எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மயங்கொலிப்பிழைகள் கதைத் திரி

Status
Not open for further replies.

மயங்கொலிப் பிழைகள்

அத்தியாயம் 1

அந்த பிரம்மாண்ட கார்ப்பரேட் நிறுவனத்தின் பொருளாதார மற்றும் நிதி ஆலோசனை துறையில் வரும் நிதி ஆண்டிற்கான திட்டங்கள் நிர்வாகத்தின் முன்னெடுப்புகள் மற்றும் அவர்களின் நிதிநிலை அறிக்கை , பங்குகள் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அவள் அதீரை அந்த துறைக்கு மட்டுமல்ல அந்த நிதி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆள்பவள் , பல நிறுவனங்கள் அவளது பொருளாதார ஆலோசனைக்கு காத்து நிற்கும் அளவு திறம் பொருந்தியவள். அந்த நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் இயக்குநர்களில் ஒருவள், தனது ஹை ஹீல்ஸ் ஒலி எழுப்ப கருநிற பேன்ட் மற்றும் முழுக்கை சட்டை மேலே ஒவர் கோட் மற்றும் கையில் மடிக்கணிணியுடன்

உள்ளே நுழைந்தவளின் காலடி ஓசை மட்டுமே பிசிர் இன்றி அனைவரின் செவியிலும் வந்து சேர அவ்விடம் அமைதியானது. முகமன்களுடன் வந்து தனது இடத்தில் அமர்ந்தாள் . தலைமை செயல் அதிகாரியிடம் திரும்பி அனும.தி வேண்டியவள் . தனது மடிக்கணிணியை
இயக்கி உரையாற்ற தொடங்கினாள்.

"இந்த நிதி ஆண்டிலிருந்து மருத்துவ தளபாடங்கள் தயாரிப்பில் நமது நிறுவனம் கால் பதிக்க இருப்பதாலும் அதற்கான நிதி மற்றும் விற்பனை குறித்த திட்டங்கள் தீர்மானங்கள் பற்றிய வரைவுகள் பரிந்துரைகள் பற்றி நாம் விவாவதிக்க இருக்கிறோம்."

அவளது கண்கள் அந்த அறையில் அனைவரது கவனமும் தன் மீது குவிந்து இருப்பதை உறுதி செய்து கொண்டவள்
மேற்கொண்டு பேசலானாள்.

" நமது சத்துபானம் பல ஆண்டுகளாக இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் நிகர லாபம் உலகம் முழுவதும் வரும் லாபத்திற்கும் இடையே வேறுபாடு மிக குறைவு சரியாக சொல்வது என்றால் இரண்டும் சமம் ."

விற்பனை துறை தலைவரை கண்களில் பார்த்து உதடுகளை சுழித்து இகழ்ச்சி புன்னகையை கொடுத்தாள். எதிரணியில் அவர் இருப்பதை அவள் அறிந்ததால் தானே இப்படி தீடீர் சந்திப்பு விஷயம் வெளியேகசியும் முன் ஏற்பாடு செய்தாள்.

"இந்தியாவில் நமது விற்பனை உரிமையை இந்த எம்.எம் நிறுவனத்திற்கு விற்பதன் மூலம் அவர்கள் இந்தியாவில் கால் ஊன்ற வழி கிடைக்கும் அதே சமயம் அவர்களிடம் இந்தியா முழுவதும் நமது தளபாடங்களை விற்பனை செய்யும் உரிமையை பெறுவது மட்டுமல்ல உலகம் முழுவதும் கூட விற்பனை செய்யும் போது நமது இலாபம் அதை விட அதிகம்.
இந்த ஒப்பந்தம் நமக்கு அதிக நன்மையை பெற்று தரும் ."என உரைத்தவள்

கடந்த கால நிதி நிலை அறிக்கை விற்பனை அறிக்கை என அனைத்தின் அடிப்பிடையில் கருத்துகளை எடுத்து கூறி மறு மொழி எதுவும் இன்றி அதனை ஏற்க செய்தவள், ஆவணங்களில் கையொப்பம் இட்டு நிமிரும் போது மாலை வந்திருந்தது.

அனைவருக்கும் கை குலுக்கல் மற்றும் சிறு தோளணைப்புடன் விடை கொடுத்தாள். அவளது உதவியாளினி லீனா அவளது உத்தரவிற்கு காத்திருப்பதை பார்த்தவள்,

"மற்ற வேலைகளை இனி திங்கள் அன்று பார்த்துக் கொள்ளலாம், இப்போது , நீங்கள் செல்லலாம் மிஸ் லீனா. "என தனது உதவியாளரை அனுப்பி வைத்தாள்.

அங்கிருந்த சுழற் நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்து இருகரங்களையும் தூக்கி சோம்பல் முறித்தவள் அகம் மகிழ்சியில் இருந்தது.

தன் மகிழ்ச்சியை கொண்டாட எண்ணமிட்டபடி தனது மனி கட்டில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தவள் அது முன் மாலை பொழுதை காட்ட,
இப்போது அழைத்தால் தான் அங்கு சென்று சேர்வதற்கும் அவன் வரவும் சரியாக இருக்கும் என யோசித்து தனது அலைபேசியில் இருந்து அந்த எண்ணிற்கு அழைத்தாள், அழைப்பை ஏற்றுபேசிய மறுமுனைக்கு ஒரு ஹோட்டலின் பெயரை கூறியவள் இன்று இரவு எட்டு மணிக்கு என்று விட்டு அலைபேசியை அனைத்து விட்டு எழுந்தாள்.

தளத்தை விட்டு இறங்கும் முன் தன்னை சரி செய்து கொள்ள அறைக்கு சென்றாள்.
அதீரை அந்த நிறுவன நிர்வாக இயக்குநர்களில் ஒருவளும் என்பதால் அவளுக்கு தனி அலுவலக அறை அதன் உட்புறம் சிறு படுக்கை வசதி மற்றும் குளியல் அறை உண்டு ஏனெனில் வேலையின் தீவிரம் அதிகமாகும் போது சில நேரங்களில் வீடு திரும்ப நேரம் இருக்காது .அது போன்ற நேரங்களில் இங்கேயே தங்கிக் கொள்வாள் இப்போது கூட அவள் இந்த பேச்சு வார்த்தையின் ரகசியம் கருதி ஒரு வாரமாக வீட்டிற்கு செல்லவில்லை.

இன்று தான் வெற்றிகரமாக தனது பேச்சுவார்த்தையை முடித்து வெற்றி பெற்றிருக்கிறாள். அதை கொண்டாடத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

கண்ணாடி அவளை பிரதிபலித்ததை நினைத்து பெருமை கொண்டது. அசாதாரணங்கள் சேர்ந்து செய்த சாதாரணம் இவள் என்று

அதிக சிரத்தை எல்லாம் இல்லை , தோளை தாண்டி இறங்கிய கூந்தலை விரித்து விட்டாள். பிறகு இழுத்து கூந்தல் மாட்டியில் இறுக்கினாள் .
ஒரு ஜீன்ஸ் மேலே ஒரு இளநீல சர்ட் என மாற்றி தன்னை சரி பார்த்தவள் தனது உடைமைகளுடன் இறங்கினாள்.

அந்த பப் அதற்குரிய அத்தனை கல்யாண குணங்களுடன் அதன் உச்சபட்ச பரபரப்பில் இருந்தது. காரை நிறுத்தியவள் சாவியை , அதனை அதன் நிறுத்துமிடத்தில் நிறுத்தவென நியமிக்கப்பட்ட பணியாளர் கையில் வீசியவள் , உள்ளே விரைந்து விட்டாள்.

பாரில் காக்டெய்ல் கலக்கும் இடத்திற்கு சென்றாள். அந்த பணியாளர் அவள் முன் வந்து முகமன் கூறியவன்

"மேடம் யுவர் ஆர்டர் ப்ளீஸ்? "என அவளுக்கு வேண்டியதை விசாரித்தான்.
"மன்ஹாட்டன் " என தனது விருப்பத்தை உரைத்தாள்

"த்ரீ மினிட்ஸ் " என்றவன்
ஒரு கிளாஸை எடுத்து அதனுள் பனிக் கட்டிகளை போட்டு தனது ஜிக்கர்ஸ் எனும் அளவு கோப்பையினால் ஸ்வீட் வெர்மோத்தை ஒரு முறை அளந்து ஊற்றி பின் விஸ்கியை இரண்டு கோப்பை என ஊற்றி மேலே கசப்பு சுவை தரும் திரவம் சில துளி சேர்த்தவன் நீள கலக்கும் சிறு கரண்டி கொண்டு கலக்கி அதை ஆரஞ்சினால் அலங்கரித்து அவளிடம் தரும் வரை
அங்கேயே நின்று அவன் கலவை தயாரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
(காக்டெய்ல் என்பது ஆல்ஹால் மற்றும் ஆல்ஹஹால் அல்லது ஆல்ஹஹால் மற்றும் புதிய பழச்சாறுகளை குறிபிட்ட விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவை)
அந்த சிவந்த திரவம் அடங்கிய கோப்பையை கையில் ஏந்தி சில மிடறு அருந்திய படி சுற்றி கண்களை சுழற்றியவளிடம்
நானும் உங்களுடன் இணைந்து கொள்ளலாமா?
(May I join with you) என அவளிடம் வந்து நின்றான் அவன்.

தேர்வு செய்யப்பட்ட மாடலை போல உடல் மிக கவனமாக பராமரிக்கப்பட்ட உடற்கட்டு , என பெண்களை மயக்கும் அனைத்து புற தோற்றத்திலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி பேரழகனாகத்தான் இருந்தான்.

அவன் குரலுக்கு செவி சாய்த்தபடி அவன் புறம் திரும்பியவள் அதிர்ந்து போனாள் பிறகு அவனை சற்று உற்று பார்த்த பிறகு தான் அவள் அறிந்த அவனுக்கும் , இவனுக்கும் சில வித்தியாசங்கள் இருப்பதை அறிந்தவள் இதை மட்டும் என முடி வெட்டு கையில் இருக்கும் டாட்டூ ஆடைகளை சரி பண்ணிட்டா இவன் அவனே தான் என எண்ணமிட்டவள், வருங்காலத்தில் அதையே தான் செய்ய போகிறோம் அந்த சூழ்நிலையில் விதி தன்னை நிறுத்த போகிறது என அறியாதவள்,

அவனுக்கு பதில் உரைத்தாள் சிறு சிரிப்புடன்
ya Why not ? what do you Prepare whiskay , Rum or anything elese?
என மேலும் உரையாடலை வளர்த்தாள். அவன் நோக்கமும் அது தானே அதையும் அதீரை அறிந்து தான் இருந்தாள்.அவள் தானே அலைபேசி வழியே அவனை தொடர்பு கொண்டு இங்கே அழைத்திருந்தாள்.
தனது கையிலும் டக்கியூலா எனும் ஆல்ஹஹால் திரவ கோப்பையை ஏந்திய அவனும் அவளுடன் இணைந்து நடந்த படி ஒரு மேஜையை நோக்கி நகர்ந்தனர்

அங்கே ஒரு இடத்தில் DJ யின் பணியில் விதவிதமான பாடல்கள் ஒலித்தபடி இருக்க அதற்கு ஏற்றபடி பலர் ஆடிய படி இருக்க

தனது கட்டை விரலால் அந்த புரத்தை காட்டியவன்
அங்கே செல்ல வேண்டுமா என்றவனுக்கு
வேண்டாம் என்றவள் ஏற்கனவே தான் பதிவு செய்த மேஜையில் அமர
அவளுக்கு எதிரில் அமர்ந்தான் .

உங்கள் பெயர்? என்றவனுக்கு
அதீரை என்றவள்
யுவர் ஸ்? என்றாள் ,
டாவின்சி என்றவன் அங்கு வந்த பணியாளரிடம் இருந்து இரு கோப்பைகளை எடுத்தவன் ஒன்றை தானும் மற்றொன்றை அவளுக்கு தந்தவன் எதிர்புறம் இருந்து அவள்புறம் வந்திருந்தான்.
உங்களை பற்றி சொல்லுங்கள் என்றவனுக்கு தனது நிறுவனத்தின் பெயரையும் அங்கு தனது இடத்தையும் கூறினாள்.
உங்களை பற்றி கூறுங்கள் டாவின்சி
என்றவளது கரங்களை பிடித்து கொண்டவன் மெல்ல நீவியபடி நெருக்கத்தை அதிகரித்தவன்,
என்னோட பேர் டாவின்சி, இங்க ப்ளோரிடாவுல ஆர்ட் கேலரி வைச்சிருக்கேன், மாடலிங் என்னோட பேஷன் அதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் , என்றவன் கரங்கள் இடம் மாற தொடங்கியது.

அதன் பின் இருவரின் பேச்சுவார்த்தை இதழ்களினுள் முடிந்தது. மிகநெருங்கிய இருவரும் கொண்டாட அந்த அறை களைத்திருந்தது .
அலைபேசியின் அழைப்பில்
மெத்தையில் துயில் கொண்டு இருந்தவள் டாவின்சியில் அனைப்பில் இருந்து விலகி அலைபேசிக்கு பதில் அளித்தாள்.
நேரமாகிவிட்டதை உணர்ந்து கலைந்து கிடந்த தனது ஆடைகளை சேகரித்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

குளித்து கண்ணாடியின் முன் தோற்றத்தை சீர் செய்தவளை பின்னிருந்து அனைக்க வந்தவனை , கண்ணாடியை பார்த்தபடியே
"அங்கேயே நில் (stay there) டாவின்சி ", என்றவள் அவனுக்கான பணத்தை எடுத்து மேஜை மீது வைத்தவள்,
"தங் யூ பார் யுவர் கம்பெனி " அதாவது நேற்றைய உன் ஒத்துழைப்புக்கு நன்றி இதில் இதை தாண்டி இனி நமக்குள் ஒன்றும் இல்லை எனும் வகையில் அவனை திரும்பி கூட பாராமல் அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.

அவள் அதீரை அப்படித்தான் , காதல் திருமணம் போன்றவற்றில் நம்பிக்கை அற்றவள், தனது எண்ணங்கள் செயல்கள் சுதந்திரத்தில் யாருடைய தலையீடையும் விரும்பாதவள், இது போன்று திருமணமாகமல் இரவுகளுக்கு ஒருவனுடனான உறவு தவறல்லவா என்றால் ,
நான் யாருடைய கணவனையும் அழைக்கவில்லை வற்புறுத்தவும் இல்லை. என் காதலனுக்கோ கணவனுக்கோ நம்பிக்கை துரோகம் செய்யவில்லை , அவனுடைய தேவை பணம் எளிதில் சில மணி நேரங்களில் கூடவே சந்தோஷமும் …
இது போன்று கட்டுப்பாடற்று உணர்வுகளை தறிகெட்டு அலைய விடுவது தவறல்வா என்றால்
பசி, தாகம் , போல இதுவும் ஒரு உணர்ச்சி அவ்வளவு தான் , இதற்கு தேவையில்லாமல் அதிக முக்கியத்துவம் தருவது தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்
மேலும் நாட்டில் இதைவிட பெரிய பிரச்சனைகள் இருக்கு அத பாருங்க இல்லை உன் குடும்பத்தை பாரு அதை விட்டு விட்டு என் தணிப்பட்ட விஷயத்தை பற்றி பேச உணக்கு உரிமை கிடையாது
இது அதீரையின் நிலைப்பாடு இது பற்றி யாரும் அவளிடம் கேட்டது இல்லை , அந்த வாய்ப்பு யாருக்கும் கிடைத்ததது இல்லை அவளது வளம் வேலை சுற்றத்தின் நிலை இதை செய்திருந்தது.

அவள் தாய் தந்தையர் இருவருமே ,இது தங்கள் மகளது சுதந்திரம் என கண்காணிப்பையும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை கூறி வளர்க்க வேண்டிய காலத்தில் பணம், பார்ட்டி என அலைந்து விட்டு இப்போது வருத்தம் கலந்த புன்னகையுடன் நழுவுபவர்கள்.

முன்பு இவர்கள் சுதந்திரத்திற்க்கு அதீரை குறுக்கீடு செய்ய கூடாது என அவளுக்கு செல்வத்தையும் கல்வியையும் தந்தவர்கள் அன்பு பண்பாடு ஒழுக்கம் பற்றிய புரிதல் தரவில்லை , விளைவு அவள் சுயம் அவளே பார்த்து கேட்டு படித்து பெற்று வளர்த்துக் கொண்டாள்.

 
அத்தியாயம் 2

அமெரிக்காவின் நியூஜெர்சி

அந்த இல்லம் தெய்வீககளையுடன் இருந்தது. ஒரு இல்லத்தை கோவிலாக்குவதும் கல்லறையாக்குவதும் அந்த வீட்டின் பெண் தான்.

நாற்காலியில் அமர்ந்திருந்த அவளின் வாசவார் குழல் இடைதாண்டி நீண்டிருக்க , அதில் பூசிஇருந்த எண்ணெய் போக சீயக்காய் (சிகைக்காய்) தேய்த்து விட்டு , வெந்நீர் ஊற்றி அலசியவனுக்கு அலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. அந்த ஒசையை கேட்டவள் ,

அவன் கையிலிருந்த ஹேண்ட் ஷவரை (கை நீர் தூறி இப்படி போட்டா புரியாது )
வாங்கிக் கொண்டாள் .
"ரொம்ப நாழியா போன் அடிக்கறது , நீங்க போய் அங்க யாருன்னு பாருங்கோ யாராவது முக்கியமானவாளா இருக்க போறா? "
என நாற்காலியில் இருந்து எழ போனவளின் தோளில் கை வைத்து அழுத்தி
" முதல்ல நீ உட்காரு " என அவளை அமர வைத்தவன் தான் எண்ணெய் பூசிய இடங்களுக்கு மீண்டும் சீயக்காய் பூசி கூந்தலை தேய்த்தவன்
" ஏன்டி அதுவா முக்கியம்?
மீதி சேவகமும் முடிச்சிட்டுதான் போவேன் ", என்று கையில் சோப்பை எடுக்க
"ஒன்னும் தேவையில்லை நானே குளிச்சிக்கறேன் , நீங்க முதல்ல இங்கருந்து வெளில போங்கோ" என அவன் முதுகில் கரம் வைத்து
புன்னைமரக்கண்ணன் அவனை
வெளியில் தள்ளி கதவை அடைத்தவள்
மீதி குளியலை முடித்து வெளியே வந்தவள், உடையை மாற்றி கூந்தலை தளர பின்னிலிட்டவள்.

அன்று வரலெட்சுமி விரதம்என்பதால் , மிக அழகாக அம்பாளை அலங்கரித்து வணங்கியவள், பூஜை செய்து விட்டு தன்னவனை வணங்கி தன் முன் குங்குமத்தை நீட்டிய அந்த தெய்வ மங்கையை கடிந்து கொள்ள கூட மனம் வரவில்லை அவனுக்கு

"நீரு இந்த கால்ல விழறத செய்ய வேண்டாம்னு எத்தன தடவை சொல்றேன் , மத்த விஷயங்கள எல்லாம் நான் சொல்லாமலே புரிஞ்சி நடக்கற நீ, இந்த ஒரு விஷயத்தை மட்டும் மாத்திகோயேன் , நீ மட்டும் தான் விழுனுமா இனிமே நீ என் கால்ல விழுந்த நானும் உன் கால்ல விழுவேன் "
என்றவன் தானும் விழப் போக
"அச்சச்சோ என்னன்னா இதெல்லாம்.." என பதறி விலகினாள்.

என்ன பொருத்த வரைக்கும் கணவன் , மனைவி இருவரும் சமம் . என்றவனுக்கு அவளின் புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது.

நீராவிற்கு சிறுவயது நினைவு வந்தது. தன் தாய் வேதவதி ,தந்தை மணிவண்ணனை வணங்கியதை பார்த்தவள் தந்தையிடம்

" ஏம்ப்பா அம்மா உங்க கால்ல விழறா , அது வாடா நீரு குட்டி என தன்னை தூக்கி மடியில் வைத்தபடி ஊஞ்சல் ஆடியவர் , உங்கம்மாக்கு குறுக்கு பிடிச்சிண்டுத்தோ என்னவோ ?" என்றார். சிரித்தபடி

நேரொருவரில்லாளோ " இல்லை எனக்கு உண்மையான காரணத்தை சொல்லுங்கோப்பா " என கொஞ்ச

"ஏதுக்கும் நீ உங்கம்மாட்ட முதல்ல ஒரு தடவை கேளேன்" என்றார் மணிவண்ணன்,

"அம்மா நீங்க முதல்ல சொல்லனுமாம் " என்று தன் பாதங்கள் சத்தமிட தாயிடம்
சென்றவள் கூற , பூஜையறையில் இருந்து இவர்களது உரையாடலை கேட்டு கொண்டிருந்த வேதவதி தான் ஏற்றி வைத்த விளக்கை சேவித்து புன்னகையுடனே எழுந்திருந்தாள்.

நேரொருவரில்லாளின் இருபுற பிண்ணலுக்கும் பூ வைத்தபடி
"ஆம்படையான்தான் ஒரு பொண்ணுக்கு பகவானுக்கு சமானம்னு பெரியவா சொல்லுவா ", என்று பதிலுரைத்ததும்

"ஆம்படையான் ஆண்டவனா " என முழித்த பெண்ணைக் கண்ட

மணிவண்ணன் சிரித்தபடி எழுந்து வந்தவர் , " உங்கம்மா பிள்ளையார் மாதிரி இங்க இருந்தாலும் என்ன மட்டும் சேவிச்சி நான் கோவிக்கு போய் அம்பாளுக்கு எல்லாம் சேவகமும் பண்ணிற சேர்க்கற என்கைங்கர்யத்தோட பலன அடைஞ்டுறா "
N
என்றவர் நேரொருவல்லாளின் தலையை மெல்ல தடவியவர் , அவளிடம்
தாலி கட்டின ஒரு காரணத்துக்காக ஒருத்தன் ஒரு பொண்ணுக்கு கடவுளாக முடியாது நீருக்குட்டி என்ன பொருத்தவரைக்கும்

" ஒரு பொண்ணு ஒருத்தர பகவானுக்கு நிகராநிணைக்கனும்னா அதுக்கான தகுதி அவனுக்கு இருக்கனும். அதுமட்டுமில்லாம இன்னோன்னும் இருக்கு நீரு அவன் தான் எல்லாம்ன்னு பகவான் கிட்ட எவ்வளவு அன்பு நம்பிக்கையோட சரணடையறோமோ அது மாறி , நாம தான் எல்லாம்னு வரவாளோட அன்புக்கும் நம்பிக்கைக்கும் அவன்பாத்திரமா இருக்கனும். அதே அன்பையும் நம்பிக்கையும் அவன் அவளுக்கும் கொடுக்கவேண்டும்.அது இல்லாத ஒருத்தனை எந்த பெண்ணும் மதிக்க மாட்டாள். "

மகளுக்கு தான் கூறுவது சற்று குழப்பதை ஏற்படுத்தி இருக்கிறது. என புரிந்து கொண்டவர் ,
" சரி .. நீ நான் அம்மா எல்லாரும் ஏன் பாட்டிய சேவிச்சோம்?"

"அவா பெரியவா அதான் " என்றாள்.
"அதபோல அம்மாவ விட நேக்கு வயசு ஜாஸ்தியோன்னோ அதான் "
" சரி வா , நோக்கு பிடிச்ச பால்திரட்டு கிளறி இருக்கேன் அப்பா எடுத்துக் கோ "
என்றபடி உணவருந்த இட்டு சென்றார்.

நீருவை பொறுத்தவரையில் அது பின்னாளில் உண்மையாகி நிக்கோலஸ் அவளது கடவுள், நண்பன் , உறவு , சேவகன், அரசன் அனைத்துமானதும் அந்த நிகழ்வுகளும் நினைவுக்கு வர மனம் தந்தையையும் கடந்த காலத்தையும் நினைவுபடுத்த சிரிப்பு மறைந்தது.

சில இழப்பின் வலிகள் இறக்கும் வரை மாறாது. என்றாலும் தாங்கியபடி தள்ளி வைத்து பார்த்து கடத்தி விடுகிறோம் . எனினும் கடந்து வருவது என்பது இறந்தவரின் பாதிப்பு ஒருவர் மனதில் அவர்கள் இருப்பின் போது ஒருவருடைய வாழ்வில் ஏற்படுத்தும் பங்களிப்புகளின் ஆழத்தை பொறுத்துதான் கடத்துவதும் அல்லது கடந்து வருவதும்,

நொடியில் அதை மாற்றி தன் நிலைக்கு திரும்பி இருந்தாள்.அவன் நெற்றியில் திருநீறு வைத்தவள், முந்தானையால் மூக்கின் மேல் சிதறி இருந்த திருநீறை துடைத்தபடி

"கடவுள் அப்படிங்கற இடத்தை நாம யாருக்கு தருவோம். நம்மள காப்பவர்களுக்கு , நமக்கு அனைத்துமாகவும்இருக்குறவங்களுக்கு தான்.அப்ப எனக்கு எல்லா மா இருக்குற நீங்க என்னோட கடவுள் இல்லாம யாரு?" என்ற அவள் தான் அவனுக்கு எல்லாமாக இருந்தாள் .

" அது மட்டும் இல்லை கடவுள் என்றால் அனைத்தும் அறிந்தவர் அனைத்தினுள்ளும் இருப்பவர் அது போலத்தான் நீங்க எனக்கு "

நீருவுக்கு அவனும் அவளைப் பற்றிய அனைத்தும் அறிந்தவன் அவளினுள் நிறைந்தவன் அவனே,அவளது உணர்வு ,உலகம், உயிர் என அனைத்தும் அவனைச் சுற்றி மட்டுமே சுழலும் .

அவன் நிக்கோலஸ் சீராக வெட்டபட்ட முடி , தினமும் செய்கின்ற உடற்பயிற்சியில் பெற்ற தேகக் கட்டு , எந்த தவறான பழக்கமும் இல்லை என்பதை அறிவிக்கும் முகம்,

நிக்கோலஸ் ஜெனிபருக்கு சில உறவு மற்றும் பிரிவுகளுக்கு பின்பு முதல் கணவர் எட்வர்ட்கு பிறந்தவன் .
நிக்கோலஸின் மூன்றாவது வயதில் கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிந்து விட அதனை தொடர்ந்து ஜெனிபர் நிக்கோலஸின் , ஐந்தாவது வயதில் செய்த இரண்டாவது திருமணத்தை ஏழாவது வயதில் முறித்துக் கொண்டார். மீண்டும் அவனது பதினைந்தாவது வயதில் ஜார்ஜை காதலித்து அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர் நிக்கோலஸின் இருபத்தி மூன்று அகவையில் மணம் முடித்து இன்று வரை அவருடன் வாழ்கிறார்.
ஆனால் அவனைப் பொறுத்தவரையில் அவன் அன்னை அற்புதமான மனுஷி அவனை வளர்த்திலோ , கல்வியளித்ததிலோ , அன்பு செலுத்துவதிலோ எந்த குறையும் வைத்ததில்லை. ஆனால் குடும்ப உறவு தந்தை பாசம் கிடைத்தது இல்லை.

தனது குழந்தைகளுக்கு தன்னைப்போல பல தந்தைகள் குழப்பங்கள் வேண்டாம் , என முடிவு செய்தவன். அதனாலேயே நிக்கோலஸ் ஒருவளை மட்டுமே காதல் செய்வது அவளையே திருமணம் செய்து இறுதி வரை அவள் அவனுக்காகவும் அவன் அவளுக்காக மட்டுமே என்ற உறுதியானகோட்பாடுகளின் பின் தன் அலைபாயும் மனதையும் உணர்வுகளையும் கட்டி வைத்திருந்தவன் , டேட்டிங் மீட்டிங் போன்ற எந்த சுழலுக்கும் சிக்கவில்லை. இராணுவத்தில் பணியாற்றியவன், ஒரு விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தவன்,
கல்வி மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்திற்காக அவளது பல்கலைகழகம் தேர்வுசெய்து அனுப்பிய மாணவியரில் ஒருவளாக இங்கு அமெரிக்காவிற்கு வந்திருந்த நோரொருவரில்லாளை கண்டான்.

அவனோ கண்டவுடன் நேரொருவரில்லாள் மேல் காதலில் விழுந்தான். இவன் காதலை கூற அலைய அவளோ இவனை நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை.

நேரொருவரிலில்லாளுக்கு தெரிந்திருந்து, தன் இதயமும் உணர்வுகளும் அவனுடன் பினைந்திருக்கிறது என்று , நிக்கும் அதை அறிந்து தான் இருந்தான் .

சப்திக்கும் தன் காலடிகளில் தயங்கும் நீரஜாவின் நடையில் அவள் தன்னை உணர்வதையும் , நிமிராத அவள் முகம் தன் நிழல் கண்டு பொலிவதையும் , அவள் உணர்வுகள் தன்னில் கலந்து இருப்பதையும் உணர்ந்தவன். அவன் வராத தினங்களில் அவள் தேடலையும் கண்டு கொண்டவன்

நேராவின் பின் சுற்றுவதை விட திருமணம் செய்து கொண்டு விடுவதுதான் , அவள் காதலை பெறுவதற்கு இருக்கும் ஒரே வழி என அறிந்து கொண்டான்.

அவனுக்கு இது புதிது ஒரு பெண்ணிடம் கவரப்படுவது பிறகு அவளை கவர்வது பேசி பழகி சுற்றி காதலை உணர்வது பின்பு அவளுக்கு அதை உரைப்பது சேர்ந்து வாழ்வது மேற்சொன்ன அத்தனையிலிலும் தாக்கு பிடித்தால் திருமணம் இல்லை பிரிவு என எளிதாக
புரிந்து பழகியிருந்தவனுக்கு

தன் முகம் நிமிர்ந்தும் பாராமல் கடை விழியில் தன் நிழலிலும் தன்னையறியும் நேரொருவரில்லாளை பிடித்திருந்தது . தனது பண்பாட்டில் இருந்து சற்றும் விலகாத கண்ணியம் கலந்த அவள் உடை மற்றவர் முன் நிமர்ந்த நடை, சிதறாத கவனம் .

ஆடவர்களை தொட்டு பேசாமல் கட்டியணைத்து பாசம் காட்டாமல் இருகரம் குவித்து வணங்கி அவர்களை தனது சகோதரனாக பாவிக்கும் , அந்த நேசமிக்க நடத்தை பிடித்தது.

அவன் அமெரிக்காவை தாயகமாக கொண்ட தாய் தந்தைக்கு பிறந்து அந்த கலாச்சாரத்தில் வளர்ந்தவன் , இங்கு படிக்க வந்த நீருவை கண்டதும் காதல்
அவளை பற்றி அறிய அவளது பண்பாட்டையும் ஒருவனுக்கு ஒருத்தி கோட்பாடும் பற்றி அறிந்தவன்
அந்த ஒருவன் தானாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு பற்றி அறிந்து கொண்டான்.

எந்நேரமும் உடையலாம் எனும் நிலையில் தோன்றும் காதலில் நம்பிக்கை உறவை விட, திருமணம் எனும் பந்தத்தின் அடிப்படையில் உறுதி செய்யபட்ட காதலின் பாதுகாப்பு உறவு எதிர்காலத்திற்க்கு நல்லது எனும் புரிதலுக்கு வந்தவன். நீரஜாவை அதற்கு முன் வந்த சில தடைகளை கடந்துமுறைப்படி மணந்து கொண்டான். இன்று வரை நீரஜாவின் நிக்கி மட்டுமே , வேடிக்கைக்கு கூட தனது பெயரை மற்ற பெண்களுடன் சேர்த்து பேச அனுமதிக்க மாட்டான்.தன்னவளுக்காக மட்டும் தான் தன் மனம் மற்றும் செயல் என நினைக்கும் நிகரில்லாத அன்பு வண்ணம் அவன்.

குங்குமத்தை நீருவின் நெற்றியில் வைத்தவன். அந்த சிமிழை வாங்கி பூஜை அறையில் வைத்தான். அவளை அலுங்காமல் சிதறய பவளமல்லியை கசங்காமல் இருவிரல் நுனி கொண்டு அழுத்தாமல் மெல்ல பற்றி கூடையில் சேர்ப்பது போல் கரங்களில் அள்ளி நெஞ்சோடு சேர்த்து கொண்டான்.

கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்த்தியவன் தான் கீழே அமர்ந்து அவள் பாதங்களை மெல்ல பிடித்து விட்டான் .

அந்த தாமரைகள் சற்று பூசியது போல் வீங்கி இருந்தன.
"இல்லையே இவளுக்காக நானும் உப்பு சேர்ப்பது இல்லையே பிறகு இது எப்படி?" என யோசித்தபடி மேலே பார்க்க

சூல்தாங்கிய அந்த ரோஜாவோ , இரண்டு கரங்களிலும் இனிப்பு எடுத்து கொண்ட குழந்தை அதை சரியாக மறைக்க தெரியாமல் அன்னையிடம் மாட்டிக் கொண்டதும் திகைத்த விழியில் கதை கூற அது புனையும் கதையை ஏறக்காத தாயை மயங்க செய்ய மயக்கும் சிரிப்பையும் தருமே அது போல ஊறுகாய் சாப்பிட்டதை அவன் கண்டுபிடித்து விட்டதில் குழந்தையாகி நின்றாள் நேரொருவரில்லாள்.

நீரு என அவன் சிறு குரல் உயர்த்தலில் இனி சாப்பிடவில்லை என்றவள் முகத்தில் இருந்த சிறுபிள்ளை கோவம் அவனை கட்டி இழுக்க , இழுத்து முத்தம் வைத்தான் .அதில் நாணம் கொண்டவள் அவன் டீசர்ட்டின் கழுத்து கரையை பிடித்துக் கொண்டவள் மார்பில் புதைந்து
முகம் மறைத்துக் கொண்டாள்.

அவளுக்கு இது போன்று கூடத்தில் யாரும் வந்து விடக் கூடும் என்ற தருணத்தில் வரும் அச்சம் அவனை விட்டு சற்று தள்ளி நிறுத்த அந்த பரம்பரை அச்சத்தை தாண்டி அவளை முத்தாடுவதும் அதனை தொடரும் அவளது கிறக்கம் யாரும் வந்து விட்டால் என சுழலும் அவள் விழிகளின் தவிப்பு அவனுக்கு தித்திக்கும் போதை

தன் மீது கவிழ்ந்திருக்கும் அந்த தாமரையின் செவி மடல் அருகே குனிந்தவன் , "ஏய் நீரு இது நம்ம வீடு தான் வாசல் கதவும் பூட்டி தான் இருக்கு"
என்றவன் மேலும் எதுவும் கூறும் முன்
தன் மென் விரல்களினால் அவன் அதரங்களை மூட மிக சரியாக காலிங் பெல் ஓசை கேட்டது.

பதறி விலகிய அவளை
" ஏய் நீரு ரிலாக்ஸ் .. " என அமர வைத்து விட்டு , தான் எழுந்து சென்று கதவை திறந்தான்.
 

அத்தியாயம் 3

பக்கத்து வீட்டு சிறுமி செரீனா இவர்களை தேடி வந்திருந்தாள்.

"ஹாய் நிக் மார்னிங் நீரு "

என்று பெரிய மனுசி போல் உள்ளே வந்து நீருவின் அருகில்அமர்ந்த சின்னவள்,

அவள் கரங்களில் இருந்த வளைகளை பார்த்து , ஆர்வத்துடன் அதை தட்டி ஒலி எழுப்பி முன்னும் பின்னும் அசைத்து விளையாடியவள் ,

" இட் இஸ் சோ ப்யூட்டிபுல் "

என்று விழி விரித்து கூறிய சின்னவளை, தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான் நிக். அவன் இருபுறமும் கால் போட்டுக் கொண்டு அவன் மார்பில் கண்ணத்தை மோதி விளையாடியபடி கேள்விகளை கேட்டாள் குழந்தை.

"நீங்க ஏன் இவ்வளவு வளையல்கள் போட்டு இருக்கீங்க ஆன்டி ?"

என்ற குழந்தையின் கன்னம் தொட்டு முத்தம் இட்டவள் , சிரித்தபடி

" அது இவ்வளவு வளையல்போட்டுகிட்டா அதுலேர்ந்து வர்ர சத்தம் கேட்டு , நீரு வயத்தில இருக்கற பேபி ஹேப்பியா இருக்கும் அதான் "

என்றாள் .அதன் நெற்றியில் முத்தமிட்டு


"உனக்கும் தரவா வளையலும் சாக்லேட்டும்"

என்க . சரி என்பதாய் தலையை அசைத்த அந்த மல்லிகை செண்டிற்கு மேலும் ஒரு முத்தம் வைத்தாள்.
அதற்குள் செரீனாவை தேடி வந்த அவள்தாய் நீருவின் விளக்கங்களை கேட்டபடி உள்ளே வந்த அவள்

"நன்றி நீரு உங்கள் விளக்கங்களுக்கு
இவை எனக்கு தெரியாது "

என்றிருந்தார் .செரீனா கொஞ்சம் சுட்டி குழந்தையாதலால் இங்கே அடிக்கடி ஓடி வந்துவிடுவாள். இதோ இன்றும் செரீனா அவருக்கு போக்கு காட்டி விட்டு வந்திருக்க அவர் அவளை தேடி வந்தவர் நீரு கூறிய விளக்கத்தை செவிமடுத்திருந்தார் . அதைப் பற்றி சற்று நேரம் பேசிவிட்டு அவள் கொடுத்த வளையல் மற்றும் இனிப்புகளுடன் செரீனாவை அழைத்துக் கொண்டு திரும்பினார்.


அதீரை வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு வந்த அழைப்பில் ஒளிர்ந்த எண் கொடுத்த வெளிச்சத்தில் இன்னும் அதிகம் மின்னியது அவள் முகம். அலைபேசியை அனைத்தவள், அந்த வீட்டினுள் வாகனத்தை நிறுத்தினாள். கீழே இறங்கியவள் வரவேற்பறைக்குள் நுழைந்தவள்

" நீரு .."

என்ற சந்தோஷ கூச்சலுடன் அவளை கட்டியணைத்து கன்னத்தில் நச்சென்ற முத்தம் ஒன்றை வைத்தாள். அதீரைக்கு அலைபேசியில் முயன்று கொண்டிருந்தவள் , இவளைக் கண்டதும் நாற்காலியில் இருந்து இவளை வரவேற்க எழுந்தவள் , அதீரையின் செயலில் கூச்சம் கொண்டு

"சீ இதென்னடி பழக்கம் கட்டி புடிச்சிண்டு முத்தம் கொடுத்துண்டு , இஷிக்காம நின்னு பேசவே நோக்கு தெரியாதா "

என்ற நேரொருவல்லாளின் கரம் கன்னத்தை துடைத்து கொண்டாலும் முகம் தன் தோழியை கண்டதில் மலர்ந்திருந்தது .

"தாய்மை பாசத்துடன் கன்னம் தடவியவள் பாரு ஒழுங்கா சாப்பிடறதே இல்லை கன்னம் எல்லாம் உள்ள போயி
கழுத்து எலும்பு குழி விழுந்து என்ன டயட்டோ , வேலையோ "

என்றவளை மீண்டும் கட்டிக் கொண்டவள்.

" எல்லாம் உன்ன பார்க்காத ஏக்கம் தான் நீரு "

என்றாள். அந்தக் கால நடிகர் ஒருவர் ஸ்டைலில் அதில் வெட்கிய நீரு, அதீரையை விலக்க முயற்சி செய்தவளாய்

"தள்ளி நில்லுடி சும்மா சும்மாகட்டிண்டு"

என்றவளை இழுத்து கொண்டு அருகில் இருந்த சொகுசு நாற்காலியில் பொத் என்று விழுந்தவளை

"உனக்கு எப்போ பாரு எல்லாம் அவசரம் வேகம் சித்த நிதானமா நடந்துக்கவே தெரியாதா ,கொஞ்மாச்சு பொம்பனாட்டி மாறி இருக்கியா எப்ப பாரு ரெளடியாட்டமா இரு"

என கடிந்து கொண்டாள் நீரு. நீருவின் இரு தோள் மீதும் தன் கரங்களை வைத்து அவள் முகம் பார்த்த அதீரை

" நீதான் மடிசஞ்சியா இருக்க , என்னையும் உன்னோட சேர்க்க ட்ரை பண்ணாத டியர் , பாரு நீயெல்லாம் எக்னாமிஸ்ல பிஹெச்டி வாங்கினன்னு சொன்னா எவனாச்சும் நம்புவானா?"

எனக் கேட்க , தன் தோள் மீதிருந்த அவள் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்ட நீரு

"அதுக்காக கழுத்துல கட்டி தொங்க விட்டுண்டு டா அலைய முடியும் ? "

என்றாள். பதிலுக்கு அதீரை

" அலைய வேண்டாம் ,படிச்ச படிப்புக்கு வேலையாவது பார்க்கலாம்ல.. உனக்கு இருக்க நாலட்ஜ்கு நீயெல்லாம் ஈஸியா பெரிய இடத்துக்கு வந்துடுவ"

என்று அவளை வேலைக்கு அழைத்தாள். மெல்ல அவளை பார்த்து சிரித்த நீருவோ

" உனக்கு இந்த வாழ்கை பிடிச்சிருக்கு அதீ ஆனா என்ன கேட்டா நேக்கு இந்த சம்பாத்தியம் , இந்த அதிகாரம் வேண்டாம்"

"அப்புறம் ஏன் நீரு அவ்வளவு படிச்ச?"

"எனக்கு படிக்கறதுக்கு பிடிக்கும் படிச்சேன், மேலும் என்ன பொறுத்தவரை படிப்புங்கறது அறிவு சம்மந்தப்பட்டது. நான் வேலைக்கு போய் அத யாருக்கும் நிறுபிக்க வேண்டியதில்லை.மேலும் நான் வேலை பார்த்து ஜீவனம் நடத்த வேண்டிய சூழ்நிலை இல்லை , சோ அந்த இடத்துக்கு தேவை படற இன்னோருத்தர் வந்தா அவரோட பொருளாதாரம் உயரும் .இந்த விஷயத்தை பற்றி எத்தனை தடவ கேட்டாலும் என் பதில் இதான் "

என்ற நேரொருவரில்லாள் முகம் பார்த்த அதீரை

"அதே மாதிரி தான் எனக்கும் நான் , நான் என்ன செய்யனும் செய்ய கூடாதுங்கறது என் சுதந்திரம் "
என்றாள் நிமிர்வுடன் .

"ஆனா அது அடுத்தவாள எந்தவிதத்திலும் பாதிக்க கூடாது "

என்று பதில் உரைத்த நீருவிடமும் அதே நிமிர்வு இருந்தது. அந்த அத்தோடு விஷயம் முடிந்தது என்பதாய்

"சரி சரி வாய தொற"

என அவளின் வாயில் இனிப்பை திணித்தாள்.

"ஸாரி நீரு அன்னிக்கு ஆபிஸ் மீட்டிங்ல மாட்டிக்கிட்டேன்"
என விளக்கம் சொல்ல வந்தவளை

"போறும் உன்னோட விளக்கம், இப்ப உன்ன கூப்படது சின்னதா ஒரு ட்ரீட் நம்ப மூன்று பேருக்கு மட்டும் "
என்றவளை

"ஏய் .."

என மகிழ்வுடன் அவள் கரம் பற்றி சுற்ற அதில் நீரஜாவுக்கு தலைசுற்ற தொடங்கியது , அவள் கை நழுவி கீழே விழுந்து விடுவாளோ என அவளை தாங்கிக் கொண்டான் நிக், அதீரையை முறைக்க அவளோ இதற்கெல்லாம் அஞ்சவா என்பதான ஒரு பார்வையை கொடுத்தவள்

"இங்க பாருங்கமிஸ்டர் நிக், நீங்க இங்க இரண்டு மாசம் படிக்க வந்த பொண்ண லவ் பண்ணி,கூட்டு பயிற்சின்னு அவ ஊருக்கு போய் கல்யாணம் பண்ணிட்டு வந்து சாவதானமா ,ஒரு கெட்டு கெதர் வைச்சி என்னய ஏமாத்திட்டு இப்ப வளைகாப்புக்கு விழாவுக்கு வரலன்னு மூஞ்சிய தூக்கினா பயந்துருவமா"

என்றபடி நீருவின் அருகில் வந்தவள்

"நான் என் நீரு குட்டிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் , உங்களுக்கு முன்னாடி
அவ எனக்கு ப்ரண்ட் "

என்றபடி அவள் அருகில் அமர முயல , ஏற்கனவே தன் மனைவியை அதீரை உரிமை கொண்டாடியதிலும் முத்தமிட்டதிலும் பொறமையில் இருந்தவன் ,பட்டென நீருவை அவள் இருந்த இருக்கையில் இருந்து இழுத்து தூக்கி தன் மடியில் அமர்த்தி இரு தோளை சேர்த்து ஒரு கரம் தழுவ முன்புறம் மறு கரம் வளைய , வெட்கத்தில் குனித்த முகத்தை கண்ட பெருமையுடன்

"ஆனா என் மனைவி "

என அவள் மீது தன் உரிமையை அறிவிக்க.

"வைச்சிக்கோயேன் யார் வேண்டாம்னு சொன்னது "

என்றபடி காமிராவை தூக்கிக் கொண்டு,

" இப்படியே ஒரு போஸ் கொடுங்க "

என இருவரையும் அழகாக புகைப்படத்தில் கொண்டுவந்திருந்தாள்.
அதீரையும் நிக்கும் பள்ளியில் இருந்து தோழர்கள் , மேலும் நீரு இங்கு மாணவியாக வந்திருந்த போது முதலில்அவளிடம் நட்புக் கரம் நீட்டியவள் அதீரை,
நிக்கும் அதீரையின் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவன் எனினும் அவன் தாய் ஜெனிபரே இன்னும் பார்த்து கொள்கிறார்.

அதீரை இருக்கும் இடத்தில் இருந்து , இப்போது நிக் இருக்கும் வீடு ஒரு மணி நேர பயணத்தில் இருந்தது. இந்த தனி வீட்டை நிக்கோலஸ் நீரு திருமணம் செய்யும் முன் தான் அவர்கள் இருவருக்காகவும் வாங்கியிருந்தான்.
நீரு மற்றும் நிக் காதல் பற்றி அவளுக்கு
தெரியும் ,

உணவு மேசையில் அதீரையை அமர வைத்து அவளுக்கு உணவு பரிமாரியவளிடம்

" நீயும் உட்காரு நீரு நாம சேர்ந்தே சாப்பிடலாம் "

என்றபடி நிக் அவளுக்கும் ஒரு தட்டை வைக்க, மூவரும் ஒன்றாக ஏதோ கதைகளை பேசியபடி உணவருந்தி முடித்தனர்.
 
அத்தியாயம் 4

உணவு மேசையை ஒழுங்குபடுத்தியவள் அங்கு இருந்த பாத்திரங்களை அடுப்படியில் கொண்டு வைத்தாள். தட்டுகளை தேய்ப்பதற்கு போட்டவள்
அந்த சூப் இருந்த கின்னத்தை மட்டும் மூடி மறைத்து வைத்தாள்.

உணவு முடித்து வந்த அதீரையிடம் பால் பாயாஸ கிண்ணத்தை கொடுத்தாள் .

"சூப்பர் நீரு எனக்காக செஞ்சியா ? "

என்றபடி வாங்கிக் கொண்டவள்

"சொல்லி இருக்கலாம்ல நானே வந்து எடுத்துப்பேனே , எதுக்கு அங்கும் இங்கும் அலையற?."

என்ற அதீரைக்கு பதில் நிக்கிடம் இருந்து வந்தது.

"அது அதியோடது இந்தா, இது உன்னோடது "

என சூப் நிறைந்த தன் கையில் இருந்த கின்னத்தை மனைவியிடம் கொடுத்தவன் ,

"நான் மத்த எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டு வரதுக்குள்ள சாப்பிட்றுக்கனும் "என வைத்தான்.
சூப்பை கையில் வைத்துக்கொண்டு ,

அப்பாவி போன்ற பாவணையை முகத்தில் கொண்டு வந்தவள் ,

"இன்னிக்கு மட்டும் லீவு விட்டுடுங்கோளேன் , நாளைக்கு சமத்தா குடிச்சிடுவேன் சரியா?"

அரக்கில் கரும் பச்சை கரையிட்ட மெல்லிய வகை பட்டு சேலை கட்டியிருந்த குழந்தையாய் அவள் கெஞ்ச , தோன்றியது ஜிமிக்கிகளாடும் சிறுமுகத்தை தூக்கி கொஞ்ச தோன்றியது . ஆனாலும் முயன்று
யசோதையின் பொய் கோபத்தை கொண்டு வந்து

"நோ..நீரு.. அவ்வளவையும் குடிச்சி தான் ஆகனும், இன்னிக்கு ஒழுங்கா சாப்பிடவே இல்லை" , என்றவனிடம்

"பால் வேனா குடிக்கறேனே ... " என்ற நீருவின் கோரிக்கைக்கு

"எதுக்கு அப்புறம் குடிக்கறேன் எனக்கு இப்ப வேண்டாம்ன்னு ஏமாத்த வா ,
ஒன்னும் தேவையில்லை "

என தன் கண் பார்வையில் நீருவை உட்கார வைத்தவன்

" நான் கிச்சன் சுத்தம் பண்ணி முடிக்கறதுக்குள்ள இத குடிக்கற " என நகர்ந்து விட ,

வேறு வழியின்றி ஒவ்வோரு ஸ்பூனாக மெல்ல குடித்துக் கொண்டிருந்தவளிடம் வந்த அதீரை.தன் பாயாஸ கிண்ணத்தை காலி செய்தபடி

"ஏன்டி ?நீரு, சூப் குடிக்கிறதுக்கு என்ன? நன்னா தானடி இருக்கு ? "
என்றவளுக்கு

"ஆமா போடி என்னடி ..இது உப்பும் இல்லாம ,உரைப்பும் இல்லாம, சப்பு சப்புன்னு ,பச்ச குழந்தைக்கு கொடுக்கறாப்பல , அதோட அசட்டு திதிப்பும் அதோட டேஸ்டும்... என
சலித்து கொண்டவள்,
ஒரு வத்தக் குழம்பு , புளி மிளகாய் ஒன்னும் இப்ப சாப்பிட விடுறது இல்லை.".

என புலம்பியபடி
சூப்பை ஒரு வழியாக காலி செய்தாள்.

நிக்கோ நீருவும் அதீரையும் பேசியதை கேட்டபடி வேலைகளை முடித்தான். அவனுக்கு சிரிப்பு வந்தது .அவளுடைய புலம்பல்களை கேட்டு , திருமான புதிதில் எங்கேனும் விருந்துக்கு போனால் அவள் படாத பாடு பட்டு போவாள். எந்த உணவு வகையில் எது சேர்த்து இருக்கிறதோ என திண்டாடி விடுவாள் .அதற்கு பயந்தே வர மறுத்து விடுவாள். வந்தால் அவனை விட்டு அகலமாட்டாள்.

மசக்கையின் போது இந்த உணவுகளின் வாடை கூட பிடிக்கவில்லை என ஒதுக்கி இருந்தாள். இப்போது இரத்த அழுத்தம் கூடியதால் வேறு வழியின்றி அவன் கட்டாய படுத்தி உண்ண வைத்து இருக்கிறான்.

கர்ப்பிணி பெண் சாப்பிட்ட உடன் மூச்சு முட்டுவது போல் இருக்க கூடத்தில் மெதுவாக நடை பயின்று கொண்டிருந்தாள்.

அவள் சிரமப்படுவது கண்டவன்,

"நீரு, இத வேனா மாத்திக்கறியா, ஈஸியா இருக்கற மாதிரி ஏதாவது போட்டுக்கறியா?"

என அவள் ஆடையை சுட்டி கேட்க

"வேண்டாம்.." என்பதாய் தலையசைத்தவள் லேசாகமூச்சு வாங்க, அவன் புயத்தை கொழும்பென தளிர் கரம் கொண்டு சுற்றிய அந்த கனிதாங்கிய கொடி அவன் தோள் மீது தலை சாய்ந்தபடி சற்று நேரம் அமர்ந்திருந்தாள்.

அதீரையும் அவனும் நிர்வாகம் குறித்து பேச ஆரம்பித்தவர்கள் பேச்சுவார்த்தை நீள அவளால் நீண்ட நேரம் அமர முடியாமல் இலேசாக இடுப்பு வலிக்க எழ முயன்றவளை தடுத்தவன்

அந்த நீண்ட சொகுசு இருக்கையை சரி செய்து அவன் மடி மீது தலை வைத்து ஒரு புறம் சாய்த்து படுக்க வைத்தான். ஒரு கையால் லேசாக நீருவின் இடுப்பு பகுதியை நீவிக் கொண்டே , அதீரை கூறிய அலுவலக விஷயங்களை கேட்டு கொண்டிருந்தான். நீருவும் வலி குறைய உறங்கி இருந்தாள்.

கோப்பில் இருந்த தகவல்களை படித்தவன் அதில் தன் கருத்துகளையும் சில இடங்களில் திருத்தங்களையும் கூறி தெளிந்த பின் தனது கையெழுத்தை இட்டான்.

"வெயிட் அதீ இப்ப வரேன் "

என்றவன் , தன் மடியில் துயில் கொண்ட அந்த வெண்ணிலவை ,வானம் மேகத்தை தாங்குவது போல் தன் பரந்த கை கொண்டு ஏந்தியவன் , அம்மஞ்சு நிகர்த்த பள்ளியில் அவளை இட்டான். அவளை கண்ணிமையாது பார்த்துக் கொண்டிருந்தான்.

தாய் வேலைக்கு செல்லும் நேரம் அறிந்த குழந்தை , அவளை பிரிய மனம் இன்றி கண்களின் வளையத்தில் அவளை வைத்திருப்பதும் அவள் இல்லை எனில் அழுவதும் அவளைக் கண்டதும் பாய்ந்து சென்று இடுப்பில் ஏறிக் கொண்டு, இடுப்பை விட்டு இறங்காமல் அடம் செய்யுமே …. அதுபோல தன் பிரிவை தாங்க முடியாது பின்னேயே அலையும் தன்னவளின் அன்பின் நிலையைக் கண்ட அவன் நெக்குருகிப் போனான். அவள் நிலை இத்தகையது எனில் அவனோ...

அமுதூறும் மார்பின் வலியோடும் அன்பு வழியும் கண்களின் நீரோடும் வேறு வழியின்றி செல்லும் தாயின் நிலையில் அவன் இருந்தான்.

அதுவும் தனது மகவுகளை தாங்கிய அவளை தனியாக விட்டு செல்வதை நினைத்து நிக்கிற்கு நெஞ்சம் வலித்தது.
ஒரு பெருமூச்சுடன் அவளிடம் குனிந்து நெற்றி பரப்பில் ஒற்றை முத்தம் வைத்தவன், அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு எழுந்தான் . தூக்கத்தில் கூட நிக் அருகில் இல்லை எனில் உடனே எழுந்து தேடி வந்து விடுவாள்.

நேரம் குறைவாக இருப்பதை உணர்ந்தவன், அதற்குள் அதீரையிடம் பேசி முடித்துவிட நினைத்தவனாய் கூடத்தை நோக்கி விரைந்தான்.

கோப்புகளை சேகரித்து அடுக்கி விட்டு அவனுக்காக காத்திருந்த அதீரையின் அருகில் சென்று அமர்ந்தவன்,

"அதீ … ராணுவத்தில இருந்து திரும்ப வேலைல சேர சொல்லி எனக்கு உத்தரவு வந்திருக்கு நான் திரும்ப வரவரைக்கும் நீதான் நீரு கூட இருந்து அவள பார்த்துகனும்" ,

என்றவன் ஒரு நிமடம் நிறுத்தி மூச்சை உள்ளிழுத்தவன் எப்படியும் இதை கூறித்தான் ஆக வேண்டும் என்பதாய்

"அதீ .. , ஒரு வேளை நான் திரும்ப வரலைன்னா கூட "

என்ற தன் தோழனை அனைத்துக் கொண்டாள் அதீரை .மெலிதாக தலையை ஒப்புதலாக அசைத்த அதீரையின் கண்களில் மென் கண்ணீர் படலம் திரையிட அதனை மறைத்து

" உன் பையன பார்க்க நீ வருவ "

சிறு சிரிப்பு மற்றும் நம்பிக்கையுடன் கூறினாள்.

"ஒன்னு இல்ல அதீ இரண்டு "

என்றவனின் முகம் இப்போதே மழலைகளை மடிதாங்கியது போன்ற நினைவில் மகிழ்வில் ஜொலித்தது,
அடுத்த நொடியே அது மாறி

"அம்மாவ நீரு கூட இருக்க சொல்ல முடியாது அதீ ,ஏன்னு உனக்கு தெரியும் "

என்ற நிக்கின் முகத்தில் யாரும் இன்றி தனியாக அவளை விட்டு வேதனை பெரிதாக மனதில் எழ அது முகத்திலும் விழிகளிலும் வழிய நின்றான்.

அதனை கண்ட அதீரை

" ம்ஹும் .."

என மறுப்பாய் தலையாட்டியவள் ஆறுதலாக அவனது தோளில் தனது கரம் பதித்து அழுத்தினாள்.

நிக் தனக்கு இருபத்தி மூன்று வயதில் தந்தை என வந்த வரை இன்னும் அவன் மனம் ஏற்கவில்லை , அவனை பொருத்தவரை அவர் தன் தாயின் கணவர் அவ்வளவே மேலும் ஜெனிபரும் தனது தனிப்பட்ட வாழ்கையில் நிக் நுழைவதை விரும்பாதவராய் கணவருடனேயே தனித்து வாழ வேண்டும் எனும் முடிவுடன் இருந்தார்.

ஜெனிபரை பொருத்தவரை நிக் வளர்ந்து விட்டான். இனி அவன் வாழ்கை அவன் இஷ்டம், இனி தான் தனக்காக வாழவேண்டும் என்பது அவரது முடிவு.

நிக்கிற்கும் அவர்களுக்கு இடையே துருத்தி கொண்டு இருக்க விருப்பமில்லை. எனவே தான் அவன் இராணுவத்தில் சேர்ந்தது. தனியாக வந்ததும்.

நீருவுக்கு அவரை தன்னுடன் இருக்க சொல்ல இஷ்டம் என்றாலும் , இதில் அவள் உள்நுழைவது பல குழப்பங்களுக்கு வித்திடும் என்பதால்
அமைதி காக்கிறாள்.

நிக் நகர்ந்த சில நிமடங்களிலேயே தூக்கம் கலைந்து விட்ட நீரு , அவனை தேடி கூடத்திற்கு வந்தவள்

அதீரையிடம் ,

"நான் திரும்ப வருவேனா இல்லையா தெரியாது இது என்னோட லாஸ்ட் ட்ரிப் பா கூட இருக்கலாம்"

என்ற வார்தையை அவன் கூறி முடிக்கும் முன் விரைந்து வந்தவள் தன் கரம் கொண்டு நிக்கோலஸ் வாயை மூடியிருந்தாள்.

கண்களின் நீர் வழிய அவள் நின்ற கோலம் , மனதை பிளக்க அவளை இறுக தழுவிக் கொண்டவன் அவள்கண்ணீரை துடைக்க

அவர்களின் அந்த தனிமையை கெடுக்க
விரும்பாதவளாய்,அதீரை அந்த இடத்தை விட்டு மெல்ல அகன்று தோட்டத்திற்கு வந்திருந்தாள்.

தன்னவனின் கையை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டு அவன் கண்களை பார்த்தவள்

" நீங்க திரும்ப வரனும் வருவேள் "

என்றாள். அவள் முகத்தில் தெரிந்த உறுதி , அவள் காதலின் நம்பிக்கையில் அந்த கண்களில் ஒளியை கண்ட நிக்கோலஸ் அவளுக்காக எந்த நிலையிலும் மீண்டு வர உறுதி கொண்டான்.

அதீரை தோட்டத்தில் நின்றவளுக்கு ஒரு சலனம் தன் வாழ்வு முறையின் மீது இது போன்று தன்னை தாங்கவும் ஒருவன் இருந்தால் நன்றாக இருக்குமே? என தோன்ற அடுத்த நொடி..
குடும்பம், குழந்தை என்ற கமிட்மென்ட்ஸ் வேண்டாம் ...அது எப்போதும் துன்பம், இப்படியே ...
சம்பாதிக்க செலவு செய்ய, ஒரு தொல்லையும் இன்றி நன்றாக தானே இருக்கிறது. என ஒரு சிந்தனை ஒட..

இருக்கிறது. எல்லாம் இருக்கிறது. உன்னிடம் எதற்காக?, யாருக்காக?, என்ற நோக்கம் இருக்கிறதா ?உன்னிடம்?
சில நிமிட சுகத்திற்கு பின் தோன்றும் இன்பம் சரி? நிம்மதி இருக்கிறதா ? மறுபுறம் மனம்தேட

நினைவுக்கு வந்தவள் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. வாகனத்தை கிளப்பிக் கொண்டு வந்து விட்டாள்.

அதீரையின் மனம் இன்னும் எவ்வளவோ இதைப் பற்றி யோசிக்க தோன்றினாலும் , எல்லாவற்றையும் விட இப்போது முன்னனியில் நீருவின் நலமே முக்கியம் எனப்பட அவற்றை தள்ளி வைத்துவிட்டு

அலைபேசியின் வழி தான் வீட்டிற்கு செல்வதை நிக்கிடம் கூறியவள்.

" டாட் அன்ட் மாம் இரண்டு பேரும் வெளிநாடு போயிருக்காங்க , நீருவ அங்க அலைய வைக்கறத விட நான் அங்க வரது தான் நல்லது "

என்றவள் விடை பெற்று அலைபேசியை வைத்தவள்,அது சார்ந்த சில திட்டமிடல்களில் இறங்கினாள்.
 
அத்தியாயம் 5

இரண்டு மாதங்களுக்கு பிறகு
தெற்கு சூடானின்
அமெரிக்க அமைதிப்படை முகாம்.

தெற்கு சூடான் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று . இப்போது புதிதாக சுதந்திரம் பெற்ற இளம் நாடு,

நைல் நதியவள் அரவணைப்பும் , இயற்கையின் அருளிய எண்ணெய் வளம் தாது வளங்கள் நிறைந்த நாடு விவசாயம் பூர்வ தொழில் இத்தனை இருந்தும் ..

பேராசைக் கண்களில் பட்டதன் விளைவு,
அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பிரிவினை ,தன்னலம் முக்கியமாக போக உள்நாட்டு போர். அதுவும் சில ஆண்டுகள் நீடித்ததன் கொடூரம், சில இலட்சம் இறப்பு, பல இலட்சம் மக்கள் அகதிகளாய் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்.

விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாமல் போராளிகளாகவும் எண்ணெய் வயல் கூலிகளாகவும் அகதிகளாகவும் மாறுபட்டு போனதன் பயன் உணவுத் தட்டுப்பாட்டு , உருவாக்கப்பட்ட பஞ்சம் பல்லாயிரம் உயிர்களை பலி வாங்குகிறது. ஜநாவும் , உலக நாடுகளும் அமைதிக்காய் போராடுகின்றனர்.

இவன் நினைத்த உடன் மனைவிக்கு பேச கூடிய சூழல் களத்தில் ஏது ?
சில முறை நீருவுக்கு அழைத்து பேசியவனுக்கு அதன் பிறகு பேச சூழல் அமையவில்லை


தெற்குசூடானின் தலைநகர் ஜுபே யில் இருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு முகாமில் நிக் பணியமர்த்தப்பட்டு இரண்டு மாதங்களாகிறது

தனது அறையில் இருந்தும் வெளியே வந்தவன், வழக்கம் போல தனது மெல்லோட்டம் எனும் ஜாகிங் போவதற்கு தயாரான உடைகளுடன் இருந்தான் .
POC (Protection of Civilians) பாதுகாக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியின் வழியே ஒட ஆரம்பித்தான்.

அங்கு வீடுகள் இல்லை அனைத்தும் வெள்ளை நிற கூடாரங்கள் , அமைதி படையினரால் வழங்கப்பட்ட தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தன. வீடுகளை சுற்றி சில மூங்கில்குச்சிகள் கொண்டு செய்த படல்களை கொண்டு வேலிகள் அமைத்திருந்தனர்.

சிலருக்கு வெறும் கூடாரம் மட்டும் , இன்னும் சிலருக்கு நடைபாதை ஒர கடைகள் போல் நாற்புறமும் நான்கு குச்சிகள் மேலே மட்டும் வெண்ணிற சாக்குபைகளை கிழித்து மூடியிருக்க மற்ற இடங்கள் திறந்து கிடக்க அதன் கீழ் சில குடும்பங்கள் ,

இவற்றை பார்த்து முதலில் மனம் பதறிப் போனான். இது போன்ற வறுமையின் நிஜதரிசனத்தை அவன் இதுவரை எந்த போர் களத்திலும் கண்டதில்லை . போர்கள் மனித உயிர்களை மட்டும் காவு கொள்வதில்லை. எப்படி கோரமாக சிதைக்க முடியுமோ அத்தனை கோரமாக
சிதைத்து கொண்டிருப்பதை கண்டவன் தற்போது தான் ஒருவாறு சகித்து தன்னை மீட்டுக் கொண்டிருக்கிறான்.

அன்றைய தனக்கான பணிகளை மூளைக்குள் திட்டமிட்டு அடுக்கியபடி ஓடிக் கொண்டிருந்தவன் எதிரில்

இடுப்பில் குழந்தையும் தலையில் ஒரு பெரிய வாளியுமாய் , வந்து கொண்டிருந்தாள் அந்த பெண் மேலே சட்டை போன்ற துணி இடுப்பில் பாவாடை போன்ற துணியை முடிச்சு போட்டு இருந்தவள் சால் போன்ற துணியைக் கொண்டு வலது கைக்கு கீழாகவும் மார்பு முதுகை மறைத்து இரு நுனிகளையும் சேர்த்து இடது
தோளின் மேல் முடிச்சிட்டு இறுக்கி இருந்தாள்.

இடுப்பில் இருந்த குழந்தையை கீழே விழுந்து விடாமல் ஒரு துணி கொண்டு தன்னுடன் சேர்த்து கட்டி இருந்தாள். கழுத்தில் சில மணிகளை கொண்ட மாலை அணிந்திருந்தாள்.
இவனைக் கண்டதும் பாதையிலிருந்து சற்று ஒதுங்கிக் கொண்டவள் சிரித்தபடி
குழந்தையில் காதில் எதையோ கூற அதற்குள் அருகில் நெருங்கி இருந்த
நிக்கை கண்டதும் அந்த குழந்தை புன்னகைத்தது. அதைக் கண்டதும் தானும் புன்னகைத்தபடி அதன் கன்னம் தடவியவன் கையசைத்து விட்டு ஒட்டத்தை தொடர்ந்தான்.

அந்த பெண் பெயர் மேரி அவள் குழந்தை பெயர் மேத்யூ அவர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்ததும் அவன்தான்.

தலைநகர் ஜுபேயில் உள்ள அவனது தலைமை அலுவலகத்திற்கு கணக்குகள் மற்றும் தகவல்களை சமர்பிப்பதற்காக சென்றவன் அன்று தன் மனைவியுடனும் பேசிவிட்டு அந்த மகிழ்ச்சியிலே வாகனத்தை இயக்கிக் கொண்டு வந்தான்.



கண்களில் விழுந்தது சாலையோரமாய்
கீழே விழுந்து கிடந்த மேரியும் மேத்யூவும் தான். இவர்களை சுற்றி சிலர் நிற்க வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவன் ஓடிச் சென்று பார்த்ததில்
மயங்கி இருப்பது தெரிந்தது.

குடிநீர் எடுத்து வந்தவன்அதனை முகத்தில் தெளித்தவன் அதனை பருக கூட ஜீவனற்று கிடந்த அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புகட்டியவன்
பிறகு அவர்களை வாகனத்தில் அமர வைத்தான் . அப்போதும் கூட அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

நீண்ட தூரம் நடந்தது சில நாட்களாக தொடரும் பட்டினி ஊட்டச்சத்து குறைபாடு அனைத்தும் அவளை இறப்பின் விளிம்பில் நிறுத்தியிருந்தது.

அவர்களை தங்களது முகாமிற்கு அழைத்து வந்தவன் , தக்க நேரத்திற்கு தாயையும் சேயையும் மருத்துவர்களிடம் ஒப்படைத்ததில் இரண்டு பட்டினி சாவுகள் தடுக்கப்பட்டிருந்தன.

மேரி பேசக் கூடிய நிலைக்கு வந்த பிறகு
அவள் கூறிய தகவல்கள் அப்பப்பா…, துயரத்தின் உச்சம்

நான்கு நாட்களுக்கு முன்பு மேரியின் ஊரில் இரு இனக்குழுக்களுக்கு இடையே வெடித்த பகையில் தீடீரென்று சந்தையில் புகுந்து இரு தரப்பும்சுட இடையில் பல அப்பாவிகள் பலியாகினர். தப்பி பிழைத்த பொதுமக்கள் கிடைத்த வீடுகளுக்குள் புகுந்து தங்களை காத்து கொண்டனர். வீடுகளுக்குள்ளும் புகுந்து சுட ஆரம்பித்தனர்.

மேரியின் வீட்டினுள்ளும் ஒரு இனக்குழுவை சேர்ந்த சில அப்பாவிகள் புகுந்தனர். அவர்களை துரத்தியபடி வந்த
வெறியர்களும் உள்ளே நுழைந்து என்ன ஏது என விசாரிக்க கூட இல்லைஅவளது கணவனை அவள் கண் முன் சுட்டு தள்ளியவர்கள் மற்றவர்களையும் தேடி சுட ஆரம்பிக்க , கணவனுக்காக அழகூட இயலாதவளாய் உறங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை தூக்கிக் கொண்டவள் , பின் பக்கமாக
தப்பி வந்தாள் .

அகதிகள் முகாமிற்கு நடந்தே நான்கு நாட்களாக உணவு நீரின்றி வர பல நாட்கள் சரியான உணவு இன்மை அதிர்ச்சி அனைத்தும் சேர்ந்து அவளை மயங்க வைத்து இருந்தது.

இப்போது இங்கு POC யில் தங்கி இருக்கிறாள். அவளுக்கென்று தொழில் ஒன்றை கற்றுக் கொண்டு முன்னேற முயன்று கொண்டிருக்கிறாள்.

உடற்பயிற்சியை முடித்து திரும்பிய நிக்கோலஸ்,குளித்து தனது இராணுவ உடையில் கண்காணிப்பு பணிக்காக தயாராகி வந்தான்.

அவனும் அவனுடைய வீரர்களும் தினமும் ஆறு மணி நேரம் நடந்து அவர்களது எல்கைக்கு உட்பட்ட பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வர்

நிக்கிற்கு தனி வாகனம் உண்டு . அதிலும் ரோந்து பணியை மேற்கொள்ளவான். எனினும் தெற்கு சூடானின் சாலை வசதிகள் மிகவும் மோசம்

பெரும்பாலான இடங்களில் வெறும் மண் தடங்களே அதுவும் களிமண் சதுப்பு நிலங்களில் முட்டி அளவுக்கு புதைய , நாற்பது டிகிரி வெயிலில் வழி தவறி விடாமல் சுற்றி வந்து,

உள்ளூர் போராட்ட குழுவினர் மற்றும் இராணுவத்திடம் இருந்து மக்களை பாதுகாப்பது என்பது எளிதல்ல , அவர்களின் தாய்நிலம் அது ஆனால் அமைதி படை வீரர்களுக்கு பெரும் சவால்

இன்று காலை ரோந்து பணிக்கு வீரர்கள்
செல்லும் போது தானும் அவர்களுடன்
இணைந்து கொண்டான். அனைவரும் அவர்களது ராணுவ உடையும் தலையில் தொப்பியும் முதுகில் தங்களுக்கு தேவையான தண்ணீர் உட்பட சில உடைமைகளையும் ஒரு பையில் முதுகில் தாங்கியவர்கள் . கையில் ஏந்திய துப்பாக்கியோடு நடக்க வாகனத்தை மட்டும் மாற்று பாதையில்
வரும் படி பணித்திருந்தான்.

நீர் வற்றிய வண்டல்கள் சில இடங்களில் சகதியும் சேருமாய் இருக்க பல இடங்கள் நன்கு காய்ந்து புழுதி பறக்க இருந்தது.
வண்டங்களில் புற்களும் கரைகளில் புதர்செடிகளும் மண்டியிருக்க அவைகளுக்கு இடையே இரு கிராமத்தை இணைக்கும் மண் தடத்தில்
பயணித்து கொண்டிருந்தனர்.

அவர்களுடைய முகாமில் இருந்து ஒரு இரண்டு மணி நேர நடை பயணத்திற்கு பின் ஒரு கிராமத்தை அடைய அங்கு அது அவன் பார்வையில் பட்டது.

சட்டென தன் வீரர்களிடம் திரும்பி வாயில் விரல் வைத்து அமைதியை வலியுருத்தியவன் , புதர் வழி மெல்லமறுபுறத்தை உற்று நோக்க


நிக்கின் பார்வையில் பட்டது
புதருக்கு பின் நின்று கொண்டிருந்த
பதினைந்து வயது மதிக்கதக்க பெண்ணும் அவளை சுற்றி நின்ற சில இராணுவ வீரர்களும் தான் , அதில் ஒருவன் ஏதோ பேசியபடிஅந்த பெண்னை இழுத்து வாகனத்தில் ஏற்ற முயல்வதையும் , மற்றொருவனின் தவறான தொடுகையும் கண்டவனுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை,
நிலைமையை புரிந்து கொள்ள .
இவர்கள் மறுபுறம் வந்து கொண்டிருந்ததால் அவர்கள் கவனத்தில் விழவில்லை .

சட்டென ஒரு குண்டு நிக்கின் துப்பாக்கியிலிருந்து வெளியேறி அந்த சிறுமியின் கரம் பற்றி இருந்தவனது தோளை பதம் பார்க்க , ஆ ... என்று கதறியபடி கரத்தை விலக்கியவன் , மறு கரத்தால் வழியும் இரத்த்தை மூடியபடி மண்டியிட்டு அமர்ந்தவன் சுற்றிலும் தேட

இதற்குள் பதறிய மற்ற அனைவரும் துப்பாக்கியை இயக்கும் முன் அவர்களை நிக்கின் வீரர்கள் சுற்றிவளைத்திருந்தனர்.

சுற்றிலும் சுள்ளிகளாக சிதறிகிடந்தன.
விறகு பொறுக்க வந்திருப்பாள் போலும்
அந்த பெண் கருப்பான ஒடிசலான தேகத்துடன் இருந்தாள் , கை கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன .
நிக் குடிநீர் புட்டியை நீரை நீட்ட , முதலில் பயந்தவள் பிறகு அவன் கண்களில் தெரிந்த அன்பில் நீரை வாங்கி பருகியவள் தன்னை ஆசுவாசபடுத்திக் கொள்ள


தன் கையில் இருந்த துப்பாக்கியை பின்புறம் நின்றிருந்தவனிடம் கொடுத்தவன் , காயம் பட்டவனை நெருங்கி ஒரு அறை வைத்தான். அதில் இரண்டு பற்கள் தெரிக்க ஒரு பக்க ஜவ்வு கிழிந்து கண்களில் பூச்சி பறக்க விழுந்து கிடந்தான். மற்றொறுவனுக்கு
விழுந்த மிதியில் இனி அவனுக்கு புத்திரபேரு இல்லை என மற்றவர்களுக்கு உறுதியாகிவிட , அனைவரும் நிக்கின் வீரர்கள் கட்டுபாட்டில் வந்து விட்டனர்.

காலடியில் கிடந்தவன் சட்டையை பற்றி மேலே தூக்கியவன் , கோபத்தில் காது மடல்கள் சிவக்க

" நீயெல்லாம் போர்... வீரன் நாட்டை காக்க வேறு போகிறாய்? , உன் தாய்க்கோ, சகோதரிக்கோ ,மனைவி, மக்களுக்கோ இப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது ..என்று தானே இரவு பகலாக போர் புரிகிறாய் , இவளும் உன் நாட்டு பெண் தானே…?"

எனக் கேட்க்க அவனுக்கோ வாங்கிய அறையிலும் உயிர் பயத்திலும் உறைந்து போயிருந்தவனுக்கு இவன் கோபத்தில்
கூறியது எதுவும் விளங்கவில்லை.

அதற்குள் அங்கு இருந்த ஒருவன் கோபமாக அவர்கள் நாட்டு மொழியில் ஏதோ கூற நிக்கிற்கு புரியவில்லை ,

அதற்குள் அந்த பெண் தானே கூறினாள்.

"என் தந்தை போராளிகள் குழுவை சார்ந்தவராம் அதனால் என்னை பழிவாங்குகிறார்களாம் . "

என்றவள் மிக ஏளனமாக விரக்தியாக சிரித்தவள்

" இந்த நாட்டு அரசாங்கத்துக்கு … இவர்களுக்கு கொடுப்பதற்க்கு சம்பளம்
இல்லையாம் ,அதற்கு சன்மானமாக எந்த பெண்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறதாம். உங்களால் அவர்களை எதுவும் செய்ய முடியாதாம்."

என்றவளுக்கு அதற்கு மேல் பேச வலு இருக்கவில்லை. ஏற்கனவே நடந்த போராட்டத்திலும் களேபரத்திலும் களைத்து இருந்தவள் தரையில் அமர்ந்து விட்டாள்.

தன் நண்பன் டேனியிடம் கண்களை காட்டி அவளை கவனித்து கொள்ளுமாறு கூறியவன்

தனது வாக்கி டாக்கியை எடுத்து ரோந்து பணியில் இருந்த வாகனத்தை அழைத்தான்.

சில நிமிடங்களில் வாகனம் இவர்கள் இருக்கும் இடம் வர அந்த பெண்ணை மருத்துவ முகாமிற்கு டேனியுடன் அனுப்பி வைத்தான்.

அந்த உள்நாட்டு ராணுவ வீரர்ளை அவர்களின் தலைமையகத்துக்கு தங்களது வாகனத்தில் அழைத்து சென்றான்.
இவர்களை கொன்று விடுவது தான் விருப்பம் என்றாலும் பணியில் அது போல செய்ய முடியாதே...

இவர்களை அவர்கள் தலையிடத்தில் ஒப்படைத்தவன் தலைவரை சந்தித்து விட்டு வந்தான்.

அந்தி சாய ஆரம்பிக்க சூரியனும் எதிரில் இருந்த மலை தொடர் படுக்கையில் துயில் கொள்ள ஏதுவாக மேகப் போர்வையை உதறி தயார் செய்ய
சிதறிய மேகம் சுற்றி எங்கும் பரவ,
கதிரவன் தன் ஆரஞ்சு கரங்களிலில் நைல்நதி பெண்ணை தீண்டி அவளை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான். அவளோ நாணம் மிக நிழல் ஆடையை போர்த்தியபடி வளைந்து வளைந்து நகர்ந்து கொண்டிருந்தாள்.

வாகனத்தை நிறுத்தியவன் கண்கள் பார்த்து கொண்டிருந்தன. ஆனால் மனம்?

இவற்றை ரசிக்கும் மனநிலையில் இல்லை நிக் , அவன் என்ன மாதிரியான மனநிலையில் இருக்க முடியும் ? இங்கு நடப்பவற்றை பார்த்த பிறகும்,

கண்கள் சுற்றப் புறத்தில் பதிந்தாலும் நினைவுகளில் வேறு ஓடிக்கொண்டிருந்தது.

மிகச் சரியாக அவனது வாக்கி டாக்கி ஒலித்தது எடுத்தவனுக்கு
"ஆல் ஆர் டெட் இன்... அட்டாக் "
என செய்தி கூறவும் தனது வசீகர புன்னகையை சிந்தியவன்
"காட் இட், ஓவர் " என்றவன் வாக்கி டாக்கியை பையில் வைத்தான்.

நதியின் கரையில் இருந்த அல்லி பூக்களை பார்த்தபடி மெல்ல நடக்க அவளின்நினைவு அவனுள் நீரோட்டமாய் சுழன்றது .
 
அத்தியாயம் 6

தன் நினைவுகளில் முழ்கி இருந்தான் நிக். அதை கண்ட அவனது நண்பன் டேனியல் அருகில் வந்து தோளைத் தொட்டான். அதில் சிந்தனை கலைந்து டேனியலிடம் திரும்பியவன்

"அந்த பொண்ணு எப்படி இருக்கா?
அவள பத்தி எதாவது சொன்னாளா?"

என கேட்ட நிக்கிற்க்கு

"ம்ஹும் " என மறுப்பாய் டேனி தலையசைக்க

நிக் அந்த தற்காலிக மருத்துவமனையை நோக்கி நடந்தான். அவனை பின் தொடர்ந்த டேனியும் வர அந்த பெண் இருந்த வார்டுக்குள் நுழைந்திருந்தனர்.

என்ன செய்வது என விழித்து கொண்டிருந்த மருத்துவரும் செவிலியரும்இவர்களை கண்டதும்
ஓடி வந்தவர்கள்.

" சார் இவ்வளவு நேரமா ஊசி போட்டதுலயும் தூக்கமும் அதிர்ச்சியால மயக்கமுமாய் இருந்தாங்க.. இப்பதான் முழிச்சிருக்காங்க, ஏதாவது விவரம் கேட்கலாம்ன்னா...? யாரையும் கிட்ட
நெருங்க விடறது இல்ல கேப்டன் , ரொம்ப பயந்து போயிருக்காங்க . "

என்றவரிடம், தான் பார்த்துக் கொள்வதாக கூறியவன் உள்ளே நுழைந்தான்.அதிகம் அல்ல பதினேழு பதினெட்டு வயதில் இருக்கலாம். சுவற்றை ஒட்டி கிடந்த அந்த கட்டிலின் மூலையில் அமர்ந்தபடி கொசுவலையின் உள்ளும் புறமும் கரங்களை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவள்.குமரியாக அல்ல குழந்தையாகத்தான் நிக்கின் கண்களுக்கு தெரிந்தாள்.

இன்று நடந்த நிகழ்வில்அவள் அவர்கள் பேசியதை மொழிபெயர்த்ததிலேயே அவள் கல்வி கற்று இருக்கிறாள் , கொஞ்சம் தைரியமான பெண் என்பதையும் புரிந்து கொண்டவன் .

மெல்ல அவள் இருந்த கட்டிலின் எதிரில் வந்து நின்றவன் , அவளோ யாருடைய முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. இராணுவ உடையை கண்டு அஞ்சியவள் தன் முழங்காலை கட்டிக் கொண்டு முகத்தை புதைத்து உள்ளே கொண்டாள்.

" போங்க , இங்கிருந்து போங்க "

எனஅரற்றியவள் நிலை அவனுக்கு ஏதோ நினைவுகளை நெஞ்சில் உகுக்க,
மறுநொடி சுதாரித்தவன்


"ஸ்வீட்டி இங்க பாரு நான் தான் "

எனவும்,தனக்கு பரிச்சயமான குரலில் நிமிர்ந்து மெல்ல முகம் பார்த்தவள் நிக்கோலஸை கண்டதும் ஒடிவந்து கட்டிக் கொண்டவள்.

"பயமா இருக்கு , இங்க யாரும் வரமாட்டாங்கல்ல எதுவும் செய்ய மாட்டாங்கல்ல "

என அழுதுபுலம்பிய அந்த சிறுதளிரை மெல்ல மெல்லஅமைதிப் படுத்தியவன்

உதவியாளரிடம் உணவை கொண்டு வரச் சொன்னான். அதை அவள் உண்டு முடிக்கும் வரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

உணவுக்கு பிறகு டம்பளரில் இருந்த நீரை எடுத்து கொடுத்தான். பருகி முடித்து கீழே வைத்தவளின் முகம் சற்று தெளிவாக இருந்தது.
அவளது தெளிவை குறித்துக் கொண்டவன், மெல்ல அவளைப் பற்றிய விவரங்களை கேட்டான்.

"ஸ்வீட்டி இப்ப உன்ன பத்தி சொல்ல முடியுமா?
உன் பெயர் என்ன?"

என கேட்ட நிக்கிற்கு

"ம் ." என்பதாய் தலையாட்டியவள் ,

" என் பெயர் ஜாய்ஸி, அப்பா ,அம்மா , இரண்டு தம்பி ,பாட்டி ,நான் எல்லாரும் சேர்ந்தது எங்க குடும்பம்.எங்க பூர்வீக நிலத்தில விவசாயம் பண்ணறது அப்பாவுக்கு தொழில் , அம்மா வீட்டுக்கு முன்னாடி சின்ன கடை வைச்சிருந்தாங்க.

சுதந்திரத்திற்க்காக சூடானிடம் போராடிட்டு இருந்த எங்களுக்கு
சுதந்திரம் கிடைச்சது.

சுதந்திரம் கிடைச்சாச்சி இனி எங்க வாழ்க்கை வளமாயிருக்கும்ன்னு இந்த நாட்டு மக்கள் மாதிரியே அம்மாவும் அப்பாவும் ரொம்ப நம்பிக்கையோட இருந்தாங்க.

தீடீர்ன்னு சூழல் மாறிச்சி தலைவர்களுக்கு இடையே அதிகார பிரச்சனை பெரிசா வெடிச்சிது.

நாங்க அத பெரிய விஷயமா நினைக்கல நாட்டை விட்டு அகதியா வெளியேறவும் நினைக்கல, ஏன்னா சுதந்திரத்திற்காகவே பல போராட்டங்கள் நடந்தத பார்த்து பார்த்து அது சரியாகிடும் பிரச்சனை தீர்த்துடுவாங்கன்னு நம்பினோம்".

என்றவள் கண்கள் கடந்த கால வாழ்கையில் அவள் மனம் திளைத்து இருப்பதை உணர்த்தியது. அந்த முகம் இறுக சிலை போல இறுகி போனது அதன் பின் நிகழ்ந்தவைகளை கூறும் போது. உதடுகள் மட்டுமே அசைந்தன .

" அந்த அதிகாரப்போர் எங்க வீட்டு வாசல்ல துப்பாக்கியோட வந்து நிக்ற வரைக்கும் ..
அதோட வீரியத்தையோ விளைவுகளையோ நாங்க உணரல,
ஏன் நீங்க யோசிக்கலன்னு உங்களுக்கு தோனலாம்.

எப்போதுமே ஒரு சூழ்நிலை ல நாம இருக்கும் போது யோசிக்கறதுக்கும் வருத்தபடறதுக்கும் இல்லை தீர்வை சொல்லறதுக்கும், அடுத்தவங்க அந்த இடத்தில் இருக்கும் போது சொல்லற தீர்வுகளுக்கும் வித்தியாசம் இருக்கும்.
ஏன்னா நம்ம அங்க இல்லை நம்ம பாதுகாப்பா இருக்கோம்ங்கறத , மூளை முதல்லபதிவு பண்ணிக்கும் கற்பனையா அந்த சூழல்ல நம்மள பொருத்தி பார்க்கும் போது தீர்வுகள் சுலபமாகிவிடும்."

காலை கட்டிலின் கீழே தொங்க விட்டு இருந்தவள் மீண்டும் கால்களை குறுக்கி முட்டிகளை கட்டி கொண்டு சன்னலின் வழி வெளியே பார்த்தபடி இருந்தாள் . நடந்த நிகழ்வுகள் அவள் மனதில் அலைமோத அவற்றை கோர்த்து கொண்டிருந்தாளோ இல்லை எந்த வார்த்தையை இடுவது என ஆலோசித்தாளோ . அந்த சிறு கண்களில் அத்தனை வலி . மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

"வேற வழியில்லாம எங்கப்பா எங்கள காப்பாத்த துப்பாக்கியகைலஎடுத்தாங்க,
சில போராளிகள் பள்ளிகூடத்துக்கு போக வேண்டிய சிறுவர்களை கடத்திட்டு போய் துப்பாக்கியும் பயிற்சியும் கொடுத்து போராளியாக்க ஆரம்பிச்சாங்க .

சில பேர் பணத்துக்காக எதிரி குழுக்களுக்கு வித்துருவாங்க , அதுக்கு பழி வாங்க இவங்க அவங்க குழந்தைங்கள கடத்திருவாங்க.

எங்கப்பா எங்கள இதிலிருந்து பாதுகாக்க பத்து வருஷமா போராளியா இருந்தாங்க. எங்கப்பா மட்டும் இல்லை இன்னும் நிறையபேர் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க போராளியா மாறி சின்ன சின்ன குழுவா இயங்கிட்டு இருந்தாங்க

ஆனா அன்னிக்கு நானும் ஒரு தம்பியும் பள்ளிகூடத்திற்கு போய்ட்டு திரும்பி வரும்போது தம்பிய கடத்திட்டாங்க நான் மட்டும் தப்பிச்சு வந்து சொன்னேன்.

அவன கூட்டிட்டு வர போன அப்பாவரல, இரண்டு குழுவுக்கு இடைல நடந்த போராட்டத்தில் இறந்து போய்ட்டாங்க. அப்பாவ தேடிப் போன அம்மாவ அந்த நாய்ங்க குதறி கிழிச்சதுல அரை உயிரா இருந்தாங்க.

ஒரு தம்பிய மட்டும் பாட்டி தன் கூட யுகாண்டாவுல இருக்க அகதிகள் முகாமுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க, எங்கள கூப்பிட்டாங்க நானும் அம்மாவும் தம்பிக்காவும் அப்பாவுக்காகவும் இங்க காத்திருக்கிறோம் சொல்லி அவங்கள மட்டும் அனுப்பி வைச்சிட்டு அப்பாவும் தம்பியும் வந்த பிறகு அந்த முகாமுக்கு போக நினைச்சோம் ஆனா விதி வேறா இருந்ததது.

ரொம்ப நேரம் கழிச்சி நான் போனப்ப ராணுவம் வரஅவங்க போய்ட்டாங்க. அதனால அம்மாவ காப்பாத்த முடிஞ்சிது.

இப்பவும் தம்பி திரும்பி வருவான் அப்படிங்கற நம்பிக்கைல தான் இந்த இடத்தை விட்டு போகாம இங்கேயே இருக்கிறோம்.

இன்னிக்கு அம்மாவுக்கும் எனக்கும் சாப்பிட அல்லிதண்டு மட்டும் தான் இருந்தது . அத கஞ்சியா காய்ச்ச விறகு பொறுக்கத்தான் அங்க வந்தேன். "

என்றவளை மேலே சொல்ல வேண்டாம். என்றவன் அவளுடைய முகவரியை மட்டும் வாங்கிக் கொண்டான்.

ஜாய்சிக்கு மாத்திரையை கொடுத்து உறங்க வைத்தவன். அவளுடைய வீட்டிற்கு சென்றான்.

ஊரெங்கும் தோட்டாக்கள் தாங்கிய சுவர்களும் அவசரமாக ஊரை காலி செய்ததிலும் கலவரத்திலும் சிக்கிய ஊர் சில இடங்களில் இயல்பு எனும் பெயர் தாங்கிய ஊமையாகவும் பல இடங்கள் மயாணமாக்கப்பட்ட அமைதியையும் கொண்டிருந்தது.

பல இடங்கள் தங்கள் உயிர்ப்பையும் , அதிலிருந்த மானிடர்களையும் தொலைத்து இழப்பை தேக்கி அவர்கள் தன்னிடத்து மீண்டு வரும் நாளை வெறித்து கொண்டிருந்தன.

ஜாய்ஸியின் அன்னையிடம் சென்றவன்,
அவருக்கு ஜாய்ஸி மயங்கி விட்டதாக மட்டும் கூறி தன்னுடன் அழைத்து வந்தவன் மனதில் சிறு மகிழ்ச்சி,

வேறு சில திட்டங்களுடனும், அதை பற்றிய எண்ணங்களோடும் தனது அறைக்கு திரும்பியவன் குளித்து ஆடை மாற்றி உணவு கூடத்திற்குள் நுழைந்தான். நிக்கிற்க்கு எதிரில் அவனுக்கான உணவை கொண்டு வந்து கொடுத்தான் டேனி

"நன்றி டேனி "

என்றபடி அவனிடம் இருந்து தட்டை வாங்கிக் கொண்டவன் அது உணவுக் கூடம் என்பதால் வரிசையாக மேஜை நாற்காலி போடப்பட்டு இருக்க அதில் ஒன்றில் அமர்ந்து உண்ண தொடங்க அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த டேனி அமைதியாக இருக்க

"என்ன டேனி இப்படி அமைதியா இருந்தா, நாளைக்கு ஜாய்ஸிட்ட எப்படி ப்ரபோஸ் பண்ணுவ ? "

என கேட்டபடி எழுந்து கொண்டவன் தட்டை கழுவி வைத்து வரும் வரையிலும் கூட டேனி கலையாத ஆச்சர்யத்தில் இருந்தான்.
அவன்சொல்ல வந்த விஷயத்தை தெரிந்து கொண்டது மட்டுமில்லாம நாளைக்கு புரோபோஸ் பண்ண நினைச்சிருந்தத வேற அப்படியே சொல்றானே..? என்றபடி அமர்ந்திருந்தான்.

டேனி முன் வந்து நின்ற நிக் , அவனை
நினைவுக்கு கொண்டு வர முதுகில் ஒன்று வைக்க, அதில் அதிர்ந்து விழித்தவன்.

"எப்படிடா ? உனக்கு எப்படி தெரிஞ்சிது?"
என்ற டேனியலுக்கு

"காலைல இருந்து உன் முகத்தில வழியுது பாரு அதுல,
நாளைக்கு ஜுபே அலுவலகத்துக்கு போகனும் போ போய் தூங்கு, என்றவன் , நாளைக்கு ப்ரபோஸ் பண்ணிடுவியா….?"

என்ற நிக்கை முறைத்த டேனி ,

" நீ மட்டும் பார்த்த உடனே லவ் ப்ரபோஸ் பண்ணி கல்யாணம் பண்ணுவ, நான் பண்ண மாட்டேனா?" என்றான் .

மேலும் கீழும் பார்த்த நிக்.. ,

"அதுக்கு நீ சரிபட்டு வர மாட்ட?"

என்றவன்மேற்கொண்டு டேனி எதுவும் கூறும் முன் சென்றிருந்தான்.
டேனியல் நாளைக்கு தன் காதலை கூறுவதா வேண்டாமா?
எப்படி கூறுவது?.. என்ற யோசனையில் அங்கேயே அமர்ந்து விட்டவன்
பல திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதை பற்றி ஆலோசிக்க ஆரம்பித்து இருந்தான். அப்போதுதான் அவன் மூளையில் அது உதித்தது.

"ஆமா இவன் என்ன சொல்லிட்டு போனான். "

என்ற வினாவிற்க்கு

"நாளைக்கு அவன் கூட போகனும்ன்னு"

என அறிவு நினைவு படுத்த

"அப்ப ப்ரபோஸ் "

என்று அவனிடம் ஜாய்ஸியின் பிம்பம் அழகான வெள்ளை கவுனுடன் கேட்க, ஆசையுடன் அருகே நெருங்கியவனை

"அது டிஸ் போஸ்"

என அரக்க உடையில்
நிக் தன்னுடன் இழுக்க . மறுபுறம் ஜாய்ஸி இழுக்க
முகத்தில் விழுந்த தண்ணீரில் முழித்தவனை

"டைனிங் ஹால விட்டு வெளிய போ .. துடைக்கனும் "

என்ற துப்புரவு பணியாளரின் குரலில் நடப்புக்கு வந்தவன்

"அவ்வளவும் கனவா ... , என் வாழ்க்கையில் ப்ரபோஸல் டே வராதா….,"

என்றவனை வெளியே தள்ளி கதவை பூட்டினார் அந்த பணியாளர் .

 
அத்தியாயம் 7

அன்று காலை நிக் வாகனத்தின் ஒட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்க டேனியோ அவனது ப்ரபோஸல் டே , நிக்கினால் மிஸ்போஸல் டே ஆன வருத்தத்திலும் , கடுப்பிலும் வாகனத்தில் அவன் அருகில் இருக்கையில் அமர்ந்திருக்க,

நிக்கோ அதையெல்லாம் கண்டு கொள்வேனா என்பதாய் , தனது கூலர்ஸை எடுத்து அணிந்தான். வாகனத்தை ஒரு கையால் இயக்கிய படி

"I am in love with the Shape of you ... " என இணைந்து சத்தமாக பாடியது மட்டுமன்றி லேசாக அமர்ந்து ஆடி இன்னும் அவனை சோதித்து வைத்தான்.

தீடீரென ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தியவன் ஒன்றும் சொல்லாமல் சுற்று வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்து இருக்க ,

"இப்ப எதுக்கு இந்த நடு காட்டுல நிப்பாட்டி வைச்சிறுக்கான் , வாய திறந்து எதாவது சொல்லறானா பாரு எலி காயனும்னா எலி புளுக்கையும் ஏன்டா காயனும் " என்பது போன்ற கேள்விகளை நேரடியாக கேட்காமல் மனதுக்குள் வறுத்து எடுத்தவன்

" எதாவது பிரச்சனையா நிக்" எனவும்

"ஆமாம் "என நிக் பாவமாய் தலையாட்டினான்.

"டயர் எதுவும் பஞ்சரா " என்றான்.

"இல்லை "என்பதாய் நிக் தலையாட்ட

"எஞ்சின் எதுவும் பிரச்சனையா " என மீண்டும் வினவ

"இல்லை "என இடவலமாக தலையசைக்க

இப்போது லேசான எரிச்சலடைந்த டேனி

"அப்புறம் என்ன தான் டா பிரச்சனை " எனவும்

"ப்ச் "என உச்சு கொட்டிய நிக் அவனிடம்

"டேனி ஒரு வாகனம் என்றால் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?" என்றான் நிக் என்னவோ ஓட்டுநர் பணிக்கு ஆள் எடுப்பது போன்று.

எஞ்சின் ,டயர் ,ஸ்டியரிங் என வைப்பர் வரை வாகனத்தின் அனைத்து பாகங்களையும் மூச்சு வாங்கக் கூறி முடித்த டேனியின் மனமோ இதற்குள் வாகனத்தில் என்ன பிரச்சனைகள் எல்லாம் வரும் எப்படி சரி செய்யலாம் என ஆராய்சி கட்டுரை எழுதும் அளவிற்கு யோசித்து இருந்தது.

நிக்கோ காற்றில் கலைந்த கேசத்தை ரிவர்ஸ் வ்யூ கண்ணாடியில் பார்த்துக் சரி செய்தபடி

"இது எல்லாம் இருந்தாலும் வாகனம் இயங்க ஒன்னு வேனுமே டேனி "என்க

"ஆமா பெட்ரோல்‍னு கண்டுபிடிக்க ஆள் வேணுமா " என்றான் அலட்சியமாக

"அது … " என்று ஒரு இழுவை இழுக்க, அவன் இழுவையில் பதறிய டேனி
"Xxx xxxx பெட்ரோல் இல்லையா… மை காட் இங்க இருந்து பெட்ரோல் பல்க் எவ்வளவு தூரமோ? முதல்ல இங்க பக்கத்தில இருக்குமா?" என புலம்பியபடி கீழே இறங்கி இருபுறமும் ஏதேனும் வாகனம் வருகிறதா என பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று கழித்துஅவன் புறம் வந்து நின்ற நிக்,

"ஏன் டேனி இங்க எதுக்கு நிக்கற? " என்றான்.

வெயிலில் வியர்வை வழிய நின்றவனோ ,

"இங்க நின்னா தான யார்கிட்டயாவது லிப்ட் கேட்டு போய் பெட்ரோல் வாங்க முடியும்." என்ற டேனியிடம்

"ஆமா கரட் தான் ஆனா எதுக்கு "என்ற கேள்வியில் அவனை முறைத்தவன்

"நீதான பெட்ரோல் இல்லைன்னு சொன்ன ?"

"நான் எப்ப இல்லைன்னு சொன்னேன் "

"அப்ப அது ...ன்னு இழுத்ததுக்கு என்ன அர்த்தம் "

"அது எனக்கு பொழுது போகல அதான்னு, கொஞ்சம் இழுத்து சொன்னேன் " என்றவனுக்கு பதில் சொல்வதற்காக நல்ல கல்லை தேடிக் கொண்டிருந்த டேனியை

"குட் மார்னிங் சர் " என்ற முகமன் திரும்ப செய்ததது.

அங்கு ஜாய்ஸி கையில் சில கோப்புகளுடன் வந்து நின்றிருந்தாள்.
"மன்னித்துக் கொள்ளுங்கள், வண்டி பழுதாகி விட்டது. அதனால் , கொஞ்சம் தாமதமாகி விட்டது." என மன்னிப்பை வேண்டிவள்,

"இது மருத்துவருடைய வண்டி அவசரத்திற்கு கொடுத்து உதவினார் " . என்று நிக்கிற்கு விளக்கம் உரைத்தவள் திரும்பி அவளை இறக்கி விட வந்தவனிடம் நன்றி கூறியவா‍றே மெல்லியதாக அணைத்து விடுவித்துவிட்டு நிக்கின் பக்கமாகத் திரும்ப, வாயிலிருந்து ஆறு பாய்வது கூட உறைக்காமல் ஆ வென்று வந்தவளை‍யே பார்த்துக்‍கொண்டிருந்தான் டேனி.

அடுத்து அவளையும் ஏற்றிக்‍‍கொண்டு வாகனம் புறப்பட, அதுவரை வாயிலிருந்து ‍‍‍ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்தவன் அவர்கள் புறப்படுவது தெரிந்ததும் பதறி ஓடிப்போய் வாகனத்தில் ஏற அடுத்த அரை மணி ‍நேரத்தில் வண்‍டி தலைமைச் செயலகத்தின் முன்னால் வந்து நின்றது.

தலைமை அதிகாரி ஆடம் முன் தன்னுடைய கோப்புகளுடன் ஜாய்ஸ்ஸியின் கோப்புகளையும் சேர்த்து வைத்தவன் ,

"சர் இங்க பள்ளிக்கு போக வேண்டிய சிறுவர்களை கடத்தி பயிற்சி கொடுத்து போரில் ஈடுபடுத்துறாங்க. இது மாதிரி ஒரு இலட்சம் குழந்தைகள் இருக்கலாம் இது முழுவதும் ஒழிக்க முடியலன்னாலும் , என்னோட முகாமுக்கு பக்கத்தில் இருக்கும் சில நூறு குழந்தைகளையாவது மீட்க உங்க ஒத்துழைப்பு வேண்டும்" என்றவனை
பார்த்தவர் மீண்டும் ஒரு முறை கோப்புகளில் அடங்கியிருந்த தகவல்களை பார்வையிட்டவர்.

அவர்களுடன் சேர்ந்து விவாதித்தவர் , முடிவில் நிக்கின் திட்டத்திற்கு ஒப்புதல் தந்து இருந்தார்.

கடந்த ஒரு மாததிற்கு மேலாக இது பற்றிய தகவல்களைத் தான் சேகரித்துக் கொண்டிருந்தான்.

தனது பணியின் காரணமாக நீருவை தொடர்பு ‍கொள்ளாதது நினைவுக்கு வர, ஆடமிடம் மன்னிப்பு வேண்டியவாறு ‍வெளி‍‍யே வந்தவன்? தொடர்பாடல் அறையை ‍நோக்கிச் சென்று அறையைத் திறந்து உள்‍‍ளே சென்றான்,

உடனே காணொலி மூலம் நீருவுடன் ‍தொடர்பு ‍கொள்ள மறுபக்கம் அவளுடைய முகம்அந்த அறையில் இருந்த பெரிய திரையில் தெரிந்தது.

அருகில் சென்று தன் இரு கரங்களை அவள் கன்னங்களில் வைத்தவன் அவளை இமையாது பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் புலன்களின் குவியமாக அவன் இருக்க , அவளும் வாய் திறந்து பேசவில்லை. ரோஜா மலர்களின் நடுவே நின்றிருந்தாள் ,நடை பழகிக் கொண்டிருந்தாள் போலும் வியர்வை துளிகள் கீழ் நாசியில் பூக்க நெற்றியில் இருந்து விழுந்த ஒற்றை வியர்வை துளி கழுத்து வழி இறங்கிய அந்நீர் துளி இளஞ் சூரியனின் ஆராதிக்க துளிவானவில் காட்டி கீழிறங்கி காணாமல் போனது .

அவள் முகத்தில் விழுந்த வந்து முடிக்கற்றையை ஒதுக்க அவன் நினைக்க , அவன் ஆணையை வாயுதேவன் நிறைவேற்றி வைத்தான்.

நேரொருவரில்லாளோ அவனை கண்ட மகிழ்வில் மலர்கண்கள் தேன் உதிர்க அவனை பார்த்து கொண்டிருந்தாள் . இத்தனை நேரம் அவள் பிரிவாற்றா நிலை கண்டு வருந்திய மலர்கள் பனித்துளியாய் கண்ணீர் சிந்தின. இப்போது வந்த மகிழ் தென்றலில் மலர்ந்து சிரித்தன.

"ம் .. " என்ற எழுத்து மட்டும் தான் உச்சரித்தான் நிக் , மேலும் கீழும் அசைந்த முகமும் கண்களும் தான் கேட்டன எப்படி இருக்கிறாய்? என

அவளும் " ம் ம் ம் " மேல் கீழாக பல முறை தலையாட்டினாள் நன்றாக இருப்பதை வார்த்தையில் கூற அவளுக்கு வரவில்லை.

நிக்கிற்கு அடுத்து எடுத்து இருக்கும் வேலை ஆபத்தானது என்று தெரியும் அவனுக்கு அவனை விட அவள் தான் முக்கியம் எத்தனை ஆபத்தில் இருந்தாலும் அது அத்தனையிலிருந்தும் மீண்டு விடும் வீரமும் விவேகமும் அவனுக்கு உண்டு.அதற்கு ஈடான காதலும் அவளிடம் உண்டு.

முயன்று தன்னை சமாளித்து நிலைப்படுத்திக் கொண்டவன் ,
"என்ன சொல்லாறங்க பசங்க "என பேச்சை தொடங்கினான்.

பிள்ளையை பற்றி தகப்பன் கேட்டதும் , வயிற்றின் மீது கை வைத்து லேசாக தடவியவள் மெல்ல சிரித்தபடி அங்கயும் " இங்கயும் ஓடறா , வெளில வந்தப்பறம் இன்னும் கால் தரைல படாம ஒடபோறதுகள்."

"நேத்திக்கு ஹாஸ்பிட்டலுக்கு போயிருந்தேன்" என்றவள் மேலும் ஏதோ கூற வர , அவளுக்கு முன் இவன் கேட்டிருந்தான்.

"செக்கப்புக்கு போனியா ? நீரு டாக்டர் என்ன சொன்னாங்க ? ஒன்னும் பிரச்சனை இல்லையே" என அவளைப் பற்றி மூச்சு விடாமல் விசாரிக்க

"ஆமான்னா ஒன்னும் பிரச்சனை இல்லை உப்ப மட்டும் குறைச்சிக்க சொல்லி இருக்கா, அப்புறம் ஸ்கேன் பார்த்துட்டு குழந்தைகளோட வளர்ச்சி ரொம்ப நன்னாருக்குன்னா ".என்றவள்
வாகனத்தில் வந்து இறங்கிய அதீரையை கண்டதும் நிக்கிடம் பேசிக் கொண்டே அவளை நோக்கி கரத்தை அசைத்து "இங்கு வா.." என்றாள்.

அதீரை அவள் அழைப்பதை கண்டதும் நீருவிடம் சென்றாள். அவள் தோளில் கரங்களை போட்டபடி , நிக்கிடம் சில வார்த்தைகள் பேசியவள் கணவன் மனைவிக்கு இடையில் செல்ல விருப்பமற்று ,

" அடேயப்பா புருஷன பார்த்த அப்புறம் தான் நான் ஒருத்தி இருக்கறதே தெரியுது உனக்கு , நேத்திக்கு வரைக்கும் என்ன கண்டுக்கவே இல்லை, நான்போய் குளிச்சிட்டு வரேன், நீயும் உங்காத்துக்காரருமே கொஞ்சுங்க"

என்றவள் நீருவின் கண்ணத்தில் முத்தம் விட்டு சென்றாள்.

" எப்ப பாரு நோக்கு இதே ஜோலியா போச்சு" என்றபடி கன்னத்தை துடைத்துக் கொண்டவளை முறைத்து கொண்டிருந்தான் நிக் .

"நான் ஒன்னும் பண்ணலன்னா .. , அவ வேணும்னு உங்கள கோபபடுத்த இப்படி பண்ணிட்டு போறா.."

" சரி அதீய நான் வந்து பேசிக்கறேன் இப்ப எனக்கு ஒன்னு தா நீரு "
என இதழ்குவித்து காட்ட ,
"ம்ஹூம் .."என்று அழகாய் மறுத்தாள்.

"பச்,எனக்கு தான டி... , போன்ல தானடி… இங்க பக்கத்தில் யாருமே இல்லை பாரு ஒன்னே ஒன்னு ... "
|
என்று அவன் கெஞ்ச முடியாது என்றவள்
"நேர்ல வந்து வாங்கிக்கோங்கோ"
என்றாள். இப்போது அவள் மீது ஊடல் கொண்டு முறைத்தான்.

"இரு நான் வந்து இருபது மடங்கா வாங்கிக்கறேன் .இன்னும் கடந்த நூற்றாண்டுலயே இரு"
என சலித்துக் கொண்டாலும் அவளது அந்த பழமை அவனுக்கு பிடித்து தான் இருந்தது

மேலும் சிறிது நேரம் பேசியவன் , நேரமாகிவிட இணைப்பை துண்டிக்க போனவனிடம் "சித்த இருங்கோ" என்றவள் அவன் கேட்ட அந்த ஒற்றை முத்தத்தை தந்தாள்.

அலைபேசியின் வழி கொடுத்தற்கே அத்தனை சிவந்து இருந்தது அவள் முகம். நிறைவான மகிழ்வுடன் இருந்தான் நிக்.

இனி அவனுடைய வேலை முடியும் வரை அவன் எண்ணம் முழுவதும் அது மட்டுமே இருக்கும்.

 
அத்தியாயம் 8

அந்த கிராமத்தினுள் நுழைந்த நிக்கின் கண்களில் முதலில் தட்டுப்பட்டது அந்த அகன்று விரிந்த மாமரமும் அதன் அடியில் நின்று கொண்டிருந்த சிறுவர்களும் தான்.

சில சிறுவர்கள் அண்ணாந்து மரத்தின் மேலே பார்த்து கொண்டிருந்தனர். மேலே ஒருவன் நன்றாக முற்றிய காய்களுக்கு என இங்கும் அங்குமாய் அலைந்து கொண்டிருந்தான். ஒன்றிரண்டு பேர் ஏற்கனவே பறித்து போட்டதை சுவைத்து கொண்டிருக்க

தீடீரென்று ஒரு முற்றிலும் திறந்த அமைப்புடைய ஜீப் ஒன்று வந்து நின்றது. புழுதி படிந்த தோற்றத்துடன் கையில் துப்பாக்கியுடன் பின்புறம் மூன்று பேர் இருக்க அதில் இருந்த இருவர் சிறுவர்களை பிடித்து மற்ற இருவரும் உள்ளே ஏற்ற கூற ஓட முயன்றவர்களை கை கால்களை இழுத்து உள்ளே திணித்து துப்பாக்கி முனையில் மிரட்டி கொண்டிருந்தனர்.

அழவோ கத்தவோ திராணியற்று திகைத்து போயிருந்ததனர் அனைத்து சிறுவர்களும் , மேலே இருந்த சிறுவன் பயத்தில் சுற்றும் பார்க்க அவனைப் பார்த்த நிக் வாயில் விரலை வைத்து , அவனை அமைதியாக இருக்கும் படி கூறினான்.

சரி என்பதாய் தலையசைத்த அந்த சிறுவனிடம் இருகரங்களையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்து அனைப்பது போல் செய்து காட்ட அந்த சிறுவன் அது வரை அமர்ந்திருந்தவன் இப்போது தான் அமர்ந்திருந்த கிளையிலேயே படுத்துக் கொண்டான். குப்புற படுத்து இருந்த அவனிடம் மாங்காயயைக் சைகையில் காட்டி ஜீப் வண்டியில் இருந்தவர்களை சுட்டி அவர்கள் மீது வீசவும் சைகை மொழியில் சொன்னவன் தானும் அவர்கள் தடுமாறும் அந்த நொடிக்கு தயாராக நின்றான்.

குழந்தைகள் நின்றது மரத்திற்கு கீழ் என்றாலும் இப்போது அவர்களை பிடித்து திணித்த வாகனம் மரத்திற்கு நேர் கீழே இல்லை . அவர்களும் மேலே இருந்த சிறுவனை கவனிக்கவில்லை.

நன்றாக முற்றிய காய் ஒன்றை பறித்தவன் ஒருவனை குறி வைத்து வீச பறந்து வந்த அது சரியாக ஒருவன் மன்டையை பதம் பார்க்க ,

ஆ ... என கத்தியவனுடன் மற்றவர்களும்
அந்த புறமாக துப்பாக்கியுடன் திரும்பிய நொடியில் நிக்கினது துப்பாக்கியின் தோட்டாக்கள் இருவரை வீழ்த்தியிருந்து.

மீதமுள்ளவர்கள் சுதாரிக்கும் முன் இன்னும் இருவரை வீழ்த்தியவன் துப்பாக்கி முனையில் வாகன ஒட்டியை நிறுத்தியிருந்தான்.

நிக்கின் விசில் சத்தத்தில் மேலே பதுங்கியிருந்த சிறுவன் சர சரவென கீழே இறங்கி நண்பர்களின் கட்டுகளை அவிழ்த்தான் .

சற்று தொலைவில் மறைவாக நிறுத்தியிருந்த வாகனத்தில் இருந்து இறங்கி வந்த டேனியும், ஜாய்ஸியும்
கீழே கிடந்த நால்வரையும் தங்கள் வாகனத்திற்க்கு மாற்றியவர்கள் , திரும்பி வந்து இவனுடன் இனைந்து கொண்டனர்.

நிக் ஜாய்ஸியை பார்க்க அதை உணர்ந்தவளாய் உங்கள் "தலைவரை நாங்கள் பார்க்க வேண்டும் "
ஆகட்டும் என்பதாய் தலையசைத்தவன் வாகனத்தை வேறு திசையில் செலுத்த நினைத்தவன் அவனது கூட்டாளிகளை ஏற்றிய நிக்கின் வாகனம் அவர்களை தொடர
குழம்பிய முகத்துடன் வாகனத்தை ஒட்டியவன் இவர்களை
இங்கு என்ன நடக்கிறது ? என்ற கேள்வியுடன் நிக்கை பார்க்க , அதை பார்த்தவன் கூறும்படி கண்களை காட்ட
"பின்னாடி வரும் வண்டியில் உன் நண்பர்கள் இரத்த போக்கோடு உயிருக்கு போரடிட்டு இருக்காங்க. இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள அவங்கள மருத்துவ மனைக்கு கொண்டு போனா காப்பாத்திடலாம். ஆனா அதுக்கு முன்னாடி முதல்ல உங்க தலைவர நான் பார்க்கனும் இல்லை இவங்கள காப்பாத்த நீ இருக்க மாட்ட "

அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஊரின் புறப் பகுதியில் அந்த வாகனம் நுழைந்தது. அதிலிருந்து இறங்கியவன்
அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்த குழந்தைகளை மீட்டிருந்தான்.


அடுத்த சில தினங்களுக்குள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நூறு குழந்தைகளை மீட்டிருந்தனர் .

மீட்கப்பட்ட குழந்தைகளின் கதைகளைக் கேட்ட நிக் ஆடிப் ‍போனான்.

சிலர் தங்களது தினசரி தேவைகளை பூர்த்தி செய்ய இத்தொழிலை செய்வதாக கூற சிலர் கூறிய காரணம் மிக வலியைக் கொடுத்தது.

அவர்கள் தமது குழந்தைகளைக் கடத்தியவர்க‍ைளைப் பழி வாங்குவதற்காகவும் இன்னும் சிலர் கடத்தப்பட்ட தமது குழந்தைகளை மீட்பதற்காகவும் அவர்கள் குழந்தைகளைக் கடத்தியதாகக் கூறினார்கள்.

‍இன்னொரு கூட்டம் சொன்னதைத்தான் நிக்கால் தாங்க
முடியவில்லை.

அது தங்கள் குழந்தைகளை வறுமை காரணமாக வெறும் பசுமாடுகளுக்காக விற்க, வாங்கிய குழந்தைகளைக் கடத்தல்காரர்கள் அடிமைகளாக வைத்திருந்தார்கள்.

அதன்பின் மீட்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் ‍சேர்ப்பித்த‍‍‍தோடு நின்று விடாமல் கல்விக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தது நிக்கின் குழு. அதற்கு ஜாய்ஸியும் தன் ஒத்து‍ழைப்பைக் ‍‍‍தர விரும்பி அங்கு கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தாள்.


சில குழந்தைகளுக்கு தச்சு வேலை போன்ற தொழிற் பணிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

பெண் குழந்தைகள் பலர் பாலியல் ரீதியாக வன்முறைகளுக்கு ஆளாகி இருந்தனர். அவர்களது மனநலம் உடல்நலம் தொடர்பான சிகிச்சைகளுக்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது.

அத்தோடு நிக்கின் பணி நின்றுவிடவில்லை. முடிந்தவரை குழந்தைகளை மீட்டதோடு அவர்களின் அன்றாடத் ‍தேவைகளைப் பூர்த்தி செய்வதென்று வேறு நினைவுகளுக்கு இடமின்றி பரம்பரமாய் சுழன்றான்.

இது சிலருக்கு எதிர்ப்பு மற்றும் வெறுப்பை உருவாக்கி இருந்ததது.

அங்‍கே நிக்கின் வாழ்க்கை தீவிரமாக இயங்கிக்கொண்‍டிருக்க, இங்‍கே அமரிக்காவில் நீருவின் உலகம் மிக மெதுவாக இயங்கிக் கொண்டிருந்தது.

குழந்தைகள் மட்டும் வயிற்றில் இல்லை எனில் அவள் ஒழுங்காக உண்ண கூட மாட்டாள்.

ஆடைகளிலோ , அலங்காரத்திலோ எந்த நாட்டமும் இன்றி எந்த நேரமும் அவன் நினைவாகவே அமர்ந்திருந்தவளை பார்த்த அதீரை மனம் வருந்திப் போனாள். ஏற்கனவே நீரு பெரிய அளவில் அலங்காரம் செய்து கொள்ள மாட்டாள். என்றாலும் நேர்வகிடுத்து பின்னி நெற்றியில் சிறு திலகம் என்று இருந்தாலும் முகம் தெளிவாக இருக்கும்.

நேரொருவரில்லாளின் நிலையைக் கண்டு வருந்திய அதீரை அவளுடைய மனநிலையை மாற்ற எண்ணி,
"நீரு நீதான சொல்லுவ இப்படி பொண்ணுங்க வீட்டில விளக்கேத்தற நேரத்தில் தலைய விரிச்சி போட்டுண்டு உட்காரப்படாதுன்னு, நீ‍யே இப்ப‍டியிருந்தால் எப்ப‍‍‍டி எந்திரி போ போய் ட்ரஸ் மாத்திட்டு வா வெளில எங்கயாச்சும் போய்ட்டு வரலாம்."

நீருவோ அவளை நிமிர்ந்து கூட பராமல்

"ப்ச் வேண்டாம் , நான் வரல நீ போய்ட்டு வா " என்றிருந்தாள்.

அவள் அருகில் சென்று அமர்ந்த அதீரை
அவள் முகத்தை பற்றி தன்னை நோக்கி
திருப்பி

"குழந்தைகளுக்காகவாச்சும் போய்ட்டு வரலாம் வாடி ஒரு மாற்றமா இருக்கும் " என நீருவை எழுப்ப அவளும் அதற்கு மேலும் மறுக்க மனம் இன்றி சரி என்றபடி தயாராகி வந்தாள்.

அந்த ஷாப்பிங் காம்பளக்ஸ்ஸிற்குள் , காரை நிறுத்திய அதீரை " நீரு கொஞ்சம் வெயிட் பண்ணு கார பார்க் பண்ணிட்டு வரேன் நீ அவ்வளவு தூரம் நடக்க வேண்டாம்." என்க

"சரி " என்றவாறு கதவை திறந்து இறங்கிய நீரு
அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்தவாறு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் நீருவுக்கு தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்க சட்டென பின்னால் திரும்பி பார்க்க அங்கு யாரும் வித்தியாசமாய் தெரியவில்லை .

சற்று தள்ளி பலூன் விற்பனை கூடத்தை பார்த்தவள் ஆவல் பொங்க அதை வாங்க எண்ணிச் சென்றாள். ஏற்கென‍வே ஒரு சில வாடிக்கையாளர்கள் நின்றிருந்ததனால், அவர்களின் பின்னால் நின்றாள்,

பலூனை வாங்கி பறக்க விடுவது அவளுக்கு பிடித்தமான விளையாட்டு. அன்று திருமான புதிதில் நிக் இங்கு அழைத்து வந்த‍போது

" நீரு உனக்கு என்ன வேனும் சொல்லு?" என அவளுக்கு சிறப்பாக எதையாவது வாங்கித் தர எண்ணி கேட்க அவளோ வந்ததில் இருந்து பலூன் கடையில் இருந்து கண்ணை அகற்றாதவளாக ,

" பலூன் " என்றிருந்தாள் சற்றும் யோசிக்காமல் ,

"பலூனா …..." ஆச்சரியத்துடன் கேட்ட நிக்கிடம் திரும்பியவள் அவன் கரங்களை பற்றி கொண்டு

"ப்ளீஸ் ன்னா , வாங்கி தாங்கோளேன் " என அங்கிருந்த குழந்தைகளுக்கு இணையாக கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

சரி என்று சென்றவன் பலூன்காரன் கையிலிருந்த மொத்த பலூன்களையும் வாங்கி வந்தான். அதனைக் கண்டதும் மகிழ்ச்சியில் அவனிடம் ஓடியவள் அவனிடம் வாங்க கை நீட்ட நிக்கோ கைகளை உயரத் தூக்கி பலூனை பிடித்துக் கொண்டான் . எம்பி எம்பி பார்த்தவளுக்கு அது எட்டாமல் போக, சோர்ந்து போனவள் மீது தனது மற்றோர் கரத்தை போட்டு தன்னுடன் சேர்த்துக் கொண்டவன்,

"இந்த பலூன்ஸ் உனக்கு வேனும்னா …"
என்றவன் அவள் காதருகே குனிந்து எதையோ கூற, அதில் சிவந்து போய்

"சீ போங்கோ" அவனை தள்ளியவளை
கண்டு சிரித்தபடி

" எப்படி ,டீல் ஓகே யா " என்றான்.

குனிந்தவாறே "ம்ஹீம் " தலையத்து மறுத்தவளிடம்

"அப்ப போ உனக்கு பலூன் கிடையாது " என்று நிக் தோளை குலுக்கிய படி நின்று கொண்டான்.

"ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ் தாங்கோ சமத்துல " என்று நீரு கொஞ்ச

" ம்ஹும் டீல் இஸ் ஆல்வேஸ் ஆ டீல் " என்று விட , வேறு வழியின்றி நீரு அக்கம் பக்கம் பார்க்க

"யாரும் இல்லை " என்றவன் புருவங்களை ஏற்றி இறக்கி

" என்ன இப்ப ஓகே வா" என்றவனிடம்

நெருங்கி வந்தவள் அவன் சட்டை காலரை பிடித்து இழுத்தாள். அவளை நோக்கி குனிந்தவனின் கன்னத்தில் சட்டென்று சின்ன முத்தம் வைத்தவள் , அவன் அசந்தததும் கையிலிருந்த பலூன்களை பறித்துக் கொண்டு ஒடி விட்டாள்.

"ஏய், இட்ஸ் சீட்டிங்... " என அவன் துரத்தியது நினைவில் வர சிறு புன்னகையுடன் நிமிர்ந்தவள் , சில பலூன்களை வாங்கி மெல்ல திரும்பி நடந்தாள்.

மீண்டும் அவளுக்கு தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்க நின்றவாறே நான்கு புறமும் பார்த்து கொண்டிருந்தவளை கைய பிடித்து இழுத்து

"ஹாய் ஆண்டி " என்ற எதிர் வீட்டு சிறுமியின் குரலில்

"ஏ க்யூட்டி நீ எங்க இங்க , அம்மா எங்க" என ஆங்கிலத்தில் வினவ

"ஷாப்பிங்கு வந்தோம், மாம் .. அங்க " ஆங்கிலத்தில ஐஸ்கிரீம் பார்லரில் நின்ற தாயை சுட்டியது.

" இப்படி தனியா வரக்கூடாது க்யூட்டி மிஸ்ஸாகிடுவ " என்ற நீருவிடம்

"எனக்கு பலூன் வேண்டும் அதற்காகத்தான் வந்தேன்" என்ற குழந்தையின் கையில் பலூனை கொடுத்தவள் அதற்குள் அவர்களிடம் வந்திருந்த செரீனாவின் தாயிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

திடீர் என்று அவளுக்குள் ஏதோ இனம் புரியாத பயம் பரிதவிப்பும் தோன்றியது. கூட‍வே சற்று அதிக படபடப்பாக இருந்தது. அன்று முழுவதும் ஒரு வித அவஸ்த்தையாகத்தான் இருந்தது. இப்‍போது அதீரை நீருவின் அருகில் வந்திருந்தாள்.

அதன் பின் செரீனாவின் தாயிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு விடைபெற்றுக் கொண்ட இருவரும் உள்ளே நுழைந்தனர்.

அவர்களை தொடர்ந்து டாவின்சியும் உள்ளே நுழைந்தான். அவன் நீருவை பார்த்த மாத்திரத்தில் அவள் பால் ஈர்க்கப்பட்டிருந்தான்.

டாவின்சியும் அழகன் தான் பல பெண்கள் அவனை விரும்பி வந்து அனுபவித்து பணமும் கொடுத்து விட்டு போவார்கள். சிலருடன் இவன் வலிய போய் பழகி சில தினங்களில் அவர்கள் சலித்த உடன் விலகி விடுவதும் உண்டு.

அவனுடான சில மணி நேரங்களுக்கு சில இலட்சம் செலவளிக்க தயாராக இருக்கும் பெண்களும் உண்டு. அவனை தேர்வு செய்யும் பெண்களை அவனும் தேர்வு செய்தால் மட்டுமே மேலும் முன்னேற்றம் .

மாடலிங் அவனது துறை. தினம் தினம் பார்ட்டிகள் கொண்டாட்டம் என களை கட்டும் உலகம் அவனது. சிலநேரங்களில் மாற்றம் விரும்பி அழகிய ஒவியங்கள் வரைவான். மற்றவர்களுடையதை வாங்கி விற்பதும் உண்டு. அதற்க்கான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதும் உண்டு.

அப்படியான ஒரு நிகழ்ச்சிக்காக ஆறு மாதங்களுக்கு முன்பு இ‍தே இடத்தில் பேசும் ஒவியமாய் நின்றிருந்தவளைக் கண்டு அவள் அழகில் ஒரு கணம் தடுமாறிப் போனான். உடனே அவளை அடையும் நோக்கில் அவள் சம்மதம் வேண்டி நெருங்க அதற்கிடையில் யா‍‍ரோ ஒருவன் பலூன்களைக் காட்‍‍டி அவளை அணைத்து இவன் எரிச்சலை வாங்கிக்கொண்டான். அதன் பிறகு இவளுடன் தனித்துப் ‍பேச முயன்றவனுக்கு அது முடியாம‍லே போனது,

அதன் பிறகு பல முறை இங்‍கே வந்து இவளைத் ‍தே‍டி இருக்கிறான்… இப்போதுதான் காண்கிறான். அதுவும் வயிற்றுப் பிள்ளை‍யோடு.

யாருடைய குழந்தை… அன்று இவளை அணைத்திருந்தானே அவனுடையதா? அவன் இவளுக்கு யார்? கணவனா இல்லை தோழனா? என்று டாவின்சியின் சிந்தனை அவன் எண்ணத்திற்‍கேற்ப தாறுமாறாகச் சென்றது,

அவளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நீருவைத் தொடர்ந்தவன் அதீரையைக் கண்டு திகைத்தான். இவள் எங்‍கே ? இங்‍கே ?..என்று வியந்தவனுக்கு அவர்களின் ‍நெருக்கம் காட்‍டியது தோழிகள் என்று,

அதீரையுடன் கொண்டாடியது போன்று சில இரவுகளை
நேரொருவரில்லாளோடும் கொண்டாடி அவளை சுகிக்க வேண்டும் என மோகம் கொண்டான்.

டாவின்சி புலன்களின் கட்டுப்பாட்டின் தேவையையோ அவசியத்தையோ அறியாதவன்.

தோழிகள் என்பதால் அவர்களின் குணங்களும் ஒன்றாக இருக்க வேண்டுமா என்ன? அவனைப் ‍பொருத்தவரைக்கும் ஆம் என்பதுதான் வருத்தமானது,
 

அத்தியாயம் 9

ஜு பே யில் ...

நிக்கோலஸும் , டேனியலும் தலைமை அலுவலகத்தில் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளை பற்றிய தகவல்களையும் அவர்களின் முன்னேற்றம்
தொடர்பான அறிக்கையையும் சமர்பித்தவர்கள்
அந்த குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பற்றிய கருத்துக்களையும் திட்டங்களையும் கூறியவர்கள் அதற்கான அனுமதி தொடர்பான வேலையை முடித்துக் கொண்டு வெளியே வர டானியலின் தலைக்குள் மேலதிகாரியின் எச்சரிக்கைதான் ஓடிக்கோண்‍‍‍‍டிருந்தது.

சற்று நேரம் அமைதியாக எதுவும் பேசாமல் வந்தவன், திரும்பி நிக்கைப் பார்த்து,

"நீ என்ன நினைக்கிறாய்... " என்றான்.

"எதைப்பற்றிக் ‍கேட்கிறாய்?" என்று நிக் கேட்க,

"அதுதான்? நம்ம மேல தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்குன்னு சொன்னா‍ரே..."

"‍செயல் இருந்தால் எதிர்வினை இருக்கத்தா‍‍‍னே செய்யும். இதில் இறங்கிறப்ப‍வே நம்மை ‍நோக்கி ஆபத்து வரும்னு தெரிஞ்சுதானே எறங்கி‍‍னோம். ஆபத்தொன்னும் நமக்குப் புதுசில்லை‍யே… என்றவாறு வாகனத்தில் ஏற முற்படுகையில் அந்த காட்சி நிக்கின் கண்களில் விழுந்தது.

வெளி வாயிலில் இளைஞர்கள் சிலர் உள்ளே நுழைய அனுமதி வேண்டிக் கொண்டிருந்தனர். சுமார் இருபத்தி ஐந்து பேராவது இருக்கலாம். அவர்கள் கையை உள்ளே காட்டி ஏதோ பேச, அதற்குக் காவலர்கள் மறுப்பாகத் தலையை ஆட்‍‍‍‍டியவாறு அவர்களை வெளி‍யேறுமாறு கூறிக்கோண்‍‍டி‍ருந்தனர்.

அந்தக் காட்சி நிக்கிற்கு உறுத்த என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தான் .

அந்த இளைஞர்கள் மீண்டும் மீண்டும் உள்‍ளே செல்ல முயல்வதும், அதைக் காவலர்கள் அனுமதிக்காது மறுப்பதும் என்று சற்று ‍நேரம் அந்த இட‍மே சலசலத்தது.
இப்போது வந்தவர்கள் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சிலர் மீண்டும் திரும்பி சென்று தள்ளி நின்ற தங்கள் வாகனத்தில் ஏறிக் கொண்டனர் .

இப்போது ஒருவன் தன் கையில் இருந்த அந்த மனுவை காவலர்களிடம் கொடுக்க இப்போது அதை வாங்கிய காவலரில் ஒருவன் தொலை‍பேசியை எடுத்து எது‍வோ கூற மறுகணம் கதவு திறந்துகோண்டது.

உள்ளே வந்தவர்களை பரிசோதித்து காவலாளிகள் உள்ளே அனுமதித்தனர்.

உள்ளே வந்தவர்களை உற்று பார்த்த நிக் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவனாக, அவனுடைய கரம் துப்பாக்கியை வேகமாகப் பற்றிக் கொள்ள வாகனத்தின் ஒரு புறம் மறைந்து நின்றவாறு தாக்கத் தாயரானான்.

நிக் எதிர்பார்த்தது போலவே அந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிளை எடுத்து படபடவென சுட்டவர்கள், கையெறி குண்டுகளையும் வீசியபடி உள்ளே நுழைய முற்பட்டனர்.

டேனியும் துப்பாக்கிச் சத்தத்தைக் ‍கேட்டதும் பதறியவனாகத் தன் துப்பாக்ககியை ஏந்தியவாறு நிக்கின் பக்கமாக வந்து நின்று அவனுடன் ‍சேர்ந்து இளைஞர்களை ‍நோக்கிச் சுடத் ‍‍தொடங்கினான்,

இதற்குள் துப்பாக்கி சூட்டில் மூன்று வீரர்கள் ‍ இறந்து ‍போக? சுதாரித்த மற்ற வீரர்கள் எதிர்புறம் நின்று தாக்க என உருவான கலவரத்தில் சில நிமிடங்களுக்குள். மற்ற சில வீரர்களும் நிக்குமாக அந்த இளைஞர்கள் அனைவரையும் வீழ்த்தி இருந்தனர்.

அதற்குள் இவர்கள் தரப்பிலும் சில வீரர்கள் இறந்திருந்தனர்.

அதே ‍நேரம் காவலர்களின் அனுமதி மறுக்கப்பட்டு வெளியே வாகனத்தில் அமர்ந்திருந்த இளைஞர்கள் வாகனத்திற்குள் மறைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்துக்கோண்டு ‍சுட்டவாறு வேகமாக உள்‍ளே நு‍ையைத் ‍தொடங்கினர்.

அதில் ஒருவன், டேனியலை நோக்கி சுட, கீழே விழுந்து கிடந்த வீரன் ஒருவனைத் தூக்க வந்த நிக், டேனியலை ‍நோக்கி ஒருவன் சுடுவதைக் கண்டு நொடிக்கும் குறைவான நேரத்தில், டேனியலை நெருங்கியவன் அங்கிருந்து தள்ளி விடுவதற்குள் அந்த தோட்டா நிக்கின் மார்பில் ஏறியிருந்தது,

அந்த நிலையிலும் தனது துப்பாக்கியை உயர்த்தி அவனை சுட அதற்குள் டேனியின் துப்பாக்கி மற்ற அனைவரையும் சல்லடையாக சலித்து இருந்தது.

துப்பாக்கியை கீழே வீசிவிட்டு பாய்ந்து சென்று தன் நண்பன் கீழே விழும் முன்சட்டென்று மடியில் தாங்கிக் கொண்டான் டேனி.

அவனைக் கண்டு புன்னகைத்த நிக்

"இட் இஸ் ஒகே ஐ வில் பி ஆல்ரைட்…" என்றவாறு தன் கண்களை மூடியிருந்தான்.

நிக்கின் மார்பில் இரத்தம் பெருக அதை தன் கரம் கொண்டு அழுத்தியபடி கண்களில் நீர்பெருகிட அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு எதுவும் தோன்றவில்லை . அவனே ஒரு வீரன் தான் என்றாலும் நிக்கை அந்த சூழலில் பார்த்தவனுக்கு ஒன்றும் ஓடவில்லை.

"நிக் .. நிக் .."

என அரற்றியபடி இருந்தவனுக்கு எங்கு இருக்கிறோம் அவனுக்கு உயிர் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் என்பது கூட அவனுக்குத் ‍தோன்றவில்லை.

நிக்கின் நிலை அறிந்து பதறிவந்த மற்ற வீரர்களில் ஒருவன் நிக்கின் கழுத்தில் கரம் வைத்து உயிர் இருக்கிறதா…? என சோதித்தான். அவன் நாடித்துடிப்பதை உணர்ந்ததும், எப்படியும் நிக்கை காப்பாற்றி விடலாம் என்பதை உணர்ந்தவனாக,

" ஹேய் ஹீ ஸ் அலைவ், டேக் ஹிம் இன்சைட் " என்ற குரலில் சுயம் பெற்ற டேனி, அவனை கரங்களில் தாங்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.

அது தலைமை அலுவலகம் என்பதால் அந்த வளாகத்திற்குள்ளேயே மருத்துவமனை இருந்தது.

"டாக்டர்ஸ்…." என டேனி அலறியதில் மருத்துவமனையில் இருந்த அனைவரும் அவன் முன் வந்திருந்தனர்.

அவனை ஸ்ட்ரக்ஸரில் கிடத்தியவன்

" நிக் ..நிக் .. " என அவனை உலுக்கியபடி கதறிய நண்பனுக்கு நிக் கண் திறந்தான் இல்லை.

நிக்கை டேனியிடம் இருந்து பிரிக்க முயன்றவர்கள் அவன் நகராமல் நிற்க
" தயவு செய்து தள்ளி நில்லுங்கள் முதலில், அப்பதான் சிகிச்சையை தொடங்க முடியும் " என்று ஒரு பெண் மருத்துவர் சற்று கடுமையாக கூறி டானியலை விலக்கியவர், அவசரமாக நிக்கின் முகத்தில் சுவாசக் கருவியை பொருத்தியபடி, அறுவை சிகிச்சை துவங்குவதற்கான உத்தரவுகளை விரைந்து வளங்கியவாறே நிக்கின் ஸ்ட்ரச்சரைத் தள்ளிக்‍‍‍‍கொண்டு அறுவைச் சிகிச்சை அறை‍நோக்கி ஓடினார்.

டேனி மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாதவனாய், அருகில் இருந்த இருக்கையில் தொய்ந்து அமர்ந்தான்.

மேலும் காயம்பட்ட பல வீரர்கள் கொண்டு வரப்பட அந்த மருத்துவ வளாகம். பரபரப்பாகிப் போனது.

எதுவும் அவனை பாதிக்கவில்லை. அந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்திருந்வன் பார்வை அந்த அறுவை சிகிச்சை அரங்கின் வாயிலில் நிலை கொண்டிருந்தது. மனமோ ஓயாத ஜெபத்தில் இருந்தது
 
அத்தியாயம் 10

ஷாப்பிங் காம்பளக்ஸ் என்பது மாயஉலகம் வேண்டியவர்கள் , வேண்டாதவர்கள் என்று எந்த பிரிவும் அதற்கு கிடையாது, உன் மனம் மற்றும் பணம் இரண்டையும் முடிந்தால் ...உன் வசம் வைத்துக் கொள் ? எனும் நிரந்தர சவாலை தாங்கியபடி நின்ற கவர்ச்சிகரமான அந்த உலகிற்குள் நுழைந்த நீருவுக்கு இன்று என்னவோ எதுவும் கருத்தை கவரவில்லை.

அவளது கருத்தும் எண்ணமும் இங்கு இருந்தால் தானே எதுவும் அவளை கவர. ஏனோ அவள் மனம் இன்று சற்று அதிகமாகவே நிக்கை நாடியது.அங்கும் இங்கும் அலை பாய்ந்த மனதை முயன்று அடக்கி கவனம் செலுத்தி சில உடைகளை தேர்வு செய்து கொண்டிருந்தாள் . இல்லை, அப்படி நடித்துக் கொண்டிருந்தாளோ...?

அதீரை நேரொருவரில்லாளிடம் எதை எதையோ சளசளக்க, அவளோ ம் கொட்டியபடி இருந்தவள் , ஒரு கட்டத்தில் அதீரை எதுவும் கூறாமலே ம் கொட்டிக் கொண்டு இருந்தாள்.

"நீரு ... " என அவளை உலுக்கியவுடன் தான் நினைவுக்கு வந்தவளாக , இ இ இ ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தவள்

" ஸாரி அதீ ... " எனவும் அவளை முறைத்தவள் , சில எளிய கர்ப்ப கால உடைகளை எடுத்து வைத்தவள்

"நீரு நீ இங்க இந்த ட்ரஸை பார்த்து செலக்ட் பண்ணு நான் அந்த பக்கம் கொஞ்சம் அக்ஸிஸரீஸ் வாங்கிட்டு வரேன் "என நகர்ந்தவள் நகச்சாயங்களை பார்த்தது கொண்டிருந்தாள். நெயில் ஆர்ட் எனும் நகங்களை அழகு செய்யும் கலை அவளுக்கு பிடித்தமான ஒன்று அதற்கான தேர்வுகளை செய்து கொண்டிருந்தாள்.

அப்போது அந்த பணியாளரின் பின் புறம் இருந்த அந்த தொலைக் காட்சி பெட்டியில் அவள் பார்வை பதிய அதில் ஒளிபரப்பான செய்திஅவள் செவியில் இடியாக இறங்கியது. அமெரிக்க அமைதிப்படை முகாம் மீது தாக்குதல், சில வீரர்கள் இறப்பு என்ற செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தது.

முதலில் அந்த செய்தியை பார்த்த அதீரை அதிர்ந்து போனாள். முதலில் நீருவை தேட அவள் மறுகோடியில் இருந்தாள். அவள் இதை இன்னும் கவனிக்கவில்லை என்பதை அவள் சாதாரணமாக நின்று தேர்வு செய்ததிலேயே தெரிந்து கொண்டவள், முதலில் நீருவை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் . என நினைத்தவள் விரைந்து அவளை நெருங்கி,

"நீரு மெதுவா கீழ இறங்கி எனக்கு வெயிட் பண்ணறயா..? , நான் இங்க பில்பே பண்ணிட்டு வரேன் நாம இரண்டு பேரும் கிளம்பிறலாம் தி‍டீர்னு ஒரு அர்ஜென்ட் வொர்க் இப்ப தான் கால் வந்தது"
என்று பதட்டத்தை முடிந்தளவுக்கு குரலிலும் முகத்திலும் மறைத்து கூறினாள். நீருவோ எப்போதடா கிளம்புவோம் என்கிற நிலையில் தானே ஏற்கனவே இருந்தாள்

" சரி.. " என்றவள், நகர , எங்கே காத்திருக்க வேண்டும் சொல்ல மறந்ததை நினைவில் வர

"ஆங் நீரு காபி ஷாப்ல , எனக்கு ஒரு காபி ஆர்டர் பண்ணிட்டு வெயிட் பண்ணு
நான் பில் பே பண்ணிட்டு வந்திடறேன் " என அங்கிருந்து அவளை சில நிமிடங்களுக்கு தள்ளி நிறுத்த வேண்டியிருக்க மற்ற சாதக பாதகங்களை ஆலோசிக்கவில்லை.


அதிரைக்கு அந்த செய்தியின் உண்மை தன்மையை அறிய வேண்டிய அவசியம் மட்டுமே பிரதானமாக இருக்க நீருவை அங்கிருந்து அப்புறப் படுத்த எண்ணி அப்போதைக்கு வாய்க்கு வந்த எதையோ சொல்லி அவளைக் கீழே இருந்த காபி ஷாப்பிற்கு போகும் படி அனுப்பி வைத்தாள்.

கீழே இறங்க மின் தூக்கியின் அருகில் வரும் முன் கீழே இறங்கி இருக்க , நீருவுக்கு கீழே இறங்குவது தானே படிக்கட்டுகளில் இறங்கிவிடலாம் எளிதாகவும் இருக்கும் சற்று என படிக்கட்டுகளை நோக்கி நடந்தாள்.

அதீரை தனது அலைபேசியில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றாள். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் தொடர்பு கொண்டதில் இணைப்பு உடனே கிடைக்கவில்லை. பதட்டத்தில் அங்கும் இங்கும் நடந்தபடி மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தாள்.

கீழே ஒரு வேளை அவள் பார்த்து விட்டால் என்ற நினைவு வர அந்த சிப்பந்தியிடம் " ப்ளீஸ் மேக் இட் பாஸ்ட் "
என்றவள்

"ஆண்டவா அவ கண்ணுல இந்த நியூஸ் படக் கூடாது "

என்ற கோரிக்கையை காலம் கடந்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அதீரையின் ‍வேண்டுகோளுக்கு இணங்க படிகளில் இறங்கிக் கொண்டிருந்த நேரொருவரில்லாளின் கண்களில் அந்த செய்தி விழுந்தது.

செய்தி வாசிப்பாளர் கூறியதை கேட்டதும். இவளுக்கு அடி நெஞ்சில் ஏதோ கூரிய பனிச் சொருகல் போல ஏதோ வலி உடல் முழுவதும் பரவி உணர்வுகளை நிலை பிறழ செய்ய வயிற்றுக்குள் ஏதோ செய்வதாய் உணர்ந்தவளுக்கு அப்போதே அவனைப் பார்த்து விட வேண்டும் பேசி விட வேண்டும் என்று ஆவி துடிக்க , அவன் பாதுகாப்பாக இருக்கிறான் என்பதை அறிந்தே ஆக வேண்டும் என்று அவள் மனம் தவிக்க, இதய துடிப்பும் அழுத்தமும் நீருவின் ஏக்கத்திற்க்கு செவிசாய்த்து வேகமாய் துடிக்க வியர்வை ஆறாகபெருக கண் முன் இருப்பவை அனைத்தும் மறந்து இருள் விரவ தொடங்கியது.
எப்படியும் அந்த செய்தியை முழுமையாக கேட்டு விட வேண்டும் , தன்னவனுக்கு எதுவும் ஆகாது என ஆழ்மனம் நம்ப அதற்கு ஆதாரம் தேட மூளை உடலை அவசரப்படுத்த அடுத்தடுத்த நிலைப்பாட்டிலும் கட்டளைகளிலும் நிலை தடுமாறியபடி அடுத்த படியில் பாதங்களை எடுத்து வைத்தாள். பாதமோ நிலை தவறி நழுவி விட …
சமநிலை தவறிச் சாயத் தோடங்கினாள்,

அந்த நிலையிலும் தனது குழந்தைகளை காக்க இடது கையால் வயிற்றை அணைத்துக் கொண்டவள் மற்றோர் கரத்தை பிடிமானத்திற்க்கு கைப்பிடியை நோக்கி நீட்ட அது கிடைக்காமல் மல்லாந்து விழுந்திருந்தாள். அவள் விழுந்த வேகத்தில் பின் மண்டையில் படியின் முனை அடிபட்டு இரத்தம் பெருகத் தொடங்கி இருந்தது.

அ‍தேநேரம் அவளிடம் இன்று எப்படியாவது தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்த டாவின்சி, அவள் தனியாக இருக்கும் பொழுதை எதிர்நோக்கிக் காத்திருந்தான்…

எங்கே? அதீரை நீருவை விட்டு அகன்றால் தானே ,

" XXX .."என வைதவன், யார் இருந்தாலும் பரவாயில்லை நேராக போய் அவளிடம் கேட்டுவிட்டால் என்ன? இது என்ன இந்த அவஸ்த்தையை உள்ளேயே வைத்துக் கொண்டு
"XXX.. கான்ட் டூ திஸ்" என ‍‍சலிக்கும்‍போதே நீரு தனியாக ‍வெளியே வருவது தெரிந்தது.

சசந்தோஷத்தில் அவளை ‍நோக்கிப் போகும்போது அவனுடைய ‍போதாத நேரம் மிகச் சரியாக அலைப்பேசி அழைக்க எடுத்து பார்த்தான்.

அது அவனால் நிராகரிக்க முடியாத எண்ணாக இருக்க தொடர்பில் வந்தவன் ஒரிரு வார்த்தை பேசிவிட்டு பிறகு தொடர்பு கொள்வதாக கூறியவன் போனை பையில் திணித்தபடி திரும்ப அதற்குள் நீருவோ படிகளில் இறங்கத் தொடங்கி இருந்தாள்.

இன்று எப்படியும் அவளிடம் பேசிவிட வேண்டும் என எண்ணியபடி வேகமாக எட்டுக்களை வைத்தவன் அவளை நெருங்குவதற்குள் அவள் படிகளில் சரிந்திருந்தாள்.

அதீரையோ அவசரமாக பொருட்களை சேகரித்தவள் நீருவை சீக்கிரம் இல்லத்திற்கு அழைத்து சென்று விட்டபின் நேராகச் சேன்று நிக்கைப் பற்றி விசாரிக்கலாம் என்று முடிவு செய்தவளாக வெளியே வந்தவள் கண்டது இரத்த வெள்ளத்தில் இருந்த நீருவைத்தான்,

பதறியவளாக, " நீரு... "என்று அலறியவாறு கையில் இருந்த பைகளை கீழே போட்டவள், அவளை நோக்கி ஒடி வர அதீரைக்கு முன் நீருவை நெருங்கியிருந்த டாவின்சி அவளை தன் கரங்களில் ஏந்தியிருந்தான்.

"கால் டு தி எமர்ஜென்ஸி ... " என்று அதீரையிடம் கட்டளை இட்ட படி வாசலுக்கு விரைந்திருதான் .

அதற்குள் வந்த கடை சிப்பந்திகள் "நாங்கள் ஏற்கனவே அழைத்து விட்டோம்" என்றவர்கள் அவளை நீள் இருக்கை ஒன்றின் மீது படுக்க வைக்கும்படி கூற அவ்வா‍றே ‍செய்தவன் இரத்தம் ‍‍பெருக்‍கெடுத்து ஓடாதிருக்கத் தன் கைகளினாலேயே அழுத்திப் பி‍‍‍டித்துக்‍‍கொண்டான். அதற்கிடையில் ஆம்புலன்ஸ் வந்திருந்தது.

விரைந்து செயல்பட்டவர்கள் நீருவை வாகனத்தின் உள்ளே ஏற்ற அவர்களை தொடர்ந்து அதீரையும் உள்ளே ஏறி இருந்தாள்.

டாவின்சி தன் வாகனத்தில் ஆம்புலன்ஸை தொடர்ந்தவன் போவதா வேண்டாமா…. தான் அவளுக்கு யார்….
எனவெல்லாம் யோசிக்கவில்லை. அவ்விடத்தில் அவனுடைய மனிதத்தன்மையையும், அவளுடைய உடல் நலனின் மீதான அக்க‍ைறை‍யே ஓங்கியிருந்தது.
 
அத்தியாயம் 11

அ‍‍தே நேரம் சூடானில் அவசரச் சிகிச்சைப் பிரிவிலிருந்த
நிக்கின் இதயம் தன் மறுபாதி தனக்காக அதிகமாய் துடிப்பதை அறிந்ததோ, இல்லை அதற்கு ஆபத்து என்பதை உணர்ந்ததோ என்னவோ தன் வேலையை ‍நேரத்தில் நிறுத்தியது.

அவன் சுவாசங்கள் அவள் தந்தல்லவா, கொடுத்தவளைத் தேடிய உயிர் அவளை தேடி மீட்க சென்றிருந்ததோ…

அங்கே அவனுக்கு அறுவை சிகிச்சை மூலம் இதயத்தை விட்டு விலகி சற்று மேற்புறமாக உள்ளே பதிந்திருந்த தோட்டாவை எடுப்பதில் முனைந்திருந்த மருத்துவர் குழு , தற்போது அவன் இதய துடிப்பு நின்றிருக்க அதனை மீண்டும் இயங்கச் செய்வதற்கான, முயற்சிகளில் இறங்கி இருந்தனர்.

இங்கு நேரொருவரில்லாளோ அக்னிப்பரீட்சையை துவக்கி இருந்தாள்.
அவள் ஆழ்மனம் நிக் இருப்பதை உணர
அதற்கு ஆதாரத்தை நிஜத்தில் தேடியது . எனவே அவளது இதயமும் அழுத்தமும் சமநிலையின்றி நொடிக்கொருதரம் மாறி தன்னுயிரையே சோதித்தது.

கண்கள் விரிந்த போதெல்லாம் தன் உயிருக்கு நம்பிக்கை தந்தவனின் உருவம் தேடி தேடி அவள் மனம் சமநிலையை இழந்து. புற உலகின் நினைவுகளையும் இழந்து கொண்டிருந்தது. இருதயமோ இயக்கத்தை நிறுத்திக் கொள்ள எத்தனித்து கொண்டிருந்தது.

அதீரையை அழைத்த மருத்துவர், நீருவின் மனம் அவனை கண்டால் மட்டுமே சமன்படும் . அது மட்டுமே அவளை உயிரோடு மீட்கும், தற்போது அவள் இருக்கும் நிலையில் எந்தவித மருத்துவமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் அவளது அழுத்தம் சமநிலைக்கு வர வேண்டும் , மருந்துகளின் மூலம் எப்போதும் சமநிலைக்கு கொண்டு வருவது அது அவளுக்கு மட்டுமல்ல வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று விட்டார்.

வெந்நீரில் போட்ட மீனாக தவித்து போனாள். மீண்டும் அதீரை தலைமை செயலகத்தை தொடர்பு கொண்டவள், நிக் பற்றிய செய்தியை கேட்க அவர்களோ , தகவல் தொடர்பு முற்றிலும் அந்த குண்டு வெடிப்புகளில் அழிந்திருப்பதால், எந்தத் தகவல்களும் கூற முடியாது என்று கைவிரித்துவிட்‍டிருந்தனர். அலைபேசியை அணைத்தவளுக்கு மனம் கணத்து போனது.

அவன் உயிரோடு இருக்கிறானா …? இல்லையா... ?என்றே தெரியாத நிலைமை, தொடர்பு கொள்ள இயலாத சூழல், நிக்கின் அன்னை அவரது கணவருடன் தனது கோடையை கழிக்க மொரீஷியஷ் சென்றிருந்தார். மேலும் , எதை பற்றியும் சரிவர தெரியாமல் அவரிடம் என்னவென கூறுவாள். என்பதை விட இவளை நம்பி அல்லவ பொறுப்பை ஒப்படைத்திருக்கிறான். அவளுக்கு இருந்த பதட்டத்தில் அவருக்கு கூற வேண்டும் என்று தோன்ற கூட இல்லை அவளுக்கு சிந்தனையே மறந்து போய் ,அழக்கூட நினைவு அற்றவளாய் திக் பிரம்மை பிடித்து உட்கார்ந்து இருந்தாள்.

அப்‍போது, அங்கு வந்த செவிலியர் ஒருவர்
"இது நோயாளியுடைய பொருட்கள் " என நீருவுடைய நகைகள் மற்றும் அலைபேசியை கொடுத்து விட்டு செல்ல
அலைபேசியை முன்னும் பின்னும் திருப்பியவள் விரக்தியாக சிரித்தாள். பின் அதை பார்த்து

"நீ உலகை சுருக்கி உனதடிமையாக பல லட்சம் பேரை வைத்திருக்கிறாய் தானே. ஆனால் இப்போது நீ வெறும் மின் குப்பை ."

என்ற கோபத்துடன் கூறியவள் அணைத்தையும் அருகில் இருந்த நாற்காலியில் வீசி விட்டிருந்தாள். பிறகு சற்று நேரம் கழித்து அனைத்து பொருட்களையும் அவளது கைப்பையில்
வைத்தவள் கைகள் தானாகவே அலைபேசியை உயிர்பித்திருக்க , திரையில் விழுந்தான் நிக்,

வெண்ணிறத்தில் உடலை இறுக்கி கழுத்து வரை மூடியிருந்த டீசர்ட் அவன் வனப்புகளை அழகாகக் காட்டியது. வாடாத சிறுமுறுவல் ஒன்றுடன் அந்த வாகனத்தின் மேல் ஒரு கை வைத்து ஒரு காலை மடக்கி அவன் நின்றிருந்த , கோலத்தை பார்த்து கொண்டிருந்தாள்.

அந்த நேரம் பார்த்து நேரொருவரில்லாளுக்கு அழைப்பு வர, அந்த ரிங்டோனை கேட்ட அதீரையின் முகம் வியப்பில் மலர்ந்தது

"நீரு மை லவ்… நீரு மை லவ்… நீரு மை லவ்…" என்று இசைத்தது நிக்கின் குரல். அவன் இல்லாத காரணத்தால் அவனுடைய குரலை‍யே ரிங் ‍டோனாக வைத்திருந்தாள் நீரு.

அதே நேரம் வாகனத்தில் இவர்களை பின்தொடர்ந்த டாவின்சியோ மருத்துவமனை வளாகத்தில் நீருவை யார் என பெயர் கூட தெரியாமல் அவளை எப்படி எங்கே தேடுவது என புரியாமல் அங்கும் இங்கும் என்று அவசர சிகிச்சை வார்டுகளில் பக்கம் தேடிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் அதீரை விழுந்தாள்.

தன் மனம் கவர்ந்தவளின் நிலை பற்றி எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும், என நினைத்தவன்
என்னவென கேட்பது …? என்று ‍குழம்பினான்,

நீ யார் என்று கேட்டால் என்ன பதில் கூற? பரிதவித்தாலும் அவள் நலம் மட்டும் நாடுபவனாய் தைரியத்தை வரவழைத்தவன், அதீரையை நெருங்க,
அதே நேரம் அவளோ அவசரமாக நீருவின் அறையை நோக்கி விரைந்தாள்,


அதீரை நுழைந்த வேகத்தில் நீருவுக்கு ஏதோ சரியில்லை என எண்ணியவனாக தானும் வேக எட்டுக்களை வைத்து அறைக்குள் நுழைந்தான்.

அதீரையோ கைப்‍பேசியின் ரிங் டோனை இயக்கி அதை நீருவின் காதருகே வைத்திருந்தாள் , அது அவளை மீட்டு விடாதா எனும் ஏதோ குருட்டாசையில்

"நீரு மை லவ் … நீரு மை லவ்… நீரு மை லவ்… "என்கிற நிக்னுடைய கரகரத்த குரல் அவளுடைய செவியில் ‍‍சென்றடைய, அந்தக் குரலைக் கேட்டதும் அவளிடம் ஒரு மாற்றம்,

தன் கணவனது குரலைக் கேட்டதும் அவனே வந்து விட்டதாக எண்ணி இதயம் படு வேகமாகத் து‍‍டிக்க அதே வேகத்தில் விழிகளைத் திறந்தவளின் பார்வை உள்ளே அவன் சாயலில் நுழைந்துகொண்‍டிருந்த டாவின்சியின் மீது பதிய, ஏற்‍கெனவே தடுமாறியிருந்த அவளுடைய மூளை, தன் உயிரில் உறைந்தவனின் குரலையும் வாசலில் நின்றிருந்தவனையும் ஒன்றாக இணைத்து தன்னவன் என்று கச்சிதமாகப் பதிவு செய்ய அத்தோடு விழிகள் மீண்டும் மூடிக்கொண்டன.

டாவின்சியை பார்த்தபடி கண்களை மூடிய நேரொருவரில்லாளின் ஆழ்மனம் தன்னவன் வந்துவிட்டான் என்று எண்ணி உயிர்த்தது அந்த நிம்மதியில் அவள் நுரையீரல் ஆழமாக மூச்சை உள்ளிளுக்க அவள் தாங்கிய சூல்களும் உயிர்த்தன

சற்று நேரத்தில் சமநிலைக்கு வந்ததது அவள் இதயத்தின் துடிப்பும் அழுத்தமும்.,

அங்கே சூடானில் தன்னவளை கண்டு திரும்பியதாலோ எமனிடத்தில் செல்லாமல் தன் இருப்பிடம் சேர்ந்தது நிக்கின் உயிர். சில நிமிடங்கள் நிறுத்திய வேலையை மீண்டும் தொடர்ந்ததது அவன் இதயம்

சில மணி நேர போராட்டங்களுக்கு தனது கையுருறையை உருவியபடி அறுவை சிகிச்சை உடைகளை முற்றிலும் களையாமல் வெளியே வந்த மருத்துவர் , டேனியல் அமர்ந்திருக்கும் நிலையை கண்டு இரக்கம் கொண்டவராய் அவனிடம் வர அவரைக் கண்டதும் பதறி எழுந்தவனிடம்

"ஹீ ஸ் ஆல் ரைட், இன் ரைட் டைம் இன் ரைட் ப்ளேஸ் அதானலாதான் அவர காப்பாத்த முடிஞ்சிது"

இனி பிரச்சனை இல்லை. என்ற மருத்துவரின் கரங்களை பிடித்துக் கொண்டவன் கண்களில் நீர் நிறைய முகம் கொள்ளா புன்னகையோடு

"தாங்யூ டாக்டர் "

என அவரை அனைத்துக் கொண்டான். பிறகு

" நான் பார்க்கலாமா.. "

என்றவனுக்கு

"பார்க்கலாம் ... ஆனா கவனம் " என்றிட

"சரி ..." என்பதாக தலையை அவருக்கு அசைத்த டேனி , மறு நொடி அங்கு நிற்கவில்லை. நிக்கிடம் விரைந்து விட்டான்.
 


அத்தியாயம் 12


மூன்று நாட்களின் பின்

மூடியகண்ணிமைகளுக்களுக்குள் கண்மணிகள் அங்குமிங்கும் அலைய ஆரம்பித்தன, அவள் விழிப்பின் அறிகுறியாய்.

அதீரை இரண்டு நாட்களாக அவளுடனே தான் இருந்தாள். ,

இன்று வேறு வழி அற்றவளாய் அலுவலகத்திற்கு வந்திருந்தாள். நேரில் வந்து சில கோப்புகளை ஒப்படைக்கும் படியும் , ஒப்பந்தங்கள் இவள் முன்னிலையில் கையெழுத்தாகி இருந்ததால் அது தொடர்பான சில விளக்கங்களை பெறுவதற்க்கும் அவளை நிறுவனத்திற்க்கு அழைத்திருக்க அங்கு வந்திருந்தாள்.

தனது வேலையில் மூழ்கி இருந்தவளுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர , அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
மருத்துவ மனையில் இருந்து நீரு கண் விழித்து விட்டதாகவும் உடனே அவளை வரும்படியும் கூறி இருந்தனர்.

மருத்துவமனை வளாகத்தில் வாகனத்தை நிறுத்தியவள் , அதனை உரிய வகையில் நிறுத்தி இருக்கிறோமா என்பதை கூட கவனிக்கவில்லை. வேகமாக நேரொருவரில்லாளின் அறைக் கதவை திறந்து கொண்டு நீரு என்றபடி மகிழ்ச்சியுடன் நுழைந்தாள்.

அவளோ கட்டிலின் மேல் அமர்ந்து வெளியே தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்க இலேசாக தலையை திருப்பி பார்த்தவள்
விழிகள் அவளையும் தாண்டி ஒரு நொடி பார்த்து விட்டு அவள் தேடிய முகம் இல்லை என்றதும் மீண்டும் திரும்பிக் கொண்டது.

நீரு .. நீரு .. இப்ப எப்படி டி இருக்கு ? நீ கண்ணு திறக்கற வரை என் உயிரே கையில் இல்லை தெரியுமா என மேலும் மேலும் பேசிக் கொண்டே போக

அவளிடம் எந்த பதிலும் இல்லை , எதையோ தீவிரமாக யோசிக்க அவள் நினைவில் வந்ததது , கடைசியாக கேட்ட நீரு எனும் குரலும் டாவின்சியின் முகமும் தெளிவற்ற நீரின் பிம்பமாய் விரிய, இப்போது சலனமற்று இருந்த அவள் விழிகள் அலை பாய அவள் மனம் மேலும் முன்பு நடந்ததை நினைவு கூற முயல அது நினைவுக்கு வராமல் சண்டித்தனம் செய்ய மீண்டும் மீண்டும் முயன்றதில் பின் மன்டையில் வலிபரவ அது தாளாமல் கைகளினால் மெத்தை விரிப்பை இறுக்கிப் பற்றி சுருட்ட அதைக் கண்டு பதறி வேகமாக அவளை நெருங்கிய அதீரை

"ஹேய் நீரு "

என அவள் கரங்களை பிடிக்க,கரங்களை அவளிடமிருந்து உருவியவளாக இவளை தள்ளியவள்

"யாரு நீங்க வெளில போங்கோ"

என்றவள் இன்னும் பின்னே நகர்ந்து போக அதிர்ந்து போனவளாக

"நீரு .. நான் அதீரை, என்ன தெரியலியா டி "

என்ற அதீரை அவளை நெருங்க , நீருவோ அவளிடம் இருந்து விலகி பின்னோக்கி நகர்ந்தவள்

" நிக் எங்கே… என்னைப் பார்க்க ஏன் வரலை… சித்த அவரைக் கூப்பிடுரேளா… எனக்கு நிக்க பார்க்கனும், நிக் தான் வேனும் நிக் நிக்"

என கத்தியவள் ஆவேசமாக எழுந்து அங்கிருந்த மேசையிலிருந்த பொருட்கள் அனைத்தையும் வீசியவள்

" நிக் ….நிக் … " விடாது அரற்ற அதீரைக்கு ஒன்றும் புரியவில்லை , அவள் நிக்கிற்கு எங்கே போவாள், எதையாவது கூறி சமாதானம் செய்ய நினைத்தவள் என்ன சொல்ல என யோசிப்பதற்குள்

நீரு தன் தலையில் போட்டிருந்த கட்டை மாற்றுவதற்காக செவிலியர் மருந்துதட்டில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்திருந்தாள். அதீரை நெருங்கி பிடிப்பதற்குள் கையில் இரத் குத்திக் கொள்ள இரத்தம் பெருக ஆரம்பித்தது.

"நீரு ...ஸ்டாப் திஸ் " என அலறிய அதீரை அவள் கரங்களில் இருந்த கத்தரிக்கோலை பிடிங்கி தள்ளி வீச,
மனம் சமனப் படாத நீருவோ என்ன செய்ய என சுற்றும் பார்த்தவள் இறுதியில் , சுவற்றில் தன் தலையை மோதி " நிக் .. நிக்ட்ட போனும் " என அழுதபடி கத்த அவளை இறுக பற்றிய அதீரை

" ப்ளீஸ் நீரு ... " நான் சொல்லறத கேளேன் என தன் தோழியின் நிலை கண்டு கண்கள் கலங்க கூற ,

நேரொருவரில்லாளோ நிக்கை காண வேண்டும் என ஆவேசத்தில் அல்லவோ இருந்தாள். அதீரையை உதறியவள்

வாசலை நோக்கி ஒட , நீரு தள்ளிய வேகத்தில் கட்டிலில் மோதி விழுந்தவள் எழுந்து வருவதற்குள் நீரு காரிடாரின் கடைசியில் இருந்தாள்.

அப்போது மின் தூக்கியின் கதவு திறக்க உள்ளிருந்து, கை நிறைய ரோஜா பூங்கொத்துடன் வெளியே வந்தான் டாவின்சி

மூன்று நாட்களாக இவளை தினமும் பார்க்க வருபவன். இன்றும் அது போல நீருவை பார்க்க வர அவனைக் கண்டதும்

" நிக் …." என்று கத்தியவாறு இவனை இறுகக் கட்டிக் கொண்டவள் " நிக் , நிக்.. " என கண்களில் நீர் பெருக சிரிப்புடன் முகம்தாடை என தடவியவள் தன் கண்கள் உணர்ந்தது சரிதானா ? என சோதித்து கொண்டிருந்தாள்.

டாவின்சியோ அதிர்ச்சியில் ஒற்றை வார்த்தை உதிர்த்தான் இல்லை. தேவதையின் அனைப்பினை வார்த்தைகள் வீழ்த்திடுமோ? என அக்கணத்தில் நிறைந்திருந்தான். கூட‍வே தன்னை மறந்து அவளை அணைத்துக்‍‍கொள்ள, அதில் அவள் மூளைக்குள் ஏதோ நெருட சட்டென தீப்பட்டது போல் தள்ளி நின்றாள்.

நீரு விலகி நின்றதையே அறியாதவனாய் டாவின்சி அவள் வாசத்தை உள் இழுத்து தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் அங்கு ஒடி வந்து சேர்ந்த அதீரை

"நீரு ஏன்டி இப்படி நடந்துக்கற?"

என்றபடி அவள் கரங்களில் வழிந்த இரத்தத்தை துடைக்க போக அவளை தள்ளி விட்டு இவனையே பார்த்திருந்தாள்.

அப்போதுதான் டாவின்சி நனவுலகிற்கு திரும்பியவன் நீருவை கவனித்தான் அவள் தலையில் இடப்பட்டிருந்த தையலில் இருந்தும் இரத்தம் கசிய அதைக் கண்டு பதறியவன்.

" ஏஞ்சல் .. " என்றபடி தனது கை குட்டையில் அதை துடைக்க போக கரங்களை தட்டி விட்டவள் அவனை உற்று பார்த்து

" நீ என்னோட நிக்தானே ?" என்றாள்

டாவின்சிக்கு அவள் கேட்பது விளங்கவில்லை ,

"வாட் ... ? அயம்.. டாவின்சி… " என்று அவன் கூறுவதற்குள் நீருவின் கேள்வியால் அதிர்ந்து போயிருந்த அதீரை நிலைமையின் தேவை கருதி சற்றும் யோசிக்காமல், டாவின்சி பதில் கூற முதலே

"ஆமா நிக்… நிக் தான் உன்னோட நிக்தான் " என்றாள் ‍‍ ‍தெளிவாக. அதைக் கேட்டு டாவின்சி அதிர்ந்துபோய் நிற்க, நீருவின் முகமோ நிம்மதியில் மலர அதீரையோ ‍‍பெரும் குற்ற உணர்வுடன் முன்னால் நின்றிருந்தவர்களைப் பார்த்துக்கொண்‍டிருந்தாள்.

"கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்"
இது சிலப்பதிகாரத்தின் கூற்று. ஒருவரின் தாய் இறந்துபடின் மற்றவர் அவரை நோக்கி, நான் உங்கள் தாய்போல் இருந்து உதவுவேன் என்று ஆறுதல் கூறலாம். ஆனால், ஒருத்தியின் கணவன் இறந்துவிடின், நான் உன் கணவனாய் இருந்து உதவுவேன் வருந்தாதே என்று கூற முடியுமா என்ன? அதுதானே நம் பண்பாடு.

ஆனால் அதீரையோ பின்விளைவு பற்றி சிந்திக்காது மூன்று உயிர்களை மீட்க கணவனின் உருவில் மற்றொறுவனை நிறுத்தியிருந்தாள்.

ஈன்ற கன்று இறந்து பட , பால் கட்டி உயிருக்கு போராடும் பசுவிற்கு, வைக்கோல்லில் செய்த கன்றை கண்முன் காட்ட அது தன் கன்றின் நினைவில் பாலை சுரக்குமே…

அது போல, நேரொருவரில்லாளைக் காப்பாற்ற வைக்கோல் கன்றாக டாவின்சியை மாற்றி இருந்தாள் அதீரை. இதில் மயங்கொலியாய் போனது நீருவின் வாழ்க்கை,

அந்த நிலையில் நீருவின் உயிரைவிட, வேறு எதுவும் முக்கியமாகப் படவில்லை அதீரைக்கு.

ஆனால் இவள் செய்த மயங்கொலி பிழை திருத்தம் ஆகுமோ? ஆகையில்... ஆக்கையில் … அவள் உயிர் தரிக்குமோ..? இது எதையும் ‍யோசிக்கும் நிலையில் அதீரை அப்போது இருக்கவில்லை.

இப்போது அதீரையை பார்த்த நீரு

"உண்மையா வா…" என விழி விரித்து கேட்டாள்.

இப்போது டாவின்சிக்கு புரிந்து போனது இவள் தன்னை அவள் கணவனாக மாற்றி வரித்துக் கொண்டுள்ளாள் என்பதை. அப்ப‍டியானால் அவனைப் பற்றிய நினைவுகள் இவளிடம் இல்லையா? அவனையும் மீறி மனம் குதூகலித்தது.

மகிழ்சியில் அவன் முகம் விகசித்தது, சிறகின்றி பறந்து கொண்டிருந்தான். தான் அடைய எண்ணியவள் தன்னையே கணவனாக புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை. அது சரியா? தவறா ? என்பதை பற்றிய ஆராய்ச்சி அவனுக்கு ஏன் ? அவள் மணம் முடித்தவளா இல்லையா என்கிற ஆராய்ச்சியெல்லாம் அவனுக்கு எதற்கு? ‍வேண்டியதெல்லாம் ஒரு இரவு அவள் கூட சுகிப்பது மட்டும்தான். அதற்கு அவள் சம்மதித்தால் ‍போதும்.

இப்போது அவளாகவே கரங்களில் வந்து விழுந்துவிட்டாள். இதை விட வேறு என்ன ‍வேண்டும்.

அதற்குள் அதீரை நிக் , நிக் என இவனை அழைக்க டாவின்சியோ சில நிமடங்களுக்கு முன்புதான் தனக்கு , இந்த நாமகரணம் சூட்டப்பட்டது என்பதை மறந்துவனாக யாரவன் நிக் என்பதுபோலச் சுற்றும் முற்றும் பார்த்தான்.

யார் நிக்… என்னை அணைத்துக்கொண்டு நிக் என்கிறா‍ளே...ஏன்? புரியாமல் குழம்ப, அதைப் புரிந்து கொண்ட அதீரை நிலைமையை சுமுகமாக்கும் அவசரத்தில்,

" நிக்.. என்ன பார்த்துட்டு இருக்க ... " என்று குறிப்பால் எதையோ உணர்த்துவது ‍போல விழிகளைக் காட்ட , ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டவனாக நீருவை ஏறிட்டான்.

அவளோ ஆஸ்பத்திரி உடையிலும் கலைந்த தலையுடனும் இவன் கொணர்ந்த அந்த பூங்கொத்தின் பூக்களை பார்த்து கொண்டிருந்தாள். பிறகு வலது கையின் ஆட்டி விரல் கொண்டு ஒவ்வோரு வண்ண மலராக அழுத்தி தொட்டு பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

அப்போதும் தேவதையாகத்தான் தெரிந்தாள் அவனுக்கு , மெல்ல அவளை நெருங்கியவன்

" ஏஞ்சல் .. வா நம்ம ரூம்க்கு போய் இந்த ப்ளார்ஸ் வச்சி விளையாடலாம் "

தோள் மீது கரம் போட்டு அவளை அணைத்தபடி செல்ல , அதனை பார்த்த அதீரைக்கு இப்போது சுருக்கென்றது, தன்னுடைய நண்பனின் மனைவி மேல் இவன் கரமா ? முதலில் தட்டி விட வேண்டும் என சில எட்டுகள் வேகமாக வைத்தவள் அவர்களை நெருங்கும் முன்னம் நேரொருவரில்லாளே டாவின்சியின் கரங்களை தன் மீதிருந்து எடுத்து விட்டிருந்தாள். இப்போது தான் அவளுக்கு மூச்சு இயல்பானது.
அப்போதுதான் முகத்தில் கொதிநீரை ஊற்றியது போல் அந்த உண்மை உரைத்தது.

நீருவின் நன்மை கருதியாகினும், ‍இந்தத் தகுதியில்லாதவனைப் போய், இவன்தான் உன் கணவன் என்று கூறிவிட்டோமே… இப்போது மனம் சரியில்லாத நேரத்தில் இவன்தான் தன் கணவன் நிக் என்று நம்பிக்‍‍கொண்‍‍டிருப்பவளிடம் சென்று உண்மையை எப்ப‍டி உரைப்பது?‍ ‍சொன்னாலும் நம்புவாளா? ‍இவன் வேறு பெண்கள் என்றால் படுக்கையை மட்டும்தானே நினைப்பான்… அப்ப‍‍டி இருக்கையில் நீருவை இவனிடமிருந்து எப்படிக் காப்பது? புரியாமல் குழம்பிப் போனாள் ஆதிரை. முதலில் இவனிடம் இதுபற்றி பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். மு‍டிவெடுத்தவள் நீருவும் டாவின்சியும் உள்ளே நுழைய அவர்களை தொடர்ந்து இவளும் உள்ளே நுழைந்தாள்.

நீருவுக்கான உணவை தட்டில் எடுத்து வைத்தவள் சிறு கரண்டியும் அதில் இட்டாள். "நீரு இத மட்டும் கொஞ்சம் சாப்பிடு , அப்பதான் மாத்திரை போட்டுக்க முடியும் "

" சாப்பாடும் வேணா , மாத்திரையும் வேனா.. வேனா... நல்லாவே இல்லை." என சிறு குழந்தை போல் கண்களை மூடி இரு கரங்களைக் கொண்டு வாயை மூடிக் கொண்டாள்.

அதீரைக்கு என்ன சொல்ல வேண்டும் என தெரியவில்லை. பெரிய நிறுவனங்களின் பிரச்சனைகளை சிறு பிசிர் இன்றி கையாயள்பவள் அவள் ஆனால் , சிறு குழந்தைகள் என்றால் ஓடி விடுவாள். இப்போதோ குழந்தையாகி போன தன் தோழியை எப்படி உணவருந்த செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்க நின்றாள்.

நீருவை நெருங்கிய டாவின்சி அவள் முகத்தில் இருந்து கரங்களை விலக்கி "ஏஞ்சல் , நான் உன்னோட நிக் தான" என்றான்.

"ம்.." என்ற நீருவின் அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்தவன் , "அப்ப நான் சொல்லறத கேட்டு சாப்டனும் , அப்ப தான வயத்தில இருக்க பாப்பாவுக்ககு நல்லது."
எனவும் முகத்தை மேலாக நிமிர்த்தி தாவாக் கட்டையில் விரல் கொண்டு தட்டினாள். (யோசிக்கிறாகளாமா…? ) அந்த சிந்தனை பாவத்தின் முடிவில்

"நீ ஊட்டி விடுறியா நிக் , அப்டின்னா நான் சாப்பிடறேன் " என சரி என்பதாய் தலையசைத்தவன் , அதீரையிடம் இருந்து உணவுத் தட்டை வாங்கி அவளுக்கு பொறுமையாக ஊட்டி முடித்தவன், மாத்திரைகளை உண்ண வைத்து அவளை உறங்க வைத்திருந்தான்.

நீருவின் மீது போர்வை கொண்டு மூடியவன் மனது அவளது நெற்றியில் முத்தமிட பரபரத்தது. இப்போது அதை செய்தால் அதீரை நெற்றிக் கண்ணை திறந்து விட வாய்ப்பு உள்ளது . மேலும் தனது திட்டங்கள் பாழாகி விடும் என்பதால் முயன்று தன்னை அடக்கியவன் விரல்கள் சிறிதே கன்னம் தீண்டிட அந்த மென்மை அவனை ஏதோ செய்ய, லயித்து நின்றான்.

அதற்குள் அதீரை அவன் மயக்கத்தை அறிந்து கொண்டாள். அவனை நெருங்கியவள்

" நிக் டோன்ட் டச் ஹெர் வித் ராங் இன்டென்ஷன்ஸ் " என உறுமினாள். தன் கவனம் சிதறியதை அவள் கண்டு கொண்டதை அறிந்தவன் வசீகரமாக புன்னகைத்தான்.

" ஒகே , ஓகே சில் பேபி…" என்றவன் அவள் மீது உரசுமளவுக்கு நெருங்கி நின்றவன் அவள் காது மடல்களில் தன் இதழ் தீண்ட

" நோ ஒன் இஸ் ஹாட் லைக் யூ , யு த்ரோ மீ இன் த ஹெவன் தட் நைட் " என்றவன் பார்த்த பார்வை அவளை இப்போதும் அனுபவிப்பதாக இருந்தது.

அவனை தள்ளி விட்டவளின் முகம் அவனது வார்த்தைகளிலும் பார்வையிலும் ஆத்திரத்தில் சிவந்து ‍போனது. அவனை நிமிர்ந்து பார்த்தவள்

" தட் ஸ் ஒய் , ஐ ஆல் வேஸ் த்ரோ யூ லைக் அ ட்ராஷ் "
என்றாள்.

அவளின் வார்த்தையில் அடிபட்டவனாய் அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ "தயவு செய்து வெளியே போ " என்று ஆத்திரம் அடக்கப்பட்ட குரலில் கூற

"கூல் பேபி இப்ப போறேன் , ஆனா " சிறு சிரிப்புடன் வெளியேறினான்
 
அத்தியாயம் 13

சில நெடிய மூச்சுகளை எடுத்து தன்னை நிலைப்படுத்தியவள் ,

' இந்த டாவின்சிய முதலில் அப்புறப்படுத்த வேண்டும் அதனால எதாவது பிரச்சனை வருமா? வேறு வழி எதுவும் இருக்கா தெரியலையே? '

என்று தவித்தவாறு நீருவின் அருகில் அமர்ந்து அவள் முகத்தின் மீது விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கி அவள் கரங்களை பற்றியபடி அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ உள்ளே வந்த செவிலியர்

"மிஸ் அதீரை மருத்துவர் உங்களை பார்க்க விரும்புகிறார்."

எனவும், நீருவை செவிலியரிடம் ஒப்படைத்துவிட்டு மருத்துவரின் அறை நோக்கி நடந்தவளின் மனம் மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை பட்டியலிட்டு கொண்டிருந்தது.

உள்ளே நு‍ழைந்தவள் மறு கணம் அதிர்ந்து‍போனாள். அங்கே அவளுக்கு முன் டாவின்சி அமர்ந்திருந்தான்.

அவனை முறைத்தவள் அவள் ஏதும் கூறும் முன் டாவின்சி

" கம் அன்ட் சிட் அதி பேபி, ஹி இஸ் வெய்ட்டிங் பார் யு"
என தனக்கு அருகில் இருந்த இருக்கையை காட்ட, சூழ்நிலை கருதி அமைதி காத்தவள் அவன் அரு‍கே அமர்ந்தாள்.

தனது மூக்கு கண்ணாடியை சரி செய்தவராய்

"வெல் , மிஸ் பேஷண்ட்டுக்கு நடந்த ஆக்ஸிடண்ட்ல நினைவுகளில் ஒரு ‍தேக்க நிலை ஏற்பட்‍டி‍ருக்கு… சோல்லப்போனா தன்னையே அவங்களுக்கு உணர்ந்துக்க முடியாத நிலைல இருக்காங்க… "

என்றதும் அதிர்ச்சியுடன் பார்த்தவள்,

"டாக்டர்… அப்ப‍டியானால் அவளுக்கு எதுவு‍மே நினைவில் இருக்காதா… "

என்று ‍கேட்டாள் ஆதிரை,

"ஆமாம்… "
என்று வருத்தத்துடன் தலையாட்ட, இந்த வார்தையை கேட்டவளுக்கு அந்த கணம் மூச்சடைக்க நெஞ்சை தன் கை வைத்து அழுத்தி இதயத்திற்கு ஆறுதலை தர முயன்றாள்.

அவள் நிலையைக் கண்ட டாவின்சி , தண்ணீர் குவளையை அவளருகே நகர்த்த அதை பிடிமானக இறுகப் பற்றியபடி

"ஞாபகம் திரும்ப வந்துடுமா இல்ல ….?"

என்பதை கேட்பதற்குள் அவள் சுழலுக்குள் சிக்கிய நிலையில் இருந்தாள். வார்த்தைகள் வர மறுக்கத் தொண்டையிலிருந்து பிடிங்கித்தான் இதையே கேட்டிருந்தாள்.

"என்னதான் நியூரோ சயன்ஸ் வளந்திருந்தாலும், இன்று வரை மூளையுடைய செயற்பாட்டைப் பற்றி நாம முழுவதுமா கத்துக்கல… அது எந்த நேரம் எப்ப‍டி செயல்படும் என்கிறதை யாராலும் அனுமனிக்க முடியாது… அப்ப‍டியிருக்கையில் இது எப்‍போது சரியாகும் என்கிறதை என்னால் ‍எப்ப‍ெ சொல்ல மு‍டியும். அது காலத்தின் கையில் தான் இருக்கு , எப்ப வேனும்னாலும் சரியாகலாம் இல்ல இப்படியே கூட கடைசி வரை இருக்கலாம்"

என்று மருத்துவர் கூறியதை கேட்டவள் தனது துக்கத்தை கையில் இருந்த நீருடன் சேர்த்து வேகமாக விழுங்கினாள்,
அதே வேகத்தில் டக் என்று டம்பளரை வைத்து விட்டு நிமிர்ந்தாள். மேற்கொண்டு என்ன கேட்க என்பதை மறந்தவளாய் சற்று நேரம் இருந்தவள் பின் நிமிர்ந்து,

"டாக்டர் நீரு நிக்கை ரொம்பவும் தே‍டினாள்… அந்த நேரம் இவன் வந்தான்… அந்தக் கணத்திலிருந்து இவன்தான் நிக் என்று நினைக்கிறாள்… இதற்கு என்ன செய்வது? "

என்று கலக்கத்துடன் கேட்க, சற்று நேரம் அமைதியாக இருந்தார் டாக்டர், பின் அவளை நிமிர்ந்து பார்த்து

"நோ வொன்டர். அவங்க நினைவலைகளுக்குப் பொருத்தமான முகத்தைக் கண்டதும், நினைவில் இருந்த உருவம் இதுதான் என்று மூளை பதிவு ‍‍‍செஞ்சிருக்கு. அதை அவங்களா உணரும் வரைக்கும் அப்‍‍டி‍யே… விட்டுடுங்க. இல்லைன்னா எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்புண்டு…" என்று கூற நெஞ்சம் கனக்க எழுந்தவள்?

"அவளுக்கு பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தினா கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்ப வாய்ப்பு இருக்குல்ல "

அவள் முகத்தை பார்த்த மருத்துவர் அதிலிருந்த நம்பிக்கையை கெடுக்க விரும்பாதவறாய்

" ம் செய்யலாம் அது அவங்க விருப்பம் இருந்தா மட்டும் தான் நீங்க சொல்லனும் திணிக்க கூடாது , பார் பெட்டர் சிட்டு வேஷன் இப்ப அவங்க இருக்கற மனநிலைக்கு எந்த அதிர்ச்சிகரமான அல்லது குழப்புற விஷயமோ, சம்பவங்ளையோ அவங்களுக்கு நினைவுபடுத்தவோ இல்ல சொல்லவோ கூடாது அது அவங்களை மேலும் மனதைப் பாதிக்க வாய்ப்புண்டு. சில வேளைகளில் வயலன்டாகவும் நடந்துக்க பாப்பாங்க. அது அவங்களுக்கு மட்டுமில்லை, குடிந்தைக்கும் ஆபத்தாகும் வாய்ப்புகள் அதிகம் "

என்ற வார்த்தைகள் அம்புகளின் சரமாய் அவளை தைக்க என்ன செய்வதென்று அறியாதவளாய்

"நன்றி " என்ற ஒற்றை வார்த்தையுடன் வெளியேற அவளுடன் டாவின்சியும் வெளியே வந்தான். அவனுடைய உதட்‍டில் மெல்லிய புன்னகை,

பசித்துக் கிடந்த வேளையில் பழம் நழுவி அவன் கரங்களில் விழத் தயாராகி இருந்தது.
 

அத்தியாயம் 14


ஞாயிறவன் தன் பொன் கிரணங்களால் தங்க முலாம் பூசிக்கொண்டிருந்தான். கிளைகள், கிளிகள், துளிகள், தூசிகள், என அனைத்தும் அவன் வண்ணத்தில் தகதகத்து கொண்டிருந்தன.

அந்த அழகிய நேரத்துக்கு உரித்தான தேவதை துக்கம் கொண்டது போல் அந்த கருமை நிற உடையுடன் பொன்வண்ண கூந்தல் மின்ன அதீரை கலங்கி நின்றாள். தன்னை ஆள வரும் அந்தகார இருள் கண்டு, ஏதோ எண்ணங்களில் வீழ்ந்திருந்தவளை இருகரம் பின்னிருந்து அனைக்க, முதலில் அதை கவனிக்கவில்லை. அனிச்சை செயலாக

தன்னை வளைத்த அந்த கரங்களைப் பற்றிக் கொள்ள அவனோ காற்றில் பறந்து தரையிறங்கும் எருக்கம் செடியின் தூவி விதைகளை கசக்காது கையேந்துவது போல் அவளை ‍மென்மையாய்த் தன் ஆளுகையில் கொணர்ந்திருந்தான் அவன்.

ஏதோ உணர்வு தோன்ற நினைவுக்கு வந்தவள் டாவின்சியின் அனைப்பில் இருப்பதைக் கண்டு பதறி விலகியவள் ஆத்திரத்தில் அவனை அடிக்க கரம் நீட்ட அதை பற்றியவன்

"நோ..நோ.. ஹனி"

என லேசான சிரிப்புடன் சூயிங்கத்தை மென்றபடி தலையசைக்க,வெடுக்கென அவனிடம் இருந்து கரங்களை பறித்து கொண்டவள், அவனை முறைக்க
அவனோ அங்கிருந்த பெஞ்சில் சாவதானமாக அமர்ந்து தன் தலையை கோதியவாறு,

" சில் பேபி , டோன்ட் கெட் இன் சேன் , நம்ம டீல் ஞாபகம் இருக்குல்ல , நீ நடந்துக்கறத பார்த்தா உன் ப்ரண்டு உயிர் மேல உனக்கு பாசம் இல்ல போலயே "

என்ற‍போது அவன் அவளுக்கு விக்கிரமாதித்த ராஜாவின் தோள்களில் தொங்கும் வேதாளாமாக தான் தெரிந்தான்.

இனி காரியம் முடியும் வரை சுமந்து தான் ஆக வேண்டும். அவன் கூறுவதை கேட்டுத்தான் ஆக வேண்டும் ,என்பது புரிய, அவனை எப்படித் தன் கட்டுக்குள் கொண்டு வருவது? என்று புரியாமல் குழம்பினாள். அவ‍னோ அவள் சிந்தனைக்கு அவகாசமே அளிக்கவில்லை.

அவளது கை பிடித்து இழுத்து மடியில் இருத்தியவன் அவள் என்ன? ஏது? என்று சுதாரிக்கும் முன் இரு கரம் கொண்டு தன்னுடன் இறுக்கி இதழ் சேர்த்திருந்தான்.

அவனிடம் இருந்து திமிறி விலகியவள்

"விருப்பம் இல்லாம ஒரு பெண்ண முத்தமிடுவது வன்புணர்வுக்கும் நிகரானது… "

என்று ஆத்திரத்துடன் கூற உடனே முகம் கருக்க அவளை விடுத்தான்.


நெற்றி சுருக்கி ஏதோ யோசித்தவன், இப்போது கால் மீது கால் போட்டு இரு கரங்களையும் பெஞ்சின் இருபுறமும் விரித்து வைத்தவன் அவள் முகம் பார்த்து

" யா யு வர் கரட் , ஐ டோன்ட் லைக் திஸ் ஆல் சோ , ஹக் அன்ட் கிஸ் மீ "

கண்களை இடுக்கி அவனை ஏளனமாக பார்த்தவள் ,

"நோ சான்ஸ் "

என்றவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க ,

"கீழே நீரு இன்னும் சாப்பிடல , நான் தான் ஊட்டி விடனும் "

என்றதில் அதீரையின் கால்கள் தானாக நின்றன. இப்போது இகை்கையை விட்டு எழுந்து அவள் முன்பு வந்தவன்

"ஏஞ்சல பொறுத்தவரை நான் அவளோட நிக் அவகிட்டயே கிஸ் என்ன எல்லாத்தையும் … "

என்றபடி கண்சிமிட்ட அவன் எல்லாவற்றையும் என்றதன் பொருள் உணர்ந்து விதிர் விதிர்த்து போனாள்.

அதே நேரம் கீழிருந்து தூக்கம் கலைந்து எழுந்த நேரொருவரில்லாள்

"நிக்.. நிக்.. " என இவனை அழைத்துக் கொண்டிருந்தாள் .இவனை காணவில்லை எனில் அலைப்புறும் அவள் நிலையை மருத்துவமனையில் நேரில் கண்டவளாயிற்றே அச்சமடைந்தவளாய்.

"கோ டாவின்சி, கோ, ப்ளீஸ் கோ , ஐ பெக் யூ ... கோ "

என கெஞ்ச அவனோ அசைந்தான் இல்லை. இனி அவன் கூறியதை செய்தால் அன்றி அவன் இறங்கி வரமாட்டான். என்பதை உணர்ந்தவள்

வேறு வகையற்றவளாய் அவனை நெருங்கி முத்தம் வைக்கபோக சட்டென அவளை தள்ளி நிறுத்தியவன்

"இது என்ன பொம்மைக்கு கொடுக்குற மாதிரி தர ,வித் லவ் என்ன பார்த்து கண்ல மயக்கத்தோட கொடுப்பியே
அப்படி "

என்றவனை கொலை வெறி‍யோடு பார்த்தவள் வேறு வழி இன்றி கண்களை இறுக மூடி மனதில் டாவின்சியை ரசித்த வசீகர நிமிடங்களை நினைக்க தானாகவே முகம்கனிந்து இவள் இதழ் அவனிடம் சேர்ந்தது.

" வாவ் ஜுஸி ,ஸீ யூ அட் நைட்" என்றவாறு அவள் கன்னம் தட்டியவன்

"இதோ வரேன் ஏஞ்சல்" ,

என்று அதீரையிடம் இருந்து விலகி , நீருவிடம் சென்றிருந்தான்.

அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவள் .

அவன் கூறியதை கேட்டதும் அவளுக்கு அத்தனை ஆத்திரம் வந்ததது . நீருவின் நலத்தின் முன் எதையும் பேச முடியாத சூழ்நிலை கைதியாக அல்லவா இருக்கிறாள்.

அன்றைய நிகழ்வுகள் நினைவிற்கு வந்தது. டாவின்சி நீருவுடன் எல்லைக்குள் நிற்பது போல் தெரியவில்லை. ஏஞ்சல் ..ஏஞ்சல்... என்று அவளுடனேயே திரிந்ததில், அவனை கட்டி வைக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது அதீரைக்கு.

இடம் ‍கொடுத்தால் மடத்தையே பிடிப்பான் என்பதைக் கண்டு கொண்டவள் ஆயிற்றே, அதனால் நீருவின் நலன் கருதி அவனை தனியாக சந்தித்து பேச அவனைத் ‍தே‍டிக்‍கொண்டு வந்தாள். அவனோ அந்த பெரிய நீச்சல் குளத்தின் கரையில் எதையோ பருகியபடி அமர்ந்திருந்தான்.

தன்னை ‍நோக்கி அவள் வருவது தெரிய புன்னகையால் அவளை வரவேற்றான். அவன் முன் வந்து அமர்ந்தாள் அதீரையிடம் கையில் இருப்பதை காட்டியவன்

"வேண்டுமா?"

என்று ‍கேட்க அவளோ மறுத்துவிட்டுத் தான் வந்த விஷயத்தை கூற தொடங்கினாள்.

"டாவின்சி , நீருவோட பிரச்சனை உனக்கு தெரியும். அவ உயிர் எனக்கு முக்கியம் , நிக் மாதிரி நடிக்கனும் நடிக்க மட்டும் தான் நீருவை உன்னை அனுமதிச்சேன்… அதையும் மீறி அவளை நெருங்கினே… என்று ஆத்திரத்துடன் சீற? "

அவ‍னோ புன்னகையுடன் அவளைப் பார்த்தான்,

"அம்மா‍‍டி பயமா இருக்கே… " என்று பயந்தவன் ‍போல நடிக்க

"இதோ பார் உனக்கு தேவை பணம் அத வாங்கிக்கோ… எவ்வளவு ‍வேணும்னாலும் ‍சொல்லு… தந்திடுரேன்… ஆனா… நீருவுடன் ஒரு எல்லையில் இருந்துக்‍கோ... மீறி எந்த தவறான நோக்கத்தோடயும் நெருங்கின ஐ வில் கில் யூ அட் எனி காஸ்ட் "

என எச்சரிக்க அவ‍னோ மெல்லியதாக நகைத்தான்,

" எனக்கு அந்த வாழ்கை சலிச்சி போச்சு அதீ , வேண்டிய அளவுக்கு மேலயே சுகம் எல்லாத்தையும் அனுபவிச்சாச்சி, சோ இந்த வேலைய நான் பணத்துக்காக ஒத்துக்கல, "

என நிறுத்தியவனை , 'இவளோ வேறு எதற்கு ? ' என்பது போல் உறுத்து விழிக்க

" எனக்கு ஏஞ்சல் மாதிரி பொண்ணு கூட வாழனும் லைப் புல்லா , அது முடியாது சோ குறைந்தது ஒரு நாளாவது "

என்று கண்மூடி ரசித்து கூறியவனின் மண்டையில் கல்லை தூக்கி போடும் ஆத்திரம் வந்தது.


"நீ என்ன இன்டென்ஷன்ல வந்துருக்கியோ எனக்கு தெரியாது , நீ நினைக்கற மாதிரி பொண்ணு அவ இல்லை, மேலும் அவ இன்னோருத்தனோட மனைவி , அவள நீ மனசுல நினைக்கறது கூட பாவம்" .

என பதறி கூற
ஹ ஹ ஹா என குலுங்கி சிரித்தவன்

"ஹேய் வாட் இஸ் திஸ் , அவன் பொண்டாட்டி ,இவன் பொண்டாட்டின்னு , அப்படி பாத்தா என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணதல நிறைய பேர் அடுத்தவன் மனைவி தான் ."
என எள்ள அதில் கோபமுற்றவள்

"ஸ்டாப் டாவின்சி , உன்னோட இந்த புகழை தெரிஞ்சிக்க நான் தாயரா இல்லை , அவள பொறுத்த வரை ஒருவனுக்கு ஒருத்தி தான்… அது புரியாமல் ‍பேசாதே " எனச் சீற

" ஓகே அப்ப நீயே உன் ப்ரண்ட பார்த்துக்க , எனக்கு ஒரு அப்ஜெக்ஷனும் இல்ல , அவளோட பண்பாடு பற்றி தெரிஞ்ச நீதான் என்ன அவ நிக் என்று ஒத்துக்கிட்ட‍போது ‍வேடிக்கை பார்த்துட்டிருந்‍தே… "


"அது அவளோட உயிர காப்பாத்த "

என மேலும் ஏதோ கூற வரும் முன் அவளை தடுத்தவன்

" ஸீ எனக்கு ஏஞ்சல் வேணும் அவ்வளவுதான். நான் அவள தேடினப்ப கிடைக்கல பட் என்னோட டைம் அவளா எங்கிட்ட வந்துருக்கா நான் அவளோட வாழறதுல என்ன தப்பு? "

என்றவனிடம்

" டோன்ட் ஸ்பீக் ரப்பிஷ் என்றவள், அவ உன்ன டாவின்சியா நினைக்கல தன்னோட கணவனா நினைக்கறா மேலும் அவ தன் நினைவுலயே இல்லை, அப்படி ஒரு பொண்ணுகிட்ட போய் , அதுலயும் கர்ப்பிணி பெண் வேற சீ… அன்னிக்கு அவ விழுந்தப்ப ஒடி வந்தியே
அதுல உன்கிட்டயும் ஒரு மனுஷத்தன்மை இருக்கும் நினைச்சி வந்தேன் பட் யு ஆர் …"

என அவள் முடிக்கும் முன் கை உயர்த்தி தடுத்தவனின் காதுகளும் முகமும் கோபத்தில்சிவந்தன.

அன்று அவளை இரத்தம் பெருக கையில் ஏந்திய போதும், அதன் பிறகு அவள் தன் கணவனை நினைத்து வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் அவள் போராடும் போதும் தன்னுடைய ஆவி துடிக்க நின்ற நிலை அவனுக்கு மட்டும்தான் தெரிம். அந்த ‍நேரம் எப்படியாவது அவளை பார்த்து விட வேண்டும் என துடித்த துடிப்பு… அது வெறும் காமம் சார்ந்ததா என்ன? அவள் மீதான உடல் இச்சையையும் தாண்டிய ஏதோ ஒன்று அவளுடன் இருக்க வேண்டும் என்ற வெறியைக் கிழப்பியதே… இது தெரியாமல் என்ன ‍பேச்சுப் ‍பேசுகிறாள்,

இந்த பொருந்தா காதலும் மனிதமும் கலந்த அவனது அன்பினை இவளது வார்த்தைகள் கூர்பார்த்தது. அதையும் மீறி அந்தப் பெண்மை இவனை கு‍ழையச் செய்தது. தன்னை நிதானப்படுத்தியவன் பழைய புன்னகையை மீட்டெடுத்தவனாக,

"சரி… என்ன செய்யனும் சொல்லு" என்றதும், அவன் வழிக்கு வந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தவளாக

" நிக்கா இருக்கற வரைக்கும் சிக்ரெட் , ஆல்ஹால் எடுக்க கூடாது . வேறு பெண்கள் தொடர்பு இருக்கக் கூடாது. அன்ட் டோன்ட் அப்யூஸ் நீரு "

என தனது விதிகளை கூறியவள் கடைசி வார்த்தைகளை நன்றாக அழுத்தி கூறினாள்.

அவள் கண்களை சிறிது நேரம் உற்று பார்த்தான். அதீரையின் முகமோ எதையும் தெரிவிக்க மாட்டேன் எனும் அழுத்தத்தில் இருக்க , ஒரு சிறு தோள் குலுக்கலுடன், தன் மனதின் எண்ணங்களுக்கும் , இறுக தாழ் போட்டவன்

" ஓகே , பட் நான் அங்க இருக்கர வரை நீ எனக்கு கம்பேனியனா, இருக்கனும் டீலா"
என்றதில் அதிர்ந்துவிட்டாள். இவன் என்ன கூறுகிறான். தன்னை சேர்ந்து வாழ கூப்பிடுகிறானா என்பதை விளங்கிக் கொள்ள மறுபடியும்

"வாட் , வாட் டிட் யூ சே "

என , இப்போது எழுந்து அவள் அருகில் வந்தவன் அவளை தன்னுடன் அணைத்தபடி நீருக்குள் பாய்ந்திருந்தான். திரும்ப அவளுடன் மேலே வந்தவன் , ஒரு கரத்தால் அவளை அனைத்து பிடித்தபடி மறு கரத்தால் முகத்தில் இருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கியவன் நெற்றியில் முத்தமிட்டவன்.

" அதீ பேபி இப்ப நீ சொல்லற இடத்தில் இல்ல கேட்கற இடத்தில் இருக்க , அதுவும் நான் சொல்லறத கேட்கற இடத்தில் , அப்புறம் இது நமக்கு புதுசு இல்ல"

என அவளை விடுத்து மேலேறி போய்விட்டான். ஆனால் அவள் முழ்கி போனாள் . வெளியேறும் வகையற்று தன் வினைகளின் சுழலுக்குள் .

ஆம் அவள் பல பேருடன் தனது இரவுகளை கழித்திருக்கிறாள் தான். இதோ இவனுடன் கூட பல நேரங்களில் கூடியிருக்கிறாள். ஆனால் பணம் கொடுத்து வெளியேறும் போது அந்த உறவையும் சேர்த்து முறித்து விடுவாள்.

அவள் தனது தாய் தந்தையரின் முறையற்ற உறவுகளையும் நடத்தைகளையும் பார்த்து வளர்ந்ததில் , காதல் கல்யானம் போன்ற உறவுகளின் மீதான நம்பிக்கை இற்று போன எண்ணம் நிக் , நீருவை பார்த்து மாறியிருந்தது.

அதே நேரம் டாவின்சியும் அவள் நிலையில்தான் இருந்தான். அத்தனை சுகங்களையும் அனுபவித்து வந்தாலும் சலித்து போயிருந்த தன் வாழ்வில் எதையோ தவறவிடுவதை உணர்ந்திருந்தான்.

தனது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள அவன் முறைப்பட்ட வாழ்வை வாழ்ந்து பார்க்க , ஒரு துணையை தேடிய டாவின்சியின் மனம் அதீரையை கண்டதும் ஏனோ அவள் பால் சாய்ந்திருந்தது , ஒரு முறை அவளிடம் தனது விருப்பத்தை கூற

திருமணம் காதல் குடும்ப வாழ்கை போன்ற விஷயங்களில் நம்பிக்கையை தொலைத்திருந்த அதீரையோ , அவனை மறுத்திருந்தாள். நண்பனாக கூட ஏற்க அவள் முன்வரவில்லை.

டாவின்சியோ தனது கிகோலோஸ் பணியை முற்றிலும் தவிர்த்திருந்தாலும் இவள் அழைப்புக்கு மட்டும் இணங்கியே சென்றான். அவளுடன் கழிக்கும் இரவுகள் அவனது உறவானது.

இது போன்ற குழம்பிய சூழலில் அவன் கண்களில் விழுந்தாள் நேரொருவரில்லாள் அவளை கண்டவுடன் மீண்டும் தடுமாறியது அவன் மனம். அவள் வேண்டும் என்று ஏங்க தொடங்கியது. அவளை தேடி அலைந்தவன் அதீரையுடன் பார்த்ததும் இவளும் அவளைப் போலத்தான் இருப்பாள் என நினைத்தவன் எண்ணம் அவள் நிக்கினால் உயிருக்கு போராடியதை கண்டும் அதே உயிர் அவனால் திரும்பியதை கண்டவன், அவள் அன்பின் நிலை கண்டு வியந்து போனான்.

அதீரைக்கோ அன்று டாவின்சி அவனது துடிப்பும் உதவியும் நினைவுக்கு வந்து டாவின்சி மீது சிறு மதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதே நேரம் தனக்கு கிடைக்க வேண்டிய காதலும் அன்பும் அல்லவா ... எனும் எண்ணம் ஒரு புறம் ஆட்டுவிக்க
பணத்தை காட்டி நீ யாரோ? என அவனை தள்ளி நிறுத்த முயன்றாள். முடியவில்லை என்றதும் கட்டளை அவதூறு அஸ்திரத்தை பிரயோகித்திருந்தாள். அதுவே இப்போது திரும்ப பெற தெரியாத பிரம்மாஸ்திரமாய் மாறி இப்போது அவளையே துரத்த, திண்டாடி போனாள் .

அவனோ தினம் ஒரு பெண் என சுழல்பவன் இவளோ உணவின் தேவை எப்படி உடலுக்கோ அது போலத்தான் உணர்வுகளின் தேவைக்கு உடல் எனும் கொள்கை உடையவள்,

இரண்டும் அளவுக்கு மிஞ்சினால் விஷம், தவறாக போனால் நோய் , சரியான இடத்தில் சரியான பதத்தில் சரியான நேரத்தில் சரியான நபருக்கு பரிமாறப்படும் உணவு உணர்வு இரண்டும் பேரின்ப மருந்து . என்பதை அவள் இன்னும் உணரவில்லையோ? இல்லை உணர்ந்ததை அவள் விரும்பவில்லையோ?

மயங்கிய ஒளியில் தெளிவற்று தெரியும் ஒரு பொருளின் தோற்றம் வேறு தோன்றும் விதம் வேறு , மனதும் கூட மயங்கிய உணர்வுகளின் பிடியில் ஒருவரை பற்றி தோற்றுவித்துக் கொள்ளும் பிம்பம் வேறு அதையே இல்லை என சூழ்நிலை சூரியன் சுள்ளென்று உணர்த்த , அது ஒதுங்குவது நேர்மறை நிழல் எனில் அதன் தோற்ற பிழை திருத்தி சரியான வடிவங்களை அளவீடு செய்யும் , எதிர்மறை எனில் தானே கழித்து விட்டு பிறர் மட்டும் களிப்பதாய் எண்ணி மாற்று பிழைகளில் இறங்கி தன்னையும், தனதையும் அழிக்கும்
 

அத்தியாயம் 15

சூடானில் நிக் மிக மகிழ்வுடன் இருந்தான். ஊருக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தான் . தனது உடைமைகளை பெட்டியில் அடுக்குவதற்காக கட்டில் மேல் அள்ளி போட்டவன் , பெட்டியினுள் பாதி துணிகளை அடுக்கி இருக்க , அப்போது அங்கிருத்த நீருவின் புகைப்படம் மீது கண்கள் பதிய எட்டி அதை எடுத்தவன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த புகைப்படத்தில் தாமரை மலர்களின் பின்னனியில் அவள் நின்றிருந்தாள். மஞ்சள் நிற பாவாடை அரக்கு நிற தாவணி அணிந்தவள் கையில் தாமரை பூவை ஏந்தி அங்கிருந்த மரத்தில் சாய்ந்து நின்ற விதம், இரவிவர்மாவின் மாலைப் பொழுதின் தனிமையில் இருக்கும் பெண் ஓவியம் போல இருந்தது.

அவன் விரல் மெல்ல படத்திலிருந்தவளை விரல்களால் நீவியவன் மனம் , .அந்தப் படத்தை எடுத்த நாளை இப்‍போது நினைத்துப் பார்த்தது.

காதலித்த காலத்தில் அவனை சந்திக்க வந்த‍போது இவனைக் கானாமல் குளக்கரையில் அமர்ந்து தன்னை மறந்து ஏதோ சிந்தனையில், தொலைதூரத்தில் நகரும் மேகக் கூட்டங்களையும் அதன் ஊடாக திரியும் புள்ளினங்களையும் பார்த்தபடி நின்றிருந்தாள். அப்போதுதான் அவளைக் காண வந்தவன், அவளிருந்த ‍கோலத்தைக் கண்டு தன் கைப்‍பேசியில் புகைப்படமாய் சேமித்தான்.

தான் வந்தது கூடத் தெரியாமல் தன்னை மறந்திருந்தவளைப் பின்னால் சென்று இறுக அணைத்துக் கோள்ள அவள் பதறித் திரும்பியது இப்‍போதும் நினைவுக்கு வந்தது,

இப்‍போது அதை நினைக்க நெஞ்சம் நெகிழ்ந்து போனது ,

புகைப்படத்தை மார்போடு அனைத்தபடி படுத்தவன் மனம் இன்னும் இன்னும் புதைகுழியாய் அவள் நினைவுகளில் அவனை உள்ளே இழுக்க அவனும் இழுபட்டு உடன் சென்றான்.

எத்தனை நேரம் முழ்கிக் கிடந்தானோ தெரியாது, " நிக் , நிக் "என்ற டேனியின் குரல் அவனை கலைத்தது. அவனை கண் திறந்து பார்த்தவன் எழுந்து அமர்ந்தான். கூடவே அவன் செய்ய வேண்டிய வேலைகளும் சுறுசுறுப்பாக அணிவகுத்து நினைவில் எழுந்தது.

உள்ளே வந்த டேனியின் பார்வை ஒரு நொடி அவனது வெற்றுமார்பில் பதிந்து பிறகு முகத்திற்கு உயர்ந்தது.

நிக்கின் கைகள் இயல்பாக மார்பின் மேல் பகுதியில் குண்டு பாய்ந்திருந்த தழும்பினை தடவியது.

அறுவை சிகிச்சை முடிந்து , ஒரு வாரம் கழித்து வீடு திரும்பியவன், டேனி எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் நேரே குழந்தைகளை காணத்தான் சென்றான். வேறு வழியற்றவனாய் டேனியும் அவனை தொடர ,

"நிக் சொன்னா கேளு, இன்னும் ஒரு வாரம் கழிச்சி வா , காயம் நல்லா ஆறட்டும்"

என்ற அவனின் மறுகலுக்கு பதிலே கூறாமல் தனது வாகனத்தை செலுத்தியவன் நேரே சென்றது . அந்த குழந்தைகள் தங்கியிருந்த இடத்திற்கு தான். இவனை கண்டதும் மகிழ்வுடன் ஓடிவந்த குழந்தைகளுடன் இருந்தான்.

அவனை தர தர வென்று இழுத்து சென்றவன் , " நிக் என்ன இதெல்லாம் நீயே இப்பதான் பொழைச்சி வந்துருக்க இங்க இன்னும் காயம் முழுசா ஆறல அதனால் நீ கிளம்பு ரூம்க்கு இல்ல உன் காயம் இன்னும் மோசமாகிடும் "
என்றான். அவன் உயிர் போராட்டத்தை கண் முன் பார்த்ததை நினைவில் கொண்டு , அவன் மனதினை புரிந்து கொண்டவனாய் நிக் லேசாக சிரித்தவன், அவன் முதுகில் தட்டியவன்

" இதை எல்லாம் எதிர்பார்த்து தான இப்ப என்ன புதுசா பயம் , அந்த குழந்தைங்க அவங்க அப்பா அம்மா முகத்தில் தெரியும் சந்தோஷம் நம்பிக்கைய பாருடா , அதுக்காகவே எதையும் செய்யலாம் "
என்றவனை பார்த்தவன்

"ஆனா உன் உயிர் அத விட முக்கியம்" என்றவனிடம் எதுவும் பேச இயலவில்லை எனவே டேனியுனுடன் இணைந்து வாகனத்தை நோக்கி நடந்தான்.

காயம் பட்டிருக்கும் அவன் பணிக் களத்திற்கு பணி செய்ய அனுமதி இல்லை என்பதால், இப்போது பார்வையாளராக குழந்தைகளை காண வந்திருந்தான்.

, இதுவரைக்கும் நீ நீரு கூட பேசல உன்னிலைமைய பத்தி சொல்லவும் இல்லை " என்றவனிடம்

"அவ இதையெல்லாம் கேட்டா தாங்க மாட்டா ,அதுலயும் இப்ப கர்ப்பிணி வேற அதிர்ச்சியான செய்தியை கேட்டவேண்டாம் இன்னும் கொஞ்ச நாள்ல காயம் சரியான பிறகு நேரில் போய் சொல்லிக்கலாம்." என்றவன் பல்லை கடித்தபடி நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தான்.இதோ காயம் முழுவதும் குணமானதும் , தன்னவளை சந்திக்கவும் தனது குழந்தைகளை கை ஏந்தவும் தயாராகி விட்டான்.


" டேனி நீ அந்த பக்கம் இருக்கிற பொருட்களை எடுத்து வை சீக்கிரம் "
என ஏவ, அவனும் நேரமாகி விட்டதை உணர்ந்தவனாய். மேற் கொண்டு எதுவும் பேசாமல் பொருட்களை ஒதுக்க உதவினான்.அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் வாகனத்தில் இருந்தனர்.

இங்கே…..

காலையில் தூக்கம் கலைந்து எழுந்தவள். மனதில் ஏதோ நினைவுகள் சலனம், கண்களில் நீர் வழிய ஆரம்பித்து விட்டது

டாவின்சிக்கோ தன்னுடைய தேவதை முகம் கலங்கி கண்ணீருடன் இருந்த கோலத்தை கண்டு மனம் துடித்து போனது.

"ஏஞ்சல்... ,ஏஞ்சல்…" என்றபடி அவள் முன் பதறி நின்றான். அவனை பார்த்ததும் சலனத்தின் காரணம் அறியாமல் மீண்டும் உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தாள்.

அவனோ எப்போதும் போல தன்னை தேடி தான் அழுகிறாள். என எண்ணியவன்

"இல்லை ,இல்ல வேண்டாம் ,என்னோட க்யூட் ஏஞ்சல் அழக்கூடாது, நான் மாடில நேத்திக்கு ரெண்டு பேர்ட் பார்த்தமே அது இன்னிக்கும் வந்து தா …." என டாவின்சி ஆரம்பிக்கவுமே

அவள் கண்களும் முகமும் மலர புறங்கை கொண்டு மூக்கை துடைத்தவள்

" வா நாம போய் அத பார்க்கலாம் . "

என எழுந்தவளை பிடித்து உட்கார வைத்தவன் அந்த மேஜையில் கிடந்த டிஸ்யூவை எடுத்து அவள் முகம் துடைத்து விட போக அதை அவன் கைகளில் இருந்து வாங்கிய வள் தானே துடைத் கொண்டாள்.

"ம் வா இப்ப போகலாம் " என்றாள். எதிரில் இருந்த உணவு மேசையின் முன் அவளை அமர வைத்தவன்

"கண்டிப்பா போலாமே , ஆனா ... அதுக்கு முன்னாடி ஏஞ்சல் சாப்பிடனுமே , "

என்றான்.

"ஒகே ஒகே சீக்கிரம் கொண்டா " என்றவள் அதற்கு தயாராக மடி மீது துணியை விரித்து தட்டை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளுக்கான உணவை கலத்தில் இட்டு கொணர்ந்தவன் அதை நீருவின் முன் வைக்க அவளோ சிறு குஞ்சாய் வாய் திறந்து "ஆ... தா " என ஊட்டி விடும்படி கூறினாள்.

அவன் உணவை வாயருகே கொண்டு வர.

" இல்ல வேண்டாம் நானே " என , அவனிடம் இருந்து கரண்டியை வாங்கிக்
தானே சாப்பிட ஆரம்பித்ததை கண்ட டாவின்சிக்கு மனம் வலித்தது . ஏதோ ஒரு நெருடியது

அதீரையோ கடந்த நிகழ்வுகளுக்கும் , கடந்த கால நிகழ்வுகளுக்கும் இடையே தவித்து கொண்டிருந்தவள் தூக்கத்தை தொலைத்திருந்தாள். நேரம் கழித்து எழுந்ததை உணர்ந்தவள் கீழே இறங்கினாள் .

அவளைக் கண்ட நீரு எழுந்து சென்று அவள் கரங்களை பிடித்து இழுத்து வந்து தன்னுடன் அமர்த்திக் கொண்டவள் ,

"அதீ நீயும் சாப்பிடு பேர்ட்ஸ் பாக்க போலாம் .. "

அவள் தலையை மெல்ல நீவியவள்

" இன்னிக்கு மாடி ல வேண்டாம் பக்கத்தில பார்க்ல நிறைய பேர்ட்ஸ் இருக்கு அங்க போலாம்"

உடனே சந்தோஷித்தவள்

" நீ, நா, நிக் மூனு பேரும் போலாம்"

, என அவனை கூட்டு சேர்க்க , ஏற்கனவே அவன் மீது கோபத்தில் இருந்தவள்

"அவன் இல்லாம நீ எங்கயும் வரமாட்டியா
எப்ப பாரு பாரு நிக் நிக் , இவன் ஒன்னும் உன் நிக் இல்ல, . "

என படபடத்து விட்டாள். பேசிய பிறகே தன் நிலைக்கு வந்தவள் தனது தவறை உணர்ந்தவளாக நீருவை பார்க்க, அவளோ அஞ்சி நடுங்கி டாவின்சியின் முதுகின் பின் மறைந்து கொண்டிருந்தாள்.

தன் ஏஞ்சலை கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் இவளை அனல் வீசும் பார்வை பார்த்து விட்டு
" அவ உளறிட்டு இருக்கா ஏஞ்சல் நீ வா "

அவளை வேறு புறம் அழைத்து சென்று விட , கீழே இறங்கி வரும் போது நீருவை 'நானே எல்லா வகையிலும் பார்த்துக் கொண்டு அவனை விலக்கி வைக்க வேண்டும் என நினைத்தால் , இங்கு வந்து என்ன செய்து வைத்திருக்கிறேன்'.
அப்போதுதான் பேசிய வார்த்தைகள் நினைக்ககு வர தன்னையே நிந்தித்து கொண்டவள், அங்கிருந்து எழுந்து அவர்களை தேடிச் சென்றாள். அங்கு நேர்ரொருவரில்லாளோ அவனை உட்கார வைத்து ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.

" இவனுக்கு இது ஒன்னு தான் கேடு "

என்றவளுக்கு இக் காட்சியை கண்டு தான் எரிச்சல் கூடியது , நீருவிடம் இருந்து அதை பறித்து தூர வீசும் ஆத்திரம் மிகஅவளை நெருங்கினாள்.

நீரு உணவருந்திய பிறகு அவனுக்கு உணவு எடுத்து வந்து உண்ணும் படி கூறினாள் . அவளை அருகில் அமர வைத்து விட்டு அவன் தானே தனது உணவை உண்டு கொண்டிருந்தான். இப்போது தான் வலுக்கட்டாயமாக தானே ஊட்டுவேன் என நீரு பறித்து இருந்தாள்.

அவள் கேட்டு அவன் மறுப்பதா ? மிக மகிழ்வுடனே தான் வாங்கிக் கொண்டிருந்தான். உணவுக் கலத்தை பறிக்க விரைந்த அதீரையினை கண்ட
நேரொருவரில்லாள் கரமோ அதீரையைக் கண்டதும் அவளுக்கும் ஒரு கவளம் எடுத்து நீட்டியது …..., பிறகு எதையோ நினைத்தவளாய் கரங்கள் தரமாக கீழே இறங்க அந்த நேரம் அதீரை வாய் திறந்தாள். மகிழ்வுடனே அவள் தந்த கவளம் இவளுக்குள் அமிர்தமாய் இறங்கியது.

இவர்களை பார்த்தபடி இருந்த டாவின்சிக்கு அதீரை கூறியது கேட்டிருந்ததது. எழுப்போனவளை கரம் பிடித்து அமரச் செய்தான். இவன் ஏதோ வில்லங்கம் பண்ண போறான் என அறிந்து கொண்டவள் திமிறிஎழும் முன் இன்னும் நன்றாக தன் பிடியை இறுக்கியவன் , நீருவை நோக்கி திரும்பி

" ஏஞ்சல் ட்ரஸ் பூரா அழுக்கா இருக்கு நீ போய் வேற ட்ரெஸ் மாத்திக்கறியா , அப்புறம் நாம மூனு பேரும் பேர்ட்ஸ் பார்க்க போகலாம்"

எனவும் அவள் சந்தோஷமாக உள்ளே சென்று விட , இப்போது இவளை முறைத்தவன்

" நான் நல்லவன் கிடையாது பட் மனநிலை சரியில்லாத பொண்ணை அதுவும் என் ஏஞ்சலை நான் ஹெர்ட் பண்ண மாட்டேன் , எனக்கு அவ கூட இருக்கனும் அவ்வளவு தான் .

அதுக்காக அக்கா , தங்கை , காதலி இந்த மாறி எந்த பெயருக்குள்ளும் அந்த உறவு வராது , ஷி இஸ் மை ஏஞ்சல் அவ்வளவுதான்."

என்று தன் மனதின் தேவதை அவள் வகைப்படுத்தபட்ட உறவுநிலைக்குள் வர மாட்டாள் அறுதியிட்டு கூறிவிட்டான்.

" நீ தான் அவளோட நிக்காக என்னை நினைக்கற.., பட் ஏஞ்சல் இந்த நிலைமைல கூட அப்படி நடந்துக்கறது இல்ல ,அவ கணவன் நான் இல்லைங்கறது அவளோட ஒவ்வோரு அணுவுக்கும் தெரியுது.. , அவளோட ஆழ் மனசு இன்னும் தன்னோட நிக் உயிரோட இருக்கான் திரும்பி வந்துருவான்னு நம்புது, என்னை தள்ளி வைக்குது , அவளை பொருத்தவரைக்கும் நான் நடமாடும் புகைப்படம் அவ்வளவுதான்."

என்று இத்தனை நேரம் ஆத்திரத்தில் பேசியவன் முகம் இப்போது தீடிரென வசீகர புன்னகையை உதிர்த்தது . அவள் அருகில் மேலும் நெருங்கியவன்

" நான் அவ கூட இருக்கனும்னு நினைச்சா உன்னால அத தடுக்க முடியாது அதி பேபி . பட் எனக்கு ஏஞ்சல் வேண்டாம் நீ தான் வேணும் ஏன்னா?"

என நிறுத்தவும் 'இவன் காதலைத் தான் கூற போகிறானோ ?' என அதீரையின் கண்கள் ஆர்வமுடன் அவன் முகம் பார்க்க அவனோ...

" நம்ம டீலிங் அப்படித்தானே"

என்றான். மனதில் இருந்த அவளுக்கான காதலை கூற வில்லை. அவர்களுக்குள் அது மறைந்து கிடந்ததை இருவரும் அறியவில்லையா.?
இல்லை உரைக்க தைரியம் இல்லையோ? அது அவனுக்குத் தான் தெரியும்

டாவின்சிக்கு தனது கனவு வாழ்கையை சில காலமாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற வேகம்

பிச்சைகாரன் ஒருவன் பசித்திருக்க அவன் முன் விருப்பட்ட உணவு இருக்க அவன் இப்படித்தான் உண்ண வேண்டும் என்ற வரைமுறைகளை பார்க்க மாட்டான் . பசி, உண்ணும் அவசரம் , எப்போது பறிபோகுமோ ? என பயம் அவனுக்கு அப்படித்தான் டாவின்சியின் மனநிலை இருந்தது.

அதீரையிடம் கூடி வாழும் முறைக்கு காதலுடன் தான் கேட்டிருந்தான். அவள் மறுத்திருக்க விலகியிருந்தவன் கண்ணில் நேரொருவரில்லாள் விழுந்தாள். அவன் ஒன்றும் காவிய இராமன் இல்லையே எனவே அவன் மனம் அவளை கண்டதும் கூடிட தேடி தவித்தது.

அப்படி இருக்க அவளே Aஅவனை கணவனாக நினைத்தது விதியின் செயல் அன்றி வேறு என்ன ? மேலும் அவள் மீதான அவன் எண்ணம் அவளது காதலை கண்டதும் மாறியிருந்தது.

அதை தடுத்த அதீரையை கண்டதும் அவனது உண்மை மனம் விழித்து கொள்ள அவளுடன் மட்டுமே உறவாக வாழ நினைத்தவன்... , அவள் நிலையை நினைக்கவில்லை? என்பதை விட மறுத்துவிட கூடும்? என்ற உறுதியினாலேயே அவளை நிபந்தனை கண்ணிக்குள் சிக்க வைத்திருந்தான்.


இத்தனை நேரம் தன் தோழியை சந்தேக பட்டு விட்டோமோ…? என்ற குற்றவுணர்ச்சியும் இவன் ஏதாவது செய்து விடுவானோ …?என்று பயமும், எரிச்சலும் பதட்டமுமாகவே இத்தனை நாட்கள் இருந்தவளுக்கு இந்த விளக்கம்
நிம்மதியை தந்திருந்தது எனில் கடைசி வார்த்தை அவளை சிலையாக சமைய செய்திருந்தது.

ஏனெனில் அன்றைய இவளது சுளீர் சுட்டி காட்டல்களின் பின் இதுவரை அவன் பார்வையோ அல்லது செயல்பாடுகளோ துளியும் நீருவின் மேல் தவறாக இல்லை , இவள் கூறியது அவன் வேறு பெண்களை தேடி போகவில்லை ஆனால் , இவளை தேடி வந்தான் .தன் உணர்வுகளின் வடிகாலாக அவளை மாற்றி இருந்தான். சிலிர்ப்புகளுக்கும் சிதறல்களுக்கும் இடையே அவளை நிறுத்தி வேடிக்கை காட்டி கொண்டிருந்தான்.

இது எப்படி நியாயம்? நீருவை காதலிக்கிறேன் என்கிறான். என்னை மோகிக்கிறான். ஒரு நாள் இரவுக்காகவது அவள் வேண்டும் என்றவன் இப்போது எல்லா இரவும் என்னுடன் கழிக்கிறான். எந்த முறையின் கீழும் வராது அவன் அன்பு எனில் எனக்கும் அவனக்கும் இடையேயான இது ..என்ன உறவு முறை.?


என்றவளை மேலும் யோசிக்க விடவில்லை,

" நிக் இத போட்டுவிடு… " என ,

டாவின்சியின் முன் வந்து நின்ற நேரொருவரில்லாளின் குரலில் நிமிர்ந்தவள் , தான் கண்ட காட்சியில் அதீரை பதைபதைத்து போனாள்,

டாவின்சியின் முன் கீழ் முதுகு வரை தெரியும் படியான அந்த உடையில் முன்புறம் சற்று அதிக இறக்கமாகவே இருந்தது . தன் முன் வந்து நின்ற அவளின் உடையை சரி செய்து திருப்பி நிறுத்தியவன் பின்புற ஜிப்பை இழுத்து போட்டுவிட்டவன் கண்களில் சிறிதும் காமம் இல்லை .அதில் அதீரையின் மனம் இலகுவாகிவிட அதை காட்டிக் கொள்ள விரும்பாதவளாய், திரும்பி உள்ளே போக போனவள்.

"அதீ நீயும் சீக்கிரம் வா " என்ற நீருவின் குரலில் அவள் கண்ணத்தில் தட்டியவள் ,

"இரண்டு நிமிஷத்தில் " என உள்ளே சென்றாள்.

தனது ஜீன்ஸுக்கான டீ சர்ட்டை தேடிக் கொண்டிருந்தவள்.தடாலடியாக உள்ளே நுழைந்தவனின் அரவத்தில் திரும்ப

"ஸாரி "

என உள்ளே நுழைந்தற்கு மன்னிப்பை வேண்டியவன்

" இத போட்டுக்க "

என்றபடி அவள் மறுத்து கூறும் முன் ஒரு டீ சர்ட்டை கைகளில் வைத்தவன் வெளியேற எண்ணி திரும்பி கதவினை நோக்கி சில அடிகள் வைத்திருந்தான்.

அவனுக்கு முன் அவள் தன் கைகளில் இருந்த துணியை ஆத்திரத்தில் அவன் மீது தூக்கி வீச அது அவனைத் தாண்டி கதவின் மீது பட்டு கீழ விழுந்தது.

" என்ன நினைச்சிட்டு இருக்க ?
நீ யாரு என் ட்ரெஸ் விஷயத்தில் தலையிட ? "

என கத்தி கொண்டிருக்க அவனோ கீழே கிடந்த அதை எடுத்தவன்
இவள் அருகே வந்து ,

" நாம இப்ப என்ன ரிலேஷன்ஷிப்ல இருக்கோம்னு உனக்கு இன்னும் புரியலையா அதி பேபி, உங்க ஊர்ல இத முன்னாடி இத களவு வாழ்கைன்னு சொல்லுவாங்க எங்க ஊர்ல லிவிங் டூ கெதர் னு சொல்லுவாங்க"

என்று சிலாகித்து கூறினான் . அவளுக்கோ சிறு வயதில் இருந்து திருமண வாழ்கையை கண்டு வரும் கசப்பான நினைவுகள் மேலே வர அவள்
முகம் இறுகி போனது.


"ஐ டோன்ட் லைக் இட், "

என்று முகத்தில் எள் பொரிய கூறியவளை நெருங்கி புன்னகைத்தவன்

"இது உனக்கு பிடிச்ச கலர் அன்ட் டிசைன் தான அதி பேபி "

என்றவனுக்கு பதில் கூற விரும்பாதவளாய் திரும்பி, அடுக்கி வைத்திருந்த துணிகளுக்குள் கைளோடு தலையையும் நுழைத்து துழாவத் தொடங்கினாள்.

ஆம் அந்த இள வானநீலம் அவளுக்கு விருப்பமானது தான், ஆனால் இவன் வாங்கி கொடுத்ததாலேயே வேண்டாம் என்று தூக்கி வீசியிருந்தாள்.

அவளும் தான் என்ன செய்வாள் ? அவளும் கண்ட நாள் முதல் தடுமாறுகிறாளே , உள்ளுக்குள் எங்கே இவனும் பொய்த்து விடுவானோ எனும் பயம் ?அதுவல்லவோ அவளை ஆட்டிவிக்கிறது விளைவு தனது கோப முக மூடியின் மறைந்து கொள்கிறாள். அவனது நேச அனை இல்லை எனில் இவளை போன்ற ஆளுமை கொண்ட பெண்மை காட்டாறை கட்டி வைக்க முடியுமா? அவன் வைத்த கண்ணியில் கன்னியவள் விரும்பித் தானே சிக்கியிருக்கிறாள்.

இப்போது அதீரை பின் மிக நெருங்கி நின்றவன் அவள் காதில்

" நான் போட்டுவிட வா "

என்று மெல்லியதாக மூச்சுக் காற்று காதுகளில் படவினவியதில் , அவளுக்கு மயிர் கூச்செறிய சிலர்த்து கண்மூடி நின்ற சில வினாடிகள் அவனுக்கு போதுமானதாய் இருந்தது.
அவளை தன் வசம் கொண்டு வந்தவன் , அந்த டீ சர்ட்டை அவளுக்கு மாட்டியிருந்தான்.

அதில் அவன் கைககள் அங்கே இங்கே படஅதில் தெளிந்தவள் அவனிடம் மயங்கிய தன் நிலையை எண்ணி கோபம் வர அதை காட்டுவதற்காக டீ சர்ட்டை கழற்ற போக அதை எதிர் பார்த்தே நின்றவன் கண்களில் இருந்த உணர்வுகளில் , அவள் நின்று விட ,

"யு ஆர் டெம்ட்டிங் மீ ஹனி " என்றவன் அவளை இழுத்து இறுக அணைத்து கன்னத்தில் அழுந்த வைத்த முத்தம் கூறியது அவள் மீதான அவன் பித்தினை .

அவனோ இதற்கு மேல் இங்கிருந்தால் தான் எல்லை தாண்டி விட கூடும் என்பதால் வெளியே சென்திருந்தான்

அவன் கதகதப்பை அவள் உள்வாங்கி நின்றாள். அந்நிலையில் சில நிமிடங்கள் நின்றவளை

"அதீ ... "எனும் நீருவின் குரல் கலைக்க,
மாய உலகில் இருந்து வெளியே வந்தவள்

"இதோ வந்துட்டேன்…" என தன்னை கண்ணாடியில் சரிபார்த்து கொண்டவள் கை பையை எடுத்துக் கொண்டு திரும்பியவள் கண்ணில் விழுந்தது . அவள் முதலில் அணிந்திருந்த சட்டை கூடவே உள்ளே வந்த உடனேயே அதை கழற்றி கட்டிலின் மீது வீசி விட்டுத்தான் தான் சட்டை தேடிக் கொண்டிருந்ததும்,
உள்ளே டாவின்சி வரும் போது அப்படியே நின்ற நிலையும் , நினைவில் வர இப்போது அதீரைக்கு அவளை மீறி நாணம் வந்திருந்தது .
 
அத்தியாயம் 16

லாஸ் ஏஞ்சலின் எக்கோ பார்க் , அங்கு தான், மூவரும் வந்திருந்தனர். அதீரைக்கு நேரொருவல்லாளை அலைய வைப்பதில் விருப்பம் இல்லாவிட்டாலும் அவளது மகிழ்சியும் மன அமைதியும் முக்கியம் என்பதாலேயே அவளை இங்கு அழைத்து வந்திருந்தனர்.

அங்கு நடை பெறும் லோட்டஸ் பெஸ்ட்டிவெல் அதாவது தாமரை பூக்கள் பூக்கும் காலத்தில் அந்த பூங்காவில் நடைபெறும் விழா பிரபலமானது. இன்று அந்த விழாநாள் போலும் ஆதலால் எங்கும் தீடிரென்று முளைத்த உணவுக்கடைகள் , துணிக்கடைகள் , விளையாட்டுப் பொருட்கள் காற்றினால் பெரிய தாக்க கூடிய சிறு குழந்தைகள் விளையாடும் சறுக்கும்இடம் என கொண்டாட்டமும் மகிழ்சியுமாய் இருந்தது.

நீருவின் மனதினுள்ளோ ஏதோ மெல்லிய சலனம் ஏதோ கண்ணில் விழுந்த தூசு போல நினைவில் உறுத்த அதை யோசிக்க முடியாதபடி.படகு போட்டி தொடங்குவதற்கான அறிவிப்பு தரப்படவும் , இவளின் கவனம் அங்கே சென்றது .

கேரளாவின் ஒனம் படகின் மினியேச்சர் வடிவத்தில் நான்கு அல்லது ஐந்துபேர் அமரக் கூடிய அந்த படகுகள் இரண்டு நின்றது .அதில் இருந்தவர்கள் ஒரே நிறத்தில் லோட்டஸ் என்ற வாசகம் தாங்கிய பணியன் அணிந்திருந்தனர். குளத்தை ஒரு முறை சுற்றி வர வேண்டும் யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். இது மகிழ்ச்சிக்காக நடத்தப்படுவதால் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும் , அங்கிருந்த அனைவரும் தங்கள் குழுவினரை உற்சாகப்படுத்தும் வகையில் கூவிக் கொண்டிருக்க

நேரொருவரில்லாளுக்கு ஏனோ இந்த இரைச்சல் பிடிக்கவில்லை .எழுந்தவள் தனிமை வேண்டி தாமரை மலர்கள் மலர்ந்திருந்த அந்த குளத்தின் ஒரு கரையில் வளர்க்கப்பட்டிருந்த பனை மரங்களுக்கு இடையில் இருந்த புல்வெளியில் நடந்து கொண்டிருந்தாள்.

அதீரை டாவின்சி இருவரும் நேரொருவரில்லாளுடன் இணைந்து நடந்து கொண்டிருந்தனர். இரண்டு குழந்தைகளை சுமப்பவள் அல்லவா? மிக மெதுவாகவே நடந்து கொண்டிருந்தாள். ஓடை ஒன்றை மரப்பாலம் வழியே தாண்டியவள் , சற்று தூரம் நடந்தற்கே லேசாக இடுப்பு வலி எடுக்க , முகம் சுருக்கினாள். நெற்றியில் வியர்வை பூத்திருக்க ,
"அம்மா …"என்றபடி அருகில் இருந்த பென்ஞ்சில் அமர்ந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள்.

டாவின்சியும் , அதீரையும் பதறிப் போய்
தண்ணீரை புகட்டி நீரு.. நீரு … என அழைக்க , அதில் சற்று தெளிந்தவள் அவர்களை பார்த்து புன்னகைத்தாள். களைத்து போன அவள் முகம் பார்த்த
அதீரை ' நாள் நெருங்கி விட்டதே ஒரு வேளை பிரசவ வலி ஆரம்பமாகி விட்டதோ ' என நினைத்தவளாக நேரொவரில்லாள் கரங்களை பிடித்து ஆறுதலாக மெல்ல தடவியவள்

"ரொம்ப வலிக்குதா நீரு ஹாஸ்பிட்டல் போகலாமா "

எனக் கேட்க

" இல்ல நடக்க கொஞ்சம் கஷ்டமாயிருக்கு கால் வலிக்குது. இங்கயே கொஞ்ச நேரம் உட்காரலாம் அதீ "

என நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள். டாவின்சி அவள் நிலை கண்டு அன்னை அழும் போது ஏன் என்று தெரியாவிட்டாலும் தானும் அவளுடன் சேர்ந்து அழும் குழந்தை போல்… கண்கள் கலங்க அதை கை குட்டை கொண்டு முகத்தை துடைப்பது போல் மறுபுறம் திரும்பி நின்று துடைத்துக் கொண்டான்.பிறகு முழுதாக இவர்கள் புறம் திரும்பாமலே

"அ..தீ .. நான் போய் ஏஞ்சலுக்கு காபி வாங்கிட்டு வரேன்"

என தனது தொண்டை அடைத்த குரலில் வேகமாக கூறிவிட்டு பதிலுக்கு அவள் ஏதும் கூறும் முன் நகர்ந்து விட்டான்.

அதீரை நீருவை நெருங்கி அமர்ந்து கொண்டாள். அங்கிருந்தே இருவரும் நீரூற்றையும் வேடிக்கை பார்க்க துவங்கினாள். அவர்கள் அமர்ந்திருந்த பகுதி கொஞ்சம் தனிமையாக இருந்தது.

சற்று தொலைவில் மனலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த மழலைகள் அங்கே தத்தி தத்தி நடைபயின்றதை கண்ட வாத்துகளும் அந்த மதலைகள் கை விரித்து சமநிலை தவறிடாமல் நடை பழகுவதை கண்ட மயங்கி போயின .

அவைகளும் தங்கள் இறக்கைகளை லேசாக விரித்து மேல் நோக்கி குவித்து நிறுத்தியபடி அந்த தளிர்களை போல நடைபயின்று நீருக்குள் இறங்கி விட்டிருந்தன.நீருக்குள் நின்றிருந்த தாமரைப் பூக்கள் இவற்றை கண்டு சிரித்தன. நீரு குழந்தைகளையும் பூக்களையும் கண்டு குதுகாலித்தபடி இருந்தாள் .

இங்கு கடையில் நின்ற டாவின்சி தனக்கு பின்னால் இருந்து கேட்ட

"ஹாய் டியூட் "

என்ற விளிப்பில் திரும்பினான். அவன் முன் அவனின் முன்னாள்களில் ஒருவனான மேத்யு நின்றிருந்தான்.

பச்சை தலையும் ஒரு காதில் தோடும் , ஒரு கருப்பு நிற லெதர் ஜாக்கெட்டும் முட்டி வரையிலான ஷார்ட்ஸ் என நின்ற அவன் கண்கள் இங்கிருந்தே சற்று தொலைவில் இருந்த பெண்கள் இருவரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. அதை கண்ட டாவின்சி

"மேத்யூ ... "

என வலுக்கட்டாயமாக திசை திருப்ப , அவனோ அதீரையை சுட்டி

" ஐயம் இம்ப்ரஸ்டு வித் ஹெர் ஷ ஐ ஹவ் ஹர் "

என கேட்டு முடிக்கவில்லை அவன் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அதன்பிறகும் அங்கு நிற்க மேத்யூஸுக்கு என்ன பையித்தியமா ? மூக்கை பிடித்தபடி ஓடி விட்டிருந்தான்.

கையை உதறியவன் அங்கிருந்த டிஸ்யூ பேப்பரில் கையை துடைத்து குப்பை கூடையில் போட்டான். நிகழ்ந்தவற்றை பார்த்து ஆ… வென்று நின்று கொண்டிருந்த கடைக்காரன் முன் இருந்த மேஜையில் ஒரு தட்டு தட்ட அந்த ஓசையில் அதிர்ந்து நினைவுக்கு வந்தான் . அடுத்த
சில நொடிகளில் நீருவுக்கும் அதீரைக்கும் காபியை வாங்கிக்கிக் கொண்டவன். அவனுக்கு
அவர்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
டாவின்சியின் மனமோ கொதித்து கொண்டிருந்தது. என்ன தைரியம் இருந்தா கேட்பான் ? என கனன்று கொண்டிருந்தான். அதீரை அவன் நேசத்தினை முழுதாக உணர்ந்தான்.

அதீரையின் மீதான நேசம் அவன் அறிந்தது தான் என்றாலும் ,அவள் மீது கொண்ட உண்மை காதலில் இத்தகைய உரிமை உணர்வு தோன்றும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை அதிலும் தான் ஒருவனை அடிக்கும் அளவிற்கு இருக்கிறதா ? என்பதை நினைத்தவனுக்கு மனதில் மெல்லியதாக ஒரு மகிழ்ச்சி இனிதாக பரவ புன்னகை முகத்தில் பரவ சீழ்கையுடன் அவர்களை நோக்கி சென்றான்.

" ஏஞ்சல், இந்தா உன்னோட காபி ", என்று அவளுக்கு கொடுத்தவன் மற்றொன்றை அதீரையிடம் கொடுத்தான் .

அவன் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை கண்ட அதீரை ,

" என்ன ? "

என்பதாய் புருவம் உயர்த்த

" ஒன்றும் இல்லை"

என்பதாய் தலையசைத்தவன், இரு கண்களுக்குள் விழுந்த அவள் பிம்பத்தை இமை மூடி தழுவியவன் , இதழ்குவித்து சிறு முத்தம் கொடுத்தான் , அவனது குறும்பில் அதீரை அவனை முறைத்தாள். இப்போது டாவின்சி அவளை பார்த்து சிரித்தான்.

தனது இந்த மகிழ்வான காதல் உணர்ந்த நிமிடங்களை அனுபவிக்க விரும்பியவன் சற்று தூரம் நடந்து விட்டு வருவதாக கூறி விட்டு நடக்க துவங்கினான். காணும் யாவும் மறந்து அவனும் கரைந்து மிதப்பது போன்ற மனநிலையில் இருந்தான்.


அப்போதுதான் அவனுக்கு மூளையில் ஒன்று உரைத்தது. அது நினைவுக்கு வர அப்படியே நின்று விட்டான். அதுவரை இதயம் சொன்னபடி மட்டும் தான் செய்திருக்கிறான்.

ஒரு ஆண் விபச்சாரியாக வாழ்ந்திருந்த எனக்கே நான் மட்டுமே ஒரு தலையாக காதலிக்கும் காதலியை இன்னும் திருமணம் கூட ஆகாமல் எனது கட்டாயத்தில் என்னுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணை என்னுடன் பகிர்ந்து கொள்கிறாயா? என்று ஒருவன் கேட்டவுடன் அவனை கொன்று போடும் ஆத்திரம் வருகிறதென்றால்.

ஒருவனையே நினைத்து , அவனுக்கு மட்டுமே உடல் உள்ளம் இரண்டும் Nகொடுத்து அவனிருக்கிறானா இல்லையா என்று அறியாது சித்தம் கலங்கிய போதும் சிந்தனையில் அவனையே நினைத்து வாழ்ந்திருக்கும் தெய்வ பெண்ணை நினைத்த தன் மீதே அவனுக்கு ஆத்திரமும் அருவருப்பும் வந்தது.

இப்போது அவன் அனுபவித்த சுகமனநிலை எல்லாம் மறந்து போனது. தனது கடந்த காலத்தை நினைத்தவனுக்கு உடல் முழுவதும் புழுக்கள் நெளிவது போல் இருக்க , கைகளால் முகத்திலும் சட்டையையும் கால்சாராயையும் தட்ட அப்போதும் அவை போவதாய் தெரியவில்லை..

தனது நிலை நினைவுக்கு வர மனதின் உண்மையான கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை.

அதை விட பூதாகரமாக மற்றோர் விஷயம் நினைவுக்கு வந்தது. இதே உரிமை உணர்வு தானே நிக்கிற்கும் இருக்கும் , அவன் நேரில் வந்து இருவரையும் கண்டால் தனது ஏஞ்சலின் நிலை என்ன? ஐயோ அவள் மீது எந்த தவறும் இல்லையே ?ஏஞ்சலை, நிக் வெறுத்து விடுவானோ?
என மனம் கண்டதையும் நினைக்க , அனலில் இட்ட புழுவாய் துடித்தான்.


மெல்ல தன்னை தேற்றி கொண்டவன் திரும்பி வந்து நேரொருவரில்லாளின் அருகே புல் தரையில் அமர்ந்தான். அவள் பாதங்களை பிடித்து கண்கள் கலங்கி
'ஸாரி நீரு ' என மனதிற்குள் மன்னிப்பு வேண்டினான். சில துளிகள் அவள் பாதங்களில் விழுந்தது. நீரு இவனை கவனிக்கவில்லை. தன்னிச்சையாக பாதங்களை நகர்த்தி கொண்டாள்.

அதீரை சற்று தள்ளி அலைபேசியில் யாருக்கோ பேசிக் கொண்டிருந்தாள் . அவன் சோர்ந்த நிலையைக் இவர்கள் காணும் முன் விரைந்து தன்னை மீட்டுக் கொண்டவன் நீருவின் மறு புறம் அமர்ந்து கொண்டான்.

சுற்றும் வேடிக்கை பார்த்து அலுத்து போனவள் , இவனிடம்

" நிக் ஏதாவது கதை சொல்லேன் ? "

என்றாள்.
இதை கேட்ட டாவின்சி முழித்தான். அவன் எங்கே போவான் கதைக்கு ?
அந்நேரம் பார்த்து அலைபேசி அனைத்து விட்டு இவர்களிடம் வந்த அதீரை இவன் நிலையைக் கண்ட சிரித்துவிட்டாள். அவளை முறைத்தவன்

" இரு உன்ன அப்புறம் கவனிச்சிக்கறேன் …." என்றவனிடம் சிரிப்பை அடக்கியவள் , அவனிடம் திரும்பி

" என்ன கவனிக்கறது இருக்கட்டும், இப்ப முதல்ல உன் ஏஞ்சலுக்கு வழி சொல்லு " என்றவள் தானும் கதையை கேட்க தோதாக அமர்ந்து கொண்டாள்.

அவனும் வேறு வழியின்றி தொடங்கினான்.

"அது ஒரு பெரிய காடு அந்தக் காட்டுல ஒரு ஆண் சிங்கம் , ஒரு பெண் சிங்கம் அப்புறம் ஒரு குட்டி சிங்கம் இருந்தது. ஒரு நாள் ஆண் சிங்கத்துக்கும் பெண் சிங்கத்துக்கும் பெரிய சண்டை இரண்டும் தனித்தனியா பிரிஞ்சி போயிடிச்சி "

என்றவன் நினைவில் சிறு வயதிலேயே அவனை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்து போன பெற்றோர்களின் நினைவு

"அச்சச்சோ பாவம் ல அந்த குட்டி சிங்கம் அத யாரு பார்த்துப் பா ? அதுக்கு யாரு சாப்பாடு கொடுப்பா?".

என்று கண்களை விரித்து நீரு கவலை பட்டாள், அதீரைக்கு புரிந்து போனது இவன் தன் கதையைத்தான் கூறுகின்றான் என்பது,

" ஆமா அதுக்கு யாருமே இல்லை . அப்ப ஒரு நாள் பசியில நடந்து போகும் போது ஒரு குள்ள நரிக் கூட்டம் இந்த குட்டி சிங்கத்த பார்த்து நீ எங்க கூட வரியா உனக்கு நல்ல சாப்பாடு தருவோம்ன்னு சொன்னதும் , வேற வழி தெரியாத சிங்கம் குள்ள நரிகள் கூட சேர்ந்துக்கிச்சி , கொஞ்ச நாள்ல அதுக்கு தான் யாரு அப்படிங்கறதே மறந்து போச்சு"

என்றவன் மனம் பழைய நிகழ்வுகளை புரட்டியது.

பசிக்காகவும் , பணத்திற்காகவும் போதை பொருள் கும்பலில்.சேர்ந்திருந்தவன் அங்கு அனைத்தும் மறந்து
போதையில் அவர்களுடன் சுற்றியலைந்தான். இறுதியில் மூன்று மாதம்சிறை சென்று பிறகு திரும்பியவன், அவர்களிடம் இருந்து பிரிந்து வெளியே வந்தான்.
தனது இந்த போதை பழக்கத்திலிருந்து வெளியே வர ஓவியம் வரைய ஆரம்பித்தான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான். தனது வசீகர தோற்றத்தை புரிந்து கொண்டவன் மாடலிங்கை தனது லட்சியமாக கொண்டான். தனது தோற்றத்தை மெருகேற்றியவன் தேவைகளுக்காக இந்த கிகோலோஸ் தொழிலை செய்ய ஆரம்பித்தான். அதையும் அதீரையின் மேல் கொண்ட நேசத்தில் தவிர்த்திருந்தான்.

"அச்சச்சோ அப்புறம் "

என்று வாயில் கை வைத்து கொண்டாள். நேரொருவரில்லாள். அவளை பார்த்து சிரித்தவன்அந்த நிகழ்வுகளை கதையாக சொன்னான்.

" குள்ள நரிகள் சிங்கத்துக்கு கெட்ட பழக்கத்தை எல்லாம் கத்து கொடுக்க அது தான் சந்தோஷம் உண்மைன்னு நம்பி சிங்கமும் வாழ்ந்துட்டு இருந்துச்சி ,
ஒரு நாள் அது ஒரு பெண் சிங்கத்தை பார்த்தது. இரண்டும் சில தடவை வேட்டைக்கு போகும் ஒன்னா சாப்பிடும் இந்த சிங்கத்தை பார்த்து ஆசைப்பட்ட ஆண் சிங்கம் தானும் ஒரு சிங்கம்னு புரிஞ்சிகிட்ட இந்த குட்டி சிங்கம் தன்னை மெதுவா திருத்திக் கொண்டது , அப்புறம் அந்த குள்ள நரி கூட்டத்திலிருந்து விலகி சிங்கம் மாதிரி வாழ்ந்தது.

அப்புறம் ஒரு நாள் பெண் சிங்கத்து கிட்ட என் கூட இருக்கியான்னு? கேட்டுது. "

என டாவின்சி நிறுத்த

"அந்த பெண் சிங்கம் என்ன சொல்லிச்சி? நிக் சரின்னு தான சொல்லிச்சி ? என்று ஆவலுடன் கேட்ட நீருவின் முகம் பார்த்து கசந்த புன்னகையை உதிர்த்தவன்

"ம்ஹும் , முடியாதுன்னு சொல்லிடுச்சி "

" பேட் சிங்கம் , அவன் கூட எல்லா இடத்துக்கும் போகுது வேட்டையாடுது சாப்பிடுது, தூங்குது அப்புறம் ஏன் மாட்டேன்னு சொல்லிச்சி? "
என்று கோபப்பட்டாள். அவன் காதலை அதீரை மறுத்தற்கு இவள் கோபப்பட்டாள். அவனும் தான் அந்த காரணத்தை அறிய மாட்டானே , அறிந்தவளோ உரைக்க மாட்டாள். எனவே

"தெரியலையே.. மீதி கதைய நான் நாளைக்கு சொல்லறேன் இப்ப வீட்டுக்கு போலாம் நேரம் ஆயிடிச்சி"

என்றவன் இருவரையும் அழைத்து கொண்டு வாகனம் நிறுத்தத்திற்கு வந்தான். வாகனத்தில் ஏறிய பின்னும் வீடு வரும் வரை யாரும் எதுவும் பேசவில்லை . அவரவர் நினைவுகள் அவர்களை சுழலாக சுழற்றி உள்ளிழுத்துக் கொண்டது.

 
அத்தியாயம் 17

வெளியே பறக்க துடிக்கும் பறவை சிறகு விரிக்க எழும்பும் முன் கூண்டு தட்டிவிட மீண்டும் கூட்டிற்குள் தத்தி தத்தி சுற்றி வரும். அதுபோலத்தான் டாவின்சியும் அதீரையின் அறையின் வாசல் வரை போவது பிறகு மீண்டும் தனது அறைக்கு திரும்பி அங்கும் இங்கும் நடப்பது என இருந்தான்.இன்று முழுவதும் இவன் நிலை இப்படித்தான் இருக்கிறது .

திருந்துவதற்கு சில நொடிகள் போதும் ஆனால் தனது அந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்றிடத்தான் தைரியம் வேண்டும் . நாம் ஒன்றை தவறு உணராதவரை அது நமக்கு இன்பம் , பிழை என அறிந்த பின்பு அதை செய்யும் போது ஒவ்வோரு நொடியும் நமக்கான தண்டனையை மனம் எதிர்பார்க்கவே செய்கிறது.
அது இந்த ரூபமோ? இல்லை ,அந்த ரூபமோ ? என எதிர்பார்ப்பில் கலங்கும் மனதிற்கு தனியாக தண்டனை தேவையில்லை. இதோ அவன் மனம் முள் சாட்டையை தீயில் சுட்ட புண் மீது வீசுவது போல வலிக்க வலிக்க இதயத்தில் வீசிக் கொண்டிருக்க வாய் விட்டு கதறாமல் ஊமையாய் அழுது கொண்டிருந்தான்.

டாவின்சியின் நிலை ஒவ்வொரு நாளும் அப்படித்தான் இருந்தது. அதீரையின் மீதான நேசத்தை உணர்ந்திருந்தாலும் சொல்ல முடியாத நிலை , தனது கனவு வாழக்கையை வாழ நினைத்தவன் நீருவின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குற்ற உணர்சி.

ஆம் ,நீருவின் மீது முதலில் இருந்த கவர்ச்சி போய்விட்டிருந்தது. தான் விரும்பிய வாழ்கையை வாழ வரம் தந்த அவளை தன் ஏஞ்சலாக பார்த்தான் . இப்போது அவள் வாழ்கையை தான் பாழாக்கி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி அவனை கழுவில் ஏற்றி வதைக்கும் வேதனை பரவாயில்லை என எண்ண வைத்தது.


இரு பெண்களின் வேண்டிய அளவுக்கு சிக்கலுக்கு உள்ளாக்கியாற்று? இனி எப்படி சரி செய்வது ?ஒரு நூல்கண்டின் சிக்கலை எடுப்பது என்பது சுலபம் இரண்டு மூன்று கண்டுகள் ஒன்றாக குழம்பிக் கிடந்தால். முதலில் தனித்தனி கண்டுகளாகவேனும் பிரிக்க வேண்டுமே... , எனவே தன் பங்கு சிக்கலை தானே சரி செய்து எண்ணியவன் தன் இணைப்பை வெட்டிக் கொள்ள முடிவு செய்தான்.
தன் உளச் சிக்கலை தன் புறமே வைத்து கொள்ள முடிவு செய்தான்.

ஒன்று தனது காதலை கூறி அதீரையை வற்புறுத்தாமல் ஒதுங்கிக் கொள்வது.
மற்றொன்று நேரொவரில்லாள் வழியை விட்டு விலகுவது

நீருவின் நிலை இப்போது தெளிவுக்கு அருகில் உள்ளது என்பதை அவனால் அவள் ஒதுக்கத்திலும் அறிமுக மற்ற பார்வைகளிலும் அடிக்கடி உணர்த்திக் கொண்டு தான் இருக்கிறாள்.அவள் முற்றிலும் தெளிந்து நீ யார் ? எனக் கேட்டால் அவளுக்கு என்ன பதில் கூறுவான்? தனது இந்த உறவு முறையும் இனிய நினைவுகளையும் தக்க வைத்துக் கொள்வதற்காக வேனும் வெளியேறத்தான் வேண்டும் என முடிவு செய்தவன்


கடிகாரத்தை பார்த்தான். பின்னிரவாக போவதை உணர்ந்தவன், இனியும் தாமதிக்க முடியாது , என அதீரையின் அறைக்கு சென்று கதவை தட்ட கையை உயர்த்த அதற்குள் அவளே திறந்து விட்டிருந்தாள்.

அவன் நின்றிருந்த விதம் அந்த தவிப்பை அடக்கும் அவன் உடல்மொழி ஏதோ சொல்ல வருவதை புரிந்து கொண்டவள் சற்று விலக அவளது அறைக்குள் நுழைந்தவன் கண்கள் , எதிலும் நிலை கொள்ளாமல் சுற்றியலைந்து கொண்டிருந்தன , கதவை சாற்றிய அதீரை இவனை கவனித்தவாறு வந்து நாற்காலியில் அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததை உணர்ந்தவன், தனது பார்வையை சுவரில் பதித்தவனாக,

" நான் கிளம்பறேன் "

எனவும் அவனை உற்று பார்த்தவள் , தான் கூற வந்ததை அப்படியே முழுங்கியவள் , நாற்காலியில் பின் சாய்ந்து மூச்சை உள்ளிழுத்து பின் நிமிர்வாய் கால் மேல் கால் போட்டு அமர்ர்ந்தவள் கேட்டாள்.

" எப்ப "
உணர்வுகள் துடைக்கப்பட்ட அந்த ஒற்றை வார்த்தைக்கு

"இப்ப "

என்றவனிடம்

"ம்"

என்றவள் மேலும் எதுவும் கேட்கவில்லை. அவனும் கூறவில்லை.
இருவருக்கும் இடையே மௌனம் நிலை கொண்டிருந்தது .
இவள் விலக்க அவன் மெளனம் அவன் திறக்க இவள் மோனமும் காத்திருந்தன .
அவனுக்கு தான் அவளை கட்டாயப்படுத்தியதை தாண்டி காதலை சொல்ல முடியாதபடி மெளனம் அவளுக்கு அவனுடன் கடந்த நாட்கள் நினைவில் வாழ்ந்திடும் மோனம் .

சில நிமிடங்கள் வெகு அமைதியாய் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர். இவன் பேச வேண்டும் எனும் அவளது காதலும் , இவள் வாய் திறக்க காத்திருக்கும் அவன் காதலும் தொடு எல்லைக்கு அருகில் போகாமல் பொது எல்லை மட்டும் தாண்டி களமாடும் கபடி வீரர் யாரையும் வெளியேற்றாமல் தான் வெளியேறுவது போல வார்தைகளை எண்ணங்களை வெளிேயறச் செய்யாமல் பின் வாங்கும் வீரனை போன்று சற்று நேரம் ஆடிய , இந்த விளையாட்டு சோர்வைத் தந்து விட , நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டவன் வாசல் வரை சென்றான்.
பிறகு திரும்பி பார்த்தான்.

திரும்பிய அவன் முகத்தை கண்டவளிடம் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு அவன் கைக்குள் வாழ்ந்து விடும் வேகம் இருந்தது . ஏதோ ஒன்று தடுக்க நாற்காலியின் கைப்பிடிகளை தன் கரங்களால் இறுக்கி தன்னை பிடித்து வைத்தாள். வெளியேற துடித்த கண்ணீரை கண்கள் கலங்கிடாமல் தொண்டைக்குளேயே அடைத்து விழுங்கிக் கொண்டிருந்தாள்.

" நீரு " என்றவனுக்கு ஒற்றை வார்த்தையில்

"நான் பார்த்துக்கறேன் "

என்றாள் அவளின் பதிலுக்கு பின் நொடி கூட அங்கு நிற்க மனம் விழையவில்லை. கொண்ட உறுதி மாறி விடுமோ ? என்ற பயம் அவனுக்கு , எத்தனை முறை தான் அவளின் மறுப்பை பெறுவது தன்னிலை விளக்கம் அளிப்பது ?என தனது உடைமைகளை சேகரித்தவன் வெளியேறி விட்டிருந்தான்.

அதீரையோ அவள் இருந்த இடத்தில் நிலைகொண்ட சிலையாக இருந்தாள். அவள் என்ன எண்ணியிருந்தாள் ? முதல் முறையாக தனது இருண்ட பக்கங்களை அவனிடமாவது பகிர்ந்து கொண்டு விட வேண்டும். என எண்ணியே கதவை அவனை சந்திக்க கதவை திறந்தாள்.


அவனைக் நேரில் கண்டதும் அவன் ஏதோ வீபரிதமாக கூற போகிறான் என்பதை உள்ளுணர்வு உணர்த்த. அவன் உரைத்தைக் கேட்டவளுக்கு, இது.. இந்த பிரிவு தான் முதலில் விரும்பிய ஒன்று தான் என்றாலும் , இப்போது உடலும் மனமும் இவன் ஒருவனுக்கு உருக அதை கட்டி வைப்பது அவளுக்கு எளிதாக இல்லை .

அறிவோ ...பக்குவம் அற்ற மனதுடன் அவனுடன் வாழ்வது இருவருக்கும் நரகம் , என்றது .தனது காதலையும் அவன் அறியாமலே போகட்டும் மனம் மாறி யாரையாவது திருமணம் செய்து கொள்ளட்டும் .

நீ ... உன் திருமணம் என்று அரற்றிய மனதுக்கு எனக்கு இத்தனை நாள் இவனுடன் வாழ்ந்த வாழ்கை போதும் , கைம்பெண்களும், கைவிடப்பட்ட பெண்களும் வாழ்வதில்லையா ? அப்படி வாழ்ந்து விட்டு போகிறேன் என முடிவு செய்தாளே தவிர மீண்டும் பழைய வாழ்கைக்குள் போக அவள் மனம் நினைக்கவில்லை.


இவர்கள் இவ்விதம் அரைகுறையாக தெளிந்து முழுதாக குழம்பி பிரிந்து நிற்க ,

அங்கே நிக்கின் விமானத்தில் தரையிறங்குவதற்கான அறிவிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.


நீருவின் அறையில் இருந்து
"அம்மா. .."
எனும் அலறல் கேட்டிருந்தது .அவளின் மகவுகள் தந்தையின் வரவினை அறிந்து கொண்டனர் போலும் தந்தையின் முகத்தை பார்க்க விருப்பங்கொண்டு , தாயின் இடுப்பு வலியை உச்சத்திற்கு இட்டு சென்று கொண்டிருந்தனர்.

அறையில் அமர்ந்திருந்த அதீரையின்
கண்களில் கண்ணீர் தன் போக்கில் வழிந்து கொண்கிருந்தது. அதன் வழி இறுக்கம் குறையலாம் ஆனால் இருப்பதை... இழந்ததை... மாற்றவோ ? மீட்கவோ ?முடியாது தானே? இந்தக் கையறு நிலையை கண்ணீர் கரைக்குமோ..?
என கரைந்து கொண்டிருந்தவள்
இவளின் குரல் கேட்டு ஓடி வந்தாள்.

இங்கு வலியில் துடித்த நீருவை கண்டவள் தனது சோகங்களை புறந் தள்ளியவளாக,அவள் அருகே அமர்ந்து அவள் கரங்களை பற்றிக் கொண்டாள்.

பனிக்குடம் எதுவும் உடைந்திருக்கிறதா? என்று பார்க்க எதுவும் இல்லை எனவும் ,

" நீரு கொஞ்சம் வெந்நீர் போட்டு தரவா?"

என

" ம் "

என வியர்த்து சோர்வாய் தலையாட்டிவளுக்கு
சிறிது வெந்நீர் கொடுத்தாள் அதற்குள் அவளுக்கு மறுபடியும் வலி வந்து விட கொடுத்த வெந்நீர் வாந்தியாகிவிட்டது.

" நீரு ஹாஸ்பிட்டலுக்கு போயிறலாம் , ஒரு இரண்டு நிமிஷம் பொருத்துக்கோ " என்றவள் தேவையான பொருட்களை எடுத்து வைத்தாள் .

அதற்குள் மீண்டும் வலி வர மெல்ல நீருவை கைத்தாங்கலாக அறையை விட்டு வெளியே அழைத்து வர உள்ளே நுழைந்தான் நிக்கோலஸ் .அடுத்த பத்து நிமிடங்களில் மருத்துவ மனையில் இருந்தனர் மூவரும்,

பிரசவலி என்பது 57 (del) என அளவிடப்படுகிறது .இது இருபது எலும்புகளை ஒன்றாக உடையும் போது தோன்றும் வலிக்கு சமம்.இங்கு del என்பது டாலஸ் (dols ) வலியை அளவிடும் அலகு (unit ) இது டோலோரி மீட்டர் (dolori meter) என்ற கருவியால் ஒரு குறிபிட்ட மனித உடலில் ஒரு குறிபிட்ட இடத்தில் செலுத்தப்படும் வெப்பம் , அழுத்தம் மின்சாரம் போன்றவற்றின் மூலம் அளவிடப்படுகிறது இதன்படி ஒரு மனிதனின் உயர்ந்தபட்ச தாங்கும் அளவு 45 ( del )

இந்த வலியை சிறிது காலங்களுக்கு பின் பெருவாரியான பெண்களால் நினைவு கூற முடியாமல் போய்விடும். அதற்கு அவர்கள் ஹார்மோன்கள் மற்றும் நரம்புகள் அனுபவிக்கும் அழுத்தம் ஆகியவையோடு மூளை ஏற்படுத்தும் மறதியும் ஒரு காரணம்.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்சிடோசின் என்ற இரு ஹார்மோன்களின் சுரப்பு மிக அதிகமாக இருக்கும் இதில் ஆக்சிடோசின் இது தான் தாய் பால் சுரக்கவும் தாய் சேய் பந்தத்தையும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இத்தனை வலியையும் அழுத்ததையும் தாங்கிக் கொண்டிருந்தவள் முன் நிக்கோலஸ் வந்து நின்ற சில நொடிகளிலேயே நீருவின் நினைவு திரும்பி இருந்தது.
உதடு கடித்து வலியை அடக்கியவள் அதீரையின் கரங்களில் இருந்து தன்னை விடுவித்து கொண்டவள் மெல்ல நடந்து நிக்கிடம் வர

அவனோ உள்ளே வரும் போதே வலியுடன் போராடியவளை கண்ட மனம் துடித்து விட விரைந்து எட்டுகளை வைத்து நீருவை நெருங்கி அனைத்துக் கொண்டது தான் தாமதம் அடுத்த நொடி
மார்பில் சாய்ந்து கதறி விட்டாள்.

நிக்… என அவனை அனைத்துக் கொண்டு கதறியதிலேயே தெரிந்து போயிற்று அதீரைக்கு அவளுக்கு நினைவு திரும்பி விட்டது என்று.

இப்போது அவள் அச்சம் எல்லாம் டாவின்சியை பற்றிய நினைவுகள் நீருவிற்கு திரும்பி இருக்குமா ? இருந்தால் ? என்ன செய்வாள் ?என்ற பயம் ஆட்டி வைக்க வெளியே அமர்ந்திருந்தாள்.

உள்ளே நீருவின் அருகில் இருந்த நிக் தன்னவன் படும் பாடுதாங்காது,

"நீரு ...நீரு "

என புலம்பியபடி அவளுடைய கரங்களை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். சற்று நேரத்தில்
அடுத்தடுத்து அவனது இரு மகவுகளும் அவன் கை சேர்ந்திருந்தனர். இரு குழந்தைகளுடன் தனது மனைவிக்கும் முத்தமிட்டவன்

" நீரு ஐ லவ் யூ.., ஐ லவ் யூ பார் எவர்…, அட் எனி காஸ்ட்"

என்றவன் பிரசவ அறையில் இருந்தும் வெளியே வந்தான்.
 


அத்தியாயம் 18

மாதங்கள் மூன்று முடிந்திருந்தது.

நேரொருவரில்லாள் தனது அறையில் அமர்ந்திருந்தாள். குழந்தைகள் இருவரும் நிக் தனதாக மாற்றிக் கொண்ட எதிர் அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இரண்டும் இலேசாக சிவப்பும் வெளிர் மஞ்சளும் சேர்த்து செய்த ஆப்பிள் போல் மேனியும் , மாதுளம் பூவின் நிறத்தில் உதடுகளும் ,இள பச்சை நிற விழிகளும் கரு கருவென்ற கார் கால நள்ளிரவில் செய்த கூந்தலும் , உலகின் மெல்லிய மலரின் மென்மையும், மனமும் கொண்ட இளஞ்சிட்டுகளை கண்டால் யாருக்குத்தான் பிடிக்காது ?


அவர்களை இங்கிருந்தே கண்ட அவளுக்கு புன்னகை அரும்பியது

" இராப் பாடிகள் , இரண்டும் "

என குழந்தைகள் இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருந்து கொட்டமடிப்பதை பற்றிமெலிதாக கூறியவள் இறங்குவதற்காக காலை கீழே வைக்கவும் தரையில் பரவியிருந்த குளிர் மூளையை சுரீரென்று தாக்க

" ஸ்... "

என்றவாறு இழுத்தவள் , கட்டிலுக்கு கீழே கிடந்த காலணிகளை கண்டெடுத்து அதற்குள் கால்களை நுழைத்துக் கொண்டாள்.

"இந்த ஊர்ல எத்தன வருஷம் குடித்தனம் பண்ணாலும் இந்த குளிர் தன்னால சொந்த ஊர நினைக்க வைச்சிடும் "

என்றபடி ஹீட்டரை ஆன் செய்தாள்.

அது என்னவோ முதலில் ரசிக்க நன்றாக இருக்கும் பனி அங்கங்களில் ஊடுறுவி அனுபவிக்கிறாயா? எனும் போது மித வெப்ப மண்டலத்தில் பிறந்து வெயிலோடு உறவாடி ,வெயிலோடு விளையாடி என்றிருந்தவளுக்கு, இந்த பனி காலத்தின் முதல் சில நாள் இனித்தாலும் பிறகு சிரமப்பட்டு போவாள்.
அப்படி ஒரு முறை பனியை கண்ணாடிக்குள் இருந்து ரசித்து கொண்டிருந்தவளை வெளியே இழுத்து வெண் மணல் போல் விரிந்து கிடக்கும் பனியை குவித்து பொம்மை செய்து விளையாடக் கற்றுக் கொடுத்தான். பனிச் சிற்பங்களை காட்டினான் .உருகும் பனியில் உருகாமல் இழைத்து இழைத்து செய்யபட்டிருந்த பனிச் சிற்பங்களின் அழகினை கண்ட பின் தான் பனியை ரசிக்க ஆரம்பித்தாள்.
அப்போது தான் கேட்டாள்

" ஏன்னா இந்த கோல்டு ப்ளட்ங்கறாளே அது இந்த ஊர் ல பனி மாறி அந்த ஆளோட இரத்தம் உறைஞ்சி போயிருக்குமோ?"

அதற்கு அவன் " அப்படி இல்ல அவங்க மனசு அப்படி மரத்து போயிருக்கும் அர்த்தம், இப்ப உங்க ஊர்ல வரவேற்ப்புல மனசு குளுந்து போச்சு ன்னு சொன்னா ரொம்ப நல்லா கவனிச்சாங்கன்னு அர்த்தம் ஏன்னா அங்க வெயில் அதிகம் அதுவே இங்க வார்ம் வெல்கம் அப்படின்னா தான் நல்ல வரவேற்ப்பு அப்படின்னு பொருள் "

"மக்கள் அவங்க இருக்கற சூழலுக்கும் அங்க இருக்கற காலத்துக்கும் ஏத்த மாறி நிறைய வார்த்தைகள் பயன்படுத்து வாங்க"

என நிக் கூறியதை நினைத்து பார்த்தவளின் கண்கள் மீண்டும் குந்தைகள் மீது பதிய

"குழந்தேளுக்கு ஹீட்டர் ஆன் பண்ணி இருக்காறா தெரியலையே"

என்றபடி குழந்தைகளிருந்த அறைக்குள் தங்களுக்கிடையேயான கட்டுபாடுகளை மறந்து இயல்பாக செல்ல போனவள் .

குழந்தைகளுக்கான கம்பளி ஆடைகளை அள்ளி கொண்டு வந்த நிக்கின் கண்களில் விழ , அவன் அறைக்குள் நீரு நுழைய போவதை பார்த்ததும்

"ஸ்டாப் தேர் "

என தனதுகுரலில் தடுத்து நிறுத்தி இருந்தான். உள்ளே பதிய போன பாதங்களை வெளியே நிறுத்திக் கொண்டவள். அச்சத்தில் சுவற்றோடு ஒட்டி நின்று கொண்டாள்.


உள்ளே நுழைய போனவளை கண்டதும் . கொஞ்ச நாட்களாக குறைந்திருந்த அவன் ஆத்திரம் உச்சிக்கு போயிருந்தது.
தட் தட் என அவன் காலடிகள் நெருங்கியதில் இவளுக்கு தொண்டை உலர்ந்து போனது.

'அடிச்சா கூட தேவலையே, இவர் வார்த்தைய வைச்சிண்டுன்னா விளாசுவர் '

என்ற அவளின் எண்ணத்தை பொய்க்க விடாமல்


"அடுத்தவங்க ரூம்குள்ள அனுமதி இல்லாம நுழையறது மேனர்லெஸ் மட்டும் இல்ல திருட்டுதனம் கூட "

என கங்குகளை உதிர்த்தவனை ,

"நீயா?
ஏன் இப்படி மாறினாய்? "

என விழிகள் கேட்ட அதனை புரிந்து கொண்டான் போலும் பதிலுக்கு

"நானாக வா மாறினேன் ? காரணம் யார்?"

பதிலோடு கூரிய விழிகளுடன் பார்க்க ,
இப்போது அவள் தலையை குனிந்து கொண்டாள், கண்ணீரின் சில துளிகள் தரையில் சிதற , அந்த நிலையில் இவளை பார்க்க விரும்பாதவனாய் முகத்தை திருப்பி கொண்டவன் உள்ளே போனான். அப்போது தான் நீரூவுக்கு தான் வந்த காரியம் நினைவுக்கு வர

"இ...ல்ல ஹீட்டர் குழந்தேளுக்கு குளிரும்ன்னு "

என மென்று முழுங்கியவளை, உற்று பார்த்தவன்

"கெட் லாஸ்ட்"

என கூறி விட்டு முகத்தில் அடித்தார் போல கதவை காலால் உதைத்து சாற்றி இருந்தான்.

சுவரோடு சாய்ந்து நின்றவள் அப்படியே சரிந்து கண்கள் நீரைச் சொரிய அமர்ந்து விட்டாள். எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ ? தெரியாது.

படாரென்று அவன் கதவை திறந்த சத்தத்தில் இவள் தானாக எழுந்து விட்டாள். கலைந்த தலையும் அழுத கண்களும் அவனை உருக்குலைத்து விடும் ஆனால் இன்றோ ?

"அழனும்னா உன் ரூம்ல போய் அழு இங்க நின்னு அழுது என் மூட ஸ்பாயில் பண்ணாத ,யார் யாரோ வந்து அழறதுக்கு நான் இன்னும் சாகல "

என்று கூறியதில் அவளின், அழுகை மட்டுமல்ல விசும்பல் கூட நின்று போயிருந்தது. மெல்ல திரும்பி உள்ளே போக போனவளின் காதில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது.
அவளது பாதங்கள்குழந்தையின் அழுகையில் தானாக நின்று விட , மெல்ல அறை வாசலில் இருந்து உள்ளே எட்டி பார்க்க இருவரில் ஒருவனுக்கு பசித்து விட்டது போலும் , முழித்துக் கொண்டு அழ மெல்ல குழந்தையை தூக்கியவன் தட்டி கொடுக்க லேசாக தட்டி கொடுத்தபடி பால் பாட்டிலை தேடி எடுத்தான். இவளுக்கு பசியில் அழுத
குழந்தையின் குரல் கேட்டதும் தானாக பால் சுரந்து புடவை நனைந்து விட அவள் அந்த ப்ரஸ்ட் பம்ப் தாய்ப் பால் உறிஞ்சும் உபகரணத்தை எடுக்க போகையில்

"நில்லு"என்றவன் குழந்தையுடன் வந்தான். குழந்தையை அவள் கையில் கொடுத்தான். அன்று தூக்கியது அதன் பிறகு இப்போது தான் கையில் ஏந்துகிறாள்.அன்றைய தினத்திற்கு பிறகு குழந்தைகளை இவள் பார்க்கவே அவன் அனுமதிக்கவில்லை. குழந்தைகளை முன்னிட்டு கூட இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை ஏதும் இல்லை.

இது நாள் வரை இரவும் பகலும் குழந்தைகளை கவனித்துக் கொண்டது அவன் தான் இவள் ப்ரஸ்ட் பம்ப் மூலம் தாய் பாலை எடுத்து குளிர்பதன பெட்டியில் வைத்து விட வேண்டும். இவன் அதை பால் புட்டியில் ஊற்றி குழந்தைகளுக்கு புகட்டி விடுவான்.
இத்தனை நாட்களுக்கு பிறகு இதோ இன்று தான் அந்த பாக்கியம் கிட்டியிருக்கறது.

கை கால்களை உதைத்து அழும் தன் மகவின்அழுகுரல் குழல் ஊதும் கண்ணின் இனிய கானமாக கேட்டது நீருவுக்கு . தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தவளை

"பீட் பண்ணற எண்ணம் இப்பவாது இருக்கா? "

இல்லை எப்பவும் போல என
பால் பாட்டிலை காட்ட

"இல்ல... இல்ல ...வேண்டாம் இதோ?" என அவள் அங்கேயே அமர்ந்து விட்டாள். தன் குழந்தையின் குளிர் கூட உறைக்கவில்லை.

"உன்ரூம்க்கு போ?"

என்ற வாக்கிய்ததை அவன் முடிக்கும் முன்னம் அவள் அமுதூட்ட ஆரம்பித்து இருந்தாள். அதுவோ பால் பாட்டில் குடித்து பழகிய சுகத்தில் மாட்டேன் என அழ மெல்ல மெதுவாக அனைத்து தட்டி பழக்கப்படுத்தினாள். அவளது ஸ்பரிஸத்தில் ஆசுவாசப் பட்ட குழந்தை அருந்த தொடங்கியிருந்தது. சற்று நேரம் இப்போது வயிறு நிறைந்து விட சீலைத் தலைப்பில் இருந்து வெளியே தலையை நீட்டி இவள் முகம் பார்த்து சிரித்தது.

தன் சேலை தலைப்பிலேயே வாயை துடைத்தவள் ,

" என் பட்டு குட்டி "

என கொஞ்சி சிரிக்க அதுவும் பதிலுக்கு சிரித்தபடிமாங்கல்யத்தையும் பிடித்து இழுக்க அந்த மெல்லிய இழுப்புக்கு உடன் பட்டு கீழே குனிந்த அவளது கருவிழிகளையும் மூக்கையும் பிடிக்க முயன்ற அப்பேதை குழவியின் கரங்கள் பட்டு அவள் நெற்றியில் இருந்த பொட்டை கலைத்து விட

மேலும் கொஞ்சிட எண்ணியவள் முன் கை நீட்டி இருந்தான்.

" கொஞ்ச நேரம் வைச்சிக்கறேனே "

என்றவளது முகத்தின் குங்குமம் அழிந்து சேலை நலுங்கி இருந்த தோற்றம் அவனுக்கு வேறு ஒன்றை நினைவு படுத்த . அவன் பார்வை மாறியது ஒரு நொடிதான் மறுநொடி அதற்குள் அது நினைவிற்கு வந்துவிட,
.r
"ம் " என்ற உறுமலின் இனி கெஞ்சி பயனில்லை என்று புரிந்து விட , குழந்தையை அவன் கைகளில் கொடுத்தவளின் மனம் இற்று போனது.


இங்கே நேரொருவரில்லாள் ஒவ்வொரு நிமிடமும் தான் கூறிய வார்த்தைகளை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.
 
அத்தியாயம் 19



அதீரை நீருவின் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் பின் எந்திரமாகிப் போனாள். வேலை வேலை விட்டால் வீடு அவளது அறை என்றாகிப் போனாள்.


அன்று வெள்ளை நிறத்தில் தங்க ஜரிகையிட்டு ஊடே கொடி கொடியாக அதே நிறத்தில் வேலை பாடு செய்த அந்த பின்னி புடவையில் பேரழகியாக அமர்ந்திருந்தவள் , கண்களோ முகமோ உடல் மொழியோ பேசவில்லை.


அவளது அருகில் வந்தமர்ந்த அவளது தந்தை தினகரன் , ஏதோ கூறிக் கொண்டிருந்தார்.


தட்டிலிருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் , மேலும் ஒரு இட்டிலியை வைக்க வந்த பணியாளருக்கு முள் கரண்டியையும் கத்தியையும் தட்டில் ஒன்றன் மீது ஒன்றை குறுக்காக வைத்து போதும் என்ற குறியீட்டை வைத்தவள் , எழுந்து கொண்டாள். கைகளை கழுவி துடைத்துக் கொண்டவள் , மீண்டும்


"ம் "

என்றபடி அதீரை கால் மேல் போட்டபடி தினகரன் முன் அமர்ந்தாள். அவள் தந்தை தினகரன் இப்போது மீண்டும் ஒரு முறை


" அது , வேற ஒன்னுமில்லடா குட்டி மா , சந்தரசேகர் இருக்கான் ல அவன் பையனுக்கு கேட்கறான் அதான் ... "


என்று இழுத்து நிறுத்தி இவள் முகத்தை பார்க்க அவருக்கு ஒன்றும் புரியவில்லை.


"மூஞ்சிய பாரு எப்ப பாரு இப்படியே வைச்சிக்க வேண்டியது , எதனாச்சும் புரியுதா பாரு ? அப்படியே அவ அப்பனாட்டம் "


என மனதிற்குள் குமைந்தார். தினகரனின் மகள் அல்ல அதீரை அவள் தந்தை இறந்து போனதும் சொத்துகளை பராமரிக்க அதீரையின் தாய் வெண்மதி தினற அதை தன் முனையாகக் கொண்டு அவரது கவனத்தை கவர்ந்து கணவனாக உயர்திருந்தார் தினகரன் .


ஆனால் அதீரையின் அப்பாவாக முயலவில்லை. வெண்மதியை ஆட்டுவிப்பதன் மூலமே தனது தேவைகளை சாதித்து கொண்டவர் அறியாத விடயம்,அவள் மேஜராகும் போதிலிருந்து சொத்துக்கள் அனைத்தும் அதீரையின்

பெயரில் மாறி விடும் என்பது தான்.


இதை அறியாமல் சுக வாழ்வு வாழ்ந்தவர் தலையில் இடி விழுந்தது. அதீரை பொறுப்பேற்றதும் .ஆனால் தாய்க்கும் மகளுக்கும் இடையே இருக்க வேண்டிய தொடர்பை முற்றிலும் சிதைத்திருந்தார். அது அவருக்கு சாதகமாகி இருந்தது. அதீரையை பொருத்த வரை அவர் அளித்த அந்த வரைமுறையற்ற சுதந்திரம் அப்போது மிகுந்த இன்பத்தை தந்தது.


இப்போது சுத்தமாக தினகரனை தவிர்த்துவிட்டிருந்தாள். அதற்கு காரணத்தை ஓரளவுக்கு அறிந்தவர் எரிகிற வீட்டில் பிடிங்கியது லாபம் என அதீரையின் எரியும் மனதை தனக்கு லாபமாக்க , இந்த நான்காம் தர ஒப்பந்த கல்யாணத்தை பேசி முடித்திட எண்ணியிருந்தார். ஏனெனில் அவன் ஏற்கனவே மூன்று தரம் விவாகரத்து செய்து விட்டு இப்போது நாலாம் தாரம் தேடிக் கொண்டிருக்கிறான். அவளையும் இவனையும் சேர்த்து வைத்தால் சேர்த்து வாழ்ந்தாலும் இவருக்கு லாபம் பிரிந்தாலும் அடுத்து இன்னொருவனை தேடிக் கொடுத்து விடலாம் அப்போதும் தனக்கு லாபம் என உணர்ந்து முழு மூச்சாக முயல


அதீரையோ இவர் கூறிய எதையும் காதில் வாங்கவே இல்லை. அது அவருக்கு இன்னும் . எரிச்சலை ஏற்படுத்தியது.


ஏற்கனவே அழுத்தமானவள், இப்போது இன்னும் அழுத்தமாகி விட்டிருந்தாள்.

அதீரையோ அன்றைய தினத்தை எண்ணுகையில் இதற்கா ? அத்தனை கஷ்டமும் என மனது வேதனையில் உழல இன்னும் தன்னை வேலையில் மூழ்க வைத்துக் கொண்டாள்.


அவளைப்பற்றி புரியாமல் செவிடன் காதான அதீரையிடம் தினகரன் திருமண சங்கை ஊதி பிரயோஜனம் என்ன?


தனது கைக்கடிகாரத்தை திருப்பி நேரம் பார்த்தவள் எழுந்து கொண்டவள், வாசலை நோக்கி நடக்க ?


இவள் எழுந்து கொள்வதை பார்த்த தினகரன்

" நான் அவங்களுக்கு என்னடா பதில் சொல்ல "


என்று பின்னோடு வந்தவரை , மேலும் கீழும் ஒரு முறை பார்த்தவள்


" ம்ஹூம் "


என்று விட ,


"அவள் பார்வை அதுக்கு நீ சரிபட்டு வர மாட்ட"


என்றிருந்தது. அவரோ சொகுசு வாழ்க்கைக்காக எதையும் செய்ய சித்தமாக இருந்தார்.தனது வாகனத்தில் ஏறியவள் உயிர்பிக்கும் முன் உள்ளே நுழைந்தது. வெண்மதியின் வாகனம் இவள் வாகனத்திற்கு எதிரே வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய டாவின்சியை பார்த்து இவள் தானாக இறங்கினாள்.


அவனோ இவளை கவனிக்கவே இல்லை. வாகனத்தின் மறுபுறம் வந்தவன் கதவை திறக்க உள்ளே இருந்து தள்ளாடியபடி இறங்கியது அதீரையின் தாய் வெண்மதி


நிற்க முடியாமல் தள்ளாடியவள் கரங்களை தனது தோளில் சேர்த்துக் கொண்டவன் தனது பையையும் எடுத்துக் கொண்டான். இருவரும் அவரது படுக்கையறைக்குள் நுழைந்ததும் கதவடைத்தவன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து தான் வெளியே வந்தான்.


வந்தவன் குளித்து வேறு ஆடை மாற்றி இருந்தான். தனது கையிலிருந்த பணத்தை எண்ணிக் கொண்டே வந்தவன், முன் அதீரை நிற்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் சற்று விலகி அவளை சுற்றிக் கொண்டு வெளியே சென்றிருந்தான்.அவளை கண்டு கொண்டதற்கான அறிகுறியே இல்லை , அவனிடம் .


தினகரனுக்கு குற்ற மனம் குறுகுறுக்க தொடங்கியது. வேண்டும் என்றே வெண்மதிக்கு பல பேருடன் முறையற்ற உறவு இருப்பதாக அதீரையை நம்பச் செய்தவர் , இப்போது என்ன செய்வது அறியாது நின்று விட்டிருந்தார்.


தினகரன் இன்றைக்கு தான் பார்கிறார். அதீரை ஒரு கடந்த வாரமாக பார்கிறாளே. ஆனால் எதுவும் கேட்கவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை டாவின்சி மீது. உள் மனம் வாதிட்டது ஏதோ ஒரு வலிமையான காரணம் உண்டென்று.அதனாலேயே அமைதியாக இருந்தாள்.


அவள் அருகில் வந்து நின்ற பணியாளர்


"அம்மா உங்கள பாக்கனும்னு சொன்னாங்க"


இதுவும் வழக்கமாக நடப்பதுதான் என்றாலும் அதீரை மறுத்து விடுவாள். இன்று ஏனோ மறுக்க தோன்றவில்லை. மெல்ல அவள் பாதங்கள் தாயின் அறை வாசலை நோக்கி திரும்ப நடக்க துவங்கின.


அறைக்குள் போக அனுமதி வேண்டி நின்றவளுக்கு அப்படியே திரும்பி விடலாமா? எனும் எண்ணம் தோன்ற

அதை செயல்படுத்தும் முன் ,


"எஸ் கம் இன் "


எனும் சொல் அவளது முடிவை மாற்ற .சில வருடங்களுக்கு பின் தாயின் அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள். உள்ளே நுழைந்தவளுக்கு எந்த மாற்றமும் இன்றி அந்த அறை அன்று எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் இருந்தது .


இவளைக் கண்டதும் எழ முயன்ற வெண்மதிக்கு , அது இயலாமல் போக கீழே விழப் போனவரை தாங்கி படுக்க வைத்தவள் அப்போதுதான் கவனித்தாள் அறை சுத்தப்படுத்தபட்டு இருப்பதை பார்த்தவளுக்கு புரிந்து போயிற்று.


வென்மதி வாந்தி எடுத்தால் தான் அவன் ஆடை மாற்றி இருக்க வேண்டும் என்பது புரிய அவள் மனதில் ஒரே கேள்வி ஏன் அதையே அவளது, முகமும் பிரதிபலிக்க நின்றாள்.


அதீரையை பார்த்து மெல்ல சிரித்த வெண்மதி அவளது கேள்விக்கான பதிலை கூறினாள்.


" கணையத்தில் புற்றுநோய் "


என்றவர்,


"டாக்டர் பாக்கனுமா "அதீரைக்கு


"தேவையில்லை , ட்ரீட்மென்ட் எடுத்துட்டு தான் இருக்கேன் "


என்றவருக்கு மூச்சிரைக்க எப்படியும் உண்மையை கூறி விடுவது என முடிவுக்கு வந்தவர்


"அதி என்னோட இந்த நிலைக்கு ஒட்டுண்ணி மாதிரி எனை உறிஞ்சி வாழ்ந்துட்டு இருந்த தினகரன் ஒரு காரணம் இன்னொன்னு உன்னயும் இழந்துடக் கூடாதுங்கற பயமும் தான் ... "


என்றவர் மேலும் தன்னை அவர் ஏமாற்றி மணந்து கொண்டதையும் சிறு வயதில் தான் எதுவும் செய்தால் அதுவே அதீரையின் உயிருக்கு ஆபத்தாகி விடுமோ? என அவர் மிரட்டியதில் பயந்ததையும் கூறியவர் ,


மேலும் எதுவோ கூறும் முன் மீண்டும்

மூச்சிரைக்க , வேண்டாம் போதும் அவரது கையை பிடித்துக் கொண்டு மெல்ல தலையசைக்க , தாயுடன் இத்தனை நாளாக துணையாக இல்லாததை எண்ணி கண்கள் கலங்க அமர்ந்து விட்டாள்.


அவளது கண்ணீரை துடைத்து விட்ட வர் முகத்தில் இன்றேனும் புரிந்து கொண்டாயே என்ற நிம்மதி மட்டுமே ...


வெளியே வந்தவள் நேரே வந்து நின்றது தினகரனிடம் தான்.


"இன்னும் அஞ்சு நிமிஷத்தில வீட்டை நீங்க வெளிய போயிறுக்கனும் இல்ல ..."


என்று நிறுத்திய விதம் கூறியது. அவள் அனைத்தையும் அறிந்து கொண்டாள் என்பதை , வேறு வழியின்றி தனது உடமைகளுடன் வெளியேறினார்.


அன்றிலிருந்து இன்று வரை வெண்மதிக்கு தேவையான வற்றை செய்வது அதீரை தான். அதில் தாய் கும் மகளுக்கும் இடையே உள்ள பினைப்பு இந்த இப்போது இருகி இருந்தது. இப்போ தெல்லாம் அன்னையிடம் கூறுவதற்காகவே பல விஷயங்கள் அவளிடம் இருந்தன.


அவருக்கும் காலையில் காபி குடிப்பது தொடங்கி பல விஷயங்கள் இருந்தன. மகளிடம் கூற இருவரும் ஒரு சேர தள்ளிப் போட்டது டாவின்சி விஷயம் தான்.


அதீரைக்கு அவளாக கூற விருப்பம் இல்லை, வெண்மதிக்கு தயக்கம் இருவரும் அதை தவிர மற்றபடி இயல்பாகத்தான் இருந்தனர்.


டாவின்சி அதீரையின் தாயை சந்தித்த முறையை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான்.


நீருவின் வீட்டை விட்டு வெளியேறியவன், நேரே தனது ஆர்ட்கேலரிக்கு தான் சென்றான் அங்கேயே தங்கிக் கொண்டான் . தனது பழைய தொழிலை விட்டொழித்தவன்.


நேர்மையான முறையில் தனது வாய்புகளை தேடியவன் , பல பகுதி நேர வேலைகளை பார்த்தான். அதில் ஒன்று தான் இந்த கார் ஓட்டுநர் அதாவது பாரில் அளவுக்கு அதிகமாக குடித்தவர்களால் வாகனத்தை ஒட்ட முடியாது, எனவே அவர்களுக்கு என வாகனத்தை ஓட்டும் பணியை செய்தான்.


அன்று ஒரு கம்பெனியின் விளம்பரத்திற்காக மாடலாக நடித்துக் கொண்டிருந்தவனை காண அதீரையின் தாய் வெண்மதி வந்திருந்தார் .
 
டாவின்சி ஒரு முறை கார் ஓட்டுநராகத்தான் வெண்மதிக்கு டாவின்சி அறிமுகமானான். அவனிடம் மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு ஒரு மணி நேரம் மட்டும் தன்னை கவனித்து கொள்ளும் பணியை ஒப்படைத்தவர் டாவின்சிக்கும் அதீரைக்கும் இடையேயான உறவினை அறியவில்லை.

பிறகு அன்று அவள் அதிர்ந்த தோற்றத்தையும் பிறகு சில நொடிகளில் எனக்கென்ன ? என்ற பாவனையும் பார்த்தவர் முதலில் அது தனக்கு என்று தான் நினைத்தார். பிறகு தான் அது டாவின்சிக்கானது என்று புரிந்து கொண்டவர் ,

இன்று டாவின்சியை நேரில் பார்க்க வந்திருந்தார். அது ஒரு வெளிப் புற படப்பிடிப்பு எனவே , வென்மதியை பார்த்ததும் அவர் அருகில் வந்தவனிடம்

"நான் கொஞ்சம் பேசனுமே"
என்றவர் அமர நாற்காலி ஒன்றை எடுத்துப் போட்டவன்

"ப்ளீஸ் , வெயிட் பார் ப்யு செகன்ட்ஸ் "

என்று விட்டு நேரே அந்த விளம்பர இயக்குநரிடம் சென்று அனுமதி பெற்று
திரும்பினான்.

வெண்மதி வீட்டிலிருந்து கிளம்பிய சில நிமடங்களிலேயே, அலுவலகத்தில் இருந்து திரும்பியிருந்தாள் அதீரை

"அம்மா "

என அழைத்தபடி வெண்மதியின் அறையினுள் உள்ளே நுழைந்தாள் . அறையில் காணவில்லை என்றதும் என்றவுடன் , வீடு முழுவதும் தேடியவள் , அலைபேசிக்கு அழைக்க அது அனைத்து வைக்கப்பட்டிருந்தது.

சட்டென்று அவள் நினைவில் இன்று காலையில் வெண்மதி டாவின்சியை பற்றியும் அவன் இருக்கும் இடம் பற்றியும் விசாரித்தது நினைவில் வர ,
தாய் எங்கு சென்று இருக்கக் கூடும் என யூகித்தவள்,

அடுத்த நொடி வாகனத்தில் இருந்தாள்.அவளது வாகனம் அந்த படப்பிடிப்பு நடக்கும் இடத்தினுள் நுழைந்து நிற்கும் போது தான் , டாவின்சி இயக்குநரிடம் அனுமதி பெற்றுக் கொண்டிருந்தான்.எனவே அவன் அதீரை உள்ளே நுழைந்ததை கவனிக்கவில்லை.


அனுமதி பெற்று திரும்பியவன் வெண்மதியின் முன் அமர்ந்தவன்

"சொல்லுங்க என்ன விஷயம் ?"

என்றதும்அவர் எதுவும் சுற்றி வளைத்து கேட்கவில்லை

"நீ அதீய லவ் பண்ற யா?"

நேராக அவனது முகத்தை பார்த்து கேட்க
அவர்களின் அருகில் வந்திருந்த அதீரையும் அதை கேட்டபடி நின்றிருந்தாள்.

வெண்மதியும், டாவின்சி இருவருமே அதீரையை கவனிக்கவில்லை. அவர்களின் கவனம் இருவரது வார்த்தையிலும் நினைவிலும் குவிந்து இருக்க, டாவின்சி அவர் கேட்டு முடிக்கும் முன்

"எஸ் "

என பதில் கூறியிருந்தான்.

"அப்ப அவள கல்யாணம் பண்ணிக்க "

என்றவரின் வார்த்தைகளுக்கு

"ஸாரி,என்னால அவள போர்ஸ் பண்ண முடியாது எதுக்காகவும் … "

என்றவன்

"எங்க குழந்தைக்காக கூட "

என்றவன் அவர்களுக்கிடையே நடந்தவற்றில் அவனது தவறு பெரும்பான்மையாக இருக்க... என்ன? அடிப்படையில் என்னை திருமணம் செய்து கொள் ...என்பது , என நினைத்தவன் எதைப் பற்றியும் கூறவில்லை .எதுவாயினும் இனி அவள் புறம் இருந்து தான் ...என்று முடிவு செய்தவன் அமைதி காக்க

வெண்மதியோ அதீரையின் நிலை குறித்து எதுவும் கூற இயலாது, அதே சமயம் இப்படி எதற்காகவும் வற்புறுத்த முடியாது, என்பவனிடம் மேற்கொண்டு என்ன பேச ?என்பதாய் சற்று சோர்ந்த முகத்துடன் எழ ,

அதீரையோ மிக மகிழ்வில் இருந்தாள். எங்கே தனக்காக அவன் தன்னை விரும்பவில்லையோ? குழந்தைக்காக தன்னை கட்டாயப்படுத்துவானோ? இல்லை நீருவின் வாழ்க்கைக்காக என்று சொல்லி விடுவானோ என்ற பயங்களை ஆம் அவளை நேசிக்கிறேன் ஆனால் கட்டாயப் படுத்த மாட்டேன் எனும் வார்த்தை , அவளது அனைத்து தளைகளையும் மாயமாக்கி இருந்தது.

டாவின்சியின் முன் வந்து நின்றாள் ,
அவள் எதிரில் வந்து நின்றதிலேயே ,
அதிர்ந்து போய் அவளை கனவா ? நனவா? பார்த்தபடி இருந்தவனை கரம் கொடுத்து மேலே எழுப்பினாள். அவன் த என்ன நடக்கிறது என உணரும் முன்பே
தன்னுடன் இழுத்து அனைத்து இதழில் முத்தம் வைத்து, அவன் வார்த்தைகளில் சொன்னதற்கான பதிலை செயலில் கொடுத்தாள்.

மகளின் செயலில் வெட்கம் கொண்டு திரும்பி நின்று விட்டஅன்னையின் மீது கரங்களை போட்டபடி

"போலாமா?"

என்றபடி நடக்க , வெண்மதி திரும்பி டாவின்சியை பார்க்க , அவன் எங்கே இங்கே இருக்கிறான்? அவன் மேகக் கூட்டங்களிடையே மிதந்து கொண்டல்லவா இருக்கிறான்.
என்னவாகுமோ? என்றபடி வந்த
தாயின் காதருகே குனிந்தவள்,

" நோ வொரீஸ் தெளிஞ்சப்பறம் வருவான் "

என்றவள் வாகனத்தின் கதவை திறக்க , வெண்மதி புரிந்து கொண்டவராய் சிரித்தபடி உள்ளே ஏறிக் கொள்ள நீண்ட நாட்களுக்கு பிறகு மிக இலகுவாக மகிழ்வாக உணர்ந்தவள், எதை எதையோ பேசிக் கொண்டு வந்தாள்.


இங்கு நிக்கோலஸ் வெளியில் செல்ல தயாராகி வந்தவன் கண்களில், உணவு மேசையின் நாற்காலியில் அமர்ந்து உண்ணாமல் எங்கோ ? வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நீரு விழ அவளை நெருங்கியவன்,

அவள் நினைவு இங்கில்லை என்பதை உணர்ந்தவனாக மேசை மீது தட்ட அந்த ஒலியில் திடுக்கிட்டு திரும்பியவளிடம் ,

" நான் வெளிய போறேன் வர லேட்டாகலாம் அது வரைக்கும் குழந்தைகளை பாத்துக்க முடியுமா?"

என்றதும் நீருவின் முகத்தில் விரவிய மகிழ்வு

" ஒரு பேபி சிட்டராத்தான் "

என்ற வார்த்தைகளில் காயப்பட்டு போனது. இன்று நேரொவரில்லாளுக்கு நிக்கின் வார்த்தைகள் கோபத்தை வரவழைத்து விட்டது.

" அது என்ன பேபி சிட்டர் பெத்தவளுக்கு தெரியாதா குழந்தைய எப்படி பாத்துக்கனும்னு"

என முனுமுனுக்க, அவளை ஒரு ஏளனப் புன்னகையுடன் பார்த்தவன் ,

" தெரியும் தான் , ஆனா நீங்க தான் அந்த குழந்தைகளும் வேண்டாம் , அத கொடுத்தவனும் வேண்டாம்னு சொன்னது , இந்தாங்கோ இதுல மூனு மணி நேரம் என் குழந்தைகளை பார்த்துகறதுக்கான பணம் "

என்றவன் வெளியேறும் முன்
பணத்தை தூக்கி வீசியவள் ,

" என் குழந்தேளுக்கு நான் அம்மா ஆயா இல்ல"

என்றவள் கண்ணீருடன் உள்ளே சென்று விட்டாள். சிறு புன்னகையுடன் பணத்தை எடுத்துக் கொண்டவன் கரங்கள் வாகனத்தை செலுத்த, மனது அன்று நடந்த சம்பவங்களை நோக்கி சென்றது.




அத்தியாயம் 21



மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி இருந்தனர். இயற்கை முறையில் குழந்தைகளை பிரசவித்து இருந்தால் , அவள் உடல் நிலை நன்றாக இருப்பதாக கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர்.

அவளுக்கோ எல்லா நினைகளும் கூடவே டாவின்சியுடான நினைவுகளும்
மருத்துவமனையில் இருந்த நாட்களில் திரும்பி இருக்க முதலில் யாராவது எதையும் கேட்டு விட்டால் ? என்ற பயம் வர அனைவரையும் தவிர்க்கத் தொடங்கினாள். அனைத்தையும் தனக்குள்ளாகவே வைத்து அழுத்தத் தொடங்கினாள். விளைவு ...எதன் மீதும் வெறுப்பு வரத் தொடங்கியது.

அன்று குழந்தைகள் பாலுக்கு அழத் தொடங்க , அவளோ கண்டும் காணாமல் அமர்ந்திருந்தாள். வேறு வேலையில் இருந்த நிக் அழுகுரல் கேட்டு வந்து குழந்தையை தூக்கியவன்

"நோ... நோ … அழாதீங்க ஹனி "

என ஆதரவாக முதுகில் தட்ட முதலில் இலேசாக சமாதானம் ஆன குழந்தை மீண்டும் அழ

" நீரு பீட் பண்ணு, ரொம்ப அழறான் பாரு"

என அவளிடம் குழந்தையை நீட்ட , அவளோ குழந்தையை திரும்பிக் கூட பாராமல் ,

"இது என்ன என்ன எப்ப பார்த்தாலும் நை நைன்னு பாலக் குடு மோரக்குடுன்னு என்னால முடியாது. "

என்று வெடுவெடுவென விழுந்தவள் மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.

" இல்ல நீரு நான் சொல்லறத கொஞ்சம் கேளு "
என்றவன் வார்த்தைகளை முடிக்கும் முன்

" சை இந்த இம்சைகள தூக்கின்டு முதல்ல வெளில போங்கோ , சித்த நாழி
நிம்மதியா விடுங்கோ "

என்று அவள் மன சோர்வில், கத்தியதில்

"ஒகே , ஒகே நீரு டேக் ரெஸ்ட் "

என்று வெளியே வந்தவன், நேரொருவரில்லாளின் சோர்வை குழந்தை பிறந்ததால் வந்த உடல் சோர்வு என எண்ணிக் கொண்டான்.

ஏனெனில் பிறந்த குழந்தைகள் அடிக்கடி பாலுக்கு அழும் , அது இப்போது இரட்டை குழந்தைகள் என்பதால் ஒருவர் மாற்றி ஒருவர் அழ அதனால் போதிய உறக்கம் அற்றது , நினைவுகள் திரும்பிய குழப்பம் , உடல் சோர்வு ஹார்மோன்களின் மாற்றம் அவளை மனச் சோர்வுக்குள் தள்ளி இருந்தது. நிக் இன்னும் சற்று ஆழ்ந்து கவனித்திருந்தால் அதற்கு பின் நிகழ்ந்தவற்றை தடுத்திருக்கலாம்.

நினைவுகள் முற்றும் திரும்பப் பெற்றவள் மனம் இருவேறாக பிரிந்து நின்றது.

"நீயா? நீயா ?இப்படி
உன் கணவன் என்று மற்றொறுவனை நினைத்து வாழ்ந்தாயா?"

என சிரிக்க

"இல்லையே.. அவன் சாயல் அவனிடம் இருக்க போய்தானே.. "

என இவள் கெஞ்ச

"சாயல் இருந்தால் எவனையோ ? கணவனாக நினைப்பாயா?"
எனக் குதறியது மனம்

"என்னவனையே எண்ணியிருக்கையில்
அவனை கொணர்ந்தது விதியல்லவா…
அவனை நிக்காக பதிய வைத்து மூளையின் சிறு தவறல்லவா…"

என்றவளின் மறுகலுக்கு

"இதை நான் நம்புவேன் ஊர் நம்புமா?
உன்னை என்ன பேசும் தெரியுமா?"

என்றது அது.

"என்ன பேசும்? "

என்றவள் நடுங்க கேட்க

"நீ கள்ள தொடர்பில் இருந்தாய் "

என்று பேசும் என்றது.

அதை கேட்டவளுக்கு கூசிப் போயிற்று நரம்பெல்லாம் நெருப்பாறு பாய இப்போதே இந்த உயிர் போகாதா…? என எண்ணியவளை பார்க்க

"அது எல்லாம் கற்பரசிகளுக்கு உன் போன்றோர்க்கு இல்லை "

என கத்தி சிரித்தது.

" எனக்கு விவரம் அறிந்தது முதல் என் மனதில் யாரையும் நினைத்தது இல்லை.
இவரை பார்த்த நொடி முதல் இதயத்தில் பதித்ததால் தானே... இவரோட வாழ முடியாவிட்டாலும், கடைசி வரைக்கும் இவர நினைச்சின்டு தனியா வாழ இருக்க முடிவு பண்ணினேன். வேறோருத்தன் முன்ன நிக்கனும் கனவுல கூட நினைச்சதில்லையே ….

நான் யாருக்கு என்ன பாவம் பண்ணினேன் ? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கறது?"

என புலம்பியவளுக்கு

அவளது தந்தை மணிவண்ணன் அவர்களது விஷயம் அறிந்து அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க அப்போது தான் கூறியது நினைவில் வர

" அப்பா நீங்க மாப்பிள்ளை பார்க்க வேற யாரையோ வர சொன்னப்ப கூட உங்க வார்த்தை கேட்டு உங்க பொண்ணா இருந்துட்டு போறேன் ஆனா இன்னொருத்தன் முன்னாடி நிக்க முடியாதுன்ன சொன்னேனே
நான் சொன்ன வார்த்தைக்காக எனக்கு இவர கல்யாணம் பண்ணி வைச்சே ளே ,
இப்ப நானே இன்னோர்த்தன என் வாழ்க்கையில் கொண்டு வந்துட்டேனே "

என தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். மறுகணம்

"என் உள்ளம் அவனை ஏற்க வில்லையே?"

என்ற அவளது துடிப்பிற்கு

"அதை யார் நம்புவார்?"

என எக்காளம் செய்ததது.

"அவனை நீ யாராக ஏற்றாய்?"

என எதிரியாகி கேட்க

இவள் கூனி குறுகி போனாள்.

"நான் உடலால் ஒரு தவறும் செய்யவில்லையே"

என கதற

"ஆனால் அவன் அழைத்திருந்தால் உடன்பட்டிருப்பாய் தானே"

என்ற கேள்விக்கு என்ன பதில் கூறுவாள்?. இல்லை என்பது தான் உண்மை அதை விட நடக்காத விஷயத்திற்கு என்ன பதில் கூற முடியும்?

"ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன் கற்பு நெறி என்னவாயிற்று?
எங்கே போயிற்று உன் ஒழுக்கம்?
ஊரார் என்ன பேசுவர்
இவள் இன்னோருவனுடன் … இருந்தவள் தானே…
என எள்ளி சிரிக்கு மே
இனி எப்படி உங்களோட வாழ்வேன் நிக்?
எங்காவது அவனை பார்த்தால் …
உங்க கூட இருக்கும் போது இந்த நினைவு வந்து விட்டால்… "

என கண்டதையும் நினைத்து குழம்பியவள் , சுற்றிலும் பார்க்க

குழந்தைகளை பற்றிய நினைவு வர , அவர்களை எண்ணி பார்த்தவளுக்கு தன் மீது இன்னும் கழிவிரக்கம் தோன்ற

"இப்படிப்பட்ட ஒழுக்கம் கெட்ட ஒரு தாய் என் குழந்தைகளுக்கு தேவையில்லை.
எண்ணத்திலும் வாழ்விலும் தூய்மையான என் நிக்கிற்கு , இந்த களங்கப்பட்ட நான் வேண்டாம்.
இந்த வாழ்வும் வேண்டாம்"

என நினைத்தவள் அடுத்த நொடி அதை
செயல்படுத்தி இருந்தாள்.

இவளை பார்க்க வந்த அதீரை , நிக்கிடம்

"நீரு எங்க "

இவள் பால் கொடுக்க மறுத்ததால் . செயற்கை பால் புகட்டியவன் , குழந்தைகள் அழுததில் சோர்ந்திருந்தால் அவர்களை தூங்க வைத்தபடி

" அவ ரூம்ல " என கண்களை காட்ட

"ம் பார்த்துக்கறேன்"

என்றவள் நீருவின் அறைக்கதவை தட்ட
கதவு திறக்கவில்லை .மீண்டும்

"நீரு.. நீரு..."

என கதவை ஏதோ உள்ளே பிசைய சிறு பதற்றத்துடன் மீண்டும் மீண்டும் தட்ட , அது திறக்கவில்லை என்றதும் அதீரை

" நிக்...நிக் … நீரு கதவை திறக்க மாட்டேங்கறா என்னனு பாரு"

என அலற அப்போதுதான் குழந்தைகளை தூங்க வைத்தவன் சாப்பிட அவளையும் , நீருவையும் அழைக்க எண்ணியவன் இவளது கதறலில் பதறி ஓடி வந்தான்.

"நீரு… நீரு… "

என கதவை உடைக்க பலன் இல்லை என்றதும் , அவன் உள்ளுணர்வு உரைத்த செய்தி

'உன் நீரு ஏதோ தவறான முடிவு எடுத்து இருக்கிறாள் '

என்பது தான் அடுத்த நொடி ஒரு இரும்புக் கம்பி கொண்டு கதவை உடைத்திருந்தான்.

உள்ளே சென்ற இருவரின் இதயமும் அடுத்த கணம் துடிப்பை நிறுத்தியிருந்தது.
தன்னவள் தூக்கில் தொங்கி உயிருக்கு ஊசலாடுவதை கண்டவன் , செயலற்று நின்றது சில நொடிகள் தான் ,
மறு கனம் அவளை ஏந்தி பிடித்திருந்தான்.
முடிச்சை தளர்த்தியவன் அவளை இறக்கும் வரையிலும் அதீரைக்கு சுய உணர்வு இல்லை. அசையவும் இல்லை.

"யு பூல் அதீ பிரிங் சம் வாட்டர் "

என நீரு மடியில் வைத்தபடி கத்தவும் தான், நினைவு வந்து தண்ணீர் எடுக்க விழுந்தடித்து கொண்டு ஓடினாள்.

கிச்சனில் டம்பளரை பதட்டத்தில் தேடி நான்கு பாத்திரங்களை தள்ளி கையில் அகப்பட்ட ஏதோ ஒன்றில் நீரை பிடித்தவள்

"இந்தா இந்தா தண்ணி "

என்று நிக்கின் முன் நீட்டியவளின் முகம் முழுவதும் வியர்த்து உடல் முழுவதும் பயத்தில் ஆடிக் கொண்டிருந்தது.

அவள் எது நடந்து விடக் கூடாது என்று பயந்து கொண்டிருந்தாளோ , எதற்காக டாவின்சியை ஏற்றாளோ ?
எதை எண்ணி அவர்கள் பிரிந்தனரோ அத்தனையும் ஒரு நொடியில் வீணாக்கியிருந்தாள்.

நேரொருவரில்லாள் மட்டும் இறந்திருந்தால் … அதை நினைக்கவே நடுங்கியது , அந்தக் குற்ற உணர்ச்சி அவளை காலத்திற்கும் கொன்றிருக்கும்.
இதை நினைக்கையிலேயே அச்சத்தில்
தடதடத்து கொண்டிருந்தது உடலும் மனமும்

இதை கவனிக்கும் நிலையிலா நிக்கோலஸ் இருக்கிறான். பட்டென்று அவள் கையிலிருந்து நீரை பிடிங்கி முகத்தில் தெளிக்க மூச்சுக் காற்று கிடைக்காமல் மயங்கி இருந்தவள்,
தெளிந்து சிறு இருமலோடு கண் விழித்து பார்த்தாள்.

கண்ணிரண்டும் கலங்கி இருக்க முகம் முழுவதும் சிவந்து இருக்க படாரென்று ஒரு அறை கன்னத்தோடு சேர்த்து வைத்தான்.அவன் வைத்த அறையில் பொறி பறக்க மலங்க மலங்க பார்த்திருந்தாள். அதீதத்தில் அழுகை கூட வரவில்லை அவளுக்கு

அடுத்த நொடி முகம் முழுக்க முத்தம் இட்டவன் மார்போடு சேர்த்து கட்டிக் கொண்டான்.

"நீரு .. நீரு … "

என புலம்பியவனுக்கு வேறு எதுவும் சொல்ல வரவில்லை. சற்று நேரத்தில் நரகத்தை அல்லவா கண் முன் காட்டி விட்டாள்.

ஏதேனும் ஆகியிருந்தால்? என்பதிலேயே நெஞ்சம் உலர்ந்து போயிருந்தது அவனுக்கு , அவளது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள இன்னும் இறுக்கி கொண்டான்.

நேரொருவரில்லாளுக்கும் இந்த அனைப்பு ஆறுதலை தர அவனுள் புதைந்தாள்.

அப்போது அவள் மனதில் வேறு எந்த நினைவும் இல்லை. மெல்ல அப்படியே உறங்கி போனாள். அவளை படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தவன் .

வாழ்விற்கும் சாவிற்கும் இடையேயான விளிம்பு நிலைகளை ஏற்கனவே பலமுறை கண்டு வந்த பக்குவம் , இதை விட மோசமான சூழ்நிலைகளை கடந்து வந்ததாலோ என்னவோ தெளிவாக சிந்தித்தான். அதிக பதற்றம் இன்றி நிதானமாக இருந்தான்.

அதீரையின் மனதினை அதன் குழப்பங்கள் இப்போது பற்றி நிக்கோலஸ்க்கு தெளிவாகிவிட்டிருந்தது.
டாவின்சி விஷயத்தை எளிதாக கடந்து வர அவள் வளர்ந்த சூழல் அவளுக்குள் கற்பினை ஒழுக்கத்தினை பற்றி பதிக்கப்பட்டிருக்கும் புரிதல் ஏற்றுக் கொள்ள விடவில்லை. என்பதை புரிந்து கொண்டவன் அடுத்து என்ன செய்வது என எண்ணியபடி வந்தவன்

அதீரையை பார்க்க அவளோ சர்வமும் ஒடுங்கிப் போய் நின்றாள்.

"அதீ , அதீ .. " என உலுக்க , அதில் சுயம் வந்தவளாக

"நா …. நான்… தப்பு பண்ணிட்டேனா நிக்"

என கண்களில் நீர் வழிய வினவியவளின் தோளில் கரம் போட்டு இழுத்து வந்து நாற்காலியில் அமர வைத்தவன். இருவருக்குமாய் காபி தயாரித்து இரண்டு கப்களில் ஊற்றியவன், ஒன்றை அவளிடம் கொடுத்து விட்டு மற்றொன்றை தான் எடுத்துக் கொண்டான். சில மிடறுகள் விழுங்கியவன்,

" சீ அதீ பாஸ்ட் இஸ் ஆல் வேல்ஸ் பாஸ்ட், இது நடந்து முடிஞ்ச ஒரு விஷயம் , அதுக்கு இப்ப வருத்தப்பட்டு ஒன்னும் செய்ய முடியாது. பட் தட் டாவின்சி என் கண் முன்னாடி வரக்கூடாது பார்த்தேன்"

என்றவன் அமைதியாக முகம் மாறாது தான் கூறினன் என்றாலும் அவன் தோற்றம் கூறியதும் அமைதி என்றாலும் அமைதியை உள்ளடக்கிய ஆழ்கடல் எரிமலைகளையும் உள்ளடக்கி தான் இருக்கிறது. அதன் எரிமலை வெடிக்கும் போது பொங்கும் பேரலை அனைத்தையும் அழித்து விடும். என்பதை சிறு வார்த்தையில் உணர்த்தி இருந்தான்.

ஆத்திரம் வரத்தானே செய்யும் என்ன தான் அவன் திருந்தி இருந்தாலும் அடுத்தவன் மனைவியை தவறாக பார்த்தது உண்மை தானே,
தன் மண்ணை அடுத்தவன் தவறாக அபகரிக்கும் எண்ணத்தில் பார்த்தாலே அவன் உயிரைக்கும் பறிக்கும் திறம் பெற்றவன், தன் மனைவியை தவறான நோக்கத்தில் பார்த்தவனை உயிருடன் விட்டு வைத்திருப்பது தனக்காக மட்டுமே என்பது கூட புரியாதவளா ? அதீரை

" நிக் பட் அவன் இப்ப" என அவள் மேலும் ஏதும் கூறும் முன்

"லுக் அதி நீரு நீட் சம் டைம் ,அன்ட் வீ நீட் ஸ்பேஸ் , எக்ஸ் ல்வர்ஸ் இருக்கலாம் , ஆனா எக்ஸ் ப்ரண்ட்ஷிப் இருக்கக் கூடாது, சோ யு ஆர் மை ப்ரண்ட் பட் நாட் இன் டச்"

என்றவன் முகத்தை இமைக்காமல் சில நிமிடம் பார்த்தவள் அதில் தெரிந்த எதிலோ
"ஒகே நிக் பை"

என்று ஏற்றுக் கொண்டவள், கை பையை எடுத்துக் கொண்டு வெளிேயறி விட்டாள்.

"நட்பை மதிப்பதானால் நகர்ந்து நில்", என்பவனிடம் எதைப் பற்றியும் கூற விழையவில்லை. அதில் பலனும் இல்லை. ஏனெனில் அவனுக்கே அனைத்தும் தெரிந்திருக்கும் போது இவள் என்ன புதிதாக கூறி விடப் போகிறாள்.
இந்த விலகல் நன்மை தர வேண்டும் என வேண்டிக் கொள்வதை தவிர?


ஆனால் நிக் அதற்கு பிறகு நீருவிடம் இருந்து விலகி இருந்தான். அவளுக்கு குளிப்பதில் உதவுவது , சாப்பாடு தருவது என எல்லாம் செய்தான். ஆனால் கணவனாக உரிமையோ , பார்வையோ எதுவும் இல்லை.

குழந்தைகளை தனது அறைக்கு மாற்றிக் கொண்டவன் தாய் பாலிற்க்காக கூட அவளிடம் கொண்டு வரவில்லை. அவளுக்குத் தான் பால் கட்டிக் கொண்டு நெஞ்சின் வலி தாங்காமல் காய்ச்சல் வந்து விட்டது. இரவில் காயச்சல் மிகுதியில் அனத்த ஆரம்பித்தாள்.

" நிக் , நிக் " என ஜீர வேகத்தில் அவன் பெயரை ராம ஜெபம் போல புலம்பிக் கொண்டிருந்தாள். நெற்றியில் கரம் வைத்து பார்த்தவனை தலையனைக்கு பதிலாக கட்டிக் கொண்டு அவனுள் சுருண்டு கொண்டாள்.

அந்த நிலையிலும் நிக்கிற்கு சிரிப்பு வந்தது இவள் தான் அவனை விட்டு விலக நினைத்து உயிரை விட போனவள் இன்று தன்னினைவின்றி அவனை அனைத்துக் கொண்டு அவன் பெயரை புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

இது போன்ற அதீத அன்பு செய்பவளை அவன் இழப்பதா ? எதை கொண்டும் சரி செய்து விட திட்டங்களை ஏற்கனவே வகுத்தாகி விட்டது.

அந்த திட்டங்களின் வாய்கால் வழி இவள் நீராகி கொண்டிருந்தாள். நீர் அறிவதில்லை அதன் பயனை ஏற்க்கும் நிலம் உரைத்து விடுமே, அது போல அவளின் அன்பை அவன் அறியவானே .

காய்ச்சலில் அனத்தி கொண்டிருப்பவளை ஜஸ் பேக் வைத்து ஒத்தடம் கொடுத்தவன், காய்ச்சல் குறையவில்லை என்றதும் மாத்திரை கொடுத்து அருகில் இருந்து கவனித்துக் கொண்டான். அதனை அவள் அறியும் நிலையில் இல்லை.


வேறு வழியின்றி மருத்துவருக்கு அழைத்தவன் தற்போதைய நிலையும் கூறி மருத்துவரிடம் கேட்க அவர் பால் கட்டியிருப்பதால் அதனை சரி செய்ய
ப்ரஸ் பம்ப் முறையில் பாலை எடுத்து குழந்தைக்கு புகட்ட சொன்னார்.

அவனைப் பொறுத்தவரை அவளது குழந்தைகளுக்கும் அவளுக்கும் வேறுபாடு கிடையாது எனவே தானே கற்றல் முறையை அமல்படுத்தி இருந்தான் அவளுக்கு...
 
அத்தியாயம் 22


நீருவும் முதலில் இதை எதிர்பார்த்தாள் என்பதால் அவனது இந்த விலகலை முதலில் தன்னை வருந்தச் செய்ய அதை காட்டிக் கொள்ளவில்லை. பிறகு ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

குழந்தைகளுக்கென்றும் தன்னவனுக்கென்றும் தவிக்க தொடங்கிய மனதை கட்டி ஒரு நிலையில் நிறுத்த முடியவில்லை அவளால் .

அன்று காலையில் எழுந்தவள் இருபுறமும் குழந்தைகள் தூங்க நடுவில் இரவு முழுவதும் விழித்து இருந்தில் எந்த நிலையில் உறங்குகிறோம் என்று அறியாமல் தன்னையும் மீறி பாட்டிலை பிடித்தபடி அயர்ந்து உறங்கி இருந்தான் .

அவனை பார்த்து குறுஞ் சிரிப்புடன் , அதனை எடுத்து தள்ளி வைத்தவள்.

"நான் முழிச்சி பாத்துக்கறேன்னா சொன்னா கேட்டா தான, எங்க நம்ம சொல்லறத கேட்டா தான் கீரிடம் இறங்கிடுமே "

என்று தான் பார்த்துக் கொள்வதாய் கூறியும் மறுத்துவிட்டு தானே பார்த்துக் கொண்டவன் பால் மட்டும் கொடுக்க அவளை இரண்டு மூன்று முறை இடை இடையே எழுப்பியவன் பிறகு விடியும் தருவாயில் அவளை எழுப்ப மனமின்றி தானே பாலை ஆற்றி கொடுத்தவன் தானும் அப்படியே அயர்ந்து விட்டான்.

அதைத்தான் செல்லமாய் வாய்விட்டு குறைப்பட்டு கொண்டவள், அவிழ்ந்து கலைந்திருந்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டபடி ,
குழந்தைகளின் வேலைகள் தனது வேலைகள் என அனைத்தும் செய்பவன் மேல் ஆதூரம் பெருக , அவனுக்கும் தனக்கும்மாய் தேனீர் தயாரிக்க சென்றாள் .அடுப்படிக்குள் நுழைந்தவள் அங்கு இருந்த நிலையை பார்த்து

" இது என்ன கன்றாவி இது பார்க்க அடுக்களையா இல்ல கலவரம் நடந்த இடம் மாறி இருக்கு , "
என அவன் குழந்தைகள் அழ பாலாற்றும் அவசரத்தில் எடுத்த பொருட்களை அப்படி அப்படியே போட்டு வைத்திருந்தான். பால் ஆற்றிய பாத்திரத்தை கழுவும் இடத்தில் போட்டவள், பால் பவுடர் , சீனி ,கெட்டில் இவற்றை அதனதன் இடத்தில் சரிபார்த்து மூடி வைத்தபடி

"எந்த பொருளையும் எடுத்த இடத்தில் வைக்கறது கிடையாது .அப்புறம் அவசரத்திற்கு எப்படி கிடைக்கும்? , ராணுவத்தில இருந்தா அடுப்படியும் போர்களமாறியே இருக்கனும் போல … இரண்டு துப்பாக்கி மட்டும் தான் பாக்கி"

என்றபடி அங்கு அப்படியே கிடந்த அனைத்தையும் ஒதுங்க வைத்து அடுப்பை துடைத்து தேனீரை தாயரித்து இரண்டு கோப்பைகளில் ஊற்றி முடித்தாள்.
அதை எடுத்துக் கொண்டு திரும்பயவள் கண்டது அங்கே வாசலில் கரங்களை மார்பின் குறுக்காக கட்டிக் கொண்டு இவளை பார்த்தபடி நின்றிருந்த நிக்கை தான். அவன் நின்று கொண்டிருந்த விதத்திலும் பார்வையிலும் நேரொருவரில்லாளுக்கு புரிந்து விட்டது. இவன் வெகு நேரமாக நிற்கிறான். அத்துடன் தான் பேசியது அனைத்தும் கேட்டு விட்டான். என்பதும் புரிந்து விட

இத்தனை நேரம் இருந்த இயல்பு , தைரியம் இரண்டும் பின்னங்கால் பிடதியில் அடிக்க ஓடி விட , தயக்கம் வந்து சேர்ந்திருந்தது.

"இந்த டீய அவரண்ட கொடுக்கற வரைக்குமாவது இரேன்"

என தைரியத்திடம் கெஞ்ச அதுவோ

"உன் ஆம்படையான் பார்வையே சரியில்லை"

என்றது. அவனும் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தான் பால் பாட்டிலை வாங்கி வைத்ததிலேயே முழித்தவன் இவள் பேசியதை கேட்டு குறுஞ் சிரிப்புடன் பின் தொடர்ந்து வந்தவன் இவள் பேசியதை கேட்டபடி தான் நின்றிருந்தான்.

அவள் அந்த வீட்டின் , அவனின் உரிமைக்காரியாய் பேசியதை கேட்டதில் மகிழ்ச்சியில்அவளை அருகில் இழுத்து வைத்து கொள்ள பரபரத்த மனதை நிலைப்படுத்தி அவளை பார்க்க

நேரொருவரில்லாளோ ... அவனின் இலயித்த பார்வை புரிந்தும்

"ஏன் அவர் பார்வைக்கு என்ன குறைச்சல்?"

என தனமனதுடன் சன்டையிட

" விட்டா கண்ணு வழியாவே உன்னை உள்ள இழுத்துடுவர் போலன்னு நினைச்சேன் , ஆனா இப்ப வேற மாதிரி பார்க்கறார் . என்னைய விடு நான் ஒடிடறேன்"

என்று உரைத்த அது
தலைவியின் காதலன் முன் கையுருகிக் கொண்டு ஒட முயலும் தோழியாய் ஒடிவிட முயல

"இந்த ஆனா ஆவன்னாலாம் ஒன்னும் இல்லை சித்த நாழி என் கூட இரு இந்த டீய கொடுத்துடறேன் "

என்று ஒருவழியாக சில பல பேச்சுவார்த்தைகளை மன தைரியத்துடன் நடத்தி முடித்து அதனை துணைக்கழைத்வள் ,

"இந்தாங்கோ"

தேனீரை அவன் புறம் நீட்ட
அதை எடுத்துக் கொண்டவன் எதுவும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்து கொண்டான் .அவன் தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தானே. அவன் பின்னோடு வந்தவள் இவன் முகத்தை பார்க்கவும் ட்ரேயை பார்க்கவுமாய் இருக்க,

அதைப் பார்த்தவனுக்கு கோபம் வந்ததது. இப்படி தன்னிடம் தயங்கி பேசுபவளா தன்னவள்? நீரு இப்படி தன்னிலை மாறி இருப்பதை எண்ணி வருத்தம் மேலிட பேசப் போனவனை கண்ட அவன் மனம்

"ஹே நிக் வெயிட் வெயிட் அவ பார்வையே சரியில்லை இப்ப என்ன முடிவு பண்ணிட்டு வந்துருக்காளோ? "

என்றது எனவே மெல்ல எழுந்து கொள்ள போனான். அவன் உள்ளுணர்வு உரைத்தது சரி எனும் வகையில், அவளும் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்காமல், அவன் எழுந்து உள்ளே போகும் முன்

" வந்து... என்னால வெறும்ன சாப்பிட்டு சாப்பிட்டு உட்கார்ந்துக்க முடியாது இந்த ஆத்துல , எதாவது வேலை பார்க்கனும், சும்மா உட்கார்ந்து சாப்பிட இஷ்டமில்லை."

என்றாள் பட ப ட வென அந்த சாக்கிலாவது குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும் வீட்டில் அவனுடன் இன்னும் நெருங்க இருக்க வழி கிடைக்குமே என அவள் எண்ணியிருக்க,


' நான் என்ன யாரோ வா?
எதுவென்றாலும் சொல்ல இவளுக்கு உரிமையில்லையா ? '

என நினைத்தவன் தனது உரிமைகளை கூட யாசகமாக கேட்கிறாளே எனும் ஆத்திரம் மிக, நின்று நிதானமாய் அவளை ஒரு பார்வை பார்த்தான்.அதிலேயே அவளுக்கு சர்வமும் ஒடுங்கி விட , அவளின் அச்சத்தை கண்டு முயன்று தன்னை கட்டிற்குள் கொண்டு வந்தவன்

"எனக்கும் என் குழந்தைகளுக்கும்
ஹவுஸ் மெய்ட் தேவையில்லை… "

என்றவன்

" எங்களுக்கு தேவை நீ தான்"

என்பதை கூறவில்லை. அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தானே அவன் எதிர்பார்க்கிறான். அவளோ தான் தேவையற்று போய்விட்டோமோ? எனும் எண்ணம் தலைதூக்க

"அப்ப நான் வேலைக்கு போறேன், யாருக்கும் பாரமா இருக்க நேக்கு இஷ்டமில்லை. "

என்றவள் அவன் எதுவும் கூறும் முன் தனது அறைக்குள் சென்று விட்டாள் . அவளும் என்ன தான் செய்வாள் வேலைக்காரி என்ற அளவில் கூட தன்னை ஏற்காதவனை என்ன செய்வது?

இப்போது அவள் அவனிடம் தனது சுயமரியாதையை காப்பற்றிக் கொள்ள வேண்டுமோ ? என எண்ண தொடங்கி விட்டாள்.
இது நாள் வரை அவளை பொறுத்தவரை கல்வி என்பது அறிவை பெருக்கி கொள்ள உதவும் சாதனம் அவ்வளவே . மேலும் நிக் அவனை தாண்டி எதையும் யோசித்ததில்லை . எனவே எதற்கும் அவனை சார்ந்தவளாகவே இருந்தாள்.
எந்த ஒரு சிறு செயலுக்கும் முடிவுக்கும் அவனை அண்டியே இருந்தவள் .இன்று
இப்போது ஏதோ ஒரு விதத்தில் தன்னை தன் இருப்பை உணர்த்திட முயன்றாள்.

ஆனால் அதை அவன் மறுத்து வேறு வழிகளில் அதை மடைமாற்றி விட்டது அறியாமல் , வேலைக்கு செல்லும் முடிவை எடுத்தவள் தீவிரமாக முயற்சி எடுத்திருந்தாள். இவள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொண்டிருப்பதையும் தோழிகளிடம் பேசுவதையும் கவனித்த படி தனது மற்ற வேலைகளை நிக் பார்த்துக் கொண்டிருந்தான்.


மாலை வரையிலும் இந்த வேலையிலும் அதை சார்ந்த யோசனையிலும் தான் இருந்தாள். தன் முன் நிழலாட நிமிர்ந்தவள் தன் முன் நின்றிருந்தவரை பார்த்து வியப்பில் எழுந்து நின்று விட்டாள்.

"ஹாய் மை டியர் நீரு, டூ யு ரிமம்பர் மீ "

என்றவர் பிலிப் அவளது வழிகாட்டி மற்றும் நெறியாளர் அவளது ஆராய்சி கட்டுரைகள் அவரின் மேற்பார்வையில்தான் சமர்பித்திருந்தாள்.
அவர் பொருளாதார ஆசிரியர் மட்டுமல்ல அமெரிக்க அரசாங்கத்திற்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினரும் கூட

"நீரு... நீரு…."

அவரது அழைப்பில் நனவுக்கு வந்தவள்

" வாங்கோ , என்ன இப்படி கேட்டுட்டேள்? உங்கள என் குருவ மறக்க முடியுமா? "
என்றவள் பிறகு அவருக்கு புரியும்படி ஆங்கிலத்தில் வரவேற்றவள்.


அவருக்கு காபியை கொடுத்து விட்டு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். தனது காபியை அமைதியாக பருகி முடித்தவர் , கோப்பையை கீழே வைத்தவர் கோப்பையின் விளிம்பை சில வினாடிகள் நீவியபடி யோசித்தவர்

"நீரு என்கிட்ட அமெரிக்க பொருளாதார துறைல இருந்து இந்த பொருளாதாரம் தொடர்பான சில ஆலோசனை கேட்டு இருக்காங்க எனக்கு அந்த அறிக்கையை தயார் செய்ய எனக்கு நம்பகமான ஆள் உதவியாளரா தேவை உன்னால் உதவ முடியுமா? "

இதைக் கேட்டதும் முதலில் சற்று அதிர்வாக இருந்தாலும் பிறகு ஒப்புக் கொண்டாள் . வாயிலில் வந்து நின்ற வாய்ப்பை தவற விடவில்லை அவள் தான் தேடிக் கொண்டிருந்தாளே எனவே சரியாக பயன்படுத்திக் கொண்டாள்.

நீருவிடம் முன்னரே வந்த வேலை தான் இவள் தான் யோசித்தாள் .ஆனால் இப்போது ஏற்றுக் கொண்டாள்.
 

அத்தியாயம் 23



நேரொருவரில்லாள் பணிக்கு செல்ல தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. முற்றிலும் புதிய அந்த அலுவலக சூழல் , அவளுக்கு தரப்பட்டிருந்த பொறுப்புகள் இவை அவளுக்குள் பல மாற்றங்களை உருவாக்கியிருந்தது.

பிறரின் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் மனமும் எந்த சூழ்நிலைகளையும் கையாளும் பக்குவமும் வந்திருந்திருந்தது. பழைய நீருவை மீட்டிருந்தாள் இன்னும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக, ஆனாலும் நிக்கிடம் மட்டும் முன்பு போல நெருங்க இயலவில்லை. கடந்து போன அந்த விஷயத்தை அவளால் கடந்து வர முடியவில்லை. அதுவே நிக்கிடம் இருந்து நீருவை இன்னமும் தள்ளி வைத்து தவிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அதீரையை தனக்காகத்தான் விலக்கி வைத்திருக்கிறான் என்பதை அவளு அறிந்துதான் இருந்தாள்.
அதை சரி செய்ய இவள் இயல்பு நிலைக்கு வருவது தான் ஒரே வழி என்பதும் தெரியத்தான் செய்தது அவளுக்கு .அதை சின்ன தயக்கம் என்பதை விட ஒரு வித சங்கடம் அவளை தடுத்து வைத்திருந்தது. ஆனாலும் அதைத் தாண்டிய அன்பும், காதலும் இருக்க கூட்டை உடைக்க முயன்று கொண்டிருந்தாள்.

அன்று விடுமுறையாதலால் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அழைப்பு மணியின் ஓசை கேட்க போய் கதவை திறந்தான்.
டேனியலும் ஜாய்ஸியும் நிக்கை சந்திக்க நின்றிருந்தனர்.

நிக்கினை கண்டதும் அவனை டேனி அனைத்துக் கொணடான்.

"ஹவ் ஆர் யு " என்ற நிக்கிடம் ,


"பைன் "

என்றவன் ஜாய்ஸியின் கரத்தையும் தனது கரத்தையும் ஒன்றாக நிக்கின் முன் காட்டியவன்

" நிக் வீ ஆர் மேரிட் "

அதை கேட்ட நிக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் அவனை அனைத்து பின் கைகுலுக்கியவன்

" கன்குராட்ஸ் டேனி ,அன்ட் பைனலி யூ ப்ரொபொஸ்ட் டூ ஹெர்"

என்றதும் வெற்றி வீரனாக

"யா யா "

என்று வேகமாக தலையாட்ட

இவர்கள் பேசியவற்றை கேட்டபடி ஜூஸ் எடுத்து வந்த நீருவிடம் இருந்து அதை
எடுத்துக் கொண்ட ஜாய்ஸி

" நோ, கேப்டன் நான் தான் முதல்ல சொன்னேன் "

உடனே டேனி

"ஆனா , கல்யாணத்துக்கு அப்புறம் முதல்ல நான் தான் சொன்னேன் "

என்றதும் அனைவரும் சிரித்துவிட
பிறகு நிக்கும் டேனியும் அலுவல் சார்ந்த விஷயங்களை பேசிக் கொண்டிருக்க , நீருவும் ஜாய்ஸியும் அவர்களைப் பற்றி பேசியபடி சமைத்து கொண்டிருந்தனர்.

" வாங்கோ , சாப்பிடலாம்"

என்று நீரு அனைவரையும் அழைக்க இரவு உணவு முடிந்ததும். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் கிளம்பி சென்றிருந்தனர். நிக் ஏற்கனவே நீருவிடம் அவனுக்கு குண்டடி பட்டது குறித்து கூறக் கூடாது என்றிருக்க அதனால் அதைப் பற்றி பேசவில்லை.
குழந்தைகளும் தூங்கி இருந்ததால் ஹாலில் சற்று ஓய்வாக இருவரும் அமர்ந்திருந்தனர்.

ஜாய்ஸியின் கதையை அவள் கூற அறிந்து இருந்த நீரு

"பாவம் இல்லையான்னா ஜாய்ஸி."

"ம் ஆனா அவள விட மோசமான நிலையில் நிறைய பொண்ணுங்க இருக்காங்க ராணுவத்தால் அழிக்கப்பட்ட பெண்களும் இருக்காங்க , பசித்துன்பம் தாளாமல் தன்னையே விற்கும் பெண்களும் இருக்காங்க. அவங்க யாரும் தற்கொலை பண்ணிக்க நினைக்கலை தங்களுடைய வாழ்வை சீர்படுத்தக்கத்தான் நினைக்கிறாங்க."

என்றவன் பார்வை அவளை

"நீ கோழை "

என குற்றம் சாட்ட அதனை தாங்க முடியாதவளாய் ,

"அவாளோட சூழல் வேற, ஆனா நான் ..."

நான் என இழுத்த அவளுள், நான் தானே அவனைக் கொண்டு வந்தது . எனும் வார்த்தைகள்தொக்கி நின்று விட்டன.இந்த நினைவு வேம்பாய் இத்தனை நேரம் இருந்த இனிமையை கெடுத்து விட

" எனக்கு நாளைக்கு ஆபிஸ் இருக்கு "

என வெற்றிகரமாக புறமுதுகிட்டு வந்து குழந்தைகளுடன் படுத்துக் கொண்டாள்.
இந்த ஊமுள்ளை நீக்காமல் அவளை மீட்பது கடினம் என்பதை உணர்ந்தவன் , என்ன செய்வது என யோசித்தபடி தானும் எழுந்து படுக்கச் சென்றான்.

அன்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டிய நாள் என்பதால் அவர்களையும் நீருவையும் அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு சென்றிருந்தான் , நிக் வரவேற்ப்பு பகுதியில் மருத்துவரை பற்றி விசாரித்துக் கொண்டிருக்க

அப்போது கார் விபத்தில் சிக்கிஉயிருக்கு போராடிய ஒரு பெண்ணும் அவளைத் தொடர்ந்து சிறு காயங்களுடன் ஒரு பெண்ணும் வந்தனர். காயம் பட்ட பெண் உயிருக்கு சேதம் இல்லை என்றாலும் விபத்தினால் ஏற்பட்ட அச்சத்தில் இருந்தவள் ,

திரும்பி நின்ற நிக்கை கண்டதும் ஒடி வந்து கட்டிக் கொண்டு கதறி விட்டாள். நிக்கிற்கும் நீருவிற்கும் முதலில் ஒன்றும் புரியவில்லை .ஆனால் நிக் அடுத்த நொடி அவளை தள்ளி நிறுத்திய பிறகு தான் இருவரின் முகத்தையும் பார்த்தவள் ,

" ஸாரி ஸாரி , ஐ திங் ஹி இஸ் மை பாய் ப்ரண்ட் , ஸாரி ஐயம் ஐஸ்ட் அவுட் மைன்ட்"

அதற்குள் அவள் பாய்பிரண்ட்டும் வந்திருக்க , இருவரின் உடையும் ஒரே நிறத்தில் இருக்க இருவருக்கும் இடையே இருந்த வேறுபாட்டை ஏற்கனவே விபத்தின் அதிர்சியில் இருந்தவள் கவனிக்கவில்லை , என்பது புரிய , மேலும் அவள் காதலனும் மன்னிப்பை கேட்க

"ஒகே "

என்று விட்டு நிக் நீருவுடன் நகர்ந்து விட ,
நீருவுக்கு தான் சுரீரென்று ஒன்று உரைத்தது .அதில் நின்றவளுக்கு, மருத்துவரை சந்தித்ததோ , ஊசி போட்டதோ வீடு வந்ததோ நினைவில் இல்லை அவள் மனம் முழுவதும்

இது போன்று உயிர் காக்கும் நிலையில் தானே அதீரையும் அதை செய்திருப்பாள்.

இதை இதோ நிக் கடப்பது போல் நானும் கடந்து வந்திருக்க வேண்டுமோ.
எனது கற்பை ஒழுக்கத்தை இதனுடன் தொடர்புபடுத்தி இருக்கக் கூடாது. அது என்னை சார்ந்தது அல்லவா ? எனில்
அதை நிர்ணயிக்கும் சுதந்திரமும் என்னை சார்ந்தது தானே,


இல்லை ஒரு மருத்துவர் உடலை பார்க்கையில் ,வண் புணர்வுகளிலும், ஒன்றாக பணியாற்றும் போதும் கற்பு போய்விடுமே , மனம் சார்ந்தது எனில்
வேறு ஒருவனை மனதில் எண்ணிக் கொண்டு உடலை மற்றொருவனுக்கு கொடுத்த காரணத்தால் மட்டும் அவனுடன் வாழும் பெண்களை கற்புக் கரசிகள் என கூற முடியுமா,

அப்படி வாழ முடியாமல் விவாகரத்து செய்து கொள்வது தவறாகுமா?
மீண்டும் திருமணம் செய்தால் அவர்களு கற்பு இல்லையா


அது இரு உடல் ஒரு மனம் என்று வாழும் முறை சார்ந்தது அன்றோ?

தெளிவு இல்லாமல் தனது வாழ்கையை குழப்பிக் கொண்டது புரிய,

நிமிர்ந்து பார்க்க வெகு நேரம் ஆகிவிட்டிருப்பது புரிய ,குழந்தைகளை தூங்க வைத்தவள்,

நிக்கிடம் மன்னிப்பு கேட்டுவிட முடிவு செய்தவளாய்,அவன் முன் சென்று அமர்ந்தாள். நடந்தவைகளுக்கு மன்னிப்பு கேட்க நினைத்தவள்

" ஸாரின்னா … என்ன ..."

என்ற வார்த்தைகளை உச்சரித்து முடிக்குக்கும் முன்னமே அவன் கூறியிருந்தான்.

" லெட்ஸ் கெட் டிவேர்ஸ் "

என்றவன் அந்த பத்திரங்களை அவள் முன் வைத்தான். அவனும் மருத்துவ மனையில் இருந்து அவளை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறான் .அவளது இந்த முகமாற்றங்களை அதனால் இந்த அதிரடி

அவன் கூறியதை கேட்ட அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மூளை வேலை நிறுத்தம் செய்ய அனைத்தும் மறந்து போய் சற்று நேரம் அமர்ந்திருந்தவள், பிறகு அவனை நிமிர்ந்து பார்த்து

"சே அகெய்ன் "

என்றாள் . கண்கள் கலங்கி மெல்ல சிவக்க தன்னை கட்டுப்படுத்திய படி. அவளைப் பாராமல் பார்வையை சுவற்றில் பதித்தபடி

" சைன் திஸ்…"

எனவும் கண்களில் கண்ணீர் வழிய பத்திரங்களை கிழித்து வீசியவள்
அவன் சட்டையை கொத்தாக பற்றியிருந்தாள் .
ஆவேசமாக

" எதுக்கு ? இல்ல எதுக்கு இப்ப டிவேர்ஸ் வேணுங்கறேள் ? "

என்றவள் கலைந்து கிடந்த கூந்தலை அள்ளி கொண்டையிட்டவள்.

" அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் , பின்ன ஆம்படையான தவிர வேற யார் கையும் படப் படாது அண்ணா தம்பி கூட தொடாம தள்ளி நின்னு பேசணும் அப்படி
சொல்லி வளர்த்து இருந்தா ,

உங்கள தவிர வேற அந்நியாள் நிழல் கூட மேலபட்டதில்லை. என் மனசும் உடம்பும் ஒருத்தனுக்கு மட்டும் தான்ங்கற என்னோட கொள்கை மண்ணா போனப்புறம் இந்த ஜடம் வாழ்ந்து எண்ணத்துக்குன்னு தான் அந்த முடிவு எடுத்தேன் "


என்றவளை அந்த நாளின் நினைவில் இன்றும் பதறி அணைத்துக் கொண்டான். அவள் எங்கே அதை அறிந்தாள் .? அணைத்த அவன் இங்கே உணர்ந்தான். அணிந்திருந்த வெண்ணிற சட்டை கண்ணீரில் நனைய
நிமர்ந்தவள்

" எனக்காக துடிச்ச உங்களையும் என் குழந்தைகளையும் பார்த்த பிறகு அது தப்புன்னு தெரிஞ்சிடுத்து . ஆனா இந்த பாழும் மனசால உங்க மேல வைச்ச ப்ரியத்தை மறக்கவும் முடியல , நிதர்சணத்தை ஏத்துக்கவும் முடியலை நடந்த விஷயத்தை தள்ளி விடவும் முடியலை , எப்படி முடியும்? சொல்லுங்கோ? ராமனாட்டமா கிடைச்சிருக்கேளே எனக்கு, சரி வீட்டு வேலையாவது செஞ்சி வேலைக்காரியாவது இருக்கலாம்ன்னு பார்த்தா அதுக்கு கூட நீ வேண்டியதில்லைன்னா , அப்புறம் நானும் தான் என்ன செய்யட்டும் அதான் நமக்கு மதிப்பில்லையோன்னு கோபம் வந்துடுத்து ."

என்றவளின் நெற்றியில் முத்தம் வைத்தவன்

" இன்னிக்கு சட்டைய புடிச்சி இவ்வளவு உரிமையா கேட்ட நீ அன்னிக்கு கேட்கலைன்னு கோபம் தான் எனக்கு "

என்றவனை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
அவளை கூடத்தில் கிடந்த சொகுசு இருக்கையில் அமரச் செய்தவன்

" இங்க பார் நீரு இந்த விஷயத்தை பற்றி நாம பேசறது இதுதான் கடைசி புரியுதா?"

என்றவனுக்கு

" ம்"

என்றவளின் முகம் பார்த்தவன்

"எனக்கு நீ மட்டும்தான் முக்கியம் எப்படி இருந்தாலும் உன்னை மட்டும் தான் நான் காதலிச்சிருப்பேன் "

என்றவன் அதைத்தான் செய்திருப்பான் என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது தானே. அதை உணர்ந்தவளுக்கு அந்த அழுகையிலும் சிறு புன்னகை வந்தது. அதை கண்டவன்

"சரி சொல்லு இன்னிக்கு அந்த பொண்ணு என்ன தன் புருஷன்னு கட்டி புடிச்சாளே அப்ப நீ என் மேல ஏன் கோபப்படல "



"அது எப்படின்னா முடியும் பாவம் அப்ப அவ தன் நிலையா இருந்தா? அது மட்டும் இல்லாம உங்கள பத்தி நேக்கு தெரியாதா "

"இதே நம்பிக்கையை நானும் உன் மேல வைச்சிருப்பேன்ங்கறது ஏன் நீரு உனக்கு புரியல, "

"நீங்க நம்பிக்கை வைச்சிருப்பேள்ங்கறதுல துளி கூட சந்தேகம் இல்லை இன்னோருத்தன போய் ... உங்க இடத்தில் வைச்சிட்டேனே"

என்றவள் மனம் மறுபடியும் குற்ற உணர்வில் துடிக்க, கண்கள் மீண்டும் கலங்க அதை துடைத்தவன்

"நீரு அழாத இங்க பாரு , என்ன நீ அவன்ட்ட பார்த்திருக்க அவ்வளவு தான். உன் ஆழ்மனசுக்கு அது நான் இல்லை தெரியப் போய் தான நெருங்காம இருந்திருக்க ,அப்படியே நடந்திருந்தாலும் கூட அதுக்கு நீ பொறுப்பும் கிடையாது. அதுக்காக உன்ன நான் ஒதுக்கவும் மாட்டேன் புரியுதா?"

"ம் "

என்றவள் முகம் இன்னும் தெளிவின்றி இருக்க,

"சரி நான் கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல்லு "

"இப்ப உனக்கு அவன் முகம் நினைவிருக்கா?"

"ம்ஹும் "

"உன் முன்னாடி டாவின்சி வந்து நின்னா உனக்கு அவன யார்னு தெரியுமா?"

"ம்ஹூம் எனக்கு உங்க முகம் மட்டும் தான் நினைவுல இருக்கு"

"குட் இப்ப எனக்கும் என்ன மாதிரி இன்னோருத்தனும் வந்தா உன்னால வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா முடியாதா?"

"இது என்ன கேள்வி அது பார்த்த உடனே தெரிஞ்சிடுமே."

"அப்புறம் தேவையே இல்லாத ஒரு விஷயத்தை பத்தி ஏன் யோசிச்சி மனச குப்பையாக்கற "

என்றவனுக்கு

"ஆமாம் இல்ல ?"

"அப்ப நீங்க ஏன் என் கூட பேசல ? "

"ஆமா என் கண்ணு முன்னால நீ உயிருக்கு ஊசலாடறத பார்த்த அன்னிக்கு என் உயிர் என்கிட்ட இல்லை.
அந்த கோபம் அப்புறம் அது மாதிரி ஒரு எண்ணம் இனிமே உனக்கு வரக்கூடாதுல்ல அதான் ".

"போங்கோ " என்று சின்ன

சினுக்கத்துடன் அவனிடம் இருந்து எழுந்து கொள்ள போக அவள் கூந்தல் அவன் சட்டை பட்டனில் சிக்கிக் கொண்டது.
"ஸ்... ஆ என்று அமர "

"இதுக்குதான் எல்லாத்துலையும் அவசரப்படக் கூடாது "

என்றவன் , மெதுவாக அதை விடுவித்த உடன் திரும்பியவள் அவனிடம் உதடு சுழித்தவள்

"அச்சோ சட்டை பூராவும் குங்குமம் , கழட்டுங்கோ "

என்றவள் பொத்தான்களை கழற்றி ,சட்டையை விலக்கியவள் கண்களில் அந்த தழும்பு விழ

" என்னன்னா இது ?"

என்று பதறியவளை இழுத்து மார்பில் சாய்த்தபடி

"சண்டையில் பட்டது"
என்று கூறியவன் முழுமையாக கூறவில்லை.

மெல்ல விரலால் தழும்பை தடவியவள் அதில் அழுத்தமாக இதழை பதித்தாள். அவன் முழுவதும் கூறாவிட்டாலும் அவள் அறிந்து கொண்டாள். தன்னவன் எமனின் வாயிற்புறம் சென்று மீண்டு இருக்கிறான் என்பதை

மெல்ல முகம் உயர்த்தி அவனை பார்க்க அவன் கண்கள் அவளை புசித்து கொண்டிருந்தன. அவள் இறுக்கிக் கொண்டாள் அவனை தன்னுள் அனலென, அவன் இருத்திக் கொண்டான் அவளை தன்னுள் தண்ணெண.
 
அத்தியாயம் 24

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துகொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன் நங்காய்

கண்ணனை தொட்டிலில் இட அது கிழிந்து போகும் படி உதைக்கிறான். சரியென்று எடுத்து இடுப்பு முறியும் படியாக கீழிறங்குகிறான். எங்கே விழுந்து விடுவானோ என்று மார்போடு இறுக்கிக் கொண்டால் கால்களால் வயிற்றில் உதைக்கிறான். இத்தகு செயல்களினால் நான் மெலிந்தேன் என்கிறாள் அசோதை.

தன் சின்ன கண்ணனை இடுப்பில் வைத்துக் கொண்டு வேலை பார்த்த நேரொருவரில்லாளின் நிலையும் அப்படித்தான் இருந்ததது. அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் அவள் இடுப்பில் ஏறிக் கொண்ட குமாரன் இறங்கவே இல்லை.

"என் தங்கம் சித்த நாளி கீழ நின்னுக்கோ அம்மா கல்லுலேர்ந்து தோசையை எடுத்துட்டு தூக்கிக்கறேன்."
என்று கீழே இறக்க முயல அவனோ அழுது கொண்டு இறங்க மறுக்க இடுப்பிலிருந்து விழுந்து விடுவினோ என்று அஞ்சி அன்னை மார்புடன் இறுக்கிக் கொள்ள, அவனோ கால்களை அவள் வயிற்றில் உதைத்து அழ ஆரம்பித்திருந்தான்.

எங்கே குழந்தையின் பாதங்கள் சுடுகல்லில் பட்டுவிடுமோ என்று பயந்தவளாக அவனை வேகமாகத் தரையில் இறக்கிவிட்டு, தோசையை திருப்பி எடுத்துக் கொண்டு அவர்களுக்கு ஊட்டுவதற்காகத் திரும்ப அதற்குள் நிக்நந்தன் தன்னுடன் பிறந்தவளைத் தேடி அடுத்த அறைக்குள் நு‍‍ழைந்துகொண்கொண்டிருந்தான்.

தளர் நடையிடும் பருவம் ஆதலால் இருவரையும் சாமளிப்பது என்பது சாதாரணமாக காரியமாக இல்லை.

புதிதாக முளைத்த கால்கள், முளைக்காத மனம் இரண்டையும் வைத்துக் கொண்டு நடக்க பழகும் முன் தரையில் பாதம் பதியாமல் ஓடிக் கொண்டிருந்தனர்.

தன் மகன் பின்‍னே ‍சென்றவள் அவர்களுடன் ஓடியபடி உணவூட்டத் தொடங்கினாள். கண்ணில் காணும் அனைத்தையும் ஜம்புலன்களாலும் ஸ்பரிசிக்க ஆசை கொண்ட குருத்துக்கள், உற்சாகத்தின் உச்ச பட்சத்தில் துள்ளிக் ‍குதித்தன. நொடிக்கு நொடி துறையை மாற்றிக் கொள்ளும் அந்த இளம் ஆராய்சியளர்களை நெறிப்படுத்துவது என்பது அத்தனை எளிதா என்ன? .

இந்தக் காட்சியை நீளிருக்கையில் அமர்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான் நிக்கோலஸ். மன‍மோ குழந்தைப் பேற்றை எண்ணிப் பார்த்தது.

அன்று குழந்தைகள் பிறந்த உடன் அவளை குழந்தைகளுக்கு அமுதூட்ட சொல்ல, குழந்தைகளுக்குப் ‍போதிய பால் அவளுக்கு சுரக்கவில்லை. மகப்பேறுக்கு முந்தய சில மாதங்கள் இவள் நினைவின்றி இருந்ததாலும், உடல் நலத்தை சரியாக பேணாமல் இருந்ததாலும், மனமும் உடலும் ஒத்துப்‍போகாத நிலையில் குழந்தைகளுக்குப் ‍போதிய அமிர்தம் கிடைக்கவில்லை.

அது மட்டுமன்றி நினைவு திரும்பியதும் பிரசவத்திற்கு பின் வரும் மன அழுத்தம்‍ இவளைத் தற்கொலைக்கு தூண்ட அன்று அவளை காப்பாற்றிய பிறகு, அவளுடைய மன நலனுக்காகப் பூரண ஓய்வு ‍கொடுக்க‍வேண்‍டியிருந்தது,

மருத்துவர்களும், தாய்பாலை அதிகரிக்கச் செய்யவும, மன நலத்தை முன்னேற்றவும் ஓய்வு நிச்சயம் தேவை என்று ஆலோசனை வழங்க, அதற்க்காகவே முதல் மூன்று மாதங்கள் அவளையும் மூன்றாவது குழந்தை போன்று கவனித்துக் கொண்டான். ஆனால் அவள் செய்த வேலையில், தூங்கக் கூடப் பயந்து இவளுக்காய் காவல் காத்தான். சில ‍வேளைகளில் தன்னை மறந்து தூங்கினாலும் கனவில் அவள் கிடந்த ‍கோலமே வர, பதறி எழுந்து ஓடி வந்து பார்ப்பான் .

அவளிடம் பேசாமல் இருந்தாலும் அவள் வருந்துவதைப் பார்த்து மனம் சற்றே இளகினாலும் மறு கணம் அவள் தொங்கிய ‍கோலம் மனதில் வந்து மனம் கடினப்பட்டுப் ‍போகும்.

எப்படி‍யோ மூன்று மாதங்கள் கண்ணை இமை காப்பது‍போல அவளைக் காத்துக்‍‍கொண்டான். பிறகு உடல் நலம் தேவையான அளவுக்கு தேறிய பிறகே அவளை அமுதூட்ட அனுமதித்தவன் அதன் பிறகும் இரவு நீண்ட நேரம் முழிக்க அனுமதிக்கவில்லை.

இவற்றை கூறி அவளிடம் தன்னைத் தன் காதலை மீட்டெடுக்க அவனுக்கு விருப்பம் இல்லை. அவள் நேரொருவரில்லாளின் மனதில் அத்தனையும் தாண்டி தான் மட்டும் மே இருப்பதை அறிந்து வர வேண்டும் என்று தான் அமைதியாக முயன்று கொண்டிருந்தான்.

இதோ இப்போதுகூட தன் குழந்தைகளின் பின் அலைந்து உணவு ஊட்டியவளை இமைக்காது பார்த்துக்‍‍கொண்‍டேயிருந்தான் நிக்.
உணவூட்டி மு‍‍டித்ததும் நிக்கிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு தன் ‍வேலைகளை முடிக்கச் ‍செல்ல நிக் குழந்தைகளைத் தூங்கவைக்க‍வேண்‍டி அவர்களை அழைத்துக்‍கொண்டு அறைக்குச் ‍சென்றான்.

அவளும் ‍வேலைகளை மு‍டித்துக்‍கொண்டு அறைக்குள் நுழைந்தாள். ஆனால் அவன் இருந்த கோலம் கண்டு இவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.மேனி முழுவதும் வண்ணங்களைப் பூசி ஹாலோவீனுக்குத் தயாரான பொம்மைகள் போல் இருந்தனர். அதைக் கண்டவள் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

நிக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு மிகத் தெளிந்த முகத்துடன் மனம் விட்டு மகிழ்ச்சியுடன், சிரிக்கும் தன்னவளை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

நெருங்கி வந்து, குழந்தைகளின் முகத்தில் மற்றும் உடலில் இருந்த வண்ணங்களை துடைக்க, அவன் கண்களோ அவளை யாசித்து கொண்டிருந்தன. அதைக் கண்டும் காணாதவளக அங்கிருந்து எழுந்து கொண்டவள்,

"நாளைக்கு கோயிலுக்கு போகலாமா ?
பெருமாள சேவிக்கனும் போல இருக்கு?" என்றாள்.

"ம் போகலாம், எத்தனை மணிக்கு "

"ஒன்பது மணிக்கெல்லாம் அங்க இருக்கற மாறி கிளம்பனும். அப்புறம்.. " என்று இழுத்ததில் அவளை முறைத்தான்.

இது நாள் வரையில் அவள் கேட்டு எதையும் அவன் மறுத்ததில்லை. இவ்வளவு நாள் கழித்து அவள் கேட்பது மறுத்து விடவா போகிறான். அவன் முறைப்பதை பார்த்தவள்

"இல்லை அந்த பட்டு வேட்டி சட்டை போட்டுக்கணும் அதான்... " என்றதும் தான் அவள் தயக்கத்தின் காரணம் புரிந்தது. அவனுக்கு வேட்டி கட்டுவது என்பது எளிதான விஷயம் அல்ல என்றாலும்

"ஓ.கே உனக்காக போட்டுக்கறேன் . "
என்றதும், முகம் மலர்ந்தவள், அடுத்துத் தன் அறைக்குள் புகுந்து‍‍‍கொள்ள இவனுடைய பார்வை அவளைப் பின்தொடர்ந்தது.

மறுநாள் கோயிலில் மணமேடையில் டாவின்சி, அதீரையும் அமர்ந்திருப்பதை பார்த்து நிக்கோலஸ் வாயடைத்து போய் நின்றான்.

அப்போது அங்கே வந்த வெண்மதி

" வாம்மா நீரு, வா நிக் எப்படியிருக்க?" என்றதும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன். சிரித்தபடி

" யா பைன் ஆண்டி , நீங்க எப்படி இருக்கீங்க ? "

"நன்னாயிருக்கேன் "

என்றவர் நேரொருவரில்லாள் புறம் திரும்பி

"அம்மாடி அதீக்கு முகூர்த்த புடவை கட்ட நீதான் உதவனும். அப்புறம் இந்த தாம்பாளங்களையும் கொஞ்சம் சரி பார்த்து மணவறையில் வைக்னும் வரியா ? "

என்றதும் ,

" இதோ நீங்க போங்கோ பின்னாடியே வரேன் "

என்றதும் அவர் சென்று விட , நிக் அவளைபிடித்துக் கொண்டான்.

" ஏய் , என்ன நடந்தது? எப்படி இதெல்லாம்?"

" எதெல்லாம் ?"

" ஏய் , இப்ப சொல்லப் போறீயா இல்லையா?"

" அதெல்லாம் சொல்ல முடியாது , எனக்கு வேலை வேற இருக்கு ஒன்னு செய்யுங்கோ "

அவன் கையில் குழந்தைகளை ஒப்படைத்தவள் .

" இவாள சித்த பார்த்துக்கோங்கோ ,"

என்று மற்ற வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்

மணமேடையில் இருந்த அதீரை , நிக்கையும் , நீருவையும் பார்த்ததில் மகிழ்ச்சி பெருக அமர்ந்து இருந்தாள்.

அன்று அதீரையை சந்திக்க வந்த நேரொருவரில்லாள் கூறியது நினைவிற்கு வந்தது.

" இதுவரைக்கும் உன்னோட வழிகள் எப்படி இருந்தாலும் சரி இனிமேல் உன்னால சரியான பாதையில் பயணிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்,

இனி இல்ல எப்பவுமே என் வாழ்கையை என்ன பார்த்துக்க எனக்கு நிக் இருப்பார். எதுக்காகவும் உன்னோட வாழ்க்கையை சந்தோஷத்தை நீ வீணடிக்க மாட்டேன்னு நம்பறேன்.

இங்க பாரு அதீ , எனக்காகத் அவர் உன்ன தள்ளி வைச்சிருக்காரே தவிர உன் ப்ரண்ட்ஷிப் வேண்டாம்னு சொல்லல. நான் என்ன சொல்ல வரது புரியும்னு நினைக்கிறேன். "

தான் இன்னும் டாவின்சியை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதைத் தான் கூறுகிறாள் . என்று புரிந்து கொண்டவள்

"ம் "

என்று தலையாட்டியவள் அன்று மாலை‍யே இவளை அ‍ழைத்து

"வர்ர , வெள்ளிக்கிழமை வெங்கடாஜலபதி கோவில்ல கல்யாணம்" என்றாள்.

"ரொம்ப , ரொம்ப சந்தோஷம் அதீ அவர்ட்ட சொல்லிடாத சர்ப்ரைஸா இருக்கட்டும்."

"அப்ப மேரேஜ் க்கு "

" கட்டாயம் வருவர் அழைச்சின்டு வர வேண்டியது என் பொறுப்பு"

என்றவள் இதோ சொன்னபடி அவனுடன் வந்து நின்றாள்.

அன்று நீரு பேசிவிட்டு போன பிறகு , தனது திருமணம் உடனடியாக நடக்க வேண்டும் என முடிவு செய்தவள். டாவின்சிக்கு அழைத்தாள். பாரீஸில் இருந்தவன்

"ஹலோ ஹனி "

"டாவின் இந்த வீக்ல நாம மேரேஜ் பண்ணிக்கலாம்"

"ஏஞ்சல்"

"ஷி இஸ் ரெகவர்டு"

"என்னால இப்ப லீவு போட முடியாதே ?"

" பரவாயில்லை நீ ப்ரைடே காலைல வா மத்த அரேன்ஜ்மென்ட் நான் பண்ணிடறேன் , மேரேஜ் முடிஞ்ச உடனே நாம பாரீஸ்க்கு ரிட்டன் ஆகிடலாம்."

என்றவள் நீரு வரப்போவதை சொல்லவில்லை. அது அவளுக்கே உறுதியாக தெரியவில்லை.

டாவின்சிக்கும் நீருவைப் பார்த்ததில் ஆனந்த அதிர்ச்சிதான். அவன் ஏஞ்சல் அல்லவா அவள். திருமணத்திற்கு வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஆசைப்பட்டான் .

அதீரை மூலம் அவள் தற்கொலைக்கு முயன்றது தொடக்கம் அனைத்தையும் அறிந்தவன் நேரில் சென்று அவள் முகம் பார்க்கத் துடித்தான். ஆனால் அது இன்னும் சிக்கலை உருவாக்கி விடும் .

'அவளைப் பொறுத்தவரை இனி நீ யாரோ? உனக்கு அந்த தகுதியில்லை .
விலகி நிற்க வேண்டும்'

என்ற அறிவின் குரலுக்கு செவிசாய்த்து தள்ளி நின்றான். இருந்தாலும் அவளது இந்த நிலைக்கு தாங்களும் ஒரு காரணம் என்பதினாலேயே இருவரும் , குற்றவுணர்வில் திருமணத்தை தள்ளி வைத்திருந்தனர்.

இப்‍போது அவள் வந்ததில் இவனுக்கு ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்க‍வேண்டும்போலத் ‍தோன்றியது,

இதோ மணமேடையில் மகிழ்வாக அமர்ந்திருந்த டாவின்சியிடம் , திருமாங்கல்யம் தரப்பட அதை அதீரையின் கழுத்தில் கட்டினான்.


தன் அருகில் பட்டுப் புடவை சரசரக்க வந்துகொண்‍டிருந்த தன் மனைவியைக் கண்ட நிக்கோலஸின் கண்களில் காதல் ‍‍பொங்கியது.

அவளுக்காக இவன் தள்ளி வைத்த நட்பை அவளே சேர்த்து வைத்துவிட்டாளே.

அவனை நெருங்கிய நீரு மடியில் அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த புதல்வனைத் தன் கரங்களில் வாங்கியவாறு அவன் கையில் அட்சதையை கொடுத்து

" இந்தாங்கோ அக்ஷதை ஆசிர்வாதம் பண்ணுங்கோ"

என அடிக் குரலில் கிசுகிசுத்ததில் , நனவுக்கு வந்தவன், அங்‍கே தம்பதிகளாகிக்கொண்‍டிருந்தவர்களை நோக்கி அட்சதையைத் தூவ,

" ப்பா ... " என்றவாறு தன் ககைளைத் தூக்கியவாறு வந்த தனது மகளைத் தூக்கி மார்‍போடு அணைத்துக்‍கொண்டான்,

மேடையில் இருந்து எழுந்து வந்த அதீரை , கண்கள் கலங்க நிக்கைப் பார்த்துவிட்டு நீருவை இறுக அனைத்துக் கொண்டாள்.

" போடி அந்தண்ட எப்ப பாத்தாலும் கட்டிண்டு "

என்று அவளிடம் இருந்து தன்னை விடுவித்து கொண்டவள், அவள் கண்ணீரை துடைக்க , அதீரை எழுந்ததும் அவள் பின்னே டாவின்சியும் எழுந்து வந்து நின்றான். அவனைப் பார்த்தவள்

" மிஸ்டர் டாவின்சி ஆம்படையாள கண் கலங்காம வைச்சிப்பேன்னு இப்பதான் அக்னிக்கு முன்ன சத்தியம் பண்ணேள் அதுக்குள்ள கண்ண கசக்கிண்டு நிக்கறா பாருங்கோ"

என்றதும், அவள் தன் முகம் பார்த்து பேசுவாள் என்று நினையாதவன் , கண் கலங்க வாய்சிரிக்க அவளிடம்

"ஒகே ஏஞ்சல் "

என்றவன் அதீரையின் கை பிடித்து தன் அருகில் இழுத்தவன் கைகுட்டை எடுத்து அவள் முகம் துடைத்தான்.

நிக்கிற்கு அவனுடைய ஏஞ்சல் என்ற வார்த்தையில் இருந்த அன்பில் வியந்து போனான். இவ்வளவு அன்பா நீருவின் மேல் என நினைத்தவாறு பார்த்துக் கொண்டிருக்க
நிமிர்ந்து டாவின்சியின் முகம் பார்த்த நேரொருவரில்லாள்.

" அன்ட் ஒன் மோர் திங் , ஐயம் நாட் யுவர் ஏஞ்சல் , "

என்றவள் அதீரையின் கைகளை பிடித்து அவன் கரங்களில் வைத்த விட்டு

"ஷீ இஸ் யுவர் ஏஞ்சல் , அன்ட் எவ்ரிதிங்"

என்று விட டாவின்சியின் முகத்தில் சொல்ல முடியாத வேதணை என்றாலும் , தன்னை சீர் செய்தவன்.

"நீரு நான் உங்கள ஒன்னு கேட்கலாமா?"

"ம்"

என்ற நீருவின் சம்மதத்திற்கு பிறகு

"உங்கள பார்த்த அப்புறம் தான் என் வாழ்கை மாறியது . அதனால தான் ஏஞ்சல்னு சொன்னேன் , இனியும் அப்படி கூப்பிடலாமா?"

என்றவனிடம்

"ஸாரி மிஸ்டர் டாவின்சி. நான் வளர்ந்த விதத்தில் பகவானைக் கூட தாய் ,தந்தை ,குழந்தை, காதலன் ,காதலி கணவன் என்று ஏதேனும் ஒரு உறவா பார்த்து தான் பழக்கம்."

என்று கரம் குவித்து விட, அது 'உனக்கும் எனக்கும் இடையேயான தொடர்பு அதீரையின் கணவன் நீ என்ற அளவில் தான் ' என்பதை அறிவிக்க டாவின்சியும் வேறு வழி அற்றவனாக ஏற்றுக் கொண்டான். என்றாலும்

"என்னை பொறுத்தவரை, யு ஆர் மை ஏஞ்சல்" என்றவன் அதை உணர்ந்து கூறி இருந்தான். அவன் வாழ்கையை மாற்றிய தேவதை அல்லவா அவள்

இதைக் கேட்ட நீரு மௌனமாகி விட்டாள். இது என்னை குறித்த உனது எண்ணம், அதற்கு நான் என்ன செய்ய முடியும் ? என்பது போல நின்றுகொண்டாள்,

இவளது அமைதியில் நெஞ்சம் கனத்து போக நின்றவன் கரங்களை இறுக பற்றிக் கொண்டாள் அதீரை நான் இருக்கிறேன் உனக்கு துணையாக என்றும் நான் இருப்பேன் என்று கூறும் விதமாக .

இப்போது டாவின்சியும் அவளது தோளை சுற்றி கரங்களைப் போட்டு அனைத்துக் கொண்டான் , நானும் உனக்கு துணையாய் இருப்பேன் என்று
கூறும் விதமாக

தன் நண்பனையும் தோழியையும் மீளப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தவள்.

"இனிமே நான் சந்தோஷமா பாரீஸ் போவேன் "

"பாரீஸ் எதுக்கு ?" என்று ‍கேட்ட நீருவிடம்

"அது டாவின்சிக்கு அங்க நல்ல ப்யூச்சர் இருக்கு , அப்புறம் இந்த கம்பெனியோட பிரான்ச் ஒன்னு அங்க அதுக்கு ‍மேலதிகாரியாக என்ன ப்ரமோட் பண்ணிட்டாங்க. நாளைக்கு மார்னிங் கிளம்பனும்", என்றவள்

"நிக் கண்ணாடியோட உருகு நிலை அதிகம், அதே‍வேளை சீக்கிரமா தரையில் விழுந்தா அது ‍நொருங்கிடும், அது மாதிரி தான் ப்ரண்ட்ஷிப்பும் "

என்றவள் கூற்றை ஆதரித்து தலையசைத்தான் நிக்கோலஸ். தள்ளி இருப்பதன் மூலம் மட்டுமே இந்த உறவுகள் இனி நிலைக்கும் என்பதை நால்வரும் புரிந்து கொள்ள அங்கு சிறு மௌனம் நிலவியது.

அதை விரும்பாதவளாய் அதீரை‍யோ நீருவின் கன்னத்தில் முத்தம் வைக்கப் போக. அந்தக் கணம் நிக்கும், டாவின்சியும் தம் இணையைத் தம்மரு‍கே வைத்துக்‍கொண்டனர். அதைக் கண்ட பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

புரட்சிகளின்
மயங்கொலிப் பிழையில்
மரிக்கும் புணிதம்

வழிகாட்டல்களின்
மயங்கொலிப் பிழையில்
மதியிழக்கும் மரபுகள்

வாழ்வியலின்
மயங்கொலிப் பிழையில்
பரிதவித்து நிற்கும்
வருங்காலம்
மயங்கொலிப் பிழைகளின்
மதலையாய்


 
Status
Not open for further replies.
Top