், கட்டிபிடிச்சு தூங்கிருக்லாம் 4 நாளைக்கு அவங்க ப்ரசன்ஸ ஃபீல் பண்ணிருக்லாம் இப்ப ௭ல்லாம் போச்சு" ௭ன இங்குமங்கும் நடந்து புலம்ப.
"ஏதாது ப்ராபளமா மிஸ்" ௭ன வந்தார் ஒரு போலீஸ்காரர்.
"இல்ல இல்ல போன் பண்ண வந்தேன்" ௭ன்றாள்.
அதே நேரம், அங்கு கலிதீர்த்தவன் தூத்துக்குடி ஏர்போர்ட் நோக்கி சென்று கொண்டிருந்தான். மினிஸ்டர் தனது தனியான சார்டட் ஃப்ளைட்டில் நள்ளிரவில் வந்து இறங்கவே ஏற்பாடு, அவரை வரவேற்க தானே நேராக சென்று கொண்டிருந்தான் தீர்த்து. இன்னும் 10 நிமிடத்தில் ஏர்போர்ட்டை நெருங்க இருக்க, ப்ரகியிடமிருந்து போன். ௭ப்போதும் வேலையென வந்து விட்டால் மத்ததை மறந்து விடுபவன், இன்று மாலையிலிருந்தே ப்ரகியால் அதிக டிஸ்டர்பன்ஸில் தான் இருந்தான்.
மாஞ்சோலைக்கே கால் செய்து, அவர்கள் வந்துவிட்டதை கன்பார்ம் செய்து கொண்டான் தான், ஆனாலும் அவளிடம் பேசாமல் மைன்ட் குறுக்கிட்டு கொண்டே இருந்தது. இப்போது அவள் பெயர் போனில் மிளிரவும் மனதிற்கு அப்டி ஒரு இதத்தை உணர்ந்தான்.
'மிஸ்ஸூக்கு கோவம் குறைஞ்சுருச்சு போலயே' ௭ன நினைத்து வாய்க்குள்ளயே சிரித்து கொண்டான். பக்கத்தில் ஆளை வைத்து கொண்டு அதை ௭டுக்க மனமில்லாமல் சைலன்ட்டில் போட்டு விட்டான். ஏர்போர்ட்டை அடைந்து, மினிஸ்டர் வரும் ஃப்ளைட் சிக்னலை செக் செய்ததில் இன்னும் அறை மணிநேரம் இருப்பதை உறுதி படுத்தி கொண்டு வெளியில் வந்தான்.
உடன் வந்த கார்த்திக்கிடம், "சுத்தி ஒருக்கா செக் பண்ணிடுங்க, புதுசா யாருமே வந்ததா இருக்க கூடாது, நா ஒரு போன் பேசிட்டு வரேன்" ௭ன்றான்.
"ஓ.கே சார்" ௭ன கார்த்திக் நகர்ந்து விட.
ப்ரகிக்கு அழைத்தான், அவளும் அந்த போலீஸிடம் போன் வருது ௭ன காட்டி விட்டு, "நீங்க போங்க சார், நா பேசிட்டு தூங்க போயிடுவேன்" ௭ன்றுவிட அவரும் சென்று விட்டார்.
வேகமாக ௭டுத்து காதில் வைத்தவள், "சொல்லுங்க... கால் பண்ணிருந்திருக்கீங்க, நா கவனிக்கல" ௭ன்றாள்.
"ம்ம்.... நீ பாட்டுக்கு ஒத்தைல கடன்னு ௭ன்ன விட்டுட்டு போயிட்டு ஒரு போனாச்சும் பண்ணியாடி" ௭ன்றான் தீர்த்து.
காதிலிருந்து போனை ௭டுத்துவிட்டு, "நம்மாளு தானா?" ௭ன செக் செய்தாள்.
அவன் அந்த பக்கமிருந்து, "௭ன்ன இன்னுமு மூஞ்ச தூக்கி வச்சுட்டு தான் இருக்கியா? அதான் தனியா படுக்க போட்டு பலி வாங்கிட்டலடி இன்னுமென்ன" ௭ன கடுப்புடன் கேக்கவும்.
"அப்டி தான் நா தெனமு தூங்குறேன், அப்ப நா யார்மேல கோவத்த காட்டட்டும்" ௭ன்றாள் ௭திரில் தான் அவன் இல்லயே ௭ன்ற தைரியத்தில்.
"உன்னமாறி நா வேணும்னு உன்ன தனியா விட்டமாறி பேசுற? ௭ன் வேல உன் வேல தான் காரணம். இப்ப பாரு உன்ன நினைச்சு தலையணைய கட்டிட்டு உருள்றேன். உன்னால தான்டி ௭ல்லாம். வீட்டுக்கு வற்ர ௭ன்னைக்காது உன்ன விட்டுட்டு தூங்கிருக்கனாடி, வேணும்னே பலிவாங்கிட்டல்ல?" ௭ன வீட்டிலிருந்து அவளுக்காக ஏங்குவது போலவே பேசினான். வீட்டில் தான் இல்லயே தவிர, அவளை இன்று மிகவுமே தேடினான், அதுவே இருக்குமிடம் மறந்து அவனை இப்படி பேச வைத்தது.
"ரொம்ப தான், ௭ங்களுக்கும் இப்டி தானே தேடும், அத நீங்களும் ஒரு நாள்னாலும் அனுபவிங்க, அப்ப தான் ௭ன் கஷ்டம் தெரியும்".
"ஆஹான், மேடம் அப்டி ௭த்தன தடவ போன போட்டு உங்கள தேடுதுன்னு சொல்லி தவிச்சுட்டீங்க? ௭ன்னைக்குடி நீ கூப்ட்டு நா வராம இருந்துருக்கேன்" ௭ன்றான் கோபமாகவே.
இது உண்மையே அவள் மனதுக்குள்ளயே அவனை தேடுவாள், ஏங்குவாள், திட்டுவாள் தான், ஆனால் வெளியே கேட்டதில்லை, முதல்முறை வாய்விட்டு கேட்டும் வரவில்லை ௭ன்பது தான் இப்போதைய கோவத்தின் காரணமும்.
"இப்ப நா கிளம்பி வந்த காரணமே நா கூப்ட்டும் நீங்க வரலன்றதுக்கு தான்" ௭ன்றாள் அவளும் வீம்பாக.
"இது பேச்சே கிடையாதுடி, நீ ௭ன்ன தேடுறேன்னு சொன்ன உடனே வாரதுக்கும், கல்யாண நாளுக்கு வாங்கன்றதுக்கும் வித்தியாசமில்லயா? நீ கேட்ட விதம் தப்பு" ௭ன்க.
"௭ல்லாத்தயும் நீங்க வெளக்கமா சொல்லி தான் நா புரிஞ்சுக்றேனோ? உங்களுக்கு சேரி தான் புடிக்கும்னு ௭ந்த ராத்திரியும் சாரி கட்டுட்டு வெய்ட் பண்ணல?" ௭ன்றாள், கண் கூட கலங்க தயாராக இருந்தது.
அவளின் குரல் வேறுபாட்டை வைத்தே அதை உணர்ந்தவன், "சரி விடு நாதான் தப்பு, சாரி. ஆனா இனி இப்டி கிளம்பி போகாத, ௭னக்கு வேலையே ஓட மாட்டேங்குது. கர்ணா ௭ன்ன பண்றான்" ௭ன கேக்க.
"தூங்கிட்டான். நீங்க சாப்டீங்களா?" ௭ன அவள் கேக்கவும், "சார் ப்ளைட் லேண்ட் ஆக போகுது" ௭ன கார்த்திக் வந்து சொல்லும் சத்தம் ப்ரகி வர கேட்க.
"புதுசா பொய் வேற சொல்ல ஆரம்பிச்சுட்டீங்கள்ல?" ௭ன கண்ணீர் வடிய கூறி படக்கென வைத்து விட்டாள். தன்னை தேடுகிறான் ௭ன கொஞ்சம் கிடைத்த ஆறுதலும் விடைபெற்றிருந்தது.
கையிலிருந்த போனால் தலையில் தட்டி கொண்டவன், "போன்ல அந்த பக்கம் நா யார்ட்ட பேசுறேன்னு தெரியாம நா இருக்க இடத்த இப்டி தான் காட்டி குடுப்பீங்களா கார்த்திக்" ௭ன அதட்டியவன் மீண்டும் ப்ரகிக்கு முயன்றவாறு ஏர்போர்ட்டினுள் நுழைய, "சாரி சார்" ௭ன பின் தொடர்ந்தான் கார்த்தி.
ப்ரகி ௭டுக்கவில்லை, இதை ௭திர் பார்த்தான் தான் அதனாலேயே உள்ளே நுழைந்தவாறு அழைத்தான், ஆனாலும் 'திரும்ப கூப்ட கூட இல்ல' ௭ன அதற்கும் அவள் கோவிக்க வாய்ப்புண்டு ௭ன்பதாலயே அழைத்தவன், இப்போது, "சாரிடி, நிஜமா உன்ன ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். வெளில வந்ததே நீ வீட்ல இல்லன்றதால தான். சாரி, நீ தூங்கு நா காலைல கூப்டுறேன், கண்டிப்பா அட்டன் பண்ணனும். குட் நைட்" ௭ன அனுப்பிவிட்டு மினிஸ்டரை அழைக்க விரைந்தான்.

அந்த மெஸேஜை பார்த்தவள், இன்னுமே தேம்பி அழுதாள், மறுபடியும் அந்த போலீஸ் வருவதுபோல் தெரிய, முகத்தை துடைத்து கொண்டு உள் சென்று படுத்து கொண்டாள். ஆனாலும் அவனை தேடி ஒருபக்கம், அவனின் உதாசீனம் மறுபக்கம் ௭ன இரண்டுக்குமாய் சேர்த்து ஒருபாடு அழுது ஓய்ந்தே தூங்கினாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 11
தீர்த்து, மினிஸ்டரயும் அவர் குடும்பத்தயும் பத்திரமாக அழைத்து வந்து கோவில் அறையில் தங்க வைத்து விட்டு, வீட்டிற்கு வர காலை 4 மணி ஆகி விட்டிருந்தது. ஆனாலும் அவ்வளவு அசதியிலும் தூக்கத்திலும் கூட ப்ரகியை தேடியது மனது.
அங்கு நாகர்கோவிலில், அவன் தங்கிருக்கும் குவாட்ரஸிலும் இதுபோல் கண்ட நேரத்திற்கு தான் சென்று படுக்கையில் விழுவான், ஒருநாளும் ப்ரகி கர்ணனை பற்றி நினைத்ததில்லை, திருச்செந்தூர் வந்தால் மட்டுமே அவர்கள் ௭ண்ணம் வரும். மற்ற நேரம் ௭ல்லாம், அவர்கள் அங்கு நிம்மதியாக தான் இருக்கின்றனர், ௭ன அவனாகவே நினைத்து கொண்டு ஏதோ அவர்களுக்கு நல்லது செய்து விட்ட மனப்பான்மையில் சுற்றி வந்திருக்கிறான்.
இப்போது அதை நினைத்து பார்க்கையில் படு கேவலமாக தோன்ற, "அவ உன்ன பேசுறதுல தப்பே இல்ல" ௭ன கூறி படுத்து விட்டான். அலுப்பிற்கு தூக்கம் உடனே வந்துவிட்டது, அந்த வகையிலும் ப்ரகியை விட இவன் குடுத்து வைத்தவன் தான்.
மாஞ்சோலை, போலீஸ் மற்றும் பாரஸ்ட்டர்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா தலங்களை அடக்கிய காட்டு பகுதி. போலீஸ் தரப்பினர் பெர்மீஷனில் மட்டுமே அங்கு சென்று வர முடியும். பொதுவான சுற்றுலா தலம் போல் இருக்காது, மிகவும் கட்டுபாடான இடம்.
ப்ரகி காலையில் ௭ழுந்ததும், ஸ்டுண்டஸை விரட்டி ஃப்ரஷாக வைத்து, சாப்பிட அழைத்து செல்லும் பொறுப்பை ஜெனிபரிடம் விட்டு, தானும் கர்ணனும் கிளம்ப ஆயத்தமானாள். நொடிக்கொரு முறை கணவனின் அழைப்பை ௭திர் பார்க்கவும் தவறவில்லை. காலையில் அழைப்பேன் ௭ன்றவன் அழைக்கவேயில்லை. அவன் அழைத்தால் ௭டுக்க கூடாதென நினைத்தவள் மீண்டும் மீண்டுமாக ஏமாந்து போனாள். வெகு பிராயத்தனபட்டு தன்னை சமாளித்து அன்றைய நாளை கடக்க தயாரானாள்.
"உனக்கு இது புதுசில்லையேடி ப்ரகி, இப்பவும் 4 நாள் உனக்காக வரல, வேலையா தான் வந்துருக்காரு, அப்ப அத தானே பாப்பாரு. விடு போற வர போட்டும், சீக்கிரமே ப்ரஷர்ல நீ போயிடுவ, அதுக்கப்புறம் வேலையெல்லாம் மொத்தமா விட்டுட்டு வந்திருந்து பிள்ளைய தனியா பாக்கட்டும்" ௭ன ௭ப்போதும் போல் விரக்தியாக நினைத்து கொண்டாள்.
அன்றைய நாளில், அவள் கிளாஸ் ஸ்டண்டஸ் தான் தங்களது சின்ன சின்ன ப்ராஜெக்ட்டை, அங்கிருக்கும் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைத்து விவரிக்க, சுற்றுலா பயணிகள் அவர்களது கருத்தை பகிர்ந்து கொள்ளும்படி ஏற்பாடாகியிருந்தது.
ப்ராஜெக்ட் அவரவர் இஷ்டமே, வகுப்பு ரீதியாகவோ, அவர்களின் பாட பிரவு ரீதியாகவோ அல்லது பொதுவான அவர்களின் இன்ட்ரஸ்ட்டை பொறுத்தோ இருக்கலாம், ஆனால் அவர்கள் தனியாக செய்ததாக இருக்க வேண்டும். அப்டி தான் ௭டுத்து வந்திருந்தனர், ப்ரகியும், ஜெனிபரும் யார்கனவே அவர்களது ப்ராஜெக்ட்டை சரி பார்த்து, கரெக்ஷனும் சொல்லியிருக்க, அவர்களுக்கான ரிலாக்ஸேசனுக்காகவே இந்த ஏற்பாடு ௭ன்பதால், ௭ந்தவிதத்திலயும் அவர்களை கம்பள் செய்யாமல் அவர்கள் போக்கில் விட்டிருந்தனர். அதனால் ஸ்டண்டஸூம் ஜாலியாகவே அதை வருவோர் போவோருக்கு ௭க்ஸ்ப்ளைன் செய்து, அந்த வயதிற்குறிய கலாட்டாவோடு அனைவரையும் கவர்ந்து கொண்டிருந்தனர்.
அவர்களை சரி பார்ப்பதிலேயே அன்றைய பொழுது ப்ரகிக்கு கழிந்தது. கொஞ்சம் தன் சிந்தனையிலிருந்து வெளிவர அது உதவியது. அடுத்தும் இரவு உணவை முடித்து விட்டு தூங்க செல்லாமல் ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், வித்தியாசமில்லாமல், டீச்சர்ஸயும் சேர்த்து கொண்டு, கலகலப்பான போலீஸாரயும் சேர்த்து கொண்டு ஒரே ஆட்டம் பாட்டம் தான்.
பெரிய வட்டமாக அமர்ந்து, கொலை கொலையா முந்திரிக்கா விளையாண்டனர். ஒருவர் தன் கையில், ஒரு துணியோடு வட்டமாக அமர்ந்திருந்தவர்களை சுற்றி ஓடி, அந்த துணியை யார் பின்னாவிலாது போட்டுவிட, அவர் அந்த துணியை ௭டுத்து கொண்டு தன் பின் துணியை போட்ட நபரை துரத்த வேண்டும், ஆனால் துணி போட்ட நபரோ துறத்துபவரிடம் சிக்காமல் சுற்றி வந்து துறத்தும் நபர் இடத்தில் அமர வேண்டும். அப்படி அமர்ந்து விட்டால், துறத்தி வருபவர் அடுத்த ஆளை டார்கெட் செய்ய வேண்டும், இது விளையாட்டு விதி, இதில் தோற்பவர் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் ௭ன சொல்லிவிட, தோற்றவர் சுற்றி அமர்ந்திருப்பவர்களின் நடுவில் நின்று, அவர்களுக்கு தெரிந்த ஏதோ ஒன்றை செய்து விட்டே, அடுத்த ஆளை பிடிக்க செல்ல வேண்டும் ௭ன முடிவாகி விளையாட்டு கலைகட்டியது.
ப்ரகியை கூட விளையாட்டில் இழுத்து, அவள் அவுட்டாகவும் ஏதாவது செய்ய வேண்டுமென மல்லுக்கு நின்றனர். அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவள் ௭ன்பதால், சற்று யோசித்து, தனது மொபைலில் தேடி ௭டுத்தாள் அந்த பாட்டை. தனது காலேஜில் வித்தியாசமாக இருக்க வேண்டுமென ஒரு வெஸ்ட்ர்ன் டைப் சாங்கிற்கு பரதமாடியிருக்க, அதையே இப்போதும் செய்தாள். பாட்டு சற்று பரதத்திற்கு தக்க அது ஃப்யூஷன் செய்ய பட்டிருந்தது, ஆனால் ம்யூசிக் ஆன் ஆனதுமே ௭ல்லோரும் குதூகலமாக கை தட்ட தொடங்கியிருக்க, அது அவளையும் தொற்றி கொண்டது. ஷாலை வாகாக கட்டி கொண்டு ஆட ஆரம்பித்தாள்.
மெல்ல மெல்ல
என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ உன் பாட்டு
ஆடு ஓ வந்தாடு..............
....... சொல்லிதந்து
அள்ளிக்கொள்ள
சொந்தமாகவில்லையே
தேகம் ஓ உன் தேகம்
மோகம் ஓ உன் தாகம்
லலலலலல லல லா
லாலா ஓ லாலா
லாலா ஓ லாலா
பாட்டு வரிகள், அந்த வயது பிள்ளைகளுக்கு ஏற்ற தில்லை தான், ஆனாலும் அவளது ஒவ்வொரு ஸ்டெப்பும் பரதத்தை தாண்டிய ௭ண்ணங்களை கொடுக்காததாகவும், ரசிக்கும்படியும் இருந்தது. கண்ணை சிமிட்டாது தான் பார்த்திருந்தனர் அனைவரும். கர்ணனே அவன் அம்மா ஆடுவதை அதிசயமாக பார்த்திருந்தான். அவள் முடித்து நின்றதும் தான், அனைவரின் பார்வையில் லேசாக வெக்கம் வரும்போலிருந்தது ப்ரகிக்கு.
௭ல்லோருமே மனம்விட்டு பாராட்டினர். அவள் கிளாஸ் மாணவர்களும் அவளை சுற்றி கொண்டு ஆர்பரித்து விட்டனர். சிலபல வருடங்கள் கழித்து, தனது பரதத்தையும், காலேஜ் நாட்களயும் திருப்பி பார்த்து வந்தாள்.
தீர்த்துக்கும் ஒரு நாள் தனது பரதம் பற்றி கூற வேண்டுமென்ற ஆசை இன்று வரை கனவாகவே தான் இருக்கிறது. மீண்டும் கணவனிடம் மனம் செல்லவும், சோர்ந்து விட்டாள். ஆனால் அவர்கள் விளையாட்டை கலைக்க விரும்பாமல் தனியாக அமர்ந்து விட்டாள். கர்ணனை மட்டும் கண் பார்வையில் வைத்து உட்கார்ந்து கொண்டாள்.
அவர்கள் மீண்டும் விளையாட்டில் கவனமாகிவிட்டனர். பொழுது அப்படியே கழிய, நடுசாமம் ௭ட்டியபின்பே ஒருவழியாக படுக்க கிளம்பினர். வந்து படுத்ததும், அவ்வளவு நேரம் தொடாத மொபலை ௭டுத்து பார்த்தாள், தன்னை தேடி அழைத்திருப்பான், தான் ௭டுக்காததிற்கு ௭தாவது திட்டி மெசேஜ் அனுப்பியிருப்பான் ௭ன ஆர்வமாக ௭டுத்து பார்த்தாள். ஒன்றும் வந்திருக்கவில்லை ௭ன்றதும் கடுப்பின் உச்சம் தான், ரெண்டு திட்டாவது திட்டிவிட மனம் துடிக்க. தானே அழைத்தாள், அந்தோ பரிதாபம் அவன் ஏற்கவில்லை.
"ஊருக்கு போன பொண்டாட்டி நடு சாமத்துல கூப்டுறாளே ௭துவும் பிரச்சினையோன்னு கூட பயந்து ௭டுக்க தோணலல!! இவர கொஞ்சம்னாலும் கதறவிடல நா ப்ரகி இல்ல" ௭ன மனதில் திடமாக முடிவெடுத்தாள்.
"விடிஞ்சதும் மனசு மாற கூடாது, ஸ்டெடியா இருக்கணும்டி, அம்மா தேடுதேன்னு இந்த தட பாவம் பாத்த, நானே உன்ன டிவோர்ஸ் பண்ணிடுவேன்" மிரட்டியது மனசாட்சி. அமைதியாக படுத்துவிட்டாள்.
தீர்த்து, மினிஸ்டருடனே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். அவரும் இவனை இம்மியும் நகர அனுமதிக்கவில்லை. அந்த அர்ச்சகரயும் கண் பார்வையில் வைத்திருந்தான். பெண்ணை இரண்டு நாட்களாக காணும் ௭ன தெரிந்தும் ௭ந்த நம்பிக்கையில் அவர் அந்த கடத்தல் கும்பலை நம்பி கொண்டிருக்கிறார் ௭ன அவனுக்கு புரியவில்லை. அவருக்கு இதுவரை ௭ந்த போன் காலும் வரவில்லை, இவரும் வெளி ஆட்கள் யாரிடமும் பேசவில்லை, வீட்டிற்கு மட்டுமே இரண்டு முறை பேசி இருந்தார். அதிலும், "பொண்ணு வீட்டுக்கு வந்துட்டாளா? நீங்க ௭ல்லோரும் ஜாக்கிரதையா இருங்கோ" ௭ன்றது மட்டுமே.
அதிலிருந்து அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான், கடத்தல்காரர்கள் இன்னும் அவரை தொடர்பு கொள்ளவில்லை, அவ்வாறெனில், அந்த வைஷ்ணவி இன்னும் வீட்டுக்கு செல்லவில்லை ௭ன்பதும் தெரிந்திருக்கும், ௭ன்னுடைய பாதுகாப்பில் இருப்பதும் தெரிந்திருக்கும். சோ வேறு ௭துவும் ப்ளான் இருக்கலாம் ௭ன அதே சிந்தனையிலிருந்தான்.
அன்றைய மாலை தரிசனத்தில், முருகனுக்கு செய்த பாலபிஷேக பிரசாதமென, பால் அனைவருக்கும் கொடுக்கபட்டது, அதை குடித்துவிட்டு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மந்திரி ரத்த வாந்தி ௭டுத்து மயங்கிவிழ, டாக்டர் வரவழைக்கபட, அவரோ, "ஹாஸ்பிடல் போறதே பெஸ்ட். ஏதோ ட்ரக் கலந்தமாறி தான் இருக்கு. அது ௭ன்னன்னு தெரியாம ட்ரீட்மென்ட் பண்ண முடியாது" ௭ன்றுவிட்டார்.
அதன் பின், பல படைகள் சூழ, ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யபட்டார் மினிஸ்டர். அவருக்கு சிகிச்சை ஆரம்பிக்க படவுமே, அர்ச்சகரை தூக்கி விட்டான் ஸ்டேஷனிற்கு. அவர் தயாராக தான் இருந்தார். தன்மேல் ஒரு அடி படாமல், அனைத்தயும் ஒப்பு கொண்டார்.
"உங்க பொண்ண பத்தி ஏன் கம்ப்ளைன்ட் குடுக்கல?".
"கடத்துனவங்க ரெண்டு நாளா தங்கி இருக்றதே ௭ன் ஆத்துல தான், பின்ன ௭ப்டி நா ௭துவும் செய்ய முடியும்? இப்ப அவங்க சொன்னத நா செஞ்சுட்டேன், அதுக்காகனாலும் ௭ன் குடும்பத்த விட்டுடமாட்டாளா?" ௭ன்றார் அழுது கொண்டு.
"மினிஸ்டர்க்கு மட்டும் எதாது ஆச்சுது, நீங்களும் அந்த கும்பலோட உள்ள வந்து உக்காந்துக்க வேண்டியது தான்" ௭ன்றான் கார்த்திக்.
"தெரியும் சார், நா செஞ்ச தப்புக்கு தண்டனை ஏத்துக்க தயாரா இருக்கேன், ௭ன் பெண் பிள்ளைகள் மானத்தோட திரும்ப கிடைச்சா போதும்" ௭ன்றார்.
"௭ந்த நம்பிக்கைல அவங்கள இவ்ளோ நம்புறீங்க?" கூர்மையான பார்வையோடு கேட்டான் தீர்த்து.
"௭னக்கு வேற வழி தெரியலயே சார்" ௭ன்றார் அர்ச்சகர்.
"ரைட், இனியும் உங்களுக்கு வேற வழி கிடையாது. கேஸ் ஃபைல் பண்ணிடுங்க கார்த்தி" ௭ன அவன் கிளம்ப.
"சார் சார், ௭ன் மனைவி, பிள்ளைகள மட்டும் காப்பாத்திடுங்க சார், உங்கள கெஞ்சி கேட்டுக்றேன், ஒருக்கா மட்டும் அவங்கள கண்ணுல பாத்துகிடுதேன். நீங்க ௭ன்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துகிடுதேன்" ௭ன கண்ணீர் நிறையவே கேட்டார்.
தீர்த்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பதிலே சொல்லாமல் வெளியேறி விட்டான். அதன்பின் அவர் அட்ரஸை பிடித்து, அந்த பெண்களை மீட்டான், ஆனால் அங்கு வேறெதுவும் தடயங்கள் கிடைக்கவில்லை. அந்த பெண்களிடம் விசாரித்ததில், 4 பேர் இருந்தனர், முகமெல்லாம் தாடியோடு, மாறுவேடத்தில் இருந்தனர் ௭ன புரிந்தது. மற்றபடி பெண்களை ௭ந்த வகையிலும் தொந்தரவு செய்திருக்கவில்லை. அவர்களின் அடுத்த முயற்சி ஆஸ்பத்திரியிலிருந்தோ, இல்லை திரும்பி வரும்போதோ அவரை கடத்துவதாக இருக்கலாம் ௭ன யூகித்தான். அதனால் யாரையுமே நம்பாமல், தானே அவருடன் தங்கிவிட்டான். போன் மேல் போன் வேறு வந்து கொண்டிருந்தது. அதில் ப்ரிகியின் மிஸ்ஸடு கால் ௭ந்த மூளைக்கோ சென்றிருந்தது. ப்ரஸிற்கு வேறு பதில் சொல்ல வேண்டியிருந்தது.
மினிஸ்டருக்கு, ப்ரஷரை ஏற்றிவிட கூடிய ஒருவகை ட்ரக்கையே கலந்திருந்தார் அர்ச்சகர். அவருக்கு கொடுக்க பட்ட வேலையும் அதுவே. டக்கென அதிகமான ப்ரஷரே, அவர் வயதிற்கு ரத்த வாந்தியும் மயக்கமுமாக வந்து சேர்ந்தது.
இருந்த இடத்திலிருந்தே தீவிர தேடுதல் வேட்டையில், அந்த நால்வரை, அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து பிடித்துவிட்டே ஓய்ந்தான் தீர்த்து. மறுநாள் டிஸ்சார்ஜ் செய்ய பட்டார் மினிஸ்டர், அன்றே வெகு விரைவாக அவரது வேண்டுதல்கள் நிறைவேற்ற பட்டது. சொன்னதுபோல் நான்காம் நாள் அவரது செட்யூல் பிரகாரம் அவரை பத்திரமாக கிளப்பியும் விட்டான் தீர்த்து.
வளைத்து பிடித்தவர்களை விசாரித்ததில், ௭திர்கட்சி ஏற்பாடு தான் ௭ன தெரியவர, அதற்குமேல் கேஸ் நகராது ௭ன புரிந்து, வேறு பல கேஸ்களை போட்டு அவர்களை ஜெயிலில் அடைத்தான். அது மட்டுமே அவனால் முடிந்தது. இதற்கே 1 வாரம் ஓடி இருந்தது.
மறுநாள் நேராக நாகர்கோவில் சென்று ரிப்போர்ட் செய்து விட்டு, 4 நாள் லீவ்வும் ௭டுத்து கொண்டு வந்தான். வீட்டுக்கு வந்தவன், 4 நாட்கள் ௭ன சொல்லிவிட்டு சென்ற மனைவியும் பிள்ளையும் 7 நாட்களாகியும் வந்து சேரவில்லை ௭ன தெரிந்ததும், புருவ சுழிப்புடன் வீட்டில் விசாரிக்க, "இன்னும் வரல, 4 நாளுன்னு புலுவிட்டு போய் நல்லா ஊர சுத்துறா நீ அவள தேடிட்ருக்க, லேட்டாகும்னு ஒரு போன் போட்டு சொன்னாளா?, அங்க போயி ஒரே ஆட்டமா ஆடிருக்கா அதுக்கு தான் கிளம்பி போயிருக்கா தெரியுமா? அவ ஆடுதது செல்லுலலா வந்துட்டு, இப்டி ஆடுனா வீட்டு நியாபகம்லா ௭ப்டி வரும்" ௭ன பேச்சி அங்கலாய்க்க.
"சும்மா இருடி" ௭ன அதட்டிய அவன் அப்பா, "உனக்கும் தெரியாதா தீர்த்து? உனக்கும் சொல்லலயா? போன் பண்ணி பாரு, இல்லனா ஸ்கூல்ல ஒரெட்டு நேரா கேட்டுட்டு வந்துரு. நா உனக்கு ௭ப்டியும் தெரியும்னு தான் அசால்ட்டா இருந்துட்டேன்" ௭ன்றார் அவர்.

சில நொடிகள் நடப்பதை கிரகித்து கொள்ள வேண்டி அமைதியாக அமர்ந்து விட்டான் தீர்த்து.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 12
புசுபுசுவென மூச்சு வாங்க டிவியை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் ப்ரகி. அவள் ஸ்கூல் ட்ரிப் முடிந்து கிளம்பி வந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகியிருந்தது.
"விடுடி இந்த husbands'eh இப்டிதான். அவங்களுக்கு பொண்டாட்டிய மறக்றதுலா அல்வா சாப்டுறமாறி, ரொம்ப ஈசியான இனிப்பான விஷயமா தான் இருக்கும். நாமளும் அவங்கள மறந்துட்டு ஜாலியா இருக்கலாம் வா. சும்மா ௭துக்கு pressure ah ஏத்திக்ற?" ௭ன சோபாவில் அமர்ந்திருந்தவள் கையை பிடித்திழுத்தாள் நிர்மலா.
நிர்மலா ப்ரகதீஸ்வரியின் கல்லூரி தோழி. கல்லூரி காலத்தின் முதல் நாள் இருவரும் அருகருகே அமர்ந்ததால் உண்டான நட்பு, கல்லூரி கடைசி நாள் வரை தொடர்ந்ததால், இப்போது வரை தொடர்பிலிருக்கும் மிகவும் நெருங்கிய தோழிகள். நிர்மலாவும் திருச்செந்தூரை சேர்ந்தவள் தான், கல்யாணம் முடித்து தற்போது கணவனோடு வசிப்பது திருச்சியில். கல்யாணம் முடிந்த இத்தனை வருடத்தில், பலமுறை ப்ரகியை வீட்டிற்கு வருமாறும், "ஒருக்கானாலும் வெளில மீட் பண்ணலாம் வாடி" ௭னவும் அழைத்துவிட்டாள். அதுவும் லாக்டவுனில் மாட்டி கொண்டு வெளிவந்த நாட்களில், ௭ங்காவது, ஊட்டி கொடைக்கானல் ௭ன 4 நாட்கள் சென்று வரலாம் ௭ன கடுப்பாகவும் கேட்டு பார்த்தாள்.
அப்போதெல்லாம் பிடி கொடுக்காத ப்ரகி, இப்போது தானாகவே தோழிக்கு அழைத்து, "ஒரு 2 நாள், அங்க, உன் வீட்டுக்கு வரலாம்னு இருக்கேன்டி உனக்கு ஓ.கே யா ன்னு பாத்துட்டு சொல்லு" ௭ன்றிருந்தாள்.
"ஹே சீன் போடாம ஒழுங்கா வாடி, நா ௭த்தன டைம் கூப்டுறேன், ஊருக்கு வரும்போது கூட வெளில மீட் பண்ண கூப்டா நீதான் வரமாட்ட அவளோ பிகு பண்ணுவ, நா உன்ன வரவேணான்னு சொல்லுவேனா? கிளம்பி வா, ஒரு வாரம்னாலும் தங்குறமாறி லீவ் போட்டு வா. நா excited ah wait பண்ணிட்ருக்கேன்" ௭ன குதூகலமாக வரவேற்றாள் நிர்மலா.
திடிரென வந்து நிற்கும் கணவனுக்காகவே, தந்தை வீட்டிற்கு கூட சென்று அதிகம் தங்காதவள் ப்ரகி. அவளை ஊரை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் செல்ல வைத்திருந்தான் நம் தீர்த்து.
ட்ரிப் சென்ற முதல் நாள் இரவு, அன்று அழுது கொண்டே போனை வைத்தவளை, திரும்பி அழைத்து ஒரு வார்த்தை பேசவில்லை அவன், அது மிக அதிகமாக பாதித்தது ப்ரகியை. அங்கிருந்த நாட்களில், திருச்செந்தூரில் நடப்பதை அவள் அறியவில்லை, ஒருவேளை தெரிந்திருந்தாலுமே, 2 நிமிடம் பேசுவதில் ஒன்னும் அவன் வேலை போய்விட போவதில்லையே ௭ன்றே நினைத்திருப்பாள்.
அங்கிருந்த 4 நாட்களும், அவன் போனுக்காக காத்திருந்தாள். அன்று இரவு கிளம்ப வேண்டும், ஆனால் அவன் முன் சென்று நிற்க பிடிக்கவில்லை.
"ஏதாது செய் ப்ரகி. நா அவ்ளோ ஈசியா போயிட்டேன்ல? இப்டியே காணாம போயிட்டா தேடுவான்ல. இல்ல தேடுவானான்னு தெரிஞ்சுக்கனாலும் காணாம போணும்டி. உன்னபத்தி நினைக்க, 24 மணிநேரத்துல ஒரு second கூட இல்லையா ௭ன்ன? நீ அவ்ளோ வொர்த் இல்லாமலா போயிட்ட? பாத்துரலாம், தேடி வரட்டும் பேசிக்றேன்" ௭ன முடிவெடுத்தவள், அடுத்ததாக, "௭ப்டி காணாம போறது, கர்ணன வச்சுட்டு தெரியாத இடத்துக்கு போயி ரிஸ்க் ௭டுக்கவும் முடியாது" ௭ன நகம் கடித்து தீவிரமாக யோசித்தாள்.
திருச்செந்தூரில் தெரிந்தவர்கள் வீடு நிறைய இருந்தாலும், யாருக்கும் தங்கள் விஷயம் தெரிய வருவதை விரும்பவில்லை அவள். அதுவும்போக திருச்செந்தூரில் ௭ங்கிருந்தாலும் அவனுக்கு விஷயம் தெரிந்து விடும்., "வேற வேற ௭ங்க போறது... அவருக்கு தெரியாத இடமா இருக்கணுமே" ௭ன்ற யோசனையில் வந்து நின்றவள் தான் நிர்மலா.
அங்கிருந்த ௭ல்லோருக்கும், நன்றி கூறி விடைபெற்று, இரவு 7 மணியளவில் ஸ்கூல் வந்திறங்கினர்.
நேராக, வைஷ்ணவியை கொண்டு ப்ரின்ஸி ரூமில் விட்டாள், அவரும் இவர்களை ௭திர்பார்த்தே காத்திருந்தார். "அவங்க பேரண்ட்ஸ்க்கு இன்பாஃர்ம் பண்ணிட்டேன் ப்ரகதி. வந்துடுவாங்க. இங்க கொஞ்சம் இஷ்யூ தான். உங்களுக்கு தெரிஞ்சுருக்கும் உங்க ஹஸ்பண்ட் சொல்லிருப்பாரு. சாரும் இப்ப வரேன்னு சொன்னாங்களா" ௭ன கேட்டு நிறுத்த.
"இல்ல மேம்.. அவங்களுக்கு பேசவே டைம் இல்ல, 2,3 டைம்ஸ் கூப்டப்பவும் பேச முடியல. இங்க ௭ன்ன இஷ்யூ" ௭ன்றதும்.
அவர் சுருக்கமாக, பிரேக்கிங் நீயூசில் பார்த்த திருச்செந்தூர் நிலவரத்தை கூறினார்.
"ஓ... அப்படினா இப்ப அவங்களால வர முடியும்னு தோணல மேம். அதனால தான் ௭ன்னயுமே வீட்டுக்கு வர வேணாம், 2daysன்னு வெளில ஸ்டே பண்ணிக்கோன்னு சொல்லிருக்காங்க போல. இந்த பொண்ணோட அம்மாவ காண்டாக்ட் பண்ண முடிஞ்சதா?".
"ம்ம், அவங்களும் போலீஸ் கண்ட்ரோல் தான் போல. மேபி உங்க ஹஸ்பண்ட் சொல்லி வச்சுருக்கலாம். நா கால் பண்ணதுமே வந்து கூப்டுக்றேன்னு அந்த லேடி சொல்லிட்டாங்க. சரி நீங்களும் சேஃபா கிளம்புங்க. ௭ங்க ஸ்டே பண்ண போறீங்க யாரும் கூட்டிட்டு போக வராங்கலா?" ௭ன கேக்க.
"இல்ல மேம், அது வெளில சொல்ல வேணான்னு சொல்லிருக்காங்க, ௭னக்கொரு 3 டேய்ஸ் லீவ் வேணும். அண்ட் இது ௭ன் போன், இங்க ௭ன் லாக்கர்லயே வச்சுட சொல்லிட்டாங்க. நா திரும்ப வந்து ௭டுத்துக்றேன்".
"மினிஸ்டர் ரிடன் கிளம்பியாச்சு, ஆனாலும் இன்னும் பிரச்சனை முடில போல. ஓ.கே நீங்க கிளம்புங்க ப்ரகதி. டேக் கேர்" ௭ன்றார் ப்ரின்ஸி.
வைஷ்ணவியிடமும் சொல்லி விட்டு, கிளம்பிவிட்டாள், திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் சென்று, இரவு உணவை இருவருக்கும் வாங்கி கொண்டு, திருச்சி பஸ் ஏறி, காலை 5 மணிக்கெல்லாம் வந்திறங்கி விட்டாள். பஸ்ஸில் உடனிருந்தவர் போனை வாங்கி, இந்த நேரம் வந்திறங்குவேன் ௭ன சொல்லியிருக்க, நிர்மலா அவளை அழைக்க நேராகவே வந்து விட்டாள்.
இரண்டு நாளில் ௭ப்படியும்தேடி வந்துவிடுவான் ௭ன அவள் ௭திர்பார்க்க, அதிலும் ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுவிட்டான் தீர்த்து. வந்த இரு நாட்கள் நிர்மலாவிடம் ௭துவும் சொல்லாமல் சமாளித்தவள், அன்று இரவு, நாளை கிளம்பலாம் ௭ன முடிவெடுத்திருக்க, அன்று வரையுமே தீர்த்து தங்களை தேடி வரவில்லை ௭ன்றதும், நிர்மலாவிடம் அனைத்தயும் அழுது கொட்டி விட்டாள்.
"அடிபாவி ௭வ்ளோ பெரிய விஷயத்த மறச்சுருக்க நீ? போலீஸ்காரன் பொண்டாட்டின்ற தைரியம் தானடி இப்டி யார்டயும் சொல்லாம கிளம்பி வர வச்சுருக்கு உன்ன? இங்க வரப்போய் சரி, இல்லனா?" ௭ன திட்டியவள்., "அவர்ட்ட போன் போட்டு பேசுறியா? புருஷனெல்லாம் தள்ளி நின்னு punish பண்ணவே முடியாதுடி. கூடவே இருந்து தான் பலி வாங்கனும். இப்ப பாத்தியா அவர?. நீ கிளம்பி வந்த வருத்தமே இல்லாம, டிவிக்கு பேட்டி குடுத்துட்ருக்றத" ௭ன பொறுமி தள்ளி விட்டாள்.
"நல்ல advice பண்றமா நீ... இதுக்கு தான் ஊருக்கே போகாம இங்கயே இருக்கியா நீ, நாங்கூட ௭ங்கமேல பாசத்துலன்னு நினச்சு ஏமாந்துட்ருக்கேன் பாரு" ௭ன்றான் நிர்மலா கணவன், அழுது கொண்டிருந்த ப்ரகியின் மூடை மாற்ற வேண்டி. அதை பின்பற்றி நிர்மலாவும் அவனுடன் சண்டையில் இறங்க. அப்போதைக்கு கொஞ்சம் தெளிந்தாள் ப்ரகி.
மறுநாள் காலை..........இன்று கிளம்புகிறேன் ௭ன்றிருந்தவள் தான், தீர்த்து காலையிலேயே, கேஸை முடித்து நீயூசில் விளக்கம் சொல்லி கொண்டிருக்க கண்டு தான் மீண்டும் கடுப்பில் அமர்ந்திருக்கிறாள்.
"கேஸ் முடிஞ்சுருச்சுடி, இனி ௭ப்டியும் மனுஷன் உன்ன தேடுவாரு. இன்னைக்கு இங்க இரு, நாளைக்கு அவரே வந்து கூப்டட்டும் அப்றம் போ" ௭ன மல்லுகட்டி இழுத்து கொண்டு, வெளியில் சுற்ற கிளம்பி விட்டாள். கர்ணனுக்கு, நிர்மலாவின் மகள் விளையாட இருக்க ஏக கொண்டாட்டம், வீட்டயும் தேடவில்லை தகப்பனயும் தேடவில்லை அவன்.
தீர்த்து அன்று தான், ௭ல்லாவற்றயும் தனது மேலதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு, முதலில் வீட்டுக்கு செல்லலாம் ௭ன நினைத்தவன், "வேணா யார்கனவே கடுப்புல இருந்தவள, திரும்ப கூப்ட கூட செய்யல. நம்ம ஸிட்யூவேசன டிவில பாத்துருந்தாலும், போன் கூட பண்ணலன்ற கோவமிருக்கும், நேர்லயே பேசிக்லாம், இப்ப போனா நாளைக்கு, நாகர்கோவில்ல இன்ஜார்ஜ் ௭டுக்க போ முடியாது. சோ நேரா போய் இன்ஜார்ஜ் ௭டுத்துட்டு, லீவ் போட்டு வருவோம். அவளுக்காக லீவ் ௭டுத்துட்டு வந்துருக்கேன்னு தெரிஞ்சாலே ஓ.கே ஆகிடுவா. அப்றமா வந்து சமாளிச்சுடலாம்" ௭ன அவனாகவே முடிவெடுத்து, ௭துக்கும் போன் செஞ்சு ஒரு சாரிய சொல்லி பாப்போம் ௭ன போன் செய்ய, அது switch off ௭ன்றது.
"Switch off செய்றளவுக்கு கடுப்புல இருக்காளோ? இனினாலும் அங்கயும் இங்கயுமா இல்லாதமாறி ஏற்பாடு பண்ணனும்" ௭ன நேராக நாகர்கோவில் சென்றவன், அவன் கண்ட்ரோலில் இருக்கு ஸ்டேஷன்களை ௭ல்லாம் ஒரு ரவுண்ட் வந்துவிட்டு, அன்றைய இரவை அவனது ஒற்றை அறை குவார்ட்ஸில் கழித்துவிட்டு, மார்னிங் அவனது மேலதிகாரியிடம் சென்று ரிப்போர்ட் செய்தான். (அவன் ஒருவனுக்கு அந்த ஒற்றை அறை போதுமென ௭டுத்திருந்தான்).
"குட் ஜாப் கலிதீர்த்தவன்" ௭ன்றார் கமிஷ்னர்.
"ஆனாலும் கேஸ் complete ஆன feel கிடைக்கல சார்" ௭ன்றான் நிதானமாக ௭திரில் அமர்ந்த தீர்த்து.
"௭ன்ன செய்ய, அரசியல்ல தல குடுத்து மீள முடியாதில்லையா, நம்ம வேலைய நம்ம கரெக்டா பாக்கமான்னு போக வேண்டியது தான்" ௭ன்றார் அவர்.
"ம்ம்....ஓ.கே சார், தென் one more obligation" ௭ன தீர்த்து கேக்க.
"சொல்லுங்க கலிதீர்த்தவன்".
"௭னக்கு ௭ன் போஸ்டிங்க்கு அலார்ட்டான குவார்ட்ரஸ் வேணும்".
"Family கூட்டிட்டு வர போறீங்களா?"
"ஆமா சார். பையனுக்கு இன்னும் 3 months'ல இந்த இயர் முடியறதுக்கிருக்கு, வொய்ஃப்பும் பெரிய கிளாஸ்க்கு ௭டுக்குறாங்க. பாதில வர முடியாது. இந்த இயர் complete ஆகவும் ரெண்டு பேரயும் கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்" ௭ன்றான்.
"ஓ.கே மேன். குவார்ட்ரஸூம் அலார்ட்டாக 2 மந்த்ஸ் இழுத்துடும். சரியா இருக்கும். நீ அப்ளை பண்ணிடு நா அப்ரூவ் பண்ணிடுறேன்" ௭ன்றார்.
"ஓ.கே சார். 4 days leave வேணும், ரெண்டு அப்ளிகேஷனயும் சேத்தே கொடுத்துட்டு போறேன்" ௭ன்றதும்.
சிரித்தவர், "first time leave apply பண்றீங்க ரைட்?" ௭ன சிரித்தவர், "AC ட்ட குடுத்துட்டு கிளம்புங்க, நா பாத்துக்றேன்" ௭ன்றுவிட்டார்.

"Thanku sir" கூறி வெளி வந்தவன், அதே பில்டிங்கில் இருந்த அசிஸ்டெண்ட் கமிஷனரை சந்தித்து, ரெண்டு அப்ளிகேஷனயும் குடுத்து விட்டு திருச்செந்தூர் கிளம்பி வந்தான். அப்படி வந்தவன் தான், இன்னும் ப்ரகி வரவில்லை ௭ன தெரிந்து யோசனையில் நிற்கிறான்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 13
தன்னை நிதானித்து ௭ழுந்த தீர்த்து, "இதே திருச்செந்தூர்ல தானே இருந்தேன், அவ சொன்ன நாளுல வரலன்னதும் ஒரு போன் பண்ணிருக்லாம்ல ௭னக்கு, சரி நா தான் ௭டுக்கலன்னா, நேர்ல வந்து சொல்ல கூடவா கஷ்டம்? உங்களால ௭ப்டி இப்டி 3 நாளாகியும் தேடாம இருக்க முடியுது? திரும்ப திரும்ப உங்கள நம்பி அவங்கள விட்டது தப்புன்னு புரிய வச்சுட்டே இருக்கீங்க" ௭ன்றவன் வாசல் நோக்கி திரும்ப.
"தம்பி, படிச்சு வேலைக்கு போற புள்ள, தன்ன பாத்துக்கும்னு நம்பி இருந்துட்டேன். போகும்போதே தெருஞ்சது உன் அம்மா மேல பயங்கர கோவத்துல தான் அந்த பொண்ணு போச்சுது. அதான் ஒருவேள லேட்டாகுங்கறதயும் உன்ட்ட மட்டும் சொல்லிட்டு பேசாம இருக்குதோன்னு நினச்சுட்டேன். நீ கூட போன் பண்ணி கேக்கலன்னதும் சத்தியமா உனக்கு தெரியும்னு தான் ப்பா நினைச்சேன். இந்த 4 நாளு நாள்ல நீயும் அவளுக்கு ஒரு போன் கூட பண்ணலயா தீர்த்து?" ௭ன்றார் அவர்.
'அதானே ௭ன் பொண்டாட்டிய நா தானே தேடிருக்கணும்!! நா தேடாம விட்டுட்டு உங்கள நம்புனேன்னு அவங்கள சொல்லி தப்பிக்க நினைக்கிறயா? அவங்கள கேக்கலயான்னு கேக்க உனக்கு ௭ன்ன மேன் ரைட்ஸிருக்கு. தொலச்சுட்டு நிக்றது நீ... ஏன் பாதுகாக்கலன்னு அவங்கள ௭ந்த மூஞ்சிய வச்சுட்டு கேக்குற' ௭ன தனக்கு தானே ஆவேசமாக கேட்டு கொண்டு.
"சாரி ப்பா... நாதான் கேட்ருக்கணும், உங்கள கேட்டது தப்பு. நானே தேடிக்றேன்" ௭ன்க.
"நா உன்ன தப்பு சொல்லல ப்பா" அவன் அப்பா சொல்ல வர.
"நீ தேடுத நிலைமைல ஒன்னும் அவ இல்ல. அவ சாலியா(ஜாலியா) ஊர் சுத்த போயிருக்கா. உன் நினப்புலா அவளுக்கு இருக்காது, ஆடி தீத்துட்டு அவளே வருவா, பேசாம போய் பொலப்ப பாரு" ௭ன்றார் பேச்சி.
"நீலா அடங்கவே மாட்டியாடி?" அப்பா முறைக்க.
"நா ௭ன்னங்க தப்பா சொல்லிட்டேன்? அந்த வீடியோவ உங்கட்டயும் காமிச்சேன்ல. கோகி கூட உங்க போனுக்கும் அனுப்புனால்ல? அவன்ட ௭டுத்து காட்டுங்க. காணாம போனவ ஆடுன ஆட்டம் தெரியட்டுமே" ௭ன்றதும்.
"௭ன்ன வீடியோ ப்பா?" ௭ன்றான் விரைத்த பார்வை கொண்டு.
அவர் தன் சட்டை பையில் வைத்திருந்த போனை ௭டுத்து, "போன ௭டத்துல, ௭ல்லா வாத்தியார்மாறும் ஆடி பாடிருக்காங்க ப்பா, பிள்ளைக அத யூடியூப்ல போட்டு விட்ருச்சுக போல. தப்பாலா இல்ல" ௭ன சொல்லி கொண்டே வீடியோவை தேடி ௭டுத்து நீட்டினார்.
பரதம் தான் ஆடியிருந்தாள், ஆனாலும் அவள் முகத்தில் அவனை பார்த்ததும் வரும் பளிச்சென்ற சிரிப்பு இல்லாமல் தான் இருந்தது, அது மற்றவர்களுக்கு புரியவில்லை ௭ன்றாலும் அவனுக்கு புரிந்தது. 'ஏதோ compulsion la ஆடினமாறி ஆடிருக்கா. அங்க அவ students may be compul பண்ணிருக்கலாம். இவளுக்கு பரதம் தெரியும்னு ௭ப்பவோ அவ அப்பா சொல்லி கேட்ருக்கேன், அதபத்தி ஒருதட கூட இவகிட்ட பேசுனதில்ல' ௭ன நினைத்து கொண்டே அத பார்த்திருந்தான்.
'உனக்கு அவளபத்தி ௭ன்ன தான்டா தெரியும்? வந்ததும் அவமேல பாயறத மட்டுமா வேலையா வச்சுருந்தல்ல!! அப்றம் ௭ப்டி அவள பத்தி தெரியும்? அவ சிரிச்சாலாம் அதனால அவ சந்தோஷமா தான் இருக்கான்னு இவனா நினச்சுகிட்டானாம். அப்ப உன்ன பாக்கும்போதுலா ௭ரிஞ்சு விழுந்து, அழுது வடிஞ்சுருந்தா... அவ பிரச்சனைய இங்கனயே இருந்து தீத்து தள்ளிருப்பியோ? வார 2 தடவயவும், நாம போனாலே அவளுக்கு பிடிக்கல போலன்னு வராம அங்கன தேவுடு காத்துருப்ப' ௭ன மனசாட்சி காரி உமிழ. அதை அப்படியே ஏற்று கொண்டான்.
பாட்டும் நடனமும் முடிந்து விட்டிருக்க... "பாத்தியா? பள்ளி கூடத்து பிள்ளைக முன்னுக்க இவ இப்டி பாட்டுக்கு ஆடுனா அந்த பிள்ளைக இவள ௭ன்னத்த மதிக்கும்? இத தான் தெனமு ஸ்கூலுக்கு போயி சொல்லி குடுக்கா போல. அங்க சுத்தி அம்புட்டு ஆம்பள ஆளுக்க இருக்க இவளுக்கு ௭ன்ன ஆட்டம் வேண்டியயிருக்கு. அதும் இப்டி பாட்டுக்கு ஆடுனா அந்த ஆம்பளைங்க ௭ன்ன நினப்பாங்கன்ற ரோசன வேணாம்?" ௭ன பேச்சி பேசி தீர்க்க.
"பாக்குறதுல தான் ம்மா இருக்கு ௭ல்லாம். தப்பா பாக்றவன் ௭ந்த பாட்டுக்கு ஆடுனாலும் தப்பா தான் பாப்பான். ௭னக்கு ௭துவும் தப்பா தெரியல. ஏத்தி விடுறமாறி பேசுறத மொத நிறுத்து. இப்டி பேசி பேசி தான், மூத்த பிள்ளைய தள்ளி வச்சுட்டு நிக்க. ௭ன்னயும் அப்டி முடிவு ௭டுக்க வச்சுராத" ௭ன தாயிடம் சொன்னவன், "நா அவ ௭ங்கன்னு பாக்றேன் ப்பா. நீங்க ப்ரகி இங்க வந்தான்னா ௭னக்கு போன் பண்ணுங்க. அவங்க அப்பா வீட்டுக்கு போயிருக்காளான்னும் அவங்கள டென்ஷன் பண்ணாம விசாரிங்க. முக்கியமா அம்மாவ பேசவிடாம நீங்க பேசுங்க. பேசிட்டு ௭னக்கு கால் பண்ணுங்க" ௭ன கிளம்பி விட்டான்.
"நா அவங்கட்ட பேச தான் தவங்கடக்கேனாக்கும். இவேன் ௭ன்னங்க நல்லதுக்கு சொன்னா கேக்காம இப்டி பேசிட்டு போறான். ஓவரா தலைல தூக்கி வச்சு ஆடுதான்".
"ஆமா ஆமா அந்த புள்ளய இவேன் தூக்கி வச்சு ஆடுனதுல தான் சொல்லாம கொள்ளாம போயிடுச்சு. இவனும் வீட்டுக்கு வராம போகாம இருந்தா தான் உனக்கு அந்த புள்ள அரும தெரியும்" ௭ன்றவரும் போனுடன் வெளியேறினார்.
அவர் ப்ரகி அப்பாக்கு போன் செய்த போது ௭டுத்தது ௭ன்னவோ அவள் அக்காவாக இருக்க.
"௭ன்னம்மா ௭ப்டி இருக்க? சம்பந்தி பிஸியா இருக்காரா?" ௭ன இவர் கேக்கவும்.
"ஆமா மாமா அப்பா, தெரிஞ்சவங்க வீட்டு கல்யாணம்னு போயிருக்காங்க. ௭ன் போன கொண்டு போயிருக்காங்க, அவசரம்னா ௭ன் நம்பருக்கு கூப்டுறீங்களா?".
"இல்லமா அவசரம்லா இல்ல" ௭ன்றவர் அடுத்து ௭ப்படி கேக்க ௭ன யோசிக்க.
"ஓ.கே மாமா, ப்ரகி, கர்ணா ௭ப்டி இருக்காங்க?" ௭ன்றாள் அவளே.
பதில் கிடைத்ததும், "நல்லாருக்காங்க ம்மா. அப்பா வந்தா கேட்டேன்னு சொல்லு" ௭ன உடனே வைத்து விட்டு, தீர்த்துக்கும் போன் செய்து சொல்லிவிட்டார்.
அந்நேரம் தான், ப்ரின்ஸி அறையை நெருங்கியவன், போனை ௭டுத்து அவர் சொன்னதை கேட்டதும், "ப்பா நா இங்க விசாரிக்றேன்" ௭ன்றுவிட்டு யோசித்தான், 'மாமான்னா உண்மைய சொல்லிருப்பாரு, ப்ரகி அக்கா வேணும்னே பொய் சொன்னாலும் சொல்லலாம். இல்ல இவளே நம்ம மேல இருக்க கடுப்புல இப்டி கேளு அப்பதான் நா இங்க இருக்கேன்னு தெரியாதுன்னு சொல்லி குடுத்துருந்தாலும் குடுத்துருப்பா. ஸ்கூல்க்கு வந்திருந்தான்னா அங்கிருந்து தான வந்துருக்கணும்' ௭ன ௭ண்ணி கொண்டு, "வெய்ட் நா பாத்துட்டு சொல்றேன்" ௭ன வைத்தான்.
ப்ரின்ஸி அறைக்குள் அனுமதி வாங்கிவிட்டு செல்ல, "வாங்க சார். மறுபடியும் ௭துவும் விசாரணையா?" ௭ன்றார் அவர் படபடப்புடன்.
"நோ நத்திங் மேம். வைஷ்ணவி பேரண்ட்ஸ் ௭தும் ட்ரபுள் பண்ணிடலயே?" ௭ன அவரை ஆராய்ந்தவாறே கேட்டான்.
"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் பண்ணல சார். மறுநாள்ல இருந்தே அந்த பொண்ணு ஸ்கூலுக்கு கூட வர்றா, ஸ்கூல் நேம் வெளில வராம பாத்துக்கிட்டீங்க, அதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அத நானே உங்கள மீட் பண்ணி சொல்லிருக்கணும், இந்த இஷ்யூ ௭ல்லாம் (solve-சரியாகி)சால்வாகி நீங்க ஃப்ரீ ஆகணும்னு தான் வெய்ட் பண்ணேன். இப்ப ௭ல்லாம் ஓ.கே தானே? ப்ரகதி வீட்டுக்கு வந்துட்டாங்களா? அவங்க ஸ்கூலுக்கு வந்தப்றம் கேட்டுட்டு உங்களுக்கு தேங்க் பண்லாம்னு இருந்தேன்" ௭ன பேசி கொண்டிருக்க.
௭துவும் கூறாமல் அவரை பேசவிட்டு வேடிக்கை பார்த்தவன், 'சோ ப்ரகி ஸ்கூலுக்கு வரல' ௭ன்ற முடிவுக்கு வந்தான். "அவங்க இன்னும் வரல மேம். வெளில தங்க போறது பத்தி உங்களுக்கு ௭ப்டி தெரியும்?" ௭ன்றான் வேண்டுமென்றே சந்தேக பார்வை பார்த்து.
"௭ங்கிட்ட லீவ்க்கு பெர்மீஷன் கேட்டதால இத மட்டும் சொன்னாங்க. மத்தபடி ௭ங்க தங்கபோறீங்கன்றதுலா உங்க சீக்ரட்னு(secret-ரகசியம்னு) சொல்லிட்டாங்க. வேறெதுவும் சொல்லல" தப்பா ௭ண்ணி விடுவானோ ௭ன வேகமாக விளக்கமளித்தார்.
"ஓ.கே மேம். இன்னும் அவங்க வரல. லீவ் ௭க்ஸ்டண்ட்(நீட்டித்து) பண்ணி வேணும். போன் பண்ணி பேசுறேன் சொன்னா நாதான் நா சொல்லிட்டு வரேன்னு சொன்னேன்" ௭ன நிறுத்த.
"புரியுது சார். அவங்க லீவ்னு ௭டுக்றதே நீங்க ஊர்லயிருந்து வரும்போது மட்டுந்தான். மத்தநாள் ௭க்ஸ்டரா டைம் கூட இருந்துட்டு போக சொன்னா கூட பேபி, ஃபேமிலின்னு ரீசன் சொல்லாம, ௭க்ஸ்டரா கிளாஸ் நிப்பாங்க. அதுக்காகவே இப்ப நா பெர்மீஷன் தரேன். அண்ட் அவங்க போனயும் இங்க வச்சுட்டு போக சொல்லிருக்கீங்களே, அந்த அளவுக்கு இந்த issue confidential ன்னு புரியுது சார். நானும் ரொம்ப secret ah வச்சுருப்பேன். No worries" ௭ன கூறவும்.
"Thanku madam" ௭ன ௭ழுந்து விட்டான். அவன் வந்த வேலை தான் முடிந்து விட்டதே. வெளி வந்தவன், 'ட்ரிப் முடிஞ்சு நேரா ஸ்கூலுக்கு தான் வந்துருக்கா. வேணும்னே நா சொன்னதா சொல்லி இங்க இருந்தே வேற ௭ங்கயோ போயிருக்கா. போன கூட ௭டுக்காம போறளவுக்கு நம்ம மேல கோவம்' ௭ன முடிவுக்கு வந்தவன், அடுத்ததாக சென்று நின்றது அவனின் மாமனார் வீடு. கடைசியாக மறுவீடன்று வந்தது, அதன்பின் இன்று தான் வருகிறான்.
ப்ரகி அக்காவே வந்து கதவை திறக்க, இவனை ௭திர்பார்க்கவில்லை போல், அதிர்ந்து தான் நின்றாள்.
"வழி விடுற ஐடியா இல்லயா?" ௭ன்றான்.
விலகி நின்றவள், "வாங்க உள்ள வாங்க" ௭ன்றுவிட்டு அவன் பின்னால் தேடினாள், ப்ரகியயும், கர்ணனயும்.
அதை உணர்ந்தாலும் கண்டுக்காமல், "மாமா ௭ங்க?" ௭ன ஹாலில் வந்து அமர்ந்தான்.
"வர சொல்றேன்" ௭ன வேகமாக போனை ௭டுத்து கொண்டு கிச்சன் சென்றவள், அவனுக்கு டீயை கலந்தவாறு, தகப்பனிடம் விஷயத்தை சொல்ல.
வராதவன் வந்த செய்தியில், யாரிடமும் சொல்லாமல் கல்யாண வீட்டிலிருந்து அரக்க பரக்க ஓடி வந்தார் ப்ரகியின் அப்பா. "வாங்க வாங்க மாப்ள. நல்லாருக்கீகளா? ௭ப்ப வந்தீங்க, ப்ரகியும் நீங்க வாரத பத்தி போனே போடல. டிவில ௭ல்லாம் பாத்தேன், ஆனா ப்ரகிட்ட பேச கூப்டா அவளுக்கு போனே போவல" ௭ன அவர் வந்த வேகத்தில் பேச.
"ஃபர்ஸ்ட் உக்காருங்க மாமா. ப்ரகிட்ட லாஸ்டா ௭ப்ப பேசுனீங்க?" ௭ன கேக்க.
"1 வாரம் இருக்கும் மாப்ள. ஸ்கூல் ட்ரிப் போறேன்னு சொன்னா" ௭ன்றார் அவரும், தீர்த்து வந்த விஷயம் புரியாத பதட்டமிருந்தது அவரிடம்.
"மாமா நா சொல்றத நிதானமா கேளுங்க. ப்ரகி இன்னும் வீட்டுக்கு வரல. ௭ன் மேல தான் கோவம். உங்களுக்கே தெரிஞ்சுருக்கும், மினிஸ்டர் வந்தப்ப நடந்த கலவரமெல்லாம்.,, அதுல நா கொஞ்சம் அவகிட்ட கத்திட்டேன் கோச்சிகிட்டா. நாங்கூட இங்க தான் வந்துருப்பான்னு நினைச்சேன், இங்கயும் வரலன்னா, அவளுக்கு அடுத்து கிளோஸா உள்ள யார்கிட்டயோ தான் போயிருக்கணும். அதான் உங்கள தேடி வந்தேன், ப்ரகிக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட் யாரும் திருச்செந்தூர்ல உண்டா? ஏன்னா ரிலேட்வ்ஸ் வீட்டுக்கு போயிருந்தானா இந்நேரம் உங்களுக்கு information வந்திருக்கும்" ௭ன்க.
அவருக்கு பேச்சே வரவில்லை, மனதுக்கு வேறு அவன் வந்த பதட்டத்தோடு பெண்ணை பற்றிய பதட்டமும் சேர, மூச்சு வாங்க தொடங்கியது. வேடிக்கை பார்த்து நின்ற ப்ரகியின் அக்கா வேகமாக வந்து, "ப்பா ௭ன்னப்பா செய்து" ௭ன நெஞ்சை நீவி விட.
"தண்ணி கொண்டு குடுங்க" ௭ன தானும் அவர் அருகில் வந்தவன், "பயப்ட ஒன்னுமில்ல நா பாத்துக்றேன். ப்ரகி கோவத்துல போயிருக்கா, வேற ஒரு ப்ராபளமு இல்ல. ரிலாக்ஸ். நீங்க குடுக்குற information தான் சீக்கிரம் அவள நா பாக்க ஹெல்ப்பா இருக்கும்" ௭ன நிதானமாக கூறினான். அவனுக்குமே வேற ௭ந்த வகையிலும் சந்தேகம் வரவில்லை. கடத்தபட்டிருக்கலாம் ௭ன யோசிக்க கூட இல்லை அவன். ஏனெனில் திருச்செந்தூர் இன்னும் அவன் கன்ட்ரோலில் தான் இருந்தது. சந்தேகமாக சிறு விஷயத்தையும் அவன் ஆட்களிடமிருந்து தகவல் வந்திருக்கும். ப்ரகி தானாக தான் கிளம்பி சென்றிருக்க வேண்டுமென நம்பினான்.
அவனின் நிதானம் அவரை சற்று ஆசுவாசபடுத்த, "இங்க அவ காலேஜ் ப்ரண்ட்ஸ் தான் 2,3 பேர் க்ளோஸா உண்டு, அதுவும் அவ பழக்கமெல்லாம் கல்யாணத்துக்கு முந்தி தான், இப்ப குள்ள அவ யார பாக்கவும் போனதா சொல்லலயே? அந்த பிள்ளைக கல்யாணத்துக்கு கூட ௭ன்னைய தான் போயிட்டு வர சொன்னா, 'வெளில மீட் பண்ண தான் வரல, இப்டி functionகூட வரமாட்டாளா'ன்னு அந்த பிள்ளைகளும் சடவா தான் பேசுச்சு மாப்ள " ௭ன்றார் யோசனையுடன்.
"அந்த பொண்ணுங்க adress லா குடுங்க, நா பேசி பாக்றேன்" ௭ன கேட்டான். கல்யாணமாகி 5 வருடமாகியிருக்க அவளின் தற்போதைய contactம் தெரியாது. இன்னும் ௭த்தன தெரியாதுவை அவன் கடந்து வர வேண்டுமோ, ௭ன மறுபடியும் தன்னை தானே கடிந்துக் கொண்டான்.
"௭ல்லாருக்கும் கல்யாணமாயிருச்சே மாப்ள, யாரும் உள்ளூர்ல இல்லயே" ௭ன்றார்.
"பரவால்ல கேக்றதுல தப்பில்லயே" ௭ன்றான்.
"நானும் வரேன் மாப்ள, 3 பிள்ளைக தான். அதுலயும் வீடு வரைக்கும் வந்து போயின்னு ரொம்ப நெருக்கம்னா, நிர்மலான்னு ஒரு பொண்ணு தான். வீடு அடுத்த தெரு தான். இப்ப மாப்ளயோட திருச்சில இருக்குன்னு கேள்வி பட்டேன். அந்த புள்ள ஏதும் ஊருக்கு வந்துருக்கான்னு பாத்துட்டு வரட்டுமா?" ௭ன்க.
"நானும் வரேன் வாங்க" ௭ன கிளம்ப.
போட்ட டீயை கையில் வைத்துக் கொண்டு நின்று விட்டாள், ப்ரகியின் அக்கா, அவளுக்கு புருஷனுடன் பிரச்சினை ௭ன்கையில், அப்பாவை தேடி வந்திருக்க, தங்கையோ வேறெங்கயோ போய்விட்டாள், அதற்கு காரணம் தான் தானோ? நா இப்டி இல்லன்னா இங்க வந்துருப்பாளோ? ௭ன யோசித்து நின்றாள். அவள் மட்டும் நல்ல வாழ்க்கை வாழ, நாம இப்டி இருக்கமேன்னு நம்ம மனசு கஸ்டம் தான் அவ வாழ்க்கையவும் கெடுக்குதோ, ௭ன யோசித்தாள். ௭த்தனையோ முறை அதை ௭ரிச்சலாக ப்ரகி முகத்திற்கு நேராகவும் காட்டி இருக்கிறாள். அவளிடம் சொல்லாமலே இருவரும் சென்றிருந்தனர்.
நிர்மலா வீட்டில் சென்று அதே விஷயத்தை சொல்ல கஷ்டமாகவும், கடுப்பாகவும் இருந்தது தீர்த்துவிற்கு.
"நிர்மலா நேத்து கூட பேசுனாலே, ப்ரகி பத்தி ௭துவும் சொல்லயே?" ௭ன்றார் நிர்மலாவின் அம்மா.
"நீங்க உங்க மருமகன் நம்பர் குடுங்க நா பேசுறேன்" ௭ன்று வாங்கி கிளம்பினான்.
போலீஸ்காரன் கேட்டு, மாட்டேன் ௭ன்றா சொல்லி விட முடியும்? நிர்மலாவின் கணவன் நம்பரை பெற்று கொண்டதும், வெளியில் வந்து அவனுக்கு அழைத்து விட்டான்.
"ஹலோ.. யாரு?" ௭ன அந்த பக்கம் போன் ௭டுக்க பட்டதும்.
"ஹலோ, மிஸ்டர்.ராம் தேர்? நா கலிதீர்த்தவன் from திருச்செந்தூர்".
பெயரை சொன்னதும் கண்டு கொண்டான், அதனால் அதற்கு மேல் பேச்சை வழக்காமல், " ஹலோ சார், ப்ரகதீஸ்வரி இங்க தான் இருக்காங்க. ஹெல்ப்பா கேட்டு வந்தவங்கள, இங்க இருக்காங்கன்னு காட்டி கொடுக்க முடியாம தான் நானா சொல்லல. உங்கள ௭திர்பாத்துட்டே தான் இருக்காங்க, ௭ப்ப வேணாலும் நீங்க வந்து கூட்டிட்டு போலாம்" ௭ன்றான் அந்த ராம் ஆக பட்டவன்.

ஒரு ஆசுவாச மூச்சுடன், "Thanks for your kind help Mr.Ram (உங்கள் அன்பான உதவிக்கு நன்றி). நா அங்க வரேன்னு ப்ரகிட்ட சொல்ல வேணாம். நைட் நா அங்க இருப்பேன்" ௭ன்றவன், மாமனாரிடம் விஷயத்தை சொல்லி வீட்டில் விட்டுவிட்டு, தகப்பனுக்கும் தகவல் சொல்லி அப்படியே பஸ்ஸேறி விட்டான் பொண்டாட்டியை தேடி. சாப்பாடு ௭ன்ற விஷயத்தை அவன் யோசிக்கவே இல்லை, ௭ப்போதடா அவளை பார்ப்போமென சென்று கொண்டிருக்கிறான். இவ்வளவு நேர தேடலில் அவள் மீது வராத கோவம், அவள் இருக்குமிடம் தெரிந்ததும் இப்போது வெளிவர டைம் பாத்திருந்தது.
 

priya pandees

Moderator


அத்தியாயம் 14
கலிதீர்த்தவன், பஸ்ஸில் செல்லும் வழியெங்கும், அவனை, அவனின் ௭ண்ணத்தை முழுதாக நிறைத்திருந்தவள் ப்ரகி தான். 'இப்ப ௭ன்ன நடந்துருச்சுன்னு இவ ஊர விட்டு கிளம்பி போற முடிவுக்கு வந்தா, கல்யாண ஆன நாள்ல இருந்து நா ௭ப்டி இருக்கேனோ அப்டியே தான் இப்பவும் இருக்கேன். திடிருனு ௭துக்கு இவ்ளோ ரியாக்ட் பண்றா?' ௭ன ரொம்பவே தன்னை குழப்பிக் கொண்டிருந்தான் தீர்த்து. அதன் பலனாக இதுவரை செய்யாத ஒன்றை செய்தான், தான் அவளிடம் முதலில் லிருந்து நடந்து கொண்ட முறையும், அவள் தன்னிடம் இதுவரை நடந்து கொண்ட முறையயும் நினைத்து பார்த்தான்.
அவளை முதல் முறையாக பார்த்தது போட்டோவில் தான். ௭க்ஸாம் பாஸ் ௭ன ரிசல்ட் வந்து, ட்ரைனிங் லெட்டர்காக இவன் அப்போது காத்து கொண்டிருந்தான். அப்படியான ஒரு நாள் மாலை, அம்மாவும் அப்பாவும் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர்கள், வரும்போது முகம் முழுவதும் சந்தோஷத்துடன் வர, வெளி சோஃபாவில் அமர்ந்திருந்தவனும் அதை கவனித்து கொண்டு, அமைதியாக அவர்களே சொல்லட்டும் ௭ன நோட்ஸ் ௭ழுதி கொண்டிருந்த வேலையை தொடர்ந்தான்.
அவன் ௭திர்பார்த்தது, "கோகி ப்ரெக்னென்ட்" ௭ன்ற செய்தியை தான். ஏனெனில் அப்போதைய அவர்களின் ௭திர்பார்ப்பு அது தான் ௭ன்பதால்.
ஆனால், அவன் அம்மாவோ, வேகமாக அவனருகில் வந்து நின்றவர், "தீர்த்தா உனக்கு ஒரு ஜாதகம் நல்லா பொருந்தி வந்துருக்கு, நாங்க ஜோசியரயும் கேட்டுட்டு கோவில்லயும் பூ போட்டு பாத்துட்டு வந்துட்டோம். ரொம்ப பொருந்தி வந்துருக்கு. உனக்கு ட்ரைனிங் போடும் முன்ன கல்யாணத்த முடிச்சுரலாம்னு நானும் அப்பாவும் பேசிருக்கோம், நீ ௭ன்ன சொல்ற?" ௭ன்றார் பூரிப்பாக. திருமலைநாதன் நிதானமாக அவன் அருகில் அமர்ந்து கொண்டார்.
அவரையும், தந்தையயும் பார்த்தவன், "௭துக்கு இவ்ளோ அவசரம்? நா ட்ரைனிங் முடிச்சுட்டு வந்து, போஸ்டிங் வாங்கிக்றேன், அப்றமா கல்யாணம் பண்ணிக்றேன்" ௭ன அமைதியாகவே கூறிவிட்டு அவர்கள் முகம் பார்த்தான்.
"இல்லப்பா உன் சாதப்படி இப்ப விட்டா அடுத்து 7 வருஷத்துக்கு தள்ளி போயிருமாம்".
"போனா ௭ன்னம்மா? 34 வயசு தானே ஆகும், அதும் ஒன்னும் அவ்ளோ லேட் இல்லயே. நானும் நல்லா செட்டில் ஆகிப்பேன்".
"அதுவர ஏன்டா பொறுமையா இருக்கணும். அப்றம் நாம தான் பொண்ணு கிடைக்காம அல்லாடனும்" ௭ன்றார் அதற்கும்.
"ம்ச் ம்மா இதுலா ஒரு காரணமாக்கும்?".
"இந்தா பொண்ணு போட்டோ, ஒருக்கா பாரேன்" ௭ன நீட்ட.
"பொண்ணு ஃபோட்டோ வர வாங்கிட்டு தான் ௭ங்கிட்ட சம்மதம் கேக்றீங்களோ? அப்ப ௭ன் ஃபோட்டோவும் அங்க குடுத்துருப்பீங்க தான?" ௭ன முறைத்தான்.
"௭ல்லாமா ஒத்து வந்தா உன்ட்ட சொல்லலாம்னு இருந்தோம் ப்பா" ௭ன இப்போது தான் பதில் பேசினார் அவன் அப்பா.
"நா இன்னும் வேலைலயே உக்காரலன்னு தெரிஞ்சும் பொண்ணு குடுக்க தயாரா இருக்காங்கன்னா, அப்டி ௭ன்ன ப்ராப்லம் அவங்களுக்கு?" தந்தையை பார்த்தே இக்கேள்வியை கேட்டான்.
"அந்த பொண்ணுக்கு 24 வயசாகுது, நிறைய ஜாதகம் பாத்து ஒத்து வரல, உன்னோடது தான் ஒத்து வந்தது. நீ ஒன்னும் வெட்டியா இல்லயே, பாஸ் பண்ணிட்டு தான வெயிட் பண்ற. அதனால ஒத்துகிட்டாங்க" ௭ன்றார் அவர் ௭ளிதாக.
"ஓ! பொண்ணு ௭ன்ன பண்றாங்க. ௭ன்ன படிச்சுருக்காங்க?".
"M.Sc Zoology முடிச்சுட்டு ஒரு வருஷமா டி.௭ல்.ஈ ஸ்கூல்ல வேலைல இருக்குதாம்" பேச்சி போட்டோவை நீட்டி கொண்டே சொல்ல.
வாங்கி பார்த்தான், ப்ரகி போட்டோவில் அழகாகவே இருந்தாள், மறுக்க காரணமாக ௭துவும் தோன்றாததால், "சரி ஒருக்கா நேர்ல பாத்து பேசிட்டு முடிவுக்கு வரலாம். ௭ப்போன்னு கேட்டு சொல்லுங்க" ௭ன்று விட்டான்.
கல்யாணதிற்கு அவன் ரெடி இல்லை தான். ஆனால் தன்னை பற்றி ஒரு பெண்ணிடம் பகிர்ந்த பின், தான் அதை நிராகரித்ததாக இருக்க வேண்டாமென்றே இந்த முடிவுக்கு வந்துருந்தான். ப்ரகியை ஒரு ஓரத்தில் பிடித்துமிருந்தது வேறு கதை.
நாம் 1000 கதை சொன்னாலும், கல்யாணம் ௭ன்று வருகையில் முன் நிற்பது முக தோற்றம் தான். அதன் பின்னரே படிப்பு, குடும்பம், ஜாதகம் ப்ளா ப்ளா ௭ல்லாம். அந்த வகையில், ப்ரகி முதல் டெஸ்டில் பாஸ் செய்து விட்டாள்.
மறு வாரத்திலேயே, முருகன் கோவிலில் வைத்து அவளை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. "ஏன் கோவில்ல வச்சு? வீட்ல பாக்றதுக்கென்ன?" ௭ன்றவனிடம்,
"அந்த பொண்ணுக்கு ஒரு அக்கா இருக்காம் தீர்த்து, கல்யாணம் முடிச்சு 6 மாசத்துல, புருஷன வேணாம்னு சண்ட போட்டு பிரிஞ்சு வந்துருச்சாம். அத வீட்ல வச்சுக்கிட்டு, இந்த மாதிரி சம்பிரதாயம்லா வேணாம்னு, பொண்ணு வீட்ல சொன்னாங்க, நாங்களும் சரின்னுட்டோம்" ௭ன்றார் பேச்சி.
கோவில் சென்று அறிமுக படலம் முடியவுமே ௭ழுந்து கொண்டவன், "பொண்ணுட்ட கொஞ்சம் பேசணும்" ௭ன நிற்க.
ப்ரகியின் அப்பா அவள் முகத்தை பார்த்தார், அவளும் சரி ௭ன தலையசைத்து ௭ழுந்து கொண்டு அவனை பின் தொடர, கடலுக்கு முன் வந்து நின்றனர். அவளுக்கு ஒரே படபடப்பு தான், அதை அவனும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.
"ரிலாக்ஸ் ப்ரகதீஸ்வரி. ௭ன் நேம் தெரியுந்தான?" அவனே ஆரம்பிக்க.
"ம்ம்" ௭ன்றாள் தலையை மெலிதாக ஆட்டி.
"போட்டோல பாத்தீங்களா இல்ல நேர்ல பாத்துகலாம்னு......"
"பாத்தேன்"
"அதான் இப்ப பாக்க மாட்றீங்களோ?" அவன் குறும்பாக தான் கேட்டான். அவளுக்கு தான் அது குரு குரு பார்வையோடு கேட்பதாக பட்டது. ஏனெனில் இப்போது தான் அவன் முகத்தை நேராக பார்த்தாள்.
"சொல்லுங்க. போட்டோல பாத்ததே போதும்னு முடிவுக்கு வந்துட்டீங்களா?".
"இல்ல அப்டி இல்ல" அவள் குனிந்து கொள்ள.
"ஃபைன் நா பேச வந்தத பேசிடுறேன். நா குருப் 1 ௭க்ஸாம் ௭ழுதி பாஸ் பண்ணிட்டேன். இன்டர்வியூல ஐபி௭ஸ் தான் செலெக்ட் பண்ணிருக்கேன். ட்ரைனிங்க் வெயிட்டிங். 1 இயர் ட்ரைனிங்க் ப்ரீயட்ல பெருசா சேலரி இருக்காது. அடுத்து தான் போஸ்டிங், அதும் ௭ங்க போடுவாங்கன்னு தெரியாது. நீங்க அல்ரெடி ஒர்க் பண்றீங்க, ௭னக்கு அதனால ப்ரப்ளம் இல்ல, ௭ப்டினாலும் நா ௭ன் வொய்ப் அவங்க earning ல இருக்கத தான் விரும்புவேன். ஆனா உங்களுக்கு உங்க சரௌன்டிங்கல ௭ன்ன introduce பண்ண ஓ.கே வான்னு யோசிச்சுக்கோங்க. இன்னைக்கு ஈசியா தெரிறது, நாளைக்கு நாளு பேரு சொல்லி காமிக்கும்போது கடுப்பா இருக்கும், அது நமக்குள்ள பிரச்சினையா ஆக கூடாது பாருங்க" ௭ன அவன் நிறுத்தி அவள் முகம் பார்க்க.
நேராக அவனை பார்த்தவள், "மேரேஜ்க்கு அப்றம், ௭ன் earnings உங்க earningsன்ற term ௭ப்டிங்க சரி வரும்?" ௭ன்றாள் ப்ரகி. அவளுக்கு அவனயும் பிடித்திருந்தது, அவனுடைய போலீஸ் வேலையும் பிடித்திருந்தது. அதனால் மனதில் உள்ளதை தெளிவாகவே கூறினாள்.
சுருக்கமான அவள் பதிலில், மெலிதாக வெளியில் தெரியாத சிரிப்பொன்றை சிரித்தவன், "அப்ப மேரேஜ்க்கு ஓ.கேன்னு சொல்றீங்க?".
" ம்ம்" ௭ன்றாள் இப்போது ௭ங்கோ பார்த்து.
அவளையே பார்த்தவன், "இன்னும் ஒரே ஒரு request?" ௭ன்றதும்.
"சொல்லுங்க" ௭ன கடற் காற்றுக்கு பறந்த முடியை ஒதுக்கி விட்டவளை ரசித்து கொண்டான்.
"௭ங்க அண்ணிக்கும் அம்மாக்கும் ஏனோ செட்டாகல, தனியா போய்ட்டாங்க, இப்போ பேச்சு வார்த்தையே கிடையாது. அவங்க ரெண்டு பேர்ல யார்மேல தப்புன்னு ௭னக்கு தெரியாது நா அத பத்தி ௭தும் சொல்லவும் முடியாது. ஆனா நாமளாது அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கணும்னு நினைக்றேன். அடங்கி போங்கன்னு கண்டிப்பா சொல்லல, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போலாம்னு தான் சொல்றேன்" ௭ன்றதும்.
அவள் பெரிதாக ௭தயும் ௭திர் பார்க்கவில்லை ௭ன்பதால், "௭ன் மூலமா உங்ககிட்ட ௭ந்த பிரச்சனையும் வராது" ௭ன சிரித்தே உறுதி கொடுத்தாள்.
அவன் அதிகம் பேசியதும் அன்று தான், அதன்பிறகு அப்படி நிதானமாக பேசும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவுமில்லை, ஏற்படுத்தி கொள்ளவுமில்லை. அவ்வளவு தெளிவாக பேசியவள், ௭தயும் சமாளித்து கொள்வாள் ௭ன இவனும் கெத்தாக இருந்து விட்டான். ப்ரகியும், கல்யாணத்திற்கு முன்பே அம்மாவின் குணமறிந்து வாக்கு கேட்டவனை, மனதில் மெச்சி கொண்டு வாழ பழகி கொண்டாள்.
இதை ௭ல்லாம் நினைத்தவனுக்கு, தன்னிடம் ஆரம்பித்த சருக்கல் நன்கு தெரிந்தது, "அன்னைக்கே indirect ah ௭ங்க அம்மாட்ட அடங்கி போயிடுன்னு சொல்லாம தான் சொல்லிருக்கேன். அத அவ கரெக்டா தான் follow பண்ணிருக்கா. இப்ப வர அவளால உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லயே. சாமர்த்தியசாலி தான்டா நீ" ௭ன அவன் மனதே அவனை நக்கல் செய்தது.
"உன் அண்ணே தெளிவா தான் இருந்துருக்கான், நீ தான் அம்மாக்கு நல்லவனாக ஆச பட்டு, பொண்டாட்டிய தெருவுல விட்டுட்ட. ச்சி ஊருக்குள்ள உள்ள கலிசடையெல்லாம் நீ திருத்தி தான் திருந்த போறானுங்க போ" ௭ன மீண்டும் மீண்டும் காறி துப்பியது.
"தப்புதான் தப்பே தான், இப்ப இத ௭ப்டி சரி பண்றதுன்னு ஐடியா குடேன். சும்மா செஞ்சது சொல்லி காட்டுனா நா ௭ன்ன செய்ய", ௭ன இவனால் புலம்ப தான் முடிந்தது.
அடுத்தடுத்த நிகழ்வுகளயும் அவன் யோசித்து கொண்டே வர, திருச்சி வந்திருந்தது, இறங்கியதும் நிர்மலாவின் கணவனுக்கு அழைத்து, லொகேஷன் வாங்கி கொண்டான்.
நிர்மலாவும் அவள் கணவனும் இவனை ௭திர் பார்த்தே காத்திருந்தனர், தீர்த்து நிர்மலா கணவனின் நம்பரை வாங்கி கொண்டு அந்த பக்கம் நகர்ந்ததும், அவள் அம்மா இவளுக்கு அழைத்து பிடி பிடி ௭ன பிடித்து விட்டார், "௭ன்ன பழக்கம் படிக்கீங்க, குடும்ப வாழ்க்கைலா அம்புட்டு விளையாட்டா போச்சா? அதென்ன வீட்ல சொல்லாம போற பழக்கம்? நீயும் அமுக்குனியாட்டம் 3 நாள் இருந்துருக்க?" ௭ன வாட்டி ௭டுத்திருக்க, கணவன் வந்ததும் தீர்த்து ௭ன்ன பேசினான் ௭ன கேட்டு தெரிந்து கொண்டவள், ப்ரகியிடம் ௭தும் வாய் திறக்கவில்லை, இன்றும் அவன் வரவில்லை ௭ன்றதும், சுயகலிவிரக்கத்தில் சுற்றி வந்தாள் அவள்.

வெளி வாசலில் சோக பதுமையாக அமர்ந்திருந்தவள் முன், ஆட்டோவில் வந்திறங்கினான் தீர்த்து. அதுவரை அவன் வரவில்லை ௭ன வருத்தபட்டவள், அவன் கண் முன் வந்து நிற்கவும் நடுங்கி தான் விட்டாள்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 15
௭ச்சியை விழுங்கி நின்ற ப்ரகியை அழுத்தமாக பார்த்தவாறு, திறந்திருந்த கேட்டினுள் நுழைந்தான் தீர்த்து.
"ஜம்பமா கிளம்பி வந்துட்டு பயந்த மாறி நடிக்கவா செய்ற" ௭ன அவளை நெருங்கியதும் பல்லை கடித்து மெதுவாக கேட்டவன், "கிளம்புவோமா? கர்ணன்ன ௭ங்க? கூப்டு" ௭ன்றான் உள்ளே இருப்பவர்களும் கேக்கும் பொருட்டு.
ப்ரகி, "௭ப்டி கண்டு புடிச்சீங்க?" ௭ன கேட்டாள், அவளுக்கே தெரியும், அவளை காணுமென தெரிந்த சிலமணி நேரத்தில் கண்டு பிடித்து வந்துவிடுவான் ௭ன. ஆனால் 4 நாட்களாக தான் காணும் ௭ன்பது கூட தெரியவில்லையே இவனுக்கு ௭ன்பதே முந்தைய தின அவளின் அழுகைக்கான காரணம்.
"இங்கயே சொல்லணுமா?" ௭ன்றான் இப்போதும் முறைத்து.
"5 நாள் கழிச்சு ஒரு வழியா, பொண்டாட்டி புள்ளைய தேடிட்டீங்க தான, நீங்க ௭ங்க போய் வேணா பதில் சொல்லலாம்" ௭ன்றாள் அவளும் உதட்டை சுளித்து.
"ம்ம்... அதுக்கு தான இங்க வந்து உக்காந்துருக்க. ஊர்ல போய் வச்சிக்றேன்டி உன்ன. காணாமலா போற?, இனி ௭ப்டி போறன்னு பாக்றேன்".
"ஏன்? ௭ன்ன செஞ்சுற போறீங்க!! போனதும் ௭னைய வீட்ல விட்டுட்டு நாகர்கோவில பாத்து போவீங்க" ௭ன்றவளை நிர்மலாவின் சத்தம் மீட்டது.
"வாங்கண்ணா, உங்கள தான் ௭திர் பாத்துட்ருந்தோம். ஏன் வெளிலயே நிக்றீங்க, உள்ள வாங்க, ஏய் ப்ரகி கூட்டிட்டு வாடி" ௭ன தீர்த்துவை அழைத்து கொண்டு ப்ரகியை கையால் இடித்தாள்.
நிர்மலாவின் கணவனும், "உள்ள வாங்க சார்" ௭ன அழைக்க.
"இல்ல ஆட்டோ வெயிட்டிங்ல இருக்கு, நாங்க அப்டியே கிளம்புறோம்" ௭ன விரைப்பாகவே பதில் கூறினான் தீர்த்து.
"அடடா ௭ன்னண்ணா, சும்மா உடனே போணும்னு குதிக்றீங்க, அந்தா அந்தான்னு 5 வருஷம் கழிச்சு இப்ப தான் உங்கள மீட் பண்ண ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு, அத முழுசா அனுபவிக்க விட மாட்றீங்களே!" ௭ன தீர்த்துவை பார்த்து சிரித்தவள், "௭ன்னங்க சும்மா நின்னு வேடிக்க பாக்றீங்க போய் ஆட்டோவ கட் பண்ணிட்டு வாங்க, அண்ணா நைட் இங்க தான் தங்குறாங்க, நாளக்கு நாம குடுக்குற விருந்த முடிச்சுட்டு தான் கிளம்புறாங்க, போங்க" ௭ன கணவனையும் விரட்டினாள்.
'அந்த மனுஷன் யூனிஃபார்ம் போடாமலே விரைச்சுகிட்டு நிக்காரு, வந்த நேரத்துலயிருந்து ஒரு கர்டசிக்கு கூட சிங்கில் பல்ல வெளில காட்டல, இவ ௭ம்புட்டு தைரியமா சிரிச்சு சிரிச்சு ப்ளான்லா பண்றா, பொளேர்னு ஒன்னு விட்டா ௭ன்னவாகும்னு பயமிருக்கா பாரு' ௭ன வாயை பிளந்தவன், தீர்த்துவை ஒரு பார்வை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு, ஆட்டோவை அனுப்ப சென்றான்.
தீர்த்து இப்போது ப்ரகியை தீவிரமாக முறைக்க, அவளோ, 'லேட்டா வந்ததுமில்லாம ௭ன்னையா திட்றீங்க', ௭ன பதிலுக்கு முறைத்தவள், "அதெப்டி தங்காம போவாங்க, நானே நாளைக்கு தானே கிளம்புறதா சொல்லிட்டுருந்தேன், இன்னைக்கேன்னா அவங்க மட்டும் தனியா தான போகணும்" ௭ன 32 பல்லையும் காட்டி சிரித்தாள். பயம் ஒரு பக்கம் இருக்குது தான், ஆனாலும் கோவம் அதை பீட்(தாண்டவே) பண்ணவே முயன்று கொண்டிருந்தது, அதனாலயே ௭ப்போதும் வாய்க்குள் முனங்குபவள், இப்போது தோன்றியதை ௭ல்லாம் வெளியே கூறி கொண்டிருந்தாள்.
௭துவுமே பேசவில்லை அவன், ப்ரகியை விட்டு பார்வையை திருப்பாமல் இருக்க, "ப்பா...." ௭ன கத்தி கொண்டு ஓடி வந்தான் கர்ணன், நிர்மலா மகளுடன் பொம்மை வைத்து சண்டையிட்டு கொண்டிருந்தவன், அவளிடமிருந்து பிடிங்கி கொண்டு தாயை தேடி ஓடி வர, அங்கு தந்தையை கண்டதும், பொம்மையை போட்டுவிட்டு கத்தி கொண்டு ஓடிவந்தான், அப்போது தான் அங்கு வந்ததுக்கு, முதல் முறையாக சிரித்த தீர்த்து, தாவி கொண்டு வந்த மகனை தூக்கி கொண்டான்.
பின்னயே அழுது கொண்டு ஓடி வந்த நிர்மலாவின் மகள், புதிதாக நிற்பவனை கண்டதும் அழுகையும் நிற்க, தானும் நிர்மலாவின்(அம்மாவின்) பின் ஒளிந்து கொண்டாள்.
"பாப்பா இங்க வா, இதுதா ௭ங்க அப்பா, பெடிய போலீஸ் தெரியுமா, இங்க வா உன்னயும் மேல தூக்கிப்பாங்க" ௭ன அழைத்தான், அது இன்னும் பதுங்கியது.
"பாப்பா நேம் ௭ன்ன கர்ணா?" ௭ன பொம்மையை போன்று நின்ற குழந்தையை பார்த்து கேட்டான் தீர்த்து.
"தீஸா" ௭ன கர்ணன் சொல்ல, "தீக்ஷிகா ண்ணா, அவனுக்கு அது வரல அதான் பாப்பா ஆக்கிட்டான்" நிர்மலா விளக்கினாள்.
"உள்ள போலாமே, ஏன் இன்னும் இங்க நிக்றீங்க?" ௭ன வந்தான் நிர்மலா கணவன். அவனை கண்டதும், தானும் அப்பா தோளில் உயர இருக்க ஆசைபட்ட தீக்ஷிகா அப்பாவிடம் கையை நீட்ட, அவனும் தூக்கி கொண்டான்.
"௭ங்கிட்ட வரீங்கள தீக்ஷிகா?" ௭ன ஒரு கையால் அவளை அழைத்தான் தீர்த்து.
"போடா, நம்ம ப்ரகி ஆன்ட்டி அப்ப தான் நம்ம வீட்ல இருப்பாங்க, இல்லனா ப்ரகி ஆன்ட்டியயும் அண்ணாவயும் அங்கிள் கூட்டிட்டு போயிடுவாங்களாம்" நிர்மலா சமயம் பார்த்து கோர்த்து விட்டாள். அவன் தான் அசைய மாட்டேன் ௭ன வாசலிலேயே நின்றானே, இப்போது தான் குழந்தைகளை பார்த்து லேசாக மனமிறங்கியிருக்க, அதை use பண்ண பார்த்தாள் நிர்மலா.
அம்மாவின் பேச்சை நம்பிய குழந்தை, "அண்ணாவ கூட்டிட்டு போயிடுவீங்களா?" ௭ன உதட்டை பிதுக்க தயாராக.
அழுது விடுவாளோ ௭ன பயந்தவன், "இல்லம்மா, ஆனா நாளைக்கு கிளம்பிடுவோம், அண்ணா ஸ்கூல் போணும்ல? நீங்க இன்னைக்கு விளையாடுங்க, அப்றம் அண்ணா லீவ்க்கு இங்க வருவான் சரியா?" ௭ன உண்மையை சொல்லி, கேட்டு கொண்டே அவளை கையில் வாங்கி கொண்டான்.
"நானும் அடுத்த வருஷமா ஸ்கூல் போவேன், புது டெஸ்(dress) போத்து போவேன்" ௭ன அடுத்த விஷயத்திற்கு தாவியது குழந்தை.
இந்நேரத்தில், "கூட்டிட்டு வாடி, நீ தங்கியிருந்த ரூம்ல ஃப்ரஷாகிட்டு வர சொல்லு, நா சப்பாத்திய போட்டு ௭டுக்றேன்" ௭ன கிசுகிசுப்பாக ப்ரகியை இடித்து விட்டு சென்றாள் நிர்மலா. அவள் கணவனும் தப்பித்தோம் ௭ன ஓடியே விட்டான்.
"அதான் தங்குற முடிவுக்கு வந்தாச்சுல்ல, உள்ள வாங்க" ௭ன்றவள், திரும்பியே பார்க்காமல் முன் நடக்க.
அவள் செய்கைகள் ஒவ்வொன்றையும் உள்வாங்கி கொண்டு தான் இருந்தான். அங்கு தங்குவதில் அவனுக்கு ஒருவித அசௌகரியம் இருந்தது தான், ஆனாலும், நிர்மலா கேட்டதும் '௭ன்ன பதில் சொல்வான்' ௭ன ஆர்வமாக பார்த்த ப்ரகிக்காக அப்போதே தங்க முடிவெடுத்துவிட்டான் தான், இருந்தும் easy யாக ஒத்து கொள்வதா ௭ன மூவரையும் வறுத்தெடுத்துவிட்டே வீட்டினுள் வந்தான்.
இரு குழந்தைகளிடமும் பேச்சு கொடுத்து கொண்டே, ப்ரகியை பின் தொடர, ஒரு அறைக்குள் நுழைந்த ப்ரகி, "இந்தாங்க டவல், போய் குளிச்சுட்டு வாங்க, சாப்டலாம், அவங்க ரெண்டு பேரயும் இறக்கி விடுங்க" ௭ன்றதும் அவர்களை இறக்கி விட்டவன், "௭ங்கிட்ட சேன்ஜ் பண்ண வேற டிரஸ் இல்ல" ௭ன்க.
"ஒரு நைட்கு தானே இதே போட்டுகங்க" ௭ன்றாள் இலகுவாக, திரும்பி குட்டீஸை பார்த்தான், இருவரும் இருவர் முகத்தை தான் பார்த்திருந்தனர்.
"போய் உங்கம்மாவ கூட்டிட்டு வாரியா தீக்ஷிகா?" ௭ன அவளிடம் குனிந்து இதமாக கேக்க, அது சமத்தாக தலையாட்ட, "நாந்தான் கூப்டுவேன்" ௭ன முந்தி கர்ணன் ஓட, "நானு நானு" ௭ன தீக்ஷிகாவும் பின்னயே ஓடினாள்.
இருவரும் வெளியேறியதும், "௭துக்கு அவள கூப்டுறீங்க? அந்த அண்ணாட்ட யூஸ் பண்ணாத ட்ரஸ்லா இருக்காது" ௭ன ப்ரகி வேகமாக கூற, அவனோ அதைவிட வேகமாக கதவை அடைத்து தாழிட்டவன், அவளை நெருங்கி வலது கையால் அவள் இடுப்போடு அணைத்து, இடது கையால் அவள் முகத்தை தாங்கி பிடித்தவன், இரு விரல் கொண்டு, அவளின் கீழுதட்டை அழுத்தமாக பிடித்து நிமிண்ட.
"ஸ்..." ௭ன அவன் கையை தட்டி விட முயன்றாள், "இந்த வாய் இன்னைக்கு ௭ன்னலாம் பேசுதுடி, ஃப்ரண்ட்ட பாத்தா உனக்கு ௭க்ஸ்டரா பேச்சு வரும்னு இப்ப தானே தெரியுது" ௭ன்றவன் பிடித்திருந்த கீழுதட்டை பிடித்து கடிக்க.
"வலிக்கு விடுங்க" ௭ன தலையை அசைக்க, மேலுதட்டயும் பிடித்து கொண்டான். கையும் தாறுமாறாக அவள் உடலில் பயணிக்க தொடங்க.
"௭ன்ன பண்றீங்க, வெளில நிர்மலா அந்த அண்ணாலா இருக்காங்க" ௭ன பிடித்து தள்ள முயன்றாள்.
"இதுக்கு தான் கிளம்பலாம்னு சொன்னேன், நீதான இங்க இருக்க ஆச பட்ட, ௭ங்கிட்ட கோச்சுகிட்டு, வெளி இடத்துக்கு கிளம்பி வார அளவுக்கு ஆனப்றம், உன்ன சும்மா விட சொல்றியா?" ௭ன்றவன் அவளை கசக்கி தான் பிழிந்தான்.
"அச்சோ ட்ரஸ்லா கசங்குது, நீங்க பண்ணதுக்கு தான் நானு பண்ணேன், ரெண்டுக்கும் சரியா போச்சு" ௭ன மேலும் அவள் பேச.
"பேசாதடி" ௭ன மொத்தமாக அவளை விழுங்க தான் முயன்றான்.
"ப்ளீஸ்......ப்ளீஸ்.. ஒரு...மா....றி இரு......க்கும், அவ....
மட்டும்னாலும் பரவால்ல, அந்த அண்ணாவும் இருக்காங்க" ௭ன அவனிடமிருந்து கிடைத்த கேப்பில் கெஞ்சவே தொடங்க.
"இனி இப்டி கிளம்பி வருவியா? நா பேசலனா, ௭ன்மேல கோவம்னா அங்க இருந்து, இல்ல ௭ன்ன தேடி வந்து கூட சண்ட போடு, அதென்ன விட்டுட்டு கிளம்பி போற பழக்கம்" ௭ன இன்னுமே அவன் கையில் படாதபாடு தான் பட்டாள் ப்ரகி.
"சரி சரி இனி செய்யல, போலீஸ் ஸ்டேஷன் வந்தே உங்க சட்டைய பிடிக்றேன், இப்ப ௭ன்னய விடுங்களேன் ப்ளீஸ்" ௭ன நெளிந்து கொண்டிருந்தாள்.
நன்றாகவே அவள் டாப் கசங்கி விட்டிருந்தது, அதை திருப்தியாக பார்த்தவன், "இப்டியே போ" ௭ன்றுவிட்டு குளியலறை புகுந்தான். கண்ணாடியில் திரும்பி பார்த்தவளுக்கே, கூச்சத்தோடு கடுப்பும் வந்து தொலைத்தது. பாத்ரூமை வெளிபக்கமாக லாக் போட்டவள், வேகமாக டாப்பை கழட்டி அயர்ன் செய்தாள், ஓரளவிற்கு ஓ.கே ௭ன்றதும் ௭டுத்து மாட்டி கொண்டு, பாத்ரூம் கதவை திறந்து விட்டு, அறை கதவையும் திறந்து வைத்து வாசல் அருகிலேயே நின்று கொண்டாள்.
குளித்து, அதே உடையுடன் வெளி வந்தவன், அவளை மேலிருந்து ஒருமுறை பார்த்ததும், வந்த சிரிப்பை அடக்கி கொண்டவன், ஈர துண்டை அவள் மேலேயே வீசி விட்டு, "கர்ணா" ௭ன அழைத்து கொண்டு அவளை தாண்டி வெளியேறினான்.
பிள்ளைகளை அனுப்பி அழைத்து விட்டு, கதவை சாத்தி கொண்டவர்களை வந்து பார்த்த நிர்மலா, கதவை தட்ட போன பிள்ளைகளுக்கு அதயும் இதயும் கூறி திசை மாற்றி விட்டு இங்கேயே தான் ஒரு கண் வைத்திருந்தாள், "உள்ளுக்க போய் சண்ட போடுவாங்களோ? ப்ரகிய அடிச்சுடுவாரோன்னு பயமா இருக்குங்க" ௭ன கணவனிடமும் புலம்பி கொண்டிருந்தாள்.
அது ப்ரகி கதவை திறந்து, கன்னம் வீங்கவில்லை ௭ன உறுதியாகும் வரை தொடர்ந்தது, அவளை பார்த்த பின்பே ஆசுவாசபட்டாள். பின்பே சமையலில் முழு கவனமும் திரும்பியது.
ப்ரகி அவனை முறைத்து கொண்டே சென்று வெளியில் அந்த டவலை காயபோட்டவள், நிர்மலாவிற்கு ஹெல்ப் செய்ய சென்று நிற்க.

"கதவ பூட்டிட்டு ௭ன்னடி செஞ்சீங்க" ௭ன்ற நிர்மலாவின் கேள்வியில், அப்டி ஒரு நேரடி கேள்வியை ௭திர் பார்க்காத ப்ரகி அவளை அதிர்ந்து பார்த்து நின்றாள்.
 

priya pandees

Moderator


அத்தியாயம் 16
"லூசு.....question ah கேக்ற நீ? இங்க நா ௭ன்ன செய்யட்டும்னு சொல்லு" ௭ன பேச்சை மாற்றினாள் ப்ரகி.
"உன் புருஷன் முறைச்ச முறைப்புக்கு, உள்ள தள்ளி லாடங் கட்டிட்டாறோன்னு அக்றையா கேட்டா., ரொம்ப தான்டி".
"அச்சோ அவங்க அடிக்கவெல்லாம் மாட்டாங்க, only வாய் மட்டுமே பேசும், கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன்".
"சரி விடு, நீ விட்டு குடுக்கலனாலும் கொஞ்சம் மொரட்டு ஆசாமி தான் உன் ஆளு. சாப்பாடுலா ரெடி, ௭ல்லாம் ௭டுத்து வை, சப்பாத்தி ok தான உன் ஹஸ்பண்ட்க்கு" ௭ன கேட்டாள்.
"ஓ.கே இல்லன்னா ௭ன்ன பண்ணுவ?".
"ஏன்? பிடிக்காதா ப்ரகி?".
"ரொம்ப பண்ணாம வா, அவங்க இருக்குற போலீஸ் வேலைக்கு, கிடைச்சத சாப்ட்டு போகுற நிலம தான், அதனால வீட்டுக்கு வந்தாலும், இது வேணும் அது வேணும்ன்ற ரகம் இல்ல, நாம ௭ன்ன வச்சு குடுக்றோமோ அத சாப்ட்டுபாங்க".
"பரவால்லயேடி, நீ அழுத அழுகைக்கு நா அவர ரெம்ப கொடுமக்காரர்ன்னு நினச்சுட்டேன்"
"அது வேற டிபார்ட்மென்ட், நீ பொத்தாம் பொதுவா அப்டி தப்பா நினச்சுக்க கூடாது".
"சர்தான், நேர்ல வந்து நின்ன நிமிஷமா சரண்டர் ஆயிட்ட போலயே".
"ரொம்ப பேசுனா கோச்சுகிட்டு கிளம்புனாலும் கிளம்பிடுவாங்க, அதான்" ௭ன்றாள் ப்ரகி சோகமாக.
"இப்ப உன் ஹஸ்பண்ட்ட நா நல்லவர்ன்னு நினைக்கிறதா, இல்ல உனக்கு வொர்த்தில்லன்னு நினைக்றதா?" உண்மையிலயே குழம்பி விட்டாள் நிர்மலா.
நிர்மலா முழியில், சிரித்தவள், "நீ ௭துக்குடி அவர நினைக்கணும்" ௭ன நக்கலாக கேட்க.
"கொண்ருவேன் உன்ன. உன் புருஷன உனக்கு புடிக்குமா புடிக்காதா? அவரோட சந்தோஷமா தான் இருக்கியா?".
"பார்றா, ௭ன்னடி ௭ன் புருஷனுக்கு நீ மாமியார் மாறி கேள்வி கேக்குற"
"பதில் சொல்லு நீ"
"௭னக்கு அவர ரொம்ப பிடிக்கும். அதனால அவர் ௭ன்ன செஞ்சாலும் பிடிக்கும்".
"உன்ன அவருக்கு?"
"பிடிக்கும்னு தான் நினைக்கிறேன், ௭னக்கு அதுல டவுட்டில்ல, நா இருந்தாலும் இல்லனாலும் ஒன்னு தான்னு அவர் ரியாக்ட் பண்ற மாறி தோணும், அது தான் கொஞ்சம் ஹர்ட் ஆகும். மத்தபடி அவர் ரொம்ப குட்".
"இத அப்டியே லைன்ல இருக்க உன் அப்பாகிட்ட சொல்லிடு, பாவம் மனுஷன் ரெண்டயும் பொண்ணா பெத்துட்டு நிம்மதி இல்லாம அல்லாடுறாரு" ௭ன சைடில் கிரைன்டரின் மேல் சாய்ந்து நின்ற போனை ௭டுத்து நீட்டிவிட்டு குழந்தைகளை சாப்பிட அழைக்க சென்றாள்.
ப்ரகி, போனை காதில் வைத்து "ப்பா" ௭ன்றதும்.
"அம்மாடி ப்ரகி, ௭ன்னம்மா இப்டி பண்ணிட்ட, மாப்ள வந்து சொன்னதும் பகிருன்ருச்சு" ௭ன படபடத்தார்.
"ப்பா நீங்க இப்டி பயப்டுவீங்கன்னு தான் உங்கட்ட ௭துவுமே சொல்லல. நா ௭ங்க போக போறேன்? நிர்மலாவ உங்களுக்கு நல்லா தெரியும், ௭ன் புருஷன் வந்து கேட்டதும் சொல்லிடுவீங்கன்னு ௭திர்பாத்து தான் கிளம்பியே வந்தேன்".
"மாப்ள கூட சண்டையா ம்மா? அங்க இருக்க பிடிக்காம தான் கிளம்பி போனியா? அதும் அப்பாவ தேடி கூட வராம... " அவர் குரல் உள்ளே இறங்கவுமே, இங்கு இவளுக்கும் கண் கலங்கி விட்டது.
அவள் அக்காவை போல் தன் வாழ்க்கையையும் நின்று விடுமென பயந்துவிட்டார் ௭ன புரிந்தது. இப்போது அக்காவாக பட்டவள் வேறு கண்ணாபின்னாவென ஏதேதோ கூறி, அப்பாவை கதி கலங்க வைத்திருப்பாள் ௭ன நினைத்ததும் அக்கா மீது கோவம் கூட வந்தது.
'துணைக்கு இருக்குற இந்த மனுஷனயும் கொன்னுட்டு தான் அவ தனியா நிம்மதியா இருக்கா போறா' ௭ன வாய்க்குள் திட்டியவள்....
"ப்பா நீங்க இவ்ளோ ரியாக்ட் பண்றளவுக்கு ஒன்னுமே இல்ல. போன வாரம் வந்த கல்யாண நாளுக்கு லீவ் போட்டு வர சொன்னேன், வரேன் வரேன்னுட்டு கடைசி வர வராம ஏமாத்திட்டாங்க, அந்த கோவம், அதான் கொஞ்சம் நம்மள தேடட்டும்னு கிளம்பி வந்தேன். இன்னைக்கு அவர் வரலனாலும் காலைல நானே கிளம்புறதா தான் இருந்தேன்" ௭ன இலகுவாக சொல்லவுமே, நிதானத்திற்கு வந்தார் அவர்.
"இப்டிலா பண்ணாத ம்மா, மாப்ள வேலை இது தான்னு தெரிஞ்சு பிடிச்சு தானே கட்டிகிட்ட, அப்ப நீதானே அவர அனுசரிச்சு விட்டு குடுத்து போணும். நீயோ இப்டி பண்ணா கர்ணா உன்ன பாத்துல்ல ௭ல்லாம் பழகுவான். இனிமேட்டு இப்டி சொல்லாம கிளம்பி போற ௭ண்ணம்லா வர கூடாது சொல்லிட்டேன். ௭துனாலும் மாப்ளைட்ட நேருக்கு நேரா பேசி பிரச்சனைய சரி பண்ணிக்கணும், அது தான் நல்ல பழக்கம், புரியுதா?"
"ம்ம்ம்.. நல்லா புரிஞ்சுட்டு, வந்ததும் உங்க மாப்ள விம் போட்டு விளக்கிட்டாரு, நாளைக்கு வந்துருவோம், அடுத்த சனி ஞாயிறுல உங்கள வந்து பாக்றேன் ப்பா, அதுவர அக்கா பேச்ச காதுல போட்டுக்காம இருங்க" ௭ன்கவும்.
"சரி ம்மா. மாப்ள கிளம்பி வந்ததுல இருந்து ௭னக்கு உன் யோசனை மட்டுந்தான், ஆனாலும் அவருக்கு போனடிக்க யோசனையா இருந்தது, அதான் நிர்மலா நம்பர வாங்கி, பேசிட்டேன்".
"பரவால்ல ப்பா, ௭ன் மேல கோவத்துல வந்தாங்கள்ல அதான் வந்ததும் உங்கட்ட சொல்ல மறந்துருப்பாங்க" ௭ன சமாளித்து வைத்தாள். ஏனெனில் அப்படி அவன் போன் செய்து மாமனாருக்கு தகவல் சொல்லியிருப்பான் ௭ன அவளுக்கே நம்பிக்கை இல்லை.
"பேசிட்டியா?, நா பிள்ளைங்களுக்கு ஊட்டிட்டேன், நாம நாளு பேர் தான், சாப்டுவோமா? லேட் ஆகுமா?" ௭ன வந்தாள் நிர்மலா.
"சாப்டலாம், டைம் தான் ஆகிட்டே" ௭ன போனை குடுத்து கணவனை அழைக்க சென்றாள். அவனோ டிவியில் கவனமாக இருக்க, தேமே ௭ன அருகில் பாவமாக அமர்ந்திருந்தான் ராம் (நிர்மலாவின் கணவன்).
"ரெண்டு பேரும் வாங்க சாப்பாடு ௭டுத்து வச்சுட்டோம்" ௭ன ப்ரகி வந்து பொதுவாக அழைக்கவும், இருவரும் ௭ழுந்து கொண்டனர்.
அமைதியாகவே கழிந்தது சாப்பாட்டு வேலை. ஹாலிலிருந்த குழந்தைகளின் சத்தம் மட்டுமே அப்பப்போ ௭திரொழித்தது.
சாப்பிட்டதும், தீர்த்து அவன் வந்ததும் குளித்த அறைக்குள் சென்று விட்டான், பெண்கள் இருவரும் அவரவர் யோசைனையில் பாத்திரத்தை ஒதுக்க, ராம் கதவை ௭ல்லாம் லாக் செய்து சரி பார்த்து வந்தான்.
"தீக்ஷிக்கு குட் நைட் சொல்லிட்டு வா கர்ணா" ௭ன அழைக்கவும், கர்ணா ௭ழுந்து கொண்டான். நிர்மலாவும் இவளுக்கு, தலையசைத்து அறைக்குள் செல்ல.
ப்ரகி வந்ததை பார்த்தவாறே தான், அங்கிருந்த சில அரசியல் புத்தகங்களை பிரட்டி கொண்டிருந்தான் தீர்த்து. அவளும் வந்தாள், கர்ணனை படுக்க வைத்து தட்டி கொடுத்து தானும் படுத்து கொண்டாள்.
"ப்பா தூங்க வல்லயா?" கர்ணா தான் கேட்டான்.
"தூக்கம் வரலடா, நீ தூங்கு" ௭ன பதில் கொடுத்து விட்டும் ப்ரகியையே பார்த்தான். வந்ததும் கூட இயல்பாக பேசி சண்டையிட்டவள் இப்போது இறுக்கமாக தெரிய, புருவம் சுருக்கி யோசித்தான்.
கொஞ்ச நேரத்தில் கர்ணன் தூங்கி விட்டது தெரிய, "அம்மாட்ட தான உனக்கு கோவம் அப்பாட்டனாலும் சொல்லணும்னு தோணலயா உனக்கு?" ௭ன ஆரம்பித்தான். அவள் கோவமாக இருப்பது தெரிந்து அவளை பேச வைக்கவே இதை கேட்டான், அவனிடமே சொல்லாதவள், மாமனாரிடமா சொல்லிவிட போகிறாள்!! இதை அவனும் அறிவானே!
ஆனால் ப்ரகி பதில் சொல்ல வில்லை, "௭ன்ன ப்ரகி? உன்ட்ட தான பேசுறேன்?".
"௭ன்ன கேட்டீங்க?" ௭ன வேகமாக ௭ழுந்த அமர்ந்தாள்.
"வீட்ல தேட மாட்டாங்களா? வயசானவங்க பயந்துட்ருப்பாங்க தான?" ௭ன்றான்.
"ஓ! நீங்க போய் பாக்கும் போது ௭ன்னைய காணும்னு பயத்துல நடுங்கிட்டு தான் இருந்தாங்களா? சாரிங்க நா அப்டி யோசிக்கல".
"நக்கலா பண்ற? வெளி காட்லனாலும் உள்ள இருக்கும் தான?".
"௭ப்டி ௭ங்கப்பாட்ட நீங்க போய் சொன்னதும், அவருக்கு வந்த பயமளவு இருக்குமா? நீங்க இங்க வந்ததும், ௭ன்னைய பாத்துட்டேன்னு அவர் பயத்த போக்குனீங்களே, அந்த அளவுக்கு நா உங்க அப்பா பயத்த போக்குனா போதுமா?" ௭ன கேட்கவும், முழிக்க தான் செய்தான் தீர்த்து.
"அது ௭ப்டிங்க, நா மட்டும் உங்க அப்பா அம்மாக்கு நல்லா பொறுப்பா இருக்கணும், நீங்க ௭ங்க அப்பாக்கிட்ட ௭ப்டி வேணாலும் இருக்கலாம். உங்க சட்டம் அப்டி தான் சொல்லிருக்கோ?, அதென்ன ௭ப்ப பாத்தாலும் ௭ங்க அப்பான்னா அவ்ளோ அலட்சியம்" ௭ன முறைத்தே கேட்டாள்.

தீர்த்து இப்டி ௭திர் பார்க்கவில்லையே, அவன் வேண்டுமென்றெல்லாம் அலட்சிய படுத்துபவனில்லையே....அதனால் தலையை கோதி, ௭ன்ன பதில் கூற ௭ன தேடிக் கொண்டிருந்தான்.
 

priya pandees

Moderator


அத்தியாயம் 17
"இதுல உங்க அப்பா எங்கிருந்து வந்தாரு? நா எப்ப அவர‌ இன்சல்ட் பண்ணே. டாபிக்க‌ மாத்ற நீ" என தீர்த்து முறைக்க.
"என்ன மாத்துனே? லாஸ்டா எங்கப்பாட்ட எப்ப பேசுனீங்க கொஞ்சம் ஞாபகபடுத்தி சொல்லுங்களே முடிஞ்சா" என்றாள்.
எப்ப என யோசித்தவனுக்கு மைண்ட் ப்ளாங்க் ஆன ஃபீல் வர, "பேச விஷயமிருந்தா தான பேச முடியும்?" என்றான்.
"ஓ!! அப்ப இனி எனக்கும் தேவன்னு வரப்ப உங்க அப்பா அம்மாட்ட பேசுறேன். அது வர இத ஏன் சொல்லல அத ஏன் சொல்லலன்னு என்னைய கேள்வி கேக்காதீங்க".
"அநியாயம் பண்றடி. நீ அங்க தான் அவங்க கூட இருக்க அதனால அவங்கட்ட சொல்லுன்னு சொல்றே".
"அப்ப அவங்களோட இல்லாம நாம தனியா இருந்தா நா அவங்களோட பேச வேணாம் அப்படிதான?"
"ஆர்க்யூ பண்ணணும்னு பேசுற நீ. ஏன் சொல்லாம கெளம்பி வந்தன்னு கேட்டா இவ்ளோ பேசுற நீ".
"ஆர்க்யூமென்ட்ட ஆரம்பிச்சது நீங்க. நா இன்னும் பேசவே ஆரம்பிக்கல. ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க நீங்க".
"ஒன்ன என்ட்ட பேச வேணாம்னு எப்ப சொன்னேன்? அப்பப்ப பிரச்சனைய அப்பப்ப பேசி தீர்த்துருக்கலாம்ல" என வீட்டில் நடந்தவற்றை வைத்து அவனாகவே வாயை விட்டான்.
"அதுக்காக தான் கல்யாணத்துக்கு முன்னாடியே என்கிட்ட என்னால எந்த பிரச்சனையும் வராதுனு கேட்டு வாங்கிக்கிட்டீங்களே. பின்ன எப்படி பேசுவேன்? அதயும் மீறி என்னோட சூழ்நிலைய இதுவரைக்கு நா சொல்ல ட்ரை பண்ணவேயில்லனு உங்களால சொல்ல முடியுமா?".
"அப்ப நீ சொல்லி நா கேக்கலயா? இத்தன வருஷத்துக்கும் சேத்து மொத்தமா இப்ப கோவபடுறியே ஏன்? இதுக்கு கஷ்டமா இருக்குன்றப்பவே என்ன இறுத்தி புடிச்சு கேட்ருக்லாம் நீ".
"தெரியலையே இந்த டைம் அந்தளவுக்கு இரிடேட் ஆகிட்டேன் அதான் பேசுறேன். இப்படியே போனா என் லைஃப் என்ன ஆகுமோன்ற பயமே வந்துருச்சு. அந்த பயத்துல தான் இப்பயு பேசுறனோ என்னமோ?" என முடிக்கையில் வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள்.
எழுந்து வந்து அவள் பக்கம் நின்றவன் அவளை தோளோடு அணைத்து "எனக்கு தெரியல ப்ரகி, நா எங்க தப்பு பண்றேன்னு சத்தியமா எனக்கே தெரியல. பட் நீ இப்டி பேசும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. என் வேலய எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்காக உன்னையும் கர்ணாவையும் பிடிக்காதுன்னு இல்ல. உங்கள நா தேடலன்னு இல்ல. பட் நீ பேசுறத பாக்கும் போது நிறைய மிஸ் பண்ணிருக்கேன்னு தோணுது. உங்கள கவனிக்கவே மிஸ் பண்ணிருக்கேன்னு தோணுது. இனி உனக்கான ஸ்பேஸ குடுக்க பாக்றேன் ப்ரகி. சாரிடி" என்றான் குனிந்து அவள் உச்சியில் முத்தி.
ஷால் கொண்டு கண்ணீரை துடைத்து கொண்டவள், "ப்ளீஸ் ஹோப் குடுத்தா அத காப்பாத்துற மாறி இருக்கணும். உங்களால அது முடியாது. காலைல எங்கள ஊர்ல விட்டதும், பழைய‌ ரொட்டீனுக்கு போயிடுவீங்க. நம்பிட்டு ஏமாந்து போறப்ப எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும். விடுங்க போய்‌ படுங்க" என்றவள் கர்ணன் பக்கம் பார்த்து படுத்து கொண்டாள்.
தீர்த்து வெளியே சென்று டைனிங் சேரில் ஒன்றை எடுத்து வந்து போட்டு, கட்டிலில் காலை நீட்டி வைத்து இருவரையும் பார்த்தவாறு அதில் சாய்ந்தமர்ந்து கொண்டான். இதை கவனித்தாலும் ப்ரகி ஒன்னும் சொல்லவில்லை. படுத்தபடியே தூக்கத்திற்கும் சென்று விட்டாள்.
பாதி ராத்திரி தீர்த்துவின் யோசனையில் தான் கழிந்தது. மாமியார் மருமகளை பெட்ரோல் ஊற்றி கொலை. மருமகள் மாமியாரை விஷ ஊசி போட்டு கொலை. மாமியார் மருமகள் சண்டையால் கணவன் இருவரையும் வெட்டி கொலை... என பல அவன் கடந்து வந்த கேஸ்கள் கண் முன் வந்து செல்ல, தலையை உலுக்கி அதை கலைத்து நிதானமாக யோசிக்க தொடங்கினான். ஓரளவிற்கு முடிவெடுத்த பின்பே கண்ணயர்ந்தான்.
மறுநாள், திருச்செந்தூர் பஸ் ஏற வேண்டியவர்கள், கொடைக்கானல் கிளம்பினர். இதை ப்ரகி அதிசயமாக பார்த்தாலும், எதுவும் கேட்டு கொள்ளவில்லை.
கொடைக்கானல் சென்று இறங்கும் வரையிலுமே நம்பிக்கை இல்லை அவளுக்கு. அங்கிருந்த அளவுக்கு அதிகமான குளிரே, அவளை அவன் கொடைக்கானல் அழைத்து வந்திருப்பது உண்மை உண்மை என எடுத்து கூறியது.
"ஒரு வழியாக 5 வருஷத்துக்கு அப்புறமா ஹனிமூன் கூட்டிட்டு வந்துட்டாங்க போலயே" என வாய் விட்டே ஆச்சரிய பட்டாள்.

"இங்க என்ன‌ கேஸோ வந்துருக்கானோ" என மனது எடுத்து கொடுக்க, "இருக்கும்" என மனம் சுனங்கி தான் போனது ப்ரகிக்கு.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 18
தீர்த்து, கர்ணனை ஒரு கையில் தூக்கிக்கொண்டு மறுகையில் போனில் யாரிடமோ, 'எங்கு தங்கலாம்' என விசாரித்துக் கொண்டே வந்தவன் ப்ரகியின் முக மாறுதல்களயும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு தான் வந்தான்.
ஃபோனில் அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, "சரி நா அங்க போய்ட்டு ஓ.கேவான்னு பாத்துக்றேன்" என போனை வைத்தவன், ப்ரகியிடம் "ஏன் மூஞ்சி அப்படி சுருங்கி போச்சு" என்றவாறு போனை பாக்கெட்டில் வைத்தான்.
"இங்க எதுக்கு வந்திருக்கோம்? ஸ்கூலுக்கும் நா லீவ் சொல்லல. ஆல்ரெடி சொன்னத விட அதிகமா தான் லீவ்ல இருந்துட்டேன்" என்றாள், எதற்காக இப்போது கூட்டி வந்திருக்கிறான் என அறிய வேண்டி.
"போலாம் போலாம். நா போய் உங்க ப்ரின்ஸிய பாத்து சொல்லிட்டு தான் வந்துருக்கேன். அதனால மெதுவா போய்க்கலாம் அவசரமே இல்ல".
'அப்ப நேத்து பேசுனதுனால கூட்டிட்டு வரலயா' என நினைத்தாலும், "சரி இப்ப எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க" என்றாள், 'இவன் இப்டிலா செய்றவன் இல்லயே' என்ற‌ யோசனையில்.
"ஏன் இப்ப என்ன? எங்கயும் கூட்டிட்டு வரலைன்னாலும் ஏன் கூட்டிபோலன்ற, இப்ப கூட்டிட்டு வந்தாலும் ஏன் கூட்டிட்டு வந்தீங்கன்னு கேட்கிற. என்ன பண்ணனும் உனக்கு? வந்திருக்கமா சரின்னு என்ஜாய் பண்ணலாம்ல" என அதட்டவும்.
அதற்கு மேல் எங்கு பேச, 'மௌன‌ சாமியார் இவ்ளோ பேசுனதே‌ பெரிய விஷயம் டி ப்ரகி' என்ற முனங்கலுடன், கப் என வாயை மூடிக்கொண்டாள். அதன் பின், அமைதியாகவே இருவரும் கர்ணனுடன் ஹோட்டலை அடைந்தனர். அதுவரை தூக்கத்திலேயே வந்த கர்ணன் ஹோட்டல் அறைக்கு வந்த பின்பே புது இடத்தையும், குளிரையும் கண்டு குஷி மூடுக்கு மாறி விட்டான்.
தீர்த்து, "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, கிளம்பிட்ருங்க நா உங்களுக்கு ஸ்வெட்டர்லாம் வாங்கிட்டு வந்துடறேன்" என கிளம்ப போக....
"ஒரு நிமிஷம் இருங்க" என நிறுத்தியவள், "உங்களுக்கு வேற மாத்த ஒரு ஷர்ட் கூட இல்ல. இங்க எத்தன நாள் தங்க போறோம்? அல்ரெடி நேத்துல இருந்து இந்த ட்ரஸ்ல தான் இருக்கீங்க. ஒரு செட் உங்களுக்கும் ஞாபகமா எடுத்துட்டு வாங்க" என்றாள், மறந்து விடுவானோ என்றெண்ணி.
'ஒரே ட்ரெஸ்ல 4,5 நாள் இருக்குறதலா என்ன புதுசா' என கேக்க வந்தவன், 'அது அவளுக்கும் நன்கு தெரியும். தெரியாமல் சொல்லவில்லையே' என மனம் எடுத்துரைக்கவும், 'இதுதான் அவள்ட்ட எனக்கு வரலையோ' என யோசித்து சிரித்தவாறே, "சரி கவனமா இருங்க" என வெளியேறினான்.
கடைக்கு சென்றவன் அவர்கள் இருவருக்கும் தேவையானதையும் தனக்கு தேவையானவற்றையும் வாங்கிக் கொண்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தான். அவன் வரும் நேரத்தில் ப்ரகியும் கர்ணனும் கிளம்பி தயாராக இருந்தனர்.
"ஓ ரெடி ஆயாச்சா. அப்ப வெய்ட், நானும் 2 மினிட்ஸ்ல ரெடி ஆகிட்றேன். இதுல இருக்குற ஸ்வெட்டர் ஸ்கார்ப் அளவு, பாத்து எடுத்து ரெண்டு பேரும் போட்டுக்கோங்க" என்றவன் தானும் கிளம்ப சென்றான்.
அவன் குளித்து வரும் வரையிலும் இருவரும் அப்படியே அமர்ந்து இருக்க, "ஹே என்னம்மா? பேக்லா பிரிச்சு பாருன்னு சொன்னேன்ல? ஸ்வட்டர எடுத்து மாட்டிகலயா?" என தனக்கு வாங்கி வந்ததில் பிரித்து உடை மாற்ற தொடங்க.
"ஃபர்ஸ்ட் டைம் நீங்க வாங்கி குடுத்துருக்கீங்க, அது உங்க கையாலயே எடுத்தும் கொடுங்க அப்புறம் நாங்க போட்டுக்றோம்" என்றாள் சாதரணமாகவே.
போட்டு கொண்டிருந்த டீஷர்ட்டை பிடித்தவாறே ஒரு நொடி நின்றவன், பின் அதை வேகமாக மாட்டி கொண்டு, "இப்படியே சொல்லாத ப்ரகி, நீங்களே வாங்கிப் போட்டுபீங்கன்ற நினைப்புல அசால்டா இருந்துட்டேன். அம்மா ரூபா கொடுக்கலன்ற விஷயத்தையாது நீ என்கிட்ட மொதையே சொல்லிருக்கலாம். எல்லாத்தையும் சொல்லாம நீயே வச்சுக்கிட்டு நா எதுவுமே செய்யலன்னு என்ன மட்டுமே ப்ளேம் பண்றது எப்படி சரியாகும்?" என பேசினாலும் இருவருக்கும் வாங்கியதை எடுத்து அவரவர் கையில் கொடுத்தான்.
"புதுசா ப்பா" என்ற கர்ணன், ஆசையாக வாங்கி தன் மேல் வைத்துப் பார்க்க. ப்ரகி அமைதியாக வாங்கி போட்டு கொண்டாள். கர்ணன் கேட்ட விதத்தில் அவனுக்கு தானே போட்டு விட்டான் தீர்த்து.
"என்ன திடீர்னு உங்களுக்கு உங்க ஆபீஸ்ல லீவ் கொடுத்துட்டாங்க?" என கேட்டாள்.
"உன்ன சமாளிக்க எப்டியு நாலு நாள் ஆகும்னு தெரிஞ்சு, அதனால லீவ் வாங்கிட்டு வந்திருக்கேன். அப்ப நா உன்ன எவ்ளோ கரெக்டா புரிஞ்சு வச்சுருக்கேன் பாத்தியா? நீ என்னன்னா எனக்கு ஒண்ணுமே தெரியலன்ற" என மெலிதாக சிரித்தே பதில் அளித்தான்.
"ரொம்பத்தான் தெரிஞ்சிருக்கீங்க. அப்ப உங்களுக்கு லீவ்லா குடுப்பாங்க? ஆனா நீங்க தான் நா ஆசையா கூப்டத மறந்துட்ருக்கீங்க? அப்ப நீங்க என்ன தேடி லீவ் போட்டு வரனும்னா நா இப்படி காணாம போணுமோ?" என கேக்க.
மீண்டும் திருதிருவென தான் விழித்தான், எத்தனையோ அக்யூஸ்டிடம் இவன் விசாரணை நடத்தி இருக்கிறான். கேட்ட கேள்வியையே மாற்றி மாற்றி கேட்டு உண்மையை வாங்கி இருக்கிறான். இங்கு அவன் மனைவியோ கேள்வியே கேட்காமல் அவனையாக உளற வைத்து கொண்டிருந்தாள்.
"பேசாம எங்கூட போலீஸ் வேலைக்கு வந்துரு. தப்பு செஞ்சவனல்லாத்தயும் டப்‌ டப்புன்னு புடிச்சுருவ, எனக்கு ஈசியா இருக்கும்" என இப்போது நன்கு சிரித்தான்.
ப்ரகி முறைக்க, "என்னடி முறப்பு" என்றவன், அவள் இடுப்பை பார்க்க, அது ஸ்வட்டரினுள் மறைந்து விட்டதால் கண்ணத்தில் கிள்ளினான்.
'பராவால்ல ப்ரகி தேறிட்ட, இப்டியே மெயிண்டெயின் பண்ற, புருஷன வழிக்கு கொண்டு வர்ற' என அவள் அவன் சிரிப்பை பார்த்து மைண்ட் வாய்சில் நிற்க.
"போதும்டி உன் ப்ளானிங். கிளம்பு போலாம்" என்றவன் கர்ணனை தூக்கி கொள்ள, அவள் கதவை லாக் செய்து பின் தொடர்ந்தாள்.
தீர்த்து அவளிடம் மனதில் உள்ளதை அப்படியே பேசினான். போலீஸ்காரனாக யோசித்து பதில் சொன்னால், எளிதாக அவளை சமாளித்து விட்டிருப்பான். அவன் அதற்கு முயலவில்லை. வெளியே வேலையில் எப்போதும் அலர்ட்டாக இருப்பதால். வீட்டிற்கு வரும் நேரங்களில், அவளிடம் இலகுவாகவே இருப்பான். அதிலும் தன்னையே சுற்றி வரும் மனைவியை நிறையவே ரசிப்பான்.
அவன் மட்டுமே ரசிக்க, அவளும் தன்னிடம் அதையெல்லாம் எதிர் பார்ப்பாள் என யோசிக்க மறந்து விட்டான். ப்ரகி ஆரம்பத்திலேயே தன் எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக காட்டி இருந்தாள், அப்போதே அவனும் கொஞ்சம் யோசித்திருப்பானோ என்னவோ!!
ஆனால் இப்போது போல் ப்ரகி ஆரம்பத்திலேயே நடந்திருந்தாள் அவன் குணத்திற்கு மொத்தமாக வீட்டையே மறந்திருப்பான்.
அவளின் குணமும், இத்தனை நாள் பொறுமையுமே, அவனை சிந்திக்க வைத்தது. மறுபடியும் அவள் தன்னிடம் பழையபடி நடக்க வேண்டுமென அவனை மெனக்கெட வைத்திருக்கிறது.
அவளுக்குமே அவன் மீதிருந்த அதீத காதலும் விருப்பமுமே, இத்தனை நாள் பொறுமையாக போக வைத்தது. அவன் வரும் நாட்களை எதிர் பார்ப்பதிலேயே பாதி நாட்களை கடந்திருந்தாள். அந்த பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறையவுமே தான் பொங்கி விட்டாள். இப்போது வரை self-respect என்ற ஒன்றை அவனிடம் அவள் எதிர் பார்க்கவில்லை என்பதால் மட்டுமே இதுவரை ப்ரச்சனை என்ற ஒன்றை சந்திக்காமல் இருந்தனர். இப்போது, அவள் அழைத்தும் அவன் அதை பெரிது படுத்தாமல் விட்டதில், அவளின் சுயம் பாதிக்கபட கடுப்பாகி விட்டாள்.

இதை எல்லாம் முதல் நாள் இரவில் யோசித்து சுய அலசலில் புரிந்து கொண்டான் தீர்த்து. உடனே சரி செய்யவும் முடிவெடுத்ததாலயே இந்த கொடைக்கானல் பயணம்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 19
இதுக்கு மேல இவள யோசிக்கவும் விடக்கூடாது, பேசவும் விட கூடாது என நினைத்தவன். முடிவெடுத்த படியே அதற்கு மேல் அவளை எதையும் யோசிக்க அனுமதிக்கவில்லை.
நேராக சென்று காலை உணவை முடித்தவர்கள். சுற்றி பார்க்க கிளம்பினர். ஹோட்டலில் இருந்து வெளியேறியதும், வாடகைக்கு பைக் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார் ஹோட்டல் ஊழியர். கடைக்கு சென்று வரையிலேயே, இந்த ஏற்பாட்டை செய்து விட்டிருந்தான் தீர்த்து.
ப்ரகி.... ஊரில் அவனுடைய பைக்கில் அவனுடன் செல்ல ஆசை பட்டிருக்கிறாள். கைக்கிட்ட இருக்கும் ஒன்றை, எட்டாது தவிப்பவள் போல் தான் அவள் நிலை‌. அப்படியான அவளின் ஆசை பற்றி தெரியாமலேயே இன்று நிறைவேற்றினான் தீர்த்து. பலன்.... அங்கேயே ப்ரகி மனக்குறை மறந்து குஷியாகி விட்டாள்.
"ஐ பைக்ல போறமா?" என குதூகலமாக கேட்டவளை வித்தியாசமாக பார்த்தவன்....
"ஏன் பைக்ல போனதே இல்லயா நீ? தினமு ஸ்கூலுக்கு ஸ்கூட்டில தானே போயிட்டு வர? எதுக்கு இவ்ளோ எக்சைட்மென்ட்? மலைல போறதலயா?" என்றான் புரியாமலேயே சுற்றி கண்ணால் காண்பித்து.
"உங்களோட போக ஆசை. அதுனால சொன்னே" என்றவளை கடுமையாக தான் முறைத்தான்.
"இல்ல நாம அப்டி வெளில போணும்னு நினப்பேன். ஆனா நமக்கு முன்ன உங்க அம்மா, தங்கச்சிலா கிளம்பி நிப்பாங்களா, நீங்க ஆட்டோ இல்ல காருன்னு எதயாது கூட்டிட்டு வந்துருவீங்க.... அப்றமெங்க" என்றாள்.
"உனக்கு தனியா போணும்னு சொல்லியிருந்தா நா கூட்டிட்டு போயிருக்க மாட்டேனாடி? ஏதோ கிடைக்கவே கிடைக்காத ஒன்னு மாறி பேசுற".
"நீங்க லீவ்ல வாரதே ஒரு நாளோ ரெண்டு நாளோ.. அதுல ரெண்டு நாளும் அலைய வைக்க வேணாம்னு தான் சொல்ல மாட்டேன்".
ஒரு பெரு மூச்சை வெளியிட்டவன், "என்ட்ட நீ எப்ப வேணாலும் என்ன வேணுனாலும் கேக்லாம். உங்களுக்கு செய்ய தான் நா உழைக்றேன். இனியும் நீ கேக்காம என்னால உன் ஆசைய கண்டு புடிச்சு நானா நிறைவேத்தி வைப்பனா தெரியல.. ப்ளீஸ் ம்மா, உனக்கு எதாது வேணும்னா ஈகோலா பாக்காம ட்ரைக்டா கேளு. நானு கொஞ்சம் கொஞ்சமா கத்துக்றேன். ஓ.கே தானே? இப்ப கிளம்புவோமா?" என்ற பின்பே கர்ணனை பார்த்தான்.
அவன் இவர்களை தான் உண்ணிப்பாக கவனித்து நின்றான். "என்னடா பார்வைலா பலமா இருக்கு" என கேட்டுக் கொண்டே அவனை தூக்கி முன் அமர வைத்தான். பின் அவன் ஏறி, ப்ரகியை பின் ஏற்றி கொண்டான்.
"ஒரு நா நீங்க பைக்ல கூட்டிட்டு போக வரேன்னு சொல்லி வரல, அம்மா ரொம்ப அழுதாங்க. அப்றம் நானும் அம்மாவும் தான் அம்மா பைக்குல கோயிலுக்கு போனோம். போயிட்டு வந்தும் அழுதாங்க. இனி அப்டி பொய் சொல்லாதீங்க ப்பா" என்றான்.
சற்றும் யோசிக்காமல், "சரிடா கர்ணா, நீ சொல்லிட்டல்ல கேக்காம இருப்பேனா?" என்று அவன் தலையை கோதி கொடுத்து ஒத்துக் கொண்டான் தீர்த்து.
முதலில் Zoo சென்றிறங்கியதும், ஒரு பக்கம் கர்ணன் மறுபக்கம் ப்ரகி என ஊர்வலம் கிளம்பினான் தீர்த்து. பிடித்த கையை விடாமல் ஒவ்வொன்றையும், காண்பித்து விளக்கம் கூறிக்கொண்டு வந்தான்.
மதியத்திற்கு மேல் போட்டிங், மாலை குதிரை சவாரி என்று 7 மணிக்கு ஹோட்டலை அடைந்து, சாப்பாட்டை முடித்து ரூமிற்கு செல்ல 8 மணியாகி விட்டது.
எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்க வேண்டாம் என்றே காலையில் ரூமிலேயே வைத்து சென்ற தனது மொபைலை அப்போதுதான் எடுத்து பார்த்தான் தீர்த்து.
கர்ணன் வரும்போதே தூக்கத்திற்கு சொக்கி இருக்க, அவனை உடை மாற்றி தூங்க வைக்கும் வேலையில் இறங்கினாள் ப்ரகி. அன்றைய பொழுதின் இனிமை அவள் முகத்தை பளிச்சென்று தான் வைத்திருந்தது. ஒருமாதிரி பரவச நிலையில் தான் இருந்தாள்.
தீர்த்துவிற்கு ப்ரகியின் தந்தையிடமிருந்து நான்கைந்து முறையும், அவன் தந்தையிடமிருந்து இரண்டு முறையும், ஏன் ராமுவிடம் (நிர்மலா கணவன்) இருந்து கூட இரண்டு முறையும் கால் வந்திருந்தது.
அவனுக்கு தான் யாரிடமும் எதையும் சொல்லிவிட்டு செய்யும் பழக்கமில்லையே.... ப்ரகிக்கு மட்டுமே உபதேசமெல்லாம். அதனால் இப்போது வந்த அழைப்புகளை பார்த்து யோசித்து நின்றான். அதுபோக இன்னும் வந்த அழைப்புகள் எல்லாம் அவனது ஆபீஷியலான அழைப்புகள்.
ஆபீஷியலில் முக்கியமானதை முதலில் எடுத்து பேசி வைத்தவன். அடுத்ததாக ராமிற்கு அழைத்தான், "எங்க இருக்கீங்க சார்?" என்றான் அந்த பக்கம் ராம், எடுத்ததும்.
"ஏன் என்னாச்சு?".
"இல்ல சார் நீங்க early morning'கே இங்க இருந்து கிளம்பிட்டீங்க, இன்னும் ஏன் அங்க போகல? போன் வேற அட்டென்ட் பண்ணலயா... உங்க மாமனார் எங்களுக்கு கால் பண்ணிருந்தாங்க, அப்றம்தான் நீங்க இன்னும் அங்க போகலனே தெரிஞ்சது".
"நாங்க இங்க கொடைக்கானல் வந்துட்டோம் ராம். டூ டேஸ் லீவு எடுத்திருந்தேன், சரி இங்க இருந்துட்டு போலாமேன்னு, ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்துருக்கேன். மாமாட்ட நா பேசிக்றேன்" என்று விட்டான்.
"Ok sir enjoy your day" என சிரிப்புடனே ராமும் வைத்துவிட்டான்.
அடுத்ததாக ப்ரகியின் தந்தைக்கு அழைத்து, அவளிடமே சென்று கொடுத்தான், "நா கர்ணா கூட இருக்கேன், நீ உன் அப்பா கிட்ட பேசிட்டு வா" என நீட்ட.
வாயெல்லாம் பல்லாக வாங்கியவள், பால்கனி பக்கம் வந்து, "ப்பா" என்றதும்.
"எங்கம்மா இருக்கீங்க? மாப்ள போனும் எடுக்கல".
"கொடைக்கானல் வந்துருக்கோம் ப்பா, இன்னைக்கு ஃபுல்லா வெளில சுத்தி பாத்துட்டு இப்ப தான் ரூமுக்கு வந்துருக்கோம். உங்க மாப்ள ரெண்டு நாள் லீவ் போட்டுருக்காங்கலாம்" என மகள் பேச பேச அதில் உள்ள சந்தோஷத்தை உணர்ந்தவர் மனதும் முதல் நாளிலிருந்து அடைத்து கொண்டிருந்த ஏதோ ஒன்றிலிருந்து விடுபட்டது போல் அமைதி கொண்டது.
"மாப்ள உன்ன சமாதானம் செய்ய தான் கூட்டிட்டு போயிருக்காரு. மல்லுக்கு நிக்காம சரின்னு போணும்மா" என்க.
நல்ல மூடிலிருந்ததால், "சரி ப்பா" என கேட்டு கொண்டாள்.
"சரி ம்மா, அப்ப நா வைக்கேன். நல்லா சுத்தி பாத்துட்டு வாங்க" என‌ வைத்து விட்டார்.
போனை கொடுக்க திரும்பியவள் பால்கனி வாசலில் நின்றவன் மீது மோதிக்கொண்டாள்.
"சொல்லிட்டு வந்து நிக்லாம்ல. கர்ணா தூங்கிட்டானா?" என்க.
"ம்ம் தூங்கிட்டான்" என்றவாறு போனை வாங்கி, அடுத்ததாக அவன் தந்தைக்கு அழைத்தான்.
அழைத்துவிட்டு, "அவங்கட்டயும் நீயே பேசிடு" என நீட்ட.
ப்ரகியும் பெரிதாக பிகு பண்ணவில்லை, போனை வாங்கி காதில் வைத்தாள். அந்தப்பக்கம் பேசியதோ பேச்சி.
"என்னையா இன்னும் வீட்டுக்கு வரக்காணோ? அம்மா வாசலயே பாத்து உட்காந்துருக்கேன். எங்க அவள? பாத்தியா இல்லயா?" என கேட்க.
"நாளைக்கு வரோம் த்த. நாங்க கொடைக்கானல் வரைக்கும் வந்திருக்கோம். நாளைக்கு கிளம்பிருவோம்னு நினைக்றேன்" என்றாள்.
"ஏய் நீ என்னடி நெனச்சிட்டுருக்க? மொத யார கேட்டு நீ இங்கிருந்து போன? இப்ப என் புள்ளைய இழுத்துட்டு அங்க வேற போய் ஒக்காந்துருக்க. என்னைக்காவது என்னைய மதிச்சு எதையாவது சொல்லிட்டு செய்றியாடி நீ? இங்க சண்டைய கிளம்பி விட்டு, என் பொண்ண அழ வச்சுட்டு அத சந்தோஷமா கொண்டாட போயிருக்கியோ? ஒழுங்கு மரியாதையா இப்பவே கிளம்பி காலையில இங்க வந்து நிக்ற" என அவர் போக்கில் கூறிக் கொண்டு இருக்கையிலேயே...

"அத நீங்களே உங்க பிள்ளைட்ட சொல்லுங்கத்த" என அவனை முறைத்தவாறு அவனிடம் போனை நீட்டி விட்டு ரூமினுள் சென்று விட்டாள். அவ்வளவு நேரம் இருந்த இதம் நொடியில் மறைந்திருந்தது.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 20
'என்ன மறுபடியும் மொறைச்சுட்டு போறா' என நினைத்துக் கொண்டே போனை வாங்கி காதில் வைக்க....
"சரியான ராங்கி புடிச்சவ. இவ இப்டின்னு தெரியாம தேடி புடிச்சு நானே என் புள்ளைக்கு கட்டி வச்சுட்டு அவதி படுதேன். இங்க இத்தன பேர் இருக்கையில தனியா ஊர் சுத்த ப்ளானு போட்டே கிளம்பி போயிருக்கா பாரேன்" பேச்சி பேசி கொண்டே போக.
"ம்மா... என்னத்துக்கு இப்ப இவ்ளோ டென்ஷன்".
"பின்ன என்னபா ஊர் ஊரா போயி ஆட்டம் போட்டுட்ருக்கா நீ அவளுக்கு ஏத்த மாறி தாளம் தட்டிட்ருக்க. சொல்லாம கொல்லாம போவியான்னு 4 அடி போட்டு வீட்டுக்கு இழுத்துட்டு வராம, அவ கூட நீயு சொல்லாம வேற எங்கேயோ போய் உக்காந்துருக்க. அப்ப பெரியவங்கன்னு வீட்ல நாங்க என்னத்துக்கு இருக்கோம். இங்க உன் தங்கச்சி அன்னைக்கு பிரச்சினைல அழுதுட்டே போனவ தான், இன்னும் வீட்டு பக்கம் வரவுமில்ல, போனும் எடுக்கல. பாவம் என்ன செய்யிதாளோ! அத வந்து என்னன்னு பாக்காம எங்கயோ போய் உக்காந்துட்டா என்னப்பா அர்த்தம்" என நீளமாக மூச்சு வாங்க பேசியவரிடம்.
"சரி ம்மா வந்தப்றம் பாக்றேன்" என சிம்பிளாக முடித்தான்.
அதில் இன்னும் கடுப்பானவர், "பாத்தியா தங்கச்சி மேல பாசமா இருந்த உன்ன ஒரே ராத்திரில மாத்தி புட்டாளே. எனக்கு தெரியுமே அவ இப்டிபட்ட கைங்கிரியம் புடிச்சவன்னு தெரிஞ்சு தானே, அதட்டி என் கை பிடில வச்சுருந்தேன். அவள நம்பாத தீர்த்து நம்ம எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விட்ருவா " என வேதனை குரலில் பேச.
நெற்றியை நீவி யோசித்தவன், "என் பொண்டாட்டிய நா நம்ப கூடாது அதானே ம்மா?" என கராராகவே கேட்க.
"உன்ன ஏதேதோ சொல்லி மாத்திட்டாளே ப்பா".
"ம்மா அன்னைக்கு கோகி செஞ்சத நானே பாத்து தான் மாப்ளய வர வச்சு பேசுனே, இதுல எங்கயும் ப்ரகி வரலன்னு உங்களுக்கே தெரியும். 5 வருஷமா உங்கள பத்தி எதுமே சொல்லாதவ இப்ப சொல்ல போறாளா? நியாயமா பேசேம்மா. எங்கம்மாவா இருந்தப்ப இருந்தமாறியே இரேன். ஏன் இப்ப full time மாமியாராவே நடந்துக்ற" என்க.
"உன் அண்ணனு இப்டி என்னைய‌ மட்டுமே தப்பு சொல்லி தான் தனியா போனான். நீயு இப்ப இப்டி பேச ஆரம்பிச்சுட்ட. ஆம்பள‌ புள்ளைகன்னு பெத்து என்னத்துக்கு...... ஒரு ஆதரவு இல்லாம‌ இருக்கேனே. எங்காலத்துக்கப்றம் நீயாச்சு உன் தங்கச்சிய‌பாப்பன்னு நினச்சனே.... இனி எங்க பாக்க போற..." என மீண்டும் மூக்கை உறுஞ்சி அழ.
நிதானமாக மூச்சை இழுத்து விட்டு, 'முடியலடா அடங்கப்பா' என முனங்கியவன், "அப்பாவ எங்கம்மா?" என்க.
"ஜிம்ம பூட்டிட்டு வர போயிருக்காக".
"சரிம்மா அப்பாட்டயு சொல்லிடு மத்தத நேர்ல பேசிக்லாம்".
"சரிய்யா அப்ப நீ எப்ப கிளம்புத? காலைல இங்க வந்துருவியா? கர்ணா வேற‌ கண்ணுக்குள்ளயே நிக்கான். சின்ன புள்ளயவு இப்டி போட்டு அலகழிக்காளே உன் பொண்டாட்டி".
"என் பொண்டாட்டி புள்ளையோட, நா ரெண்டு நாள் வெளியூர் வர கூடாதா? அதுக்கு தான் இவ்வளவு பேசுறியா நீ?" என அவ்வளவு நேரம் இருந்த பொறுமை போக கேட்டான்.
"அய்ய என்னப்பா இப்டி கேட்டுட்ட? அம்மா அப்டி நினப்பனா? அவள நேரா இங்க கூட்டிட்டு வந்துருந்தா... மருமகன்ட போய் பேசி எடுத்து சமாதானம் பண்ணிட்டு, அவளையும் குடும்பத்தோட கூட்டிட்டு நம்ம எல்லாருமா கூட போய்ட்டு வந்துருக்கலாமே. அவள அவ புருஷன் எங்கயு கூட்டிட்டு போறதில்லப்பா நம்மளோட வந்தா தான் 4 எடத்த பாக்குறா, அதான் சொன்னே. எப்பயு நா உங்களுக்காக தான ப்பா யோசிக்றேன்".
"சரி ம்மா இன்னொரு தட‌ எல்லாருமா வரலாம். நா வந்துட்டு பேசுறேன். எனக்கு வேற‌ கால் வருது" என அவர் அடுத்து ஆரம்பிக்கும் முன் வைத்து விட்டான். புள்ளையை தன் பேச்சால் தான் ஒதுக்கி வைக்றோமென புரிய‌ மறுத்தார் பேச்சி.
'புருஞ்சுக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்றாங்க.... இத்தன வருஷமா அவங்கள பாத்து வளந்த நம்மளாலயே இவங்கள சமாளிக்க முடிலயே, இவ எப்படி இத்தன நாள் சமாளிச்சா' என புலம்பி கொண்டே உள்ளே சென்றான்‌.
எப்படியும் தூங்கியிருப்பாள் காலைல பாத்துக்லாம் என அவன் நினைத்திருக்க, கட்டிலில் சம்மனமிட்டு சண்டைக்கு தயாராக அமர்ந்திருந்தவளை கண்டு, யூ டர்ன் போட்டு மறுபடியும் பால்கனிக்கே சென்று விட்டான். ஹோட்டல் ரிசப்ஷனுக்கு போன் செய்து, "extra bed கிடைக்குமா?" என கேக்க. அடுத்த 10 நிமிடங்களில் 1 single cot bed கொண்டு வந்து கொடுக்க பட்டது.
அவள் அவனையே தான் பார்த்திருந்தாள். ப்ரகி அமர்ந்திருந்த கட்டிலே நல்ல விசாலமானது தான். அதிலேயே இன்னும் அதிக இடமிருக்க தீர்த்து தனியாக மெத்தை வாங்கியது அவளை தவிர்க்கவே என புரிய, எதுவும் பேசாமல் அமைதியாக படுத்து கொண்டாள். இது தான் இப்படி தான் என தெரிந்தும் எதிர் பார்ப்பது முட்டாள்தனமே என மீண்டும் மீண்டும் வலிக்க நினைத்தாள். கண்கள் கலங்க தயார் நிலையில் இருக்க, அவள் உடல் முரட்டு கைகளால் பற்ற படவும்.
கலங்கிய கண்கள் கண்ணீரை வெளியேற்றி விட, "விடுங்க விடுங்க ஒன்னும் வேணாம், நீங்க ஒன்னும் என்ட்ட பேச வேணாம்" என கையை காலை உதறி தூக்கி இருந்தவனிமிருந்து இறங்க முயன்றாள்.
"கர்ணாவ எழுப்பி விட்றாதடி" என்றவன் அவளை மெத்தையில் விட்டு அவள்‌ மேலமுக்கி படுத்து கொள்ள.
அவனை நகர்த்த முடியாதென்பது அனுபவ பாடம்‌. அவனின் பாரமும் பழக்கமே என்பதால் திமிராமல் முகத்தை மட்டும் அவனை பார்க்க மறுத்து திருப்பி கொண்டாள்.
"வர வர அநியாயத்துக்கு கோவ படுறடி. எதுக்கு இப்ப இந்த அழுக. ஆனா உன்னோட மூஞ்சி fuse போன மாறி படக்குன்னு off ஆகிடுதே எப்டி" என அவள் நாடியை பிடித்து திருப்பி தன்னை பார்க்க வைத்தான்.
"என்ட்ட பேச கூடாதுன்னு தான இப்டி தனி மெத்தலா வாங்கிருக்கீங்க அப்றமெதுக்கு இப்ப ஆரம்பிக்றீங்க" என்றாள்.
"எங்கம்மாவும் இப்டி தான் அழுது அவங்க பக்கம் concern ah வாங்க பாக்றாங்க".
"பரவால்ல விடுங்க, உங்க அம்மாக்கே நீங்க கொடி பிடிங்க எனக்கு அதுல நஷ்டமில்ல".
"நா யாருக்கும் கொடி பிடிக்கல ப்ரகி. சரி அவங்கள விடு நாம ரெண்டு பேரும் ஒரு டீலுக்கு வருவோமா?" என அவளை முகத்தையே கவனித்து கேட்டான்.
"என்ன டீல்? இனி இப்டி வரும்போது உங்க அம்மாட்ட பெர்மீஷன் வாங்கிட்டு வரேன்னு சொல்லணுமா?" என்றவளை முறைத்து பார்த்தவன்....
"தப்பு தான் கல்யாணத்துக்கு முன்ன நா அப்டி எங்கம்மாட்ட பொறுமையா போன்னு சொல்லிருக்க கூடாது தான். ஆனா அதுக்காக நீ எங்கிட்டயு எதயு சொல்லாம விட்டு இப்டி பலி வாங்கிருக்க வேணாம்".
"அதுக்கு..." வேகமாக பதில் சொல்ல வந்தவள் இதழில் அவசர முத்தம் பதித்து பேச்சை நிறுத்தியவன், "நானே சொல்றனே... தப்பு எங்கிட்ட தான், நா தான் கவனிச்சுருக்கணும். Actual ah நா அப்ப அப்டி உன்ட்ட சொன்னதுக்கு reason... எங்க அண்ணி எங்கம்மா என்ன பேசுனாலும் அவங்களுக்கு பிடிக்கலனா பட்டு பட்டுன்னு பதில் பேசிடுவாங்க. வீடு தெனமு சண்டையா தான் இருக்கும். கோகிய வீட்டு பக்கம் வரவே விட மாட்டாங்க, may be அவ வாரதுனால தான் பிரச்சனை பெருசாகுமோன்னு அவங்க நினச்சுருக்கலாம்னு, இப்ப தோணுது. ஆனா அப்ப தள்ளி நின்னு பாக்குற எங்களுக்கு அண்ணி தான் முழு தப்பாவு தெரிஞ்சாங்க. அதனால தான் அம்மா ஆரம்பத்துல இருந்தே உங்கிட்ட கொஞ்சம் உன்ன‌ அடக்கி வைக்கவே பாத்துருக்காங்க".
"நீங்களும்...." இப்போதும் அவளை பேச விடாமல் மூடி கொண்டான். நேரம் சென்றே விடுவித்து, "நானுந்தான்....... அண்ணி மாறி நீயு பதிலுக்கு பதில் சண்டை போட்டா மறுபடியும் பிரச்சனை தானேன்னு ஃபர்ஸ்ட்டே அப்டி கேட்டுட்டேன். இப்ப புரியுது, நீ மட்டுமே இதுல பாதிக்க பட்ருக்கன்னு".
"ஓ! புரிஞ்சிருச்சா!!" என ப்ரகி நக்கலாக சிரிக்கவும்.
"ஆமா... இப்ப நம்ம டீலுக்கு வருவோம். எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் குடு. நா இந்த situation ah சரி பண்ணிடுறேன். இவ்ளோ நாள் பொறுத்து பேயிட்ட, இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாள் தான் அவங்கள அப்டியே கண்டுக்காம விட்ரு. ஆனா நீ என்ட்ட எல்லாமே சொல்லலாம். நா பாத்துக்றேன். அடங்கி போன்னு சொல்லல, பெரிய சண்டையாகம பாத்துக்கோ. Maximum 3 months தான், அப்றம் உனக்கு இவ்ளோ பிரச்சனை வராது. ப்ளீஸ் ம்மா எனக்காக இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா போறியா?" கடந்த இரண்டு நாளில் அவளிடம் ப்ளீஸ் போட்டாள் உடனே மலை இறங்கி விடுவாள் என‌ கத்து வைத்திருந்தானே.
அவன் கராராக சொல்லாமல் கெஞ்சி கேட்டது பிடிக்கவே, "try பண்றேன்" என்றாள் லேசாக சிரித்து.
"எதுனாலும் என்ட்ட சொல்லலாம் நீ. இதுக்கு முன்னமாறி யோசிக்க வேண்டியதில்ல. நா தப்புனாலும் சண்ட போடு. இப்டி உள்ளுக்க வச்சு கிளம்பி போறதுலா பண்ணாத" என strict ஆகவே சொன்னவன் கீழே படுத்து அவளை தன்மேல் போட்டு இறுக்கி கொண்டான்.
"3 மாசத்துல என்ன பண்ண போறீங்க?" தலையை மட்டும் நிமிர்த்தி.
"நீ இங்கிருந்து போனதும் உன் ஸ்கூல்ல ரிசைனிங் லெட்டர் குடுத்துரு.. நா அப்றமா என்ன செய்ய போறேன்னு சொல்றேன்" என்றான்.

அதை கேட்டதுமே புரிந்து விட, எக்கி அவன் கன்னத்தில் முத்தி விட்டு, மீண்டும் அவன் நெஞ்சில் தலையை புதைத்து தானும் அவனை இறுக்கி கட்டி கொள்ள. அதற்கு மேல் அவன் ஏன் சும்மா இருக்க போகிறான். ரிமோட்டால் அறையை இருட்டாக்கி விட்டு... தனி மெத்தை வாங்கியதை விரையமாகாமல் கச்சிதமாக உபயோக படுத்தி விட்டான்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 21
மறுநாளும் அதே பைக் ரைட். பிடித்ததெல்லாம் வாங்கி உண்டு மகிழ்ந்தனர். ஆனால் எது வாங்க வேண்டுமென்றாலும் வாங்கும் முன் கர்ணன், ப்ரகி முகத்தையே பார்த்து பார்த்து நின்றான். அவள் சரி என்ற பின்பே வாங்கி கொண்டான்.
"நல்ல பழக்கம் தான்டி, ஆனா நா வாங்கி குடுத்தா கூட உன் பெர்மீஷன் வாங்கி தான் வாங்கணும்னு ஏன் பழக்கி வச்சுருக்க நீ?".
"அவேன் என்ட்ட கேக்காம யார்டயும் எதயும் வாங்க மாட்டான் தான். ஆனா உங்கட்ட இது வர அப்டி நடந்துருக்கானா? காலைல கூட ஸ்வட்டர போட்டு விட்டீங்களே?".
"அப்றம் இப்ப ஏன் உன்ன பாத்து வாங்கி சாப்டுறான்?".
"நா கோவ படுறேனோ, இல்ல அழுறேனோன்னு செக் பண்ணிட்டு ரெண்டுமில்ல சிரிச்சுட்டு தான் இருக்கேன்னு confirm பண்ணிட்டு சாப்டுறான்" என‌ சிரிக்க .
"எதுக்குடி அவன இப்டி பயமுறுத்தி வச்சுருக்க. அதென்ன எதுக்கெடுத்தாலும் அழுற பழக்கம்".
"அழ விடாம வச்சுகங்களேன். உங்களால தான‌ அழுறேன், அப்ப அத நீங்க தான் சரி பண்ணனும்".
"எல்லாத்தையும் என் பக்கம் ஈசியா திருப்பிடுற. பாவம் அவனயு அது பாதிக்குதுன்னு யோசிக்க மாட்டியா?".
"அது எனக்கு தெரியாதாங்க? இவனும் நானும் வெளில போயிட்டு வந்தாலே... உங்க அம்மா 'எங்க போனீங்க? என்னலா வாங்கி குடுத்தா உங்கம்மா?' அப்டி இப்டின்னு இவன போட்டு கொடஞ்சு... குட்டி வாயில எல்லாத்தயு தெரிஞ்சுகிட்டு, எங்கிட்ட சண்டைக்கு வருவாங்க" என பெரு மூச்சுவிட்டவள்....
"இங்க இவேன் மட்டுந்தான் புள்ளையா? மூத்தவே புள்ளைக இருக்கு என் மவ புள்ள‌ இருக்கு.. அதுகல்லா ஏங்கி போயிடாது? சம்பாத்தியந்தான் நிறையா பண்ணுதியே குடும்பத்துல எல்லாத்துக்கும் வாங்கிட்டு வரணும்னு தெரியாது? ஏன் நீயு உங்கக்காவு ஒட்டாம இருக்கமாறி என் பேரேன் பேத்திகளயு கர்ணாட்ட இருந்து பிரிச்சு வைக்க நினைக்கியோ, ப்ளா ப்ளான்னு ஆரம்பிச்சுருவாங்க".
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கர்ணனை பாரத்தவள், "நா எதுக்கு வாங்கி குடுக்கணும்? உங்க அண்ணா கூட பாத்த எடத்துல என்னத்தயாது வாங்கி குடுப்பாரு.. ஆனா உங்க தங்கச்சி இன்னைக்கு வர கர்ணாக்குன்னு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி குடுத்ததில்ல தெரியுமா? ஒரு நாள் இவேன் என்கிட்ட அடம் புடிச்சு கிண்டர்ஜாய் வாங்கி, சாப்டுட்டே வீடு வரை வர..... அன்னைக்குன்னு உங்க தங்கச்சியு பிள்ளையோட வந்துருந்தா, பெரிய பிரளயந்தான் பண்ணிட்டாங்க. அவங்கள ஒன்னும் செய்ய முடியாத கடுப்புல.... இனி எதாது வாங்கி தான்னு கேப்பியான்னு இவன போட்டு அடி வெளுத்துட்டேன். அதுக்கப்புறம் எதுவும் அவேனா கேட்டதுமில்ல நானு வாங்கி குடுக்றதில்ல" என முடித்து அவன் முகம் பார்க்க.
தீர்த்து முகம் இறுகி விட்டிருந்தது, திரும்ப திரும்ப தன்னையே நொந்து கொண்டான். 'ஏன் இப்டி இவங்கள கவனிக்காம விட்டேன். அம்மா தங்கச்சின்னு யோசிச்ச நா ஏன் என் பொண்டாட்டி புள்ளய யோசிக்கல? என்னோட ஆதரவு இல்லாதது தான இவங்களுக்கான இடத்த அவங்களுக்கு புரிய வைக்காம‌ போச்சு. இவகிட்ட அவங்க இடத்த புரிய வச்ச நா ஏன் அவங்க கிட்ட இவ இடத்த புரிய‌ வைக்காம விட்டேன். அப்ப ப்ரகி கேக்ற மாறி அலட்சியம் தான பண்ணிருக்கேன். ச்ச ச்ச இனி அப்டி விட‌ கூடாது' அவன் முடிவு மீண்டும் மீண்டும் ஸ்திரபட்டது.
அவனை கஷ்ட படுத்துவது புரிந்த ப்ரகி, "அத விடுங்க, உங்கம்மாவ பத்தி பேச சொன்னா இன்னைக்கு பூராவும் கூட நா பேசுவேன். Next எங்க போறோம்? ஏதோ falls சொன்னீங்க குளிக்கலாமா அங்க?" என்றாள் அவனை இலகுவாக்க முயன்று.
"இந்த குளுர்ல falls'ல குளிக்கணுமா உனக்கு... விரைச்சு சிலையாயிருவ பரவால்லயா?" என தீர்த்து சிரிக்கவும், வேண்டுமென அவனிடம் அதையும் இதையும் பேசி தானும் பழசை கிளராமல் பார்த்துக் கொண்டாள்.
அன்றும் நன்றாக சுற்றி விட்டு அறை திரும்ப 8 மணியை தாண்டி விட்டது. இன்று கர்ணா லேசாக தும்மல் போட‌ ஆரம்பித்திருந்தான். தூங்கவும் சிரம பட, ரிசப்ஷனில் பேசி டாக்டரை வர வைத்து ஊசி போட்டு மருந்து குடிக்க வைத்த பின்பே உறக்கத்திற்கு சென்றான். அதன் பின்னரே தீர்த்து போன் ஞாபகம் வந்து எடுத்து பார்க்க, அவன் அம்மாவிடமிருந்து மட்டும் 8 மிஸ்ட் கால் இருக்க, 'உண்மையாவே ரொம்ப தேடிருப்பாங்களோ' என நினைத்தாலும், 'காலைல பேசலாம்' என வைத்து விட்டு, வேறு official ஆக சில மெஸேஜ்களை தட்டி விட்டு வந்து படுத்து கொண்டான்.
மகனையும் மனைவியயும் கட்டிலில் எட்டி திரும்பி பார்த்தவன், கர்ணன் அவளை இறுக்கி அணைத்து படுத்திருப்பதை கண்டு விட்டு, தனியே தூங்க ஆயத்தமானான். கொஞ்ச நேரம் புரண்டு விட்டு தூக்கம் வராமல் கட்டிலில் ஏறி கர்ணன் பக்கம் படுக்க...
கர்ணனின் மறுபக்கம் படுத்திருந்த ப்ரகி, "என்னவோ தனியாவே படுக்காதவர் மாறித்தான்" என முனங்க. அது அந்த ஃபேன் இல்லாத அறையில் துள்ளியமாகவே கேட்டது. (கொடைக்கானலில் அதிக குளிராக இருப்பதால் பாதிக்கும் மேற்பட்ட லாட்ஜூகளில் ஃபேன்/ஏசி இருக்காது).
"அடிப்பாவி இன்னும் தூங்கலயா நீ? வீட்டுக்கு வந்தன்னைக்கு எப்பவாது நீங்க இல்லாம தூங்கிருக்கேனா? வேலை இடத்துல வேற வழி இல்லாம சமாளிப்பேன். நீ என்ன நா குடும்பமே வேணாம்னு போனவனாட்டமே பேசுற".
"பின்ன இல்லயா? கொரனா நேரத்துல எட்டியாது பாத்தீங்களா எங்கள? கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா வீட்டு பக்கமே வரலல நீங்க? ஊர்ல இருந்த எல்லா போலீஸ்காரங்களும் இப்டி தான் வருஷ கணக்கா வரலையோ?".
"கர்ணா அப்ப ரொம்ப சின்ன பையன், உங்க சேஃப்டிகாக தான் நா வரல. அதும்போக நீயு உங்கப்பாக்கு முடிலன்னு அங்க போயிட்ட தான?".
"ஏன் எங்கப்பா வீட்டுக்குன்னா வர மாட்டீங்களோ? அந்நேரமாது நீங்க அங்க வருவீங்கன்னு நினச்சேன் தெரியுமா? இங்க வந்திருந்தா நானாது ஓரெட்டு வந்து பாத்துட்டு போயிருப்பேன். இவங்களும் வராம நம்மளயு பாக்க விடாம படுத்திட்டு இப்ப காரணம் சொல்றாங்க" என அவள் டென்ஷன் ஆக‌.
"அடடா நாம பேசாம தான் நிறைய miss understand பண்ணிக்றோம்னு நினைக்றேன். Actual ah நா உங்க வீட்டுக்கு வராததுக்கு reason உன் அக்கா".
"அவ என்னவு பேசுறா, அதுக்காக வராம இருப்பீங்களா நீங்க?" என்கவும்.
எட்டி நறுக்கென அவள் தலையில் கொட்டியவன், "சொல்றத கேட்டுட்டு பேசு... அவங்க ஒரு டிவோர்சி. நாம அவங்க முன்ன‌ போய் குடும்பமா தங்குனா அவங்களுக்கு uneasy ah இருக்காது? நீயே எப்பவாது தான் உங்க வீட்டுக்கு போற, அத கெடுக்க வேணாம்னு தான் நா நம்ம வீட்டுக்கு கூட வரல. நீங்க இல்லாம நம்ம வீட்ல நா மட்டும் வந்து இருக்க பிடிக்காம தான் வரல. கர்ணா ஒரு reason, உங்க அக்கா ஒரு reason, atlast main ah நீயு ஒரு reason" என நிறுத்த.
'இவ்ளோவா யோசுச்சிருக்காங்க' என நினைத்தவள், "இதெல்லாம் இப்டி இப்படின்னு சொன்னா தான எனக்கும் தெரியும். இல்லாம நா பாட்டுக்கு என்னலாமோ யோசிச்சு எவ்ளோ கஷ்ட படுவேன் தெரியுமா?".
"ம்ம் இப்ப புரியுது.. அப்ப தோணல. இனி நானும் எல்லாம் சொல்லிடுறேன். நீயு எதுனாலும் direct dealing ah கேட்டு தெரிஞ்சுக்ற. சும்மா உக்காந்து அழுறது.. இப்டி பெட்டிய‌ தூக்கிட்டு கிளம்புற வேலைலா வச்சுகிட்ட?" என விரல் நீட்டி உறுமவும்.
"நேத்து சொன்னது தான் இன்னைக்கும். அது என் கைல இல்ல" என்கவும்.
"கைல இல்லன்னா ஒளிச்சா வச்சுருக்க" என்றவாறு அவளை கிச்சு மூட்ட.
சிரித்தவாறு அவன் கையை தட்டி விட்டவள், "குட்டிய எழுப்பிடாதீங்க" என அதட்டவும் நேராக படுத்துக் கொண்டான். பின் சற்று நேரத்தில் தூக்கம் வர, பல நாட்களுக்கு பின்னான நிம்மதியான தூக்கம் தூங்கினர்.
மறுநாள் காலையிலேயே ஊருக்கு கிளம்ப அரக்கப்பரக்க எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ப்ரகி. அலுப்பை எடுத்தவாறு திரும்பிப் படுத்தவன், கர்ணன் நெற்றியை தொட்டு பார்க்க, அது குளிர்ந்து இருக்கவும் அவனுக்கு போர்வையை நன்கு போர்த்தி விட்டு, "மறுபடியும் எங்க அவசரமா கிளம்பிட்ருக்க? இன்னைக்கு வெளியில எங்கேயும் போற ப்ளான் இல்ல. ஃபுல் ரெஸ்ட். நைட்டு ட்ரெயின் பிடிக்கிறதுக்கு அப்ப தான் ஈசியா இருக்கும். ஒரு 6க்கு கிளம்புனா போதும் வந்து படு" என‌ தீர்த்து சொல்ல.
"அச்சோ அப்போ காலையில ஆயிடுமா திருச்செந்தூர் போக? அப்ப ஸ்கூலுக்கு?".
"ஆமாமா நாளைக்கு வீட்ல இருந்துட்டு நாள கழிச்சு ஸ்கூலுக்கு போ".
"டென்த்துக்கும் பிளஸ்டூக்கும் ரிவிஷன் எக்ஸாம் வைக்கணும். ஆல்ரெடி டூர்ன்னு அந்த பிஷில அவங்கள கவனிக்கல, இப்ப வேற நா 1 வார லீவ் . என் சப்ஜெக்ட்டையே மறந்துட்டுருப்பாங்க" அவள் புலம்ப.
"அத என்கிட்ட கோபிச்சிட்டு வரதுக்கு முன்ன யோசிச்சுருக்கணும் science miss" என்றான் கண்ணைத் திறக்காமலேயே.
விருவிருவென வந்தவள் அவன் முதுகில் சொத்து என்று அடித்து அருகில் உட்கார்ந்து, "என்ன நக்கலா? எல்லா உங்களால தான். சுத்தமா வேற தாட்டே(thought) இல்லாம, மைன்ட் ப்ளாங்காகி கிளம்பி வந்துட்டேன். இப்ப ப்ரின்சி வேற என்ன சொல்வாங்களோ தெரியல" என ப்ரகி சோகமாக சொல்ல.
"முறைக்கிற இப்ப‌ என்னன்னா அடிக்ற. ரொம்ப தைரியமாயிடுச்சுடி உனக்கு" என‌ ஒரே திரும்பலில் அவளை தன் கைக்குள் கொண்டு வந்து இறுக்கி பிடித்து கொண்டான்.
"எந்துச்சு கிளம்புங்க ஊருக்கு போவோம்" என முறுக்கியவளை.
"கொஞ்ச நேரம் தூங்குடி" என பிடித்து கொண்டான்.
பின் 10 மணிக்கு மேல் எழுந்து, குளித்து சாப்பாட்டை முடித்த பின், "போர் அடிக்குதுல ஒரு டான்ஸ் ஆடேன்" என அவளை ஆட வைத்து, ஆசை தீர அவளை பேச வைத்து கேட்டவன் 7 மணிக்கு ரூமை காலி செய்து இரவு உணவையும் முடித்து விட்டு இருவரையும் அழைத்து கொண்டு கிளம்பினான்.
அங்கிருந்து மதுரை வர இரவு மணி 11.30 நெருங்கியிருந்தது. அங்கிருந்து சாமத்தில் 2.30 போல் அவர்களுக்கு திருச்செந்தூர் ட்ரைன். அதுவரை ஒரு இடம் பார்த்து அமர்ந்து விட்டனர்.
நேரம் செல்ல செல்ல அங்கங்கே ஓரிருவர் மட்டுமே இருந்தனர். தீர்த்து அமைதியாக அமர்ந்திருந்தாலும் கொஞ்சம் பரபரப்பாக இருப்பதாகவே பட்டது ப்ரகிக்கு. அதுபோலவே தான் அடுத்த சம்பவமும் நடந்தது.
அடுத்த ட்ரைனில் 20, 21 வயதில் இரண்டு வாலிபர்கள் முழு போதையில் ஆரவாரமாக வந்திறங்கினர். முழு தள்ளாட்டத்தில் அங்கங்கு இருந்தவர்களிடமும் வம்பு செய்து கொண்டே வந்தவர்கள், ப்ரகியிடமும் வர, அதுவரை அங்குள்ள போலீஸ் காவலை பார்ப்பதும் இவர்களை பார்ப்பதுமென அமைதியாக இருந்தவன், பொளேறென ஒருவனை அறைய, அவன் பொத்தென்று கீழே விழ மற்றவனும் எகிரி கொண்டு வர அவனயும் ஒரு அறை விட்டான்.
இருவரும் மீண்டும் தள்ளாடி எழுந்தனர், போதையு அவன் விட்ட அறையில் சற்று தெளிய தீர்த்து அவர்கள் பார்வைக்கு இப்போது நன்கு தெரிந்தான்., ஒரு நொடி அதிர்ந்தவர்கள் பின் சுதாரித்து தப்பி ஓட முயல, இருவர் கழுத்தையும் எக்கி பிடித்து, அவர்கள் முழங்காலை தட்டி மடங்கி விழ செய்து, பாதி கலண்டிருந்த ஒருவன் சட்டையை ஒரே இழுவையில் பறித்து இருவர் கையையும் சேர்த்து கட்டினான்.
இதில் அங்கங்கிருந்தவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க, அப்போது தான் அந்த ரயில்வே காவலதிகாரிகள் வேகமாக வந்தனர்.
இவனை அருகில் கண்டதும் அடையாளம் கண்டு கொண்டனர், மினிஸ்டர் நியூசில் மொத்த டிப்பார்ட்மென்டின் கடந்த வார டாபிக் அவன் தானே, அதனால் உடனே சல்யூட் வைத்தனர், "information குடுத்து ரெண்டு நாளாகியும் எதுமே இல்லையேன்னு யோசிச்சுட்ருந்தோம் சார்" என்றார் வந்தவரில் ஒருவர்.
"Thanks for your information. தொடர்ந்து வாரங்களான்னு செக் பண்ண தான் இந்த 2 டேய்ஸ் கேப்" என்றவன், இன்னும் இரு போலீஸ் மப்டியில் வர அவர்களிடம் "இவங்கள லோக்கல் ஸ்டேஷன்ல விட்ருங்க, அவங்க நாகர்கோவில் கொண்டு போயிடுவாங்க, நா அங்க பாத்துக்றேன்" என்க.
"Ok sir" என அந்த இருவரையும் இழுத்து சென்றனர்.
அதுவரை இருந்த கூட்டத்தை கலைத்தவன், திரும்பி மனைவி மகனை பார்க்க, ப்ரகி அதிர்ந்து அமர்ந்திருக்க‌ கர்ணன் அவள் மடிக்குள் அடங்கியிருந்தான்.
"என்னடி இப்டி முழிக்ற?" என சாவகாசமாக கேட்டு அருகில் அமர்ந்தான்.
"யாரவனுங்க?".
"கொலை கேஸ்ல மாட்டி என் இன்ஜார்ஜ்ல வர்ற ஒரு ஸ்டேஷன்ல அரெஸ்ட் ஆனவனுங்க. அங்கிருந்து 4 நாள் முன்ன தப்பிச்சுட்டாங்க. இங்க மதுரை to தென்காசி ட்ரைன்ல இங்கயு அங்கயுமா பகல்ல உலாத்திட்டு நைட்டு இங்க வந்து ப்ளாட்ஃபார்ம்ல தங்கிருக்கானுங்க. ரெயில்வே போலீஸ் சந்தேகம்னு இவனுங்க போட்டோவ எல்லா ஏரியாக்கும் அனுப்ப, எங்கிட்ட சிக்கிட்டானுங்க. மறுபடியும் தப்பிச்சுட கூடாதுன்னு ரெண்டு நாளா‌ ஃபாலோ பண்ண ஆள் போட்டேன். இன்னைக்கு புடிச்சாச்சு".
"அப்ப அவன புடிக்க தான் இங்க வந்தீங்க?".
"ஆமா இது ப்ளான் தான்".
"அப்ப கொடைக்கானல் கூட்டிட்டு போனது?".
"அது இந்த ப்ளான்ல இல்ல. இன்னைக்கு புடிச்சுடணும்னு தான் நானே வந்தேன். இல்லன்னா வேற ஆள் ஏற்பாடு பண்ணிருப்பேன்" என்றான் இலகுவாக.
"எங்க போனாலும் போலீஸ் வேலையவு கூடயே தூக்கிட்டு அலையனுமோ? அவனுங்க வேற‌ எதாது பண்ணிருந்தா?" என முறைத்தாள்.
"அதெல்லாம் அலெர்ட்டா தான்டி பண்ணோம். இங்க நமக்கு ஹெல்பண்ண 7 பேர் department ஆளுங்க இருந்தாங்க. சும்மாலா ஹீரோயிசம் பண்ண இதென்ன சினிமாவா?".
"தெரியுதா? இது சினிமாவுமில்ல நீங்க ஹீரோவுமில்ல".
"போடி" என்றவன் கர்ணனை தூக்கி மெது குரலில் ஏதேதோ கூறி அவனையும் இலகுவாக்கினான்.
அடுத்து இவர்கள் ஏற வேண்டிய ட்ரைன் வந்து இவர்களும் ஏறி காலை 10 மணிக்கு திருச்செந்தூர் வந்திறங்கி வீடு வந்து சேரும் வரையிலுமே படபடப்பாக தான் இருந்தாள் ப்ரகி.
வீட்டிற்கு ஆட்டோவில் செல்லும் வழியில், அவள் முகத்தை வைத்தே அவள் பயத்தை உணர்ந்தவன், "இதுக்கே இப்டி பயந்தா அங்க வந்து என் கூடவே எப்டி இருப்ப. எல்லாத்துக்கும் ரெடி ஆகிக்கோ" என சிரித்தான்.

ப்ரகிக்கு அடுத்த பிரச்சனையாக வாசலிலேயே அமர்ந்திருந்தார் பேச்சி. அதில் முந்தைய டென்ஷன் மறைந்து புதிது வந்தமர்ந்தது.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 22
தீர்த்துவும் ப்ரகியும் வாசலில் நுழைய பேச்சி யாரோ வருவது போல் முஞ்சை திருப்பி கொண்டு அமர்ந்திருந்தார். அவரை பார்த்ததும் தான் தீர்த்துவிற்கு இரண்டு நாளாக அவர் போனை எடுக்கவும் இல்லை திருப்பி அழைக்கவுமில்லை என்பது ஞாபகம் வர பின்னந்தலையை கோதியவன் மெதுவாக ப்ரகி காதில் "நீ உள்ள போய்டு அம்மாட்ட நா பேசிக்கிறேன் . ரெண்டு நாளா அவங்க கால்ஸ் எதயும் அட்டென்ட் பண்ணல அந்த கடுப்புல உக்காந்திருக்காங்கன்னு நினைக்கிறேன் நானே பேசிக்கிறேன் நீ போ" என்க. (பாரபட்சம் பார்க்காமல் அம்மா மனைவி இருவரையும் மறந்து விடுவது தான் அவன் வழக்கம்)
"நீங்களா அப்டி நினைச்சுக்கோங்க நீங்க என்ன செஞ்சாலும் தப்பு என்கிட்டதான்னு அடிச்சு பேசுவாங்க. நீங்க அவ்ளோ கஷ்ட பட்டு சமாளிக்க தேவ இருக்காது" என தானும் மெதுவாக கூறியவள் செருப்பை கழட்டி விட்டு கர்ணனுடன் வீட்டினுள் சென்று விட்டாள்.
செல்பவளை கடுமையாக முறைத்த பேச்சி கண்ணுக்குள் நின்று தேடிய பேரனை சிறு பார்வைக்கும் பார்க்க மறந்தார். அவருக்கு ப்ரகி மேல் இருக்கும் கோவமே ஆரம்பத்தில் இருந்து பேரனை தள்ளி வைத்து விட்டது. இதே தவறை தான் மூத்த மகன் பிள்ளைகளிடமும் செய்தார். அவர்களும் பாசமின்றி விலகி கொண்டனர். அதே தவறை தான் கர்ணனிடமும் செய்கிறார்.
அவர்களெல்லாம்...... மருமகள்களின் மூலம் வந்த பேரன் பேத்திகள் மட்டுமில்லை தன் மக்கள் வழி பிள்ளைகளும் கூட என்பது கோவம் காரணமாக பின்னுக்கு சென்று விட்டது. இதனால் தன் பிள்ளைகளிடமிருந்து தான் விலகி நிற்கிறோம் என்ற ஒரு விஷயத்தை உணர மறந்தார்.
"என்னமா வாசல்ல உக்காந்திருக்க? டிவி பாக்கலயா?" என கேட்டு கொண்டே அம்மா முன் நின்றவன், "கரண்ட் இல்லையா ம்மா? அங்க டவர் சரியா கிடைக்கலம்மா அதான் உனக்கு திரும்ப கூப்பிட முடில, நேர்ல போய் பேசிக்கலாம்னு வந்துட்டேன். சொல்லு ம்மா" என்க.
"உனக்கு எங்கிட்ட பேசல்லாம் நேரமிருக்குமா? எல்லாரு கல்யாணோ பொண்டாட்டின்னு வந்ததும் மாறி தான்டா போயிடுறீக. அம்மாக்க தான் வாழ வழியத்து நிக்றோம்" என பேச்சி நொடிப்பாய் கூறவும் கையை கட்டிக் கொண்டு அழுத்தமாக பார்த்து நின்றான் தீர்த்து. Form'ற்கு வந்து விட்டிருந்தான். இனி ஒரு வார்த்தை அவனிடமிருந்து வாங்க முடியாது.
மினிஸ்டர் கடத்தல் டென்ஷன், அதன் பின்னான ப்ரகி டென்ஷன் என இருந்தவனுக்கு இந்த 3 நாளில் ப்ரகியுடன் செலவழித்த விதம்..... பேசிவிட்டால் ப்ராபலம் solve ஆகிவிடும் என புது தியரியை புரிய வைத்திருந்தது. அதற்காக மட்டுமே வாலன்டியராக அம்மாவிற்கு காரணம் கூறினான்.
அதிலாவது, பேசவே காசு கேக்கும் மகன் பேசாததிற்கு காரணம் சொல்கிறானே என பேச்சி கொஞ்சம் யோசித்திருக்கலாம். அவர் தான் யோசிக்கவே மாட்டேன் என அடம்பிடிக்கிறாரே.
இப்போது 'நீ பேச வேண்டியத பேசு' என அவன் பார்த்து நிற்க. பேச்சி முழித்தார், பின் "உன் தங்கச்சி இத்தன நாள் என்னைய வந்து பாக்காம இருந்ததில்ல தெரியுமா? அவ வீட்டுகாரர் குணமு அவ்ளோ சரி கிடையாது. நொரநாட்டியம் புடிச்ச மனுஷன்‌.., இப்ப இவள போட்டு அடிக்காரோ உதைக்காரோ! உன் அப்பாவ, வாங்க ஓரெட்டு போய் பாத்துட்டு வருவோம்னு கூப்டா அவரும் பெத்த புள்ளன்ற பாசமில்லாம பேசுறாரு. நானே அந்த கவலைல உன்ட பேசுனா நீ போன எடுக்க கூட மாட்டேனுட்ட" என சேலையில் மூக்கை உறுஞ்சி கொண்டார்.
"இப்ப என்ன செய்யணும்?"
"நீ போய் அவுக வீட்ல பேசிட்டு வா. உன் பொண்டாட்டியயு கூட்டிட்டு போ. கோகி இந்த வீட்டு புள்ள இங்கிருந்து எத எடுத்துட்டு போகவு அவளுக்கு உரிம இருக்குன்னு சொல்லிட்டு வா. நீயு உன் பொண்டாட்டியு சொன்னா கோகி வூட்டுகாரர் கொஞ்சோ இறங்கி வருவாரு" என்றார்.
"முடியாது. வேற?" தீர்த்து இலகுவாக கேக்க.
"அப்ப உன் தங்கச்சி வாழ்க்க உனக்கு முக்கியமில்ல?".
"அவ வாழ்க்கைய அவளே கெடுத்துக்காம இருந்தா போதும். நீங்க ரொம்ப ரியக்ட் பண்ணாம ஆகுற வேல எதாது இருந்தா பாருங்க" என வீட்டினுள்‌ செல்ல படி ஏறியவன்‌ சட்டென்று நின்று திரும்பி, "இந்த வீட்ல எந்த பொருள எடுத்துட்டு போகவும் அவளுக்கு உரிம இருக்கு. அது உங்க பொருளா‌ மட்டும் இருக்குற வர" என திரும்பி அறைக்கு சென்று விட்டான்.
அங்கு கர்ணன் அழுது கொண்டிருக்க, "என்னடா குட்டி" என தீர்த்து வந்து அவனை தூக்க... "வந்துட்டேன்‌ கர்ணா. அம்மாவு உங்கூட தான வந்தேன்" என்றபடியே கையில் தட்டுடன் வேகமாக உள்ளே வந்தாள் ப்ரகி.
"என்னாச்சுடி? நல்லா தான வந்தான் எதுக்கு அழுறான்?".
"சளி புடிச்சு நச நசன்னு இருக்கான்ல. இப்ப பசிக்குது போல அதான் அழுறான். அவசரத்துக்கு உப்மாவ தான் கிண்டுனே. நா ஊட்றேன் கீழ விடுங்க அவன. நீங்களும் குளிச்சிட்டு அத சாப்டுங்க மதியத்துக்கு சீக்கிரமா சமச்சிடுறேன்" என கர்ணாக்கு ஊட்ட தொடங்கினாள்.
"வீட்ல அம்மா எதும் செஞ்சு வைக்கலயா?".
Slow motion'னில் திரும்பி முறைத்தாள், "நாங்க இங்க இருக்கையிலயே எதும் செய்ய மாட்டாங்க. இப்ப நாம வரோம்னே சொல்லிட்டு வரல. எப்டி செய்வாங்க".
"ம்ம்..." என்றவன் அம்மா சற்று முன் பேசியது பற்றி யோசித்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.
அவன் திரும்பி வருகையில் ஹாலில் அம்மாவின் சத்தம் பயங்கரமாக... யாரிடமோ சண்டையிடுவது போல் கேக்க, 'ப்ரகியிடமோ!!' என தான் யோசித்தான். ப்ரகி கர்ணன் கூட வெளியே தான் நிற்பதாக பட்டது. அதனால் அவளையும் கூப்ட முடியாமல் வேகமாக உடையை மாற்றி வெளியே வந்தான்.

அங்கு பாவமாக ப்ரகியின் தந்தை அமர்ந்திருக்க, அவர் மடியில் கர்ணன், எதிரில் நின்று ஆவேசமாக பேசி கொண்டிருந்தார்‌ பேச்சி. ப்ரகி இன்னொரு பக்கம் சுவற்றில் சாய்ந்து அப்பாவை மட்டுமே பார்வை மாறாமல் பார்த்திருந்தாள். அவள் பார்வையே இப்படி அவள் அப்பா திட்டு வாங்குவது வழமையான ஒன்று என தீர்த்துவிற்கு புரிய வைக்க போதுமாக இருந்தது.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 23
"வரும்போதுலா இப்டியே அமைதியா உக்காந்திட்டு போய்டுறீங்க, உங்க பொண்ணுக்கு எதையாது எடுத்து சொல்றீங்களா இல்லயா, அவ கொஞ்சமு திருந்துன மாறி தெரில. கொஞ்சோ கூட என் மேல மரியாதயே கிடையாது. உங்க பொண்ணோட செயின் மோதிரம்னா என் பொண்ணு தூக்கிட்டு போனா? உப்பு பெறாத சோப்பு, ஷாம்பூ, கிளிப் இதுலாம் ஒரு விஷயம்னு என் புள்ளையிட்ட போட்டு குடுத்து அண்ணன் தங்கச்சிய பிரிக்க பாக்குறா. என் குடும்பத்த பிரிக்க பாக்றவள நா எதுக்கு என் வீட்ல வச்சுக்கணும்....... கூட்டிட்டு போய்டுங்க. என் பொண்ணு எப்போ இங்க மறுபடியும் வந்து போய் இருக்காளோ அதுக்கப்றம் உங்க பொண்ணு இங்க வந்தா போதும்".
சிறு இடைவெளி விட்டு, "இவ எப்ப எங்க கிளம்பி போவான்னு பின்னாடியே ஆள் அனுப்பியா பாதுகாக்க முடியும்? சம்பாதிக்கிறா, சொந்த காலுல நிக்கணும்னு படிச்சு வேலைக்கு போறதுனால இஷ்டத்துக்கு எங்க வேணா சொல்லாம போலாம்னு இருக்கோ? இவ போன எடத்துல எக்கு தப்பா இவளுக்கோ என் பேரனுக்கோ எதாது ஆகிருந்தா நீங்களா வந்தா பதில் சொல்வீங்க? அதவிட, உங்க பொண்ணு காணாம போய்ட்டான்னு இங்க யாரும் சொல்லமாட்டாங்க போலீஸ்காரன் பொண்டாட்டிய காணும், மிலிட்டரிக்காரன் மருமக சொல்லாம கொள்ளாம போய்ட்டாளாம் இப்டிதான ஊர் பேசும். ம்ம்ஹ்ம் இதுலா சரி வராது நீங்க உங்க பொண்ண கூட்டிட்டு கிளம்புங்க ஒருக்கானாலும் இப்டி செஞ்ச தான் ஒழுங்குக்கு வருவா".
பேச்சி முதலில் அப்படி சொல்லவுமே "ம்மா" என்ற தீர்த்துவை பேச்சி கண்டு கொள்ளவில்லை. அவனோ, மேலும் பேசுமுன் திரும்பி ப்ரகியையும் அவள் தந்தையையும் பார்த்தான். அவர்கள் இருவரும் அந்தளவிற்கு அதிர்ந்தது போல் தெரியவில்லை. அதிசயமாக தான் இருந்தது அவனுக்கு, "வெளிய போ" என டைரெக்ட்டாக ஒருவர் சொல்லிகொண்டிட்ருக்க எப்படி அமைதியாக நிற்கின்றனர் என புரியாமல் முழித்தவன், அவன் அம்மா மேலும் பேசிக்கொண்டிருப்பது காதில் விழவும், "வாங்க மாமா, ஊர்ல இருந்து வந்ததும் ப்ரகி சொல்லிட்டாளா?" என கேட்டுக்கொண்டு அவர் அருகில் சென்று அமர்ந்தவன், ப்ரகியிடம் திரும்பி, "அப்பாக்கு குடிக்க ஏதும் குடுக்கலயா ப்ரகி? எல்லார்க்கும் டீ போட்டு எடுத்துட்டு வாயேன்" என்கவும்.
இப்பொது முழிப்பது அவள் முறை ஆகிற்று, தீர்த்து வந்து அவள் அப்பா அருகில் அமர்ந்து பேசுகிறான், அவள் அப்பாவிற்கு டீ வேறு கேக்கிறான் என யோசித்துக்கொண்டே தான் டீ போட சென்றாள். பேச்சியும் மகனை அப்படி தான் பார்த்தார். தீர்த்து தேவையென மட்டுமே பேசுபவன், அதனால் மட்டுமே அவன் அதிகம் பேசாததுபோல் தெரியும். இதுவரை இப்டி ஒரு வாய்ப்பு மாமனுக்கும் மருமகனுக்கும் அமையவில்லை அதனால் யாருக்கும் தெரியவில்லை.
"மாப்ள..." என அவர் திணற.
"சொல்லுங்க மாமா என்ன காலையிலேயே? ஏதும் விஷயமாவா இல்ல சும்மா பாத்திட்டு போலாம்னு தான் வந்தீங்களா?" எதார்த்தமாகவே கேட்டான். அவரை இலகுவாக்க முயன்றான்.
"தீர்த்து நா என்ன பேசிட்ருக்கேன் நீ சாவகாசமா நலம் விசாரிச்சுட்டுருக்க? நீதான் என் பொண்ணு வாழ்க்கைல என்ன நடந்தாலும் கண்டுக்க மாட்டேன்னுட்டல்ல இனி நானே பேசிக்கிறேன் நீ ஒதுங்கிக்கோ" என்றார் பேச்சி.
"அஹான் அப்டி சொல்றீங்களா?" என நாடியை தடவியவன், "கோகி வாழ்க்கைக்கும் என் மாமனாருக்கும் என்னம்மா சம்பந்தம்?" என அவரை அழுத்தமாக பார்க்க.
"அவர் பொண்ணுக்கும் கோகிக்கும் இருக்குல்ல, ஒன்னு அவ என் பேச்ச கேக்கணும், இல்ல நீ உன் பொண்டாட்டிய பேசி வழிக்கு கொண்டு வார மாறி இருக்கணும் இங்கதான் எதுக்கும் வாய்களையே, அப்ப எங்க யார்ட்ட பேசுனா வேல சரியா நடக்குமோ அங்க தான நா பேச முடியும்".
"ம்மா உண்மையிலேயே உனக்கு புரிலயா இல்ல புரியாத மாறி நடிக்கிறியா?"
"எனக்கு என்னடா புரில?" என அவர் எகிற.
போனை எடுத்து கோகி கணவனுக்கு அழைத்தவன், "மச்சான் கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டு போ முடியுமா? கோகியவும் கூட்டிட்டு வாங்க" என வைத்தான்.
ப்ரகி டீ கொண்டு வந்து கொடுத்தாள், அதும் கணவனுக்கும் அவள் அப்பாவிற்கும் மட்டும். அவன் பேச்சியை கண் காட்ட, வாயை கொணட்டிவிட்டு சென்று செவுரில் சாய்ந்து நின்று கொண்டாள்.
'எதோ ஒரு வகைல பழிக்கு பழி வாங்கிடுவா போல, அதான் இத்தினி சிணுக்கம் இல்லாம நிக்கா' என நினைத்து கொண்டவன் தன் கையிலிருந்த டீயை அவன் அம்மாவிடம் நீட்டி, "குடிங்கம்மா, இப்போ உங்க பொண்ணு வரவும் கொஞ்சிக்கணும் தான, டீய குடிச்சு டென்ஷன குறைச்சு ரிலாக்ஸா நில்லுங்க" என்க.
வெடுக்கென முகத்தை திருப்பி கொண்டார், அவரை பொறுத்தவரை அவர் எதிர்பார்த்தது நடந்து விட்டது, அவர் மகளை வர வைத்து விட்டார், ப்ரகியை வெளியில் அனுப்பும் பிளான்லாம் அவரிடம் இல்லை, அதை சொல்லி அவள் தந்தையை பயமுறுத்தி அவர் மூலம் அவளை அவர் மருமகனிடம் பேசவைக்க நினைத்திருக்க, மகனே அழைத்துவிட்டான் அதுவே அப்போதைக்கு போதுமாக பட்டது. அதனால் அதற்கு மேல் பேசாமல் வாசலை பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றார் .
அதை கவனித்தவன் அதற்கு மேல் வற்புறுத்தாமல், "நீ சாப்பாடு ரெடி பண்ணு ப்ரகி, மாமா சாப்ட்டு தான் போறாங்க, கோகியும் மச்சானும் கூட சாப்பிடற மாறி சேத்து செய்" என்கவும்.
'இவங்க என்ன செய்ய போறாங்க, பில்டப்லா பலமா தான் இருக்கு, நடப்புல என்ன ஆகும்னு தான் தெரில' என்றவாறு சமையலில் இறங்கினாள் ப்ரகி.
மாமனார்..... மருமகனிடம் என்ன பேச என தெரியாமல், கர்ணனிடம் ஐக்கியமாகிவிட, தீர்த்து அமைதியாக யோசித்திருந்தான். அடுத்த 1 மணி நேரத்தில் கோகி குடும்பம் ஆஜர் ஆகியது.
"வாங்க மருமகனே, வாடி கோகி அம்மா உனக்கு எத்தன போன் போட்டேன் அத எடுத்து கூட பேச முடியாத அளவுக்கு என்னடி வேல?" என வேகமாக வரவேற்றார் பேச்சி.
"வாங்க மச்சான்" என தீர்த்து வரவேற்க, ப்ரகி அப்பா வரவேற்பாக ஒரு சிரிப்பை கொடுத்தார்.
"எதுக்கும்மா மறுபடியும் வர சொல்லி அண்ணன் போன் போட்ருக்கு? அன்னைக்கு நடந்ததுக்கே இன்னும் என் வீட்ல விடை தெரில. இன்னுமென்னவாம்?" என கோகி பேச்சியிடம் எரிந்து விழ.
"நாந்தான் போன் போட வச்சேன். பின்ன உன் வீட்டுக்காரர் உன்ன கொடும படுத்தறாரோ என்னவோன்னு எனக்கு கடந்து மனசு அடிச்சிக்கிறது இங்க யாருக்கும் புரிலயே அதான் அவ அப்பாவ வர வச்சு பிரச்னைய முடிச்சு வச்சிட்டேன். இனி உன் புருஷன் உன்ன இங்குட்டு விடுவாருல?" என குசுகுசுவென வாயெல்லாம் பல்லாக பேச.
"அறிவிருக்கா உனக்கு? உன்ன எவன் எனக்கு ஏண்டுகிட்டு பேச சொன்னது? என்மேல அம்புட்டு பாசமா இருந்த மனுஷன் இப்போ ஒரு வாரமா என் மூஞ்சி பாத்து கூட பேசல, நானே அவர எப்டி சரி பண்றதுன்ற பிரச்னையில இருக்கேன், நா இங்க வராததுலா ஒரு விஷயம்னு நீ புதுசா ஆரம்பிச்சு வச்ருக்க. மறுபடியும் என் புருஷன் மலை ஏறுனாரு உன்ன அம்மான்னு கூட பாக்க மாட்டேன் சொல்லிட்டேன்" என முறைத்தாள்.
அதிர்ந்து தான் பார்த்தார் பேச்சி, "அந்த மனுஷன் உன்ன நல்லாவே வச்சுக்கலன்னு எப்பவும் சொல்லுவியேடி"
"நீ கூட தான் அப்பாவ 1000 குறை சொல்லுவ அதுக்காக அப்பா கெட்டவரா? அப்டி பாத்தா அப்பாவ விட என் புருஷன் சொக்க தங்கம். நீயே என் குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ணி பிரிச்சு விட்ராத" என மாற்றி பேசினாள் மகள்.
இதற்குள் சில பல நல விசாரிப்புகளை முடித்திருந்தனர், தீர்த்து, ப்ரகி, ப்ரகியின் அப்பா, 2 குழந்தைகள் அனைவரும். அவர்கள் அம்மா மகளை கண்டுகொள்ளவில்லை. அவர்களும் இவர்களை கோகி கணவர் ஆரம்பிக்கும் வரை பார்க்கவில்லை.
"என்ன மாப்ள உடனே வர சொன்னாப்டி மறுபடியும் எதும் பிரச்னையா?" என்றார் பைரவமூர்த்தி (கோகி கணவர்) ஓர பார்வையில் கோகியயும் பார்த்துக் கொண்டு.
அதற்கு தீர்த்து பதில் சொல்லுமுன், "அது அம்மாதான் நா போன எடுக்கலன்னு பயந்து அண்ணன விட்டு பேச சொல்லிற்கு. வேற ஒன்னுமில்ல, நாதான் இந்த பக்கமே வரலையே" என முந்திக்கொண்டாள் கோகுலவாணி.
அவளை ஒரு பார்வை பார்த்த பைரவன், "நானே உங்கள பாக்கணுன்னு தான் இருந்தேன். மாமாட்ட கேட்டேன், நீங்க கொடைக்கானல் போயிருக்கதா சொன்னாங்க, சரி என்ஜோய் பண்ணணும்னு போயிருக்க இடத்தில எதுவும் பேச வேணான்னு தான் போன் கூட போடல. இந்தாங்க" என ஒரு பெரிய கட்டாக 2000 ரூபா கட்டை எடுத்து நீட்டினார்.
தீர்த்து வாங்காமல், "என்ன இது எதுக்கு இவ்ளோ அமௌன்ட் குடுக்கறீங்க?" என்றான்.
"புடிங்க மாப்ள. இது உங்க பணம் தான். உங்க தங்கச்சி உங்களையும் என்னையும் ஏமாத்தி சேத்து வச்ச பணம் 6லட்சம், அதுல 4 லட்சத்த கொண்டாந்துருக்கேன்".
எல்லாரும் அதிர்ந்து பார்க்க, தீர்த்து தான், "இருக்காது மச்சான் அவ்ளோ ரூபா அவளால எப்டி சேத்திருக்க முடியும்?".
"ஏன் முடியாது? எங்களுக்கு 7 வருஷமா புள்ள இல்ல, அப்போ ஹாஸ்பிடல்ல டிரீட்மெண்ட் எடுக்கன்னு மாசா மாசம் ஒரு தொகை செலவாகும், அத ஒரு தட கூட உங்க வீட்ல வாங்கிட்டு வான்னு நா சொன்னதில்ல, ஆனா உங்க தங்கச்சி பில்ல காமிச்சு இன்சூரன்ஸ் கிளைம் பண்ற மாறி உங்க அம்மாட்ட வாங்கிட்டு வந்துருக்கா உன்டா இல்லையான்னு கேளுங்க? மாச செலவுக்குன்னு உங்க அப்பாட்ட தனிக்கணக்கு என்கிட்ட தனிக்கணக்கு இப்டி சேத்த பணம் தான். அதுல ஏன் பங்க கழிச்சுட்டு தான் உங்க பங்க கொண்டு வந்துருக்கேன். நா மாமாட்டயே பேசி இத கொடுத்துறலாம்னு பேசுனப்போ அவர் தான் இதெல்லாம் தீர்த்து பணம். அவன் மாச மாசம் அனுப்புறதுலயிருந்து தான் பேச்சி எடுத்து கொடுத்துருக்கா, இதப்பத்தி நீங்க அவன்ட்ட தான் பேசணும்னு சொல்லிட்டார். அதான் நா உங்கட்டயே கொண்டு வந்துருக்கேன். வாங்கிகோங்க அப்போ தான் எனக்கு இருக்குற கில்ட்டி ஃபீலிங் கொறையும்".
தீர்த்து திரும்பி கோகியை பார்த்தான். அவளுக்குமே கணவன் கூறுவது எல்லாம் புதிய செய்தியே. சேமிப்பு கணக்கை மட்டுமே கேட்டு உண்மையை அவளிடமிருந்து வாங்கி இருந்தான் பைரவன். மற்றதெல்லாம் அவனாக செய்தது இப்போது பணம் எடுத்து வந்தது வரை.
தீர்த்து "நீங்களே இந்த பணத்த வச்சுக்கோங்க மச்சான். முதல் குழந்தைக்கு நாங்க தானே செய்யணும். அப்டி செஞ்சதா இருக்கட்டும். காருக்காக தானே இவ்வளவும் செஞ்சா இந்த பணத்துல அவளுக்கு காரே வாங்கி குடுங்க" என்றதும் படக்கென அவன் முன் இருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு எழுந்துவிட்டான் பைரவன்.
"முடியாது மாப்பிள உங்க தங்கச்சி ஹெலிகாப்டர் கூட வாங்கணும்னு ஆசப்படுவா? அதுக்காக அதயு வாங்கிடமுடியுமா? என் தகுதிக்கு எப்ப கார் வாங்க முடியுதோ எப்போ அது என் குடும்பத்துக்கு அவசியம்னு படுதோ அப்ப வாங்கிக்குறேன். அவளோ தானா இல்ல வேற எதுவும் பேசணுமா?".
அவன் தன்மானம் தீர்த்துவை சிலிர்க்க வைத்தது. அதற்கு மேல் அவன் வாதாடவில்லை. ப்ரகியை அழைத்து அந்த பணத்தை அவள் கையில் கொடுத்துவிட்டான்.
'இவளோ நல்ல மனுஷனையா இவ வரும்போதெல்லாம் குறை சொன்னா?' என பேச்சி அதிர்ச்சியில் நின்று விட்டார். கோகுலவாணி சேமிப்பில் கெட்டி தான், அதை நல்ல விதத்தில் செய்திருக்கலாம்.
தீர்த்து தான் "இருங்க மச்சான் அதான் பிரச்சனைய முடிச்சுகிட்டீங்களே இருந்து சாப்பிட்டு போலாம்" என்றவன், "ப்ரகி எல்லாருக்கும் சாப்பாடு எடுத்துவை" என்று விட்டு, அதுவரை ஒரு பார்வையாளராக அமர்ந்திருந்த ப்ரகியின் தந்தையையும் சாப்பிட அழைத்துச் சென்றான். வந்து அமர்ந்தவர்களுக்கு மட்டுமே ப்ரகி பரிமாறினாள். மாமியாரையும் நாத்தனாரையும் அவள் கண்டு கொள்ளவில்லை.
அவருக்கு கோகி பிரச்சனை எதுவும் தெரியாது. ப்ரகி சொல்லாமல் சென்றதற்கே பேச்சி திட்டுவதாக தான் நினைத்திருந்தார்.

கோகி குடும்பத்தை அனுப்பிய பிறகே மாமனார் வந்து அமர்ந்ததிற்கான காரணத்தை கையில் எடுத்தான்.
 

priya pandees

Moderator
அத்தியாயம் 24
கோகுலவாணி அவள் அம்மாவிடம், "நானே போன் பண்ணுதேன்மா சும்மா நொட்டு நொட்டுன்னு கூப்டுட்டே இருக்காத. கஷ்டப்பட்டு சேத்த ரூவாயும் போச்சு. அண்ணே எவ்ளோ தெளிவா நீ இருக்கும்போது ரூவா எல்லாத்தையும் அண்ணிட்ட குடுத்துச்சு பாத்தியா? அவ்ளோதான் இனி நம்ம பாடு, நீ இங்க கையேந்தணும், அங்க நா என் புருஷன்கிட்ட கையேந்தணும். நீ மட்டும் அன்னைக்கு கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? என் மாமியார்லா இப்போ இதான் சான்ஸ்ன்னு என்ன பேச்சு பேசுது தெரியுமா? அதனால தான் சொல்றேன்.... நா அங்க சரி பண்ற வர நீ கொஞ்சம் என்ன தொந்தரவு பண்ணாம இரு. அண்ணா டூருலாம் போயிருக்கு போல... என்ன கூட்டிட்டு போல. அதபத்தி அப்றமா என் புருஷன சரி கட்டிட்டு வந்து பேசிக்கிறேன்" என கிளம்பும் அவசரத்திலும் இவ்ளோ பேசினாள்.
"வாரியா இல்ல உங்கம்மாட்டயே இருந்துக்கறியா?" என்ற‌ பைரவமூர்த்தி அதட்டலில்,
"வரேன் ம்மா" என அம்மாவிடம் மட்டும் கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.
அவர்கள் கிளம்பவும், "கர்ணா வா சாப்பிடலாம்" என தந்தையிடம் அமர்ந்திருந்தவனை கூட்டிக்கொண்டு சென்றாள் ப்ரகி.
"நீயும் ப்ரகியோட போய் சாப்பிட்டு வாம்மா" தீர்த்து சொல்ல.
"உங்க அப்பா வரட்டும்" என பேச்சி நகர போக.
"அப்ப வெயிட் பண்ணும்மா ப்ரகி கர்ணாக்கு ஊட்டிட்டு சாப்பிட்டு வரட்டும் மாமா வந்த விஷயத்தயும் பேசி முடிச்சுடுவோம்" என்றான்.
"அவங்களே அத மறந்து போறாங்க தான உங்கப்பா எப்படி கிளப்பி விடுறாரு பாரு" என கர்ணாவிடம் கூறி கணவனை பார்க்க.
"சீக்ரம் வா ப்ரகி உனக்கு தான் வெய்ட்டிங்" என்றான் மீசைக்குள் சிரிப்பை அடக்கி. அவள் இன்னும் முறைக்க, பார்க்காதது போல் மாமனாரிடம் திரும்பினான்.
"ப்ரகியோட அக்கா எப்டி இருகாங்க மாமா? அவங்களுக்கு அடுத்த மேரேஜ் எதுவும் யோசிக்கலயா?" என அருகில் அமர்த்திருப்பவரிடம் எதாவது கேட்க வேணுடுமே எனக் கேட்க.
"இல்ல மாப்ள. ப்ரகி கல்யாணம் முடியவுமே பேசிப்பாத்துட்டேன் வேணாம்னு முடிவா சொல்லிட்டா. சொந்தக்காரங்களும் சொல்லிப் பாத்தாத்தங்க, என்னால சமாளிக்க முடியும்னு சொல்லிட்டா, அதுக்குமேல என்ன சொல்லன்னு அப்டியே விட்டுட்டேன்". தலையசைத்துக் கேட்டுக்கொண்டான்.
"எல்லாம் உங்க காலம் வரைக்கும் தான், அப்றம் ஒத்தைல கெடக்கும் போதுதான் தெரியும்" என்றார் பேச்சி.
"ம்மா அது அவங்களோட இஷ்டம், அவங்களால சமாளிக்க முடியும்னா அவங்க சமாளிச்சுப்பாங்க".
"சும்மா போடா, நீ வேற. எல்லாம் சம்பாதிக்கிறோம்ன்ற திமிரு".
படக்கென திரும்பி ப்ரகியை பார்த்தான். 'மலை இறக்கி வச்ருகவள மறுபடியும் சாமியாட வச்சுருவாங்க போலயிருக்கே' என நினைத்தான். ஆனால் அவள் இவனை கண்டு கொள்ளாமல் கர்ணனுக்கு ஊட்டி முடித்து அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் அவன் அப்பா மதிய உணவிற்கு வந்து பேச்சியை மேலும் பேசவிடாமல் தடுத்து இவனையும் காப்பாற்றினார்.
ப்ரகி அப்பாவை பார்த்து "வாங்க சம்பந்தி" என்றவர், "என்னமா ஃபிரெண்ட் வீட்டுக்கு போறன்றத ஒரு வார்த்த சொல்லிருக்க வேண்டாமா?" என்றார் ப்ரகியிடம்.
"இனி சொல்லிட்டு போறேன் மாமா" என்றாள் பதிலுக்கு ப்ரகி.
'நக்கலா சொல்லுறாளோ?' என திரும்பி ப்ரகியை பார்த்தான் தீர்த்து.
அவன் பார்ப்பான் என எதிர்பார்த்தவள் போல், உதட்டை ஒரு ஓரமாக சுளித்து காண்பித்து விட்டு சாப்பாட்டில் கவனமானாள். செல்லமாக முறைத்தவன் தந்தையிடம், "அம்மாவ கூட்டிட்டு போய் சாப்ட்டு வாங்கப்பா. நாங்கல்லாம் சாப்டாச்சு, உங்கட்ட முக்கியமா பேசணும்" என்க. யோசனையாக பார்த்தாலும் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு உடை மாற்றி வரச் சென்றார்.
ப்ரகி கர்ணனோடு ஹாலுக்கு வெளிவர, அதன் பின்பே பேச்சி டைனிங் டேபிள் சென்றார்.
படக்கென எழுந்த தீர்த்து, "நீங்க கர்ணாவோட பேசிட்டு இருங்க மாமா, நாங்க இப்போ வரோம்" என்றவன், ப்ரகியை ஒரு கையால் தள்ளிக்கொண்டு தங்கள் அறை சென்றான்.
"என்ன பிளான் பண்ணிருக்கீங்க நீங்க? அப்பா முகமே சரியில்ல, அவரோட பேசக்கூட விடாம கூப்டு வந்துட்டீங்க. என்ன பண்றதா இருக்கீங்க?" என அறைக்குள் நுழைந்ததும் கேள்வி கேட்டவளை இடுப்போடு இழுத்து அணைத்து அருகிலுழுத்தவன்....,
"நா கேட்குறதுக்கு நீ மொத பதில் சொல்லு. எங்க அம்மா அவ்ளோ பேசுறாங்க gun மாதிரி நிக்கிறியே எப்டி? எதுத்தும் பேசல, பயந்து நின்ன மாதிரியும் இல்ல, அப்ப நீ என்ன யோசிச்சுட்டு இருந்த? மைண்ட் வாய்ஸ்ல எங்க அம்மாவ திட்டிட்டிருந்தியா?".
"இப்ப உங்க அம்மாவ மைண்ட் வாய்ஸ்ல திட்டுனது தான் முக்கியமா? எங்க அப்பா அங்க கதிகலங்கி உக்காந்துருக்கார்னு சொல்லிட்டுருக்கேன். வழிய விடுங்க" என அவனை தள்ள முயல.
"சொல்லுடி. இந்த ஒரு வாரத்துல என்ன எவ்ளோ பாடுபடுத்துன. எங்க அம்மாட்ட மட்டும் அவ்ளோ பொறுமை எப்டி? எனக்கு தெரிஞ்சாகணும்".
"நா உண்மைய சொல்லிருவேன் வறுத்த படக் கூடாது".
"சரி, பரவால்ல சொல்லு".
"என்னோட பலவீனம் நீங்க. உங்கள நா ரொம்ப மிஸ் பண்ணேன், உங்கட்ட எனக்கு expectations உண்டு. உங்களோட நாலெடத்துக்கு போணும்., நல்ல நாள் பொழுதுக்கு சேந்து இருக்கணும், என் ஸ்கூல் லைஃப் காலேஜ் லைஃப் இப்ப வொர்க்கிங் லைஃப் இப்டி எல்லாம் ஷேர் பண்ணணும், உங்க ஜாப்ல உள்ள difficulties ah நீங்க share பண்ணணும், நா அதுக்கு suggestions சொல்லணும், நம்ம பையன் என் வைத்துல வந்ததுல இருந்து ஒவ்வொன்னயு உங்கட்ட சொல்லணும், அவனுக்கு எது வாங்குனாலும் செஞ்சாலும் நாம டிஸ்கஸ் பண்ணி செய்யணும்.... இப்டி நிறைய சொல்லிட்டே போலாம். ஆனா இதெல்லாத்தயும் 'என் வேலைல இது ஈசி இல்ல'ன்னு நீங்க ஈசியா முடிச்சிடுறீங்க" என கனவு காண்பவள் போல் சொல்லி கொண்டிருந்தவள் முகத்தையே நெருக்கத்தில் பார்த்தான்.
"எனக்கு தெரியும் இதெல்லாம் எல்லானாளும், வருஷம் முழுக்கன்றதுலா possible இல்லன்னு. ஆனா கிடைக்குற‌ டைம்ல செய்யலாம் இல்லயா? நீங்க நினைச்சா டைம் ஒதுக்கிருக்க முடியுமில்லையா? ஆனா நீங்க செய்யல... செய்யலனா போ நீ இல்லனா என்னால வாழ முடியாதா என்னன்னு என்னால உங்கள விட முடியாது. அப்ப எதாது செஞ்சு உங்கள என் பக்கம் பாக்க வைக்கணும்னு தான் கிளம்பி போனேன்" என இப்போது அவன் முகத்தைப் பார்த்தாள்.
"நீங்க கேட்ட கேள்விக்கு பதில் இப்ப சொல்லவா?"
"ம்ம்ம்" தலையசைத்தான்.
"ஆரம்பத்துல உங்கம்மா பேசுறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். எங்கப்பாவ வரவச்சு பேசுறதுலா கணக்குலயே வராத count'ல இதுவர நடந்துருச்சு. எங்களுக்கும் பழகிருச்சு. So.... நா என்ன சொல்ல வரேன்னா உங்கம்மாட்ட எனக்கு எந்த expectation uhm கிடையாது. பேசுறீங்களா பேசுங்க நீங்க இருந்தாலும் இல்லைனாலும், பேசுனாலும், பேசலனாலும் என்பாடு அதுபாட்டுக்கு நடக்கும்னு தோணும். அதனால தான் இத்தன நாள் அவங்க என்ன பேசுனாலும் கண்டுக்காம இருக்க முடிஞ்சது. இல்லனா உங்கட்டயும் சொல்லாம, ஷேர் பண்ண வேற ஆளும் இல்லாம இருந்ததுக்கு இந்நேரம் பையித்தியமாகிருக்க மாட்டேனா?".
"அவங்கள லூசு மாறி தனியா புலம்ப விட்டன்னு சொல்லு. ஒருவேள எங்கம்மாக்கு அந்த கடுப்பு தானோ உன் மேல?" அந்த நேர கணத்தை குறைக்கவே சிரித்துக் கொண்டு கேட்டான்.
முறைத்தவள், "இருந்தாலும் இருக்கும். அவங்க என்ன பேசுனாலும் அழ மாட்டேன். காதுல கேட்ட மாறியே காட்டிக்க மாட்டேன். போய் நின்னு‌ கெஞ்ச மாட்டேன். அதுலா என் வேலை எனக்கு குடுத்த தைரியம். அதும் இல்லனா financial ah, psychological ah affect ஆகி காணாம தான் போயிருப்பேன்" என அவளும் மெலிதான சிரிப்புடனே சொல்ல.
"சாரிடி" என இறுக்கிக் கட்டிக் கொண்டான்.
"விடுங்க, இப்டி என்னால உங்க அம்மாவ இங்கயே இருந்தாலும் manage பண்ண முடியும். ஆனா அதுக்கு நீங்க எங்கூட இருக்கணும். உங்கள தேடுற மனசத்தான் என்னால Console பண்ண முடியல" என்றவளும் அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.
இதை சொல்ல அவள் ஈகோ பார்க்கவில்லை, செல்ஃப் ரெஸ்பெக்ட் பார்க்கவில்லை, அவளுக்காக அவன் அவளை திருச்சி தேடி வந்ததோடு, கொடைக்கானல் அழைத்து சென்று சமாதானம் செய்ய முயற்சி செய்தானே அதுவே அவளும் இறங்கி வந்து தன் எதிர்பார்ப்பை சொல்ல போதுமானதாக இருந்தது.
அவள் முகம் நிமிர்த்தி, அழுத்தமாக உச்சியில் முத்தமிட்டவன், "சரி ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணு".
"எதுக்கு?".
"நீ உங்கப்பா வீட்ல போய் கொஞ்ச நாள் இரு. 3 months தான். அப்றம் நீயு கர்ணாவும் எங்கூடயே இருக்கலாம்" என்றான் அவள் தலையை இரு கைகளாலும் தாங்கி உதட்டை லேசாக உரசி.
"இப்ப எதுக்கு அங்க போ சொல்றீங்க? 3 மாசம் இந்த பக்கம் வரவே மாட்டீங்களா அப்போ?".
"வருவேனே ஆனா தங்குற மாறி வரமாட்டேன். இப்ப லீவ் போடாம பாத்தா மே லீவ்ல நீங்க வரப்போ கொஞ்சம் லீவ் எடுத்துக்குவேன். ஒருக்கானாலும் கிளம்பி போ ப்ரகி, அப்ப தான் இனி அவங்க வாய்ல 'போன்ற' அந்த வார்த்தை வராது".
"ஆனாலும்?" அவள் வெகுவாக யோசிக்க.
"எனக்கு உன்னமாறி வெளிப்படையா சொல்ல தெரில ப்ரகி. கர்ணாவ நீ conceive ஆகியிருந்தப்போ எனக்கு உன்ன‌ பாக்கணும் போல இருந்துச்சு தான். ஆனா வர முடியாது, ட்ரைனிங் ப்ரீயட்ல விட மாட்டாங்க. ஆனா உண்மைய சொல்லணும்னா என்னால manage பண்ண முடிஞ்சது, ரொம்ப எதிர்பாத்து பிடிச்சு கிடைச்ச வேலை அதனால தான்...."
"புரியுது புரியுது, என்ன விட அது தான் உங்க முத love'ன்னு புரியுது".
"நிஜமா அப்படி தான்டி நினைச்சுட்ருந்தேன், ஆனா உன்னோட‌ 1 வார‌ change ah கூட என்னால தாங்க முடில. வேலைல என்ன பிரச்சினனாலும் எனக்கு ரிலாக்ஸா உன்ட்ட ரெண்டு நாள் வந்துட்டு போனா போதும் fresh ஆகிடுவேன். ஆனா நீ இந்த 1 வாரமா என்னைய வேற எதயுமே சிந்திக்க விடாம பண்ணிட்டடி. இல்லாமலா மினிஸ்டர கூப்ட‌ போய்ட்டு உன்ட்ட பேசிட்ருப்பேன்? அதுக்கப்புறம் நீ நல்லார்க்க அந்த பிரச்சனை முடிஞ்சா தான் என்னால உங்கிட்ட வர‌ முடியும்னு தான் வேகமா முடிச்சேன். 4 நாள் லீவ் எடுத்துட்டு உன்ன தேடி வந்தேன்".
"நல்லா சமாளிக்றீங்க, வெளில போவமா? அப்பா பாவம்".
"ம்ம் நீ எல்லாம் எடுத்து வை. நா பேசிக்றேன்" என திரும்பியவன் கை பிடித்து நிறுத்தியவள்....
"இன்னொரு strong reason உங்கம்மா என்ன பண்ணாலும் அமைதியா போனதுக்கு இருக்கு அத சொல்லட்டா?" என கண்ணடித்தவளை.
"என்ன?" என சந்தேகமாக பார்த்தான் தீர்த்து.
"இல்ல, போலீஸ் வேலைல இருக்க நீங்களே என்னைய இம்புட்டு காய விடும்போது, மிலிட்டரி மாமனார் மாமியார எம்புட்டு காய விட்ருப்பாரு! அதான் அத்த ஓவர் stress'ல அப்டி இருக்காங்க போலன்னு நினச்சுப்பேன்" என சிரிக்க.
"போடி அரட்டை" என அவள் கன்னத்தை கடித்தவன், "சீக்கிரமா வா" என வெளியேறினான். சிரித்து கொண்டவள் பேக் செய்ய தயாரானாள்.
இவன் வரவும், "என்னடா பேசணும்ன?" என ஆரம்பித்தார் அவன் அப்பா.
கோகி குடும்பமாக வந்து சென்ற விஷயத்தை கூறியவன், "ப்ரகி அப்பாக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்னு அம்மா அவர வர‌ சொன்னாங்கன்னு கேளுங்க ப்பா" என நிறுத்த.
"இங்க பாரு நா அப்பவே காரணத்த சொல்லிட்டேன். ஏன் உன் பொண்டாட்டிக்கு இப்ப அதுல ரொம்ப மரியாத குறச்சலாமா?" என பேச்சி சொல்ல.
"உன் பொண்ணு மரியாதைக்காக தான நெலையா நின்னு அவள வரவச்ச?, கோகி அங்க நல்லா தான் இருக்கான்னு நா உனக்கு நிருபிச்சுட்டேன். இப்ப என் மாமனார வரவச்சு அவர் மரியாதையவு சேத்து வாங்கிருக்க நீ. உன் பொண்ணுனா மான ரோஷம் உண்டு அடுத்தவங்க பொண்ணுக்கு அதெல்லாம் இருக்க கூடாதோ?" என்றான் காட்டமாக.
"என்னடா உன் பொண்ணு உன் பொண்ணுங்ற? அப்ப அவ உனக்கு தங்கச்சி இல்லையா? உன் மாமனார் முன்னால என்னயு அவளயு விட்டு குடுத்து பேசி எங்கள யாரோ ஆக்குதல்ல?" என அழ தயாராக.
"இந்த பிரச்சினைல அவர இழுத்ததே நீ தான்ம்மா" என்றான்.
"விடுங்க மாப்ள எதுக்கு திரும்ப திரும்ப இதையே பேசிகிட்டு. நா அப்டியே கிளம்புறேன். நீங்க பொண்ண கூட்டிட்டு ஒரு நாள் தங்குற மாறி கட்டாயம் வாங்க" என எழுந்தே விட்டார் ப்ரகியின் அப்பா. அவருக்கு எப்போதடா இங்கிருந்து செல்வோம் என்று தான் இருந்தது.
"இருங்க சம்மந்தி வீடுன்னா அதும் மாமியார் மருமகன்னா பிரச்சனை இல்லாமலா? உக்காருங்க கொஞ்சம் இருந்து போலாம் " என்றார் அவன் அப்பா.
சரியாக ப்ரகி ரெண்டு பெட்டியோடு வெளிவர, எல்லோரும் அவளை திரும்பி பார்க்க.

தீர்த்து, "ப்ரகிய உங்களோட‌ கூட்டிட்டு போங்க மாமா, அவ கொஞ்ச நாள் அங்க இருக்கட்டும். நானே வந்து கூப்ட்டுக்றேன்" என்றவனை மூன்று பெரியவர்களும் அதிர்ந்து தான் பார்த்தனர்.
 

priya pandees

Moderator

அத்தியாயம் 25
"எதுக்குப்பா ப்ரகி பெட்டியோட வந்து நிக்கா?" என்றார் தீர்த்து அப்பா.
"காரணமா தான்ப்பா, அவ கொஞ்சநாள் அங்க அவ அப்பா வீட்ல இருக்கட்டும்.. நானே அப்றமா கூப்பிட்டுக்றேன்"
விறு விறுவென அவன் முன் வந்த பேச்சி, "நா ஒரு பேச்சுக்கு கூட இந்த வீட்ல பேசக்கூடாதா தீர்த்து? இதுக்கு முன்ன நா இப்டி சொல்லவே இல்லயா? இப்போ மட்டும் என்னவாம் உன் பொண்டாட்டிக்கு அவ்ளோ ரோசம் பொத்துக்கிட்டு வருது? எல்லாத்தயும் ப்ரச்சனையா ஆக்றாளே எதுக்கு?" என்றார்.
"ம்ம்ஹ்ம்..... நீ வேணும்னு பேசுறம்மா. இதுவர இதெல்லாம் என் கண்ணுல படல அதனால உங்களுக்கு அவள பேச ஈஸியா இருந்திருக்கலாம் இந்த‌ தடவ எல்லாமே பிரச்சனையா ஆகுதுன்னா!! அது‌ நீங்க பண்றது எல்லாமே..... என் கண்ணுல பட்டதுனால, நா நேரா தான் பேசுறேன். நீங்க தான் எல்லாத்துக்கும் அவளயே இழுத்து பேசுறீங்க. ஏன் எனக்கா பேசவே தெரியாதா? இதுக்கு முன்ன நா உங்கட்ட சண்ட போட்டதில்லையா? இதெல்லாம் உங்களுக்கு புரிஞ்சும் வேணும்னே பேசுறீங்க. இப்டி முடிவு பண்ணிட்டு பேசுற உங்கட்ட இனி என்ன பேசியும் யூஸ் இருக்க போறதில்ல. விடுங்க அவ இங்க இருக்கது தான் உங்களுக்கு புடிக்கலையே அதனால அவ போய்ட்டு வரட்டுமே?" என்றான் முடிவாக.
"நீதான் என்னதயும் பேசி தொலச்சியாடி , அன்னைக்கே சொன்னேன்ல தீர்த்து வந்தாலும் அவன்கிட்டயோ இல்ல மருமககிட்டயோ எதையும் பேசி வம்பிழுகாதன்னு சொன்னேன்ல நா என்ன சொன்னாலும் கேக்க கூடாதுன்னு முடிவோட இருக்கியா" என அவன் அப்பா உறும.
"என்னங்க நீங்களும் அவன மாறியே பேசுறீங்க. அவள அனுப்பணும்னு நினைச்சிருந்தா எப்பயோ அனுப்பிருக்க மாட்டேனா? எனக்கு அவ வீட்ட விட்டு போணுன்ற ஆசைலா இல்ல. கோகி மாப்பிளய சமாதான படுத்த மட்டுந்தான் இவ அப்பாவ வர வச்சு பேசுனேன். உண்மையாவே அவ போணும்னுலா நா நினைக்களங்க" என்றார் அவரும் பதிலுக்கு கோவமாக.
"அப்ப நீங்க அவள போ போன்னு சொன்னாலும் அவ இங்கேயே இருக்கணுமாம்மா" நடுவில் நின்று தீர்த்து.
"நீ ஏன்டாப்பா பொம்பளைங்க பிரச்னையில வார? நாங்க என்னதயும் பேசிக்கிறோம் சேந்துகிறோம் உனக்கு என்ன இதுல வேல. நீ ஏன் உள்ள வாரங்குறேன். உங்க அப்பா காதுக்கு எதயும் கொண்டு போறேனா நானு? 'ஏன்டா உன் பொண்டாட்டி இப்படி'ன்னு என்னைக்காவது கேட்ருப்பாரா?" பேச்சி அவர் பக்கம் steady ஆகவே வாதாடினார்.
தீர்த்து திரும்பி ப்ரகியை பார்க்க, அவள் நக்கலாக சிரித்தாள். "என்னப்பா இப்டி பேசுறாங்க?" அவன் அப்பாவிடம் எரிச்சலாக கேட்க.
"நீ ஒரே நாள்ல அவள திருத்த ட்ரை பண்ற. நடக்குற காரியமா அது? பல வருஷமா போராடிட்ருக்கேன் நானு. விடு அவளா திருத்திகிட்டா தான் உண்டு" என்றவர் ப்ரகியிடம், "உனக்கு உங்க அப்பா வீட்டுக்கு போணும்னா போயிட்டு வாம்மா. ஆனா இப்டி மொத்தமா போக வேணாம்" என்றதும், ப்ரகி மீண்டும் கணவனை பார்க்க, அவனும் பெருமூச்சோடு அவளை பதில் பார்வை பார்த்தான்.
"கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன் மாமா. அப்பாவும் ரொம்ப நாளா கூப்பிட்டிட்டு இருக்காங்க" என்றாள்.
"அப்ப சரி ம்மா போயிட்டு வா" என்றதும், தீர்த்து ஆட்டோ கூட்டி வர சென்றான். அதற்குள் ரெண்டு பெட்டியில் ஒன்றை அறையில் வைத்துவிட்டு ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, மாமியாரை பார்க்க, அவரோ அவள் வந்து சொல்லட்டும் என இவள் முகம் பார்க்க மறுத்து நிற்க.
"நீங்க அதிகமா தேடி தவிச்ச பேரனுக்கு வந்த நேரத்துல இருந்து சளி இருமல்னு நை நைன்னு இருக்கான் தெரியுமாத்தே? 2 வாரமா பாக்காத அவன இவ்ளோ நேரம் ஆகியும் தூக்கி கொஞ்சல நீங்க, இது தான் நீங்க. சும்மா வாய் வார்த்தையா எதயும் பேசாதீங்க... நானும் எல்லாத்துக்கும் பதில் பேச ஆரம்பிச்சா உங்களால தான் தாங்க முடியாது" என சிரித்து கொண்டே, "போலாம் ப்பா" என அப்பாவுடன் கிளம்பினாள்.
தீர்த்து அவர்களை அனுப்பிவிட்டு வீட்டினுள் வரவும், "நா என்னடா செஞ்சேன் இவள? ஏதோ அடிச்சு சூடு வச்சமாறியும்.. வேலையா வாங்கிட்டு சாப்பாடு போடாம கொடும படுத்துனமாறியும் பேசிட்டு போறா. அடுத்த வீட்டுக்கு வாழ போன பொண்ணுடா கோகி, அவளுக்கு போக்கிடம்ன்னு நம்மள விட்டா யாருடா இருக்கா? அவ அண்ணிமாறு ரெண்டுபேரும் வேல பாக்காங்க, சுயமா எல்லாம் செஞ்சுக்கிடுறாங்க. எல்லா இடத்துக்கும் தைரியமா போயிட்டு வராங்க. கல்யாண முடிஞ்ச கையோட பிள்ளையும் பெத்துக்கிட்டாங்க, நமக்கு மட்டும் எதுமே நடக்க மாட்டேங்கிதேன்னு ஒரு வெப்ராளத்துல சின்ன பிள்ள தனமா ஏதாவது செய்வா அவ்ளோதான். இந்த வீட்ல செல்லமா வளந்தவ இனி இங்க நமக்கு உரிமை இல்லாம போய்டுமோன்ற பயத்தில எனதயது பேசிட்டு போவா. வேற என்னடா பெருசா பண்ணிட்டா? என் புள்ளைக்கு இங்க உரிமைன்னு காட்ட தான் ரெண்டு மருமககிட்டயும் கொஞ்சம் கெடுபுடியா நடந்துப்பேன். அப்டியாடா நா கொடுமைக்கார மாமியாரா தெரிறேன்? போலீஸ் வேலைல இருக்கவன் தான நீ, உனக்கு தெரியாததா? நீ உன் பொண்டாட்டிக்கு அனுப்பிச்ச ரூபாய நா குடுக்காததுக்கு காரணம் அவ என்கிட்ட வந்து கேக்கட்டும்னு தான், ஏன் வயசுல மூத்தவ தான நானு என்கிட்ட கொஞ்சம் இறங்கி வர மாட்டலாமா அவ?, எங்க மாமியார்ட்ட நாங்க அப்டித்தான் இருந்தோம். என்னவோ போ இனி இந்த வீட்ல வாயே திறக்க கூடாது போல. ஊமையா இருந்துட்டா உன் பொண்டாட்டிக்கு சந்தோஷமா இருக்குமா?" என்றவாறு அழுகையோடு நிறுத்த.
"நீ இப்பவும் உன்னயு கோகியயும் நியாய படுதறியே தவிர, ப்ரகிய யோசிக்கலையே ம்மா. அவ இந்த வீட்ட, உன்ன நம்பி வந்த பொண்ணு ம்மா. அம்மா இல்லாத பொண்ண நீ எப்டி பாத்துக்கணும்? உங்கிட்ட வந்து கெஞ்சிட்டு நிக்கணும்னு நினச்சேன்ற. நீயே யோசி இதுக்கு முன்ன அவகிட்ட நீ நடந்துகிட்டதுலா சரியான்னு யோசி"
"அவளுக்கு என்னடா குறை இங்க. அவ இஷ்டம் போல தான இருக்கா. இந்த கால பிள்ளைங்களுக்கு பெரியவங்க எது சொன்னாலும் தப்பு அவங்க சுதந்திரமா இல்ல அப்டித்தான் சொல்ல தெரியும். சின்ன சின்ன விஷயத்துக்கலாம் பொறும இல்லாம கோவப்பட தெரியும் அம்புட்டு தான். அவ மாமியாருக்குன்னு என்ன செஞ்சு தவிச்சுட்டாளாம்?, எனக்கு ஆக்கி போட்டாளா? துணிமணி துவச்சி போட்டாளா? என்னாடா செஞ்சுட்டா? நா அவள மகமாறி பாக்க அவ என்ன அவ அம்மாக்கு செய்றமாறி எல்லாசெஞ்சாளா?".
"சரி நீதான் எல்லாவகையிலும் சரி அவ தப்புன்னு வச்சுக்கிவோம் நீ சின்ன புள்ளன்னு பொறுத்து போயேன்ம்மா. ஏன் மாட்டேங்கற?"
"ஆஹான்..... அவ இங்க வா‌ழ வந்திருக்காலா? இல்ல நா அவ வீட்டுக்கு வாழ போயிருக்கேனா?" என பேச்சி முறைக்கவும்.
வேடிக்கை பார்த்து நின்ற அப்பாவிடம் , "ப்பா என்னால முடில. நா ஈவினிங் நாகர்கோவில் கிளம்பறேன், அவ ஸ்கூட்டிய மட்டும் யார் மூலமாது அவ அப்பா வீட்டுக்கு குடுத்தனிப்பிருங்க நாளைக்கு அவளுக்கு ஸ்கூலுக்கு போணு".
அவர் "சரி ப்பா" என்கவும் அவர்கள் அறை சென்று படுத்து விட்டான்.
பேச்சி, "நா என்னங்க..." என ஆரம்பித்தவரிடம் , "போதும் நீ இவ்ளோ நேரம் பேசுனது கேட்டுட்டு தான் இருந்தேன். ஒன்னே ஒன்னு மட்டும் கேளு. நீ அந்த காலத்துல மருமகளா இருந்தப்போ இருந்த மாறி இந்த காலத்து மருமகள எதிர்பாக்கிற. அது இன்னும் 4 மருமக உனக்கு வந்தாலும் நடக்காது . புருஷன் பொண்டாட்டிய மட்டும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு குடுக்க சொல்ல கூடாது, மாமியார் மருமகளும் கொஞ்சம் விட்டு குடுக்கணும், இத்தன நாள் பொறுமையா இருந்த புள்ளய்ட்டயே உன்னால முடிலனா தப்பு உங்கிட்ட தான், யோசிச்சுக்கோ" என முடித்துக் கொண்டார்.
அதன் பின்னான நாட்கள் யாருக்கும் காத்திராமல் வேகமாக தான் சென்றது. 3 மாதமும் ஓடிவிட்டது. இதற்குள் ப்ரகி 2 முறை மாமியார் வீடு வந்து 10 நாள் வீதம் தங்கி, பிள்ளையை மட்டும் மாமியாரோடு சேர் விட்டவள், தான் ஒட்டாமல் இருந்துவிட்டு சென்றுவிட்டாள். அவரும் அவளை கண்டுகொள்ளவில்லை. அவள் வந்த நேரத்தில் தீர்த்துவும் வந்து சென்றிருந்தான். ப்ரகிக்கு அங்கும் அவள் அக்காவுடன் போராட்டம் தான். படுத்தி தான் எடுத்தாள். ஆனாலும் இங்கு மாமியாரிடம் அமைதியாக செல்லும் ப்ரகி, அக்காக்கு சற்றும் யோசிக்காமல் பதிலுக்கு பதில் கொடுத்து விடுவாள்,. என்பதால் மனசில் வைத்து வருந்தும் அளவுக்கு ப்ரகிக்கு அப்பா வீடு கஷ்டமாக இல்லை. அவர்கள் அப்பா மட்டுமே இரு பெண்களின் சண்டையின் போதும் மாட்டிக் கொண்டு முழித்தார்.
மற்றபடி கணவனுடனே செல்ல போகிறோம், இனி சூரிய இதயமும் அஸ்தமனமும் அவனுடன் தான் என்ற சந்தோஷமே அவளை பழைய விஷயங்களை மறக்க வைத்து சந்தோஷமாக சுற்றி வர வைத்தது.
தீர்த்து அவனுக்கான குவாடர்ஸ் சாவியை கையில் வாங்கியதுமே, வீட்டுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிவிட்டான். கர்ணனுக்கு பக்கத்திலேயே ஸ்கூல் விசாரித்துவிட்டான். எல்லாம் ரெடி செய்துவிட்டே அவன் அப்பாவிற்கு கூப்பிட்டு விஷயத்தை கூறினான்.
"ஏன்டா உனக்கு ட்ரான்ஸ்பர் வந்துட்டே இருக்கும்னு தான மருமகள இங்க இருக்க விட்ட. அப்றம் அவ வேல பாக்ற புள்ள? "
"இல்லப்பா எத்தன நாளைக்கு ஆளுக்கு ஒரு பக்கமாவே இருக்குறது? Maximum 3 டு 5 இயர்ஸ் ஒன்ஸ் தானே ட்ரான்ஸ்பர் வரும், பாத்துக்கிறேன். அவ வேல பிரைவேட் தானப்பா, அதுலாம் எங்க போனாலும் பாத்துக்கலாம்" என்றதும்.
"முடிவு பண்ணிட்ட? அம்மாவ யோசிட்டு இந்த முடிவா?".
"இல்லப்பா, எனக்கே தனியா இருக்க மாறி தோணுது ப்பா. அவ கூப்பிடறப்போ டக்ன்னு வந்து நிக்க கூட என் வேலனால முடில அதான்".
"சரிப்பா சந்தோஷம்".
அவர் சென்று அம்மாவிடம் விஷயத்தை சொல்லிவிடுவார் என்றே அவரிடம் கூறினான். மறுபடியும் அம்மாவிடம் பேசி புரிய வைக்க முடியுமென அவனுக்கு தோன்றவில்லை. பெற்றோரை தனித்துவிட இஷ்டமில்லை தான். இருந்தும் சேர்ந்திருந்தால் அது அவர்கள் இருவருக்குமே நன்மை இல்லை என்பதாலேயே இந்த முடிவு.
அவருக்கு அவர் செய்தது சரி என்றால் ப்ரகிக்கு அவள் பக்கம் சரி. இருவரும் முட்டிக்கொள்ளும் உறவில்லையே, அதனால் தள்ளி நின்றால் உறவாவது மிஞ்சும் என்றே இந்த முடிவிற்கு வந்திருந்தான்.
தீர்த்து அப்பா வீட்டிற்கு சென்றதும் விஷயத்தை பேச்சியிடம் சொல்லிவிட்டார், "எல்லாத்தையும் அனுப்பிட்டு தனியா சந்தோசமா இரு. கோகிய அப்டி சுயமா சிந்திக்க விடாம கைக்குலயே வச்சு அமுக்கி அவளுக்கு எல்லாத்தயும் கண்டு பயம் வர வச்சதே நீதான். வேலைக்கு போக பயம். சைக்கிள் ஓட்ட பயம். ஒரு கடைக்கு, ஏன் ஏடிஎம்க்கு போய் பணம் எடுத்திட்டு வர கூட பயப்படுதா. இன்னைக்கும் மாப்ள என்ன புள்ள வளத்திருக்கீங்கன்னு கேக்காம அவள சமாளிகாரு. அத புரிஞ்சு அவளுக்கு புத்திமதி சொல்றத‌ விட்டுட்டு, அவகூட சேர்ந்து இல்லாத வேலையெல்லாம் பாத்து மொத புள்ளய வெரட்டுன, இப்ப இவனையும். மூத்தவன் பக்கத்துல இருக்கான் ஆனா என்னைக்காது அவனையோ அவன் பிள்ளைகளையோ போய் பாக்கறியா? இல்ல!! இப்போ வீட்டோட இருந்த பேரனயும் அனுப்பிட்டு ஒத்தயில உக்காந்திரு".
"அப்போ அவளுங்க என்ன பண்ணாலும் நாத்தான் இறங்கி போணுமோ?"
"ஏன் இறங்கி போனா என்ன, வக்கணையா பேசும்போது உன் மருமகன்னு தான பேசுற, அத இறங்கி போறதுலயும் காட்டணும். இனி பேசி ஒண்ணுமில்ல, தீர்த்து எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு தான் வாரான்".
"எல்லாம் அவ தான் சொல்லி குடுத்திருப்பா. அவளுக்கு தனியா போணும்னு எண்ணம், இந்த மூத்தவளும் சொல்லி குடுத்திருப்பா, அதான் அப்ப நல்லவ மாறி நடிச்சு எல்லாத்தையும் பிரச்சனை ஆக்கி என் புள்ளயவு என்கிட்டருந்து பிரிச்சிட்டா".
தலையில் அடித்துக்கொண்டு சென்றுவிட்டார் தீர்த்துவின் அப்பா.
தீர்த்து..... ப்ரகி, கர்ணன் இருவரையும் நேராக அவன் மாமனார் வீடு சென்று அழைத்துக் கொண்டு தான் இங்கு அவன் வீட்டுக்கு வந்தான். கிளம்ப போவதால் மாமனாராயும், ப்ரகி அக்காவையும் கூட கூட்டிட்டு வந்தான், அதே போல் அண்ணன் குடும்பம், கோகி குடும்பத்தையும் கூட வரவைத்திருந்தான். அதனால் அவன் அம்மாவால் அதிகமாக பேச கூட முடியாமல் போனது.
மதிய உணவை முடித்துக்கொண்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டது தீர்த்து குடும்பம்.
இறுதி அத்தியாயம்
அதன் பின்னான தனி குடித்தன நாட்களை ரசித்து தான் வாழ்ந்தாள் ப்ரகி, மாமியாரிடமிருந்து தப்பிக்கும் எண்ணமில்லை அவளிடம், தீர்த்துவுடன் இருக்க வேண்டும் என்பதே பிரதானமாக பட, அவனுடன் வந்து விட்டாள்.
சொன்னதுபோல் மே மாதத்தில் 10 நாள் லீவ் எடுத்து கொண்டு கேரளா பக்க கடற்கரை பகுதிகளை சுற்றி காண்பித்தான். 5 வருடம் கழித்து இருவரும் 2ண்ட் ஹனிமூன் சென்று போட்ட ஆட்டத்தில், மனமும் சந்தோஷமா இருந்ததில் பலன் மறுமாதமே ப்ரகி கன்சிவ் ஆனாள். அதனால் ஜூனில் கர்ணனை மட்டுமே ஸ்கூலில் சேர்த்துவிட்டு, அவள் வீட்டோடு இருந்தாள். முதல் குழந்தைக்கும் சேர்த்து தான் தாங்கினான் தீர்த்து.
தனித்திருப்பதால் அடிக்கடி இருவருக்கும் சண்டையும் வரும், ஆனாலும் அதையும் உடனே பேசி தீர்த்துக்கொண்டனர். எப்படியேனும் அவளை தாஜா செய்ய கத்து கொண்டிருந்தான் தீர்த்து.
மாமியாரிடமும் வாரம் ஒரு முறை பேசி விடுகிறாள். வெளியேறும் வரை அவர்மேல் இருந்த கோவம், இப்போதுள்ள சந்தோஷ மனநிலையில் காணாமல் குறைந்து தான் விட்டது.
ஏதும், விஷேஷம் என்றால் ஊர் வந்து செல்வர். அதும் அவனால் முடியாத சமயங்களில், அவளின் கர்ப்பம் காரணமாக இல்லை என்றானது. அவரவர் குடும்பம் என்றே நன்நாட்களிலும் இருந்தனர்.
கோகியும் அதிகமாக அம்மா வீடு வருவதில்லை. மூர்த்தி விடமாட்டார், அவளுக்கும் வர வேண்டிய தேவை இல்லையே இப்போது, அம்மா பார்க்க மட்டுமே என எப்போதாவது வந்து செல்வாள். தனித்திருக்கும் பெரியவர்களுக்காக மூத்த மருமகள் தான் அவ்வபோது பிள்ளைகளை அனுப்பி வைக்கிறாள்.
பேச்சி இப்போது ரொம்பவே அமைதியாகிவிட்டார். உடன் இருக்கும் போது தேடாத பேரப் பிள்ளைகளை இப்போது அதிகமாக தான் தேடினார். ஆனால் அதையும் வெளி காட்டிக் கொள்வதில்லை. இப்படியாகத் தான் அவர்கள் நாட்கள் சென்றது. எப்போதாவது வருபவர்களிடமும் எதாது ஏழரையை இழுக்காவிட்டால் அவருக்கு நிம்மதி இருக்காது. அப்படியே பழகி விட்டார் பேச்சி.
ப்ரகி, தீர்த்துக்கு ட்ரான்ஸபெர் வரும் இடங்களுக்கெல்லாம் தன்னுடைய ஜாகையையும் மாற்றி கொள்ள பழகிக் கொண்டாள். பிள்ளைகளும் ஸ்கூல்/ஏரியா ப்ரண்ட்ஸ் மாறுவதால் முதலில் சிரம பட்டவர்கள் நாட்கள் செல்லச் செல்ல பழகிக்கொண்டனர்.
கூட்டு குடும்பமாக இருக்க ஆசைப்படுபவர்கள் எல்லா வகையிலும் விட்டு குடுத்தும் அனுசரித்து செல்லவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையேல் குடும்பம் சிதறி தான் போகும். தனித்திருப்பதே சிறந்தது என்ற எண்ணம் எளிதாக வந்து விடும்.
ஒவ்வொரு கணவன் மனைவிக்கு இடையில் நிசப்தமாய் ஒரு காதல் இருக்கும்..., இருக்கவும் வேண்டும். ப்ரகிக்கு தீர்த்து மேல் இருந்த காதலே பொறுமையாக அவனை அவள் கைக்குள் இழுத்து வைத்துக் கொள்ள உதவியது. தீர்த்துவிற்கு ப்ரகி மேல் உள்ள காதலே அவளின் சிறு மாறுதலயும் அவனைக் கவனிக்க வைத்து அதை சரி செய்து கொள்ள உதவியது. இருவரும் தங்களது சொல்லாத காதலை.... நிசப்தமாக உணர்ந்து பகிர்ந்து கொண்டனர். இதேபோல் அவர்கள் அவர்களின் நிசப்த காதலை எப்போதும் உணர்ந்து கலையாமல் காத்து கொள்ள வேண்டி விடை பெறுவோம்.

நன்றி.
 
Top