எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாலையிட்ட பந்தம் விமர்சனம்

NNK-100

Moderator

#நிலாகாலம்2​

#கௌரிவிமர்சனம்​

#மாலையிட்ட_பந்தம்…​

குடும்ப + காதல் கதை…​

சத்யாக்கு அப்பா அம்மா இல்ல, அவன் தம்பி வாஞ்சி தான் எல்லாமே….​

அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு செய்து கல்யாணம் நடக்க இருந்த நேரத்தில் கல்யாண பெண் காணோம்…..​

அதே மண்டபத்தில், மணபெண்ணின் சித்தப்பா பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறான் வாஞ்சி அண்ணனின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு….​

அந்த பெண் வாணி காலேஜ் போற பொண்ணு….​

வாணிக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை, இப்படி கல்யாணம் ஆனதும் என்ன செய்யனே தெரியல…..​

சத்யா & வாஞ்சி ரெண்டு பேரும் அவளுக்கு ரொம்ப சப்போட், அவ பெற்றோரை மீறி….​

முக்கியமா வாஞ்சி, அவனோட அண்ணிக்கு இல்ல இல்ல அம்மாக்கு….​

ஆமா, வாணியை அவன் அவனோட அம்மாவா தான் பார்க்கறான்…..​

அவங்க பாண்டிங், சத்யா வாணி ஓட ஊடல், காதல் அப்படினு அழகா நகருது கதை….​

சத்யா, சின்ன வயசில் இருந்தே சுமை தாக்கியதால் எப்பவும் அவன் கிட்ட ஒரு இறுக்கம் இருக்க தான் செய்து….​

ஆனாலும், வாஞ்சி மேல அவன் கொண்ட பாசம்🤩🤩🤩🤩🤩

வாஞ்சியும் தான்….​

ரொம்ப பொருமைசாலியும் கூட…..​

ஏன்னா?????​

கதையில் தெரியும்🤭🤭🤭🤭

வாணி, திடீர் கல்யாணம் ஆகிட்டு பயம் தான் இல்லைனு சொல்லல….​

ஆனா இவ சரியான முக்கா🙄🙄🙄🙄

அவங்க ரெண்டு பேரும் அவளோ அனுசரணையாக சொல்லியும் வாய்க்கு வந்தது எல்லாம் பேசும் போது😡😡😡😡😡

அப்பையும் கூட ரெண்டு பேரும் அவளை விட்டரல….முக்கியமா வாஞ்சி….​

வாஞ்சி, என்ன மனுஷன் டா நீனு….அவளோ பக்குவம் ஒரு ஒரு செயலிலும்…..​

அண்ணன் ஓட வாழ்க்கையை அழகா காப்பாத்தி கொடுத்துட்டான்…..​

ஆனா அவன் வாழ்க்கையில்.????​

எல்லாம் இந்த ரைட்டர் பண்ணின சதி🤨🤨🤨🤨🤨

ஊரில் ஒரு நல்லவன் இருக்க கூடாது, உடனே ஒரு பிசாசை அவன் கூட கோர்த்து விட்டுட்டாங்க🤧🤧🤧🤧

ஆதி, தட் பிசாசு….அந்த முக்கா வாணி ஓட தொங்கச்சி முழுசு….​

என்ன வாய், சுயநலம் 😳😳😳😳…​

கொஞ்சம் கூட இரக்கம் வரல இவ மேல கடைசி வரை( சாரி ரைட்டர், எனக்கு வரவே இல்ல)....​

எதார்த்தமான கதை நகர்ந்தது….​

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

நன்றி கௌரி டியர் ❤🙏

 

NNK-100

Moderator

#மாலையிட்ட பந்தம் கதையின் பெயர்..அண்ணன் தம்பி இவர்களின் திருமண வாழ்க்க்யை பற்றிய கதை..சத்யமூர்த்தக்கு ஏற்பாடு செய்த கல்யாணம் மணப்பெண் வெளியேற்றத்தில் சத்யாவாணி மணமகள் ஆகிறாள்..எதிர்பாராத திருமணம் படிப்பும் முடியாத நிலை தன் பெரியம்மா மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை இப்படியான விஷயத்துல இவ நிறைய தடுமாறா..ஆனா சத்ய மூர்த்தியின் தம்பியா வாஞ்சி கல்லூரி பேராசிரியர் அவனின் துணையோடு வாணி எப்படி தடுமாற்றத்தில் இருந்து வெளி வந்து வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறார் என்பது முதல் பாதி..அண்ணி கொழுந்தனின் பிணைப்பு இல்ல இல்ல தாய் மகனின் பிணைப்பை சொல்ல வார்த்தை இல்ல..ஆம் வாஞ்சி வயதில் பெரியவராக இருந்தாலும் வாணியை தன் தாயாக தான் பார்க்கிறான் அவளோடும் அதை பகிர்ந்து கொள்கிறான் அடுத்தபாகம் வாஞ்சி வாணியின் தங்கை ஆதியோடுகாதல் ஏற்பட்டு திருமணம் முடிகிறது..நல்லவனை ஆண்டவன் மட்டுமல்ல இந்த ஆசிரியரும் பழிவாங்கிட்டார்....ஆதி ரொம்ம்ம்ம்பபபபப நல்ல பெண் வாயை திறந்தா இனிமைமைமையாயானனனனன வார்த்தைகள் மட்டுமே வரும்..இவளோடான வாஞ்சியின் வாழ்க்கை எப்படி ஆனது என்பதற்கு கதை முடிகிறது..​

நிலவு பெண் சாரி டா என்னால ஆதியை மன்னிக்கவே முடியல..ஏற்றுக்கொள்ள முடியல..பொறுமைசாலி நல்லவனான வாஞ்சியை குடும்பத்தில உள்ளவங்க அவனுக்கு நல்லது செய்யறது சொல்லி கட்டாயப் படுத்தாது சொல்லி சொல்லி அவன் வாழ்க்கையில என்ன பண்ணனுமுனு இவங்க முடிவெடுக்கறாங்க..​

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா💐💐💐💐

நன்றி பிரியா ஸ்ரீகாந்த் டியர் ❤🙏

 

NNK-100

Moderator

மாலையிட்ட பந்தம் கதை அருமை. எதிர்பாராத திருமணம் வாணிக்கும் சத்யா வுக்கும் வாஞ்சி நடத்தி வைக்க வாணி படிக்கிற பெண் என்றாலும் அவளுக்கு ஓன்றும் தெரியவில்லை அன்பனவள் தான் ஆனால் குழந்தை குமாரி இரண்டு வகையில் சேர்த்தி அவள். சத்யா அக்காவைத்தான் விரும்பினான் என்று அவள் மனதில் இருக்கிறது. படிக்க வேண்டும் எண்ணம் வேறு படிச்சு தம்பி தங்கை படிக்க குடும்பத்துக்கு உதவ நினைத்து இருக்கிறாள். வாஞ்சி அவளிடம் அன்பாக பேசி எங்களுக்கு அம்மா அப்பா இல்லை நீங்கள் தான் எல்லாம் என்னை பார்த்து கொள்ள வேண்டும் வாஞ்சி கூப்பிட வேண்டும் என்று சொல்லுகிறான் படிக்கவும் செய்யுங்கள் பிரிவு வேண்டாம் என்று சிறு குழந்தை சொல்லுவது போல சொல்லுகிறான். சத்யா வாஞ்சி வாணி யை படிக்க அனுப்ப அவன் அவளுக்கு குழந்தை போல கவனிக்க அவள் பதிலுக்கு வாஞ்சி மேல் அன்பை பொழிய அவளுக்கு பிரச்சினை வரும் போது சத்யா வாஞ்சி நின்று போக்க செம. வாணி சில நேரங்களில் திட்டினேன் புரிந்து கொண்டதும் சூப்பர். வாஞ்சி உடல் பிரச்சினை வரும் போது டாக்டரிடம் காட்டி பிரச்சினை தீர்ப்பது சத்யாவையும் அவள் புரிந்து இணைவது செமடா. அவள் தொழில் கையில் எடுத்து பார்ப்பது சூப்பர். வாஞ்சி காதல் வந்து திருமணம் ஆக திரும்ப பிரச்சினை ஆரம்பம் சத்யா வாணி வாஞ்சி எப்படி கடக்கிறாங்க அவர்களின் உணர்வுகளை அழகாக யதார்த்தமாக கொண்டு போயிருக்கேங்கடா. ஆதியும் அடிபட்டு புரிந்து கொள்ள வைக்கிறது செமடா. வாஞ்சி சத்யா வாணி ஆதி சேர்ந்து குழந்தைகள் வந்து அப்பா அம்மா வை கூடவே வைத்து தம்பியை படிக்க அனுப்பி செம. சத்யா வாணி வாஞ்சி மூன்று பேருக்கு விருதோடு முடிப்பது செமடா. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்​

நன்றி கலை டியர் ❤❤🙏🙏

 

NNK-100

Moderator

சாந்தி டியர் என்னோட மாலையிட்ட பந்தம் கதைக்கு கொடுத்த ரிவ்யூ ரொம்ப நன்றி 🙏🙏

 
Last edited:

NNK-100

Moderator

#நிலாகாலம்_02​

#lufa_review​

#NNK_100​

மாலையிட்ட பந்தம்​

நல்ல குடும்ப நாவல். இரு ஜோடிகளின் வாழ்க்கை தான் கதை. என்ன பொருத்தவரை வாஞ்சி தான் நாயகன்.​

நாயகன் சத்தியமூர்த்தியின் திருமணத்தில் ஆரம்பிக்கிறது கதை. மணப்பெண் அவள் காதலனுடன் ஓடிப்போக மணப்பெண்ணின் சித்தப்பா மகளான சந்தியவாணியை அதிரடியாக மணப்பெண்ணாக மாற்றுகிறான் நாயகனின் தம்பி வாஞ்சி நாதன்.​

அதிரடி கல்யாணத்தில் ஒன்ற முடியாமல் தவித்த சத்யாவையும், வாணியையும் சமாளித்து அவர்களை ஒன்று சேர்க்க வாஞ்சி பட்ட பாடு சொல்லிமாலாது.​

வாணிக்கு எல்லாமுமாய் ஆனான் வாஞ்சி. அண்ணியை அவன் அன்னையாக நினைப்பது அருமை. கொலுந்தனை மகனாக நினைப்பதுடன் மாதா, பிதா, குரு, தெய்வமாக நினைக்குமளவுக்கு வாணியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான் வாஞ்சி. கட்டிய புருஷனை விட வாஞ்சியே அவளுக்கு அத்தனை சேவையும் செய்து பாதுக்காத்து, அவள் வாழ்வை சீராக்குறான்.​

வாஞ்சி தான் ஸ்கோர் பண்றான் சத்யமூர்த்தி மிக்சர் சாப்பிட போய்ட்டாரோ.. அவர் இருந்து செய்ய வேண்டியதெல்லாம் தம்பி செய்ய கடைசி ரொமாண்ஸ்க்கு மட்டும் ஆஜர் ஆகிட்டார்.​

அவர்கள் வாழ்வை சீராக்கிய பிறகு தனக்கான காதலை அவர்களிடம் வெளிப்படுத்தி வாணியின் தங்கை ஆதிரையை மணந்து தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டு, அவளால் படாத பாடுபடுகிறான்.​

ஆதிரை கணவனுக்காக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என எண்ணி அவனை படாதபாடு படுத்துகிறாள். தன் சொந்த அக்காவையும், புருஷனையும் சேர்த்து பேசி அவன் மொத்த கோபத்துக்கும் ஆளாகி, குடும்பம் பிரியும் வேலையில் திருந்துகிறாள்.​

ஆனால் வாஞ்சியோ அவளை ஏறெடுத்தும் பார்க்காமலிருக்க, வயிற்றில் இரு குழந்தைகளோடு கணவனின் அன்புக்காக ஏங்கி தவித்து பின் அவனின் காதலை மீட்டெடுக்கிறாள்.​

வாணியின் பெற்றோர் வாணிக்கு ஆதரவாக இருப்பது அருமை ஆனா ஈஸியா கொலை பண்ணலாம்னு சொல்றது கொஞ்சம் ஓவர்.​

கடைசியில் இரு ஜோடியும் தங்களின் குழந்தைகளுடனும், வாணியின் பெற்றோருடனும் சந்தோஷமாக நிறைவு பெறுகிறது கதை. டிவிஸ்ட் சஸ்பென்ஸ் எல்லாம் இல்லாமல் ஒரு அழகான குடும்ப கதை. சில இடங்கள் அழுத்தமாக அழகாக இருந்தது.​

வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே💐💐

மிக்க நன்றி LUFA டியர் 💐💐🙏🙏❤❤​

 

NNK-100

Moderator

Nnk100​

மாலையிட்ட பந்தம்​

சத்தியமூர்த்தி சத்தியவாணி ரெண்டு பேருக்கும் எதிர்பாராம நடக்குற திருமணத்துல ஆரம்பிக்குது கதை. நடத்தி வைக்கும் வாஞ்சி தான் கதை முழுக்க ஹீரோவா தெரிகிறான். அம்மா இல்லாமல் ஏங்கும் அவன் அண்ணியை அம்மாவாக பார்க்கும் விதம் அழகு, ஆனா ரொம்ப அதிகமா இருந்தது புருஷன் பொண்டாட்டி conversation ah விட அவங்க conversation தான் அதிகமா இருந்த feel.​

ஆதிரை enter ஆகி வாஞ்சி வாழ்க்கையில பல போராட்டங்கள் face பண்ணுறான். அண்ணன் தம்பி பிரிவு வரை போய், அதை அவங்க மறுபடியும் சரி பண்ணிக்குற விதமு நல்லா இருந்தது.​

இயல்பான குடும்ப கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே​

மிக்க நன்றி பிரியா பாண்டீஸ் டியர் ❤❤💐💐🙏🙏

 

NNK-100

Moderator

#Sowmi_Review​

#மாலையிட்ட_பந்தம்​

#Nnk100​

எதிர்பாராத திருமணத்திலா இணைந்த சத்யமூர்த்தி- சத்யவாணி. காலேஜ் 2வது வருஷம் படிக்கிற சத்யவாணிக்கு கனவுகள் ஏராளம் ஆனா அது எல்லாம் அவளோட திருமணத்தால் தடைப்பட்டு நிக்க அவளோட கோபத்தை ஆதங்கத்தை எல்லாம் கணவன் மேலயும் கணவோணோட தம்பி மேலயும் இறக்குற.​

நிறைய இடத்துல அவளோட முதிர்ச்சி இல்லா பேச்சு எரிச்சலாச்சே. அவளை அவ போக்குலயே போய் அண்ணன் தம்பி எப்புடி சமாளிச்சாங்கன்றது தான் கதையே.​

இடையில சத்யவாணியோட தங்கை ஆதிரைக்கும் வாஞ்சிக்கும் கல்யாணம் நடக்குது. வாஞ்சி மனைவி தன்னோட அண்ணி மாதிரி இருப்பான்னு அவ நெனைக்க ஆதிரை அப்பிடி இல்லை அவ கொஞ்சம் சுயநலமா இருக்கா அதனால குடும்பம் உடைபட அதை எல்லாம் எப்புடி அண்ணன் தம்பி சரி செஞ்சாங்க? எப்புடி வாழ்க்கையில வெற்றி பெற்றாங்கன்னு சொல்லியிருக்காங்க.​

அதே சமயம் வாஞ்சி - சத்யவாணி பாசம் நல்லா இருந்தாலும் கதை முழுக்க அது தான் வந்தது. இதனால ஹீரோ - ஹீரோயினோட வாழ்க்கை அவுங்களோட கான்வெர்சேஷன் எல்லாம் அதிகமா தெரியலை.​

தென் வாஞ்சி நல்ல கணவனாக ஆதிரைக்கு இல்லாத பீல் எனக்கு. அவனா ஆதிரைய மலர் மாதிரி இருப்பான்னு நெனைச்சுக்கிட்டா அவ எப்புடி பொறுப்பாவா? இவன் அவளுக்கு எங்கயும் முக்கியத்துவம் கொடுக்காத போது அவ மேல கோபப்படுறதுக்கான ரைட்ஷ் இல்லை இவனுக்கு​

.​

இன்னும் கொஞ்சமே ஹீரோ ஹீரோயினுக்கு முக்கியத்துவமும் கொடுத்திருக்கலாம்.​

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்#Sowmi_Review​

#மாலையிட்ட_பந்தம்​

#Nnk100​

எதிர்பாராத திருமணத்திலா இணைந்த சத்யமூர்த்தி- சத்யவாணி. காலேஜ் 2வது வருஷம் படிக்கிற சத்யவாணிக்கு கனவுகள் ஏராளம் ஆனா அது எல்லாம் அவளோட திருமணத்தால் தடைப்பட்டு நிக்க அவளோட கோபத்தை ஆதங்கத்தை எல்லாம் கணவன் மேலயும் கணவோணோட தம்பி மேலயும் இறக்குற.​

நிறைய இடத்துல அவளோட முதிர்ச்சி இல்லா பேச்சு எரிச்சலாச்சே. அவளை அவ போக்குலயே போய் அண்ணன் தம்பி எப்புடி சமாளிச்சாங்கன்றது தான் கதையே.​

இடையில சத்யவாணியோட தங்கை ஆதிரைக்கும் வாஞ்சிக்கும் கல்யாணம் நடக்குது. வாஞ்சி மனைவி தன்னோட அண்ணி மாதிரி இருப்பான்னு அவ நெனைக்க ஆதிரை அப்பிடி இல்லை அவ கொஞ்சம் சுயநலமா இருக்கா அதனால குடும்பம் உடைபட அதை எல்லாம் எப்புடி அண்ணன் தம்பி சரி செஞ்சாங்க? எப்புடி வாழ்க்கையில வெற்றி பெற்றாங்கன்னு சொல்லியிருக்காங்க.​

அதே சமயம் வாஞ்சி - சத்யவாணி பாசம் நல்லா இருந்தாலும் கதை முழுக்க அது தான் வந்தது. இதனால ஹீரோ - ஹீரோயினோட வாழ்க்கை அவுங்களோட கான்வெர்சேஷன் எல்லாம் அதிகமா தெரியலை.​

தென் வாஞ்சி நல்ல கணவனாக ஆதிரைக்கு இல்லாத பீல் எனக்கு. அவனா ஆதிரைய மலர் மாதிரி இருப்பான்னு நெனைச்சுக்கிட்டா அவ எப்புடி பொறுப்பாவா? இவன் அவளுக்கு எங்கயும் முக்கியத்துவம் கொடுக்காத போது அவ மேல கோபப்படுறதுக்கான ரைட்ஷ் இல்லை இவனுக்கு​

.​

இன்னும் கொஞ்சமே ஹீரோ ஹீரோயினுக்கு முக்கியத்துவமும் கொடுத்திருக்கலாம்.​

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்​


மிக்க நன்றி சௌந்தர்யா செழியன் டியர் 💐💐❤❤​

 

NNK-100

Moderator

ஹாய் டியர்ஸ் இது என்னோட இரண்டாம் ரிவ்யூ…. நிறைய வேலைகளுக்கு இடையில் படிச்ச கதைகளுக்கு முடிஞ்ச அளவு எனக்கு தோன்றியதை சொல்றேன்...​

#NNK100​

#மாலையிட்ட_பந்தம்​

கதைக்கு ஏற்ற தலைப்பு… இந்த தலைப்புக்கே ஆசிரியரை பாராட்டலாம்… கல்யாணமாகி நமக்கு உறவுகளாகும் பந்தங்களை பற்றி ரொம்பவே அழுத்தமாவும் ஆழமாகவும் சொல்லி இருக்காங்க…​

ஆங்காங்கே கொஞ்சம் கண் கலங்கவும் வைச்சி இருக்காங்க கோவப்படவும் வைச்சி இருங்காங்க… இந்த ரைட்டார்… பிஞ்சி மனசு இதையெல்லாம் படிக்க படிக்க யாரும்மா நீங்க… ரியலா ஒரு குடும்பத்தை அப்படியே கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டிங்களேன்னு இருந்துச்சி….​

ஒரு குடும்பத்தில் இருக்கும் எல்லாருமே நல்லவங்களா இருக்க மாட்டங்க அதே சமயம் கெட்டவங்களாகவும் இருக்க மாட்டாங்க எல்லாமே கலந்த கலவைதான்… சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே அவங்க குண இயல்புகளை மாற்றும்… அப்படி சத்தியமூர்த்தியின் குடும்பத்தில் இருப்பவர்களை பற்றி தான் ஆசிரியர் அழகா சொல்லி இருக்காங்க…​

எதிர்பாராத விதமா சத்தியமூர்த்திக்கும் சத்தியவாணிக்கும் வாஞ்சியின் முயற்சியால் திருமணம் நடக்கிறது… ஆரம்பத்தில் கெஞ்சம் வாணி அசட்டு தனமா பேசினாலும் அதை சத்தியமூர்த்தி எடுத்துக்கிட்ட விதமும், வஞ்சியின் அம்மா பாசமும் அவளை மாற்றுகிறது.​

அண்ணி கொழுந்தன் என்பதை விட அம்மா மகன் போல அவர்களோட பந்தம் வளர்ந்து வருது… மாதவிடாய் காலத்தில் மகன் அன்னையாய் மாறிய தருணம்… ரொம்பவே மனசை டச் பண்ணிடுச்சி… சோ ஸீவீட்… வாஞ்சி… அந்த இடம் உன்னை ரொம்பவே பிடிக்க வைச்சிடுச்சி…​

இதற்கிடையில் சத்தியமூர்த்தி தன் மீது அவன் வைத்த நம்பிக்கையிலும் அவன் நடத்து கொள்ளும் விதத்திலும் வாணியின் மனசுல நீங்காத இடத்தை பிடிச்சி ஒரு கணவனா அவளை அன்போட அரவணைத்து கொள்கிறான்…​

இதுக்கு அப்புறம் தான் டுவிஸ்டே….​

இந்த ஆதிரை கதாபாத்திரம் தான் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சி நெகட்டிவ் கேரக்டர் தான்​

வாணிக்கிட்ட அவ நடந்தகிட்ட விதம் வாஞ்சிக் கிட்ட அவ நடந்துக்கொண்ட முறை சத்தியமூர்த்திக் கிட்ட அவ பேசிய பேச்சின்னு எனக்கு அந்த கேரக்டர் மேல ஆரம்பத்தில் கோபமும் ஆதங்கமும் இருந்தாலும் அவளோட மனநிலமையை புரிஞ்சிக்க முடிஞ்சிடுது… வாஞ்சியின் ஒவ்வொரு செயலும் அவளை வேறு விதமா மாத்திடுச்சி..…அதுதான் உண்மையும் கூட,​

எல்லாரும் புத்தரும் காந்தியும் இல்லையே நூறு சதவீதம் யாருமே நல்லவனும் கிடையாது கெட்டவனும் கிடையாது… என்ன ஆதிரைக்குள்ள இருந்த கெட்டவ கொஞ்சம் அதிகமாகவே வெளியே தெரிஞ்சிட்டா… அது தவறுன்னு தெரிஞ்ச பிறகு அவள் படும் வேதனைகளில் கொஞ்சம் மனசு கணத்துடுச்சி… கண்ணு லைட்டா வேர்த்துடுச்சி…. ரைட்டரே…. வாணிக்கிட்ட ஆதிரைய இந்த மாதிரி நடக்கும் பேதும் அப்படித்தான் இருந்துச்சி… இது பிஞ்சு மனசு ரைட்டர்ம்மா இது மாதிரி பாரத்தை எல்லாம் தாங்காது…​

கடைசியில் அதுக்கு ஒரு நியாயம் செய்துட்டாங்க ஆசிரியர்… கதையில் மட்டும் கவனத்தை பதிக்காமல்​

நிறைய சமூக கருத்துக்களும் இருந்தது… அதுல டாக்டர் மாதவிடாய் பற்றி வாஞ்சிக்கிட்ட பேசுற விதமும் உடல் சத்துக்கு அவங்க கூறிய அறிவுறைகளும் சத்தியமூர்த்திக் கிட்ட டாக்டர் பேசுற விஷயங்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது… அது அவசியமும் கூட​

இறுதி கட்டத்துல என்ன நடக்குமோன்னு தவிப்பா இருந்த நேரத்தில் சத்தியமூரத்தி ஆதிரையை மகளா நினைச்சி தம்பிக்கு அறிவுரை சொன்ன இடங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருந்தது.. டைலாக்ஸ் எல்லாம் ரொம்பவே அருமையா இருந்தது… 👏👏👏👏👏👏👏

வாழ்த்துக்கள் ரைட்டாரே….♥️♥️♥️♥️ குடும்ப அரசியலை சும்மா வெலுத்து வாங்கிட்டிங்க போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர்….🎉🎉🎉

மிக்க நன்றி NNK 72 (நீங்க யாருனு தெரியலை தெரிஞ்ச உடனே பேசுவோம்) 💐💐❤❤​

 

NNK-100

Moderator

#நறுமுகைநிலாக்காலம்_02​

#NNK100​

#மாலையிட்டபந்தம்​

நறுமுகை தளத்தின் போட்டி கதைகள்..​

சத்தியமூர்த்தி வாஞ்சிநாதன் தாய் தந்தையர் இல்லாமல் அண்ணன் தம்பிகள் ஒருவருக்கு ஒருவர் துணையாக அன்பாவும் பாசமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.. அண்ணனுக்கு திருமணம் முடித்து வைக்க நினைக்கும் வாஞ்சிநாதன் அதற்கான ஏற்பாடுகளை செய்ய திருமணத்தன்று தன் மனம் விரும்பியவனுடன் சென்று விடுகிறாள் மணமகள்.. திருமணத்திற்கு வரும் மணமகளின் சித்தப்பா மகள் சத்தியவாணி திடீர் மணமகள் ஆகிறாள்.. பெற்றவர்களுக்காக ஒப்புக்கொண்டாலும் மனம் நிறைய கோபம் அவளுக்கு படிப்பில் சிறந்து விளங்குபவள் படிக்க வேண்டும் தன் குடும்பத்தை உயர்த்த வேண்டும் பொருளாதாரத்தில் என்ற லட்சியம் கொண்டவள்.. இவர்களின் வசதி வாய்ப்பைக் கண்டதாலும் திடீர் மணமகள் ஆனதாலும் ஆரம்பத்தில் கடுகாக பொறிபவள் அண்ணன் தம்பி இருவரும் இவள் மேல் கொண்டுள்ள அக்கறையால் போக போக அவர்களின் மீது இவளுக்கும் பாசம் ஏற்படுகிறது.. தன்னவனின் மீது காதலும்.. வாஞ்சிநாதன் தன் அண்ணியை அன்னையின் ஸ்தானத்தில் வைத்திருக்கிறான்.. இவனுக்கு மனைவியாகிறாள் ஆதிரை.. சத்தியவாணியின் தங்கை சத்தியமூர்த்திக்கு ஊரில் கிடைக்கும் மரியாதை தன் கணவனுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்து பிரச்சனையை ஏற்படுத்துகிறாள் குடும்பத்தில்.. இவளால் குடும்பம் உடையும் நிலை ஏற்படுகிறது.. சத்தியவாணி மற்றும் ஆதிரையின் பெற்றோர் யாருக்கு ஆதரவாக இருந்தார்கள்... என்ன ஆனது இவர்களின் வாழ்வு என்பது கதையில்.. சுவாரஸ்யமாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏

Good luck 🥰🌹💐

மிக்க நன்றி ஜீனத் அக்கா 🙏🙏🙏🙏

 

NNK-100

Moderator

#Tamizhiniya_Review​

#Narumugai_nila_Competition​

#NNK_100​

#மாலையிட்ட_பந்தம்​

தமிழினியாவின் பார்வையில் மாலையிட்ட பந்தம்❤️

கதையை நேரத்திற்குள் முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.😻

எம்மா ரைட்டரே, நான் ரொம்ப ரசிச்சு படிச்சேன்மா இந்த கதைய. என்னத்த சொல்ல? குடும்ப காதல் கதை. ❤️🥰

சத்யமூர்த்தி – சத்யவாணி❤️

வாஞ்சிநாதன் - ஆதிரை❤️

ரொம்ப அருமையான கதை. குடும்ப நாவல் கதைகளை விரும்புவோர் இந்த கதையை நிச்சயம் படிக்கலாம். 😎

சந்தர்ப சூழ்நிலையால சத்யாவ கல்யாணம் செய்துக்குற சத்யமூர்த்தி. பெற்றவர்களை இழந்த சத்யமூர்த்திக்கு தன் தம்பி வாஞ்சிதான் அனைத்தும். அண்ணன் தம்பி உறவ இவ்ளோ அழகா அமைத்திருந்த விதம் ரொம்ப அருமை மா. 🥰

அதுவும் வாஞ்சி மாதிரி கொழுந்தனார் கிடைக்க கொடுத்து வச்சி இருக்கணும்னு சொல்லுவாங்க இல்லையா, அப்டி இருந்தது எனக்கு கதை வாசிக்குறப்போ. 😁😁

ஒரே நைட்ல கதைய படிச்சு முடிச்சேன். எடுத்து கீழ என்னால வைக்க முடியல. அந்த அளவுக்கு என்னை ஈர்த்தது. ❤️

அப்ரோம் சத்யவாணி எனக்கு பிடிச்சி இருந்த விசயம், நமக்கு வேணும்னா நாம அதுக்காக கண்டிப்பா போரடணும். என்னதான் சத்யமூர்த்தியும் வாஞ்சியும் அவளோட விருப்பத்துக்கு ஒத்துக்கிட்டாலும் அத முதல்ல வெளிய சொல்லி எனக்கு இதுதான் வேணும்னு கேட்ட விதம் பிடிச்சு இருந்தது. அப்பப்போ என்னடா இவ கொஞ்சம் அவங்க பாய்ண்ட் ஆஃப் வியூ யோசிக்காம பேசுறான்னு கடுப்பும் இருந்தது. 😅

பட், மனிதன் மனது எத்தகைய குரங்கு மனது அப்டிங்குறத அழகா புரிய வச்சி இருக்கீங்க. இதுல ஆதிரை பேசுற பேச்சுக்கள் உண்மையாலுமே நடைமுறை வாழ்க்கைல இந்த மாதிரி விசயங்கள் இன்னமும் நடக்கத்தான் செய்யுது. ஆதிரை சொல்ல வந்த விசயம் சரி, ஆனா கேட்ட விதம் தவறு. அவளுக்கு புரியுற விதமா வாஞ்சியும் எடுத்து சொல்லி இருக்கலாம்னு தோணுச்சு. 😌

இறுதியில அவங்க எல்லாரும் என்ன மாதிரி முடிவு எடுக்குறாங்க? சத்யமூர்த்தி ஜோடியும் வாஞ்சி ஜோடியும் சேருவாங்களா மாட்டாங்களா? என்ன தான் நடக்கும்னு ஒரு எதிர்பார்ப்போட கதையின் நகர்வு இருந்தது. 😁

ஆதிரைதான் வாஞ்சிக்குன்னு வசனம் வந்தப்போவே இதுதான் நடக்கும்னு ஒரு கெஸ்ஸிங்க் இருந்தது. ❤️

மாலையிட்ட பந்தம் - பந்தத்தின் உன்னதம்😍

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.👏

நன்றி💜

நன்றி தமிழினியா டியர் 💐💐🙏🙏❤❤​

 

NNK-100

Moderator

#NNK_100​

#மாலையிட்ட_பந்தம்​

குடும்ப கலாட்டா​

நான் பொங்கல் வைக்க நினைச்ச கதைல இதுவும் ஒண்ணுங்கோ. ஏராள கனவுகளோடு திருமணத்துக்குள்ள வர்ற சத்தியவாணி, சத்யநாதன் ஹீரோ ஆஸ் யூஸ்வல் குடும்பத்துல மண்டையாற்ற ஹீரோ. அதேபோல சத்தியவாணி தங்கச்சி ஆதிரையை வாஞ்சிநாதன் ஹீரோ தம்பி கூட திடீர் கல்யாணம் நடக்குது.. இதுல என்ன விஷயம்னா அதிக ஸ்கோர் பண்றது ஹீரோ ஹீரோயின் இல்ல அண்ணியும் கொழுந்தனும். எஸ் வாஞ்சிநாதன் தான் அண்ணிக்கு பரதன் ரோல் பண்றான்.. அந்த பாச பிடிப்பினை ஒற்றுமை எல்லாம் நல்லா இருந்துச்சு ஆனால் மனைவிய மதிக்க வேண்டிய இடத்தில் மதிக்கல அதே நேரம் ஒரு ஆண் மனைவியை எந்த இடத்தில் வைக்கனும் மத்த உறவுகளை எந்த இடத்தில் வைக்கனும்னு தெரிஞ்சிருக்கணும்.. இந்த வாஞ்சி அண்ணிக்கு கொடுத்த முதல் உரிமையை மனைவிக்கு கொடுக்கலங்குறது என்னோட எண்ணம்.. ஆதிரை சுயநலவாதியாக இருக்கலாம் ஆனால் மனைவியா பாவப்பட்டவ அதே சத்தியா அண்ணியா ரொம்ப பெருமைக்குரியவ. நல்ல எழுத்து. நல்ல கான்ரவசி கிரேட் பண்ணி இருக்காங்க.. அதே மாதிரி படிக்கிறவங்களுக்கு ஒரு ஹைப்ப ரைடர் கிரியேட் பண்ணி இருக்காங்கன்னு சொன்னா அது மிகை இல்ல நல்ல. ஃபுளோல எழுதி முடிச்சு இருக்காங்க வாழ்த்துக்கள் ரைட்டரே..​

நன்றி ப்ரஷா அக்கா 💐💐💐😘😘😘❤❤​

 

NNK-100

Moderator

#ஸ்ரீராஜ்_விமர்சனங்கள்​

நறுமுகையின் நிலாகாலம் 02 குறுநாவல் போட்டி - 2024​

அன்பு தோழமைக்கு,​

NNK 100 - மாலையிட்ட பந்தம்​

சதம் எண் பெற்ற கதை. ஆனால் கதையில் யாவரும் சதம் பெற்றனரா அல்ல பூஜ்ஜியம் பெற்றனரா? என்பது கதையின் இறுதி கூறுகிறது.​

இங்கு நாயகன் நாயகி யார் என குறிப்பிட எனக்கே குழப்பமாக உள்ளதால் கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள் என்ற பெயரில் கூறுகிறேன்.​

அவர்கள்: சத்ய மூர்த்தி, சத்ய வாணி, வாஞ்சி நாதன், ஆதிரை.​

மண பெண் மாறி எதிர்பாரா திருமணம் சத்ய மூர்த்தி வாழ்வில்.​

கல்லூரி படிக்கும் பெண்ணை உற்றம் சேர்ந்து மணமகனின் மணமகளாய் மாற்றிட..​

அப்பெண்ணோ படிப்பின் மீது அலாதி ஆசை இருந்தும் பெரியோர் இடத்தில் தன் பேச்சு அவ்வளவாக எடுப்படாது மணமகளாகிட நின்றாள்.​

கல்யாணமே சிக்கல் வாழ்க்கை மட்டும் சிலிர்ப்பாகவா இருக்கும்.​

அவர்கள் வாழ்வும் அது போல தான்..​

குடும்பத்திற்காக உழைத்தவன் கடினமாக இருக்க..​

அக்குடும்பத்தில் இருக்கும் இன்னொருவன் மென்மையாய் இருந்தான்.​

கணவன் தாங்கினானோ இல்லையோ ஆனால் கொழுந்தன் தாங்கினான் தன் அண்ணியை..​

வாஞ்சிநாதனின் வஞ்சனை இல்லாத அன்பை முதலில் ஏற்க தயங்கினாலும் பின்னாளில் மனதால் ஏற்கிறாள் சத்ய வாணி.​

இவர்களின் பந்தம் அண்ணி கொழுந்தன் முறை மாறி தாய் மகனாய் பரிமளிக்கிறது.​

அண்ணியின் தடுமாற்றத்தில் மகனான கொழுந்தன் துணை இருக்க அவளின் ஒவ்வொரு தடுமாற்றமும் மாற்றமாய் மாறி முழுதாய் உருவம் கொள்கிறது.​

அவள் கடந்து தேறி முழுதாய் நிற்க..​

அதன் ஊடே தன் வாழ்வை கவனிக்கிறான் வாஞ்சி.​

கல்லூரி பேராசிரியர் காதலில் விழ.. அவர் காதலும் கைக்கூடியது.​

ஆனால் கைக்கூடிய காதல் கரம் கோர்த்ததா? கரம் விலக்கியதா?​

கரமே விலக்கப்பட்டது காரணம் அவனவள் என்கிற மனைவி ஆதிரையின் வரம்பு மீறின செயல்களும் சொற்களுமே.​

புரிதலான அன்பை புரிந்தமின்மையால் சுயநலத்தால் ஏட்டி உதைக்க அது அவளுக்கே கர்மாவாக திரும்ப அடித்தது வாஞ்சியின் நல்மனது உடைந்து கோவ முகம் கண்டு..​

பெண்ணவள் புறக்கனிக்கப்பட..​

வலிக்க வலிக்க உணர்த்தப்பட்டாள் அவளின் வீரிய செயல் கணவனால்..​

குடும்பம் என்ற பந்தத்தில் தனியாக நிற்க நேரிடின் பெரியோர் சொல்லால் வாஞ்சியின் புரிந்துணர்வால் வலிக்க கற்று கொடுத்த பாடத்தால் ஆதிரையின் செயல்கள் வீரியம் குறைந்து சுயநலம் துறந்து அன்பால் நின்று அவனை கைப்பற்றினால் பெண்..​

இரு தம்பதியர்களும் தங்களுக்குள் உலாவும் பிரச்சினைகளை சீர் செய்து தங்கள் வாழ்வில் இல்லறம் காத்து நின்றதே மாலையிட்ட பந்தம்.​

கதையில் வாஞ்சிநாதனே உயர்ந்து நின்றது போல் தோற்றமளித்தது. மற்றவர்கள் ஏனோ கதாபாத்திரங்களாக போய் விட்டனர் என்பது என் எண்ணமாக இருக்கிறது.​

குடும்ப காதல் கதை கொடுத்த ஆசிரியருக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.​

அன்புடன்​

ஸ்ரீராஜ்..​

நாள்: 13 June 2024.​

மிக்க நன்றி ஸ்ரீராஜ் டியர் 💐💐🙏🙏❤❤​

 
Top