எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மயங்கொலிப்பிழைகள் கதைத் திரி

Status
Not open for further replies.

மயங்கொலிப் பிழைகள்

அத்தியாயம் 1

அந்த பிரம்மாண்ட கார்ப்பரேட் நிறுவனத்தின் பொருளாதார மற்றும் நிதி ஆலோசனை துறையில் வரும் நிதி ஆண்டிற்கான திட்டங்கள் நிர்வாகத்தின் முன்னெடுப்புகள் மற்றும் அவர்களின் நிதிநிலை அறிக்கை , பங்குகள் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அவள் அதீரை அந்த துறைக்கு மட்டுமல்ல அந்த நிதி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆள்பவள் , பல நிறுவனங்கள் அவளது பொருளாதார ஆலோசனைக்கு காத்து நிற்கும் அளவு திறம் பொருந்தியவள். அந்த நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் இயக்குநர்களில் ஒருவள், தனது ஹை ஹீல்ஸ் ஒலி எழுப்ப கருநிற பேன்ட் மற்றும் முழுக்கை சட்டை மேலே ஒவர் கோட் மற்றும் கையில் மடிக்கணிணியுடன்

உள்ளே நுழைந்தவளின் காலடி ஓசை மட்டுமே பிசிர் இன்றி அனைவரின் செவியிலும் வந்து சேர அவ்விடம் அமைதியானது. முகமன்களுடன் வந்து தனது இடத்தில் அமர்ந்தாள் . தலைமை செயல் அதிகாரியிடம் திரும்பி அனும.தி வேண்டியவள் . தனது மடிக்கணிணியை
இயக்கி உரையாற்ற தொடங்கினாள்.

"இந்த நிதி ஆண்டிலிருந்து மருத்துவ தளபாடங்கள் தயாரிப்பில் நமது நிறுவனம் கால் பதிக்க இருப்பதாலும் அதற்கான நிதி மற்றும் விற்பனை குறித்த திட்டங்கள் தீர்மானங்கள் பற்றிய வரைவுகள் பரிந்துரைகள் பற்றி நாம் விவாவதிக்க இருக்கிறோம்."

அவளது கண்கள் அந்த அறையில் அனைவரது கவனமும் தன் மீது குவிந்து இருப்பதை உறுதி செய்து கொண்டவள்
மேற்கொண்டு பேசலானாள்.

" நமது சத்துபானம் பல ஆண்டுகளாக இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் நிகர லாபம் உலகம் முழுவதும் வரும் லாபத்திற்கும் இடையே வேறுபாடு மிக குறைவு சரியாக சொல்வது என்றால் இரண்டும் சமம் ."

விற்பனை துறை தலைவரை கண்களில் பார்த்து உதடுகளை சுழித்து இகழ்ச்சி புன்னகையை கொடுத்தாள். எதிரணியில் அவர் இருப்பதை அவள் அறிந்ததால் தானே இப்படி தீடீர் சந்திப்பு விஷயம் வெளியேகசியும் முன் ஏற்பாடு செய்தாள்.

"இந்தியாவில் நமது விற்பனை உரிமையை இந்த எம்.எம் நிறுவனத்திற்கு விற்பதன் மூலம் அவர்கள் இந்தியாவில் கால் ஊன்ற வழி கிடைக்கும் அதே சமயம் அவர்களிடம் இந்தியா முழுவதும் நமது தளபாடங்களை விற்பனை செய்யும் உரிமையை பெறுவது மட்டுமல்ல உலகம் முழுவதும் கூட விற்பனை செய்யும் போது நமது இலாபம் அதை விட அதிகம்.
இந்த ஒப்பந்தம் நமக்கு அதிக நன்மையை பெற்று தரும் ."என உரைத்தவள்

கடந்த கால நிதி நிலை அறிக்கை விற்பனை அறிக்கை என அனைத்தின் அடிப்பிடையில் கருத்துகளை எடுத்து கூறி மறு மொழி எதுவும் இன்றி அதனை ஏற்க செய்தவள், ஆவணங்களில் கையொப்பம் இட்டு நிமிரும் போது மாலை வந்திருந்தது.

அனைவருக்கும் கை குலுக்கல் மற்றும் சிறு தோளணைப்புடன் விடை கொடுத்தாள். அவளது உதவியாளினி லீனா அவளது உத்தரவிற்கு காத்திருப்பதை பார்த்தவள்,

"மற்ற வேலைகளை இனி திங்கள் அன்று பார்த்துக் கொள்ளலாம், இப்போது , நீங்கள் செல்லலாம் மிஸ் லீனா. "என தனது உதவியாளரை அனுப்பி வைத்தாள்.

அங்கிருந்த சுழற் நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்து இருகரங்களையும் தூக்கி சோம்பல் முறித்தவள் அகம் மகிழ்சியில் இருந்தது.

தன் மகிழ்ச்சியை கொண்டாட எண்ணமிட்டபடி தனது மனி கட்டில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தவள் அது முன் மாலை பொழுதை காட்ட,
இப்போது அழைத்தால் தான் அங்கு சென்று சேர்வதற்கும் அவன் வரவும் சரியாக இருக்கும் என யோசித்து தனது அலைபேசியில் இருந்து அந்த எண்ணிற்கு அழைத்தாள், அழைப்பை ஏற்றுபேசிய மறுமுனைக்கு ஒரு ஹோட்டலின் பெயரை கூறியவள் இன்று இரவு எட்டு மணிக்கு என்று விட்டு அலைபேசியை அனைத்து விட்டு எழுந்தாள்.

தளத்தை விட்டு இறங்கும் முன் தன்னை சரி செய்து கொள்ள அறைக்கு சென்றாள்.
அதீரை அந்த நிறுவன நிர்வாக இயக்குநர்களில் ஒருவளும் என்பதால் அவளுக்கு தனி அலுவலக அறை அதன் உட்புறம் சிறு படுக்கை வசதி மற்றும் குளியல் அறை உண்டு ஏனெனில் வேலையின் தீவிரம் அதிகமாகும் போது சில நேரங்களில் வீடு திரும்ப நேரம் இருக்காது .அது போன்ற நேரங்களில் இங்கேயே தங்கிக் கொள்வாள் இப்போது கூட அவள் இந்த பேச்சு வார்த்தையின் ரகசியம் கருதி ஒரு வாரமாக வீட்டிற்கு செல்லவில்லை.

இன்று தான் வெற்றிகரமாக தனது பேச்சுவார்த்தையை முடித்து வெற்றி பெற்றிருக்கிறாள். அதை கொண்டாடத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

கண்ணாடி அவளை பிரதிபலித்ததை நினைத்து பெருமை கொண்டது. அசாதாரணங்கள் சேர்ந்து செய்த சாதாரணம் இவள் என்று

அதிக சிரத்தை எல்லாம் இல்லை , தோளை தாண்டி இறங்கிய கூந்தலை விரித்து விட்டாள். பிறகு இழுத்து கூந்தல் மாட்டியில் இறுக்கினாள் .
ஒரு ஜீன்ஸ் மேலே ஒரு இளநீல சர்ட் என மாற்றி தன்னை சரி பார்த்தவள் தனது உடைமைகளுடன் இறங்கினாள்.

அந்த பப் அதற்குரிய அத்தனை கல்யாண குணங்களுடன் அதன் உச்சபட்ச பரபரப்பில் இருந்தது. காரை நிறுத்தியவள் சாவியை , அதனை அதன் நிறுத்துமிடத்தில் நிறுத்தவென நியமிக்கப்பட்ட பணியாளர் கையில் வீசியவள் , உள்ளே விரைந்து விட்டாள்.

பாரில் காக்டெய்ல் கலக்கும் இடத்திற்கு சென்றாள். அந்த பணியாளர் அவள் முன் வந்து முகமன் கூறியவன்

"மேடம் யுவர் ஆர்டர் ப்ளீஸ்? "என அவளுக்கு வேண்டியதை விசாரித்தான்.
"மன்ஹாட்டன் " என தனது விருப்பத்தை உரைத்தாள்

"த்ரீ மினிட்ஸ் " என்றவன்
ஒரு கிளாஸை எடுத்து அதனுள் பனிக் கட்டிகளை போட்டு தனது ஜிக்கர்ஸ் எனும் அளவு கோப்பையினால் ஸ்வீட் வெர்மோத்தை ஒரு முறை அளந்து ஊற்றி பின் விஸ்கியை இரண்டு கோப்பை என ஊற்றி மேலே கசப்பு சுவை தரும் திரவம் சில துளி சேர்த்தவன் நீள கலக்கும் சிறு கரண்டி கொண்டு கலக்கி அதை ஆரஞ்சினால் அலங்கரித்து அவளிடம் தரும் வரை
அங்கேயே நின்று அவன் கலவை தயாரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.
(காக்டெய்ல் என்பது ஆல்ஹால் மற்றும் ஆல்ஹஹால் அல்லது ஆல்ஹஹால் மற்றும் புதிய பழச்சாறுகளை குறிபிட்ட விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவை)
அந்த சிவந்த திரவம் அடங்கிய கோப்பையை கையில் ஏந்தி சில மிடறு அருந்திய படி சுற்றி கண்களை சுழற்றியவளிடம்
நானும் உங்களுடன் இணைந்து கொள்ளலாமா?
(May I join with you) என அவளிடம் வந்து நின்றான் அவன்.

தேர்வு செய்யப்பட்ட மாடலை போல உடல் மிக கவனமாக பராமரிக்கப்பட்ட உடற்கட்டு , என பெண்களை மயக்கும் அனைத்து புற தோற்றத்திலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி பேரழகனாகத்தான் இருந்தான்.

அவன் குரலுக்கு செவி சாய்த்தபடி அவன் புறம் திரும்பியவள் அதிர்ந்து போனாள் பிறகு அவனை சற்று உற்று பார்த்த பிறகு தான் அவள் அறிந்த அவனுக்கும் , இவனுக்கும் சில வித்தியாசங்கள் இருப்பதை அறிந்தவள் இதை மட்டும் என முடி வெட்டு கையில் இருக்கும் டாட்டூ ஆடைகளை சரி பண்ணிட்டா இவன் அவனே தான் என எண்ணமிட்டவள், வருங்காலத்தில் அதையே தான் செய்ய போகிறோம் அந்த சூழ்நிலையில் விதி தன்னை நிறுத்த போகிறது என அறியாதவள்,

அவனுக்கு பதில் உரைத்தாள் சிறு சிரிப்புடன்
ya Why not ? what do you Prepare whiskay , Rum or anything elese?
என மேலும் உரையாடலை வளர்த்தாள். அவன் நோக்கமும் அது தானே அதையும் அதீரை அறிந்து தான் இருந்தாள்.அவள் தானே அலைபேசி வழியே அவனை தொடர்பு கொண்டு இங்கே அழைத்திருந்தாள்.
தனது கையிலும் டக்கியூலா எனும் ஆல்ஹஹால் திரவ கோப்பையை ஏந்திய அவனும் அவளுடன் இணைந்து நடந்த படி ஒரு மேஜையை நோக்கி நகர்ந்தனர்

அங்கே ஒரு இடத்தில் DJ யின் பணியில் விதவிதமான பாடல்கள் ஒலித்தபடி இருக்க அதற்கு ஏற்றபடி பலர் ஆடிய படி இருக்க

தனது கட்டை விரலால் அந்த புரத்தை காட்டியவன்
அங்கே செல்ல வேண்டுமா என்றவனுக்கு
வேண்டாம் என்றவள் ஏற்கனவே தான் பதிவு செய்த மேஜையில் அமர
அவளுக்கு எதிரில் அமர்ந்தான் .

உங்கள் பெயர்? என்றவனுக்கு
அதீரை என்றவள்
யுவர் ஸ்? என்றாள் ,
டாவின்சி என்றவன் அங்கு வந்த பணியாளரிடம் இருந்து இரு கோப்பைகளை எடுத்தவன் ஒன்றை தானும் மற்றொன்றை அவளுக்கு தந்தவன் எதிர்புறம் இருந்து அவள்புறம் வந்திருந்தான்.
உங்களை பற்றி சொல்லுங்கள் என்றவனுக்கு தனது நிறுவனத்தின் பெயரையும் அங்கு தனது இடத்தையும் கூறினாள்.
உங்களை பற்றி கூறுங்கள் டாவின்சி
என்றவளது கரங்களை பிடித்து கொண்டவன் மெல்ல நீவியபடி நெருக்கத்தை அதிகரித்தவன்,
என்னோட பேர் டாவின்சி, இங்க ப்ளோரிடாவுல ஆர்ட் கேலரி வைச்சிருக்கேன், மாடலிங் என்னோட பேஷன் அதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் , என்றவன் கரங்கள் இடம் மாற தொடங்கியது.

அதன் பின் இருவரின் பேச்சுவார்த்தை இதழ்களினுள் முடிந்தது. மிகநெருங்கிய இருவரும் கொண்டாட அந்த அறை களைத்திருந்தது .
அலைபேசியின் அழைப்பில்
மெத்தையில் துயில் கொண்டு இருந்தவள் டாவின்சியில் அனைப்பில் இருந்து விலகி அலைபேசிக்கு பதில் அளித்தாள்.
நேரமாகிவிட்டதை உணர்ந்து கலைந்து கிடந்த தனது ஆடைகளை சேகரித்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

குளித்து கண்ணாடியின் முன் தோற்றத்தை சீர் செய்தவளை பின்னிருந்து அனைக்க வந்தவனை , கண்ணாடியை பார்த்தபடியே
"அங்கேயே நில் (stay there) டாவின்சி ", என்றவள் அவனுக்கான பணத்தை எடுத்து மேஜை மீது வைத்தவள்,
"தங் யூ பார் யுவர் கம்பெனி " அதாவது நேற்றைய உன் ஒத்துழைப்புக்கு நன்றி இதில் இதை தாண்டி இனி நமக்குள் ஒன்றும் இல்லை எனும் வகையில் அவனை திரும்பி கூட பாராமல் அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.

அவள் அதீரை அப்படித்தான் , காதல் திருமணம் போன்றவற்றில் நம்பிக்கை அற்றவள், தனது எண்ணங்கள் செயல்கள் சுதந்திரத்தில் யாருடைய தலையீடையும் விரும்பாதவள், இது போன்று திருமணமாகமல் இரவுகளுக்கு ஒருவனுடனான உறவு தவறல்லவா என்றால் ,
நான் யாருடைய கணவனையும் அழைக்கவில்லை வற்புறுத்தவும் இல்லை. என் காதலனுக்கோ கணவனுக்கோ நம்பிக்கை துரோகம் செய்யவில்லை , அவனுடைய தேவை பணம் எளிதில் சில மணி நேரங்களில் கூடவே சந்தோஷமும் …
இது போன்று கட்டுப்பாடற்று உணர்வுகளை தறிகெட்டு அலைய விடுவது தவறல்வா என்றால்
பசி, தாகம் , போல இதுவும் ஒரு உணர்ச்சி அவ்வளவு தான் , இதற்கு தேவையில்லாமல் அதிக முக்கியத்துவம் தருவது தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்
மேலும் நாட்டில் இதைவிட பெரிய பிரச்சனைகள் இருக்கு அத பாருங்க இல்லை உன் குடும்பத்தை பாரு அதை விட்டு விட்டு என் தணிப்பட்ட விஷயத்தை பற்றி பேச உணக்கு உரிமை கிடையாது
இது அதீரையின் நிலைப்பாடு இது பற்றி யாரும் அவளிடம் கேட்டது இல்லை , அந்த வாய்ப்பு யாருக்கும் கிடைத்ததது இல்லை அவளது வளம் வேலை சுற்றத்தின் நிலை இதை செய்திருந்தது.

அவள் தாய் தந்தையர் இருவருமே ,இது தங்கள் மகளது சுதந்திரம் என கண்காணிப்பையும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை கூறி வளர்க்க வேண்டிய காலத்தில் பணம், பார்ட்டி என அலைந்து விட்டு இப்போது வருத்தம் கலந்த புன்னகையுடன் நழுவுபவர்கள்.

முன்பு இவர்கள் சுதந்திரத்திற்க்கு அதீரை குறுக்கீடு செய்ய கூடாது என அவளுக்கு செல்வத்தையும் கல்வியையும் தந்தவர்கள் அன்பு பண்பாடு ஒழுக்கம் பற்றிய புரிதல் தரவில்லை , விளைவு அவள் சுயம் அவளே பார்த்து கேட்டு படித்து பெற்று வளர்த்துக் கொண்டாள்.

 
அத்தியாயம் 2

அமெரிக்காவின் நியூஜெர்சி

அந்த இல்லம் தெய்வீககளையுடன் இருந்தது. ஒரு இல்லத்தை கோவிலாக்குவதும் கல்லறையாக்குவதும் அந்த வீட்டின் பெண் தான்.

நாற்காலியில் அமர்ந்திருந்த அவளின் வாசவார் குழல் இடைதாண்டி நீண்டிருக்க , அதில் பூசிஇருந்த எண்ணெய் போக சீயக்காய் (சிகைக்காய்) தேய்த்து விட்டு , வெந்நீர் ஊற்றி அலசியவனுக்கு அலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. அந்த ஒசையை கேட்டவள் ,

அவன் கையிலிருந்த ஹேண்ட் ஷவரை (கை நீர் தூறி இப்படி போட்டா புரியாது )
வாங்கிக் கொண்டாள் .
"ரொம்ப நாழியா போன் அடிக்கறது , நீங்க போய் அங்க யாருன்னு பாருங்கோ யாராவது முக்கியமானவாளா இருக்க போறா? "
என நாற்காலியில் இருந்து எழ போனவளின் தோளில் கை வைத்து அழுத்தி
" முதல்ல நீ உட்காரு " என அவளை அமர வைத்தவன் தான் எண்ணெய் பூசிய இடங்களுக்கு மீண்டும் சீயக்காய் பூசி கூந்தலை தேய்த்தவன்
" ஏன்டி அதுவா முக்கியம்?
மீதி சேவகமும் முடிச்சிட்டுதான் போவேன் ", என்று கையில் சோப்பை எடுக்க
"ஒன்னும் தேவையில்லை நானே குளிச்சிக்கறேன் , நீங்க முதல்ல இங்கருந்து வெளில போங்கோ" என அவன் முதுகில் கரம் வைத்து
புன்னைமரக்கண்ணன் அவனை
வெளியில் தள்ளி கதவை அடைத்தவள்
மீதி குளியலை முடித்து வெளியே வந்தவள், உடையை மாற்றி கூந்தலை தளர பின்னிலிட்டவள்.

அன்று வரலெட்சுமி விரதம்என்பதால் , மிக அழகாக அம்பாளை அலங்கரித்து வணங்கியவள், பூஜை செய்து விட்டு தன்னவனை வணங்கி தன் முன் குங்குமத்தை நீட்டிய அந்த தெய்வ மங்கையை கடிந்து கொள்ள கூட மனம் வரவில்லை அவனுக்கு

"நீரு இந்த கால்ல விழறத செய்ய வேண்டாம்னு எத்தன தடவை சொல்றேன் , மத்த விஷயங்கள எல்லாம் நான் சொல்லாமலே புரிஞ்சி நடக்கற நீ, இந்த ஒரு விஷயத்தை மட்டும் மாத்திகோயேன் , நீ மட்டும் தான் விழுனுமா இனிமே நீ என் கால்ல விழுந்த நானும் உன் கால்ல விழுவேன் "
என்றவன் தானும் விழப் போக
"அச்சச்சோ என்னன்னா இதெல்லாம்.." என பதறி விலகினாள்.

என்ன பொருத்த வரைக்கும் கணவன் , மனைவி இருவரும் சமம் . என்றவனுக்கு அவளின் புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது.

நீராவிற்கு சிறுவயது நினைவு வந்தது. தன் தாய் வேதவதி ,தந்தை மணிவண்ணனை வணங்கியதை பார்த்தவள் தந்தையிடம்

" ஏம்ப்பா அம்மா உங்க கால்ல விழறா , அது வாடா நீரு குட்டி என தன்னை தூக்கி மடியில் வைத்தபடி ஊஞ்சல் ஆடியவர் , உங்கம்மாக்கு குறுக்கு பிடிச்சிண்டுத்தோ என்னவோ ?" என்றார். சிரித்தபடி

நேரொருவரில்லாளோ " இல்லை எனக்கு உண்மையான காரணத்தை சொல்லுங்கோப்பா " என கொஞ்ச

"ஏதுக்கும் நீ உங்கம்மாட்ட முதல்ல ஒரு தடவை கேளேன்" என்றார் மணிவண்ணன்,

"அம்மா நீங்க முதல்ல சொல்லனுமாம் " என்று தன் பாதங்கள் சத்தமிட தாயிடம்
சென்றவள் கூற , பூஜையறையில் இருந்து இவர்களது உரையாடலை கேட்டு கொண்டிருந்த வேதவதி தான் ஏற்றி வைத்த விளக்கை சேவித்து புன்னகையுடனே எழுந்திருந்தாள்.

நேரொருவரில்லாளின் இருபுற பிண்ணலுக்கும் பூ வைத்தபடி
"ஆம்படையான்தான் ஒரு பொண்ணுக்கு பகவானுக்கு சமானம்னு பெரியவா சொல்லுவா ", என்று பதிலுரைத்ததும்

"ஆம்படையான் ஆண்டவனா " என முழித்த பெண்ணைக் கண்ட

மணிவண்ணன் சிரித்தபடி எழுந்து வந்தவர் , " உங்கம்மா பிள்ளையார் மாதிரி இங்க இருந்தாலும் என்ன மட்டும் சேவிச்சி நான் கோவிக்கு போய் அம்பாளுக்கு எல்லாம் சேவகமும் பண்ணிற சேர்க்கற என்கைங்கர்யத்தோட பலன அடைஞ்டுறா "
N
என்றவர் நேரொருவல்லாளின் தலையை மெல்ல தடவியவர் , அவளிடம்
தாலி கட்டின ஒரு காரணத்துக்காக ஒருத்தன் ஒரு பொண்ணுக்கு கடவுளாக முடியாது நீருக்குட்டி என்ன பொருத்தவரைக்கும்

" ஒரு பொண்ணு ஒருத்தர பகவானுக்கு நிகராநிணைக்கனும்னா அதுக்கான தகுதி அவனுக்கு இருக்கனும். அதுமட்டுமில்லாம இன்னோன்னும் இருக்கு நீரு அவன் தான் எல்லாம்ன்னு பகவான் கிட்ட எவ்வளவு அன்பு நம்பிக்கையோட சரணடையறோமோ அது மாறி , நாம தான் எல்லாம்னு வரவாளோட அன்புக்கும் நம்பிக்கைக்கும் அவன்பாத்திரமா இருக்கனும். அதே அன்பையும் நம்பிக்கையும் அவன் அவளுக்கும் கொடுக்கவேண்டும்.அது இல்லாத ஒருத்தனை எந்த பெண்ணும் மதிக்க மாட்டாள். "

மகளுக்கு தான் கூறுவது சற்று குழப்பதை ஏற்படுத்தி இருக்கிறது. என புரிந்து கொண்டவர் ,
" சரி .. நீ நான் அம்மா எல்லாரும் ஏன் பாட்டிய சேவிச்சோம்?"

"அவா பெரியவா அதான் " என்றாள்.
"அதபோல அம்மாவ விட நேக்கு வயசு ஜாஸ்தியோன்னோ அதான் "
" சரி வா , நோக்கு பிடிச்ச பால்திரட்டு கிளறி இருக்கேன் அப்பா எடுத்துக் கோ "
என்றபடி உணவருந்த இட்டு சென்றார்.

நீருவை பொறுத்தவரையில் அது பின்னாளில் உண்மையாகி நிக்கோலஸ் அவளது கடவுள், நண்பன் , உறவு , சேவகன், அரசன் அனைத்துமானதும் அந்த நிகழ்வுகளும் நினைவுக்கு வர மனம் தந்தையையும் கடந்த காலத்தையும் நினைவுபடுத்த சிரிப்பு மறைந்தது.

சில இழப்பின் வலிகள் இறக்கும் வரை மாறாது. என்றாலும் தாங்கியபடி தள்ளி வைத்து பார்த்து கடத்தி விடுகிறோம் . எனினும் கடந்து வருவது என்பது இறந்தவரின் பாதிப்பு ஒருவர் மனதில் அவர்கள் இருப்பின் போது ஒருவருடைய வாழ்வில் ஏற்படுத்தும் பங்களிப்புகளின் ஆழத்தை பொறுத்துதான் கடத்துவதும் அல்லது கடந்து வருவதும்,

நொடியில் அதை மாற்றி தன் நிலைக்கு திரும்பி இருந்தாள்.அவன் நெற்றியில் திருநீறு வைத்தவள், முந்தானையால் மூக்கின் மேல் சிதறி இருந்த திருநீறை துடைத்தபடி

"கடவுள் அப்படிங்கற இடத்தை நாம யாருக்கு தருவோம். நம்மள காப்பவர்களுக்கு , நமக்கு அனைத்துமாகவும்இருக்குறவங்களுக்கு தான்.அப்ப எனக்கு எல்லா மா இருக்குற நீங்க என்னோட கடவுள் இல்லாம யாரு?" என்ற அவள் தான் அவனுக்கு எல்லாமாக இருந்தாள் .

" அது மட்டும் இல்லை கடவுள் என்றால் அனைத்தும் அறிந்தவர் அனைத்தினுள்ளும் இருப்பவர் அது போலத்தான் நீங்க எனக்கு "

நீருவுக்கு அவனும் அவளைப் பற்றிய அனைத்தும் அறிந்தவன் அவளினுள் நிறைந்தவன் அவனே,அவளது உணர்வு ,உலகம், உயிர் என அனைத்தும் அவனைச் சுற்றி மட்டுமே சுழலும் .

அவன் நிக்கோலஸ் சீராக வெட்டபட்ட முடி , தினமும் செய்கின்ற உடற்பயிற்சியில் பெற்ற தேகக் கட்டு , எந்த தவறான பழக்கமும் இல்லை என்பதை அறிவிக்கும் முகம்,

நிக்கோலஸ் ஜெனிபருக்கு சில உறவு மற்றும் பிரிவுகளுக்கு பின்பு முதல் கணவர் எட்வர்ட்கு பிறந்தவன் .
நிக்கோலஸின் மூன்றாவது வயதில் கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிந்து விட அதனை தொடர்ந்து ஜெனிபர் நிக்கோலஸின் , ஐந்தாவது வயதில் செய்த இரண்டாவது திருமணத்தை ஏழாவது வயதில் முறித்துக் கொண்டார். மீண்டும் அவனது பதினைந்தாவது வயதில் ஜார்ஜை காதலித்து அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர் நிக்கோலஸின் இருபத்தி மூன்று அகவையில் மணம் முடித்து இன்று வரை அவருடன் வாழ்கிறார்.
ஆனால் அவனைப் பொறுத்தவரையில் அவன் அன்னை அற்புதமான மனுஷி அவனை வளர்த்திலோ , கல்வியளித்ததிலோ , அன்பு செலுத்துவதிலோ எந்த குறையும் வைத்ததில்லை. ஆனால் குடும்ப உறவு தந்தை பாசம் கிடைத்தது இல்லை.

தனது குழந்தைகளுக்கு தன்னைப்போல பல தந்தைகள் குழப்பங்கள் வேண்டாம் , என முடிவு செய்தவன். அதனாலேயே நிக்கோலஸ் ஒருவளை மட்டுமே காதல் செய்வது அவளையே திருமணம் செய்து இறுதி வரை அவள் அவனுக்காகவும் அவன் அவளுக்காக மட்டுமே என்ற உறுதியானகோட்பாடுகளின் பின் தன் அலைபாயும் மனதையும் உணர்வுகளையும் கட்டி வைத்திருந்தவன் , டேட்டிங் மீட்டிங் போன்ற எந்த சுழலுக்கும் சிக்கவில்லை. இராணுவத்தில் பணியாற்றியவன், ஒரு விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தவன்,
கல்வி மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்திற்காக அவளது பல்கலைகழகம் தேர்வுசெய்து அனுப்பிய மாணவியரில் ஒருவளாக இங்கு அமெரிக்காவிற்கு வந்திருந்த நோரொருவரில்லாளை கண்டான்.

அவனோ கண்டவுடன் நேரொருவரில்லாள் மேல் காதலில் விழுந்தான். இவன் காதலை கூற அலைய அவளோ இவனை நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை.

நேரொருவரிலில்லாளுக்கு தெரிந்திருந்து, தன் இதயமும் உணர்வுகளும் அவனுடன் பினைந்திருக்கிறது என்று , நிக்கும் அதை அறிந்து தான் இருந்தான் .

சப்திக்கும் தன் காலடிகளில் தயங்கும் நீரஜாவின் நடையில் அவள் தன்னை உணர்வதையும் , நிமிராத அவள் முகம் தன் நிழல் கண்டு பொலிவதையும் , அவள் உணர்வுகள் தன்னில் கலந்து இருப்பதையும் உணர்ந்தவன். அவன் வராத தினங்களில் அவள் தேடலையும் கண்டு கொண்டவன்

நேராவின் பின் சுற்றுவதை விட திருமணம் செய்து கொண்டு விடுவதுதான் , அவள் காதலை பெறுவதற்கு இருக்கும் ஒரே வழி என அறிந்து கொண்டான்.

அவனுக்கு இது புதிது ஒரு பெண்ணிடம் கவரப்படுவது பிறகு அவளை கவர்வது பேசி பழகி சுற்றி காதலை உணர்வது பின்பு அவளுக்கு அதை உரைப்பது சேர்ந்து வாழ்வது மேற்சொன்ன அத்தனையிலிலும் தாக்கு பிடித்தால் திருமணம் இல்லை பிரிவு என எளிதாக
புரிந்து பழகியிருந்தவனுக்கு

தன் முகம் நிமிர்ந்தும் பாராமல் கடை விழியில் தன் நிழலிலும் தன்னையறியும் நேரொருவரில்லாளை பிடித்திருந்தது . தனது பண்பாட்டில் இருந்து சற்றும் விலகாத கண்ணியம் கலந்த அவள் உடை மற்றவர் முன் நிமர்ந்த நடை, சிதறாத கவனம் .

ஆடவர்களை தொட்டு பேசாமல் கட்டியணைத்து பாசம் காட்டாமல் இருகரம் குவித்து வணங்கி அவர்களை தனது சகோதரனாக பாவிக்கும் , அந்த நேசமிக்க நடத்தை பிடித்தது.

அவன் அமெரிக்காவை தாயகமாக கொண்ட தாய் தந்தைக்கு பிறந்து அந்த கலாச்சாரத்தில் வளர்ந்தவன் , இங்கு படிக்க வந்த நீருவை கண்டதும் காதல்
அவளை பற்றி அறிய அவளது பண்பாட்டையும் ஒருவனுக்கு ஒருத்தி கோட்பாடும் பற்றி அறிந்தவன்
அந்த ஒருவன் தானாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு பற்றி அறிந்து கொண்டான்.

எந்நேரமும் உடையலாம் எனும் நிலையில் தோன்றும் காதலில் நம்பிக்கை உறவை விட, திருமணம் எனும் பந்தத்தின் அடிப்படையில் உறுதி செய்யபட்ட காதலின் பாதுகாப்பு உறவு எதிர்காலத்திற்க்கு நல்லது எனும் புரிதலுக்கு வந்தவன். நீரஜாவை அதற்கு முன் வந்த சில தடைகளை கடந்துமுறைப்படி மணந்து கொண்டான். இன்று வரை நீரஜாவின் நிக்கி மட்டுமே , வேடிக்கைக்கு கூட தனது பெயரை மற்ற பெண்களுடன் சேர்த்து பேச அனுமதிக்க மாட்டான்.தன்னவளுக்காக மட்டும் தான் தன் மனம் மற்றும் செயல் என நினைக்கும் நிகரில்லாத அன்பு வண்ணம் அவன்.

குங்குமத்தை நீருவின் நெற்றியில் வைத்தவன். அந்த சிமிழை வாங்கி பூஜை அறையில் வைத்தான். அவளை அலுங்காமல் சிதறய பவளமல்லியை கசங்காமல் இருவிரல் நுனி கொண்டு அழுத்தாமல் மெல்ல பற்றி கூடையில் சேர்ப்பது போல் கரங்களில் அள்ளி நெஞ்சோடு சேர்த்து கொண்டான்.

கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்த்தியவன் தான் கீழே அமர்ந்து அவள் பாதங்களை மெல்ல பிடித்து விட்டான் .

அந்த தாமரைகள் சற்று பூசியது போல் வீங்கி இருந்தன.
"இல்லையே இவளுக்காக நானும் உப்பு சேர்ப்பது இல்லையே பிறகு இது எப்படி?" என யோசித்தபடி மேலே பார்க்க

சூல்தாங்கிய அந்த ரோஜாவோ , இரண்டு கரங்களிலும் இனிப்பு எடுத்து கொண்ட குழந்தை அதை சரியாக மறைக்க தெரியாமல் அன்னையிடம் மாட்டிக் கொண்டதும் திகைத்த விழியில் கதை கூற அது புனையும் கதையை ஏறக்காத தாயை மயங்க செய்ய மயக்கும் சிரிப்பையும் தருமே அது போல ஊறுகாய் சாப்பிட்டதை அவன் கண்டுபிடித்து விட்டதில் குழந்தையாகி நின்றாள் நேரொருவரில்லாள்.

நீரு என அவன் சிறு குரல் உயர்த்தலில் இனி சாப்பிடவில்லை என்றவள் முகத்தில் இருந்த சிறுபிள்ளை கோவம் அவனை கட்டி இழுக்க , இழுத்து முத்தம் வைத்தான் .அதில் நாணம் கொண்டவள் அவன் டீசர்ட்டின் கழுத்து கரையை பிடித்துக் கொண்டவள் மார்பில் புதைந்து
முகம் மறைத்துக் கொண்டாள்.

அவளுக்கு இது போன்று கூடத்தில் யாரும் வந்து விடக் கூடும் என்ற தருணத்தில் வரும் அச்சம் அவனை விட்டு சற்று தள்ளி நிறுத்த அந்த பரம்பரை அச்சத்தை தாண்டி அவளை முத்தாடுவதும் அதனை தொடரும் அவளது கிறக்கம் யாரும் வந்து விட்டால் என சுழலும் அவள் விழிகளின் தவிப்பு அவனுக்கு தித்திக்கும் போதை

தன் மீது கவிழ்ந்திருக்கும் அந்த தாமரையின் செவி மடல் அருகே குனிந்தவன் , "ஏய் நீரு இது நம்ம வீடு தான் வாசல் கதவும் பூட்டி தான் இருக்கு"
என்றவன் மேலும் எதுவும் கூறும் முன்
தன் மென் விரல்களினால் அவன் அதரங்களை மூட மிக சரியாக காலிங் பெல் ஓசை கேட்டது.

பதறி விலகிய அவளை
" ஏய் நீரு ரிலாக்ஸ் .. " என அமர வைத்து விட்டு , தான் எழுந்து சென்று கதவை திறந்தான்.
 
Status
Not open for further replies.
Top