எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூநிஷா வின் " சாய்ந்தேனே நானும் மெல்ல! " - கதை திரி

Status
Not open for further replies.

Sirajunisha

Moderator
ஹலோ டியர்ஸ்,
மீண்டும் அடுத்த கதையோடு உங்களை வந்து விட்டேன். சாய்ந்தேனே நானும் மெல்ல.. நாயகனும் நாயகியும் எப்படி காதலின் பக்கம் சாய்ந்தார்கள் என்பதை என்னுடைய பாணியில் சொல்ல வந்திருக்கிறேன். காதல்! காதலை மட்டுமே பிரதானமாக கொண்டு செல்ல இருக்கிறேன். ரொம்ப லாஜிக் பார்க்காதீங்க டியர்ஸ். செவ்வாய் மற்றும் சனி யூடி வரும் டியர்ஸ். உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 1
"என்னங்க பந்திக்கு வாழையிலை வந்திடுச்சா? " என்று கேட்டபடியே நடுகூடத்தில் இருக்கும் முற்றத்தின் அருகே வந்த கோசலை, கையில் வைத்திருந்த காபி குவளையை கணவரிடம் கொடுத்தார்

" ஆட்கள் எடுத்துட்டு வந்துட்டு இருக்காங்க " என்றபடி குவளையை வாங்கிக் கொண்ட ராமன். அங்கேயே முற்றத்தின் திண்டில் அமர்ந்து மெதுவாக குடிக்க ஆரம்பித்தார் .

"ஏங்க, ஊரிலிருந்து யாரெல்லாம் வர்றாங்களாம்?. உங்க அண்ணன் தோழங்க வீட்டிலிருந்தும் வராங்களா?" என்றார் எதிர்பார்பபோட

"அவங்க வராம. வருணாக்கு அவங்க பையன் தானே, மாமன் முறைக்கு குச்சி கட்ட போறான்"

" அ.. அது தாங்க சொல்ல வந்தேன்" என்று தயங்கியவர். "இன்னைக்கு பெரியவர் சொன்னதால குச்சி கட்டுறாங்க. அப்புறம்.." என்றவரை

எரிக்கும் பார்வை பார்த்தார் ராமன். "நல்ல நாளும் அதுவுமா என் வாயை கிளறாத கோசலை. ஏன்?வீணா போன உன் நொண்ண மவன் வரனும்னு எதிர்பார்க்கிறியோ!" என்றார் பல்லை கடித்தபடி

"ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் இல்லைங்க. தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன் " என்றார் சமாளிப்பாக

"போ. போய் வேலையை பாரு. சனங்க எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க. அதோ, மதனியும் அண்ணணும் வராங்க. தேவையில்லாததை பேசாமல் வர்றவங்களை கவனி" என்று குடித்த காபி குவளையை கோசலையிடம் கொடுத்து விட்டு,

"வாங்கண்ண, வாங்க மதனி. எதிர்த்த வீட்டிலிருந்து இங்க வர இவ்வளவு நேரமா?" என்று உரிமையாக கடிந்து கொண்டார் ராமன்.

"அதான் வந்துட்டோம்ல. இனி என்னென்ன வேலை பாக்கி இருக்குன்னு சொல்லுங்க. செஞ்சிடுறோம் " என்றார் வேணி

"நீங்க வாங்கக்கா. எதையாவது பேசி வம்பு வளர்ப்பார்" என்று வேணியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார் கோசலை

வேலையில் ஆண்களும் பெண்களும் பம்பரமாக சுழல தொடங்கினர். அதுவும் தங்கள் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசின் தேவையென்றால் சும்மாவா!

காலை மற்றும் மதிய உணவிற்கான வேலைகள் சமையல் ஆட்களை வைத்து நடந்து கொண்டிருந்தது. பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் கேட்காமலேயே வேலையை இழுத்துப் போட்டு செய்ய கொண்டிருந்தனர்.

ராமனும் அவரது அண்ணண் கோபாலும் அண்ணன் தம்பிக்கு பிறந்தவர்கள். அதாவது பெரியப்பா மகன் தான் கோபால். அதே போன்று கோபாலின் சித்தப்பா மகன் தான் ராமன். கூடப் பிறக்கவில்லையென்றாலும் அவ்வளவு ஒத்துமையாகவும் அன்போடு பாசமாக இருப்பர். இரண்டு தலைமுறைகளாக ஆண் வாரிசுகளாகவே மட்டுமே இருக்க, வருத்தத்தில் இருந்தவர்களுக்கு வரமாய் வந்து பிறந்தவள் தான் 'மித்ரவருணா!'

கோபாலுக்கு ஒரே ஓரு ஆண். பெயர் 'விஷ்ணு' . தங்கை மீது அன்பும் பிரியமும் உடையவன். பள்ளிக்கு அழைத்து செல்வது வருவது எல்லாமே அவனுடைய பொறுப்பு தான்.

"விஷ்ணு , சாப்பிட்டுட்டு வந்து வேலையை பாரு" என்று உரிமையாக கடிந்து கொண்டார் கோசலை.

"நான் சாப்பிடுறது இருக்கட்டும் சித்தி. தங்கச்சி சாப்பிட்டுச்சா?. நாட்டுக் கோழி முட்டை குமட்டுதுன்னு சொல்லிச்சே" என்றான் கவலையாக

"அவ சொன்னால் விட்டுட முடியுமா?.அதெல்லாம் அக்கா எப்படியோ சரிக்கட்டி கொடுத்துட்டாங்க " என்றவர். " சரி சரி. நீ இங்கே பந்தி முடிஞ்ச பிறகு, வீட்டுக்கு படிக்க போயிடனும். பப்ளிக் பரிட்சை வேற, நல்ல மார்க் எடுத்து எங்க புள்ளன்னு நிரூபிக்கனும். என்ன விளங்குதா?"

"சரி சித்தி" என்றவன். அவர் தட்டில் போட்டு கொடுத்திருந்த ஆவி பறந்த இட்லிகளை ஆசையாக சாப்பிட ஆரம்பித்தான். மேலும் அவனுக்கு பிடித்த ஆம்பிலேட்டையும் அவன் தட்டில் வைத்து விட்டு, அவன் ஆச்சரிய பார்வையை கண்டு கொள்ளாது மெல்ல சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.

அதற்குள் விருந்தினர்கள் உறவினர்கள், பெண்கள், குழந்தைகள் பெரிய மனிதர்கள் என வர ஆரம்பிக்க, அனைவரையும் முறையாக வரவேற்று கவனிக்க ஆரம்பித்தனர். வீடு கலைகட்ட ஆரம்பித்தது. நண்டு, சிண்டுகள் என பிள்ளைகள் ஆங்காங்கே மகிழ்ச்சியாக ஓடி விளையாடி விழா இடத்தை சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வாயிலில் உயர்ரக கார் ஒன்று வந்து நின்றது. அதை கண்டு கோபால் பரபரப்பாக,

"ராமா, ராஜூ வந்துட்டான் பாரு. வா வா. வேணி, கோசலை எல்லாரும் வாங்க " என்று அழைத்தபடி முன்னே செல்ல, மற்றவர்களும் அவரை பின்தொடர்ந்து வாசலுக்கு விரைந்தனர்.

"வாங்க வாங்க " என்று நால்வரும் இன்முகமாக வரவேற்க, ராஜூ சந்தோஷமாகவே, " வரேன் பா " என்றபடி காரிலிருந்து இறங்கினார்.

நடுத்தர வயது, பார்ப்பதற்கு சினிமா நடிகர் ஒருவரை ஒத்திருந்த தோற்றம். அவரை தொடர்ந்து அவரது மனைவி ராதிகா. உடன் அவளது மகள் லாவண்யா. மகன் ருத்ரேஸ்வர் இறங்கினர்.

"வா ராதிகா, அடடே லாவண்யா குட்டி. எப்படி இருக்கடா?" என்றார் வேணி சந்தோஷமாக

"நல்லாயிருக்கேன் அத்தை" என்றாள்.

அடுத்து, அருகில் நின்றிருந்த ருத்ரேஸ்வரனிட"வா ஈஸ்வர். எப்படியிருக்க? பரிட்சை முடிஞ்சிடுச்சா?" என்றார் வேணி

"இன்னும் இல்லை அத்தை. ஒரு எக்ஸாம் பாக்கி இருக்கு" என்றான்.

"வாசலிலேயே நிற்க வைச்சு, கேள்வி கேட்பியா? உள்ளே அழைச்சுட்டு போ வேணி " என்று கோபால் சொன்னதும்

"வாங்க ராதிகா, வா லாவண்யா, வாங்க தம்பி " என்று கோசலை அழைக்க, வேனில் அழைத்து வந்திருந்த உறவுகள் கையில் சீர்வரிசை தட்டுகளோட வர, ராதிகாவும் புடவை தட்டை கையில் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

கிராமத்திற்கே உரிய பாணியில் நடுவில் முற்றம் வைத்து விசாலமாக காற்றோட்டமாக கட்டியிருந்தனர். கொண்டு வந்த சீர்வரிசைகள் கூடத்தில் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது. வந்தவர்களுக்கு, காபி டீ பலகாரம் என பெண்கள் கவனித்துக் கொண்டிருக்க, ஆண்கள் தங்களுக்குள் ஐக்கியமாகி விட்டனர்.

இதில் எதுவும் தெரியாமல் அமர்ந்திருந்தது ஈஸ்வரும், லாவண்யாவும் தான். அதுவும் ஈஸ்வருக்கு முள்ளில் மேல் அமர்ந்திருக்கும் நிலை தான். சிட்டியிலேயே பிறந்து வளர்ந்தவனுக்கு, இதெல்லாம் புதிதாக இருந்தது.

தனது தங்கை லாவண்யா, ஆறு மாதத்திற்கு முன்பு பெரிய மனுசியாகிய போது, அவனது அம்மா இது போலெல்லாம் ஊர் கூட்டி கொண்டாடவில்லை. நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்து சில சடங்குகளை செய்தார் என்று தெரியும். அது என்ன சடங்கு என்றெல்லாம் தெரியாது. ஆனால் குச்சி கட்ட என்று யாரும் வரவில்லை என்பது மட்டும் தெரியும்.

சமையல் ஆட்கள் கேட்டதை கொடுத்து விட்டு, அப்போது தான் உள்ளே வந்த விஷ்ணு, வந்தவர்களை கண்டு,

"வாங்க மாமா. வா விஷ்ணு " என்றான் இன்முகமாக

"வரேன் பா. எப்படியிருக்க விஷ்ணு? பரிட்சையெல்லாம் எப்படி எழுதியிருக்க?" என்றார் ராஜூ

"நல்லா எழுதியிருக்கேன் மாமா " என்றவன். ஈஸ்வர் பக்கம் திரும்பி, " வா ஈஸ்வர் உனக்கு மாடியை காட்றேன். அங்கிருந்து பார்த்தால் இந்த ஊரே தெரியும்" என்றான்.

ஆமோதிப்பாக தலையசைத்தவன். அவனுடனே மாடிக்கு சென்றான். மொட்டை மாடியில் அடி எடுத்து வைத்ததுமே, அவனது கண்கள் ஆச்சரியத்தில் விரிய, இதழ்களோ, "வாவ்! " என்ற சொல்லை உதிர்த்தது.

சோலையூர். மலையும் மலை சார்ந்த பிரதேசம். கூடுதலாக சாரல் மழையை அதிகம் பெறுகின்ற ஊர். பச்சைபசேல் என்ற வயல்வெளியும் அதனை ஒட்டிய சிறு சிறு குன்றுகளும் , வரிசையாக வீடுகள் அமைந்திருக்கும் தெருக்களும், பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.

"எப்படியிருக்கு நம்ம ஊர்?" என்றான் விஷ்ணு

"ரொம்ப நல்லாயிருக்கு. இந்த ஊரை விட்டுட்டு அப்பா எப்படி தான் சிட்டில இருக்காங்களோ!" என்றான் ஈஸ்வர்.

"அதனால தான் மாமா வருசத்துக்கு ஒரு தடவ திருவிழாவுக்கு வர்றது. ஏதாவது சாக்கு வேணுமே"

"உண்மை தான். இனி அடிக்கடி நானும் வரணும். மைண்ட் ரிப்ரெஷ் பண்ணிக்க இந்த இயற்கையும் சாரல் மழையும் அவசியம் உதவும்" என்று பையன்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க,

கீழே, " என்ன ராஜூ? முப்போகம் விளையற வயலை கொடுத்திட்ட, அதை சாக்காக வைச்சு தான் இந்த ஊர் பக்கம் வந்த, அதனால அவசியமில்லைனு இனிமேல வராம இருந்திடாதப்பா" என்று பெரிசு ஒன்று வாயை கிளறியது

"இதென்ன பேச்சு மாமா?தொழிலை விரிவுபடுத்த தானே கொடுத்தான். இலாப வரும் போது இங்கேயே விருப்பப்பட்டால் வயலை வாங்ககிக்க போகிறான். தேவையில்லாததை பேசாதீங்க " என்று கோபால் கடிந்து கொள்ள

"நீயேன்பா அண்ணணும் தம்பியும் தானே அவங்க நிலத்தை பங்கு போட்டு வாங்கிகிட்டீங்க!. இனிமே நினைச்சாலும் அந்த வயலை விக்க மாட்டீங்க. இனிமே அந்த சொத்து ராஜூக்கு திரும்ப கிடைக்கவா போகுது!" என்று அவர் மேலும் பேச்சை வளர்க்க

கோபால் சட்டென்று கோவத்தில் எழுந்து விட்டார். அவரை கைபிடித்து நிறுத்திய ராஜூ, கண்ணைசைத்து அமைதியாக இருக்கும்படி கூறி விட்டு,

"இப்போ என்ன உங்களுக்கு அதில் அவ்வளவு வருத்தம்?" என்றார் பெரியவரிடம்.

"வருத்தம் தான் பா. கோபால் கிட்டயோ இல்லை ராமனிடம் இருக்கிறதிலோ இல்லை. நாளைக்கு அவங்கவங்களுக்கும் மருமகள் மருமகன்னு வருவாங்க. வர்றவங்க எப்படி இருக்காங்களோ? " என்றார் அங்கலாய்ப்பாக

"இதென்ன பேச்சு மாமா?. அதுக்கெல்லாம் காலம் கிடக்கு. தேவையில்லாததை பேசிட்டு திரியாதீங்க?" என்று கண்டித்தார் கோபால்.

"அட இருடா இவன் ஒருத்தன். நான் ஏதோ சொல்ல வந்து பேச்சு திசை திரும்பிடுச்சு!." என்றவர். " ஏன் ராஜூ?. உன் சொத்து உறவும் கைவிட்டு போகாமல் இருக்க! நீ ஏன் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கக் கூடாது?" என்றதும்.

கோபாலும் ராஜூவும் அதிர்ந்து பார்க்! "அட ஆமாம் பா. இங்கே அண்ணன் தம்பிக இரண்டு பேருக்கும் வேலி கணக்குல சொத்து இருக்கு. நீயும் அங்கே பெரிய துணிக்கடையா விரிவுபடுத்த போற!. இப்பக் கூட, தாய்மாமன் சீற நீ தான் கொண்டு வந்திருக்க!. சொத்துக்கும் சொத்தும் ஆச்சு! உறவும் நெருக்கமாயிடுமில்ல!" என்றார்.

"நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான் மாமா. பிள்ளைகளுக்கு என்ன விரும்பமோ அது தான் எங்க முடிவு . நாமே எதும் முடிவு பண்ண முடியாது. இதில் அவங்க விருப்பம் தான் முக்கியம்" என்ற கோபால்.

அதற்கு மேல் பேச்சை வளர விடாமல், "சமையல் முடிஞ்சிடுச்சான்னு பார்த்துட்டு வரலாம் வா ராஜூ" என்று கையோடு அவரையும் அழைத்துக் கொண்டு நகர்ந்து விட்டார் கோபால்.

சமையல் செய்யும் இடத்தில் கோசலை ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு ராமன் சமாதானம் கூறிக் கொண்டிருந்தார். இவர்கள் வந்ததை கவனிக்கவில்லை. ஆனால் ராஜூ மனம் பொறுக்காமல்,

"என்ன? தங்கச்சி அழுதுட்டு இருக்கு!. என்னாச்சு ராமன்?"

திடுக்கிட்டு திரும்பியவர்கள் கோபால் மற்றும் ராஜூ நிற்பதை கண்டு, பெருமூச்சு விட்டபடி,

"எல்லாம் இவ அண்ணன் குடும்பம் பண்ற தொல்லை தான். அவங்க செயல்கள் சரியில்லாமல் போலீஸ் கேஸுன்னு அலையறாங்க. இதில் அவங்க செய்யறதுக்கு, நம்மையும் வந்து விசாரிக்கிறாங்கன்னு தான் உறவையே முறிச்சிக்கிட்டோம்.

இப்போ இங்கே ஆட்களோட பிரச்சனை பண்ண வராங்களாம். அதை கேள்வி பட்டு தான் கோசலை கலங்குது. சடங்குக்கே இப்படி! இன்னும் கல்யாணம் காட்சியெல்லாம் எப்படி நடத்தப் போறோம்னு கவலைப்படுறா. அதான் சமாதானம் பண்ணிட்டு இருக்கேன்" என்றார் ராமன்.

"இதெல்லாம் சமாளிக்க தானே நாங்க இருக்கோம். நல்ல நாளும் அதுவுமா நீ ஏன் மா கண் கலங்குற!" என்றார் கோபால்.

"என்னோட விருப்பத்தை சொல்றேன். உங்களுக்கு விருப்பம்னா இதை பற்றி பேசலாம்" என்றார் ராஜூ பீடியாக

"சொல்லுங்க அண்ணா" என்றார் கோசலை.

"எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு மட்டும் தான். உங்களுக்கே நல்லா தெரியும். சிட்டியில் சொந்தமா இரண்டு வீடு, ஜவுளிக்கடை இருக்கு. அதை விரிவுபடுத்தத் தான் இங்கிருந்த சொத்தை விற்றேன். உங்களுக்கு தெரியும். கடவுள் அருளால் இன்னும் உழைக்க உடம்பில் தெம்பு இருக்கு. என் பையன் இப்பவே எனக்கு தொழிலில் உதவிக்கு வந்துட்டான். அவ சம்பாதிக்கும் போது, இன்னும் பெருசா வளருவான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு!

நீங்க விருப்பப்பட்டால் உங்க பொண்ணை என் பையனுக்கு பேசி வைச்சுக்கலாம். அவங்க கவ்யாணம் செய்யற நேரத்தில் விருப்பத்தை கேட்போம். சரியென்றால்! கல்யாணம் முடிச்சிடலாம். இல்லையென்றால் வேணாம். இதில் அவங்களோட விருப்பம் தான் முடிவு. இதை நமக்குள்ள மட்டும் பேசி வைச்சுக்குவோம். பசங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம். என்ன சொல்றீங்க? " என்றார் ராஜூ ஆர்வமாக. ஏனோ பெரியவரின் பேச்சு அவருக்கு சரியென்றே பட்டது.

"ராதிகா அண்ணியையும் கலந்துட்டு சொல்லுங்க அண்ண!' என்றார் கோசலை தயங்கி,

" நான் சொல்றது தான் அவளுடைய விருப்பமாவும் இருக்கும். நீங்க உங்க முடிவை யோசிச்சு சொல்லுங்க. அவசரமில்லை நிதானமாவே சொல்லுங்க" என்று ராஜூ உள்ளே சென்று விட்டார்.

"என்ன அண்ணா சொல்றது?" என்றார் ராமன் கோபாலிடம்

"நல்ல விசயம் தான் ராமா. கொஞ்சம் முன்னாடி மாமா கூட பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிறதை பத்தி பேசினார். ராஜூ என்ன சொல்வானோன்னு அதை மறுத்திட்டேன். இப்போ பேசுறதை பார்த்தால் ராஜூக்கு விருப்பம் தான் போல!. பேசி வைப்போம் காலம் இவங்களுக்கு தான்னு முடிஞ்சு போட்டிருந்தால் நடக்கட்டுமே!" என்றார்.

"ராதிகா அண்ணியையும் கலந்துட்டு அண்ணணுடைய முடிவை கேட்போம் மாமா" என்றார் கோசலை

இருவரும் ஆமோதிப்பாக தலையசைக்க, அப்போது அங்கே வந்த வேணி,

"என்ன எல்லாரும் இங்கே நின்னுட்டு இருக்கீங்க? ஈஸ்வரை கூப்பிடுங்க. சடங்கு செய்யனும்ல" என்றதும்.

"விஷ்ணு மாடிக்கு அழைச்சிட்டு போனான் வேணி. இரண்டு பேரையும் கூப்பிடறேன். கூடவே இருந்து பார்த்துக்கோ" என்று கோபால் முன்னே செல்ல, மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.
 

Sirajunisha

Moderator
விஷ்ணுவும் ஈஸ்வரும் வர, " தம்பி இங்கே வாங்க " என்றார் நடுத்தர வயதுடைய ஒரு நபர். ஈஸ்வர் அருகில் செல்ல,

"இப்போ பொண்ணு அழைச்சிட்டு வந்து உள்ளே உட்கார வைப்பாங்க. நீங்க இதை மறைப்பா கட்டி விடனும் " என்று வேய்ந்து கீற்றை கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார். ஏற்கனவே மறைவாக வேய்ந்த கீற்றுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

"அதுதான் ஏற்கனவே இருக்கே அத்தை. பிறகு, இது வேறு எதற்கு?" என்று அழுத்துக் கொண்டான் ஈஸ்வர்.

"இதெல்லாம் சம்பிதாயம் பா " என்றவர். " அக்கா, வருணாவை அழைச்சிட்டு வந்து உட்கார வைங்க " என்றதும். ஈஸ்வர் அனிச்சை செயலாக முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். இதை கண்டு, வேணி புன்னகைத்து கொண்டார்.

"ம்ம். இப்போ வந்து கட்டுப் பா " என்றவர். ஈஸ்வர் தடுமாறவும்,

"இப்படி, இந்த ஓலை மேலேயே சேர்த்து வைச்சு, கீழே விழாமல் கட்டி விடு " என்றார்.

குத்துகாலிட்டு அமர்ந்தவன். அவர் சொன்னது போலவே, வேய்ந்த கீற்றை மறைப்பு போல் வைத்து, கட்ட ஆரம்பிக்கும் போதே,

"வேணியக்கா, கோசலை அண்ண குடும்பத்து ஆளுங்க வந்து தகராறு பண்ணிட்டு இருக்காங்க" என்று தகவல் சொல்லி விட்டு, அந்த பெண்மணி மீண்டும் வேகமாக உள்ளே செல்ல,

"ஈஸ்வர். இதை கட்டிட்டு இங்கேயே நில்லுப்பா. யாரையும் இந்த பக்கம் விட்டுடாத" என்றவர். " வா விஷ்ணு" என்று மகனையும் கையோடு அழைத்துக் கொண்டு உள்ளே ஓட,

சொன்னது போலவே சிறத்தையாக செய்து முடித்தவன். அருகில் இருந்த மற்றொரு கீற்றையும் கையிலெடுத்து, ' இதையும் கட்டனுமா?' என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

தடுப்பின் மறுபக்கத்தில் கையை அசைப்பதால் ஏற்படக் கூடிய, மெல்லிய வளையோசை அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது.

"ஏங்க, இந்த ஓலையையும் கட்டணுமா?" என்று கேட்டு விட்டான் தடுப்பின் மறுபுறத்தில் இருந்தவளிடம்.

மறுபக்கமிருந்து எந்த சத்தமுமே இல்லை. வேறு யாரிடமோ, கேட்கிறோம்னு நினைச்சிட்டாளா?' என்று யோசித்தவன்.

"மித்ர வருணா! உங்கிட்ட தான் கேட்கிறேன்" என்றதில்

"ஆங்!" என்ற சத்தத்தில் அவள் அதிர்வது தெரிந்தது.

"இந்த கீற்றையும் சேர்த்து கட்டணுமான்னு கேட்டேன்" என்றான் இம்முறை அழுத்தமாக

"தெ.. தெ.. தெரியலை" என்றாள் தடுமாற்றமாக

"சரி. இதையும் கட்டிடுறேன். திரும்ப இதுக்கு வேற கூப்பிட போறாங்க" என்று முணுமுணுத்தவன். அதையும் சேர்த்து வைத்து கட்டி விட்டு எழ,

"டேய்! பொண்ணு இங்கே தான் டா இருக்கு. தூக்குங்க டா " என்ற குரலில் ஈஸ்வர் திடுக்கிட்டு திரும்ப, பின்பக்கமாக இருவர் இவர்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் பேசியதிலேயே விசயத்தை யூகித்தவன். " நில்லுங்க. பெரியவங்களுக்குள்ள பிரச்சனைனா நீங்க அங்கே தான் பேசி தீர்த்துக்கனும். வீட்டு பொண்ணுங்க மேலே கை வைக்கிற வேலையெல்லாம் வைச்சிக்க கூடாது" என்று கண்டித்தான்.

"அட்வைஸ் பண்றதை பார்ரா!" என்று அதில் ஒருவன் நக்கலடிக்க,

"இருக்காதா டா மாப்பிள்ளை. நான் கட்டிக்க போறவளுக்கு இவன் குச்சி கட்டிருக்கான்ல அந்த எகத்தாளம் தான் " என்று பல்லைக்கடித்தவனுக்கு சுமார் இருப்பத்தி ஐந்து இருக்கலாம்.

"தேவையில்லாம பேசாதீங்க. எதுவா இருந்தாலும் பெரியவங்களிடம் பேசிக்கோங்க"

"நான் கட்டிக்க போறவ! எனக்கு எல்லா உரிமையும் இருக்கு!. இதில் நீ தலையிடாத!. ஒதுங்கி போனால் மரியாதையாவது மிஞ்சும்" என்றவன். வேகமாகவே இவனை தாண்டி செல்ல முயல,

அவனை தடுத்தவன். மறுபக்கம் சென்று, வருணாவை மறைத்தபடி நின்று கொண்டான்.

"டேய்! நகரு டா. வீணா என் கோவத்தை கிளறாதே!' என்று பல்லைக்கடித்தான்.

"எதுவா இருந்தாலும் பெரியவங்ககிட்ட பேசுங்க. இங்கே வந்து பொண்ணை தூக்கிறேன் என்கிற வேலையெல்லாம் வேண்டாம்" என்றான் ஈஸ்வர் கராராக.

"டேய் சக்தி, அவங்கிட்ட என்ன டா பேச்சு. உன்னோட அத்தை மக! உனக்கில்லாத உரிமையா? அவனை அடிச்சு போட்டுட்டு பொண்ணை தூக்கு டா " என்று கூட வந்தவன் ஏற்றி விட,

"அதானே!' என்றபடி, கோவமாக முன்னே ஓரடி எடுத்து வைத்தது தான் தெரியும். ஈஸ்வர், தனது திடகாத்திரமான நீண்ட கால்களால் வயிற்றிலேயே எட்டி உதைத்திருந்தான். இதை எதிர்பார்க்காத சக்தி, சற்று தூரத்தில் போய் விழுந்திருந்தான்.

விழுந்தவனுக்கு எழவே முடியவில்லை. தட்டு தடுமாறி எழ முயல, வலி உயிர் போனது.

"டேய், அவனை ஏன் டா அடிச்ச?" என்று கேட்டபடியே, சக்தியை தூக்கி விட்டான் மற்றொருவன்

"நீ வந்தால் உன்னையும் அடிப்பேன். ஒழுங்கா இங்கிருந்து போயிடுங்க!"

"பார்த்தால் சின்ன பையனாட்டம் இருக்கான்!. ஒரு அடி அடிச்சதுக்கு இவ்வளவு தூரம் வந்து விழுந்திருக்கியே சக்தி" என்று மற்றொருவன் புலம்ப

"க.. கராத்தே கத்திருப்பான் போலிருக்.. குடா.. இரும்பால அடிச்ச்.. சா மா.. திரி வலிக்குடா மாப்ள!" என்றான் சக்தி அழாத குறையாக

"சரி சரி வா போயிடலாம். இன்னொரு நாள் பார்த்துக்கலாம். இவன் ஊருக்கு போயிட்ட பிறகு, யார் காப்பாத்த வருவாங்க" என்றதும்

"அந்த விஷ்ணு பய இருக்கானே டா!. அவன் அங்கே நின்னதால தானே நாம பின் வாசல் வழியா வந்தோம்" என்றபடியே சக்தி மெல்ல நடக்க,

"இதை வெளியில சொல்லிடாத சின்ன பையன் கிட்ட அடி வாங்கினன்னு எவனும் மதிக்க மாட்டான்" என்றபடியே கைதாங்கலாக மற்றொருவன் அழைத்து செல்ல, அதே நேரம் விஷ்ணுவும் வேணியும் அங்கே வந்து விட்டனர். சக்தியை கைதாங்கலாக மற்றொருவன் அழைத்து செல்வதை கண்டு,

"டேய் சக்தி" என்று கத்த,

"ஐயயோ! விஷ்ணுவும் வந்துட்டான் டா.. சீக்கிரம் வா " என்று மற்றவனின் இழுப்புக்கு ஏற்றபடி சென்று விட்டான் சக்தி.

"என்னப்பா ஆச்சி?" என்றார் வேணி பதட்டமாக

"உங்க பொண்ணை தூக்குறேன்னு வந்தானுங்க அத்தை. அடி வாங்கிட்டு ஓடுறானுங்க " என்றதும்

"என்ன பொண்ணை தூக்க வந்தானுங்களா!. அவனுங்கள " என்று விஷ்ணு வேஷ்டியை மடித்து கட்டி சண்டைக்கு தயாராக,

"அதுதான் அடிவாங்கிட்டு போயிட்டானுங்கள்ள விடு விஷ்ணு. இனி நாம கவனமா இருப்போம். வருணாவை இங்கேயே வைச்சிருந்தால் சரியா வராது. சாயங்காலம் வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடலாம். அதுவரை பின்பக்கமும் காவலுக்கு ஆளை போடு" என்றதும். விஷ்ணு அதை கவனிக்க நகர்ந்தான்.

"நீ உள்ளே வா ஈஸ்வர்" என்றபடி வேணி முன்னே செல்ல, அவரை தொடர்ந்து அடி எடுத்து வைத்தவனின் சட்டையை எதுவோ இழுப்பது போல இருக்க, சட்டென்று திரும்பி பார்த்தான்.

வருணா தான் பயத்தில் அவனது சட்டையின் நுனியை பிடித்தபடி நின்றிருந்தாள். இதுவரை பார்க்காத அவளது முகத்தை அப்போது தான் மெல்ல நிமிர்ந்து பார்த்தான்.

நேர்த்தியாக தலைசீவி, அவள் குனிந்திருந்ததாள் பூ போன்ற நெற்றி சுட்டி தான் முதலில் தெரிந்தது. ஏதோவொரு உந்துதலில் வருணா நிமிர்ந்து பார்க்க! பயத்தில் மிரளும் கண்கள் குழந்தைதனமான முகமும் தெரிந்தது. ஈஸ்வரை நெருக்கமாக பார்த்ததால்! அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிய,

"சட்டையை விடுறீங்களா?" என்றான்.

அப்போது தான் தனக்கு முன் அரணாக வந்து நின்றிருந்தவனின் சட்டையை பிடித்திருப்பது தெரிய, சட்டென்று விட்டு விட்டு ஒரடி பின்னே சென்று விட்டாள்.

"தேங்க்ஸ் " என்று விட்டு ஈஸ்வர் வேணியுடன் உள்ளே சென்று விட்டான். இதுவரை அப்பா, அண்ணன் என வீட்டில் ஆண்கள் யாருமே தொட்டு பேசியறியாதவள். அதீத அன்பில் அவர்களது கைகள் அவளது தலையை தான் ஆதூரமாக வருடியிருக்கும். அப்படியிருக்க, இன்று ஒருவனின் சட்டையை பிடித்தது அவளுக்கே ஒப்புதலாக இல்லை. சங்கடமான நிலையிலேயே அமர்ந்து விட்டாள்.

சற்று நேரத்திலேயே கோசலை, வருணாவின் தோழி கவிதாவுடன் வர,

"வா கவி. இப்போ தான் ஊரிலிருந்து வந்தியா?" என்றாள் வருணா தன்னை சமாளித்துக் கொண்டு,

"நான் முன்னாடியே வந்துட்டேன். வாசலில் உங்க தாய்மாமா போட்ட சண்டையை வேடிக்கை பார்த்துட்டு இப்போ தான் உள்ளே வரேன்" என்றாள்.

"எதுக்கு சண்டை போடுறார்?" என்ற வருணாவை, இடைமறித்த கோசலை

"இது ரொம்ப முக்கியமா இப்போ?. விருந்தாளிங்க பார்க்க வருவாங்க. அதுவரை அடக்க ஒடுக்கமா அமைதியாயிரு! என்றவர். நகர எத்தனித்து, பிறகு மீண்டும் இவர்கள் புறம் திரும்பி,

"ஆம்பளை முகத்தில் முழிக்க கூடாது. யாரும் இந்த பக்கம் வர மாட்டாங்க. அப்படியே வந்தாலும் தலை நிமிர கூடாது புரியுதா?" என்றார் கோசலை

'ம்க்கும்' என்று சற்று முன்பு ஈஸ்வரை கண்டதை நினைத்து மனம் நொடித்தாளும்! அதை வெளிக்காட்டாது "சரிம்மா " என்று தலையாட்டி வைத்தாள்.

பெற்றோர் போடும் கணக்கு காலத்தோடு இணைந்தே இருக்க!. காலம் என்ன வைத்து காத்திருக்கிறதோ? எழுதாத எழுத்து பலகையாக இருக்கும் மனதில் காலம் வைக்கும் புள்ளி என்னவோ? பொறுத்திருந்து பார்ப்போம்..

அடுத்த யூடி சனிக்கிழமை டியர்ஸ்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 2
சண்டை ஒரு புறம் நடந்திருந்தாலும், மறு புறம் சீர்வரிசை, பரிசு, மொய் பணம் விருந்து என களைக்கட்டியது. அன்று விழா ஒரு வழியாக முடிய, வருணாவையும் வீட்டுக்குள் அழைத்து வந்து விட்டனர்.

கோபால் வீட்டில் ராஜூ, ஈஸ்வர் தங்கிக் கொள்ள! லாவண்யாவை கோசலை தங்க வைத்துக் கொண்டார். காலையிலிருந்து வந்தவர்களை கவனிக்கும் அவரது சுறுசுறுப்பு லாவண்யாவை ஈர்த்திருந்தது. அவர் பின்னாடியே தான் சுற்றிக் கொண்டிருந்தாள். அதிலும் அன்னப்பூரணியாக அவ்வப்போது எதையாவது கொடுத்து அவள் வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்க, ' நமக்கு சோறு தான் முக்கியம்' என்று அங்கேயே இருந்து விட்டாள்.

லாவண்யாவும், வருணாவும் ஒரே அறையில் தங்கிக் கொள்ள! இப்போது ஓரளவு பேச தொடங்கி விட்டனர். ஒரே வயது ஒரே படிப்பு என! மனதளவிலும் நெருங்கி விட்டிருந்தனர்.

மறுநாள் காலை சற்று தாமதமாகவே எழுந்தான் ஈஸ்வர். அறையை விட்டு வெளியே வந்த போது வீட்டில் யாருமே இல்லை.
"அத்தை, விஷ்ணு " என்றபடியே கொல்லைப்புறம் செல்ல,

குளித்து விட்டு, இடுப்பில் வேஷ்டியை கட்டிக் கொண்டு தலையை துவட்டியபடியே எதிர்பட்டான் விஷ்ணு.

ஈஸ்வரை கண்டு விட்டு, " எழுத்திட்டியா ஈஷ்வர் . குளிச்சிட்டு வா. அம்மா , சித்தி வீட்டில இருக்காங்க. அங்கே தான் நமக்கு சாப்பாடு" என்றபடியே ஈர டவலை கொடியில் காய வைத்தான்.

"அப்பா, மாமா எல்லாம் எங்கே?"

"நேத்து, சடங்கு வீட்டுல வந்து பிரச்சனை பண்ணாங்கள்ள! கோசலை சித்தியோட அண்ணனும், அவர் பையனும் அது சம்மந்தமா நேத்து பஞ்சாயத்துல புகார் கொடுத்திருந்தாங்க. அது சம்மந்தமா இன்னைக்கு இரண்டு தரப்பையும் பேச கூப்பிட்டதால! போயிருக்காங்க. நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா ஈஸ்வர். அவங்க வர்றவரை நாம சித்தி வீட்டில இருக்க சொல்லியிருக்காங்க" என்று விட்டு உடைமாற்ற அறைக்கு சென்று விட்டான்.

அவசரமாக குளித்து வேறுடை மாற்றி விட்டு, எதிர்வீட்டிற்கு சென்ற போது, "வா ஈஸ்வர். இப்போ தான் எழுந்தீங்களா?" என்றார் வேணி.

"ஆமாம் அத்தை " என்றவன். " அம்மா எங்கே?" என்றான்.

"போன் பேசிட்டு இருந்தாங்க. நீ சாப்பிடு. நான் கூப்பிடுறேன்" என்றபடி உணவை இருவருக்கும் எடுத்து வைத்து பரிமாறினார்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, " விஷ்ணு, நீ சாப்பிட்டுட்டு, நம்ம வீட்டு தோட்டத்தில மல்லியும், கனகாம்பரம் பூவையும் பறிச்சிட்டு வந்து கொடு" என்றதும்!

விஷ்ணு, முறைக்க! "உன் தங்கச்சி தானே டா. நான் இப்போ பூ பறிக்க வந்தால்! சமையலை யார் பார்க்கிறது. அதோட, இப்போ தான் வருணாவுக்கு பூத்தைச்சு விட்டு பார்க்க முடியும். பிறகு, காணும் பொங்கலுக்கு தான் தைச்சி விடலாம்" என்று அங்கலாய்க்க!

"சரி.. ச.. ரி.. புலம்பாதம்மா. பறிச்சிட்டு வரேன்" என்றான் விஷ்ணுவும். இருவரும் சாப்பிட்டு முடிக்க, விஷ்ணு பூப்பறிக்க சென்று விட, ஈஸ்வர் தனது அம்மாவை தேடியபடி கொல்லைப்புறம் சென்றான்.

பின்னால் இரண்டு கட்டுகளை கொண்டிருந்தது வீடு. முதலில் இருந்தது நெல், அரிசி, தேங்காய் போன்றவைகளை சேமித்து வைக்க, பெரிய கூடம். அதனை அடுத்து குளியலறை, கழிப்பறைகள் இருந்தது. அதை தாண்டி படிகளில் இறங்கினால்! கொல்லைப்புறம். நேற்று விழா நடந்ததன் அறிகுறியாக பந்தல்கள் இன்னும் பிரிக்கப்படாமல் இருந்தன. அங்கே தான் ராதிகா, போனில் பேசியபடி நின்றிருந்தார்.

முதல் அறையை கடக்கும் போதே! நேர் எதிரே நின்றிருந்த ராதிகாவை கண்டு விட்டு, வேகமாக இரண்டாவது கட்டுக்கு வரும் போது,

"அத்தை அந்த பேட் எடுத்து தாங்களேன்" என்று குரல் கேட்டது. அப்படியே நின்று விட்டவன். சுற்றிலும் பார்க்க யாருமே இல்லை.

மீண்டும், " அத்தை, லாவி யாராவது இருக்கீங்களா?" என்ற குரலில், சப்தம் வந்த திசைக்கு தலையை திருப்பினான். முக்கால் வாசி மூடியிருந்த கதவில் உள்ளே ஆள் இருப்பது தெரிய, சுற்றிலும் பார்த்தான். வேறு யாரும் இருப்பது போல் தெரியவில்லை.

சற்று தள்ளி, மோடாவில் பிரிக்கப்படாமல் இருந்த நாப்கினை எடுத்தவன். குரலே எழுப்பாமல், கதவை பற்றியபடி லேசாக தெரிந்த விரல்களில் படுமாறு தட்ட, அதை உணர்ந்து வருணா வாங்கிக் கொண்டு,

"தேங்க்ஸ் அத்தை " என்றாள்.

சத்தமே எழுப்பாமல், நகர்ந்து விட்டான். ராதிகா இன்னும் போனில் தான் மூழ்கியிருந்தார். அவரை தொந்தரவு செய்யாமல், சுற்றிலும் பார்வையை ஓட்ட, லாவண்யா அங்கிருந்த மரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த மாங்காவை பறித்துக் கொண்டிருக்க அவளுடன் பேச்சுக் கொடுத்தபடி இணைந்து கொண்டான்.

பிறகு, பேசியபடியே வீட்டை சுற்றி மீண்டும் முன்பக்கம் வந்து விட்டனர். அதே நேரம் விஷ்ணுவும் பூப்பறித்துக் கொண்டு வர, அதை வாங்கிக் கொண்டு லாவண்யா உள்ளே சென்று விட்டாள்.

வருணா, குளித்து விட்டு வந்த போது ராதிகா அப்போதும் போன் தான் பேசிக் கொண்டிருந்தார். வருணா யோசனையாக பார்த்தபடியே நிற்பதை கண்டு, அவளுக்கு ஏதும் தன்னிடம் கேட்க நிற்பது போல தோன்ற! தற்சமயம் அழைப்பை துண்டித்து விட்டு வர,

"ஏதும் முக்கியமான விசயமா அத்தை. நான் குளிக்கப் போனதிலிருந்து இங்கே தான் போன் பேசிட்டு இருந்தீங்களா?" என்றாள்.

"ஆமாம் டா. அண்ணன் பையனுக்கு பொண்ணு பார்க்க போறாங்க!. அது விசயமா அம்மா போன் பண்ணி விவரம் சொல்லிட்டு இருந்தாங்க" என்றவர். "தலை ஈரமாயிருக்கு பாரு. நல்லா டவலாள் துடை. நான் சாம்பிராணி போடறேன். அப்போ தான் சளி பிடிக்காது" என்றபடியே கொல்லைப்புற தாழிட்டு விட்டு உள்ளே செல்ல, வருணாவும் அவரை பின் தொடர்ந்தாள்.

அடுத்தடுத்த அவரவர் வேலையில் மூழ்க, பஞ்சாயத்துக்கு சென்றவர்கள் திரும்பி வந்தனர். வேணி விவரம் கேட்க, " இனிமே நம்ம குடும்ப விசயத்தில் தலையிடக் மாட்டோம்னு பஞ்சாயத்துல சொல்லியிருக்காங்க. மீறினால், ஊரை விட்டு தள்ளி வைச்சிடுவாங்க. பிறகு, நாம அவங்களுக்கு எதிரா என்ன நடவடிக்கை எடுத்தாலும்! ஊர் நம்ப பக்கம் தான் நிற்கும். அதனால அடங்கி தான் இருக்கனும்" என்றார்.

பிறகு பொதுவான விசயங்களை பேசி விட்டு, " நாங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்பறோம் பா. பையனுக்கு பரிட்சை இருக்கு" என்றார் ராஜூ.

"ஆமாம் பா. பரிட்சை முக்கியம்ல. லீவுக்கு பிள்ளைகளை கூப்பிட்டுட்டு வா பா " என்றார் கோபால்.

"கண்டிப்பா டா " என்றார் ராஜூவும். மதிய உணவை உண்டு விட்டு, ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிறனர். லாவண்யாவுக்கு இங்கிருந்து கிளம்ப மனமேயில்லை. இதற்கு மேல் பள்ளிக்கு விடுமுறை சொல்ல முடியாது என்பதால் சுணக்கத்தை வெளிக்காட்டாமல் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

லாவண்யாவுக்கு பிடித்தமான இனிப்பை பேக் செய்து கொண்டு வந்த வருணா, " ஏன் லாவி. நான் குளிக்கும் போது பேட் கேட்டேனே? நீ தான் கொண்டு வந்து கொடுத்தியா?" என்றாள்.

"இல்லையே வரு. அம்மா கொண்டு வந்து கொடுத்திருப்பாங்க " என்றபடியே மற்ற லக்கேஜை வெளியில் எடுத்து செல்ல,

இதை கேட்ட வருணாவுக்கு தான் திக்கென்று இருந்தது. உடம்பெல்லாம் ஜிம்மென்ற ஒரு உணர்வு, பாதத்திலிருந்து ஏறுவது போல தோன்ற! பயந்து விட்டாள்.

'இவங்க இரண்டு பேருமே இல்லைனா! வேற யாரு கொடுத்திருப்பாங்க?. காத்து கருப்பு பிடிச்சிடும்னு சொன்னாதை கேட்காமல், கொல்லைப்புறமே நின்னுட்டு இருந்தோமே! ஒரு வேளை நிஜமாவே காத்து கருப்பு பிடிச்சிடுச்சா!' என்று நினைத்தவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது. பிறகு என்ன? ராஜூ குடும்பம் இங்கிருந்து கிளம்பிய அடுத்த நொடியே! ஜுரத்தில் விழுந்து விட்டாள்.

ஈஸ்வருக்கு பரிட்சையும் முடிய, ராஜூவுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தான். அன்று மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்த போது, ராதிகா போனில் வெகு தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். லாவண்யாவின் முகமும் சரியில்லை. ஈஸ்வர் வந்ததை கண்டு,

" அண்ணணுக்கு சாப்பாடு வை. நான் பேசிட்டு வரேன்" என்று அனுப்பி வைத்தார்.

சாப்பாடு எடுத்து வந்தவளின் முகம் சரியில்லாததை கண்டு, " என்னாச்சு லாவண்யா? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?. அம்மா யாருக்கிட்ட பேசிட்டு இருக்காங்க?அம்மாச்சியிடமா?" என்றான் டைனிங் டேபிளில் அமர்ந்தபடி

தட்டில் சாப்பாட்டை பரிமாறிக் கொண்டே, " ஏன் ணே நிஜமாவே பேய் இருக்கா?" என்றவளின் முகத்தில் அவ்வளவு பீதியிருந்தது.

"என்ன உளர்ற?. பேய் படம் ஏதும் பார்த்தியா?" என்றான் ஈஸ்வர் உணவை பிசைந்தபடியே

அருகிலிருந்த சேரில் தானும் அமர்ந்து கொண்டு கிசுகிசுப்பாக, " நம்ம வருணா இருக்காள்ள!" என்று பீடிகையாக ஆரம்பிக்க,

ஈஸ்வர் , அவள் பேசிவதை காதில் வாங்கியபடி சாப்பிட ஆரம்பித்திருந்தான்.
 

Sirajunisha

Moderator
"அவ குளிக்க போன போது டிரஸை எடுக்காமல் போயிருக்கா!. பிறகு குளிச்சிட்டு டிரஸ் எடுத்துக் கொடுக்க, அம்மாவை கூப்பிட்டிருக்கா!. அவளுக்கு டிரஸ் எடுத்து கொடுத்திருக்காங்க. அவளும் டிரஸ் பண்ணிட்டு வந்துட்டாளாம்!. ஆனால்.. " என்று சஸ்பென்ஸாக நிறுத்த,

ஈஸ்வர் அவளை நிமிர்ந்து பார்த்தான். " அதை அம்மா எடுத்துக் கொடுக்கலையாம். அவங்க ரொம்ப நேரமா போன் பேசிட்டு இருந்திருக்காங்க!. வீட்டில விசாரிச்சப்போ வேறு யாருமே எடுத்துக் கொடுக்கலையாம்!" என்றதும்!

ஈஸ்வருக்கு அன்று தான் எடுத்துக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. தன்னிடம் சொல்வதால் டிரஸ் என்று தங்கை பூசி மெழுவது புரிய, "வேற யாராவது .. " என்றவனை இடைமறித்தவள்.

"அதெல்லாம் விசாரிச்சாச்சு விஷ்ணு முதற்கொண்டு, யாருமே இல்லையாம். இதில் பயந்து போய் அவளுக்கு ஜுரம் வந்திடுச்சு. 108 டிகிரியாம்" என்றதும்!

ஈஸ்வர் நெற்றியை தேய்த்து கொண்டான். 'இதென்னடா வம்பா போச்சு!' என்று நினைத்து,

"பிறகு, பூசாரி வந்து மந்திரிச்சு விட்டு திருநீறு பூசி விட்டிருக்கார். இப்போ கொஞ்சம் பரவாயில்லையாம். வந்ததும்! போன் பேசலைன்னு அம்மா போன் பண்ணவும், கோசலை அத்தை புலம்பி தள்ளிட்டாங்க. அப்பப்போ! வருவுக்கு திட்டு வேற! சொன்ன பேச்சு கேட்காமல், சாயங்கால நேரத்தில கொல்லைப்பக்கம் போறா! அப்படி இப்படின்னு!.

இதில வேற! இனி இந்த மாதிரி காத்து கருப்பு எதுவும் அவளை தொடரக் கூடாதுன்னு பால் குடம் எடுக்க வைக்கிறேன்னு வேண்டியிருக்காங்களாம் அத்தை" என்றாள்.

"நல்ல வேலை தீ மிதிக்க வைக்கிறேன் வேண்டிக்களை" என்றவன். "இவங்க யாரும் கவனிக்கலை என்றால்! அதற்கென்று பேய் வந்ததாகவா அர்த்தம்?.அந்த நேரம் பக்கத்து வீட்டுக்காரங்க, தெரிந்தவர்கள் கூட வந்திருக்கலாம். எல்லாரும் வேலையாய் இருந்ததை பார்த்துட்டு, அந்த பொண்ணு கேட்டதை எடுத்து கொடுத்துட்டு கிளம்பியிருக்கலாம்!" என்று அவன் உண்மையை சொல்ல முடியாமல் பூசி மெழுக,

"அப்படியே வந்தாலும்! குரல் கூடவா கொடுக்காமல் பேசாமலா போவாங்க?" என்று மற்றொரு சந்தேகத்தை எழுப்ப,

"இதை ஏன் பேய், காத்து கருப்புன்னு யோசிக்கிற! ஏதாவது சாமியே கொண்டு வந்து கொடுத்திருக்கலாம்ல!. இங்கே பாரு லாவண்யா பயம் தான் பெரிய பேய்!. அந்த எதிர்மறை எண்ணத்தை மாற்றி, ஏதோ சாமியே வந்து உதவி பண்ணியிருக்குன்னு நேர்மறையா யோசித்தால்! பயம் எப்படி வரும்!" என்றதும்!

லாவண்யா யோசிக்க தொடங்க, ' எப்பா! சின்னதா உதவி செய்துட்டு, அதை மறைக்க எவ்வளவு உருட்ட வேண்டியிருக்க!' என்று மனதிற்குள் புலம்பியவன். வேகமாக சாப்பிட்டு முடித்து கடைக்கும் கிளம்பி விட்டான்.

அடுத்தடுத்து விஷ்ணு, ஈஸ்வர் இருவரும் பள்ளிப் படிப்பை முடிக்க, ஈஸ்வர் டெக்ஸ்டைல் சம்பந்தமான பி. டெக் படிப்பை எடுக்க, விஷ்ணு விவசாயம் சம்பந்தமான தொழில் படிப்பை எடுத்திருந்தான். எனவே படிப்பில் கவனம் செலுத்த, ஈஸ்வர் சோலையூர் வர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் அதற்கு மாறாக வாவவண்யா மற்றும் வருணாவின் நட்பு பலப்பட்டிருந்தது.

இரண்டு வருடங்கள் கடந்திருக்க, இருவருக்கும் பத்தாவது படிப்பிற்கான பரிட்சை முடிவுகள் வரும் நாள். பரிட்சை எழுதி விட்டு சோலையூர் சென்றிருந்த லாவண்யா ஒரு வாரம் முன்பு தான் வீட்டிற்கே வந்திருந்தாள்.

முதல் நாள் மாலையிலிருந்தே ராதிகா ஆரம்பித்து விட்டார். " ஏன் டி 450க்கு மேல மார்க் வந்திடுமா?" என்றார்.

"ஏன் மா ஆசைப்படலாம்! பேராசையெல்லாம் படக் கூடாது" என்று நொடித்தாள்.

"வருசம் முழுசும் படிச்சு இந்த மார்க் கூட எடுக்க முடியாதா?. உங்க அண்ணன் 470க்கு மேல எடுத்தான் ஞாயாபகம் இருக்கில்ல?"

"வீட்டுக்கு ஒருத்தர் நல்லா படிச்சா போதுமா? எங்கிட்ட அதையெல்லாம் எதிர்பார்க்காத!"

"இதை அப்படியே உங்க அப்பாவிடம் சொல்லேன்! அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!" என்றார் நக்கலாக

அதில் ஜெர்க்கானவள். " எம்மா புரியாமல் பேசாதம்மா. பரிட்சை எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?அதுவும் அந்த சையின்ஸ் பேப்பரு அவ்வளவு டஃப். சின்ன பிள்ளைக்கு பரிட்சை எழுதுதே கொஞ்சம் ஈஸியா கொடுப்போமேன்னு தோணுதா?

வீட்டுல பொண்டாட்டிட்ட சண்டை போட வேண்டியது!. அந்த கோவத்தை கேள்வி தாள் எடுக்கிறதுல காமிக்க வேண்டியது. அவங்க படிக்கும் போது, இப்படி கஷ்டமா கொடுத்திருந்தால்! இவங்களெல்லாம் பரிட்சை எழுதி பாஸ் பண்ணி, இப்படி வாத்தியாரா வந்திருக்க முடியுமா? கொஞ்சமும் பழசை நினைச்சு பார்க்க வேண்டாம்!" என்று சலித்துக் கொள்ள!

"இப்போ என்ன தான்டி சொல்ல வர்ற?"

" முன்னூறு மார்க் வந்தாலே நீ செஞ்ச புண்ணியம் தான்னு சொல்ல வர்றேன்!.அவ்வளவு டஃப்பு. நிறைய புண்ணிய செஞ்சிருக்கல்ல?" என்று கேள்வி வேறு கேட்க,

ராதிகா எல்லாப் பக்கமும் தலையை உருட்டி வைத்தார். "அது!" என்று விட்டு உள்ளே சென்று விட்டாள். ராதிகாவுக்கு தான் பீதியாகியது. அவசரமாக சாமிக்கு ஒரு வேண்டுதலை வைத்து கொண்டார்.

மறுநாள் காலை பயபக்தியோடு பூஜையறையில் சாமி படங்களின் முன் அமர்ந்து சாமி கும்பிட்டு கொண்டிருந்தாள். ராதிகா கையை பிசைந்தபடி அறைக்கும் கூடத்துக்குமாக அலைந்து கொண்டிருந்தவருக்கு, அழைப்பு வர,

"ஏய்! உங்க அப்பா தான்டி மார்க் என்னென்னு கேட்க கூப்பிடுறாங்க!" என்றார் பதட்டமாக

"நெட்டு கிடைக்கலைன்னு சொல்லுமா!" என்று விட்டு பக்தியில் மூழ்க,

அழைப்பை இணைத்தவர். அவர் கேட்பதற்கு முன்பே, " இங்கே நெட்டு சரியா கிடைக்கலைங்க சுத்திட்டே இருக்கு" என்றார்.

"அதெல்லாம் ஈஸ்வர் பார்த்து மார்க் அனுப்பியிருக்கான். 390 தான் எடுத்திருக்கா!. கூப்பிடு அவளிடம் நான் கேட்கிறேன். இதெல்லாம் ஒரு மார்க்கா?" என்று ராஜூ எகிற,

"அவ்வளவு மார்க் எடுத்திருக்காளா? பரவாயில்லையே! பரிட்சை கஷ்டமா இருந்துச்சுன்னு புலம்பினாள். நான் கூட பையிலாயிடுவாளோன்னு நினைச்சேன். பரவாயில்லை நல்ல மார்க் தான்" என்றவர்.

"இப்போ தேவையில்லாமல் அவளை திட்றதை விட்டுட்டு, ப்ளஸ் ஒன் சேர்க்க அப்ளிகேஷன் வாங்கிட்டு வாங்க" என்று விட்டு,

"ஹேய் லாவண்யா! நீ 390 மார்க்காம்!' என்றபடி அழைப்பை துண்டித்து விட்டார்.

"பொண்ணுக்கு மேலே அம்மா இருக்கா!" என்று முணுமுணுத்தபடி மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் ஈஸ்வர், ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தான்.

காலை உணவை முடித்து பொதுவான பேச்சுக்களை ஆரம்பித்த போது, " என்ன குரூப் படிக்க போற லாவண்யா?" என்றான் ஈஸ்வர்.

"இன்னும் முடிவு பண்ணலைனா" என்றாள்.

"நீ சயின்ஸ் குரூப் எடு. டாக்டருக்கு படிக்கலாம்" என்று ஆலோசனை கூற,

"சயின்ஸ் சரியா வராது ணா" என்று முகத்தை சுருக்கினாள்.

அப்போது அங்கே வந்த ராஜு, " ஈஸ்வர், வருணாவை மேற்கொண்டு என்ன படிக்க வைக்கலாம்னு ராமன் கேட்டார் பா" என்றபடி அங்கிருந்த நீள் இருக்கையில் அமர்ந்தார்.

புருவம் சுருக்கி பார்த்தவன். "அந்த பொண்ணு என்ன படிக்கனும்னு அவங்க தான் பா முடிவு பண்ணணும். நம்ம என்ன சொல்ல முடியும்?"

"அ.. அது " என்று தடுமாறியவர். "உனக்கு எது படிச்சா நல்லதுன்னு தெரியுமேன்னு கேட்கிறாங்க பா " என்றார் சமாளிப்பாக

"இதில் என்னுடைய ஆலோசனையோ! ஏன்? அவங்க அப்பா அம்மாவோட விருப்பம் கூட இரண்டாவது பட்சம் தான். அந்த பொண்ணுக்கு என்ன விருப்பமோ அந்த குருப்பை எடுத்து படிக்க சொல்லுங்க" என்று விட்டான்.

ராஜூவும் ராதிகாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அதை கண்டு கொள்ளாமல்,

"லாவண்யா, நீ சயின்ஸ் குரூப் எடுக்க போறதில்லையா?. படிச்சு டாக்டர் ஆவேன்னு பார்த்தேன்" என்றான் கிண்டலாக

"ஏதே! டாக்டரா! அதெற்கெல்லாம் வாய்ப்பில்லை" என்றாள்.

"படித்தால் வாய்ப்பிருக்கே" என்றான் விடாமல்

"என்ன அண்ணா இப்படி பேசுற?. கொஞ்சம் முன்னாடி வருணாவுக்கு மட்டும் அவளுக்கு விருப்ப பாடத்தை எடுக்க சொன்ன?. என்னை மட்டும் சயின்ஸ் குரூப் எடுக்க சொல்லி, மறைமுகமா கட்டாயப்படுத்திற?" என்றாள் ஆதங்கமாக

"அந்த பொண்ணும் நீயும் ஒன்னா?. நாம சொல்லி ஏதாவது குரூப் எடுத்துட்டு பிறகு அதை படிக்க கஷ்டப்பட்டால்! அவங்களுக்கும் சங்கடம் நமக்கும் சங்கடம் " என்றான் நிதர்சனத்தை உணர்ந்து

"எப்படியிருந்தாலும் சயின்ஸ் குரூப் மட்டும் வேணாம். அக்கௌண்ட்ஸ் எடுக்கிற ஐடியாவில் இருக்கோம்"

"இருக்கோம் னா?" என்றான் புருவத்தை சுருக்கி

"நானும் வருவும் தான்!. அக்கௌண்ட்ஸ் படிச்சா பேங்க், டி.என்.பி.சி, பைனான்ஸ், மார்க்கட்டிங், சி.ஏன்னு நிறைய ஆப்சன் இருக்குன்னு சொன்னாள். எனக்கு சயின்ஸ் எடுக்க விருப்பமில்லை. அதனால நானும் அதை தான் எடுக்க போறேன்". என்று எழுந்து சென்று விட்டாள்.

"அந்த பொண்ணுக்கு என்ன வேணும்னு தெளிவா இருக்கு!. லாவண்யா தான் முடிவு எடுக்க தெரியாமல் இருக்கா" என்று எழுந்து சென்று விட்டான். பெற்றவர்களுக்கும் அது புரிந்தது தான்.

இதே போல அங்கே சோலையூரில், "அக்கௌண்ட்ஸ் படிச்சா பேங்க், டி.என்.பி.சி, பைனான்ஸ், மார்க்கட்டிங், சி.ஏன்னு நிறைய ஆப்சன் இருக்குன்னு லாவண்யா சொன்னாள். எனக்கு சயின்ஸ் எடுக்க விருப்பமில்லை. அதனால நானும் அதை தான் எடுக்க போறேன்" என்று வார்த்தை மாறாமல் அதே வசனத்தை சொல்லிக் கொண்டிருந்தாள் வருணா.

"என்னங்க பண்றது?" என்றாள் கோசலை

"அவளுக்கு என்ன விருப்பமோ அதையே படிக்கட்டும்னு ஈஸ்வர் சொன்னதா இப்போ தான் ராஜூ போன் பேசும் போது சொன்னார். வருணாவுக்கு அது தான் விருப்பம்னா அதையே படிக்கட்டும் விடு" என்றார் ராமர். அதற்கு மேல் கோசலையும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

சொன்னது போலவே இருவரும் ஒரே குரூப் தான் எடுத்திருந்தனர். அதனால் ஒருவருக்கும் ஏற்படும் சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வர். தூரம் அதிகமாக இருந்தாலும் போன் அவர்களை நெருக்கமாக ஆக்கியிருந்தது.

அதுவும் பள்ளி முடிந்து வந்ததிலிருந்து மறு நாள் பள்ளி கிளம்பும் வரை இருவரும் போனிலேயே இருப்பர். தூங்கும் நேரம் தவிர!. இங்கே விஷ்ணுவும் அங்கே ஈஸ்வரும் அருகே இல்லாததால் கண்டிக்கவும் ஆள் இல்லை. பெற்றவர்கள் படிப்பு பற்றி தானே பேசுகிறார்கள் என கண்டு கொள்ளவில்லை.

அன்று ஈஸ்வர் வீடு வந்த போது, லாவண்யாவின் போன் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது. போனை சார்ஜரில் போட வந்தவன். அருகில் இருந்த போனை கண்டு விட்டு, அதுவும் அதில் வருணா என்ற பெயரை கண்டு விட்டு அழைப்பை இணைத்தவன்.

'ஹலோ ' என்பதற்கு முன்பே, "எவ்வளவு நேரம் கால் பண்றது லாவி. அப்படி என்ன வேலை செய்யற?" என்றவள்.

"சரி இப்போ சொல்றது சரியா இருக்கான்னு பாரு!" என்று விட்டு, " அன்புள்ள மாமாவுக்கு, தாங்கள் அனுப்பிய துணிகள் கிடைத்தது. எனக்கு பிடித்த நிறமான சிவப்பு நிறத்தில் வாங்கி அனுப்பியிருந்தீர்கள். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வருகின்ற திருவிழாவுக்கு இதையே அணிந்து கொள்ளவேன். தாங்களும் திருவிழாவுக்கு குடும்பத்தோடு வரவேண்டும் " என்றவள்.

"டூ அட்ரஸ்ல சக்திவேல், சன் ஆஃப்.. " என்றவளை இடைமறித்தவன்.

"நீங்க எப்போ உங்க மாமா குடும்பத்தோட பேச ஆரம்பிச்சீங்க?" என்றான் பட்டென்று

திடீரென்று கேட்ட ஆண் குரலில் திகைத்தவள். போனை எடுத்து, தப்பான எண்ணிற்கு எதுவும் அழைத்து விட்டோமோ என்று பார்த்தாள். அது லாவண்யாவுடைய எண் தான்!. வேற யார் பேசறாங்க? ராஜூ மாமாவோ? ' என்று நினைத்தவள்.

"மாமா " என்றாள்.

"அதை தான் கேட்கிறேன்? உங்க மாமாவோட எப்போ பேச ஆரம்பிச்சீங்கன்னு?. அதென்ன அவங்க டிரஸ் அனுப்புறது?. என்ன புதுசு புதுசா நடக்குது?. இதில திருவிழாவுக்கு நீங்க அந்த டிரஸ் தான் போடுவீங்களோ?. அப்புறம் அதென்ன அன்புள்ள மாமா?.. இந்த மானே! தேனே! பொன்மானே என்கிற மாதிரியா?" என்றான் எரிச்சலாக

நீண்ட பேச்சில் அது ஈஸ்வர் என்று யூகித்தவள். " அ.. அது லட்டர்.. மாமாவுக்கு " என்றதை இம்முறையும் இடையிட்டவன்.

"அது தான் எதுக்குன்னு கேட்கிறேன்?. அன்றைக்கு நடந்ததெல்லாம் மறந்து போச்சா?.கொஞ்சம் விட்டிருந்தால் அன்றைக்கே உன்னை தூக்கியிருப்பானுங்க!. பழசை மறந்துட்டு அவர் துணி அனுப்புவாராம்!. இவங்க அதை கட்டிக்குவாங்களாம்!. அறிவில்லை உனக்கு!. இதெல்லாம் அத்தை, மாமாவுக்கு தெரியுமா?. தெரிஞ்சு தான் இதெல்லாம் நடக்குதா?.

முதலில் பாசமா லட்டர் வரும். பிறகு, அதுவே காதல் கண்றாவின்னு வந்து நிற்கும்!. ஒழுங்கா படிச்சோமா? மார்க் வாங்கினோமான்னு இருக்கனும். தேவையில்லாத வேலையை பார்த்துக்கிட்டு இருக்க கூடாது. புரியுதா?. வேற எதுவும் தப்பா கேள்விபட்டேன்! தொவைச்சிடுவேன் !" என்றான் மிரட்டலாக. வார்த்தைகளிலும் அவ்வளவு அழுத்தம்.

அவனது கோபத்தை கண்டு, அதிர்ந்தாலும்! அவனது தவறான புரிதலை கண்டு அழுகையே வந்து விட்டது. அதுவும் காதல் என்றெல்லாம் ஈஸ்வர் பேசி வைக்க, அவனிடம் விளக்கம் சொல்லி பேச தோன்றாமல்! அழைப்பை துண்டித்தவள். கையோடு போனை அணைத்தும் வைத்து விட்டாள்.

பதில் வராததால் போனை காதிலிருந்து எடுத்து பார்த்தவனுக்கு, அழைப்பு துண்டிக்க பட்டிருப்பது தெரிய, " திமிர் புடிச்சவ" என்று முணுமுணுத்தபடி போனை மேஜையிலேயே வைத்து விட்டு நகர்ந்து விட்டான்.

பதினைந்து நிமிடம் கழித்து வந்த லாவண்யா, வருணாவுக்கு அழைப்பு விடுத்தாள். போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய, ' சார்ஜ் போட்டு விட்டு பேசுவாள்!' என்று சாதாரணமாக இருந்தாள்.

அதோடு, ஈஸ்வரும் லாவண்யாவை வேறு எதையும் யோசிக்க விடாமல், "வா ஒரு சேன்ஜ்க்கு வெளியே சென்று வரலாம்" என்று கையோடு ஷாப்பிங் அழைத்து சென்று விட்டான்.

மறுநாளும் போன் அணைத்து வைக்கப்பட்டிருக்க, லாவண்யாவுக்கு அழைத்து விட்டாள். காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிரருக்கும் போது தான் பேச ஆரம்பித்திருந்தாள். மூவரும் பேச்சை கவனித்தாலும், யாரும் தடுக்கவில்லை.

எடுத்தவுடனேயே, " என்னாச்சு அத்தை?. வரு போன் ஏன் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு?" என்றாள்.

"சார்ஜ் இல்லை போலம்மா" என்றார் வருத்தமாக

"நீங்க ஏன் டல்லா பேசுறீங்க அத்தை?" என்றாள் குரலின் வேறுபாட்டை உணர்ந்து! அதோடு போனையும் ஸ்பீக்கரில் போட்டு விட்டு சாப்பிட்டபடியே பேச்சை கேட்க ஆரம்பித்தாள்.

"அதை ஏன் மா கேட்கிற?.நேற்று சாயங்காலம் விசேஷ வீட்டுக்கு போய் விட்டு வந்து பார்த்தால்!. வருணாவுக்கு முகமெல்லாம் சிவந்து கண்ணு, முகமெல்லாம் வீங்கி போய் இருக்கு!"

"ஏன் அத்தை ? ஏதாவது திட்டினீங்களா? அழுதாளா?" என்றாள்.

"நான் ஏன் மா திட்ட போறேன்!. வரும் போதே அவ முகம் சரியில்லாததை கவனிச்சேன்!. தொட்டு பார்த்தால் ஜூரம் நெருப்பா கொதிக்குது!"

"அச்சச்சோ!"

"ஆமாம்மா!. பிறகு டாக்டரிடம் அழைச்சிட்டு போய் விஷ்ணு தான் காமிச்சிட்டு வந்தான். இப்போ மாத்திரை கொடுத்திருக்கேன். தூங்குறா!" என்றார்.

"எதனால அத்தை ஜுரம்?. முன்ன மாதிரி எதையாவது பார்த்து பயந்துட்டாளா?. இவ பயந்தால் தானே ஜுரம் வரும்?" என்றாள் யோசனையாக

"என்ன தான் இவளுக்கு ஊரில் இல்லாத பயமோ?. நாயை கண்டால் பயம்! பேயை கண்டால் பயம்! வாத்தியார் திட்டினால் பயம்!. இராத்திரியில் எதிர் வீட்டுக்கு போக பயம்!" இப்படி எதற்கெடுத்தாலும் பயந்து ஜுரத்தை வரவழைத்தால் என்ன தான் செய்யறது?" என்றார் அலுப்பாக.

அப்போது அங்கு வந்த சிறுமி, " பெரியம்மா, அக்கா பள்ளிக்கூட பாடம் எழுதி தரேன்னுச்சு எழுதிடுச்சா?" என்றபடி வந்து நின்றாள்.

"என்ன பாடம்?" என்று கோசலை கேட்பது நன்றாக கேட்டது.

"மாமாவுக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதனும். தமிழ் பாடம்" என்றதும்!

இதை கேட்ட, ஈஸ்வருக்கு சாப்பிட்ட உணவு புரையேறியது. அவன் விடாமல் இரும,

"பார்த்து சாப்பிடுப்பா " என்றபடி ராஜூ அவன் அருகே தண்ணீரை நகர்த்தி வைத்தார். ஒரு வழியாக நீரை குடித்து சமன் செய்தவன்.

'பாடத்துக்காக எழுதின லட்டரை நாம தான் தப்பா புரிந்து கொண்டு, அந்த பொண்ணை திட்டிட்டோமோ!. அதில ஜுரத்தை வேறு இழுத்து வைச்சிருக்கு இந்த பொண்ணு!. நேற்றே விசயத்தை தெளிவா சொல்ல வேண்டியது தானே!' என்று அறிவு சப்பை கட்டு கட்ட,

'நேத்து நீ கொஞ்சம் ஓவரா தான் பேசிட்ட!. அதோட லட்டர் எழுதுற காலமா டா இது?. யோசிக்க வேணாம்?' என்று மனசாட்சி குற்றம் சாட்ட, கழுத்தை தேய்த்து விட்டுக் கொண்டவன். ' இனி அந்த பொண்ணுக்கிட்ட பேச்சே வைச்சுக்க கூடாதுப்பா. சின்ன விசயத்தை பெரிசா யோசிச்சு பயந்து! நம்மை வம்புல மாட்டி விட்டுடுவா!' என்று நினைத்தவன். அதற்கு மேல் சாப்பிட முடியாமல் போதுமென்று கை கழுவி எழுந்து விட்டான்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது!. தவறாக நினைத்து பேசியதற்கு என்ன செய்ய போகிறான்?. நேரில் சந்தித்தால் மன்னிப்பு கேட்பானா?. சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

Thread 'சிராஜூநிஷா வின் "சாய்ந்தேனே நானும் மெல்ல " - கருத்து திரி' https://www.narumugainovels.com/threads/23801/
 

Mathykarthy

Well-known member
தெனாலி கமல் போல எல்லாத்துக்கும் பயந்து காய்ச்சலை இழுத்து விட்டுக்கிறா 🤣🤣🤣🤣🤣
அவன் திட்டும் போதே இந்த மாதிரி இந்த மாதிரி ன்னு சொல்றதுக்கு என்ன 🤭🤭🤭
 

Sirajunisha

Moderator
தெனாலி கமல் போல எல்லாத்துக்கும் பயந்து காய்ச்சலை இழுத்து விட்டுக்கிறா 🤣🤣🤣🤣🤣
அவன் திட்டும் போதே இந்த மாதிரி இந்த மாதிரி ன்னு சொல்றதுக்கு என்ன 🤭🤭🤭
Pls comments thread vanga da.
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 3
காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை!. இதோ இன்று பள்ளிப்படிப்பின் கடைசி நாள்!. பரிட்சை எழுதி முடித்து விட்டு, வருணா தோழிகளுடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள். மதிய வேளை அவ்வளவாக தெருக்களில் யாரும் இல்லை. குறைந்தது பத்து பெண்களாவது இருப்பர். ஓரே ஊர்!ஒரே பள்ளி என்பதால்! சேர்ந்தே போய் வருவதும் வழக்கம்.

கடைசி நாள் என்பதால்! அன்று தாமதமாகவே அரட்டை அடித்தபடி வந்து கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் முன், ஒரு பைக் வந்து நின்றது. சுவாரஸ்ய பேச்சில் இருந்த பெண்கள் திடுக்கிட்டு நின்றனர்.

"சாரி சிஸ்டர்ஸ் " என்றது ஒரு ஆளுமையான குரல்.

மூன்று, நான்கு பேராக நடந்து வந்து கொண்டிருந்ததில், கடைசியாக நின்றிருந்த வருணா, 'யாருடா அது?' என்று நினைத்து,

முன்னே நின்றிருந்த பெண்களில் உயரமும் குறைவுமாக இருந்த இடைவெளிகளில் பார்க்க!. கவனத்தை கவரக் கூடிய அழகான இளைஞன் பைக்கில் அமர்ந்திருந்தான்.

பார்ப்பதற்கு காலேஜ் படிப்பவன் போல் இருந்தான். பைக்கில் அமர்ந்திருந்த போது அவன் உயரமானவன் என யூகிக்க முடிந்தது. உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்தான். அளவான மீசை, காற்றிலாடி கேசத்தை கோதி விட்டபடி பேசியது மிக அழகாக இருந்தது. வெயிலுக்கு கூலிங்கிளாஸ் போட்டிருந்ததால்! அவனது கண்களை பார்க்க முடியவில்லை. எனினும் பெண்களின் மனதை கவரக் கூடிய அழகன் தான்!. இவையனைத்தையும் ஒரு நொடி பார்வையில் அளவிட்டவளுக்கு, அது ஈஸ்வர் என்று ஏழாம் அறிவு உணர்த்தி விட்டது. இவ்வளவு வளர்ந்துட்டாங்க! ' என்று நினைக்கும் போதே!
மீண்டும் அவன் ஏதோ! கேட்பதை கண்டு, கவனம் செலுத்த,

"இங்கே அரிசி மில் கட்டிட்டு இருக்கிற இடத்துக்கு எப்படி போகனும்?" என்றான்.

"அரிசி மில்லா?" என்றாள் ஒருத்தி யோசனையாக

"இங்கே பக்கத்தில் குமராட்சின்னு சொன்னாங்களே?" என்றான்.

"ஓ! குமராட்சி டவுனா அண்ணா!. மெயின் ரோட்டில் போனாளே டவுன் வந்திடும்" என்றாள்.

"இல்லை. ஏதோ குறுக்கு வழி இருக்குன்னு சொன்னாங்களே?" என்றான் மீண்டும்

"அதுவா அண்ணா!. அதோ அந்த மாரியம்மன் கோவில் இருக்குள்ள அதுக்கு பக்கத்திலேயே தெரு ஒன்னு போகும்!. நேர் ரோடு தான். அது வழியாவும் போகலாம். குமராட்சி டவுனுக்கு முன்னாடியே போய் ஏறும் " என்றவள். " ஆனால் அங்கே அரிசி ஆலை ஏதும் கட்டுறாங்களா! என்ன?" என்றாள் அவனிடமே

"ஆமாம். இப்போ தான் ஆரம்பிச்சிருக்காங்க. வேலை நடந்துட்டு இருக்கு" என்றான்.

"அப்படியா? யார் கட்டுறாங்க?. உள்ளூரில் இருக்கிற எங்களுக்கு கூட விசயம் தெரியலை!. வெளியூர்காரங்க வந்து கேட்குறீங்க? " என்றாள் ஆச்சரியமாக

"கோபால் மாமா பையன் விஷ்ணு கட்டுறாப்ல" என்றதும்!

"யாரு! வருணா அண்ணணா?" என்றபடி பெண்கள் அவர்களுக்குள்ளே திரும்பி பின்னால் நின்றிருந்தவளை பார்க்க!

நகர முற்பட்டவன். அந்த பெண்கள் பின்னால் திரும்பி யாரையோ பார்ப்பதை கண்டு, அவர்களை தொடர்ந்து அவனும் பார்வையை அந்த பக்கம் செலுத்த, யாரோ ஒரு பெண், முன்னாடி நின்றிருந்த பெண்ணின் பின்னால் மறைந்து கொள்வது போல தோன்றியது!. சாதாரணமாக நகர்வதை தான் தாம் தப்பாக அர்த்தம் செய்து கொள்கிறோமோ? என்று தோன்றவும்!

"தேங்க்ஸ் சிஸ்டர்ஸ்" என்றபடி அவர்கள் சொன்ன பாதையை நோக்கி பைக்கை ஓட்டியவன். பின்னாடி வரும் வண்டியை கவனிக்க இருந்த கண்ணாடியை சரி செய்ய,

அந்த பெண்கள், ஒருத்தியின் முன்னால் நின்றபடி, ஏதோ கேட்டுக் கொண்டிருந்தனர். இதில் இவனை குறித்து பேசுவதும்! அவனை குறிப்பிட்டு காட்டி பேசுவதும் தெரிய, எதற்கு நம்மை காட்டி விசாரிக்கிறாங்க?' என்று யோசித்தவனுக்கு தீடீரென்று ஏதோ தோன்ற! பைக்கை சடன் பிரேக் போட்டு நிப்பாட்டி விட்டு, அவசரமாக திரும்பி பார்த்தான்.

இப்போது அவர்களுக்குள் பேசியபடி நகர தொடங்கியிருந்தனர். புருவத்தை கட்டை விரலால் வருடியபடி யோசித்தவன். வீட்டிற்கு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று நகர்ந்து விட்டான்.

அவர்கள் சொன்ன வழியில் செல்ல, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மெயின் ரோட்டிற்கு சற்று உள்ளடக்கமாக அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது. வேலையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, அருகிலிருந்த மரத்தின் நிழலில் பைக்கை நிற்பாட்டினான்.

பைக்கிலிருந்து இறங்கி, நடக்கும் வேலையை பார்வையிட்டபடி அங்கே போடப்பட்டிருந்த சிறிய செட்டுக்குள் நுழைய,

உள்ளே மேசையில் கட்டிடத்திற்கான பிளான் வைக்கப்ட்டு அதை இஞ்சினியர் விளக்கிக் கொண்டிருக்க, அதை விஷ்ணு கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். சத்தமிடாமல் தானும் போய் அவன் அருகே நின்று கொண்டான்.

பக்கத்தில் யாரோ நிற்பது போல தோன்ற! நிமிர்ந்து பார்த்தவன்! ஈஸ்வரை கண்டு, " ஹேய்! ஈஸ்வர்!" என்று சந்தோஷமாக கட்டிக் கொண்டான்.

"எப்படி டா இருக்க?" என்றான் ஈஸ்வரும்.

"நான் நல்லாயிருக்கான். நீ எப்படி இருக்க?. எப்போ வந்த?"

"இப்போ தான் வந்தேன். நீ இங்கே இருக்கேன்னு சொன்னாங்க. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்." என்றான்.

"இவர் தான் நம்ம இஞ்சினியர் அருண் சார். " என்று இவர்களை பார்த்துக் கொண்டிருந்தவரை அறிமுகப்படுத்தினான்.

"ஹலோ சார். ஐ அம் ஈஸ்வர். விஷ்ணுவோட பிரண்ட்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,

"பெஸ்ட் பிரண்ட்" என்று அதை திருத்தினான் விஷ்ணு.

அழகாக புன்னகைத்தவன். "வெர்க் ஸ்டார்ட் பண்ணியாச்சா?" என்றபடி ப்ளானில் கவனத்தை செலுத்த,

விஷ்ணு, இஞ்சினியர் சொன்ன சில மாற்றங்களை பற்றி கூற, அதற்கான காரணத்தை ஈஸ்வர் கேட்க! என்று மூவரும் வேலை பற்றிய விவரங்களில் மூழ்கினர். சிறு பையன்களாக இருந்தாலும்! அவர்கள் கேட்ட விவரங்கள், செய்து தர கேட்டவை அனைத்துமே! ஏற்கனவே இதை பற்றி ஆழ்ந்து யோசித்தே முடிவெடுக்கின்றனர் என்று அனுபவஸ்தரான அருணுக்கு நன்கு புரிந்தது.

வெகுநேரம் அங்கேயே விஷ்ணுவுடன் ஈஸ்வரும் இருக்க, " ஈஸ்வர், நீ வீட்டுக்கு போ. நான் வர லேட்டாகும்" என்றான்.

"பரவாயில்லை டா. உன் கூடவே வரேன்"

"ரொம்ப நேரம் டிராவல் பண்ணி வந்திருப்பே!. வந்தவுடனே இங்கே வந்துட்ட!. நானும் சீக்கிரமே வந்திடுவேன். நீ வீட்டுக்கு போய் சாப்பிடு. சாப்பிடாமல் வேற வந்திருக்க!. சிமெண்ட் லோடு வந்திடும். வந்தவுடனே இறக்கிட்டு வந்திடுறேன்" என்றான்.

"எனக்கும் பசிக்குது தான். சரி. நீனும் சீக்கிரமே வந்திடு" என்று விட்டு, ஈஸ்வர் கிளம்பி விட்டான்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் வீட்டு வாயிலில் நிற்க, "வா ஈஸ்வர். விஷ்ணு இப்போ தான் போன் பண்ணினான். வா, சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு" என்றபடி வாசலிலேயே வரவேற்றார் வேணி.
 

Sirajunisha

Moderator
பைக்கை நிறுத்தி விட்டு அவர் பின்னாடியே செல்ல, சாப்பிடுவதற்காக அனைத்தும் தயாராக வைக்கப்பட்டிருந்தது.

"வா ஈஸ்வர்" என்றபடி தட்டை எடுத்து வைத்தார்.

"அத்தை, எனக்கு தட்டில் வேணாம். வாழை இலையில் வைங்க. அதில் சாப்பிட ஆசையா இருக்கு " என்றான்.

"அப்படியா! சரி இரு" என்றவர். " வரு.. " என்று அழைக்க ஆரம்பித்து, அப்படியே பாதியிலேயே நிப்பாட்டி விட்டு, "நான் போய் இழையை அறுத்திட்டு வரேன்" என்றதும்.

"நானும் குளிச்சிட்டு வந்திடுறேன் அத்தை " என்றபடி அறைக்குள் நுழைந்து விட்டான்.

அடுப்பங்கரைக்கு நுழைந்தவர். அங்கே வருணா நகத்தை கடித்தபடி நிற்பதை கண்டு, " நகத்தை கடிக்காதன்னு எத்தனை தடவை சொல்றது?" என்றார் அதட்டலாக

அவளது விரலை பார்த்தால் தெரிந்திருக்கும்! நக அருகிலிருந்து சதையை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள். எதிர்பாராமல் ஈஸ்வரின் குரலை கேட்டு பதட்டத்தில் நின்றிருந்தாள். கையை கீழே இறக்கியவள்.

"நான் வீட்டுக்கு போறேன் பெரியம்மா" என்றாள் மெதுவாக

"கொஞ்சம் நேரம் இரு. ஈஸ்வர் சாப்பிட வந்திருக்கான். அவன் குளிச்சிட்டு வரதுக்குள்ள, நான் போய் வாழை இலை அறுத்துட்டு வந்திடுறேன். நீ இந்த அப்பளத்தை பொறிச்சு வைச்சிட்டு, அப்படியே இந்த வெங்காயத்தை அறுஞ்சு வை. ஆம்லேட் போட " என்றபடி, அங்கிருந்த கத்தியை எடுக்க,

"அதான், முட்டைகோஸ் பொறியல், மீன் வறுவல், மீன் குழம்பு எல்லாம் இருக்கே! பிறகு எதற்கு ஆம்லேட் எல்லாம்" என்று நொடிக்க,

"வயசு புள்ளை கல்லு திண்ணா கூட செறிக்கிற வயசு. கொஞ்சமா செஞ்சி வைக்கிறதுக்கே இப்படி பேசுற!. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன். இதே உங்க அம்மா செய்தால்! இன்னும் தடபுடலா செய்திருப்பாள். ஊருக்கு போனவ வரட்டும். எப்படி விருந்து வைக்கிறான்னு மட்டும் பாரு!. எப்படி விருந்து வைக்கனும்னு அவக்கிட்ட கத்துக்கோ!. இல்லை இல்லை. நானே கத்து தர சொல்றேன். அப்போ தான் வாய் நீளாது" என்று திட்டியபடி கொல்லைப் பக்கம் சென்று விட்டார்.

"ம்க்கும். ஒரு ஆளுக்கு எதுக்கு இவ்வளவு பண்றாங்க. அண்ணணுக்கு செய்யும் போது மட்டும் ஒரு குழம்பு, ஒரு கூட்டு. பெரியப்பாக்கு தயிரும் ஊருகாயும் தான். இதில என்னை சொல்றாங்க!" என்று முணுமுணுத்தபடி, சூடாகியிருந்த எண்ணெயில் அப்பளத்தை பொறித்து எடுத்து வைத்தாள்.

அடுத்து மளமளவென வெங்காயத்தை எடுத்து அரிந்து முட்டையை உடைத்து ஊற்றி, வெந்ததும் எடுத்து வைக்கவும், வேணி வாழையிலையோட வரவும் சரியாக இருந்தது.

அதே நேரம் குளித்து விட்டு, ஷேஷ்டியும் கருப்பு சட்டை அணிந்து கைகளை மடக்கி விட்டபடி வந்த ஈஸ்வரின் தோரணையை கண்டு,

"என் கண்ணு! அப்படியே ராஜாவாட்டம் இருக்கப்பா!" என்று தாயின் வாஞ்சையுடன் கைகளாலேயே அவனுக்கு நெட்டி முறித்தார் வேணி.

"ம்க்கும்!. எங்க அண்ணணை பார்த்து எத்தனை பேர் சைட் அடிக்கிறாளுக! அது தெரியாமல்! அடுத்தவங்களை புகழுறாங்க இந்த பெரியம்மா" என்று முணுமுணுத்தாள். அவளது மனசாட்சி, வரும் வழியில் அவனை இஞ்ச் இஞ்ச் பார்த்து! அழகன் என வர்ணித்ததை சமய சந்தர்ப்பம் பாராமல் எடுத்துக் கூற, கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

இங்கே, வாழையிலை போட்டு , ஈஸ்வருக்கு பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தார் வேணி. இடையிடையே, " அப்பளம் எடுத்துட்டு வா மா" என்று குரல் கொடுக்க,

வேறு வழியில்லாமல், அப்பளத்தை கொடுத்து விட்டு போக முயல, " ஆம்லேட் செய்தாச்சா?" என்றார் அடுத்து!

"ம்ம்ம் " என்றதும்!

"எடுத்துட்டு வா " என்றார்.

ஆம்லெட்டை கொண்டு வந்து வைக்க, " அத்தை, சாப்பாட்டில் உப்பு கம்மியா இருக்கு" என்றான்.

"அப்படியா பா" என்றவர். உள்ளே செல்ல திரும்பியவளிடம், " உப்பு எடுத்துட்டு வா " என்றார்.

உப்பை கொண்டு வந்து வைத்ததும். ஈஸ்வர் தண்ணீர் குடித்து விட்டு, வெறும் குவளையை வைக்க, வேணி சொல்வதற்கு முன்பே! குவளையை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

சொம்பு நிறைய தண்ணீரை எடுத்துக் கொண்டு, "எத்தனை தடவை அலையறது' என்று மனதில் திட்டியபடியே, தண்ணீர் சொம்பை ' டொம்' என்று தரையில் சத்தமாக வைக்க,

"ஹக் " என்ற ஈஸ்வர் தொண்டையை பிடித்துக் கொண்டான்.

வருணாவுக்கு திக்கென்றது. " பார்த்து வைக்க மாட்டியா?" என்று கடுகடுத்தவர். " என்னாச்சு பா " என்றார் பதட்டமாக

"மீன் முள்.. தொண்டையில மாட்டிக்கிச்சு " என்றான் சிரமப்பட்டு,

"அச்சச்சோ! இரு பா. இந்தா இந்த சாதத்தை அப்படியே மெல்லாமல் முழுங்கு " என்று அவன் இலையிலிருந்த உணவை எடுத்து ஊட்ட! அதை முழுங்கினாலும், ஒரு மாற்றமும் இல்லை.

வருணா, அவசரமாக உள்ளே சென்று, வெறும் சாதத்தை எடுத்து அதை உருண்டை பிடித்து எடுத்து வர, வேணியும் அடுப்பங்கரைக்கு வந்தவர். அவள் கையிலிருந்த சோற்று உருண்டையை கண்டு, "கொஞ்சம் பெரிய உருண்டையா வேணும. நீ நகரு. நான் தட்டில் வெறும் சாதம் போட்டு உருண்டை பிடித்து எடுத்துட்டு வரேன்" என்றதும்!

கையில் சாத உருண்டையோடு வந்தவள். ஈஸ்வர் சிரமப்படுவதை கண்டு, அவனருகே மண்டியிட்டு அமர்ந்தவள். பதட்டத்தில் அவன் தலையை பற்றி,

"இதை அப்படியே மெதுவா முழிங்கி பாருங்க" என்று அவனது வாயில் ஊட்டி விட்டு விட்டாள். அவள் சொன்னது போலவே! கொஞ்சமாக மென்று அப்படியே சோற்றை விழுங்க, மீன் முள் உள்ளே சென்று விட்டது. இரு முறை எச்சிலை முழுங்கி அதை உறுதி செய்து கொண்டவன்.

அவளது முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல், அவளது கைகளை மெல்ல நகர்த்த, அதுவரை என்ன ஆனதோ? என பரிதவிப்பில் இருந்தவள். தனது கையை அவன் எடுத்து விடவும், சுதாரித்துக் கொண்டு, அவசரமாக எழுந்து தள்ளி நின்று கொண்டாள்.

வேணி சாப்பாட்டோடு வர, " சரியாகிடுச்சு அத்தை " என்றவன். " எனக்கு மீன் வேணாம். சரியா சாப்பிட வரலை " என்று ஒதுக்க,

"அதுக்காக! சாப்பிடாமல் இருக்கிறதா?. வருணா, இந்த மீனை முள்ளு பார்த்து கொடு " என்று ஒரு தட்டில் மீன்களை வைத்து முள்ளு பார்க்க வைத்து விட்டார்.

"பரவாயில்லை அத்தை வேணாம். அவங்களுக்கு எதுக்கு சிரமம்" என்றான் ஒப்புக்காக

" இதிலென்னப்பா இருக்கு. போற வீட்டுல இதெல்லாம் செஞ்சு கொடுக்கத்தானே வேணும். இப்பவே பழகிக்கட்டும்" என்றவருக்கு, பிறகு தான், தன்னையறியாமல் வாய் விட்டது புரிய,

அவசரமாக இருவரையும் நோட்டம் விட்டார். இருவரும் அவரது பேச்சை கவனித்தது போல தெரியவில்லை. அதுவும் ஈஸ்வர், சாப்பிட அமர்ந்ததிலிருந்து, தலையை நிமிர்த்தி கூட வருணாவை பார்க்கவில்லை. அந்த செயல், வேணியை வெகுவாக ஈர்த்தது. எவ்வளவு கண்ணியமா பிள்ளை" என்று மகிழ்ந்து போனார். வருணாவும் கருமமே கண்ணாக மீனில் முள் எடுத்துக் கொண்டிருந்தாள். மகளின் செயலிலும் பரம திருப்தி. தனக்கு தானே தலையை தலையை ஆட்டி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

அப்போது வாசலில், "அம்மா " என்று விஷ்ணுவின் குரல் கேட்க,

"ஐ! அண்ண! .நான் போய் கேட்டை திறந்து விடுறேன்" என்று அவசரமாக எழுந்தாள் வருணா.

"நான் போய் பார்க்குறேன். நீ கவனமாக முள்ளு பார்த்து வை " என்றபடி எழுந்து சென்று விட்டார் வேணி.

முள் பார்த்து வைத்த மீனை கையிலெடுத்தவள். அதை அப்படியே! ஈஸ்வரின் இலையில் வைத்தபடி,

"சாரி அண்ண. நான் கவனமில்லாமல் தண்ணீர் சொம்பை வேகமாக வைச்சிட்டேன் " என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றவளை

அவனது "வாட்!" என்ற அதிர்ந்த குரல் நிறுத்தியது.

வருணா புரியாமல் முழிக்க,

"என்ன சொன்ன?" என்றான் அவளை பார்த்து அழுத்தமாக

"அது.. தண்ணீ வேகமாக.. "

"அதுக்கு முன்னாடி?"

"சாரி.. "

"சாரிக்கு அப்புறம்?"

"அண்ண.. "

"நான் உனக்கு அண்ணணா?" என்று வார்த்தைகளை கடித்து துப்பினான். பார்வையிலோ அவ்வளவு வீரியம். வரும் போது கண்களுக்கு கூலிங் கிளாஸ் போட்டிருந்ததால்! கண்களை பார்க்க முடியவில்லை என வருத்தப்பட்டவளுக்கு, இப்போது கத்தி வீச்சை போன்ற பார்வையை கண்டவளுக்கு, பேசவே பயமாக இருந்தது.

அவளது மிரளும் பார்வையை பொறுட்படுத்தாமல், " கேள்வி கேட்டேன்!" என்று நினைவு படுத்தினான்.

"வயசுல.. பெரியவங்களை அண்ணணு.." என்றவளின் பேச்சை இடைவெட்டியவன்.

"உங்க அப்பா, பெரியப்பாவும் தான் வயசில பெரியவங்க. அதற்கென்று அண்ணனு கூப்பிடுவியா?"

"அதெப்படி?" என்றாள் வேகமாக

"முறைன்னு ஒன்னு இருக்குல்ல!. இனிமே அண்ண நொண்ணண்ணு கூப்பிட்ட அப்புறம் இருக்கு!" என்று கடுப்படித்தவன். " எழுந்து போ. நானே சாப்பிட்டுப்பேன்" என்றான் எரிச்சலாக.

வருணாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளை வீட்டில் யாருமே இப்படி திட்டியதில்லை. அதுவும் யாரோ ஒரு விருந்தாளி அவளை திட்டுவதை நினைத்து, கண்களில் நீர் தழும்பி விழ தயாராக , அவசரமாக எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

விஷணு வரும் போது, ஈஸ்வர் சாப்பிட்டு முடித்து கை கழுவி கொண்டிருந்தான்.

"என்ன டா சாப்பாடு முடிஞ்சுதா?" என்றான் சட்டையை கழற்றியபடி

"அருமையான சாப்பாடு. அதுவும் அத்தை கையால மீன் குழம்பு!. அவ்வளவு டேஸ்ட் ! தெரியுமா!. நீனும் சாப்பிடு டா " என்றான் ஈர கைகளை டவலால் துடைத்தபடி

"எங்கம்மா சமையலுக்கே இப்படி சொல்றியே?. நீ கோசலை சித்தி சமையலையும் வருணா சமையலையும் சாப்பிட்டு பார்க்கனும். அம்புட்டு ருசியா இருக்கும்" என்றான் விஷ்ணு

"எனக்கு வேணியத்தை சாப்பாடு தான் பிடிச்சிருக்கு " என்றவன். " நீ சாப்பிடு டா. நான் போன் பேசிட்டு வரேன்" என்று போனை எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றான்.

விஷ்ணுவின் குரல் கேட்டு, தன்னை சமன்படுத்திக் கொண்டு வந்தவள். " சாப்பாடு வைக்கவா அண்ணா?" என்றாள்.

"வை மா " என்றான். சாப்பாடு எடுத்து வைத்தவள்.

"நான் வீட்டுக்கு போறேன் பெரியம்மா. துணி எல்லாம் அப்படியே கிடக்கு " என்றதும்!

"சரி மா. பார்த்து போ. வாசலில் ஈஸ்வர் நிற்பான். அவனை கொஞ்சம் உள்ளே வர சொல்லு" என்றபடி வேணி அடுப்பங்கரை செல்ல,

எதுவும் சொல்லாமல் வாசலுக்கு வந்தாள். ஈஸ்வர் போனில் எதையோ பார்த்தபடி அமர்ந்திருந்தான். 'மீண்டும் மீண்டுமா இவங்களிடம் மாட்டனும்' என்று மனது புலம்ப,

"ம்க்கும் " என்று தொண்டையை செருமி அவளது இருப்பை உணர்த்த முயன்றாள்.

ஈஸ்வர் தலையை நிமிர்த்தவேயில்லை. இப்போது " லாவி அண்ணா" என்றாள் மெல்ல,

தலையை அழுத்தமாக கோதிக் கொண்டவன். அவள் புறம் திரும்பி, " என்ன வேணும்?" என்றான் சலிப்பாக

"பெரியம்மா உங்களை கூப்பிடுறாங்க"

"வரேன்னு சொல்லு " என்றபடி மீண்டும் அவன் கவனத்தை போனில் வைக்க,

"நான் வீட்டுக்கு போகனும். நேரமாச்சு " என்றாள் அழாத குறையாக. திரும்பவும் போய் வரேன்னு சொல்ல சொன்னார் என்று சொல்ல வேண்டுமா? என்று மனம் அங்கலாய்த்தது.

"அதையே எங்கிட்ட சொல்ற?. போறதுன்னு போ" என்றான் விட்டேற்றியாக

அவனது பேச்சு அவளை சீண்டி விட, பதில் சொல்லாமல் அவனை முறைத்தபடி தனது வீட்டுக்குள் ஓடி விட்டாள். ' ரொம்ப தான் விரட்டறாங்க. நானாக போய் பேசினதால தான் வாங்கி கட்டிக்கிட்டேன். இனிமே ஒரு வார்த்தை இவரிடம் பேசிடவே கூடாது' என்று தீர்மானமாக முடிவெடுத்துக் கொண்டாள்.

ஈஸ்வரது அலட்சியம் வருணாவை ஒதுங்க வைத்து விட்டது. பெற்றோர்கள் இவர்களை சேர்க்க நினைக்க! இவர்களோ பேச்சிலோ செயலிலோ சாதாரணமாக கூட இருக்க வில்லை. ஒட்டாது நிற்கின்றனர். இதுவே நீடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

கதையை பற்றிய கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்
 

Sirajunisha

Moderator
அத்தியாயம் : 4
அன்று விஷ்ணு வழக்கம் போல! அரிசி மில் கட்டிட வேலைகள் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்காக பைக்கின் அருகே செல்ல, அங்கே அவனது பைக்கின் ஹேண்ட் பேரின் மேல் அழகாக பூச்செண்டு வைக்கப்பட்டிருந்தது.

'இதென்ன பூச்செண்டு! அதுவும் என் பைக்கில்?' என்று யோசித்தபடியே கையிலெடுத்தான். அப்போது தான் மலர்களை பறித்து தொடுத்தது போன்று புத்தம் புது மலராக இருந்தது. 'யார் வைச்சிருப்பா?' என்று யோசித்தபடியே அதை திருப்பி திருப்பி பார்க்க! அதனோடே சிறிய காகித துண்டு ஒன்று இருந்தது. பிரித்து பார்க்க! ஆங்கிலத்தில் இதயம் போட்டு, ' ஐ லவ் யூ ' என்று எழுதியிருந்தது.

பார்த்தவுடனே திக்கென்றிருந்தது. 'யாருடா இது?' என்று சுற்றிலும் பார்க்க! ஆண்களில் சிலர் அவரவர் வீட்டுக்குள் போவதும்! சிலர் வெளியே செல்வதுமாக இருந்தனர். பெண்ணென்று யாருமில்லை.

"நான் போய்ட்டு வரேன் மா " என்ற வருணாவின் குரலில் அவசரமாக அந்த பேப்பரை கிழித்து போட்டவன். இயல்பாக நின்று கொண்டான்.

கோசலையிடம் சொல்லி விட்டு, வேகமாக படியிறங்கியவள். விஷ்ணுவை கண்டு விட்டு, " அண்ண, மில்லுக்கு கிளம்பிட்டியா?" என்றவள். அவன் கையில் மலர்செண்டை கண்டு, " ஏதுண்ண பூச்செண்டு ரொம்ப அழகா இருக்கே?" என்றாள். ஆவலாக பார்த்தபடி,

"தெரியலை மா. யாரோ மறந்து வைச்சுட்டாங்க போல!. யாரோடதுன்னும் தெரியலை. அதான் தூக்கி போடலாமான்னு யோசிக்கிறேன்" என்றான்.

"ஏன் அண்ண? எவ்வளவு அழகா இருக்கு!. பூ காய்வதற்கு முன்னால தூக்கி போடக் கூடாது. நீ போய் இதை சாமி ரூமில் வைச்சிடு. சாமிக்கு பூ வைச்சா மாதிரி இருக்கும் " என்று ஆலோசனை கூறினாள்.

"இதையா? ம்ஹூம் " என்றான் மறுப்பாக

"மாலை மாதிரி தானே வைப்பாங்க. இது செண்ட்டு மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறியா?. பரவாயில்லைண்ண நம்ம சாமி தானே எப்படி இருந்தாலும் ஏத்துக்கும்!" என்று விளக்கம் வேறு கொடுத்தாள்.

அப்போது, " ஏய் வருணா. வர்றியா இல்லையா டி. பஸ்ஸுக்கு நேரமாச்சு " என்றாள் இரண்டு வீடு தள்ளி நின்றிருந்த பெண்ணொருத்தி

"அச்சோ! காலேஜ்க்கு டைம் ஆச்சுண்ண. நான் வரேன். அப்புறம் அடுத்த வாரம் திருவிழாவுக்கு எனக்கு லாவிக்கும் ஒரே டிசைனில் ஆனால் வேற வேற கலரில் புடவை எடுக்க சொல்லி , உங்கிட்ட சொல்ல சொன்னுச்சு அம்மா. சொல்லிட்டேன். மறக்காமல் வாங்கிடு " என்றபடியா நகர,

"புடவை கட்டுற அளவுக்கு பெரிய பொண்ணாக்கிட்டீங்களோ!" என்றான் கிண்டலாக

"அதை எங்கம்மாக்கிட்ட சொல்லுண்ண. சொல்ல சொல்ல கேட்காமல் புடவை தான் வாங்கனும்னு அடம் பிடிக்குது" என்றபடியே ஓடி போய் தன் தோழியுடன் இணைந்து கொண்டாள்.

"உன் கண்ணுக்கு இன்னும் சின்ன பிள்ளையா தெரியலாம்!. ஆனால் படிப்பு முடிஞ்சவுனே அவளுக்கு கல்யாணம் பண்ணணும் பா. இப்பவே பொண்ணு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க!' என்றார் அப்போது அங்கே வந்த வேணி சிரித்தபடி

தூரத்தில் செல்லும் தங்கையை புன்சிரிப்புடன் பார்த்தவன். "ஆமாம் மா. வளர்த்துட்டாள்ள" என்றான் முகம் கனிய,

"நீயும் தான். உன் தங்கச்சிக்கு முடிந்த பிறகு, அடுத்து உனக்கும் பொண்ணு பார்க்கனும் "

"இப்போ தான் மில் வேலை முடிந்து! வேலையை ஆரம்பிச்சிருக்கோம். முதலில் வாங்கின கடனை அடைப்போம் மா. பிறகு கல்யாணமெல்லாம். தேவையில்லாததை எல்லாம் பேசாதீங்க " என்றவன். கையிலிருந்த மலர்செண்டை வேணியிடம் கொடுத்து, " இதை யாரோ மறந்து என் வண்டியில வைச்சிட்டாங்க . யாராவது கேட்டால் கொடு மா. நான் கிளம்பறேன். டைம் ஆச்சு " என்றபடி பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டான்.

அடுத்தடுத்த நாட்களும் தொடர, விஷ்ணுவுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல தோன்றியது. 'யாரு பார்க்குற வேலை டா இது?' என்று புலம்பியவன். மறு நாள் திண்ணையிலேயே படுத்து விட்டான்.

'யாரென்னு கண்டுபிடிக்காமல் விடுறது இல்லையென்று!' .ஆனால் பலன் என்னமோ பூஜியம் தான். அவன் அசந்து தூங்கும் நேரமாக பார்த்து வைத்து விட்டு சென்றனர்.

திருவிழா வேறு நெருங்கவும், தற்காலிகமாக இந்த விசயத்தை கிடப்பில் போட்டான். என்றைக்கு இருந்தாலும்! யாரென்று தெரியாமலா போய்விடும் என்று!

அன்று இரவே! ராஜூ, ராதா, லாவண்யா, ஈஸ்வர் வந்து விட்டனர். இவர்களை எதிர்பார்த்து வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தனர் கோபாலும், ராமனும்!. வந்தவுடனே!

"வாங்க வாங்க வாங்க " என்று ராஜூவை ஆரத் தழுவிக் கொண்டார் கோபால்.

"எத்தனை நாளாச்சு டா உன்னை பார்த்து!. வா மா ராதா. வா ஈஸ்வர். வா டா மா " என்று லாவண்யாவையும் சந்தோஷமாக வரவேற்க,

தன் பங்குக்கு ராமனும் வரவேற்றார். லாவண்யாவுக்கு இங்கு அடிக்கடி வந்த பழக்கமாதலால், " வரு எங்கே மாமா?. அதுக்குள்ள தூங்கிட்டாளா?" என்றாள் ராமனிடம்.

"அவ அம்மா கூப்பிட்டான்னு இப்போ தான் உள்ளே போனுச்சு மா. நீ வா உள்ளே போலாம். நீ எதுவும் சாப்பிட்டாயா?" என்றார் வாஞ்சையாக

"வரும் போது சாப்பிட்டோம் மாமா. ஆனால் நல்லாவே இல்லை " என்றாள் முகத்தை சுழித்து

"அத்தை உனக்கு கொழுக்கட்டை சுட்கு தர மாவெல்லாம் ரெடி பண்ணா. நீங்க வர லேட்டாகும், இராத்திராக்கு சாப்பிட்டு தான் வரவீங்கன்னு சொன்னதால எடுத்து வைச்சிட்டா. நாளைக்கு செஞ்சி தருவா. இப்போ வேற எதுவும் சாப்பிடுறியா மா?"

"வேணாம் மாமா. இப்போ பசியில்லை" என்றவள். பெற்றோர் பக்கம் திரும்பி, " அம்மா, நான் வரூ கூட தூங்க போறேன்" என்று பதிலை எதிர்பார்க்காமல் வீட்டுக்குள் ஓடி விட்டாள்.

விஷ்ணுவுடன் பேசியபடியே, ஈஸ்வரும் கோபால் வீட்டிற்கு சென்று விட, அப்போது தான் வருணாவும், கோசலையும் வந்தனர்.

"வாங்க மாமா. வாங்க அத்தை " என்று வருணா வரவேற்க,

திரும்பிய ராதாவுக்கு அவர் கண்களையே நம்ப முடியவில்லை. " நம்ம வருணா வா இது?. அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டா!. என் மருமக எவ்வளவு அழகா இருக்கா!' என்று கன்னத்தை வழித்து நெட்டி முறித்தார்.

பெரியவர்களுக்கு பூரிப்பு தாங்கவில்லை. வரு மென்மையாக சிரித்தாள்.

"போதும் போதும் ஏற்கனவே பனியில் அவளுக்கு சளி பிடிக்கும். இதில் நீங்க வேற ஐஸ் வைக்காதீங்க!" என்று நொடித்தாள் அங்கே வந்த லாவண்யா.
 

Sirajunisha

Moderator
"உனக்கு பொறாமை டி " என்று வம்பு வளர்த்தார் ராதிகா.

"பொறாமை பட என்ன இருக்கு ராதிகா. இரண்டு பேருமே தங்க சிலையாட்டம்ல இருக்கிறாங்க" என்றார் கோசலை பரிந்து கொண்டு

"அப்படி சொல்லுங்க அத்தை!" என்றாள் லாவண்யா சலுகையாக

"உங்கம்மா வம்பு வளர்க்கிறா டா. அடிக்கடி பார்த்துட்டே இருக்கிறதால உன் அழகு கண்ணுக்கு தெரியலை . நீ ராஜாத்தியாட்டம் இருக்கிற" என்றார் வேணியும்.

"நல்லா கேட்டுக்கங்க " என்று நொடித்தவள். " வா வரு. எனக்கு தூக்கம் வருது" என்றபடி வருணாவை கையோடு அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

ராஜூ, ராதிகா, கோபாலோட செல்ல, " காலையில இங்கே நம்ம வீட்டுக்கு வந்திடு கோசலை. நாளைக்கு நம்ம வீட்டிலேயே விருந்து வைச்சிடலாம் " என்றார் வேணி.

"சரிக்கா " என்றார் கோசலையும். அவரவர் தத்தமது வீட்டிற்கு சென்று விட்டனர்.

மறுநாள் விஷ்ணுவும் ஈஸ்வரும் பேசியபடியே வாசலுக்கு வர, வழக்கம் போல! விஷ்ணுவின் பைக்கில் பூச்செண்டும் லட்டரும் இருந்தது.

வேகமாக சென்று பிய்த்து எறியாத குறையாக விஷ்ணு எடுத்தான். கூடவே இருந்த 'ஐ லவ் யூ ' என்ற தாளையும் பிரித்து படித்து விட்டு கசக்கி எறிய,

"ஹேய்! யாரு டா அது?. லட்டர் பூவெல்லாம் வைச்சிருக்கா?" என்றான் ஆச்சரியமாக

"ம்ச்ச். தெரியலை டா. ஒரு வாரமா இதான் நடக்குது. யாருன்னும் தெரியலை. அசந்து நேரமா பார்த்து வச்சிடுறாங்க. கையில மட்டும் மாட்டட்டும் சட்னியாக்கிடுவேன்" என்றான் பல்லைக் கடித்து

"சரி கோவப்படாத டா. கண்டு பிடிச்சிடலாம். நான் ஹெல்ப் பண்றேன்" என்றான் அவனை சமாதானப்படுத்தும் விதமாக

"ம்ச்ச். நானும் ரொம்ப டிரை பண்ணிட்டேன் டா. அசற நேரத்தில வைச்சிட்டு போயிடுறாங்க டா " என்றான் ஆதங்கமாக

"அதை இனி நான் பார்த்துக்கிறேன். நீ ஏன் டா கவலைப்படுற?"

"ம்ச்ச். வேலையே ஓட மாட்டேங்குது டா. வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும்?" என்றான் கலக்கமாக

"அது தான் நான் இருக்கேன்ல. கண்டு பிடிச்சிடுறேன்" என்று சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் உறங்கி விட, ஈஸ்வர் மட்டும் எழுந்து வெளியே வந்தான். விஷ்ணுவுடைய கலக்கமான முகம் அவனை உறங்க விடவில்லை. ஏதாவது அவப்பெயர் வந்து விடுமோ என விஷ்ணு பயப்படுவது தெரிந்தது. அதை தீர்க்கும் பொருட்டே, ஈஸ்வர் திண்ணையின் அருகே மறைவாக நின்று இருப்பதும். சுற்றிலும் இருட்டாக இருப்பதால்! ஈஸ்வர் நிற்பது யாருக்கும் தெரியாது.

சுமார் மூன்று மணியளவில், எதிர் வீட்டின் கதவு மெல்ல திறந்தது. தரை நோகாமல், மெல்ல அடி எடுத்து வைத்தபடி வருணா வாசலிலிருந்து இறங்குவது தெரிந்தது.

தெருவின் இருபுறமும் பார்த்து! யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, பாவாடையை மெல்ல தூக்கி, மெதுவாக அடி எடுத்து வைத்து தெருவை தான்டி எதிர்புறம் வந்தவள். தன் தாவணியில் மறைத்து வைத்திருந்த பூச்செண்டை வெளியே எடுத்து, அதை கைகளில் வைத்து முணுமுணுத்தபடி எதையோ வேண்டிக் கொண்டு, ஹேண்ட் பேரில் வைத்து விட்டு, அதே போல சத்தமிடாமல் திரும்பி இரண்டடி எடுத்து வைக்க,

சட்டென்று அவளது சடை வேகமாக பின்னால் இழுக்கப்பட, பயத்தில் அவள் சத்தமிடும் முன், அவளது வாயை பொத்தி, அவளது இடுப்பையும் ஒரு கை அழுத்தமாக சுற்றியிருந்தது.

அவள் பயத்தில், " ம்ம்.. ம்ம்.. " என்று திமிறினாள் பின்னாலிருந்து அவளை பிடித்திருந்ததால்! அவளால் நகர முடியவில்லை. அவள் வாயிலிருந்து கைகளை எடுக்க போராட,

"ஷ்ஷ்ஷ் . ஏதாவது சத்தம் போட்ட, நீ பண்ண காரியம் எல்லாருக்கும் தெரிய வரும். பரவாயில்லையா?" என்றான் ஈஸ்வர் அவளது காதருகே மிக மெதுவாக

அவளது கைகள் மெல்ல தளர்ந்தன. பிறகு, " யார் இப்படி பூக் கொண்டு வந்து வைக்க சொன்னது?" என அவன் நேரடியாக விசயத்திற்கு வந்து விட்டான்.

எதுவோ சொல்ல ! கை, அவளது வாயை பொத்தியிருந்ததால்! சரியாக கேட்கவில்லை. மெதுவாக தளர்த்தி, " புரியலை. யாருன்னு சொன்ன?" என்றான் மெதுவாகவே

"சாமிக்கு வேண்டிக்கிட்டு பூ வைச்சேன்" என்று சமாளிக்க முயன்றாள்.

"அந்த பூ வை சாமிக்கு வைக்க வேண்டியது தானே!. எதுக்கு என் காதுல வைக்க டிரை பண்ற?. " என்றதும் வருணா அமைதியாக நிற்க,

" சாமி, பூவோடு சேர்த்து லவ் லட்டரையும் வைக்க சொல்லுச்சா?" என்றான் படு நக்கலாக

"அது.. அது.. " என்று தடுமாற

"உண்மையை சொன்னால் பிழைச்சுப்ப!. இல்லை. உன் அண்ணனே கேட்பான். அதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். கூடவே உன் குடும்பமும் இருக்கும்" என்று மிரட்ட!

"அது என் பிரண்ட் தான் வைக்க சொன்னால்!. அண்ணணை அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம்!" என்றாள் எச்சிலை கூட்டி விழுங்கி,

"அதை நேரடியா உன் அண்ணணிடம் சொல்ல வேண்டியது தானே!. பிடிக்கும் பிடிக்கலைன்னு அவன் பதில் சொல்லிட போறான்!. இடையில் நீ என்ன தூது ?"

"அவ அண்ணியா வந்தால் நல்லாயிருக்கும். அதான் ஹெல்ப் பண்ணலாம்னு.. " என்று அவள் இழுக்க!

"உன் பிரண்ட்க்கு அண்ணன் இருக்கானா?".

வருணா எல்லா பக்கமும் தலையை உருட்டி வைத்தாள்.

" உனக்கும் அது போல ஐடியா இருக்கோ!"

"எது போல?"

"அந்த பொண்ணுக்கு ஆசை இருக்கிற மாதிரி!. உனக்கும் அவங்க வீட்டுக்கு அண்ணியாக போக ஆசை இருக்கான்னு கேட்டேன்" என்றதும்!

அவனிடமிருந்து திமிறிக் கொண்டே, " அவங்களை சும்மா கொடுத்தால் கூட எனக்கு வேண்டாம் " என்று அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.

அப்போது வீட்டின் வாசல் கதவை யாரோ திறக்க முயற்சிப்பது போல சத்தம் கேட்க, டக்கென்று இருட்டிற்குள் அவளை மறைத்தபடி தானும் நின்று கொண்டான் ஈஸ்வர்.

இருவருக்கும் இதயத்தின் ஓசை அவ்வளவு வேகமாக கேட்டது. அதுவும் வருணாவுக்கு, டமார் டமார் என்று காதுக்குள் அடிப்பது போன்று அவ்வளவு சத்தமாக பயத்தில் துடிக்க ஆரம்பித்திருந்தது. இருவராலேயுமே நகர முடியா நிலை!. அமைதியாக நிற்க வேண்டிய சூழ்நிலை!

அப்போது தான் வருணாவுக்கே ஒன்று உறைத்தது. ஈஸ்வர், அவளை பின்னிருந்தபடியே, அவளது வயிற்றோடு
வளைத்து பிடித்திருப்பதும்!அவனது வலது கை அவளது கழுத்தை சுற்றியிருப்பதும், இவள் அவன் முன்னுடவோடு சாய்ந்தபடி இடைவெளியில்லாமல் நின்றிருப்பது புரிய, வெடுக்கென அவனை விட்டு நகர, இதை எதிர்பாராதவன். அனிச்சை செயலாக அவளை தன்னோடு இழுத்தான்.

"என்னை விடுங்க லாவி அண்ணா" என்றாள் அழாத குறையாக

"ஷ்ஷ். மெதுவா பேசு. மாமா வர்ற மாதிரி இருக்கு" என்றதும்

வருணாவுக்கு சர்வமும் நடுங்கியது. இவர்கள் இருவரையும் இப்படி பார்த்து விட்டால் என்னாவது?. யாரின் முகத்தில் மீண்டும் விழிக்க முடியும்!' என்று நினைத்து அவளௌ திகிலடைந்தது போல நிற்க,

அவளது நிலையை உணர்ந்தது போல! "ரிலாக்ஸ். மாமா உள்ளே போற மாதிரி இருக்கு. நாம இங்கே நிற்கிறது தெரியாது" என்றான் கிசுகிசுப்பாக

மூளை அதை அங்கீகரிக்க, அவளது உடல் மெல்ல தளர்ந்தது. அவளறியாமல் அவன் மேல் சாய, "மாமா மேல அவ்வளவு பயமா?" என்றான் கிசுகிசுப்பாகவே

காதருகே, அவனது கிசுகிசுப் பேச்சும், மூச்சுக் காற்றும் உடலை எதுவோ செய்ய, அதை மறைக்க முயன்றவலாக,

"ஏன் உங்களுக்கு பயமில்லையா?" என்றபடி வெடுக்கென திரும்பி விட்டாள்.

அவளது வயிற்றை சுற்றியிருந்த கை, இப்போது அவளது இடையை சுற்றியிருந்தது. முன்பாவது யாரும் பார்த்தால்! ஈஸ்வர் தான் அவளை பிடித்து வைத்திருப்பது போல தோன்றும்! இப்போது இவர்கள் இருவரும் அணைத்திருப்பது போல தோற்றமளிக்கும்!.

நேருக்கு நேர் மிக நெருக்கமாக ஆனால் நூலளவு இடைவெளியில் நின்றிருந்தனர். இருட்டில் அவனது முகம் தெரியவில்லை. முகவெட்டின் வரி வடிவம் மட்டும் மற்றவர்களுக்கு தெரிந்தது. ஆனால் மற்றவர்களுக்கான பிரத்யேக மணத்தை அறியக் கூடிய வகையில் நெருங்கி நின்றிருந்தனர்.

அவள் தன் பக்கம் திரும்புவாள் என்பதை எதிர்பாராதவன். பின்பு சுதாரித்து, " எனக்கெதுக்கு பயம்?. திருடன்னு நினைச்சு பிடிச்சேன்னு சொல்லிடுவேன் " என்றான் மெதுவாக

அதில் ரோசம் வர, "நான் போறேன்" என்று வேகமாக அவனிடமிருந்து விடுபட, அவனும் அவளை தடுக்கவில்லை. வாசல் பக்கம் வந்தவள். கதவு தாழிடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டு, வேகமாக தன் வீட்டுக்கு ஓடி விட்டாள்.

வருணா போகும் வரை அங்கிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவன். " ப்பூபூ " என்று ஆசுவாச மூச்சு விட்டபடியே ஒரு அடி எடுத்து வைக்க, காலில் எதுவோ குத்தியது. சற்றே நகர்ந்து பார்க்க! நிலவு வெளிச்சத்தில் பளபளப்பது போல தோன்ற! செல்போன் லைட்டை எடூத்து ஆன் செய்து பார்த்தான். கொலுசு ஒன்று கிடந்தது. வருணாவினுடையதாய் இருக்க வேண்டும் என்று தோன்ற! அதை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

மறுநாள் காலையிலிருந்தே சுப்ரபாதமாக, கோசலை வருணாவை திட்டிக் கொண்டிருந்தார். ஒரு பொருளை ஒழுங்கா வைச்சுக்க தெரியுதா?. பொறுப்பே இல்லை என்று விடாமல் திட்டிக் கொண்டே இருந்தாள்.

வருணாவும் தேடி பார்த்து விட்டாள். கிடைக்கவில்லை. நேற்று ஒழிந்திருந்த இடத்திலும் சென்று பார்த்து விட்டாள் கிடைக்கவில்லை. அவளும் என்ன தான் செய்வாள். அதுவும் ராதா, ராஜூ முன்பு திட்டுவதை கூட, அவள் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் விடாமல் கோசலையின் எப்.எம் ஒலித்துக் கொண்டிருந்தால்! லாவி அண்ணன் வந்து விடுவாங்களே!. அவங்க முன்னாடி திட்டு விழுமோ என்று தான் அவளுக்கு பெரும் கவலையே!.

"விடுங்க அத்தை. அவ என்ன வேணுமென்றே வா தொலைச்சா?. தெரியாமல் விழுந்ததற்கு அவள் என்ன செய்வாள்?. இப்படியே திட்டிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?. அப்பா, மாமா எல்லாரும் வந்துட்டாங்க!. டிபன் வைங்க. நாங்க போய் எடுத்து வைக்கிறோம்" என்று அவர் பேச்சை திசை திருப்ப முயன்றாள்.

"ஆமாம் கோசலை. நேரமாச்சு பாரு" என்று ராதிகாவும் கூற, வேணியுடன் இணைந்து பொங்கல், இட்லி என எடுத்து வைத்துக் கொண்டார்.

ஈஸ்வரின் குரல் கூடத்தில் கேட்டது. 'அச்சச்சோ வந்துட்டாங்க போல' என்று மனம் பதற, அந்த பதட்டத்தில் கையில் வைத்திருந்த சட்னியை சிந்தி விட்டாள்.

அதை கண்டு, " கண்ணை எங்கே வைச்சிருக்க?.ஒழுங்கா எடுத்துப் போக தெரியாது?" என்று சட்னியை வாங்கி வைத்தவர். மீண்டும் திட்ட ஆரம்பிக்கவும், அதே சமயம் ஈஸ்வர் இவர்களை பார்த்தபடியே கொல்லைப்புறம் செல்வதும் தெரிந்தது.

அவ்வளவு தான்!. 'மானம் போச்சு! மரியாதை போச்சு' என்று மனம் கொந்தளிக்க அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல், கைகளால் முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. கோசலை, மகளின் அழுகை கண்டு திகைத்து விட்டார். அவள் இது போல அழுது அவள் பார்த்ததே இல்லை. அதிகமாக திட்டி விட்டோமோ? என மனம் பரிதவிக்க தொடங்கியது.

"என்ன அத்தை? எப்படி அழறா பாருங்க?. காணாமல் போச்சுன்னா என்ன செய்ய முடியும்?. வேணும்னே தொலைப்பாங்களா?" என்று கடிந்து கொண்டாள் லாவண்யா.

"நல்ல நாளும் அதுவுமா இப்படி பிள்ளையை அழ வைச்சிட்டியே கோசலை?" என்றார் ராதிகாவும்

"ஒரு விசயத்தை விடுன்னா கேட்கிறியா?.இப்போ பாரு எப்படி அழ வைச்சிருக்க?. அண்ணன் தம்பிங்க ஏன் அழறான்னு கேட்டால் என்ன சொல்வ?. அவங்க நீ திட்டினதுக்கு மேல உன்னை கண்டிப்பாங்க" என்றார் வேணியும்

கோசலை அதற்கு மேல் வாயே திறக்கவில்லை. ஒரு வழியாக லாவண்யா, ராதா, வேணி தான் பேசி, வருணாவை சமாதானம் செய்தனர்.

"அம்மா, சாப்பாடு வைங்க " என்ற விஷ்ணுவின் குரலில் அனைவரும் சாப்பிட வந்து விட்டது புரிய, உணவை வருணாவும், லாவண்யாவும் எடுத்துக் கொடுக்க, மற்ற பெண்கள் மூவரும் பரிமாற சென்று விட்டனர்.

கொல்லைப்புறத்திலிருந்து வந்த ஈஸ்வர், லாவண்யா அடுப்பங்கரையில் நிற்பதை கண்டு, " எனக்கொரு காபி போடு லாவண்யா?" என்றபடி சுவாதீனமாக உள்ளே நுழைந்தான். ஈஸ்வரை கண்டதும், அங்கிருந்த அலமாறியின் அருகே நின்று கொண்டாள் வருணா. இவன் பார்வையை விட்டு மறைந்தது போன்று!

லாவண்யா, காபி தூளை டம்ளரில் போட, "ரொம்ப அதிகமா போட்டுடாத " என்றபடியே, வருணாவின் அருகே வந்தவன். லாவண்யா கவனிக்காத நேரமாக, அவளை மறைத்தால் போல் நின்றபடி, வருணாவின் இடது கையை லேசாக பிடிக்க, அவள் உணரும் முன்பே, கொலுசை அவள் கையில் கொடுத்து விட்டு, தன் தங்கையின் அருகே நின்று கொண்டான்.

வருணா, அவசரமாக கொலுசை தாவணியில் சுருட்டி வைத்துக் கொண்டாள். திடீரென காண்பிக்க முடியாதே!.

"எல்லாரும் சாப்பிடுறாங்க. நீனும் சாப்பிட்டுட்டு காபி குடிக்கலாமே ண " என்றதும்!

"அப்படியா? சரி. நானும் சாப்பிட போறேன். நீ காபி எடுத்துட்டு வந்துடு" என்றபடி, வருணா என்கிற ஒரு பெண் அங்கே நிற்பதையே பார்க்காதது போல! அவளை கடந்து சென்று விட்டான்.

"நான் போய் குளிச்சிட்டு வரேன் லாவி. வந்து சாப்பிட்டுக்கிறேன்" என்று பதிலை எதிர்பார்க்காமல் தங்கள் வீட்டுக்கு வேறு வழியாக ஓடி விட்டாள். வீட்டுக்கு போய் கொலுசை காலில் மாட்டிய பிறகு தான் ஆசுவாசமானது.

லாவி அண்ணனுக்கு தேங்க்ஸ் சொல்லிடனும்!. அதோட காதலுக்கு தூது போற வேலை எல்லாம் நம்மால் முடியாதுன்னு அவ கிட்ட தெளிவா சொல்லிடனும்!. அவளுக்கு ஹெல்ப் பண்ண போய்! நான் காதலிக்கிறேன்னு பேர் வந்திருக்கும்!. எப்பா! தப்பிச்சேன் டா சாமி! என ஆசுவாச மூச்சு விட்டாள்.

அண்ணன் காதலிக்கும் பெண் யார்?. புது வரவா? பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Status
Not open for further replies.
Top